அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 1 பதிவு 1
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 1
பதிவு 1
கேள்வி பதில் நேரம்
பதிவு 1🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான்
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்
கேள்வி 1
நான் :
பட்டரே வணக்கம் .. தாங்கள் கூப்பிட்டவுடன் வந்ததற்கு மிக்க நன்றி
பட்டர் ... அபிராமி அந்தாதியைப் பற்றிய கேள்விகள் என்று சொன்னதால் வந்தேன் ..
செவி வழியாக கேட்பதை விட அபிராமியின் அருளால் நானே பதில் சொல்வது சிறந்தது அல்லவா ?
*நான்* : உண்மை ... என் முதல் கேள்வி ...
உங்கள் பாட்டில் பதத்தைப் பிரித்தால் ஒரு அர்த்தம் பதத்தை பிரிக்காவிட்டாலும் ஓரு அர்த்தம் இப்படி வர வாய்ப்பு உள்ளதா ?
*பட்டர்* : அப்படித்தான் பெரும்பாலும் பாடல்கள் அமைய பட்டுள்ளன .
உதாரணம்
முதல் பாடல் முதல் வரிகள் ...
*உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்* ....
இதை பிரிக்கா விட்டாலும் ஒரு அர்த்தம் வரும் ...பிரித்தாலும் வேறு அர்த்தம் வரும்
உதிக்கின்ற செங்கதிர் அன்னையின் உச்சித் திலகமாய் செக்க செவேல் என்று விளங்குகிறது என்று ஒரு அர்த்தம் ...
பதம் பிரித்தால் ...
*உதிக்கின்ற செங்கதிர் ....*
உதயமாகும் பால சூரியன் ...
வெப்பம் இல்லாமல் குளிர்ச்சியாக இருப்பவள் அம்பாள் ..
பால சூரியனை இரு கண் கொண்டு கூசாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அத்தனை அழகு ..
அபிராமி அதை விட அழகு ...
*உச்சித் திலகம்* ...
அவள் தன் சீமந்த வகுடில் திலகம் சூடியுள்ளாள் ...
அது கலங்கரை விளக்கம் போல் ஒளி விடுகின்றது...
தனித் தனி அர்த்தங்கள் வருகின்றது அல்லவா ?
*நான்* : அருமை பட்டரே ...
அம்பாள் கருமை நிறம் கொண்டவள் ஆனால் தாங்களோ அவளை சிவப்பு நிறம் என்றே பல இடங்களில் சொல்லி உள்ளீர்கள் இதில் எது உண்மை ?
*பட்டர்* ... எல்லாமே உண்மை தான் ..
அவள் அரூபமானவள் என்றும் சொல்லியிருக்கிறேன் ..
மங்கலை, செங்கலை , பிங்கலை , நீலி , செய்யாள் வெளியாள் என்று எல்லா நிறமாகவும் இருப்பவள் அவள் ..
சிவப்பில் கருமை உண்டு தெரியாதோ உனக்கு ?
👍👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐💐
Comments
kondadhu alla en_gai
nanre unakku?
ini naan en seyinum nadukkadalul
senre vizhinum, karaiyerrugai nin thiruvulamo!-
onre, pala uruve, aruve, en umaiyavale! 30👍👍👍
The deed is done - Iam yours !..
I bear the stamp of your devotee . Now it does not behove you to distance yourself from me . 🙏🙏🙏
Even if I commit stupid , ignorant or dangerous acts , You have to rush to my rescue 🌷🙌🙌
Even if I submerge myself in the worldly ocean and drown myself in it , yours is the responsibility to save me and bring me back to the shore . 👣👣👣👣
O Goddess !! this is your responsibility . You who are the converging point of contradictions by appearing in many forms and by revealing yourself as one and being formless 💐💐💐
*பதிவு 69* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா?.
சொல்கிறார் அகஸ்தியருக்கும் நமக்கும்.
"செண்பகம்,
புன்னாகம், சௌகந்திகா, (இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)👌👌👌💐💐💐
அன்னைக்கு பிடித்தமான பலவித மலர்கள்
*லசத்* = மின்னும்
*கசா* = கேசம்
*சம்பகாஷோக புன்னாக சௌகந்திக லசத்கசா* =ஷெண்பகப்பூ, விருக்ஷி, சுகந்திப் புஷ்பம், புன்னைப் பூ முதலிய மலர்களை, மிளிரும் எழில் கூந்தலில் சூடியிருப்பவள்
கற்பூர ஒளிதனில் கடலாய் அலை பாய்ந்தான் முருகன் ...
பழம் வேண்டி பழனி ஆனவன் தேனாக இனித்தான் ..
பல பழங்கள் பாங்குடன் பாகுடன் சேர்த்தே பஞ்சாமிருதம் ஆனது ..
பாலும் தேனும் அவன் மேனி எங்கும் காவேரியாய் ஓடியது ..
நீ கற்பனையோ முருகா இல்லை கற்சிலையோ
காலமெல்லாம் அருள் செய்யும் கற்பக காவோ ...
ஏதும் அறியேன்
எதுவும் அறியேன் ...
உன் பெயர் சொன்னால் என் நாவில் தேனீக்கள் கூடு கட்டும் மாயம் என்ன ?
சிரித்தான் முருகன் .. கற்பனை அல்ல நான் கற்சிலையும் அல்ல நான் ..
கோவனத்துடன் நின்றிருக்கும் ஆண்டி நான் ...
தண்டம் ஒன்றை கையில் வைத்து தண்டமான என்னையும் அடிமை செய்தாய் ..
ஆண்டி என்றே சொல்லி அண்ட சராசரங்கள் ஆளுகின்றாய் ..
பழம் என்றே சொல்லி ஞானம் அதை அள்ளித்தருகிறாய் ... முருகா ...
ஒன்றும் இல்லாதவனோ நீ .. என்றும் எங்கும் நிறைந்தவன் நீ
மீண்டும் சிரித்தான் முருகன் ...
காஞ்சி வாழ் ஆண்டியும் நானே ..
கையில் தண்டம் அங்கும் கொண்டவன் நானே ..
எதிலும் ஆசை இல்லை என்றால் ஆகுமே உன் வாழ்க்கை பழனி பஞ்சாமிருதம் போலும்.
எல்லோரையும் என் போல் வாழவை...
குன்றுகள் அனைத்தும் என்னுடன் சேர்ந்திருப்பாய் எப்பொழுதும் என்றான் குமரன் ...
வாழ்க்கை பாலும் தேனும் பாகும் போலும் கலவை ஆனதே இன்று முதல்
🍊🍊🍌🍇🍎🍎🍒🍒🍑🍑🍉🍉🍐🍐🍌🍌🍑🍑
(My experiences... Ravi ...Episode 162🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*5th Assignment - NGW*
To overcome procrastination commit yourself to deadlines. Break big jobs into small units and get started.
As long as compassion is greater than greed there will be contentment.
A person is always measured by his thoughts & actions, Not by his wealth & degrees. The real education is your behaviour and care shown to others.
There was no drastic improvement in my daughter but i did not give up in visiting shirdi ... Many official and relatives did come to nashik and i opted to be their guide to shirdi ...
Days passed by and one fine morning my daughter came to me and said in broken tone that she wanted to participate in her school speech competition . We were taken aback ... I did not want her subjected to further humiliation and embarrassment ... The entire crowd would laugh at her .. we were avoiding her request but she was adamant in participating . St Patrick school in Devalali was very strict in selecting their students in exhibiting their talents so i was doubting how would they shortlist my daughter ?
We met the head of the school and explained my daughter 's wish and her problem . She patiently listened and advised her to participate and
Encouragement in proper dose is capable of bringing the best in us which are not known to us earlier ..
My wife told me let us take a chance and baba would not let us down . Her words were true ..... 🙌🙌🙌
தநுர்மாஸம் என்றும், மார்கழி என்று தமிழில் திரிந்து வந்திருக்கிற மார்க்கசீர்ஷம் என்றும் இரண்டு பெயர் ஏன் என்றால், வருஷத்தைக் கணக்குப் பண்ணுவதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன.
சிவ-விஷ்ணு அபேதம் போல் சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுவதாக ஈச்வரனுக்கு முக்யமான திருவாதிரை, பெருமாளுக்கு முக்யமான வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு உத்ஸவங்களும் இந்த மாஸத்திலேயே வருவதால்தான் பகவத் கீதை விபூதி யோகத்தில், தாம் மாஸங்களில் மார்கழி என்று பகவான் சொல்கிறார் என்று தோன்றியதைச் சொன்னேன்.
(நாளை தனுர் மாதப்பிறப்பு)
Kanchi Maha Periavaa- My Guru
"தீர்தத்தை தொட்டது நம்ம உம்மாச்சி தாத்தாவாச்சே!!!
"
"
பெரியவா" சொம்பிலிருந்து ஒரு அரை டம்ளர் எடுத்து தன் கமண்டலுவில் விட்டுக் கொண்டு, ஆசமனமும் பண்ணினார் ! அப்பாடா, நிச்சயம் தண்ணீர் கெடவில்லை என்ற நம்பிக்கை. ஒரு சிட்டிகை போட்டு, தொண்டரிடம் மீதி சொம்பு ஜலத்தை பிரசாதமாக அந்த அம்மாவிடம் தரச் சொல்லி உத்தரவானது.
பெரியவா" திருவுருவப் படத்தின் முன் அந்த அம்மா கை கூப்பி நிற்க, பக்கத்தில் சித்தப்பாவும் கைகூப்பி நின்றார்!
பின்னே, தீர்தத்தை தொட்டது நம்ம உம்மாச்சி தாத்தாவாச்சே!!!
லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல
வீட்டு வாசலில் பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம்
வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்
எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்
அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம்
பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம்
இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம்
பவுர்ணமி தினத்தில் சந்திரன் ஐஸ்வர்யம்
உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம்
பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம்
இயற்கை அழகு ஐஸ்வர்யம்
உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம்
அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம்
புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம்
குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம்
கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்
ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு ஐஸ்வர்யம்
ஐஸ்வர்யம் என்றால் கையில் என்னும் பணக்கட்டு அல்ல
கண்ணால் பார்க்கும் உலகம் ஐஸ்வர்யம்
மனசு அடையும் சந்தோஷம் ஐஸ்வர்யம்..
*நம்மை சுற்றி பற்றி நண்பர்கள் இருந்தால் ஐஸ்வர்யம்...*
நால்வகைப் படைகள் தன்னைச் சூழ்ந்து வர இராவணன் வானரப் படையுடன் போரிடுவதற்காக போர்க்களம் வருகிறான்.
தனது அரக்கர் படை அழிந்து வருவது பற்றி அவனுடைய மனம் பதறி, ஆத்திரம் கொள்ளுகிறான்.
இவனை இலக்குவன் எதிர்கொண்டு போரிடுகிறான்.
கடுமையாகப் போர் புரிந்து இலக்குவன் அரக்கர் படையை அழிக்கிறான்.
இவனை அம்பினால் வெல்லுதல் முடியாது என்று கருதி, இராவணன் வடிவம் இல்லாத மோகனக் கணையொன்றை இலக்குவன் மீது ஏவுகிறான்.
இதை கவனித்த விபீஷணன், அதை முறியடிக்க நாராயணன் கணையை விடும்படி இலக்குவனிடம் தூண்டுகிறான்.
அவ்வண்ணமே இலக்குவன் நாராயணக் கணையை ஏவி, மோகனக் கணையை செயலிழக்கச் செய்கிறான்🙌🙌🙌
*பதிவு 68*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो
नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते
तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥
வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ
நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।
யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே
ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
ஒரு பாயை நன்னா விரிச்சு காத்து வரும்படியா வெச்சுட்டான்னா படகோட்டி அதற்கப்புறம் relax பண்ணலாம்.
ஏன்னா காத்தே அந்த படகை தள்ளிண்டு போயிடும்.
அந்த மாதிரி பகவானுடைய அனுக்ரஹத்தை பெறும்படியா நம்முடைய வாழ்க்கையை அமைச்சுண்டோம்னா இறைவனுடைய கருணை என்கிற காத்தே பக்தனோட வாழ்க்கையை செலுத்திக் கொண்டு போகும்னு ராமகிருஷ்ணர் சொல்றார்.🍁🍁🍁
பதிவு 87. 12th Sep 2021🙏🙏🙏
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
அனைத்திலும் ஆளுமை செலுத்தக் கூடிய ஈஸ்வரனாக விளங்குகிறான் என்பதை இந்தச் சரிதத்தின் மூலம் அறிகிறோம்.
எனவேதான் இறந்த சிறுவனைக்கூட அவனால் மீட்டு வரமுடிகிறது. அவன் ஸ்வயும்பு
ஸ்வயும்புவாக விளங்குவதால் ‘ *ஸ்வயம்பூச்* :’ என்று அவனுக்குப் பெயர்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 37 வது திருநாமம். ஸ்வயம்பூச் நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
ஆளுமைத் திறனோடும், தலைமைப் பண்புகளோடும் விளங்குவார்கள்.🍇🍇🍇
கடந்த வாரம் வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனைச் சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
*"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்.."*
என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.
*'எங்க கூப்பிடற கண்ணா?'*
*"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"*
*'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க இருக்காங்க.. திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'*
*'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'*
*"அப்போ கடமையை செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்குப் போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்ட?? சாகவேணாம்.. ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி? நீ பக்தியோட கேட்ட.. அதான் நானும் வந்தேன்.. இப்போ சாக்கு சொல்லாதே......வா போலாம்"*
*"ஓ! எப்போ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ... என்கிட்ட வர்றதுக்கு advance booking......... அதை வருஷா வருஷம் renewal வேற பண்ற.. ஆனா, இப்போ நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்ட.. அப்படித்தானே..!!"* என்றான் கிண்டலாக!
*"உன்னை மட்டுமில்ல... எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன்...... சரி, சில கேள்விகள் கேட்கறேன் ...........பதில் சொல்லு.."*
*'என்ன? கேளு!'*
*"சொர்க்கத்துக்குப் போகணுமா? பரமனின் பதத்தை அடையணுமா? எது வேணும்?"*
*'குழப்பாதே கண்ணா!'*
*"நான் குழப்பலை... நீங்கதான் குழம்பிப்போய் இருக்கீங்க.."*
*'அப்போ ரெண்டும் வேறயா?!'*
*"அது உன் எண்ணத்தைப் பொருத்தது!"*
*'அப்படின்னா??'*
*'அப்போ சொர்க்கம் நரகமெல்லாம் நிஜமாவே இருக்கா??'*
*"அது உங்களுக்குத் தான் தெரியும்... நீங்கதானே கலர்கலரா செட் போட்டு புகை பறக்கவிட்டு நாலு பொண்ணுங்களை நாட்டியமாட விட்டு காட்டறீங்க.."*
*'அப்போ அதெல்லாம் எங்க கற்பனை...... நிஜமா ஒண்ணும் இல்லைனு சொல்றியா?'*
*"நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க அதைப் படிக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க..."*
*"உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ..."*
*"ஆனா கஷ்டம் வந்தா மட்டும், 'கண்ணா, பெருமாளே.. உனக்கு கண்ணில்லையா, காதில்லையா'ன்னு என்னை திட்டறீங்க!!!"*
*'அப்போ இந்த விழா, பரமபத வாசல் தாண்டுறது இதெல்லாம் தேவையில்லை.. சொர்க்கம், நரகம் இதெல்லாம் பொய்னு சொல்றியா??'*
*"இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்... கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்..."*
*"இடையில நீ வாழற இந்த வாழ்க்கையில உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, பின் என்கிட்ட வந்து சேரப்போற.. "*
*"அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்..."*
*"நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக.."*
*"சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை.."*
*"வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்..."*
*"அதைப் புரிந்து படி.. உன் எல்லா கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு.."*
*"அதை ஞாபகப் படுத்ததான் இந்த விழாக்கள்..."*
*"கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்..."*
*"உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!!!"*
*"ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்.."*
*"பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??"*
*"பெரும்பாலானவர்களைப் பொருத்த வரை, வாசலைக் கடந்தால் பண்ணின தப்பையெல்லாம் மன்னிச்சு சாமி சொர்க்கத்தில சேர்த்திடுவார்.."*
*"சிலருக்கு இது மற்றுமொரு சடங்கு.."*
*'எல்லாரும் போறாங்க நானும் போறேன்!'*
இன்னும் சிலர்,
*'ஏகாதசி திருவிழா சமயத்தில தேவஸ்தான கடையில போடற தோசை சூப்பரா இருக்கும்.. அதோட புளியோதரை, கேசரி சாப்பிட்டுட்டு.. அப்படியே சொர்க்க வாசலையும் மிதிச்சு வைப்போம் ... போனா சொர்க்கம். இல்லாட்டி தோசையாவது கிடைச்சதே...!!!'*
அவ்வளவுதான்!!
*"உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர் வெகு சிலரே..."*
*"இன்று உனக்குச் சொன்னேன்! நீ சிலருக்கு சொல்..."*
*"நீங்கள் என் குழந்தைகள்..."*
*
*"உங்கள் கை பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்..."*
*"நல்லபடியாக வந்து சேருங்கள்...!!"*
*"சொல்லிவிட்டுப் போய்விட்டான்..
arularra andhagan kaip
paasaththil allarpada irundhenai,
nin paadham ennum
vaasak kamalam thalaimel valiya vaiththu,
aandu konda
nesaththai en solluven?-
eesar paagaththu nerizhaiye! 32🌸🌸🌸🌸
By willingly placing your Lotus Feet on my head , you have delivered me from the diabolic clutches of Yama ( also known as Andhakan - the one who is figuratively blind to the highs and lows caste , birth , gender etc and delivers punishment impartially ) - who would have bound me with ropes of MAYA and thrown me into the ocean of desire .
Your infinite grace and inimitable affection for me is ineffable O Abhiraami 👌👌👌
To be protected from untimely death . 🙏
(My experiences... Ravi ...Episode 163🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*5th Assignment - NGW*
Hard work is just a word to scare people who do not love their work. The actual fact is when you love your work, you almost never find it hard, you enjoy it.
Surround yourself with people who talk about vision and ideas, not about other people
இரண்டு பாவைகளை சந்திக்க விவாதிக்கப்
போகிறோம் ...
திருப்பாவை திருவெம்பாவை ...
ஆண்டாள் தமிழ் அமுதம் என்றால் மணி வாசகரின் சொற்கள் அதில் ஊறிய பலாச் சுளைகள் ...
நம்மை தினமும் எழுப்பும் இறைவனை இந்த மாதத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து எழுப்ப போகிறோம் ..
எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் நாம் .. ஓவ்வொரு பாடலையும் விளக்கத்துடன் விவாதிப்போம் ..
இந்த திரியின் வயது 30 நாட்களே ...
அதிகமான விளக்கம் என்று நினைப்பவர்கள் விலகிக்கொள்ளலாம் ...
எல்லோர் நன்மைக்கும் சேர்ந்து பாடும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம் ... 👌👌👌💐💐💐
அந்த மாயவன் , ` *மாதங்களில் நான் மார்கழி* என்று சொல்லியிருக்கிறானே
... அப்படிப்பட்ட பெருமை மிகுந்த மார்கழி அல்லவா!
இன்னும் விடிய நேரமிருக்கிறது. நிறைந்த நிலவும் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனாலும் அந்தக் கண்ணன் மீதான பக்தி தூங்கவிடாமல் செய்கிறது.
இது பிரம்ம முகூர்த்தம். தேவர்களும் ரிஷிகளும் நீராடும் பொழுது. இந்தப் பொழுதில் அவனைத் துதித்து நீராடத் தொடங்கிவிடுவார்கள்.
மார்கழி மாதத்தில் ஆயர்பாடியில் கோபியர்கள் சேர்ந்து கூடி மகிழ்ந்து அவனைப் போற்றி வழிபட்டதாலேயே அவனது திவ்ய தரிசனத்தையும் பிரசாதத்தையும் பெற்றனர்.
நாம் என்ன செய்யப் போகிறோம் ...??
என் தோழியர்தான் ஆய்ச்சியர்கள்,
கண்ணனின் வரவுக்காகக் காத்திருக்கும் கோபியர்கள்.
இதோ அவர்களை அழைத்துக்கொண்டு இந்த மாதத்துக்கான பாவை நோன்பை நோற்போம்.
*மாடு* என்றால் செல்வம்.
இந்த ஆயர்பாடியில் எல்லா வீடுகளும் செல்வம் நிறைந்த வீடுகளே.
அப்படிச் செல்வம் நிறைந்த வீடுகளில் வாழும் செல்வச் சிறுமியர்களே,
வாருங்கள் நாம் அனைவரும் நீராடலாம்
நேரிழையீர்களே. *நேரிழையீர்* என்றால் நல்ல அழகான அணிகலன்களை அணிந்து அலங்கரித்துக் கொண்டிருப்பவர்கள் என்று பொருள்.
கோபிகைகள் எப்போதும் நேரிழையீரே !!💐💐
கண்ணன் அருகில் இல்லாதபோதும் அப்படியே இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒருத்தி கோபியர் ஒருத்தியிடம் கேட்டாளாம்.
அதற்கு அந்த கோபிகை, ``கண்ணன் எப்போது வருவான் என்று எங்களுக்குத் தெரியாது.
ஆனால், அவன் வரும்போது நாங்கள் அவனோடு விளையாடவும் அவனை வழிபடவும் தயாராக இருக்க வேண்டும்.
நாங்கள் நலிவுற்றிருந்தால் அவன் மனம் வருந்தமாட்டானா என்ன?" என்று பதில் சொன்னாளாம்.
அப்படியில்லாமல் அசட்டையாய் அவனை உள்ளத்தில் ஏற்கத் தயாராக இல்லாமல் இருந்தால் அவன் கடந்து போய்விடமாட்டானா என்ன?
அதனால்தான் எம் பெண்கள் நேரிழையீராக எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
கூர்மையான வேலினைக் கொண்டு கோகுலத்தைக் காத்துவருபவன் நந்தகோபன்.
அவனது குமாரனான கண்ணனைத்தான் நாம் துதிக்கப் போகிறோம். அவனின் தாய் யசோதை தன் மகனின் கம்பீரத்தைக் கண்டு வியக்கிறாள்.
அவள் பார்வையில் அவன் ஒரு சிங்கம். அதுவும் நந்தகோபன் என்னும் பெரிய சிங்கத்தின் மகனாகப் பீடு நடைபோடும் இளஞ்சிங்கம் அவன்.🦁🦁🦁🦁🦁
அவனது கண்களோ சிவப்பாகத் தாமரை மலர்போல் காட்சியளிக்கும்.
ஒளி வீசும் அவன் முகத்தைக் கதிரவன் என்போமோ அல்லது அதிலிருந்து பிறக்கும் ஒளி மதியைப் போலக் குளுமையாக இருப்பதால் நிலவு என்போமோ...
எப்படியாயினும் அவனைப் புகழ்ந்து பாட வேண்டியது நம் கடமை.
குறையொன்றுமில்லாத அந்த கோவிந்தனை நம் சிறுமதியால் பாடிப் புகழ்ந்திட முடியுமா என்ன?
அவனைப் புகழவும் அவனேதான் பறை தரவேண்டும். *பறை* என்றால் வலிமை.
*பறை* என்றால் வீரம்.
அதை நாராயணன் நமக்கு வழங்கி நாம் அவனைப் பாடுமாறு பணிப்பான்.
அவன் புகழைப் பாடிப் பணிகொண்டு இந்தப் பாவை நோன்பை நோற்போம்🌺🌺🌺
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!
புலர்ந்தது பூங்கழற்கு
இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு
நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர்
கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!💐💐💐
சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா?
செவிடாகி விட்டாயோ?
அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள்.
பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள்.
ஆனால், நீ உறங்குகிறாயே!
பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!🌺🌺🌺
எதிரே இலக்குவனுக்கு அருகில் நிற்கும் விபீஷணன் மீது, மயன் தனக்கு அளித்த வேல் ஒன்றை எடுத்து வீசுகிறான்.
அந்த வேல் தன் உயிரை மாய்க்கப் போகிறது என்று விபீஷணன் சொல்ல, இலக்குவன் பல கணைகளை விட்டும், அவை பயனற்றுப் போயின.
இலக்குவன் அந்த வேலைத் தன் மார்பில் வாங்க எண்ணியபோது அவனைத் தடுத்து, அனுமனும் சுக்ரீவனும் அங்கதனும், தங்கள் மார்பில் வாங்க முந்துகின்றனர்.👍👍🌸
*பதிவு 69*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो
नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते
तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥
வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ
நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।
யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே
ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
அவன் அங்க இருந்து ஆட்டுவிக்கறான்ங்கிற அந்த ஞானம் தான் பக்தி.
அது ஏற்பட்ட பின்ன அவா ஒவ்வொண்ணுத்துக்கும் ரொம்ப கவலைப் பட மாட்டா.
ஏன்னா, அவாளோட அந்த பாரத்தை பகவானே சுமக்கறார்னு இந்த ஸ்லோகத்துல அழகா சொல்றார்.
பதிவு 87.. 12th Sep 2021🙏🙏🙏
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
உறங்காமல் வில் பிடித்துக் காவல் காக்கக்கூடியவர் என்பதால் அவர் ‘உறங்காவில்லி.’
தன் மனைவி பொன்னாச்சியார் எங்கு சென்றாலும், அவளுக்குக் குடை பிடித்தபடி உறங்காவில்லியும் உடன் செல்வார்.
அதைப் பார்த்து ஊர் மக்கள் கேலி செய்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவ்வாறே செய்துவந்தார் உறங்காவில்லி.🌻🌸
உறங்காமல் வில் பிடித்துக் காவல் காக்கக்கூடியவர் என்பதால் அவர் ‘உறங்காவில்லி.’
தன் மனைவி பொன்னாச்சியார் எங்கு சென்றாலும், அவளுக்குக் குடை பிடித்தபடி உறங்காவில்லியும் உடன் செல்வார்.
அதைப் பார்த்து ஊர் மக்கள் கேலி செய்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவ்வாறே செய்துவந்தார் உறங்காவில்லி.🌻🌸
“ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?” என்று கேட்டார்.
“என் மனைவியின் கண்கள் பேரழகு கொண்டவை. அந்தக் கண்ணழகுக்கு நான் மயங்கி விட்டேன்.
வெயில் பட்டு அவளது மேனி கருத்துவிடக் கூடாது என்பதற்காகக் குடைபிடிக்கிறேன்!” என்றார்
உறங்காவில்லி.
“இதைவிட அழகான கண்களைக் காட்டினால் அதற்கும் அடிமை செய்வாயா?” என்று கேட்டார் ராமாநுஜர்.👍
*பதிவு 70* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
*ரகசியம் தெரியாத நக்கீரர்*
மலர்களை முதலில் படைத்த இறைவன் அவைகளுக்கு இயற்கையில் நறுமணம் வைக்க வில்லை ... எல்லா மலர்களுக்கும் ஒரே வருத்தம் ... நாரதரிடம் முறையிட்டன .. நாரதர் இரக்கப்பட்டு ஒரு வழி சொன்னார் ...
பட்டை தீட்டும் வயிரங்கள் , சாணை பிடிக்கும் அறிவாள்கள் எப்படி தங்களை செம்மையாக தீட்டி கூர்மை படுத்திக்கொள்கிறதோ
அதுபோல் பரிமளம் மணக்கும் அம்பாளின் சிரசில் சில நொடிகள் குடி இருந்தால் அவள் கேசத்தின் நறுமணம் தனக்குள்ளும் ஒட்டிக்கொள்ளும் என்பதுதான் அவர் சொன்ன வழி ...
பல ஆண்டுகள் தவம் இருந்து அம்பாளின் சிரசில் அமரும் பாக்கியம் பெற்றன ...
பிறகு ஓவ்வொரு மலரும் நறுமணம் கொண்ட மலராக பிறவி எடுத்தன ..
இந்த உண்மையை அறியாத நக்கீரர் பெண்களுக்கு இயற்கை அன்றி செயற்கையில் மட்டுமே கூந்தலில் நறுமணம் உண்டு என்று இறையிடம் வாதாடினார் ...
முடிவு அவரும் காமனைப்போல் பஸ்பமானார் ... 🌺🌺🌸🌸🌸🌷🌷🌻🌻🍁🍁💐💐
*பதிவு 70* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
அதற்கு அம்பாள், “அதனை நீ பூர்த்தி செய்வாய்! அதற்காகவே இந்த லீலை நிகழ்ந்தது!’ என்று கூறினாளாம்.
இக்கதை உண்மையில் நிகழ்ந்ததா இல்லையா என்ற கேள்வியை ஒதுக்கி வைத்தால், இதில் ஒரு விஷயம் நமக்குத் தென்படுகிறது.
அது, சௌந்தர்ய லஹரியில் இரண்டு பாகங்கள் உள்ளன என்பது.🌺🌺🌺
முதல் பாகத்திற்கு ஆனந்த லஹரி என்றும் இரண்டாம் பாகத்திற்கு சௌந்தர்ய லஹரி என்றும் பெயர்கள் என்று சிலர் கூறுவர்.
சிலர் 41 ஸ்லோகங்களுக்கு மட்டுமே உரை எழுதி உள்ளனர்.
சிலர் 100 ஸ்லோகங்களும் வியாக்கியானம் எழுதி உள்ளனர்.
ஆனால் இந்த கதை கூறும் சங்கேதம் என்ன வென்றால், எந்த ஒரு சுலோகத்தையும் அம்மாளின் அருளால் மட்டுமே எழுத இயலும்.
சங்கரருடைய எழுத்து, வாக்கு, புத்தி அனைத்தும் அம்பாளே அல்லவா?
அதனால் அம்பாள் அளித்ததை ஆதி சங்கரர் எழுதினார்.🍇🍇🍇
லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல
வீட்டு வாசலில் பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம்
வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்
எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்
மனைவி பார்க்கும் ஓர கண் பார்வை ஐஸ்வர்யம்
பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம்
இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம்
பவுர்ணமி தினத்தில் சந்திரன் ஐஸ்வர்யம்
உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம்
பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம்
இயற்கை அழகு ஐஸ்வர்யம்
உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம்
அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம்
புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம்
குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம்
கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்
ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு ஐஸ்வர்யம்
ஐஸ்வர்யம் என்றால் கையில் என்னும் பணக்கட்டு அல்ல
கண்ணால் பார்க்கும் உலகம் ஐஸ்வர்யம்
மனசு அடையும் சந்தோஷம் ஐஸ்வர்யம்..
*நம்மை சுற்றி பற்றி நண்பர்கள் இருந்தால் ஐஸ்வர்யம்...*
மேலிருந்து பறவையின் பார்வையாக பார்க்க வைக்கும் ஓவியம்..
மேகவண்ணனுக்கு மேலே தான் நிற்கமுடியுமா..
மேல்நோக்கி நம்மை தூக்கிவிட..
என் பாதத்திலே சரணடை நானுன்னை காக்கிறேன் என கரம்விரித்து அழைக்கின்றான் நாராயணன்.
தலைமீது குடையாக விரித்து நிற்க்கின்றான்.
பட்டுப்பீதாம்பர தாரி கண்கள் மலர்ந்து நோக்குகின்றான்.
பறந்த மார்பிலே மனையாளை தாங்கியல்லவோ நிற்கின்றான்..
பளபளவென மார்பிலே மின்னும் கௌஸ்துப மணியோடு திவ்ய தரிசனம்.
பூலோக வைகுந்தமாக தினம் காட்சியருளுகின்றான்..
பூ விரிவது போல் கண்களை விரித்து பார்க்கின்றான்..
பூப்போல அதரங்களினால் கீதாம்ருதம் பொழிகின்றான்...
நாராயணா என கூறினேன் நாவினித்தது.
மாதவா என்றழைத்தேன் பெரும் மாற்றங்கள் வந்தது..
கோபாலா என்றழைத்தேன் கோகுல பாலன் வந்து நின்றான்..
கோவிந்தா என்றழைத்தேன் விந்தைகளும் லீலைகளும் செய்பவன் நான் ஸ்ரீ நிவாசன் என உரைத்தான்.
கேசவா என்றழைத்தேன் ஓவியங்களாக வந்து அருளுகின்றான்.
அழைக்க இனி ஏதுமில்லை அவனுள்ளே அடங்கிவிட்டேன்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
அழகிய திருக்கோலம் கண்டாள்..
அழகனிவன் மேல் ப்ரேம பக்தி கொண்டாள்..
அவனையே மணாளனாய் வரித்தாள்..
அந்த ஸ்ரீவல்லிபுத்தூர் சிறுமி கோதை.
அரங்கனையே ஆண்டுவிட்டாள் அவனிலே கலந்து..
தொடுத்த மாலைகளை தான் அணிந்து அழகு பார்த்த அந்த மாலைகளை உந்தணிந்தான் அரங்கன்.
தொடுத்தாள் பாமாலைகள் முப்பது..
தொடர்ந்ததே வேத ஸ்வருப கிளியொன்று கரத்தில் மலர்ந்து...
தொடமுடியாதவனை ரங்கமன்னாரின் மனதையே தொட்டு அங்கே அமர்ந்து விட்டாள்..
தொடருவோம் கோதையின் பாத அடிகளை..
சாயக்கொண்டை சாய்ந்தாட..
சாரமான திருப்பாவை மாலைகளை சாரநாதனுக்கு சாற்றி விட்டாள்..
சாரமற்றுப் போய்விடுமே வாழ்க்கை இதனை அறியாது போனால்..
சாரப்பொருளாம் வேதமன்றோ இது.
மாதங்களிலே கண்ணன் மார்கழி..
மாலைகளிலே அவன் திருப்பாவை பாமாலை..
மதுர வழியாம் கோதையின் மணாளனாய் வரித்த பக்தி..
மண மணி மண்டபமே வாரணமாயிரம் சூழ வர.. கனவாய் கண்டவள் வரித்தாள் மணாளன் ஸ்ரீ ரங்கராஜனை.
கோதை நாமம் வாழியவே.
கோவிந்தன் நாமம் வாழியவே.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள்.
நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும்.
கண்ணில் மை தீட்டக்கூடாது.
கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்).
தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது.
தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது.
இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.🌸🌸🌸
வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும்.
மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான்.
அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.
இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.👍👍👍
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய்.
ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள்.
உறங்குபவள் எழுந்து தோழியரே!
சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள்.
அவளுக்கு பதிலளித்த தோழியர் கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள்.
ஆனால், அவர்களால் முடியவில்லை.
நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான்.
அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன்.
நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.🌺🌺🌺
அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால்,
நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா. சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து