முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும் .. 1 சுதாமர்
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.
சுதாமர்
சுதாமர்
சுசீலை உடல் சோர்ந்து போனாள் ... மனம் எப்பவோ நலிந்து போனது ... கண்கள் வற்றிப்போய் இனி அதில் மழை வர வாய்ப்பே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தன ...
நெஞ்சம் உறுதி இழந்து பல வருடங்கள் ஓடிப்போயின ...
வயிற்றில் இன்னொமொறு உயிர் ...
பால் சுரக்க வில்லை .. ரத்தம் கசிந்தது ... பிறந்த உயிர்கள் கெஞ்சின ..
புதியதாய் பிறக்கும் உயிர் துடித்தது போதிய உணவு கிடைக்காமல் ...
வேதங்களை முழுமையாக கற்றறிந்திருந்தவர் சுதாமா.
அவரது வாழ்க்கை ஜீவிதம் உஞ்சவிருத்தி மூலம் நடந்து வந்தது.
அவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்க முடியாத பிள்ளைச் செல்வங்கள் .
கிடைப்பதை உண்டு வாழும் வாழ்வில் செல்வ வளத்தை எப்படி அனுபவிக்க முடியும்.?
சுதாமாவின் இல்லறமும் கூட வறுமையிலேயே கழிந்தது. ...
வாழ்க்கையில் வறுமை கங்கை போல் பெருக்கெடுத்து ஓடினாலும் அவர்கள் நெஞ்சமெல்லாம் கண்ணன் எனும் திருடன் காளிங்க நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தான் ..
நெஞ்சத்தில் பக்தியை பாலாக்கி அதை சுண்டி காய்ச்சி அதில் கண்ணன் எனும் சர்க்கரை சேர்த்து , நினைவுகள் எனும் ஏலக்காய் , குங்கமப்பூவை அரைத்து தூவி அதையே குழந்தைகளுக்கும் கொடுத்து பசியை தீர்த்துக்கொண்டு வந்தனர் ..
காலம் நகர்ந்தது ... மறையும் கதிரவன் போல் இளமை மறைந்து முதுமை மலர்ந்தது ...
பக்தி மட்டும் மறையாமல் அன்று பூத்த தாமரைப்போல் மலர்ந்து வளர்ந்தது ...
கண்ணா கண்ணா என்று மூச்சுக்கு 300 தடவை சொல்லிக்கொண்டு வருகிறீர்களே ..
அவன் உங்கள் பால்ய நண்பன் ஆயிற்றே போய் கொஞ்சம் பார்த்து விட்டு வாருங்கள் ..
நம் வறுமை ஒழியுமே ... கெஞ்சினாள் சுசீலை ..
பெற்ற மனம் பிள்ளைகளுக்கு ஒரு வாய் கஞ்சியாவது கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் ... சீறினார் சுதாமா ...
சுசீலை .. என்ன பேத்துகிறாய் ... கண்ணன் பேரை சொல்லும் பாக்கியம் மட்டுமே நாம் பெற்றிருக்கிறோம் ..
அவன் ராஜா , நாம் பிறரை நம்பி வாழ்கிறோம் ... நாம் எங்கே அவன் எங்கே ...
போயும் போயும் பொருள் செல்வத்திற்காகவா நாங்கள் நட்பு வைத்துக்கொண்டோம் ..
அவன் பெயர் சொல்லும் பெரும் செல்வதை நமக்கு கொடுத்துள்ளான் ... இது போதும் நமக்கு ....
வற்றிப்போன சுனையிலிருந்து இரண்டு கண்ணீர்த் துளிகள் போராடிக்கொண்டு வெளி வந்தன ...
ஒன்றும் கேட்க வேண்டாம் அவனை ஒரு முறை பார்த்து விட்டாவது வாருங்கள் ....
போகும் போது அவனுக்கு இந்த அவலை கொஞ்சம் கொடுங்கள் ...
கிழிந்து போன வேட்டி பலமாக சிரித்தது ... முடித்துப் போடக் கூட இடம் இல்லாமல் ...

கண்ணா ... நீ எப்படி இருக்கே .. உன்னை பார்த்து எவ்வளவு ஆண்டுகள் ஆனது ..
நீ சிரிக்கும் போது உன் கன்னங்களில் அழகாக குழி விழுமே ...
உன் சுருள் சுருள் கேசம் உன் நெற்றியில் ஓடி வந்து படருமே ..
உன் கொவ்வை இதழ்கள் மதுரத்தை என் மீது தெளிக்குமே ...
உன் சிரிப்பு எனக்கு போதை உண்டாக்குமே ...
உன்னை சுற்றி எப்பொழுதும் பெண்கள் கூட்டம் ...
கண்ணா என்னை அடையாளம் கண்டு கொள்வாயா ...
உன்னைப்போல் எனக்கும் கன்னங்களில் இப்பொழுது குழி விழுகிறது ...
கண்ணை கண்ணன் இருக்கும் துவாரகை பக்கமே வைத்துக்கொண்டு நடக்க முடியாமல் நடந்தார் சுதாமா..
Comments