முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். ... சுதாமர் ..4



முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.  


சுதாமா




காவலாளிகள் கண்ணனிடம் சொல்ல ஓடும் போது ஒருவனுக்கு சந்தேகம் பிறந்தது 

"அபரஜிதா ... நம் மன்னர் சொன்ன கட்டளையை மறந்து விட்டோமே .. அவர் இன்று ருக்மிணி அம்மையாருடன் ஏகாந்த நிலையில் இருக்கிறார் .. யாரும் எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்ய க்கூடாது என்றாரே ..  ஐயோ மறந்து போனோமே ... "

"ஆமாம் நீ சொன்ன பிறகுதான் ஞாபகம் வருகிறது ... வக்கரத்துண்டா ... சுதாமரை பார்க்க பாவமாக இருக்கிறது ... 

நம் மன்னரை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கா விடில் போய் விடும் அவர் உயிர் ... ஒரு பிராமணனை கொன்ற பாவம் நம் இருவருக்கும் வந்து விடும் ... எது தேவலை ? நம் மன்னர் நமக்கு தரப்போகும் தண்டனையா இல்லை சுதாமரை கொன்ற பாவமா ?? "

"சரி நமக்குத் தண்டனை நிச்சயம் ... ஒரு உயிரை காப்பாற்றிய சந்தோஷத்தில் மன்னர் தண்டனை எதுவானாலும் ஏற்றுக்கொள்வோம் ... வா ஓடுவதை நிறுத்தாதே ... மன்னரை அடைய இன்னும் ஒரு மணி நேரம் ஓட வேண்டும் ... அரண்மனை அவ்வளவு பெரியது நம் மன்னரின் மனம் போல்..... 

கண்ணன் அங்கே ருக்மணி தந்த தாம்பூலத்த்தில் திளைத்திருந்தான் ... கண்ணனின் மயில் பீலி ருக்மணியின் கன்னங்களை வருடி கொடுத்துக்கொண்டிருந்தது .... 

கண்ணா உன்னை அடைய என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் ... என் அந்தரங்கம் அனைத்தும் அந்த ரங்கனே அறிவான் ... அங்கே உன்னை அன்றி வேறு யார் உள்ளார் கண்ணா ? 

சிரித்தான் கண்ணன் .... தேவி அந்தரங்கம் அறிவேன் அந்த ரங்கனாக...எந்த ரங்கம் என்றாலும் உன் மடியே நான் படுத்து உறங்கும் என் சுரங்கம் .... பங்கம் வராமல் பாது காக்கிறாய் ... சங்கம் வளர்த்த தமிழ் போல் சதா என் புகழ் பாடுகிறாய் ..  தங்கம் நீ என்றால் அதுவும் குறைவே ..  அங்கமெல்லாம் நீ வாழும் வைகுண்டம் ...

போதும் கண்ணா ... உனக்கும் புகழ தெரியுமா ? ... இன்று உன் முகத்தில் என்றும் பார்க்காத இன்பத்தை பார்க்கிறேன் ..  நான் உன் மிக அருகில் இருப்பதால் தானோ கண்ணா இந்த முக மாற்றம் .... 

தேவி ... உண்மை அதுவே ... அதற்கு ஈடாக இன்னொரு விஷயம் ... யாரோ எனக்கு மிகவும் வேண்டியவரை இன்று சந்திக்கப்போகிறேன் என்றே என் அடி மனது சொல்கிறது ... 

கண்ணா நீ பொய் சொல்வதில் மன்னன் ... இன்று முழுவதும் என்னுடன் தான் இருக்கப்போகிறாய் என்று சொன்னாய் ... எங்கிருந்து வந்தார் உனக்கு மிகவும் வேண்டியவர் கண்ணா ... 

தேவி இது என் யூகம் ... சந்திக்காமல் கூட போகலாம் ... 

அவள் கரங்களில் மீட்கும் வீணையாக கண்ணன் ... காதல் எனும் நரம்பை மீட்டினாள் ருக்மணி ... சொர்க்கம் எனும் இசை பிறந்தது அங்கே ... எடுத்துச் சென்றது இருவரையும் வேறு உலகம் ஒன்றிர்க்கே ..... 

அங்கே வானம் மஞ்சனை போட்டு நிலவை இரவு விளக்காய் ஏற்றி , நட்சத்திரங்களை ஊதுபத்தி சொருகும் இடமாக மாற்றி புல்லாங்குழலால் மென்மையாக கீதம் வாசித்தது ... 

மின்னல் தேவை படும் போது மட்டுமே அவர்களுக்கு வெளிச்சம் காட்டியது ... இடி வாசலில் நின்று யாராவது வந்தால் கர்ஜித்து விரட்டி அடித்தது  .... 

கதிரவன் தோன்றி விடாமல் இருக்க கார்மேகங்கள் ஒன்றாய் கூடி ஆதவன் உதிக்கும் கிழக்கு திசையில் உண்ணாவிரதம் இருந்தன .... 

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை