கருணை மிகுந்த Lion King - part 2 பத்மபாதரும் ஆதி சங்கரரும்
ஆதி சங்கர பகவத் பாதாள் கிட்ட, பல மதஸ்தர்கள் வந்து வாதம் பண்றா, இந்த காபாலிக மதம்னு ஒண்ணு, நரபலி எல்லாம் கொடுக்கறவா. அவா வந்து வாதம் பண்றா.
சில பேர் கேட்டுக்குறா சங்கரர் சொல்றதை, அவா திருந்தறா. வாமாச்சாரங்கள் எல்லாம் விட்டு, தக்ஷிண ஆசாரத்துக்கு வந்து, நல்ல வழியில பூஜை பண்றா.
ஆனா சில பேர் அவர் கிட்ட ரொம்ப வெறுப்பு வெச்சுண்டு, இவரை ஒழிச்சு கட்டணும்னு பேசிண்டு இருக்கா.
அதுல ஒரு காபலிக தலைவன் இருக்கான், அவன் என்ன பண்றதுன்னு பார்க்கிறான். இவரை நம்மால நேரடியா ஜெயிக்க முடியாது, இவர் பெரிய தபஸ்வியா இருக்கார்.
அதனால ஒரு சூழ்ச்சி பண்ணலாம்ன் னு, தனியா ஆதி சங்கரர் இருக்கும்போது அவர் பக்கத்துல வந்து “சாமி நான் இந்த காபாலியை குறித்து நான் ரொம்ப நாளா உபாசனை பண்றேன், எனக்கு தரிசனம் கிடைக்கலை.
ஒரு சாம்ராஜய பட்டாபிஷேகம் பண்ணிண்ட ராஜாவோ, இல்லை ஒரு சன்யாசியோ, அவா தலையை வெட்டி நெருப்புல பலி கொடுத்தா, எனக்கு சாமி தரிசனம் கிடைக்கும்னு சொல்றாங்க, எங்களுடைய மதத்துல.
அது தான் நம்பிக்கை. ராஜா கிட்ட போனா அவன் முதல்ல என்னை வெட்டிடுவான். நீ சாமியாரா இருக்கே. உன் தலையை கொடேன்” ன்னு கேட்கறான்.
ஆதி சங்கரர் எவ்வளோ ஞானத்தோட இருக்கார்! உடம்பு நான் ங்கிற எண்ணமே இல்லாம இருக்கிற, ஆதி சங்கரர் சொல்றார்
“ஆஹா அப்படியா, இந்த மரங்கள் பட்டு போனா அடுப்பு எரிக்க உபயோகப்படறது. மிருகங்களோட உடம்பு கூட அதுகள் இறந்தப்பறம் உபயோகமா இருக்கு, கொம்பை வெச்சு அபிஷேகம் பண்றா.
தோல் எல்லாம் வச்சு ஏதோ உபயோகம் படுத்திக்கிறா. அப்படி இந்த மனுஷ சரீரம் தான் உபாயோகமே இல்லமா இருக்குன்னு நான் நினைச்சேன்.
இதுனால உனக்கு ஒரு உபயோகம்னா, நான் அதை கொடுக்கறேன். எனக்கு ஒண்ணும் ஆக்ஷேபணை இல்லை. இருந்தாலும் கூட இருக்கற சிஷ்யர்கள் எல்லாம், இந்த உடம்பு மேல ஒரு அபிமானம் வச்சிருக்கா.
அதனால நான் ஒரு இடம் சொல்றேன். நாளைக்கு அந்த இடத்துல, அந்த நேரத்துல இருப்பேன். நீ வந்து என் தலையை எடுத்துண்டு போயிடு”ங்கறார். அப்படி ஒரு வைராக்கியம்.
அதே மாதிரி அடுத்த நாள் அவர் உட்கார்ந்து இருக்கார். இந்த காபலிகனும் வரான். பெரிய வாளை எடுத்து அவர் கழுத்துல போடா போறான்.
அப்போ அங்கே திடீர்னு பத்மபாதர் வர்றார். அவருக்குள்ள நரசிம்ம ஸ்வாமி ஆவிர்பவிச்சு, அந்த காபலிகனை கிழிச்சு போட்டுடறார்.
ஆதி சங்கரர் ரொம்ப நேரம் கழிச்சு கண்ணை திறந்து பார்க்கறார். அந்த காபலிகனோட ம்ருத சரீரம் இருக்கு. பத்மபாதர் கை கூப்பி நின்னுண்டு இருக்கார்.
“என்னாச்சு? ன்னு கேட்கறார். “எனக்கு தெரியலையே” னு பத்மபாதர் சொல்றார் “நான் கங்கை கரையில இருந்தேன், திடீர்னு இங்க இருக்கேன். என்னாச்சு ன்னு எனக்கு தெரியலை” அப்படீன்னு சொல்றார்.
“ஓஹோ! உனக்கு நரசிம்ம மந்த்ரம் உபதேசம் ஆகியிருக்கா” ன்னு கேட்கறார். “ஆமா முன்ன நிறைய ஆவ்ருத்தி பண்ணேன், ஜபங்கள் எல்லாம் பண்ணேன்.
ஸ்வாமி ஒரு வேடனுக்கு தரிசனம் கொடுத்தார், எனக்கு தரிசனம் கொடுக்கலை, பின்னாடி நான் வந்து சஹாயம் பண்ணறேன் ன்னு சொன்னார்”. அப்படீன்ன உடனே, “அது தான் பண்ணியிருக்கார். நரசிம்ம ஸ்வாமி உனக்குள்ள வந்து என்னை காப்பாத்தணுங்றதுக்காக இந்த காபலிகனை கிழிச்சு போட்டு இருக்கார்” அப்படீன்னு சங்கரர் சொன்ன உடனே,
Comments