அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 75 to 80 பதிவு 62

                                       அபிராமி பட்டரும்  அடியேனும் 

  கேள்வி பதில் 75 to 80

                                         பதிவு 62👌👌👌




நான் பட்டரே வணக்கம் ...  ஒரு சந்தேகம் .. வரக்கூடாதுதான் ஆனால் வந்து விட்டது .. தாங்கள் கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டும்... 

பட்டர் சொல் ... முடிந்தால் சொல்கிறேன் 

 நான்

அம்பாளுக்கு பட்டுப்புடவை ஏன்? 

பூஜைகள் செய்து இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்?

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி 

இறைவனின் சிலையை, படத்தை துடைத்து, அபிஷேகம் பண்ணி, பூவாலும், சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் செய்கிறோம்? 

அதுமட்டும் இல்லாமல்  பகவான் பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் பெரிய அளவில்  ஏன் அலங்காரம் செய்கிறோம்?

இறைவன் நம்மை கேட்டானா ? 

என்னை அலங்காரம் செய் என்று... 

இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா இல்லையே...! 

பின் எதற்கு இந்த அலங்காரம்?

*பட்டர்* ஒரு கேள்வி என்று பல கேள்விகள் கேட்டுள்ளாய் .. சரி விடை ஒன்றுதான் .. 🙌🙌🙌



பட்டர்

மனித மனம் அலைபாயக் கூடியது.

ஒரு இடத்தில் நிலைத்து நில்லாதது. 

அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும். 

ஆனால் மனக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதில் வருவது இல்லை. 

முதலில் மனதை ஒன்றின் மேல்  பதிய வைக்க வேண்டும். 

மனம் அதில் லயிக்க வேண்டும். 

அதிலேயே மனம் கலக்க வேண்டும். 

அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம். 

ஐம்புலன்களான கண்ணுக்கு தீனிபோட அம்பாளின் பட்டுப்புடவை, 

வண்ண வண்ண மாலைகள், 
நகைகள்.

மூக்குக்கு வாசனையாக சாம்பி்ராணி, கற்பூரம், சந்தனம், பன்னீர்

செவிக்கு தீனி போட மணியோசை, வேதகோஷங்கள், பாசுரங்கள், பாராயணங்கள்

வாய்க்கு சுவையாக புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல் நிவேதனங்கள்

மெய்யில்லாத மெய்யான நம்முடைய உடலுக்கு வேலைதர பிரதட்சணம் செய்வதற்கு பெரிய ஆலயங்கள் என்று கட்டி வைத்து, , 

இஷ்டப்படி மனத்தை இழுத்துச் செல்லாதவகையில் ஐம்புலன்களை அடக்கும் வழியைக் காட்டி இருக்கிறார்கள்....🙏

நான் .. 

எவ்வளவு சுலபமாக எனக்கே புரியும் படி சொல்லிவிட்டீர்கள் . 

அபிராமியின் அருள் பெற்றவர் என்றால் சும்மாவா ? 💐💐💐

பட்டர் பறந்து சென்றார் எந்த புகழ்ச்சிக்கும் அடிமை ஆகாதவர் ...🙌🙌🙌



Comments

ravi said…
How did Indra become the king of the Gods if Vishnu, Shiva, and Brahma were the ultimate creators?
ravi said…
Indra is not the name of any person rather it’s the post of the King of heaven. On performing 100 Ashwamedha Yagnas,any man can go to heaven and can obtain position of the king of heaven. He will retain the post of Indra until another person does more or same Yajnas than previous Indra and becomes eligible for this position. The present Indra (Sakra) became king of heaven by performing 100 Ashwamedha Yagnas as described in Shanti Parva of the Mahabharata
ravi said…
It is heard, O Partha, that the gods and the Asuras fought against each other. The Asuras were the elder, and the gods the younger brothers. Covetous of prosperity, fierce was the battle fought between them. The fight lasted for two and thirty thousand years. Making the earth one vast expanse of blood, the gods slew the Daityas and gained possession of heaven. Having obtained possession of the earth, a (large) number of Brahmanas, conversant with the Vedas, armed themselves, stupefied with pride, with the Danavas for giving them help in the fight. They were known by the name of Salavrika and numbered eight and eighty thousand. All of them, however, were slain by the gods....
ravi said…
The Horse-sacrifice, that grand rite, has been indicated as an expiation for thee. Make preparations for that sacrifice, O monarch, and thou shalt be freed from thy sins. The divine chastiser of Paka, having vanquished his foes with the assistance of the Maruts, gradually performed a hundred sacrifices and became Satakratu. Freed from sin, possessed of heaven, and having obtained many regions of bliss and great happiness and prosperity, Sakra, surrounded by the Maruts, is shining in beauty, and illuminating all the quarters with his splendour. The lord of Sachi is adored in the heavens by the Apsaras. The Rishis and the other gods all worship him with reverence.[1]

ravi said…
Sage Kashyapa's wife Diti was the mother of Asuras and Aditi was the mother of gods. The gods fought with Asuras and conquered heaven. Then Indra performed a hundred Ashwamedha Yagnas in order to become worthy of being the king of the heaven. Then a grand coronation took place.
ravi said…
Ever since Indra became king of heaven, he tried to make sure that no one else performs a 100 Ashwamedha Yagnas. That's why he stole the horses from the Ashwamedha Yagnas of Rama's ancestor Sagara. Bhagavata Purana states that Prithu performed ninety-nine ashwamedha yagnas, but Indra disturbed Prithu's hundredth one. The yagya was abandoned, Lord Vishnu gave Prithu his blessings and Prithu forgave Indra for the latter's theft of the ritual-horse. He also stopped Mahabali completing his hundredth Ashwamedha Yagna.
ravi said…
Indra has always succeeded in protecting his throne from performers of Ashwamedha Yagnas. Once he had to leave his throne for killing a Brahmin and bound by a curse called Brahma Hatya which led to Yayati's father Nahusha taking over heaven. After Nahusha was cursed by saptarshis, gods requested Indra to take back the throne.
ravi said…
Bhagavata Purana describes how Indra stole Ashwamedha horse of King Prithu:

Text 11: When Pṛthu Mahārāja was performing the last horse sacrifice [aśvamedha-yajña], King Indra, invisible to everyone, stole the horse intended for sacrifice. He did this because of his great envy of King Pṛthu.

Text 12: When King Indra was taking away the horse, he dressed himself to appear as a liberated person. Actually this dress was a form of cheating, for it falsely created an impression of religion. When Indra went into outer space in this way, the great sage Atri saw him and understood the whole situation.

Text 13: When the son of King Pṛthu was informed by Atri of King Indra’s trick, he immediately became very angry and followed Indra to kill him, calling, “Wait! Wait!”

ravi said…
Text 14: King Indra was fraudulently dressed as a sannyāsī, having knotted his hair on his head and smeared ashes all over his body. Upon seeing such dress, the son of King Pṛthu considered Indra a religious man and pious sannyāsī. Therefore he did not release his arrows.[2]
ravi said…
94.யஸ்தே ராகாசந்த்ரபிம்பாஸநஸ்தாம்
பியூஷாப்திம் கல்பயந்தீம் மயூகை:
மூர்திம் பக்த்யா த்யாயதே ஹ்ருத்ஸரோஜே
ந தஸ்ய ரோகோ நஜரா ந ம்ருத்யு:
ravi said…
ஹே தேவி! பூர்ணிமை சந்திரனாகிய ஆஸனத்தில் ற்றிருப்பதும், கிரணங்களால் அம்ருதக் கடலைத் தோற்றுவிப்பதுமான உனது மூர்த்தியை எவன் தனது ஹ்ருதயத்தாமரையில் தியானிக்கிறானோ அவனுக்கு நோயோ, வயோதிகத் தன்மையோ, மரணமோகூட ஏற்படாது.
ravi said…
🌺🌹 "" ​​Hare Krishna .... take care of my mother till I come "said Adi_Sankar - simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹Adi Shankara promises to come wherever he is if he agrees to become a monk and calls Sankara three times during his mother's last days.

🌺The end of Mother 'Aryambali' is approaching. The mother calls Sankara three times and after a while she hears the voice of the mother. 'Come closer if Sankara has come,' he says.

🌺Mother touches and touches Sankaran who is nearby with blurred vision. His mind is pounding.
ravi said…
🌺The touch of the ornaments worn on the body of the initiated son occurs. The mind fears that the son has failed in his monastic duty,

🌺Then again Sankaran comes as the voice of Amma calls Amma, son Sankara tells Sankaran what happened that you are just coming.

🌺Sankaran laughed and said, "Mother, when I went to the monastery, I went to Krishna in the temple opposite our house and said, 'Hare Krishna ... take care of my mother until I come.'

🌺 That Krishna has come so that your mind should not be distracted because I am late to come.
ravi said…
🌺His Tabo power makes available to him the vision of the trinity for his mother’s long-awaited divine vision.

🌺The tomb of Adi Shankara's mother, with the lamp lit by Sankara, and the temple of Lord Krishna guarding his mother are still at Kalady.

🌺5 songs 'Mathru Panchakam' which he blessed after his mother's death explains to us his mother's pride.🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺"" *அடே கிருஷ்ணா....நான் வரும்வரை என் அம்மாவை பார்த்துக்கொள்" என்று கூறிவிட்டுப் போன ஆதி_சங்கரர் - விளக்கும் எளிய கதை🌹* 🌺
----------------------------------------------------------
🌺🌹ஆதி சங்கரர் தாம் சந்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் தாயின் இறுதி காலத்தில் மூன்று முறை சங்கரா என்றழைத்தால் எங்கிருந்தாலும் நான் வந்துவிடுவேன் என வாக்களித்து செல்கிறார்.
ravi said…

🌺தாயார் 'ஆர்யாம்பாளி'ன் இறுதிக் காலம் நெருங்குகிறது. தாயும் மூன்று முறை சங்கரா என்றழைக்கிறார், சிறிது நேரம் கடக்கிறது அம்மா என்ற குரல் கேட்கிறது. 'சங்கரா வந்துவிட்டாயா அருகில் வா' என்கிறார்.
ravi said…
🌺கண்பார்வை மங்கிய நிலையில் அருகில் வந்த சங்கரனை தொட்டு தடவுகிறார் தாயார். அவருடைய மனம் பதைத்துப் போகிறது.

🌺துறவறம் மேற்கொண்ட மகனின் உடம்பில் அணிந்துள்ள ஆபரணங்களின் ஸ்பரிசம் ஏற்படுகிறது. மகன் துறவறக் கடமையிலிருந்து தவறிவிட்டானோ என்று மனம் அஞ்சுகிறது,

🌺பின்னர் மீண்டும் அம்மா என்ற குரல் அம்மாவை அழைத்தபடி சங்கரன் வருகிறார், மகனே சங்கரா நீ இப்போதுதான் வருகிறாயா என்று நடந்ததை சங்கரனிடம் கூறுகிறார்.
ravi said…

🌺சங்கரனோ சிரித்தபடி "அம்மா நான் துறவரம் சென்றபோது நமது வீட்டின் எதிரிலுள்ள ஆலயத்தின் கிருஷ்ணனிடம் "அடே கிருஷ்ணா....நான் வரும்வரை என் அம்மாவை பார்த்துக்கொள்" என்று கூறிவிட்டுப் போனேன்

🌺நான் வர தாமதமானதால் உங்கள் மனது நோகக் கூடாது என்று அந்த கிருஷ்ணனே வந்திருக்கிறான் என்றார்.

🌺தன் தாயாரின் நெடுநாளைய ஆவலான தெய்வ தரிசனத்திற்காக தன் தபோ சக்தியால் அவருக்கு மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கச் செய்கிறார்.
ravi said…
🌺ஆதிசங்கரரின் தாயார் சமாதியும், அதில் சங்கரர் ஏற்றி வைத்த விளக்கும், தாயாருக்கு காவல் இருந்த கிருஷ்ணரின் ஆலயமும் காலடியில் இன்றும் உள்ளது.

🌺தாயார் இறந்தபின் அவர் அருளிச் செய்த 'மாத்ரு பஞ்சகம்' என்னும் 5 பாடல்கள் தாயாரின் பெருமையை நமக்கு விளக்குகிறது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌺🌹🌺
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 54*🐒🐒🐒
ravi said…
ஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |

அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை ||

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |

னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 7💐💐💐
ravi said…
*ஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |* 🌺🌺🌺
ravi said…
ராமர் மேலும் அனுமனை புகழ்கிறார்

சங்கர சுவனா தனியாளாக இலங்கை சென்று சிங்கத்தின் குகைக்குள் சென்று அந்த சிங்கத்தையே அசிங்கப்படுத்தி விட்டு வந்தாய் .உன் புகழை ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதிசேஷனாலும் பாட முடியாது 🐍
ravi said…
*அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை ||*

அப்படியே சொல்லிக்கொண்டே அவன் கழுத்தை சுற்றி தன் கரங்களால் மாலை அணிவித்தார் மீண்டும் அனுமனை இறுக்கி கட்டிக்கொண்டார் .. முதல் தடவையாய் அனுமன் மூச்சு விட திண்டாடினான் 🐒🐒🐒
ravi said…
*கண்ணனும் சங்கரனும்*

சங்கரா உனை நான் பார்ப்பேனோ ?

ஆரியாம்பாள் ....அந்திமம் மந்தமாய் ஆக்கியது கண்களை ..

பால் கொடுத்தேன் பரமனுக்கு

பால் ஊற்ற வருவனோ ?

மூடும் கண்கள் அவன் பாதம் கண்டு மலராதோ?

துவளும் மேனி அவன் ஸ்பரிசம் கண்டு துள்ளாதோ?

சங்கரா வருவாயோ நீ ...

சங்கரன் காதில் எட்டியது சுமந்தவளின் சோக கீதம் ...

கீதை சொன்னவனிடம் சொன்னான் ...

கண்ணா நான் வரும் வரை என் அன்னையை உன் யசோதையாய் பார்த்துக்கொள்வாயோ ?

சங்கரா வருவாயோ நீ ...

அன்னையின் புலம்பல் அருகில் இருக்கும் கண்ணன் காதில் விழுந்தது யமுனையின் பேரிரைச்சல் போல்

அம்மா நான் உன் சங்கரன் வந்துவிட்டேன் ...

தொட்டான் சங்கரன் தாயின் பாதங்களை ..

தடவினாள் சங்கரனை பத்து மாதம் மடியை தடவியதை போல் ...

அம்மா ... கொஞ்சம் பால் தருகிறேன் ... கோபியர் தந்தது என்றான் வந்த சங்கரன் ...

தொட்ட இடம் எல்லாம் ஆபரணங்கள் ... தவித்தாள் ஆர்யாம்பாள் ...

எங்கே மகன் சந்நியாசம் தவறி விட்டானோ என்றே ...

அம்மா இதோ உன் சங்கரன் ... மீண்டும் குழல் ஊதிய குரல் ...

அன்னை கேட்டாள் நீதானே இங்கிருந்தாய்

ஏன் மீண்டும் வந்தேன் என்கிறாய் ...

நகைகள் உனக்கு அழகா சங்கரா ?

சந்நியாசம் எனும் புன்னகை கொண்டாய் ...

துறக்க வில்லையோ நகை மேல் கொண்ட ஆசைகள் ?

அம்மா முன் வந்தது நான் அல்ல

அதோ நீ தினம் தினம் வணங்கும் உன் கண்ணன் ...

அவன் துறவறம் கொண்டால் நகைகள் ஆத்ம தியாகம் செய்யாதோ ?

ஆஹா வந்தது என் கண்ணனா ?

தடவி கொடுத்தேன் என் பரந்தாமனை ...

இப்போ என் சங்கரனை ...

இருவரும் ஒருவரே என்றே புரிய வைத்தாய் சங்கரா!!

இதை உலகம் புரிந்து கொள்ள வழி செய்வாயோ ?

செய்வேன் தாயே

மீண்டும் கலவையில் உதிப்பேன்

காஞ்சி தனை காப்பேன்

விழுப்புரம் தனில் விழுதாக வருவேன் ...

சிரித்தான் சங்கரன் இல்லை கண்ணன் ...அன்னையின் கண்களை அழகாக மூடியே 🌺🌺🌺
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 202* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*66 வது திருநாமம்*
ravi said…
66 सम्पत्करीसमारूढसिन्धुरव्रजसेविता - ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜஸேவிதா | -*

லலிதாம்பிகையின் யானைப் படைத்தலைவி இந்த *ஸம்பத்கரி தேவி.*

கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள், ரதங்கள் சூழ, சகல செல்வங்களையும் தன்னுள் கொண்ட ஸம்பத்கரி பரமேஸ்வரி,

தன் பக்தர்களுக்கு அழியாத நவநிதிகளையும் வாரி வழங்கி அருள்பாலிக்கிறாள். தேவியின் வாகனமான யானையின் பெயர் *ரணகோலாஹலம்* .
ravi said…
லலிதாம்பிகையைப் போற்றும் சக்தி மஹிம்ன துதியில் மிக வீர்யம் உள்ளதும் வெற்றியுடன் விளங்கக்கூடியதுமான உனது அங்குசத்தை தன் உள்ளத்தில் எவன் தியானிக்கிறானோ அவன் தேவர்களையும் பூவுலகில் ஆள்பவர்களையும் எதிரி
சைதன்யங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவனாகவும் விளங்குவான் என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வளவு பெருமை பெற்ற லலிதையின் அங்குசத்திலிருந்து தோன்றிய சக்தி இந்த ஸம்பத்கரிதேவி.
ravi said…
யானையின் மதத்தை அடக்க அங்குசம் உதவுவதுபோல, நான் எனும் மதத்தை தேவி அடக்குகிறாள்
ravi said…
யானையைப் பழக்கிவிட்டால் அது எவ்வளவோ நல்ல பணிகளுக்கு உதவுவது போல,

இந்த தேவியும் தன்னை அன்பாக வழிபடும் பக்தர்களின் வாழ்வில் மங்களங்கள் சூழ செல்வவளம் பெருக்குகிறாள்.

யானையும் குதிரையும் எங்கேயோ காடுகளில் இல்லை.

நமக்குள்ளேயே மனமாகவும், அகங்காரமாகவும் உள்ளன.

இரண்டையும் பழக்கப்படுத்தி பக்குவமாக்க வேண்டும்.

அம்பிகையை அடைவதற்கு முன், குதிரையைப் பழக்குவது போல்,

நம் மனதைப்பழக்கி, யானையின் மதத்தைக் கட்டுப்படுத்துவது போல நம் அகங்காரத்தையும் ஒடுக்க வேண்டும் என்பதே இந்த தேவியரின் தத்துவம் விளக்குகிறது.🌺🌺🌺
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 201* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 49👍👍👍
ravi said…
*8. எட்டு விதமான கண்ணோட்டம்*

ஸர்வ ஜயம், நிதி தர்சனம்🙏
ravi said…
விஶாலா கல்யாணீ ஸ்புட ருசி ரயோத்யா குவலயை:

க்ருபாதாராதாரா கிமபி மதுரா(அ)(அ)போக வதிகா

அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா

த்ருவம் தத்தந்நாம வ்யவஹரண யோக்யா விஜயதே 49
ravi said…
அம்மா !!

உன்னுடைய கண்ணோட்டம் விசாலமாகவும்

மங்களகரமாகவும் மலர்ந்து பிரகாசிப்பதாகவும்,

கருநெய்தல்களால் வெல்லமுடியாத அழகு வாய்ந்ததாகவும்

கருணைப் பெருக்கிற்கு ஆதாரமாகவும்

வர்ணிக்க முடியாத இனிமையுடன் கூடியதாகவும்,

ஆழங்காண முடியாததாகவும், ரக்ஷிப்பதாகவும்,

பல நகரங்களில் அதன் வெற்றியின் சீர்மை விளங்குவதாகவும்,

அதனால் அந்த நகரங்களின் பெயர்களால் குறிப்பிடத் தக்கதாகவும்

நிச்சயம் அனைத்தையும் வெல்லுவதாக விளங்குகிறது.💐💐💐
ravi said…
*எட்டு விதமான த்ருஷ்டி:*

1. *விசாலா* என்பது உள்ளாக மலர்ந்த பார்வை

2. *கல்யாணீ* ஆச்சரியத்தைக் காட்டுவது

3. *அயோத்யா* காமத்தை உண்டாக்குவது

4. *தாரா* ஆலஸ்யத்தைக் காட்டுவது

*5. மதுரா* ஸஞ்சலமானது

*6. போகவதீ*

பிரியத்தோடு கூடியது

*7.அவந்தீ*

மயங்கியது

*8.விஜயா*

பாதி மூடினது💐💐💐
ravi said…
[23/04, 07:54] Moorti Mumbai: 🙏🤝
[23/04, 07:55] Moorti Mumbai: 👌🙏🙏
ravi said…
கருணா ரச சாகரா... அற்புத பதிவு 🙏🙏
ravi said…
*DUST IT OFF*


Don't get lost in doing your duties. Yes, we all have to do our duties but they are not why we have taken birth.

Life is happening in between these duties, steal those moments, capture those opportunities.

There is so much more to life than playing the roles.

Don't let your pots shine brighter than you

My grandmother once said: Don't take house cleaning so serious.

Life is short, have fun!

Dust when you need to, but also take time to paint a picture or write a poem, take a walk or visit a friend.

Cook whatever you want, water your plants.

Take time off to drink a coffee, swim at the beach (or pool), climb mountains, play with dogs, listen to music, read books, spend time with your friends and enjoy life.

Dust off if you need to, but life goes on outside.

You know this day will never come back.

Dust off if you need to, but remember that you are getting older and many things you can do now are not so easy to do in your old age.

And when you leave, since we all leave one day, you will also become dust and no one will remember how many bills you paid, not even your clean house, but they will remember your friendship, your fun, your laughter and what you taught and meant to them.

Have a good day ...

💐💐💐
ravi said…
*LEADER IN FRIENDLINESS (Michael Josephson)*

A student assigned to write an essay about an effective leader wrote this story . . .

I've been taking a bus to school for years. Most passengers keep to themselves and no one ever talks to anyone else.

About a year ago, an elderly man got on the bus and said loudly to the driver, ‘Good morning!’

Most people looked up, annoyed, and the bus driver just grunted.

The next day the man got on at the same stop and again he said loudly, ‘Good morning!’ to the driver. Another grunt.

By the fifth day, the driver relented and greeted the man with a semi-cheerful ‘Good morning!’

The man announced, ‘My name is Benny,’ and asked the driver, ‘What's yours?’ The driver said his name was Ralph.

That was the first time any of us heard the driver's name and soon people began to talk to each other and say hello to Ralph and Benny.

Soon Benny extended his cheerful ‘Good morning!’ to the whole bus. Within a few days his ‘Good morning!’ was returned by a whole bunch of ‘Good mornings’ and the entire bus seemed to be friendlier. People got to know each other.

If a leader is someone who makes something happen, Benny was our leader in friendliness.

A month ago, Benny didn't get on the bus and we haven't seen him since.

Everyone began to ask about Benny and lots of people said he may have died.

No one knew what to do and the bus got awful quiet again.

So last week, I started to act like Benny and say, ‘ *Good morning!’* to everyone and they cheered up again.

I guess I’m the leader now. I hope Benny comes back to see what he started.

Have a satiated Saturday
ravi said…
The successful man will profit from his mistakes and try again in a different way. Dale Carnegie



To reach the eternal you must let go of temporary.

Don’t trust words, trust actions and results.

Happiness is not about getting all you want, it is about enjoying all you have.

To become learned, each day add something; to become enlightened, each day drop something.

Joy lies in you, not in the things around you.

Being positive in a negative situation is not naive, it’s leadership.
ravi said…
பக்தியின் சிறப்பு

சிவபுராணம்

(திருவிளையாடலும், திருவினையும்)

செருத்துணை நாயனார்…!!

சொல் வளமும், இயற்கை வளமும் நிரம்பியிருந்த சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரில் வீரமும், மற்றவர்களுக்கு உதவும் குணமும் கொண்ட வேளாண்குடியில் செருத்துணை நாயனார் என்னும் சிவனடியார் பிறந்தார். இவர் சிறு வயது முதலே சிவபிரான் திருவடியின் மீது மிகுந்த அன்பும், பற்றும் உடையவராக திகழ்ந்தார். இவர் திருவாரூர் சென்று இறைவனது திருக்கோவில் பணிகளை செய்து காலந்தோறும் இறைவனை வழிபட்டு வந்தார்.
ravi said…
எம்பெருமானின் மீது மிகுந்த பற்றும், ஆராக்காதலும் கொண்டிருந்த நாயனார், எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு ஏதேனும் சிறு பாதிப்புகளை யாரேனும் ஏற்படுத்தினாலும் அவர்களை முதலில் கண்டிப்பார். அவர் கூறியதை கேட்காமல் மீண்டும் அதே தவறுகளை செய்தால் அவர்களை தண்டிப்பார். அடியார்களுக்கு தேவையான உதவிகளையும், அவர்களை காப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார். எம்பெருமானுக்கு நடைபெறும் பூஜைகளில் எவ்விதமான தடைகளும் ஏற்படாத வண்ணம் கவனித்து கொண்டிருந்தார்.
ravi said…
இவ்விதமாக சென்று கொண்டிருந்த செருத்துணை நாயனாரிடம் எம்பெருமான் அடியார்களின் அன்பையும், பற்றையும் உலகறிய செய்ய திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்த தகுந்த காலத்தை அமைத்தார். காடவர் குலத்தில், எம்பெருமானின் திருவடிகளையே அன்றி வேறு எதையும் அறியாத கழற்சிங்க நாயனார் என்பவர் இருந்தார். அவர் பல்லவ நாட்டை எம்பெருமானின் திருவருளால் அறநெறி குன்றாது அரசாட்சி செய்து வந்தார். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானை தரிசனம் செய்ய எண்ணினார்.
ravi said…
அதன் பொருட்டு தமது துணைவியுடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டு திருவாரூரை அடைந்த மன்னர் பிறைமுடி பெருமான் குடிக்கொண்டிருக்கும் திருத்தலத்தை அடைந்தார். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட நாயகரின் முன் விழுந்து, வணங்கி எழுந்தார். இப்பெருமானின் அருள்வடிவத்தில் மெய்மறந்து விழிகளில் ஆனந்த கண்ணீர் மல்க... உள்ளத்தில் அன்பு பொங்க... பக்தியில் மூழ்கி வழிபட்டு கொண்டிருந்தார் மன்னர்.

எழில் மிகுந்த சிற்பங்களை கண்டும்,

திருத்தலத்தில் உள்ள பல்வேறு சிறப்புகள் எல்லாவற்றையும் தனித்தனியே பார்த்து கொண்டும்,
ravi said…
அழகிய எழில் மிகுந்த வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களை கண்டு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார் பட்டத்து நாயகி.

திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்த வேளையில் அரசியார் மலர் தொடுத்து கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தார்.

அவ்விடத்தில் தொண்டர்கள் யாவரும் அமர்ந்து இறைவனுக்கு சாற்றுவதற்காக பூத்தொடுத்து கொண்டிருந்தனர். மன ஓட்டத்தை விடுத்து, மனதை கவரும் வகையிலான அழகிய வண்ண மலர்களைக் கண்டதும் அரசியாருக்கு மகிழ்ச்சி உண்டானது. மேலும் அம்மலர்களில் இருந்து வெளிப்பட்டு கொண்டிருந்த வாசனையில் சற்று தன் நிலையை மறந்து நின்று கொண்டிருந்தார். நறுமணத்தில் தன்னையும் மறந்து மேடையில் இருந்து விழுந்த மலர் ஒன்றை தரையில் கண்டார்.
ravi said…
அதை கண்டதும் அம்மலர்களை தனது கரத்தில் எடுத்து முகர்ந்து பார்த்து கொண்டிருந்தார். மலர்களை தொடுத்து கொண்டு இருந்த தொண்டர் கூட்டத்தில் செருத்துணையார் இருந்தார். இவர் அடியார்களுக்கு அடியாராக இருந்தாலும் தெரிந்தோ, தெரியாமலோ எவரேனும் பிழைகள் இழைத்தார்கள் எனில் அவர்களை உடனே கண்டிப்பார் அல்லது தண்டிப்பார்.

ravi said…
அரசியாரின் செயலைக் கண்டதும் இறைவனுக்கு சாற்றுவதற்காக இருந்த மலர்களை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டார் என்பதைக் கண்டதும் செருத்துணையாருக்கு மனதிலும், கண்களிலும் கோபக்கணலானது வெளிப்பட துவங்கியது. கோபம் கொண்ட செருத்துணையார் பல்லவ நாட்டின் அரசியாயிற்றே என்று கூட பார்க்காமல் எம்பெருமானின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்து பிழை புரிந்துவிட்டாரே...!! என அரசியாரின் மேல் கோபம் கொண்டார்.

ravi said…
அரசியார் மலர்களை எடுத்து முகர்ந்து பார்த்ததால் அரசியாரின் மூக்கை தான் வைத்திருந்த வாளால் சீவினார். செருத்துணை நாயனார் செய்த செயலால் பூமகள் போன்ற பட்டத்து அரசி கீழே விழுந்து அழுதார். பட்டத்து அரசியின் அழுகுரலானது மன்னரின் செவிக்கு எட்டியது. மன்னரும் அழுகுரல் கேட்கும் திசையை நோக்கி விரைந்து வந்து கொண்டு இருந்தார்.

ravi said…
அவ்விடத்தை அடைந்ததும் மன்னர் கண்ட காட்சி அவரை நிலைக்குலைய செய்தது. அதாவது தனது பட்டத்து அரசி ரத்தம் வெளியேறிய நிலையில் நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் பரிதாப நிலையை கண்டார். பட்டத்து அரசியின் நிலையை கண்டதும் மன்னருக்கு சினம் வெளிப்பட துவங்கியது. எவருக்கும் அஞ்சாமல் இக்கொடிய பாவச்செயலை இத்தலத்தில் செய்தது யார்? என்று கண்களிலும், வாக்குகளிலும் தீப்பொறி பறக்கக் கேட்டார்.

ravi said…
மன்னரின் குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் மனதில் பயம் கொண்டவாறு என்ன உரைப்பது? என்று அறியாமல் திகைத்து கொண்டு இருந்தனர். அவ்வேளையில் எவருக்கும் பயம் கொள்ளாமல் இச்செயலை புரிந்தது யாமே என்று மிகவும் துணிவுடன் கூறிய குரல் வந்த திசையை நோக்கிய மன்னர், செருத்துணையாரை கண்டதும் அவருக்கு சினமானது குறையத் துவங்கியது.

ravi said…
அதாவது அடியார் தோற்றம் கொண்ட இவர் இச்செயலை செய்ததற்கு எமது தேவியார் செய்த பிழைதான் யாது? என்பதை அறியத் துடித்தது மன்னரின் மனம். மன்னரின் முகத்திலும், மனதிலும் எழுந்த குழப்பத்தை புரிந்து கொண்ட செருத்துணையார், அரசியார் சுவாமிக்கு சாற்றக்கூடிய மலரை எடுத்து முகர்ந்தமையால் நானே இப்படி செய்தேன் என்று கூறினார்.
ravi said…
செருத்துணையார் மொழிந்ததை கேட்டு மன்னர் மனம் கலங்கினார்.

அரசர் செருத்துணையாரை கரங்கூப்பி வணங்கி...

அடியாரே...!!

தங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறி தனது இடையில் இருந்த உடைவாளை தனது கரங்களினால் எடுத்தார்.

முதலில் மலரை முகர்ந்த மூக்கினை வெட்டாமல்,

மலரை எடுத்த கரத்தை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும்?

என்று உரைத்ததோடு நில்லாமல் சட்டென்று அரசியாரின் மலரை பற்றி எடுத்த கரத்தினை இமைப்பொழுதில் வெட்டினார்.

ravi said…
மன்னரின் உயர்ந்த பக்தி நிலையை கண்டு செருத்துணையார் மன்னருக்கு தலை வணங்கினார். அப்பொழுது அடியார்களிடத்து அன்பு கொண்ட புற்றிடங்கொண்ட பெருமான் அவ்விடத்தில் இருந்த அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு எம்பெருமான் சக்திதேவியோடு ரிஷபத்தில் எழுந்தருளினார். காணக்கிடைக்காத அருங்காட்சியான எம்பெருமானை ரிஷப வாகனத்தில் உமையவளுடன் கண்டதும் அவரை பணிந்து வணங்கினர்.

ravi said…
எம்பெருமான் தன் அருள்பார்வையால் பட்டத்து அரசியாருக்கு ஏற்பட்ட இன்னல்களை நீக்கி அருளினார்.

பின்பு அடியார்களை நோக்கி... உம்முடைய அன்பினால் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றும்,

உலக கடமைகளை மனம் மகிழ்ந்த வண்ணமாக முடித்துவிட்டு, எம்முடைய திருவடிகளை வந்து அடைவீர்களாக...!! என்று கூறி மறைந்தார்.

செருத்துணையாரும், கழற்சிங்க மன்னரும் எம்பெருமானின் மீது கொண்ட சிவபக்தியையும், அடியார்களிடத்து கொண்டுள்ள பக்தியையும், அன்பையும் கண்ட அடியார்கள் அவர்களை பலவாராக போற்றி பணிந்தனர்.
ravi said…
மன்னர், செருத்துணையாரை நோக்கி அன்பு கொண்ட பார்வையால், தங்களின் உதவியால் யாருக்கும் கிடைக்காத பேறு கிடைக்க பெற்றேன் என்று உரைத்த வண்ணமாக வணங்கினார். செருத்துணையாரும், மன்னரை பார்த்து எல்லாம் நாம் வணங்கும் எம்பெருமான் முன்பே நிர்ணயித்த செயலாகும் என்று உரைத்த வண்ணமாக... ஒருவரை ஒருவர் தழுவிய வண்ணமாக... பிரியா விடையுடன் தங்களின் பணிகளை மேற்கொள்ள பிரிந்து சென்றனர். இறுதியில் செருத்துணை நாயனார் தம்முடைய பிறவியில் இறுதி காலம் வரை எம்பெருமானிடத்தில் மிகுந்த பக்தி கொண்டு, அவருடைய திருவடியை அடைந்து, என்றும் பிறவா நிலையை அடைந்தார்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!

🙏🙏🙏🙏
ravi said…
பவளமல்லி உதிரும் காரணம்

அந்தக் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்தாளாம் . அந்த தேவதைக்கு சூரியன் மீது காதல்

சூரியனுக்காக எதையும் செய்வேனென்ற ரீதியில் பைத்தியமாய் இருந்த பவளமல்லிகா , கடைசியில் தன் காதலை சூரியனிடம் சொன்னாள்

ravi said…
சூரியனோ என்னால் உன்னை ஏற்க முடியாது என்று சொன்னான். இதனால் மனம் வருந்திய பவள மல்லிகா சூரியனுடன் கடும் கோபம் கொண்டு ,
ravi said…
இனிமேல் நீயிருக்கும் திசைக்கே வரமாட்டேன் . என் தூய்மையான காதலை நீ தூக்கியெறிந்து விட்டாய் . இனி என்றும் உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு , காதல் தோல்வி தாங்காமல் , பாரிஜாத பூவாய் உருமாறினாள்.
ravi said…
அதனால் தான் இன்றும் பவளமல்லியெனும் பாரிஜாதம் இரவில் நிலவொளியில் இதழ்விரித்து, நறுமணம் பரப்பி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, சூரியன் உதிக்குமுன்னமே , தனது பூக்களாய் சொரிந்து , உதிர்ந்து பூமியில் விழுந்து விடுகிறது

விஷ்ணுவிற்கு உகந்தது பவள மல்லி..இதன் வேரில் ஆஞ்சநேயர் குடியிருக்கிறார் . எனவே பெண்கள் இம்மலரை தலைக்கு சூடுவதில்லை .
பாமா ருக்மணி இருவருக்குமே இஷ்ட மலர் பவள மல்லி.

பொதுவாய் தரையில் விழுந்த மலரை சுவாமிக்கு சாற்றக்கூடாது . ஆனால் அந்த விதி பவளமல்லிக்கு பொருந்தாது
ravi said…
ஒருமுறை மதுரா பிருந்தாவனத்தில் கீழ் விழுந்த பவள மல்லியை ராதை தொடுத்தது கொண்டிருக்க கிருஷ்ணர் பரிஜாத நறுமணத்தில் மயங்கி ராதை கோர்த்த பவளமல்லி மாலையை நுகர்ந்து தன் கழுத்தில் அணிந்து கொண்டாராம்.

அன்றிலிருந்து தரை தொட்ட பவளமல்லி இறை சூடும் மலராயிற்று.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்


சூட்சமமான தத்துவங்களையும், சிரமசாத்தியமான சடங்குகளையும் சொல்கிற வேதங்களை நான்காகப் பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்குப் போதித்தார் வியாஸர். அந்தச் சூட்சமங்களைப் புரிந்துகொண்டு, வேதம் விதிக்கிற யக்ஞ அநுஷ்டானங்களை ஏராளமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செய்யக்கூடிய ஒரு சிலருக்கு, இந்த நாலு சிஷ்யர்கள் வேதங்களைப் போதித்தார்கள்.
ravi said…
வேதங்களை இவ்வாறு வகுத்துப் பரப்பிய அதே வியாசர், அதே வேதங்களின் பரம தாத்பரியத்தைச் சிலருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ரஞ்சகமான புராணங்களாக இயற்றினார். இவற்றைப்பொது ஜனங்களுக்கெல்லாம் பிரசாரம் செய்கிற பணியை, ஸூதர் என்பவரிடம் ஒப்புவித்தார். புராணங்களைப் பிரசாரம் செய்து கொண்டேயிருந்தால், அவர் ஸூத பௌராணிகர் என்றே பெயர் பெற்றார். இவர் அப்பிராமணராக இருந்தும், பெரிய பிரம்ம ரிஷிகளெல்லாம் இவரை உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்தி, நிரம்ப மரியாதை செய்து, இந்தப் புராணங்களைக் கேட்டார்கள்.
வேதத்தில் ‘ஸத்யம் வத’ என்று ஒரு விதி இருக்கும். அந்த விதியைக் கதாரூபமாக்கி ஜனங்கள் யாவரும் ஏற்குமாறு செய்கிறது ஹரிச்சந்திரன் வரலாறு. ‘தர்மம் சர’ என்கிற வேதத்தின் சட்டத்துக்கு மகாபாரதம் முழுவதும் விளக்கமாகிறது. ‘
ravi said…
மாத்ரு தேவோபவ’, ‘பித்ரு தேவோபவ’ என்கிற வேத வாக்கியங்களுக்கு ஸ்ரீ ராமனின் சரித்திரம் அற்புதமான பாஷ்யமாக இருக்கிறது. ஆத்ம அபிவிருத்திக்காக வேதத்தில் சொல்லியிருக்கிற சூக்ஷ்மமான தத்வங்கள் எல்லாம் இப்படிப் பொது ஜனங்கள் எல்லோருக்கும் பௌராணிகரால் கதைகளாகப் பிரசாரம் செய்யப்பட்டன.
ravi said…
தொன்று தொட்டு பௌராணிகர்களின் பிரவசனங்கள் நம் தேசத்தில் எங்கு பார்த்தாலும் நடந்து வந்திருக்கின்றன. கல்வெட்டுகளைப் பார்த்தால் கோயில்களிலெல்லாம் புராணப் பிரவசனம், குறிப்பாக பாரதப் பிரசங்கம் நடந்து வந்திருப்பது தெரியும். நித்திய பூஜை போலவே புராணப் பிரவசனமும் கோயில்களில் அன்றாடம் நடக்க வேண்டும் என்று மானியங்கள் விட்டிருக்கிறார்கள்.
ravi said…
ஆலயத்தில் வழிபட்டும், புராணங்களை சிரவணம் செய்துமே சமீப காலம் வரையில் நம்முடைய பொது ஜனங்கள் சூதுவாதில்லாமல் யோக்கியர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இக்கால நோக்கின்படி, அவர்களுக்கு எழுத்தறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் நல்ல பண்பு படைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால், அவர்களே வாஸ்தவமாகக் கல்வி பெற்றவர்கள் என்று சொல்ல வேண்டும்.
ravi said…
அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரையில் எல்லா கல்வியுமே வாய்மொழியாகச் சொல்லி காது வழியாகக் கேட்டே, வழிவழியாக வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பனை ஓலையில் எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் சிலரே இருந்தார்கள். மற்றபடி, பெரிய வேத வேதாந்தம் தெரிந்தவர்கள்கூட எல்லாம் செவிவழியேதான் கேட்டறிந்தார்கள். அச்சு இயந்திரம் வந்தது. அப்புறம் நிறையப் புஸ்தகங்கள், நியூஸ் பேப்பர்கள் ஏற்பட்டுவிட்டன. பௌராணிகர்களின் இடத்தை இவை பிடித்துக்கொண்டன.
ravi said…
எனவே, பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும்தான் இன்றைய பௌராணிகர்கள். ஸூதரும் மற்ற பௌராணிகர்களும் எப்படி தர்மங்களை ரஸமான கதைகள் மூலம், பொது ஜனங்களிடையே பிரசாரம் செய்தார்களோ, அவ்விதமே செய்யவேண்டியது இன்றைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை. ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுத வேண்டும—இதைச் சுவாரசியமாகச் செய்யவேண்டும்.
ravi said…
உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில் உணர்த்த வேண்டும். பத்திரிக்கையாளர்கள் வாழ்நாள் முழுதும் மாணாக்கர்களாகவே இருந்தால்தான், தாங்களும் இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து, மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்ய முடியும்.
ravi said…
சத்தியத்தை சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சர்க்கரை பூச்சுத்தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரையாகிவிடக் கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இதயபூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். ‘நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும்’ என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்களும் பெற வேண்டும்.
ravi said…
*"வருடம் 1975. வயலின் மேதை லால்குடி ஜி.ஜெயராமன் அவர்களும் அவரின் மனைவியும், காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்க, தேனம்பாக்கம் கிராமத்துக்குப் போகிறார்கள்."*

*(இன்று லால்குடி ஜெயராமன் மறைந்த தினம்)*

ravi said…
அங்கு சோகமான, வருத்தம் கலந்த சூழல் நிலவுகிறது. மடத்துச் சிப்பந்திகளில் ஒருவரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பெரியவா, அறை ஒன்றில் தன்னை அடைத்துக்கொண்டு காஷ்ட மௌனத்தில் இருந்தார். ஆகாரம், தண்ணீர் கிடையாது. எதற்காகவும் யாரிடமும் பேசாமல் இருந்தார்.

வேறு வழியின்றி, பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்கிற தனது ஆவலை அடக்கிக்கொண்டார் லால்குடி. இருப்பினும், புறப்படும்முன், பாடல்கள் சிலவற்றை அந்த மகானுக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தார்.

ravi said…
காஞ்சிப் பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான சாமா ராகப் பாடலுடன் தொடங்கினார். பின்னர், ஆபோகி ராகத்தில், ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?‘ பாடலை வாசிக்க ஆரம்பித்தார்.
ravi said…
கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவா தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.

பாடல் முடிவுக்கு வரும் வேளையில், அறைக் கதவும் திறந்தது.

கையைத் தூக்கி வாழ்த்தியபடியே ஆச்சார்ய சுவாமிகள் வெளியே நடந்து வந்தார்.

லால்குடியும் அருகில் இருந்த மற்றவர்களும் சிலிர்த்துப் போனார்கள்.

கீழே உள்ள படத்தில் அவர்தான் ஸ்ரீமஹாபெரியவா அருகில் அமர்ந்து வயலின் வாசிக்கிறார்.
தகவல் :வெங்கட்ராமன் (BOB rtd)
ravi said…
ஒரு முறை பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்தார்.. அங்கே ஒரு ஓட்டல் முதலாளி, பெரியவாளைத் தரிசிக்க சிலரின் வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்காக வந்தார்..

பெரியவாளைத் தரிசித்தார். அவ்வளவு தான் தன்னை மறந்தார்.. தன் நாமம் மறந்தார்..

நேரே வீடு திரும்பி மூன்று லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து அவர் காலடியில் வைத்தார்..

பெரியவா, "இந்தப் பணத்தை ஏதாவது தர்மம் செய்ய பயன்படுத்து. எடுத்துக் கொண்டு போ.!" என்றார்.. மேலும் தமிழ்நாடு சென்று கோயில்களையெல்லாம் தரிசனம் பண்ணி வா என்று சொன்னார்..

ravi said…
அவ்வாறே சென்று திரும்பியவர், "கல்லிலே இப்படியெல்லாம் அதிசயம் பண்ண முடியுமா? ஆச்சரியமா இருந்தது ஸ்வாமி " என்றார்..

அப்போது ," அது போல ஒரு கோயில் இங்கேயும் கட்டலாமே!" என்று சதாரா நடராஜர் கோ‌யிலுக்கு அடி எடுத்துக் கொடுத்தார் மஹா ஸ்வாமி.

ravi said…
ஓட்டல் முதலாளி அவருக்கு மிகவும் பிடித்தமான சிதம்பரம் கோயில் போல கட்ட அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன் பேரில், பெரியவாளும் தன் மலர்க் கைகளால் கோயிலை ஆரம்பித்து வைத்து அங்கிருந்து புறப்பட்டார்..

இன்று, சிதம்பரம் போலவே 'உத்தர சிதம்பரம்' என்ற பெயரில் அந்தக் கோயில் பிரசித்தமாகி உள்ளது...

தேசிய ஒற்றுமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த கோயில் தான்.. இதன் நான்கு கோபுரங்களில் ஒன்றை மஹாராஷ்டிரமும், இன்னொன்றை ஆந்திராவும், மற்ற இரண்டு கோபுரங்களில் ஒன்றை தமிழ்நாடும், இன்னொன்றை கர்நாடகமும் கட்டிக் கொடுத்தது...

கேரள மாநிலம் தேக்கு மரத்தால் அந்தக் கோயிலுக்கு மேல் தளம் அமைத்துக் கொடுத்தது..

ஐந்து மாநிலங்களின் கைங்கர்யம் இந்தக் கோயிலுக்கு அமைந்தது.
Moorthi said…
அருமையான ஆதி சங்கரரின் துறவாழ்வின் பிரவேசம் நம் அனைவரையும் காக்க... 👌👌🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
🦮இன்று தேய்பிறை அஷ்டமி (23/4/2022ம் தேதி). நாளில், பைரவரை தரிசிப்போம். செவ்வரளி மாலை,வடைமாலை சார்த்தி வேண்டிக் கொள்ளலாம். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வணங்கலாம். எதிர்ப்புகளையெல்லாம் அழிப்பார். தீயசக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருநாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.
ravi said…
🦮எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

🦮ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவும். அவரை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு.

🦮காலபைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. செவ்வரளி மலர்கள் சூட்டி பைரவரை வணங்குவது ரொம்பவே விசேஷம்.

🦮பைரவர் என்பவரை மகா வலிமை கொண்டவர் என்றும் தீயசக்திகளையும் தீயவர்களையும் துவம்சம் செய்வார் என்றும் அநீதியை அழித்தொழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்றும் சொல
ravi said…
சுந்தரகாண்டம்...

சுந்தரகாண்டம் முழுவதும் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் மஹிமையை வர்ணிப்பது தான். முதல் ஸர்கத்தில் மஹேந்திரமலை மேல் ஏறி மிகப்பெரிய உருவத்தை எடுத்துக்கொண்டும், கர்ஜனை செய்துகொண்டும், மலைகளைக் கால்களால் மிதித்ததில் மலைப்பாறைகள் நொறுங்கி நாலா பக்கங்களும் சிதறிற்று.
ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் திருவடிகளை பூஜிப்பவர்களுக்கு மலைபோல கஷ்டங்கள் வந்தாலும், மலை நொறுங்குவது போல உடனடியாக நீங்கிவிடும் என்பதைக் காட்டுகிறது.
ravi said…
ராமபாணம் போல் ஆஞ்ஜநேயர் சமுத்திரத்தின் மேல் போகிறார் என்று வால்மீகி முனிவர் சொல்வதிலிருந்து ராமபாணம் எப்படிக் குறி தப்பாதோ அப்படிச் சுலபமாக சமுத்திரத்தைத் தாண்டி அக்கரை போய்ச்சேர்வார்.


பாணத்தை ஒருவர் குறிவைத்து நாண்கயிறு ஏற்றினால் தானே போகும்! அதேபோல் தானாகப் போகவில்லை; ஸ்ரீராமரின் க்ருபையால் தான் இந்த அகண்ட சமுத்திரத்தை என்னால் தாண்ட முடியும் என்று ஆஞ்ஜநேயர் எண்ணினார்.
ravi said…
தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு வம்ச அரசனான சகரனால் உண்டாக்கப் பட்டதால், ஸ்ரீராமருடைய காரியமாய் வரும் ஹனுமாருக்கு உதவி புரிய நினைத்து கடலில் மூழ்கியிருக்கும், மைனாக மலையைத் தூண்டிவிட்டு, மேலே எழும்பி வரும்படிச் செய்து, ஆஞ்ஜநேயரை மலைமேல் உட்கார்ந்து இளைப்பாறச் செய்து, கிழங்குகள் பழங்கள் முதலியன அவருக்குக் கொடுத்து ஸத்கரிக்கும்படி சொன்னார்.
ravi said…
மைனாக மலையும் மேலே எழும்பிவந்து, ஹனுமாரை இளைப்பாறி விட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. வாயு பகவானால், மைனாக மலை இந்திரனிடமிருந்து காப்பாற்றப் பட்டதால், வாயு குமாரருக்கு உதவி செய்ய தானும் கடமைப்பட்டிருப்பதாக மைனாக மலையும் நினைத்தது.


ஆனாலும் ஸ்ரீ ஹனுமார் என்ன நினைத்தார் தெரியுமா?
ravi said…
ராம பாணத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கிற காரணத்தினால் மைனாக மலை மேல் தான் இளைப்பாறக்கூடாது. ராம பாணம் குறி தப்பாது. அதன் வேகத்தை மைனாக மலை தடுக்க முயற்சி செய்கிற மாதிரி ஆகிவிடும். ராமபாணத்தின் மதிப்பையும் குறைப்பதாக ஆகி விடும். உப்புக்கடலின் நடுவே பலவிதமான கிழங்குகளும் பழங்களும் கிடைப்பது ஒரு பெரிய ஆச்சர்யம் தான்.


நம் போன்றவர்கள் ஏதாவது உபாசனம் செய்து வரும்போது ஸித்திகள் வரும். அதில் நாம் மனதை வைத்துவிடக்கூடாது. அவ்வாறு மனதை வைத்துவிட்டால் நமக்கு பகவத் அனுபவம் கிடைக்காமல் போய் விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்
ravi said…
பகவத் க்ருபைக்குப் பாத்திரமானவர்களை மனைவி, புத்திரர், உறவினர் ரூபத்தினாலும், ஸித்திகள் மூலமாகவும் தொந்தரவு கொடுத்து, மேலே ஏறி வரவிடாமல் இருப்பதற்கு, தேவதைகள் பெரிதும் முயற்சிப்பார்கள்.


ravi said…
ராம பக்தனுக்கு, சமுத்திர ராஜன் தூண்டுதலில், மைனாகமலை ஸ்ரீ ஹனுமனைத் தன்னிடம் ஸத்கரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கே, இந்திரன் தன் சாபத்தை விலக்கிக்கொண்டு, தன்னிடம் இனிமேல் பயம் இல்லாமல் சுதந்திரமாக எங்கும் சஞ்சரிக்கலாம் என்று மைனாக மலைக்கு வரம் கொடுத்து விட்டார்.


இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது:


ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்...
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 39* 🌷🌷🌷🌷🌷
ravi said…
இந்த வரிகளுள் மிகவும் சிறப்பானவை

*உன் திருவடியை உறுதி என்று எண்ணும்*
*என் தலை வைத்து உன் இணையடி காக்க!*

என்னும் வரிகளே!

தன்னையும், முருகனையும் ஒன்றெனக் கருதிப் பாடிய வரிகள்.

முருகனின் திருப்பாதங்கள் இவர் தலை மேல் வைத்துக் காப்பதாகவும்,

இவரது தலையை முருகனின் கமலப் பாதங்களின் மீது வைத்து இவரே அவற்றைக் காப்பதாகவும் கூடப் பொருள் கொள்ளலாம்.

*என் தலை வைத்து 'உன்' இணையடி காக்க!*

உன் இணையடி வைத்து 'என்' தலை காக்க!

முழுமையாகச் சரண் புகுந்தபின், பேதமற்றுப் போகும் என்பதைக் காட்டும் வரிகள் இவை.

முருகனருள் முன்னிற்கும்.👌👌
ravi said…
//வைத்த நிதி, உறவினர், மக்கள், தான் பெற்ற கல்வி போன்றவற்றை உறுதியாக எண்ணும் உயிர்களின் நடுவில்

இறைவனின் திருவடிகளையே உறுதியென்று எண்ணும் அடியவன் இவன்!//👍👍👍
ravi said…
திருவாதவூரடிகளின் மாணிக்க வாசகங்கள் அல்லவா அவை!

வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில்

பிறப்போடு இறப்பு என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த

வித்தகத் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ!💐💐💐
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 202*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 26

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம்.

कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं

गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।

समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-

नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६

கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்

க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।

ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-

நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
இந்த திருவடியை எப்படி ஆச்சார்யாள் அனுபவிக்கறாரோ, அதுக்கு துல்யமான ஒரு அனுபவம்னா, அந்த திருவடிகளையே நினைச்சுண்டு அதை மனசுல இறுக்கப் பிடிச்சு வெச்சிண்டிருக்கிற மஹான்களுடைய சங்கம் இந்த திருவடி சேவைக்கு துல்யமா இருக்கும்.

அப்படி ஒரு மஹானை பார்த்து, அவாளோட பழகினோம்னா, அவாளுடைய அந்த சங்கம் தான் நமக்கு அபயத்தைக் கொடுக்கும்.

நம்முடைய காலத்தை பயப்படாம தள்ளலாம்ங்கிற தைர்யம், அந்த சாது சங்கதுனால கிடைக்கும்.

‘ *ஸாது ஸமாகம ஸங்கீர்ணானாம் சிந்தா நாஸ்தி கில* ’னு பாடினார் பிரம்மேந்த்ராள்.

அந்த மாதிரி, அதுக்கப்புறம் கவலையே இல்லை வாழ்க்கையில.💐💐💐
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 203* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ *லோஹிதாக்ஷஃ* ப்ரதர்தனஃ |

ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
ravi said…
*59. லோஹிதாக்ஷாய நமஹ (Lohitaakshaaya namaha)*

ஆழ்வாரால் பாடப்பட்ட நாயன்மாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம், கோச்செங்கட்சோழ நாயனார் பற்றித் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (6-6-1)
,
“அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும்….

செம்பியன் கோச் செங்கண்ணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே”

எனத் தொடங்கிப் பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார்.

யார் இந்த நாயன்மார்?
ravi said…
அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்ட போது, நீலகண்ட ரிக்வேதி என்ற பண்டிதர்
அரண்மனைக்கு வந்து, “சரியாக இருபத்து நான்கு நிமிடங்கள் கழித்துக் குழந்தை பிறந்தால் அவன் திருமாலின் சிவந்த
திருக்கண்களின் திருவருளுக்கு இலக்காவான்!” என்று கூறினார்.

பார்வதியே வந்து இவ்வாறு சொல்வது போலக் கமலாதேவிக்குத் தோன்றியது.

தனக்குப் பிறக்கும் குழந்தைக்குத் திருமாலின் அருள் கிட்டவேண்டும் என்று எண்ணிய அந்தத் தியாகத் தாய்,
குழந்தை பிறப்பதை இருபத்து நான்கு நிமிடங்கள் தாமதப்படுத்துவதற்காகத் தன்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடச் சொன்னாள்.

இருபத்து நான்கு நிமிடங்கள் கழித்துக் குழந்தை பிறந்தது.

எம்பெருமான் தன் செந்தாமரைக் கண்களால் குழந்தையை
நன்கு கடாட்சித்தபடியால், குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன.

“செங்கண்ணா!” என்று
அவனை அழைத்துவிட்டுக் கமலாதேவி உயிர்நீத்தாள்.💐💐💐
ravi said…
Why couldn't Lord Shiva control his anger often despite being the greatest?
ravi said…
The Puranas are the Very curse of our religion.

Each Pravachankar concocts his own creative story.

He makes up stories on

How Shiva got angry

How Shiva got sexually aroused

How he married two women

How he fought Jalandhara or Shankhachuda

How he sexually united with Vishnu and begot a son

All such garbage are to be cast aside to a garbage bin

The essence of Hinduism is in Upanishats. It is paraaBrahma, which is pervading everything and everywhere. You call it Shiva, Vishnu. Your naming it does not matter. That Universal Energy is dancing for ever.

I am so sad that most people, who come on to Quora, are more interested in Puranic stories, than the real content of Hinduism. I see so many questions on Puranas, innumerable questions on Caste.

Is this what this great religion of 5000 years developed by millions of people collectively, come to ?
Kousalya said…
ஆம்..இந்த ஒரு நாயன்மாரே நாராயணருக்கு கோவில் கட்டியவர்....திருநரையூர் என்னும் நாச்சியார் கோவிலை கட்டிய நாயன்மார்... அருமை அருமை 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹
ravi said…
*A Zen Story - found this worthy to read *

One day one person climbed up a mountain where a hermit woman was meditating.
She had taken refuge and was asked:

- “What are you doing here alone in such a solitude place?”
To which she replied:

- “I have lots of work !”

- “And how can you have so much work?
I don't see anything around you here...?”

-
ravi said…
“I have to train two hawks and two eagles, assure two rabbits, discipline one snake, motivate a donkey and tame a lion.....”

- “And, where have they gone that I don't see them?”

- “I have them all inside here within me...!!

ravi said…
The hawks stare on everything that is presented to me, good or bad, I have to work on them to see only good things. They are my eyes.

✓ The two eagles with their claws hurt and destroy, I have to train them not to hurt. They are my hands.

✓ Rabbits want to go where they want, at the same time they do not want to face difficult situations, I have to teach them to be calm even if there is suffering or stumbling. They are my feet.

✓ The donkey is always tired, stubborn and does not want to carry the load each time I walk. That is my body!

✓ The most difficult to tame is the "snake." Although it is locked in a strong cage with 32 bars, it is always ready to sting, bite and poison anyone nearby. I have to discipline it... that's my tongue.

✓ I also have one Lion. Oh ... how proud, vain, he thinks that "he is the king." I have to tame him. And that's my ego.
So you see, my friend, I have lots of work..... “

Think & Reflect ! 🤔
We all may have the same — Lots to work on ourselves !
So Stop Criticising, Evaluating n Judging others ! Let’s First work on ourselves !!
🌹Let's adopt this in our spiritual pursuit🌹
ravi said…
பூத்து குலுங்கின பவழமல்லிகள் ..

மதுரை குண்டு மல்லியும் நாணி ஓடின அதன் அழகு இல்லாமல் ...

அடுக்கு மல்லி தோல்வி கண்டு துவண்டது

இருவாச்சி மல்லி இரவு முழுதும் அழுதது ..

பவழமல்லிக்குத்
தானே தெரியும் தன் துக்கம் ஏதென்று !

உதயம் ஆகும் முன் உதிர்ந்து போவேன் ...

மலரும் கமலம் அல்ல நான் சூரிய காந்தியும் அல்ல நான்

மனதார காதலித்தேன் மாளவன் உதயம் கண்டு ..

என்னிடம் சொல்லாமல் என் இதயம் அவனிடம் சென்றதே ..

விரும்பவில்லை எனை அவன் காரணம் புரியவில்லை ...

கதிரவன் வரும் முன்னே என் காலம் அது ஓயட்டும் ...

பாரிஜாதமாய் வாழுந்தும் பயன் இல்லை

பவழ மல்லியாய் பூமி வந்தும் சுகம் இல்லை

கண்ணா ஏன் எனை படைத்தாய் ... எதில் நீ வெற்றி கண்டாய் ??

சிரித்தான் கண்ணன் ...

கதிரவன் உனை மணந்தால் கருகி போய் விடுவாய் ..

என் நிறம் உனக்கு வேண்டாம் என்றே உன் காதல் அதை உடைத்தேன் ..

கீழே விழும் பூக்கள் என் பூஜையில் சேர்வதில்லை

உனக்கு நான் தருவேன் ஒரு விதி விலக்கு ..

நீ கீழே உதிர்ந்தாலே எனக்கு மாலையாவாய்..

உன் மணம் கண்டே மனம் பறி போவார் மண்ணில் வாழ்வோர்

மாதவன் என் பாதம் தொடும் நீ கொன்றை வார் சடையின் முடியிலும் திகழ்வாய்

இது போல் வரம் நான் என் துளசிக்கும் தந்ததில்லை .... என்றான் கண்ணன் எல்லாம் அறிந்தவன் ..

அகம் குளிர தன் அகம் நீங்க அரங்கன் பாதங்கள்

காவிரி எனும் தன் கண்ணீரால் துடைத்தது அன்று உதிர்ந்த பவழ மல்லியே ...

அரங்கன் பாதம் தனில் விழுந்த பவழ மல்லியை தன் சிரசிலும் சூடிக்கொண்டான் காஞ்சி வாழும் சங்கரன் 💐💐💐
ravi said…
குரு மூலம் தீக்ஷை எடுக்க வேண்டும் என்பர் எதற்கும்

குரு மூலம் கற்கா தோத்திரங்கள் நிர்மூலம் என்றனர் பலர்

நல்ல குரு கிடைக்கா நேரமதில் உண்மை குரு எங்கே தேடுவது .. ???

கிடைக்கா விட்டால் தோத்திரங்கள் சொல்லி என்ன பயன் ... ???

மனதில் ஒரு கலக்கம் நெஞ்சில் பல ஏக்கம்

ஆடும் நாயகன் காற்றினிலே தான் ஆடுகையில் ஒரு பாடம் சொன்னான் ...

பெரியவா படம் வீட்டில் ,

அவரே சரணம் என மனதிலே

குருவே வருவாய் என நாவிலே

அவர் திவ்யம் கண்களிலே

சுமந்தே சொல்
தோத்திரங்கள்

வேறு குரு வேண்டாம் ..

விளையும் எல்லா நன்மைகளும் என்றான் ...
அஜபா நடம் புரிந்து கொண்டே 🦚🦚🦚

இதைவிட பாக்கியம் வேறு உண்டோ ?

பெரியவாளை நினைத்து சொல்லும் தோத்திரங்கள் பல

சேத்திரங்கள் சென்றே அள்ளி க்கொண்டு வந்த புண்ணியம் அன்றோ 🙏🙏🙏
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 55*🐒🐒🐒
ravi said…
ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |

னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 7💐💐💐
ravi said…
ராமர் மேலும் சொல்கிறார் ....

*சங்கர சுவனா*

உன் பராகிரமத்தை, வல்லமையை , வீரியத்தை , வெற்றியை , சாதூரியங்களை ,

சமயோசித புத்தியை , ஞானத்தை , அடக்கத்தை சரணாகதி தத்துவத்தை

🌺 சனகாதி முனிவர்களும்

🌺பிரம்மன் முதலான முக்கோடி தேவர்களும் , ரிஷிகளும்

🌺 சதா நாராயணா என்று உச்சரிக்கும் நாரதரும்

🌺 ஸஹித என்றால் பாம்பு ... பாம்புகளுக்குத் தலைவன் ஆதிசேஷன் ...

அவன் உட்பட

எவராலும் விவரிக்கவோ

புரிந்துகொள்ளவோ

எடுத்துச் சொல்லவோ

பின் பற்றவோ முடியாது ... 🐒👍

ராமருக்கும் அனுமனுக்கும் உள்ள சம்பந்தம் தொடர்பு

திருமாலுக்கும் பரமேஸ்வரனுக்கும் உள்ள சம்பந்தம் ...

வேதங்களுக்கும் புரியாத விவரம் ...

ராமனிடம் ஒரு காரியம் நமக்கு ஆக வேண்டும் என்றால் அதை ராமனிடம் சேர்ப்பதில் மனோ வேகம் கொண்டு விரைந்து செல்வாராம் ஆஞ்சநேயர் ...

அவரே நம் கோரிக்கைகளை கொண்டு செல்வதால்

அவை ராமனிடம் சேரும் வரை எவ்வளவு பத்திரமாக இருக்கும் என்று சொல்லத்தேவை இல்லை ...

கோரிக்கைகள் ஒவ்வொன்றும் ராமனிடம் இருந்து நமக்கு திரும்பி வரும் போது

*கண்டேன் கண்டேன் என் ராமனை வெல்வாய் வெல்வாய் நீ உன் வாழ்க்கையில்*

என்று சொல்லிக்கொண்டே வருமாம் .... 🐒🐒🐒
ravi said…
*Dear All *,

*How many of know Hanuman Chalisa & when & how it was written !? *
*Must read for all … *

*Do you know when Hanuman Chalisa was written?*

Everyone worships Sri Hanuman Ji and recites Hanuman Chalisa, but very few know the circumstances under which it originated.

This dates back to 1600 AD, during the reign of Akbar.

On His way to Mathura, Sri Tulsidas Ji stopped in Agra for the night.

News spread that Sri Tulsidas Ji, a great MAHAAN, had come to Agra.

When the people heard this, they immediately flocked to see Him.

When Emperor Akbar learnt of this, he asked Birbal who this Sri Tulsidas was.

Then Birbal, who was himself a great devotee of Lord Rama, said, that Sri Tulsidas Ji had translated Valmiki Ramayana, which was now known as "Ramacharit Manas" & that he too had been to see him.

Akbar also expressed his desire to see him.

Akbar sent his army to convey to Sri Tulsidas Ji that He should come to the palace immediately.

On hearing this message Sri Tulsidas ji said, "I am a devotee of Lord Rama not the emperor, what should I do at the palace?", & refused to go.

When this was communicated to Akbar, he was furious and ordered the arrest of Sri Tulasidas Ji & had Him forcefully brought to the Red Fort.

When Sri Tulsidas ji reached the Red Fort bound in chains, Akbar said, "You look like an attractive person, can't you show a little charisma!".

Sri Tulsidas Ji said "I am only a devotee of Lord Rama & not a magician who can show you any charisma!".

This angered Akbar & he ordered the immediate imprisonment of Sri Tulsidas Ji.

So, Sri Tulsidas Ji was imprisoned.

On the second day, an army of more than a million monkeys attacked the Red Fort & wreaked havoc all around.

In absolute panic, Akbar called Birbal & asked for an explanation.

Birbal said, "Your highness, do you now see the glory of Lord Rama & His devotee?".

Akbar understood & ordered the release of Sri Tulsidas Ji.

Later, speaking to Birbal, Sri Tulsidas ji said "I was punished for no fault of mine. I just did what every devotee would do and submitted myself to Sri Rama. I was in tears, and while crying, my hands were involuntarily writing something on their own".

What came out of this writing were forty "Chaupayas" which were inspired by Sri Hanuman Ji.

Later, Sri Tulsidas Ji said, "Sri Hanuman Ji helped me out of prison. Henceforth, anyone who recites Hanuman Chalisa in times of trouble will find an immediate solution to any problem that he or she faces".

Ashamed, Akbar apologized to Sri Tulsidas ji and sent him to Mathura with full respect and protection.

Today everyone is reciting Hanuman Chalisa and the grace of Hanuman is upon all of them.

This is why Hanuman ji is also known as "Sankat Mochan”
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 203* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*66 வது திருநாமம்*
ravi said…
66 सम्पत्करीसमारूढसिन्धुरव्रजसेविता - ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜஸேவிதா | -*

லலிதாம்பிகையின் யானைப் படைத்தலைவி இந்த *ஸம்பத்கரி தேவி.*

கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள், ரதங்கள் சூழ, சகல செல்வங்களையும் தன்னுள் கொண்ட ஸம்பத்கரி பரமேஸ்வரி,

தன் பக்தர்களுக்கு அழியாத நவநிதிகளையும் வாரி வழங்கி அருள்பாலிக்கிறாள். தேவியின் வாகனமான யானையின் பெயர் *ரணகோலாஹலம்* .
ravi said…
*என் நண்பர் ஒருவர் சொன்னது 💐*

எண்பதுகளில் பரமாச்சார்யார் அருளுரைப்படி பிடியரிசித் திட்டத்தை சைதாப்பேட்டையில் அறிமுகப்படுத்தி மாதா மாதம் சென்னையிலிருந்து 23 மூட்டை அரிசியை நானும் என் ஆருயிர் நண்பனுமான அமரர் கோயம்பேடு சரபேஸ்வரர் வாசனும், மற்றும் சில அன்பர்களும் தேனம்பாக்கம் வேதபாடசாலைக்கு சேகரித்துத் தந்து கொண்டிருந்தபோது

மகாபெரியவரின் அருளோடு ஸ்ரீவித்யையை உபாசிக்கும் பெரும்பேறு கிடைத்தது.

தேவியை எனக்குத் தெரிந்த முறையில் உபாசித்த போது 93ம் வருடம் தேவியின் யானைப்படைத் தலைவியான *ஸம்பத்கரீ* தேவியின் மந்திரம் கிடைத்தால் செல்வவளம் பெறலாம் என்று ஒரு புத்தகத்தில் பார்த்து ஒரு உபாசகர் மூலம் அந்த மந்திரத்தை உபதேசம் பெற்று வந்த அரைமணி நேரத்தில்

என் வீட்டின் முன் சர்வாலங்காரங்களோடு யானை வந்து என்னை ஆசிர்வதித்துச் சென்றது சத்தியம்.

அன்றிலிருந்து இன்று வரை தேவியின் அருட்கருணை எத்தனை எத்தனையோ சந்தர்ப்பங்களிலிருந்து காத்துகொண்டே வருகிறது.

நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு என்பதை என் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். நான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் எனும் எண்ணத்தில் அந்த ஸம்பத்கரி மந்திரத்தை இங்கு அளிக்கிறேன்.

என்று சொன்னார் . நம் எல்லோருக்கும் அன்னையின் பூரண கடாக்ஷம் கிடைக்க அவர் சொன்ன ஸம்பத்துகிரீ மந்திரத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் 🦚🦚🦚
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 203* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 49👍👍👍
ravi said…
*8. எட்டு விதமான கண்ணோட்டம்*

ஸர்வ ஜயம், நிதி தர்சனம்🙏
ravi said…
ஒருமலர்க்கண் இரவி-வலத்து
உதித்தருளும் நண்பகலும்

ஒருமலர்க்கண் மதியின் இடத்து
உதித்தருளும் பேரிரவும்

திருநுதற்கட் பொற்கமலச்
செந்நிறத்தீ விளைத்தருளும்,

விரவுசெக்கர் மாலையும்

உன்விழைவு அகலா விழுப்பொருளே 👍
ravi said…
அம்பிகே!, உன் கண்கள் விசாலமாக இருப்பதால் *விசாலா* என்றும்,

மங்களகரமானதால் *கல்யாணி* என்றும்,

இந்தீவர புஷ்பங்களாலும் ஜெயிக்க முடியாத அழகுடையதால் *அயோத்யா* என்றும்,

கருணையினை தாரையாக பொழிய ஆதாரமாக இருப்பதால் *தாரா* என்றும்,

வர்ணிக்கமுடியாத மாதுர்யத்துடன் இருப்பதால் *மதுரா* என்றும்,

ஆழ்ந்த உணர்வினைத் தருவதால் *போகவதீ* என்றும்,

சகல உலகங்களையும் காப்பதால் *அவந்தீ* என்றும்

கூறத்தக்கவாறு அந்த நகரங்களில் விஜயம் செய்து கொண்டு விளங்குகின்றன.👀👀👀👀👀👀👀👀
ravi said…
Hanuman is related to Ramayana part so we Should refer Ramayana

Valmiki Ramayana doesn't mention about anything incarnation of Bhagwan Shiv as Hanuman. It says Vayuputra Hanuman . Hanuman is son of vayu .

Lord Shiva is Formless Parabrahman beyond these Incarnation present in the form Shivlingam as well as worshipped in the form of Shivlingam.

Even Hanuman himself worshipped Shivlingam like his master Ram named as Hanumanteshwara

Even we have solid evidence are also available
ravi said…
Rameshwaram temple has two Shivlingams one Rameshwara (Ram worshipped Shivlingam)

Hanumeshwara(Hanuman worshipped Shivlingam)
ravi said…
Unnecessary giving wrong information/ misinformation results in Non-Hindu Dharmic activity .

There is one more thing even Nandi is vishnu himself who exist to serve Bhagwan shiv as per Brahma vivrat Purana.
ravi said…
Giving misinformation results in problem then we also give misinformation .

Hanuman us actually sub to subservient of Bhagwan Shiv .

Ram is subservient of Bhagwan Shiv.
Moorthi said…
படித்தேன்.... அருமையிலும் அருமை 👌👌🙏
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*


14. ஆங்கு அவன் தன் இல் வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற
பூம் குழலார் அவர் தாமும் பொரு *விடையார் திருவடிக் கீழ் ஓங்கிய அன்பு உறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப் பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்.*

15. நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம் பொன்னும் நவ மணியும் செழும் துகிலும் முதல் ஆன
தம் பரிவினால்
அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
*உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகும்* நாள்.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
ravi said…
இன்று 24.4.2022 ஞாயிறு கிழமை திருவோணம் நட்சத்திரம்.*

சிரவணம் என்னும் திருவோணம் விரதம் இருப்பவர்கள் இருக்கலாம். ஶ்ரீ மகா விஷ்ணுவின் நட்சத்திரம் திருவோணம்.
திருமலை வெங்கடாஜலபதி பெருமாளுக்கு வேண்டி கொண்டதை ஒப்பிலியப்பன் பெருமாளுக்கு செய்யலாம் என்பார்கள். இன்று ஒரு வெள்ளை துணியில் தண்ணீர் மஞ்சள் கலந்து அதை உலர்த்தி பின்னர் அதில் ஒன்றே கால் ரூபாய் முடிந்து வைக்க சொல்வார்கள் பெரியவர்கள்
ravi said…
இப்பொழுது கால் ரூபாய் இல்லாத காரணத்தால் ஒரு ரூபாய் நாணயம் இத்துடன் கொஞ்சம் துளசி சேர்த்து உங்கள் பிரார்த்தனைகளை பெருமாளிடம் சொல்லி அந்த மஞ்சள் துணியில் வைத்து முடித்து போட்டு பூஜை அறையில் வையுங்கள். உங்கள் பிரார்த்தனைகளை சீக்கிரம் நிறைவேற்றி கொடுப்பார் பெருமாள். பிரார்த்தனை நிறைவேறியதும் அந்த முடிந்து வைத்த மஞ்சள் துணியை அப்படியே எடுத்து கொண்டு கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவில் போய் அதை உண்டியலில் சேர்க்கலாம்.
அங்கு போக இயலாதவர்கள் அந்தந்த ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலில் குறிப்பாக ஒப்பிலியப்பன் கோவில் ஆக இருந்தால் உத்தமம். கூகிள் பார்த்து உங்கள் ஊரில் இருக்கும் ஒப்பிலியப்பன் பெருமாள் கோவிலில் சேர்ப்பது நன்று. எனக்கு தெரிந்தவரை நங்கநல்லூர், மடிப்பாக்கம் இங்கு ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில் உள்ளது.
ravi said…
திருவோணம் நட்சத்திரத்தில் ஏகாதசி போல விரதம் இருப்பவர்கள் உண்டு. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு வேளையாவது உப்பு போடாமல் உண்ணலாம்.
அனைவரது பிரார்த்தனை நல்லபடியாக நடக்கும்.

நன்றி.

விரத விவரங்களை நமக்கு அனுப்பியவர்

*S.ஜனார்த்தனன்*
ஜோதிடர்
மகாகவி பாரதி நகர்
சென்னை
ravi said…
இத்தகைய ஆழ்ந்த அறிவுடைய ஆழ்வார்கள் செய்வித்ததுதான் தெய்வத் தமிழ் பாசுரங்கள். ஆழ்ந்தறியத்தக்க சொல் நயம், பொருள் நயம் உடைய கவிதைகள் அவை. இவற்றிற்கு பொருள் சொல்ல முற்பட்டதன் விளைவுதான் வைணவ பரம்பரையில் உள்ள சுவை மிகுந்த வியாக்கியானங்கள். வியாக்கியானங்களுக்காக பாசுரங்களா? இல்லை, பாசுரங்களுக்காக வியாக்கியானமா? என்று மயங்கும் அளவில் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றை ஒன்றும் விஞ்சும் தன்மையாயின.
ravi said…
உதாரணமாக:

தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரின், "திருமாலை" யில் வரும் பாடலின் பொருளைப் பாருங்கள்:

பச்சை மா மலைபோல் மேனிப்
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர, யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை தரினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே!
ravi said…
பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார். மரம் தண்ணிழல் கொடுத்து காப்பதோடு நிற்பதில்லை. "ஆயர் தம் கொழுந்தே" என்கிறார் ஆழ்வார். கொழுந்து மரத்தின் உச்சியில், தளிர்க்கும் கிளையில் இருப்பது. ஆயர் குலத் தலைவனான கண்ணனை கொழுந்து என்பது சரிதான். கொழுந்து மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது - முல்லைத் தலைவனும் அப்படி என்பதும் பொருந்துகிறது. அதற்கும் மேலே, அடி வேரில் புண் என்றால் முதலில் வாடுவது கொழுந்துதான். மெய் பொருளின் காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் பண்டைத் தமிழர். இப்பாடலையும் முன்பு நம்மாழ்வார் உவமைப் படுத்திய "தொன் மிகு பெரும் மரம்" என்பதையும் சேர்த்து ரசிக்க முடியும்!
ravi said…
வைணவ ஆலயங்களில் நிகழும் பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.
ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.
அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும்.
புராணப் பெருமைகள் மிகுந்த, மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் ஆகிய திருத்தலங்களில் மிகுந்த விசேஷமானவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.
தென்திசையின் திலகமான திருமாலிருஞ்சோலையை வந்து சேவித்த பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி சார்ங்கதன்வா கதாதர’ என சகஸ்ரநாமத்தில் - கள்ளழகரான விஷ்ணுவைப் போற்றுகிறார். இங்கு பாதுகாப்பு கருதி மாலவனின் திருக்கர சக்கரம், தாயார் சன்னதிக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறெங்கும் இல்லாத தரிசனமாக ‘பிம்பரூபத்தில்’ மேற்புறம் ‘ஹிரண்ய சம்ஹார நரசிம்மர், கீழ்ப்புறம் ஸ்ரீ வராக ஸ்வாமியாக சிறப்புடன் திகழ்கிறார்.
பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன் ஸ்ரீ சுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட “நினைத்தது நிறைவேறும்!” சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும், சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமேயும், இயன்றதை நிவேதனம் செய்து, பூஜித்து, சேவிக்கலாம்.
தினமும், “ஸ்ரீ சுதர்ஸனாய ஹ{ம்பட்” என்ற மந்திரத்தையும்,
“ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி,
தந்நச் சக்ர ப்ரசோதயாத்,”
என்ற ஸ்ரீ சுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம்.
இவ்விதம் வழிபட்டு வரம் பெறலாம். நிச்சயம் நினைத்தது நிறைவேறும்!
ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!

#mahavishnuinfo
ravi said…
🌹🌺'‘" *அய்யா..... எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே’" என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்ட செல்வந்தன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ஸ்ரீ விஷ்ணு ஆசிரமத்துக்கு அருகே இருந்த பேரையூரில் மிகப்பெரிய செல்வந்தன் கோபாலன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான்.
ravi said…


🌺கோபாலனது போதாத காலம்.. ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன.

🌺தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான்.

🌺கோபாலன் விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான்.
ravi said…
🌺அதற்கு முன்னர்.. தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ஸ்ரீ விஷ்ணுவை சதா வணங்கும் குருநாதரைச் சந்திக்க வந்தான்.

🌺ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான் கோபாலன். குருவை வணங்கினான். ‘"அய்யா எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே’" என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான்.
ravi said…

🌺அதற்கு முன்பு பலமுறை செல்வந்தனின் தோரணையிலேயே அவனைப் பார்த்திருந்தான் சிஷ்யன். செயல் இழந்தவனாக அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

🌺கோபாலனுக்கு என்ன ஆலோசனை சொல்லப்போகிறார் குருநாதர் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சிஷ்யனும் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தான்.

🌺"இப்போது உன் நிதி நிலைமை எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் குரு.
ravi said…
🌺"மானத்தோடு வாழ்ந்து பழகியவன். அதனால், இருந்த சொத்தையெல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டேன். செல்வமெல்லாம் தொலைந்தது. அதனால் என் மனைவியும் என்னைப் பிரிந்துவிட்டாள்.

🌺குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவளது பெற்றோரிடம் போய்விட்டாள். உற்றார், உறவினர் யாருமே என்னை மதிப்பதில்லை. இப்போது நயா பைசா இல்லை. மனதில் தெம்பும் இல்லை. உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது" என்றான் கோபாலன்.
ravi said…

🌺"இனி இழப்பதற்கு எதுவுமில்லை உன்னிடம். ஆனால், இந்த நிமிடம் உன்னிடம் மிச்சமிருப்பது விலைமதிப்பற்ற இரண்டு பொக்கிஷங்கள். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அவற்றை ஒருவனால் விலைக்கு வாங்க முடியாது.

🌺உனக்கு ஏற்பட்ட தீமைகளின் நன்மையாக அவை உனக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை நீதான் கவனமாக மீட்டெடுக்க வேண்டும். சரியாகப் பயன்படுத்த வேண்டும். உன் வசம் இருக்கும் அந்தப் பொக்கிஷங்களை சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் நீ இழந்த அனைத்தையும் திரும்பவும் அடைவாய்.
ravi said…
🌺இனி, எதைச் செய்தாலும் அதில் நீ வெற்றி பெறுவாய்" என்று கூறினார் குரு.

🌺அவர் பேசப்பேச, எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தான் எதிரே இருந்தவன்.

🌺குருவின் குரலைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யனுக்கும் அவரது பேச்சின் பொருள் புரியவில்லை. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையில் இருப்பவனிடம் அப்படியென்ன பொக்கிஷங்கள் மிச்சமிருப்பதாகக் கூறுகிறார் குருநாதர் என தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு அதிகமானது.
ravi said…
🌺வந்திருந்த கோபாலன் அதைக் கேட்கும் முன்னர், சிஷ்யனே குறுக்கிட்டுக் கேட்டுவிட்டான்.

🌺"அப்படி என்ன விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் அவரிடம் மிச்சமிருக்கின்றன குருவே?" என்றான்.

🌺"ஆமாம் ஸ்வாமி. நீங்கள் சொன்னது எனக்கும் விளங்கவில்லை. என்னிடம் அப்படியென்ன மிச்சமிருக்கிறது ஒன்றுக்கும் உதவாத இந்த உயிரைத் தவிர?" என்று கேட்டான் வந்திருந்தவனும்.
ravi said…

🌺ஓரமாக நின்றுகொண்டிருந்த சிஷ்யனையும் அருகே அழைத்து, எதிரில் அமரச் சொன்னார் குரு. பொறுமையாகவும் தீர்க்கமாகவும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

🌺தற்கொலை செய்துகொள்ளும் முடிவெடுத்த உன்னை இந்த நிமிடம்வரை தடுத்து நிறுத்திவைத்திருப்பது அந்த பகவான் ஸ்ரீ மகா விஷ்ணு தான்.

🌺உனக்குள் மிச்சமிருக்கும் உன்"#தன்னம்பிக்கை ". எந்த நம்பிக்கை உன் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் பக்கபலமாக இருந்ததோ, அதுதான் உன் தோல்விகளால் தொலைந்துபோகாமல் கொஞ்சமேனும் மிச்சமிருக்கிறது. அதுதான் #முதல்_பொக்கிஷம். துளியாக இருக்கும் அதை நெருப்பாகப் பரவ விடு..
ravi said…
🌺தலையசைத்து ஆமோதித்தான் வந்திருந்தவன். சிலையாகிக் கவனித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு தொடர்ந்தார்.

🌺உன்னிடம் இருக்கும் அந்த #இரண்டாவது_பொக்கிஷம் எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. தோல்விகளால்தான் அதை அடையமுடியும். கைவசம் இருக்கும் எல்லாமும் நம்மை விட்டுப் போன பிறகு நம்மிடம் மிஞ்சியிருப்பது அதுவேயாகும்.

🌺தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு கணத்தையும் திரும்பத்திரும்ப சிந்தித்துப் பார்த்தால் அறியக் கிடைக்கும் அதுவே
"#அனுபவம்" எனப்படும். அது தான் வைரக்கியம் எனப்படும்
ravi said…

🌺அவர் சொல்லச்சொல்ல கோபாலனுக்கு உத்வேகம் வந்தது தோற்றுப்போய் வந்திருந்தவனுக்கு. வாழ முடியும் என்ற வைராக்கியம் உருவானது. வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை வெகுண்டெழுந்தது. ஸ்ரீ மகா விஷ்ணுவை வணங்கி புதிய வாழ்க்கையை தொடங்கினான் கோபாலன் 🌺🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌹'' "Ayya ..... Can I get rehab, sirs?🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹 Gopalan was the richest man in Peraiyur, near the Sri Vishnu Ashram. He has been doing four or five businesses.

🌺Gopalan not enough time .. There was a huge loss in a business. By the time it was fixed, the focus had shifted to other industries and successive declines. The loans he took out to deal with the problems ruined his peace of mind.

🌺Continued borrowing over and over again. Still could not cope. One day he was totally paralyzed. He lost his house, door, property and comfort and came to the middle street.
ravi said…
🌺Gopalan had come to the awkward end of taking his own life in despair.

🌺Before that .. Sada came to meet Guru Nath who always worships Lord Vishnu in the longing to know if he will have a free time and in the hope that if he finds out that a good time will be born, he can postpone the decision to commit suicide.

🌺 Gopalan stood in front of the Guru as a shrunken man. Worshiped the Guru. "Sir, can I be rehabilitated, sir?" He asked with tears in his eyes.

🌺 Before that the disciple had seen him many times in the posture of a rich man. It was a pity to see him as a loser.

🌺The disciple was also waiting with his ears pricked up, curious to know what advice Guru Nath was going to give to Gopalan.

🌺"How is your financial situation now?" Asked the Guru.

🌺 "Used to live with dignity. So, I sold all the property I had and paid off the debts. All the wealth was lost. So my wife and I split up.
ravi said…
🌺 She picked up the children and went to her parents. Uttar Pradesh, no relative respects me. Now there is no naya paisa. There is no peace of mind. The thought of taking my life kills me a little bit, ”Gopalan said.

🌺 "You have nothing to lose anymore. But, what you have left at the moment are two precious treasures. No matter how many crores you give, one cannot buy them.

🌺You have got them for the good of the evils that have befallen you. You have to retrieve them yourself carefully. Must be used correctly. If you use those treasures properly you will surely regain all that you have lost.

🌺 "Now, whatever you do, you will succeed," said the Guru.

🌺He was the one who was in front of the awakened Thiruthiruvena to speak, without understanding anything.
ravi said…
🌺The disciple who was listening intently to the Guru's voice also did not understand the meaning of his speech. He longs to know that Gurudwara is the one who tells the one who has nothing left to lose what treasures are left.

🌺 Before Gopalan could hear it, the disciple interrupted and asked.

🌺 "So what precious treasures do he have left, Guru?" Said.

🌺"Yes Lord. I do not understand what you said. What do I have left except this useless life?" The one who had come asked.

🌺🌹The Guru called the disciple who was standing aside and told him to sit opposite. He continued his speech patiently and decisively.
ravi said…
🌺🌹 Lord Sri Maha Vishnu who has stopped you from making a suicidal decision till this very minute.

🌺Your "#confidence" that remains within you. Whichever hope was on the sidelines of all your successes, that is all that remains is not to be lost by your failures. That is the #first_treasure. Let it drip and spread like fire ..

🌺 He nodded and nodded in approval. The disciple was looking at the idol. The Guru continued.

🌺That # second_treasure you have is not easily available to everyone. It can only be achieved through failures. That is what is left of us after everything in our possession has left us.

🌺 That's what you know when you think back to every moment you've had to face failures
Called "#experience". That's what diamond is called

🌺He said Gopalan was inspired to tell the loser. The zeal to be able to live developed. Confidence in being able to win was overwhelming. Gopalan started a new life by worshiping Sri Maha Vishnu🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
*கேடு வந்தால் கேசவா என சொல்....*
*நாடியது கிட்ட நாராயணா ‌என சொல்...*
*கோடி வினை தீர கோவிந்தா என சொல்...*
*வாடிய நேரத்தில் வாசுதேவா என சொல்...*
*ஆடும் போது அனந்தா என சொல்...*
*பாடும் போது பத்ம நாபா என சொல்...*
*அச்சம் தவிர்க்க அச்சுதா என சொல்...*
*இருக்கும் வரையில் இருடிகேசா என சொல்...*
*மரண காலத்தில் மது சூதனா என சொல்...*
*வீடு செல்ல விட்டல என சொல்...*
இவையனைத்தையும் சொல்ல அவகாசம் இல்லை என்றால்...*
*_"கிருஷ்ணா என்று சொல் என் மனமே*
ravi said…
சடகோபம்..
சடகோபர்..
சடாரி..சடம் என்பது என்ன?
தாயின் கருவறையில்
தானிருக்கும் ஓர் கருவை..
வெளியுலகம் பார்ப்பதற்காய்..வெளியே தள்ளுகின்ற ஓர்வீரியமான காற்றுக்கே..
சடம் என்பது பெயராகும்!!
சடகோபர்..
ஆழ்வார்களில் ஒருவர்..
நான்கு மறைகளையும்
நாமறிந்த தமிழினிலே
நமக்குத் தந்ததனால்
தமிழ் வேதம் செய்த
மாறனென ஏற்றம் மிக்கவர்!!
ஆழ்வார் திருநகரி..
ravi said…
இவரது அவதார ஸ்தலம்..
பிறந்தவுடன் குழந்தைகள்
சத்தமிடக் கேட்டிருப்பீர்..
நம் ஆழ்வாரோ அழவில்லை..
உலக இயற்கைக்கு
மாறாக இருந்தமையால்மாறன் எனப் பெயர்பெற்றார்..குழந்தைகள் பிறக்கும்..
அந்தஜனனத்தின் போது
அதன்உச்சந்தலையின் மேல்இந்தப் புவியிருக்கும் காற்றானது
முதலில் தான் தீண்டும்..
.
ravi said…
அந்தஸ்பரிசத்தினால்குழந்தைகள் தாம் அழும்..அந்தக் காற்றின்தீண்டல்..அந்தத் தொடுதலே
பிறக்கும் குழந்தையினை இந்த
உலக மாயைக்குள் தள்ளிவிடும்!
முன் ஜென்மம் மறந்து
இந்தஜென்மத்தைத்தொடரும்..சடவாயுவின் சேர்க்கையினால்நாம்முன்னதைமறக்கிறோம்..பக்தியையும்தொடர்வதில்லை..ஆனால் நம் ஆழ்வார்..
விஷ்வக்சேனரின் அம்சமாய்
இப்புவியிலே உதித்தவர்..
தாயின் கருவறையில்
தான்இருக்கும் போதே..சடம் என்னும்காற்றைஅப்போதே கோபத்துடன்
முறைத்துப் பார்த்தாராம்..
அதனால் சடகோபன்..
பிறப்பின் மாயையில் இருந்து
தன்னை விடுவித்தபடி..
பெருமானை மட்டும்
மனம் முழுதும் நினைத்தபடி..
திருமாலின் திருவடி அம்சமாய்
இங்கே வாழ்ந்தவர் ஆழ்வார்..
பெருமானின் திருவடிகளில்
சடகோபர் இருப்பதால்
சடகோபம் என ஆகிசடாரி எனப் பெயர் பெற்றது..
சடாரியை நாம் நம்தலையில் தாங்கினால்..
பந்த பாசங்கள் என்னும்
சேற்றுக்குள் விழாமல்..
பக்தியிலே தினம் திளைப்போம்!!
சடாரி எனப்படுவது
சடகோபரே ஆவார்..
ஆழ்வாரின் சம்பந்தமும்
நமக்கு அதனால் கிடைக்கிறது..
சடாரியைப் பெறும் போது..
புருவங்களுக்கு நடுவில்
வலக்கை நடுவிரல் வைத்து..
நாசி , வாய் பொத்தி குனிந்து..
பெருமாளின் திருப்பாதத்தினைமிகப் பணிவுடன் நாம்பக்தியுடன் ஏற்க வேண்டும்.
ravi said…
நாங்கள் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் கணக்கு வைப்பது யார்?*_

*யார் அந்த கணக்காளர்?*

விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நோயாளி மிகவும் மோசமான நிலையில் இருந்தார். மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் வழக்கை விசாரிக்கச் சென்றார். 2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து, "இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தனது ஊழியர்களிடம் கூறினார். மேலும் அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
ravi said…
நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, ​​மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார், அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் பில் வழங்கப்பட்டது.

டாக்டர் அவனுடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, "இவனிடம் ஒரு பைசா கூட வாங்காதே. ஒரு காரியம் செய், அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வா" என்றார். அந்த நபர் சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவர் நோயாளியிடம், "தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?" நோயாளி கூறினார், "நான் உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு எங்கே ஞாபகம் இல்லை?"
ravi said…
டாக்டர் சொன்னார்... "நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை ஃபிக்ஸ் பண்ணியிருக்கீங்க.

அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, ​​திடீரென காரில் இருந்து புகை வர ஆரம்பித்து நின்றது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயன்றோம், கார் ஸ்டார்ட் ஆகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது. சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது.
ravi said…
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது. நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம்.

சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது. நீ பைக்கில் வருவதைப் பார்த்தோம்.
ravi said…
நம்பிக்கையான கண்களுடன் நிறுத்துங்கள் என்று நாங்கள் அனைவரும் கைகளை அசைத்தோம். நீங்கள் பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள். பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்... சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது. நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தோம்! அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம். நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள். மேலும் நான் உங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன் மற்றும் பணம் இருந்த பிறகும், இது போன்ற கடினமான காலங்களில் அது உதவாது.
ravi said…
இத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை, அது விலைமதிப்பற்றது. ஆனாலும் நான் உனக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன்?"

அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள், என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன. என்று கூறியிருந்தீர்கள்

_*"எனது விதியும் கொள்கையும் என்னவெனில், பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை. இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்."*_
ravi said…
பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும், அப்படிப்பட்ட மன உறுதியுடன் அவற்றைப் பின்பற்றினால், ஏன் என்னால் முடியாது என்று அன்று நினைத்தேன். அன்றிலிருந்து, நான் என் வாழ்க்கையில் அதே தீர்மானத்தை எடுத்துள்ளேன். நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை.

உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன். இந்த மருத்துவமனை என்னுடையது. நீங்கள் இங்கே என் விருந்தாளி, உங்கள் சொந்த விதியின்படி என்னால் உங்களிடமிருந்து எதையும் எடுக்க முடியாது.
ravi said…
இப்படிப்பட்ட உத்வேகமான நபருக்கு சேவை செய்ய அவர் எனக்கு வாய்ப்பளித்தது கடவுளின் கிருபையாகும். சர்வவல்லமையுள்ளவர் உங்கள் நற்செயல்களின் கணக்கைக் காத்தார், இன்று உங்கள் கடவுள் அந்தக் கணக்கைச் செலுத்தினார். எனது செயல்களின் கணக்கையும் அவர் வைத்திருப்பார், எனக்கு அது தேவைப்படும்போது, ​​​​அவர் நிச்சயமாக அதிலிருந்து தீர்த்து வைப்பார்." மருத்துவர் நோயாளியிடம் கூறினார்.


"நீங்கள் வசதியாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்." கேபினை விட்டு வெளியே வரும்போது, ​​அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைகின்றன, அவன் கண்களில் கண்ணீர் பெருகியது, அவனது இதயம் அளவற்ற அன்பால் நிறைந்தது!!


நாம் செய்த செயல்கள் நமக்குத் திரும்பி வருகின்றன, அதுவும் ஆர்வத்துடன். இதுதான் பிரபஞ்ச விதி!

♾️

_*"உலக மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்வதே சிறந்த தியாகம் மற்றும் வழிபாடு ஆகும். இப்படிச் செயல்படுபவன் கர்ம பந்தத்திலிருந்து விடுபடுகிறான்."*_

*பவ்து சப் மங்கலம்*
🙏🙏🙏🙏
ravi said…
*Mimetic Desire*

Have you ever seen children at a party playing with balloons. One child suddenly grabs a red balloon and yells: “This balloon is mine!” Inadvertently, all the children drop their balloons and fight over this red balloon. A very dumbed down example of what René Girard (a French historian and polymath) calls “mimetic desire.”

A lot of our desires don’t emerge from within, but from ‘outside’. We import our most powerful desires from imitating the desires of other people.

In fact, the entire advertising industry is founded on the exploitation of borrowed desire. Human desire is not a linear process, where a person autonomously desires an inherently desirable object. Rather, we desire according to the desire of others. If we are not aware, others influence us on what to desire. And this is amplified on social media platforms such as Facebook and Instagram which are excellent conduits of mimetic desire.

French thinker Montesquieu, explained it beautifully *“If we only wanted to be happy it would be easy; but we want to be happier than other people, which is almost always difficult, since we think them happier than they are.”*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இப்படிப்பட்ட மகான்கள் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் முழுவதையும் பரமேசுவரனின் நாட்டியமாகவே பார்க்கிறார்கள். அதுதான் நடராஜனின் நடனம். ஆடிக்கொண்டிருக்கிற நடராஜனிடமிருந்துதான் சகல சப்தங்களும் பிறக்கின்றன.

நடராஜா வெகு வேகமாக நர்த்தம் பண்ணுகிறார். ஆடி நிறுத்துகிற சமயத்துக்கு முந்தி ஜடை விழுதுகள் பாக்கவாட்டில் இருபுறமும் நீட்டி நிற்கின்றன
ravi said…
சலனத்தில் உள்ள வஸ்துவை இந்தக் காலத்தில் ‘ஸ்நாப் ஷாட்’ என்று பேட்டோ பிடிக்கிறார்கள் அல்லவா? அதுபோல் இந்த ஜடை இருபுறமும் நீட்டிக்கொண்டிருக்கும் அவசரத்தைத் தெய்வச் சிற்பி அப்படியே நடராஜ விக்கிரகமாகப் பண்ணி விட்டார். இது நம் கண்ணுக்குத் தெரிகிற நடராஜ மூர்த்தியின் ஸ்வரூபம்.
ravi said…
நம் காதுக்குப் புலனாகிற சப்தப் பிரபஞ்சமும் அவரிடமிருந்தே தோன்றியது. நடராஜா கையில் உடுக்கை இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டியின் உடுக்கையைவிடப் பெரியது. மாரியம்மன் கோவில் பூசாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. இந்த உடுக்கைக்கு ‘டக்கா’ மற்றும் ‘டமருகம்’ என்றும் பெயர். நாட்டியம் முழுவதிலுமே பலவிதமாக ஆடி முடிக்கிற சமயத்தில் ஜடை விரித்து நின்றதுபோல், இந்த உடுக்கானது நாட்டியம் முழுவதும் பாத தாளத்தை அநுசரித்துச் சப்தித்துவிட்டு, ஆடலை நிறுத்தின வேகத்தில் படபடவென ஒரு சாப்புத் தொனியை ஒலித்தது. ஸ்வரூபத்தை விஸ்வகர்மா விக்கிரகமாக வடித்ததுபோல் இந்தச் சாப்புத் தொனியை அப்படியே கிரகித்து நந்திகேசுவரர் “மகேசுவர சூத்திரம்” என்று பெயரிட்டார். அந்தச் சாப்புத் தொனியில் பதினாலு சப்தத் தொகைகள் இருந்தன. அவை ‘அ இ உண்’ என்று தொடங்கி ‘ஹல்’ என்று முடியும்.
ravi said…
இந்த ஒலிகளையே வியாகரணத்துக்கு—அதாவது மொழி இலக்கணத்துக்கு மூலமாக வைத்துப் பாணினி மகரிஷி ‘அஷ்டாத்தியாயி’ என்ற நூலை எழுதினார்.

ravi said…
வேதங்கள் நான்கு; அதன் அங்கங்கள் ஆறு; மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம், என்று நாலு — மொத்தம் இந்தப் பதினான்குமே நமது ஸநாதன மதத்தின் ஆதார நூல்கள். இவற்றை சதுர்த்தச (பதினான்கு) வித்யா ஸ்தானம் என்பர். இதற்கு ஏற்றாற்போல் சர்வ வித்தைகளுக்கு ஈசுவரனான நடராஜாவின் டமருகத்திலிருந்தும் பதினாலு சப்தக்கோவைகளே வந்தன. இவை ‘அ’ வில் ஆரம்பித்து ‘ல்’—லோடு முடிவதாகச் சொன்னேன். இதனால் ‘அல்’ என்றாலே இலக்கணச் சாஸ்திரப்படி எல்லா எழுத்துக்களையும் குறிக்கும். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம், இந்த ‘அல்’ எல்லா பாஷைகளிலும் இருக்கிறது.
ravi said…
உருதுவில் ‘அலீஃப்’ என்பது முதல் எழுத்து. கிரீக்கில் ‘அல்ஃபா’ என்பது முதல் எழுத்து. ‘ஆல்ஃபபெட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வதும் இந்த ‘அல்’லை வைத்துத்தான். இப்படியாக சகல பாஷைகளும் சகல சப்தங்களும் ஈசுவரனிடமிருந்தே பிறந்திருக்கின்றன.
ravi said…
இதைப்பற்றி யக்ஞ நாராயண தீக்ஷிதர் சமத்காரமாக ஒரு சுலோகம் செய்திருக்கிறார். ‘பாணி’ என்றால் கை, ‘நாதம்’ என்றால் ஒலி. ‘பாணி நிநாதம்’ என்றால் (நடராஜர்) கையால் செய்த ஒலி என்று அர்த்தம். அதுவே ‘பாணினி’ மகரிஷி செய்த (நாத பாஷை) சாஸ்திரமாயிற்று. வியாகரணத்துக்கு பாஷ்யம் செய்தவர் பதஞ்சலி. இவர் ஆதி சேஷ அவதாரம். ஆதிசேஷன் நடராஜரின் காலைப் பாதசரமாகச் சுற்றியிருக்கிறார். நடராஜாவின் கையிலுள்ள உடுக்கிலிருந்து சப்தம் வந்தது. அவரது காலில் உள்ள பதஞ்சலி அதற்கு விளக்கம் தந்திருக்கிறார். அதனால், நடராஜா கையையும் காலையும் ஆட்டினாலே ஸகல பாஷா சாஸ்திரமும் உண்டாகிவிடுகிறதென்று கவி சொல்கிறார்.

ravi said…
இதன் உட்பொருள் சப்தம், அதன் அர்த்தம் இரண்டுக்கும் ஈசுவரனே மூலம் என்பதேயாகும். இதை உணர்ந்து விட்டால் நாம் வாக்கை வீணாக்கமாட்டோம். நாம் எழுதுவது பேசுவது எல்லாம் நம்மையும் பிறரையும், ஈசுவர பரமாக நினைக்கச் செய்து உயர்த்தவே பயனாகும்
(இன்று நடராஜர் அபிஷேகம்/வருஷத்தில் ஆறு அபிஷேகம்)
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 56*🐒🐒🐒
ravi said…
யம குபேர திகபால ஜஹாம் தே |

கவி கோவித கஹி ஸகே கஹாம் தே ||

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |

ராம மிலாய ராஜபத தீன்ஹா || 8🐒🐒🐒
ravi said…
அதுமட்டுமா சங்கர சுவனா ? இல்லை

யமன் , குபேரன் , அஷ்ட்டத்திக் பாலர்கள் இவர்கள் உட்பட உன்னை விவரிக்க முடியாது .. இப்படி இருக்கையில் கேவலம் கவிஞ்சர்களும் , புலவர்களும் மட்டுமே பாடி விட முடியுமா ?

மேரு மலையே உனை விவரிக்க முடியாத போது அங்கு முளைத்த காளான்கள் எப்படி உனை முழுவதும் புரிந்து கொள்ள முடியும் ?
ravi said…
இது மட்டுமா ... ராமனுக்கு மட்டும் தானா உதவி செய்தாய் ... இல்லையே!!

உனையே நம்பி வந்த சுக்ரீவனனுக்கு ராம தரிசனம் தந்தாய் ..

அவன் தொடர்பு கிடைக்க கோடானு கோடி புண்ணியம் சுக்கரீவனை பெற வைத்தாய் ...

அவன் இழந்த ராஜ்யத்தையும் மனைவியையும் திரும்பவும் பெற உதவி செய்தாய் ...

ஒரு அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீ அல்லவோ தக்க உதாரணம் ...

நீ நினைத்திருந்தால் அந்த ராஜ பதிவு உனக்கே கிடைத்திருக்கும் ...

ஆனால் எதிலும் பற்று இல்லாமல் ராம நாமம் ஒன்றே போதும் என வாழ்ந்தாய்...

உன் போல் துணைவன் எங்கு கிடைப்பான் .. ??

ராமன் மீண்டும் ராம அவதாரம் எடுத்தாலும் உனை தவிர உன் இடத்தை வேறு யாருமே நிரப்ப முடியாது ... 🐒🐒🐒
ravi said…
குருக்ஷேத்ரம்...!

போர்க்களத்தில் பாண்டவர், கௌரவர் சேனைப் பிரிவுகள் குவிந்தன கோடி மலராய்

யானைகளின் பிளிறல்; 🐘

குதிரைகளின் குளம்பொலி; 🦄🐴

காலட்படை வீரர்களின் ஆரவாரம்;🤺🤺

புழுதி கிளம்பிக்
கொண்டிருந்தது.

நான்கு அக்ரோணிகள் அதிகம் கொண்ட சேனையுடன்

துரியோதனன் தன் குடிலில் மீசையை முறுக்கிக்கொண்டிருந்தான். மண்ணில் ஆசை வைத்தவன்

மரங்கள் சாய்க்கப்பட்டன.

சிறு குன்றுகள் தகர்க்கப்பட்டு தரைமட்டமாயின...

பள்ளங்கள் நிரப்பப்பட்டன.

சற்றே தொலைவில் ஒரு மரத்தில் இருந்த குருவி அஞ்சி நடுங்கிக்
கொண்டிருந்தது

துரியோதனின் உள்ளம் போல் , கர்ணனின் எண்ணம் போல்

கிருபரின் ஐயம் போல்

பீஷ்மரின் கண்ணீர் போல்

துரோணரின் துக்கம் போல் .....
ravi said…
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

கூட்டில் அதன் நான்கு குஞ்சுகள் வாழ்க்கை மலர காத்திருந்தன ..

தன் கீச்சுக்குரலை அதிகம் எழுப்பாமல் உதவிக்கு எவரை நாடலாம் என்று அந்தக் குருவி நாலாபுறமும்
நோக்கிக்கொண்டிருந்தது.

சிரத்தில் மயில் தோகையுடன் தேரில் அந்த வசீகர உருவம் கூப்பிடு தொலைவில் அதன் கண்களில் தெரிந்தது.

மதுசூதனன்தான். அருகில் தனஞ்சயன்... யுத்தக் களத்தை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தனர்.

தொடங்கப்போகும் போரில் வெற்றிக்கான திட்டங்கள் வகுத்துக்கொண்டிருந்தனரோ என்னவோ!

குருவியின் கண்களில் திடீரென ஒரு நம்பிக்கை ஒளி.

கண்ணா பலர் வாழ்க்கை அங்கே முடியவோ திட்டம் தொடுத்தாய் .. இங்கே வாழ்க்கை அரும்ப வழி வகுப்பாயோ

அடங்கி ஓய்ந்திருந்த அதன் சிறகுகள் அந்த நம்பிக்கை தந்த வலுவால் மீண்டும் படபடவென்று அடித்துக்கொண்டன.

தட்டுத்தடுமாறிப் பறந்து சென்று, கிருஷ்ணன் ஓட்டி வந்த தேரின் ஒரு முனையில் அமர்ந்துகொண்டது.

பரந்தாமா! என் குஞ்சுகளைக் காப்பாற்று...

இல்லாவிட்டால் விடிவதற்குள் அவை இந்த யானைகளின்
கால்களில் மிதிபட்டு மடிந்துவிடும்.

" அதன் மங்கிய கூக்குரல் பரமாத்மா செவிகளில் வீழ்ந்தனவா...?

குருவிக்கு அச்சம்.

ஜனார்த்தனன் செவிகளில் விழாமலா இருக்கும்...?

கண்ணன் அதன் மனநிலையை அறியாமலா இருப்பான்...?

ஹரிக்கும் அறியாமல் போனால் அது அறியாமை அல்லவா ?
ravi said…
குருவியே! காலச்சக்கரம் பல சமயங்களில் நாம் அறியாமல் சுழல்கிறது.

அதன் போக்கில் நாம் செல்வதே உத்தமம்."

நாராயணா! நான் அறிந்ததெல்லாம் அந்தக் காலச் சக்கரமே நீ என்பதுதான்.

உன்னை அன்றி வேறு எந்த சரணமும் இப்போது என்னிடம் இல்லை."

குருவி சொல்லிக்கொண்டே பெருமூச்சு விட்டது.

கிருஷ்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.

சரி! உன்னால் அந்தக் கூட்டில் பதினெட்டு, இருபது நாட்களுக்கு உணவு சேகரித்து வைக்க முடியுமா?’

இப்போதே உள்ளது பரந்தாமா..."

கிருஷ்ணரிடம் புன்முறுவல்...

பரந்தாமனுக்கும் குருவிக்கும் நடைபெற்ற உரையாடலை அறியாத அர்ஜுனன்

அந்தக் குருவியை விரட்டுவதில் முனைந்து கொண்டிருந்தான்.

குருவியின் இறகுகள் மீண்டும் படபடத்தன.

அது தனது கூட்டை அடைந்து குஞ்சுகளுடன் அமர்ந்து கொண்டது. அண்ணல் காப்பாதுவான் எனும் அசைக்க முடியா நம்பிக்கை 🏹🏹
ravi said…
மறுநாள் விடிகாலை! போருக்கு சங்கநாதம் இன்னும் முழங்கவில்லை.

அர்ஜுனனிடம் அவனது வில்லையும் ஒரு அம்பையும் கேட்டார் கிருஷ்ணன்.

அர்ஜுனனுக்கு திகைப்பு!

தாங்கள் இந்த யுத்தத்தில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறீர்கள்.

பின் ஏன்...? என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

நான் செய்துகாட்டுகிறேன்..." அர்ஜுனன் படபடத்தான்...!

பார்த்தனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை

கண்ணன் மாறாக, அவனிடமிருந்த வில்லையும் ஒரு அம்பையும் எடுத்துக்கொண்டான்

அந்தக் குருவி இருந்த மரத்தருகே ஒரு யானை நின்று
கொண்டிருந்தது.

அதன் கழுத்தில் ஒரு பெரிய மணி கட்டப்பட்டிருந்தது.

கிருஷ்ணர் எய்த அம்பினில் அந்த மணி மட்டும் அறுந்து கீழே விழுந்தது.

கிருஷ்ணர் ஒரு திருப்தியுடன் வில்லை அர்ஜுனனிடம் திருப்பி அளித்தார்.

நான் வேண்டுமானால் இன்னொரு அம்பில் அந்த யானையை வதம் செய்யட்டுமா...?"

என்று கூறிய பார்த்தனுக்கு, ‘அவ்வளவு பெரிய இலக்கை கிருஷ்ணர் எப்படித் தவற விட்டார்?

அந்த யானைக்கு ஒரு சிறிய காயம் கூட இல்லையே...’ என எண்ணம் கொண்ட அர்ஜுனனுக்கு

சினத்தையும் நகைப்பையும் ஒருசேர அடக்க முடியவில்லை.

அவசியமில்லை... அந்த யானை ஒரு குருவியின் கூட்டைக் கலைக்க முயன்றது.

அவ்வளவுதான்... இப்போது சங்கநாதம் முழங்குவோம்.

போருக்குத் தயார் செய்துகொள்..." என்றான் கண்ணன்.

‘எந்தக் குருவி...?’ அர்ஜுனன் குழம்பினான்.

கிருஷ்ணன் அவனுக்கு பதில் அளிக்கவில்லை.🏹🏹🏹
ravi said…
போர் முடிந்தது ... எங்கும் ஓலம் கதறல் .. ஒரே இடத்தில் தாயின் தாலாட்டு சப்தம் ... அதிர்ந்தான் அர்ச்சுனன் ... போர் களத்தில் சந்தோஷமாய் பாடும் இந்த தாய் யார் கண்ணா ?

அர்ஜுனா! இந்த மணியைத் தூக்கி அப்புறப்படுத்துவாயா...?"

கிருஷ்ணரின் உத்தரவு பார்த்தனுக்கு வினோதமாக இருந்தது. களத்தில் கவனிக்க,

அப்புறப்படுத்த எவ்வளவோ இருக்கும்போது, இவர் ஏன் இந்த பயனற்ற உலோகப் பொருளில் நாட்டம்

அதிகம் கொள்கிறார்...?

அர்ஜுனனின் மௌனத்தை ஸ்ரீ கிருஷ்ணர் கவனிக்காமல் இல்லை.

அந்த மணிதான் அர்ஜுனா நான் உன் வில்லால் போர் தொடங்கும் முன் ஒரு யானையின் கழுத்திலிருந்து இறக்கியது..."

இந்தமுறை அர்ஜுனன் குனிந்தான்.

மணி கனம்தான். அனால், அதை நிமிர்த்தி புறம் தள்ளினான்.

என்னே அற்புதம்...?

ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... நான்கு குருவிக் குஞ்சுகள் பளீரென விண்ணில் பறந்தன.

அவற்றைத் தொடர்ந்து ஒரு தாய்க்குருவியும்...

அர்ஜுனன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தாய்க்குருவி மட்டும் கிருஷ்ணரை ஒருமுறை சுற்றி வலம்

வந்து நமஸ்கரிப்பது போல் பறந்துவிட்டு தனது குஞ்சுகளுடன் சேர்ந்துகொண்டது.

வானில் அவை வட்டமிடுவதை கண்ணன் புன்னகையுடன் ரசித்துக்
கொண்டிருந்தான்.

கண்ணனை நோக்கியபடி இருந்த பார்த்தன், ‘தங்களது மானிட உருவத்தைக் கண்டு அவ்வப்போது

உண்மையில் தாங்கள் யார் என்பதை நான் மறந்துவிடுகிறேன்" என எண்ணி உருகி கண்ணன் பாதங்களில்

மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருந்தான்.

காஞ்சி யிலும் அதே கருணை

கோமாதாக்கள் மகிழ

குருவிகள் கீச்சிட

கிளிகள் பாட

கருணை வெள்ளம் எல்லோர் வேண்டுதல்
களையும்

*இனிதே*

கண்ணன் போல் நிறை
வேற்றுகின்றதே 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 204* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 49👍👍👍
ravi said…
*8. எட்டு விதமான கண்ணோட்டம்*

ஸர்வ ஜயம், நிதி தர்சனம்🙏
ravi said…
*விசாலா* கல்யாணீ ஸ்புடருசி *யோத்யா* குவலையை:

க்ருபாதாரா *தாரா* கிமபி *மதுரா*

*போகவதிகா*
*அவந்தீ*

த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார *விஜயா*

த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே🙏🙏🙏
ravi said…
இந்தப் ஸ்லோகத்தில் அம்பாளின் எட்டு விதமான த்ருஷ்டிகளுக்கு (பார்வைகளுக்கு), 8 நகரங்கள் உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக சாமுத்ரிகா லக்ஷணங்களுடைய பெண்களின் பார்வையை இவ்வாறு பிரித்துச் சொல்வது வழக்கம்.

இந்த 8 விதமான பார்வைகளாவன;

உள்ளார்ந்த, ஆச்சர்யமான,

முழுதாக மலர்ந்த, களைப்போடு கூடிய,

சஞ்சலமான, ப்ரியத்துடன் கூடிய,

மயங்கிய நிலையில், மற்றும் பாதி மூடிய நிலையிலானதாம்.

இவை எல்லா பெண்களிடத்தும் இருந்தாலும், அன்னையிடத்து இவை இருப்பது,

ஸம்க்ஷோபண, ஆகர்ஷண, த்ராவண, உன்மாதன, வச்ய, உச்சாடன, வித்வேஷண, மாரண சக்திகளைக் கூறிப்பதாக தேதியூரார் தமது விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.🌺🌺🌺
ravi said…
கோலநகர் விசாலையாய்

நிரந்தரக் கல்யாணியாய்க்

குவலயத்தால் அயோத்தியாய்க்

குலமதிரை தானாய்

சாலஒளிர் போகவதியாய்

அமுத தாரையாய்த்

தண்ணளியால் அவந்தியாய்ச்

சகவிசையை எனலாய்
நிலவிழி புடைபரந்து

நெடுநகரப் பெயர்கவர்ந்து

நீண்டு சேந்தரிபரந்து நிகரொழிக்கும் என்றால்

ஆலவிடம் அமுதெனக்கொண்டு அருந்திய உன்மத்தர் புரம்

அதனில் ஒருபுறம் கவர்தல் அதிசயமோ தாயே!💐💐💐
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 204* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*67 வது திருநாமம்*
ravi said…
*67* *अश्वारूढाधिष्ठिताश्वकोटिकोटिभिरावृता -அச்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி கோடிபி ராவ்ருதா -*

அம்பாள் போர்க்கோலம் பூண்டவள்.

அவளைச் சுற்றிலும் அநேக கோடிக்கணக்கான போர்க் குதிரைகள் இருக்கும்.

அவைகளுக்கு தலைவி *அஸ்வாரூத தேவி* .

புலன்களை அடக்குவதை தான் கோடிக்கணக்கான குதிரைப்படைகளை கட்டுப்பாட்டுக்குள் உடையவள் என்றும் ஒரு பொருள் கொள்ளலாம்.💐💐💐🦄🦄🦄🦄🦄🦄🦄🦄
ravi said…
யானைப் படையின் தலைவியாக *சம்பட்கரி* என்ற தேவி இருக்க

திரிபுரசுந்தரியின் கையில் இருந்த *பாசபாணம்* எனும் பாசக் கயிற்றில் இருந்து திரிபுரசுந்தரிக்கு யுத்தத்தில் பெரும் துணையாக இருந்து வெற்றியை தரக்கூடிய தேவியாக *அஸ்வரூடா* எனும் தேவியும் வெளிவந்தாள்.

அக்னித் தீயில் இருந்து வெளிவந்த திரிபுரசுந்தரியின் உடலில் இருந்த சக்தியினால் வெளிவந்த அஸ்வாரூடை சிவப்பு நிற சேலையில் ஜொலித்தபடி காணப்பட்டாள்.

அவள் தலைமையில் பெரிய குதிரைப் படையும் வெளி வந்தது.

குதிரைப் படைக்கு தலைமை தாங்கியபடி அஸ்வரூடா தேவியானவள் மிகப் பெரிய, கம்பீரமான, தூய வெள்ளைக் குதிரை மீது அமர்ந்து கொண்டு வெளிவந்தாள்.

அவள் கையில் தங்கக் கோல் ஒன்று மின்னியது.

அது ஐம்புலன்களை மட்டும் அல்லாமல் அனைத்து புலன்களையும் அடக்கும் சக்தி கொண்ட தண்டம் ஆகும்.

வெள்ளைவெளீர் என பளிச்சிட்ட அவளது குதிரை யாராலும் என்றுமே வெல்ல முடியாத சக்தி மிக்க குதிரையாக இருந்ததினால் அந்த சக்தியை குறிக்கும் சொல்லான *அபராஜிதா* என்ற பெயரை அந்தக் குதிரை பெற்றது.🦄
Kousalya said…
அற்புதம் அற்புதம் அற்புதம்...ஜய் ஶ்ரீ கிருஷ்ணா...பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹
Kousalya said…
மிகவும் சரியாக சொன்னீர்கள்...
ravi said…
🌹🌺 *'ஓ... கிருஷ்ணா... "என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்ட அக்னி பகவான் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.

🌺தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.

🌺அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும்.
ravi said…


🌺எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

🌺அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன.

🌺"அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.

🌺இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, ஓ... கிருஷ்ணா... "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான்.
ravi said…
🌺கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான்.

🌺அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

🌺அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார்.

🌺அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.
ravi said…
🌺அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது.
பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.

🌺அகமும் புறமும் குளிரும் வண்ணம் தர்மம் செய்து ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் அவன் அருள் பெறலாமே...🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌺🌹Oh ... Krishna 'Save me'...appealed by Agni Bhagavan - Simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹 In the past, they performed the Swetaki Yajna continuously for 12 years.

🌺Continued ghee caused Agni Devan to suffer from depression.

🌺The only way to reduce body fat is to destroy a forest and eat that fire.

🌺 So Lord Agni chose the Kandava forest.

🌺The monsters, deadly beasts, plants and tame animals in the forest appealed to Varuna to save them from the destruction of Agni Devan.

🌺 "Agni I will keep you from doing anything 'said Varun.

🌺Knowing this, Agni ran to Krishna and said, "Oh, Krishna ... Varuna is raining heavily so I can not destroy the Kandava forest. Save me."
ravi said…
🌺Krishnan looked at Arjuna. Archunan fired a barrage of arrows to cover the sky and build a container.

🌺Then Agni Devan tried to burn the forest with his seven tongues.

🌺Then Krishna said, "You have only 21 days left. Satisfy your hunger within that '.

🌺Agni says that those 21 days when Agni destroyed the Kandava forest and quenched her hunger are called Agni Star Day and Kathiri Veil.

🌺It is good to worship Murugan and Meenakshi Amma on Agni Star Day.
Worship of Durga of Parani and Brahman of Rohini and worship of Agni, the deity of Krishna, will bring good fortune.
ravi said…
🌺Do you worship Lord Krishna by giving charity in cold color inside and outside, can he get grace in the scorching sun ...
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * 🌹🌺
ravi said…
​​துன்ப காலங்களில் கடவுள் ,,,

ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான்.

அது அவன் வாழ்க்கைப் பயணம்.

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம்.

சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக் கேட்டான்.
ravi said…
"என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான்.

சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன.

சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.
ravi said…
கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான்.

அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.

அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து

ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது.

கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.
ravi said…
கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள்,
துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?"

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை.

உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை.

இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன்.

அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை...."

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.
ravi said…
குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப் படுவதில்லை.

கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல

கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை.

சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள்,
அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள.

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து,
ravi said…
அவை இறையருளால் வராமல் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது.

கடவுள் கணக்கு சொல்வதில்லை.

எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது.

எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை.

அவற்றில் சில நாம் சம்பாதித்தவை.

நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வர வழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.
ravi said…
மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள்.

நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே,
அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே
நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம்.

அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை.

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது.

இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவம் அடைவதும் சாத்தியமல்ல.
ravi said…
உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை.

கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள்.

குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில்

குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம்.
ravi said…
குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல.

குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம்.

குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள்.

கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.

இனி கஷ்ட காலங்கள் வரும் போது
கடவுளை திட்டாதீர்கள்.

அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.

கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள்.

உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள்

உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்.

முடிவு கண்டிப்பாக இனிமையாகும் ,,,
1 – 200 of 204 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை