அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 75 to 80 பதிவு 62
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 75 to 80
பதிவு 62👌👌👌
நான் பட்டரே வணக்கம் ... ஒரு சந்தேகம் .. வரக்கூடாதுதான் ஆனால் வந்து விட்டது .. தாங்கள் கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டும்...
பட்டர் சொல் ... முடிந்தால் சொல்கிறேன்
நான்
அம்பாளுக்கு பட்டுப்புடவை ஏன்?
பூஜைகள் செய்து இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்?
கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி
இறைவனின் சிலையை, படத்தை துடைத்து, அபிஷேகம் பண்ணி, பூவாலும், சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் செய்கிறோம்?
அதுமட்டும் இல்லாமல் பகவான் பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் பெரிய அளவில் ஏன் அலங்காரம் செய்கிறோம்?
இறைவன் நம்மை கேட்டானா ?
என்னை அலங்காரம் செய் என்று...
இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா இல்லையே...!
பின் எதற்கு இந்த அலங்காரம்?
*பட்டர்* ஒரு கேள்வி என்று பல கேள்விகள் கேட்டுள்ளாய் .. சரி விடை ஒன்றுதான் .. 🙌🙌🙌
பட்டர்
மனித மனம் அலைபாயக் கூடியது.
ஒரு இடத்தில் நிலைத்து நில்லாதது.
அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும்.
ஆனால் மனக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதில் வருவது இல்லை.
முதலில் மனதை ஒன்றின் மேல் பதிய வைக்க வேண்டும்.
மனம் அதில் லயிக்க வேண்டும்.
அதிலேயே மனம் கலக்க வேண்டும்.
அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம்.
ஐம்புலன்களான கண்ணுக்கு தீனிபோட அம்பாளின் பட்டுப்புடவை,
வண்ண வண்ண மாலைகள்,
நகைகள்.
மூக்குக்கு வாசனையாக சாம்பி்ராணி, கற்பூரம், சந்தனம், பன்னீர்
செவிக்கு தீனி போட மணியோசை, வேதகோஷங்கள், பாசுரங்கள், பாராயணங்கள்
வாய்க்கு சுவையாக புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல் நிவேதனங்கள்
மெய்யில்லாத மெய்யான நம்முடைய உடலுக்கு வேலைதர பிரதட்சணம் செய்வதற்கு பெரிய ஆலயங்கள் என்று கட்டி வைத்து, ,
இஷ்டப்படி மனத்தை இழுத்துச் செல்லாதவகையில் ஐம்புலன்களை அடக்கும் வழியைக் காட்டி இருக்கிறார்கள்....🙏
நான் ..
எவ்வளவு சுலபமாக எனக்கே புரியும் படி சொல்லிவிட்டீர்கள் .
அபிராமியின் அருள் பெற்றவர் என்றால் சும்மாவா ? 💐💐💐
பட்டர் பறந்து சென்றார் எந்த புகழ்ச்சிக்கும் அடிமை ஆகாதவர் ...🙌🙌🙌
Comments
*மஹா பெரியவா அருள்வாக்கு*
*மனிதனைப் பாவத்தில் தள்ளிவிடும் சக்தி ஆசைக்கும், கோபத்திற்கும் உண்டு என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை.
* நம் கோபத்தால் எதிராளியின் குணத்தை மாற்ற முடியாது. இருவருக்குமிடையே மேலும் கோபம் வளரத் தான் செய்யும். கோபத்தால் ஒருவரைப் பணியச் செய்வதில் நமக்குப் பெருமையில்லை. அன்பால் குறையைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே சிறந்தது.
* பெரும்பாலும் கோபம் கொள்வதால் நமக்கு நாமே பெரும் தீங்கு செய்தவர்களாகிறோம். ஆத்திரம் கொள்வதால் நம் உடலும் மனமும் பலவீனமடைகின்றன.
* அன்பாக இருப்பதே நம்முடைய இயல்பான குணம். அன்பால் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் ஆனந்தம் உண்டாகும். இதையே அன்பே சிவம் என்று குறிப்பிட்டனர்.
*- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்*🙏🙏