பச்சைப்புடவைக்காரி-உத்திரமேரூர் முருகன் 369 - 51வது படை
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 51வது படை
உத்திரமேரூர் முருகன்
369 👍👍👍💥💥💥
1🏆🏆🏆
இளையனார் வேலூரிலிருந்து உள்கிராமச் சாலையில் திரும்பிச் சென்றால் அங்கிருந்து உத்திரமேரூருக்கு எளிதாகச் செல்ல முடியும்.
உத்திரமேரூர் பஸ் ஸ்டாண்டை அடைந்ததுமே ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாளின் கோவில் கோபுரம் நம் கண்ணில் படுகிறது.
இக்கோவிலின் வலது புறத்தில் பாலசுப்ரமணிய சுவாமியின் கோவில் அமைந்துள்ளது.
8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் ஜெயம் கொண்ட சோழனால் கட்டப் பெற்றது.
மிகவும் பரந்த வெளியும், விசாலமான வெளிப் பிரகாரமும் கோவிலின் பழமைக்குச் சான்று.
ஆஜானுபாகுவாக சுமார் 6 அடி உயரத்தில் பாலசுப்ரமணியர் காட்சி அளிக்கிறார்.
அவருக்கு ஐராவதம் வாகனமாக உள்ளது சிறப்பு. வினாயகர், சிவன், ஸ்கந்தர் , நவக்கிரகங்களின் சன்னிதிகள் உள்ளன.👍👍👍
4🥇🥇🥇
அவைகளையெல்லாம் முருகப் பெருமான் தவிடு பொடியாக்கி சிவபெருமான் தந்த வாளால் மலையனையும் வெட்டி வீழ்த்தினார்.
மலையன் தலை விழுந்த இடம் *மலையன் களம்* என்றழைக்கப்பட்டு தற்போது *மலையான்குளம்* என்றழைக்கப்படுகிறது.
மாகறன் அழிக்கப்பட்ட இடம் இன்று *மாகறல்* என்று அழைக்கப்படுகிறது.
இரு அசுரர்களையும் அழித்த முருகப்பெருமான் தனது படை பரிவாரங்களுடன் கடம்பர் கோயிலுக்குச் சென்று, திருக்கடம்பநாதருக்கு எல்லா அமைப்புகளும் கொண்ட ஆலயம் அமைத்தான்.
அப்போது அவர் முன்பாக சிவபெருமான் தோன்றி, “குமாரனே. எமது ஆணையை ஏற்று காசிப முனிவரது நல் தவத்தைக் காத்திட நீ உனது வேல் ஊன்றிய இந்த இடத்தில் உன்னைக் காணவரும் பக்தர்களுக்கு நல்வரங்களைத் தந்திட வேண்டும்” என்று கூறி அருளினார். 👍👍👍
5👏👏👏அவ்வாறே முருகப்பெருமான் திருக்கோயில் கொண்ட தலம்தான் “இளையனார் வேலூர்” என்ற இடத்தில் அமைந்திருக்கும் பாலசுப்ரமணியர் திருக்கோயிலாகும்.
இக்கோயிலில் வடகிழக்கு மூலையில் முருகப்பெருமான் தரிசிக்கும் வண்ணமாக சிவலிங்க மூர்த்தியாக கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார்.
வடமேற்கு மூலையில் தனி சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலாவடிவில் தரிசிக்கலாம்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளையுடைய இராஜ கோபுரமும், வெளிப்பிரகாரத்தில் இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும், வலதுபுறத்தில் வசந்த மண்டபமும் அமைந்திருக்க நடுவில் பலிபீடம், கொடிமரமும், அதைத் தாண்டி இந்திரன் தந்த ஐராவதத்தை முருகன் வாகனமாக்கிக் கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக யானை வாகனமும் அமைந்திருக்கின்றன.
உள்மண்டப முகப்பில் முருகனின் அழகிய திருக்கல்யாணக் காட்சி மனதைக் கவர்கின்றது.
கருவறைக்கு முன்பாக உள்ள தரிசன மண்டபத்தின் உட்புறச் சுவரில் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பெற்று அதில் சித்தர்கள் பலரின் வடிவை அமைத்திருக்கிறார்கள்.
6👏👏👏
கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமம் தாங்கி, சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார்.
அவர் முன்புறம் வேலும், சேவற் கொடியும் இருக்க பாதத்தினருகே மயில்வாகனம் உள்ளது.
முருகனுக்கு இடப்புறமாக கஜவள்ளி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக முருகன் தலத்தில் சன்னதி கொண்டிருப்பது ஆபூர்வக் காட்சியாகும்.
இந்த வேல் அமைந்திருக்கும் இடத்தில் தான் முருகன், காசிப முனிவரின் தவத்துக்கு இடையூறு நேராத வண்ணம் காத்தருள வேலை நிறுவியதாகக் கூறப்படுகிறது.
இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாதது.
இத்தலத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரைப் போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
உள் பிராகாரத்தில் ஏகாம்பரநாதர், பெருதண்டமுடையார், திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும், வேல், வேலாயுத மூர்த்தியாக காட்சி தரும் சன்னதியும் உள்ளன.🥇🥇🥇👍👍👍
8🥇🥇🥇
உத்திரமேரூர்: தாரகி
சூரபத்மனின் இளைய சகோதரர் தாரகாசுரன்.
அவன் தனது மாய சக்தியினால் எதிர்ப் படையினரை அவர்கள் மூழ்குவது போன்ற தோற்றத்தை அவர்கள் மனதில் கொடுத்தான்.
முருகனின் தேவர்களின் படையில் இருந்த நவ வீரர்கள் அவன் இருந்த மலைப் பிரதேசத்தில் நுழைந்தவுடன் அவர்களை மயக்கி அவர்களையும் நினைவு இழக்கச் செய்தான் அந்த அசுரன்.
அதைக் கேட்டறிந்த முருகன் உடனே சற்றும் தயங்காமல் தன்னுடைய ஞான வேலினை ஏவி தாரகாசூரனை ஒரேடியாக அழித்தார்.
அதை *கேருக்கு பேயரிய குன்றம் கொன்றான் முருகன்*” எனக் குறிப்பிட்டார்கள்.
குறுக்கு என்றால் கொக்கு என்று பொருள்.
இந்த கோலத்தில் உள்ள முருகனுக்கு ஆறு முகங்களும்,பன்னிரண்டு கைகளும் உள்ளதாக குமார தந்திராவில் கூறி உள்ளார்கள்.
இடது கை ஒன்றில் வரத முத்திரை இருக்க மற்றவற்றில் வஜ்ராயுதம், அம்பு, கேடயம், கொடி ( செடியில் உள்ள கொடியைப் போன்றது) மற்றும் தெய்வ உருவம் இருக்க, வலது ஒரு கையில் அபய முத்திரை மற்றவற்றில் சக்தி, உலக்கை, கயிறு மற்றும் செங்கோல் போன்றவை உள்ளன.
இந்த தாரகாரி உருவம் விராலிமலை மூலஸ்தானத்தில் உள்ளது.
தணிகைப் புராணமும் குமார தந்திராவில் கூறப்பட்டு உள்ள உருவையே ஆமோதித்துள்ளது.
இந்த உருவம் செங்கல்பட்டில் உள்ள உத்திரமேரூர் முருகன் ஆலயத்தில் உள்ளது...👍👍👍
தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான …… தனதான
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள் …… சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள் ……
மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி …… யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூற …… அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக …… முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி …… வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற
உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண …… மயிலேறி
நளின வுபய கரவேலை
முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் …… பெருமாளே🥇🥇🥇🦚🦚🦚
அம்மா 6 படை வீடுகள் என்று ஆரம்பித்து இன்று 50வது படை வீட்டைப்பார்த்துக்கொண்டிருக்கிறோம் ...
ஒன்று கேட்டால் ஒன்பது தருபவன் முருகன் என்பது எவ்வளவு உண்மையான வாசகம் ...
நினைத்து பார்க்க வில்லை தாயே 50 படைவீடுகள் உன் அருளால் தரிசிப்போம் என்று ...
ரவி .. மனமே ஒரு படைவீடு ... அங்கே இருப்பதுதான் உண்மையான முருகன் ...
அவன் விரும்பித் தங்குமிடம் நல்லவர்களின் உள்ளங்கள் எனும் குன்றுகள் ...
ஒடிவந்து அவன் வள்ளி தெய்வயானையுடன் அங்கே அமர்ந்துக்கொண்டு ஆட்சி செய்வான் .. *இது சத்தியம்* . 👍👍👍🥇🥇🥇
இந்த பிரபஞ்சத்தையே தனது கர்ப்பத்தில் கொண்டவள். தாய். லோக மாதா. விஸ்வமாதா.
*638 ஸ்வர்ணகர்பா*
தங்கமயமானவள் அம்பாள். பொன்னம்மா. 17ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு வேதாந்த நூலான வேதாந்த ப்ரபாஸா என்ன சொல்கிறது தெரியுமா?
“ப்ரம்மா விஷ்ணு சிவனை விட வேறான முதன் முதலாக ஜனித்தவன் ஹிரண்யகர்பன்.
பஞ்ச பிராணனை கொண்ட ஜீவன். அதிலிருந்தே, அவனிலிருந்தே பிரபஞ்சம் உருவானது.
சுவர்ணா என்கிற வார்த்தையில் *சு:* அற்புதமான என்ற அர்த்தம் கொண்டம்.
*ஆர்ணா* : மந்த்ர அக்ஷரங்கள்:
ஆகவே சுவர்ணா என்றால் அம்பாள் தனது கர்ப்பத்தில் புனித மந்த்ராக்ஷரங்களை உருவாக்கியவள் என்ற அர்த்தம் கொண்ட நாமம் *ஸ்வர்ணகர்பா*:
👍👍👍👌👌👌
*639 உவரதா* -
தவறுசெய்தவர்களை, செய்பவர்களை தண்டிப்பவள் .அம்பாள்.
செயல்களால் மட்டுமா தீயவை நிகழ்கின்றன. எண்ணத்திலேயே எத்தனையோ கோடி தவறுகள் தீயவைகள் உருவாவதால் அவற்றையும் நீக்குபவள் அம்பாள்.👌👌👌
*640 வாகதீஶ்வரீ*
சொல்லின் செல்வி. வார்த்தையின் தாய். சொல்லரசி.
சௌந்தர்ய லஹரி 100வது ஸ்லோகம் ''அம்மா, நீ சப்தமாதா, இதெல்லாம் உன் நாவிலிருந்து எழுந்தவை அல்லவா?'' என்று முடிகிறது.👌👌👌💐💐💐
===========
Comments
2. 7 வது படையாக *மருதமலை - கோயம்பத்தூர்*
3. 8 வது படையாக *திருசெங்கோட்டு முருகன் - திருச்செங்கோடு*
4. 9 வது படையாக *செல்வமுத்து குமரன் - வைத்தீஸ்வரன் கோயில்*
3. 10 வது படையாக *வயலூர் - திருச்சி*
4. 11.வது படையாக விராலிமலை - *திருச்சி -மதுரை வழி*
5. 12 வது படையாக *குக்கே சுப்ரமணியசுவாமி - கர்நாடகா*
6. 13 வது படையாக - *மோபி சுப்பிரமணியர் கோயில் - ஆந்திரா*
8. 15 வது படைவீடாக *மலேஷியா பத்துமலை குகை முருகன்* 🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
9. 16வது படை வீடாக *எட்டுக்குடி முருகன் - திருவாரூர்*
10. 17வது படை வீடாக *அனுவாவி சுப்ரமணிய சுவாமி - கோயம்புத்தூர்*
11. 18வது படை வீடாக *ஸ்கந்தாஸ்ரமம் சேலம்*
10. 19வது படை வீடாக *ஊத்து மலை முருகன் - சேலம்*
11. 20வது படை வீடாக - *சிங்கார வேலன் சிக்கல் நாகப்பட்டினம்*
12. 21வது படை வீடாக *திருமுருகன் பூண்டி*
14. 23வது படை வீடாக *வள்ளி மலை முருகன்*
15. 24வது படை வீடாக *சிவன் மலை காங்கேயம்*
16. 25வது படை வீடாக *கந்தன்குடி ..திருவாரூர்*
18. 27வது படை ... நல்லூர் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணம் 👌👌👌
19. 28வது படை ...வேலுடையான்பட்டு முருகன்💐💐💐
20. 29 , 30 , 31 வது படை -மூன்று படை வீடுகள்👌👌👌
22..33வது படை - வடபழனி
23. 34வது படை கந்தர் மலை முருகன்
25. 37வது படை ... கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி
26. 38வது படை ... நங்கநல்லூர் சுப்ரமணிய சுவாமி
28. 40வது படை ...பத்ரகிரிமலை
சிவ சுப்ரமணியன்
29. 41வது படை - திருமயிலாடி முருகன்
31. 43வது படை *கழுகு மலை முருகன்* 💐💐💐
*திருவிடைக்கழி தெய்வானை சமேத முகப்பெருமான் கோவில்*-
33. 45 வது படை
*அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில், பேளுக்குறிச்சி -நாமக்கல்*.
34 *46வது படை நீலகிரி ஜலகாம்பாறை முருகன்*
35. 47வது படை
*சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் கும்பகோணம்*💐💐💐
*அருள்மிகு பாலமுருகன் கோயில், ரத்தினகிரி*
*தீராத வினைகளை தீர்த்து வைக்கும்*
*திருமலை முருகன்*
*உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன்*👍👍👍
மலைமேல் முருகன்... மலையடிவாரத்தில் சிவன்...
இல்லம் தேடிவரும் இறை தரிசனம்!
*மலையக்கோயில் முருகன் தலம்.*👌👌👌
பகையை வெல்லும் 52 வது படை - *💐💐💐🥇🥇🥇🏆🏆🏆
*மிட்டாய் முருகனும் மூலிகை மலையும் : குவலயம் போற்றும் குழந்தை வேலப்பர்*
👍👍👍
ஆத்ம சக்தியை உணர அத்தியாவசியம் த்யானம். ஸ்வேதஸ்வதர உபநிஷத் (I.ii.3) “ரிஷிகள் ஆழ்ந்த த்யானத்தில் ஈடுபட்டு பிரம்மாண்டமான பர ஒளி மயமான ஒரு சக்தி பிரபஞ்சத்தை உருவாக்குவதை அறிந்தனர்.
பரமாத்மாவை மாயை திரையாக பிரபஞ்சம் பூரா சூழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தனர். .👌👌👌
ஓரிடத்தில் இருப்பவள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதவள் அம்பாள்.
எங்கும் நிறைந்தவள். பிரம்மத்தின் உருவம். அவளை தியானத்தில் அறியலாம்.
*643 ஜ்ஞானதா* -
தியானத்தின் மூலம் ஞானத்தை அள்ளி வாரி வழங்குபவள் அம்பாள்.
தன்னை, பிரம்மத்தை அறிய புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவைத் தருபவள்.
சிவ சூத்ரம் (I.2) '' ஞானம் பந்தா'' என்பது குறைந்த ஞானம் ஒரு எல்லைக்குள், கட்டுப்பாட்டுக்குள் உள்ளதை தான் குறிக்கும். கட்டுப்பாட்டில் இருப்பது. ப்ரம்மஞானம் எல்லையற்றது.👌👌👌
மிகவும் அழகான இயற்கை எழில் மிகுந்த இடம்🌷🌷🌷🌷🌷🌷🌷
*சந்தக்த* = எரிந்த
காம =
*காமதேவன்*-மன்மதன்
*சஞ்சீவன* = புனர் ஜீவனம் - மீண்டு உயிர்த்தெழுதல்
*ஔஷதி*= மருந்து
சிவன் நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த மன்மதனை உயிர்த்தெழுப்பியவள்.💐💐💐💐👍👍👍
ஒளி வீசும் முகம் ... பொன் நகை நாணும் புன் சிரிப்பு ...
இருளை மதியாக்கியவள் பெற்ற மகன் அல்லவா ... அந்தாதி தந்த அற்புத பேழை அல்லவா ?
அவரிடம் ஒரு கேள்வி தொடுத்தேன் ...
அணுகாதவர்க்கு பிணி யானவள் அவளே
பிணிக்கும் மருந்தாய் எப்படி இருக்க முடியும் ?
சிரித்தார் பட்டர் ... சிரிப்பில் பட்டர் போல் உறுகினேன்...
அர்த்தம் அப்படி அல்ல ...
காமன் திமிர் கொண்டு ஈசனிடம் தாய் கொடுத்த திறமையை காண்பித்தான் ..
பக்தியால் மட்டும் வெல்லக்கூடியவனை வெறும் அகத்தால் வெல்ல நினைத்தான் ...
பஸ்மமானான்....
பக்தியால் அணுகாதவர்க்கு அவள் பிணி ....
ரதி அழுதாள் புரண்டாள் தரையில் ...
மன்மதன் உணர்ந்தான் தவறை ...
உருவாக்கினாள் மீண்டும் அவனை ...
*பிணிக்கு மருந்தானாள்* ....
அவர் காலில் விழுந்தேன் ...
என் அறியாமை ஆமையாக ஓடிப்போய் கடலில் குதித்தது ... 🐢🐢🐢
அகம் மகிழ்ந்தாள் அன்னை ...
அமுதம் இங்கு மட்டும் அல்ல
காஞ்சியிலும் உண்டு ...
மடம் சென்று பார் ... மகேசன் அங்கே தண்டம் கொண்டு நிற்பதை என்றாள் ...
நடமாடும் தெய்வமே அங்கே அந்தாதியாய் அமர்ந்திருக்க கண்டேன் ..
கொண்டேன் ராமன் கொண்ட புன்னகை
அனுமன் , *கண்டேன் சீதையை* என்று சொன்னவுடன் ... 💐💐💐👌👌👌
பாடல் எண் : 11
*திருச்சிற்றம்பலம்*
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவல்ஆ ரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே
நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும் , திருமாலும் அச்சங் கொள்ளும்படி , அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய , அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும் , மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள் , நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி , தேவர்களுக்கு அரச ராகும் நிலையை அடைவர் .
` மூப்பும் ` என உம்மை கொடுத்துப் பிரித்து , நடலையை வேறு ஓதினமையால் , அஃது இறப்பாயிற்று . நடலை - துன்பம் . அஃது அப் பெருந்துன்பத்தைக் குறித்தது . ` அரசு ` என்றது , அரசராகும் தன்மையை என்க .
But what are we mortals doing in service to God? We are discriminating His creations by caste, religion and wasting time in temples doing idolatry propiations with darkness and selfishness in mind.
தேன்என இனிக்கும் திருவருட் கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான்என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
உன்திருக் கோயில்வந் தடைந்தால்
ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ.
*திருச்சிற்றம்பலம்*
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசினி ,
ஸ்ரீ வணங்கும் ஸ்ரீ ...
ஸ்ரீ தனை அமுதமாகிய்யவள் சிரித்தாள் எனைப் பார்த்து
என் அம்மா நீ ஏனம்மா சிரிக்கிறாய் என்றேன் ...
ஒன்றுமில்லை ... நீயும் பிறர் போல நடை பாதையில் இருக்க ஆசை ப்படுகிறாய் ..
பாதை அது குழி குண்டு என்கிறாய் ...
சாலை அதில் பிறர் போல வாழ நீயும் வரம் கேட்கிறாய் ...
வீடு சேர விருப்பம் இல்லை ...
விடுதலை வேண்டும் என்ற எண்ணம் இல்லை ...
தாயே புரியவில்லை என்றேன் ...
புரிந்துகொண்டால் புண்ணியம் பெறுவாய் ...
சொல்லி விட்டு மறைந்து போனாள்
புரிந்து போனது அபிராமி அந்தாதி படிக்கையிலே...
மண்ணளிக்கும் செல்வம் வேண்டேன் ...
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி தரும் வீடும் கேட்பேன்
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியிடம் இனியே..
சாலை வாழ்க்கை இனி வேண்டேன் .. வீடு போய் சேர வேண்டும் முத்தி தரும் வீடன்றோ அதுவே ..👍👍👍🏆🏆🏆.
.
கீதை காட்டும் பாதை – 6
-
என்.கணேசன்
.
கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் முரண்பாடாகத் தோன்றும் உபதேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.
தன் ஆரம்ப துக்கத்தையும், குழப்பத்தையும் மறந்து ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தில் லயித்துப் போயிருந்த அர்ஜுனன் அடுத்ததாக ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் தொடர்ந்து சொன்ன 18 சுலோகங்கங்களில் கீதையின் முழுமுக்கிய சாராம்சத்தையே அடக்கி விடுகிறார். அர்ஜுனன் கேள்வியையும், ஸ்ரீகிருஷ்ணர் பதிலையும் இனி பார்ப்போமா?
பாதை நீளும்..
A Good Day to Recollect
his 3 Heart Touching
Statements:
(1) Nothing is Permanent
in this World,
not even our
Troubles.
(2) I like Walking in
the Rain,
because
NoBody can see
my Tears.
(3) The Most Wasted
Day in Life is the
Day in which we
have not Laughed.
LIFE is to Enjoy with
Whatever you have with
You,
Keep Smiling...!
If you feel STRESSED,
Give yourself A Break.
Enjoy Some..
Icecream/ Choclates/
Candy/ Cake...
Why...?
B'Coz...:
STRESSED
backwards spelling is
DESSERTS...!!
Enjoy...!
Very Beautiful lines
Pls Store it.
ONE Good FRIEND
is equal to ONE
Good Medicine...!
Likewise
ONE Good
Group is equal to ONE
Full medical store...!!
Six Best Doctors
in the World....:
1.Sunlight,
2.Rest,
3.Exercise,
4.Diet,
5.Self Confidence &
6.Friends
Maintain them
in all
stages of Life and
enjoy healthy life...!
If you see the Moon...
You see the Beauty of
God.....!
If you see the Sun...!
You see the power of
God....
And....
If you see the Mirror,
You see the
Best
Creation of GOD...!
So,
Believe in YOURSELF.
We all are Tourists &
God is our Travel Agent
Who has already fixed
all our Routes,
Reservations
& Destinations
So....
Trust him &
Enjoy the
"Trip" called LIFE...!!
Life will never
come Again.!!
Live Today..!
You May Share this to All People who
Are Important to You..!!
🙏
Bhagavan: Bhagavan is always with you, in you. The Self in you is Bhagavan. It is that you should realize.
Devotee: But I feel the urge to give up all attachments and renounce the world as a sannyasin.
Devotee: But single-minded devotion to God may not be possible unless one leaves the world.
Bhagavan Sri Ramana: He who renounces when he is not yet ripe for it only creates new bonds.
Devotee: Is not renunciation the supreme means of breaking attachments?
Bhagavan: When you really feel that equal love for all, when your heart has so expanded as to embrace the whole of creation, you will certainly not feel like giving up this or that; you will simply drop off from secular life as a ripe fruit does from the branch of a tree. You will feel that the whole world is your home.
………….
திருச்சி மலைக்கோட்டை போகிற வழியிலுள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில் ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ பழைய இதழ்களின் பைண்ட் வால்யூம் ஒன்று கிடைத்தது. பைண்டிங் வால்யூமை இரவெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன்
.
அப்போது இரண்டு பேர் என் நினைவில் வந்து போனார்கள்.
ஒருவர் எனது தாத்தா. இன்னொருவர் என் கணித ஆசிரியர் ஞானசுந்தரம்.
இருவரும் இல்லஸ்ட்ரேடட் வீக்லியின் தீவிர வாசகர்கள்,
.
.
.
கணித ஆசிரியர் ஞானசுந்தரம், வீக்லியைப் பற்றி கூறும்போது, ‘அது காலேஜ் படிக்கும் பெண்ணைப் போல கவர்ச்சியானது; பார்க்கவும் படிக்கவும் சுவையூட்டுவது’ எனச் சொன்னது நினைவில் இருக்கிறது
.
.
‘மாப்பிள்ளை… சின்ன விஷயத்துக்காக இப்படியா கோபப்படுவது’ எனக் கேட்டதற்கு,
‘எதுய்யா சின்ன விஷயம்?
புஸ்தகத்தோட மதிப்பு உனக்கு என்னத் தெரியும்?
என்னைக் கேட்காமல் புத்தகம் எடுத்துட்டுப் போனது திருட்டுத்தனம். அப்படி ஒரு ஆளோட உறவே எனக்கு வேணாம்யா’
என பொங்கி எழுந்துவிட்டார்
.
‘சிம்மக்கல்ல ஒரு பெரியவர் செத்துப் போயிட்டார். அவரு வீட்டுல இருந்த புத்தகங்களை எடைக்குப் போட்டார்கள். அதுதான்’ என்றார் புத்தக வியாபாரி
.
ஞானசுந்தரம் இறந்த பிறகு, இந்தப் புத்தகங்களை வைத்துக் காப்பாற்ற வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை. முதுமையில் மனிதர்கள் வாழ்வதற்கே வீட்டில் இடம் தர மறுக்கும்போது, புத்தகங்களுக்கு யார் இடம் தரப் போகிறார்கள்?
அவரது மரணத்தோடு அவரது புத்தகங்கள் வீதிக்கு வந்து விட்டன. கொட்டிக்கிடந்த அந்தப் புத்தகக் குவியலில் இருந்து ‘வுதரிங் ஹைட்ஸ்’ நாவலை மட்டும் எடுத்துக் கொண்டேன். அந்தப் புத்தகத்துக்காகத்தானே அவர் தனது மைத்துனரின் உறவையே முறித்துக்கொண்டார்!
.
.
.
.
.
.
‘
தமிழ்ச் சூழலில் தீவிரமான புத்தக வாசிப்பாளர்கள் 5 சதவீதம் கூட இருப்பார்களா?
.
.
ஆனால், எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது
.
யாரோ ஒருவருக்கு அது வாசித்து முடித்த பழைய புத்தகம். இன்னொருவருக்கு அது இப்போதுதான் வாங்கியுள்ள படிக்காத புதியப் புத்தகம். உறவுகளும் அப்படித்தான் தொடர்கின்றன!
.
(நூல்: வீடில்லா புத்தகங்கள், எஸ் ராமகிருஷ்ணன்)
முன்னோர்களின் அசத்தல் அறிவு.
☘️தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா மூழுவதும் கோயிகள் நிறைந்து காணப்படுகின்றன. பலரின் உழைப்பை வைத்து இறைவனின் அருளைப் பெற அந்த காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் பிரமாண்டத்துடன் மனதை கவரும் விதமாகவும், மனதை சாந்தப்படுத்தி அருளும் வல்லமையுடன் கட்டப்பட்டுள்ளது.
புறாக்கள் ஏன் வளர்க்கப்படுகிறது?
அப்படிப் பட்ட சிறப்பு வாய்ந்த கோயிகளை பராமரிப்பது மிக எளிதான விஷயம் அல்ல. கோயில் கோபுரங்களில் பல சிற்பங்களுடன் கூடிய கலை நயமிக்கதாக கட்டப்படுகிறது.
☘️அப்பட்டிப்பட்ட கோபுரத்தை பாதுகாக்கும் பொருட்டு புறாக்கள் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக புறாக்கள் கூடுகட்டி வாழத்தெரியாது என்பதால் கோயில்களில் தஞ்சமடைவது உண்டு.
புறாக்கள் கோயிலில் இருந்தால் சிலந்திகள் கூடு கட்டாது. அதனால் ஒட்டடை ஏற்படாது.
☘️அதோடு வீட்டின் பெரிய பிரச்னையாக இருக்கும் கரையான்கள் கோபுரத்தை தாக்காது. அப்படி கரையான் வந்தால் புறக்களுக்கு இரையாகிவிடும்.
அதே போல் மரங்களை துளையிடும் கரு வண்டுகள் கோயில்களை அண்டாது. அப்படி வந்தா அதுவும் புறாக்களுக்கு விருந்தாகிவிடும்.
☘️கோயில்
உறவுகளை இழந்து விட்டு அன்பை தேடுகிறோம்......
நம்மை நாமே இழந்து விட்டு நிம்மதியை தேடுகிறோம்.......
இருப்பதை தொலைத்து விட்டு இல்லாததை தேடுவதையே வாழ்க்கை என வாழ்கிறோம்.............!!
ஆன்மீக தேடல்
சிவபெருமான் உமையம்மையோடு திருவிளையாடல்
சிவபெருமான் உமையம்மையோடு திருவிளையாடல்
“ஒரு காலத்துல உமையம்மை காஞ்சிபுரத்துல, கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தாராம்.”
“அவங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு சொல்லிக் கொடுத்திருக்கீங்களே தாத்தா, பின்ன ஏன் அவங்க பூசை செய்யணும்?”
“நல்ல கேள்விதான்! உமையம்மை நம்மளை இந்த பூமிக்கு அனுப்பிச்சா மட்டும் போதுமா? எப்படி வாழணும்னு சொல்லிக் கொடுக்க வேண்டாமா.. அதைத்தான் நமக்காக அவங்க செஞ்சு காண்பிச்சாங்க…!”
“
“
“நாழின்றது ஒரு அளவு முறைம்மா. லிட்டர்ன்னு இப்ப சொல்றீங்களே அதைப் போல. இன்னிக்கு கணக்குல ஒரு நாழி நெல் என்பது சுமார் ஒன்றே கால் லிட்டர். ஆக, சிவபெருமான் உமையம்மைக்குக் கொடுத்தது, இரண்டரை லிட்டர் நெல்.…!”
“
“
“அறத்திற்கு அவ்வளவு சாதாரணமா விளக்கம் கொடுத்துட முடியாதும்மா. சுருக்கமாகச் சொல்லணும்னா நமக்கு மட்டும் எது நன்மைன்னு பார்க்காம, சமூகத்திற்கும் நன்மை கிடைக்கறதுமாதிரி வாழணும். காமாட்சி அம்மை அதன்படி 32 அறங்களைச் செய்தாங்கலாம்”.
“அப்ப அறங்கள் மொத்தம் 32 தானா?”
“அப்படியில்லைம்மா… இப்படியெல்லாம் அறங்கள் செய்யலாம்னு எடுத்துக்காட்டா 32 செய்தாங்களாம். அதன் அடிப்படையை புரிஞ்சிகிட்டு வாழ்ந்தோம்னா நம்ம வாழ்க்கையே அறவாழ்க்கையா ஆகிடும்.”
“ஏன் தாத்தா அறச்செயல்கள் செய்யணும்? நாம நம்மள மட்டும் பாத்துக்கிட்டா போதாதா…?
“வாழ்க்கையின்றது தனி ஒருவனைச் சார்ந்தது இல்ல. சமூகத்தையும் உள்ளடக்கியதுதானே. அதுமட்டுமில்லாம அறச்செயல்களை தொடர்ந்து செய்து வரும்போது அறமானது அன்பில் கொண்டுவிடும். அதற்கப்புறம் அன்பானது அருளிடம் கொண்டு சேர்க்கும். அருளிடம் சேர்ந்தால் அருள் தவத்தில் சேர்க்கும். தவமானது சிவத்தில் சேர்ந்துவிடும்.!”
“
“ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுவது, அவர்கள் ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுவது, ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுவது, ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுவது, பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் (குறைந்த பட்ச நகைகள்) அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுவது, பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மருந்தான கண்மை அளிப்பது, நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாக மருந்தளிக்கிறது, படிக்கிறவங்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி அவர்களுக்கு உணவு அளிப்பது, பசுக்களை தெய்வமாக பாவித்து அவற்றுக்கு உணவளிப்பது, சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு நல்ல உணவளிப்பது, சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குவது. அப்புறம்…..!”
“
“ஆமாம்மா..! அப்புறம் இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்வது, வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசியை தீர்ப்பது, ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளிப்பது, குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுவது! ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்ய உதவுவது, ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காப்பது, கோயிலுக்கு சுண்ணம் இடித்துக் கொடுப்பது, நோயில தவிக்கிறவங்ககளுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுவது…! பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்வது..! ”
“
“அகில உலகங்களையும் படைத்து, காத்து ஆட்டுவிக்கறவ நம்ம அம்பிகை அனைவருக்குமாகத்தான் கத்துக்கொடுத்துருக்காங்க. இன்னும் இருக்கு கேளு…, தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளிப்பது, அனாதைகள் மற்றும் பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுப்பது, தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருவது, காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுவது, தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுவது, வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைப்பது.”
“இயற்கை உபாதையைத் தணிக்க இப்பல்லாம் கட்டண கழிப்பிடமாக் கட்டி அதிலயும் காசு பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே தாத்தா ...”
“
“எங்கயும் விலகலம்மா..! இந்த புராணங்களெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருந்ததுன்னா நான் நேரடியா விஷயத்துக்கு வந்திருப்பேன்… தெரியல அதனால அடிப்படையில இருந்து சொல்ல வேண்டியிருக்கு.” என்றவர் “கேளுங்க…! வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுவது, அவற்றை பராமரிப்பது, நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுவது, ஆ உரிஞ்சு தறி நிறுவுவது : பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவவது, பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுவது மற்றும் எருதுகளை பேணுவது, பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுவது, கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காப்பது, வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுவது… இப்படி 32 அறங்களையும் காமாட்சி அம்மா செய்து காட்டியிருக்காங்க.
*********
“ஏன் திருமணத்துல காமாட்சியம்மன் விளக்கு கொடுக்கறோம்ங்கறதுதான டாபிக்... சொல்றேன். எப்படி அம்மை கம்பையாற்றில் வெள்ளநீர் வரும்போது சிவலிங்கத்தை தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாத்துனாங்களோ அதைப்போல திருமணமான புதுப்பெண், தன் கணவனையும் குடும்பத்தையும் எவ்வித இன்னல்களும் நேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.”
“ஓஹோ அப்படியா..!”
“திருமணத்தில தாலிகட்டி முடிந்ததும் புதுமணப் பெண்ணுக்கு பனைஓலை கூடையிலே நெல்லும் அதன்மேல காமாட்சியம்மன் விளக்கும் வைத்து ஏற்றி மணவறையை வலம் வரச் சொல்லுவாங்க.
“இதுக்கு மேல நான் சொல்றேன் தாத்தா ..! உமையம்மைக்கு எப்படி சிவபெருமான் நெல்லைக் கொடுத்து உழவைப்பெருக்கி அறச்செயல்களைச் செய்யச் சொன்னாரோ அதைப்போலவே, மணப்பெண்ணும் தன்னுடைய புகுந்த வீட்டில் முறையாக செல்வத்தைப் பெருக்கி, அறச்செயல்களைச் செய்யனும். சரிதானே..!”
“சரிதான். இப்ப சொல்லுங்க. காமாட்சியம்மன் விளக்குல என்னப் படம் இருக்கணும்..?”
“சிவபெருமானைப்போல பிறை நிலாவோடும் கிளி வைத்துக்கொண்டு கரும்போடு காமட்சி அம்மன் இருக்கணும்…! என அத்தனை பேரும் கோரஸாக கூறினார்கள்.
“இந்த நேரத்தில், கழுவி விளக்கப்பட்ட காமாட்சி அம்மன் விளக்கை உரிய மந்திரங்களைச் சொல்லி ஈசுவரி அம்மையார் ஏற்றினார். விளக்கின் ஒளியில் விளக்கிலிருந்த காமாட்சியம்மையின் புன்முறுவல் தெரிந்தது ; அந்த அறையிலிருந்த இருளும் விலகியது.
சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)
மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)
பாடல் : 07
அண்டத் தமரர் பெருமான்
ஆழியான் இன்றுஎன் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப்
பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகா வல்வைக்குங் கொலோ.
அண்டத்து அமரர் பெருமான் - இப்பேரண்டத்தின் பெருமான் , அமரர்களுக்கு எல்லாம் தலைவனான எம்பெருமான்
ஆழியான் இன்று என் மகளை - ஆழியைக் கொண்ட ஆழியான் இன்று என் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் - பண்டங்களைக் குறை சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பரிசுகள் கெடும்படி ஆள்வானோ ?
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து - அவளை அவன் இடத்திற்கு கொண்டு சென்று குடும்பம் நடத்தி
கோவலப் பட்டம் கவித்து - அவளுக்கு கோவலர் தலைவி என்ற பட்டம் கொடுத்து நல்லபடியாக நடத்துவானோ
பண்டை மணாட்டிமார் முன்னே - அன்றி , அவன் அவளுக்கு முன்னால் கட்டிய மனைவிமார் முன்னே
பாதுகாவல் வைக்கும் கொலோ - பத்தோடு பதினொன்று என்று பேசி அவளை வெறுமனே பாதுகாவல் வைத்து விடுவானோ ?
கொண்டு செலுத்துதல் என்ற சொல்லாடல் இன்றும் என் அம்மா சொல்வதுண்டு. ஓர் செயலை நல்லபடியாக நடத்துதலை அப்படி,கொண்டு செலுத்துதல் என்பார்கள். அது போல ஆண்டாளைக் கட்டிக்கொண்டு போய் நன்கு கொண்டு செலுத்துவானோ?குடி வாழ்ந்து அவளுக்கு கோவலர் தலைவி என்ற பட்டம் கொடுத்து கௌரவித்து அவளை நடத்துவானோ அன்றி அவனுக்கு இதற்கு முன் உள்ள மற்ற மனைவிமார்கள் முன்னே , இவளும் அவர்களோடு பத்தோடு பதினொன்றாக நடத்தி ,அவளைக் காவலாக வைப்பானோ ?
(எவரேனும் வீட்டில் தேவை இல்லாமல் இருந்தால் இது எதுக்கு எனும் கேள்வி எழும் போது ஆங்..காவலுக்கு என்று நக்கலாக இன்றும் பதில் அளிப்போரைக் காணலாம்..அது போல இப்பெண்ணைத் திருமணம் செய்து முறையாக குடும்பம் நடத்துகிறானோ அல்லது அங்கே சிறுமைப்படுத்துகிறானோ என்று மருமகன் மீது அச்சம் கொள்கிறார் )
நாச்சியார் திருமொழி!
திருமொழி விளக்கவுரைகள் !
பெரியாழ்வார் திருமொழி
பாடல் : 08
குடியில் பிறந்தவர் செய்யும்
குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய்
நந்தகோ பன்மகன் கண்ணன்
இடையிரு பாலும்வ ணங்க
இளைத்திளைத்து என்மகள் ஏங்கி
கடைகயி றேபற்றி வாங்கிக்
கைதழும் பேறிடுங் கொலோ.
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் - நற் குடியில் பிறந்தவர்கள் செய்யும் குணம் ஒன்றும் இல்லை அதற்குத் தக்க செயல்கள் செய்யாதவன்
அந்தோ நடை ஒன்றும் செய்திலன் - அந்தோ..உலகத்து நடைமுறை என ஒன்று உண்டு அதை எதுவும் செய்யாதவன்
நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் - நங்கையே ..நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க - இடை இருபக்கமும் வளைய
இளைத்து இளைத்து என்மகள் ஏங்கி கடை கயிறே பற்றி - உடம்பு இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி கடைய கயிற்றைப்பற்றி
வாங்கிக்கை தழும்பு ஏறிடும் கொலோ - இழுத்ததில் கைகளில் தழும்பு ஏறிடுமோ ?
பெரியாழ்வாரோ வேள்வி செய்யும் தொழில் கொண்டவர். ஆனால் கண்ணனோ ஆயர் குலம் . இப்படி சாதி விட்டு சாதி மணம் ஆண்டாளுக்கு. நம்ம சாதி வழக்கப்படி எதுவும் செய்யாம பொண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் கண்ணன். நடைமுறைச் சடங்குகள் எதுவும் செய்யல .
நங்கையே..நந்தகோபன் மகன் கண்ணனுக்கு வாக்கப்பட்ட என் மகளானவள் அவங்க வீட்டிலே ,தயிர் கயிறை இழுத்து இழுத்து கடையும் போது , அவளின் இடைகள் வளைந்து துவள, கைகள் கயிறை இழுத்ததில் தழும்பு ஏறி விடுமோ? (வேலை செய்தே பழக்கம் இல்லாதவங்க புதுசா ஒரு வேலையைச் செய்யும்போது கைல காப்பு வந்துடும்..அங்கங்க தழும்பு ஆகிடும்..ஒத்த மகள் என்று பெரியாழ்வார் ரொம்பச் செல்லமா வளர்த்துட்டார். புகுந்த வீட்டில் புதுசா வேலை செய்யப் போய், புள்ள என்ன பாடுபடுதோ..இடை இளைக்குமோ , கை தழும்பு ஏறுமோன்னு மனசு விசனப்படுது அவருக்கு.
நாச்சியார் திருமொழி!
திருமொழி விளக்கவுரைகள் !
பெரியாழ்வார் திருமொழி 03.08.09
பாடல் : 09
வெண்ணிறத் தோய்தயிர் தன்னை
வெள்வரைப் பின்முன் எழுந்து
கண்ணுறங் காதே யிருந்து
கடையவும் தான்வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
உலகளந் தான்என் மகளை
பண்ணறை யாப்பணி கொண்டு
பரிசற ஆண்டிடுங் கொலோ.
வெண்ணிறத் தோய்தயிர் தன்னை - வெண்மை நிறம் கொண்ட , தோய்த்த தயிரை
வெள்வரைப் பின் முன் எழுந்து - வெள்ளி முளைத்த பின் , கிழக்கு வெளுக்கும் முன்பதற்கு முன்னாக எழுந்து
கண் உறங்காதே இருந்து - தூங்காமல் இருந்து
கடையவும் தான் வல்லள் கொலோ - கடையவும் தான் வல்லமை பெற்றவளோ ?
ஒண் நிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் -
என் மகளை பண் அறையாப் பணி கொண்டு - என் மகளைஇது போன்ற தகுதியற்ற வேலைகளைச் செய்யச்சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பெருமை கெடும் படி ஆள்வானோ ?
வெண்மை நிறம் கொண்ட , தோய்த்த தயிரை ,(பால் தோய்த்து தயிர் ஆக்கி தயிர் தோய்த்து வெண்ணெய் ஆக்கி என்று வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறாள் ) வெள்ளி முளைத்த பின்னும் , சூரியன் உதிப்பதற்கு முன்னும் தூங்காமல் இருந்து இதே வேலையாகச் செய்வாளோ ?கடைந்து கொண்டே இருக்கும் வல்லமை பெற்றவளோ ?(என் பெண் அவ்வளவு வேலை செய்து பழக்கம் இல்லையே..வேலை செஞ்சு பழக்கம் இல்லாத பெண்ணை இடுப்பு ஒடிய வேலை வாங்கினா அவள் எப்படிச் செய்வாளோ ? )
ஒளிரும் தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய உலகளந்தான் , என் மகளை இது போன்ற சீரற்ற வேலை கொண்டு ,அவள் பெருமை கெடும் படி ஆள்வானோ?
பரிசேலோர் எம் பாவாய் எனப் பாடின பெண் ஆயிற்றே !
உமா கிருஷ் at 06:17
Share
1 comment:
Anonymous3 August 2017 at 19:25
Congatulations for that beautiful article. I wish you
all the best. You are a wonderful couple. I recomment you to visit Paxos & Antipaxos in Ionean Sea and Milos in Cyclades.
நாச்சியார் திருமொழி!
திருமொழி விளக்கவுரைகள் !
பெரியாழ்வார் திருமொழி
பாடல் : 10
மாயவன் பின்வழி சென்று
வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியி லும்புக்கு
அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத்
தண்புது வைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்ப்பத்தும் வல்லார்
தூமணி வண்ணற்கா ளாரே.
மாயவன் பின்வழி சென்று - மாயவன் கண்ணன் உடன் பின்னே சென்று
வழி இடை மாற்றங்கள் கேட்டு - செல்கின்ற வழி இடையில் அவன் சொல்கின்ற பேச்சுக்கு மாற்றில்லாமல் சொன்னது எல்லாம் கேட்டு
அங்குத்தை மாற்றமும் எல்லாம் - அங்கிருக்கும் ஆட்கள் சொல்வதையும் எந்த மறுப்பும் இல்லாமல் கேட்டு
தாயவள் சொல்லிய சொல்லைத் -வாழ்கின்ற மகள் பற்றி , தாயவள் சொல்லிய சொல்லைத்
தண் புதுவைப் பட்டன் சொன்ன - குளிர்ந்த வில்லிபுத்தூர் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் - தூய தமிழ்ப் பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர்கள்
தூமணி வண்ணற்கு ஆளாரே - தூய்மையான மணி வண்ணனுக்கு ஆளாவார்கள்..(அவனுக்கு நெருக்கமாவார்கள் )
இப்படி திருமணம் செய்தால் என்னவாகுமோ என்றெல்லாம் அம்மாவின் கவலைப் பேச்சுக்களைக் கேளாத மகள் பற்றி, குளிர்ந்த வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெரியாழ்வார் தாயாக தன்னை நினைத்துச் சொன்ன , தூய தமிழ்ப் பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்கள் ,தூய்மையான அந்த மணி வண்ணனுக்கு ஆள் ஆவார்கள்..அவனின் அன்பைப் பெற்று நெருக்கமானவர்கள் ஆவார்கள்.
பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்தில் உள்ள எட்டாம்பகுதி இனிதே நிறைவுற்றது!!!
மகளுக்காக, ஒரு தாயுமானவராக பெரியாழ்வார் எழுதிய இருபது பாடல்களும் இனிதே நிறைவடைந்தன. மகள் மீதான அன்பும் வாஞ்சையும் தோய்ந்த பாசுரங்கள் உங்கள் மனத்தையும் மயக்கி இருக்கும் என நம்புகிறேன்.
படித்தமைக்கு நன்றி !
When my daughter wed and left home, I felt a part of me left. With a daughter and a son, I was very happy in my life. When she
was in her teens, I felt as if she was my "physical extension" .
Two years after my daughter’s marriage, my son left for higher studies to US. Having experienced a child's separation once, I was better equipped emotionally. I became busy with various classes held in the city related to vedanta.
After a few years, he did come back and we got him married. He started living separately with his wife and we were also happy that they wanted to be independent from the beginning. But now, it was all changed !
I specially dedicate this post to my friends, who are totally dependent on their children's lives, to nurture their own selves emotionally. Please develop your own interests, hobbies etc, however ordinary they seem to be.
We must learn to love whatever we do instead of Doing whatever we love !!
Author: Sudha Murthy, Chairperson, Infosys Foundation