பச்சைப்புடவைக்காரி -கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா ? (160)
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா ?
(160)
ரவி இன்றொரு உண்மை சம்பவத்தை உனக்கு சொல்லப்போகிறேன் ---கல் மூக்குத்தி மாணிக்க மூக்குத்தியாய் மாறிய சம்பவம்
சுவாமிநாதன் மிகவும் வருத்தமாக இருந்தார்.
இருக்காதா பின்னே -- ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடைவெளி இருக்கவேக்கூடாது என்று நினைப்பவர்களில் சுவாமிநாதனுக்கு முதல் பரிசு கிடைக்கலாம் - என்ஜின் ஓட பெட்டிகளை சேர்த்ததைப்போல் வரிசையாக 7 குழந்தைகள் - எழும் பெண்கள் -
வாக்தேவிகள் எல்லோரும் சேர்ந்து வந்து பிறந்ததைப்போல் அந்த ஏழ்வரும் இருந்தார்கள் .. தபால் அலுவலுகத்தில் தலைமை போஸ்ட் மேன் ஆக இருந்தார் - சொற்ப சம்பளம் ---
தபால் ஆபீஸ் தன் அழகை இழந்து கொண்டிருக்கும் நேரம். கடிதங்கள் எழுதுவோரும் படிப்போருக்கு குறைந்து கொண்டு வரும் காலம் .. அந்த காலங்களில் அரசர்கள் இப்படி செய்தார் அப்படி செய்தார் என்று கல்வெட்டில் செதுக்கினார்கள் -
அதே மாதிரி தபால் நிலையத்தையும் கல்லில் செதுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது - தபால் ஆஃபீசில் கடிதங்கள் தேங்கி இருந்தால் அவருக்கு பிடிக்காது -
வேலைக்கு யாரும் வராவிட்டாலும் அவரே எல்லா தபால்களையும் சீர்ப்படுத்தி அந்த அந்த தெருக்களுக்கு சென்று பட்டுவாடா செய்தபின் தான் வீட்டுக்கே போவார் -
மற்றவர்கள் சும்மா ஊதியம் வாங்க இவர் மட்டும் மாடாய் உழைப்பார் - மணி ஆர்டர் ஒழுங்காக உரிய நபரை அடைந்துவிடவேண்டும் -- இவர் கண்டிப்பு தாங்காமல் பணத்தை தாராமலேயே ஓடி விட்டவர்கள் அதிகம் -- அப்பொழுதெல்லாம் தன் கையை விட்டே அந்த பணத்தை ஈடு செய்துவிடுவார் - நேர்மையாய் இருப்பவர்களைத்தான் அம்பாள் சோதிப்பாள் !!
அவருக்கு ஊரில் நல்ல பெயர் இருந்தாலும் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள நண்பர்கள் அதிகம் இல்லை --
அதனால் அந்த ஊரில் இருக்கும் காளிகாம்பாவை மட்டுமே இவர் அதிகமாக நம்புவார் - மணிக்கணக்கில் அவள் எதிரில் அமர்ந்துகொண்டு பேசுவார் ... அவள் அழகை கண்டு விளக்கில் சேர்ந்த நெய் போல் உருகி போவார்
1. வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெரும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
கற்க வேண்டிய நூல்கள் பலவற்றை பிழையில்லாமல் கற்றவர்கள் தெளிவு பெறவில்லை. உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று கண்மூடி தவத்தினைச் செய்வதே கதி என்று இருந்து தவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லை.
அவர்கள் நிலை இப்படி இருக்கும் போது மிகத்தாழ்ந்த, பிழைகள் புரிந்தவர்கள் ஏதாவது பேச முடியுமா?. மிகவலிமையான பகைவர்களை அழிக்க வயிரத்தால் செய்த படைவாளினை எமனாக பற்றி எடுத்தவளான அன்னையே! உன்னை வணங்கும் அடியவர்களுக்கு எல்லாம், வற்றாத சுனையைப் போல அருள்புரியும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
சுவாமிநாதனின் குரலில் உருகி போவாள் காளிகாம்பா ---- இப்படியே மாணிக்கமாக அம்பாளை வர்ணிப்பார்
5. மாணிக்கம்
காணக் கிடையா கதி ஆனவளே
கருதக் கிடையாக் கலை ஆனவளே
பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே
புனையாக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாத அவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
எளிதில் காண்பதற்கு கிடைக்காத நற்கதியிவீனை உடையவளே. எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலையின் வடிவானவளே. அணிவற்கு அரிதான அழகு அணியானவளே. கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே. உன்னுடைய திருநாமத்தையும், துதிகளான பாடல்களையும் பாடமுடியாமல் குறைபடுபவர்களை நீ என்றும் நாடமாட்டாய். மாணிக்கத்தின் ஒளிக்கதிரினைப் போன்றவளே. அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
அதற்க்கு மேல சுவாமிநாதனால் மேலே பாட முடியவில்லை கண்ணீர் கொப்பளித்துக்கொண்டு வந்தது -
அம்மா எப்படியோ உன் அருளால் இரண்டு பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்துவிட்டேன் -
இப்பொழுது மூன்றாவது பெண் - மூல நட்சத்திரம் - வரும் ஜாதகங்கள் தட்டிப்போய் கொண்டே இருக்கிறது - மூலாதாரத்தில் இருக்கும் நீ , எல்லாவற்றிற்கும் மூலமாய் இருக்கும் நீ கௌரியின் துயரைத் துடைத்துவிடு
அம்மா - ஒரு வரன் வந்திருக்கிறது - ஒரே பையன் நல்லா படித்திருக்கிறான் - அவர்கள் பொண்ணுக்கு மாணிக்கத்தின் செய்த மூக்குத்தி போட ஒப்புக்கொண்டால் தான் மேலே தொடர்வார்களாம் ---
அம்மா நான் கேட்கும் வரன் வேண்டாம் நீ கொடுக்கும் வரன் தான் எனக்கு வரம் - இந்த வரன் வேண்டாம் என்றால் விட்டு விடுகிறேன் ....
அம்பாள் சிரித்துக்கொண்டாள் - அவள் போட்டுக்கொண்டிருக்கும் மாணிக்க மூக்குத்தி கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று சுவாமிநாதனிடன் சொன்னதைப்போல் உணர்ந்தார் --
எவ்வளவோ முயன்றும் அவரால் கண்ணாடி வைத்த மூக்குத்தி தான் பண்ண முடிந்தது - தன் பெண்ணிடம் சொன்னார் - அம்மா எவ்வளவோ முயன்றேன் என்னால் ஒரு மாணிக்க மூக்குத்தியை வாங்க முடியவில்லை -
காளிகாம்பாளை எவ்வளவு தொந்தரவு செய்வது ? ஏற்கனவே இன்னும் நான்கு பெண்களை நான் கரை சேர்க்க வேண்டும் - அதற்கு அவளிடம் தானே நான் ஓட வேண்டும் ---ஒன்று செய் தாயே ! - இப்போதைக்கு இதை வைத்துக்கொள் - இன்னும் ஆறு மாதத்தில் என் தலையை அடமானம் வைத்தாவது அசல் மூக்குத்தி வாங்கித் தருகிறேன் -
பைனைப்பற்றி விசாரித்தேன் - ரொம்பவும் நல்ல பையன் -- தவம் இருந்தாலும் இப்படி ஒரு பையன் கிடைக்க மாட்டான் - நல்ல வேலை கை நிறைய சம்பளம் - அவா அப்பா அம்மா எப்படி இருந்தால் நமக்கென்ன அம்மா ? கொஞ்சம் சமாளித்துக்கொள் -
கௌரிக்கும் சுவாமிநாதனைப்போல் பொய் பேச வராது. ஆனாலும் அப்பாவின் நிலை அவளுக்கு நன்றாகத் தெரியும் --- காளிகாம்பாவின் கோயில் சென்று அப்பா வாங்கிக்கொடுத்த கண்ணாடி மூக்குத்திகளை அம்பாள் பாதங்களில் வைத்து கோமேதகமாக மின்னிய அன்னையைப்பற்றி பாட ஆரம்பித்தாள் .
கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள்
போன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் பொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
இந்த புவியில் நான் புரியும் எல்லாச் செயல்களும், எந்த வித குறைகள் இல்லாமல் எல்லா பயன்கள் குறைவின்றி கிடைக்க வரத்தினை அருளுபவளே.
தீயிலிட்டு என்னைப் பொசுக்கினாலும் ஜெயசக்தி என்று உன்னை அடியேன் சொல்லக்கூடிய வீரத்தை தாயே நீ அருளுவாய். கோமேதகமே,
வானத்தில் இருக்கும் குளிர்ந்த நிலவே, குழலைப் போன்று இனிய வாய்மொழியினை உடையவளே, மாமேரு மலையில் வாழும் கிளியாகிய அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
அவள் கண்ணீர் அம்பாளின் பாதங்களை நனைத்தது ---
திருமணம் நன்கு நடந்தது - எல்லோருக்கும் நிறைந்த திருப்தி - மாமனார் மாமியாரிடம் கௌரிக்கு நல்ல பெயர் - கணவன் சந்திர சேகர் மனைவியை தங்கத்தட்டில் வைக்காத குறையாக தாங்கினான் -
ஆனால் கௌரிக்கு மட்டும் நெஞ்சம் திக் திக் என்றே எப்பவும் அடித்து கொண்டிருந்தது - குட்டு எப்ப வேண்டுமானாலும் உடையலாம் - தனக்கு கெட்ட பெயர் வந்தால் கூட பரவாயில்லை ..அப்பாவுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது ...
காளிகாம்பாளே! - இவ்வளவு வசதிகள் கொடுத்துள்ளாய் -- என் அப்பாவின் மானத்தை காப்பாற்றி விடு தாயே - என் அப்பா எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் .
வைடூர்யம்
வலைஒத்த வினை கலைஒத்த மனம்
மருளப் பறையா ஒலிஒத்த விதால்
நிலையற் எளியன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
என்னை அலைகழிக்கும் துன்பங்கள் தூளாகப் போகும்படி எனக்கு வரத்தினை அருளுவாய். மனஅலைக்கழிப்பு இன்றி அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியவர்களன் திருமுடியில் வாழும் வைடூரியமே.மலையத்துவச பாண்டியனின் மகளான மீனாட்சியே வருவாய். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
எதிர்பார்த்த வினை அன்று கௌரி வீட்டை தட்டியது --- மாமியார் கூப்பிட்டாள் - கௌரி அந்த மாணிக்க மூக்குத்தியை கொண்டுவா - இன்று ஆடி வெள்ளி - சுவாமி அறையில் வைத்து பூஜை செய்த பின் போட்டுக்கோ -
இன்று நிறைந்த நாள் ---- எதை கேட்கவே மாட்டார்கள் என்று நினைத்தாளோ அதையே கேட்டு விட்டார்கள் --- தலை சுற்றியது -- காளிகாம்பிகே இனி நான் வாழக்கூடாது - என் அப்பாவின் மானம் பறிபோக நான் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது - ஒரு முடிவுக்கு வந்தாள் ---
வேக வேகமாய் பெட்டியைத்திறந்து மூக்குத்தியை மாமியார் மாமனாரிடம் கொடுத்துவிட்டு நகரும் போது தலை சுத்தி கீழே சாய்ந்தாள் கௌரி -
மாமனார் மூக்குத்தியை பார்த்துவிட்டு பேஷ் பேஷ் அசல் மாணிக்க கல் -- சுவாமிநாதன் உண்மையில் மிகவும் நல்ல மனிதர் என்றார் - கௌரிக்கு தன் காதுகளை நம்பவே முடியவில்லை - அவள் மாமனாருக்கு எது அசல் எது போலி எதில் தோஷம் இருக்கிறது என்று சொல்வதில் அத்துப்படி - அவர் எப்படி கண்ணாடி கல்லை உண்மையான மாணிக்கம் என்று சொல்லுவார் ?
ஏம்மா கௌரி உடம்புக்கு என்ன - பரிவுடன் வந்து கேட்டாள் அவள் மாமியார். இல்லம்மா தள்ளிப்போய் கொண்டிருக்கிறது - இது இரண்டாவது மாதம் - இன்னிக்கு உங்களுக்கு சொல்லி சந்தோஷத்தில் மிதக்க விட வேண்டும் என்று உங்கள் மகன் சொன்னார் -
அதனால் நானாக வந்து முதலேயே சொல்லவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள் ..... சந்தோஷம் இரட்டிப்பானது ---
அம்மா காளிகாம்பாவை பார்த்துவிட்டு உடனே வந்துவிடுகிறேன் அதற்குள் உங்கள் மகனும் வந்து விடுவார் - மகராசியாய் போய் வா என்றனர் இருவரும் -- ஓடினாள் அம்பாளிடம்
அம்மா என்னை காப்பாற்றி விட்டாய் - என்னை மட்டும் அல்ல என் பெற்றோர்களையும்..
இன்பத்தினை அருளுபவளே, இன்பத்தின் வடிவானவளே, அழகிய கண்களை உடையவளே, பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே அம்மையே. நிலையில்லாத மனநோய்களை நீக்குபவளே. அனைத்து கலைகளையும் அறிந்தவளே.
சம்புவின் சக்தியான சாம்பவியே. பிறைச்சந்திரனை அணிந்தவளே. தலைவியாக விளங்குபவளே. கருநிறத் திருமேனியைக் கொண்டவளே.
எல்லா விதமான அணிகலன்களும் அணிந்து இருப்பவளே. மரணமில்லா பெரு வாழ்வின் உருவே. என்றும் மங்கலகரமானவளே. அழகிய மேருமலையின் சிகரத்தில் நிலைத்து வசிக்கும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
கண்களில் நன்றிக்கடன் ---- அம்பாளிடம் கேட்கத்தோன்றவில்லை கண்ணாடி மூக்குத்தி எப்படி மாணிக்க மூக்குத்தியாக மாறியது என்றே -
அம்பாளே அவள் கணவன் மூலம் அந்த பதிலைத் தந்தாள் --
கௌரி உன் அப்பா படும் கஷ்டம் எனக்குத் தெரியும் அன்று கோயில் இருந்தபோது உன் அப்பா தன்னை மறந்து பிராத்தனை செய்துகொண்டிருந்தார் -
கண்ணாடி மூக்குத்தியைப்பற்றி சொல்லி அழுதுகொண்டிருந்தார் - கேவலம் ஒரு மாணிக்க மூக்குத்திக்காக நிஜமான கௌரி என்னும் மாணிக்கத்தை நான் இழக்க தயாராக இல்லை - அதான் நானே வாங்கி நீ கண்ணாடி மூக்குத்தி வைத்திருக்கும் டப்பாவில் உண்மையான மூக்குத்தியை வைத்துவிட்டேன் -
எது உன் முகத்திலும் உடம்பிலும் ஜொலிக்க வேண்டுமானாலும் அது என் மாமனார் சம்பாத்தியத்தில் இருக்கக்கூடாது. என் சம்பளத்தில் தான் இருக்கவேண்டும் ...
சரி வா காளிகாம்பாளிடம் இருவரும் வேண்டிக்கொள்வோம் பிறக்கும் குழந்தை உன்னை மாதிரி அழகான குட்டி கௌரியாக இருக்க வேண்டும் என்று .... கட்டி அணைத்துக்கொண்டாள் கௌரி தன் புருஷனை -
அம்மா! மாணிக்கம் என்பது ஒரு கல் அவ்வளவுதான் --
ஆனால் உன்னை வணங்கியதற்கு இப்படி ஒரு விலை உயர்ந்த நவரத்ன மாலையையே எனக்கு பதியாக கொடுத்து விட்டாயே ---
அவள் சிந்திய ஆனந்த கண்ணீர் அம்பாளிடம் சென்று பிறகு சுவாமிநாதனையும் தட்டி எழுப்பியது,
காட்சி மாறுகிறது
ரவி இந்த சம்பவத்திலும் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வேண்டும் என்று புரிய வைத்தேன் ---
சுவாமிநாதன் என்ன வேண்டிக்கொண்டார் பார்த்தாயா --
நீயாக பார்த்து கொடுக்கும் வரன் தான் என் வரம் என்றார் ---
எல்லாகவலைகளையும் என்னிடம் ஓப்படைத்துவிட்டால் நான் வழிகாட்டுவேன் -
உன்னால் முடியும் என்று எப்பொழுது நினைக்க ஆரம்பிக்கிறாயோ அப்பொழுதே உனக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிறது ...
அம்மா சாஸ்ட்டாங்கமாய் அவள் தாமரைப்பாதங்களில் விழுந்தேன் உதடுகள் தானாகவே
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே
என்று சொல்ல ஆரம்பித்தது ....
Comments
விழிக்குத் துணை யாரென்று கேட்டேன் ...மதுரை ஆளும் மீனலோசனி என்றே பதில் வந்தது ...
உடம்புக்கு கவசம் யாரென்று கேட்டேன் ... உன் கர்ம வினைகள் என்றே பதில் வந்தது ...
காமாக்ஷி என்றே ஏன் பதில் இல்லை என்றே கண் சிந்தினேன் ...
அந்த கர்ம வினையின் நாயகியே அவள் தான் என்றே காஞ்சி மடம் ஒன்று பதில் சொன்னது. . 🦜🦜🦜
இன்னொரு பிறவி இல்லை என அறிந்தேன் இப்பிறப்பில் உனை வேண்டும் போதே அருணாசலா .
மமகாரம் ஒன்று மனதில் தோகை விரித்தே ஆடும் போது சம்ஹாரம் செய்தாயே அதை அருணாசலா ...
யார் நீ என்றே கேட்ட போது நான் யார் என்றே உணர வைத்தாயே அருணாசலா . 🥇🥇🥇
பூ நாகம் புகுந்து கொண்ட மனம் அதில் பிருந்தாவனம் அமைத்துக்கொண்டாய்
மதி கெட்டு மனம் போல் ஆடிய மமகாரம் அதை மண்ணுக்குள் சேர்த்து விட்டாய் ...
மனமென்னும் துங்க பத்திராவில் என் துயரங்கள் அழிய கண்டாய் ..
குருவே சரணம் .. குறை ஒன்றும் இல்லை நீ இருக்கும் போது அவை நுழைய வாய்ப்பும் இல்லை 👣👣👣
ஜெகத்தில் அமைதி தருவாயே ...
பூவே பொன்னே பூங்குழலே ...
புதுமை காணும் புவனம் இதில் பழமை வாழ அருள்வாயே !
எங்கோ பிறந்தோம் என்றோ செல்வோம் ... இடையில் தடையில் வாழ்கின்றோம் ...
கண்ணே அமுதே காத்தருள்வாய் ...
கணிந்தே உயிர் துணை ஆகிடுவாய் .. 💥💥💥
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 88*
🌸🌸🌸🌸
பக்தஹார்த தமோபேத பானுமத் – பானு ஸந்ததி; |
ஶிவதூதீ, ஶிவாராத்யா, ஶிவமூர்த்திஶ்ஶிவஂகரீ ‖ 88 ‖
🌸🌸🌸🌸
भक्तहार्द तमोभेद भानुमद्-भानुसन्ततिः |
शिवदूती, शिवाराध्या, शिवमूर्ति, श्शिवङ्करी ‖ 88 ‖
🌸🌸🌸🌸
bhaktahaarda tamobheda bhaanumad-bhaanusantatih |
sivaduti sivaaraadhyaa, sivamurti, ssivankari ‖ 88 ‖
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
ஓம் பக்தஹார்த தமோபேத பானுமத்பானு ஸந்தத்யை நம;
ஒம் ஶிவதூத்யை நம;
ஓம் ஶிவாராத்யாயை நம;
ஓம் ஶிவமூர்த்யை நம;
ஓம் ஶிவங்கர்யை நம;
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம் (404 / 408)*
🌸🌸🌸🌸
*404.பக்தஹார்த தமோ பேத பானுமத்பானு ஸந்ததி* - பக்தர் மனதில் படர்ந்து கனமாக, சூழ்ந்திருக்கும் அஞ்ஞான இருளை நீக்கும் ஞானச் சுடரொளி அம்பாள். அவளது தயாள குணத்தால், கருணையால் அம்பாள் இவ்வாறு பக்தர்களுக்கு உதவுகிறார்.
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*406.ஶிவாராத்யா* - பரமேஸ்வரனால் ஆராதிக்கப்படுபவள் // பூஜிக்கப்படுபவள். அவளை த்யானித்து தனது சரீரத்தில் அவளை பாதியாக ஏற்றுக்கொண்டு உமையொருபாகனாக ஆனவர்.
🌸🌸🌸🌸
*407.ஶிவமூர்த்தி* - மங்களமான உருவமுள்ளவள், சிவனுடன் ஐக்கியமான சக்தி சிவமூர்த்தி. சிவம் என்றால் முக்தி என்று ஒரு அர்த்தம். மூர்த்தி என்றால் உருவம். ஆத்ம ஞானம் பெற்றுஆத்ம ஸ்வரூபனாகிவிடுதலே மோக்ஷம், எனவே ஸ்ரீ வித்யா என்பது மிக உயர்ந்த ஞானம்.
🌸🌸🌸🌸
*408.ஶிவங்கரீ* - எங்கும் மங்களத்தை (சந்தோஷத்தை) நிறைவாக அளிப்பவள். சிவம் என்றால் மங்களம். அஞ்ஞானத்தை போக்கி ஞானம் அளிப்பவள்.
🌸🌸🌸🌸
அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான்.
எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு -ஸ்ரீ குரு சரித்திரம்.
பெருப்பமர் பூவணத் தரனே போற்றி!
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி!
மருவிய கருணை மலையே போற்றி!
துரியமும் இறந்த சுடரே போற்றி!
தெரிவு அரிதாகிய தெளிவே போற்றி!
தோளா முத்தச் சுடரே போற்றி!
ஆளானவர்கட்கு அன்பா போற்றி!
ஆரா அமுதே அருளே போற்றி!
பேராயிரம் உடைய பெம்மான் போற்றி!
தாளி அறுகின் தாராய் போற்றி!
நீளொளியாகிய நிருத்தா போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி!
மந்திர மாமலை மேயாய் போற்றி!
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி!
புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி!
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி!
கருங் குருவிக்கன்று அருளினை போற்றி!
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி!
இறைவனே உன் பாதங்களை உன் திருவடிகளை அன்புடன் வணங்குகிறோம்.உன் மேல் நாங்கள் என்றென்றும் அன்பு உள்ளவர்களாக இருக்க ஆசிர்வதியுங்கள்!
இரட்சித்தருள்வாய் ஈசனே, இறைவா, ததாஸ்து!ஓம் மூர்க்க நாயனார் போற்றி , ஓம் சேக்கிழார் பெருமான் போற்றி! ஓம் மாணிக்கவாசகர் போற்றி, ஓம் அப்பர் போற்றி, ஓம் திருஞானசம்பந்தர் போற்றி, ஓம் சுந்தரர் போற்றி! நன்றி இறைவா நன்றி ஓம் நமசிவாயா ஓம் சாய்
ஓம் கேதாரேஸ்வராய நமஹ ஓம் சோமநாதேஸ்வராய நமஹ ஓம் மகாகாளேஸ்வராய நமஹ ஓம் விஸ்வநாதேஸ்வராய நமஹ ஓம் வைத்யநாதேஸ்வராய நமஹ ஓம் பீமநாதேஸ்வராய நமஹ ஓம் நாகநாதேஸ்வராய நமஹ ஓம் ஓங்காரேஸ்வராய நமஹ ஓம் த்ரயம்பகேஸ்வராய நமஹ ஓம் குஸ்மேஷ்வராய நமஹ ஓம் மல்லிகார்ச்சுனாய நமஹ ஓம் இராமநாதேஸ்வராய நமஹ
ஓம் சாய் ஓம் நமசிவாய , அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் திருவாசகம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய பாராயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்தவார நாயன்மார், நாயன்மார் சோமாசிமாறர். நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர். சோமாசிமாறர் நாயன்மார் திருப்பாதம் பணிந்து வணங்கி இந்த வார பாராயணம் செய்வோம்.
ஒரு குடும்பத் தலைவருக்கு, அவருடைய தாத்தா தன்னுடைய பரம்பரைச் சொத்தான விலைமதிப்பில்லாத கைக்கடிகாரத்தை பரிசளித்து இருந்தார்.
ஒருமுறை அந்த விலை மதிப்பில்லாத கைக்கடிகாரத்தை தன் வீட்டினுள் எங்கேயோ வைத்துவிட்டார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே தன் நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் தேட வைத்தார்,
அனைவரும் வீட்டை சல்லடை போட்டுத் தேடி விட்டனர், இருந்தும் கிடைக்கவில்லை. அப்பொழுது அந்த வீட்டின் வேலைக்காரனின் பையன், இந்தக் குடும்ப தலைவரிடம் தன்னால் அந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடிக்க முடியும் என்றும் ஆனால் அதற்கு வீட்டில் உள்ள அனைவரும் ஒரு பத்து நிமிடம் வெளியில் இருக்க வேண்டும் என்றும் தன்னை தனியே அந்த வீட்டில் விட வேண்டும் என்றும் சொன்னான்.
குடும்பத் தலைவரும் வேறு வழியில்லாமல் அவன் சொல்வதையும் செய்துதான் பார்ப்போமே என்று அவன் சொன்னபடியே செய்தார். அந்தப் பையன் 10 நிமிடம் கழித்து கையில் கைக்கடிகாரத்தை ஓடு உள்ளே இருந்து வெளியே வந்தான்.
அனைவருக்கும் மிகவும் ஆச்சரியம். எங்கே இருந்தது? எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று அனைவரும் மாற்றி மாற்றி அந்த பையனிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு அந்தப் பையன் உங்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்படி கவனிக்கும் பொழுது, மெல்லியதான டிக் டிக் என்கிற கடிகாரத்தின் சத்தத்தை உணரமுடிந்தது அந்த சத்தம் வந்த திசையில் சென்று தேடினேன், கடிகாரம் கிடைத்தது என்று சொன்னான்.
இந்த கதையில் உள்ள கடிகாரம்தான், நம் மனதின் உள்ளே ஒளிந்திருக்கும் இறைவன். இறைவனை உணர நம் மனம் அமைதி அடைந்து, தேவையில்லாத எண்ணங்களை
வெளியேற்றினால்தான் அவனை உணர முடியும்.
நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவிதத்தில் அருள் புரிந்து கொண்டிருக்கும் கருணையுடைய, அன்புடைய அந்த இறைவனின் திருப்பாதங்களை பணிந்து வணங்கி நாம் இன்று நம்முடைய 63வது சப்த பாராயணத்தை தொடங்குவோம்.
ஓம் சோமாசிமாறர் நாயன்மார் போற்றி, ஓம் சேக்கிழார் பெருமான் போற்றி! ஓம் மாணிக்கவாசகர் போற்றி, ஓம் அப்பர் போற்றி, ஓம் திருஞானசம்பந்தர் போற்றி, ஓம் சுந்தரர் போற்றி! நன்றி இறைவா நன்றி! ஓம் நமசிவாயா, ஓம் சாய்
(ஒரு சிறப்பு பதிவு)
கேரளாவின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம், ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் அஸ்தம் நட்சத்திரத்தன்று தொடங்கி திருவோணத்தன்று முடிவடைகிறது. மலையாள நாட்டில், ஓணம் பண்டிகையை பத்து நாட்கள் சாதி மத பேதமின்றி கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். ஓணம் திருநாளன்று, மகாபலி சக்ரவர்த்தி தான் ஆண்ட நாடான கேரளாவிற்கு விஜயம் செய்கிறார் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. தன்னுடைய மக்களைத் தேடி வருவதனால், அவரை வரவேற்க வாசலில் பூக்கோலம் இடுகின்றனர்.
ஓணம் வரலாறு
கேரளாவில் அமைந்த திருக்காட்கரை என்னும் திவ்யதேச ஸ்தலத்தில்தான், ஓணம் பண்டிகையின் வரலாறு தொடங்குகிறது. மகாபலி சக்கரவர்த்தி என்னும் அசுரர் குல மன்னன் பூவுலகத்தை ஆண்டு வந்தார். தனது வீரத்தால், அவர் தேவலோகத்தையும் கைப்பற்றினார். இதனால், பதற்றம் அடைந்த இந்திரன் நாராயணனிடம் முறையிட்டார். அதற்கு க்ஷீராப்திநாதன் “கவலை கொள்ள வேண்டாம் தேவேந்திரா, யாமே பூலோகத்தில் அவதரித்து உனக்கு தேவலோகத்தை மீட்டுத் தருகிறேன்” என்றார். சொன்னபடி, காஷ்யப மகரிஷிக்கும் அதிதிக்கும் வாமனனாகத் தோன்றினார்.
கேரள மாநிலத்தின் திருக்காட்கரையில், காட்கரையப்பனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் வாமனமூர்த்தி.
ஓணம் விருந்து
அறுவடைத் திருநாளாகவும், கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்திருநாளன்று, கேரளாவில் எல்லா வீடுகளிலும் ஓண சாத்ய விருந்து பரிமாறப்படுகிறது. கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளான எரிசேரி, காளன், ஓலன், அவியல், தோரன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மோர்க்கறி, கூட்டுக்கறி, பருப்புக்கறி, சாம்பார், ரசம், அடை பிரதமன், பாலடை பிரதமன், வாழைப்பழம் ஆகியவை தலைவாழை இலையில் பரிமாறப்படும். இதனுடன் உப்பேரி, பப்படம், காவற்றல் வைத்து உண்டு மகிழ்வர்.
தன்னுடைய மக்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக ஓணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வதைக் கண்ட மகாபலி சக்கரவர்த்தி, மீண்டும் பாதாள உலகத்துக்குச் செல்கிறார் என்பது கேரள மக்களின் நம்பிக்கை.
ஸ்தஸ் பாராத் பரோsஸிவிபோ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஹேவிபோ!உமது மூர்த்தியை கண்டறிய பிரம்ம தேவனே முயன்றும் முடியவில்லை. ஆகவே, உயர்ந்தவரிலும் உயர்ந்தவராயுள்ளீர். உமது திருவடிகளே சரணம்.
பதஸேவா ஸநாதனேச விபோ
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஹேபழமைக்கும் பழமையானவரே விபோ!மனிதராய் பிறப்பதற்கு உமது திருவடிஸேவை தான் பயன். உமது திருவடிகளே எனக்கு சரணம்.
ருசிதாம் சிரம் ப்ரதேஹி விபோ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஹேஸாம்ப!விபோ!பலம், ஆரோக்யம், ஆயுள், உமது குணங்களில் பற்று ஆகியவற்றை வெகுகாலம் தந்தருள்வீராக!உமது திருவடிகள் தான் எனக்கு சரணம்.
பதே பூதிபூஷிதாங்க விபோ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஹேபகவான்!பர்க!பயத்தைப் போக்குபவரே!பூதங்களின் தலைவரே!விபூதிவிளங்கும் மேனியரே!விபோ!ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.
ஹிமானீதராத்மஜா தவ விபோ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஹேமலையரசன் மகள் மணாளனே! விபோ! உமது பெருமை வேதங்களின் அடங்கவில்லையே!எத்தனையோ பேசப்பட்டும். ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.
இளைப்புவிடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே - 33
இனி நம்பாடுவான் கதை
108 திவ்விய தேசங்களில் திருக்குறுங்குடியும் ஒன்று.மகேந்திர மலை என்ற மலையை அடுத்து அமைந்துள்ள இவ்விடத்தில் எம்பெருமான், நின்ற நம்பி,இருந்த நம்பி,கிடந்த நம்பி,திருப்பாற்கடல் நம்பி,மலைமேல் நம்பி என ஐந்து விதமாக எழுந்தருளியுள்ளார்.வராக அவதாரம் எடுத்த பெருமாள் தன் உடலைக் குறுக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு இப்பெயர்
நம்பாடுவான் ஒரு வைணவ பக்தர்.பாணர் குலத்தில் பிறந்தவர்.தன்னுடைய குலத்தின் காரணமாக கோயிலின் வாயிலில் நின்று பாடிவிட்டு செல்வது அவரது வழக்கம்.அவரது பண்ணில் மயங்கி பெருமாளே அவரை நம்பாடுவான் என அழைக்க, அதுவே நிரந்தரமானது
"இன்று ஏகாதசி.எம்பெருமானின் முன் பாடிவிட்டு , என் ஏகாதசி விரதத்தையும் முடித்துவிட்டு வருகிறேன்.அதுவரை பொறுத்திரு" என்றார்
ராட்சசனும் அவர் சொன்ன வாக்குறுதியை நம்பி அவரை அனுப்பியது
சந்நிதி அடைந்து, வழக்கம் போல, சந்நிதியிலிருந்து விலகிப் பாடினார் நம்பாடுவான்,
ஆனால், எம்பெருமான், கொடி மரம், கருடன் ஆகியவற்றை விலகி இருக்கச் சொல்லி அங்கிருந்த வண்ணமே சேவை சாதித்தார்
ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பதுதான் ஸ்ரீவைஷ்ணவின் த்ருமம்" என் நம்பாடுவான் மறுத்துவிட்டார்
திரும்பி வாக்குத் தவறாது வந்தவரைப் பார்த்த ராட்சசன். நான் உன்னை உண்ணாதிருக்க ஒரு நிபந்தனை.நீ பாடிய பாடல்களின் பலனை எனக்கு அளித்திடு" என்றான்
ஆனால் நம்பாடுவான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
ஆனாலும் ராட்சசன் சொன்னான் "நான் முற்பிறவியில் ஒரு அந்தணன்.எனக்கு சாபவொமோசனம் வேண்டுமாயின்..நீ எம்பெருமான் முன் பாடிய கைசிக பண்ணின் பலனையாவது எனக்குக் கொடு" என்றான்
அறநெறி பிறழாது நம்பாடுவான், ராட்சசன் இளைப்பின் தாகத்தை தீர்த்ததால்."இளைப்புவிடாய் தீர்த்தேனொ நம்பாடுவான் போலே" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்
அருமையான கற்பனை
மாதா ஜய ஒம் லலிதாம்பிகையே🌹🙏🏻🙏🏻
யாதுமாகி நின்றாய் காளி..
எங்கும் நீ நிறைந்தாய்.....
உண்மை என்று அறிய வைத்த பதிவு...
🙏🙏🙏🙏🙏🙏🙏
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே
பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை எண்ணித் தியானம் செய்கின்றனர்.
மேலான ஆனந்த வடிவினரான சிவபெருமானோ, தம் உள்ளத்தினுள்ளே உன்னை அன்பினால் கட்டிவைப்பவர்,
இவ்வாறெல்லாம் இருப்பதால், உலகில் உன்னைத் தரிசிப்பவர்களுக்கு உன்குளிர்ச்சி மிக்க திருவருள் தரிசனம் தரிசிப்பவர்களுக்கு அது மிக எளிதாக இருக்கிறது.
வந்திப்பவர் என்றால் உடலால் வணங்குபவர்கள்
உடலால் மட்டும் அல்ல மனம் மொழி செயலாலும் உன்னையே வணங்குகிறார்கள் தேவர்கள்
அசுரர்களும் அதிக வரம் வேண்டி அம்பாளை வணங்குகிறார்கள்....தானவர்கள் என்றால் அசுரர்கள். அசுரர்களாக ஆனவர்கள் இவர்கள் எல்லோருமே உன்னை வணங்கி வழிபடுகிறார்கள்....
உன்னையே சதா சர்வ நேரமும் பிரம்மனும் நாராயணனும் நினைத்து க்கொண்டே இருக்கிறார்கள்...
நல் திசை முகர் என்பது நான்முகனை குறிக்கும்...
தன் சிந்தையுள்ளே அம்பாளை பதித்துக்கொண்டு பரமானந்தமாக இருக்கும் பரமேஸ்வரன் ..அவருக்கு அழிவு ஏது ? அவர் உண்ட நஞ்சைத் தான் அம்பாள் அமுதமாக்கி விட்டாளே...
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே👍👍👍👍👍👌👌👌👌👌
அம்மா உன்னை வானவர்கள் , அசுரர்கள் , நான்முகன் , திருமால் , பரமேஸ்வரன் இப்படி எல்லோரும் வணங்குகிறார்கள் ...ஆனால் நீயோ இந்த புவியில் உன்னை வணங்கும் சாதாரண ஜீவ ராசிகளை மதித்து கீழே இறங்கி வந்து கனிவுடன் அருள் செய்கிறாயே.. உன் கருணையை எப்படி விவரிப்பது..அப்படி விவரிக்கத்தான் வார்த்தைகள் உண்டா ??
அம்பாளை ஈசன் உட்பட எல்லோரும் வந்து வணங்க எதுவுமே அலட்டிக்கொள்ள்ளாமல் இருக்கும் பூமியில் இருக்கும் அத்தனை ஜீவ ராசிகளையும் கருணை கொண்டு காப்பாத்துகிறாள் ...அவள் கருணையை அதன் வீரியத்தை விவரிப்பது என்பது மிகவும் கடினம் 👍👍
यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गास्तथैवापदः सन्निधौ सेविनां मे ।
इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५॥
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதெள ஸேவினாம் மே |
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||
இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது, பகவானை தர்சனம் பண்ணி, ஜீவன் முக்தனாக ஆன பின்ன, என்ன கஷ்டம்? அப்படீன்னு தோணும். அப்படி ஜீவன்முக்தி அடைந்த பின்னையும், மஹான்கள் கொஞ்ச காலம் பாக்கி பூமியில இருக்கா இல்லையா, அதை ப்ராரப்த கர்மான்னு சொல்றா. அந்த ப்ராரப்த காலத்தை, கர்மாவை அனுபவிச்சு தீர்க்கக்கூடிய அந்த காலத்தில், அவா ஞானத்துனால அவா, அவா பூர்வ கர்மாவை எல்லாத்தையும் எரிச்சுண்டுட்டா, மிஞ்சி இருக்கிற ஒரு சொட்டு, அதை இந்த ஜென்மாவுல அனுபவிச்சு தீர்க்கறா.
அதை தவிர, வந்து நமஸ்காரம் பண்றவா, அதாவது கஷ்டம் னு சொன்னா, அந்த கஷ்டத்தை கேட்டு அவாளுக்கு ஆறுதல் சொல்றது, இந்த ரெண்டுமே அவா equally important தெய்வ காரியமாக நினைச்சு பண்றா. இதை நான் என்னுடைய வாழ்க்கையில் நேரே ஸ்வாமிகள் கிட்ட அனுபவிச்சு இருக்கேன். மஹா பெரியவாளும் அதைத் தான் பண்ணிண்டு இருந்தா.
यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गास्तथैवापदः सन्निधौ सेविनां मे ।
इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५॥
நாளைக்கு ‘கிரௌ மந்நிவாசே’ னு ஆரம்பிக்கற ஆறாவது ஸ்லோகத்தை பார்ப்போம்.
நம: பார்வதீ பதயே… ஹர ஹர மகாதேவா
When Bhagavan had blisters on his hands due to
grinding chutney everyday
and did not heed to the request
of Viswanatha Swami not to undertake the job,
Swami went to the kitchen early
and did all the work Bhagavan used to do.
Bhagavan asked him why he had done his work in the morning.
When Swami said that he could not bear to see Bhagavan
grinding chutney with blisters on his hands,
Bhagavan said,
“In the early days I used to go for bhiksha.
Now I am getting free food in the Ashram.
That is why I do some work or the other in the kitchen.
Today you have done my work.
Please give me your dhoti. I will wash it for you.”
When Swami heard this he was moved to tears.
~~~~~~
She is in the form “sa” (स), the first bīja of the third kūṭa known as śakti kūṭa and the twelfth bīja of the entire Pañcadaśī mantra.
*222. Samarasā समरसा*💐💐💐💐 Samarasa means equal feelings . She is "rasa" which means essence and the quality of any external objects , does not modify Her quality . 👣👣👣
*223. Sakalāgamasaṁstutā सकलागमसंस्तुता*👍👍👍👍👍 She is praised in all traditional doctrines 👏👏👏
*224. Sarvavedāntatātparyabhūmiḥ सर्ववेदान्ततात्पर्यभूमिः*👌👌👌 She is complete knowledge
*225. Sadasadāśrayā सदसदाश्रया*💐💐💐👌👌👌
She is the connecting link between Brahman with form and Brahman without form 🌹🌹🌹
*226. Sakalā सकला*💐💐💐 She is in the form of 64 kalas or arts 💥💥💥
[31/08, 9:29 am] Ravikumar Jayaraman: This is the Supreme quality of Brahman –sat, cit and ānanda or existence, consciousness and bliss.
Lalitā Sahasranāma 700 is Saccidānanda-rūpiṇī. She is in the form of sat-cit- ānanda.
These three qualities constitute the Brahman. Sat means the existence, Cit means pure consciousness and ānanda means infinite bliss. In reality, these are not the constituents of the Brahman, as Brahman is without any attributes. 🦜🦜🦜
[31/08, 9:34 am] Ravikumar Jayaraman: They are the three fold aspects of the Brahman.
But at the human level, they appear as separate attributes due to illusion or māyā.
They succeed one after another during spiritual quest.
First, the existence is realised, second the level of consciousness is improved to higher planes by purifying it and finally bliss is realised.
This is the reason for realising them as individual attributes in a human being.
In the Brahman they remain united as a single aspect.
This nāma reaffirms Her status as the Brahman.
ஆகும்! ஆதிபராசக்தி அருளும், அன்புக்கணவனின் உதவியும்,
ரவிபோல் கதாசிரியரும் இருக்கும்வரை!
*பதிவு 762*🥇🥇🥇
*US 754*
*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.
💐💐💐🌷🌷🌷
*31 வது ஸ்தபகம்*👌👌👌
*ஏகத்ரிம்ஸ ஸ்தபக*
நாம வைபவம் ( உபஜாதி வ்ருத்தம்)👌👌👌
இந்த ஸ்தபகத்தில் தேவியின் திருநாமங்களின் மகிமை விளக்கப்படுகிறது 🥇🥇🥇
ஷ்வம் பேதி யோ நாஹ்வயதே ஸ கிம் நா
லக்ஷ்யம் புன ப்ராணா வதஸ்து ஸர்வம்
ஸர்வஸ்ய சாந்தர்ஹி பராsஸ்தி சக்தி
அம்பாளின் நாம கீர்த்தனை செய்யாத மனிதன் எதற்கும் பிரயோஜனப் படமாட்டான் .
அணைத்துப்பொருள்களிலும் அவள் தான் வியாபித்துள்ளாள் 🥇🥇🥇
*பதிவு 187*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
2. பாதாரவிந்த சதகம்
ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...
தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇
64
ஸ்மர வ்யாபாரேர்ஷ்யா பிசுன நிடிலம் காரயதி வா
த்விரே ஃபாணா மத் யாஸயதி ஸததம் வாsதிவஸதிம்
ப்ரணம் ரான் காமாக்ஷ்யா பதநலின் மாஹாத்ம்ய கரிமா 🙂🙂🙂
ராமனுக்கு ஜெயம் என்றே நான்கு திக்கும் ஒலித்தன ... ஜெய ராமன் வாழ்கவென்றே லங்கை வரை குரல் எழுப்பின .... 🙏🙏🙏🙏🙏
upayam JK Shivan
ஸ்ரீ ,மஹா திரிபுரசுந்தரி, உனது ஸ்ரீ லலிதா யந்த்ரம் எனும் சக்ரமஹிமை தியானம் செய்பவர்களுக்கு உலகறிந்த உண்மை ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் எல்லையில்லாமல் இதை விவரிக்கிறார்.
லலிதா த்ரிசதி எனும் முன்னூறு நாமங்களும் ,லலிதா சஹஸ்ரநாமம் எனும் ஆயிர நாமங்களை ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு எடுத்துச் சொல்வது போல் அமைந்தவை.
सिन्दूरारुण विग्रहां त्रिनयनां माणिक्यमौलि स्फुरत्
तारा नायक शेखरां स्मितमुखी मापीन वक्षोरुहाम् ।वक्षोरुहाम्
पाणिभ्यामलिपूर्ण रत्न चषकं रक्तोत्पलं बिभ्रतीं
सौम्यां रत्न घटस्थ रक्तचरणां ध्यायेत् परामम्बिकाम् ध्यायेत् ॥परामम्बिकाम्
Sindhuraruna vigraham trinayanam manikya mouli spurath
Thara Nayaga sekaram smitha mukhi mapina vakshoruham,
Panibhayam alipoorna ratna chashakam rakthothpalam vibhrathim,
Soumyam ratna gatastha raktha charanam, dhyayeth paramambikam.
ஸிந்தூராருணவிக்ரஹாம்
த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத்
தாராநாயக ஷேகராம்
ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்
த்யாயேத் பராமம்பிகாம் ||
தேவர்கள் பண்டாசுரனின் கொடுமைகளால் அவதியுற்று பார்வதியை வேண்டுகிறார்கள். அவள் அக்னியில் உதயமாகி அணிமா ,மஹிமா முதலான சக்திகள் உருவம் பெற்று, ப்ராஹ்மி,கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, மஹேந்திரி ,சாமுண்டி, மஹாலக்ஷ்மி என பலவாகிறாள். தேவர்கள் குறை தவிர்க்கிறாள். பண்டாசுரன் பாசுபதாஸ்திரத்தால் வதம் செய்யப்படுகிறான் என்கிறது புராணம்.
''யோகிகள், முனிவர்கள் ரிஷிகள் ஏன் காவி வஸ்திரம் அணிகிறார்கள்? அது ஸ்ரீ லலிதாம்பிகையின் மேனியின் நிறம். சர்வ சக்தி வாய்ந்ததல்லவா? சிவனோடு ஐக்யமானவள் முக்கண்ணியாக காட்சியளிப்பதில் என்ன ஆச்சர்யம்? நவரத்ன மகுடம் தரித்தவள். பிறைச்சந்திரன் சூடியவள். சிவை அல்லவா? சதாகாலமும் அனைத்து உள்ளங்களையும் காந்தமென கவரும் புன்னகை முகத்தாள் . பெண்மையின் இலக்கணம். சிவந்த மலர்களை ஏந்திய கரமுடையாள் . சாந்த ஸ்வரூபி; கருணைக்கடல். சிவந்த பாதங்களை நவரத்ன பீடத்தில் இருத்தி தரிசனம் தருபவள். ஸ்ரீ லலிதா உனக்கு நமஸ்காரம் தேவி.
Animadibhiravrtam Mayukhairahamityeva Vibhavaye bhavanim
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||
உன்னை நினைக்கையில் அம்பா பவாநீ , உன் உருவம் உதய சூரியனின் தக தக வென ஜொலிக்கும் பொன்வண்ணமாக அல்லவோ தோன்றுகிறது. கண்களா கருணை நிறைந்த கடலா? காருண்ய சாகரம் இதுதானா?
அட உன் வில் உன்னைப்போல் கரும்பால் ஆன 'இனிய' தண்டனை வழங்கும் ஆயுதமா? மலர்கள் தான் கூரான அம்புகளா? பாச அங்குசம் தரித்தவளே . புண்ய புருஷர்கள் பக்தர்களாக புடை சூழ அருள்பவளே ''எல்லாம் நான் '' என்பது நீ தானோ?
1. ''அம்பாளை அறிவோம்''
ஈரேழு உலகும் கொண்டாட திரள்கிறது. பார்வதிக்கும் பரமேவரனுக்கும் கல்யாணம்.
மஹாவிஷ்ணு, ப்ரம்மா, இந்திராதி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சிவகணங்கள், சித்தர்கள் அனைவருமே அங்கே தான். எல்லா உலகத்தவரும் கைலாசம் சென்றுவிட்டால் என்ன ஆகும் ? வடப்பக்கம் தாழ்ந்து தெற்குப் பக்கம் உயர்ந்து விட்டது.
அம்பிகையை ஸ்தோத்ரம் செயகிறோமே அதில் முதல் இடம் பெற்றது லலிதா சஹஸ்ரநாமம்.
இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். ரெண்டுபேருமே ஞானத்தில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் இல்லை.
பதினெட்டு புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதில் '' லலிதோபாக்யானம் '' என்ற பகுதி லலிதா தேவியின் திரு அவதாரம் பற்றியும் அவள் சரித்திரமும் சொல்கிறது.
அதில் வருவது பரமேஸ்வரி, பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் ஸ்தோத்திரம் உள்ளது. 183 சுலோகங்களில் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு இதை உபதேசிக்கிறார்.
அகஸ்திய மகரிஷி அவரது மனைவி லோபாமுத்திரை யோடு இணைந்து பூஜித்து வணங்கியது பரமேஸ்வரியை. அகஸ்தியர் சிறந்த சக்தி உபாசகர். அகஸ்தியருக்கு அதனால் தான் அவ்வளவு சக்தி. லலிதாவுக்கு ஒரு பெயர் என்ன தெரியுமா? லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள். லலிதாவின் சக்தியால் வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாக புராணம் சொல்கிறது.
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பிரதானமாக உரை எழுதியது பாஸ்கர ராயர் (“சௌபாக்ய பாஸ்கரம்”) பாஸ்கர ராயர் (1690 – 1785) சிறந்த தேவி உபாசகர், தத்துவ ஞானி. இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்தாலும் சின்னவயசிலேயே தஞ்சாவூர் வந்து வாழ்ந்த ஊர் தான் அவர் பெயர் கொண்ட பாஸ்கரராஜபுரம். .
லலிதா சஹஸ்ரநாமம் சிறந்த கவிநயம், சொல்லழகு ஓசை கொண்டது. சமஸ்க்ரிதம் தெரியாவிட்டாலும் கேட்க செவிக்கின்பம் . எப்படி விஷ்ணு சஹஸ்ரநாமம் MSS பாடுவதை கேட்கும்போது சிலையாக கண்ணை மூடிக்கொண்டு அர்த்தம் தெரியாதவர்களும் ரசிக்கிறார்களோ அப்படி. சாக்தம் எனும் சக்தி தத்வம் போதிப்பது. ப்ரம்ம வித்யா, ஸ்ரீ வித்யா என்று கூறப்படும் மகோன்னதமான ஸ்தோத்ர மந்த்ரம். அம்பாளின் 1008 நாமங்கள் எப்படி அமைந்திருக்கிறது என்றால், அவளின் அவதாரம், தலை முதல் கால் வரை வர்ணனை (கேசாதி பாதம்) அம்பாள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்தது, அவளது சூக்ஷ்ம ரூபம், குண்டலினீ ரூபம், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்வது, நிர்க்குண உபாசனை. பஞ்ச ப்ரம்மங்கள் ஸ்வரூபம் பற்றி, கீதையில் வருமே அது போல் க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம், சக்தி பீடங்கள் பற்றி, சக்தி அங்கம் கொண்ட தேவதைகள், யோகினி த்யானம், விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும், சிவசக்தி ஐக்கியம் என்று. புரிகிறதா?
லலிதா யார்? தேவர்கள் ப்ரார்த்திக்க அக்னி
குண்டத்தில் தோன்றியவள். எப்படி இருப்பாள்? நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள்.
லலிதா சஹஸ்ரநாமம் இனி வாசிக்கும்போது எல்லா விவரங்களும் வரப்போகிறது. நாம் அனைவருமே சேர்ந்து அறிவோம்.
हेमाभां पीतवस्त्रां करकलितलसद्धेमपद्मां वराङ्गीम् ।
सर्वालङ्कार युक्तां सतत मभयदां भक्तनम्रां भवानीं
श्रीविद्यां शान्त मूर्तिं सकल सुरनुतां सर्व सम्पत्प्रदात्रीम् ॥
Dyayeth padmasanastham vikasitha vadanam padma pathrayathakshim,
Hemabham peethavasthram karakalitha-lasadhema padmam varangim,
Sarvalangara yuktham sathatham abhayadam bhaktha namram bhavanim.
Srividyam santhamuthim sakala suranutham sarva sampat pradhatrim.
த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸித
வதநாம் பத்ம பத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம
பத்மாம் வராங்கீம் |
ஸர்வாலங்கார - யுக்தாம் ஸததமபய
தாம் பக்தநம்ராம் பவாநீம்
ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம்
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||
सकुङ्कुम विलेपनामलिकचुम्बि कस्तूरिकां
समन्द हसितेक्षणां सशर चाप पाशाङ्कुशाम् ।पाशाङ्कुशाम्
अशेषजन मोहिनीं अरुण माल्य भूषाम्बरां
जपाकुसुम भासुरां जपविधौ स्मरे दम्बिकाम् ॥दम्बिकाम्
Sakumkumalepana –malikachumbi-Kasthurikam,
Samanda hasithekshanam sashra chapa pasangusam,
Asesha jana mohinim –maruna malya bhoosham bara,
Japa-kusuma-basuram japa vidhou smarathembikam.
ஸகுங்குமவிலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம்
ஸமந்த - ஹஸிதேக்ஷணாம்
ஸசரசாப பாஸாங்குஸாம் |
அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸும - பாஸுராம்
ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ||
யாரை விடாமல் தொழவேண்டும் தெரியுமா? யார் தனது தேகத்தில் குங்குமத்தை குழைத்து பூசியிருப்பவளோ, வண்டுகள் சுற்றி வாசம் பெரும் கஸ்தூரியை கமகமவென தரித்திருப்பவளோ, எல்லாவற்றையும் மிஞ்சும் காந்த புன்னகை கொண்டவளோ, கரும்பு வில்லை, மலரம்புகளையும், பாசாங்குசமும் ஏந்தியவளோ, சகல ஜீவன்களையும் கவர்ந்தவளோ, செம்மலர்மாலை அணிந்தவளோ, ஈடிணையற்ற ஆபரணதாரியோ, செவ்விதழ் மலரை ஒத்த நிறத்தவளோ,அம்மா, லலிதாம்பிகே உன்னை சரணடைந்து அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.
God bless
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
அழகிய பண்ணைப் போன்று இனிய மொழிகளைப் பேசும் நறுமணங் கமழும் திருமேனியையுடைய யாமளையாகிய பசுங் கிளியே! உன் பேரருளைப் பெற வேண்டுமென முற்பிறவி களில் பல கோடி தவங்களைச் செய்தவர்கள், இவ்வுலகைக் காக்கும் அரச போகத்தை மட்டுந்தானா பெறுவர்? யாவரும் மதிக்கும் தேவர்களுக் கேயுரிய வானுலகை ஆளும் அரிய செல்வத்தையும் என்றும் அழிவற்ற மோட்சம் என்னும் வீட்டை யும் அன்றோ பெற்று மகிழ்வர்?
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்... குளிர்ச்சி பொருந்திய அம்பிகை பொய்த் தவம் செய்தவர்களுக்கு (தனக்காக வேண்டிக்கொள்பவர்களுக்கும்) மெய்த்தவம் செய்தவர்களுக்கும் (பிறர் வாழ வேண்டிக்கொள்பவர்கள்) ஒரே மாதிரியான அருளை தருகிறாள் ..பலகோடி வருடங்கள் தவம் செய்து காண்பதற்கும் கிடைப்பதற்கும் அரிய அம்பாளிடம் போய் எவனாவது மன்னளிக்கும் செல்வமோ கேட்ப்பார் ? எவ்வளவு கேவலமாக இருக்கும் அது ... ஓரு ஏழை பார்க்க முடியாத ஒரு ராஜாவை பார்க்கிறேன் அவரிடம் என்ன கேட்க் வேண்டும் ? அரிய பொருளை கேட்க்காமல் அடுத்த வேலைக்கு சோறு வேண்டும் என்று கேட்பதைப் போல் அம்பாளிடம் இந்த மண்ணுலக ஆசைகளை வரமாக கேட்பது என்பது