பச்சைப்புடவைக்காரி -காக்கும் தெய்வம் (161)
பச்சைப்புடவை க் காரி
என் எண்ணங்கள்
காக்கும் தெய்வம்
(161)
ரவி இன்றும் ஒரு முக்கியமான விஷயத்தை மீண்டும் உன்னிடம் சொல்லப்போகிறேன் -
ஏற்கனவே சொன்னதுதான் ...
இந்த கலியுகத்தில் நீங்கள் பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை .. நாமாவளி ஒன்று போதும் --- மிகவும் சுலபமான வழி - உங்களுக்காக எங்களை இன்னும் கீழே கொண்டு வருகிறோம் -
அசுரர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்து எங்களை பார்த்திருக்கிறார்கள் -- அது வேறு யுகம் -
ஆனால் இன்று உங்கள் இயந்திரமான வாழ்க்கையில் இறைவனை 5 நிமிடங்களுக்கு மேல் கும்பிட உங்களுக்கு நேரமும் இல்லை ஆர்வமும் இல்லை - வாழ்க்கையே சுவிட்ச் தட்டினால் ஓடும் என்ற நிலைமைக்கு ஆளாக்கி விட்டீர்கள்
இருந்தாலும் பெற்ற வயிறு அல்லவா -
நீங்கள் சொல்லும் நாமாவளியில் மகிழ்ந்து போகிறேன் --- அதையாவது மனதார சொல்லுங்கள் ---
நாமாவளி சொல்லி தன கணவனை பெரும் ஆபத்தில் இருந்து மீட்டிய ஒரு பெண்னின் கதை இன்று சொல்லப்போகிறேன் - ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும் - கேள் ....
பனிபடர்ந்த மலை ---- எங்கிருந்து வேண்டுமானாலும் குண்டுகள் பாயலாம் - மகேஷ் ராணுவத்தில் சேர்ந்து அன்றுடன் 6 வருடங்கள் ஆகிவிட்டன - இந்திய எல்லைகளில் வேலை செய்ய அவனுக்கு இதுவரை வாய்ப்பு வரவில்லை -
முதல் முதலாக வாய்ப்பு கிடைத்துள்ளது கார்கில் சண்டை --- கேப்டன் மகேஷை தெரியாதவர்கள் அவனுடைய கூடாரத்தில் யாருமே இருக்க முடியாது - குறி பார்த்து சுடுவதில் அவன் அர்ஜுனன் ....
இதுவரை பல பரிசுகளும் பதக்கங்களும் அவனைத்தேடி வந்துள்ளன --
ஊர் சென்று விமலாவை பார்க்க வேண்டும் என்று apply செய்த லீவு கார்கில் சண்டையில் கொண்டுபோய் அவனை சேர்த்தது ....
விமலாவுக்கும் மகேஷுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் தான் திருமணம் ---
விமலா முழுகாமல் இருந்தாள். தலைப்பிரசவம் --- கண்களில் கணவனை சுமந்துகொண்டு வயிற்றில் அவன் கட்டிலில் கொடுத்த பரிசை கருணையுடன் சுமந்துகொண்டு இருந்தாள்
போர் மும்மரம் - மகேஷுக்கு position எடுத்துக்கொள்ளும்படி ஆர்டர் வந்தது -
கொஞ்ச தூரத்தில் இருக்கும் பகைவர்களின் கூடாரத்தை தகர்த்து அங்கே இந்திய நாட்டுக்கொடியை நிறுவ வேண்டும்
விமலா நேராக ஓடினாள் தன் சுவாமி அறைக்கு அங்கே லலிதா அழகாக ஸ்ரீ சக்கரத்திற்கு பின் அமர்ந்திருந்தாள் --- குங்குமம் கீழே தெளித்து இருந்தது
அம்மா
““கண்டகன் பண்டாஸுரனை வதைக்கவென்றே
காமேசர் அஸ்திரங்கொடுத்தார்
வாங்கிக்கொண்டு அம்மன் காமேசர்
அஸ்திரத்தைமண்டலாகாரமாய்
வில் வளைத்துக்கோடி சூரியன் போன்ற
காமேசர் பாணத்தைக்
கோதண்டத்தில் வைத்து மந்திரித்து
வேடிக்கையாகவே காது பரியந்தம்
விசையாய் இழுத்துவிட்டாள்- சோபனம், சோபனம்.
கண்கள் அம்பிகையின் பண்டாசூரனின் வாதத்தில் இருந்தது .... தாயே எவ்வளவோ எதிரிகளை பாண்டாசூரன் உற்பத்தி பண்ணிக்கொண்டே இருக்க தாங்கள் அத்தனையும் ஒரே வினாடியில் தகர்த்தீர்களாமே
தேவி பிரயோகித்த அஸ்திரந்தானப்போ
தேவேந்திரன் வஜ்ஜிராயுதம் தடிபோல
தாவிப் பண்டாஸுரன் மார்பிலே பாய்ந்தது
தரணியிலே விழுந்து உயிரைவிட்டான்
அஸ்திரமுடையாளின் அக்கினி ஜ்வாலையாலே
அவனுடபுரங்களும் வெண்ணீராச்சு
அஸ்தமனத்தில் பண்டாஸுரனை வதைத்து
அம்மன் ஜயங்கொண்டாள்- சோபனம் சோபனம்
அங்கே மகேஷ் குறிப்பார்த்து சுடும் வேலையில் எதிரிகள் இவனை பார்த்து விட்டனர் -- பெரிய ஏவுகணை அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது
விமலா தன்னை மறந்து உலகை மறந்து பாடிக்கொண்டிருந்தாள்
புஷ்பம் பன்னீர்களைச் சொரியவே தேவர்கள்
புகழ்ந்துஸகிகள் வெண்சாமரம் வீச
அப்பொழுது தேவி சக்திசேனையுடன்
ஆலயத்தை அம்மன் வந்தடைந்தாள்
ஆயுதங்களால் அடிபட்ட சக்திகள்
காயத்தை அம்ருதக் கண்ணால் போக்கினாள்
நோய்கள் போனதுபோல ஸுகம் பெற்றார்
பூமியும் புனிதமாய் செழித்தது –சோபனம் சோபனம்
இன்னும் சில வினாடிகள் தான் மகேஷ் மட்டும் அல்ல அவன் கீழ் அவனை நம்பி வந்த அத்தனை பேரும் தூள் தூள் ஆகப்போகிறார்கள் ---- ஏவுகணை ஒரு நாகஸ்த்திரமாக வந்து கொண்டிருந்தது -
விமலா, பூமியும் புனிதமாய் செழித்தது சோபனம் சோபனம் என்றே முடிக்க எங்கிருந்தோ இன்னும் ஒரு ஏவுகணை அந்த ஏவுகணையுடன் மோதி வானத்தில் இடி இடித்து நொறுங்கியது --
யார் அதை அனுப்பியிருப்பார்கள் என்று யாருக்கும் யோசிக்கக்கூட அவகாசம் இல்லை - மகேஷ் கொஞ்சமும் தாமதிக்காமல் fire என்று சொல்லி பகைவர்கள் இருந்த கூடாரத்தை வெடி வைத்து சின்னா பின்னமாய் ஆக்கினான் - அங்கே சென்று இந்திய கொடியையும் நிறுவினான்
இன்று அவனுக்கு medal of honour கிடைக்கும் நாள் --- இன்றுதான் மருத்துவர்கள் விமலாவிற்கும் நாள் குறித்துளார்கள் - இரண்டு சந்தோஷம் ஒரே சமயத்தில்
அம்மா உன் நாமாவளிக்கு உள்ள பெருமைகளை சொல்லவும் என்னால் முடியுமோ ---- உன் நாமங்கள் தான் பகைவர்களை தகர்த்தன - மகேஷ் அல்ல ஆனால் எல்லா பெருமைகளையும் நீ அவனுக்கே தந்தாய் ...
புன்னைகையும் செந்தமிழும் சேர்ந்து விளையாட அன்னை அகமகிழ்ந்து அரவணைத்துக்கொண்டாள் --- பிறவிப்பயனை அடைந்தேன்
Comments
உருக்கமான அம்பாள் பக்தியும்
படித்த மாத்திரத்தில் கண்களில் 😭
🇮🇳🇮🇳. ஜெய் ஹிந்த். 🏅
லலிதாம்பிகையே சரணம்🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷
கொலுசு சப்தம் கேட்க்குது... யாழின் குரல் மிதக்குது ... நடந்து வரும் ஓசை அது நன்றாக கேட்கிறது ...
நெஞ்சம் அது குளிர்கிறது ... உடம்பெல்லாம் சிலிர்க்கிறது ... பிருந்தாவனம் கண்ணில் தெரியுது ...
உத்தமனே நீ என்றும் வாழும் போது நினைவில் கசப்பு சேருமோ ? கற்பனை வளம் குறையுமோ ? 👌👌👌
எங்கிருந்தோ வந்த வண்டு தேனருந்தி செல்கிறதே
தேனீக்கு அந்த தேன் சொந்தமோ சாயி
மீன் வேண்டும் என்றே காலமெல்லாம் ஒற்றைக்காலில் தவம் இருக்கிறதே கொக்கு ஒன்று சாயி ...
வலை வீசி மீன் பிடிக்கும் மனிதனுக்கோ மீன் அது சொந்தம் சாயி ?
குரல் அது இனிமை என்றே பெருமை கொண்டு பாடுகிறதே குயில் ஒன்று சாயி
பார்வை அதில் படும் முன் முகம் சுளிக்கும் மர்மம் என்ன சாயி ?
எங்கோ இருக்கிறாய் என்றே எல்லா இடமும் தேடுகிறோம் சாயி ..
நெஞ்சுக்குள்ளே இருந்துகொண்டு தினம் நாடகம் ஆடுகிறாய் சாயி ... 🥇🥇🥇
எதுவும் இல்லை எனில் தெய்வம் உண்டு என்றே அருளாயே அருணாசலா
தெய்வம் உண்டு எனில் உன்னில் உண்டு என்னில் உண்டு என்றே உணர வைத்தாயே அருணாசலா ...
உணரும் உணர்வுகள் ஊமை ஆனபின் சட்டை எனும் உடல் மாற்ற வேண்டும் என்றே ஓங்கி உரைத்தாயே அருணாசலா
🥇🥇🥇
வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
சொற்பிறப்பியல்
இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும்.
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்).
#சமசுக்கிருத_வேதங்கள்:
ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்
என்பனவாகும். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர். வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர்.
வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.
அவையானவை:
பிரமாணம் எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.
#வரலாறு
வேதங்களில் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின் போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது. அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமசுக்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும்[மேற்கோள் தேவை] எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.
விசய நகரப் பேரரசை ஆண்ட முதலாம் ஹரிஹரர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும்
வகைப்படுத்தப்படுவதுண்டு.
#ரிக்_வேதம்
இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது[2]. இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது. மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும். ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர். மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல் , பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன. மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன. ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.
#பிந்தைய_வேதம்
பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன. பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன. முந்தைய வேதகாலங்களில் கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர்.
#யசுர்_வேதம்
இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும்.
#சாம_வேதம்
இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.
#அதர்வண_வேதம்
அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
வேத இலக்கியங்கள்
நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும். வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன.
👌👌👌👌👌💐💐💐
यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गा-
स्तथैवापदः सन्निधौ सेविनां मे ।
इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं
सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே |
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||
ன்னு இந்த ஸ்லோகத்தை பார்த்தோம்.
எந்த பக்தர்கள் முருகப் பெருமானை திருச்செந்தூர்ல சேவிக்கறாளோ, அவாளுக்கு எல்லா விதமான ஆதி வியாதிகளும் நிவர்த்தி ஆயிடும்-னு இதற்கு அர்த்தம். இன்னிக்கு லோகம்
பக்கத்துல கந்த மாதன பர்வதம் அப்படீன்னு ஒண்ணு இருக்கு.
இப்ப வள்ளி குஹை-ன்னு ஒண்ணு காண்பிக்கிக்கறா. அதுதான் கந்தமாதன பர்வதம்-னு சொல்றா. முருகப் பெருமான் மலையில குடியிருப்பார், மலைதோறும் முருகன்ன்னு சொல்லுவா இல்லையா? இவரோட அப்பா, பரமேஸ்வரன் கைலாச மலையில இருக்கார் இல்லையா?
இப்ப வள்ளி குஹை-ன்னு ஒண்ணு காண்பிக்கிக்கறா. அதுதான் கந்தமாதன பர்வதம்-னு சொல்றா. முருகப் பெருமான் மலையில குடியிருப்பார், மலைதோறும் முருகன்ன்னு சொல்லுவா இல்லையா? இவரோட அப்பா, பரமேஸ்வரன் கைலாச மலையில இருக்கார் இல்லையா? அதனால பிள்ளையும் மலைகளை ரொம்ப விரும்பற ஸ்வாமி. அப்படி அந்த கந்தமாதன பர்வதத்துல விளங்கக் கூடிய முருகனை, அந்த வள்ளி குஹையில முருகனும், வள்ளியுமா இருக்கற ஒரு சன்னிதி இருக்கு. திருச்செந்தூர் போனா அங்கேயும் போய் அவசியம் ஸ்வாமி தர்சனம் பண்ணணும். பண்ணிணா அதோட பலன் என்னன்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.
பக்கத்துல கொஞ்சம் தூரம் நடந்து போனா அங்க கந்தமாதான மலை, வள்ளி குஹை இருக்கும். அங்க கொஞ்சம் படி ஏறுகிற மாதிரி இருக்கும். அங்க போய் ‘அதிரூடாஹ பவந்தி’,
யார் அந்த மலையில ஏறுகிறாளோ, அங்க ஸ்வாமி தர்சனம் பன்றாளோ,
‘தே’ அவர்கள் அப்போதே,
‘ராஜதே பர்வதே’ ராஜதம்னா வெள்ளினு அர்த்தம். கைலாச மலை, வெள்ளி மலை.
கைலாச மலையில் ‘அதிரூடாஹ’ ஏறி வாசம் பண்ணுகிறவர்களாக, அதவாது கைலாசத்துக்கு போன புண்யம் கிடைக்கும் அப்படீன்னு ஒரு அர்த்தம்
ஹ்ருதயே பஜந்தி ஸ த்வம் போ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! முனிவர்கள் யமம் நியமம் முதலிய எட்டு அங்கங்களுடன் உம்மை ஹ்ருதயத்தில் தியானித்து ஸேவிக்கிறார்கள். உமது திருவடி எனக்கு சரணம்.
மிவ த்வயி ஜகந்தி பாந்தி விபோ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! கயிற்றில் பாம்பு தோற்றம் போலும், சிப்பியில் வெள்ளித் தோற்றம் போலும் உம்மிடம் உலக மெல்லாம் தோற்றமளிக்கின்றன. உமது திருவடி எனக்கு சரணம்.
விது ரவதி லோகமகிலம் போ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஹேஸாம்ப!ஸதாசிவ!உமது இருளைப்பெற்று ஸ்தானத்தையும் பெற்று சந்திரன் (விஷ்ணு) உலகமனைத்தையும் காக்கிறார். உமது திருவடிகள் என்னை சரணளித்து காக்க வேணும்.
மௌர்வீ-சர பராக்ருதாஸுர போ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஹேஸாம்ப!ஸதாசிவ!பூமியையும், அதைதரிக்கும் ஆதிசேஷனையும், அதில் உறங்கும் விஷ்ணுவையும் முறையே தேராகவும் ஞாண கயிறாகவும், பாணமாகவும் பெற்று அசுரர்களையழித்த ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம். விபோ!உமது திருவடிகளே சரணம்.
துர்வ்ருத்த கர்வ ஹரண விபோ !
ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர
சரணம் மே தவ சரணயுகம் !!
ஹேசர்வ!எல்லோரிடத்திலும் உத்தம தேவரே!வேண்டியவை எல்லாம் கொடுப்பவரே!தீயதையெல்லாம் போக்குபவரே!விபோ!ஸாம்ப, ஸதாசிவ, சம்போ சங்கர!எனக்கு உமது திருவடிகளே சரணம்.
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
தங்களது இந்த ஆன்மிக பணி தொடர எல்லாம் வல்ல பச்சை புடவைக்காரியிடம் வேண்டிக் கொள்கிறேன்...
🙏🙏🙏🙏🙏🙏
மந்தஸ்மிதம். 🙏🙏🌺🌹
இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே! - 34
ஒருநாள்...இரவு நேரம்..பெரும் மழை..
எம்பெருமானை சேவிக்க வந்த பொய்கையாழ்வார் மழைக்கு ஒதுங்க எண்ணினார்.ஒரு மாளிகை திறந்திருந்தது.அம்மாளிகையின் கதவைத் தட்டினார்
மிருகண்டு முனிவர் வந்தார்..
"மழை நிற்கும் வரை இங்கு தங்க இடம் உண்டா?" என்றார் பொய்கையாழ்வார்
இந்த இடைக்கழிதான் உண்டு என்றபடியே ஒரு ரேழியைக் காட்டிவிட்டு போனார்
சின்ன ரேழி..வெளிச்சமும் இல்லை.ஒருவர் மட்டுமே படுக்க முடியும்.சரி , அங்கேயே உறங்கி விட்டு, காலையில் பெருமாளை சேவிக்கலாம் என எண்ணினார்
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை.பொய்கையாழ்வார் போய்க் கதவைத் திறந்தார்.இப்போது பூதத்தாழ்வார்
"மழைக்கு த்ங்க இடம் கிடைக்குமா"?
"சின்ன இடைக்கழி உள்ளது.ஒருவர் படுக்கலாம்.இருவர் இருக்கலாம்.வாருங்கள்"
பூதத்தாழ்வார் உள்ளே போனார். மீண்டும் கதவு தட்டப்பட்டது.
"வெளியே மழை.தங்க இடம் உண்டா?'
"ஒரு இடைக்கழி இருக்கிறது.ஒருவர் படுக்கலாம்.இருவர் இருக்கலாம்.மூவர் நிற்கலாம்.வாருங்கள்"
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாமல் இருட்டு
அதே சமயத்தில், சந்நிதியில் வந்து நம்மைப் பாடி மங்களாசாசனம் செய்வார்கள் என எதிர்பார்த்த திருவிக்கிரமன், அவர்களது பாசுரங்களைக் கேட்க, அவர்கள் புலன்களுக்கு அகப்படாமல் இடைக்கழியில் வந்து நெருங்கி நின்றார்
(இதனாலேயே..இங்கு பெருமாளுக்கு நெருக்கி நின்ற பெருமாள் என்று பெயர்)
பின், அவர்கள் ஒவ்வொரு திவ்வியத்தலங்களுக்கும் சென்று ஆளுக்கு நூறு பாசுரம் மூலம் 300 திருவந்திகளைப் பாடி..முதலாழ்வார்கள் என்று சிறப்புப் பெற்றனர்
அபப்டிப்படட் எம்பெருமானை இடைக்கழியில் இருட்டில் கண்ட பெருமை எனக்கு இல்லையே என்றாள் திருக்கோளூர்ப் பெண்
இம்மைக்கும் மறுமைக்கும் துனைவரும் தெய்வம்!
மும்மை மலமறுத்து முக்திதரும் தெய்வம்!
வாயற்ற உயிர்களையும் வாழ்விக்கும் தெய்வம்!
பேய் என்ற போதினிலும் பொறுத்தருளும் தெய்வம்!
மாயப் பிறப்பறுக்கும் மகாதேவ தெய்வம்!
தாயாக மாறிவரும் தந்தையந்த தெய்வம்!
சிலந்திக்கும் குருவிக்கும் சிறப்பளித்த தெய்வம்!
வலம்தந்த குரங்கிறகு வாழ்வளித்த தெய்வம்!
எலியொன்று திரி தீண்ட உலகாளும் புலியாக
நில உலகில் புகழ்வீச வரம் தந்த தெய்வம்!
கல்லினுள் தேரைக்கும் கதியான தெய்வம்!
கருவான உயிருக்குப் பொருளான தெய்வம்!
சொல்லுக்குள் அடங்காத சிவமெனும் தெய்வம்!
சொல்லிவிடும் போதில் சிறப்பீயும் தெய்வம்!
அடியாரைக் காக்கும் அன்புமிகு தெய்வம்!
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
படைப்போற் - பூமியில் படைத்தலை செய்யக்கூடிய உயிரிகளுக்கு,
படை - ஆதார உயிரி, பழையோன் - தொன்மையானவன், படைத்தவை - உருவாக்குதல்
பூமியில் படைத்தலை செய்யக்கூடிய உயிரிகளுக்கு வேண்டிய ஆதார உயிரியை (கரு முட்டை, விந்து) உருவாக்கியவன், மிகவும் தொன்மையான இறைவன் என்று மேற்கண்ட வரி மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்
.
காப்போற் - பெண்கள், கா - receptacle (one that receives and contains something : CONTAINER), கடவுள் - உள்ளே நுழைத்து, காப்பவை - பாதுகாத்தல்
பெண்களின் கருப்பையின் உள்ளே நுழைத்து பாதுகாத்தல் என்கிற பொருளில் மேற்கண்ட வரி வருகிறது. அதாவது ஆன்மாக்கள் மீண்டும் பூமியில் உடலெடுத்து பிறக்கும் பொழுது பாதுகாப்பாக கருப்பையின் உள்ளே நுழைத்து பாதுகாக்கிறான் என்கிற பொருளில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
இறைவன் இந்த அண்டத்திற்கு நன்மை என்றால், இறைவனால் முதலில் முட்டையையும் கொண்டு வர முடியும் இல்லையெனில் கோழியும் முதலில் கொண்டுவர முடியும்.
ஒரு மீனை எடுத்துக் கொண்டால், அது தண்ணீரில் வாழ்வதற்கு ஏற்ப உடலமைப்பு அதனுடைய உள் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. அதுபோல் பறவைகளுக்கு விலங்குகளுக்கு செடி கொடிகளுக்கு மரங்களுக்கு மனிதர்களுக்கு என ஒவ்வொரு உயிருக்கும் மிக அழகாக அந்த உயிர்களுக்கு தேவையான உடல் அமைப்பையும் அதன் உள்ளுறுப்புகளையும் படைத்தவன்.
இறைவனை உணர்வதன் மூலம் நமக்கு கிடைப்பது அந்த ஒரு மன நிறைவு. நாம் செய்யும் பாராயணங்கள் நமக்கு அந்த இறைவனை உணர்வதற்கு அருள் புரியட்டும் என்கிற பிரார்த்தனையுடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
காரணம் சொல்லாதே !
|| ராதேக்ருஷ்ணா ||
பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !
உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !
நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள்
வாழ்விலும் இருந்தது !
அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள் !
நீயும் அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !
தகப்பன் கொடுமைக்காரனா ?
ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !
தாயால் கெட்ட பெயரா ?
பரதனைப் போல் பக்தி செய் !
அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ?
தியாகராஜரைப் போல் பக்தி செய் !
குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா ?
குசேலரைப் போல் பக்தி செய் !
மனைவி அடங்காப் பிடாரியா ?
சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !
கணவன் கொலைகாரப் பாவியா ?
மீராவைப் போல் பக்தி செய் !
புகுந்த வீட்டில் கொடுமையா ?
சக்குபாயைப் போல் பக்தி செய் !
பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ?
பூந்தானத்தைப் போல் பக்தி செய் !
பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா ?
நாரதரைப் போல் பக்தி செய் !
நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ?
விதுரரைப் போல் பக்தி செய் !
நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ?
கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !
உடலில் வியாதியால் வேதனையா ?
நாராயண பட்டத்ரியைப் போல் பக்தி செய் !
யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ?
ஜயதேவரைப் போல் பக்தி செய் !
இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ?
குந்திதேவியைப் போல் பக்தி செய் !
மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ?
மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !
சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ?
பாண்டவர்களைப் போல் பக்தி செய் !
உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ?
ஜயமல்லரைப் போல் பக்தி செய் !
பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?
கைகேயியைப் போல் பக்தி செய் !
உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ?
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !
குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ?
வால்மீகியைப் போல் பக்தி செய் !
கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ?
பீஷ்மரைப் போல் பக்தி செய் !
உன் கணவன் கஞ்சனா ?
புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !
வியாபாரத்தில் நஷ்டமா ?
சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !
உன் கணவன் நாஸ்திகனா ?
மண்டோதரியைப் போல் பக்தி செய் !
உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ?
விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !
கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ?
சுநீதியைப் போல் பக்தி செய் !
குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ?
ஜடபரதரைப் போல் பக்தி செய் !
நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ?
அக்ரூரரைப் போல் பக்தி செய் !
ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ?
சோகாமேளரைப் போல் பக்தி செய் !
சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ?
ரந்திதேவரைப் போல் பக்தி செய் !
உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?
யசோதையைப் போல் பக்தி செய் !
பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ?
தேவகியைப் போல் பக்தி செய் !
அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ?
கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !
பிறவிக் குருடனா ?
சூர்தாஸரைப் போல் பக்தி செய் !
உடல் ஊனமுற்றவரா ?
கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !
நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ?
சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !
நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ?
பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !
உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ?
பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !
வாழ்க்கையே பிரச்சனையா ?
மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப்
போல் பக்தி செய் !
இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !
பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு
என்றும் ஒரே ஆதாரம் !
அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும்
உனக்கு சமாதானம் இல்லை !
இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை
நீ தொலைத்தது போதாதோ ?
இனிமேல் காரணம் சொல்லாதே !
பகவானிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!
ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !! ஹரே கல்கி !!!
நட்புடன்
ச.கணேசன். மதுரை🙏🙏
She is in the form “sa” (स), the first bīja of the third kūṭa known as śakti kūṭa and the twelfth bīja of the entire Pañcadaśī mantra.
*222. Samarasā समरसा*💐💐💐💐 Samarasa means equal feelings . She is "rasa" which means essence and the quality of any external objects , does not modify Her quality . 👣👣👣
*223. Sakalāgamasaṁstutā सकलागमसंस्तुता*👍👍👍👍👍 She is praised in all traditional doctrines 👏👏👏
*224. Sarvavedāntatātparyabhūmiḥ सर्ववेदान्ततात्पर्यभूमिः*👌👌👌 She is complete knowledge
*225. Sadasadāśrayā सदसदाश्रया*💐💐💐👌👌👌
She is the connecting link between Brahman with form and Brahman without form 🌹🌹🌹
*226. Sakalā सकला*💐💐💐 She is in the form of 64 kalas or arts 💥💥💥
*227. Saccidānandā सच्चिदानन्दा* 💐💐💐 Her status as the Brahman
There are several meanings to the word sādhya.
This nāma says that She can be attained and this nāma stops at that.
How She can be attained is not explained in this nāma and the path of attaining Her is to be construed from other nāma-s. She can be attained in two stages.
The first stage is knowing Her grandeur and the second stage is attaining Her Grace and always former leads to the latter.
The various ways of attaining Her are explained by Śiva through different Tantra śāstra-s.
However, the best way to have Her Grace is only contemplating Her perpetually. When devotion begins to transform into love for Her, She begins to shower Her Grace and Her Grace can be experienced through bliss.👣👣👣
ஸர்வலோகவச்யம்
ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தன முகுல ரோமவலி லதா
கலாவாலம் குண்டம் குஸுமஶர தேஜோ ஹுதபுஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர் கிரிஶ நயனானாம் விஜயதே 78
உன்னுடைய நாபியானது கங்கை நீரின் சுழலா, ஆனால் அசையாமல் இருக்கிறதா ?
நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோமவரிசையாகிற கொடியின் கிழங்கு இருக்கும் பாத்தியா ?
மன்மதனுடைய ஒளியாகிய அக்கினியின் ஹோமகுண்டமா ?
ரதியினுடைய விளையாட்டு வீடா ?
பரமசிவனுடைய கண்கள் செய்த தவம் சித்திக்கும் குகையின் துவாரமா ?
இன்னதென்று கூறமுடியாததாக அது விளங்குகிறது.🙏🙏🙏
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 89*
🌸🌸🌸🌸
ஶிவப்ரியா, ஶிவபரா, ஶிஷ்டேஷ்டா, ஶிஷ்டபூஜிதா |
அப்ரமேயா, ஸ்வப்ரகாஶா, மனோவாசாமகோசரா ‖ 89 ‖
🌸🌸🌸🌸
शिवप्रिया, शिवपरा, शिष्टेष्टा, शिष्टपूजिता |
अप्रमेया, स्वप्रकाशा, मनोवाचाम गोचरा ‖ 89 ‖
🌸🌸🌸🌸
sivapriyaa, sivaparaa, sishteshtaa, sishtapujitaa |
aprameyaa, svaprakaasaa, manovaachaama gocharaa ‖ 89 ‖
🌸🌸🌸🌸
*
🌸🌸🌸🌸
ஓம் ஶிவப்ரியாயை நம;
ஓம் ஶிவபராயை நம;
ஓம் ஶிஷ்டேஷ்டாயை நம;
ஓம் ஶிஷ்டபூஜிதாயை நம;
ஓம் அப்ரமேயாயை நம;
ஓம் ஸ்வப்ரகாஶாயை நம;
ஓம் மனோவாசாமகோசராயை நம;
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம் (409 / 415)*
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*410. ஶிவபரா* - சிவனை பரனாக ( தனக்கு மேம்பட்டவராக) கொண்டவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*411.ஶிஷ்டேஷ்டா* - சிஷ்டா்களை (குரு) கூறும் வேத சாஸ்திரங்கள் நற்பண்பு, ஒழுக்கம், சீலம், பக்தி கொண்டவர்களை அம்பாளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
🌸🌸🌸🌸
*412.ஶிஷ்டபூஜிதா*- பக்தர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
🌸🌸🌸🌸
*413 அப்ரமேயா * - எல்லையற்றவள் // அறிந்துகொள்ளவே முடியாதவள்.
🌸🌸🌸🌸
*414.ஸ்வப்ரகாஶா* - ஓளியைத் தன் தனித்தன்மையாகக் கொண்டவள் // தானே சுடர் விட்டு ஒளி வீசுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
🌸🌸🌸🌸
*415.மனோவாசாமகோசரா* - மனத்திற்க்கும் வாக்கிற்க்கும் எட்டாதவள் ஸ்ரீ லலிதாம்பாள்.
🌸🌸🌸🌸
(ஸ்ரீ கருட பகவான் )
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அமிர்த கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய சர்வ வக்கிர நாசனாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ , விஷ சர்ப்ப விநாசனாய ஸ்வாஹா....
Om Sree Kaarunyaya, Garudaya, Vedha Roobaya, Vinadha Puthraya, Vishnu Bakthi Priyaya, Amirtha Kalasa Hasthaya, Bahoo, Parakramaaya, Pakshi Raajaya, Sarva Vakkira Naasanaaya , Sarva Dosha, Sarpa Dosha, Visha Sarpa Vinaasanaaya Swaha...
நன்மைகள் கிட்டும் ... நன்றி
சுப்பிரமணிய சர்மா. S
கும்பகோணம்
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்... குளிர்ச்சி பொருந்திய அம்பிகை பொய்த் தவம் செய்தவர்களுக்கு (தனக்காக வேண்டிக்கொள்பவர்களுக்கும்) மெய்த்தவம் செய்தவர்களுக்கும் (பிறர் வாழ வேண்டிக்கொள்பவர்கள்) ஒரே மாதிரியான அருளை தருகிறாள் ..பலகோடி வருடங்கள் தவம் செய்து காண்பதற்கும் கிடைப்பதற்கும் அரிய அம்பாளிடம் போய் எவனாவது மன்னளிக்கும் செல்வமோ கேட்ப்பார் ? எவ்வளவு கேவலமாக இருக்கும் அது ... ஓரு ஏழை பார்க்க முடியாத ஒரு ராஜாவை பார்க்கிறேன் அவரிடம் என்ன கேட்க் வேண்டும் ? அரிய பொருளை கேட்க்காமல் அடுத்த வேலைக்கு சோறு வேண்டும் என்று கேட்பதைப் போல் அம்பாளிடம் இந்த மண்ணுலக ஆசைகளை வரமாக கேட்பது என்பது
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
👍👍👍👍
இம் மண்ணுலக ஆசைகளை கேட்க்காமல் வானுலக செல்வமும் குளிர்சி நிறைந்த அம்பாளின் திருஒளி முகமும் , ஞானமும் அழியா முக்தி தரும் வீடும் அன்றோ வரமாக கேட்டுப் பெறவேண்டும் .
இசை போல் பேசும் நயம் கொண்டவள் அம்பிகை . அவள் பரிமளம் போன்ற நறுமணம் தன்னகத்தே கொண்டவள் .. சியாமளா வழிப்பாட்டில் யாமளா என்று ஒரு ஆகமம் உள்ளது .. அதன் நாயகி யாமளா . பசுங் கிளியாக இருப்பவள் அம்பாள் ..
பல வருடங்கள் தவமிருந்து அம்பிகையின் காட்சி கிடைக்கும் போது இந்த மண்ணுலகத்தில் இருக்கும் அழியும் பொருட்களை அவளிடம் கேட்க்காமல் என்றும் ஆனந்தம் தரும் மோக்ஷத்தை கேட்டு பெற வேண்டும் . அவள் யாமளை , கேட்டதை தருபவள் . குளிர்ச்சியானவள் . பரிமள சுகந்தம் கொண்டவள் .. பைங்கிளியாய் இருப்பவள் .. எல்லாம் கொடுப்பாள் எதையும் கொடுப்பாள் .
*பதிவு 763*🥇🥇🥇
*US 755*
*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.
💐💐💐🌷🌷🌷
*31 வது ஸ்தபகம்*👌👌👌
*ஏகத்ரிம்ஸ ஸ்தபக*
நாம வைபவம் ( உபஜாதி வ்ருத்தம்)👌👌👌
இந்த ஸ்தபகத்தில் தேவியின் திருநாமங்களின் மகிமை விளக்கப்படுகிறது 🥇🥇🥇
தாம் சக்தி மாத்யா மகிலேஷூ ஸூப்தாம்
யாவத் ப்ரபோதம் முஹூராஹ் வயஸ்வ
ப்ரபுத்யதே ஸாயதி கின்ன வஸாத்யம்
ஆத்ம ஞானம் ஏற்பட்ட பிறகு நமக்கு என்ன குறை உண்டாகும் ? நாம் எதையும் சாதிக்கலாம் .. 🥇🥇🥇
*பதிவு 188*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
2. பாதாரவிந்த சதகம்
ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...
தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇
65
ஸமீபூ தே சாஸ்த்ர ஸ்மரண ஹலசங்கர்ஷண வசாத்
ஸதாம் சேத க்ஷே த்ரே வயதி தவ காமாக்ஷி
சரணௌ
மஹாஸம் வித் ஸஸ்ய ப்ரகர வர பீஜானி கிரிஸூதே
தேவியின் சரணாரவிந்தத்தில் ஆத்ம ஞானம் எனும் பயிர்கள் செழிப்பாக வளரும் அதை நாம் தான் அம்பாளிடம் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் 👍👍👍
யாகம் செய்கிற வேதியர்கள் தொழுகிற தெய்வம் என்று திருப்பரங்குன்றத்தில் இருக்கிற முருகனை சங்க நூலான திருமுருகாற்றுப்படை சொல்கிறது. முருகன் அவதாரமான ஞானசம்பந்தர் தாம் வேதத்தை வளர்க்கவே வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார். “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமண்” என்றும், “மறை வழக்கமிலா மாபாவியர்” என்றும் சம்பந்தரே சொல்லியிருக்கிற சமணர்களை வென்று மறுபடி வைதிக தர்மத்தை நிலைநாட்டத்தான் அவர் அவதாரம் பண்ணினார். இன்று)
ஜைனர்கள் ‘விப்ர க்ஷயம்’ என்று சுவடியில் எழுதி ஆற்றில் போட்டதாகச் சொல்கிறார்கள். ‘விப்ர க்ஷயம்’ என்றால் ‘பார்ப்பானே ஒழிக’ என்று அர்த்தம். வேத வேள்விகள் பரம அஹிம்ஸாவாதிகளான சமணர்களுக்கு விரோதமானதால் இப்படி எழுதி வெள்ளத்தில் போட்டதாகச் சொல்கிறார்கள். அது முழுகிப் போயிற்று.
“
அது சரி; ஆனால், வேதத்தை ஓதிக் கொண்டு, யாகம் செய்து கொண்டிருக்கிற ஒரு கூட்டம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு மகான் நினைப்பாரா? சர்வ ஜனங்களும் சமஸ்தப் பிராணிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் மகானின் ஸதா கால நினைப்பாக இருக்கும். ஞான சம்பந்தர் மேலே சொன்ன பாடலை இப்படித்தான் ஆசீர்வாதம் செய்து முடிக்கிறார்:
“லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” என்பது தமிழ்க் குழந்தையின் அருகில் இப்படி அருள் சொட்ட வெளிவந்திருக்கிறது. சரி, வையகம் என்றால் அதில் எல்லா ஜீவராசிகளும் ஜாதிகளும் அடக்கம்தானே? அப்படியானால் வையகம் முழுவதும் துயர் தீருகிறபோது, தானாகவே அதிலிருக்கிற அந்தணர்களும் வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். அவர்களை எதற்கு, வையகத்தைச் சேராதவர் மாதிரி தனியாகப் பிரித்து, முதல் ஸ்தானம் கொடுத்து, “வாழ்க அந்தணர்” என்று சொல்ல வேண்டும்? பிராம்மண ஜாதியில் பிறந்ததால் சம்பந்த மூர்த்தி ஸ்வாமிக்குத் தனி அபிமானமா? ஒரு மஹானுக்கு இப்படி சின்ன அபிமானங்கள் இருப்பதாகச் சொல்வது நன்றாகவேயில்லையே!
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
சரி, ‘பசுக்களை – ஆனினத்தை – தனியாகச் சொன்னது ஏன்?’ என்று கேட்பீர்கள். லோகோபகாரம் செய்ய வேண்டும் என்கிற பரம நியமங்களுடன் வாழ்ந்து வேதங்களைச் சொல்லி ஆஹுதி செலுத்தி யாகத்தைச் செய்பவர்கள் என்பதால் அந்தணர்களைச் சொன்னது போலவேதான், யாகத்தில் ஆஹுதியாகிற நெய்யையும் பாலையும், எரிப்பதற்கு உதவுகிற சாணத்தையும் தருகிறது, என்பதாலேயே ஆனினத்தைத் தனியாக குறிப்பிட்டார்.
ஆழ்க தீயதெல்லாம் ! அரன் நாமமே
சூழ்க ! வையகமும் துயர் தீர்கவே !
என்று, பின் இரண்டு வரிகளில் பாடுகிறார்.
ஆழ்க தீயதெல்லாம் ! அரன் நாமமே
சூழ்க ! வையகமும் துயர் தீர்கவே !
என்று, பின் இரண்டு வரிகளில் பாடுகிறார்.
(திருவேடகம் ஏடு எதிர் ஏறிய உற்சவம்
ஒரு நீதிபதியின் ஒப்புதல் வாக்குமூலம்!
நீதிபதி சூரியமூர்த்தி கூறுகிறார்,
"எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக(!!) இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் ,பிறகு அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்புவார்!!!
காலங்கள் உருண்டோடின. நான் சட்டம் பயின்று, வேலை கிடைத்து, படிப்படியாக பாண்டிச்சேரியின் நீதிபதியாக உயர்ந்துவிடடேன். இந்த காலங்களில் நான் தீவிர சமய நம்பிக்கையாளனாகவும் மாறி இருந்தேன். ஒரு நாள் எனக்கு அந்த இஸ்லாமிய நபரின் நினைவு வந்தது!!! உடனடியாக நேரில் எங்கள் தென்னந்தோப்புக்கு சென்று, அவரிடம், இப்பொழுதாவது கற்றுத் தருவீர்களா??? என்று கேட்க, ஆச்சரியத்துடன் என்னை நோக்கிய அவர், போய் குளித்துவிட்டு வா உனக்கு உபதேசிக்கிறேன் என்றார்.
நான் குளித்து முடித்து வந்ததும், என்னைக் கீழே அமரச் செய்து என் காதில் அவர் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாளவில்லை!!! ஏனெனில் அவர் ஓதியது திருநாவுக்கரசர், விஷம் கண்டு இறந்து விட்ட அப்பூதியடிகளின் மகனை காப்பாற்ற பாடிய தேவாரப் பாடல்!!!.
அவர் அந்த முழு பதிகத்தையும் என் காதில் ஓதி முடித்தவுடன், இது எங்கள் தேவாரப்பாடல் ஆயிற்றே எனக்கேட்க?? அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது. என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்தார் அதைக்கொண்டு நான் வைத்தியம் செய்கிறேன் என்று கூறி எனக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்''.
இன்னதென்று தெரியவில்லை!!, அதன் அர்த்தமும் தெரியவில்லை!! அதன் மூலமும் உணரவில்லை!!! ஆனாலும் நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கிறது.
"தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை. அவைகள் தமிழ் வேதத்தின் ஒரு அங்கம். நம் தமிழ் மக்கள் குறைதீர்க்க இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம்''' இது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?!!
இம்மைக்கும் மறுமைக்கும் துனைவரும் தெய்வம்!
மும்மை மலமறுத்து முக்திதரும் தெய்வம்!
வாயற்ற உயிர்களையும் வாழ்விக்கும் தெய்வம்!
பேய் என்ற போதினிலும் பொறுத்தருளும் தெய்வம்!
மாயப் பிறப்பறுக்கும் மகாதேவ தெய்வம்!
தாயாக மாறிவரும் தந்தையந்த தெய்வம்!
சிலந்திக்கும் குருவிக்கும் சிறப்பளித்த தெய்வம்!
வலம்தந்த குரங்கிறகு வாழ்வளித்த தெய்வம்!
எலியொன்று திரி தீண்ட உலகாளும் புலியாக
நில உலகில் புகழ்வீச வரம் தந்த தெய்வம்!
கல்லினுள் தேரைக்கும் கதியான தெய்வம்!
கருவான உயிருக்குப் பொருளான தெய்வம்!
சொல்லுக்குள் அடங்காத சிவமெனும் தெய்வம்!
சொல்லிவிடும் போதில் சிறப்பீயும் தெய்வம்!
அடியாரைக் காக்கும் அன்புமிகு தெய்வம்!
பாராயணம் பல செய்தோம், உள்ளமதில் உன்னை உணரும் பாக்கியம் பெற்றோம்! ஆலயக் கதவுகள் மூடிய பொழுது நீ அங்கிங்கெனாதபடி நிறைந்து இருக்கிறாய் என்பதை உணர்ந்தோம்! முக்கியமாய் பல்வேறுவிதமான தேவையற்ற கருமேகம் என்னும் எண்ணங்களால் மறைக்கப்பட்டிருந்த உன்னை உணரும் பேறு பெற்றோம்! ஆலயம் அது மூடப்பட்டிருந்தது ஆனால் ஆத்மலிங்கம் தன்னை அனுதினமும் பூஜை செய்தோம்! இன்று ஆலயங்கள் திறக்கப்பட்டு விட்டன, இருட்டான கருவறையில், விளக்கொளியில், உன் முகம் காணும் பொழுது எங்கள் எங்கள் உள்ளத்தில் இருக்கும் உன்னையும் உணர்ந்து , இனி வரும் நாட்களை, உன் வழிகாட்டுதலை உணர்ந்து உன் அன்பினை உணர்ந்து, உன் கருணையை உணர்ந்து, எங்களின் கடமைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அன்புடன் செய்வோம். சிக்கென பிடித்தோம் உன் பாதங்களை! எங்களுக்கு அருள்புரிந்து, நீ காட்டும் வழியை புரிந்து நடக்க எங்கள் மீது கருணை காட்டுங்கள். இறைவனே உன் பாதங்களை உன் திருவடிகளை அன்புடன் வணங்குகிறோம்.உன் மேல் நாங்கள் என்றென்றும் அன்பு உள்ளவர்களாக இருக்க ஆசிர்வதியுங்கள்! எங்கள் இன்னல்களை நீக்கி நிம்மதிப் பெருவாழ்வு அருளுங்கள். உலகுக்கெல்லாம் தாயும் தந்தையும் ஆனவனே உன் திருவடிகள் பணிந்து வேண்டுகின்றோம். இந்த கொடிய நோயிலிருந்து உலக மனிதர்களை காப்பாற்றுங்கள், பசியிலிருந்து காப்பாற்றுங்கள். உங்கள் பாதம் பணிந்து கேட்கின்றோம்! உலக மக்களின் பசியையும் நோயையும் தீர்த்து அருள் புரியுங்கள். இரட்சித்தருள்வாய் ஈசனே, இறைவா, ததாஸ்து!ஓம் சோமாசிமாறர் நாயனார் போற்றி , ஓம் சேக்கிழார் பெருமான் போற்றி! ஓம் மாணிக்கவாசகர் போற்றி, ஓம் அப்பர் போற்றி, ஓம் திருஞானசம்பந்தர் போற்றி, ஓம் சுந்தரர் போற்றி! நன்றி இறைவா நன்றி ஓம் நமசிவாயா ஓம் சாய்
ராமா ராமா என்றே சொல்லி கற்கள் மிதக்க ஆரம்பித்தன .... கற்கள் செய்த புண்ணியம் கற்பனைக்கும் எட்டாத காரியம் ...
மிதக்கும் ஒரு கல் சொல்லியது .... திரும்பி வரும் போதும் ராமன் என்னை மிதித்து வர வேண்டும் ... சீதையும் அப்படி வந்து விட்டால் செய்வேன் பொங்கல் அம்பாளுக்கு
போடி பைத்தியம் ஆசை ஆசை ...
ஒரு முறை ராமன் நடந்தால் பிறவி வினை போய் விடும் ...
திரும்பி அவன் ஒரு வேளை வந்தால் நம்மை இங்கு காணாமல் புரிந்து கொள்வான் ...
வைகுண்டம் நாம் சென்று விட்டோம் என்றே ...
இன்னொரு கல் சொல்லியது ....
அடியே ராமன் இன்னொரு முறை நடந்தால் வேண்டாம் அந்த வைகுண்டம் . அவன் மிதித்து நடந்தால் அதுதான் என் வைகுண்டம் ....💥💥💥
God bless