பச்சைப் புடவைக்காரி - முத்து முத்தான கோமேதகங்கள் ( 159)


பச்சைப் புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

முத்து முத்தான கோமேதகங்கள்

(159)



ரவி  உனக்கு ஒரு சம்பவத்தைக் காட்டப்போகிறேன் --- இறைவன் நாமங்கள் என்றுமே கவசமாகத்தான் இருக்கும் - 

ஆழமான நம்பிக்கை வேண்டும் - அவ நம்பிக்கையுடன் வேண்டக்கூடாது -- உன் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "Trust deficit is more dangerous  than  Fund deficit". 

காட்சி மாறுகிறது   

கணபதி சாஸ்த்திரி என்றால் அந்த அக்ஹரகாரத்தில் தெரியாதவர்களே யாரும்  முடியாது -- 

அங்குள்ள சிவன் கோயிலில் அர்ச்சனை செய்வதுடன் கணீர் என்ற குரலில் , தேவாரமும், திருவாசகமும் சொல்ல ஆரம்பித்தால் அதை கேட்க ஈசன் மட்டும் அல்ல 63 நாயன்மார்களும் அந்த கோயிலுக்கு வந்துவிடுவார்கள் -- 

அவர் குரல்வளத்தைக்கண்டு பொறாமை படாதவர்களே யாரும் இல்லை --- 

"என்ன ஓய் உமக்கு என்ன!! -- நீர்  பாட ஆரம்பித்தால் அந்த குரலில் கலைவாணீ மயங்கிப்போய் வேக வேகமாக தன் வீணைவாசிப்பதை நிறுத்திக்கொள்வாள் - என்ன சாரீரம் ஒய் உமக்கு -- போன பிறவியில் அம்பாளை நீர்  தேனால் அபிஷேகம் செய்தீரோ ? - இப்படித்தான் எல்லோரும் அவரை கேட்பார்கள் .

அவருக்கு அதில் எல்லாம் கர்வமே இல்லை -- அவரைப்பொறுத்த வரையில் குரல் அம்பாள் தந்தது -- அதன் மூலம் வரும் வார்த்தைகள் அவள் தருவது - 

எப்படி அந்த வார்த்தைகள் அமைய வேண்டும் என்று அவள் நினைக்கிறாளோ அப்படித்தான் அமையும் - இதன் நடுவில் நான் யார் ? என்னால் என்ன முடியும் ? இப்படி எல்லோரிடம் சொல்லிக்கொள்வார் - 


சியாமளா தண்டகம் அவர் பாடி கேட்க வேண்டும் -- அந்த காளிதாசன் கூட இவர் மாதிரி அழகாக பாடி இருக்க முடியாது ... 

கணபதி சாஸ்த்திரிகள் திருமணம் செய்து கொண்டது சாவித்திரியை --- அவர் குரல் வளம் போல அவள் அழகுடையவள் --- அலங்காரம் எதுவுமே செய்துக்கொள்ளாமலேயே அம்பாள் மாதிரி இருப்பாள் ... 

பார்ப்பவர்கள் யாருமே கை எடுத்துக் கும்பிடும் உருவம் ...  இந்த தம்பதிகளுக்கு மட்டும் எனோ இறைவன் மழலை செல்வத்தை மட்டும் கொடுக்கவே இல்லை - அவர்கள் அதை ஒரு குறையாகவே நினைக்கவில்லை --

இதோ லலிதாம்பிகை சன்னதியில் குழந்தையாக சிரித்துக்கொண்டிருக்கிறாள் -- இவள் எங்களுடன் இருக்கும் போது வேறு குழந்தை எதற்கு? - 

ஒரு காஞ்சன மாலையாகவும் பாண்டிய மன்னன் மலையத்துவஜனாகவும் அந்த லலிதாவை கொஞ்சி மகிழ்ந்தார்கள் - 

எந்த பண்டிகை விஷேசமாக இருந்தாலும் கணபதி சாஸ்திரிகளும் சாவித்திரியும் கோவிலில் கோலம் போட்டு அம்பாளுக்கு புத்தாடை வாங்கிக்கொடுத்து அவளுக்கு வீட்டில் செய்த விஷேசமான பலகாரங்களையே படைத்தார்கள் - 

பொழுது போகவில்லை என்றால்,  நான் போய் கொஞ்சம் நம்ப மகளை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கோயிலுக்கு போய் விடுவார் 

அவருக்கு முன் சாவித்திரி அங்கே அம்பாளுடன் பேசிக்கொண்டிருப்பாள் - 

ஊர் சற்றே வேறு மாதிரி இவர்களைப்பார்த்தாலும் அதற்காக இவர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை ... மாலை நேரம் தன் வீடு தேடி வரும் நண்பர்களுக்கு அம்பாளின் அருமையை மணிக்கணக்கில் பேசுவார்.


ஆப்³ரஹ்ம-கீட-ஜனனீ
– பிரம்மன் முதல் புழு வரை அனைத்து உயிர்களையும் பெற்ற அன்னை என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. அநேக-கோடி-ப்³ரஹ்மாண்ட³ ஜனனீ – அனேக கோடி அண்டங்களைப் பெற்ற அன்னை என்று இன்னொரு நாமம். 

லலிதா சகஸ்ரநாமமே ஸ்ரீமாதா என்று ஆரம்பித்து லலிதாம்பி³கா என்று முடிகிறது. மாதா, அம்பிகா என்ற சொற்கள் இரண்டுமே அன்னையைக் குறிப்பவை. உணர்வுள்ள உயிர்களில் மட்டுமல்ல, உணர்வற்ற ஜடப்பொருள்களிலும் உறைவது அவளது சக்தியே – 

சித்ச’க்தி: சேதனா-ரூபா, ஜட³ச’க்தி: ஜடா³த்மிகா. இவ்வுலகம் எங்கும் இறையே நிரம்பியுள்ளது என்ற உபநிஷத தத்துவத்தின் உட்பொருளே உலக அன்னையாகிய பராசக்தியின் திருவுருவமாக இலங்குகிறது. அவள் ஸர்வாந்தர்யாமினீ – அனைத்திலும் உட்பொருளாக இருப்பவள்.

ஏதவன் ஊர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார் ஆர் அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்?

என்று கேட்டு,

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ!

என்று விடையும் சொல்கிறது திருவாசம்.

கணபதி சாஸ்திரிகள் சொல்லும் பொது அவர் கண்கள் அம்பாளின் தடாகத்தில் குளித்துக்கொண்டிருக்கும் - பெருகி ஓடும் கண்ணீரை தடுக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார் - கேட்பவர்கள் நெகிழ்ந்து போவார்கள் 

பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிற்து  என்று சொல்லுவார் 

அவருக்கு வரும் ஒரே சந்தேகம் இதுதான் 

ஸ்ரீ லலிதா சஹாஸ்ரநாமத்தில் எப்படி ஒருவன் சிந்தித்து, தர்க்கித்து அப்படி ஒரு பெயரை உருவாக்க முடியும்? 

வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும். 

மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்… 

அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில். அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும். 

அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும். 

மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும். 



ஆயிரம் பெயர்கள். சகஸ்ரநாமம். லலிதா சகஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான். 

ஒவ்வொரு பெயரும் பிறிதில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள். அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள். அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர். அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்… சொல்லி சொல்லி அவரே ஆனந்த  நடனம் புரிவார். 

சாவித்திரிக்கு மசக்கை .... அம்மா - எங்கள் குரல் உன் காதுகளில் விழுந்துவிட்டதா ? எங்களுக்கு நீ போதுமே!! இந்த மழலை செல்வம் வந்துவிட்டால் அவளைத்தானே அதிகம் கொஞ்சுவோம் - 

உன்னை இப்படி அனுபவிக்க முடியாதே தாயே! -- கண்கள் குளமாகின --- அம்பாளுக்கே குழப்பமாகி விட்டது -- இதுவரை குழந்தை செல்வம் இல்லை இவர்களுக்கு என்று இப்பொழுது கொடுத்தால் அது வேண்டாம் என்கிறானே !! 



முதல் பிரசவம் --- கொடி குழந்தையை சுற்றிக்கொண்டு விட்டது - நீர்க்குடம் அதில் போதிய நீர் இல்லை - பிராணவாயு போதுமான அளவு குழந்தைக்கு செல்ல வாய்ப்பு இல்லை இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம் --- 

மருத்துவர்கள் கை விரித்து விட்டனர் - இரு உயிர்களில் ஒரு உயிரை மட்டுமே காப்பாற்றமுடியுமாம் ...... 

கணபதி சாஸ்திரிகள் கோயிலுக்கு ஓடினார் - அம்மா இந்த குழந்தை இடையில் வந்த பந்தம் - சாவித்திரி நீ எனக்கு கொடுத்த வரம் -- உன் நினைவால் உயிர் வாழ்பவள் - உன்னையே நினைப்பவள் - "க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா" என்னும் நாமத்தில். "க்ஷயம்" என்றால் குறை, "வ்ருத்தி" என்றால் அதிகம். 

இந்த பாவங்கள் ஏதுமில்லாதவள் அம்பிகை  - உன்னைத்தானே அனுதினமும் அவள் வணங்குவாள் --- அவள் உயிரை காப்பாற்று ...பல கோடிக்கணக்கிலான லக்ஷ்மிதேவிகளால் சேவிக்கப்படுவதால் அல்லவோ உன்னை  "கடாக்ஷ கிங்கரீபூத கமலாகோடி ஸேவிதா"  என்று அழைக்கிறோம் -- 

கண்களில் கண்ணீர் மல்க ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாமத்தை  சொல்லிக்கொண்டே போனார் .."பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீஎனும் நாமத்தை உச்சரிக்கும் போது அவரால் மேல் கொண்டு சொல்ல முடியவில்லை -- 


அவரை ஆஸ்ப்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆட்கள் வந்து விட்டனர் ... அவர் மனம் நின்ற இடத்தில் இருந்து 

மீண்டும் "ஸஹஸ்ராராம்புஜாரூடா" ,"ஸுதா தாராபி வர்ஷிணீ" என்று அசைப்போட்டுக்கொண்டிருந்தது .....

கணபதி சாஸ்திரிகளே கண்ணைத்திறந்து பாரும் உமக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது அப்படியே பால சுந்தரியாக இருக்கிறாள் --- 

அவர் காதுகளில் யார் சொன்னதும் விழவே இல்லை ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்த்தா, ஸ்ரீமன் நகர நாயிகா என்று சொல்லிக்கொண்டே சாவித்திரிக்கு ஒன்றும் அசம்பாவிதமாக நடந்திருக்காது -- 

வாயில் சாவித்திரி வரவில்லை - உள்ளத்தில் குடிகொண்டிருந்தவள் அவர் குரலில் தன்  நாமங்களை இன்னும் அதிகமாக கேட்கவேத் துடித்தாள்  பக்த ஸெளபாக்ய தாயினீ , பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவச்யா---- 

எதிரே மருத்துவர் --- சினிமாவில் வருவதைப்போல தன்  மூக்கு கண்ணாடியை தேவை இல்லாமல் கண்களில் இருந்து கழற்றி விட்டு தேவையே இல்லாமல் ஒரு இனம் புரியாத சோகத்துடன் எதிரே வந்து கொண்டிருந்தார் ---  ஒரு உயிர் தான் பிழைக்கும் என்ற சொன்ன மருத்துவர் இவர் தானே ? இப்பவும் அதையேதான் சொல்ல போகிறாரா ? 


ஸூகாரத்யா, சிவாராத்யா , சுபகரி , சிவதூதீ, சிவ மூர்த்தி 

சொல் அம்மா... சாவித்திரி உயிருடன் இருக்கிறாளா இல்லை உன்னுடன் கலந்து விட்டாளா ? 


மருத்துவர் அவர் அருகே வந்து - கணபதி சாஸ்திரிகள் நீங்கள் தானே - கை  கொடுங்கள் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது --  டாக்டர் ----- சாவித்திரி  

(அதற்குள் நடேச்வரீ, நந்திவித்யா, முக்திரூபிணீ நாமங்கள் வந்து விட்டன

சாவித்திரி நன்றாக இருக்கிறாள் - உள்ளே சென்று பாருங்கள் - இது ஒரு அதிசயமான பிரசவம் -- 100 இல் ஒன்று பிழைத்தால் ஆச்சரியம் - இதுவரை எங்கள் சரித்திரத்தில் ஒரு உயிரை மட்டுமே காப்பாற்றி இருக்கோம் - முதல் தடவையாக உங்கள் விஷயத்தில் நீங்கள் வணங்கும் லலிதாம்பிகை கொடுத்த அருளால் இரு உயிர்களையும் காப்பாற்றி விட்டோம் - 

குழந்தையையும் பரிசோதித்துப்பார்த்ததில் இன்னும் ஒரு மணி நேரம் வயிற்றுக்குள் இருந்திருந்தால் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம் - எல்லாம் அவள் செயல் ....



சாவித்திரியை பார்க்க வந்தவர் பார்க்காமலேயே மீண்டும் கோயிலுக்கு ஓடினார் மஹநீயா, தயா மூர்த்தி, ஆத்ம வித்யா. மஹா வித்யா..... அம்மா காப்பாற்றிவிட்டாய் என் சாவித்திரியையும் நீ எங்களுக்கு கொடுத்த பரிசையும் 

அவர் கோயிலை விட்டு மீண்டும் எப்பொழுது ஆஸ்பத்திரிக்கு போனார் எப்பொழுது சாவித்ரியைப்பார்த்தார் , தன்  குழந்தையைப்பார்த்தார் அந்த லலிதாம்பிகைக்கு மட்டுமே வெளிச்சம் ...

இந்த சம்பவம் எப்படி இருந்தது ரவி? -- 

அம்மா ஆயிரம் தடவைகள் உன்னை புகழ்ந்தாலும் அது மிகவும் குறைவுதான் தாயே --- உன் கருணைக்கு ஏதம்மா எல்லை ? 

சிரித்துக்கொண்டே பராத்பரா, பாசஹஸ்தா, பாசஹந்த்ரீ  நாளை பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டே மறைந்துபோனாள் . 





Comments

ravi said…
அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா ....

அன்பே உருவாய் வந்தாய் அருணாசலா ....

எளிமையும் மௌனமும் உடுத்தும் உடையென வாழ்ந்தாயோ அருணாசலா ....

ஏகன் அநேகனாகி எங்கும் நிறைந்தாய் எங்கள் அருணாசலா ..

எளிதில் புரியும் வார்த்தை தந்தாய் அருணாசலா ...

நான் யார் என்றே எனக்கே புரிய வைத்தாய் நன்றி எப்படி சொல்வேன் அருணாசலா !!👌👌👌
ravi said…
மலர்களுக்கு கிடைத்த வரமோ உன் மேனிதனை தழுவியது ...

வெண்மைக்கு கிடைத்த சொர்க்கமோ உன் உள்ளம் எங்கும் பரவியது ...

காலடி செய்த புண்ணியமோ உன் காலடி யாத்தரை கிடைத்தது ...

கேட்கும் செவிகள் செய்த பாக்கியமோ தேனாய் உன் தெய்வத்தின் குரல் கேட்டதை ....🌹🌹🌹
ravi said…
வார்த்தைகள் வரவில்லை சாயி ... வந்த வார்த்தைகள் சுகம் தரவில்லை சாயி ...

சுகம் தரும் விஷயங்கள் அகம் நிறையவில்லை சாயி ...

அகம் நிறைந்த விஷயங்கள் ஜகம் வாழவில்லை சாயி

ஜகம் வாழும் விஷயங்கள் உன் புகழும் பாடாவிடில் தகம் கண்டு வீழ்ந்திடுவேன் ...

சொர்க்கம் அதுவே ஆனாலும் நரகம் அது எனக்கே சாயி ... 🥇🥇🥇
ravi said…
ராமா ராமா சுவை கொண்ட ராமா சுகம் தரும் நாமா ...

ராயர் அவர் பூஜை செய்ய அகமகிழ்ந்தாயோ ராமா..

துங்கப்பத்தரா பாற்கடல் என்றே நினைத்தாயோ ... தூய பிருந்தாவனம் நீ ஆடும் சோலை என்றே வாழ்ந்தாயோ ....

கொலுசுகள் கின்கணிக்க , குயில்கள் பாட்டு பாட ,

மயில்கள் சரணம் சேர்க்க பல்லவியாய் ராயர் இருக்க

பரந்தாமா மூலமாய் நீ அமர்ந்தென் ரகசியம் அறிந்து கொண்டேன்... 🦜🦜🦜
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 87*
🌸🌸🌸🌸
வ்யாபினீ, விவிதாகாரா, வித்யாவித்யாஸ்வரூபிணீ |
மஹாகாமேஶநயன குமுதாஹ்லாத கௌமுதீ ‖ 87 ‖
🌸🌸🌸🌸

व्यापिनी, विविधाकारा, विद्याऽविद्या स्वरूपिणी |
महाकामेश नयना, कुमुदाह्लाद कौमुदी ‖ 87 ‖
🌸🌸🌸🌸

vyaapini, vividhaakaaraa, vidyaavidyaa svarupini |
mahaakaamesa nayanaa, kumudaahlaada kaumudi ‖ 87 ‖
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி – 400/404*
🌸🌸🌸🌸

ravi said…
ஓம் வ்யாபின்யை நம;
ஓம் விவிதாகாராயை நம;
ஓம் வித்யாவித்யாஸ்வரூபிண்யை நம;
ஓம் மஹாகாமேஶநயன நம;
ஓம் குமுதாஹ்லாத கௌமுத்யை நம;
🌸🌸🌸🌸

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம் (400 / 403)*
🌸🌸🌸🌸

*400.வ்யாபினீ* - எங்கும் ப்ரகாசமானவள் ஸ்ரீ லலிதாம்பிகை. யாதுமாகி நிற்பவள்.
🌸🌸🌸🌸

*401. விவிதாகாரா* -- ஸ்ரீ லலிதை பல பல வடிவங்களுள்ளவள் (எண்ணற்ற உருவங்களிலும் தன்னை காட்டிக்கொள்பவள்). அனைத்தும் அவளது மூல ஸ்வரூபத்திலிருந்து உண்டானவை. (ப்ரம்மஸ்வரூபம்).
🌸🌸🌸🌸

ravi said…
402.வித்யாவித்யாஸ்வரூபிணீ* - ஞானமும் அவளே, அஞ்ஞானமும் ஆக அவளே தோன்றுகிறாள். வித்யை என்று சொல்லும்போது ஏதோ புஸ்தகத்தை படித்து பெற்ற அறிவு அல்ல. உயர்ந்த ஆத்ம ஞானம். அதற்கு நேர் மாறானது தான் அவித்யா. ஈசாவாஸ்ய உபநிஷத் ரொம்ப அழகாக சொல்கிறது.

உதாரணம்: பகவானை அம்பாளை வேண்டுவது வித்யா. அம்பாளை உபாசிப்பவர்கள் ஸ்ரீ வித்யா உபாஸகர்கள் எனப்படுவர். வெறும் யாகம் ஹோமம் இவற்றில் ஈடுபட்டு வழி படுபவர்கள் ஒரு பக்கம், இரண்டறக் கலந்து இறைவனை உபாசிப்பவர்கள்.
🌸🌸🌸🌸

*403. மஹாகாமேஶநயன குமுதாஹ்லாத கௌமுதீ* - முழு நிலவு போன்ற குளிர்ந்த கருணை ஒளி வீசுபவள் . அல்லி மலர் எப்படி நிலவில் மொட்டவிழுமோ அதுபோல் ஸ்ரீ காமேஸ்வரன் தாமரைக் கண்களை திறக்கும் வெண்ணிலா அம்பாள், மகிழ்சசியை கண்கள் குளிர்ச்சியில் காட்டுகிறார்.
🌸🌸🌸🌸
ravi said…
36.பரிமாதும் தவ மூர்த்திம் நாலமஜ-

ஸ்தஸ் பாராத் பரோsஸிவிபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேவிபோ!உமது மூர்த்தியை கண்டறிய பிரம்ம தேவனே முயன்றும் முடியவில்லை. ஆகவே, உயர்ந்தவரிலும் உயர்ந்தவராயுள்ளீர். உமது திருவடிகளே சரணம்.
ravi said…
37.பலமிஹ ந்ருதயா ஜனுஷஸ்த்வத்-

பதஸேவா ஸநாதனேச விபோ

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேபழமைக்கும் பழமையானவரே விபோ!மனிதராய் பிறப்பதற்கு உமது திருவடிஸேவை தான் பயன். உமது திருவடிகளே எனக்கு சரணம்.
ravi said…
38.பல மாரோக்ய மாயு:ஸ்த்வத்குண-

ருசிதாம் சிரம் ப்ரதேஹி விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேஸாம்ப!விபோ!பலம், ஆரோக்யம், ஆயுள், உமது குணங்களில் பற்று ஆகியவற்றை வெகுகாலம் தந்தருள்வீராக!உமது திருவடிகள் தான் எனக்கு சரணம்.
ravi said…
39.பகவன் பர்க பயாபஹ பூத

பதே பூதிபூஷிதாங்க விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேபகவான்!பர்க!பயத்தைப் போக்குபவரே!பூதங்களின் தலைவரே!விபூதிவிளங்கும் மேனியரே!விபோ!ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.
ravi said…
40.மஹிமா தவ நமஸ்காரம் U மாதி ஸ்ரீருதிஷ§

ஹிமானீதராத்மஜா தவ விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேமலையரசன் மகள் மணாளனே! விபோ! உமது பெருமை வேதங்களின் அடங்கவில்லையே!எத்தனையோ பேசப்பட்டும். ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.
ravi said…
ஸுவர்ணமாலாஸ்துதி👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கம் – ஐந்தாவது ஸ்லோகம் – முருக தரிசனம் மனக் கவலைகளை போக்கும்👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கதுல நாலு ஸ்லோகம் பார்த்து இருக்கோம். அஞ்சாவது ஸ்லோகம்

यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गास्तथैवापदः सन्निधौ सेविनां मे ।

इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५॥

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:

ததைவாபத: ஸந்நிதெள ஸேவினாம் மே |

இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||
ravi said…
ன்னு ஒரு ஸ்லோகம், ‘அப்தி’-ன்னா கடல், தரங்கங்கள்-ன்னா அலைகள்,

‘யதா(2)’ எப்படி,

‘அப்தேஸ்தரங்கா’ கடலின் அலைகள்,

‘துங்காஹா’ பெரிய அலைகள்,

பெரிய அலைகள் திருச்செந்தூர்-ல கடற்கரைக்கு வந்த உடனே,

‘லயம் யாந்தி’ அலைகள் எல்லாம் அடங்கி, கரையில ஒதுங்கிடறது இல்லையா? எப்படி அந்த மாதிரி அலைகள் லயம் அடைகிறதோ,

‘ததை(2)வ’ அப்படியே, என்னுடைய தரிசனத்தை செய்யும் ஜனங்களுக்கு,

‘ஆபாதஹ’ எல்லா விதமான ஆபத்துகளும்,

‘ஸந்நிதெள’ என்னுடைய சன்னிதியில்

‘லயம் யாந்தி’ லயத்தை அடைந்து விடும்

‘இதி’ என்று ‘ஊர்மிபங்திஹி’ அலைகளை, கடற்கரையிலே வரிசையா அலைகள் வந்து மோதி கொண்டே இருக்கிறது.

அந்த அலைகளை ‘தர்சயந்தம்’ காண்பிச்சிண்டு இந்த ஸுப்ரமண்ய ஸ்வாமி கடற்கரையில இருக்கார்.

ஏன் கடற்கரையில இருக்கார் அப்படீங்கிறதுக்கு நேற்று ஒரு காரணத்தை சொன்னார் ஆதி ஆசார்யாள்.

இன்னிக்கு ஒரு காரணம் சொல்றார், நேத்து சொன்னது ‘பவாம் போதி’ சம்சார கடலையே நான் தாண்ட வைத்து விடுவேன், முக்தி அளிப்பேன், என்று கடற்கரையிலே இருந்ததுண்டு சூசகமா சொல்லிண்டு இருக்கார், அப்படீன்னு சொன்ன மாதிரி,

ravi said…
இன்னிக்கு கடல் அலைகளை காண்பிச்சு, எவ்வளோ பெரிய அலையா இருந்தாலும், இந்த கரையில வந்த உடனே ‘லயம் யாந்தி’ இல்லாம போயிடறது.

அப்படி என்னுடைய பக்தர்கள், என்னை வந்து சேவிப்பவர்களுடைய, ஆபத்துகள் எல்லாமே லயம் அடைந்துவிடும் என்பதை காண்பிச்சுக் கொண்டு ப்ரஸித்தமாக விளங்கும் ‘தம் குஹம்’ முருகனுக்கு குஹப்பெருமான்-னு ஒரு பேரு,

அந்த குஹனை ‘ஸதா’ இப்பொழுதும்,

‘ஹருத்ஸரோஜே’ என் ஹ்ருதய தாமரையில்,

‘பாவயே’ த்யானம் செய்கிறேன்”, ன்னு இந்த ஸ்லோகம்.
ravi said…
ஆபத்துக்கள்ன்னு சொல்லும் போது, மூணு விதமான ஆபத்துகள், ஆத்யாத்மீகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம். ‘ஆதி(4)’ ன்னா, மனோ வியாதின்னு அர்த்தம், அதுனால வர உடம்பு வியாதி. வியாதிகளுக்கு காரணம்,

ஆயுர்வேதத்துல மூன்று விதமா சொல்றா. ‘ஆத்மீகம்’ நம்மளே உண்டு பண்ணிக்கறது. கண்டதை திங்கறதுனாலயோ, இல்ல மனச போட்டு குழப்பிண்டு, பலவிதமான குருட்டு யோஜனையாலயோ, உடம்பு வியாதி வர வைச்சிக்கிறோம்,

ravi said…
மனக் கவலைகளை ஏற்படுத்திக்கறோம். வேற வெளியில இருந்துன்னு இல்லாமல், நம்மளே நமக்கு கொடுத்திக்கறதுக்கு ‘ஆத்யாத்மீகம்’-ன்னு பேரு. ‘ஆதிதைவிகம்’ அப்படீன்னா இந்த பூர்வ வினைகள்னால, அது பலவிதமாக வரது. fate அப்படீன்னு சொல்ற மாதிரி, கிரஹங்கள் மூலமாக, பகவான் நமக்கு கொடுக்கக்கூடிய வினைப் பயன்கள், அதுனால வரக்கூடிய கஷ்டங்கள். ‘ஆதிபௌதிகம்’ இந்த பஞ்ச பூதங்கள் மூலமாக வரது. திடீர்னு வெயில் ஜாஸ்தியாறது,

திடீர்னு குளிர் ஜாஸ்தியாறது, அது மூலமா வரக் கூடிய கஷ்டங்கள், வ்யாதிகள். இந்த மூணு விதமான ஆபத்துகளும், முருகப் பெருமானை தரிசனம் பண்ணினால் வேரோடு நசிச்சுப் போயிடும், அப்படீன்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.
ravi said…
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

கொன்டு திரிந்தேனோ திருவடியைப் போலே - 32

ravi said…
வைஷ்ணவத்தில் இரு திருவடிகள்

பெரிய திருவடிகள் - கருடாழ்வார்.
இரண்டாவது திருவடி - ஹனுமான்

கருடன் தன் தாயான வினதையின் அடிமைத்தனத்தை நீக்கும் பொருட்டு அமிர்தகலசத்தை தேவர்களிடம் இருந்து கவர்ந்து வரச் சென்று தேவர்களுடன் போரிட்டு இறுதியில் மகாவிஷ்ணுவின் ஆணைப்படி பணிந்து அவர்க்கு வாகனமாகிறார்

பெரியாழ்வார் கூடல் மாநகர் மன்னன் சந்தேகத்தைத் தீர்த்து, பொற்கிழியைப் பெற்றுக் கொண்டு யானை மீதேறி மதுரை வீதிகளில் , , யானை மீதேறி பவனி வரும் போது, எம்பெருமான் தேவி சகிதம் கருட வாகனத்தில் காட்சியளித்தார்

ஆழ்வார்திருநகரியில் கருடனுக்கென தனி உற்சவமே உண்டு.இங்குக் கோவில் வெளிச்சுவரில் அமர்ந்திருக்கும் கருடன் விஷேசமானவன்
ravi said…
இந்த கருடனுக்கு அருள்பட்சிராஜர் என்ற பெயரும் உண்டு.ஒருமுறை இஸ்லாமியர்கள் படையெடுப்பின் காரணமாக திருவுருவச் சிலைகளுக்கு, பாதுகாப்பின்மை ஏற்பட , நம்மாழ்வாரின் காய்ச்சிய திருமேனியை எடுத்துக் கொண்டு கோழிக்கோட்டில் மறைத்து வைத்தனர்

மீண்டும் அமைதித் திரும்பியதும், ஒளித்து வைத்த சிலையைத் தெடிச் செல்கையில். ஒளித்த இடம் மறந்து விடுகிறது.அப்போது கருடன் பறந்து வந்து.இடத்தை அடையாளம் சொன்னது,நம்மாழ்வார் சிலை மீண்டும் சந்நிதியில் எழுந்தருளச் செய்தனர்

கருடாழ்வார் போல எம்பெருமானை சுமந்து செல்லும் பாக்கியம் தனக்கு இல்லையே என்பதையே, திருக்கோளூர்ப் பெண் :கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே என சொல்கிறாள்
ravi said…
👆👆👆👆
*சிவசங்கரி சிவானந்தலஹரி*

*தர்பாரி கானடா இராகம்*

*சீர்காழி கோவிந்தராஜன்*

* அம்மன் பக்தி கீதம்*
👇👇👇
சிவசங்கரி.....
சிவசங்கரி.....

சிவானந்த லஹரி
சிவானந்தலஹரி

சிவசங்கரி....
சிவசங்கரி...

சந்திரகலாதரி ஈஸ்வரி
கருணாம்ருதம் தனைப்
பொழிகவே அம்மா

மனது உருகி வா
மகிமை தோன்ற வா

ஏழை பாலனையும்
காக்க வா....

சிவசங்கரி சிவானந்த லஹரி
சிவசங்கரி

சிவசங்கரி சிவானந்த லஹரி
சிவானந்த லஹரி

சிவசங்கரி சிவானந்த லஹரி
சிவசங்கரி
சிவசங்கரி சிவானந்த லஹரி
சிவசங்கரி...

சந்திரகலாதரி ஈஸ்வரி.......
ரிரிஸநிதநிஸ மபதநிஸ
தநிஸ தநிஸ தநிஸ
சந்திரகலாதரி ஈஸ்வரி.......
நிரி ஸநிபமதா ரிகபா ரிரிநிஸா
ரிமபதா மபநிரி நிஸதப
சந்திரகலாதரி ஈஸ்வரி.......

தநிஸா மபதநிஸா ஸரிகம
ரிமபநி தநிஸா

மபநிரி சரிநிஸா தநிபா
மபநிஸரி ரிஸரிகாநாநி

பநிபநிமப கமபநி பநி பநிமபா கம
கநிஸா சரிமபநிதாநிஸா
சரிமபநிதநிஸ சரிமபநிதாநிஸ

சந்திரகலாதரி ஈஸ்வரி.......
சந்திரகலாதரி ஈஸ்வரி.......

ஆ......ஆ.....ஆ......ஆ.....ஆஆ...
.ஆஆ.....ஆஆ........(சிவசங்கரி)

தோம் தோம் தோம் திரிதோம்
திரிதோம் த்ரித்ரியானதரிதோம்

த்ரிதித்தோம் த்ரிதித்தோம்
த்ரிதித்தோம் பாரியானா

த்ரிதித்தோம் த்ரிதித்தோம்
த்ரிதித்தோம் தோம்தோம் த்ரிதித்தோம்

த்ரிதித்தோம் த்ரிதித்தோம் த்ரித்ரிதக த்ரித்ரிதோம்தக த்ரிதோம்

த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி நாந்திரி
த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி நாந்திரிதிரி

த்ரி த்ரிதோம் திரிதிரி நாந்திரி
த்ரித்ரித்ரி த்ரிதோம்

நிநிநிநிநிநி தநிநிதநிநிநி பஸஸாநிகஸதநிஸநிநி

நிரிரி ஸரிரி ஸநிதநி ஸகக
ரிதகநிஸ ஸநிநிஸநி

நிஸஸ நிஸஸ நித தநிநி தநிநி தப
ரிரி தத தகநிநி ரிரிதத தகரிரி தகரிரி

ரிரிதததரிநிநி கததத
ரீரிரீரி நிநிநி ரீரிரி நிநிநி

காககக நிநிநி ரீரீரீதமா
ரிமநி தநிஸா தநிஸா மபமரீகா

ஸரிகபா மபமம ஸரிகபா பநிமப ஸரிகப
பநிமபஸரிமாபா பநிமபமபமபநிதாதா

மபமபநிதாதா மபமபநிததமகமகதநிஸா
மகமகதநீஸமகதநீஸமமாமா

ஸஸஸ ககந நிநிநி ஸஸஸ
ரிரிரி ஸரிஸநிஸா ஆஆஆஆ.........(சிவசங்கரி.....)
ravi said…
👆👆👆👆
*நாத விந்துக லாதீ நமோநம*

*திருப்புகழ் *
*சுதா ரகுநாதன்*
👇👇👇
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித சாமீ நமோநம ......
வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ......
பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ......
கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ......
அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்ஈ
ர முங்குரு சீர்பா தசேவையு ......
மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ......
வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே
முனாளினில்ஆடல் வெம்பரி
மீதே றிமாகயி ......
லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

சொல் விளக்கம் 🌸

நாத விந்து கலாதீ நமோநம ...
லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய
தத்துவங்களுக்கு மூலப்பொருளே,
போற்றி, போற்றி,

வேத மந்த்ர சொரூபா நமோநம ...
வேதங்கள், மந்திரங்கள்,
இவற்றின் உருவமாக விளங்குபவனே,
போற்றி, போற்றி,

ஞான பண்டித ாமீ நமோநம ...
பேரறிவுக்குத் தலைவனான
தெய்வமே, போற்றி, போற்றி,

வெகு கோடி நாம சம்பு குமாரா
நமோநம ... பல கோடிக்
கணக்கான திருப்பெயர்களைக்
கொண்ட சிவனின் புதல்வனே,
போற்றி,போற்றி

போக அந்தரி பாலா நமோநம ...
(அனைத்து உயிர்களுக்கெல்லாம்)
இன்பங்களை அளிக்கும் பார்வதியின்
குமாரனே, போற்றி, போற்றி

நாக பந்த மயூரா நமோநம ...
தன் காலினால் பாம்பை அடக்கிக்
கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,

பரசூரர் சேத தண்ட விநோதா
நமோநம ... எதிரிகளான
சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே,
போற்றி,போற்றி

கீத கிண்கிணி பாதா நமோநம ...
இசை ஒலி எழுப்பும்
சதங்கைகளை உடைய
திருப்பாதங்களைக் கொண்டவனே,
போற்றி,போற்றி


தீர சம்ப்ரம வீரா நமோநம ...
மிகவும் பராக்ரமசாலியான
போர்வீரனே, போற்றி, போற்றி,

கிரிராஜ ... மலைகளுக்கெல்லாம் அரசனே,

தீப மங்கள ஜோதீ நமோநம ... திருவிளக்குகளின் மங்களகரமான
ஒளியே, போற்றி, போற்றி,

தூய அம்பல லீலா நமோநம ...
பரிசுத்தமான பரவெளியில்
லீலைகள்புரிபவனே, போற்றி, போற்றி,

தேவ குஞ்சரி பாகா நமோநம ...
தேவயானையை மணாட்டியாகப்
பக்கத்தில் கொண்டவனே,
போற்றி, போற்றி,

அருள்தாராய் ... உனது திருவருளைக்
கொடுத்து அருள்வாயாக.

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார
நீதியும் ... தானம், பல சிறப்பான
பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப்
படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ... கருணை, குருவின்
திருப்பாதங்களைச் சேவித்தல்
ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும்
(சோழமண்டலத்தில்),

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை ...
ஏழு உலகங்களில்
உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி
நதியால் செழித்து வளமுறும்

சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடாளும்
நாயக ... சோழ மண்டலத்தில்,
மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
ராஜகெம்பீரம் என்னும் நாட்டை*
ஆளுகின்ற அரசனே,

வயலூரா ... வயலூருக்குத் தலைவா,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை ...
தன்மீது அன்புவைத்த
திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை

சேர்தல் கொண்டவரோடே
முனாளினில் ... நாடியவராய்,
அவருடன் முன்பொருநாள்,

ஆடல் வெம்பரி மீதேறி மா
கயிலையிலேகி ... ஆடலில் சிறந்த,
விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)

ஆதி அந்தவுலாவாசு பாடிய ...
ஆதி உலா எனப்படும் அழகிய
(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை
பாடலாகப் பாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ...
சேரர் பெருமானாம்
சேரமான் பெருமான்** நாயனாருக்கு
உரித்தான கொங்கு மண்டலத்து
வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப்
பகுதியில் இருக்கும்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள்
பெருமாளே. ... திரு
ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு
கொண்டிருக்கும், தேவர்களின்
பெருமாளே.
T.N Ketharam said…
அகிலாண்டகோடி ப்ரம்மாண்ட நாயகி! அவள் லோகமாதா!
எல்லாம் அவள் செயல்!
உங்கள் கற்பனைகூட!
ravi said…
அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதி (பாடலும் பொருளும்)👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
13. வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
ravi said…
என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே! பேரழகு மிக்க அன்னையே! பாசமாம் தளைகளையெல்லாம் ஓடி வந்து அழிக்கும் சிந்தூர நிறம் கொண்டவள், மகிடன் என்னும் அசுரனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி நீல நிறங்கொண்டவள், என்றும் அழிவில்லாத இளங்கன்னி, பிரமதேவனின் கபாலத் தைத் தாங்கும் திருக்கரத்தைக் கொண்டவள் ஆகிய அபிராமி அன்னையே! தாமரை மலரைப் போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில் என்றென்றும் பொருந்தி நிற்கின்றன.
ravi said…
இந்த பாடலில் அன்னையின் அனைத்து சிறப்பினையும் ஒரு சேர சொல்கிறார் போன பாடலில் ஏழு உலகங்கள் என்று சொன்னவர் இதில் 14 புவனங்கள் என்று ஏன் சொல்கிறார் ...அவள் படைத்த உலகங்கள் 7 மட்டும் அல்ல . உண்மையில் பார்த்தால் 14 என்று சொல்வதும் தவறுதான் . அவள் படைத்தவை என்ணிக்கையில் அடங்காதவை ...

14 புவனங்களையும் படைத்தவள் படைத்ததோடு நிறுத்திக்கொள்ள வில்லை அவை அனைத்தையும் காப்பாற்றுகிறாள்...
ravi said…
பின் கரந்தவளே👌👌👌

படைக்கிறாள் காப்பாற்றுகிறாள் , பின் மறைக்கிறாள் , அழிக்கிறாள் என்று சொல்லக்கூடாது...அவளுக்கு அழிக்கத் தெரியாது ...அவள் மகன் குமரனை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் பத்மாசூரனை அழிக்க வில்லை..இரண்டாய் பிளந்து ஒன்றை மயிலாகவும் ...மமகாரம் எனும் பாம்புகளை கொத்தி தின்னும் மயிலாகவும் அகங்காரம் தீர்க்கும் சேவலாகவும் ஆக்கினான் .. சூரனுக்கும் ஞானம் வழங்கியவன் குமரன் ...

மறைத்தல் சிவன் புரியும் ஐந்து தொழில்களில் மிகவும் பிடித்த செயல்.. இறைவன் நம்மிடம் இருந்து சிலவற்றை மறைக்கா விட்டால் பல விபரீதங்கள் ஏற்படலாம்
ravi said…
உதாரணத்துக்கு நாம் இறக்கும் தேதி மறைக்கப்படாமல் தெரிந்திருந்தால் எவ்வளவு விபரீதங்கள் உண்டாகும் .. நம்பளை நம்பி எவனாவது பணம் கொடுப்பானா ? போன ஜென்ம பிறவியின் ஞாபகம் வந்தால் வாழ்க்கை எவ்வளவு பெரிய சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் ... இருவர் விமானப்பயணம் மேற்கொண்டனர்.. ஒருவர்க்கு ஆங்கிலம் புரியும் இன்னொருவருக்கு தமிழ் மட்டுமே தெரியும். விமானம் பறக்கும் போது அதில் சில சிக்கல்கள். விமானம் கீழே விழலாம் என்ற உண்மை மெதுவாக ஆங்கிலத்தில் சொல்லப்பட்டது... தமிழ் தெரிந்தவர் விமானம் ஏறியவுடன் தூங்கி விட்டார் ...ஆங்கிலம் தெரிந்தவர் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.. விமானம் நல்ல வேலை தரையில் பத்திரமாக இறங்கியது... இறைவன் அவருக்கு ஆங்கிலம் தெரியாமல் மறைத்தான் அவருக்கு நிம்மதியும் நல்ல உறக்கமும் கிடைத்தது ... மறைத்தல் மிக முக்கியம்
ravi said…
கறைக் கண்டனுக்கு
மூத்தவளே!👍👍👍👍👍💐💐💐💐💐

அம்பாள் ஈசனுக்கு ஒரு தாயாகவும் , மகளாகவும் தாரமாகவும் இருக்கிறாள. பரபிரம்மம் அசையாமல் உணர்வு இல்லாமல் சக்தி இல்லாமல் இருக்கிறது . இந்த உலகம் அப்படி இருந்தால் எப்படி இயங்கும் ? தன்னிடம் இருந்து கொஞ்சம் அசைவை தானே ஏற்படுத்திக் கொள்கிறது .. அந்த அசைவு தான் சக்தி , சிவம் எனும் அசையா பிரம்மத்திற்குள் முதலில் போய் அமர்ந்து கொள்கிறது ...இதை உணர்ந்த பட்டர் முந்தி சென்று அம்பாள் சிவத்துக்குள் அமர்ந்து கொண்டதால் அவளை ஈசனுக்கும் மூத்தவள் என்று வர்ணிக்கிறார்..
ravi said…
என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!👍👍👍👍👌👌👌👌💐💐💐💐

மஹாவிஷ்ணு என்பவர் சிவனின் பெண் பால் என்று நம்மாழ்வார் சொல்கிறார் .. பெண்களுக்குத்தான் அலங்காரம் செய்துகொள்ள மிகவும் பிடிக்கும் ... விஷ்ணு அலங்காரப்பிரியர். அவருடைய தங்கையே என்கிறார்
ravi said…
மாத்தவளே👍👍👍👍👌👌👌👌

மா + தவம் ..உயர்ந்த தவம் புரிபவள் யாருக்காக அம்பாள் இப்படி தவம் செய்து கொண்டே இருக்கிறாள் ? வேறு யாருக்காக நமக்காகத்தான் .. புண்ணியங்கள் அனைத்தும் குழந்தைகளான நம்மை சேரட்டுமே என்று தவம் செய்கிறாள் . ஒரு தாயால் தான் இவ்வளவு கருணையுடன் செயல் புரிய முடியும் ..
ravi said…
உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

அம்மா 24*7 நீ என்னை பார்த்துக்கொள்ளும் போது ஏன் நான் அந்த தெய்வம் இந்த தெய்வம் என்று அலைய வேண்டும் ... உன்னைத்தவிர வேறு யாரையும் போய் நான் ஏன் வணங்கவேண்டும் ... என்று ஆணித்தரமாக கேட்கிறார் பட்டர்
ravi said…
சுருக்கம்

14 புவனங்களையும் பூத்தாய் ..பூத்தபிறகு அதை காப்பாற்றுகிறாய் பின்பு மறைக்கிறாய் . என் ஈசனுக்கு தாயாகவும் தங்கையாகவும் தாரமாகவும் இருக்கிறாய் . சிவத்துக்குள் சக்தியாக முதலிலேயே சென்று அமர்ந்து கொள்கிறாய் . திருமாலின் தங்கை நீ . உயர்ந்த தவங்கள் புரிந்துகொண்டு இருக்கிறாய் அதன் பலன்களையும் எங்களுக்கேத் தருகிறாய் . இப்படிப்பட்ட உன்னை விட்டு விட்டு வேறு எந்த தெய்வத்தையும் போய் நான் வணங்க மாட்டேன்
Sujatha said…
Un karunai ki yed amma yellai 💐🙏🏼🙏🏼
Shivaji said…
Arumai.. Arumai. The essence of Namavali's have been nicely coined to the flow .... Sree Mathre Nama💐💐💐🙏
ravi said…
லலிதா சகஸ்ர நாமம் தினசரி சொல்வது ஒரு தவமாகும் என நமக்கு கற்பித்த நமது ஆன்மீக குரு வார்த்தை சித்தரின் இப்பதிவு இனிமை..உணர்ச்சி பூர்வமான உண்மை..

🙏🙏🙏🙏🙏🙏🙏
Lakshmi balaraman said…
சக்திக்கு பெருமை சேர்த்ததே
சித்தரின் பதிவுகள் தான்.
அம்பாளின் அனுக்ரஹம் அனைவருக்கும் கிடைக்கட்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
ravi said…
மதுரையம்பதி வலை தளத்தில் இருந்து

👍👍👍

பனிமலர்ப் பூங்கணையும் கருப்புச் சிலையு மென்பாசங்குசமும்
கையில் அனையும் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே

என்கிறார் அபிராமி பட்டர். மன்மதன் கரும்பு வில்லையும், மலர்பாணங்களையும் கொண்டே சகல ஜீவராசிகளையும் மோகத்தில் ஆழ்த்துகிறான். 'என்பக்தர்களை இப்படி மோகத்தில் ஆழ்த்தி துன்பப்படுத்தாதே' என்றே அம்பிகை மன்மதனிடத்திருந்து வில்லையும், பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டாள் என்பார்கள்
ravi said…
பெரியோர். இதற்குள் ஒரு பெரிய யோக தத்துவம் அடங்கியிருப்பதாகவும் சொல்வர். மன்மதனைப் பற்றி ஒரு செய்தி முன்பே பார்த்தோம்.

மன்மதன் பராம்பிகையின் பரம பக்தன்.அம்பிகையின் தலைசிறந்த 12 பக்தர்களில் மன்மதனும் ஒருவன். இவன் அம்பிகையை வணங்கிய முறை 'காதி'வித்தை என்று ஸ்ரீவித்யையில் ஒரு முறை. இந்த காதி-வித்யைக்கு அனங்கனே அதிபதி. சரி அனங்கனிடத்திருந்து பெற்ற பஞ்சபாணங்கள்களில் இருக்கும் மலர்கள் என்ன என்று பார்த்துவிடுவோம். அவை, தாமரை, அசோகம், சூதம் என்னும் மாம்பூ, முல்லை மற்றும் நீலோத்பலம்.
ravi said…
சாதாரணமாக என்னைப் போன்றவர்களிடத்து, கோபம், லோபம் போன்ற கெட்ட எண்ணங்கள் மதம் கொண்ட யானையைப் போன்று வெறித்து அலைக்கழிப்பது தெரிகிறது. அதை அடக்கி நல்வழிப்படுத்த அம்பிகை வைத்திருப்பதுதான் அங்குசமும், அடக்கியபின் கட்ட ஒரு பாசக் கயிறும்.


இச்சாசக்தி மயம் பாசம் அங்குசம் ஞான ரூபிணிம்
க்ரியாசக்தி மயே பாண தனுஷீ தத்த உஜ்வலம்

என்பது ஞானார்ணவத்தில் சொல்லப்படுவது. இங்கே பாசம் என்பது இச்சாசக்தி, அங்குசம் என்பது ஞானசக்தி, பாணம், தனுஸ் ஆகிய இரண்டும் க்ரியாசக்தி. அம்பிகையின் பாசம் என்னும் சக்திதான் நம்மை மாயையில் ஆழ்த்துகிறது.



இந்த பாசத்தை நீக்க வேண்டுமானால் அதற்கு ஒரு ஆயுதம் வேண்டும். இந்த மாயை என்னும் பாசக் கட்டை அகற்ற, அதைவிட பலமான கட்டு ஒன்றைப் போடவேண்டும். அம்பிகையின் தயவு இருந்தால் மாயையை விட பலமான பக்தி என்னும் கட்டை போட்டு பாசம் என்னும் மாயையை நீக்கலாம். அம்பிகையின் ஆயுதமான பாசக் கயிற்றுக்கு அதிஷ்ட்டான தேவதையாகச் சொல்வது அச்வாரூடா.

இந்த அச்வாரூடாவே அம்பிகையின் குதிரைப்படைத் தலைவி. அம்பிகையின் இந்த அச்வாரூடா என்னும் ரூபத்தில் அவள் குதிரையில் அமர்ந்ததாகவே சொல்லியிருக்கிறார்கள் பெரியோர். அவள் அமர்ந்திருக்கும் குதிரைக்கு 'அபராஜிதா'என்று பெயர். மன அடக்கம், இந்திரிய அடக்கம் போன்றவை வாய்க்க அச்வாரூடா அருள் தேவை என்பது சாக்த மொழி.
முத்து முத்தான கோமேதகங்கள் -கணபதி சாஸ்த்திரி -story very nicely described.சியாமளா தண்டகம்🙏🙏
God bless
ravi said…
Sri Vishnu Sahasranamam poorthikku ellarukkum sweets prasadam viniyogam migavum arumai 👌 👌 Jai Shree Ram 🌷 Jai Siya Ram 🌷 🌷 🙏🙏
Kousalya said…
Sri Vishnu Sahasranamam poorthikku ellarukkum sweets prasadam viniyogam migavum arumai 👌 👌 Jai Shree Ram 🌷 Jai Siya Ram 🌷 🌷 🙏🙏
Kousalya said…
Athi arpudham... Karuna Rasa Sagariye Nin padangale Charanam Charanam Charanam Thaye 🌷🌷🙏🙏🙏
ravi said…
*Dasavatar in half stanza by Kalamega pulavar*

கவி காளமேகத்திடம், புலவர் ஒருவர், திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரே வெண்பாவில் பாட முடியுமான்னு கேட்க..?

ஒரு வெண்பா என்ன? அரை (பாதி) வெண்பாவிலேயே பாடுகிறேன் என்று சொல்லிப் பாடியும் காட்டினாராம்.

*_மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியில் என்_*
*_இச்சையில் உன்சன்மம் இயம்பவா? – மச்சாகூர்_*
*_மாகோலா சிங்காவா மாராமா ராமாரா_*
*_மாகோபா லாமாவா வா_* ”

அட என்னங்க இது.....மாராமா ராமாரா-ன்னு நாக்கு குழறுது..?
பதம் பிரிங்க; புரியும்!

மச்சா-கூர்மா-

கோலா-சிங்கா-வாமா-ராமா-ராமா-

ராமா-கோபாலா-மாவா வா

மச்சா = மச்சாவதாரம்

கூர்மா = கூர்மாவதாரம்

கோலா =வராகம்

வாமா =வாமனா

ராமா-ராமா-ராமா =பரசுராமா-ராமா-பலராமா-ன்னு மூன்று இராமன்கள்

கோபாலா = கிருஷ்ணாவதாரம்

மா-வா =குதிரையின் மேல் வரும் கல்கி...

என்ன ஒரு தமிழ் விளையாட்டு?

இன்னொரு தரம், இன்னொருதரம் என படிக்கப்படிக்க நாக்குழறாம வேகமா சொல்ல வரும் அழகே - தமிழழகு
Kousalya said…
Thank you for today's post on Lalithambike... I shd thank as many times possible since u only made me to realise the Megnanimity of Sri Lalita...Thank you once again 🙏🙏🌷🌷
ravi said…
அம்பிகையின் இன்னொரு கையில் இருப்பது அங்குசம். இந்த ஆயுதத்திற்கு அதிஷ்ட்டான தேவதை சம்பத்கரி, இவள் அம்பிகையின் யானைப்படை தலைவி. இவள் யானை மீது அமர்ந்திருப்பவள், இவள் அமர்ந்திருக்கும் யானையின் பெயர் ;கோலாகலம்'. 'நான்' என்னும் அஹங்காரம் நீங்க இவளது அருள் வேண்டும். மனித வாழ்க்கை பல சிக்கலான பிரச்சனைகளுடன் கூடியது, இரட்டை இயல்பு கொண்டது. இவ்விரண்டில், ஒன்று, உடம்பை வளர்க்க-சுக சாதனங்களைத் தேடுவது, இன்னொன்று பரபிரம்மத்தை, ஈஸ்வரனை அடையும் முயற்சி. இவற்றில் ஒரு முயற்சி அதிகமானால் இன்னொன்று தடைபடும். சம்சாரத்தில் ஈடுபடுவனுக்கு ஆத்ம வளர்ச்சிக்கு நேரம் கிடைப்பதில்லை.

அதேபோல ஆத்ம வளர்ச்சியில் ஈடுபடுபவனுக்கு உலகாயமான வஸ்துக்களில் மனது செல்வதில்லை.ஆக இதற்கு என்னதான் வழி என்று பார்த்தோமானால், பராசக்தியின் பாதங்களே சிறந்த வழி என்று தோன்றுகிறது.
ravi said…
அந்தந்த காலங்களில் அந்தத வேகங்கள், இயற்கையின் உத்தல்கள் ஏற்பட்டாலும், மனத்தை அச்வாரூடாவின் த்யானத்தால் அடக்கி, கலங்காத மனத்துடன் பராம்பிகையைப் பிரார்த்திக் கொண்டே இருப்போமானால், பிஞ்சு காயாகி, காய் கனியாகி, கனி தானே முற்றி மரத்திலிருந்து விடுபடுவது போல சம்சாரத்தில் இருந்து விடுபட முடியும் என்று கூறுவார்கள். மனம் என்பது எண்ணங்களே என்பார் எனது தந்தை. ஒருவனது வாழ்வில் 4 விஷயங்களை முக்கியமானதாகச் சொல்லலாம், அவை ஊக்கம், கற்பனை, அறிவு, அன்பு. ஒருவனுக்கு தான் செய்யும் கற்பனையாலும், சிந்தனையாலுமே 'நான்','எனது' என்னும் பற்று ஏற்படுகிறது என்பார் என் தந்தை. அம்பிகையை அடைவதற்கு முன்னர் குதிரையைப் பழக்குவது போல மனதை பழக்கவேண்டும், அஹங்காரம் என்னும் யானையை ஒடுக்கவேண்டும் என்பார்.

இதனை எல்லாம் எவ்வளவு சாதிக்கிறானோ அவ்வளவு தூரம் அம்பிகையை நெருங்க முடியும் என்பார். ஆக உலகத்தில் சம்சார பந்த பாசங்களில் இருந்து கொண்டே, தர்ம மார்க்கத்தில் குடும்பத்தை நடத்தியவாறு அம்பிகையின் மீது ஈடுபாட்டைப் பெற்று, 'நான்' என்னும் மமதையை ஒழித்துவிட்டால் அவளை அடைந்திடலாம்.
ravi said…
சரி இவ்வளவு சொல்லிவிட்டு மற்ற இரு அஸ்திரங்களின் அதிதேவதையின் பெயரைச் சொல்லாவிட்டால் எப்படி?. கரும்பு விலலுக்கு சியாமளா என்கிற ராஜ மாதங்கி என்பவள் அதிதேவதை. மனம் என்னும் வில்லைக் கொண்டு புத்தியை கட்டுப்படுத்துகிறது. இந்த ராஜமாதங்கியின் அருளிருந்தால் மனமும், புத்தியும் அம்பிகையிடம் லயிக்கும் என்பார்கள். இவளுடைய இடம் பராம்பிகையின் வலது புறம். பராம்பிகையின் முத்திரை மோதிரத்தை தரித்தவள், ஆகையால் இவள் மந்திரிணி எனப்படுவாள். மதுரை மீனாக்ஷியை மந்திரிணியாக ரூபமாகச் சொல்வார் ஆதிசங்கரர் முதலான பெரியோர்கள். புஷ்பபாணங்களுக்கு அதிதேவதை வாராஹி. அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதி இந்த வாராஹி, ஆகையால் இவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்ற பெயர் உண்டு. பிறரை தண்டித்து அடக்கும் செயலைச் செய்வதால் இவளை தண்டினி என்பர். திருவானைக்காவல் அகிலாண்ட நாயகியை தண்டினி/வாராஹி ஸ்வரூபம் என்பர் பெரியோர்.

இவள் உக்ரமானவள், ஆனால் அம்பிகையின் பக்தர்களுக்கு சகல அரிஷ்ட தோஷங்களையும் நீக்கி சாதகனுக்கு அருள்பவள். ''வாராஹி வீர்யநந்தனா' என்பதன் காரணமாக "வாராஹிக்காரனுடன் வாதாடாதே" என்பதன் மூலமாக இவளைச் சிறப்பாகச் சொல்வது வழக்கு.
ravi said…
தவளையும் அணிலும் தவம் இன்றி பெற்றன வரங்கள் ....

ராம நாமங்கள் வாழவைத்தவை ஒரு கோடி ...

தேடி சென்றால் ஓடி வராது ...

வாடி நின்றால் விரும்பி வராது ...

நெஞ்சில் நிறுத்தி சொன்னால் உள்ளமெல்லாம் நிறைவான் ...

உதிரிப்பூவாய் குவியும் கோடி வரங்கள்...

*சத்தியம் இது சந்தேகம் வேண்டாம் ... சாட்சியாய் சொல்ல ஆயிரம் உண்டு என்னிடம் ...*👍👍👍
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 761*🥇🥇🥇

*US 753*

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

*31 வது ஸ்தபகம்*👌👌👌

*ஏகத்ரிம்ஸ ஸ்தபக*

நாம வைபவம் ( உபஜாதி வ்ருத்தம்)👌👌👌

இந்த ஸ்தபகத்தில் தேவியின் திருநாமங்களின் மகிமை விளக்கப்படுகிறது 🥇🥇🥇
ravi said…
நமசிவாய பணத த்விபாதோ

யுஷ் மாகமக்ர்யாம் திஷணாம் ததத்யை

ஆதாரசக்ரே ஸிதுரம்பிகாயை

ப்ரஹ்மாண்ட சக்ரஸ்ய விதாயிகாயை

சிவாய நம என்று வழிபடுங்கள் அதுவே தேவியின் புண்ணகையை நமக்கு காட்டும் உயர்ந்த கருவி... அவள் தன் நாமங்களை விட தன் பதியின் நாமங்களை கேட்கவே காத்திருக்கிறாள் . 🌷🌷🌷
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*

*பதிவு 187*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇

63
ravi said…
ப்ரதீம காமாக்ஷி ஸ்ஃபுரித தருணாதித்ய கிரண

ச்ரியோ மூலத்ரவ்யம் தவ சரண மத்ரீந்த்ர தனயே

ஸூரேந்த்ராசா மாபூரயதி யதஸொ த்வாந்தமகிலம்

துனீதே திகபாகானபி ச மஹஸா பாடலயதே


காமாக்ஷி தன் பாத ஒளியால் எல்லா திசைகளையுமே சிவந்த நிறமாக்குகிறாள் ...
அஷ்டமா சித்திகளை அளிக்கக்கூடியது அவளது பாதார விந்தங்கள் 🌹🌹🌹👣👣👣
ravi said…
*221. Sakārākhyā सकाराख्या*💐💐💐👌👌👌

She is in the form “sa” (स), the first bīja of the third kūṭa known as śakti kūṭa and the twelfth bīja of the entire Pañcadaśī mantra.

*222. Samarasā समरसा*💐💐💐💐 Samarasa means equal feelings . She is "rasa" which means essence and the quality of any external objects , does not modify Her quality . 👣👣👣
*223. Sakalāgamasaṁstutā सकलागमसंस्तुता*👍👍👍👍👍 She is praised in all traditional doctrines 👏👏👏

*224. Sarvavedāntatātparyabhūmiḥ सर्ववेदान्ततात्पर्यभूमिः*👌👌👌 She is complete knowledge

*225. Sadasadāśrayā सदसदाश्रया*💐💐💐👌👌👌

She is the connecting link between Brahman with form and Brahman without form 🌹🌹🌹
ravi said…
*226. Sakalā सकला*💐💐💐
ravi said…
Though it is interpreted that She is in the form of sixty four kalā-s or arts as described in these Lalitā Sahasranāma-s – 236 *Catuḥṣaṣṭi-kalāmayī,* which says that She is in the form sixty four types of arts;

*611 Kalātmikā*, which says She is in the form of kalā-s and Kalā here means digit or minute parts of an entity.

The moon has sixteen such kalā-s, the sun has twelve kalā-s and agni (fire) has ten kalā-s; and *612 Kalānāthā* which means that She is the ruler of kalā-s discussed above.
ravi said…
But this nāma can be best interpreted through Trika philosophy.

There are seven types of perceivers according to Trika philosophy and the lowest state is sakala state, where the aspirant is deluded by three types of impurities viz. ego, māyā (known as āṇavamala and māyīyamala –

both work on one’s perception) and karma (known as kārmamalā which causes effect on one’s action due to his past impressions known as karmic account).

Sakala is the lowest state in spirituality. This goes to prove that She not only exists in Her devotees as the inner Self, but also exists as the Self in all those who do not seek Her, which explicitly explains Her omnipresence.
ravi said…
காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே

ஐந்து அறங்களையும் கடைமையாக செய்பவளும், நலத்தினை தன் புன்னகையால் பேணுபவளுமாகிய புவனேஸ்வரி அன்னையின் மீது பாடப்படுவது இந்த நவரத்தின மாலை நூல்.

இந்த நூல் நன்கு அமைய கணங்களின் நாயகனாகிய கணபதி காக்க வேண்டும்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
ravi said…
1. வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெரும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கற்க வேண்டிய நூல்கள் பலவற்றை பிழையில்லாமல் கற்றவர்கள் தெளிவு பெறவில்லை. உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று கண்மூடி தவத்தினைச் செய்வதே கதி என்று இருந்து தவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லை. அவர்கள் நிலை இப்படி இருக்கும் போது மிகத்தாழ்ந்த, பிழைகள் புரிந்தவர்கள் ஏதாவது பேச முடியுமா?. மிகவலிமையான பகைவர்களை அழிக்க வயிரத்தால் செய்த படைவாளினை எமனாக பற்றி எடுத்தவளான அன்னையே! உன்னை வணங்கும் அடியவர்களுக்கு எல்லாம், வற்றாத சுனையைப் போல அருள்புரியும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
2. நீலம்

மூலக் கணலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திரு மேனியிலே நினைவாய்
நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மூலாதாரம் என்னும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி என்னும் சக்தியே உன்னை சரணடைகிறேன்.முதலும் முடிவும் ஆனவளே உன்னை சரணடைகிறேன். அழகியே கிளி போன்றவளே உன்னைச் சரணடைகிறேன். குன்றாத ஒளியின் கூட்டாமாகத் திகழ்பவளே உன்னைச் சரணடைகிறேன். உன்னுடைய நீல நிறமான திருமேனியை நினைத்து தியானித்து மற்ற நினைவுகள் இன்றி அடியேன் நின்றேன். பாலா திரிபுரா சுந்தரி எனும் வாலை குமரி எனக்கு காட்சி அளிப்பாய். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
3. முத்து

முத்தே முத்தொழில் ஆற்றிடவே
முன்னிற்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் குறைவறச் செய்யும் வண்ணம் கடவுளர்களுக்கு அருள் செய்த முதலான தெய்வமே, முத்தினைப் போன்றவளே உன்னை சரணடைகிறேன். எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் காரணமானவளே உன்னைச் சரணடைகிறேன்.
வேதங்கள், உபநிடதங்கள் என எல்லாவற்றிலும் நிலைத்து வாழ்பவளே உன்னைச் சரணடைகிறேன். நீயே தஞ்சம் என்று சரணடைந்த உன் மகனான எனக்கு தாயாகிய நீ என்றும் அழியாத வரத்தைக் கொடு. மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் அங்கும் இங்கும் அலையும் வாழ்வு இல்லாமல் என்றும் அழியாத வாழ்வை எனக்கு அருள வேண்டும். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
4. பவளம்

அந்தி மயங்கிய வானம் விதானம்
அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள்
மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அந்தியாகிய மாலைப்பொழுது வானம் அன்னை நடனஞ் செய்யும் ஆனந்த மேடையாகும். சிந்தையாகிய மனம் மகிழும்படி வளம் பொழிந்து இந்த உலகத்தை ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ?. அன்னையே, என்தந்தையாகிய இறைவனான சிவபெருமானின் இடப்பாகத்திலும், என் மனதிலும் இருக்கின்றாய்.
உன்னை எப்போதும் எண்பவர்களுக்கு என்றும் மிகுதியான அருளைப் பொழிகின்றாய். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளினைக் கொண்டுள்ள அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
5. மாணிக்கம்

காணக் கிடையா கதி ஆனவளே
கருதக் கிடையாக் கலை ஆனவளே
பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே
புனையாக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாத அவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

எளிதில் காண்பதற்கு கிடைக்காத நற்கதியிவீனை உடையவளே. எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலையின் வடிவானவளே. அணிவற்கு அரிதான அழகு அணியானவளே. கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே. உன்னுடைய திருநாமத்தையும், துதிகளான பாடல்களையும் பாடமுடியாமல் குறைபடுபவர்களை நீ என்றும் நாடமாட்டாய். மாணிக்கத்தின் ஒளிக்கதிரினைப் போன்றவளே. அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
6. மரகதம்

மரகத வடிவவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஅர சிவ என்று அடியவர் குழும
அவர்அருள் பெற அருள்அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மரகத பச்சை நிறத்தினை உடையவளே உன்னை சரணடைகிறேன். தேன் பொழியும் உன்னுடைய திருவடிகளைச் சரணடைகிறேன். தேவர்களின் தலைவனான இந்திரன் உன்னுடைய பாதங்களை பணிய திகழ்ந்திருக்கும் அம்மையே உன்னை சரணடைகிறேன். சுதி, ஜதி, லயம் போன்ற இசையின் உறுப்புகளாகி, இசையின் வடிவாக திகழ்பவளே உன்னை சரணடைகிறேன். அரஅர சிவ என்று பாடிக் கொண்டு வரும் அடியவர் களுக்கு இறைவனின் அருள் பெறும்படி அருள்புரியும் அமுதமானவளே உன்னை சரணடைகிறேன். ஒன்பது விதமான செல்வங்களுக்கு அதிபதியே உன்னை சரணடைகிறேன். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
7. கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்
போன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் பொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

இந்த புவியில் நான் புரியும் எல்லாச் செயல்களும், எந்த வித குறைகள் இல்லாமல் எல்லா பயன்கள் குறைவின்றி கிடைக்க வரத்தினை அருளுபவளே. தீயிலிட்டு என்னைப் பொசுக்கினாலும் ஜெயசக்தி என்று உன்னை அடியேன் சொல்லக்கூடிய வீரத்தை தாயே நீ அருளுவாய். கோமேதகமே, வானத்தில் இருக்கும் குளிர்ந்த நிலவே, குழலைப் போன்று இனிய வாய்மொழியினை உடையவளே, மாமேரு மலையில் வாழும் கிளியாகிய அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
8. பதுமராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாச வியாபனி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

இன்பத்தினை அருளுபவளே, இன்பத்தின் வடிவானவளே, அழகிய கண்களை உடையவளே, பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே அம்மையே. நிலையில்லாத மனநோய்களை நீக்குபவளே. அனைத்து கலைகளையும் அறிந்தவளே. சம்புவின் சக்தியான சாம்பவியே. பிறைச்சந்திரனை அணிந்தவளே. தலைவியாக விளங்குபவளே. கருநிறத் திருமேனியைக் கொண்டவளே. எல்லா விதமான அணிகலன்களும் அணிந்து இருப்பவளே. மரணமில்லா பெரு வாழ்வின் உருவே. என்றும் மங்கலகரமானவளே. அழகிய மேருமலையின் சிகரத்தில் நிலைத்து வசிக்கும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
9. வைடூர்யம்

வலைஒத்த வினை கலைஒத்த மனம்
மருளப் பறையா ஒலிஒத்த விதால்
நிலையற் எளியன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

நான் செய்த முன்வினைப் பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது. அந்த மான் மருளும்படி அறையும் பறை போன்றவை இந்த உலகத்தின் இன்பதுன்பங்கள். இப்படி உலகின் இன்ப துன்பங்களால் மானைப் போன்று என் மனம் நிலையற்று அலைகழிக்கப்படுகிறது.இந்த துன்பத்தால் நான் அழிந்து போகலாமா?. என்னை அலைகழிக்கும் துன்பங்கள் தூளாகப் போகும்படி எனக்கு வரத்தினை அருளுவாய். மனஅலைக்கழிப்பு இன்றி அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியவர்களன் திருமுடியில் வாழும் வைடூரியமே.ம‌லையத்துவச‌ பாண்டியனின் மகளான மீனாட்சியே வருவாய். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
ravi said…
பயன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)

எல்லா நாட்களிலும் இந்த நவரத்தின மாலையைப் பாடித் துதிப்பவர்கள் எல்லா நலன்களையும் கிடைக்க பெறுவர்.

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை