பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் படை - 11- வலிமை தரும் வயலூர் வள்ளல் -3 -309

                                                         பச்சைப்புடவைக்காரி

பகையை வெல்லும்   படை - 11

வலிமை தரும் வயலூர் வள்ளல் -3


(309) 👍👍👍💥💥💥

(உபயம் சித்ரா மூர்த்தி )



முருகா! ரத்த பரிபுர இருகால் ஒருகால் மறவேனே! என்கிறார் ஒரு பாடலில். 

ரத்னச் சிலம்பணிந்த உனது இரண்டு திருவடிகளையும் ஒருகாலும் மறக்க மாட்டேன் என்பது பொருள். ‘‘நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவள்முன்’’ என்னும் நக்கீரர் வாக்கை இது நினைவுறுத்துகிறது.

‘வாளின் முனை’ எனத் துவங்கும்
திருப்புகழில்
‘‘வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர்
தீர அருள் தரு சுந்த! நிரந்தர!
மேலை வயலை உகந்துள நின்றருள்
பெருமாளே’’

- எனும் அடிகள், வேலும் மயிலும் எனும் திருமந்திரத்தின் சக்தியைக் குறிக்கும் மகுடப்பகுதி ஆகையால் மனப்பாடத்திற்கும் ஜெபத்திற்கும் உரியன என்பார் செங்கல்வராயப்பிள்ளை அவர்கள். 




அமரர் குருஜி திரு. ஏ.எஸ். இராகவன் அவர்கள், தமது ஒவ்வொரு ‘திருப்புகழ் இசை வழிபாடு’ நிகழ்ச்சியின் இறுதியிலும் இவ்வரிகளைத் தவறாமல் பாடும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘பாத பங்கய முற்றிட உட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பரது செய்ப்பதியில்
தந்தவன் நீயே’’

- எனும் பாடல் வரிகள் மூலம் பதினாறாயிரம் பாக்களை முருகப்பெருமானுக்கு அர்ப்பணித்த அருணகிரி நாதருக்கு அப்பேரருளை வழங்கியவன் வயலூர்ப்பெருமான் என்று உணரலாம்.




திருச்சி நகரின் மேற்கே 11 கி.மீ. தொலைவில் உள்ளது வயலூர்த் திருத்தலம், சக்தி தீர்த்தத்தை வணங்கி கோயிலுள் நுழையும்போது இடப்புறம் தலவிருட்சமான வன்னி மரத்தைக் காணலாம்.

நேரே பார்த்தால் சிவபெருமான் காட்சி தருகிறார். ஆதிநாயகர் என்றும் அக்னீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆதிநாயகர் சந்நதியில் இருப்பது சுந்தரதாண்டவ மூர்த்தியின் அழகிய சிற்பம். உறையூைர ஆண்ட கேசரி வர்மன், முதலாம் ராஜராஜசோழன் முதலான பல மன்னர்கள் வயலூர்க் கோயிலுக்கு மண்டபம் வழங்கி உள்ளனர். 




இப்போதுள்ள கோயிலுக்கு மேற்கே ஐநூற்றுவன் என்ற பெயரில் ஐந்நூற்றுக்கால் மண்டபம் ஒன்று கட்டி, அங்கு சுந்தரதாண்டவ மூர்த்தியை எழுந்தருளச் செய்து பெருவிழா நடத்தியவன் ராஜராஜசோழன் என்று வயலூர்த் தலவரலாறு கூறுகிறது.

அம்மண்டபம் எங்கே என்பது பற்றிய விவரம் இப்போது ஒன்றும் இல்லை. அங்கிருந்து சுந்தர தாண்டவமூர்த்தி இப்போதுள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.




சிற்பத்தில் திருவாசி, முயலகன், ஜடாமுடி எதுவும் இல்லை. கால் தூக்காமல் எம்பெருமான் நின்றாடும் இந்த நடனம் சுந்தரத்தாண்டவம் எனப்படுகிறது. அன்னையின் பெயர் ஆதிநாயகி. 




பாதம் தூக்கி நடனமாடும் நடராஜரை மட்டுமே நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கோ, காலைத் தூக்காமலேயே உள்ள நடராஜரைக் காணலாம். இவரது ஜடாமுடி முடியப்பட்ட நிலையில் இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு 'சதுரதாண்டவ நடராஜர்' என்று பெயர். மார்கழி திருவாதிரைத் திருநாள் இவருக்கு விசேஷமாக நடக்கும்.




தெற்குப் பார்த்த திருஉருவம். அன்னையையும் பிதாவையும் தரிசித்து விட்டுத் தெற்குப் பிராகாரம் வழியாக வரும்போது பொய்யாக் கணபதி, அருணகிரிநாதர், தட்சிணாமூர்த்தி ஆகியோரைத் தரிசிக்கலாம்.

மனக்கண்ணில் அருணகிரிநாதர் கணபதியை வணங்கும் காட்சி தென்பட, கைத்தல நிறைகனி எனத் துவங்கும் பாடலை வாய்விட்டுப் பாடத் தோன்றும் . 




அடுத்து, விழாக் காலங்களில் அடுத்துள்ள ஊர்களுக்கு ஊர்வலம் செல்லும் விழா நாயகரான முத்துக்குமார சுவாமி மயில் மீதமர்ந்து தரிசனம் தருகிறார்.

‘‘ஏழ்தலம் புகர் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா’’

- என்று ஆவினன்குடியில் இவரை நினைத்துப் பாடியிருக்கிறார் அருணகிரியார். மூலவர் பாலசுப்ரமண்யர் திருவுருவம் கண்டு நீங்கள்  இமைக்கவும் மறுப்பீர்கள் .

இவரால்தான் ஊருக்கு ‘குமார வயலூர்’ என்ற பெயர் அமைந்துள்ளது.




திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார் ‘முத்தைத் தரு” எனத் துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின் அவர் வேறு பாடல் எதுவும் பாடவில்லை.

ஒரு சமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி ‘வயலூருக்கு வா!” என்றது.

அருணகிரியார் இங்கு வந்தார். அங்கு முருகனின் தரிசனம் கிடைக்குமென நினைத்து வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முருகன் வரவில்லை. உடனே ‘அசரீரி பொய்யோ?” என உரக்கக் கத்தினார்.

அப்போது முருகன் அங்கு தோன்றி வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் ‘ஓம்” என்று எழுதினார். அதன்பின் இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடினார். தொடர்ந்து பல முருகன் கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடினார்.




பால் வடியும் பாலமுகம்; வள்ளி தெய்வானை அருகிலிருக்கத் தான் மட்டும் மயில் மேல் அமர்ந்திருக்கிறார். பல இடங்களிலும் முருகப்பெருமான் தாய் தந்தையரை பூஜை செய்த புராணக் குறிப்புகள் உள்ளன. இங்கு மட்டும்தான் தேவியருடன் சேர்ந்து பெற்றோரை வணங்குகிறார்.

சிவன் சந்நதியின் பின்புறத்தில் அமைந்துள்ள சந்நதி. இரு சந்நதிகளுக்கும் இடையே இடநெருக்கடி காரணமாக முருகனை மிகமிக அருகில் நெருங்கிச் சென்று பார்க்க முடிகிறது. 

மயில் இச்சா சக்தியாகிய வள்ளியின் பக்கம் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. மயில் எதிரில் வரும் பக்தர்களைப் பார்த்தபடி நிற்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இந்திரனே மயிலாகி நின்று முருகனைத் தாங்கிய கோலம் இதுவே.



குமார வயலூர் பாலசுப்பிரமணியனைத் தரிசிக்கும் போது கிருபானந்த வாரியார் சுவாமிகளைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியாது. வயலூர் தலம் பற்றிய அருணகிரியாரின் பாடல்கள் வாரியார் சுவாமிகளை வயலூருக்குச் செல்ல வைத்தன.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் தமது திருப்புகழ் சபையினருடன் வயலூர் சென்று திருப்புகழ் பாடல்களைப் பாடிய பின்னர் சென்னை திரும்பினார். சிறுவனான ஜம்புநாத குருக்களின் தட்டில் எட்டணா காணிக்கை செலுத்தியிருந்தார். சென்னை திரும்பிய சில நாட்களுக்கு அவர் பெயருக்கு வயலூரிலிருந்து எட்டணா மணி ஆர்டராக அனுப்பப்பட்டிருந்தது கண்டு அவருக்கு எதுவும் புரியவில்லை.


மூன்று மாதங்களுக்குப் பிறகு திருச்சியில் உரையாற்றச் சென்றிருந்த போது, வயலூர் கோயில் அறங்காவலரை சந்திக்க நேர்ந்தது. மணி ஆர்டர் பற்றி அவர் கூறிய செய்தி சுவாமிகளைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. இரவில் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செட்டியார் கனவில் தோன்றிய ஒரு முதியவர் ‘‘ஏண்டா, என் அடியாரிடம் எட்டணா வாங்கினாயா? உன்னால் வயலூர்க் கோயில் கோபுரத்தைக் கட்டி விட முடியுமா?’’ என்று அதட்டி விட்டு மறைந்தாராம் முதியவர்.


அடுத்த நாள் விசாரித்த போது திருப்புகழ் பாட வந்த ஒருவர்தான் குருக்கள் தட்டில் எட்டணா போட்ட விவரம் தெரிந்தது. அதிர்ஷ்ட வசமாகக் கோயில் பதிவேட்டில் வாரியார் சுவாமிகளுடைய பெயர் எழுதப்பட்டிருந்ததால் உடனே அப்பணத்தைத் திருப்பி அனுப்பி விட்டதாகக் கூறிய செட்டியாரவர்கள், கோயில் திருப்பணி முழுவதற்கும் வாரியார் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டினார்.

அன்று முதல் பல்வேறு இடங்களில் உரையாற்றிய போது கிடைத்த பணத்தையும், வசதி படைத்த பக்தர்கள் அளித்த பொருள் உதவிகளையும் வயலூருக்கே அர்ப்பணித்தார் சுவாமிகள்.




மிகுந்த சிரமங்களுக்கிடையே தொண்டு செய்த வாரியார் அவர்களின் மாபெரும் முயற்சியால், வயலூர் ராஜகோபுரம் புதுக்கியும், சக்தி தீர்த்தத்தைப் புதுக்கியும், சிறிய கோபுரம் அமைக்கப்பட்டும், அருணகிரிநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இது நடந்தது 1936 ம் ஆண்டில்!


வாரியார் சுவாமிகளின் தந்தையார் வந்து விரிவுரை செய்தார் என்பதும் வியப்பிற்குரியது. திருச்சியில் வசித்த பலரும் அறிந்திராத வயலூர் குமரன், இன்று முருக பக்தர்களுக்கு, குறிப்பாகத் திருப்புகழ் பாடும் அன்பர்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குவதற்குக் காரணம் ஆதிநாளில் வாரியார் சுவாமிகள் செய்த திருப்பணிகளே காரணம் என்றால் அது மிகையாகாது.

மீண்டும் அருணகிரியாரின் வாழ்க்கை வரலாற்றிற்கு வருவோம். முத்திக்கொரு வித்தான குருபரன், அருணகிரியாரை வயலூரிலேயே நிரந்தரமாகத் தங்க விட்டானா... என்றால் அதுதான் இல்லை. ‘நான் விரும்பி அமரும் விராலி மலைக்கு வா’ என்று அன்புக் கட்டளை இட்டான். 

அம்மா விராலி மலைக்கும் செல்ல  ஆசை பிறக்கிறது தாயே ! அழைத்து செல்ல முடியுமா ?  

கண்டிப்பாக ரவி !  இமை மூடி திறப்பதற்குள் மறைந்துபோனாள் மதுரையின் பேரழகி !!



ஸுமுகீ -- ''பார்க்க லக்ஷணமாக தெய்வீகமா இருக்கு'' என்போமே அது அம்பாளின் முகத்தை நினைவு படுத்தவே தான். பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் ஒரு அழகு முகம். சாந்தோக்ய உபநிஷத் (IV.14.2) “ உன் முகத்தை பார்க்கும்போது அது பிரம்மத்தை உணர்ந்து ஒளிவீசுவது தெரிகிறது'' என்று சொல்கிறது. எல்லா உபநிஷதங்களும் அப்படித்தானே சொல்ல முடியும்.

நளினி -- மென்மையானவள். தாமரை மலரின் மெத்து மெத்து அங்கம். புனிதமானவள். கங்கைக்கு நளினி என்று ஒரு பெயர் உண்டு.


ஸுப்ரூ - அழகிய மிருதுவான வளைந்த வில்லினை ஒத்த புருவங்களை உடையவள் ஸ்ரீ லலிதாம்பிகை என்று சொல்கிறது இந்த நாமம். நமக்கு இந்த அர்த்தம் தெரியாததால், சுப்ரு என்று சுப்பிரமணியனை செல்லமாக கூப்பிடுகிறோம்.

''ஹே உமாதேவி, இந்த உலகில் பயத்தை போக்க வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். உன் இரு அழகிய வில்லினை ஒத்த புருவங்களை ஆயுதமாக கொண்டு நாண் ஏற்றி மலர் அம்புகளை தொடுக்க ரதியின் கணவன் மன்மதனிடம் அளித்தால் போதும் '' என்று சௌந்தர்ய லஹரி 47வது ஸ்லோகம் சொல்கிறது. பயம் ஆளைக் கொன்றுவிடும். புலியை விட கிலி ஆபத்தானது.

=============================





Comments

ravi said…
மயில் ஆடும் பிருந்தாவனம் மனம் மயக்கும் பிருந்தாவனம்

மாசில்லா பிருந்தாவனம் மாணிக்கம் குடியிருக்கும் பிருந்தாவனம்

மாதொரு பாகன் வியக்கும் பிருந்தாவனம் மாதவன் மடி உறங்கும் பிருந்தாவனம்

கருணை பொங்கும் பிருந்தாவனம் காமன் அண்டா பிருந்தாவனம்

ராயர் வாழும் பிருந்தாவனம் ... ரா பகல் பாரா அருள் தரும் பிருந்தாவனம் 🍇🍇🍇
ravi said…
பாதமோ இல்லை பவளமோ .. நானறியேன்

பளிங்கு சிலையோ இல்லை பாற்கடல் பொங்கும் பால் குடமோ நானறியேன்

கலி தீர்க்க வந்த கார்மேகமோ இல்லை களி தின்றவனின் மறு அவதாரமோ நானறியேன்

கற்பகமோ இல்லை காமதேனுவோ நானறியேன்..

காப்பாற்ற சாயி நீ இருக்கும் வேளை நானறியப்போவது ஒன்றுமில்லை 🌸🌸🌸🌸🌸🌸
ravi said…
*Udyadbhānu-sahasrābhā उद्यद्भानु-सहस्राभा (6)*👌👌👌
ravi said…
*Udyad* – rising; bhānu-sun;

*sahasra* – thousand or countless;

*abhā* - light.

Lalitāmbikā appears as bright as thousand suns rising at the same time.

The colour of the rising sun is red.

The complexion of Lalitāmbikā is red as described in the dhyāna śloka of this Sahasranāma (sakuṅkuma-vilepanām).

Almost all the tantra śastra-s and ancient scriptures talk about Her complexion as red.

In the previous nāma Her prakāśa form was discussed and in this nāma Her vimarśa form is being described.

She has three forms – the prakāśa form or the subtle form, the vimarśa form or the physical form and Her parā form or the supreme form.

The prakāśa form of Her is said to be made of various mantra-s, the supreme one being mahā ṣodaśī mantra.

Her vimarśa form is Her physical form.

She is worshiped in thousands of forms.

Her supreme form is realised through mental worship.

ravi said…
These forms and the associated red colour are for easier contemplation.

From the next nāma onwards, Her physical form is being described.

The red colour also indicates care. She looks after Her devotees with great care and affection like a mother.

Kṛṣṇa says (Bhagavad Gīta II.12) “If hundreds of thousands of suns were to rise at once into the sky, their radiance might resemble the effulgence of the Supreme Person in that universal form.”💥💥💥💥💥
ravi said…
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸👏👏👏👏
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 119 🏆🏆🏆🥇🥇🥇

*Started on 26th sep 2020*💐💐💐💐

மீண்டும் ஒரு முறை முதல் நாமத்திலிருந்து பார்ப்போம் ..

மனதில் ஆழமாக பதிய வேண்டியே திருப்பி திருப்பி எழுதுகிறேன் 🎉🎉🎉
ravi said…
*ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:*

ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி

*ஓம் மஹாபாதக-நாசி(h)ன்யை நம:*

ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி

*ஓம் மஹாத்ரிபுரஸுந்த(3)ர்யை நம:*

ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி

*ஓம் சராசர-ஜகந்நாதாயை நம:*

ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி

*ஓம் பார்வத்யை நம:*

ஓம் மலைமகளே போற்றி

*ஓம் ஸ்ருஷ்டிகர்த்ர்யை நம:*

ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
🌷🌷🌷🌷🌷🌷🍇🍇🍇🍇🍇🍇🍇
ravi said…
உன் திருமேனி எங்கும் திருநீறு .. யாரும் இதுவரை தன் உள்ளத்தின் நிறத்தைக் காட்டியதில்லை

பேசும் வார்த்தைகள் எல்லாமே திருப்புகழ் ... யாரும் இப்படி முத்து முத்தாய் சிந்தியதில்லை .

கண்களில் சொட்டும் காரூண்யம் .. யாரும் கங்கை இதன் பிரவாகத்தை காட்டியதில்லை ..

காமாக்ஷியை நெஞ்சில் வைத்து தில்லை கூத்தனை நெற்றியில் சுமக்கும் நீ எமக்கு மாதொரு பாகனே 👌👌👌
ravi said…
ஆயிரம் குடம் நெய் ஊற்றி அதில் பல குடங்கள் தேன் ஊற்றி கருப்ப சாறினிலே கற்கண்டை கலந்து

வெல்லம் வண்ணாமலை போல் சேர்த்து

பாதாம் முந்திரி ஏலக்காய் எண்ணாமல் போட்டு

சர்க்கரைப்பொங்கல் ஒன்று வைத்தேன் ...

எதிரில் கிண்ணம் ஒன்று எடுத்து ஓலை ஒன்று தொடுத்து ரமணா என்றே எழுதி வைத்தேன் .

சாரை சாரையாய் 🐜🐜🐜🐜🐜🐜🐜 போகும் எறும்புகளை அங்கே கொஞ்சம் ஏவி விட்டேன் ..

எல்லா எறும்புக்கும் போகும் வழியில் சக்கரை தெளித்தேன் ..

எல்லா எறும்பும் சென்றன ஒரே இடம் ..

ஓலை வைத்த கிண்ணத்தில் ஓங்காரம் அதை ரீங்காரம் செய்தே வீடு கட்டின ஓலை அது வீட்டின் கூரை ஆனது ... 😇😇😇
ravi said…
*வாரணம் ஆயிரம்* 👍👍👍🦜🦜🦜17
ravi said…
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி

அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து

பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்🙏🙏🙏🦜🦜🦜
ravi said…
*வரி சிலை வாள் முகத்து என் ஐ மார்தாம் வந்திட்டு* -

அழகிய வில் போன்ற புருவமும் ஒளிமிகுந்த முகத்தையும் கொண்ட என் தந்தை/அண்ணன் மார்கள் வந்து

*எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி*-

தீக்குண்டத்தை நன்றாக வளர்த்து அதன் முன்னே என்னை நிறுத்தி

*அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து* -

சிங்கமுகன் கொண்டவன் அச்சுதன் கையின் மேல் என் கையையும் வைத்து

*பொரி முகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்* -

அந்தத் தீயில் பொரியைத் தூவுவதாகக் கனவு கண்டேன் தோழீ நான்💐💐💐
ravi said…
அழகிய வில் போன்ற புருவமும் , ஒளிமிகுந்த முகத்தையும் கொண்ட என் தந்தை /அண்ணன்மார்கள் வந்து அமர்ந்து , தீக்குண்டத்தை நன்கு வளர்த்து , அதன் முன்னே என்னை நிறுத்தி ,

சிங்க முகன் அச்சுதன் கையின்மேல் என் கை வைத்து அந்தத் தீயில் பொரியைத் தூவுவதாகக் கனவு கண்டேன் தோழீ .🙏🙏🙏
ravi said…
அப்பா கைப்பிடிச்சு தாரை வார்த்துக் கொடுத்தார்..

அடுத்து அண்ணன்கள் எங்கள் வீட்டில் நாங்கள் இதுவரை நெல்லில் உள்ள அரிசியைப் போன்று காத்த பெண்ணை ,

அவள் பொரிந்து திருமணத்திற்குத் தயாராகி விட்டாள்

இனி அவளை உங்களுக்குக் கட்டிக் கொடுக்கறோம் என்கிறார்கள்..

என் ஐ மார்..ஐ என்றால் தலைவன்,

தகப்பன் ,தகப்பனுக்கு அடுத்தவனான தமையன் . கோதையின் உடன்பிறந்தோர் இருந்தார்களா அல்லது பெரியப்பா/சித்தப்பா மக்களோ.. தெரியல.. ஆனால் முறைமை செய்கிறார்கள்..:)

சிங்க முகன் அச்சுதன் கையின் மேல் கை வைத்து பொரியைத் தீயில் தட்டி முறைமை செய்கின்றனர் :) 🦜🦜🦜
ravi said…
வெளி நாடுகளில் எல்லாம் திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்வது..

நம் நாட்டில் மட்டும்தான் திருமணம் என்பது இரு குடும்பம் ஒன்று சேர்வதற்கான விழா..

உறவுகள் பலப்படுத்தப்படுகிறது..மச்சினன் (பெண்ணுக்கு அண்ணன்/தம்பி ) இல்லாத வீட்டில் பெண் எடுக்காதே என்று கூட ஒரு சொலவடை உண்டு..

அண்ணனோ தம்பியோ இருந்தால்தான் பெண்ணுக்குத் தேவையானதை தகப்பனுக்குப் பிறகு செய்வானாம்..(நான் அறிய இந்த நடைமுறை இன்னமும் மதுரைப்பக்கம் உண்டு..)🍇🍇🍇
ravi said…
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
ravi said…
சபரிமலையில் ஐயப்ப ஸ்வாமியை உறங்க வைக்கும் ’ஹரிவராசனம் விஸ்வமோஹனம்’ எனும் உறக்கப்பாட்டு. இது, அத்தாழபூஜை எனும் அர்த்தசாம பூஜை முடிந்த பின் சபரிமலை திருத்தலத்தின் நடை சார்த்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர்.
ravi said…
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி எனும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர், 1920-ம் வருடம் இந்தப்பாடலை இயற்றினார் என்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள். முன்னொரு காலத்தில், வசதிவாய்ப்புகளெல்லாம் இல்லாத குடும்பம்தான். ஆனாலும் தன் வீட்டுப் பக்கம் எவர் வந்தாலும் அவர்களைப் பசியாற வைத்த குடும்பம் அது. அப்படியொரு வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் அந்தப் பரம்பரையினர்.

ravi said…
அப்போது புலிப்பாலைப் பெறுவதற்காக வந்த மணிகண்ட சுவாமி, இவர்கள் வீட்டின் வழியாக வந்ததாகவும் பசியுடனும் களைப்புடனும் சோர்ந்து போய் வந்த மணிகண்ட சுவாமிக்கு, வீட்டில் உணவேதுமில்லையாம். கம்பு தானியம் கொண்டு, கூழ் செய்து உணவாக அளித்தார்கள் என்கிறது ஐயப்ப புராணம். அப்போது அன்றைய இரவு, மணிகண்ட சுவாமி இவர்களின் வீட்டில் தங்கினார் என்பதும் சரிதம் விவரிக்கிறது. கம்புக் கூழை குடிப்பதற்காக வழங்கியதால், இந்தக் குடும்பத்துக்கு கம்பங்குடி எனும் பெயர் அமைந்ததாம்.
ravi said…
அந்தப் பரம்பரையில் இருந்து வந்தவர்தான் கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர். ஆதிகாலம் தொட்டே ஐயப்பனைத் தரிசித்து வேண்டி வந்த குடும்பத்தை, பரம்பரையை, வம்சத்தைச் சேர்ந்த கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர்தான், ஹரிவராசனம் பாடலை இயற்றி அருளினார் என்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
ravi said…
இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பஸ்வாமியை தரிசிக்கும் போது எழுதினார். ஒவ்வொரு வரிகளிலும் ஐயப்பஸ்வாமியே அருளியது போல இருந்ததாக அவர் சிலிர்ப்புடன் சிலாகித்துள்ளார்.
ravi said…
அவர் பிரசுரித்த “சாஸ்தா ஸ்துதி கதம்பம்” என்ற நூலில் உள்ளது இந்த ஹரிவராசனம் கீர்த்தனம். இந்த நூலில் ஏராளமான கீர்த்தனைகள் உண்டு. என்றாலும் அவற்றில் மிக முக்கியமானதாகப் போற்றப்படுகிறது இந்தப் பாடல். உறக்கப்பாடல் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் நடை சார்த்தும் பாடல் என்பதே சரியாக இருக்கும் என்கிறார் உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம்.
ravi said…

1950-களில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீ விபத்துக்கு உள்ளானது. பின்னர் தேவ பிரஸ்னம் பார்க்கப்பட்டது. 51ம் ஆண்டு கோயில் மளமளவெனப் புனரமைக்கப்பட்டது. அப்போது கோயில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி, ஹரிவராசனம் கீர்த்தனையை இரவு அத்தாழபூஜையில் ஐயப்ப ஸ்வாமி முன் நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை மாற்றினார். ’
ravi said…
இது ஐயப்ப ஸ்வாமியை உறங்கவைக்கும் பாடல் போல உள்ளது. அதனால் அர்த்தசாம பூஜை முடிந்ததும் நடை சார்த்துகிற பாடலாக இருக்கட்டும்’ என மாற்றியமைத்தார் என்கிறார். இதை நடை சார்த்தும் பாடல் என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
ravi said…
பிறகு, பின்னணிப் பாடகர் ஜேசுதாஸின் காந்தர்வக் குரலில், ஹரிவராசனம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, இசைக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு தமிழ், மலையாள மொழிகளில் வெளிவந்த “ஸ்வாமி ஐயப்பன்” திரைப்படத்தில் முதன் முறையாக இந்த பாடலை பாடினார் கே.ஜே.ஜேசுதாஸ். புகழ் பெற்ற தேவராஜ் மாஸ்டர் இசையில், மனதை அப்படியே உருக்கியது இந்த ஹரிவராசனப் பாடல்!

ravi said…
ஜேசுதாஸின் தேன் குரலில், கடந்த 45 வருடங்களாக மனதை அமைதிப்படுத்துகிறது ஹரிவராசனப் பாடல். இந்தப் பாடலை 1920ம் ஆண்டு கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் எழுதினார். கிட்டத்தட்ட இந்தப் பாடலுக்கு, கீர்த்தனைக்கு இந்த 2020ம் ஆண்டு... நூற்றாண்டு!

சுவாமியே சரணம் ஐயப்பா!
ravi said…
ஹரிவராசனம் 👍👍👍💐💐💐

எல்லோருக்கும் மிகவும் பிடித்த பாடல் .

யேசுதாஸ் குரலில் கேட்க்கும்போது அந்த ஐயப்பனே நம் அருகில் வந்து அமர்ந்து கேட்பது போல் இருக்கும் ..

இந்த பாடலின் பொருள் நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும் ?

எனக்கு சத்தியமாக தெரியாது ...

இந்த பாடலுக்கு அர்த்தம் கண்டு பிடிக்கும் முயற்சியில் இன்று கொஞ்சம் வெற்றி பெற்றேன் என்று சொல்லலாம் ...

புரிந்து கொண்ட அர்த்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் ... 💐💐💐
ravi said…
*ஸ்ரீ ஐயப்பன் - ஹரிவராசனம் - பாடல் - அர்த்தம்.*

*ஹரிவராசனம் விஸ்வமோஹனம்*

*ஹரிததீஸ்வர மாராத்ய பாதுகம்||*

*அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம்*

*ஹரி ஹராத்மஜம் தேவமாஸ்ரயே||*

(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)

மிக சிரேஷ்டமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும்,

விஸ்வத்தையே (பிரபஞ்சத்தையே) தன் முறுவலால்
மோகிக்கச் செய்பவரும்,

ஹரிதம் என்ற குதிரையில்
பவனி வரும்

சூர்ய பகவானாலேயே ஆராதிக்கப்படும்
பாதங்களை உடையவரும்,

சத்ருக்களை அழிப்பவரும்,
நித்யம் ஆனந்த நர்த்தனம் செயபவருமாகிய ஹரிஹரபுத்ர
தேவனை சரணடைகிறேன்.💐💐💐
ravi said…
*சரணகீர்த்தனம் சக்த மானஸம்*

*பரணலோலுபம் நர்த்தனாலஸம்|*

*அருணபாஸுரம் பூதநாயகம்*

*ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே||*

(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)

சரண கோஷத்தை கேட்பதனால் மிகவும் மன
மகிழ்ச்சியடைபவரும்,

பிரபஞ்சத்தைக் காத்து
ரட்சிப்பவரும்,

நர்த்தனமிடுபவரும்,

அருணோதயத்தினைப் போல் ஒளிமயமான
காந்தியை உடையவரும்,

பூதநாயகனுமாகிய
ஹரி ஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்👌👌👌
ravi said…
*ப்ரணய ஸத்யகம் ப்ராணநாயகம்*

*ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்|*

*ப்ரணவ மந்திரம் கீர்த்தனப்ப்ரியம்*

*ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||*

(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)

பிரியமான சத்யகாவின் கணவரும்,

தன்னைச்
சரணடைந்தவர்களுக்கு பாகுபாடில்லாமல்
எல்லா வளத்தையும் அளிக்கும் ஆற்றலும்
திறமையும் உள்ளவரும்,

ஓங்கார ஸ்வரூபரும்

இசையில் பிரியமுள்ளவருமான
ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.👍👍👍
ravi said…
*துரக வாஹனம் ஸுந்தரானனம்*

*வரகதாயுதம் தேவ வர்ணிதம்|*

*குரு க்ருபாகரம் கீர்த்தனப்ப்ரியம்*

*ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||*

(சரணம் ஐயப்பா சுவாமி)

(வெள்ளை) குதிரை வாகனரும்,

அழகிய முகமுடையவரும்,

சிறந்த கதாயுதம் ஏந்தியவரும்,

தேவர்களால்
வர்ணிக்கப்படுபவரும்,

குருவைப் போல் பிரியம்
உடையவரும்,

கீர்த்தனங்களில் பிரியமுடையவருமான
ஹரிஹர தேவனைச் சரணடைகிறேன்👏👏👏
ravi said…
*த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்|*

*த்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்||*

*த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்|*

*ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||*

(சரணம் ஐயப்பா சுவாமி)

மூன்று புவனங்களிலும் உள்ளவர்களால்
அர்சிக்கப்படுபவரும்,

எல்லா தெய்வங்களின்
அம்சமும் பொருந்தி உள்ளவரும்,

மூன்று
கண்களையுடையவரும், ப்ரபுவானவரும்,

சிறந்த குருவாக விளங்குபவரும்,

முப்பத்து
மூன்று கோடி தேவதைகளால் பூஜிக்கப்படுபவரும்,

வேண்டுவதை உடனே அளிப்பவருமான
ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.💐💐💐
ravi said…
*பவபயாவஹம் பாவகாவுகம்|*

*புவனமோஹனம் பூதிபூஷணம்||*

*தவளவாஹனம் திவ்யவாரணம்|*

*ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||*

(சரணம் ஐயப்பா சுவாமி)

சம்சார சாகரம் பற்றிய பயத்தைப் போக்குபவரும்,

பக்தர்களுக்கு அருள்புரிவதில் தந்தையைப் போன்றவரும்,

புவனத்தையே தன் மாயையால் மோகிக்கச் செய்பவரும்,

விபூதியைத் தரித்தவரும், வெள்ளை யானையை
வாகனமாக உடையவருமான

ஹரிஹரபுத்ர
தேவனைச் சரணடைகிறேன்.🙏🙏🙏
ravi said…
*களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்|*

*களப கோமளம் காத்ர மோஹனம்||*

*களப கேஸரி வாஜிவாஹனம்|*

*ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||*

(சரணம் ஐயப்பா சுவாமி)

மதுரமான, மிருதுவான புன்முறுவலை உடையவரும்,

அழகான முகத்தை உடையவரும்,

இளமையும்
மென்மையையும் உடையவரும்,

மயங்க வைக்கும்
உடலமைப்பை உடையவரும்,

யானை, சிங்கம், குதிரை
ஆகிய வாகனங்களை உடையவருமான

ஹரிஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.👌👌👌
ravi said…
*ச்ரித ஜனப்ப்ரியம் சிந்திதப்ரதம்|*

*ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்*

*ச்ருதி மனோகரம் கீதலாலஸம்*

*ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||*

(சரணம் ஐயப்பா சுவாமி)

சரணமடைந்த ஜனங்கள் மீது பிரியம் உடையவரும்,

நினைத்ததை உடனேயே அளிப்பவரும்,

வேதங்களையே
ஆபரணமாக அணிந்தவரும்,

பரமாத்மாவும்,

வேதங்களால் இனிமையாகப் போற்றப்படுபவரும்,

கீதங்களில் பிரியமுள்ளவருமான

ஹரிஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.💐💐💐

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா👍👍👍

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.👌👌👌
ravi said…
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
ravi said…
*சிவானந்தலஹரி 91வது, 92வது, 93வது ஸ்லோகம் பொருளுரை*💐💐💐
ravi said…
இந்த 91 வது ஸ்லோகத்தில

आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-

विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्

सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं

भावे मुक्तेर्-भाजनं राज-मौले

ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-

த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .

ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ

பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே
ravi said…
குருவுக்கோ, தெய்வத்துக்கோ வழிபாடு பண்ணும் போது, நமக்கு உலகத்தில போய் “success” அடைஞ்சு என்ன திருப்தி கிடைக்கறதோ,

அதில இல்லாத ஒரு திருப்தி கிடைக்கறது.

அதனால தான் foreignல இருக்கற CEO கூட இங்க ஒரு குருவை தேடிண்டு வரா ..இல்லையா ..

அந்த ego குறையும் போது, கிடைக்கற ஆனந்தம் ego boost ஆகும் போது கிடைக்கறது இல்லை. egoவை விட்ட போது கிடைக்கற ஒரு திருப்தி ..

அது அனுபவிச்சா அதுவும் வேணும் போல இருக்கு நமக்கு..

மஹான்கள் அதேயே பண்ணின்டு இருக்கா..

அதனால தான் நம்ம போய், குருன்னு நமஸ்காரம் பண்ணி, அவா கூட இருந்து, அவாளுக்கு சேவை பண்ணி, அவாளுடைய எளிய தேவைகளை பூர்த்தி பண்ணி, அவா சொன்னதை கேட்டு, அது மூலமா நாம லாபம் அடையறோம்.

ravi said…
நம்ம உலகத்தில , நம்மோட egoவை வெச்சு காரியங்கள் பண்ணிண்டு தான் இருக்க வேண்டியிருக்கு.

material worldல தான் நம்ம இருக்கோம்.

ஆனா அப்பப்போ போய், இந்த மஹான்களுடைய சேவையைப் பண்ணிட்டு வந்தா, நமக்கு battery recharge ஆகிறது.💐💐💐
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
[96/108] – *அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்*
ravi said…
சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.

அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.

பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும்.

இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார்.

ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.

ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார்.

கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.

இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.

பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது.👏👏👏
ravi said…
*கம்பராமாயணம்* *634* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*யுத்த காண்டம். முதற் பாகம்*👌👌👌.
ravi said…
அனைத்தையும் கேட்டுக் கொண்ட இராமன் கருணையோடும் நன்றிப்பெருக்கோடும் அனுமனைப் பார்த்து கூறுகிறான்:

"வீரனே! விபீஷணன் சொல்லிய செய்திகளிலிருந்து இராவணன் படைகளில் பாதியை நீயே துவம்சம் செய்திருக்கிறாய்.

இலங்கை முழுவதையும் எரியூட்டி தீக்கு இரையாக்கியிருக்கிறாய். எனக்கு இனி அங்கே என்ன வேலை பாக்கி வைத்திருக்கிறாய்?

என் வில்லின் வலிமைக்கு இழுக்கு என்றுதான் நீ சீதையை மீட்டுவரவில்லை போலும். மாருதி!

இதற்கெல்லாம் பிரதியாக நான் உனக்கு என்ன செய்ய முடியும்?

உனக்கு பிரம்மபதத்தை வழங்குகிறேன் என்றான் இராமன்.

ravi said…
இராமபிரான் சொன்னதைக் கேட்டு அனுமன் கீழே விழுந்து அவனை வணங்கிவிட்டு, நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்.

கூடியிருந்த சுக்ரீவன் முதலானவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

பின்னர் அனைவரும் இலங்கைக்குச் செல்ல என்ன வழி என்பதை ஆராய்வதற்காக கடற்கரைக்குச் சென்றனர்.

அங்கு இராமன் விபீஷணனைப் பார்த்து "நாமும் நமது படைகளும், இந்தக் கடலை கடக்கும் உபாயம் ஒன்று சொல்" என்றான்.💐💐💐
ravi said…
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 885*🥇🥇🥇

*US 877*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

36 வது ஸ்தபகம்

ஷட்த்ரிம்ஸ ஸ்தபக

ப்ரகீரணம் ( தூணகவ்ருத்தம்)

இந்த ஸ்தபகத்தில் அன்னையை பலவாறு கவி அலங்கரித்து பார்க்கிறார். இது ஒரு கீதமாக அமைந்துள்ளது ..

முகாரத்த மோதகம்" என்ற விநாயக பஞ்சரத்தினம் போல பாடக்கூடியது . 👏👏👏🌷🌷🌷🌹🌹🌹💐💐🍁🍁
ravi said…
877💐💐💐

அம்பரஸ் தலே புரா புரந்தரோ ததர்ஸ யாம்

யாம் வதந்தி பர்வதப்ரஸூ மைதி ஹாஸிகா

ஸா பரா புராமரே புரந்த்ரி காsகிலாம்பிகா

புத்ரகாய மஜ்ஜதே ததாது தக்ஷிணம் கரம் 👏👏👏
ravi said…
எந்த தேவர்கள் தினமும் வணங்குகிறார்களோ எவர்களுக்காக அக்னி குண்டத்தில் இருந்து விளையாட வெளிப்பட்டாளோ , யார் காமனை எரித்தவனையே தன் கண்களுக்குள் வைத்துக்கொண்டாளோ அவள் தரும் புன்னகை கோடி கோடி பெரும் .
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 305*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

ஸ்துதி சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

80/
3
ravi said…
80💐💐💐

த்ரியம்பக குடும்பினீம் த்ரிபுர ஸூந்த்ரீம் இந்திராம்

புலிந்தபதி ஸூந்த்ரீம் த்ரிபுரபைரவீம் பாரதீம்

மதங்க குல நாயிகாம் மகிஷ மர்த்தினீம் மாத்ருகாம்

பணந்தி விபு தோத்தமா விஹ்ருதி மேவ காமாக்ஷி தே 🍇🍇🍇
ravi said…
அன்னைக்கு இது வரை நாம் கேள்விப்படாத திருநாமம் ... *மாத்ருகாசரஸ்வதி* அதாவது அ முதல் ஹ வரை மாத்ருகா அக்ஷரங்களை மேனியாக கொண்டவள் ... அந்த மாத்ருகா சரஸ்வதி நம் எல்லோரையும் காப்பாற்றுவாள் 🙏🙏🙏
ravi said…
💐💐💐💐🍇🍇🍇🙏🙏🙏🦚🦚🦚
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அவ்வையாரைவிட‌த் த‌மிழ் நாட்டுக்கு உப‌கார‌ம் செய்த‌வ‌ர் இல்லை. ஆயிர‌ம் கால‌மாக‌ இந்த‌த் தேச‌த்தில் ஒழுக்க‌மும் ப‌க்தியும் இருந்து வ‌ந்திருக்கிற‌தென்றால் அது முக்கிய‌மாக‌ அவ்வையாரால்தான்.

ravi said…
முளைக்கிற‌போதே, குழ‌ந்தைக‌ளாக‌ இருக்கிற‌போதே, ந‌ல்ல‌ ஒழுக்க‌த்தையும், ப‌க்தியையும், உண்டாக்கி விட்டால்தான் பிற‌கு அவை நிலைத்து நிற்கும். தமிழ் நாட்டில் எத்த‌னையோ ம்காக‌விக‌ள், ப‌க்த‌ர்க‌ள் இருந்திருக்கிறார்க‌ள். ஆனால் அவ‌ர்க‌ள் பாடிய‌து முக்கிய‌மாக‌ப் பெரிய‌வ‌ர்க‌ளுக்குத்தான். அவ்வையாருக்கு அவ‌ர்க‌ளைவிட‌க் க‌விதா ச‌க்தியோ, ப‌க்தியோ குறைச்ச‌ல் இல்லை.
ravi said…
அவ‌ள் ரொம்ப‌ப் பெரிய‌வ‌ள்; ஞானி; யோக‌ சாஸ்திர‌த்தில் க‌ரை க‌ண்ட‌வ‌ள். ஆனாலும் அவ‌ள் குழ‌ந்தைக‌ளை ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக்க‌ வேண்டும் என்ப‌தில் முக்கிய‌மாக‌க் க‌வ‌ன‌ம் வைத்து, அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ குண‌ங்க‌ளையும், ஒழுக்கத்தையும், நீதியையும், தெய்வ பக்தியையும் போத‌னை செய்து பாடினாள்.

ravi said…
பேர‌க் குழ‌ந்தைக‌ள் ந‌ன்றாக‌ இருக்க‌ வேண்டுமே என்ற‌ க‌ரிச‌ன‌த்தோடு ஒரு பாட்டி ந‌ல்ல‌து சொல்வ‌து மாதிரி அவ்வைப் பாட்டி அத்த‌னை த‌மிழ்க் குழ‌ந்தைக‌ளுக்கும் உப‌தேச‌ம் செய்தாள். அவ‌ளுடைய‌ அன்பின் விசேஷ‌த்தால் அவ‌ளுக்க‌ப்புற‌ம் எத்தனையோ தலைமுறைக‌ள் ஆன‌பிற‌கு, இப்போதும் நாம் குழ‌ந்தையாக‌ப் ப‌டிக்க‌ ஆரம்பிக்கிற‌ போதே, அவ‌ளுடைய‌ ‘ஆத்திசூடி’தான் முத‌லில் வ‌ருகிற‌து.

ravi said…
முத‌ல் பூஜை பிள்ளையாருக்கு; முத‌ல் ப‌டிப்பு அவ்வையார் பாட‌ல்.

இத்தனை ஆயிர‌ம் வ‌ருஷ‌ங்க‌ளாக‌ அவ‌ளுடைய வார்த்தை எப்ப‌டி அழியாம‌ல் தொட‌ர்ந்து வ‌ருகிற‌து என்றால் அத‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ளுடைய‌ வாக்கின் ச‌க்திதான். ப‌ர‌ம‌ ச‌த்திய‌மான‌ ஒன்றை, நிறைந்த‌ அன்போடு சொல்லிவிட்டால், அப்ப‌டிப்ப‌ட்ட‌ சொல் ஆயிர‌ம் கால‌மானாலும் அழியாம‌ல் நிற்கிற‌து.
ravi said…
அவ்வை இப்ப‌டி அன்போடு உண்மைக‌ளை உப‌தேசித்தாள். ந‌ம்மில் க‌ம்ப‌ர், புக‌ழேந்தி, இள‌ங்கோ போன்ற‌ க‌விக‌ளைப் ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் இருக்க‌லாம். ஆனால் அவ்வை வாக்கு ஒன்றாவ‌து தெரியாத‌வ‌ர் இருக்க முடியாது.

ravi said…
அவ்வையாருக்கு இத்த‌னை வாக்கு ச‌க்தி எங்கேயிருந்து வ‌ந்த‌து? வாக்குச் ச‌க்தி ம‌ட்டும் இல்லை; அவ‌ளுக்கு ரொம்ப‌ தேக‌ ச‌க்தியும் இருந்திருக்கிற‌து. அத‌னால்தான் ‘ஐயோ, தமிழ்க் குழ‌ந்தை ஒன்றுக்குக்கூட‌ ந‌ம் வாக்கு கிடைக்காம‌ல் போக‌க் கூடாதே! ஒவ்வொரு குழ‌ந்தைக்கும் நாம் இந்த‌ உப‌தேச‌ங்க‌ளைக் கொடுக்க‌ வேண்டுமே!’ என்ற‌ ப‌ரிவோடு அந்த‌ப் பாட்டி ஒரு கிராம‌ம் மிச்ச‌ம் இல்லாம‌ல் ஓடி ஓடிப் போய் குழ‌ந்தைக‌களைத் தேடித் தேடி அவ‌ர்க‌ளுக்குத் த‌ன் நூல்க‌ளைப் ப‌ரிந்து ப‌ரிந்து போதித்தாள்.
ravi said…
இந்த‌ தேக‌ ச‌க்தி அவ‌ளுக்கு எப்ப‌டி வ‌ந்த‌து? பிள்ளையார்தான் அவளுக்கு இந்தச் சக்திகளையெல்லாம் கொடுத்தார்.

ravi said…
அவ்வையார் பெரிய‌ பிள்ளையார் ப‌க்தை. அந்த‌க் குழ‌ந்தை ஸ்வாமியை வேண்டிக் கொண்டுதான் அவ‌ள் சின்ன‌ வ‌ய‌சிலேயே கிழ‌வியாகிவிட்டாள். ஏன் அப்ப‌டிச் செய்தாள்? வாலிப‌மாக‌வும், ந‌டுத்த‌ர‌ வ‌ய‌தாக‌வும் இருந்தால் ஒருத்தனைக் க‌ல்யாண‌ம் செய்து கொண்டு குடித்த‌ன‌ம் ந‌ட‌த்த‌ வேண்டியிருக்கும். ப‌க்திக்குக் குடும்ப வாழ்க்கை இடையூறு என்ப‌தாலேயே, இடையூறுக‌ளை எல்லாம் போக்கும் விக்நேச்வ‌ர‌ரை வேண்டிக்கொண்டு கிழ‌வியாகிவிட்டாள்.

ravi said…
ஸுப்ர‌ம்ம‌ண்ய‌ ஸ்வாமிக்குக் க‌ல்யாண‌மாக‌ ஸஹாய‌ம் ப‌ண்ணின‌ பிள்ளையார் இவ‌ளைக் க‌ல்யாணமேயில்லாத‌ பாட்டி ஆக்கினார்! யாருக்கு எதைத் த‌ர‌வேண்டுமோ அதைத் த‌ருவார். இவ‌ளைச் சிறு பிராய‌த்திலேயே கிழ‌வியாக்கிவிட்டார். ஆனால் அவ‌ர் குழ‌ந்தை ஸ்வாமி அல்ல‌வா? அத‌னால், இவ‌ள் த‌ன்னிட‌ம் ம‌ட்டும் எப்போது பார்த்தாலும் ப‌க்தியாக‌ இருந்தால் போதாது, இவ‌ளால் எல்ல‌க் குழ‌ந்தைக‌ளும் ந‌ன்மை பெற‌ வேண்டும் என்று நினைத்தார். ஒரு சின்ன‌க் குடும்ப‌ம் வேண்டாம் என்று கிழ‌வி ஆன‌வ‌ளை, அத்த‌னை குழ‌ந்தைக‌ளையும் கொண்ட‌ பெரிய‌ தமிழ் நாட்டுக் குடும்ப‌த்துக்கே உப‌தேச‌ம் செய்கிற‌ பாட்டியாக்கிவிட்டார்!

ravi said…
அவ‌ளும் ஸ‌ந்தோஷ‌மாக‌ அந்த‌க் காரிய‌த்தைச் செய்தாள். மாறி மாறி பிள்ளையாரைத் தியானித்துப் பூஜிப்ப‌தும், குழ‌ந்தைக‌ளுக்கெல்லாம் உப‌தேச‌ம் ப‌ண்ணுவ‌துமாக‌த் த‌ன் வாழ்க்கையைக் க‌ழித்தாள்.

ravi said…
அந்த‌ப் பாட்டி அன்றைக்குச் சுற்றினாள். இன்றை‌க்கு நானும் எத்த‌னையோ சுற்றியிருக்கிறேன். அவ‌ள் த‌மிழ் நாடு ம‌ட்டும் சுற்றினாள். நான் இன்னும் ம‌லையாள‌ம், தெலுங்குதேச‌ம், பெங்கால், ஹிந்துஸ்தானி தேச‌ம் என்று ப‌ல‌ இட‌ங்க‌ள் சுற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் நான் பார்க்காம‌ல் இந்த‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் பார்க்கும் விசேஷ‌ம் என்ன‌வென்றால், த‌மிழ்நாடு ஒன்றிலேயே இப்ப‌டிச் ச‌ந்து பொந்து, ம‌ரத்த‌டி, ஆற்ற‌ங்க‌ரை எங்கே பார்த்தாலும் ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்ப‌துதான்! த‌மிழ் நாட்டைவிட்டுக் கொஞ்ச‌ம் தாண்டிப் போனால்கூட‌ இப்ப‌டிக் காணோம்!

ravi said…
பிள்ளையார் த‌ம‌க்குப் பெரிசாக‌ ராஜ‌கோபுர‌ம், பிராகார‌ம் க‌ட்டிக் கோயில் எழுப்ப‌வேண்டும் என்று நினைக்க‌வில்லை. சின்ன‌தாக‌ ஒரு ச‌ந்நிதி வைத்துவிட்டாலும் அவ‌ருக்குப் போதும். த‌க‌ர‌க் கொட்ட‌கை போட்டால்கூட‌ அவ‌ருக்குத் திருப்திதான்!
ravi said…
அதுகூட‌ வேண்டாம்! ஒரு க‌ட்டிட‌மும் கூரையும் இல்லாம‌ல் வான‌ம் பார்க்க‌ அர‌ச‌ம‌ர‌த்த‌டியில் அவ‌ர் பாட்டுக்கு அம‌ர்ந்து அநுக்கிர‌ஹ‌ம் ப‌ண்ணிக்கொண்டிருப்பார். ஆற்றங்க‌ரையில் எங்கே பார்த்தாலும் ந‌ன்றாக‌ உட்கார்ந்து கொண்டு ஆன‌ந்த‌மாக‌ இருப்பார்.

ravi said…
இந்த‌த் த‌மிழ்த் தேச‌த்தில் ம‌ட்டும் ஏன் இந்த‌ விசேஷ‌ம் என்று கேட்டால், அவ்வையாருடைய‌ விசேஷம்தான் இது என்று தோன்றுகிற‌து. அவ‌ள் த‌மிழ் நாட்டில் ஓடாத‌ இட‌மில்லை அல்ல‌வா? அவ‌ள் போன‌ இட‌த்திலெல்லாம் அவ‌ளுடைய‌ இஷ்ட‌ தெய்வ‌மான‌ பிள்ளையாரும் வ‌ந்து உட்கார்ந்து கொண்டு விட்டார்!

ravi said…
த‌மிழ் நாட்டின் சிற‌ப்புக்க‌ள் என்று புஸ்த‌க‌ங்க‌ளில் எத்த‌னையோ விஷ‌ய‌ங்க‌ள் போடுகிறார்க‌ள். ஆனால் என‌க்குத் தெரிகிற‌ பெரிய‌ சிற‌ப்பு இங்கே எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கிற‌துதான்.
(இன்று சங்கடஹர சதுர்த்தி)6
ravi said…
*👆வாழ்வின் யதார்த்தம் பற்றி, காஞ்சிப் பெரியவர்.*

உன் தலைமுடி கூட உன் கட்டுப்பாட்டில் இல்லை!

எந்த சக்தி, உங்களையும் சேர்த்து, அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் உங்களுக்கு ஏன் வீண் கவலை, எதுவும் உங்கள் கையில் இல்லை,அமைதியாக இருங்கள்.!

ravi said…
படிப்போமா!

நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
ravi said…
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே! உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள்.
ravi said…
உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்? முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!

ravi said…
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது... உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?

ravi said…
இல்லையே.... இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

ravi said…
மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது! உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!
ravi said…
உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை. அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

ravi said…
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு ஏன் வீண் கவலை... எதுவும் உங்கள் கையில் இல்லை.... அமைதியாய் இருங்கள். நாராயணா... நாராயணா...!

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சிப் பெரியவர்
ravi said…
வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்
‘மஹாத்ரிபுரஸுந்தரி’, ‘சந்த்ர மண்டல மத்யகா’, ‘சாரு சந்த்ர கலாதரா’

அம்பாளுக்குப் பல ரூப பேதங்கள் இருப்பதில் இது ‘ஸுந்தரி’ என்பவளைப் பற்றியது. அவள் தசமஹா வித்யா என்று பத்தில் ஸுந்தரி வித்யாவுக்கு தேவதையாக இருப்பவள். ‘ஸ்ரீவித்யா’ என்பது அதைத்தான்.

ravi said…
த்ரிபுரஸுந்தரி என்பது அந்த ஸுந்தரிதான். மூன்று லோகத்திலேயும் சிறந்த அழகி த்ரிபுரஸுந்தரி. ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரணம் என்ற முப்புரங்களுக்குள்ளே ஞானமாகவும் காருண்யமாகவும் இருக்கும் ப்ரஹ்ம தத்வம்தான் இப்படி அழகு ஸ்வரூபமான தாயாக ஆகி த்ரிபுர ஸுந்தரி என்ற பெயரில் விளங்குவது. ‘லலிதாம்பாள்’ என்று சொல்வது அவளைத் தான்.

ravi said…
சந்த்ரமௌலீச்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீசக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது த்ரிபுரஸுந்தரிக்குத்தான். ஏனென்றால் அவர் மாதிரியே அவளுக்கும் பூர்ண சந்த்ர ஸம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரஸில் பூர்ண சந்த்ரன் இருக்கிறதென்றால் இவள் வாஸம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில்தான்!

ravi said…
"சந்த்ர மண்டல மத்யகா" என்று ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. அவளுக்கு விசேஷமான திதியும் பூர்ணிமை! ஸாதனாந்தத்தில் (ஸாதனை முடிவில்) அவளே நம்முடைய சிரஸ் உச்சியில் பூர்ண சந்த்ரனாக அம்ருதத்தைக் கொட்டுவாள்.

ravi said…
திவ்ய தம்பதி ஜிலுஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர ஸம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும் த்ரிபுரஸுந்தரியாகவும் இருக்கிறார்கள்.

அவள் சிரஸிலும் சந்த்ர கலை உண்டு.“சாரு சந்த்ர கலாதரா” என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது.

‘மஹாத்ரிபுரஸுந்தரி’, ‘சந்த்ர மண்டல மத்யகா’, ‘சாரு சந்த்ர கலாதரா’ என்ற நாமாக்கள் கிட்டக் கிட்டவே வந்துவிடுகின்றன.

பெரியவா சரணம்!
ravi said…
மனம் கனிந்தருள் வேல் முருகா! - புள்ளி
மயிலேறும் மால் மருகா! முருகா!
(மனம்)

குறத்தி மணாளா! குணசீலா! - ஞான
குருபரனே! செந்தில் வடி வேலா!
செந்தமிழ்த் தேவா! சந்ததம் நீ காவாய்!

வேதனே - ஞான போதனே
சுவாமி நாதனே - எமது வேதனை தீர
(மனம்)

தோகை வள்ளி தனை - நாடி வேங்கை மர
மாகி நின்றாயடா!

வேலெடுத்து விளை - யாடி மா மலையைத்
தூளடித்த முருகா!

சூரபத்மன் இரு - கூறு பட் டொழிய
போர் முடித்த குமரா!
ravi said…
https://youtu.be/qZvnbMOtybI
ravi said…
அது என்ன "வேல்பு" தொர?

மிரோக்கின வரமுனி "வேல்பு"
"தொர" கொடுக்கு ப்ரோச்சுரா -தியாகராஜரும் பலவிதமாகப் பாடுவார்..

துரை.. தெலுங்கில் "தொர" ஆயிற்று!
ஆனால் துரை= தமிழ்ச் சொல் தானா?

அல்ல!
துரை/ Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்..

இன்னும் கூர்ந்தால், ஜெர்மானிய ஆதிச் சொல்!
ஆங்கிலேயருக்கு முன்பே இந்தியா வந்தது டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த French சொல், Durer -> துரே -> துரை!

ravi said…
புதிய வெள்ளைக்காரக் கனவான்களை, நம்ம மக்களும் "துரே.. துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின்பு வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும், அந்தப் பிரெஞ்சு "துரை" நாமகரணமே நின்று விட்டது:)
ravi said…

'வேல் முருகா' என்பதை 'வேல்பு தொர' ஆக்கும் தெலுங்கு மொழியாக்க அழகு:)
*மனம் கனிந்தருள் வேல் முருகா
*பிரபோ கிருபாகர வேல்பு தொர
Happy Birthday Ragava! - From "துரை" முருகன் & துரைச்சி வள்ளி!
ravi said…
மயில் மீதில் வருவாயே முருகா
மனமார அழைக்கின்றேன், இரங்காயோ குமரா?
(மயில் மீதில்)

சிலையாக ஆனாயோ முருகா
மலைதோறும் மயிலோடும் வேலோடும் அமர்ந்தமர்ந்து
(சிலையாக)

வினை தீர்க்க வருவாயே முருகா, என்
வினை தீர்க்க வருவாயே முருகா, பழ
வினை தீர்க்க வருவாயே முருகா
தாய் தந்த வேலோடு கணங் கூடச் சுணங்காமல்
(வினை தீர்க்க)

தேவர் குறை தீர்க்க விரைந்து வந்தாயே
சூரன் உயிர் மாய்க்க வீறு கொண்டாயே
அருணகிரிக்கு ஒரு வாழ்வு தந்தாயே
ஔவைப் பாட்டிக்கு அருள் புரிந்தாயே
(மயில் மீதில்)

தந்தைக் குபதேசம் செய்தவன் நீயே
தாயின் வேல்தாங்கப் பிறந்தவன் நீயே
தமிழின் தாலாட்டில் வளர்ந்தவன் நீயே
தரணி யெங்கும்புகழ் சிறந்தவன் நீயே
(மயில் மீதில்)
ravi said…
சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்

எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!

கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்

கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



ravi said…
எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்

தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!

சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்

சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



ravi said…
மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்

தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!

கந்தனென்று நானழைக்க வருவான், அவன்

பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



ravi said…
ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்

ஆறுமுகமாகி வந்த ஒருவன்!

அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்

இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



ravi said…
வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்

சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!

ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்

கூறும் அடி யார்கள் வினை களைவான்!
ravi said…
திரு முருகா, அருள் தரும் முருகா

அருள் முருகா, திரு மால் மருகா

(திரு முருகா)



நீல மயில் மீதில் ஏறி வரும் முருகா

வேலைக் கையில் ஏந்திப் பகை அறு முருகா

(திரு முருகா)



ஆறு மலர் மீதினிலே தவழ் முருகா

ஆறு முக மாகி வந்து அருள் முருகா

ஆறெ ழுத்து மந்தி ரத்தில் உறை முருகா

ஓமெ ழுத்தின் உட் பொருளை உரை முருகா

(திரு முருகா)
ravi said…
பச்சை மயிலோடு பழகும் வடிவேலவனே
இச்சை கொண்டழைத்தேன் அருகே வருவாய் குகனே!
(பச்சை)

நச்சுப் பாம்பணிந்த பிச்சாண்டியின் மகனே
பட்சம் கொண்டெந்தன் பக்கம் வா குகனே
அச்சம் தவிர்த்தெனக்கு அபயம் தந்திடுவாய்
சிட்சித் தருளிடவே சீக்கிரம் வந்திடுவாய்!
(பச்சை)

மெச்சி உனைப் பாட முத்தமிழ் தந்திடுவாய்
கெச்சை ஒலித்திடவே இக்கணம் வந்திடுவாய்
பிச்சி உமையாளின் பேறு பெற்ற திருமகனே
உச்சி முகர்ந்துன்னை அணைத்திட வருவாய் குகனே!
(பச்சை)
ravi said…
Experiences with Sri Periva - Who is a real Guru and who is not?

Once Sri Chandrasekharendra Saraswati Swami of Kanchi Mutt (Sri Periva) had camped in North India. The then Prime Minister, Smt. Indira Gandhi, came to have His darshan.

ravi said…
The Prime Minister of India placed a similar question in front of Sri Periva, “If you would pinpoint the persons who, in the name of spirituality, lead the people in a wrong way I will take action against them.”

ravi said…
Sri Periva laughed and said, “No! It should not be handled in this manner. Those who approach such fake swamis will themselves, after a time, understand their standard of maturity.”

Sri Periva knew that this reply did not satisfy Smt. Indira Gandhi. Someone had offered a basket full of mangoes to Periva. It contained many unripe and a few ripe fruits.

ravi said…
Many devotees waited outside for Sri Periva’s darshan. Sri Periva instructed the attendants to bring a child from amongst these devotees. A child of about 5 years was brought to Him.

Pointing to the basket Periva smilingly said to the child, “Take whatever you want.” After a search the child picked up a ripe fruit.

ravi said…
Sri Periva pointed out to Smt.Indira Gandhi who was watching this, “Just as the way a child knows what is ripe and what is unripe, so too would those who go out in search of Truth recognize a true Mahan at some point of their life.”

Periva Saranam!
Savitha said…
வயலூர் வரலாறு அற்புதம்
அடுத்து விராலிமலை பற்றிய தகவல்கள் பற்றி தெ.ரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹
முருகா
வேலும் மயிலும் துனை🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
T.V Ganesh said…
உங்கள் படைப்பான வயலூரான் பெருமைகளை

அயலூரான் நான்

துயிலுராமல் துதித்துக் கொண்டே இருக்கிறேன்

மயிலேறிய குன்றன்தான்
என் மனமேறி வென்று வருகிறான்


நன்றி

🙏🙏🙏
S G S Ramani said…
குன்றத்து குமரன் நீ

குன்றாத இளைஞன் நீ

வயலூர் முருகா நீ

சக்தி அன்பர்களின் இதயம் நீ

வார்த்தை சித்தர் மேலும் மேலும் பதிவுகள் தர அருள் புரிவாய் நீ.

ஓம் சரவணபவ..

🙏🙏🙏🙏🙏🙏🙏
Savitha said…
ஆஹா அருமை வானர படை
சுக்கிரவனின் திறமை இராமானின் மந்தஹாஸம்
அற்புதம்
ஜெய் ஸ்ரீராம்
Savitha said…
ஆஹா அருமை
சுவாமியே சரணம் ஜயப்பா
🌹🌹🌹🙏🏻🙏🏻

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை