பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் படை - 11 வலிமை தரும் வயலூர் வள்ளல் -2 - 308

                                                  பச்சைப்புடவைக்காரி

பகையை வெல்லும்  பத்தாவது  படை - 11

வலிமை தரும் வயலூர் வள்ளல் -2


(308) 👍👍👍💥💥💥

(உபயம் சித்ரா மூர்த்தி )

பல வயல் நிலங்களையெல்லாம் கடந்து வயலூர் வந்தடைகிறார் அருணகிரியார். சக்தி தீர்த்தத்தில் நீராடி வன்னி மரத்தை வணங்கி கோயிலுள் நுழைகிறார். தம்மை ஆண்ட முருகப் பெருமானது புகழை நிரம்பப் பாடவேண்டும் என்ற ஆசை நிரம்பி வழிய கோயிலில் வீற்றிருக்கும் பொய்யாக் கணபதியைத் தரிசிக்கிறார். 

வள்ளியை மணம் செய்து கொள்ள விரும்பிய முருகப்பெருமானும் தனது சகோதரனை தானே துணைக்கு அழைத்தான் என்ற எண்ணம் தோன்ற, கைத்தல நிறை கனி எனத் துவங்கும் அற்புதப் பாடலை அங்கு சமர்ப்பித்தார். பாடலின் இறுதியில்,

‘‘அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே’’
என்று நிறைவு செய்தார்.

‘‘தம்பி தனக்காக வனத்தணைவோனே
தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே
அன்பர் தமக்கான நிலைப்
பொருளோனே
ஐந்து கரத்து ஆனைமுகப்
பெருமானே’’ என்று பாடி,

‘‘என்றனுயிர்க்கு ஆதரவுற்றருள்வாயே’’
என்று வேண்டினார்.



‘‘உன் தம்பியைப் பற்றிப் பாடவேண்டும்; என்னென்ன சொல்லிப் பாடுவது’’ என்று உருகிய அருணகிரிநாதரின் கனவில் தோன்றிய பொய்யாக் கணபதியார், ‘அன்பனே! நீ விரும்பிய வண்ணம் முருகவேளது மயிலையும், கடப்ப மாலையையும், வடிவேலையும், கோழியையும், சிற்றடிகளையும், பன்னிரு தோள்களையும் செய்ப்பதி எனப்படும் இவ்வயலூரையும் வைத்து அவனது திருப்புகழை விருப்பமொடு பாடுவாயாக’’ என்று கூறி மறைந்தார். 

(திருப்புகழ் என்ற வார்த்தையை அவருக்கு எடுத்துக் கொடுத்ததும் பொய்யாக் கணபதியே ) 



உடனே கீழ்வரும் பாடல் பிறந்தது.

‘‘பக்கரை விசித்ரமணி பொற்கலணை
இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமு(ம்),
நீபப்பக்குவ மலர்த் தொடையும்
அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்க வரு குக்குடமும், ரட்சைதரு
சிற்றடியு(ம்) முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ்
விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே’’

என்று பாடினார் அருணகிரியார். இவ்வாறாக, நம்பியாண்டார் நம்பிக்கு, திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் உதவியதுபோல, அருணகிரியாருக்கு வயலூர்ப் பொய்யாக் கணபதியார் அனுக்கிரஹம் செய்தார். 


வயலூரை மறக்காமல் வைத்துப் பாடச் சொன்ன கணபதியாரின் ஆணைக்கிணங்க, பல்வேறு தலங்களுக்கு யாத்திரை சென்ற போதும், ஆங்காங்கே பாடிய பல பாடல்களில் வயலூரை வைப்புத் தலமாகக் குறித்துப் பாடினார் அருணகிரிநாதர். வயலூர் முருகனை வணங்கி, ‘உன் புகழைப் பாட வைத்த உன் சகோதரனை ஒருக்காலும் மறக்க மாட்டேன்’ என்று பொருள்பட

‘‘நினது திருவடி சத்தி மயில்கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்)
நிழல் பால் தேன்
நெடிய வளைமுறி, இக்கொடு, லட்டுகம்
நிறவில் அரிசி பருப்பு, அவல், எள், பொரி
நிகரில் இனி கதலிக்கனி வர்க்கமும்
இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்ட கரத்தொரு
மசுர சலநிதி வைத்த துதிக்கர
வளரு கரிமுக ஒற்றை மருப்பனை வலமாக
மருவு மலர் புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனஜ பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே’’



முருகன் புகழை மறக்காமலிருக்க நைவேத்தியங்கள் செய்கிறார், வலம் வருகிறார், தோப்புக்கரணம் இடுகிறார். இறுதியில் அர்ச்சனையும் செய்துவிட்டு இவை எதையும் மறக்க மாட்டேன் என்றும் பாடுகிறார்! 

வயலூரில் அக்னீசர் எனும் திருநாமத்தை உடைய ஆதிநாயகரையும் தன் பாடலில் வணங்குகிறார். ‘‘அருளிற்சீர் பொய்யாக் கணபதி திருவாக்கீசன் வாழும் வயலி’’ என்று போற்றுகிறார். 

வயலூரில் இறைவனும் இறைவியும் திருப்புகழ் பாடும் வலிமையைத் தந்ததை தஞ்சையை அடுத்த திருச்சக்கிரப் பள்ளியில் நினைவுகூருகிறார்.

‘‘தட்டற சமயத்தை வளர்ப்பவள்,
அத்தன், முற்புகழ் செப்ப அனுக்ரஹ
சத்துவத்தை அளித்திடு
செய்ப்பதி மயிலேறி!’’

(குற்றமற்ற வகையில் சைவ சமயத்தை வளர்ப்பவளாகிய தேவி பார்வதி, சிவபிரான் இவர்கள் திருக்கோயில் சந்நிதானத்தில் முன்பு உனது திருப்புகழைப் பாடும்படியான வலிமையை எனக்களித்த வயலூர் எனும் தவத்தில் மயில் வாகனனாய் விளங்குபவன்)



வயலூர் முருகப்பெருமான் மீது 18 பாடல்கள் பாடியுள்ளார் அருணகிரியார். அவற்றுள், சரணாகதி தத்துவ உண்மைகள் பொதிந்து காணப்படும் ஒரு அழகான பாடலைப் பார்ப்போம்.

‘‘என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னால் இருக்கவும் பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் தொந்த நோயை
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் இங்கு நான் யார்?’’

பொருள்: என் சமர்த்தால் நான் பிறப்பதற்கும், இறப்பதற்கும், துதிப்பதற்கும், கண்கொண்டு ஒருவரைப் பார்த்து நான் அழைப்பதற்கும், என் கால் கொண்டு நான் நடப்பதற்கும், ஓரிடத்தில் இருப்பதற்கும், மாதர்கள், வீடுகள் இவற்றை அனுபவித்துச் சுகிப்பதற்கும், மெலிவதற்கும், சோர்வு அடைவதற்கும் அலுப்படைவதற்கும், வினைச்சேர்க்கையில் வரும் நோய்களை எரித்துத் தள்ளுவதற்கும், பலவற்றை நினைப்பதற்கும், இன்ப துன்பங்களை தாங்கவும் இங்கு நான் யார், என் திறமை ஒன்றுமேயில்லை எல்லாம் அவன் செயல் என்றபடி பட்டினத்தாரும் பாடுகிறார்.



‘‘ஊட்டுவிப்பானும், உறக்குவிப்பானும், இங்கொன்றோயொன்றை மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும் முயன்றவினை காட்டுவிப்பானும் இருவினைப் பாசக்கயிற்றின் வழி ஆட்டுவிப்பானும் ஒருவனுண்டே தில்லைஅம்பலத்தே!’’ 

வயலூர்ப் பாடலில் ‘‘கண்ணாடியில் தடம் கண்ட வேலா’’ என்பது இங்குள்ள சக்தி தீர்த்தத்தைக் குறிப்பாக ஆன்றோர்கள் கூறுகின்றனர். முருகப்பெருமான் வேலை செலுத்தி உண்டாக்கிய இத்தீர்த்தம் பளிங்கு போன்று விளங்குவதால் அருணகிரியார் இவ்வாறு பாடியிருக்கலாம். 



திருப்புக்கொளியூர் திருப்புகழிலும் சக்தி தீர்த்தத்தை பாடுகிறார் ‘‘ஒத்த நிலா வீசு நித்தில நீராவி உற்பல ராஜீவ வயலூரா!’’ (பொருந்திய நிலவொளி வீசுவதும், முத்துப்போல் தெளிவானதுமான நீர்நிலையில் குவளையும் தாமரையையும் கொண்ட வயலூர்ப் பெருமானே!) 

இப்பாடலில் சிவபெருமானை ‘தங்க ரூபன்’ என்றும் விளிக்கிறார். பொன்னார் மேனியனாயிற்றே ‘‘பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி... ஈசனுக்கே’’ என்கிறது பொன்வண்ணத்தந்தாதி. 

இதே பாடலில், ‘‘வயற்பதி மன்னா! கல் நார் உரித்த என் மன்னா, எனக்கு நல் கர்ணாமிர்தப் பதம் தந்த கோவே!’’ என்று விளிக்கிறார். ‘நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக’ எனும் அனுபூதி அடிகளை இவ்வரிகள் நினைவுறுத்துகின்றன. ‘கமையற்ற’ எனத் துவங்கும் வயலூர்ப் பாடலில் சிவ தத்துவத்தைக் குறிக்கும் மேலான அடிகள் வந்துள்ளன.




‘‘மமபட்ச மாதேவர் அருமைச் சுவாமீ!
நிமல நிஷ்கள மாயை விந்து நாதம்
வரசத்தி மேலான பரவஸ்துவே மேலை
வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே’’

- என்று பாடுகிறார். 

டாக்டர் செங்கல்வராயப்பிள்ளை இதனைப் பின்வருமாறு விளக்குகிறார் ‘‘இறைவன் ஏகநாதன். சிவம், சத்தி, நாதம், விந்து என அருவத் திருமேனி நான்கு. மகேசன், ருத்ரன், மால், அயன் என உருவத் திருமேனி நான்கு. சதாசிவம் என அருவுருவத் திருமேனி ஆக இவ்வொன்பது வர்க்கத்திலும் வேற்றுமையின்றி அவ்வத் தொழில்களைச் செய்பவன். 

இதனையே நவந்தரு பேதம் என்பர்’’ என்கிறார். ‘வாக்கிற்கு அருணகிரி’ என்பர் ஆன்றோர். பல பாடல்களிலும் அருணகிரியாரின் வாக்கு சாதூர்யத்தைக் காணலாம். 



அம்மா --- மிகவும் அருமை - எப்படிப்பட்டவரை திருப்புகழ் பாடும் படி வைத்துவிட்டான் முருகன் ... எவ்வளவோ பாவங்கள் செய்திருந்தாலும் முருகன் மனம் வைத்தால் அவன் அடிமை ஆகிவிடுவார்கள் என்பது அருணகிரி நாதர் வாழ்க்கையில் இருந்து தெள்ளத்  தெளிவாய் தெரிகிறது. 

ஆமாம் ரவி ! உண்மை இது  - ஆத்ம தியாகம் செய்ய இருந்தவரை காப்பாற்றி அவரை வயலூருக்கு வரவழைத்து தன்னை தமிழால் அலங்கரித்துக்கொண்டவன் முருகன் ... பல இடங்களுக்கு வரச் சொல்லி அவரை அலகழித்து அருணகிரியை ஆட்கொண்டான் முருகன் ... இவனைப்போல் விளையாடுபவன் யாரும் இல்லை இவனைப்போல் கருணை காட்டுபவனும் யாருமே இல்லை ....

பகழிக் கூத்தர் , முத்துசுவாமி தீக்ஷிதர் , குமரகுருபரர் , வாரியார் சுவாமிகள் அருணகிரி இப்படி முருகனால் அருள் பெற்றவர்களின் பட்டியல் அனுமன் வால்  போல் நீண்டு கொண்டே போகக்கூடியது ...- அம்மா!! உங்க குடும்பமே இப்படித்தான் - அருள் பெற்றவர்களின் பட்டியலை என்றுமே முடிக்க முடியாது

குழந்தை போல் கடகடவென்று சிரித்தாள் --- கள்ளம் கபடில்லாமல் வெள்ளை உள்ளத்தின் சிரிப்பு அது --- வியந்து போனேன் 



மாலினீ   --  மாலை சூடியவள். சாதாரண பூ மாலை அல்ல.  சமஸ்க்ரித பாஷையின் 51 அக்ஷர மணிமாலை. அவள் சப்த ப்ரம்மம் அல்லவா?  அவளிடமிருந்து வெளிப்படுவது தான் பாஷையே.  பிரபஞ்சத்தை தன்னுள் கொண்டவள்.     ஒருவரி கதை  ஒன்று சொல்கிறேன். 

சிவபெருமானுக்கும் லலிதாம்பிகைக்கும்  கல்யாண  சமயத்தில் லலிதாவின் அந்தரங்க தோழி மாலினி சிவனின் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு  ''ஒரு வரம் கொடுத்தால் தான்  காலை விடுவேன்'' என்று சொல்ல, என்ன வரம் கேள் என்று சிவன் கேட்க,   ''உங்கள் சக்தி அனைத்தும் லலிதையோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்'' என்று கேட்க, ''அப்படியே '' என்று சிவன் வரமளிக்க அவர் கால்  விடுதலை பெற்றது.  

தாந்த்ரீகத்தில்  மாலினி என ஒரு தந்திரம் உண்டு. பிரஞையை தொடர்ந்து அழிப்பதற்கும் மாலினி என்று பெயர்.  ஒரு  ஏழுவயது பெண்ணை  மாலினி என்ற நாமம் குறிக்கும்.



ஹம்ஸினீ  - தன்னைச்சுற்றிலும்  ஹம்சங்களோடு இருப்பவள்.   ஸ்ரீ சக்ர பூஜையில் முதல் ஆவரணத்தில் வரும் தேவதைகள். நமது கழுத்தின் இருபக்க ரத்த  நாளங்களை அஷ்ட மாதா என்று குறிப்பிடுவதுண்டு. 

ஹம்சம் என்றால் வாத்து.  ஹம்சமந்த்ரம் அஜப ஜப மந்திரம்  எனப்படும். சீரான  நிமிர்ந்த உள்மூச்சு, வெளிமூச்சை சுவாசிப்பதை  ஹம்சம் என்பார்கள். வாத்துகள் நேராக நடப்பவை.  சௌந்தர்ய லஹரி  பரமேஸ்வரன் வீட்டில் நிறைய  ஹம்சங்கள் நடை பழகுவது பற்றி வரும். சிவன் வீடும்  அம்பாளின் வீடும்  ஒன்று தானே.




மாதா --   லோக மாதா.  சர்வ  மந்திரங்களின் தாய் அம்பாள்.  வேத மாத்ருகா. 

மலயாசல வாஸிநீ -- மலய மலைச்சாரலில் வசிப்பவள்  என்று ஒரு பெயர்  அம்பாளுக்கு. 

மலைகள் நிறைந்த பிரதேசம் மலையாளம். அங்கே அம்பாளுக்கு பகவதி என்று பெயர். கேரளத்தின் ஆதி பெயர்  மலயாசலம். அங்கே பேசப்படுவது மலையாளம்.  கமகமவென்று சந்தனம் செழிப்பாக வளரும் காடுகள் கொண்ட இடம்.  இந்திரனின் நந்தவனம் என்று பெயர்.வளமை கொழிக்கும் இடம். 


===================




Comments

ravi said…
*ராஜாக்களின் ஆனந்தம்*

அரங்கன் அவன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான் ..
மண் உண்ட மயக்கமோ தெரியவில்லை ...

தண்டகாரூண்யம் நடந்த களைப்போ புரியவில்லை ..

ஆனந்த உறக்கம் ... விடிந்து விட்டது எழுந்திரு கோசலையின் திருமகனே என்று கெஞ்சியும் உறக்கம் கலைய வில்லை ..

ஆதி சேஷன் ஆடிப்பார்த்தான் .. கருடன் கத்திப்பார்த்தான் ..

பரந்தாமன் கண்கள் மலரவில்லை ....

லட்சுமி காதில் கிசு கிசுத்தாள்...அரங்கன் லட்சியம் செய்யவில்லை..

தில்லையில் கூத்தன் அவன் ஆனந்த நடனம் கொஞ்சமும் நிக்க வில்லை .

புன் சிரிப்போ பூமலர் தெளித்தன ...

ஏன் இந்த ராஜாக்கள் கண்டு கொள்ள வில்லை என்றே காமாக்ஷியிடம் கேட்டேன் .

சிரித்தவள் சொன்னால் சுவாமிநாதன் நடமாடும் போது

செய்யும் வேலை ஒன்றும் இல்லை ..

ஆனந்தம் அங்கே சயன வைக்கும்

ஆனந்தம் இங்கே குதிக்க வைக்கும் ...

எனக்கும் வேலை ஒன்றும் இல்லை என்றே கண் சிமிட்டினாள் காமேஸ்வரி 🦚🦚🦚
ravi said…
விடுதலை வேண்டும் சாயி விடுதலை வேண்டும்

வீணாய் போகும் மாந்தர் தன்னில் வீழா விடுதலை வேண்டும்

வெட்டிப் பேச்சு பேசும் திண்ணையர்களிடம் இருந்து விடுதலை வேண்டும்

பாராட்டும் மனம் இல்லா மனத்தில் கொஞ்சமும் பசை இல்லா படித்த கூட்டம் அதில் இருந்து விடுதலை வேண்டும் ..

பார் புகழும் உன் நாமம் அதை பறைய மறுக்கும் மனிதர்களிடம் இருந்து விடுதலை வேண்டும் சாயி விடுதலை வேண்டும் 👏👏👏
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 118 🏆🏆🏆🥇🥇🥇

*Started on 26th sep 2020*💐💐💐💐

மீண்டும் ஒரு முறை முதல் நாமத்திலிருந்து பார்ப்போம் ..

மனதில் ஆழமாக பதிய வேண்டியே திருப்பி திருப்பி எழுதுகிறேன் 🎉🎉🎉
ravi said…
*ஓம் ஸர்வக்ஞாயை நம:*

ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி

*ஓம் ஸமானாதி(4)கவர்ஜிதாயை நம:*

ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தும் இல்லாதாளே போற்றி

*ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நம:*

ஓம் எல்லாமந்திரவடிவாயும் இருப்பவளே போற்றி

*ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம:*

ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி

*ஓம் ஸர்வதந்த்ர-ரூபாயை நம:*

ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி👌👌👌
ravi said…
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
*Devakārya-samudyatā देवकार्य-समुद्यता (5)*💐💐💐
ravi said…
There is an important saying in Yogavasiśtā, “I have two forms, ordinary and supreme.

The ordinary form of mine is with hands and legs.

This form of mine is worshiped by ignorant men.

The other one is my supreme form, the formless form without a beginning and an end.

This form of mine has no qualities or attributes and is called the Brahman, Ātman, Paramātman, etc.”

In this nāma demons or asura-s means avidyā or ignorance.

Deva-s means knowledge or vidyā.

She helps those who seek knowledge about the Brahman.🌺🌺🌺
ravi said…
இதழ்களில் மதுரமோ இல்லை மதுரத்தினால் செய்த இதழ்களோ ..

மேனி ஒரு பவளமோ இல்லை பவளம் மேனி ஆனதோ

மரகதம் மனித உருவம் எடுத்ததோ இல்லை மனித உருவம் மரகதம் ஆனதோ

மௌனம் ஒரு மொழி ஆனதோ ... இல்லை மொழியே மௌனம் உடை கொண்டதோ ...

மலை உன் வடிவம் ஆனதோ இல்லை நீயே மலை ஆனாயோ ரமணா ??👌👌👌
ravi said…
*வாரணம் ஆயிரம்* 👍👍👍🦜🦜🦜16
ravi said…
இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்

நம்மையு டையவன் நாராய ணன்நம்பி

செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி

அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்🤝🤝🤝
ravi said…
கோதையின் இந்தப் பிடிவாதமும் அழுத்தமும் தான் என்னைக் கவர்ந்தது..

தகுதியான ஒன்றின் மீது பற்று வைத்து அதை அடையும் உறுதியும் கொண்டாள்..

அவள் கிடைத்தற்கு அரிய கடவுளின் மீது பற்று கொண்டது சரியா தவறா என்ற வாதத்திற்குள் எல்லாம் நாம் போக வேண்டாம்..

அவள் காதல் உன்னதமானது..அவள் உறுதி உயர்ந்தது..

கண்ணன் கள்வனே ஆனால் ஒருவனுக்கு மட்டுமே முந்தானை விரிப்பேன் அது கண்ணன் மட்டுமே என்ற உயரிய பண்பாட்டை உலகுக்கு உணர்த்தியவள்..

காலம் காலமாக நம் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதி..🌸🌸🌸
ravi said…
வாங்க இந்தப் பாடலில் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம்..

திருப்பாவையில் கொடுத்த அதே உறுதியே இப்பாடலிலும் .

இந்தப் பிறவியில் மட்டுமல்லாது இன்னும் ஏழேழு பிறவிக்கும் இந்த நாராயணனே தனக்குத் தஞ்சம் என்கிறாள்..

அவள் சொன்னது இன்று உண்மையாகவே ஆகிவிட்டது பாருங்கள் :)

எத்தனை பேர் அவளை ஏளனம் செய்திருக்கக்கூடும்

கடவுளைக் காதலிக்கிறாள் பித்து பிடித்தவள் நடக்குமா இது அடுக்குமா என்று.. ஆனால் எட்டாம் நூற்றாண்டில் பிறந்த ஆண்டாள் இன்று எத்தனை நூற்றாண்டு கடந்தும் பெருமாளோடு உற்றவளாக உரிமையுடன் நிற்கின்றாள்..

அவள் சொன்னது போன்றே ஆகிவிட்டது தானே..

உண்மைக் காதலின் வலிமை எத்தகு தன்மை வாய்ந்தது பாருங்கள் :)👏👏👏
ravi said…
நமக்கே உடையவன் என்று உரிமை கொள்கிறாள்..

அடியார்க்கு அடியவன் .. சிவந்த தன் திருக் கரங்களால் ஆண்டாளோட காலைப் பிடித்து அம்மி மீது வைக்கின்றாராம்..

ஆண்டவனே ஆனாலும் பொண்டாட்டி காலைப் பிடிச்சுத் தான் ஆகணும் பார்த்துக்கிடுங்க :)

அது என்ன செம்மையான திருக்கை..

சரண் என்று புகுந்த அடியவருக்கு அருள் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள்..

ஆகவே அது திருக்கரங்கள்..

ஆமா அம்மி மிதிக்கிற சம்பிரதாயம் எதுக்காம்..?

அம்மி போல உறுதியாக இருக்க வேண்டும் வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் மன உறுதியுடன் நிதானமாக எதிர்கொள்ள வேண்டும் அதற்காக..🙏🙏🙏
ravi said…
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ravi said…
ஏழு ஸ்வரங்களில் ஒரு பாட்டு இசைத்தேன் ...

சந்ததம் சரி இல்லை சரணம் பல்லவி பாட்டுக்குள் நுழைய வில்லை ...

வீணை எடுத்தேன் கம்பி மீட்ட ..

ஓங்கார நாதம் இசைத்தே அறுந்து போயின மீட்டிய கம்பிகள் ...

ராயரின் மீதே புனைந்த கவி இது ... ஏன் இசை உதவி செய்ய வில்லை என்றே கேட்டேன் ...

ராயர் மீது கவியா என்றே வீணை எழுந்து அமர்ந்தது .. ஸ்வரங்கள் ஏழும் வந்தன சரணம் என்றே பல்லவியும் ஓடி வந்தது ..🙏🙏🙏
ravi said…
*புன்னகை ராமாயணம் 104/317*👌👌👌🎉🎉🎉🎉🏹🏹🏹😊😊😊😊😊😊😊

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
ஆனீதம் கபிபி: க்ருதாஞ்ஜலி புடை:

ஸங்க்யாதிகை: பீகரை: சத்ரூணாம் தரணீ தலம்

நிகலம் அபி ஆசாதயத்பி: ததா ஸுக்ரீவம் ஸுஹ்ருதம்

ஸமீக்ஷ்ய ஸுபகம் ஸுப்ரீத சித்தஸ்ய தே யத் மந்த

ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே😊😊😊
ravi said…
லக்ஷ்மணன் மிகவும் கோபத்துடன் சுக்ரீவனை பார்க்க போகிறான்

அவன் போகும் இடமெல்லாம் அவன் மூச்சுக்காற்று பட்டு உயர்ந்து வளர்ந்த மரங்கள் எல்லாம் பட்டு போய் விடுகின்றன -

காட்டுது தீ🔥🔥🔥 வந்ததைப்போல் காடுகள் பற்றி எரிகின்றன ---

அனுமன் விரைந்து சென்று சுக்ரீவனனிடம் சொல்கிறான் லக்ஷ்மணன் கோபமாக வருவதாய் -

சுக்ரீவனனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை --

அனுமனே ஒரு உபாயம் சொல்கிறான்

அதன்படி சுக்ரீவன் தாரையை கோபமாக வரும் லட்சுமணனின் முன் நின்று வரவேற்க சொல்கிறான் -

ஒரு பெண்ணைப்பார்த்ததும் அவளிடம் எப்படி கோபத்தைக்காட்டுவது என்று புரியாமல் லக்ஷ்மணன் சாந்தமாகிறான் -

உடனே சுக்ரீவன் அவன் பாதங்களில் விழுந்து மன்னிப்பை கோருகிறான் -

உடனே சுக்ரீவன் படையை திரட்ட ஆணை பிறப்பிக்கிறான் - *70 வெள்ளம் சேனை*👌👌👌
ravi said…
யானை 1 தேர் 1 குதிரை 3 காலாள் 5 இதற்கு பெயர் : *பத்தி*

பத்தி×3 சேனாமுகம் :×3 குல்மம்×3
கணம்×3 வாகினி×3 பிரதனை×3 சமூ×3அணீகினி ×10 அக்ரோணி×8 ஏகம்×8 கோடி ×8 சஙகம்×8 விந்தம்×8குமுதம்×8 பதுமம்×8 நாடு×8 சமுத்திரம்×8 வெள்ளம் இதை
போல் 70 வெள்ளம்

70 வெள்ளம் = 1.64379136E+16
164379113583616000💐💐💐
ravi said…
இத்தனை பெரிய சேனையைப்பார்த்து ராமன் திருப்தி அடைகிறான் அந்த திருப்தியில் எழுந்த புன்னகை😊😊😊

*ஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு ?*

1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும்.

இது ஒரு கோடி கோடி தானே!

இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.

ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம்.

இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.

*வானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் ?*

வெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.

வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை.

அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்!!!💐💐💐
ravi said…
*ஆனீதம் கபிபி:*👌👌👌

ஆனீதம் என்றால் அழைத்துவரப்பட்டவன் -

யாரால் --? லக்ஷ்மணனால்

அதாவது தன்னிடம் லக்ஷ்மணனனால் அழைத்து வரப்பட்ட சுக்ரீவனனை ராமனை பார்க்கிறான்

*கபிபி:*
*க்ருதாஞ்ஜலி புடை:* *ஸங்க்யாதிகை: பீகரை:*

சுக்ரீவனனுடன் பலவகைப்பட்ட வானரங்கள் கை கூப்பிய வண்ணம் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிக்கொண்டே வருகின்றன -

அவர்களின் எண்ணிக்கை அளவு கடந்தது👌👌👌
ravi said…
*பீகரை: சத்ரூணாம்* -

சத்துருக்களுக்கு பயத்தை உண்டாக்கும் வானரங்கள் வந்திருக்கும் பெரும் படையினர்

*தரணீ தலம் நிகலம் அபி ஆசாதயத்பி:* -

இந்த உலகத்தையே ஆக்கிரமித்துக்கொள்பவர்களாக , வீரம் மிக்கவர்களாக எண்ணிக்கை அதிகம் கொண்டவர்களாக பறந்து செல்லும் திறமை கொண்டவர்களாக காணப்பட்டார்கள்

*ததா ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் ஸமீக்ஷ்ய* -

அப்பொழுது ராமன் தன் நண்பனான சுக்ரீவனைக்கண்டு தான் நன்றி மறவாதவன் என்பதை நிரூபித்து விட்டான்

அத்தனை சேனையையும் அழைத்து வந்து விட்டான் என்று புளகாங்கிதம் அடைகிறான் 😊😊😊
ravi said…
*ஸுபகம் ஸுப்ரீத சித்தஸ்ய தே -*

மகிழ்ச்சி அடைந்த திரு உள்ளத்தோடு ஏ ராமா !!

*யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத்* -

உன் திருமுகத்தில் மிகவும் மெல்லியதாய் அழகான புன்னகை தோன்றியதே --😊

ஒருபுறம் சுக்ரீவன் திருந்திவிட்டான் , நட்பு தொடர்கிறது என்ற சந்தோஷமும்

இன்னொரு பக்கம் இப்படி வலிமையான கை கூப்பியபடி எதிரிகளை வெல்லக்கூடியவர்களாக இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத வானர சேனை கிடைத்த சந்தோஷமும் சீதை கண்டிப்பாக கிடைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் எல்லாம் சேர்ந்து மொத்தமாக ஒரு மெல்லிய புன்னகை ஒன்றை புன்னகைத்தாயே

அதே புன்னகை -

பக்தி , வலிமை பராக்கிரம் , உனக்கு கைங்கிரியம் செய்யும் உள்ளம் என்று இவைகள் ஒன்றுமே இல்லாத எங்களுக்கும் கொஞ்சமும் குறைக்காமல் தருகிறாயே ராமா !!!--

*உன் கருணை உள்ளம் யாருக்கும் வரும் ?*💐💐💐💐💐👌👌👌👌👍👍👍
ravi said…
🌸🌸🌸🤝🤝🤝🙏🙏🙏🔥🔥👏👏
ravi said…
*லட்சுமி கடாட்சம் யாருக்கு எங்கே எப்படி கிடைக்கும்...*


ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதை கேளுங்க.
லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் செல்வ வளம் மட்டுமல்லாது பதினாறு பேறுகளை பெறலாம். இந்த உலகத்தில் லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.
ravi said…
மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினாள் என்றால் இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும்.
ravi said…
எப்போதும் உண்மையே பேசுபவர்கள், சுத்தமாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்துக் கொள்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள், பொது நலத்தோடு இருப்பவர்களிடம் அன்னை லட்சுமி வசிப்பாள். இதனை பகவான் கிருஷ்ணர் தனது தோழன் அர்ஜுனனுக்கு ஒரு முதியவரின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ravi said…
அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் நடந்து போய் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான்.
ravi said…
முதியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!'' என்று நினைத்தவாறே வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.
ravi said…
சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.
ravi said…
முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார்.
ravi said…
இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
ravi said…
பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது. அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.
ravi said…
சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.
அர்ஜுனனும், அதைக்கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப்பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும்?'' எனக் கேட்டான்.
ravi said…
எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்......செல்லும் வழியில்மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்தஇரண்டுமீன்களைவாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.
ravi said…
யோசித்தமுதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார்.
ravi said…
அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார்.
ravi said…
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல்.சந்தோஷ மிகுதியால் 'சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார்.
ravi said…
அதே நேரம்யதார்த்தமாகஅவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன்திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித்திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர்.
ravi said…
அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.அர்ஜுனன் கண்ணனிடம், ''வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான்.
○□
ravi said…
கண்ணன் சிரித்துக்கொண்டே... ''இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் எண்ணினார். அடுத்துநீகொடுத்த விலையுயர்ந்தகல்லை தானும் உபயோகிக்காமல்,மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.
ravi said…
இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.
ravi said…
அதனால்தான் சொல்கிறேன் பொது நலமுள்ளவர் களுக்கே லட்சுமி கடாட்சம் கிடைக்கும்,'' என்று கிருஷ்ணன் கூற அமோதித்தார்.
ராதே ராதே 🙏🙏🙏🙏
ravi said…
*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - உனக்கு பணம் தானே வேணும்? நான் தரேன்!*

மஹா பெரியவா பலப்பல சமயங்கள்ல திடீர்னு க்ஷேத்ராடனம் போகலாம்னு சொல்லிட்டு, தேவையானைதை எல்லாம் எடுத்து வைச்சுக்க கூட கொஞ்சமும் அவகாசம் தராம சட்டுன்னு புறப்பட்டுடுவார்.

ravi said…
அவர் புறப்பட்டாச்சுன்னா, அவர் கூடப் போறவா எல்லாரும் அப்பவே கிளம்பியாகணும். அதனால எப்பவுமே புறப்படறதுக்குத் தோதா, தேவையான பொருட்களையெல்லாம் எடுத்து வைச்சிருப்பா மடத்து சிப்பந்திகள்.

ravi said…
ஒரு முறை இந்த மாதிரி கிளம்பின பெரியவா, நிறைய க்ஷேத்ரங்களுக்குப் போயிட்டு, அப்படியே
திருவையாறுக்கு வந்து சேர்ந்தார். ரெண்டு மூணு நாள் அங்கேயே தங்கலாம்னு தீர்மானிச்சார்.

ravi said…
ஆசார்யாள் ஒரு ஊர்ல தங்கறார்னா, அவருக்குப் பாதபூஜை பண்றதுக்கு, பிக்ஷாவந்தனம் செஞ்சு வைக்கறதுக்குன்னு பல பெரிய மனுஷா போட்டி போட்டுண்டு வருவா. மடத்தை சம்ரக்ஷணை பண்றதுக்காகவும், தர்மகார்யங்கள் செய்வதற்கும் அந்த சமயத்துல காணிக்கையா ஒரு தொகையை வசூல் பண்ணுவா மடத்து நிர்வாகிகள்.

ravi said…
அந்த அடிப்படையில் பரமாசார்யாளோட பாதுகைகளுக்கு பூஜை பண்றதுக்கு இருநூறு ரூபாய் காணிக்கைன்னு நிர்ணயம் செஞ்சிருந்தா.

ravi said…
திருவையாறுக்குப் பக்கத்தில கிராமம் ஒண்ணுல எழுவது வயசுப் பாட்டிக்கு, "பல காலமா படமாவே பார்த்துண்டு இருக்கிற பெரியவாளை நேர்ல தரிசனம் பண்ணணும், அவருக்குப் பாத பூஜை செய்யணும்"கற ஆசை எழுந்தது.

ravi said…
ஆனா,கையில் ஒரு செல்லாத நோட்டு கூட கிடையாது.சொந்த பந்தம்னு சொல்லிக்கவும் எந்த நாதியும் இல்லை. மனசுக்குள்ளே இருந்த ஆசையை பெரியவா படத்துக்கு முன்னால் நின்னு சொல்லிண்டு பிரார்த்திச்சா.

ravi said…
அன்னிக்கு ராத்திரி பாட்டிக்கு ஒரு கனவு.

"உனக்கு என்ன வேணும் பணம்தானே? நான் தரேன். நீ வந்து தரிசனம் பண்ணிட்டுப் போ!" அப்படின்னு பெரியவா சொல்றாப்புல வந்த அந்தக் கனவை கண்டதுக்கு அப்புறம் அந்தப் பாட்டி தூங்கவே இல்லை. எப்படியும் தனக்கு காசு கிடைக்கும், பெரியவா பாதுகைக்கு பாத பூஜை பண்ணனும்னு பெரியவாளைப் பார்க்க தயாரா இருந்தா.

ravi said…
தான் கண்ட கனவை மத்த சில பேர் கிட்டே சொன்னா பாட்டி. அவர்களோ "பரமாசார்யாள் தரேன்னாரா. எப்படி அவரே எடுத்துண்டு வந்து குடுப்பாராக்கும்?"னு பரிஹாசம் செஞ்சா. ஆனால் பாட்டி நம்பிக்கையுடன் இருந்தாள்.

ravi said…
மணி பதினொண்ணு ஆச்சு, "செல்லம்மா பாட்டி...செல்லம்மா பாட்டி!" யாரோ வாசல்ல நின்னு தன்னோட பேரைச் சொல்லிக் கூப்பிடற சத்தம் கேட்டு வெளீல வந்தா, பாட்டி.

"இந்தாங்க சீக்கிரமா வந்து இதுல கையெழுத்துப் போட்டுட்டு இந்தப் பணத்தை வாங்கிக்குங்க. இருநூறு ரூபாய் உங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு!"

வாசல்ல நின்ன தபால்காரர் பாட்டியிடம் சொன்னார்.

பாட்டிக்கு தன்னையே நம்ப முடியலை..!

"எனக்கா, பணமா? யார் அனுப்பியிருக்கா?"
தழுதழுப்பா கேட்டா.

"
ravi said…
அதெல்லாம் யார்னு தெரியலை. பணத்தை அனுப்பினவங்க ஃபாரத்துல (form) பேர், அட்ரஸ் எல்லாம் எழுதலை. ஆனா, தபாலாபீஸ் முத்திரைலேர்ந்து காஞ்சிபுரத்துலேர்ந்து அனுப்பியிருக்காங்கன்னு
மட்டும் தெரியுது" என்றார்.

பாட்டிக்கு பரம சந்தோஷம். சொன்னபடி பெரியவா அனுப்பிட்டார்னு, திருவையாறுக்குப் போய், ஆசார்யாளை தரிசனம் பண்ணி, அவரோட பாதுகைக்கு பூஜையும் செஞ்சா.

ravi said…
"என்ன ஆசை பூர்த்தியாச்சா"?ன்னு கேட்டு, பழம், கல்கண்டு ப்ரசாதம் குடுத்து ஆசீர்வாதம் பண்ணினார் பரமாசார்யாள். பாட்டியோட கண்ணுலேர்ந்து பொலபொலன்னு ஆனந்த பாஷ்பம் வழிஞ்சது.

பரம சந்தோஷமா பிரசாதத்தை வாங்கிண்டு போனா.

பாட்டிக்குப் பணம் அனுப்பினது யார்னு கடைசி வரைக்கும் ஒருத்தருக்கும் தெரியவே இல்லை.

ஆனா, பரமாசார்யாள் தான் தனக்குப் பணம் அனுப்பினார்னு பரிபூரணமா நம்பினா பாட்டி.

ravi said…
யாருக்கு என்ன தரணும்? எப்போ தரணும்? எப்படித் தரணும்? அதை அனுபவிக்க அவாளால முடியணும். இதெல்லாம் ஸ்வாமியால் மட்டும் தான் முடியும்னா, பரமாசார்யாளை "நடமாடும் தெய்வம்"-னு சொல்றது சரி தானே?

*பெரியவா சரணம்!*

_தொகுப்பு: பெரியவா குரல்_
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

“ஒரு காலத்தில் தேவர்களும் அஸுரர்களும் ஒருத்தரோடொருத்தர் சண்டை போட்டுக்கொண்டார்கள்” என்று சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது1.
ravi said…
இதற்கு நம்முடைய ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது ‘இங்கே தேவர்கள் என்று சொல்லியிருப்பது கர்மாநுஷ்டானத்தால் பரிசுத்தி செய்யப்பட்ட இந்த்ரிய வ்ருத்திகளை (புலன்களின் ஓட்டங்களை) த்தான். அப்படியே அஸுரர்கள் என்பது வெறும் விஷய போகங்களுடன் (சிற்றின்பங்களுடன்) ஸம்பந்தப்பட்ட இந்த்ரிய வ்ருத்திகளைத்தான்’ என்று சொல்கிறார்.
ravi said…
அப்புறம் இன்னும் ஸ்பஷ்டமாகவே, “இங்கே கூறப்படும் தேவாஸுர யுத்தம் அநாதிகாலமாக ஸமஸ்த ப்ராணிகளில் ஒரு ஜீவன் விடாமல் எல்லாருக்குள்ளேயும் நடந்துகொண்டிருக்கிற போராட்டம்தான் (ஸர்வ ப்ராணிஷு ப்ரதிதேஹம் தேவாஸுர ஸங்க்ராமோ (அ) நாதிகால ப்ரவ்ருத்த:)” என்கிறார்.
ravi said…
அதாவது ஜீவனுடைய இந்த்ரியங்களை வெளி விஷயங்களில் இழுத்துக் கொண்டு போகிற போக்குகளே அஸுரர்கள் என்றும் அவற்றை உள்முகப்படுத்தும் போக்குகள் தேவர்கள் என்றும், ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இந்த இரண்டுக்குமிடையே உண்டாகும் போராட்டம்தான் இங்கே உபநிஷத் சொல்கிற தேவாஸுரப் போர் என்றும் ஆசார்யாள் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

ravi said…
இப்படிச் சொன்னதால் அவர் இந்தக் காலத்தில், ‘புராணம் எதுவும் நிஜமாய் நடக்கவில்லை. அவையெல்லாம் உருவகக் கதைகள்தான், Symbolical தான், allegorical stories தான்’ என்று சொல்லும் கோஷ்டியைச் சேர்ந்தவரென்று நினைத்துவிடக் கூடாது. உபநிஷத்துக்களிலேயே இன்னும் பல இடங்களில் தேவாஸுரர்களைப் பற்றி வருகிறது.
ravi said…
உதாரணமாக, கேநோபநிஷத்தில்2 பரமாத்மா தேவர்களுக்காக ஜயித்துக் கொடுத்ததாக வருகிறது. அங்கேயெல்லாம் ஆசார்யாள் தேவர்களை வெறும் உருவகமாகச் சொல்லவில்லை. ப்ரஹ்மஸூத்ரத்தில் “தேவாதி கரணம்” என்பதற்கு பாஷ்யம் பண்ணும்போது, ‘பூலோகத்தில் நாம் இருக்கிற மாதிரி தேவலோகத்தில் தேவர்கள் இருக்கிறார்கள்.
ravi said…
இந்த்ரிய ஸுகவாஸிகளான அவர்களுக்கும் அபஜயம், அதனால் கஷ்டம், அஸுயை முதலியன இருக்கின்றன. ஆனபடியால் அவர்களும் நம்மில் சிலர் மாதிரி வைராக்யமடைந்து அதன்பின் ப்ரம்ம விசாரம் செய்து ஞானத்தினால் அத்வைத முக்திபெற இடமுண்டு’ என்று ஸித்தாந்தம் செய்திருக்கிறார்.

ravi said…
ஆனால் வேத, உபநிஷத்துக்களில் சில இடத்தில் ஒரு தத்வத்தைச் சொல்லவும் தேவர், அஸுரர் என்று உருவகமாகக் கதை கட்டுவது உண்டு. இதை ‘அர்த்தவாதம்’ என்பார்கள். அதாவது கதைக்காகக் கதை அல்ல. தத்வார்த்தத்தைச் சொல்லவே கதை உபாயமாக்கிக் கொள்ளப்படுகிறது. மேலே சொன்ன சாந்தோக்ய கதை இந்த வகையைச் சேர்ந்ததுதான் என்பது பகவத்பாதாள் அபிப்ராயம்.
ravi said…
இங்கே ‘தேவர்’ என்பது இந்திரிய ஸுகவாஸிகளான ஒரு ஜீவ இனத்தைக் குறிக்காமல், இந்த்ரிய ஸுகத்தை விட்டு நித்ய ஸுகத்துக்கு ஜீவனைத் திருப்பிவிடும் நல்ல சக்திகளைக் குறிக்கிறது; personify செய்கிறது. கீதையிலே “தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்” என்று ஒரு அத்யாயம் இருக்கிறது.
ravi said…
அதிலே பகவான், க்ருஷ்ண பரமாத்மா, தெய்விக குணங்கள் என்னென்ன, அஸுர குணங்கள் என்னென்னவென்று ஜாபிதா போட்ட மாதிரிக் கோ (ர்) வையாகக் கொடுத்திருக்கிறார். பயமற்ற குணம், சுத்தமான ஸாத்விக எண்ணம் என்று ஆரம்பித்து தானம், தபஸ், நேர்மை, அஹிம்ஸை, ஸத்யம், த்யாகம், சாந்தம், பிறத்தியாரிடம் கொஞ்சமும் க்ரோதம் பொறாமை த்ரோஹ சிந்தனை இல்லாமல் அவர்கள் என்ன தப்புப் பண்ணினாலும் க்ஷமித்துக் கொண்டு ஸர்வ பூதங்களிடமும் தயையோடு இருப்பது – என்றிப்படியானவற்றையெல்லாம் தைவீ ஸம்பத் என்கிறார்.
ravi said…
தைவீ ஸம்பத் என்றால் தெய்வீகமான குணச் செல்வம். இந்த குணங்களைத்தான் சில சமயங்களில் தேவகணம் என்று சொல்லி அஸுர கணங்களோடு சண்டை போடுவதாக ‘allegory’ (ரூபகம், அதாவது உருவகம்) செய்வது. அஸுர கணம் என்பது இதே மாதிரி எந்த அஸுர குணங்களுக்கு ரூபகமாயிருக்கின்றன என்பதையும் சொல்கிறார். ‘டம்பம், கர்வம், க்ரோதம், சுடுசொல், அஞ்ஞானம் ஆகியவை அஸுரத்தன்மையுள்ளவை. சாஸ்த்ரங்களில் ‘இப்படிப் பண்ணு’ ‘இப்படிப் பண்ணாதே’ என்று சொன்ன ப்ரவ்ருத்தி, நிவ்ருத்திகளுக்கு நேர்மாறாகப் பண்ணுவது; அநாசாரமாக, அஸத்யமாக, ம்ருக ப்ராயமாக இருப்பது’ – என்றிப்படி அஸுர குணங்களுக்கு ஜாபிதா கொடுத்துக்கொண்டு போகிறார்.
ravi said…
ஸம்ஸாரக் கட்டிலிருந்து விடுவித்து மோக்ஷத்துக்குச் சேர்க்க உதவுகிற எல்லாம் தைவீ ஸம்பத் என்றும், இன்னும் கெட்டியாகக் கட்டிப் போடுவதெல்லாம் அஸுர ஸம்பத் என்றும் தெளிவாக விளக்கிவிட்டு, ‘அப்பா அர்ஜுனா! ‘இதிலே நாம் எதுவோ? எதிலே போய் விழுவோமோ?’ என்று கவலைப்படாதேயப்பா!
ravi said…
தைவீ ஸம்பத்துக்குப் பாத்ரனாகத்தான் நீ பிறந்திருக்கிறாய்’ என்று ரொம்பக் கருணையோடு தைர்யம் சொல்கிறார். இதிலிருந்து ஒரு ஜீவனை ஆச்ரயித்திருப்பவைதான் தேவாஸுர சக்திகளென்று தெரிகிறது.

ravi said…
நமக்கே இந்த தேவாஸுர யுத்தம் – அதாவது நமக்குள்ளே நடக்கிற போராட்டம் – நன்றாகத் தெரியத்தான் செய்கிறது. ஒரு பக்கம் யாரோ, ‘நல்ல கார்யம் பண்ணு, காமியாய்த் திரியாதே, கோவிச்சுக்காதே, அஸூயைப் படாதே, கோவிலுக்குப் போ, த்யானம் பண்ணு, தொண்டு பண்ணு’ என்று சொல்லுகிற மாதிரி இருக்கிறது. இன்னொரு பக்கம் இதற்கெல்லாம் நேர் வித்யாஸமாக யாரோ நம்மைத் தூண்டுகிறது போல இருக்கிறது. துரத்ருஷ்டவசமாகப் பின்னாலே சொன்னவர் தூண்டிவிடுகிற வழியில்தான் நாம் முக்காலே மூணு வீசம் போகிறோம். அப்புறம் அழுகிறோம். அவமானப்படுகிறோம். பச்சாத்தாபப்படுகிறோம்.
ravi said…
அந்தமாதிரி ஸமயங்களில் முதலில் சொன்ன குரலின்படி துளி நடக்கப் பார்க்கிறோம். மறுபடி இரண்டாவது குரல் பெரிசாகக் கேட்கிறது. சறுக்கி விழுகிறோம். மறுபடி அப்போதைக்கு ஒரு ஸத் ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு சறுக்கு மரத்தில் ஏறப் பார்க்கிறோம்.
ravi said…
ஒரே வழவழப்பான சறுக்கு மரத்தில் ஏறுகிறவனும் எண்ணெயைப் பூசிக் கொண்டு, ஏறப்பார்க்கிற மாதிரிதான் நம் சுப யத்னம் இருக்கிறது. ஆனால் எங்கேயோ துளி அது இல்லாமலில்லை. “யத்னம்” என்று செயல் முயற்சியாக அது வராதபோதுகூட ‘இப்படி யத்னம் பண்ணு, இதற்கு வேறேயான வழியில் நீ போறது ஸரியில்லை’ என்று உள்ளே யாரோ சொல்வது மட்டும் நடக்கிறது.
ravi said…
மாறிமாறி நம்மைத் தப்புக்களிலே தூண்டி விடுகிற சக்தியும் இதுவுமாகக் குஸ்தி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதாவது, கெட்ட வ்ருத்திகளுக்கும் நல்ல வ்ருத்திகளுக்கும் நம் மனஸில் நித்யம் சண்டை நடக்கிறது.

ravi said…
வ்ருத்தி (vritti) என்றால் போக்கு, ஓட்டம். ‘சித்த வ்ருத்தி’ என்றால் நம் எண்ணங்களின் ஓட்டம். ஒவ்வொரு தினுஸான ஓட்டமும் ஒரு வ்ருத்தி. இப்படி க்ஷணத்துக்கு நூறு வ்ருத்தி நம் சித்தத்தில்! அதில் தொண்ணூறு கெட்ட வ்ருத்தி, பத்து நல்லதாக இருக்கலாம். நல்ல வ்ருத்திதான் தேவர்கள். கெட்ட வ்ருத்திகள் அஸுரர்கள்
ravi said…
*சிவானந்தலஹரி 91வது, 92வது, 93வது ஸ்லோகம் பொருளுரை*💐💐💐
ravi said…
இந்த 91 வது ஸ்லோகத்தில

आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-

विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्

सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं

भावे मुक्तेर्-भाजनं राज-मौले

ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-

த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .

ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ

பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே
ravi said…
இங்க வேற மாதிரி அதை பிரிச்சு

*யா ஹரதி ஹ்ருதய கிரந்திம்* ” அப்படினு போட்டு இருக்கா ..

மனத்திலுள்ள முடிச்சை, சிக்கலை அவிழ்க்க கூடியதான *ஹ்ருʼத்³யா(ஞானம்)*,

அந்த ஞானம் *ஹ்ருʼத்³க³தா* “.. என்னோட மனசில எப்பவும் வசிக்கும்படியாக உன்னுடைய அனுக்கிரஹம் பண்ணிடுத்து ..

என்னோட அஞ்ஞானம் போயிடுத்து,

எனக்கு மனசில இருக்கற சந்தேகங்கள் எல்லாம் விலகி விட்டது,

ஞானம் கிடைத்து விட்டது. இனிமேல் ,

*ஸ்ரீ கரம்*” ஸ்ரீனா செல்வம், ஸ்ரீனா மங்களம் ..

எல்லா மங்களங்களையும் அளிக்க கூடிய,

*முக்தேர்பா⁴ஜனம்*” முக்திக்கு இருப்பிடமான,

*த்வத்பதா³ப்³ஜம்*” .. உன்னுடைய திருவடி தாமரையை,

*நித்யம் ஸேவே*” எப்பவும் இனிமே நான் சேவிச்சுண்டு இருக்க போறேன்💐💐💐👌👌👌
ravi said…
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ravi said…
[96/108] – *அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்*
ravi said…
பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.

முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.

பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும்.

அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள்.

பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.

குடைபிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள்.

இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.👏👏👏
ravi said…
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
ravi said…
*கம்பராமாயணம்* *633* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*யுத்த காண்டம். முதற் பாகம்*👌👌👌.
ravi said…
இப்படி அனுமனின் வீரதீர பராக்கிரமங்களை வீபீஷணன் சொல்லச் சொல்ல இராமபிரானின் தோள்கள் பூரித்தன.

அனுமன் தன் சுயபுராணத்தையோ, அல்லது அவனது வீரதீர பராக்கிரமங்களையோ தன் வாயால் சொல்லிக் கொண்டு திரியாத அடக்கமானவன் என்பதாலும்,

தான் இலங்கையில் நிகழ்த்திய இந்த வீரச் செயல்களை நிச்சயம் இராமபிரானிடம் சொல்லிக் கொண்டு புகழ், பாராட்டு தேடியிருக்கமாட்டான் என்பதை நன்கு உணர்ந்து கொண்டுதான் விபீஷணன், மேற்படி செயல்களையெல்லாம் இராமபிரானிடம் பட்டியலிட்டுச் சொன்னான்.

மேலும் அனுமனின் ஆற்றலை மற்றவர்கள் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, இதன் மூலம் தெரிந்து கொள்ளட்டுமே என்றுதான் அவற்றை இராமபிரானிடம் விளக்கிச் சொன்னான்.👏👏👏👏
ravi said…
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 884*🥇🥇🥇

*US 876*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
36 வது ஸ்தபகம்

ஷட்த்ரிம்ஸ ஸ்தபக

ப்ரகீரணம் ( தூணகவ்ருத்தம்)

இந்த ஸ்தபகத்தில் அன்னையை பலவாறு கவி அலங்கரித்து பார்க்கிறார். இது ஒரு கீதமாக அமைந்துள்ளது .. முகாரத்த மோதகம்" என்ற விநாயக பஞ்சரத்தினம் போல பாடக்கூடியது . 👏👏👏🌷🌷🌷🌹🌹🌹💐💐🍁🍁
ravi said…
876

உன்ன தஸ்த நஸ்த லீவிலோல ஹார மௌக் திக

வ்ராததீதி ப்ரதானபத்த ஸௌ ஹ்ருதா ஸதா

அந்த காரி காமி நீதரஸ் மிதத் யுதிர் துநோ

த்வந்த கார மந்தரங்க வாஸினம் கனம் மம 🌹🌹🌹
ravi said…
அந்தகாசுரனை வென்ற பரமேஸ்வரனின் பத்தினியான என் அன்னையின் புன்முறுவலின் வெண்மை நிறம் அதற்கு ஈடு இணையே இல்லை ... அவளது நெஞ்சில் அசைந்து ஆடும் முத்து மாலையின் ஒளியோடு அந்த புன்னகை நட்புக் கொண்டுள்ளது .. ( அதைப்போல் வெண்மையாக இருக்கிறது) .
ravi said…
அந்த புன்முறுவலின் காந்தியானது என் உள்ளத்தில் மிக அடர்த்தியாய் இடம் பெற்றுள்ள இருளை ( அஞ்ஞானத்தை) அகற்றட்டும் என்பதே என் பிராத்தனை இன்றும் என்றும் . 🙏🙏🙏💐💐💐
ravi said…
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 304*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

ஸ்துதி சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

79/
3
ravi said…
79

தந்தா தந்தி ப்ரகடனகரீ தந்திப்பிர் மந்த யானை

மந்தாராணாம் மத பரிணதிம் மத்னதீ மந்தஹாசை

அங்கூராப்யாம் மனஸி ஜத ரோரங்கிதோரா குசாப்யாம்

அந்த காஞ்சி ஸ்ஃபுரதி ஜகதாமாதிமா காபி மாதா 🙏🙏🙏🌸🌸🌸
ravi said…
பெண் யானைகள் தோற்கும் அளவிற்கு உன் நடை .... மலர்ந்த மந்தார மலர்கள் வெட்கப்படும் அளவிற்கு உன் புன் முறுவல் .. ஒப்பற்ற அழகி என் தாய் .. அவள் காஞ்சியில் அமர்ந்திருக்கும் அழகை யாராலும் முழுவதும் விவரித்து சொல்லவே முடியாது .. 🤝🤝🤝👏👏👏
ravi said…
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
S G S Ramani said…
அழகன் முருகன் நீ
வயலூர் முருகன் நீ
என் மொழி தமிழ் நீ
பக்தி அன்பர்களுக்கு
அருள் புரிவாய் நீ.

ஓம் சரவணபவ..

🙏🙏🙏🙏🙏🙏
T.V Ganesh said…
குன்றத்து குகணே
என் மனம் எனும் மன்றத்தின் மன்னனே

மயில் மீது வந்த முத்துக் குமாரசாமி

துயில் இல்லாமல் துதிக்கத் தூண்டும் முத்தான குமரன் சாமி

லோகத்திற்கு கடாட்சம் தரும் காமாட்சியின் அருளை லோலாக்ஷியின் கருணையை கவிதை மூலம் அழகாக அவிழ்த்து விட்டீர்

என் ஆனந்தம் ஆகாயம் தாண்டி ஆர்பரிக்கிறது
ravi said…
*Experiences with Periva - A Sage at Pandharpur

The journey to Pandharpur, where the great Jagadguru Sri Chandrasekharendra Saraswati of Sri Kanchi Kamakoti Peetham was camping, revealed to me the hidden beauty of our countryside unaffected by the trappings of modern civilisation.
ravi said…
The train from Kurudwadi to Pandharpur is pretty old and the seats in the tiny compartments are very small. People, mostly pilgrims and villagers, squatted on the floor in the compartments. The two hours and a half journey early in the morning was a pleasant ride through green land. This train, a curious relic of a bygone age, arrived at the sleepy Pandharpur station on the dot. Even passenger trains run on time on the Central Railway!

ravi said…
Despite my broken Hindi, I could get the information I needed. On the train a passenger, a villager, told me that "Sri Sankaracharya Maharaj" (that is how He is called there) was staying a few miles away from the Vitthala temple. Everyone there spoke in Marathi making courteous enquiries about the purpose of my visit.
ravi said…
At the station the only available transport was the tonga. The tonga driver looked as self-assured as the moustache-twirling autorickshaw driver of Delhi.
ravi said…
He dumped people and luggage in his ramshackle cart and drove away lecturing to the crowed passengers on a variety of subjects ranging from the dangers of travelling in buses to the glory of Lord Vitthala. Offloading me at a hotel, he drove off with a nonchalance that conveyed his dominance in the realm of transportation in Pandharpur.

ravi said…
An hour later I allowed myself to be taken care of by another tongawalla who offered to take me to 'Sri Sankaracharya Maharaj' and bring me back to the lodge for Rs.15. He told me of the long distance he had to drive including the last lap across the bridge on the river Chandrabhaga. Later, however, I realised that it was after all not such a long journey.

ravi said…
The river Chandrabhaga, so named because of its crescent-shape formation at Pandharpur according to my guide, the tongawalla, looked serene. Pilgrims from the Vitthoba temple on one side of the river were being ferried across to the other side for Sri Sankaracharya's darshan. As the morning sun was briskly rising in the sky, I walked up to the abode of the Swami. It was a shed-like house.

ravi said…
All was quiet as I entered the portion. There was an assortment of people from the south, north and west. In the hall inside some devotees and been waiting since early morning for His darshan. One of the inmates of the ashram was carrying messages from someone in the hall to the Swami inside. "When will the sage come out? What is the darshan time?" anxiously asked a few.

ravi said…
A little later, as the number began to swell to over a hundred, we were all asked to move into the front verandah where the Swami would come shortly. A line was formed and two wooden tables were arranged to regulate the queue. Two constables came in asking people to form a line. There came a hefty chowkidar-like person issuing instructions to the devotees.

ravi said…
A young girl led a chorus a devotional hymns: "Hara Hara Sankara, Kaladi Shankara". The air was filled with an atmosphere of Bhakti. A young man raised his voice singing the bhajans louder than the others. There were three doors to that place and the Swami would come out through the front door at which some women and men were all ready to offer flowers, fruits and arti when he came out.
ravi said…
Behind them was a middle-aged man who being happy to be ahead of others in the line asked his wife and daughter standing a few yards away to get behind him. He and his family now acquire a vantage position. Minutes passed. All eyes were riveted to the front door.

ravi said…
Suddenly there was a mild flutter. The Swami accompanied by an assistant came out through a different door! People turned around shouting "Jaya Jaya Sankara". He waved His hand gently asking everyone to sit on the floor. His orders were instantly obeyed. The chowkidar prostrated before the Swami. His Holiness recognising the chowkidar smilingly greeted him by his name and the huge man rose, his face radiating happiness at the honour done to him.

ravi said…
The Swami then retreated to the corner of the door and sat there enabling everyone in the line to go near him to receive His blessings. One by one men, women and children went near Him, prostrated and left as He gently raised His hand and blessed each of them making kind enquiries about their welfare. Some talked in emotion; some totally surrendered at His feet and some spoke in unconcealed innocence.

ravi said…
I am reminded of an incident narrated to me by an ex-official of the India Express. Once he went to Kalavai near Kanchi where the Swami was staying after taking over the Peethadhipathyam. (I too saw Him once there and it was most touching to see poor villagers explaining to "Periyaval" their worries and problems such as the loss of a dear one, daughter eloping with a married man, or son taking to liquor.

ravi said…
The Swami would offer them advice or guidance and they would leave, having passed on their 'burdens' to Him). When the Express official went to the Swami, he found Him totally silent. He was in a trance, the people there thought, and so they sat there quietly waiting for Him to look at them. A little later a poor villager came there literally sobbing and supplicating the Swami's help for his daughter's marriage. The Swami opened His eyes and asked him about the problem. "My daughter's marriage is fixed. The groom's party wants ten gold sovereigns. You must help me".

ravi said…
"Where do I have the gold? What can I give you"? the Swami asked.

"You have been guiding me all though my life. How can you say 'no' to me now? You only can help me", he persisted.

Finding the poor fellow unrelenting, the Swami said: "You know we are all the children of Mother Kamakshi. You go to Her temple and pray. She only can help you".

"I have no God except You. I pray to You only", he continued.

"I am telling you, go to Mother Kamakshi and pray to Her with all your heart".

ravi said…
The fellow left reluctantly, tears streaming down his cheeks. The Swami was moved by the situation.

Another long spell of silence. Quite a few were there waiting anxiously to speak to Him. After nearly an hour He began to hear the others. Another hour passed. The Express official got his chance to speak to Him. In the meantime came a Gujarati couple. Prostrating before the Swami they offered fruits and some gold sovereigns in a plate. Looking at the plate and the gift, the Swami said that He would not accept any gifts and asked them to take the plate away.
ravi said…

"We took a vow that we would offer You eleven gold sovereigns for You blessings. We have been saved by Your grace and we must fulfil the vow. You may do anything with them, Swami, kindly accept them," they insisted.

Asking them to wait, the Swami enquired whether anybody there had a car. The Express man instantly said that his car was ready to go anywhere.

ravi said…
"You saw the poor fellow? Go to Kamakshi temple and fetch him here without telling him anything."

In less than half an hour the car returned with the fellow still sobbing. He fell at the Swami's feet.

"Have you prayed to the Mother with all your heart?" the Swami asked.

"I know no prayer; I just cried before the Mother", he replied.

"The Divine Mother is pleased with your prayers. Take Her gift here". His Holiness pointed to the plate.

ravi said…
The poor fellow's face turned pink with ecstasy. He looked at the sovereigns. "I want only ten Swami, not eleven" he pleaded still sobbing, this time in joy.

ravi said…
There was not one there without moist eyes. To the poor fellow and the people there is was nothing but the grace of His Holiness that solved the problem. To others it might seem a miracle or just a coincidence.

ravi said…
I was filled with such thoughts that I stood motionless at Chandrabhaga for a while after the darshan. What did I ask for? Nothing, What could I seek? What greater boon could one ask for than to be in His presence even if it was for a minute or two? As I left the place with a heavy heart I was greeted by the river, the temple on the other side of the river bank and my tongawalla friend.

ravi said…
In the town the Vitthala temple is surrounded by a pantheon of Gods and Goddesses, which no pilgrim misses. I went to the Vitthala temple. But I did not visit the cluster of other temples around. I had the darshan and blessings of a living God. As I journeyed back, my mind was filled with the memory of those few minutes when His Holiness spoke to me gently. I did not remember much of the journey part on my way back. Nor did I feel the fatigue of the long journey from Pandharpur to Secunderabad via Sholapur.

ravi said…
The great sage, His small figure, His benign smile, His raised hand blessing the devotees, His radiant face all are vivid in my memory. It seems as if I was in His great presence only a little while ago. Perhaps another such moment will be granted to me and countless people like me.


*Periva Saranam*

_Compiled by: Voice of Periva_ | https://t.me/PerivaVoice

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.mahaswami.org*

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை