பச்சைப்புடவைக்காரி - சிங்கை & ஊதிமலை 398 - 117- 80
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 80
திருப்புகழ் ஸ்தலங்கள்
திருப்புகழ்
16.திருப்புகழ் 119. சிங்கை (காங்கேயம்)
120.ஊதிமலை
398
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற ...... கழலோனே
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த ...... திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
(சஞ்சரி யுகந்து)
தாமரை,கொன்றை, தும்பை, மகிழம் ஆகிய மலர்கள் நிறைந்து மணம் கமழும் கழல்களை உடையவனே !
அழுகிய பிணங்களைத் தின்னும் பேய், நாய், நரி, காக்கை, பருந்து முதலியவற்றின் கூட்டம் காணும்படி போர்க்களத்தில் வீசும் ஒளியுடைய வேலை உடையவனே !
இனிய சொல்லுடைய எங்கள் குறமகள் வள்ளியை அணைந்த மார்பனே !
செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் மிகுந்த சிறப்புமிக்க சிங்கை நகரில் அமர்ந்து அருளும் பெருமாளே !
என்னுடைய தீய வினைகள் இன்றே அழியுமாறு நன்மை தரும் மயில் மீதில் வரவேணும்.
தாமரை,கொன்றை, தும்பை, மகிழம் ஆகிய மலர்கள் நிறைந்து மணம் கமழும் கழல்களை உடையவனே !
அழுகிய பிணங்களைத் தின்னும் பேய், நாய், நரி, காக்கை, பருந்து முதலியவற்றின் கூட்டம் காணும்படி போர்க்களத்தில் வீசும் ஒளியுடைய வேலை உடையவனே !
இனிய சொல்லுடைய எங்கள் குறமகள் வள்ளியை அணைந்த மார்பனே !
செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் மிகுந்த சிறப்புமிக்க சிங்கை நகரில் அமர்ந்து அருளும் பெருமாளே !
என்னுடைய தீய வினைகள் இன்றே அழியுமாறு நன்மை தரும் மயில் மீதில் வரவேணும்.
தொங்குசடை மீது திங்களணி நாதர்
மங்கைரண காளி தலைசாயத்
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
என்றுநட மாடு மவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
மங்களம தாக அணைவோனே
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
அந்தமுனை வேல்கொ டெறிவோனே
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
சிங்கைநகர் மேவு பெருமாளே.
சந்திதொறு நாண மின்றியகம் வாடி
உந்திபொரு ளாக அலைவேனோ
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
தங்கள்வச மாகி அலையாமற்
சுந்தரம தாக எந்தன்வினை யேக
சிந்தைகளி கூர அருள்வாயே
தொங்கும் சடையின்மேல் சந்திரனைச் சூடிய பெருமான், மங்கையும் போருக்கு எழுந்தவளுமாகிய காளி நாணமடைந்து தலைகுனியுமாறு நடனம் ஆடிய சிவபெருமானின் குமாரனே !
பெருமை பொருந்திய வேடர்களின் குலத்தில் வந்த வள்ளியை அணைந்தவனே!
கந்தனே ! முருகேசனே ! போரிட நெருங்கி வந்த அசுரர்கள் மடிய கூரியவேலை எறிந்தவனே !
காஞ்சி ஏகாம்பரநாதர், கைலாசபதி, ஆகிய சிவனது மைந்தனே ! கூரிய வேலாயுதத்தை உடையவனே ! சிங்கைப் பதியில் அமர்ந்த பெருமாளே !
காலையும் மாலையு,ம் வெட்கமில்லாமல் உள்ளம் சோர்வடைய, வயிறே காரியமாக அலைச்சல் படுவேனோ !
தினமும் மாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், அழகுபெற என்னுடைய வினைகள் தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி பெற அருள்புரிவாயாக.
இருவினையும் அகலவேண்டும்
முதல் பாடலில் கெட்ட வினைகள் ( நன்று இல் வினை ) அழியவேண்டும் என்றார். இரண்டாவது பாடலில் பொதுவாக "எந்தன் வினையேக " என்கிறார். நல்வினை, தீவினை ஆகிய இரண்டுமே பிறவிக்குக் காரணமாகின்றன. ஆகவே இருவகை வினைகளும் அழியவேண்டும்.
இதற்கு முருகன் அருள் வேண்டும். "வினை யோட விடுங்கதிர் வேல் " என்பார். "வினைப்பகை யறுத்து நினைத்தது முடித்து மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக் கடலே " என்று வேண்டுவார்.
இந்த வினை நீக்க வேண்டுகோள் ஜீவர்களுக்கு முக்கியமானது. திருஞான சம்பந்தரும் பல பாடல்களில் வினை நீக்கம் பற்றியே பாடியிருக்கிறார்.
ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
பக்தி என்று சொன்னாலும் நமது வழிபாடு, சாதனை முறைகள் மரபு வழியில் பெரியோர் உபதேசித்த படி இருக்கவேண்டும். நமது வழி வேத மரபில் வந்தது. அதனால் "ஓதுமறை ஆகமம் சொல் யோகமதுவே புரிந்து " என்று சொல்கிறார்.
இப்படிப் பல பாடல்களில் அருளை வேண்டுகிறார்.
இன்சொல் விசாகா க்ருபாகரா !
நாளும் உன் புகழே பாடி
நான் இனி அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்ந்திட வீணாள் படாது அருள் புரிவாயே !
ஆவினன்குடி மீதிலங்கிய பெருமாளே !
கங்கையின் நீர் சொரிந்து
இரு பாத பங்கயமே வணங்கி
பூஜையும் சிலவே புரிந்திட அருள்வாயே !
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே !
விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே !
வெகுமலரது கொடு வேண்டியாகிலும்
ஒருமலர் இலை கொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே.
(கூந்தலூர் பாடல் )
"பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஶ்னாமி "
என்ற சுலோகத்தை நினைவூட்டுகிறது.
"புண்ணீயம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும் " என்பார் திருமூலர்.
இவ்வாறு நாம் செய்யும் வழிபாடு மரபுவழியில் வந்ததாக இருக்கவேண்டும்.
இப்படி மறை ஆகம வழியில் பக்தியோகம் செய்பவர்களின் வினை தீரும் என்கிறார் !
அடுத்த பாடலிலும் அருளையே வேண்டுகிறார்
போதக மற்றெச் சகத்தை யுந்தரு
நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் மருகோனே
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் வடிவேலா
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ னிசையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே
ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
காரண பத்தர்க் கிரக்க முந்தகு
ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ரொளியோனே
ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
காபர ணத்திற் பொருட் பயன்றரு
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் பெருமாளே.
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் புரிவாயே
(கோதி முடித்து )
இந்த நிலையை பாகவதம் வெகுவாகப் புகழ்கிறது.
तव कथामृतं तप्तजीवनं
कविभिरीडितं कल्मषापहम् ।
श्रवणमङ्गलं श्रीमदाततं
भुवि गृणन्ति ते भूरिदा जनाः
தவ கதாம்ருதம் தப்த ஜீவனம்
கவி பிரீடிதம் கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் ஸ்ரீமதாததம்
புவி க்ருணந்தி தே பூரிதாஜனா :
ஹே க்ருஷ்ணா ! தங்களுடைய கதையாகிற அமிர்தம் தாபத்தை அடைந்தவர்களுக்கு உயிர் அளிப்பது. (வ்யாஸர், ஶுகர் போன்ற ) ஞானிகளால் கொண்டாடப்பட்டது. காம கர்மங்களைப் போக்கக்கூடியது. கேட்ட மாத்திரத்தில் மங்களங்களைக் கொடுக்கக்கூடியது. ஸகல ஐஶ்வர்யத்தையும் அளிக்கக்கூடியது. இக்கதையாகிற அமிர்தத்தை யார் சொல்கிறார்களோ அல்லது அனுபவிக்கிறார்களோ அவர்களே மஹாபாக்யசாலிகள். (புண்யம் செய்தவர்கள்.)இதை கோபிகைகள் சொல்கிறார்கள்.
பகவான் விஷயம் சொல்பவர்கள், கேட்பவர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் மங்களம் தரக்கூடியது. அதனால் பக்தர்கள் கூடும் இடத்தில் பகவானைப்பற்றிய பேச்சுதான் இருக்கும். கீதையிலும் பகவான் இதைச் சொல்கிறார் :
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते।।9.14।।
ஸததம் கீர்த்தயன் தோமாம் யதன்தஶ்ச த்ருடவ்ரதா :
நமஸ்யன் தஶ்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே . 9.14
உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் இடைவிடாது என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்துகொண்டும், என்னை அடையும் முயற்சியில் ஈடுபட்டும், என்னைத் திரும்பத் திரும்ப வணங்கிக்கொண்டும், எப்பொழுதும் என்னுடைய தியானத்திலேயே நிலைத்திருந்தும் வேறு ஒன்றிலும் நாட்டமில்லத அன்புடன் என்னை வழிபடுகிறார்கள்.
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।
மத் சித்தா மத் கதப்ராணா போதயன்த : பரஸ்பரம்
கதயன்தஶ்ச மாம் நித்யம் துஷ்யன் திச ரமன் தி ச 10.9
என்னிடமே மனதைச் செலுத்தியவர்களும், என்னிடமே உயிரை அர்ப்பணித்தவர்களுமான பக்தர்கள் , தங்களுக்குள்ளே என்னுடைய ப்ரபாவத்தை விளக்கிக்கொண்டும், என் குணங்களையும் ப்ரபாவத்தையும் பேசிக்கொண்டும் எப்பொழுதும் மகிழ்கிறார்கள். என்னிடமே இன்புறுகிறார்கள்.
இப்படிப்பட்ட இடத்தில் தான் நிற்கவேண்டும் என்கிறார் அருணகிரியார்.
=========👌👌👌👌===================
Comments
*ப்ராண* = ப்ராணன்- ஜீவன்
*ஹரண* = நிறுத்துதல் - களைதல்
*வாராஹீ* = தேவி வாராஹி (தண்டநாதா)
வீர்ய = பலம் - வலிமை
*நந்திதா* = அகமகிழ்தல்
76
# *விஷுக்ர ப்ராண ஹரண வாராஹீ வீர்ய நந்திதா =*
விஷுக்ரனை வீழ்த்திய வாராஹியின் வீரச்செயலால் உவகை கொண்டவள்👍👍👍
வந்தவள் தந்தவள் எனை அள்ளி அணைத்தாள் ஒரு தாயாக
தாய் மடி சுகம் மறந்திருந்தேன் ... மரகதவல்லி நினைவு கூர்ந்தாள் அன்போடு ...
அம்மா இது போதும் எனக்கு ... இனி ஏதும் வேண்டின் போகட்டும் என் ஆவி எமன் உலகிர்க்கே என்றேன்
சிரித்தாள் சிங்காரி ... சிறுபிள்ளை என நான் உனை நினைத்தேன் . உண்மை என்றே சொல்லிவிட்டாய் .
தாயவள் நான் உன் அருகில் இருக்கையில் பாசம் அதை வீசுவானோ காலன் ..
செல்ல விடுவேனோ உன் ஆவி தனை எம லோகத்திற்கு ...
கர்ஜித்தாள் அன்னை ...மீண்டும் உறங்கிப்போனேன் அவள் மடியில் 👏👏👏
சொன்ன சொல்லில் மதுரம் வழிய வண்டாய் அங்கே ரீங்காரம் புரிவோமா ?
புரிந்த வண்டாய் பாமாலை ஒன்றை தொடுப்போமா
தொடுத்த மாலை தனை சூடிக்கொடுத்த சுடர் கொடியிடம் தருவோமா
தந்த பா கண்ணன் மேல் இல்லை என்றே சொல்வாளோ ?
சொல்பவளுக்கும் புரிய வைப்போம் ...ராமன் வேறில்லை கண்ணன் வேறில்லை என்றே
*தேஶகாலாபரிச்சின்னா -* அம்பாள் ஸ்ரீ லலிதைக்கென்று குறிப்பிட்ட காலமோ, நேரமோ, தேசமோ இல்லை.
சர்வமும் கடந்தவள் . எல்லாமும் என்றும் தானே ஆனவளுக்கு காலம் எது,ஏது?
*702* *ஸர்வகா* -
யாதுமானவள் அம்பாள். எங்குமிருப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை. எதுவுமாக இருப்பவள் ஸ்ரீ அம்பிகை.
ஈசாவாஸ்ய உபநிஷத் (5) “asya sarvasya antaḥ, asya sarvasya bāhyataḥ” ''எதிலும் அந்தர்யாமியாக பரிணமித்து இருக்கும் அந்த ப்ரம்மம் எதிலும் எங்கும் பகிரண்டமாக காண்கிறது '' . அம்பாள் பரப்பிரம்மம். 💐💐💐
முடிவான, அசைக்க முடியாத மாறாத சத்யம் ஆகியவற்றின் ஸ்வரூபமானவள் ஸ்ரீ அம்பாள்.
ஒரே வார்த்தையில் சொன்னால் பரப்பிரம்மம்.
அம்மா ... என்ன சொல்லி என் ஆனந்தத்தை வெளிப்படுத்துவேன் ... உன் திருவடிகளில் என்றும் விழுந்து கிடக்கும் பாக்கியத்தை தா ...
நீ தான் என்னை அந்தரி சுந்தரி எந்தை துணைவி என்று பாடுகிறாயே ..
என் பாதங்கள் உன் சிந்தையிலும் சிரசிலும் பதிந்து விட்டன ...
சிரித்துக்கொண்டே நகர்ந்தாள் சிந்தூர வண்ண பெண்ணாள் 😊😊😊
*பதிவு 960*🥇🥇🥇🏆🏆🏆
*US 952*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
39 வது ஸ்தபகம்
*ஏகோநசத் வாரிம்ஸ ஸ்தபக*
ப்ராயோ வ்யோ மஸரீரா( இந்த் ரவஜ்ரா வ்ருத்தம் )
🦚🦚🦚🥇🥇🥇
பூர்ணே வியத்யே கதடிஜ்ஜ் வலந்தீ
லோகாநஸே ஷா நனிஸம் ஸ்புரந்தீ
மேகே கதா சின்மஹஸா ஸ்புரந்தீ
சண்டீ ப்ரசண்டா ஹரதாதாகம் ன 🍇🍇🍇
அவளே பிரசண்ட சண்டீ ... அண்டங்களை பரிணாம முறையில் மாற்றத்தை உண்டாக்கிப் பக்குவப்படுத்துபவளும் அவளே
*பதிவு 380*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
53
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ச்ருங்கார விப்ரமவதீ ஸூதராம் ஸலஜ்ஜா
நாஸாக்ர மௌக்தி கருசா க்ருத மந்த ஹாஸா
ச்யாமா கடாக்ஷ ஸூஷமா தவ யுக்த மேதத்
காமாக்ஷி சும்பதி திகம்பர வக்த்ர பிம்பம் 🙏🙏🙏
* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும்.
அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார்.
தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.
* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.
திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
அனுமன் மீண்டும் ஒரு மலையைப் பெயர்த்து எடுத்து வலிமையோடு இராவணன் மீது வீசவும், அது மேலும் வேகம் எடுத்து இராவணன் அதைத் தடுக்கும் முன்பாகவே அவனது தோளைத் தாக்கி அவன் அணிந்திருந்த 'வாகுவலயம்' என்ற கவசத்தைப் பொடிப்பொடியாக்கியது. இதனால் கடும் கோபம் கொண்ட இராவணன், மறுபடியும் ஒரு மலையைப் பெயர்த்துக் கொண்டிருந்த அனுமன் மீது தொடர்ந்து பத்து அம்புகளைச் செலுத்தினான். அது அவன் கைகள், தோள், மார்பு இவற்றில் புகுந்தது, எனினும் அனுமன் அவற்றைப் பொருட்படுத்தாது போர்புரிந்தான்.
*பாடல் 10*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்;
எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே!
அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே!
அழியா முத்தி ஆனந்தமே!🍇🍇🍇
எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந் தக் கூடிய அரும் பொருளாயும்,
சிவபிரானின் திருவருள் வடிவ மாயும் விளங்கும் உமையன்னையே!
நான் நின்றவாறும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவாறும், தியானம் செய்வதும் உன்னை த்தான்;
என்றென்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னு டைய திரு வடித் தாமரையையேதான்.👍👍👍
*நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;*
TMS பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது ..
நிற்பதும் நடப்பதும் உன் செயலாலே நிகழ்வதும் நினைப்பதும் உன் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
*காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே*
அது போல் நம்மால் நிற்க முடிகிறது என்றால் அது அவள் செயல் ..நிற்கும் போதும் , அமர்ந்திருக்கும் போதும் , நடக்கும் போதும் அவளையே நினைக்கிறேன் என்கிறார் பட்டர் ...
அதாவது வேறு எதைப்பற்றியும் நினைக்க நேரமில்லை ...என்கிறார் பட்டர் ...
நமக்கு அவளைத்தவிர மற்றவைகளை நினைக்க நிறைய நேரம் இருக்கிறது ... 🙏
அம்மா தாமரை மலர்களால் ஆன உன் திருவடிகள் மற்றும் நான் தினம் வணங்குவது .. அவை என் தலை மேல் பதிந்து உள்ளது ... என் சிந்தையுள் கலந்து உள்ளது ...
*ஒன்றும் அரும் பொருளே!*
எழுதா மறை ... வேதம் எழுதப்படுவதில்லை... சொல்லி கேட்க வேண்டிய ஒன்று ...
அவளும் இப்படித்தான் என்று எழுத முடியாது
அவளை... அவள் கருணையை அருளை அனுபவிக்க வேண்டும் ...
நாம் வேதத்தை உணர்ந்துகொண்டால் அங்கே அவளும் அதனுடன் பொருந்தி அர்த்தமாக வந்திடுவாள் 🙏🙏🙏
*அன்றும் பிறந்தவளே!*
அவள் பக்தர்களுக்கு அருள் புரிவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை .. பகைவர்களுக்கும் அருள் செய்பவள் .. உதாரணம் கம்சன்
அவளுக்கு *உமை* என்ற நாமம் மிகவும் ப்ரீத்தி .
*இமயத்து அன்றும் பிறந்தவளே*
அவள் நமக்காக அவதாரங்கள் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறாள் ..
இமாவான் மகளாக
பாண்டிய ராஜன் மகளாக
மதங்கினி முனிவரின் மாதவச் செல்வியாக ...
பட்டர் அதனால் அன்றும் பிறந்தாய் இன்றும் பிறக்கிறாய் என்றும் பிறப்பாய் என்கிறார்
அவள் தரும் ஆனந்தம் அழியாத முக்தியை தரவல்லது அதற்கு ஈடு இணையே இல்லை 🙏🙏🙏
லோகத்துக்கெல்லாம் பிரஸித்தமாக, வர ப்ரஸாதினியாக இருக்கப்பட்டவள் மீநாம்பிகை. காருண்யத்தோடு ஆதிபத்ய சக்தியும் சேர்ந்திருக்கிறவள் மீநாக்ஷி. ஆறு மாஸம் தன்னிடம் செங்கோல், ஆறு மாஸம் ஸுந்தரேச்வரரிடம் செங்கோல் என்றிப்படி லோக முழுவதற்கும் ராஜ்யபாரம் பண்ணுகிறவள். நித்தியப்படி பூஜை, நைவேத்யம் முதலியவற்றைப் பார்த்தாலோ, ஈஸ்வரனுக்கு அவள் ஸரி ஸமானம் மட்டுமில்லை, அவனைவிட ஒருபடி மேலே என்று தோன்றுகிறது.
மீநாக்ஷியை ஆதி காலத்திலிருந்து அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள்.
‘
தமிழில் ‘அங்கயற் கண்ணி’ என்று அம்பாளைச் சொல்வார்கள். ‘அம்’ என்றால் அழகிய, ‘கயல்’ என்றால் மீன். மீன் போன்ற அழகிய கண்ணுள்ளவள், மீநாக்ஷி என்று அர்த்த்ம். ‘அங்கச்சி, அங்கச்சி’ என்றே மதுரையில் எந்தப் பெண்ணையும் கூப்பிடுவது இதனால்தான் இப்படி இருக்கிறது மீநாக்ஷியின் பெருமை. மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர், நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல், ‘இந்த அம்பாளுக்கு என்ன சக்தி இருக்கிறது?’ என்று கேலி பண்ணின ஒரு வெள்ளைக்கார கலெக்டருக்கு*1 கூடப் பரம கருணையோடு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாள். அந்த துரை படுத்துக் கொண்டிருந்த பங்களாவின் மீது இடி விழ இருந்த போது தூக்கத்திலிருந்தவனை எழுப்பி வெளியேறும்படி எச்சரிக்கைப் பண்ணிக் காப்பாற்றியிருக்கிறாள்.
(இன்று மீனாட்சி கல்யாணம்)
இத்தனை கருணையோடு ஓர் அம்மா இருக்கிறபோது, இன்றைக்கு லோகத்தில் இவ்வளவு துர்பிக்ஷை இருக்கிறது என்றால், அதிலிருந்து நாம் எத்தனை பாபம் செய்திருக்கிறோம் என்பதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘
இப்படிப்பட்ட சரீரம் படைத்தவளாதலால் நம் சரீரத்தை மட்டுமின்றி அறிவையும் வளர்க்கிற பிக்ஷையைப் போட்டு ஞானம் தருவாள்.
அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே |
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||
Once Sri Chandrasekharendra Saraswati Swami of Kanchi Mutt (Sri Periva) had camped in North India.
The then Prime Minister, Smt. Indira Gandhi, came to have His darshan.
The Prime Minister of India placed a similar question in front of Sri Periva, “If you would pinpoint the persons who, in the name of spirituality, lead the people in a wrong way I will take action against them.”
Sri Periva laughed and said, “No! It should not be handled in this manner. Those who approach such fake swamis will themselves, after a time, understand their standard of maturity.”
Sri Periva knew that this reply did not satisfy Smt. Indira Gandhi. Someone had offered a basket full of mangoes to Periva. It contained many unripe and a few ripe fruits.
Many devotees waited outside for Sri Periva’s darshan. Sri Periva instructed the attendants to bring a child from amongst these devotees. A child of about 5 years was brought to Him.
Pointing to the basket Periva smilingly said to the child, “Take whatever you want.” After a search the child picked up a ripe fruit.
Sri Periva pointed out to Smt.Indira Gandhi who was watching this, “Just as the way a child knows what is ripe and what is unripe, so too would those who go out in search of Truth recognize a true Mahan at some point of their life.”
Periva Saranam!
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
*🔷பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பழகுங்கள்.*
*நிம்மதியை பக்கத்தில் வைத்துப் பாருங்கள்.*
*அற்புதமான வாழ்வில் அமைதி வரும் .*
*🔷"உங்களை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்..*
*விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும்.*
*🔷நாம் எதிர் பார்த்து காத்திருந்தால் எதுவும் நடக்காது.*
*நாம் எதிர் பாராத நேரத்தில் அது நடக்கும்.*
*அது தான் இறைவனின் செயல்.*
*இறைவனையே நம்புங்கள்.*
*அவர் நீங்கள் எதிர் பாராத நேரத்தில் எதிர் பார்த்ததை விட மேலானவற்றையும் தந்து உங்களை மகிழ்விப்பார்.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
In this regard, I would like to share the following:
Our JRK sir is also having this humbleness and ground to earth personality.once I had a chance to travel with him to Kochi.
We both visited Guruvaayur temple early 4 AM in the morning.after the visit we had a chance to meet the mother of main priest in the temple who was retired.
That shows his simplicity and his respect towards elders. Another instance I knew is during his daughter's marriage time,his father in law is hesitating to come and stay with them with the concern that,being old,JRK might need to spend hours of time with him to take care of him which may be an inconvenient to JRK.but JRK replied him,it is his pleasure to take care of him rather doing other busy works of marriage related works.now a days it is rare to see such good hearted and simple living people.probably with the blessings of maa lalita JRK sir attained this great quality.
in F&A,we all witnessed his simplicity and humbleness and we should adopt this good practice in our life.hats off to you JRK sir
Regards
But he is very close to all of us and his observation appreciating others and kindness no one can match
Rgds
*பாடல் 11*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ஆனந்தமாய்
என் அறிவாய்,
நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள்,
மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம்
தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம்
எம்பிரான் முடிக்கண்ணியதே.👍👍👍🥇🥇🥇
வானம் இறுதியாயுள்ள பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை,
நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது,
வெண்ணிறச் சாம்பல் படர்ந்த மயானத்தைத் தாம் ஆடல் நிகழ்த்தும் இடமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் திகழ் கிறது.🙏🙏🙏
அவளே அழியாத பேரானந்தம் ... மற்ற எந்த ஆனந்தத்திற்கும் முடிவு உண்டு ..
ஆனால் அவளே பரமானந்தமாய் இருக்கும் போது அவள் தரும் ஆனந்தத்திற்கு முடிவு எது எல்லை ஏது ? 👌👌👌
அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் –
அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – 👍👍👍
அவள் பரமானந்தம் என்பதை நான் எப்படி உணர்ந்து கொள்ள முடியும் ?
கண்ணன் தன் விஸ்வரூப தரிசனத்தைக்காட்டும் முன் அர்ஜுனனுக்கு அதை பார்க்கக்கூடிய கண்களை தந்தானாம் ...
அதுபோல் அவள் பரமானந்தம் என்று உணரக்கூடிய அறிவாகவும் அவளே வருகிறாள் அவள் தரும் ஞானத்தால் அறிவாள் அவள் தான் பரமானந்தம் என்பதை உணரலாம் . 👏👏👏
ஒரு பாத்திரத்துக்குள் மிகுவும் சுவையான நெய் மணம் கமழும் சக்கரைப்பொங்கல் சுட சுட இருக்கிறது அந்த பாத்திரம் மூடி போட்டுள்ளது ... எப்படி சாப்பிடுவோம் ? மூடியைய் எடுத்து விட்டு அதை தட்டில் போட்டு சூடு ஆற சாப்பிடுவோம் அல்லவா ...
அந்த மூடியை எடுத்து விட அவள் அருள் வேண்டும் ..
எடுத்துவிட்டால் வேண்டும் அளவிற்க்கு அமுதமும் ஆன அவளை பருகலாம். 🥇🥇🥇
பேரானந்தமான அமுதமும் ஆன அவள் வானமே எல்லை என்று உயர்ந்து நிற்கிறாள் ...
அந்த அளவிற்கு அவள் விஸ்வரூப தரிசனம் நம் எல்லோருக்கும் கிடைக்கிறது 👏👏👏
அவள் வேத ஸ்வரூபிணி .. வேதங்கள் எங்கே முடிவடைகிறது தெரியுமா அவளுடைய அரவிந்தம் அதாவது தாமரை போன்ற திருவடிகளில் ... அங்கு தான் வேதங்கள் சரணடைகின்றன 👍👍👍
*தவள* என்றால் வெண்மை என்று அர்த்தம் .. மயானத்தையே அவள் தான் ஆடும் அரங்கமாய் அமைத்துள்ளாள் ...
*ஏன் மயானத்தை இந்த மங்கல ஸ்வரூபிணி தேர்ந்தெடுக்க வேண்டும் .. ?*
பிறந்த இடமோ செல்வ செழிப்பான இடம் ..
செல்வத்திற்கு குறைவு இல்லை ...
பிரம்மா தேவர்கள் தினம் வணங்கும் பாதங்கள் ...
காமேஸ்வரனோ எல்லாம் கொண்டவன் ..
என்ன குறை இவளுக்கு
பிறகு ஏன் எல்லோரும் போக பயப்படும் இடத்தை தான் நடமாடும் அரங்கமாய் தேர்ந்தெடுக்க வேண்டும் ?
மாயை ... இன்று செத்தால் நாளை பால் ...
*காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"* என்று பாடினார் பட்டினத்தார் ...
மாயக்கண்ணன் பொன்னும் பொருளும் கொடுத்து இதுவே நிரந்தரம் என்று சொல்லி நம் எல்லோரையும் மயக்குகிறான்
அவன் தங்கையோ இது உண்மை அல்ல மாயை என்று சொல்கிறாள் ...
இறுதியில் வெற்றி காண்பது ரங்கன் அல்ல தவள நிறக் கானம் தனை அரங்கமாய் அமைத்துக்கொண்டு அதில் நடமாடும் அவன் தங்கை மட்டுமே 🥇🥇🥇
கண்ணியது என்றால் கட்டப்பட்டது என்று அர்த்தம்...
அதாவது அவள் திருவடித் தாமரைகள் மலர்கள் கட்டப்பட்ட அதாவது பரவியுள்ள ஈசனின் சிரசில் ஜோராக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளதாம் ...
இதுவல்லவோ பேரானந்தம் பரமானந்தம் ..
இந்த காட்சியை நாமும் காண அவள் அருள் செய்கிறாள்
அந்த ஞானத்தை அமுதமாய் நமக்குத் தருகிறாள் ... 🙏🙏👏👏🙏
அவள் அணைப்பாள் நம்மை வாரி ...
ஏரி போல் நம் பாசம் ஏங்கும் வேப்பிலைக்காரி
சொக்கனை மயக்கிய மதுரைக்காரி ...
திருவிளையாடல் புரிவதில் கெட்டிக்காரி
வினை தேடி தீர்ப்பதில் அவள் என்றும் கருமாரி
உருமாறி வருவதிலே அவள் என்றும் முத்துமாரி
சம்சாரம் எனும் கரை கண்டு மீளா துயர் கொண்டோர்க்கு
அக்கரைக்கு அக்கறை கொண்டு சேர்ப்பதில் அவள் திறன் மிகும் ஓடக்காரி ...
வாமபாகத்தை வவ்வியக் கெட்டிக்காரி
ஈசன் உண்ட நஞ்சை அமுதாக்கிய மந்திரக்காரி
இணை இல்லை இவளுக்கு என்றால் அது மிகை இல்லை என்றே காட்டும் மதுரை மணம் கமழும் பூக்காரி 🙏🙏🙏
*ஸரஸ்வதீ* - வித்யா சம்பன்ன நாயகி . ஞான காரிணி. ஞானஸ்வரூபி தான் சரஸ்வதி. கலைக்கடவுள்.
*705* *ஶாஸ்த்ரமயீ* -
சகல ஸாஸ்த்ரங்களாக காண்பவள். புரிபடாத மாயாரூபிணியாக ஆள்பவள். சாந்தோக்ய உபநிஷத் (III.14.1) என்ன சொல்கிறது: ''சர்வம் கல்விதம் ப்ரஹ்ம '' அதாவது ''என்ன சந்தேகம், எல்லாமே ப்ரஹ்மம் தானே ''👌👌👌
காணும் யாவையும் அவள் அடிமையாக கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள் அம்பாள்.
மாயையை தன்னுள் அடக்கி, செயல்படுத்துபவள் ஸ்ரீ லலிதை.
ஸ்ரீ தேவி மஹாத்ம்யத்தில் 1.55 ஒரு ஸ்லோகத்தில் '' *மஹா மாயா,..... ஞானிநாமபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா ..''* என்று வரும்.
மகா மாயையாக தோற்றமளித்து ஸ்ரீ பகவதி தேவி, ஞானிகளின் மனதையும் ஆட்டுவிப்பவள்..''🍇🍇🍇
அதிக தேன் உண்டு பூவில் மாட்டிக்கொள்ளும் வண்டுகள்
காணும் ஒளியில் விழுந்து மாட்டிக்கொள்ளும் விட்டில் பூச்சிகள்
உடல் வேட்கை அதிகம் கொண்டு குழியில் மாட்டிக்கொள்ளும் ஆண் களிறுகள் ..
அபஸ்வர ஒலி கேட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் அசரமா எனும் பறவைகள்
அம்மா ஏதோ ஒன்றில் தான் மாட்டிக்கொள்ளும் இவை அனைத்தும் ..
உனை வேண்டாதவன் எல்லாவற்றிலும் மாற்றிக்கொள்வானே ...
நானும் வேண்டாதவன் ..
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாதருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும்
பரிசொன்றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.🙏🙏🙏
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
♦️மனம் எந்த விசயத்தையாவது நினைத்து குழப்பமாக
இருந்தால் வீட்டில் இருக்காமல்
வெளியில் நமக்கு பிடித்த இடத்துக்கு
செல்லலாம் அல்லது இயற்கை சூழல் நிறைந்த இடத்திற்கு சென்று வாருங்கள்.
♦️இதன் மூலம் மனம்
தெளிவடையும், குழப்ப
விசயத்துக்கான தீர்வையும் மனம் சொல்லும்.
♦️என்னால் முடியும்!
என்னால் முடியும்! இந்தத்
தாரக மந்திரத்தைக் கண்ணாடி முன் நின்று கொண்டு மனம் தோல்வியால் துவண்டிருக்கும் போது உங்களுக்கு நீங்களே சொல்லிப் பாருங்கள்.
♦️அது உங்கள் மனதில் ஆழமான
தன்னம்பிக்கையையும், நேர்மறை
எண்ணங்களையும் விதைக்கும்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
In 1904, a young couple in Mughalsarai was blessed with a son.
As a child, he would go to the Ganges with his mother.
One day the child got separated from his mother & was picked up by a cowherd.
An FIR was filed and the boy was traced.
The cowherd reluctantly returned the boy who was reunited with his mother.
The boy grew up and went to school. As he didn't have enough money to take the ferry and reach his school, he tied his books on his head and swam the course twice a day.
As years rolled by, the boy grew to be a young man of marriageable age.
No cars or costly gifts those days. All he asked was a khadi cloth and a spinning wheel as dowry.
Deeply influenced by Swami Vivekananda, he rose to become India’s PM in 1964.
In 1965, When Pakistan attacked India , he appealed for contributions and womenfolk parted with their jewels and mangalsutra to raise money for our brave soldiers.
He was a leader who moved the nation like none else.
*Yes, He was Lal Bahadur Shastri.*
You cannot strengthen the weak by weakening the strong.
👍👍👍
She who is without doubts
She who kills all doubts
She who is without origin
She who destroys the sorrow of samsara (the cycle of birth and death)
She who is free of false imaginings
She who is not disturbed by anything
She who is beyond all sense of difference
She who removes from her devotees all sense of differences born of vasanas
She who is imperishable ॥ 180 ॥🍇🍇🍇
*பாடல் 12*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
கண்ணியது உன்புகழ்
கற்பது உன் நாமம்
கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்;
பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து;
நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே
புவி ஏழையும் பூத்தவளே.
உலகங்கள் ஏழையும் பெற்ற தாயே!
நான் அல்லும் பகலும் கருதுவதெல்லாம் உன் புகழ்;
கற்பதெல்லாம் உன் திருநாமம்.
எந்நேரமும் உள்ளமுருகப் பிரார்த்திப்பது உன் இரு திருவடித் தாமரைகளைத் தான்.
நான் கலந்து கொண்டு உன்னை வணங்குவதெல்லாம், உன்னை மெய்யாக விரும்பித் தொழும் அடியவர்களின் கூட்டத்தில்தான்.
இவ்வளவுக்கும் கார ணமாக நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியம்தான் ஏதோ அறியேன்.👏👏👏
கண்ணியது என்றால் சிந்தனை செய்வது , நினைப்பது ...
ஒரு ஏழை வெகு தூரத்தில் இருக்கும் ஒரு செல்வந்தரை பார்க்க கிளம்புகிறார் ..
கால்கள் தூரத்தை அளக்கவில்லை ..
காடு மலை பள்ளம் கடந்து பல ஊர்கள் கடந்து பல வீதிகள் கடந்து அந்த செல்வந்தர் வசிக்கும் வீட்டின் அருகில் வந்து விட்டார் ...
ஒரு திண்ணையில் அமர்ந்து கொஞ்சமாக ஓய்வு எடுத்துக்கொள்கிறார் ...
அப்பொழுதுதான் அவருக்கு புரிகிறது
வெகு தூரம் வந்து விட்டோம் என்று ...
அங்கே அவர் மனதில் இருந்த ஒரே உருவம் பார்க்க வேண்டிய செல்வந்தர் தான் ...
இங்கே இதே போல் பட்டர் மனதில் கடந்து வந்த வாழ்க்கை, பாதை மறந்து போனது மனதில் , சிந்தையில் நிறைந்து இருப்பவள் அம்பாள் அபிராமி ...
அம்மா உன்னையே எப்பொழுதும் என் சிந்தையில் நிரப்பி உள்ளேன் ...
வேறு எண்ணங்கள் முக்கியம் இல்லை ... இதுதான் சரணாகதி ,பக்தி , உண்மை அன்பு . 👍👍👍
அம்பிகைக்கு என்று ஒரு பெயரும் இல்லை ..
நாமாக பெயர் வைத்து அழைக்கிறோம் .
நம் பக்தியை பார்த்து விட்டு அந்த நாமத்துக்குள் வந்து உறைந்து விடுகிறாள் ..
ஏன் கற்பது என்று சொல்கிறார் ...
சொல்வது என்றல்லவா இருக்க வேண்டும் ?
அவள் ஒரு நாமம் 1000 புதுப்புது அர்த்தங்கள் தருபவை .
இதே அபிராமி அந்தாதியை இன்னொரு தடவை எழுதினால் வேறு புதிய கோணத்தில் புதிய அரத்தங்களுடன் எழுதலாம் .
அவள் புத்தம் புதியவளா வந்து அமர்ந்து கேட்ப்பாள் ..
அவள் நாமம் கற்றுக்கொடுப்பவை ஏராளம் ...
இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்கிறார் ...
அகஸ்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் 1000 நாமங்கள் த்ருப்தி கொடுக்க வில்லை
மேலும் நாமங்களை சொல்லுங்கள் என்று ஹயக்ரீவரிடம் மன்றாடவே இன்னும் 300 நாமங்கள் பிறக்கின்றன ....
நாம் கற்பது அவள் நாமமாக என்றும் இருக்கட்டும் . 👍👍👍
*கசிந்து பத்தி*
*பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்;*
அவளை அவ்வளவு சீக்கிரம் நம் வசம் செய்ய முடியாது ...
70 பாடல்கள் ... கீழே உயிரை குடிக்கப்போகும் நெருப்பு ..
ஒவ்வொரு கட்டாக காவலர்கள் கீழே வீழ்த்துகிறார்கள் ..
எல்லோருக்கும் ஒரு படபடப்பு ...
அம்பாள் வருவாளா மாட்டாளா என்று ..
வானம் இன்னும் இருளாகவே இருக்கிறது ...
மதி வருமா ?
இவர் கதி முடியும் என்றால் அவள் செய்யும் சதியோ .. அவள் பதி கருணையின் இருப்பிடம் அன்றோ ..
நதி கொண்டவன் அவளை அனுப்பானோ ... ?
*எப்படி அவருக்கு அபிராமி கை விட மாட்டாள் என்ற நம்பிக்கை வந்தது .. ?*
ஒரு காற்று நிரம்பிய tube ஐ ஒரு ஊசியால் குத்தினால் காற்று சீறிக்கொண்டு வரும் ...
அதே மாதிரி அவர் உள்ளத்தில் அபிராமி காற்றைப்போல் நிரம்பி இருக்கிறாள் ..
எங்கு குத்தினாலும் அவர் வாயிலிருந்து குதிக்கும் சொல் அபிராமி ..
அவர் பற்றியது அன்னையின் பாதார விந்தங்கள் ..
இனி யாருக்கு அவர் பயப்பட வேண்டும் .??
எமனுக்கு பாசக்கயிறு வீச துணிவு இருக்கிறதா ??
இது தான் பக்தி
சந்தேகப்பட்டு அவசர அவசரமாய் அவள் நாமங்கள் சொல்வதல்ல பக்தி ...
மனதில் உறுதி வேண்டும் வாக்கில் உண்மை வேண்டும் பக்தியில் பணிவு வேண்டும் ... கண்ணெதிரே தெரிவாள் அபிராமி 💐💐💐
*நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து* ;
அம்மா உன்னையே அணு அணுவாய் ரசித்து க்கொண்டிருக்கிறேன் எப்படித் தெரியுமா ?
உன்னை நினைக்கும் அடியார்கள் கூட்டத்தில் இருக்கிறேன்
உன் புகழ் பாடும் இடங்களில் இருக்கிறேன் .
உன் பெருமை சொல்லும் அடியார்கள் எல்லோரும் என் நண்பர்களே ..
இப்படிப்பட்ட ஒரு ஆரோக்கியமான ஸத்சங்கம் என்னை உன்னைப்பற்றியே நினைக்க வைக்கின்றது தாயே !!👏👏👏
*புண்ணியம் ஏது என் அம்மே*
அம்மா கண்டிப்பாக எனக்குத் தெரியும் ...
இந்த ஜென்மத்தில் எனக்குத் தெரிந்து எந்த நல்ல காரியங்களையும் நான் செய்யவில்லை ...
என்றோ உழைக்கின்றோம் ஒரு நாள் retire ஆகின்றோம் ..
pension கிடைக்கின்றது ... வேலை ஏதும் செய்யாமல் பணம் கிடைக்கின்றது ...
உழைப்பு நன்றாக இருந்திருந்தால் pension தொகையும் அதிகமாக கிடைக்கும் ...
அது போல் ஏதோ ஒரு பிறவியில் கொஞ்சமாக உனை நினைத்துள்ளேன் அதன் பலன் இன்று உன்னையே நினைக்க வைக்கின்றது அதனால் எனக்கு இவ்வளவு நல்லவை நடக்கின்றனவோ ...
அம்மா நீ தான் எனக்கு விளக்கம் சொல்ல வேண்டும் ..
என்ன புண்ணியம் நான் செய்துள்ளேன் உன் புகழ் பாட உன்னையே நினைத்திருக்க உன் பாதங்கள் என் சிந்தையிலும் சிரசிலும் பதிந்திருக்க ?? 💐💐💐
ஏன் புவியை பூத்தவள் என்று சொல்கிறார் ?
அவள் மென்மையானவள் .. பூமியை அவள் படைக்க வில்லை பூபோல் மலர வைத்துள்ளாள் ..
பூமி மட்டுமா ஏழு உலகங்கள் அண்ட சராசரங்களை மலர வைத்தவள் மலர வைப்பவள் அவள் ..
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்;
*12வது பாடல் சில வரிகள் மட்டும்*
கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம்
கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்;
பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து;
*சுருக்கமாக அவளே என் சிந்தனை, மூச்சு , உயிர் உடம்பு ..எல்லாம்*👌👌👌
*அன்பின் வணக்கம்.*
10 நிமிடம் வீட்டைப் பேணும் மனைவி, மற்றும் பிள்ளைகள் முன் உட்காருங்கள்...
👇
*வாழ்க்கை எவ்வளவு அர்த்தங்கள் நிறைந்தது என்பதை உணர்வீர்கள்.*
10 நிமிடம் சாதுக்கள் மற்றும் சந்நியாசி முன் உட்காருங்கள்...
👇
*கையில் உள்ளவற்றையெல்லாம் தர்மகாரியங்களுக்கு தானம் செய்யணும் போல உணர்வீர்கள்.*
10 நிமிடம் ஒரு தலைவர் முன் உட்காருங்கள்...
👇
*உங்கள் எல்லா படிப்பும் பயனற்றது என்பதை உணர்வீர்கள்.*
10 நிமிடம் வியாபாரிகள் முன் உட்காருங்கள்...
👇
*நீங்கள் சம்பாதிப்பது எப்படி என்பதை உணர்வீர்கள்*
10 நிமிடம் விஞ்ஞானிகள் முன் உட்காருங்கள்...
👇
*நீங்கள் எவ்வளவு அறியாமையில் உள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.*
10 நிமிடம் நல்ல ஆசிரியர்கள் முன் உட்காருங்கள்...
👇
*நீங்கள் மீண்டும் மாணவனாக வேண்டும் என்ற ஆசை வருவதை உணர்வீர்கள்.*
👇
*நீங்கள் இதுவரை கடினமாக உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்.*
10 நிமிடம் ஒரு காவலரின் முன் உட்காருங்கள்...
👇
*உங்களுடைய சேவைகளும் தியாகங்களும் மிகக் குறைவானது என்பதை உணர்வீர்கள்.*
👉 *10 நிமிடம் நல்ல நண்பன் முன் உட்காருங்கள்,...*
👇
*உங்கள் வாழ்க்கையே சொர்க்கமாக உணர்வீர்கள்.*
எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமல்ல...
👇
*யாருடன் இருக்கிறோம் என்பது முக்கியம்.*
👌👌👌👍🙏👍👌👌👌
*வெற்றி நிச்சயம்.*
*இனிய காலை வணக்கம்.*
👌👌👌👍🙋♂️👍👌👌👌
மாரியவளை மறவேனே
மாறி மாறி துன்பமது துளைத்தாலும்
மாரி மாரியென மனம் கொள்வேனே
துயரம் எனை தரித்தாலும்
மாரியினை
தரிசிப்பேனே
ஊழ்வினையில் ஊறித் திளைத்தாலும்
மாரியின் மகிமையில் திளைப்பேனே
என் வாழ்வை பசுமையாக்கும்
பச்சிலைக்காரி
என் தாழ்வை போக்கும்
பச்சை சிலைக்காரி
ஏழுமலையான்
வாரியின்
தங்கை மாரியவள்
என்னை வளர்க்க தாயாக மாறியவள்
என் வெட்கை போக்கும்
வேப்பிலைக்காரியவள்
என் அருள் வேட்கை போக்கும்
அருள்காரியவள்
மாரியவள் மாண்பை
மும்மாரி போல் வாரி வாரி தந்து
என் வாழ்க்கை எனும் வரிக்கு அர்த்தம் தந்துவிட்டீர்
நன்றி
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
அவை சரமாரியாக அரக்கர்கள் மீது விழுந்து பேரழிவை ஏற்படுத்தின. எங்கு பார்த்தாலும் குருதியாறு பெருக்கெடுத்து ஓடியது.
அரக்கர் சேனையும் இலக்குவனைச் சூழ்ந்து கொண்டு திருப்பித் தாக்கத் தொடங்கியது.
இவன் நம் அரசன் இராவணனை நெருங்கி விடக்கூடாது என்று உறுதிகொண்டு போராடினர்.
அரக்கர்கள் பெய்த அம்பு மழையை எதிர்த்துத் தன் அம்பு மழையால் அவற்றை அறுத்துத் தள்ளினான் இலக்குவன்.
அதையும் மீறி வந்து தாக்கிய அம்புகளைத் தன் உடலில் தாங்கிக் கொண்டான்.
சண்டமாருதம் போல இலக்குவன் வில்லினின்றும் புறப்பட்ட அம்புகள் அரக்கர்களை அழித்து ஒழிக்கவும், இராவணன் கடும் கோபத்துடன் தன் தேரை விரைந்து செலுத்தி இலக்குவன் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான்.
எமனைப் போல வெறி கொண்டு அரக்கர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த இலக்குவன் இடம் பெயறாது கடும் சினத்துடன் நின்றான்.
இராவணன் தனக்கு முன்னால் கொண்டு வந்து தேரை நிறுத்தியதைக் கண்டதும் இலக்குவன் கோபம் அதிகமாகியது.☝️☝️☝️
ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
*பதிவு 962*🥇🥇🥇🏆🏆🏆
*US 954*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
39 வது ஸ்தபகம்
*ஏகோநசத் வாரிம்ஸ ஸ்தபக*
ப்ராயோ வ்யோ மஸரீரா( இந்த் ரவஜ்ரா வ்ருத்தம் )
🦚🦚🦚🥇🥇🥇
பாஸாம் விநேத்ரா மஹதா க்ரஹை ஸ்ச
பூரி ப்ரமாணைர் யுதமீ ஸகாந்தே
ஏகை கமண்டம் தவ லோமவச் சேத்
கஸ்தே மஹ த் பாக்ய மிஹ ப்ரவீது 👏👏👏
*பதிவு 381*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
54
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
நீலோத் பலேன மதுபேன ச த்ருஷ்டிபாத
காமாக்ஷி துல்ய இதி தே கதமா மனந்தி
சைத் யே ன நிந்ததி யதன் வஹமிந்து பாதான்
பாதோ ரு ஹே ண யதஸௌ கலகாயதே ச 🙏🙏🙏