ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பதிவு 3 பாடல் 1

ரமணரின்

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 3


1 –
அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணசலா! (அ)


அருணாசலம் - இது ஒரு மலை அல்ல -- சிவமே   அமர்ந்திருக்கும் ஒரு இடம்
நினைத்த மாத்திரத்தில்   முக்தி கிடைக்கும் ---

சிவந்து நெருப்பாக இருந்த ஒரு மலை தன் உக்கிரகத்தை குறைத்துக்கொண்டு   கருணை மலையாக மாறியது .... 

அதை மாற்றியவர் நம் ரமணர் ஒருவர் ரமணரை தேடி திருவண்ணாமலைக்கு சென்றார் - 

அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சித்தர்   போல் ஒருவர் அமர்ந்திருந்தார் - 
அவரிடம் கேட்டார் --- ரமணர் எங்கே இருக்கிறார்? 

அந்த சித்தர் கேட்டார் - 

" ஓ அந்த கொலைகாரனைத் தேடுகிறாயா?   அசந்துபோய் விட்டார் அந்த வழிப்போக்கர் - 

உலகமே வணங்கும் ஒரு பெரிய பகவானை இவர் போய் கொலைகாரன் என்கிறாரே --- இவருக்கு என்ன பயித்தியமா? " என்று நினைத்தார் - 

பிறகுதான் அவருக்கு விளங்கியது -- 
ரமணர், தான் என்று வரும் குணத்தை உடையவர்களின் மமதையை கொல்கிறார் - 

அதனால் அந்த சித்தர் அவரை கொலைகாரன் என்று சொல்வதில் வியப்பு என்ன இருக்கிறது?

ரமணர் இந்த பெருமையை அருணாசலத்திற்கே தந்து விடுகிறார் தன் முதல் பாடலில் 

உள்ளத்தில் ‘அருணாசலம்’ என உன்னை நினைத்தவர்கள் யாரானாலும், 

அவர்களுடைய அகத்தில் இருக்கும் கர்வத்தை வேரோடு அறுத்து விடுவாய் அருணாசலா!  🙏

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52