ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 5
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1
பதிவு 7 பாடல் 5
5 –
இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாசலா! (அ)
இறைவா, இப்படி ஒரு பக்தனை நீ கைவிட்டாய் என்ற பழியிலிருந்து தப்பித்துக்கொள், என்னை நிரந்தரமாக உன்னுடன் சேர்த்துக்கொள்’ என்று கோரும் ரமணர்,
இனிமேல் நீ என்னை விட்டாலும், நான்
உன்னை விடுவதாக இல்லை’ என்கிறார்.
இவன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறானே என்று நினைக்காதே, எல்லா வற்றுக்கும் காரணம் நீதான், நான் உன்னை நினைக்குமாறு செய்தவன் நீதானே?
இதையேத் தான் மாணிக்க வாசகர் ... உன்னை சிக்கென (கெட்டியாக / உறுதியாக) பிடித்து கொண்டு விட்டேன் ... எனக்கு உன்னை விட்டால் யார் கதி? இனி என்னை விட்டு உன்னால் எங்கும் போக முடியாது ஈசனே என்கிறார் ...
ரமணர் போன்றவர்களின் பக்தியில் பூர்ண சரணாகதி இருந்தது .. உரிமை இருந்தது ... அதிகாரம் இருந்தது ... நானே நீ, நீயே நான் என்று ஆகி விடும் போது அங்கே பயமோ, பணிவோ தேவை இல்லை ... உயர்ந்த பக்தி ஒன்றே வேண்டும்.

Comments