ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 6

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 8 பாடல் 6

6 –
ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா! (அ)


ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா!

ரமணர் ஏன் அருணாசலர் மீது இத்துணைப் பிரியத்துடன் இருக்கவேண்டும்?

ஒரே காரணம்தான், அவன் தாயைவிடப் பெரிய அருள்புரிகிறானே, வேறென்ன வேண்டும்?

பிரசவ வேதனையில் ஒரு பெண் துடித்து க்கொண்டிருக்கும் வேளையில் தன் தாய் அருகில் இல்லையே என்ற மனவருத்தம் காவிரியில் வெள்ளமாக பொங்கிக்கொண்டு வந்தது அந்த பெண்ணிற்கு ... 

அம்மா என்று ஒருத்தி அருகில் இருக்க வேண்டும் அந்த தருணத்தில் என்று எல்லா பெண்களுக்கும் ஆசை இருக்கும் ...

பிரசவ வேதனை ஒன்றுமே இல்லை என்று ஆகி விடும் ஒரு அன்னை அருகில் இருக்கும்போது என்று உணர்வாள் எந்த பெண்ணும் ...

அம்மா அம்மா எங்கே அம்மா இருக்கே ....
நீ சுமந்தாய் என்னை சிசுவாக
சிசுவிற்கு ஒரு சிசு வரும் நேரம் அம்மா ....
நீ இல்லை என்ற சோகம் என் சிசுவிற்கு புரிந்தால் வெளி வர மாட்டான் அம்மா ...

கொடும் பாட்டித்தனை கண்ணால் பார்க்கேன் என்றே என் வயிறு தனை உதைப்பான் அம்மா ....

என் பிறவிக்கு தவம் இருந்தவளே,
பிறப்பிற்கு பிறப்பு வர அருகில் வாராயோ ....
சிதறித் தெளிக்கும் என் ரத்தம் வந்ததோ உன் முத்தங்களால்,
முத்தம் தனை முத்து முத்தாய் தந்திடுவாய் என் சிசுவிற்கு ....
தாய் நீ இல்லை என்றால் வேண்டாம் ஒரு தாய் என் சிசுவிற்கும் ....

ஓடி வந்தான் உமையிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் அந்த ஈசன் ஒரு தாயாக .... சேய் வந்து சேர்ந்தது வாடாத பூவாக ....

இதைத்தான் சொல்கிறார் ரமணர் ... அம்மாவாக ஒடிவரும் என் அப்பனே என்கிறார் ரமணர் ....

என் தாய் என்னை பெற்றவள் ... இந்த உடம்பு அவள் தந்தது .... அழிந்து போகும் ஒரு நாள் .... நீயோ எனக்கு ஆத்மாவை தந்தவன் ...அழியாது நீயே நினைத்தாலும் ...என்கிறார் ...

தாயினும் சிறந்தவன் அந்த அருணாசலேஸ்வரர்....

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52