கோதை சொன்ன கீதை 10
கோதை சொன்ன கீதை 10
கோதை கேட்டாள் ... அப்பா என்ன நடந்தது ஆலயத்தில் ? ஏன் உங்கள் உடம்பு இப்படி கொதிக்கிறது ? நடுக்கம் இன்னும் நிற்க வில்லையே ....

அம்மா ... நீ தெய்வம் தாயே .. உன்னை சுட்ட வார்த்தைகள் திரும்பி வந்து என்னை தாக்குகிறது அம்மா ... என் சொற்களால் உன் உடம்பு நடுங்கியது ...
அந்த சொற்கள் திரும்பி வந்து எனக்கு நடுக்கத்தை தருகிறது தாயே ... என் வினை என்னை சுடுகிறது ...
எவ்வளவு பாசுரங்கள் பாடியுள்ளேன் ... ஆனால் பக்தியில் முதிர்ச்சி வரவில்லையம்மா ...
என் பக்தியே உயர்ந்தது என்று சொல்லிக்கொண்டே ஒரு பூ நாகம் உள்ளே என் மனதில் நுழைவதை பார்க்க வில்லை தாயே ...
நீ புரிந்து கொண்ட அளவிற்கு கண்ணனை நான் புரிந்து கொள்ளாத பாவியாகி விட்டேன் ...
நான் உன் தந்தை என்று சொல்வதை விட நீ என் தாய் என்று சொன்னால் தான் புண்ணியம் ...
அப்பா ... ஒன்றுமே புரியவில்லை .. முதலில் கதருவதை நிறுத்துங்கள் ... வெளியே எல்லோரும் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
அம்மா .. புதிய மாலையுடன் கோயிலுக்குள் சென்றேன் ... அங்கே கனல் வீசும் கண்களுடன் கண்ணன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் ...
"வாருங்கள் விஷ்ணு சித்தரே ..." அவன் குரலில் கிண்டலும் கேலியும் நிறைந்திருந்தது ...
முதலில் அவனை குளிப்பாட்ட நம் லட்சுமி கொடுத்த பாலை வைத்தேன் ...
வைத்த நொடியில் பால் திரிந்து போனது அம்மா ...
லட்சுமியின் பால் என்றுமே கெட்டு போனதில்லையே ....
அவன் வைத்திருந்த குழல் கீழே விழுந்து சுக்கு நூறாக ஒடிந்து போனது தாயே ...
அவனுக்கு வைத்திருந்த மங்கலாசனம் சிவந்து போனதம்மா ....
அவன் அணிந்திருந்த வயிரங்கள் கீழே சிதறிக்கொண்டிருந்தன...
மயில் பீலிகள் தங்களை கிழித்துக்கொண்டிருந்தன ...
அர்ச்சகர் வாங்கி சென்றார் நான் தொடுத்த மாலை அதை ...
அரச்சுனன் தொடுத்த கனைகள் போல் பூக்கள் சிதறி மாலை அது மறைந்து போனதம்மா ....
தேடுவது உன் மாலை என்று உணராமல் என் பூமாலை போரிட்டு வீர மரணம் அடைந்தம்மா ...

அம்மா உன் மாலை அதை கொண்டு வா ... ஓடுவோம் அவன் சன்னதிக்கு ... உத்தமி உன்னை பார்க்கவே உயிருடன் ஓடி வந்தேன் ...
அப்பா நீங்கள் சென்ற பிறகு நான் அந்த மாலையை தூக்கி குப்பைத்தொட்டி தனில் போட போகும் போது நீங்கள் திரும்பி வரும் சப்தம் கேட்டது ... இதோ கண்ணன் விரும்பும் மாலை ...
அப்பாடா நீ மாலையை தூக்கி எறிய வில்லை ... அதை அணிந்து கொண்டே வா ... என் மகள் யாரென்று உலகம் பார்க்கட்டும் ... கோதையை பெற்ற சந்தோஷம் , பெருமிதம் , கர்வம் மீண்டும் ஓடி வந்து அவர் முகத்தில் குடி கொண்டது ....

Comments