கோதை சொன்ன கீதை 12
கோதை சொன்ன கீதை 12
அர்ச்சகர் கை நடுங்க கோதையிடம் இருந்து மாலையை பயபக்தியுடன் வாங்கிக்கொண்டார் ...
விஷ்ணு சித்தர் மனம் பரிதவிக்க கண்ணனையும் கோதையையுமே பார்த்துக்கொண்டு நின்றார் ..
கண்ணன் வரும் வாயில் வெறும் காற்று தான் வந்தது ...
கோதை கண்ணா, மணி வண்ணா உனை சேரும் நாள் வந்து விட்டது ... என்னையும் ஏற்றுக்கொண்டாயே பரந்தாமா என்று குளமான கண்களில் கண்ணனுடன் நீந்திக்கொண்டிருந்தாள் ...
கண்ணனின் கழுத்தில் அணிவித்தார் கோதை சூடித்தந்த மாலை தனை .. 11 ஆழ்வார்கள் பாடிய மங்கலாசனம் கோதையுடன் சேர்ந்து அங்கே கோயில் மணி போல் ஒலித்தது ....
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே.
கண்ணன் மார்பில் கோதை தவழ்ந்தாள்.. பார்ப்போர் பரவசம் கொண்டனர் ...
உடைந்து போன புல்லாங்குழல் ஒன்று சேர்ந்து கண்ணனின் கீதத்தை கோயில் முழுதும் பரப்பிக்கொண்டிருந்தன ....
கீழே விழுந்த வயிரங்கள் ஒன்று சேர்ந்து கோதையின் மாலையில் போய் வரிசையாக அமர்ந்து கொண்டன ...
நரசிம்மர் ஓடிவந்து கண்ணனிடம் தற்காலிகமாக தங்கி இருந்த கோபத்தை வாங்கிக்கொண்டார்...
ஈசன் ஓடி வந்து தன் கொவ்வை செவ்வாயில் குமிழ்ந்திருந்த புன்னகையை கண்ணன் உதடுகளில் தவழ விட்டான் ...
சிதறிக் கிடந்த மயில் பீலிகள் ஒன்று சேர்ந்து அங்கே கண்ணனுக்கு தோகை விரித்தன ...
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே
அம்மா கோதை இன்று நீ என்னை பெற்றெடுத்தாய் தாயே ...என் பக்தி உன் கால் தூசிக்கு சமமாகாது ... என்னெவெல்லாம் சொல்லி உன்னை திட்டி விட்டேன் ... இந்த கரி நாக்கு எனக்கு வேண்டாம் தாயே ...
அப்பா இது அந்த கண்ணன் நமக்கு வைத்த சோதனை அப்பா .. அந்த மாயக்கண்ணனின் ஒரு விளையாட்டு ...
அதோ பாருங்கள் ஒன்றுமே செய்யாத மாதிரி நமுட்டு சிரிப்பு சிரிப்பதை ...
என்னை திட்ட கண்ணனை விட உங்களுக்குத் தானப்பா அதிக உரிமை உண்டு ...

அதுவரை தன் உதடுகளில் பதிருந்த முத்துக்களை கொஞ்சம் வார்த்தைகளாக அங்கே சிதற விட்டான் ....
விஷ்ணு சித்தரே .. கோதை எனக்காக பிறந்தவள் ... என் தாய் யசோதை கூட கண்ணா கண்ணா என்று இவ்வளவு தடவைகள் என்னை கூப்பிடுவதில்லை ... கோதை என்னையும் என் ஆயற்பாடியையும் விட்டு வெளி வரவேயில்லை ... வரும் வெள்ளி அன்று அவளை மணமகளாக அலங்கரித்து திருவரங்கம் அழைத்து வாருங்கள் ... அவளை நான் அங்கு ஏற்றுக்கொள்கிறேன் ...
கண்களையும் காதுகளையும் மட்டுமே நம்புபவர் அன்று அந்த இரண்டையும் நம்பாமல் உதடுகள் தானாக சொல்லும் கோவிந்தா என்ற திருநாமத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தார் ...
வெள்ளி முளைத்தது ... வேதங்கள் ரத்ன கம்பளங்களாயின ... தேவர்கள் திருமண ஏற்பாடுகளை மொத்தமாக குத்திகை எடுத்துக்கொண்டனர் ... வருணன் வீதிகளை அளம்பிக்கொண்டிருந்தான்... வாயு இதமாக கண்ணன் சொன்ன கீதையை கீதமாக ஸ்ரீரங்கத்தின் வீதிகளில் சுமந்து கொண்டு வலம் வந்தான் ... உதய சூரியன் வளராமல் அன்று முழுக்க குழந்தையாகவே இருந்து மிதமான சூட்டை தந்து கொண்டிருந்தான் ... காமதேனு எல்லோர் வீட்டு அண்டாக்களிலும் கோதையின் உள்ளம் போல் வெண்மையான பாலை தந்து கொண்டிருந்தாள் ... எங்கும் ஆனந்தம் , ஆர்ப்பாட்டம் ...
"பார்த்தாயடி கோமளம் ... கண்ணன் இன்று யாரோ கோதையாம் ... திருவல்லிப்புத்தூராம் ... விஷ்ணு சித்தரின் வளர்ப்பு மகளாம் ...
அவளை மணக்கப்போகிறானம் ...
ஏன் அவன் என் மகள் மஞ்சுவை மணக்கக்கூடாதா?... என்ன அழகில்லை என் மகளுக்கு ?
அடிப்போடி பைத்தியம் ... என் பெண் மட்டும் மட்டமா என்ன ?
இந்த கண்ணன் நயவஞ்சகன் ... ஸ்ரீரங்கத்தில் இல்லாத பெண்களா என்ன ?
திருவில்லிப்புத்தூர் தானா போக வேண்டும் ??
ஒரு பெரியவள் தடுத்தாள் ... அடியே வாய்களை வைத்துக்கொண்டு சும்மா இருங்கள் ... கோதையிடம் அழகு மட்டுமல்ல , பக்தி , சரணாகதி , பாசம் எல்லாம் இருக்கின்றது ... கண்ணனை சிக்கென பிடித்துக்கொண்டாள் ... பாவம் கண்ணன் இனி எங்கு எழுந்தருள்வான் ?

கண்ணன் எல்லோர் முன்பு வேதங்கள் கீதம் பாட , மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கோதையின்
கைத்தலம் பற்றக் அங்கே எல்லோரும் நிஜத்தை கண்டார்கள் ....
ஜோதியாய் வந்தவள் கீதமாய் கண்ணன் மார்பில் உறைந்து போனாள் ....
விஷ்ணு சித்தர் மகளை காணாமல் கதருகிறார் ....
கண்ணா கோதையை ஏற்றுக்கொண்டு விட்டாயா ... நான் அவளை காணாமல் எப்படி உயிர் வாழ்வேன் ... எனக்கு தாயாக இருந்தவள் .... குருவாக வந்தவள் ... அவள் சொன்ன ஒரே கீதை கண்ணா என்ற நாமம் தானே ...
அதற்குள் எத்தனை அர்த்தங்கள் ....
கண்ணா கண்ணா என் மகளை என்னிடமிருந்து பிரிக்காதே ... என்னையும் ஏற்றுக்கொள் ...
கண்ணன் சொன்னான் ... விஷ்ணு சித்தரே ... நீங்கள் ஆழ்வார்களுக்குள் பெரியவர் ..
எனக்கே பல்லாண்டு பாடியவர் ...
சாதாரண மனிதனைப்போல் புலம்பலாமா ?
எனக்குள் கோதை இருக்கிறாள் ... அவளுக்குள் தாங்கள் இருக்கிறீர்கள் ... தங்களுக்குள் நான் இருக்கிறேன் ...
இது பக்தியினால் பின்னப்பட்ட சிலந்தி வலை அல்லவா...
யார் யாரை பிரிக்க முடியும் ? என்னுள் வரும் நாள் எல்லோருக்கும் ஒரு நாள் வரும் ...
கண்ணா என்றே சொல்லுங்கள் ... கலக்கம் வேண்டாம் ...
வெறும் கண் துடைப்பாய் வர மாட்டேன் ... காவலனாக , சேவகனாக ஓடி வருவேன் ... காத்திருங்கள் காலம் கணியும் ....
மறைந்தான் மாயக்கண்ணன் ... மாறியது திருவல்லிப்புத்தூர் ஒரு பூலோக வைகுண்டமாக ....

Comments