கோதை சொன்ன கீதை 5


கோதை சொன்ன கீதை 5 





சொல்லலாம் போதேஉன் நாமம்எல்லாம்

சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்

அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!



கோதை கனவிலும் கண்ணனை தேடினாள் ... நினைவிலும் அவனைத் தேடினாள் ... 



கண்ணா உனை காணாமல் போவேனோ ... 



உனக்கு அற்பணிக்காத இந்த அழகு எனக்கு எதற்கு கண்ணா .... ?



கேள்விகள் கண்ணீரை வீடெங்கும் தெளித்து கோலம் போட்டன ... 



மலர்கள் மாலைகளாகி கண்ணன் அவனை கட்டிப்போட்டன ... 



தெருவில் யார் சென்றாலும் அது கண்ணனாக இருக்குமோ என்று ஓடி வந்து பார்ப்பாள் ... 



பார்ப்பவருக்கு பேதையானாள் இந்த கோதை ... 



பித்தா பிறை சூடி என்று சுந்தரர் பாடியதைப்போல் வரதா மறை சூடி என்று பாடினாள் ... 



கண்ணன் வளர்ந்தது , மதுரா , துவாரகா வந்தது , மகா பாரதம் போரிட்டது எதுவுமே அவள் மனதில் அமர வில்லை ... 



அவளுக்கு தெரிந்தது , புரிந்தது , அறிந்தது எல்லாமே ஆயர்பாடியில் ஓடி விளையாடும் யசோதயின் கண்ணன் மட்டுமே ...

அப்பா அப்பா அதோ பார் கண்ணன் அந்த நிலவில் சென்று வெண்ணெய் திருடுகிறான் ...

இதோ சூரியன் ... கண்ணன் அங்கே சென்றான் ..

சூரியன் ஏனப்பா அம்மாவாசையாகி விட்டான் ?

காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-உனை தினம் பார்க்கிறேன் அதிலே நின்றன்
கரியநிறம் தெரிகிறதே கண்ணா

பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா - எப்படி உன் பச்சைநிறந் தோன்றுகின்றது  கண்ணா ?

கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - உன் இனிய கீதம் கேட்கிறதே  கண்ணா

தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா- சுடவே இல்லை மாறாக நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதே கண்ணா

தனக்குள்ளே தான் அடங்கி என்னையும் உனக்குள் அடக்கி விட்டாயோ கண்ணா ?

கோதை பெரியவளானாள் ஆண்டாளாக கூடவே விஷ்ணு சித்தரும் பெரியாழ்வாராக ஆனார் .  

காலம் நகர்ந்தது ... கண்ணன் காத்திருந்தான் கோதை கரம் பிடிக்க ...வாரணம் ஆயிரம் அங்கே தாமரை இதழ்கள் போல் கண்ணனை பார்க்கையில் மலர்ந்தது ....


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52