கோதை சொன்ன கீதை 6
கோதை சொன்ன கீதை 6
"அம்மா ஆண்டாள் , கோதை கொஞ்சம் இங்கே வா ... இதோ இந்த மாலை அரங்கனுக்கு கட்டி வைத்துள்ளேன் ... "
"யாரும் தொடாமல் பார்த்துக்கொள்... கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் ..."
"சரி அப்பா போய் வாருங்கள் .. கண்ணனின் மாலையை என் கண்கள் போல் பார்த்துக்கொள்கிறேன் ... "
"கண்ணா இந்த பூக்கள் செய்த புண்ணியம் கூட நான் செய்யவில்லையா ?
அழகாக எல்லாம் கோபிகள் போல் ஒன்று சேர்ந்து மாலையாக உன் மேனியில் விழ போகிறதே ...
நானும் தானே என் தோழிகளை ஒன்று சேர்த்து ஒரு திருப்பாவை எனும் மாலையானேன் ...
வாரணம் ஆயிரம் கனா கண்டேன் ...
நான் எந்த வகையில் இந்த மாலையை விட தாழ்ந்து போனேன் கண்ணா ...
காலை மாலை என்று பார்க்காமல் கண்ணா உன்னையே நினைக்கிறேனே ...
உன் மார்பை அலங்கரிக்க நான் துடிக்கிறேன் ..
ஒரு பாம்பு செய்த புண்ணியம் நான் செய்ய வில்லையா ...
அதன் மேல் உறங்குகிறாயே என் மடி மீது உறங்கக்கூடாதா ?
கண்ணா உன் மேனியை தழுவும் இந்த மாலை என்னையும் கொஞ்சம் தழுவட்டும் ...
பிறகு இந்த மாலை உன்னிடம் சொல்லும் கோதை உயர்ந்தவள் சோதிக்காதே இன்னும் என்றே ....
சற்றும் யோசிக்காமல் தொடுத்த மாலையை தன் மீது தொடுத்தாள் ...
கண்ணாடியின் முன் நின்று அழகு பார்த்தாள் ...
கோதை தெரியவில்லை கண்ணாடியில் கண்ணனே தெரிந்தான் ...
கண்ணா வந்து விட்டாயா ... எவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் ... ?
இளமை கரையும் முன் இறை நீ முறையாக வந்து விட்டாய் ..
வரை இன்றி நேரம் போகட்டும் ..
கறை இல்லா கண்ணனே ... நம் காதல் ஒரு காவியமாகட்டும் ...
அள்ளிக்கொண்டான் கோதை அவளை ...
காதல் அங்கே கண்ணாமூச்சி செய்தது ...
கன்னங்கள் அங்கே உதடுகள் தங்கும் இடமாகின ...
கரங்கள் காற்றே நடுவில் நுழையாதே என்று கட்டளை போட்டுக்கொண்டிருந்தன ...
கால்கள் பின்னிக்கொண்டு நடக்க முடியாமல் தவித்தது ...
உடம்புகள் ஒன்றாய் ஆகி ஒரே உயிராய் கண்ணன் துதி பாடிக்கொண்டிருந்து ...
மயில்கள் மஞ்சமதில் தோகை நிரப்பி தொண்டு செய்து கொண்டிருந்தது ...
குயில்கள் குரல் எழுப்பாமல் மனதிற்குள் கண்ணனை புகழ்ந்து கொண்டிருந்தது ...
பறவைகள் பட்டுக்கள் கட்டிக்கொண்டு யாரும் அங்கே அத்துமீறி வராமல் இருக்க அத்தி வரதனை போல் நின்ற கோலத்தில் உதவி செய்து கொண்டிருந்தன ...
கோதையின் உதடுகள் கண்ணன் இசைக்கும் புல்லாங்குழலாகின ....
ஒரு உன்னத காதல் காவியமாகிக்கொண்டிருந்தது ...

Comments