கோதை சொன்ன கீதை 7
கோதை சொன்ன கீதை 7
கண்ணா ... இதை நான் வெறும் பூக்கள் உள்ள மாலையாய் பார்க்க வில்லை ..
நீ என் கழுத்தில் போட்ட மூன்று முடிச்சுகளாக பார்க்கிறேன் ...
கண்ணா இந்த பேதையை ஏற்றுக்கொள் ...
அப்பா வரும் சப்தம் கேட்டு மாலையை கழற்றி கூடையில் வைத்தாள் ..
கோதை அணிந்ததனால் மாலையின் எடை கொஞ்சம் கூடியது...
கண்ணே ஆண்டாள் ! அந்த மாலையை கொடும்மா ... அரங்கனுக்கு சாத்தி விட்டு வருகிறேன் ....
அப்பா இன்று நானும் உங்களுடன் வரட்டுமா ...
நாளை அழைத்து செல்கிறேன் .. மாலை சாத்தும் மாலை வந்து விட்டது ...
சரி அப்பா ... இதோ மாலை ...
எடுத்தார் மாலையை கண்ணனுக்கு மட்டுமே தெரிந்த கேசம் ஒன்று அன்று விஷ்ணு சித்தருக்கும் தெரிந்தது ...கண்களிலே ஈசன் வந்து அமர்ந்து கொண்டு தீப்பொறிகளை அனுப்பத் தொடங்கினான் ..
நரசிம்மர் அன்று தன் கோபம் அனைத்தையும் விஷ்ணு சித்தருக்கு தாரை வாத்து கொடுத்தார் ...
கோதை ... அவர் கத்தியது அண்ட சராசரமே கேட்டு நடுங்கியது...
இந்திரன் தன் இருக்கைக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று கைலாயம் ஓடினான் ...
பிரம்மா அத்துமீறி யாரோ அரக்கன் சத்திய லோகம் வந்து விடுவானோ என்று பயந்து இருக்கும் எல்லா கதவுகளையும் இழுத்து மூடினார் ..
கும்பகர்ணன் இருந்திருந்தால் ஒரே நொடியில் இந்த சப்தம் கேட்டு எழுந்து கொண்டிருந்தான்
அத்திவரதர் தண்ணியில் இருந்து உடனே வெளி வர பார்த்தார் ....

கோதே உண்மையை சொல் இந்த மாலையை நீ அணிந்து கொண்டாயா ? இங்கே இதுவரை வராத கேசம் இன்று எப்படி வந்தது ... என்ன காரியம் செய்து விட்டாய் ...
நீ என் பெண் என்று கர்வம் கொண்டிருந்தேனே இன்று என் பாசத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டாயே ... நான் எப்படி இனி தலை காட்டுவேன் .... கோதைக்கு அதிகம் செல்லம் கொடுத்து இந்த விஷ்ணு சித்தன் கெடுத்து விட்டானே என்றல்லவா பிறர் சொல்வர் ... அதை விடு ... கண்ணனுக்கு நெய்த மாலை வேறோர் கை படலாமா ?
இனி நான் உயிருடன் இருப்பதில் அர்த்தம் இல்லை ...
அப்பா . மாலையை நான் கண்ணனாக நினைத்து அணிந்து கொண்டேன் .. தவறு தானப்பா .. என் நெஞ்சில் எந்த கலங்கமும் இல்லை .. இதே மாலையை அவன் ஏற்றுக்கொள்வானப்பா ...இது சத்தியம் ... என் கண்ணன் என்னை ஏமாற்ற மாட்டான் ...
கோதை பேசாதே .. இனி நான் அப்பாவும் இல்லை நீ என் மகளும் இல்லை .. அரங்கனுக்கு வேறு புதிய மாலை தொடுத்து என் பாவங்களை தீர்த்துக்கொள்வேன் ...
அப்பா .. கோதை கோதை என்று நொடிக்கு நூறு தடவை கூப்பிடுவாயே... நான் இன்று வேண்டாதவளாக போய் விட்டேனா ...
வேண்டியவன் வருவான் என்றாய் ... வேண்டியவள் வேண்டினேன் .. வேண்டாத பொருளானேன் இன்று ...
கோதையின் கண்ணீர் அரங்கனை எழுப்பியது அங்கே ....

Comments