கோதை சொன்ன கீதை 8


கோதை சொன்ன கீதை 8




விஷ்ணு சித்தரின் கோபம் ஆதிஸேஷனாக படம் விரித்து ஆடியது .. கண்ணனும் கதி கலங்கிப்போனான்.. 


இவர் எப்படி தன் பக்தி மட்டுமே உயர்ந்தது பிறர் செய்வதில் குறை இருக்கிறது என்கிறார் ... 

பெரியாழ்வர் என்பதால் பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகித்து விட்டாரே ... 

என்னாலேயே தாங்க முடியவில்லை பாவம் என் கோதை எப்படி துடித்துப்போவாள்  ... கண்ணன் கழுத்தில் இருந்த

துளசி மாலை கம்பளிப்பூச்சிகளாய் மாறி கண்ணனை குடைந்து கொண்டிருந்தன ... 

அப்பா உங்களுடன் நானும் வருகிறேன் கோயிலுக்கு ... என் மாலையை அவன் ஏற்க வில்லை என்றால் போகட்டும் என் உயிர் அவன் காலடியில் .. 

என்னை இன்னும் அப்பா என்று கூப்பிடாதே ... அப்பாவி நான் .. அப்பன் என் கண்ணனுக்கு ஒரு பாவியாகி விட்டேன் இன்று ... 

கோதை கண்ணீர் பன்னீர் போல் அவள் அணிந்த மாலையின் மீது தெளித்தது ... கண்ணா கண்ணா என்ற வார்த்தைகள் அந்த மாலையில் கந்தம் போல் கலந்து நறுமணத்தை அள்ளி வீசியது ...


விஷ்ணு சித்தர் கோயிலுக்குள் சென்று தடால் என்று விழுந்தார் ... தரை இரண்டாக பிளந்தது ... 

கண்ணா மிகப்பெரிய தவறு எனக்கு மகள் என்று வந்தவள் செய்து விட்டாள் ... 

உனக்கு போட வேண்டிய மாலையை பேதை அவள் கோதை என்ற பெயர் கொண்டவள் போட்டுக்கொண்டு விட்டாள் .. 

நான் வளர்த்த விதத்தில் பெரிய தவறு நடந்து விட்டது ... இதோ புதிய மாலை ... 

இதை அணிந்து கொண்டு எங்கள் இருவரையும் மன்னித்து விடு கண்ணா ...

கண்ணன் தன் முகத்தில் தழுவும் மாறாத புன்னகையை வலுக்கட்டாயமாக மறைத்துக்கொண்டான் .. 

கண்கள் கோபம் அதை கொஞ்சம் நரசிம்மரிடம் இருந்து கடன் வாங்கிக்கொண்டன ..

கோயில் அர்ச்சகர் வந்து அந்த புதிய மாலையை கண்ணனுக்கு அணிவிக்க வாங்கிக்கொண்டார் ... அவருக்கு 1000w மின்சாரத்தை தொட்டத்தைப் போல் அலறினார் ... புரியவில்லை விஷ்ணு சித்தருக்கு .. புரியவைக்க கண்ணன் அங்கே ஒரு நாடகம் நடத்தினான் ... 

கோபம் என்பது பக்தியில் கலந்தால் அதிலே மிஞ்சுவது வெறும் ஏமாற்றம் தான் ... 

பிறர் பக்திக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் .... எச்சில் செய்து கொடுத்த சபரியின் பழங்களை ஒன்று விடாமல் சாப்பிட்டான் ராமன் ... 

கேசம் படிந்த மாலை தனை கேசவன் விரும்பி வாங்கிக்கொண்டான் நாளை ...



Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52