கோதை சொன்ன கீதை 9
கோதை சொன்ன கீதை 9
கதறினார் விஷ்ணு சித்தர் ... கண்ணா இந்த புதிய மாலையை ஏற்றுக்கொள் .. திட்டிவிட்டேனே தவிர கோதை என் மகள் ... குழந்தை உள்ளம் ..
சதா உன் பெயரையே சொல்லும் மகளாக வளர்த்தேன் ... அதிக செல்லம் இன்று என்னையே பழி வாங்கி விட்டது ... மன்னித்து விடு கண்ணா ...
"புதியமாலை மட்டும் என் கழுத்தில் போடு என்ன செய்கிறேன் பார் ...
என்னை ஒருவன் திட்டினால் கூட மன்னிப்பேன் .. என் பக்தனை திட்டுபவர்களை மன்னிக்கவே மாட்டேன் ... " கண்ணன் பொருமிக்கொண்டிருந்தான் அங்கே ...
புதிய மாலை அந்த காலத்து திருமணப்பெண் போல் நாணி கோணி அச்சம் , மடம் கொண்டு கண்ணனிடம் சென்றது ... கண்ணன் கழுத்தில் போட்டார் அர்ச்சகர் ...
டமால் என்று சத்தம் .. மாலை உதிர்ந்து பூக்களாக எங்கும் சிதறி விழுந்தன ...
அவ்வளவு கோபம் கண்ணனுக்கு .... சில பூக்கள் விஷ்ணு சித்தரின் முகத்தில் விழுந்து தங்கள் ஈரத்தை உமிழ்ந்தன ....
இப்படி ஒரு தெய்வ குற்றம் அந்த கோயிலில் இதுவரை நிகழ்ந்ததில்லை ... அர்ச்சகர் பலமுறை அத்திவரதரை தரிசித்தவர் ...
ஆனால் ஒரு முறை கூட விஷ்ணு சித்தரின் மாலையை கண்ணன் வேண்டாம் என்று தரையில் போட்டு கசக்கியதில்லை ...
விஷ்ணு சித்தரின் தலையில் ஆயிரம் சுத்திகள் சுத்தி வந்து அடித்தன .. கத்திகள் கத்திக்கொண்டே நெஞ்சில் பாய்ந்தன ... போர் வாள்கள் வால் வால் என்று குறைத்துக்கொண்டே வந்து மோதின ...
கண்ணா ... இவ்வளவு சொல்லியும் மன்னிக்க வில்லையா ? ஏன் புதிய மாலையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய்... இனி வாழ்வேன் என்றே நினைத்தாயோ ?
நீயே நான் வேண்டாம் என்று நினைக்கும் போது நான் மட்டும் நீ மட்டுமே வேண்டும் என்று நினைப்பது தவறன்றோ... இதோ என் உயிர் போகட்டும் உன் காலடியில் .....
விஷ்ணு சித்தரே ... நில்லுங்கள் .. ரொம்பவும் அவசரப்படுகிறீர்கள்...
அவசரத்தில் அறிவு வேலை செய்வதில்லை ... உங்கள் மகள் கோதை என்னை சேர்ந்தவள் ...
அவள் பேச்சு என் மூச்சு... நான் தான் அவளை உங்கள் மாலையை போட்டுக்கொள்ள சொன்னேன் ...
என் கழுத்தில் இருக்கும் அழகை விட அவள் போட்டுக்கொண்டதும் ஆயிரம் மடங்கு பொருத்தமாய் இருந்தது ...
அந்த மாலையை கொண்டு வந்து என் மீது சாத்துங்கள் ...
கோதை உங்கள் அன்பிற்கும் , பக்திக்கும் கிடைத்த மாபெரும் பரிசு ... பெண்களாய் பிறந்தாலே அது பெற்றவர்கள் செய்த பெரும் பலன் ... பல கோடி புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டும் தான் நான் மகள் வரம் தருவேன் ....

கண்ணா ... ஓடினார் விஷ்ணு சித்தர் ... மடால் என்று விழுந்தார் கோதையின் பாதங்களில் ...
அப்பா என்ன நடந்தது ... தாங்கள் இந்த பாவியின் கால்களில் விழலாமா ... மகளாக பிறந்து உங்களுக்கு களங்கம் செய்தேன் ...
இப்பொழுது என் பாவங்கள் ஆயிரம் மடங்கு அதிகமாக போனதே ... கங்கை யமுனை காவேரி , வைகை எங்கு போனாலும் என் பாவங்கள் அழியாதே அப்பா ....
அம்மா கோதை என்னை மன்னித்து விட்டேன் என்று ஒரு வார்த்தை சொல் தாயே ... புலம்பினார் தந்தையாக விஷ்ணு சித்தர் .... பொறுமையின் தாய் கட்டிக்கொண்டாள் விஷ்ணு சித்தரை ....

Comments