கண்ணனும் கால் தூசும் 1
கண்ணனும் கால் தூசும்
அன்று வைகுண்ட ஏகாதசி ..பரமனை தரிசிக்க பக்தர்கள் படை எடுத்தனர் .
கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்த கோடிகளும் துவாரகை நோக்கிச்செல்லும் ரோட்டில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.
துவாரகையில் நாரதன், கிருஷ்ணனின் மனைவியரான பாமா, ருக்மணி ஆகியோர் கூட்டம் சேர்வதைப் பார்த்து மலைத்து ” கிருஷ்ண பக்திக்கு அளவேது ! ” என அவர்களாய்ப் புளகாங்கிதம் அடைந்தனர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஒரு நமட்டுச் சிரிப்புடன் சோகமானார். “அய்யோ! தலைவலி, உயிர்போகுதே” என்றார்.
நாரதனோ “பரந்தாமா! உனக்கா தலைவலி” என்றார்.
மருத்துவர்கள் வரிசையாக நின்றனர், தைலங்கள் அளவில்லாமல் தடவப்பட்டது,
தலைவலி போனதாகத் தெரியவில்லை.
நேரமோ ஆகிக்கொண்டிருந்தது. பக்தர் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.
நாரதன் தலைமையில் ருக்மணி, பாமா சென்று, “பரந்தாமா! இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று கட்டாயம் உனக்குத் தெரியும். தயவுசெய்து சொல்லிவிடு. எங்கிருந்தாலும் நாங்கள் கொண்டுவந்து விடுகிறோம்” என்று கேட்டனர்.
கிருஷ்ணன், “ஆம். எனக்குத் தெரியும். அது என் பக்தர்களிடம்தான் இருக்கிறது.
ஆனால் அதை அவர்கள் எனக்குத் தருவார்களா என அஞ்சுகின்றேன்” என்றார்.
நாரதரோ கதறி அழுதுவிட்டார்.
“கிருஷ்ணா! உனக்காக என் உயிரையே தரத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
பாமாவும் ருக்மணியும் கண்ணீர் விட்டனர்.
“சாமி ! என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? என்ன வேண்டும் கேளுங்கள்” கோரசாகக் குரல் கேட்டது. “என்ன வேண்டும், சொல்லுங்கள் பரந்தாமா” என்றனர்.
ஸ்ரீகிருஷ்ணர், “மகிழ்ச்சி. உண்மையான பக்தியுள்ள, என்மீது பக்தியுள்ள பக்தனின் பாதத்துளிதான் அந்த மருந்து. அந்தப் பாதத்தூசியை எடுத்துவந்து என் நெற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடும்” என்றார்.

இதைக்கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.
“நாராயணா! நாராயணா!” என்றார் நாரதன்.
“என் பாதத்துளியை பகவான் மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை” என்றார்.
மனைவியர் இருவரும், “நாரதா! நீரோ பக்தர் மட்டும்தான். நாங்கள் அவரின் பத்தினிகள். நாங்கள் அந்தப் பாவகாரியத்தைச் செய்ய முடியுமா” என்றனர்.
எல்லோரும் ஒருவர் முகத்தைப் பார்க்க அந்தப் பார்வை நாடு நகரமெங்கும் நகர்ந்து சென்றது.
நேரமாகிக்கொண்டிருந்தது. ஏகாதசியும் நெருங்கிவிட்டது.
உண்மையான பக்தனின் பாதத்துளி கிடைத்தபாடில்லை.......
கண்ணன் சிரித்துக்கொண்டான் ... மற்றவர்களை கலக்கம் கவ்விக்கொண்டது .

Comments