கண்ணனும் கால் தூசும் 2

கண்ணனும் கால் தூசும் 2



ஸ்ரீகிருஷ்ணனிடம் நாரதர், “சாமி! நேரமாகிறது. என்ன செய்யலாம்” என்றார். 

கிருஷ்ணனோ “நாரதா! பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேட்டுப்பார், ஒருவேளை கிடைக்கலாம்” என்றார்.

உடனே நாரதர் பிருந்தாவனம் சென்றார். 

கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார்.

கோபியரோ நாரதரிடம் கோபித்துக் கொண்டனர்.

“எங்களோடு கிருஷ்ணர் இருந்தவரை எந்தநோயும் வந்ததில்லை.  

நீங்களெல்லாம் அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை, அதனால்தான் நோய்” என்றனர்.

அந்தப்பெண், “எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை” என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்தாள். 

எல்லாப் பெண்களையும் அழைத்து “உங்கள் பாதத்தின் துளி இந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து செல்லுங்கள்” என்றாள்.

அவள் மேலும், “கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை” என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தார்.

கிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றியில் பூசிக் கொண்டார். 

கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது.

நாரதர் கைகூப்பி, கண்ணீர் மல்கி, “விளங்கிவிட்டது. எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள். உண்மையான பக்தியின் லட்சணம் என்னவென்றுபுரிந்துவிட்டது” என்றார்.

கிருஷ்ணனுக்குத் தலைவலி என்பதே நம்பக் கூடியதாய் இல்லை. பக்தர்களுக்கு. 

ஏன்? பகவான் ஆயிற்றே!

பின் வலியால் துடிப்பது? அதுதான் பக்தர்களின் பதட்டத்திற்குக் (anxiety) காரணம்.

தலைவலி பகவானுக்கு. மருந்து என்னெவென்று அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும் பகவானுக்கு உதவ யாருமில்லை, அவரின் பத்தினிகள் உட்பட.


பாவம் பரமாத்மா. 

அவர் கூடாரத்தில் எல்லோரும் இருக்கிறார்கள். 

ஆனாலும் கிருஷ்ணர் கண்களுக்கு அது No Mans land ஆக இருக்கிறது.

கால் தூசி பெறமாட்டாய். இதுஒரு வசைச் சொல்லாகத் தமிழில் உள்ளது. 

ஆனால் அதுதான் இங்கு பிரச்சனை.

பிரச்சனை கால்தூசி என்றவுடன், பகவானின் நெற்றிக்கு என்றவுடன், கொடுக்க ஆசைப்படத் தயாராக இருக்கும் நாரதன் உட்பட அனைவருக்கும் வருவது காயடிப்பு பயம் (castration fear). 

இந்தக் காயடிப்புச் சிக்கலை மீறினால்?... பதில்  “பாவம்” வரும் (நாரதர்  தரும் பதில், பத்தினிகளும்தான்). 

அதைத் தொடர்ந்து ‘நரகம்’.
’பாவம்’, ‘நரகம்’ அச்சத்திற்குரியது. 

Taboo. இது Oedipal law.
அதாவது சனாதனம்.

ஒருவனின் பிறப்புக்கு முன்  மொழியில்  கட்டப்பட்ட கலாச்சாரச் சட்டம்; 

அந்தச் சட்ட மனத்தால் ஆளப்படுகிறான் மனிதன்.

யார் இயற்றியது; கிருஷ்ணனும், அவர் சூரியனுக்குச் சொல்ல.... இப்படியே மனுவிடம் சென்று, பின் மனுநீதியாகிவிட்டது. 

அதாவது, அத்வைதத்திற்கான ஈடிபலாக மனு உள்ளது எனலாம்.

அது மொழியில், கலாச்சாரத்தில் இருப்பதால் ’பாவம்’ , ’நரகம்’ என்ற குறிப்பான்கள் மக்களைப் பார்த்து கட்டளை இட்டுக் கொண்டே இருக்கும். 

இதை அகவயப்படுத்திய தன்னிலைகள் சட்டத்தை, கலாச்சாரத்தை மீற முடியாது,

ஆகையால் கிருஷ்ணன் பலமான  Paradox-ல் சிக்கிவிட்டான்.  

அவன் எய்த அம்பு அவனுக்கே திரும்பி வருகிறது.

கிருஷ்ணன் குருஷேத்திரத்தை நடத்தியவனாயிற்றே. தன்னை நோக்கி வந்த ’பாவம்’  ’நரகம்’ என்ற பக்தர்களின் பயத்தை பிருந்தாவன் நோக்கி கோபியர்களிடம் அனுப்பிவிட்டான்.

கோபியர்கள் பிரச்சனையை கால் வினாடியில் தீர்த்துவிட்டார்கள்.

கிருஷ்ணரின் மண்டைவலியும் போயே விட்டது. 

நாரதனுக்கு பக்தி என்றால் என்னவென்று தெரிந்துவிட்டது.


கோபியர்களின் நம்பிக்கை ‘நான்‘- I  கடந்து அவர்களின் ஆசைப் பொருளை (love object)  கடந்து செல்வதால் நடைமுறைவாழ்வின் பாவம், நரகம், புண்ணியம், ஒழுங்கு கடந்த நிலை அது என வாசிக்கத் தோன்றுகிறது.

இறுதியாக கிருஷ்ணன் மண்டைவலி என்று கூறியது பொய். 

உன்மையான பக்தி என்ன என்பதை எல்லோருக்கும் காட்டவேண்டும் என்ற கடவுளின் ஆசையே, அதாவது Imaginary phallus. 

ஒரு கற்பித ஆசை. அவனுடைய  Need அல்ல. 

அதனால்தான் அந்த ஆவலை கால்தூசு மூலம் கோபியர் நிறைவேற்றிவிட்டனர்



Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53