பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....2

பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....2


கண்ணனின் பீதாம்பரம் மரவுரியாக மாறின ... 

கையில் இருந்த சங்கு சக்கரம் பரதன் சத்துருகன் ஆகின ... 

கூட வந்த பலராமன் லக்ஷ்மணனாக மாறினான் .. 

ஒரு அண்ணன் ஜாம்பவானுக்காக தம்பியாகினான் ...

மனதில் உறையும் ருக்மணி சீதையானாள் .... 

மார்பில் அணிந்த நகைகள் குகனாக மாறின ... 

பாதங்களில் இருந்த காலணிகள் விபீஷனாகவும் சம்பாதியாகவும் மாறின ... 

தேனைத் தேடி வரும் வண்டுகள் போல் எங்கிருந்தோ பறந்து அங்கே வந்து சேர்ந்தான் சங்கர சுவனன் ... 

கண்ணனின் கோபியர்கள் எல்லோரும் அயோத்தியில் வாழும் மக்களாகினர் .... 

ராமனாக தன் உயிர் தோழனை சந்திக்க கண்ணன் ஆயுதமானான் ....

ஜாம்பவான் அன்று அளவிற்கு அதிகமாகவே திருநீறு பூசிக்கொண்டிருந்தார் ... விஷ்ணு ரூபம் அங்கே வரும் போது சிவ ரூபம் இல்லாமல் போகுமா ... 

*சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாயை விஷ்ணவே ...*

கண்ணன் ஒரு வினாடி யோசித்தான் ... கொஞ்சம் விளையாடி விட்டு ராமராகுவோம்... மீண்டும் அங்கே கண்ணன் பிறந்தான் ...... 

பொய் கோபத்தை வரவழித்துக்கொண்டான் ... கண்கள் சிவந்தன ... வார்த்தைகள் கொஞ்சம் தடித்தே வந்தன ... யார் இங்கே இருப்பது ... என் சியமந்தக மணியை கவர்ந்தவனா நீ ... கள்வனுக்கும் கள்வன் பூமிதனில் உண்டோ ? 

ஏ கிழ கரடியே ஏன் இந்த ஆசை ?  என்னை கேட்டிருந்தால் தந்திருப்பேனே ... உன்னை பார்த்தால் சிவ பக்தனாக இருக்கிறதே ... நீயே திருடலாமா ? நீ வணங்கும் ஈசனைப்போல் மற்றவர்களின் நெஞ்சங்களை திருடு ..  இந்த மணியை ஏன் திருடினாய் ? 

ஜாம்பவானுக்கு  வந்தவர் யார் என்று புரியவில்லை ... சொன்ன சொற்கள் ஈட்டி மாதிரி அவரை தாக்கின ... 

யார் நீ ... உள்ளே எப்படி வந்தாய் ? திருடன் என்றாய் ? சிவ பக்தன் இப்படி ஒரு காரியம் செய்வானா என்றாய் ... என்னை பேசவிடாமல் நீயே பேசினாய் ... நான் சிவ பக்தன் மட்டும் அல்ல ராம பக்தனும் கூட ... திருடு என்பது எனக்கு ராமன் சொல்லித்தராத ஒன்று ... இந்த மணியை நான் திருட வில்லை ... 

சத்யஜித்துக்கு வரமாக வழங்கிய, செல்வத்தை வாரி வழங்கும் சியாமந்தக மணியை, அவன் தம்பி பிரசேனன் அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றவிடத்து சிங்கத்தால் கொல்லப்பட்ட நேரத்தில், அவ்வழியே நான் வந்தேன்   அச்சிங்கத்தைக் கொன்று சியமந்தக மணியை பரிசாக பெற்று வந்தேன் ... 

நானே என் தம்பி பிரசேனனைக் கொன்று மணியை கவர்ந்ததாக சத்யஜித் வதந்தி பரப்புகிறான் . என் மீது விழுந்த வீண் பழியை துடைக்க, நான்  பிரசேனன் வேட்டைக்கு சென்ற காட்டிற்குச் சென்று தேடுகையில், பிரசேனனும் ஒரு சிங்கமும் குகைக்கருகில் இறந்து கிடப்பதைக் கண்டேன்  

மேலும் சியாமந்தக மணி பிரசேனனிடம் இல்லாததையும் கண்டேன் ... தேடி வருகையில் ராம் ராம் என்று நீ முனகுவதை கேட்டேன் ... உள்ளே வந்து பார்க்கையில் இந்த மணி உன்னிடம் இருக்கிறது ...


'ஏ கரடியே என் பெயர் கிருஷ்ணன் ... என்னிடம் மரியாதையாக மணியை தந்து விடு ... என் பலம் உனக்குத் தெரியாது ... ஏன் எனக்கே அது தெரியாது ... '

ஜாம்பவான் பேசினார் ... நாளை சந்திப்போம் ....




Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53