பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....4

கண்ணன் சிரித்தான் ... 'என்னிடம் நீ வரமாட்டாயா என்று கெஞ்சுபவர்கள் தான் அதிகம் ... என்னை முதல் முதலாக வெளியே போ என்று சொன்னவன் நீர் ஒருவர் தான் .. '
ஆனால் போரில் உங்களை வென்ற பிறகே குகையை விட்டு போவேன் .. ம்ம் சண்டைக்கு வாருங்கள் ... உங்கள் ராம நாமம் என்னை ஒன்றும் செய்யாது ....
அப்படி கண்ணன் சொல்லிவிட்டானே தவிர உள்ளுக்குள் பயம் வந்து விட்டது.. ராம நாமத்தின் பெருமையை உணராதவனா கண்ணன் ?
மெதுவாக இன்னும் சற்று அதிகமாக ஜாம்பவனின் காதுகளில் விழும் அளவிற்கு அவன் உதடுகள் ராம நாமத்தை உச்சரிக்கத் தொடங்கின ....
ஜாம்பவான் சண்டையை உடனே நிறுத்திக்கொண்டார் ... ராம நாமம் கண்ணன் திருவாயிலிருந்தும் வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை ... ஓடிப்போய் கண்ணனின் திருவடிகளில் விழுந்தார் ... கண்ணா ... போதும் நாம் சண்டை போட்டது ... ராம நாமத்தை சொல்லும் உன்னிடம் சண்டை போட்டால் நான் மிகப்பெரிய பாவியாகி விடுவேன் .
*ஸ்ரீ ராம ராம ராமா எனும் திருநாமம் அதி உத்தமம் ... ஆயிரம் உயர் நாமங்கள் தரும் பலன் இந்த ஒரு நாமம் தந்திடுமே ...*.
கண்ணன் பரமேஸ்வரனாக தெரிந்தான் ஜாம்பவானுக்கு ... கட்டிக்கொண்டார் கண்ணனை ....
கண்கள் மூடிக்கொண்டன ...கண்ணீர் கண்ணனின் மார்பை நனைத்தன ..
அது கண்ணன் மார்பில் இருந்த ருக்மணியின் சேலையை ஈரமாக்கியது ...
அந்த கண்ணீர் கண்ணனின் இரு கரங்களில் இருந்த சங்கு சக்கரத்தை ஈரமாக்கின ...
ஈரம் தாங்காமல் அவை பரதனும் சத்ருக்கரனாகவும் மாற்றின ..
ஈர சேலையையுடன் ருக்மணி சீதையாக மாறினாள் ...
குகன் ஜாம்பாவானின் கண்ணீரில் படகு ஒட்டிக்கொண்டிருந்தான்...
வாசலில் விபீஷணன் , சம்பாதி உள்ளே வரலாமா என்று கேட்டனர் ..
சுக்ரீவன் ... ஜாம்பவான் அவர்களே நானும் இங்கு தான் இருக்கிறேன் என்றான் ...
சங்கர சுவனன் ஓடி வந்து ஜாம்பவனை கட்டிக்கொண்டார் ...
குகையின் வாசலில் குவிந்த கோபியர்கள் அயோத்தி ஜனங்கள் ஆயினர் ...
பலராமன் குகைக்குள் ஓடி வந்து லக்ஷ்மணனாக கண்ணன் பக்கத்தில் வந்து நின்றார் ...
கண்ணன் ராமராக இன்னும் இறுக்கமாக ஜாம்பவனை கட்டிக்கொண்டான் ...

ஜாம்பவான் கண்களை திறந்தார் ... நம்ப முடியவில்லை தான் கண்ட காட்சியை ...
கால்கள் கூத்தனிடம் கெஞ்சி அவன் கால்களை கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு தத் தத் தரிகிட தத் தரிகிட என ஜதி போட்டு ஆனந்த நடனமாடின ...
கண்கள் அத்தி வரதர் பள்ளிக்கொண்டிருக்கும் *அனந்தசரஸாகின...
ராமா நீயா ... நீயா கண்ணனாக வந்தது ..??
அடடா உன்னிடமா நான் சண்டை போட்டேன் ...??
எவ்வளவு பெரிய பாவத்தை செய்து விட்டேன் ...
கண்ணனும் நீயே என்று உணராத முட்டாளாகி விட்டேனே ... என்னை மன்னித்து விடு ராம கிருஷ்ணா ....
இல்லை ஜாம்பவான் அவர்களே ... உங்கள் ராம பக்தி உயர்வானது .. நான் எவ்வளவு அவதாரங்கள் எடுத்து வந்தாலும் ராம நாமத்தை என்னால் வெல்லவே முடியாது ...
சற்றே உங்களுடன் விளையாட வந்தேன் .... நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் .....
அங்கே பழைய நினைவுகள் , கேலி கூத்துக்கள் நடந்தன ... தேவர்கள் வானரப்படைகளாக மாறி மரம் விட்டு மரம் குதித்து விளையாடினர் ...
ராம யுகத்தில் மீண்டும் ஜாம்பவான் குதித்து திளைத்தார் ...
சற்று நேரம் ஆனதும் மீண்டும் ராமன் கண்ணாகினான் ...
ஜாம்பவான் அவனிடம் சியமந்தக மணியை கொடுத்து வேண்டினார் ...
'கண்ணா ராம யுகத்தில் உனக்கு நான் பரிசாக ஒன்றும் கொடுக்க வில்லை ... இதோ இந்த மணியுடன் அதைக்காட்டிலும் உயர்ந்த என் மகள் ஜாம்பவதியை உனக்கு பரிசாக தருகிறேன் .
உனக்காகவே பிறந்தவள் ... என்னிலும் உயர்ந்தவள் ...
ராம நாமத்தையும் உன் திருநாமத்தையும் என்றும் சொல்பவள் ...
என் மகளுக்கு ஒரு நல்ல வழியை காட்டு கண்ணா ...
கண்ணன் ஜாம்பவதியை ஏற்றுக்கொண்டான் ..
ருக்மணி தான் அமர்ந்திருக்கும் கண்ணனின் இதயத்தில் ஜாம்பவதிக்கும் இடம் கொடுத்தாள் சந்தோஷமாக ...
ஜாம்பவதியின் திருமணம் கண்ணனுடன் *ஜாம் ஜாம் என்று நடந்தது ...*
ஜாம்பவான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ...
கொஞ்ச நேரம் ராமர் என்பார் பிறகு கண்ணன் என்பார் .. மீண்டும் இரண்டையும் சரி பங்கில் கலந்து ராமகிருஷ்ணா என்பார் ...
கடைசியில் அவர் முடிப்பது சிவ ராம கிருஷ்ணா என்றே ...

Comments