பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....ஜாம்பவதி
பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....
இருண்ட குகை ... அங்கே ராம நாமத்தை பரப்பி அதிலே வரும் ரகு வம்சத்தின் ஒளியில் கண்களை மூடிக்கொண்டு உதடுகளை மூடாமல் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார் ஜாம்பவான் ....
வரும் ஒவ்வொரு நாமமும் அவரின் கண்ணீரில் கங்கையில் குளித்து எழுந்து வருவதைப்போல் உற்சாகமாக வெளி வந்தன ... முதுமை இன்னும் முழுமையாக அவர் உடலை தழுவ விட வில்லை ஜாம்பவான் ... ராம நாமத்தை தவிர அவர் உடம்பை தழுவ எதற்கும் அதிகாரம் இல்லை ...
ராமா உன்னை மீண்டும் இந்த யுகத்தில் பார்ப்பேனா ... எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன ... என் அருமை நண்பன் அனுமார் எங்கிருக்கிறார் என்றே தெரிய வில்லை ... சுக்கிரவன் , சம்பாதி என்னை வா வா சொர்க்கத்திற்கு என்று அழைக்கிறார்கள் ...
உன் நாமம் தரும் சுகம் அந்த சொர்க்கம் தந்திடுமா ராமா ?
நீ அடிக்கடி தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவாயே ஜாம்பவதி இன்று எப்படி இருக்கிறாள் தெரியுமா ?
நல்ல கணவன் கிடைத்து விட்டால் உன் நாமம் அதில் கரைந்து விடுவேன் ராமா ...
இதோ என் கையில் என்ன ஜொலிக்கிறது என்று பார் ராமா .. உன் நாமம் போல் ஜொலிக்கும் சியமந்தக மணி ...
கேட்ட செல்வம் கொடுக்கும் சக்தி வாய்ந்தது ... ராமா உன் நாமம் தரும் செல்வதை விட இது என்ன அதிகமாக கொடுத்து விட முடியும் ?
இது எனக்கு எதற்கு ? எப்படியோ என் கைகளில் வந்து விட்டது ...
இது ராஜா ராமன் உன்னிடம் இருந்தால் பொருத்தமாக இருக்கும் ... ராமா ... என்னை பார்க்க வரமாட்டாயா ...
நீ வந்தால் அதை எப்படியோ தெரிந்து கொண்டு என் சங்கர சுவனனும் ஓடி வந்து விடுவான் என்னை பார்க்க ...
நீ மட்டும் தனியாக வராதே .. உன் தம்பிகள் 7 பேர்களுடன் என் அன்னை சீதாவையும் அழைத்துக்கொண்டு வா ...
ஏதோ என் உள் மனம் சொல்கிறது ... உன் வரவினால் என் நண்பன் சுக்கரீவனும் , விபீஷணனும் , சம்பாதியும் இங்கு என்னை பார்க்க வந்து விடுவார்கள் என்றே ...
மீண்டும் அந்த வாழ்க்கை வேண்டும் ராமா ... பசுமை நிறைந்த நினைவுகள் , பாடித் திரிந்த பறவைகள் ... ஆட்டம் போட்ட நாட்கள் , உன்னை அலங்கரித்த நேரங்கள் .... எனக்கு மீண்டும் வேண்டும் ராமா ... வர மாட்டாயா ?

ஜாம்பவனின் உள்ளம் கரைந்தது ...
ராமா ராமா என்ற வார்த்தைகள் காட்டில் அந்த மணியை தேடிக்கொண்டு வந்த கண்ணனின் காதுகளில் விழுந்தன மதுரமாக ...
மெல்ல மெல்ல புல்லாங்குழல் கோதண்டமாக மாறிக்கொண்டு வந்தது ..
மயில் பீலிகள் கொண்ட கேசம் ஜடா முடியாக மாறியது ...
கண்களில் குடி இருந்த காதல்
கருணை உருவெடுத்து ஓடியது ...
இழந்த அந்த நாட்கள் மீண்டும் கண்ணனின் பாதங்களில் விழுந்து என்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சின ...

Comments