நாராயணீயம் உதயம் 2

நாராயணீயம் உதயம் 2



பட்டத்ரி குருவிடம், குருவே, நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன். 

ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தக்ஷணை தர விரும்புகிறேன் என்று கேட்டார். 

இதைக் கேட்ட குரு, உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல், அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார். 

பட்டத்ரியின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஒரு காரணம் இருந்தது. 

அவரது குருவான அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது. அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார். 

இதனை தினமும் கண்ணுற்ற பட்டத்ரிக்கு இவரது நோயை நாம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. 

இவர் குருகுலம் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நம் குரு இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்குப் பாடம் நடத்துகிறாரே! நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. 

இப்பொழுது அதைக் கேட்டே விட்டார். குருவே, நீங்கள் உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதக்ஷணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். 

அந்த சந்தோஷத்துடன் நான் இந்த குருகுலத்தை விட்டுச் செல்வேன். உங்களால் அந்த மாதிரி தத்தம் செய்ய முடியும். ஏனென்றால் நீங்கள் சித்த புருஷர். 

நீங்கள் உங்கள் கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் கைகளில் ஜலத்தை எடுத்து ஆவாகனம் செய்து எனக்கு தத்தம் செய்து கொடுத்தால், உங்கள் வாத நோய் சரியாகி விடும்...

குருவின் கண்களில் கண்ணீர் அருவியாக ஓடியது ... இப்படியும் ஒரு சிஷ்யனா ? யயாதியை போன்ற ஒருவனை கதைகளில் படித்துத் தான் அவருக்குத் தெரியும் .. இப்பொழுது சிஷ்யனாக நேரில் பார்க்கிறார் ... 

பட்டத்ரியை பார்த்து சொன்னார் ... நான் கஷ்டத்தை பார்த்தே வளர்ந்தவன் .. 

நீயோ இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை ... இனி நான் நன்றாக ஆகி என்ன செய்யப்போகிறேன் ... 

நீ வாழ வேண்டும் ... என் வியாதியை நான் உணக்குத் தரமாட்டேன் .. நான் கோபித்துக்கொள்ளும் முன் இங்கிருந்து போய் விடு ... என் கண்களில் முழிக்காதே ... 

குருவின் இரு பாதங்களையும் கெட்டியாக பட்டத்ரி பிடித்துக்கொண்டார் ... 

குருவே நீங்கள் மடி விழுப்பு பார்ப்பவர் .. 

மருத்துவரை தொடக்கூட அனுமதிக்க மாட்டீர்கள் ... வியாதி பின் எப்படி குறையும் ? 

நான் பத்தே நாட்களில் நல்ல மருத்துவர்களிடம் காண்பித்து இந்த வியாதியை குணப்படுத்திக்கொள்வேன் ... கவலை வேண்டாம் ... 

நல்ல நல்ல மருத்துவர்களை எனக்குத் தெரியும் ... தயவு செய்து வியாதியை எனக்கு கொடுங்கள் ... இல்லை என்றால் என் உயிர் இங்கேயே உங்கள் பாதங்களில் போகட்டும் ... ஊர் போக மாட்டேன் ...

இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு சொல்லலானார், 

ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும், சாஸ்திரங்களையும், சகல வித்தைகளையும், கடவுள் பக்தியையும், புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நேர்யைத் தரக் கூடாது. 

அவ்வாறு நான் செய்தால் இந்த ஊர் மக்கள் என்னை பழிப்பார்கள். 

குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும். 

எந்த தந்தையாவது தன் குழந்தைக்கு ரோகத்தைத் தருவாரா? 

என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த ரோகம் என்னுடனே போகட்டும். 

இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம். 

அது மட்டுமில்லை. நான் உனக்கு என் ரோகத்தைக் கொடுத்தால் இந்த ஊர் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? 

இந்த ஊரில் எனக்கு உள்ள நல்ல பெயர் உன்னால் கெட்டு விடும். 

அவர்கள் என்னைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள். அதனால் நீ இங்கிருந்து புறப்படு என்றார்.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53