மலரும் நாராயணீயம் 5

மலரும் நாராயணீயம்  5




பட்டத்ரி ஓவ்வொரு அவதாரமாக சொல்ல ஆரம்பித்தார் ... குருவாயூரப்பன் தலையை ஆட்டியதும் மட்டும் அல்ல அதே அவதாரத்தில் அங்கே அவன் லீலைகள் புரிந்ததை மீண்டும் நடத்தி காண்பித்தானாம் ..


1. *மச்ச அவதாரம் ...* (மத்ஸ்யம்)🐋🐬🐟🐠🦈
குருவாயூரப்பன் சன்னதியில் மீன்கள் துள்ளி குதித்தாம் ...
நெத்திலி (Anguille Eel)
விலாங்கு (Alose Hilsa)
உல்லான்(Bar/ Seabass)
கொடுவா (Barracuda /Barracuda)
சீலா மீன் கோலா, (Papillon demer)
Butterfly fish (விரால்)
Blue Travelly
பாரை
Bramidae
Pomfert
வவ்வா
Cabillaud
Cod
பன்னா
Calamar
Squid
கனவாய்
Carpe
Carp
கென்டை
Coquille Saint-Jacques   
Scallop
இரட்டை வழி சோழி
Crevette
Shrimp/Prawn
இறால்
Chinchard
Horse mackerel
தேங்காய் பாறை
Poisson chat
Cat fish
கெளுத்தி
carp
catla
கென்டை
cabillaud
cod
பன்னா
Clovisse
clam
சிப்பி
calamaar
Squid
கனவா
Dolphin fish
அயிலை  இப்படி இன்னும் பல பல மீன்கள் பட்டத்ரியை பார்த்து புன்னகை புரிந்ததாம் .இந்த அவதாரத்தில் குருவாயூரப்பன் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினாராம் ..

2. *கூர்ம அவதாரம் ...*
🐷🐷
அங்கே மேருவை வாசுகி கொண்டு கடையும் சத்தம் கேட்டதாம் ... ஆமைகள் பல அவர் அந்த தசகம் முடியும் வரை அவர் அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டதாம்.

3. *வராக அவதாரம்*
🐢🐢🐢
பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் குருவாயூரப்பன் மீண்டும் பட்டத்திரிக்காக சண்டை போட்டானாம் ..  வராகமாக அவர் எழுப்பிய சப்தம் மீண்டும் உலகையே நடுங்க வைத்ததாம் ..

4. *நரசிம்ம அவதாரம்*
🦁🦁🦁

பட்டத்ரி வர்ணிக்கும் போது குருவாயூரப்பன் தலையை வேக வேகமாக ஆட்டி சிங்கமென  கர்ஜித்தானாம் ...

5. *வாமன அவதாரம்*

காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு அவரை வதை செய்வது வாமன அவதாரம். குருவாயூரப்பன் பட்டத்ரியிடம் மூன்றடி இடம் கேட்க உடனே பட்டத்ரி ஒரு இடம் தன் இதயத்தில் இடம் கொடுக்க , இன்னொரு இடம் தன் நாக்கினில் அமர இடம் கொடுக்க மூன்றாவதை தன் ஆத்மாவுடன் கலக்க இடம் கொடுத்தாராம் ..

6. *பரசுராம அவதாரம்*
ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக் கூண்டோடு அழிக்க சபதமேற்ற பரசுராம அவதாரம் இது. இங்கே குருவாயூரப்பன் மிகவும் அழகாக கோடாலியை சுமந்து கொண்டு பட்டத்ரியை பார்த்து சிரித்தானாம் ...

7. *ராம அவதாரம்*
🏹🏹🏹
பட்டத்ரி ஆரம்பிக்கும் முன் ஜெய் ராம் என்று ஒரு வானரம் ஓடி வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டதாம் .. கண்களில் நீர் அரும்ப அந்த வானரத்தை தடவி கொடுக்க முடிய வில்லையே என்று பட்டத்ரி வருத்தப்பட அந்த வானரம் அவர் கன்னங்களில் தன் உதடை ஆழமாக பதித்து விட்டு தசகம் முடிவில் மறைந்து போனதாம்

8. *பலராமர் அவதாரம்*

சங்கர்ஷனர் என்ற பெயரும் உண்டு. இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரின் முதல் மனைவிக்கும் பிறந்ததவர்.
இவரது மனைவியின் பெயர் ரேவதி, இவரின் தங்கையின் பெயர் சுபத்திரை ஆவாள். கண்ணன் செய்த அதர்மங்களை தட்டி கேட்ட அவதாரம் ... பட்டத்ரிக்கு ஆதிசேஷனாக இந்த அவதாரத்தில் குருவாயூரப்பன் தெரிந்தானாம் ..
 
9. *கண்ணன் அவதாரம்*-

குருவாயூரப்பன் தன்னை மீண்டும் தன் உருவத்தில் குழந்தையாகி புல்லாங்குழலில் ஸ்வாகதம் பட்டத்ரி என்று வாசித்தானாம் .

10. *கல்கி அவதாரம்*
🐴🐴🐴

குதிரை சப்தம் , அதர்மங்கள் அழியும் சப்தம் எல்லாமே துல்லியமாக பட்டத்ரிக்கு கேட்டதாம்

11. *ஹயக்ரீவர் அவதாரம்*
🦄🦄🦄
பட்டத்ரிக்கு லலிதா சஹஸ்ரநாமம் குருவாயூரப்பன் ஹயக்ரீவராக சொல்லிக்கொண்டிருப்பது கேட்டதாம் ..


பட்டத்ரியின் கண்களில் சரயுவும் யமுனையும் கங்கா  ஸ்நானம் பட்டத்ரிக்கு செய்ததாம் ... பட்டத்ரி நா தழு தழுக்க  பாடினார் 


கலய மலரிணர் அனைய ஒளிச்சுழல்
நறவில் குளிக்கிறேன் ஐயனே

இளமை மயக்குறு வடிவில் முனிவரும்
முடிகள் சிலிர்க்கிறார் அப்பனே

ஒளிரும் நிடதமாம் வனிதை குழுமிடும்
மகிழ்வை ருசிக்கிறாய் ஈசனே

எளியன் அடியவன் உனது திருஉரு
எழிலில் கிறங்கிடும் பக்தனே;

இணரின் அழகொடு ஒளிரும் நயனமும்

விளங்கு மயில்தரும் பீலியும்
மணிகள் பதியுநல் தலையின் அணிகளும்

மந்தார மலரணி கூந்தலும்
புணரும் கருநிறம் நுனியில் சுருண்டநல்
அடர்ந்த குழலதன் கற்றையும்

மணக்கும் அகிலோடு மயக்கும் ஒண்நுதல்
பிறையின் நிலவணி மோகனா!


Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை