நாராயணீயம் உதயம் 9
நாராயணீயம் உதயம் 9
அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர்.
அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர்.
பகவானே ஸ்நானம் செய்த குளமா?
இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.
புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.
தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்தமர்களான வியாஸர், பிரகலாதன், நாரதர், குரு, வாயு, துருவன், அம்பரீஷன், அஷ்டதிக் பக்தர்கள் அனைவரும் அவனைத் தொழ வந்திருந்தனர்.
அவர்களில் ஒருவராக இவரும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணீயம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.
குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே இவரும் உள்ளே நுழைந்தார்.
அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.
பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர்.
பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார்.
அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை.
ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார்.
அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது.
சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்?
இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்?
இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா?
அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா?
அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா?
இப்படி பட்டத்ரி தன் மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார்.

Comments