பால் பாயசம்
பால் பாயசம்
அவனோ ஒரு பிச்சைக்காரன்... மனைவியுடன் தினமும் எல்லா இடங்களுக்கும் சென்று பிச்சை எடுப்பான் ... கொஞ்சம் குருவாயூரப்பனுக்கும் அதில் பங்கு உண்டு ....
குருவாயூரப்பா யார் யாரையோ செல்வந்தனாக்குகிறாய் ... யார் யாரையோ பெரும் புகழ் பெற்றவனாக மாற்றுகிறாய் ...
இப்படியே வாழக்கை முடியும் வரை நான் பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமா ?
உன்னால் எல்லாம் முடியுமே ... என்னை கொஞ்சம் மாற்றேன்... உனக்கும் வித விதமாக பிரசாதம் படைக்க ஆசை ... உன்னை இன்னும் பல நகைகள் போட்டு அலங்கரிக்க ஆசை ...
கண்ணா மணிவண்ணா ...பண ஆசையால் கேட்கவில்லை ... உன் கோயிலுக்கு நானும் ஏதாவது பெரியதாய் செய்ய வேண்டும் ...
கிருஷ்ணா எனக்கு ஒரு வாய்ப்பு கொடேன் ... உன் அருள் இன்றி உனக்கு என்ன செய்ய முடியும் ?
கோவிந்தா உன்னிடம் மட்டுமே நான் பிச்சை எடுக்க வேண்டும் .. இந்த அழிந்து போகும் மனிதர்களிடம் இல்லை ....
குருவாயூரப்பன் கொஞ்சமாக செவி சாய்த்தான் ... யாரோ அன்று வாங்கிய லாட்டரி சீட்டு அவனிடம் வந்து சேர்ந்தது ..
கேரளா லாட்டரி சீட்டு .. அதில் அவன் பார்த்தது வெறும் பூஜ்யங்கள் அல்ல ..
அந்த பூஜ்ஜியத்துக்குள்ளே ஓர் ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருக்கும் குருவாயூரப்பன் ...
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருக்கும் மாதவன்
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருக்கும் கோவிந்தன் ....
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்த
அந்த ஏழையின் பேர்
உலகில் கேசவன் ...

அடித்தது யோகம் .. ஒரே நாளில் அந்த பிச்சைக்காரன் ஆனான் கோடீஸ்வரனாக ...ஊரே வியந்தது . வெறும் பிச்சைக்கார ராமனாக இருந்தவன் ராஜா ராமனாக மாறினான் ...
துலாபாரம் அவனை எழுப்பி அழைத்தது ... என்றோ வேண்டிக்கொண்ட எடைக்கு எடை தண்ணீர் அவன் மீது தெளித்து எழுப்பியது ...

பட்டாடைகள் பதம் பார்த்து மேனியில் ஏறின ... ஆயிரம் ஜன்னல்கள் கொண்ட ஆடைகள் கதவுகளை மூடிக்கொண்டு ஓட்டம் பிடித்தன ...
குருவாயூர் விரைந்தனர் தம்பதிகள் ... ஊரெல்லாம் இதே பேச்சு ... ஒரே நாளில் பணக்காரன் ... அதுவும் கோடீஸ்வரன் ... என்ன யோகம் ... குருவாயூரப்பனை வேண்டுவோர்க்கு என்ன தான் கிடைக்காது இதில் வியப்பென என்று சொல்லி சிலர் பெருமூச்சு விட்டனர் ... பலர் பொருமினர் ... சிலர் உறுகினர் ...
துலாபாரம் இந்த தம்பதிகளை வரவேற்றது ... மனதில் ஒரு சங்கடம் .. குருவாயூரபனக்கு யசோதை சாதம் பிசைந்து ஊட்டியதைப்போல் அவன் மனதை பிசைந்து எடுத்தது ....
நானோ பணக்காரன் ... பிச்சைக்காரனாக இருக்கும் போது நம் சக்திக்கு ஏற்ப தண்ணீர் எடைக்கு எடை தருவதாக வேண்டிக்கொண்டோம் ... இன்று என் நிலமை வேறு ... தண்ணீர் தந்தால் நன்றாகவா இருக்கும் ...
அந்த குருவாயூரப்பன் என்னை பற்றி என்ன நினைத்துக்கொள்வான் ...படு கஞ்சனை போய் பணக்காரன் ஆக்கி தப்பு செய்து விட்டோமே ... என்று நினைத்து விட்டால் ....
சரி தண்ணீர் வேண்டாம் .. இப்பொழுது என் தகுதிக்கேற்ப பால் பாயசத்தை எடைக்கு எடை கொடுப்போம் .. என் கண்ணனுக்கு பால் பாயசம் மிகவும் பிடிக்கும் ....

பால் பாயசம் குடம் குடமாக வந்து இறங்கின .... தராசு சிரித்தது ... என் கண்ணனை உன்னால் என்ன யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது ... உன் பக்தியை மட்டுமே பார்ப்பவன் அவன் .. அழிந்து போகும் உன் பதவியையோ அந்தஸ்தையோ பார்ப்பதில்லை ... பக்தியினால் , சரணாகதியினால் மட்டுமே அவனை நெருங்க முடியும் ....
குடங்கள் அண்டாவாகின ... அண்டாக்கள் ஆதரவு இன்றி தவித்தன ... அமர்ந்திருந்த தட்டு மேலே உயரவே இல்லை ...
கண்ணனுக்கு சேவை செய்யும் நம்பூதிரியை வரவழைத்தார்கள் ...
உண்மையை வரவழைத்தார் அவர் ... பால் பாயசம் மறைந்து அண்டாக்களில் யமுனை அமர்ந்து கொண்டு சிரித்தாள் ...
கண்ணன் அதில் குதித்து கோபியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான் .
அன்பும் , பக்தியும் , கலப்பிடமில்லாத சரணாகதியுமே இறைவனிடம் நம்மை சேர்க்கும் ... ஆடம்பரங்கள் நம்மை அவனிடம் கொண்டு செல்லாது ... உண்மையை உணர்ந்து கொண்டான் தனவந்தனாக மாறிய அந்த பிச்சைக்காரன் ...
( உண்மை சம்பவம் 2001 ஜனவரியில் நடந்தது )
👍👍👍👍👍

Comments