பச்சைப்புடவைக்காரி - எல்லாம் தரும் கவசம் -(127)

பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

எல்லாம் தரும் கவசம் 

(127)


என்ன ரவி ரொம்பவும் துக்கமாய் இருக்கிறாய் - நான் உன் அருகில் இருக்கும் போது  எதைப்பற்றி  எண்ணி  கவலைப்படுகிறாய்?  அழுது அழுது உன் கண்கள் இவ்வளவு சிவந்து போய் விட்டதே ..... 

அம்மா வந்து விட்டாயா ?  

எவ்வளவு பெரிய பொக்கிஷம் தாயே இந்த கந்த சஷ்டி கவசம் --- இந்த கவசத்தை சில அயோக்கியர்கள் நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்களே  - இதை எல்லாம் கேட்டுக்கொண்டு எப்படி அம்மா குமரன் மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறான் .....

ஓ இதுதான் உன் துக்கத்திற்கு காரணமா ? நாய்கள் நிலவைப்பார்த்து குலைப்பதால் யாருக்கு வாய் வலிக்கும் --- இறைவன் இருக்கிறான் என்ற பயம் ஏற்பட்டு விடக்கூடாது பக்தி ஏற்பட வேண்டும் --- 

இப்படி எதிர்மறையாக திட்டுபவர்களும் குமரனைப்போல் என் குழந்தைகளே .... அவர்களே திருந்துவார்கள் ... அம்மா என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்லட்டுமா - உங்களுக்கு தெரியாதது அல்ல 

சொல் ரவி 

சில வருடங்களுக்கு முன் என்  நிறுவனத்தில் தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. 

இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.


கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. 

வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். 

ரவி மிகவும் அழகாக விளக்கம் தந்தாய் ... என் சார்பில் இன்னும் சொல்கிறேன் ..

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் உங்களைத்  தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். 

அவர் மிகவும் எளிய முறையாக உங்களுக்கு  கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். 

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான்  முருகன் . 

அவனுக்கு  உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.



வள்ளி தெய்வயானை என்பது இச்சா  சக்தி கிரியா சக்தி முருகன் ஞான சக்தி --கோலம் போடும்போது  ஒரு முக்கோணம் கீழ் புறமாகவும் இன்னொரு முக்கோணம் மேற்புறமாகவும் வரும் -- முருகனை வணங்குவோர்களுக்கு இந்த லோகத்தில் உள்ள எல்லா இன்பங்களும் மேல் உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களும் கிடைக்கும் அது மட்டும் அல்ல பிறவி வராத ஞானத்தைக்கொடுக்கும் 

நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். 

இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? 

இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். அருணகிரி யின் பாடலை கவனி ரவி - அதோ அங்கே முருகன் தத்தி தத்தி வருவதைப்பார் 

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ

முருகன் வந்து விட்டான், இப்போது உன்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து உன்னைக் காக்க வேண்டும்.

அவன்  அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திறுநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? 

காக்க என்று வேலை அழைக்கிறார், 
வதனத்திற்கு அழகு வேல், 
நெற்றிக்குப் புனிதவேல், 
கண்ணிற்குக் கதிர்வேல் 
நாசிகளுக்கு நல்வேல், 
செவிகளுக்கு வேலவர் வேல், 
பற்களுக்கு முனைவேல், 
செப்பிய நாவிற்கு செவ்வேல், 
கன்னத்திற்கு கதிர்வேல், 
கழுத்திற்கு இனிய வேல் 
மார்பிற்கு ரத்தின வடிவேல்,



இளமுலை மார்புக்கு திருவேல், 
தோள்களுக்கு வடிவேல் 
பிடறிகளுக்கு பெருவேல், 
அழகு முதுகிற்கு அருள்வேல், 
வயிறுக்கு வெற்றிவேல் 
சின்ன இடைக்கு செவ்வேல், 
நாண்கயிற்றை நால்வேல், 
பிட்டம் இரண்டும் பெருவேல், 
கணைக்காலுக்கு கதிர் வேல், 
ஐவிரல்களுக்கு அருள்வேல், 
கைகளுக்கு கருணை வேல், 
நாபிக்கமலம் நல்வேல் 
முப்பால் நாடியை முனை வேல், 
எப்போதும் என்னை எதிர் வேல், 
பகலில் வஜ்ரவேல், 
இரவில் அனைய வேல், 

காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் உங்களைக் காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. 

பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். 

பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.



உனக்கு ஒரு சந்தேகம் வரலாம் ... ஏன் முருகனிடம் உடம்பை மொத்தமாக பார்த்துக்கொள் என்று வேண்டாமல் இப்படி அங்கம் அங்கமாக வேண்டிக்கொள்ள வேண்டும் என்று .... 

மருத்துவரிடம் போனால் மொத்த உடம்பையும் பார்த்துவிடுங்கள் என்று சொல்ல முடியாது-முதுகில் கட்டி என்றால் முதுகை மட்டுமே காட்டவேண்டும் -- அது போல் ஓவ்வொரு அங்கத்திற்கும் கவசம் வேண்டும் --- அதனால் தான் இப்படி வேண்டிக்கொள்கிறார் 

அம்மா இன்னொமொரு சந்தேகம் -- அழியும் உடம்பிற்கு இவ்வளவு கவசங்கள் தேவையா ?  ---- 

நல்ல கேள்வி ரவி .... 

உடம்பு என்பதும் ஒரு ஆலயம் தான் உங்கள் உள்ளத்தில் நானும் இருக்கிறேன் குமரனும் இருக்கிறான் அந்த ஆலயத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்கள் கடமை அல்லவா ? 

வியாதிகள், பகைமைகள் வராமல் இருக்க கவசங்கள் தேவை ... கந்தர்சஷ்டி கவசம் மந்திர ரூபம் கொண்டவை - இறைவனை ஒலி மூலமாக காணலாம் என்பதால் எழுத்துக்கள் மாறி மாறி ஒலி வடிவில் வருகின்றன - முருகனே குண்டலீணி யாக ஆறு சக்கரங்களாக அவைகளை மேலே எடுத்து செல்லும் தேரோட்டியாக இருக்கிறான் 

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!



அம்மா ஒரு புதிய சக்தி உங்கள் விளக்கத்தால் இன்று கிடைத்துவிட்டது தாயே -- அம்மா குமரன் என் உயிரில் , மூச்சில் கலந்துவிட்டான் 

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

உதடுகள் பெரியாழ்வாரும் சேத்தனாரும் இறைவனை பல்லாண்டு பாடியதைப்போல் எங்கும் நிறைந்துள்ள முருகனை பல்லாண்டு பாடியது .... அன்னை அகமகிழ்ந்து ஆசி கூறி அரவணைத்துக்கொண்டாள் -- 


Comments

Unknown said…
Very well researched and written. Very nice.
Kumar
Lakshmi Balaraman said…
இத்தனை நாட்கள் கண்மூடி
சொல்லிகொண்டிருந்தேன்.
ஞானக்கண்ணை திறந்துவிட்டாய்
கந்த சஷ்டியின் பெருமை
அருமையான விளக்கம்
வேல் உண்டு மயில் உண்டு
பயமில்லை 🙏🙏
Savitha said…
தனிகாசலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துரை கதிர்வேல் முரூகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Excellent post
Sujatha said…
Kandan ki haro hara 💐🙏🏼🙏🏼
ravi said…
எங்கும் நிறைந்தவன் நீ எதிலும் நிறை கண்டவன் நீ

கரை சேர்ப்பவன் நீ .. கறை காணாதவன் நீ

குறை ஒன்றும் இல்லை எங்களுக்கு குறை இல்லா கோவிந்தனே

மறை போற்றும் நாயகன் நீ இறை கண்டு இறையாய் ஆனவன் நீ

இறையாய் இருக்கும் உன்னிடம் இரையாய் ஆக வேண்டுகிறோம் ...

வேண்டுவது ஒன்றும் இல்லை ... நீ தருவதற்கும் பாக்கி ஏதும் இல்லை ...

பார்த்தனுக்கு அமைந்தான் ஒரு சாரதி ... பார்ப்போர் வழி நடத்தும் நீயும் ஒரு சாரதி .... 👍👍👍
ravi said…
கிளி ஒன்று பறந்து வந்தது ... மழலையில் கொஞ்சம் பேசியது ...

மதுரையில் இருந்து வருகிறேன் ...

மதுரமாய் இனிக்கிறேன் ... மரகதத்தின் வடிவு தனை மணக்கண்ணால் பார்த்தாயோ என்றது ...

இல்லை என்றேன் ஏக்கத்துடன் ...

குயில் ஒன்று பாடியது ...

பாடியபடி கேட்டது ...

விசாலமான காசியில் இருந்து வருகிறேன் ...

விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரி புகழ் பாடாயோ என்றது ...

வார்த்தைகள் பஞ்சம் என்றேன் ....

காஞ்சிக்கு சென்றிருந்தேன் ...

சூல் கொண்ட மேகம் தனை கண்டேன் .

கருணை மழை வெடிக்கவே காமாக்ஷியின் கோயிலில் காலிங்க நர்த்தனம் ஆடினேன் ... என்றே சொன்னது ஒரு கலாப மயில் ....

காணவில்லை அந்த கண்ணழகியை என்றேன் கண்ணீர் அரும்பி வர

என்னதான் செய்கிறாய் ? ஏன் நாட்களை கொல்கிறாய் என்றே கேட்டன என்னை நாடி வந்த பறவைகள் ...

என் குருவை பாடவே வார்த்தைகள் போதவில்லை ...

அவன் கருணை சொல்லவே வயதும் போதவில்லை ..

தெய்வத்தின் குரலை கேட்கவே செவி இரண்டும் போதவில்லை ..

சுவாமிநாதன் புகழ் பரப்பவே நேரம் போவதும் தெரியவில்லை ...

அவன் அருகில் இருக்கும் வேலை கண் ஆட்சி செய்யும் கற்பகங்கள் கண்களில் தெரிவதில்லை ...

உண்மை சொன்னாய்

எல்லாம் அவனே என்றே நினைக்கும் போது தெய்வம் உனை தேடி வந்துவிடும்

நீ அவள் இருக்கும் இடம் அதை தொட வேண்டாம் என்றே சொல்லி பறந்தன ...🦚🦜🐾
Lakshmi Balaraman said…
உன் பக்தி கவிதயால் மனம்
துறவறமாகிவிட்டது.👍👍👍
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 55*
🌸🌸🌸🌸

மஹாபோகா மஹைஶ்வர்யா மஹாவீர்யா மஹாபலா |
மஹாபுத்திர் மஹாஸித்திர் மஹாயோகேஶ்வரேஶ்வரீ || 55||
🌸🌸🌸🌸

महाभोगा, महैश्वर्या, महावीर्या, महाबला |
महाबुद्धि, र्महासिद्धि, र्महायोगेश्वरेश्वरी ‖ 55 ‖
🌸🌸🌸🌸

mahaabhogaa, mahaishvaryaa, mahaaviryaa, mahaabalaa
mahaabuddhir, mahaasiddhir mahaayogesvareswari - 55
🌸🌸🌸🌸

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி – (219/225)*
🌸🌸🌸🌸

ஓம் மஹாபோகாயை நம;
ஓம் மஹைஶ்வர்யாயை நம;
ஓம் மஹாவீர்யாயை நம;
ஓம் மஹாபலாயை நம;
ஓம் மஹாபுத்யை நம;
ஓம் மஹாஸித்யை நம;
ஓம் மஹாயோகேஶ்வரேஶ்வர்யை நம;
🌸🌸🌸🌸

*219.மஹாபோகா* (மஹா- போகா) சிறந்த சுகமுள்ளவள் (சுகத்தின் அனுபவ உணா்வு போகம்).
🌸🌸🌸🌸

*220.மஹைஶ்வர்யா* - பெரும் ஜஶ்வா்யம் உள்ளவள் (அவளே அளவற்ற செல்வ ஸ்வரூபம்).
🌸🌸🌸🌸

*221.மஹாவீர்யா* (மஹா – வீர்யா) – சிறந்த வீர்யமுள்ளவள் (எல்லையில்லா பெரும் காம்பீர்யம், சக்தி, அதிகாரம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை).
🌸🌸🌸🌸

*222.மஹாபலா* (மஹா – பலா) - அபரிமிதமான பலத்தை கொண்டவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*223.மஹாபுத்திர்* (மஹா – புத்தி) - பெருமை மிக்க புத்தியுள்ளவள் (சர்வ சகல ஞானி).
🌸🌸🌸🌸

*224.மஹாஸித்திர்* (மஹா – ஸித்திர்) – பெரும் சித்திகள் இயற்கையாகவே வரப்பெற்றவள். (அஷ்ட மா சித்திகள் மற்றும் சகல சித்திகளுக்கும் ஆதார நாயகி அம்பாள்).
🌸🌸🌸🌸

*225.மஹாயோகேஶ்வரேஶ்வரீ* (மஹா -யோகேஶ்வர-ஈஶ்வரீ) - எல்லா யோகங்களும் கைவரப் பெற்ற மஹா யோகிகளும் வணங்கி போற்றும் யோகிகளுக்குக்கெல்லாம் ஈஸ்வரி ஸ்ரீ லலிதை.
🌸🌸🌸🌸
N.Kumar said…
மிகவும் அருமை.
S G S Ramani said…
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது சித்தர்கள் வாக்கு...

கவசம் பற்றிய வார்த்தை சித்தரின் ஒவ்வொரு வரிகளும் மனதில் ஆழப் பதிந்து விட்டது என்று கூறினால் அது மிகை அல்ல...

இப்பதிவு உண்மை... பக்தியின் உச்சம்....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Lakshmi Balaraman said…
கந்த சஷ்டி படித்து வருபவர்களுக்கு
வல்வினை போம் துன்பம் போம்
இந்திரியங்கள் அனைத்தும் சரிவர
இயங்கும். சொல்லிகொண்டே
வந்தால் நாக்கு உச்சரிப்பு ஸ்பஷ்ட
மாக இருக்கும். நம்மை சுற்றி ஒரு
பாதுகாப்பு வட்டம் இருக்கும்
முக்கியமாக எந்த விஷஜந்துக்களும்
வீட்டுக்குள் வராது. உணவில் உள்ள
விஷத்தை முறியடித்துவிடும். உணவே மருந்தாகும்.
நம்மையும் பாதுகாத்து சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கும்
முருகா சரணம் 🌺🌸
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
தினம் ஒரு நலம் தரும் அதிகம்

17. திரு ஆவடுதுறை

பொருளாதாரநிலை சீர்பெறுதவற்கும் வறுமை நீங்கி வளமுடன் வாழ ஓதவேண்டிய பதிகம்

ஒருமுறை திருஞானசம்பந்தப் பெருமானின் தந்தையாருக்கு யாகம் செய்ய பொருள் தேவைப்பட்டது அப்போது சம்பந்தப் பெருமான் திருவாவடுதுறை உறைந்தருளும் எம்பெருமானின் அடித்தளங்களே அந்தமில் பொருள் என்று எண்ணி இத்திருப்பதிகத்தை பாடினார் எம்பெருமானும் ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிளி ஒன்றை பீடத்தில் வைத்து அருளினார்

அன்பர்கள் இத்திருப்பதிகத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் வறுமை அகன்று வளம் பெறுவர் என்பது திண்ணம்

ravi said…
திருமுறை 3/4
இறைவன்:மாசிலாமணீஸ்வரர்
இறைவி:ஒப்பிலாமுலை அம்மன்

1
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர்களைக் காத்த வேதநாயகனே! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சியுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திருவடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே (உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?

ravi said…

2. வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
2.2தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கையையும், பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத்திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறியினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?

ravi said…
3
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றையையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந்திலேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ? திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில், அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

ravi said…
4
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?


ravi said…
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக் கண்டத்தையும் உடைய மறையவனே! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல், வேறெதனையும் Cநான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

6
ravi said…
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி, றநுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்துள்ள சங்கரனே! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ. (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

7
ravi said…
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம் அழியுமாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத்துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

8
ravi said…
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற்கரிய துன்பமடையம்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! தீவினையால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

9
ravi said…
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நான் உண்ணும் நிலையிலும், பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

10
ravi said…
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட்படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும், தலைவா! உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறேதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

ravi said…
11
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலிமிசை நிலையிலரே

அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப்பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.

Shivaji said…
Abharam.. Kandha Shasti varnanai...💐💐💐🙏. " Ethhanai kuraigal. Ethanai pizhaigal...porupadhu un kadan". ...enakku piditha varigal..🙏
ravi said…
விதுரன் நீதி - பகுதி 19
- - - - - - - - - - - - - - - - - - - - - -

விதுரர் கூறும் தர்ம நீதிகள்
- - - - - - - - - - - - - - - - - - - - -
62

பழியானாலும், பாராட்டானாலும்
அவற்றை சமமாக நினைப்பவன்,

துக்கமானாலும் சந்தோஷமானாலும்
சமமாகவே இருப்பான்.

63
யார் எல்லாருடைய நலனை
விரும்புகிறார்களோ,

யார் கெடுதல்களில் மனதை
செலுத்தவில்லையோ ,

யார் உண்மையையும்,
மேன்மையையும்
கொண்டு அடக்கமாக
இருக்கிறார்களோ,

அவர் தான் உத்தமமான
மனிதர் ஆகிறார்.

64
யார் பயன்படாத நல்வார்த்தைகளை
சொல்லுவதில்லையோ,

யார் கொடுப்பதாக சொன்னால்,
அதை கொடுத்துவிடுகிறானோ

யார் பிறருடைய தப்புகளை
அறிந்து இருக்கிறானோ ,

அவன் மத்யமமான மனிதன்
ஆகிறான்.

65
யார் தகாதவற்றை உத்தரவாக
இடுகிறானோ,

யார் கெடுக்கப்பட்டவனோ,

யார் பழிச்சொல்லுக்கு ஆளனாவனோ,

யார் நன்றி மறந்தவனாக
இருக்கிறானோ

அவன் கோபம் என்னும்
கடலிலிருந்து திரும்பமாட்டான்.
.
66
கெட்ட சிந்தனை உடையவன்
ஒருநாளும் ஒருவருக்கும்
நண்பனாக மாட்டான்

67
யார் தன்னையே சந்தேகித்து,
பிறரையும் சந்தேகித்து,
நன்மைகளை நம்புவதில்லையோ,

யார் நண்பர்களை வெறுத்து
நிராகரிக்கிறானோ அவன்
அதமமான மனிதன்.

68
யார் தனக்கு உதவி தேவையோ,
அவர்கள் உத்தமனையே நாட வேண்டும்.

யார் தனக்கு உதவி தேவையோ,
அவசியமான சமயங்களில்
மத்யமானவனை நாடலாம்.

யார் தனக்கு உதவி தேவையோ,
அதமமானவர்களை ஒரு பொழுதும்
நாடக்கூடாது.

69
அதமமானவர்கள்,
கெட்டவர்களுடைய பலத்தினாலே,
தினமும் முயற்சி செய்து,
அறிவினாலும்,
மனித சாமர்த்தியத்தாலும்,
லாபத்தை அடையவே செய்கிறான்.

ஆனால் நல்ல புகழை
அடைவதில்லை.
பெரியோர்களின் அடுத்தும்
சேருவதில்லை.

தொடரும்

ஒரு முறை #திருதராஷ்டிரன், தன் சகோதரர் #விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.

விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே #மனித #ஆயுளை #அறுக்கும் #வாள்கள் #ஆறு.

#முதலாவது #கர்வம்.

மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.

#இரண்டாவது வாள்- #அதிகம் #பேசுவது.

தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

#மூன்றாவது #வாள்- #தியாக #உணர்வு #இன்மை.
அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.

#நான்காவது வாள்- #கோபம்.

கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

#ஐந்தாவது வாள்- #சுயநலம்.

சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.

#ஆறாவது #வாள்- #துரோகம்.

இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.

*இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’*
ravi said…
காயத்ரி மந்திரம் வேதங்களின் தாய் மற்றும் சாவித்ரி என்றும் அழைக்கப்படும் , காயத்ரி என்ற ஐந்து கூறுகளின் தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்றாகும்

நாம் சந்த்யா வந்தனம் என்ற நியமத்தை தினமும் செய்து வருகிறோம். ஆனால் சாஸ்திரங்கள் இந்த நியமத்தை முறையாக செய்வதற்கும் ஒரு கால நிர்ணயம் செய்து இருக்கிறது.

அதன்படி இப்போது இருக்கிற அதிகமான கால அவகாசத்தில் நாமும் முறையாக செய்ய பழகிக் கொள்வோம்.

அதி காலாம்பர, சாயங்கால ஸ்நானம் ஒடம்புக்கும், மனசுக்கும் புத்துணர்ச்சி தர்றதோட, ஆரோக்கியமா இருக்கவும் செய்யும்.

சாஸ்திர, சம்பிரதாயங்களை மதித்து வணங்குவோம்.

1. பிராதஸ் சந்த்யாம்

அதிகாலையில் வானில் நக்ஷத்திரம் இருக்கும்போதும், சூரியன் உதிக்கும் முன்பாகவும் ( காலை 5.00 மணி முதல் 5.45 வரை) செய்வது உத்தமம்

காலை நக்ஷத்திரம் மறைந்த பிறகு
5.46 முதல் 6.30 வரை.செய்வது மத்யமம்

சூரியன் இருக்கும்போது.. 6.30க்கு பின் முதல் 11.59 வரை செய்வது அதமம்.

2. மாத்தியாணிஹம் :-

பகல் 12.00 முதல் 12.30 க்குள் செய்வது உத்தமம்.
(ஆபீஸ் செல்பவர்கள் மட்டும் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்பு..அதாவது காலை மணி 9.30 க்கு பின் செய்வது ஸ்ரேஷ்டம்).

3. சாயம் சந்த்யாம்

மாலையில் சூரியன் இருக்கும்போதே 5.00 மணிக்கு மேல் 6.00 மணிகுள்ளாக செய்வது உத்தமம்.

மாலையில் நக்ஷத்திரன்கள் வரு முன்பாக 6.00 மணி முதல் 6.30 மணிக்குள்ளாக செய்வது மத்யமம்

மாலை 6.30 மணிக்கு பின்பு - நக்ஷத்திரன்கள் வந்தபின் செய்வது (கனிஷ்டம்) அதமம்

இந்த மாதிரி, குறிச்ச நேரத்ல சந்தியா வந்தனம் ஸ்ரத்தயா பண்ணிண்டு வந்தாலே, குடும்பத்தில நோய் நொடிகள் எல்லாம் கொரஞ்சு போய் ஆரோக்யம் நெலச்சு இருக்கும்.

ஆத்ல இருக்கும் பெரியவா தன்னொட கொழந்தைகளுக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் தரணும். அதுனால அவாளோடு வித்யா பலம், தெய்வ பலம், உத்யோக பலம் எல்லாமே கூடிண்டுவரும். எல்லாமே ஜயமாகும்.

ராம் ராம்
ravi said…
*"ஒரு வைஷ்ணவரின் மூன்று நிபந்தனைகள்"*

(வித்தையார்வம், விநயம் ஆகியவற்றின் எல்லை கண்ட ஸ்ரீசரணர் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தம் இருப்பிடத்திற்கு அழைக்காமல் தாமே அங்கு சென்றிருக்கக் கூடியவர்தாம்! ஆனால் விபூதி—ருத்ராக்ஷதாரியான ஓர் ஏகதண்டியை வீட்டினுள் அனுமதிக்க அவருக்கு மனமில்லாமலிருக்கலாம் என்றே போகாதிருந்திருப்பார்]

கோதை போற்றிய ‘கூடாரை வெல்லும் சீரை’ ஒரு ஸ்ரீவைஷ்ணவர் விஷயமாகவே ஸ்ரீசரணர் சிகரமேற்றிக் காட்டிய நிகழ்ச்சி.

ravi said…
அபாரமான சாஸ்திரப் புலமை பெற்ற மஹாவித்வான் என்று ஒருவரைப் பற்றி ஸ்ரீசரணர் கேள்விப் பட்டிருந்தார். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்றபடி பண்டித திலகமான ஸ்ரீசரணர் அவரை சந்திக்க ஆர்வமாயிருந்தார்.

ஆனால் அந்தக் கற்றார் இந்தக் கற்றாரைக் காமுறவில்லை. காரணம் அவர் வீர வைஷ்ணவர், வீர சூர வைஷ்ணவர் என்றே சொல்லுமளவுக்குச் சென்றவர். ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் சைவக் கோலத்தையும் மேற்கொண்ட ஒரு ஏகதண்ட ஸன்னியாஸியைப் பார்ப்பதே தோஷம் என்று கருதியவர்.

அவருடைய ஊருக்கே பெரியவாள் சென்றிருந்தார். அப்போதும் ஊரே திரண்டு வந்து கண்ட பெரியவாளைக் காண அவர் வராமலே இருந்தார். பேதமறியா மன இசைவே திரண்டு வந்த திருவடிவமான பெரியவாளோ அந்தப் பெரியவர் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

ravi said…
ஊர் முழுதும் பெரியவாள் பெருமை பேசுவதை வைணவப்பெரியார் கேட்டார். அது அவரை எவ்வளவு தூரம் தொட்டதோ? ஆனால் பெரியவாளிடம் வந்து போகும் பல மஹாவித்வான்கள் அவரது வித்வத் பெருமையைச் சொல்லக் கேட்டபோது அப்பெரியாரும் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.

அதுவே தருணமென்று பெரியவாள் ஸத்வகுணரான ஒரு வித்வான் மூலம் அவருக்கு அழைப்பு விடுத்தார். வித்வான் வைணவர் வீடு சென்று மரியாதை முறைப்படி பெரியவாளின் அழைப்பைத் தெரிவித்தார்.

இவ்வளவு தூரம் பண்டிதர் பாமரர் புகழும் அந்தப் பெரியவரை தாமும்தான் சென்று பார்த்துவைப்போமே என்று வைணவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

“
ravi said…
கூப்டு அனுப்பிச்சிருக்கார். மாட்டேன்னு சொல்லப்படாதுதான். ஆனாலும் எனக்குச் சில ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறுகிறத்துக்கில்லை. அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம். அதுதான் யோஜனையா இருக்கு.” என்றார் அவர்.

அந்தப் பிரதிக்ஞைகள் என்னவென்று ஸ்ரீமடத்து வித்வான் கேட்டார்.

வைஷ்ணவர் மூன்று ப்ரதிக்ஞைகள்---அல்லது நிபந்தனைகள்-கூறினார். ஒன்று---பெரியவாளை அவர் நமஸ்கரிப்பதற்கில்லை. இரண்டு----பெரியவாள் ப்ரஸாதம் கொடுத்தால் ஏற்பதற்கில்லை. மூன்று---வித்வத் ஸம்பாவனை என்று சால்வை போர்த்துவது போல் ஏதேனும் பெரியவாள் செய்தாலும் அதையுங்கூட அங்கீகரிப்பதற்கில்லை.

இப்படிக் கடும் நிபந்தனை போடுபவரை எதற்காக வர்வேற்க வேண்டும் என்று நமது வித்வானுக்கு---அவர் ஸத்வகுணிதான் எனினுங்கூட------தோன்றிவிட்டது.

மரியாதையாகவே அங்கிருந்து விடை கொண்டு ஸன்னிதானம் சென்று, “ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படலை. அவர் ரொம்ப நிர்தாக்ஷண்யமா கண்டிஷன் போடறார்” என்றார்.

ravi said…
அப்படியா! ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நல்ல சேதின்னா கொண்டு வந்திருக்கேள்!” என்றார் ஸ்ரீசரணாள்.

வித்வானுக்குப் புரியவில்லை. எந்த வித்வத்திற்கும் புரிபடாத ஸூக்ஷ்ம நோக்கில் பேசுபவரல்லவா பெரியவாள்?

“எப்படி நல்ல சேதின்னு புரியலையே?” என்றார் வித்வான்.

“கண்டிஷன் போடறார்னு நீங்க சொன்னதுலேந்தே அவர் முடுஞ்ச முடிவா ‘வரவே மாட்டேன்’னு சொல்லலை. கண்டிஷன் எதுக்கோ உட்பட்டா வரேன்—னு சொல்றார்—னுதானே ஆறது? அந்த மட்டுக்கும் நல்ல சேதிதானே?”---பெரியவாள் இன்னகை பூத்து “என்ன கண்டிஷன்?” என்றார்.

‘சொல்றத்துக்கே மனஸ் இடம் குடுக்கல்லை’ என்று கூறி, வித்வான் வீர வைஷ்ணவப் பெரியாரின் மூன்று நிபந்தனைகளை சிரமப்பட்டுத் தெரிவித்தார்.

பெரியவாளோ ஸகஜமாக, “அவர் இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே! எனக்குத்தானே அவரைப் பார்க்கணும்னு இருக்கு? அவருக்கு இயலாதப்ப அவர் கண்டிஷன் போட்டதிலே என்ன தப்பு? எனக்கு நெஜமாவே அவர் ஒரு வித்வத் ஸ்ரேஷ்டர், அவர் கிட்ட புதுசா ஏதோ கொஞ்சமாவது க்ரஹிச்சுக்கப் பார்க்கலாம்னு இருந்தா கண்டிஷனை நான் பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?” என்று நியாயம் கேட்டார் ஸத்யமூர்த்தி!.

ravi said…
அநுபூதி கண்ட மஹாபுருஷனுக்கு யாரைப் பார்த்து என்ன ஆக வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால் அவரோ நரவேடம் பூண்டு, ஆதரிச நிலைகளை நமக்குக் காட்டுவதில் வித்யையில் இருக்க வேண்டிய ஆர்வம், அதன் பொருட்டாகக் காட்டவேண்டிய விநயம் இவற்றில் நமக்குப் பாடம் கொடுக்கவே, தாம் ஸர்வக்ஞராக இருந்த போதிலும் வேறொரு வித்வானிடமிருந்து கொஞ்சமாவது க்ரஹித்துக்கொள்ள இயலுமா என்று பார்ப்பதற்காக அவர் விதிக்கும் கடும் நிபந்தனைகளுக்கு உடம்பட்டுக் காட்டினார்.

[ வித்தையார்வம், விநயம் ஆகியவற்றின் எல்லை கண்ட ஸ்ரீசரணர் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தம் இருப்பிடத்திற்கு அழைக்காமல் தாமே அங்கு சென்றிருக்கக் கூடியவர்தாம்! ஆனால் விபூதி—ருத்ராக்ஷதாரியான ஓர் ஏகதண்டியை வீட்டினுள் அனுமதிக்க அவருக்கு மனமில்லமலிருக்கலாம் என்றே போகாதிருந்திருப்பார்]

ravi said…
வித்வான் ப்ரதிக்ஞா—பங்கமில்லாமலே தம்மிடம் வரலாம் என்று ஸ்ரீசரணர் செய்தியனுப்பினார்.

அவரும் பெருமிதத்துடன் வந்தார்.

பெரியவாள் அழகிய ஸம்ஸ்கிருதத்தில், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகளைக் கலந்து, அவரை கௌரவமாக வரவேற்று அவருக்கென இடப்பட்டிருந்த மணையில் அமரச் சொன்னார்.

அதுவே அவரது கடினத்தில் சிறிது நெகிழ்வை ஏற்படுத்தியதென்றாலும், நமஸ்காரம் செய்யாமலேதான் அமர்ந்தார்.

ஸ்ரீபாஷ்யம் (‘ப்ரஹ்ம ஸூத்ர’த்திற்கு ஸ்ரீ ராமாநுஜரின் பாஷ்யம்) பற்றியே முக்யமாகப் பெரியவாள் அவரிடம் கேட்கலானார். ‘கேட்கலானார்’ என்பது போகப் போக அந்தப் பெரியார் கேட்க இந்தப் பெரியவாள் சொல்வதாகவே உருமாறிற்று. அவரிடம் இவர் கொஞ்சமாவது க்ரஹித்துக் கொள்ள இடமிருந்ததோ என்னவோ, இவரிடமிருந்து அவர் நிறையவே க்ரஹித்துக் கொண்டார் என்பதை அந்த அறிஞர் கேட்டுக்கொண்ட ‘பா’வமும் அவரது முகமலர்ச்சியுமே காட்டியது.

பண்பு மிக்க ஸ்ரீசரணர் அவரை ஊக்கி ஊக்கி நிறையக் கூறவும் வைத்தார். ஓர் அறிவு மலையிடம் பேசுகிறோம் என்று புரிந்து கொண்ட வைஷ்ணவரும் உத்ஸாஹத்துடன் தமது பாண்டித்தியத்தைக் கொட்டித் தீர்த்தார்.

அவர்கள் ஸித்தாந்தத்திற்கு அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்று உயர்த்திக் காட்டாமலே பெரியவாள் ஸ்ரீசங்கர பாஷ்யத்தில் இப்படி இப்படி என்றும் அங்கங்கே சொல்ல, அந்த அறிஞர் அவற்றிலும் ஆழ்பொருள் இருப்பதை ஒப்பி மகிழாமலிருக்க முடியவில்லை.

ஆக நெடுநேரம் சம்பாஷணை நடந்து இனிக்க முடிந்தது.

இரு வித்வான்கள் அறிவைப் பரிமாறிக் கொள்ளும் இனிமைதான்! நம் விஷயமான இதய இனிமை இல்லை!

அதுவும் வருகிறது இனி!

சிரம பாராட்டாது அந்தப் பெரியவர் வந்து நெடுநேரம் தம்மை வித்வத் கடலாட்டியதில் தமது மகிழ்ச்சியையும்—நன்றியையுமே---தெரிவித்து அவருக்குப் பெரியவாள் விடை கொடுத்தார்.

அவரோ தம்மைத் ‘தாஸன்’ என்று சொல்லிக்கொள்ளுமளவுக்குத் தழைந்து,” பெரியவாளுக்குத் தெரியாத சாஸ்த்ர ஞானம் தாஸனுக்கு இல்லை. ஆன தாஸனுக்குத் தெரியாத கருணை பெரியவாளூக்கு இருந்துதான் கூப்டு அனுப்பி அநுக்ரஹிச்சிருக்க”---என்று சொல்லி, தண்டகாரமாக நமஸ்கரிக்க முற்பட்டார்.

‘கருணை’, ‘அனுக்ரஹம்’ என்ற சொற்கள் வந்து விட்டதோ இல்லையோ? இதயமும் வந்து விட்டது!

நமஸ்கரிக்க முற்பட்டவரை, “வேண்டாம்! ப்ரதிக்ஞா பங்கமாயிடும்” என்று பெரியவாள் தடுத்தார்.

ஆனால் அவரோ, ‘ப்ரதிக்ஞையெல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டுப் பன்ணினதுதானே? ஸன்னிதானத்துல அதுக்கு ப்ரஸக்தியில்லே [அதைப் பொருத்துவதற்கில்லை]” என்பதாக தெய்வங்களின் மட்டத்தில் ஸ்ரீசரணாளைக் கூறி நமஸ்காரம் செய்தே தீர்த்தார்!

தெய்வமாகவே பொலிந்துகொண்டு ஸ்ரீசரணர் அதை ஏற்றார்.

“மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்” என்றும் வைஷ்ணவர் தாமாகக் கேட்டுப் பிரஸாதம் பெற்றார். அதாவது, இரண்டாவது நிபந்தனையையும் அவரே தகர்த்துக் கொண்டார்.

“ என் ஆசைக்காக மூணாவது ப்ரதிக்ஞையையும் விடலாம்னு தோணினா, ஒரு மஹாவித்வான் வந்து மடத்துல அவருக்கு ஸம்பாவனை பண்ணலே—ங்கற கொறை எனக்கு இல்லாம இருக்கும்” என்றார் ஸ்ரீசரணர்.

“பெரியவா எது பன்ணினாலும் பாக்யமா ஏத்துக்கறேன்” என்று ஸ்ரீவைஷ்ணவர் கூற, பெரியவாள் மிக உயர்ந்த சால்வை தருவித்து ஸ்ரீமடத்து வித்வானைக் கொண்டு அதை அவருக்குப் போர்த்தினார்.
T N Ketharam said…
மிக அருமை. நம் முன்னோர்கள்- சுவரை வைத்து சித்திரம் எழுது- எனக்கூறினர். சுவர் நம் உடலைக்குறிக்கும். அதைப்பாதுகாக்க யோகம், தியானம் என பல வழிகளை வகுத்துள்ளனர். கந்தசஷ்டி பற்றி தங்கள் ஆராச்சி மிக அருமை. பல கோணங்களில் அதன் பலன்களை கூறி எங்களுக்கு தெளிவு செய்திருப்பது பற்றி நன்றி.
விஜயலக்ஷ்மி பாலசுப்ரமணியன்  said…
வேலின் விளக்கம் , வேலின் வகைகள் அற்புதமாக விளக்கியுள்ளாய் ... பிரமாதம் 👍👍💐💐💐
ravi said…
மண்டோதரி பார்திருந்தாள் மகாதேவன் நடந்து வருவதை ...

கண்கள் கொஞ்சம் பணிந்தன ...
கண்ணீரை தெளித்தன ...

கேசம் கொஞ்சம் கலைந்தது ... வரும் விதிதனை நொந்தது ..

சம்ஹார மூர்த்தியோ இவன் ... தட்சன் தலை அறுத்த வீர பத்திரனோ இவன் ...

தவறாத செய்கையினால் ராவணன் தலை உருள செய்வானோ ...

எட்டி பார்க்கும் மாங்கல்யம் தனை தொட்டு பறித்து செல்வானோ ?

இலங்கை அழிய பாதை போட்டான் என் தலைவன் ... சலங்கை அவிழ சரிந்து போனேன் நான் ... 🐾🐾🐾
ravi said…
புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார்.

துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

ravi said…
துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது.

• பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின.
• அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது.
• சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது.
• நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது.
• அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர்.
• முகத்தில் பிரகாசம் வீசியது.

ravi said…
இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான் அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே? என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை. எனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள்.

ravi said…
சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும்.
இதுதான் முறை.

• அகாரம் என்பது பிரம்மனையும்,
• உகாரம் விஷ்ணுவையும்,
• மகாரம் என்னையும் குறிக்கின்றன.

எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன்.

பார்த்தீர்களா திருநீற்றின் மகிமையை...!

ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள்..

#சிவாய_நம:
Hemalatha said…
👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍 அருமையான கந்தர் சஷ்டி கவசம் விளக்கம் ... இதை தவறாக விமர்ச்சிப்பவர்கள் நரகத்தை விட கொடுமையான இடங்களுக்கு செல்வார்கள்
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 730*🥇🥇🥇

*US 722*

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

அஷ்டமம் ஸதகம் ( 8 ஆம் ஸதகம்) 💐💐💐

ஏகோநத்ரிம்ஸ ஸ்தபக - 29 வது ஸ்தபகம் 🦜🦜🦜

நவவிதபஜனம் ( மதலேகா வ்ருத்தம்) 🦚🦚🦚
ravi said…
வாத் ஸல்யம் கதி ஹீ நேஷவாயுஷ்யம் ஸூக்ருதஸ்ய

பூயோபி ஸஹ ஸக்யம் ஸ்ரீ ஹேதுஷ் விஹ முக்யம்

ஏழை எளியவர்களிடம் பிரீதியும் அன்பும் காட்டுவது கங்கையில் 100 முறை குளித்தைப்போல்...🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*

*பதிவு 156*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇

32
ravi said…
32

ஸிதிம்னா காந்தீனாம் நகர ஜனுஷாம் பாத நலின

ச்சவீநாம் சோணிம்நா தவ ஜனனி காமாக்ஷி நமனே

லபந்தே மந்தார க்ரதித நவ பந்தூக குஸூம

ஸ்ரஜாம் ஸாமீசீன்யம் ஸூரபுர புரந்த்ரீ கசபரா


அம்மா தேவர்கள் உன்னை வணங்கும் போது உன் நகங்களின் காந்தி பட்டு வெண்மை ஒளியும் உன் பாதத் தாமரைகள் சிவப்பு ஒளியும் சேர்த்து உன் சூசகத்தை அறிவிக்கிறது 🙏🙏🙏
ravi said…
தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்
சொல்லப்பட்ட எட்டு ஸ்லோகங்களை உளமாறச் சொல்வோருக்கு வாலாம்பிகைக்கு நாதனானவரும், வைத்தியர்களிலேயே மிகவும் சிறந்தவரும், ஜனன, மரணமென்ற ரோகத்தைப் போக்குகின்றவரும் ஆகிய வைத்யநாதரின் மூன்று நாமாக்களையும் (வாலாம்பிகேச, வைத்யேச, பவரோக ஹரேதிச) தினமும் ஜபிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கொடிய நோய்கள் விலகும்.
ravi said…
ஶ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத
ஷடாநநாதித்ய குஜார்சிதாய ।
ஶ்ரீநீலகண்டாய தயாமயாய
ஶ்ரீவைத்யநாதாய நம:ஶிவாய ॥ 1॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

கங்காப்ரவாஹேந்து ஜடாதராய
த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தேவைரபிபூஜிதாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 2॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

----1-----👌👌👌
ravi said…
பக்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிநே துஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 3॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரநாஶகர்த்ரே முநிவந்திதாய ।
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 4॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

---2-----👍👍👍
ravi said…
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரநாஶகர்த்ரே முநிவந்திதாய ।
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 4॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

வாக் ஶ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ: வாக்ஶ்ரோத்ரநேத்ராங்க்ரிஸுகப்ரதாய ।
குஷ்டாதிஸர்வோந்நதரோகஹந்த்ரே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 5॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

----3------💐💐💐
ravi said…
வேதாந்தவேத்யாய ஜகந்மயாய
யோகீஶ்வரத்யேய பதாம்புஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 6॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥
.

ஸ்வதீர்தம்ருʼத்பஸ்மப்ருʼதாங்கபாஜாம்
பிஶாசது:கார்திபயாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபாஜாம்
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 7॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

----4------🦜🦜🦜
ravi said…
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

ஶ்ரீநீலகண்டாய வ்ருʼஷத்வஜாய
ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஶோபிதாய ।
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 8॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

வாலாம்பிகேஶ வைத்யேஶ
பவரோகஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம்
மஹாரோகநிவாரணம் ॥ 9॥

மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ।
மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ ॥

॥ இதி ஶ்ரீ வைத்யநாதாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
Ramanathan said…
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

இதில் பாலாவின் பீஜட்சரம் உள்ளது என்று எங்கோ படித்த நினைவு. தாங்கள் குறிப்பிட்டது போல் விருப்பு வெறுப்பின்றி உண்மை தேடும் எவரும் இப்பாடலை உயர்ந்த மந்த்ரம் என்று அறிவர். தங்கள் விளக்கம் அருமை. கந்தன் எல்லோரையும் காக்கட்டும்.
Valli -UK said…
ஓம் நமசிவாய, மிக அருமையான பதிவு, ஒவ்வொரு எதிர்மறையான நிகழ்ச்சிக்கும் அதை விட பல்லாயிரம் மடங்கு, கோடி மடங்கு என்று கூடச் சொல்வேன் நன்மையான நிகழ்ச்சிதான் நடக்கிறது. எனவேதான் நம்மால் கோடி முறைக்கு மேல் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய முடிந்தது.

----2-----💐💐💐
Valli -UK said…
இன்றைய வைரஸ் சூழலில் இந்த பாராயணங்கள் மிக மிக மிக அவசியம். எனவே இறைவன் தான் இப்படிப்பட்ட ஒரு எதிர்மறை நிகழ்ச்சிகளை கொடுத்து நம்மை பாராயணம் செய்ய வைத்திருக்கிறார் என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

---3----💐💐💐
Valli -UK said…
அதுமட்டுமன்றி இன்றைக்கு ரவி அவர்களையும், அந்த எதிர்மறை நிகழ்ச்சி ஒரு அற்புதமான ஒரு பதிவை கொடுக்க வைத்திருக்கிறது.

எனவே நம் வாழ்வில் எதிர்மறை நிகழ்ச்சி ஏற்படும் பொழுதும் அல்லது இவ்வுலகில் பல்வேறு விதமான எதிர்மறையான கருத்துக்கள் சொல்லப்படும் பொழுதும் அந்தக் கருத்துக்களை குறித்து, அதை எப்படி சொல்லலாம் என்று வீண் விவாதம் செய்யாமல், அந்த எதிர்மறை நிகழ்ச்சியினால் நம் உலகத்தில் ஏற்பட்டுள்ள அற்புதமான நேர்மறையான விஷயங்களை நாம் பார்க்க ஆரம்பித்தோம் என்றால் அதனுடைய நன்மைகளை நம்மால் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அந்த நன்மைகளை நாம் அனுபவிக்க முடியும். 💐

---4---👍👍👍
Valli -UK said…
மேலும் காலை-மாலை போல் இன்பம் துன்பம் போல், நன்மை தீமை இரண்டுமே ஒன்றிணைந்தது. நாம் தீமையை பார்க்காமல், அந்த தீமையினால் ஏற்பட்ட நன்மைகளை, நாம் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது நாம் அந்த நன்மைகளையே உள் வாங்குகிறோம்.

---5----👌👌👌
Valli -UK said…
தீமைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தால் அந்த தீமைகளைதான் உள் வாங்குவோம். நல் விஷயங்களை உள்வாங்கி, தேவையற்ற விஷயங்களை மனதாலும் செயலாலும் புறக்கணிக்க கற்றுக்கொள்வோம் .

ரவி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள். அவர் மேன்மேலும் இதுபோன்ற பல பதிவுகளை பதிவிட வேண்டும் என்று மனமார இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமசிவாய.🙏
ravi said…
மிக்க நன்றி திருமதி வள்ளி அவர்களுக்கு ...

நல்ல பதிவுகளை நல்ல இதயங்கள் படிக்கும் போது நல்ல எண்ணங்கள் உருவாவது மட்டும் அல்ல இன்னும் நல்ல நல்ல கருத்துக்களை பதிவிட வேண்டும் என்ற நல்லெண்ணம் பிறக்கிறது ...

கருப்பர் கூட்டம் என்று ஒன்றும் இல்லை ...

நம்முடைய அடுத்த பக்கம் தான் அவை ...

நல்ல எண்ணங்கள் தெய்வீக சிந்தனைகள் தொடர்ந்து நம் மனதை ஆக்ரமித்துக்கொண்டால் கருப்பு நிறம் பச்சையாகி விடும் .

இது என் அசைக்க முடியாத நம்பிக்கை ... 🦜🦜🦚🦚🦚
ravi said…
அனுமன்மகிமை – ஒரு கல்லிலே மூணு மாங்காய்

--இந்திரா சௌந்தர்ராஜன்.

ராமஜெயம் அம்மாள் என்னும் அந்தப் பெண்மணியின் தங்கச்சங்கிலியை ஒரு திருடன் மலைப்படிகளிலேயே அறுத்தெடுத்துக் கொண்டு ஓடிவிட, அதைப் பார்த்த உபாசகர் அப்படியே விக்கித்துப் போனார். உபாசகரின் வயது அவனைத் துரத்திச் செல்ல அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்மணியோ கதற ஆரம்பித்து விட்டார்.

---2-----
ravi said…
அப்போதுதான் அவர் அந்தத் திருடன் அறுத்துச் சென்றது ஒன்பது பவுனிலான தனது தாலிச் சங்கிலி என்பதையும் தெரிந்து கொண்டார். அது இன்னமும் கலக்கத்தைக் கொடுத்தது.

உபாசகரும் அந்த அம்மாளை நெருங்கி ஆறுதல் கூற முற்பட்டார்.

“ஐயோ சாமி… அவன் என் கழுத்துல வேற எந்த நகையை அறுத்துட்டுப் போயிருந்தாலும் நான் இவ்வளவு கவலைப்பட மாட்டேன். அவன் கொண்டு போனது என் தாலியை…” என்றபோது உபாசகருக்கு மேலும் அதிர்ச்சியாகியது.

---3----
ravi said…
சாமி… கோவிலுக்கு வந்த இடத்துல இப்படி நடந்துடுச்சே… அப்ப என் புருஷனுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமா? எனக்கு பயமா இருக்கு சாமி” என்று கண்ணீர் விட்டு அழுதார் அந்தப் பெண்மணி. சுற்றிலும் வேறு சிலர் கூடி விட்டனர்.

“ஹூம்… எல்லாம் கலிகாலக் கொடுமை” என்றார் ஒருவர்.

“இன்னும் ஏம்மா சும்மா இருக்கீங்க… போய் முதல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்க…” என்றார் இன்னொருவர்.

“ஆமா… உடனே போய் திருடனைப் பிடிச்சுட்டுத் தான் அவங்களும் மறுவேலை பாப்பாங்க…” என்றார் மூன்றாமவர். இப்படி ஆளுக்கு ஆள் பேச்சு.

அந்தப் பெண்மணியோ சட்டென்று ஒரு வைராக்கியத்துக்கு மாறினார்.

“அய்யா நான் அந்த ராமனுடைய பக்தை. இதுவரை பல கோடி முறை ராம நாமத்தை எழுதியிருக்கேன். ஜெபிச்சுமிருக்கேன். அதனால என்னையே ராமஜெயம் அம்மான்னுதான் கூப்பிடுவாங்க. அப்படிப்பட்ட எனக்கு இப்படி ஆயிடுச்சுன்னா அதுகூட அந்த ராமனோட எண்ணமாதான் இருக்கணும். இதை நான் நல்லதுக்குன்னே எடுத்துக்கறேன்” என்றார்.

---4-----
ravi said…
எல்லாருக்குமே அந்த அம்மாவின் பேச்சு ஆச்சரியம்தான் தந்தது. ஆனால் உபாசகர் மனம் மட்டும் சஞ்சலப் பட்டபடியே தான் இருந்தது. அந்த அம்மாவும் சட்டப்படி போலீஸ் கம்ப்ளைன்ட் தருவதற்காகச் செல்ல, உபாசகர் திரும்ப மலைமேல் ஏறினார். திருச்சந்நிதிக்குச் சென்று அப்படியே நின்று விட்டார். அவருக்குள் பெரும் எண்ணப் போராட்டம்!

ஒரு கோயிலில் இப்படி ஒரு அடாத செயல் நடந்துள்ளது. இதை கேள்விப்படுபவர்கள் ‘கோவிலிலேயேவா’ என்றுதான் முதலில் கேட்பார்கள். அடுத்து ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா’ என்ற கேள்விக்குத் தாவி விடுவார்கள். ‘அவர் இருந்தால் தன்னுடைய இடத்திலேயே இப்படி எல்லாம் நடக்க விடுவாரா’ என்றும் கேட்பார்கள்.

---5----👍👍👍
ravi said…
எப்படிப் பார்த்தாலும் இந்த திருட்டுச் சம்பவம் எல்லா வகையிலும் தவறானதாக ஜீரணிக்க – முடியாததாகவே இருப்பதை அவர் புரிந்து கொண்டு கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.

அவர் ராமனுடைய வரலாறை கரைத்துக் குடித்திருப்பவர். ஆந்திராவில் பத்ராசலம் என்றொரு இடம். அங்கே ஒரு ராமர் கோவில் மிகப் பிரபலம். அந்த ஊரை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நவாப் தான் ஆண்டு வந்தான். தானீஷா என்பது அவன் பெயர். அவன் ஆட்சியில் கோபண்ணா என்பவர் பத்ராசலத்தின் தாசில்தாராக இருந்தார். இந்த கோபண்ணா தான் ராமர் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர். அதற்குப் பணம் தேவைப் பட்டபோது, மக்களிடம் வரியாக வசூலித்த பணம் இருந்தது. அந்தப் பணத்தை அப்படியே கோவில்கட்ட செலவிட்டு விட்டார். இதையறிந்த தானீஷா, ‘எனக்கான வரிப்பணத்தை எடுத்து என்னிடம் அனுமதி வாங்காமல் நீ எப்படி கோவில் கட்டலாம்’ என்று கேட்டு அவருக்கு 12 வருட சிறைத் தண்டனையை விதித்து விட்டான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார்.

---6----👍👍👍
ravi said…
இந்த நிலையில் ராமபிரான் லட்சுமணனுடன் வேடர்கள் வடிவில் வந்தான். தானீஷாவைச் சந்தித்து, கோபண்ணா சார்பாக அவர் கோவில் கட்ட செலவழித்த அவ்வளவு பொற்காசுகளையும் திரும்பக் கொடுத்தார். தானீஷாவும் கோபண்ணாவை விடுதலை செய்தான். பிறகு தான் தனக்காக வந்து தானீஷாவிடம் பணம் கட்டியது சாட்சாத் அந்த ராமனும் லட்சுமணனுமே என்பது தெளிவானது.

ராமபிரான் தன் பக்தர்களைக் காப்பாற்ற இப்படி பல தருணங்களில் திருவிளையாடல் புரிந்துள்ளார். அதெல்லாம் கோவிலின் திருச் சந்நிதியில் நின்றபடி இருந்த உபாசகருக்குள்ளும் ஓடியது. அவர் மனமும் ராமஜெயம் அம்மாள் வரையிலும் ராமன் அதுபோல் ஒரு அற்புதம் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தது. அதன் நிமித்தம் அவர் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து, அனுமனுடைய மூல மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே தியானத்தில் அமர்ந்து விட்டார்.

ravi said…
அவருக்கு இப்போது ஒரே நோக்கம்தான்!

ராமஜெயம் அம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதாவது தொலைந்த நகை திரும்பக் கிடைப்பது மட்டுமல்ல; அந்தத் திருடன் தண்டிக்கப்படவும் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கி விட்டார். அப்படி ஒரு நல்லது நடக்கும் வரை உணவு உண்ணப் போவதில்லை என்று சங்கல்பமும் செய்து கொண்டார்.


---8---+
ravi said…
இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற ராமஜெயம் அம்மாளும் புகார் கொடுத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த அம்மாளின் வீடு மிகப் பெரியது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள். அவர் வீட்டுக்குள் நுழைந்து நடந்ததை உறவினர்களிடம் கூறிவிட்டு நிதானமாக கொல்லைப்புறம் செல்லவும், அங்கிருந்த மரத்தில் குரங்கொன்று உட்கார்ந்தபடி இருந்தது. அதை ராமஜெயம் அம்மாள் கவனிக்கவில்லை. ஆனால் அதுவோ அந்த அம்மையாரைப் பார்த்தது. பின் தன் கையை உயரத் தூக்கியது. அப்போது அதன் கையில் ராமஜெயம் அம்மாளின் தங்கச் சங்கிலி. அதை அம்மாள் மேல் வீசி எறிந்தது. சொத்தென்று தன்மேல் வந்து விழுந்த சங்கிலியைப் பார்க்கவும் அந்த அம்மாளுக்கு ஒரே மகிழ்ச்சி. நிமிர்ந்து பார்த்திட குரங்கு தெரிந்தது. அடுத்த நொடியே ‘ஆஞ்சநேயா’ என்றுதான் பரவசமானார் அந்தப் பெண்மணி. ஆனால் அந்தக் குரங்கு வேகமாய் ஓடிவிட்டது. கொல்லையிலிருந்து சங்கிலியும் கையுமாக வந்த அந்தப் பெண்மணி திரும்பவும் நடந்ததைக் கூறவும் எல்லாருக்கும் ஒரே வியப்பு!

“அந்தக் குரங்கு நிச்சயம் ஆஞ்சநேயர்தான். எனக்குச் சந்தேகமில்லை” என்று பக்திப் பரவசத்துடனேயே கோயிலுக்குப் புறப்பட்டார்.

திருநீர்மலைக்கு வந்து படிகளில் அவர் ஏறத் தொடங்கும்போது, கீழே கடை போட்டிருந்தவர்கள் ஓடிவந்து என்ன நடந்தது என்று கேட்டனர். ராமஜெயம் அம்மாள் கூறவும், அப்படியே வாயைப் பிளந்து விட்டனர்.
---9---
ravi said…
இப்பதான் தெரியுது. பேண்ட் சட்டை போட்ட ஒருத்தன் தலைதெறிக்க ஓடினான். பார்த்தப்போ குரங்கு ஒண்ணு அவனைத் துரத்திக்கிட்டே வந்துச்சு. அநேகமாக அவன்தான் சங்கிலியைத் திருடியிருக்கணும். துரத்தின குரங்கு எப்படியோ அவன்கிட்ட இருக்கற சங்கிலியைத் தட்டிப் பறிச்சிருக்கணும்” என்றார் ஒருவர்.

ராமஜெயம் அம்மாளும் அதை ஆமோதித்தவராக மலை ஏறினார். உபாசகர் சந்நிதியிலேயே இருந்தார். அவரிடம் ‘சாமி நகை கிடைச்சிடுச்சு’ என்று ராமஜெயம் அம்மாள் கூறவும், உபாசகர் கண் மலர்ந்தார். அப்பாடா என்றிருந்தது. “இப்ப நினைச்சாலும் பிரமிப்பாக இருக்கு. கரெக்ட்டா என் வீட்டுக்கு வந்து அது நகையை திருப்பித் தந்ததை நினைச்சா எனக்கு புல்லரிக்குது” என்று கூறி கண்ணீர் சிந்தினார். பிறகு தான் அடுத்தடுத்து பல தகவல்கள் வரத் தொடங்கின.
💚

--10---
ravi said…
அந்தத் திருடன் பல வருடங்களாகவே திருநீர் மலைக்கு வருபவர்களிடம் திருடியுள்ளான். கோவில் உண்டியலை உடைக்கவும் முயன்று தோற்றவனாம் அவன். அப்படிப்பட்டவன் ஓடவும், குரங்கும் துரத்தியுள்ளது. தலைதெறிக்க ஓடியவன் சாலையில் எதிரில் வந்த லாரியில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டிருக்கிறான். அப்போது சங்கிலியும் எங்கோ போய் விழ, அதைத்தான் குரங்கும் எடுத்துவந்து தந்துள்ளது. அடிபட்ட அவன் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரிய வந்தது. ராமஜெயம் அம்மாள் அப்படியே அதைக் கேட்டு விக்கித்துப் போனார். உபாசகர் தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

11
ravi said…
ராமஜெயம் அம்மாள் வீடு திரும்பினார். அவர் கணவர் எதிரில் கை கால்களிலெல்லாம் கட்டுப் போட்டுக் கொண்டு வந்தார். என்னாயிற்று என்று கேட்ட போது, வரும் வழியில் ஒரு விபத்து நேர்ந்து விட்டதையும் அதில் உயிர் பிழைத்ததே பெரும்பாடு என்றும் கூறினார். ராமஜெயம் அம்மாளுக்கு உடனேயே பல உண்மைகள் புரிந்து விட்டன. பெரிதாக தனக்கு வர வேண்டிய ஒரு துன்பம்தான் இப்போது சிறிதாக தாங்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்று.

அப்போது உபாசகரும் அங்கு வந்தார். அதை ராமஜெயம் அம்மாள் எதிர்பார்க்கவில்லை. அவரை வரவேற்று அமரச் செய்து உபசரிக்கத் தொடங்கினார். அப்போது உபாசகரும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுவதற்காக வந்ததைக் கூறி, சொல்லத் தொடங்கினார்.

“
ravi said…
அம்மா… மலைல உங்களுக்கு ஏற்பட்டது ரொம்ப வருத்தமான விஷயம். நான் உடனேயே மலைக் கோவிலுக்குப் போய் உபாசனைல உட்கார்ந்துட்டேன். கோவில்லயே இப்படியெல்லாம் நடந்தா எப்படிங்கறதுதான் என் பிரதான வருத்தம். எப்பவும் என் உபாசனா சமயத்துல அனுமன் பிரத்யட்சமாகறது உண்டு. அப்பாவும் வந்தான் கவலைப்படாதே. எல்லாம் நல்ல விதமா முடியும். அந்த அம்மாவுக்கு தாலியை இழக்கற ஒரு தோஷம் இருக்கு. ஒரு நாழிகையாவது அவங்க தாலி இல்லாம இருக்கணும். அதேபோல் அவள் கணவருக்கும் கண்டம் இருக்கு. இரண்டு கணக்கையும் நேர் செய்து அவங்களுக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டியது என் கடமை. இது என் தெய்வமான ராமபிரான் உத்தரவு. என் தெய்வத்தோட நாமத்தை எப்பவும் உச்சரிக்கறதோட பலரையும் உச்சரிக்க வைச்சவங்க அவங்க. அவரை நான் கைவிட மாட்டேன்” அப்படின்னு சொன்னான். நான் கண்விழிக்கவும் நீங்களும் சங்கிலியோடு வந்து நின்னீங்க.

இங்க வரவும், உங்க கணவரும் விபத்துல தப்பி வந்தது தெரிஞ்சது. ஒரு பெரும் கெட்ட நேரத்தை அனுமன் மிகச் சிறியதா மாத்தி,
விதிப்படியும் எல்லாம் நடந்த மாதிரி செய்துட்டான்.

ஒரு கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கறதுன்னு சொல்வாங்க. இங்க ஒரு கல்லுல இரண்டு இல்லை, மூன்று மாங்காய் அடிச்சிருக்கான். அதாவது உங்க தோஷம்,
உங்க கணவர் தோஷம் நீங்கி, அந்தத் திருடனுக்கு பாடம் புகட்டிட்டான். நான் அடுத்து ஆஸ்பத்திரிக்கு அவனைப் பார்க்கத்தான் போய்க்கிட்டிருக்கேன். வழில இத உங்கள பாத்து சொல்ல வந்தேன் ” என்றார் உபாசகர். ராமஜெயம் அம்மாள் மட்டுமல்ல; அவர் கணவரும் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

#உண்மை_சம்பவம்

💚 ஸ்ரீராம சீதா ஜெயம்
Hemalatha said…
முருகனே அழகு தங்கள் தமிழால் தமிழ் கடவுளை அலங்கரித்துவிட்டீர்கள்
இது அந்தப் பழித்து பேசிய கருப்பர் கூட்டத்துக்கு சரியான சவுக்கடி 👌👌👏👏👏🙏🙏🙏

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53