பச்சைப்புடவைக்காரி - ஓம் வ்ருஷாகபயே நமஹ (128)

பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

ஓம்  வ்ருஷாகபயே நமஹ

(128)




🌞🌞🌞

ரவி விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஓவ்வொரு நாமமும் மிகவும் உயர்ந்தவை -ஓவ்வொரு நாமத்திற்கு பின்னாலும் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது -- அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இருந்து 102 வைத்து நாமத்தை உனக்கு விளக்கமாய் சொல்கிறேன் ... வ்ருஷாகபி:..ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்

சொல்லுங்கள் தாயே --- கொடுத்து வைத்துள்ளேன் ...



🌞🌞🌞

ரவி கர்ணனின்  முடிவு நெருங்கிக்கொண்டிருக்கின்றது -- சூரியன் மிகவும் கவலையோடு கர்ணனின் கடைசி நாள் யுத்தத்தை கண்களில் நீர் மல்க பார்த்துக்கொண்டிருக்கிறான் .. 

தேரில் இருந்து இறங்கிய கர்ணனை கொல்லும்படி கண்ணன் அர்ஜுனனிடம் சொல்கிறான் -- கடைசி பாணம் ..... கர்ணனின் உயிரைக்குடிக்க வேகமாய் போய் கொண்டிருக்கின்றது --- ஆதவன் அந்த அம்பிடம்  கெஞ்சுகிறான் என் மகனை விட்டு விடு என்று .... கண்ணன் சொல்லி வந்தேன் ... அவன் சொல் மீறி எதுவும் செய்யேன் என்றது அம்பு ......



கர்ணனின் பரந்த மார்பில் ஆனந்தமாக குதித்து அந்த அம்பு காளிங்க நர்த்தனம் செய்கிறது - வலி பொறுக்கமுடியாமல் கர்ணன் கத்துகிறான் - கண்ணா என்னை வஞ்சித்து விட்டாயே என்றே புலம்புகிறான் .... மூச்சு அடங்குகிறது 

தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை சூரிய பகவானிடம் சொல்ல , ஆதவன்  அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை  சொல்கிறேன் .. கேள் 

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,

“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.

ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.



அப்போது சூரிய பகவான்,

 “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன். “க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம்.

அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்.

அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா? தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின் ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா? 

மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.

அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.



கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம். “வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், 

முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் என் அண்ணன் உங்களுக்குத் கண்டிப்பாக  தந்தருள்வான் ..

அம்மா அருமையான விளக்கம் ---இந்த நாமத்தின் பொருளை இவ்வளவு அழகாக தெரிந்துகொள்ளாமல் போய் விட்டேன் .. நன்றி தாயே .

நன்றி ஒன்றும் வேண்டாம் - இந்த நாமத்தை தினமும் சொல் --- சிரித்துக்கொண்டே சிட்டுக்குருவியாக பறந்தாள் 

Comments

S G S Ramani said…
கண்ணனவன் லீலைகளுக்கு
எண்ணிக்கையில்லை -
அதனை
எண்ணுவதற்கோ கைவிரல்கள்
போதவுமில்லை..!

இதயமெல்லாம் வீற்றிருப்பான் - அவனை
தூற்றுவோருக்கு
என் இதயத்தில் இடமும் இல்லை..!

கண்ணன் பற்றிய இப்பதிவு அழகு...அருமை...👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Hemalatha said…
பாராட்டிற்கு அப்பாற்பட்டதுஇப்பதிவு. கருத்து சொல்ல தகுதியில்லை எனக்கு. பலமுறை நானே திட்டியிருக்கிறேன் கண்ணனை. அவனுடைய சகோதரி திரௌபதி க்கு உதவி செய்ய இந்த வஞ்சனையை செய்தான் என்றுக்கூட சொல்வதுண்டு. இந்த பதிவு என்னை வாயடைக்க செய்துவிட்டது. போகும் போதும் வரும் போதும் எழுதுவதே இப்படி என்றால் உட்கார்ந்து எழுதினால்...... பதிவை எழுதிய கரங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️மிக அருமை
Savitha said…
அருமை
செஞ்சோற்று
கடன் தீர்க சேராத இடம்
சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணனா 🙏🏻super
Sujatha said…
💐🙏🏼🙏🏼 அருமை அற்புதம் ஆனந்தம்
ravi said…
தூற்றியவர்கள் உண்டு உனை துதிப்பவர்கள் உண்டு ...

மதி கொண்டவர்கள் உண்டு ... மதி இருந்தும் உன் வாசல் அதை மிதியாதவர் உண்டு ...

துதி உண்டும் தூபம் உண்டு ... கதி என்றே உன்னை நாடுபவர் உண்டு ... சதி நீ என்று உனை சாடுபவர்கள் உண்டு ..

நதி சேரும் கடல் போல் பொறுமை கொண்டாய் ... பொற்றாமரை மலர் போல் மேனி கொண்டாய் ...

பொன்னுக்கும் மண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத மடையர்கள் மத்தியிலும் மங்காத சுடர் விட்டே எல்லோரையும் காக்கின்றாய் ...

கற்பகமே நன்றி சொல்ல இன்னொறு பிறவி தனை தாராயோ நீ எனக்கே !! 💐💐💐
ravi said…
அரச்சனைக்கு மலர்கள் சேர்த்தேன் ... ஆனந்த கூத்தனுக்கு மாலை தொடுக்க ...

மாலை நேரமது ..

சேர்த்த மலர்களில் தாமரையைக் கண்டேன் , சூரிய காந்தியைக் கண்டேன் , பாரி ஜாதம் கண்டேன் , அல்லி கிள்ளி விழ கண்டேன் ...

ஒவ்வொன்றும் பேசியது தேன் சொட்டும் இனிய தமிழில் ... திகைத்து நின்றேன் பேசும் மளர்களைக் கண்டு ... கேள்வியும் பிறந்தது நல்ல பதிலும் வந்தது

தாமரையைக் கேட்டேன் ... மாலை நேரம் .. ஆதவன் மறையும் நேரம் ... மலர்ந்த உன் முகம் மாலைக்குள் குவிந்து விடுமோ ?

சிரித்த்துக்கொண்டே தாமரை சொன்னது தொடுக்கும் மாலை காஞ்சி வாழ் ஆதவனுக்கே அன்றோ ...

குவிய மனமில்லை .... கரங்கள் குவித்து சொன்னது ...

சூரிய காந்தியை கேட்டேன் ... கதிரவன் மறைந்து விட்டான் .. கதிர் முகம் சோகம் கொள்வாயோ ?

எத்திசையிலும் நடமாடும் தெய்வம் உண்டு ...

ஆயிரம் கோடி கதிரவனுக்கு சமம் அன்றோ .. துயரம் எனக்கேது ?

துள்ளி விழும் அல்லியைக் கேட்டேன் ... சந்திரன் வரும் நேரம் ... சரசமாடும் நேரம் இது... சந்தோஷம் அதிகம் வர வேறு காரணம் உண்டோ ?

திங்கள் மீது அன்புண்டு ...திங்கள் சூடிய பெம்மான் மீதும் மதிப்புண்டு ... மதி கொண்டவனை துதி செய்யும் சுவாமிநாதன் இருக்க சுகம் தனி இனி வேண்டுமோ என்றது ...

பாரிஜாதம் சொன்னது ... இந்திர லோகம் தேவையில்லை எனக்கு ... காஞ்சி ஒன்று போதும் காலமெல்லாம் காலடியில் விழுந்திருப்பேன் காலடியின் அவதாரத்தின் பாதங்களில் ...

மலர்களின் பக்தியின் முன் என் பக்தி தூசிதனை தட்டியது .... 🦜🦜🦜
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 56*
🌸🌸🌸🌸

மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸனா |
மஹாயாகக்ரமாராத்யா மஹாபைரவபூஜிதா ||56||
🌸🌸🌸🌸

महातन्त्रा, महामन्त्रा, महायन्त्रा, महासना |
महायाग क्रमाराध्या, महाभैरव पूजिता ‖ 56 ‖
🌸🌸🌸🌸

mahaatantraa, mahaamantraa, mahaayantraa, mahaasanaa |
mahaayaaga kramaaraadhyaa, mahaabhairava pujitaa - 56
🌸🌸🌸🌸

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி – (226/231)*
🌸🌸🌸🌸

ஓம் மஹாதந்த்ராயை நம;
ஓம் மஹாமந்த்ராயை நம;
ஓம் மஹாயந்த்ராயை நம;
ஓம் மஹாஸனாயை நம;
ஓம் மஹாயாகக்ரமாராத்யாயை நம;
ஓம் மஹாபைரவ – பூஜிதாயை நம;
🌸🌸🌸🌸

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் // ஸஹஸ்ர நாமாவளி விளக்கம்*
🌸🌸🌸🌸

*226.மஹா தந்த்ரா* (மஹா-தந்த்ரா) – பெருமை மிக்க தந்த்ரங்கள் (சாஸ்திரங்களின் வழிபாட்டு முறைகள்) உள்ளவள் ஸ்ரீ லலிதை.
🌸🌸🌸🌸

*227.மஹா மந்த்ரா* (மஹா - மந்த்ரா) - பெருமை மிக்க வேத மந்திரங்களின் உட்பொருள் அம்பாள். சிறந்த மந்த்ரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள். எல்லா மந்திரங்களும் அதன் அக்ஷரங்கள் மாலையாக இருப்பவள் ஶ்ரீலலிதை.
🌸🌸🌸🌸

*228.மஹா யந்த்ரா* (மஹா- யந்த்ரா) - பெருமை மிக்க சக்தி வாய்ந்த யந்திரங்களை வழி படுமிடமாக கொண்டவள். ஸர்வ யந்த்ராத்மிகே என அவளைத்தானே மந்த்ரங்கள் போற்றுகின்றன. மகா யந்த்ரம் தான் ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்ரீ சக்ரம்.
🌸🌸🌸🌸

*229.மஹாஸநா* (மஹா- ஆஸநா) – பெருமை மிக்க ஆஸனமுடையவள், மஹான்களின் பெருமை மிக்க இதயத்தை தனது இருப்பிடமாக கொண்டவள்.
🌸🌸🌸🌸

ravi said…
230. மஹாயாகக்ரமாராத்யா* (மஹா - யாக - க்ரம -ஆராத்யா) - பெருமை மிக்க யாகம் முறையில் ஆராதிக்கத் தக்கவள். பாவன யாகம், சிதாக்னி குண்ட யாகம் போன்ற பெரும் யாகங்களில் வழிபடப்படுபவள் அம்பாள். அம்பாளின் பிரதிநிதியாக 64 யோகினிகளை வணங்கி வளர்க்கும் யாகம் மஹா யாகம். தந்த்ர சாஸ்திரத்தில் சொல்லப்படும் நவாவரண வழிபாடு. க்ரமா என்பது முறையாக, கிரமமாக அந்த யாகத்தை செய்வது. 64.யோகினிகளின் பெயர்கள் சில இடங்களில் மாறி வரலாம்: 1. பிராம்மணி, 2. சண்டிகா 3. ரௌத்ரி, 4.கௌரி, 5.இந்திராணி, 6.கௌமாரி, 7. பைரவி, 8.துர்கா 9. நாரசிம்ஹி,10. காளிகா 11. சாமுண்டா 12. சிவ தூதி 13.வாராஹி 14.கௌசிகி 15 மகா ஈஸ்வரி 16. சங்கரி 17. ஜெயந்தி 18. சர்வ மங்களா 19 காளி 20.கராளிணி 21 .மேதா 22. சிவா 23. சாகம்பரி 24. பீமா 25.சாந்தா 26ப்ரமாரி 27.ருத்ராணி 28. அம்பிகா 29. க்ஷமா 30. தாத்ரி 31. ஸ்வாஹா 32. ஸ்வதா 33. பர்ணா 34. மஹௌந்தரி 35. கோர ரூபா 36 , மஹா காளி 37. பத்ரகாளி 38. கபாலினி 39. க்ஷேமகரி 41. சந்திரா 42. சந்திராவளி 43. பிரபஞ்சா 44. ப்ரளயந்திகா 45. பிசுவக்த்ரா 46. பிசாசி 47. ப்ரியங்கரி 48. பால விகர்மி 49. பால ப்ரமந்தநீ 50. மத நௌன் மந்தணி 51. சர்வ பூதாதமனி 52 உமா 53. தாரா 54 மஹா நித்ரா 55. விஜயா 56. ஜெயா 57. சைலபுத்ரி , 58. ஸாயந்தி , 59. துஸ்ஜயா 60. ஜெயந்திகா 61. பிடாலி 62. கூஸ்மாண்டி 63.காத்யாயனி, 64.மஹா கௌரி .
🌸🌸🌸🌸

*231. மஹா பைரவ பூஜிதா* (மஹா பைரவ பூஜிதா) - மஹா சக்தி வாய்ந்த பைரவராலேயே பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
🌸🌸🌸🌸
ravi said…
*Periyava Charithram – 24*

*ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 24*

*[ அஹங்காரத்தை வேறறுத்த நயன தீக்ஷை – ஶ்ரீ ரா.கணபதி, வரமாட்டேன் போ!]*


மஹா இதிஹாஸங்களில் ஒன்றான மஹாபாரதத்தை வ்யாஸபகவான் சொல்லச் சொல்ல தன் தந்தத்தையே உடைத்து எழுத்தாணியாக்கி எழுதிய மஹாகணபதிக்கு, ஒருமுறை ஒரு பெருங்கவலை சூழ்ந்தது!

எல்லாருமே, தான் குண்டாக இருப்பதாகச் சொல்வதை கேட்டதும், தன்னுடைய ப்ரபாவத்தை காட்டிக் கொள்ளாமல், குண்டு குழந்தையாக மட்டுமே தன்னை எண்ணிக் கொண்டு, தன் அம்மா அப்பாவிடம் போய் சிணுங்கியது, குட்டி கணபதி!

ravi said…
அம்மையும் அப்பனும் குழந்தையைக் கொஞ்சி, அவன் மனம் மகிழும்படி ஆறுதலாக ஒரு வரமும் அனுக்ரஹித்தனர்.

“ஸரி ஸரி அழாதே! பூமியில் உள்ள பாரத தேஸத்தில், நாங்கள் இருவரும் இணைந்து ஒரே உருவமாக ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி என்ற நாமத்தில் அவதரித்து, காஞ்சீபுர மஹாக்ஷேத்ரத்தில், காமகோடி பீடத்தில் வாஸம் செய்வோம். அப்போது நீயும் உன் ஆசைப்படி, ஒல்லியான கணபதியாக வந்து, த்வாபர யுகத்தில் ஶ்ரீ வேதவ்யாஸருக்காக மஹாபாரதம் எழுதியது மாதிரி, எங்களுடைய வாக் அம்ருதத்தை தெய்வத்தின் குரலாக எழுதி, கலியுகத்தில் கோடானுகோடி ஜீவன்களை உயர்த்துவாய்” என்று அனுக்ரஹம் செய்தனர்.

ravi said…
ஶ்ரீமத் ராமாயணத்திலும், மஹாபாரதத்திலும் வரும் ஶ்ரீராமனும், ஸீதையும், ராம ஸஹோதரர்களும், ஆஞ்சநேயஸ்வாமியும், , க்ருஷ்ணனும், பாண்டவர்களும், பீஷ்ம பிதாமகரும் மற்றும் அதில் வரும் அத்தனை பேருமே இன்றும் நம் ஹ்ருதயங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதே போல், ஶ்ரீ ரா.கணபதி நம்முடைய பெரியவா என்ற மஹாபரதரின் ( ‘பரத’ என்றால் ஜீவன் முக்தர் என்றும் ஒரு அர்த்தம் உண்டு ) வாக் அம்ருதத்தை தெய்வத்தின் குரலாக நமக்காக தொகுத்து, அழகாக எழுதி நம் பெரியவாளை என்றுமே நம் ஹ்ருதயத்தில் நிறைத்து விட்டார்.

ravi said…
இதுவரை இப்படியொரு தொகுப்பை, எழுத்தை யாருமே எழுதியதில்லை, இனியும் எழுதப்போவதுமில்லை!

இப்பேர்ப்பட்ட மஹாத்மாவின் பாதங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.

1994-ல் நம் பெரியவாளுடைய நூற்றாண்டு மலரான Hundred Years of Light-ல் ஸ்ரீ ரா.கணபதி எழுதிய கட்டுரையின் தொகுப்பு.
இந்த அழகான ஸம்பவத்தை அவரே விரித்தபடி ரஸிப்போம்……..

“1957 மத்தியில்தான் ஓரிக்கை என்னும் ஓரிரவிருக்கையில் என் பெற்றோர்களுடன் முதன்முதலாக பெரியவாளை தர்ஶனம் பண்ண சென்றபோது, ‘தர்ஶனம்‘ என்ற எண்ணமின்றி, ‘பாத்து தீர வேண்டியிருக்கே!” என்ற ‘திவ்ய‘மான எண்ணத்தோடேயே சென்றேன்.

ravi said…
சொல்வது… அத்வைதம்! அப்டிப்பட்டவாளுக்கு மடமாம்! அது போறாதுன்னு, அங்கே… அத்வைத வாடையே இல்லாத பூஜைதான் முக்யமான கார்யமாம்! அதையும் விட மோசம்….. ஆயிரத்தெட்டு வித்யாஸங்களை கட்டியழும் ஆசாரங்களை ‘கொந்தி’ண்டிருக்கறது! இவாளை ஆதரிக்கற வரைக்கும், உலகம் உருப்படாது! நல்லவேளை! பெரும்பாலான ஜனங்கள், இவாளையெல்லாம் ஜாஸ்தி கண்டுக்காம இருக்கா!..” என்ற ‘தேர்ந்த, தெளிந்த’ சிந்தனையோடு பெரியவா தங்கியிருந்த இடத்துக்கு போனோம்.

அப்போது ஸாயங்காலம் அஞ்சு மணி இருக்கும்! அப்போது நாங்கள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்ததால், எங்களுக்கு கார் குடுத்து உதவியிருந்த அன்பருக்கு அதை ஏழு மணிக்குள் திருப்பியனுப்ப வேண்டியிருந்ததால், அதிக நேரம் ஓரிக்கையில் இருக்க முடியாமல் போனது. இதில் என்னுடைய அப்பாவுக்கு ஏக வருத்தம்!

ravi said…
பெரியவா…. விழுப்புரத்தில் குழந்தையாக இருந்தபோது, அவருடைய school mate ஒருவர், பிற்காலத்தில் தென்னார்க்காட்டில் ப்ரபல வக்கீலாக இருந்த ஸ்ரீ சிதம்பர ஐயர். அவர் MLA-வாகவும் இருந்தவர். அந்தக் காலத்தில், என் பெரிய தாத்தாவும், எங்கள் குலதெய்வத்துடன் ப்ரத்யக்ஷமாக பேசக்கூடிய புனிதருமான துரைப்பா அண்ணா என்ற துரைஸ்வாமி ஶாஸ்த்ரி, விழுப்புரத்தில்தான் ரெவின்யூ அதிகாரியாக இருந்தார். அவர் ஒரு இல்லறத்துறவி!

ravi said…
அந்தக் காலத்து அவிபக்த [கூட்டுக்குடும்பம்] குடும்பம் என்பதால், துரைப்பாண்ணாவிற்கு குழந்தைகள் இல்லாவிட்டாலும், கூடப்பிறந்தவர்கள், தாயாதிகள் குழந்தைகள் நிறைய உண்டு.

அந்தக் குழந்தைகளில், ராஜா என்ற குழந்தைக்கும், நம் குட்டி பெரியவாளுக்கு ஸ்நேஹம் என்றும், தானும் கூட இந்த குட்டிப் பெரியவா, ராஜாவோடு, எங்கள் வீட்டில் முப்பாட்டி ஒருத்தி பிசைந்து போட்ட ‘பழையதை’ [ஜலம் விட்ட பழைய ஸாதம்] ஸாப்பிட்டிருக்கிறோம்… என்று சிதம்பர ஐயர் கூறியிருக்கிறார்.

ravi said…
இந்த விஷயத்தை பெரியவாளுடைய காதில் போட்டு, confirm பண்ணிக்கொள்ள வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை! பகல் நேரம் நாங்கள் காஞ்சீபுரம் வந்தபோது, ஓரிக்கையிலிருந்து வந்தவர்கள், அன்று பெரியவா ரொம்ப உத்ஸாஹமாக ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருப்பதாக சொன்னதும், நாமும் அவரிடம் ஸாவகாஸமாக மனஸில் இருப்பதைக் கேட்கலாம் என்று அப்பா நினைத்தார். ஆனால், காமாக்ஷி கோவில் திறந்ததும், அர்ச்சனை முடித்துக் கொண்டுதான் ஓரிக்கை போக முடிந்ததால், அதிக நேரம் அங்கே செலவிட முடியவில்லை!

“இப்படி நிர்பந்தமாச்சே!“… என்று என் அப்பா நொந்து கொள்ள, எனக்கோ… “பந்தப்படுத்தும் இந்த புழுக்க சூழலில், அரைமணிக்கு மேல அவதிப்பட வேண்டாமே” என்று கொஞ்சத்தில் கொஞ்சம் ‘ஆறுதலாக‘ இருந்தது!

ravi said…
ஸ்ரீமடத்தின் முகாம் இருந்ததோ… ஒரு பழைய ஒட்டுக் கட்டடம். அங்கே கூடியிருந்த பஞ்சகச்ச குடுமி ‘பத்தாம் பசலிகள்’, மடிஸார் மாமிகள், முக்காட்டு விதந்துகள் [கணவனை இழந்தவர்கள்], ‘பெரியவா, பெரியவா‘ என்ற அடித்தொண்டை பக்தி கிசுகிசுப்பு…. இதெல்லாம் என் எதிர்மறை உணர்ச்சிக்கு தூபம் போட்டன.

‘சட்டையைக் கழற்றி விட்டுத்தான் முகாமுக்குள் போகவேண்டும்‘ என்று தெரிந்தபோது, எதிர்ப்பு… எரிச்சலாகவே ‘உயர்’ பரிணாமம் கண்டது!

‘நல்ல அத்வைதம்! இப்டியொரு ஆச்சார்யர்! இப்டியொரு…. கேள்வியே கேக்கத் தெரியாத அஜக்கூட்ட [ஆட்டுமந்தை] ஶிஷ்யகணம்!..” என்று மனஸு பொருமியது.

நாலு பேர் பார்க்க, சட்டையை கழற்றிவிட்டு நிற்க, நான் பட்டபாடு உண்டே! ‘ஏண்டா வந்து தொலைத்தோம்?” என்றே நெஞ்சாழத்தில் கோப வேதனை குமுறியது. முகாம் கட்டிடத்துக்குள் பார்த்தபோது, எங்களுக்கு முன்னதாக சென்றவர்கள், முற்றத்தில் நமஸ்கரிப்பது தெரிந்தது.

ravi said…
இந்த ஸாஷ்டாங்க நமஸ்கார ஸமாசாரம், அன்றைய ஸ்வதந்த்ர விறைப்பு குணத்திற்கு, அடியோடு ஏற்காத ஒன்றாக இருந்தது! இப்பேர்ப்பட்ட விறைப்பு வீரனுக்கு, தனக்கு இஷ்டமில்லாத ஒருவர் முன், அப்படி விழத்தான் வேண்டுமென்பது, சொல்லி முடியாத மானபங்க உணர்ச்சியை ஏற்படுத்தியது.

“யாரோ கிழவர், நம்மை சிறுமைப்படுத்துகிறாரே!..” என்பதில், அந்த ஒருவர் மீது இதுவரை பொதுவாக இருந்த மாற்று மனப்பான்மை, ஸொந்த ஹோதாவில், அந்த ஹோதா சரிந்து போவதில், இன்னும் ஓங்கி வளர்ந்தது!

ஆக…. பக்தி-ஶ்ரத்தைகளை ஸமூலம் [totally] துடைத்துப் போட்ட மனநிலையிலாக்கும், பெரியவாளின் முதல் காட்சியைப் பெற, உள்ளே நுழைந்தேன்!

ravi said…
முற்றத்தை அடுத்த கூடத்தில், வெளிச்சம் போறாத ஒரு மூலையில் அவர் அமர்ந்திருந்தார். விபூதி, ருத்ராக்ஷம் எதுவுமில்லாமல், ஒரு சாயம் போன காவித்துணி ‘பேருக்கு‘ அவர் மேல் தொற்றிக் கொண்டிருக்க அமர்ந்திருந்தார். அங்கிருந்த மங்கல்-தான் [வெளிச்சமின்மை] எனக்குத் தெரிந்தது. ஆனால், ‘மங்கள-மூலம்’ என்ற விழிப்பு உண்டாகவில்லை.

நீறு பூத்த நெருப்பு என்று காணாமல், வெறும் நீற்றை மட்டுமே, திருநீறாக தெரியாத வெறும் ஸாம்பலையே கண்டேன்!

ஆம்! அந்த உருவம், இந்த விறைப்பு-வீறாப்புக்காரனை கொஞ்சங்கூட impress பண்ணவில்லை!

அவர் எனக்கு எப்படித் தெரிந்தார் என்றால்…….

இதுவரை எழுதி வந்திருப்பதை படிக்கும் போதே, பக்தகோடிகளில் சிலருக்கு என்னை அடித்தாலென்ன… என்று தோன்றியிருக்கலாம். அடுத்து எழுதியிருப்பதை குறித்தோ, இன்றைய எனக்கே…… அன்றைய என்னை, ஒரு போடு போட்டாலென்ன? என்று தோன்றுகிறது.

அன்று அவர் எனக்கு எப்படித் தெரிந்தாரென்றால்…. கோவில் வாஸலில் கப்பரையை வைத்துக் கொண்டு ஆண்டிப் பட்டாளம் உட்கார்ந்திருக்குமே!… அதிலிருந்து பிரித்து சொல்லமுடியாத ஒரு அநாமதேயமாகத்தான்!

பொதுவாக உருவத்தைப் பார்த்தபின் முகத்தைப் பார்த்தேன்.

ravi said…
அவரும் பார்த்தார்…..

குறுகுறு-வென்று இருந்தது.

கண்களை தாழ்த்திக் கொண்டேன்..

என்ன வெட்கம்? அந்த ஒரு பார்வையே மின்வெட்டாக உள்ளே புகுந்து, என்னுடைய விறைப்பு-வீறாப்பு மனப்பான்மைக்காக என்னை வெட்கப்பட வைத்து விட்டதா என்ன?

இல்லை, இல்லை! அப்படியெல்லாம் அஸாதாரணமாக ஒன்றும் நடந்துவிடவில்லை! ஆனாலும், அவர் பார்ப்பதில் வெட்கம் ஏற்படவே செய்தது.

வெற்றுடம்பைப் பார்க்கிறாரே… என்பதாலா?…

சொல்லத் தெரியவில்லை.

ravi said…
எங்களுக்கு ‘ஜஸ்ட்’ முன்னால், உள்ளே சென்ற ஒரு முக்காட்டுப்பாட்டி, பாத்திரத்தில் கொண்டு வந்திருந்த சீடை, முறுக்குகளை ஒரு மூங்கில் தட்டில் வைத்து, அந்தத் தட்டை, பெரியவா முன் அதி விநயமாக கூனி-குறுகிக் கொண்டு ஸமர்ப்பித்து விட்டு, முற்றத்தில் நமஸ்கரித்தாள்.

கல்லு கல்லாக தெரிந்த அந்த சீடை, முறுக்குகளைப் பார்க்கவே சிரிப்பு வந்தது! அதோடு, பரிதாபமாகவும் இருந்தது. ‘பெரியவா, பெரியவா’ என்று இந்த மாதிரி அசட்டுப் பாட்டிகள், ஏதோ பெரிதாக நினைத்துக் கொண்டு, தங்கள் இல்லாமையிலும், பக்ஷணம்-பணியாரம் என்று அடுப்படியில் வெந்து கொண்டு பண்ணி எடுத்து வருகிறார்களே…. என்று!

ravi said…
போனால் போகிறதென்று பெரியவாளிடமும் பரிதாபப்பட்டேன்…. இம்மாதிரியான ‘பக்ஷண பயங்கர’ங்களை ஸாப்பிடுகிறாரே என்று!

அவருடைய கடும் ஆஹார நியமம் அறிந்திராத எனக்கு, அந்த பக்ஷண வகைகள் பரிஜனங்களுக்கே போகும் என்பதும் தெரியவில்லை! அவரே….. அசட்டு பக்தைகள் கொண்டு வந்து கொடுக்கும் மூன்றாந்தர பக்ஷணங்களை மொக்கிக் கொண்டு, தாமும் ஒரு ஶங்கராச்சார்யார் என்று பேர் பண்ணி வருவதாக நினைத்தேன்!

நமஸ்கரித்தெழுந்த பாட்டி, ஒடுங்கி, ஒதுங்கி நின்றாள். அவளைப்பற்றி பாரிஷதர் ஒருவர் பெரியவாளிடம் ஏதோ சொன்னார். பெரியவா என்ன பதில் சொல்லப் போகிறார்….. என்று அவருடைய முகத்தை பார்த்தேன்.

அவர் பதில் எதுவும் சொல்லவில்லை…..

என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்!….

எனக்கு வெட்கமாக இருந்தது. கண்ணைத் தாழ்த்திக் கொண்டேன். ஆனாலும் அவர் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறாரென்று உள் மனஸுக்கு தெரிந்தது. அது மட்டுமில்லை…. இன்னும் உள்….ள் மனஸுக்கு தெரிந்தது….. நான் உள்ளே நுழைந்ததும் முதலில் பார்த்தாரே! அதிலிருந்து, அந்தப் பார்வை… என்னைவிட்டு நகரவில்லை என்று!

சிறிது போது நகர்ந்தது. பதிலேதும் வராததால், பாட்டி ஓரத்துக்கு ஒதுங்கிவிட்டாள்.

ravi said…
எங்கள் turn வந்தது…..

என்னுடைய அப்பா, எண்சாண் உடம்பு, நாலு சாணாக கையுறையை ஸமர்ப்பித்தார். அவர் முன்பே சொல்லியிருந்தபடி, அவர், என் தாயார், நான்…. மூவரும் சேர்ந்து ஏக காலத்தில் நமஸ்கரித்து விட்டு எழுந்தோம். Sensitive உடம்பானதால், அந்த முற்றம் முழுவதும் பரப்பி வைக்கப்பட்டிருந்த வைக்கோலின் ஸ்பர்ஶத்தில் சுணையெடுத்தது. பெரியவாளின் பார்வையோ…. sensitive உள்ளத்தில் சுணையெடுக்கச் செய்தது.

ஆம்… இன்னும் அவர் பார்வையை என் மேலிருந்து அகற்றவில்லை. நான் திருட்டுத்தனமாக கண்களை லேஸாக உயர்த்தி அவரை பார்ப்பதும், அவரும் பார்க்கிறார், பார்க்கிறார், பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்பது தெரிந்ததும், கண்களைத் தாழ்த்திக் கொள்வதுமாக இருந்தேன்.

நமஸ்காரம் செய்து விட்டு எழுந்ததும், அப்பாவும் அம்மாவும் வாய் திறக்காமல் நின்றார்கள். ஆனால் மற்றவர் வாய் திறந்தாலும், திறக்காவிட்டாலும், தானே பேசி, ‘ம்ருது பூர்வபாஷி‘யாக, முன் சொல், இன் சொல் பேசி, அவர்களையும் பேச வைப்பவர் என்றும், அவர்களுடைய பூர்வீகம் பற்றிய வ்ருத்தாந்தங்களை குடைந்து குடைந்து கேட்டு, அவர்களுக்கு புதுப் புது ‘பழைய‘ தகவல்கள் தருபவர் என்றும் புகழ் பெற்ற பெரியவாளும்…. அன்று வாயே திறக்கவில்லை!

…
ravi said…
‘யார்? என்ன? எங்கேயிருந்து?” இத்யாதிகளைக் கேட்டு, ‘to the point’ மட்டுமே, அந்தப் பாரிஷதரே அப்பாவை வாய் திறக்க வைத்தார். பெரியவாளுடைய காது திறந்திருந்ததோ, இல்லையோ, வாய் நிஸ்சயமாக திறக்கவில்லை. மறுமொழி கூறவில்லை;

கண் திறந்திருந்தது; ஆனால் என்னொருத்தன் மேலேயே இருந்தது.

மௌனமாக போயிற்று….. நெடுங்காலமாக தோன்றிய சில நிமிஷங்கள்!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாரிஷதர், இன்னும் தர்ஶனத்துக்கு பக்தர்கள் இருந்ததால், என் அப்பாவிடம் முடிவாக……” ஏதாவது விஞ்ஞாபனம் இருந்தா பண்ணிக்கலாம்” என்றார்.

“அனுக்ரஹம் இருக்கணும்” என்று சொல்வதாக நினைத்து, நா தழுதழுத்து… ஏதோ, குழறினார் என் அப்பா!

ravi said…
பாரிஷதர், ப்ரஸாத தட்டை பெரியவா முன் நகர்த்தினார். அப்போதும் அவர் தன் த்ருஷ்டியை என் மேலிருந்து எடுக்காமலேயே, விரல்களால் தட்டை தொட்டுவிட்டு, எங்களிடம் ஜாடை காட்டினார். மூவருமாக, அதை சேர்ந்து எடுத்துக் கொண்டோம்.

பெரியவாளிடம், அவர் துரைப்பாண்ணா வீட்டில் பழையது ஸாப்பிட்டது பற்றித்தான் கேட்க முடியவில்லை என்றில்லாமல், எதுவுமே பேசுவதற்கு இல்லாமல் ஆனதால், என் அப்பா தாழ்வாரம் பக்கம் ஒதுங்கி நின்றார். நானும், அம்மாவும் அவரைத் தொடர்ந்தோம்.

ravi said…
அந்த தாழ்வார ஓரம் கூட ஒரு தூரமில்லை…. என்பது போல், பெரியவாளுடைய திருஷ்டியும் என் மேலேயே படர்ந்து, தொடர்ந்தது!

எங்களை அங்கு அழைத்து வந்த என் உறவினர், காஞ்சீபுரத்தில் சில கோவில்களில் ஆடிட்டராக இருந்தார். பெரியவா தன்னிடம் நிறைய ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தவருக்கு, ஏமாற்றமே கிடைத்தது!

பெரியவா….. மௌனத்தோடு, என் மேல் அதே குறி மாறாத பார்வையோடுதான் அமர்ந்திருந்தார்.

ravi said…
பாரிஷதரின் ‘அனுக்ரஹ‘த்தில், ப்ரஸாதம் பெற்றுக் கொண்டு, இனி அங்கு நிற்பதில் கார்யமில்லை என்று புறப்பட்டு விட்டோம். அரைமணி நேரந்தான் அங்கு இருக்க முடியும் என்று நினைத்தவர்கள், கால் மணியிலேயே புறப்பட்டிருப்போம் என்று நினைக்கிறேன்.

‘ஆனால், ஒரு வேற்று மனிதரின் இடைவிடாத பார்வையில் இருப்பதென்றால், அந்த கால்மணி நேரத்துக்கே யுகச்சுமை ஏற்படும்தானே?”

“அப்..பாடா!..” என்று நான் நிம்மதி பெருமூச்செறிய, வெளியே வந்தோம். அங்கேயிருந்தவர்கள் எல்லாருமே, பெரியவா என் மேல் செலுத்திய கால்மணி நேர ‘non-stop’ கடாக்ஷத்தையே பேசி வியந்தார்கள் இப்படியொரு ‘பாக்யம்‘ பெற்ற என்னை பாராட்டினார்கள்.

ravi said…
சித்தே முந்தி வரைக்கும் கூட, பெரியவா யாரையோ பந்தாடிண்டிருந்தாளாம்! அதென்ன? உங்க பிள்ளையை பாத்ததுலேர்ந்து அப்டியே மாறிப் போயி.. அவன் மேலேயே வெச்ச கண் வாங்காம, ஸமைஞ்சுட்டா? இப்டியொரு கடாக்ஷம் கெடைக்கறதுக்கு, மஹா பாக்யம் பண்ணியிருக்கணும்! ஆனாலும், கொழந்தை…. பூஞ்சையா…. புல் தடுக்கியா இருக்கானோன்னோ? அதான்…. ஒடம்பு நன்னா ஆகணும்-னு த்ருஷ்டியாலேயே ஆரோக்யத்தை injection பண்ணியிருக்கா!.” என்று சீடை-முறுக்கு பாட்டி, தன்னை பெரியவா கவனிக்காததையும் பொருட்படுத்தாமல், என் பெற்றோரிடம் மனஸார சொன்னாள்.

ravi said…
நான்.. உள்ள அசடும் வழிந்து கொண்டு நின்றிருக்க வேண்டும்! அவர்கள் சொன்ன “பாக்ய“த்தின் ஸங்கேதமாக, உள்ளே ஒரு உணர்ச்சியும் ஏற்பட்டிருக்கவில்லையே ! அப்படியொன்றும் injection-னாகவோ, கவிகள் சொல்லும் பார்வை கணையாகவோ அந்தப் பார்வை, துளைத்துக் கொண்டு உள்ளே போய்விடவில்லையே! அல்லது பூச்சொரியலாக மென்மை கூட்டவோ, அம்ருத கடாக்ஷம் என்பதாக இனித்து, குளிர்ந்து உள்ளே பாயவோ இல்லையே!

‘
ravi said…
கிழவர் என்னவோ பார்த்தாராக்கும்!’… என்றே லேஸாக நினைத்தேன்.

என் பெற்றோருக்கோ, அவர்களை பெரியவா கண்டுகொள்ளாவிட்டாலும், என்னை இப்படி ஏகமாக ‘கண்டு கொண்டதில்’ த்ருப்தியும், ஸந்தோஷமும்! அடி நாளிலிருந்தே நோஞ்சான்; நாலைந்து வர்ஷம் முன்பு கவலைக்கிடமாக படுத்துப் பிழைத்தாலும், over dose-ஸாலேயே நலிவு கண்டவன் என்பதால், அவர் ‘கண்டு கொண்டதில்‘ வலிவடைவேன் என்று காரில் ஊருக்கு வரும்போது பேசிக்கொண்டார்கள்.

என்னைப் பொறுத்தமட்டிலோ… அந்த ஓரிக்கை ஸம்பவமும், அதன் நடுநாயகரும் write off செய்யப்படவேண்டிய விஷயங்களாகவே தோன்றின. அன்று ராத்ரி படுக்கும் முன்பே, automatic-காக write off ஆகியும் விட்டன!

மறுநாள் காலை… எழுந்திருக்கும் போதே……… பெரியவாளின் நினைவுதான்!

தொடர்ந்தும்…. அதே நினைவுதான்!

‘அவரை நினைக்கிறேன்’ என்பது… எனக்கே தெரியாமல், ஆனாலும் அவர் நினைவாகவே இருக்கிறேன்….. நாள் முழுவதும், மறுநாளும், மூன்றாம், நாலாம் நாளும் கூட!

ravi said…
ஓ! அவரையா நினைக்கிறோம்?..” என்று தெரிகிற அபூர்வமான சில ஸமயங்களில், “எதற்காக நினைக்கிறோம்?…. அந்தக் கிழவருக்கும் நமக்கும் என்ன ஸம்பந்தம்?..” என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் அவருடைய நினைவு என்ற மஹா ப்ரவாஹம், சிற்றலையான கேள்வியை, உடனுக்குடன் விழுங்கியும் விடுகிறது.

அவரை நினைப்பதைத் தவிர, வேறெதுவும் செய்யத் தெரியவில்லை; செய்ய முடியவில்லை!

ravi said…
ஏன் நினைக்க வேண்டுமென்று… காரணம் தேடுவானேன்? ஏன் நினைக்காமல் இருக்கவேண்டும்? நெஞ்சத்திற்கு இத்தனை ரஞ்சகமாக உள்ள ஒன்றை, ஏன் நினைக்காமல் இருக்க வேண்டுமாம்? அப்படி சொன்னால் கூடப் போதாது; போதவே போதாது. அவரை நினைப்பதற்குத்தான் நினைப்பு உறுப்பாக, இந்த அந்தஃகரணமே நமக்கு இருக்கிறது.

அவரை நினைக்காவிட்டால்…?

ஆம்! உணர்வு அந்த அளவுக்கு ஓங்கியிருந்தது……

அவரை நினைக்காவிட்டால்….. உயிர் தரிக்க முடியாது!..”
ravi said…
மறப்பேன் அலேன் உன்னை, ஓர் கணமேனும்
மறக்கில் அன்றே இறப்பேன்;
இது ஸத்தியம், ஸத்தியம், ஸத்தியம்!..”

என்று வள்ளலார் சொல்லுவதாக்கும் அன்று என் அனுபவ நிலையாக இருந்தது!!

அன்று படுக்கும் முன் அவரை write off செய்தேனே! அப்புறம் அந்த இரவு என்னுடைய உள் நினைவில் தங்கி, ‘ஓரிரவு இருக்கை’ கொண்டு, என்ன செய்தார்? நேரிலே impress செய்யாதவர், நித்திரையிலே எப்படி ஆழமாக impress செய்தார்? விடியும்போது என் வாழ்வுக்கே விடிவாக, உள்ளுக்கும்-உள் ஹ்ருதயத்தில், ஸதாகால இருக்கை கொண்டுவிட்டார்!

அவர் இல்லாவிட்டால்…. நானே write off ஆக வேண்டியதுதான்…. என்று எப்படி ஆக்கினார்? Injection போட்டதாகவோ, அம்பு எய்ததாகவோ, மலர் சொரிந்ததாகவோ, அம்ருதம் ஊட்டியதாகவோ ஒன்றும் தெரியவில்லை என்று முதலில் சொன்னேன்.

ravi said…
ஆனால், late action மருந்து…. என்பார்களே! அப்படி, அந்த மருந்து வேலை செய்வது தெரியாமலேயே, இத்தனையையும், அந்த இரவில் செய்திருக்கிறார்!

‘ஒன்றேயான உயிர்தத்துவம்’ என்று நான் எண்ணி வந்ததுடைய ஸாக்ஷாத் உருவமே…. அவர்தான்! என்று புரிந்தது. அநாமதேய பட்டாளத்தில் ஒருவர், என்று நான் முதலில் எண்ணியவர், வாஸ்தவத்தில் அந்த அநாமதேய ஏகத்தின் நாம-ரூபத்தின் சின்னமே! என்று புரிந்தது.

“இவர்தான் ஜகத்குரு. இவர் காட்டும் பாதையே ஜகத்துக்கானது” என்று ஆவி கொண்டது.

‘இவர் வழியில் போனால், உலகம் உருப்படாது. நல்லவேளை! பெரும்பாலான ஜனங்கள் அப்படிப் போகவில்லை‘ என்று முதலில் எண்ணியவன், ‘உலகம் உருப்பட வேண்டுமானால், இவரின்றி வழியில்லை! அனைத்து மக்களும் இவர் காட்டுவதே வழி, இவரே கதியென்று சேர மாட்டார்களா?.” என்று எண்ணலானேன்!

ravi said…
ஏண்டா வந்து தொலைத்தோம்?..‘என்று முதல் நாள் மாலை எண்ணியவனை, மறுநாள் காலையிலேயே…”எங்கேடா அந்த மனப்பான்மையை தொலைத்தோம்?..” என்று தேடவைத்தவர் ஆயிற்றே!

அவரால்….. மனஸையே தொலைக்கச் செய்து, அதற்கு அதீதமான ஆத்மாவில் ஶாஶ்வதமாக நம்மை சேர்ப்பிக்க மட்டும் முடியாதா….என்ன?….”

எப்படி தடுத்தாட்கொண்டருக்கிறார் ஶ்ரீ ரா.கணபதியை!

பெரியவாளின் நயன தீக்ஷை ப்ரபாவம் அப்பேர்ப்பட்ட மஹத்வம் வாய்ந்தது!

மற்றொரு அழகான நயன அனுக்ரஹம்….

கணவன் மனைவி இருவரில், மனைவிக்கு பெரியவாளிடம் அப்படியொரு பக்தி. கணவருக்கோ, பெரியவா என்றில்லை, மொத்தத்தில் தெய்வ நம்பிக்கையே கிடையாது. ஆனால், மனைவியைத் தடுக்கவில்லை. பாவம்.

அந்த அம்மாவும் பெரியவாளை தர்ஶனம் செய்ய வரும்போதெல்லாம், “இவருக்கும் பெரியவா மேல பக்தி வரணும்… பெரியவாதான் அனுக்ரஹம் பண்ணணும்..” என்று மானஸீகமாக வேண்டிக் கொள்வாள்.

ravi said…
ஸெரி, ஸெரி…..ஆடின ஆட்டமெல்லாம் போறும்…எங்கிட்ட வா!” என்று எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும், பெரியவா தன்னிடம் அழைத்துக் கொள்ள ஸங்கல்பம் செய்துவிட்டால், யாராவது தடுக்க முடியுமா… என்ன?

ஒருநாள் அந்த அம்மா பெரியவாளை தர்ஶனம் பண்ணக் கிளம்பினாள்.

“இரு. ஒன்னோட நானும் வரேன்…”

“என்னது? நெஜமாவா!”

“அந்த ஸன்யாஸியை பாக்கறதுக்கு இல்ல. ஒன்னை தனியா அனுப்ப வேண்டான்னுதான்!…”

கூடப் போய்விட்டு, பெரியவா இருந்த இடத்திலிருந்து தள்ளியிருந்த வாஸலிலேயே நின்று கொண்டார். அந்த அம்மா உள்ளே போய் பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாள்.

“வாஸல் வரைக்கும் இந்த மனுஷன் வந்ததே பெருஸுன்னா! பெரியவாளோட கருணை!” மானஸீக மெஸேஜ் பெரியவாளுக்கு அனுப்பினாள்.

உள்ளே மேனாவுக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த பெரியவா… காருண்ய அலைகள் பெருகிட, தன்னுடைய திவ்ய ஶரீரத்தை அசைத்து அப்படி அழகாகத் திரும்பி, “வரமாட்டேன்! போ!” என்று அடம்பிடித்துக் கொண்டு வெளியே நிற்கும், தன்னுடைய அந்தக் குழந்தையையும் நயனங்களால் கடாக்ஷித்தார்.

அவ்வளவுதான்!

இன்னொரு நாள், அந்த அம்மா மடத்துக்கு கிளம்பியதும்,

“இரு. நானும் வரேன்…”

அவரா சொன்னார்? அதான் அன்னிக்கே நயனங்களால் கொக்கி போட்டாச்சே!

“உள்ள வாங்கோளேன்….”

“உள்ள வரேன்…ஆனா, நமஸ்காரம் பண்ண மாட்டேன்….”

மிடுக்கு மட்டும் குறையவில்லை.

Pant shirt போட்டுக் கொண்டு மடத்துக்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார்…… காலடிநாதனுக்கு தாஸானு தாஸனாகப் போவதற்கு!

அன்று மடத்துக்குள் கொஞ்சம்தான் கூட்டம் இருந்தது. தள்ளி நின்று கொண்டு, யாரோ போல் பெரியவாளை தர்ஶனம் பண்ணினார்.

நமஸ்காரம் பண்ணவில்லை.

ரெண்டு நாள் கழித்து, “என்ன? பெரியவாளை பாக்கப் போகலியா?”

கரிஸனத்தோடு மனைவியைக் கேட்டார். கூடவே போனார்.

இம்முறை pant-ல் இருந்து வேஷ்டிக்கு மாறியிருந்தார். உள்ளே போனதும், அவருடைய ப்ராரப்தம் அவருக்கு bye bye சொல்லிவிட்டதால், மாமறை முனிவன் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் பண்ணினார்!!

மறுநாளிலிருந்து கணவனும், மனைவியுமாக பெரியவாளை தினமும் தர்ஶனம் பண்ணப் போனார்கள். ஸாதாரண எட்டுமுழம் வேஷ்டியிலிருந்து பஞ்சகச்சத்துக்கு மாறினார்! க்ராப் தலையிலிருந்து குடுமிக்கு மாறினார்! பெரியவாளுடைய பெரிய படத்தை முதல்முறையாக ஆசையாக பார்த்துப் பார்த்து வாங்கினார். ஸதா பாராயணம், ஜபம் என்று ஶுத்தமான பக்தராக மாறிவிட்டார்..!

அவரை இப்படி மாற்றியது…. பெரியவாளின் நயன தீக்ஷை மட்டுமே! பெரியவா இத்தனைக்கும் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை!

நம் எல்லோருக்கும் பெரியவாளுடைய ஸ்மரண தீக்ஷை பாக்யமாக கிடைத்திருக்கிறது…. இனி எதற்கு பயம்? இதைவிட வேறென்ன வேண்டும்?
ravi said…
*53 மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள்*💐💐💐👁️👁️👁️

*தேவி பிரத்யக்ஷம், ஸகல லோக வச்யம்*

விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜனதயா

விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித மீஶானதயிதே

புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி ருத்ரானு ப்ரதான்

ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ 53👌👌👌
ravi said…
பரமசிவனுடைய அன்பிற்கு உரியவளே!

அழகுக்காக இட்டுக் கொள்ளப் பட்ட மையினால் மூன்று வர்ணங்களை இன்னும் தெளிவாகப் பிரித்துக் காட்டும் இந்த உன்னுடைய கண்கள் மூன்றும் பிரளயகாலத்தில் உன்னிடம் ஒடுங்கிய பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற தேவர்களை மறுபடியும் தோற்றுவிப்பதற்கு

ரஜோகுணம், ஸத்துவகுணம், தமோகுணம் என்ற மூன்று குணங்களையும் தரித்துக் கொண்டாற்போல் விளங்குகிறது.👁️👁️👁️🦜🦜🦜
ravi said…
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

பெண்பிள்ளை ரகசியம்

ஆழ்வார்களில் நம்மாழ்வார் மீது மட்டும் அன்பு பூண்ட மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊரான திருக்கோளூருக்கு ராமானுஜர் வந்த வேளையில், ஒரு பெண்மணி மோர் விற்க ஊரை விட்டு வெளியே செல்லக்கண்டார்.

அவர் அவளிடம் தேடி போகும் ஊர் என இவ்வூரைபற்றி பிறர் சொல்ல, நீயோ வெளியே செல்கிறாயே என்றார். அவளும் சலிக்காமல், முயல் புளுக்கையை எங்கே விட்டால் என்ன? அதில் என்ன மாற்றம் இருக்கும்? என்றாள்.

ஆச்சரியமுற்ற யதிராஜரிடம் பெரியார் செய்த 81செயல்களை சுட்டி காட்டி, அப்படி நான் இருந்தேனா என்கிறாள். இதில் 79ஆவதாக சொல்லப்படும் எம்பார் என்பவர் ராமானுஜரின் தம்பி முறை. சிவபக்தி செய்தவர்.

இதில் ராமானுஜரை பற்றியுமே கூட வருகிறது. அப்பெண்மணி கூறியது திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனப்படுகிறது. வரலாற்று குறிப்பு தரும் அவை ....👍👍👍
ravi said…

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!
2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!
3. தேகத்தை விட்டேனோ ரிஷி பத்னியைப் போலே!
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே!
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே!
9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே!
10.முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!
ravi said…
11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12.எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!
13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14.அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15.ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!
16.யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18.அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20.அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!
ravi said…
21.தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22.தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23.ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24.ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25.அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!
26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29.கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!
ravi said…
31.குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33.இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!
34.இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35.இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
37.அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38.அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39.அனுப்பி வையுமென்றேனோ வசிஷ்டரைப் போலே!
40.அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
ravi said…
41.மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45.வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!
46.வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47.அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48.அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49.இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50.இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!
ravi said…
51.இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52.இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே!
53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54.கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55.இருகையும் விட்டேனோ திரெளபதியைப் போலே!
56.இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57.இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58.நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!
ravi said…
61.அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே!
62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63.அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!
66.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67.அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே!
68.கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே
ravi said…
71.சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!
73.உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74.என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75.யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!
76.நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79.வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே!
80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!
81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

இனி ஒவ்வொன்றைப் பற்றியும் பார்ப்போம்
ravi said…
1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரைப் போல

அக்ரூரர், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர்.

ஆனாலும் அவர் பணியாற்றியது கம்சனின் அரண்மனையில்.ஆனாலும், அவரது சிந்தனை எப்போதும் கிருஷ்ணனைப் பற்றியே!

கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் ஒரு திட்டம் தீட்டினான்.புதிதாக தனுர் யாகம் ஒன்றை நடத்தி, அதற்கு கிருஷ்ணரையும், ப்லராமனையும் அழைத்து வரச் செய்து, ஒரு மல்யுத்தத்தில் அவர்களைக் கொல்ல திர்மானிக்கிறான்.எனவே, வசுதேவரின் சகோதரர் ஆ ன அக்ரூரரை அனுப்பி இருவரையும் அழைத்து வரச் சொன்னான்.
ravi said…
அக்ருரருக்கு ஒரே சந்தோசம்.கண்ணனை நேரில் பார்க்கலாம் என.அந்த சந்தோஷத்தில், கம்சன், கண்ணனைக் கொல்லவே அழைத்து வரச் சொல்கிறான் என்பதை மறந்து விட்டார்.

மனதில் கிருஷ்ணனை சந்திக்கப் போகும் நிகழ்ச்சியை அசை போட்டவாறே யமுனை நதிக்கரையில் இருந்த பிருந்தாவனத்திற்கு செல்கிறார்.அங்கு கண்ணனைக் கண்டு பேசினார்.அவரை அழைத்துச் செல்ல வந்ததாகக் கூறினார். கண்ணனும், கம்சனின் ராஜ்ஜியத்திற்குள் செல்லும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆகவே மறுப்பு ஏதும் சொல்லாது பலராமனுடன் கிருஷ்ணனும் கிளம்பினார்
.
ravi said…
இப்போதும் நந்தகௌன் என்னும் இடத்திலிருந்து கண்ணனை அக்ரூரர் தேரில் அழைத்துச் சென்ற வழித்தடம் உள்ளது

அப்படிப்பட்ட அக்ரூரரைப் போல கண்ணனை அழைத்துவரப் போனவளா நான்? என்று கேட்டாள் அப்பெண்
ravi said…
*தேன்கூடு தினம் ஒரு கதை*

_*நீ நீயாக இரு..*_

இரண்டு வெவ்வேறு குருக்களின் சீடர்கள் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார்கள்..

ஒரு சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்..

*என் குரு மாயா ஜாலங்களின் மன்னர்.. ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார்.. இப்படிப் பல அதிசயங்களைச் செய்வார்..*

*உன் குரு என்ன செய்வார்?* என்று மற்ற சீடனிடம் கேட்டான்...

அதற்கு அந்த சீடன்..

*எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார்’..*

*நீ சொல்வது போல் எதுவும் என் குரு செய்ததை நான் இதுவரை பார்த்தது இல்லை..*

*எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என அவரிடமே விசாரித்து விட்டு வருகிறேன்..* என்றான்..

அடுத்த நாள் இரண்டு சீடர்களும் சந்தித்துக் கொண்டார்கள்...

*'என்ன உன் குருவிடம் விசாரித்து வந்தாயா?* என்று கேட்டான்..

*ஆமாம், என் குருவிடம், உங்களுக்குஎன்னென்ன மாயஜாலங்கள் தெரியும்?* என்று கேட்டேன்..

*அதற்கு அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்* என்று என் குரு சொன்னார்..

மற்றும், *சாதாரண மனிதனாகவே இரு.. அதுதான் உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்..* என்றார் என்றான்..
🐝

*_உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைப் பண்ணுங்க.. அவங்க பண்றாங்க, இவங்க பண்றாங்க என்று உங்கள் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டாம்.. மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாவிட்டாலும்_ _நீங்கள் நீங்களாகவே இருங்கள்.._*

🙏
Kousalya said…
Krishna... You got clearcut explanation for all your actions...Excellent verses.. Jai Shri Krishna Krishna Krishna Hare 🙏🙏🌷🌷
Lakshmi Balaraman said…
அபாரம்
இங்கே தான் ஆண்டவன் ச்ருஷ்டி
காருண்யம் தாய்மை நெஞ்சை
தொட்டது. அவளே சோதனை
அவளே வேதனை அவள் தான்
இந்த உலகத்தில் பார்க்கின்ற
அத்தனை ஜீவராசிகளுக்கும்
உயிர். உடல் அனைத்தும் 🙏🙏
ravi said…
*ராவணன் அரண்மனை*

நவரத்தினங்கள் சிரித்தன ...

கோமேதகம் கேட்டது ... அங்கே வரும் சிங்கம் யாரென்று தெரியுமா ?

வைடூரியம் பதில் உரைத்தது ...

பரமேஸ்வரன் அவன் .. நந்தி வாகனன் நான்மறை போற்றும் நாயகன் நம்பியோரின் நலம் காப்பவன் ...

வைரம் ஜொலித்து சொன்னது ...

இவன் அந்த குமரன் ... அழகன் , சுந்தரன் , நம்மை மீட்க வந்த உமையின் மைந்தன்

பவழம் பலமாய் சிரித்தே சொன்னது ... போடி பயித்தியம் ...

இவன் தான் காலன் ... ராவணன் காலம் தனை முடிக்க வந்தவன்

முத்துக்கள் தித்திப்பாய் சொல்லின ...

பரமனோ , குமரனோ , காலனோ ... நம்மை காக்க வந்த தெய்வம் ... சீதையை மீட்க வந்த வடிவம் ...

இனி பிறக்கும் நாட்கள் அனைத்தும் ஆனந்தமே ... ஆடுவோம் வாருங்கள் பள்ளு பாடுவோம் ... கூடுங்கள் .... 🦜🦜🦜🦚🦚🦚
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 731*🥇🥇🥇

*US 723*

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

அஷ்டமம் ஸதகம் ( 8 ஆம் ஸதகம்) 💐💐💐

ஏகோநத்ரிம்ஸ ஸ்தபக - 29 வது ஸ்தபகம் 🦜🦜🦜

நவவிதபஜனம் ( மதலேகா வ்ருத்தம்) 🦚🦚🦚
ravi said…
ஸ்லாக்யம் புஷ்யதி காமம் ப்ரேமா ஸ்வப்ரமதா யாம்

ஸர்வானீ பத பக்திர் நித்யாய ப்ரமதாய

அம்மா உன் மீது வைத்திருக்கும் அன்பும் ஆசையும் என்றுமே அனையாத திருவிளக்கு... என்றும் அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் ... 🦜🦜🦜
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*

*பதிவு 157*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇

33
ravi said…
ஸ்ஃபுரன் மத்யே சுத்தே நக கிரண துக்தாப்திபயாஸாம்

வஹன்னப்ஜம் சக்ரம் தரமபி ச லோகாத் மகதயா

ச்ரிதோ மாத்ஸ்யம் ரூபம் ச்ரிய மபி ததானோ நிருபமாம்

த்ரிதாமா காமாக்ஷ்யா பத நலின நாமா விஜயதே


அம்மா நீயே திருமால் உறையும் இடமாக இருக்கிறாய் ... உன் பாதங்களில் இல்லாத தேவர்களே இல்லை ... நீ யே எல்லாம் ... எங்கும் எதிலும் உன்னையே நான் பார்க்கிறேன் 🦚🦚🦚
ravi said…
ஜகந் நாதாஷ்டகம்

1.கதாசித் காலிந்தீதட விபினஸங்கீதக வரோ

முதா கோபீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப: I

ரமா சம்பு ப்ரஹ்மாமரபதி கணேசார்சிதபதோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

ஒரு சமயம் யமுனையாற்றின் கரையில் காட்டில் ரீங்கார கானம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் கோபியாஸ்திரீகளின் முக கமலங்களை மொய்க்கும் வண்டாக இருந்தவர். லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணபதி ஆகியோர் சேவைகளை ஏற்கும் ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!
ravi said…
2.புஜேஸவ்யே வேணும் சிரஸி சிகிபிஞ்சம் கடிதடே

துகூலம் நேத்ராந்தே ஸ்ஹசரகடாக்ஷம் ச விதத் I

ஸதா ஷ்ரிமந் ப்ருந்தாவனவஸதி லீலா பரிசயோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

தன் இடது கையில் புல்லாங்குழலும், தலையில் மயில் தோகையும், இடுப்பில் பீதாம்பரமும், கண்களில் கடாக்ஷமும் வைத்துக்கொண்டு எப்பொழுதும் ப்ருந்தாவனத்தில் வாழும் பாங்குடன் விளங்கும் ஜகந்நாதஸ்வாமி என் கண் முன்னே தோன்ற வேணுமே.
ravi said…
3.மஹாம்போதேஸ்தீரே கனகருசிரே நாலசிகரே

வஸன் ப்ராஸா தாந்த:ஸஹஜபலபத்ரேண பலிநாமி

ஸுபத்ராமத்யஸ்த:ஸகலஸுரஸேவாவஸரதோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

பெருங்கடற்கரையில் நீலஒடுவேய்ந்த தங்கமயமான மாளிகையினுள் தன்துஸஹோதரர் பலராமுடன், ஸுபத்ரையின் பக்கத்தில் தேவர்கள் வழிபட வாய்ப்பளிக்கும் ஜகந்நாத ஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!
ravi said…
4.க்ருபாபாராவார:ஸஜலஜலதச்ரேணி ருசிரோ

ரமாவாணீ ஸோமஸ்புர தமல பத்மோத்பவ முகை: I

ஸுரேந்த்ரை:ஆராத்ய:ச்ருதிகண சிகா கீதசரிதோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

கருணைக்கடல், அவர், நீருண்ட மேகம் போன்ற அழகுடையவர், லக்ஷ்மி, ஸரஸ்வதி, சந்திரன் பிரம்மா முதலிய தேவர்கள் வழிபட, உபநிஷதங்கள் போற்றப்பாடும் சரிதையுடையவராத்திகழும் ஜகந்நாதஸ்வாமி என் கண் முன்னே தோற்றட்டுமே!
ravi said…
5.ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை:

ஸதுதிப்ராதுர்பாவம் ப்ரதிபதமுபாகர்ண்ய ஸதய: I

தயாஸிந்து:பந்து:ஸகல ஜகதாம் ஸிந்துஸுதயா

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

ரதத்திலேறி iF வலம் வரும்போது, வழியில் கூடிய பிராமணர்கள் பாடும் ஸ்தோத்திரப்பாடலை ஒவ்வொரு அடியிலும் கேட்டு பரிவுகொள்ளும் கருணைக்கடலாய், ஸகல உலகிற்கும் லக்ஷ்மியுடன் பந்து வாய்த்திகழும் ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே.
ravi said…
6.பரப்ரஹ்மாபீட:குவலய தலோத்புல்ல நயனோ

நிவாஸீ நீலாத்ரௌ நிஹிதசரணோsனதசிரஸி I

ரஸானந்தோ ராதா ஸரஸவபுராலிங்கனஸுகோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

பரப்ரஹ்மமேயான முடியழகையுடையவரும், கருநெய்தல் போன்ற மலர்ந்த கண்களையுடையவரும், நீலமலையில் தங்கியிருப்பவரும், ஆதிசேஷன் தலையில் கால்வைத்திருப்பவரும், ரஸானந்தம் மேலிட்டவரும், ராதையின் ஆலிங்கனத்தால் சுகங்கொண்ட வருமான ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டும்.
ravi said…
7.ந வை ப்ரார்த்யம் ராஜ்யம் நச கனகதா போகவிபவே

ந யாசே ஷிஹம் ரம்யாம் நிகிலஜனகாம்யாம் வரவதூம் I

ஸதாகாலே காலே ப்ரமதபதினா கீதசரிதோ

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

எனக்கு ராஜ்யம் வேண்டப்பட்டதன்று. அனுபவிக்கும் செல்வத்திலும் தங்கம் வேண்டேன். அழகிய அனைவரும் விரும்பும் படியான மணப்பெண்ணையும் வேண்டேன். அவ்வப்போது பரமேச்வரன் போற்றிப்பாடும் சரிதம் வாய்ந்த ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டும்!
ravi said…
8.ஹர த்வம் ஸம்ஸாரம் த்ருததரமஸாரம் ஸுரபதே

ஹர த்வம் பாபானாம் விததி மபராம் யாதவபதே I

அஹோ தீநாநாதம் நிஹிதமசலம் பாது மநிசம்

ஜகந்நாத:ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே II

ஹேதேவபதே!ஸாரமற்ற ஸம்ஸாரத்தை சீக்ரமே விலக்கிவிடு. ஹேயதுபதே!மற்றொறு பாபக்குவியலை விலக்கிவிடு. ஏழை எளியோரையும், அருகில் உள்ள நீலமலையையும் அனவரதமும் காக்கவேண்டி ஜகந்நாதஸ்வாமி என் கண்முன்னே தோன்றட்டுமே!

ஜகந் நாதாஷ்டகம் முற்றிற்று.

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53