பச்சைப்புடவைக்காரி --- ஒரு கல்லிலே மூணு மாங்காய் (129)

பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

ஒரு கல்லிலே மூணு மாங்காய் 

(129)


ரவி  உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? ஸ்ரீ ராமஜெயத்தை முதன் முதலில் எழுதியவர் யாரென்று ? 

தெரியாது தாயே ...... ஆஞ்சநேயராக இருக்கலாம் .... 

இருக்கலாம் இல்லை அவரே தான் --- ராவணன் யுத்தம் முடிந்து ராமன் வெற்றிப்பெற்ற செய்தியை அனுமன் தலை மீது சுமந்துகொண்டு சீதை இருக்கும் அசோக வானம் செல்கிறான் -- கண்களில் கண்ணீர் முட்டுகிறது -- அன்னையை அண்ணலுடன் சேர்த்து வைக்கப்போகும் வைபோகம் - எவ்வளவு நாட்கள் காத்திருந்தான் - இந்த நல்ல நாளுக்காக ..... 

பட்ட கஷ்ட்டங்கள் ஒன்றா இரண்டா ?  அன்னையின் ஆத்ம தியாகத்தின் எண்ணங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி ... ராமன் இனி மரம் செடி கொடி நதி  மேகம் பறவைகள் விலங்குகள் இவற்றிடம் என் சீதை எங்கே என்று கேட்கமாட்டான் ... 

பாவம் லக்ஷ்மணன் இனி ஊர்மிளாவுடன் நாட்களை நகர்த்தலாம் ... பரதன் , சத்ருகன் இனியும் துறவறம் பூண்டிருக்க  தேவை இல்லை .... 

ஜனகரும் அவர் மனைவியும் தன மகளை மீண்டும் பெற்றதற்காக மகிழ்ச்சி கடலில் நீந்துவார்கள் , 

அன்னை கைகேயி , சுமித்திரை கௌசல்யா இவர்களின் சந்தோஷத்திற்கும் இனி அளவில்லை --- 

எனக்கும் நிரந்தரமாக ஒரு தாய் கிடைத்துவிட்டாள் --- இப்படி ஆனந்த எண்ணங்களில் மூழ்கிய அனுமனால் பேச முடியவில்லை - 



சீதையை பார்த்ததும் தேம்பி தேம்பி அழுகிறான். அவள் பாதங்களில் புரண்டு புரண்டு கதறுகிறான் - அள்ளி எடுத்த சீதையிடம் பேசமுடியாமல் தரையில் ராமனுக்கு ஜெயம் என்று எழுதி காண்பிக்கிறான் 

அதுதான் முதன் முதலாக  எழுதப்பட்ட ஸ்ரீ ராமஜெயம் ---- ராமனுக்கு ஜெயம் சீதையால் தான் கிடைத்தது என்று காண்பிக்க ராமஜெயத்துடன் அனுமன் "ஸ்ரீ " யை சேர்த்துக்கொள்கிறான் அதுவே ஸ்ரீராமஜெயம் . 

இதை தொடர்ந்து ஒரு உண்மை சம்பவத்தையும் உனக்கு சொல்கிறேன் .. 

சொல்லுங்கள் தாயே - கேட்க  ஆவலுடன் இருக்கிறேன் ... 

ராமஜெயம் அம்மாள் என்னும் அந்தப் பெண்மணியின் தங்கச்சங்கிலியை ஒரு திருடன் மலைப்படிகளிலேயே அறுத்தெடுத்துக் கொண்டு ஓடிவிட, அதைப் பார்த்த உபாசகர் அப்படியே விக்கித்துப் போனார். 

உபாசகரின் வயது அவனைத் துரத்திச் செல்ல அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்மணியோ கதற ஆரம்பித்து விட்டார். அப்போதுதான் அவர் அந்தத் திருடன் அறுத்துச் சென்றது ஒன்பது பவுனிலான தனது தாலிச் சங்கிலி என்பதையும் தெரிந்து கொண்டார். அது இன்னமும் கலக்கத்தைக் கொடுத்தது.

உபாசகரும் அந்த அம்மாளை நெருங்கி ஆறுதல் கூற முற்பட்டார்.

“ஐயோ சாமி… அவன் என் கழுத்துல வேற எந்த நகையை அறுத்துட்டுப் போயிருந்தாலும் நான் இவ்வளவு கவலைப்பட மாட்டேன். அவன் கொண்டு போனது என் தாலியை…” என்றபோது உபாசகருக்கு மேலும் அதிர்ச்சியாகியது.

“சாமி… கோவிலுக்கு வந்த இடத்துல இப்படி நடந்துடுச்சே… அப்ப என் புருஷனுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமா? எனக்கு பயமா இருக்கு சாமி” என்று கண்ணீர் விட்டு அழுதார் அந்தப் பெண்மணி. சுற்றிலும் வேறு சிலர் கூடி விட்டனர்.

“ஹூம்… எல்லாம் கலிகாலக் கொடுமை” என்றார் ஒருவர்.



“இன்னும் ஏம்மா சும்மா இருக்கீங்க… போய் முதல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்க…” என்றார் இன்னொருவர்.

“ஆமா… உடனே போய் திருடனைப் பிடிச்சுட்டுத் தான் அவங்களும் மறுவேலை பாப்பாங்க…” என்றார் மூன்றாமவர். இப்படி ஆளுக்கு ஆள் பேச்சு.

அந்தப் பெண்மணியோ சட்டென்று ஒரு வைராக்கியத்துக்கு மாறினார்.

“அய்யா நான் அந்த ராமனுடைய பக்தை. இதுவரை பல கோடி முறை ராம நாமத்தை எழுதியிருக்கேன். ஜெபிச்சுமிருக்கேன். அதனால என்னையே ராமஜெயம் அம்மான்னுதான் கூப்பிடுவாங்க. அப்படிப்பட்ட எனக்கு இப்படி ஆயிடுச்சுன்னா அதுகூட அந்த ராமனோட எண்ணமாகத்தான் இருக்கணும். இதை நான் நல்லதுக்குன்னே எடுத்துக்கறேன்” என்றார்.

எல்லாருக்குமே அந்த அம்மாவின் பேச்சு ஆச்சரியம்தான் தந்தது. ஆனால் உபாசகர் மனம் மட்டும் சஞ்சலப் பட்டபடியே தான் இருந்தது. அந்த அம்மாவும் சட்டப்படி போலீஸ் கம்ப்ளைன்ட் தருவதற்காகச் செல்ல, உபாசகர் திரும்ப மலைமேல் ஏறினார். திருச்சந்நிதிக்குச் சென்று அப்படியே நின்று விட்டார். அவருக்குள் பெரும் எண்ணப் போராட்டம்!

ஒரு கோயிலில் இப்படி ஒரு அடாத செயல் நடந்துள்ளது. இதை கேள்விப்படுபவர்கள் ‘கோவிலிலேயேவா’ என்றுதான் முதலில் கேட்பார்கள். அடுத்து ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா’ என்ற கேள்விக்குத் தாவி விடுவார்கள். ‘அவர் இருந்தால் தன்னுடைய இடத்திலேயே இப்படி எல்லாம் நடக்க விடுவாரா’ என்றும் கேட்பார்கள்.

எப்படிப் பார்த்தாலும் இந்த திருட்டுச் சம்பவம் எல்லா வகையிலும் தவறானதாக ஜீரணிக்க – முடியாததாகவே இருப்பதை அவர் புரிந்து கொண்டு கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.

அவர் ராமனுடைய வரலாறை கரைத்துக் குடித்திருப்பவர். ஆந்திராவில் பத்ராசலம் என்றொரு இடம். அங்கே ஒரு ராமர் கோவில் மிகப் பிரபலம். அந்த ஊரை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நவாப் தான் ஆண்டு வந்தான். தானீஷா என்பது அவன் பெயர். 

அவன் ஆட்சியில் கோபண்ணா என்பவர் பத்ராசலத்தின் தாசில்தாராக இருந்தார். இந்த கோபண்ணா தான் ராமர் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர். அதற்குப் பணம் தேவைப் பட்டபோது, மக்களிடம் வரியாக வசூலித்த பணம் இருந்தது. அந்தப் பணத்தை அப்படியே கோவில்கட்ட செலவிட்டு விட்டார். 

இதையறிந்த தானீஷா, ‘எனக்கான வரிப்பணத்தை எடுத்து என்னிடம் அனுமதி வாங்காமல் நீ எப்படி கோவில் கட்டலாம்’ என்று கேட்டு அவருக்கு 12 வருட சிறைத் தண்டனையை விதித்து விட்டான். 

கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். இந்த நிலையில் ராமபிரான் லட்சுமணனுடன் வேடர்கள் வடிவில் வந்தான். 



தானீஷாவைச் சந்தித்து, கோபண்ணா சார்பாக அவர் கோவில் கட்ட செலவழித்த அவ்வளவு பொற்காசுகளையும் திரும்பக் கொடுத்தார். தானீஷாவும் கோபண்ணாவை விடுதலை செய்தான். பிறகு தான் தனக்காக வந்து தானீஷாவிடம் பணம் கட்டியது சாட்சாத் அந்த ராமனும் லட்சுமணனுமே என்பது தெளிவானது.

ராமபிரான் தன் பக்தர்களைக் காப்பாற்ற இப்படி பல தருணங்களில் திருவிளையாடல் புரிந்துள்ளார். அதெல்லாம் கோவிலின் திருச் சந்நிதியில் நின்றபடி இருந்த உபாசகருக்குள்ளும் ஓடியது. அவர் மனமும் ராமஜெயம் அம்மாள் வரையிலும் ராமன் அதுபோல் ஒரு அற்புதம் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தது. அதன் நிமித்தம் அவர் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து, அனுமனுடைய மூல மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே தியானத்தில் அமர்ந்து விட்டார்.

அவருக்கு இப்போது ஒரே நோக்கம்தான்!

ராமஜெயம் அம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதாவது தொலைந்த நகை திரும்பக் கிடைப்பது மட்டுமல்ல; அந்தத் திருடன் தண்டிக்கப்படவும் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கி விட்டார். அப்படி ஒரு நல்லது நடக்கும் வரை உணவு உண்ணப் போவதில்லை என்று சங்கல்பமும் செய்து கொண்டார்.

இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற ராமஜெயம் அம்மாளும் புகார் கொடுத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். 

அந்த அம்மாளின் வீடு மிகப் பெரியது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள். அவர் வீட்டுக்குள் நுழைந்து நடந்ததை உறவினர்களிடம் கூறிவிட்டு நிதானமாக கொல்லைப்புறம் செல்லவும், அங்கிருந்த மரத்தில் குரங்கொன்று உட்கார்ந்தபடி இருந்தது. 

அதை ராமஜெயம் அம்மாள் கவனிக்கவில்லை. ஆனால் அதுவோ அந்த அம்மையாரைப் பார்த்தது. பின் தன் கையை உயரத் தூக்கியது. அப்போது அதன் கையில் ராமஜெயம் அம்மாளின் தங்கச் சங்கிலி. அதை அம்மாள் மேல் வீசி எறிந்தது. 

சொத்தென்று தன்மேல் வந்து விழுந்த சங்கிலியைப் பார்க்கவும் அந்த அம்மாளுக்கு ஒரே மகிழ்ச்சி. நிமிர்ந்து பார்த்திட குரங்கு தெரிந்தது. அடுத்த நொடியே ‘ஆஞ்சநேயா’ என்றுதான் பரவசமானார் அந்தப் பெண்மணி. 

ஆனால் அந்தக் குரங்கு வேகமாய் ஓடிவிட்டது. கொல்லையிலிருந்து சங்கிலியும் கையுமாக வந்த அந்தப் பெண்மணி திரும்பவும் நடந்ததைக் கூறவும் எல்லாருக்கும் ஒரே வியப்பு!

“அந்தக் குரங்கு நிச்சயம் ஆஞ்சநேயர்தான். எனக்குச் சந்தேகமில்லை” என்று பக்திப் பரவசத்துடனேயே கோயிலுக்குப் புறப்பட்டார்.



திருநீர்மலைக்கு வந்து படிகளில் அவர் ஏறத் தொடங்கும்போது, கீழே கடை போட்டிருந்தவர்கள் ஓடிவந்து என்ன நடந்தது என்று கேட்டனர். ராமஜெயம் அம்மாள் கூறவும், அப்படியே வாயைப் பிளந்து விட்டனர்.

“இப்பதான் தெரியுது. பேண்ட் சட்டை போட்ட ஒருத்தன் தலைதெறிக்க ஓடினான். பார்த்தப்போ குரங்கு ஒண்ணு அவனைத் துரத்திக்கிட்டே வந்துச்சு. அநேகமாக அவன்தான் சங்கிலியைத் திருடியிருக்கணும். துரத்தின குரங்கு எப்படியோ அவன்கிட்ட இருக்கற சங்கிலியைத் தட்டிப் பறிச்சிருக்கணும்” என்றார் ஒருவர்.

ராமஜெயம் அம்மாளும் அதை ஆமோதித்தவராக மலை ஏறினார். உபாசகர் சந்நிதியிலேயே இருந்தார். அவரிடம் ‘சாமி நகை கிடைச்சிடுச்சு’ என்று ராமஜெயம் அம்மாள் கூறவும், உபாசகர் கண் மலர்ந்தார். 

அப்பாடா என்றிருந்தது. “இப்ப நினைச்சாலும் பிரமிப்பாக இருக்கு. கரெக்ட்டா என் வீட்டுக்கு வந்து அது நகையை திருப்பித் தந்ததை நினைச்சா எனக்கு புல்லரிக்குது” என்று கூறி கண்ணீர் சிந்தினார். பிறகு தான் அடுத்தடுத்து பல தகவல்கள் வரத் தொடங்கின.

அந்தத் திருடன் பல வருடங்களாகவே திருநீர் மலைக்கு வருபவர்களிடம் திருடியுள்ளான். கோவில் உண்டியலை உடைக்கவும் முயன்று தோற்றவனாம் அவன். அப்படிப்பட்டவன் ஓடவும், குரங்கும் துரத்தியுள்ளது. தலைதெறிக்க ஓடியவன் சாலையில் எதிரில் வந்த லாரியில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டிருக்கிறான். 

அப்போது சங்கிலியும் எங்கோ போய் விழ, அதைத்தான் குரங்கும் எடுத்துவந்து தந்துள்ளது. அடிபட்ட அவன் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரிய வந்தது. ராமஜெயம் அம்மாள் அப்படியே அதைக் கேட்டு விக்கித்துப் போனார். உபாசகர் தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

ராமஜெயம் அம்மாள் வீடு திரும்பினார். அவர் கணவர் எதிரில் கை கால்களிலெல்லாம் கட்டுப் போட்டுக் கொண்டு வந்தார். என்னாயிற்று என்று கேட்ட போது, வரும் வழியில் ஒரு விபத்து நேர்ந்து விட்டதையும் அதில் உயிர் பிழைத்ததே பெரும்பாடு என்றும் கூறினார். ராமஜெயம் அம்மாளுக்கு உடனேயே பல உண்மைகள் புரிந்து விட்டன. பெரிதாக தனக்கு வர வேண்டிய ஒரு துன்பம்தான் இப்போது சிறிதாக தாங்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்று.



அப்போது உபாசகரும் அங்கு வந்தார். அதை ராமஜெயம் அம்மாள் எதிர்பார்க்கவில்லை. அவரை வரவேற்று அமரச் செய்து உபசரிக்கத் தொடங்கினார். அப்போது உபாசகரும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுவதற்காக வந்ததைக் கூறி, சொல்லத் தொடங்கினார்.

“அம்மா… மலைல உங்களுக்கு ஏற்பட்டது ரொம்ப வருத்தமான விஷயம். நான் உடனேயே மலைக் கோவிலுக்குப் போய் உபாசனைல உட்கார்ந்துட்டேன். கோவில்லயே இப்படியெல்லாம் நடந்தா எப்படிங்கறதுதான் என் பிரதான வருத்தம். 

எப்பவும் என் உபாசனா சமயத்துல அனுமன் பிரத்யட்சமாகறது உண்டு. அப்பவும் என் சங்கர சுவனன்  வந்தான்.  "கவலைப்படாதே. எல்லாம் நல்ல விதமா முடியும். அந்த அம்மாவுக்கு தாலியை இழக்கற ஒரு தோஷம் இருக்கு. ஒரு நாழிகையாவது அவங்க தாலி இல்லாம இருக்கணும். அதேபோல் அவள் கணவருக்கும் கண்டம் இருக்கு. இரண்டு கணக்கையும் நேர் செய்து அவங்களுக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டியது என் கடமை. 

இது என் தெய்வமான ராமபிரான் உத்தரவு. என் தெய்வத்தோட நாமத்தை எப்பவும் உச்சரிக்கறதோட பலரையும் உச்சரிக்க வைச்சவங்க அவங்க. அவரை நான் கைவிட மாட்டேன்” அப்படின்னு சொன்னான். நான் கண்விழிக்கவும் நீங்களும் சங்கிலியோடு வந்து நின்னீங்க.

இங்க வரவும், உங்க கணவரும் விபத்துல தப்பி வந்தது தெரிஞ்சது. ஒரு பெரும் கெட்ட நேரத்தை அனுமன் மிகச் சிறியதா மாத்தி, விதிப்படியும் எல்லாம் நடந்த மாதிரி செய்துட்டான்.

ஒரு கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கறதுன்னு சொல்வாங்க. இங்க ஒரு கல்லுல இரண்டு இல்லை, மூன்று மாங்காய் அடிச்சிருக்கான். அதாவது உங்க தோஷம்,  உங்க கணவர் தோஷம் நீங்கி, அந்தத் திருடனுக்கு பாடம் புகட்டிட்டான். 

நான் அடுத்து ஆஸ்பத்திரிக்கு அவனைப் பார்க்கத்தான் போய்க்கிட்டிருக்கேன். வழில இத உங்கள பாத்து சொல்ல வந்தேன் ” என்றார் உபாசகர். ராமஜெயம் அம்மாள் மட்டுமல்ல; அவர் கணவரும் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

ரவி பார்த்தாயா ஸ்ரீ ராமஜெயத்தின் அருமையை --- ராமன்  தான் நேரில் வர  வேண்டும் என்பதில்லை -- பல சமயங்களில் வந்து உதவுவது ஆஞ்சநேயராகத்தான் இருக்கும் .... 

அம்மா .....அனுமனின் தொண்டு, பக்தி , சரணாகதி , மனதை கட்டுப்படுத்தும்  ஞானம் எங்கள் எல்லோருக்கும் வரவேண்டும் என்று ஆசீர்வதியுங்கள் தாயே ..

. 

கரங்கள் உயர்த்தி ஆசி சொன்னாள் அந்த கற்பகவல்லி ----- கண்ணனின் குழல் இசை போல் காற்றினில் கரைந்தும் போனாள் ......

Comments

Ramani said…
அஞ்சனை தனயன் ஆஞ்சனேயா!
நெஞ்சிலே எங்கள் சீதாராமனை நிறைவாக ஏற்றிட்டாய்!
சஞ்சீவி மலைதாங்கும் சிரஞ்சீவீ நீ!
என்றென்றும் பக்தருக்கருளும்
தெய்வம் நீ !

அனுமன் பற்றிய இப்பதிவு அற்புதம்..👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏
ravi said…
காலடியில் நின்றிருந்தேன் ...
கால் அடி ஓசை அதை கேட்டிருந்தேன் ...

சலங்கை அது ஜதி போட , தும்புரு இசை கேட்க , நர்த்தன ஒலி தனில் என் நாதனைப் பார்த்தேன் ..

பூர்ணா நதிக்கரையில் பூர்ண புண்ணியம் கிடைத்தது ...

காஞ்சி அன்று சென்றிருந்தேன் .. காமாக்ஷி கண் திறந்தாள் ..

காலங்கள் அது சென்றாலும் காட்சி அது மாறவில்லை ...

கண்டேன் காஞ்சி பெரியவரை .. கருணை கடல் அது என்னை அடித்து சென்றது ...

காசியை நான் விட்டு வைக்க வில்லை ... விஸ்வநாதனை பார்த்தேன் ..

விஸ்வம் நிறைந்தவன் ... வில்வம் அணிந்தவன் ... வேதம் போற்றுபவன் ...

விசாலாக்ஷியையும் போய் பார் என்றான் ...

விசாலமான பார்வை அது ... விஜயம் தரும் பார்வையிலே என் சுவாமிநாதனே அமர்ந்திருந்தான்

நாண்மாடக்கூடளுக்கும் நடந்து சென்றேன் ..

கிளிகள் பல என்னை தூக்கி சென்றது ...

கிண்கிணிகள் எங்கும் ஒலிக்க மரகதத்தை கண்டேன் ...

சங்கர சங்கர என்றே மணி தீபம் ஒளிரக்கண்டேன் .. 🦜🦜🦜🦚🦚🦚👍👍👍
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 57*
🌸🌸🌸🌸

மஹேஶ்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேஶ-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரீ ||57||
🌸🌸🌸🌸

महेश्वर महाकल्प महाताण्डव साक्षिणी |
महाकामेश महिषी, महात्रिपुर सुन्दरी ‖ 57 ‖
🌸🌸🌸🌸

mahesvara mahaakalpa mahaataandava saakshini
mahaakaamesa mahishi, mahaatripura sundari - 57
🌸🌸🌸🌸

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி – (232/234)*
🌸🌸🌸🌸

ஓம் மஹேஶ்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ ஸாக்ஷிண்யை நம;
ஓம் மஹாகாமேஶ-மஹிஷ்யை நம;
ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம;
🌸🌸🌸🌸

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் // ஸஹஸ்ர நாமாவளி விளக்கம்*
🌸🌸🌸🌸

*232.மஹேஶ்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ ஸாக்ஷிணீ* (மஹேஶ்வர-மஹாகல்ப-மஹா – தாண்டவ - ஸாக்ஷிணீ) - மஹேஶ்வரனது மஹா பிரளய காலத்திய மஹா தாண்டவத்திற்கு (ஊழித்தாண்டவம்) ஸாக்ஷியாக இருப்பவள்.
🌸🌸🌸🌸

*233.மஹாகாமேஶ-மஹிஷீ* (மஹா - காமேஶ - மஹிஷீ) – பெருமை மிக்க காமேஸனின் பட்டத்து ராணி.
🌸🌸🌸🌸

*234.மஹாத்ரிபுரஸுந்தரீ* (மஹா – த்ரிபுர- ஸுந்தரீ) – அறிபவன்(அடியவர்), அறியப்படும் பொருள் மற்றும் அறிவு(பக்தி) ஒன்றாகி அதன் நடுவே எற்றதாழ்வு இல்லாமல் இருப்பவள்.
🌸🌸🌸🌸
ravi said…
பாதி மதி உன் கேசம் அதில் மீதி மதியது உன் புருவம் தனில் ... இணைத்துப் பார்த்தேன் சாயி முழு நிலவாய் உன் முகம் ஒளிர்கிறதே சாயி ..

குவிந்த மலர்கள் மலரக்கண்டேன்... வாடிய பயிர்கள் பசுமை நிறம் பெறக்கண்டேன் ... இணைத்துப்பார்த்தால் உன் கருணை முகம் அதில் மிளிர்கிறதே சாயி

ஏழை அவன் சிரிக்க கண்டேன் .. ஏற்றமிகு வாழ்வு கண்டேன் ... பணக்காரன் படும் கஷ்டம் கண்டேன் ... இணைத்துப்பார்த்தால் இதுவும் உன் நாடகம் என்றே அறிய முடிகிறது சாயி ... 🦜🦜🦜🥇🥇🥇
ravi said…
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் 2

அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல (2)
பாண்டவர்களின் தூதுவனாக துவாரகையிலிருந்து கண்ணன் தன் தேரில் அஸ்தினாபுரம் வருகிறார்.

சபை மறுநாள்தான் கூடும்.அப்போதுதான் பேச்சை ஆரம்பிக்க முடியு.ஆகவே, அன்றிரவை யார் மாளிகையிலாவது கழிக்க வேண்டும்.ஒவ்வொருவரும், த்ங்களது மாளிகையில் கண்ணன் தங்க வேண்டும் என விரும்புகின்றனர்

ravi said…
அப்போது கண்ணனின் கண்ணில் தென்பட்ட ஒரு மாளிகையைப் பார்த்து கண்ணன்,"ஆஹா...இவ்வளவு பெரிதாக உள்ள மாளிகை யாருடையது?" என் கிறார்.

"கண்ணா, இது என் மாளிகை.நீ இங்கேயே தங்கலாம்" எங்கிறார் திருதிராஷ்டிரர்

கண்ணன் மறுத்து, அடுத்து ஒரு மாளிகையைப் பார்த்து'இது யார் மாளிகை?" என வினவ, பீஷ்மர், "கண்ணா, இது என் மாளிகை.நீ இங்கேயே தங்கலாம்" என் கிறார்

ravi said…
கண்ணன் அதையும் மறுத்து, மேலே செல்ல,அடுத்து ஒரு மாளிகையிலிருந்துசங்கீத ஒலி, நடன மாதுக்களின் நடன ஓசை கேட்க, "இது யார் மாளிகை?" என் கிறார்

"கண்ணா, இது என் மாளிகை.உல்லாசமானது.நீ இங்கேயே தங்கலாம்" என் கிறான் துரியோதனன்.

கண்ணன் அதையும் நாசுக்காக மறுத்து, அடுத்து ஒரு குடிலுக்கு வருகிறார்

"மனதிற்கு சாந்தியை ஏற்படுத்தும் இக்குடில் யாருடையது?" என் கிறார்.

"கண்ணா, இது உன் மாளிகை.நீ இங்கு உன் விருப்பம் போல தங்கலாம்" என் கிறார் விதுரர்.

சிரித்த கண்ணன், "நான் இதுநாள் வரை அடியார்கள் மனதை குடிலாகக் கொண்டிருக்கிறேன்." என்றார்

ravi said…
அதற்கு விதுரர், "ஆம் கண்ணா! அதேதான்.என் அகம் தான் இந்த அகம்.என் அகத்தினுள் நீ ஏற்கனவே இருக்கின்றாய்.எனவே, இந்த அகத்திற்குள் குடியேற உனக்கு என்ன வேண்டும்?' என்றார்

உலகவழக்கப்படி, குடியிருப்பவர்தான் வாடகைக் கொடுக்க வேண்டும்.இதயம் என்ற வீட்டினுள் இறைவனை குடிவைத்தவன், குடியிருப்பவனுக்கு பூவோ, பழமோ கொடுத்தால் போதும்.அவர்கள் மனதில் குடியேறிவிடுவேன்' என்றவர் கிருஷ்ணர்

அதனால்தான் விதுரர் உன் அகம் என் அகம் என்றார் (அகம் என்றால் வீடு)

வடமொழியில் அகம் எனில் அகங்காரம்.இறைவன் மனதில் குடியேறின் இந்த அகம் ஒழிந்துவிடும்

அதனால் தான் "அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல..(இல்லையே) அதனால் வெளியே செல்கிறேன்" என் கிறாள் அப்பெண்
ravi said…
*தேன்கூடு தினம் ஒரு கதை*

_*நம்பிக்'கை' வை*_

ஓர் அரசன் மிகவும் முன் கோபக்காரன்.. தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடிய வில்லை..

ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்து இருந்தார்.. அவரை சந்தித்து தன் குறையை சொன்னான் அந்த மன்னன்..
அவர் மன்னனிடம்..

*என்னிடம் அதிசயமான பொன்னால் செய்த ஒரு குவலை ஒன்று இருக்கிறது.. அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம் இல்லாமல் போய்விடும்* என்று சொல்லி அந்த குவளையை அவனிடம் கொடுத்தார்..

*உனக்குச் சினம் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக் குடி.. பிறகு சினமே வராது..* என்று கூறிவிட்டு சென்றார்..

ravi said…
அன்றில் இருந்து அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான்.. சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது..

பல வருடங்கள் சென்றன.. அந்த குவளையை கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார்..

அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவலை கொடுத்ததற்காக பலமுறை நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்..

*மன்னனே.. உன்னை ஏமாற்ற நான் விரும்ப வில்லை.. அது அதிசயமான குவளை அல்ல.. சாதாரணமான குவளைதான்..*

_*சினம்*_ *வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது.. சிந்தனை வந்தால் சினம்தானே குறையும்..*

*தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது.. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன..*

*ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது..* என்று கூறினார்..
🐝
_மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும், அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.._

_நாம் கோபப்படும் போது மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது.._

*_எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்.._*
🙏

ravi said…
Let us all pray ambal together to give us happiness, peace, prosperity ,good health and also free the entire world from this pandemic situation 🙏🏻🙏🏻🧎👏👏👏🧎🧎👏
Ambal saranam and kamakoti saranam 🙏🏻🙏🏻🙏🏻👏👏🧎🧎
Sarvo jana sukinobhanthu bhavanthu 🙏🏻🙏🏻🙏🏻👏👏👏🧎🧎
Samantha mangalanibhavanthu 🙏🏻🙏🏻👏👏👏🧎🧎
ravi said…


மூன்று புண்ணிய நதிகளைப் போன்ற கண் ரேகைகள்*

ஸர்வ பாப நிவ்ருத்தி, உபஸ்தரோக நிவாரணம்🍇🍇🍇👁️👁️👁️

பவிர்த்ரீ கர்த்தும் ந: பஶுபதி பராதீன ஹ்ருதய

தயாமித்ரைர் நேத்ரை ரருண தவல ஶ்யாம ருசிபி:

நத: ஶோணோ கங்கா தபன தனயேதி த்ருவமமும்

த்ரயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம் 54
ravi said…
பசுபதிக்கு ஆதீனமான உள்ளம் படைத்தவளே !

தயைக்குக் கூட்டாளிகளும் சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவைகளுமான உனது கண்களால்

மேற்கு நோக்கிச் செல்வதும் சிவந்ததுமான சோணபத்ரா என்ற ஆறு, வெளுப்பான கங்கை, சூரியபுத்திரியாகவும் கறுப்பு வர்ணம் கொண்டதாகவும் விளங்கும் யமுனை

என்ற மூன்று புண்ணிய நதிகளின் ஸங்கமமாகிய பாவத்தையெல்லாம் போக்கும் இக்கூட்டுறவை உன்னைக் காணும் – எங்களை புனிதமாக்குவதற்காக ஏற்படுத்தியிருக்கிறாய் என்பது நிச்சயம்.
ravi said…
நமசிவாயத் தெய்வம் நானறிந்த தெய்வம்!
சமயத்தில் துணைவரும் சதாசிவத் தெய்வம்!

இமையோர்கள் ஏத்தும் எழுல்மிகு தெய்வம்!
உமைதேவி ஓர்பாகமான அன்புத் தெய்வம்!

பிறவிப் பிணிதீர்க்கும் பெருந்துறைத் தெய்வம்!
புலியூரில் வாழும் பொற்சபைத் தெய்வம்!

அறிவாற்சிவனான ஆளுடை அடிகளை
அருகினில் கொண்ட அம்பலத் தெய்வம்!

சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!
பதஞ்சலி புலிப்பாணி போற்றும் தெய்வம்!

நிதம் சுகம் வாழ்வில் வளர்க்கும் தெய்வம்!
பதம் சொல் யாவையும் கடந்திடும் தெய்வம்!

நால்வர் நெஞ்சில் நிலைத்திட்ட தெய்வம்!
பால்போல் மனங்களில் பதிந்திடும் தெய்வம்!

வேல்விழி உமையாள் வணங்கும் தெய்வம்!
கால்தூக்கி ஆடும் கனகசபைத் தெய்வம்!

மறையீறும் அறியா முழுமுதல் தெய்வம்!
மூவருடன் தேவாசுரர் தொழுதிடும் தெய்வம்!

ravi said…
பிறைமதி உயிர்வாழ அருள்தந்த தெய்வம்!
பிறப்பும் இறப்பும் அற்றதோர் தெய்வ
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி!

புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி!
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி!
கருங் குருவிக்கன்று அருளினை போற்றி!


இரும்புலன் புலர இசைந்தனை போற்றி!
படியுறப் பயின்ற பாவக போற்றி!
அடியொடு நடுவீறு ஆனாய் போற்றி!

நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியர்கு அருளினை போற்றி!
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி!

செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி!

பிழைப்பு வாய்ப்பு ஒன்றறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி!

Savitha said…
Sriramaa jayam🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
Kousalya said…
Jai Shree Ram... Hanumanin thondu, Bhakti and samarpanam engalukkum kidaikka aruliyadu mikka nandrigal,, 👍👏👏🙏🙏🙏🙏
Sivaji said…
Arumai💐💐 Jai Sri Ram🙏🙏🙏
ravi said…
தூண்கள் பல பேசின ... நரசிம்மன் தூணில் இல்லை இதோ நடந்து வருகிறான் ...

தரைகள் கொஞ்சம் பேசின .. நடக்கும் தோரனையில் பிளந்து போவேன் நான்

சிம்மாசனம் பேசியது ... ராவணன் நாட்கள் இன்னும் கொஞ்சமே ... கெஞ்சினாலும் இவன் வாழான் ...

பணிப்பெண்கள் தமக்குள் பேசினர் ... பனிப்போர் நடக்கும் நேரம் ... பனிமலை தெய்வம் எதிரே ... காம்போதி ராகம் இனி என் செய்யும் ? 💐💐💐
ravi said…
பாண்டுங்காஷ்டகம்
1.மஹாயோக பீடே தடே பீமரத்யா :

வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !

ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பீமரதியாற்றின் கரையில் யோகபீடத்தில், புண்டரீகனுக்கு வரம் கொடுப்பதற்காக முனிவர்களுடன் வந்து அருள்பாலிக்கிற ஆனந்தமே உருவான, பரப்ரஹ்மவடிவமான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.
ravi said…
2.தடித்வாஸஸம் நாலமேகாவபாஸம்

ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !

வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

மின்னலொத்த வஸ்திரம் தரித்தவளும், நீலமேகம் போன்று விளங்குபவளும், லக்ஷ்மி வஸிக்குமிடமாயும், அழகானவளும், ஞானவடிவனாயும், இஷ்டகைக்கல்லில் ஸமமாக வைத்தக்கால்களையுடையவராயுமுள்ள பரப்ரஹ்மச் சுவரான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

ravi said…
3.ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்

நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !

விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

என்னையண்டிய பக்தர்களுக்கு ஸம்ஸாரக் கடலின் எல்லை இதுதான் என இடுப்பில் கை வைத்து காட்டுபவர் அவர். பிரம்மதேவன் வஸிப்பதற்கென்றே நாபியில் கமலத்தையும் தரிக்கிறார். அப்படிப்பட்ட பரம்பொருளின் ஸ்வரூபனான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.
ravi said…
4.ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே

ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !

சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

கழுத்தில் மிளிரும் கௌஸ்துப மணியையுடையவரும், (லக்ஷ்மி) அழகுடன் கூடிய தோள்வாளையணிந்தவளும், ஸ்ரீநிவாஸனும், மங்கல ஸ்வரூபியாயும், அருமைமிக்கப்பெருமாளாய் உலகத்தை காத்தருளும் பரப்ரஹ்மமேயுருவான பாண்டுரங்கனை வழிபடுகிறேன்.
ravi said…
5.சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்

லஸத்ருண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !

ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

சரத்கால சந்திரன் போன்ற முகம், அதில் அழகிய புன்சிறிப்பு, பளபளக்கும் குண்டலங்கள் தொங்கும் கன்னம், செம்பருத்தை அல்லது கோவைப்பழம் போன்ற உதடு, செந்தாமரையத்த கண்கள் - இவை பாண்டுரங்கனின் அடையாளங்கள். அவர் உண்மையில் பரம்ரம்மஸ்வரூபி அவரை நான் ஸேவிக்கிறேன்.
ravi said…
6.கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்

ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !

த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பத்து திசை மூலைகளிலும் பரவும் கிரீடப்ரகாச முள்ளவர். விலைமதிக்க முடியாத ரத்னங்களால் தேவர்கள் பாண்டுரங்கனை அர்ச்சிக்கின்றனர். மேலும் அவர் பற்பலவாகப் பரிணமிக்கும் வடிவங்கொண்டவர். மயில்தோகை, மாலைகள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பாண்டுரங்களை நான் ஸேவிக்கிறேன்.
ravi said…
7.விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்

ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !

கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

எங்கும் நிறைந்து எட்ட முடியாதவர். வேணுகானம் செய்யும் விளையாட்டு யாதவ வேஷம் பூண்டவர். இனிய புன்சிரிப்புடன் பசுக்கூட்டத்திற்கு ஆனந்தம் நல்குபவர். அப்படியான பரப்ரஹ்மஸ்வரூபி பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.
ravi said…
8.அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்

பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !

ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பிறப்பில்லாதவர் அவர், ருக்மிணியின் ப்ராணநாதராய், ஒன்றாய், துரீயமாய், பெரும் ஒளியாய், எப்பொழுதும் ப்ரஸன்னராய் சரணடைந்தவரின் துயரை நீக்குபவராய் தேவதேவராயும் திகழ்ந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.
ravi said…
9.ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே

படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !

பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே

ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!

புண்யமான இந்த பாண்டுரங்கனின் ஸ்தோத்திரத்தை எவரெவர் பக்தியுடனும் ஒரே மனதுடனும் படிக்கிறார்களோ அவரவர் ஸம்ஸாரமாகிய கடலைத் தரித்து கடைசீ காலத்தில் ஹரியின் அந்த சாச்வதமான இடத்தையே அடைவர்.

பாண்டுங்காஷ்டகம் முற்றிற்று.
ravi said…
ஹரிமீடே - ஹரிஸ்துதி
1.ஸ்தேஷ்யே பக்த்யா விஷ்ணுமநாதிம் ஜகதாதிம்

யஸ்மின் ஏதத்ஸம்ஸ்ம்ருதிசக்ரம் ப்ரமதீத்தம் I

யஸ்மின் த்ருஷ்டே நச்யதி ஸம்ருதிசக்ரம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஸம்ஸாரம் ஆகியபேரிருளைக்களைய வல்ல ஹரியை நான் ஸ்தோத்திரம் செய்கிறேன். அந்தஹரி விஷ்ணுவே, அவர் தோன்றிய விதம் தெரியவில்லை. ஆனால் உலகம் தோன்றக்காரணமாவர். இவ்வாறு உலகியல் சுழல்வதற்கும், பின் அதுவே அவரால் மறைவதற்கும் காரணம்.
ravi said…
2.யஸ்யைகாம்சாத் இத்தமஷேம் ஜகதேதத்

ப்ராதுர்பூதம் யேந பிநத்தம் புனரித்தம் I

யேநவ்யாப்தம் யேந விபுத்தம் ஸுகது:கை:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

இங்கிவ்வேறு தோற்றமளிக்கும் உலகம் முழுதும் அவரது சிறு துளியால் தோன்றி பின்னும் அவரோடு இணைந்துவிடுவதாகும். அவர் எங்கும் நிறைந்துள்ளார். அவரால்தான் அனைத்தும் உணர்வு பெறுகின்றது. அத்தகைய ஹரியை ஸ்துதிக்கிறேன்.
ravi said…
3.ஸர்வஜ்ஞோ யோ யஸ்ச ஸர்வ:ஸகலோயோ

யஸ்சாநந்தோ ஷினந்த குணோ யோ குணதாமா I

யஸ்சாவ்யக்தோ வ்யஸ்தஸமஸ்த:ஸதஸத்ய:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

அவர் எல்லாம் அறிந்தவர் மட்டுமல்ல. எல்லாமாயும் இருப்பவர். குணங்கள் நிரம்பிய அல்லது குணங்களின் இருப்பிடமான ஆனந்த மாவார். அவர் தெளிவாக்கப்படாதவர். ஏனெனில், அவர் தனித்தும், சேர்ந்தும் உள்ளார். 'ஸத்'ஆயும் 'அஸத்'ஆயும் இருக்கிறார். அத்தகைய ஹரியை ஸ்துதிக்கிறேன்.
ravi said…
4.யஸ்மாத் அன்யத் நாஸ்த்யபி நைவ பரமார்த்த-

த்ருச்யாதன்யோ நிர்விஷய ஞானமயத்வாத் I

ஜ்ஞ்த்ருஜ்ஞானஜ்ஞேய விஹீனோஷிபி ஸதா ஜ்ஞ:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

உலக விஷயங்களைச்சாராத தனி ஜ்ஞான மானதால் அவர் பரமார்த்தஜ்யான வடிவமேயானவர். அவரன்னியில் வேறு எதுவுமே இல்லை. அறிய வேண்டியது மில்லை. அறிவு ஒன்றே உண்டு என இருக்கும் அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
5.அதார்யேப்யோ லப்தஸு ஸ¨க்ஷ்மாச்யுத தத்வா:

வைராக்யேணாப்யாஸ பலாச்சைவ த்ரடிம்நா I

பக்த்யைகாக்ர்ய த்யானபரா யம் விதுரீசம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

விஷ்ணுவின் தத்வம் முழுதும் சிறந்த குருநாதனிடமிருந்து அறிந்து கொண்டவர், வைராக்யம், அப்யாசம் இவற்றின் துணையாலும், உறுதியாலும், பக்தியுடனும் ஒரே குறிக்கோளுடனும் தியானம் செய்து அந்த ஹரியை தேரில் கண்டனர். அத்தகைய ஹரியை நான் போற்றிப்பாடுகிறேன்.
ravi said…
6.ப்ராணநாயம்யோமிதி சித்தம் ஹ்ருதி ருத்வா

நான்யத்ஸ்ம்ருத்வா தத்புனரத்ரைவ விலாப்ய I

க்ஷீணே சித்தே பாத்ருசிரஸ்மீதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஒம் என்று சொல்லி பிராணாயாமம் செய்வதன் மூலம் ஸங்கல்பிக்கும் சித்தத்தை ஹ்ருதயத்தில் நிறுத்தி, வேறெதையும் எண்ணாமல், அந்த சித்தத்தை ஒடுக்கியபின், எந்த ஹரியை ஒளிமயமாகவும் ஞான வடிவாயும் காணமுடிகிறதா அத்தகைய ஹரியை நான் போற்றிப்பாடுகிறேன்.
ravi said…
7.யம் ப்ரஹ்மாக்யம் தேவமனந்யம் பரிபூர்ணம்

ஹ்ருத்ஸ்தம் பக்தைர்லப்யமஜம் ஸ¨க்ஷ்ம மதர்க்யம் !

த்யாத்வாஷிஷித்மஸ்தம் ப்ரஹ்மவிதோ யம் விதுரீசம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

பக்தர்கள் தங்கள் ஹ்ருதயத்தில் இருக்கும் பரிபூரண பிரம்மத்தை ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட சூக்ஷ்மமென்றும், பிறப்பில்லாத ஆனால் அடையக்கூடிய தேவனென்றும் தியானித்து ஈசனாகக் கண்டுகொண்டார்களோ அத்தகைய, ஸம்ஸாரமாகிய இருளை அகற்றும் ஹரியை நான் போற்றிப் பாடுகிறேன்.
ravi said…
8.மாத்ராதீதம் ஸ்வாத்ம விகாஸாத்மவிபோதம்

ஜ்ஞேயாதீதம் ஜ்ஞானமயம் ஹ்ருத்யுபலப்யம் !

பாவக்ராஹ்யானந்தமனன்யம் ச விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

நான் யார் என்று உணர்ந்து தெளிந்த ஞானமாயும், தன்மாத்ரைகளுக்கு அப்பால், தெரிந்து கொள்ள வேண்டியவையான உலகவிஷயங்களுக்கெல்லாம் மேலாக கருத்தளவில் க்ரஹிக்கக்கூடிய ஆனந்தமாயும் எந்த ஹரியை காண்கிறார்களோ, அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
9.யத்யத்வேத்யம் வஸ்துஸதத்வம் விஷயாக்யம்

தத்தத்ப்ரஹ்மைவேதி விதித்லா ததஹம் ச !

த்யாயந்த்யேவம் யம் ஸனகாத்யா முனயோஷிஜம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

உலக விஷயங்களாகிய வஸ்து தத்வங்கள் எவை எல்லாம் அறியப்பட வேண்டுமோ அவையே ப்ரஹ்மம் என்றும் அதுவே நான் என்றும் ஸனகர் முதலிய முனிவர்கள் எவரை தியானம் செய்கிறார்களோ, அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
10.யத்யத் வேத்யம் தத்ததஹம் விஹாய

ஸ்வாத்மஜயோதிர் ஜ்யான மயானந்தமவாப்ய !

தஸ்மிந்நஸ் மீத்யாத்ம விதோ யம் விது ரீசம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

உலகில் எதெல்லாம் அறியப்பட வேண்டியவையோ, அவையவை நானல்ல என்று ஒதுக்கி, ஆத்மஜ்யோதியாகிய ஞான-ஆனந்தத்தைப் பெற்று, ஆத்ம அனுபூதிமான்கள் எவரிடம் ஆத்மானுபவம் பெற்றார்களோ அத்தகைய ஹரியை நான் போற்றிப் பாடுகிறேன்.
ravi said…
11.ஹித்வா ஹித்வா த்ருச்யமசேஷம் ஸவிகல்பம்

மத்வா சிஷ்டம் பாத்ருசிமாத்ரம் ககனாபம் !

த்யக்த்வா தேஹம் யம் ப்ரவிசந்த்யச்யுத பக்தா:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

மாறுதல்களைக் கொண்ட காட்சியனைத்தையும், விட்டொழித்து, ஆகாசம் போன்ற ஒளி, ஞான வடிவானதை மட்டும் மனதிற்கொண்டு, உடலை விட்டபின் ஹரி பக்தர்கள் எந்த ஹரியை அடைகின்றார்களோ அத்தகைய ஹரியை போற்றிப்பாடுகிறேன்.
ravi said…
12.ஸர்வத்ராஸ்தே ஸர்வசரீரீநச ஸர்வ :

ஸர்வம் வேத்யே வேஹ நயம் வேத்தி சஸர்வ: I

ஸர்வத்ராந்தர்யாமிதயேத்தம் யமயன்ய:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

எல்லாமாய் இல்லையாயினும் எல்லாவற்றிலும் ஊடுருவி எங்கும் நிறைந்துள்ளார் ஹரி. அவர் எல்லாவற்றையும் அறிவார். ஆனால் அவரை எல்லோரும் அறிய மாட்டார். இவ்வாறு எல்லாவற்றிலும் அந்தர்யாமியாய் ஆட்டுவித்து கொண்டிருக்கிற, ஸம்ஸார இருளைப் போக்கும் ஹரியை ஸ்துதிக்கிறேன்.

ravi said…
13.ஸர்வம் த்ருஷ்ட்வா ஸ்வாத்மனி யுக்த்யா ஜகதேதத்

த்ருஷ்ட்வாத்மானம் சைவமஜம் ஸர்வஜநேஷ§ !

ஸர்வாத்மைகோஸ்மி - இதி விதுர்யம் ஜனஹ்ருத்ஸ்தம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

முனிவர்கள், உலகமனைத்தையும் யுக்தியாக தன்னிலும், அவ்வாறே மற்றெல்லா ஜனங்களிடத்தும் ஆத்மாவையும் கண்டு, எல்லாவற்றிலும் ஒரே ஆத்மாவாக இருக்கிறேன் என்று அறிகின்றாரோ, எல்லோரிலும் ஊடுருவி நிற்கும் அந்த ஆத்மாவான ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
14.ஸர்வத்ரைக:பச்யதி ஜிக்ரத்யத புங்க்தே

ஸ்ப்ரஷ்டா ச்ரோதா புத்யதிசேத்யாஹ§ரிமம்யம் !

ஸாக்ஷீ சாஸ்தே கர்த்ருஷ§ பச்யந்நிதி சான்ய

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஹரி ஒருவரேதான் எல்லோரிலும் இருந்து பார்ப்பதும் தொடுவதும், கேட்பதும், முகர்வதும், அறிவதுமாகிய செயல்களை ஊக்குவிக்கிறார் என்று ஒரு சிலரும், மற்றொருவசரார் செய்பவர் செயலை பார்த்துக்கொண்டு சாக்ஷியாக மட்டும் ஹரி உள்ளார் என்கின்றனர். அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
15.பச்யன் ச்ருண்வன் அத்ர விஜாநன் ரஸயன்ஸம்-

ஜிக்ரன் பிப்ரத்தேஹமிமம் ஜீவதயேத்தம் !

இத்யாத்மானம் யம் விதுரீசம் விஷயஜ்ஞம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஹரியே, ஜீவாத்மாவாய் இருந்து, பார்த்தும், கேட்டும், அறிந்தும், முகர்ந்தும், உடலைத்தாங்கிக் கொண்டும் உலக விஷயங்களை அறிகின்றார். அவரே ஈசர் என்ற படி இருக்கிற ஹரியை நான் போற்றிப் பாடுகிறேன்.
ravi said…
16.ஜாக்ரத் த்ருஷ்டவா ஸ்தூலபதார்ரத்தான் அதமாயாம்

த்ருஷ்ட்வா ஸ்வப்னேதாபி ஸஷ§ப்தௌ ஸுகநித்ராம்

இத்யாத்மானம் வீக்ஷ்ய முதாஸ்தே ச துரீயே

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஒருவர் ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பொழுது உலகிலுள்ள ஸ்தூல வஸ்துக்களையும், ஸ்வப்னக்காலத்தில் பொய்யான நிகழ்ச்சியையும், ஸுஷ§ப்தியில், நன்றாக நான் தூங்கினேன் என்றவாறு தூக்கத்தையும் கண்டு துரீயத்தில் களிக்கிறாரோ அத்தகைய ஆத்மாவாகிய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
17.பச்யன் சுத்தோஷிப்யக்ஷர ஏகோ குணபேதாத்

நாநாகாரான் ஸ்பாடிக வத்பாதி விசித்ர: !

பின்னஸ் சின்னஸ்சாய மஜ:கர்மபலைர்ய:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

சுத்தமான, நலிவில்லாத, ஒன்றான இந்த ஆத்ம குணங்களின் வேற்றுமையால் அன்றோ பல பலரூபங்களைப் பெற்று ஸ்படிகக்கல் போன்று விசித்திரமாக காண்கிறது. அதுமட்டுமல்ல, பிறப்போ, மூப்போ, இல்லாதிருப்பினும் கர்ம பலன்களால் சிதறுண்டதாகவும் காணப்படுகிறதே, அத்தகைய ஆத்மாவான ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
18.ப்ரஹ்மா விஷ்ணூ ருத்ரஹ§தாசௌ ரவிசந்த்ரௌ

இந்த்ரோ வாயுர்யஜ்ஞ இதீத்தம் பரிகல்ப்ய !

ஏகம் ஸத்தம் யம் பஹ§தாஷிஷிஸுர்மதிபேதாத்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

அறிந்தவர்கூட வெவ்வேறு புத்திகாரணமாக, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், அக்னி, சூர்யன், சந்திரன், இந்திரன், வாயு, யஜ்ஞம் இப்படி பலவாறாக கற்பித்து ஒருவராகவே உள்ள பரமாத்மாவைச் சொல்கிறார்களே. அத்தகைய ஹரியை நான் ஸ்தோத்திரம் செய்கிறேன்.
ravi said…
19.ஸத்யம் ஜ்ஞானம் சுத்தமானந்தம் வ்யதிரிக்தம்

சாந்தம் கூடம் நிஷ்கலமானந்த மனன்யம் !

இத்யாஹாதௌ யம் வருணோஷிஸெளப்ருகவேஷிஜம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ப்ரஹ்மம் எது - என்று கேட்ட ப்ருகுவுக்கு வருணன் முதலில் 'அது ஸத்யமானது, ஞானமானது, சுத்தமானது, அளவு கடந்தது, தனித்தது, சாந்தமானது, மறைந்த சுத்த ஆனந்தமானது, வேறெதாயும் சாராதது - இப்படித்தானே கூறினான். அத்தகைய ஹரியா நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
20.கோசாநேதான் பஞ்ச ரஸாதீநதிஹாய

ப்ரஹ்மாஸ்மீதி ஸ்வாத்மனி நிஸ்சித்ய த்ருசிஸ்தம் !

பித்ராதிஷ்டோ வேத ப்ருகுர்யம் யஜுரந்தே

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

யஜுர்வேத உபநிஷத்தில் குறிப்பிட்டபடி வருணனின் பிள்ளையான ப்ருகு அன்னாதி பஞ்ச கோசங்களைத்தாண்டி, ஞானத்தில் உறையும் ஆத்யாவே ப்ருஹ்மம் என்று அறிந்தார். அத்தகைய ஆத்மஸ்வரூபியான ஹரிதை ஸ்துதிக்கிறேன்.
ravi said…
21.யோநாவிஷ்டோ யஸ்ய ச சக்த்யா யதநீந:

க்ஷேத்ரஜ்ஞோஷியம் காரயிதா ஜந்துஷ§ கர்து: !

கர்தா போக்தாஷித்மாஷித்ர U யச்சக்த்யதிரூட:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

எந்த ஹரியின் சக்தியை முன்னிட்டு ஆத்மா கர்த்தாவும், போக்தாவாகவும் ஆகிறதோ, எந்த ஹரி அந்தர்யாமியாக இருப்பதால், க்ஷேத்ர ஜ்ஞனான இந்த ஆத்மா செய்விப்பதாகவும் ஆகிறதோ அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
22.ஸ்ருஷ்டவா ஸர்வம் ஸ்வாத்மதயைவேத்தம் அதர்க்யம்

வ்யாப்யாதாந்த:க்ருத்ஸ்னமிதம் ஸ்ருஷ்டமசேஷம் !

ஸச்ச த்யச்சாபூத்பரமாத்மா ஸ ய ஏக:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஆராய்ந்து அறியவொண்ணாதபடி தன் ஆத்ம நிலையிலேயே உலகனைத்தும் படைத்து, படைத்தவற்றில் முழுதுமாக ஆந்தர்யாமியாகவும் இருந்து, ஸத்தாயும், தத்பதவாச்யம் ஆகிய விளங்கும் ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
23.வேதாந்தைஸ் சாத்யாத்மிக சாஸ்த்ரைஸ்ச புராணை:

சாஸ்த்ரைஸ் சான்யை:ஸாத்வததந்த்ரைஸ்ச யமீசம் !

த்ருஷ்ட்வாதாந்தஸ்சேதஸி புத்வா விவிசுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

வேதாந்தம், ஆஸ்திகதர்சனங்கள், மற்றும் புராணங்கள், இன்னும் ஸாத்வத தந்த்ரம் ஆகியவற்றால் எந்த ஒரு பரம் பொருளைக் கண்டு, மனதிலும் நன்கு உணர்ந்தனரோ அத்தகைய ஹரியை நான் போற்றிப்பாடுகிறேன்.

ravi said…
24.ச்ரத்தாபக்தித்யான சமாத்யைர்யதமானை :

ஜ்ஞாதும் சக்யோ தேவ இஹைவாசு ய ஈச: !

துர்விஜ்ஞேயோ ஜன்மசதைஸ்சாபி விநா தை:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

எந்த கடவுள் இங்கேயே சிரத்தை, பக்தி, த்யானம், சமம் முதலியவற்றால் காணவிழைகின்றவர் காணமுடியாதவராய் இருக்கின்றாரோ, அதே அவர் மேற்கூரிய உபாயங்களின்றி பலபிறவியெடுத்தும் காணமுடியாதவரோ அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
25.யஸ்யதர்க்யம் ஸ்வாத்மவிபூதே:பரமார்த்தம்

ஸர்வம் கல்வித்யத்ர நிருக்தம் ச்ருதிவித்பி: !

தஜ்ஜாதித்வாத் அப்திதரங்காப மபிந்நம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே !!

எவருடைய தனது போரான்மை பற்றிய உட்கருத்து விவரித்துக் கூறிமுடியாதோ, ஆனால் வேதமறிந்தவர் ஸர்வம் கல்விதம் என்ற விடத்தில் கோடிட்டு காட்டியுள்ளனரோ, கடலும், கடல் அலையும் போல் அதுவும் அதனில் தோற்றமும் வேறானதல்ல. அவ்வாறு விளங்கும் ஹரியை நான் ஸ்தோத்திரம் செய்கிறேன்.
ravi said…
26.த்ருஷ்ட்வா கீதா ஸ்வக்ஷரதத்வம் விதிநாஜம்

பக்த்யா குர்வ்யா லப்ய ஹ்ருதிஸ்தம் த்ருசிமாத்ரம் !

த்யாத்வா தஸ்மின் அஸ்ம்யஹமித்ய த்ரவிதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

பகவத் கீதையில் கூறப்பட்ட அக்ஷரதத்வத்தை முறைப்படி அறிந்துகொண்டு சீரிய பக்தியுடன் ஹ்ருதயத்திலுரையும் ஞான வடிவாக அந்த அக்ஷரத்தை தியானித்து, அதில் ஆத்மா இருப்பதை பெரியோர்கள் அறிவார்களே அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
27.க்ஷேத்ரஜ்ஞத்வம் ப்ராப்ய விபு:பஞ்ச முகைர்யோ

புங்க்தேஷிஜஸ்ரம் போக்யபதார்த்தான் ப்ரக்ருதிஸ்த: !

க்ஷேத்ரேக்ஷேத்ரேஷிப்ஸ்விந்துவதேகோ பகுதாஷிஷிஸ்தே

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ப்ருகிதியிலேயே இருந்தவராய் எம்பெருமான் க்ஷேத்ரஜ் ஞனாகி ஐந்து முகங்களால் அனுபவப்பொருட்களை அணுபவித்த வண்ணமிருக்கிறார். அவர், ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் இருந்துகொண்டு, தண்ணீரில் சந்திரன் போல் பலவாறாக காட்சியளிக்கிறார். அத்தகைய ஹரியை நான் துதிக்கிறேன்.

ravi said…
28.யுக்த்யாஷிஷிலோட்ய வ்யாஸ வசாம்ஸி அத்ரஸி லப்ய:

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ்ந்தரவித்பி:புருஷாக்ய: !

யோஷிஹம் ஸோஷிஸோள, ஸோஷிஸ்ம்யஹமேவதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

க்ஷேத்ரம், க்ஷேத்ரமறிந்தவர் இவரிடைய உள்ள வித்யாஸத்தை அறிந்தவர்கள், வியாஸரின் வார்த்தைகளை யுக்தியுடன் ஆராய்ந்து 'புருஷன்'என்பவரை அறிகின்றனர். 'நானே அவர்''நான் அவராகவே உள்ளேன்'என்று அவரை தெரிந்து தெளிகின்றாரோ அந்த ஹரியை நான் துதிக்கிறேன்.
ravi said…
29.ஏகீக்ருத்யாநேக சரீரஸ்த மிமம் ஜ்ஞம்

யம் விஜ்ஞாயேஹேவ ஸ ஏவாசு பவந்தி !

யஸ்மின்லீநா நேஹ புனர்ஜன்ம லபந்தே

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

பற்பல சரீரங்களில் ஊடுருவி நிற்கும் அந்த ஸர்வஜ்ஞரை ஒருவரே என அறிந்து கொண்டவர், அவராகவே ஆய்விடுகிறார்கள். அப்படி ஆகிய பின் இங்கு பின்பும் பிறவி எடுப்பதில்லை. அத்தகைய ஹரியை நான் போற்றிப்பாடுகிறேன்.
ravi said…
30.த்வந்த்வைகத்வம் யச்ச மதுப்ராஹ்ணவாக்யை:

க்ருத்வா சக்ரோபாஸனமாஸாத்ய விபூத்யா !

யோஷிஸெள ஸோஷிஹம் ஸோsஸ்ம்யஹமே வேதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஒன்றும் ஒன்றும் - ஒன்றுதான் என்பதை மது ப்ராஹ்மணவாக்யங்களால் தெரிந்து தெளிந்து உபாஸனை செய்து, அவரே தான் நான், நானே அவர், என்று எவரை அறிகின்றார்களோ ஆன்றோர் அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

ravi said…
31.யோஷியம் தேஹே சேஷ்டயிதா ஷிந்த:கரணஸ்த:

சூர்யே சாஸெள தாப்யிதா ஸோஷிஸ்மய ஹமேவ !

இத்யாத்மைக்யோபாஸநயா யம் விதுரீசம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

சரீரத்தில் அந்த:கரணத்திலிருந்து கொண்டு செயல்படுத்துபவரும், சூர்யனில் சூட்டை ஏற்படுத்துபவரும் எவரோ அவரே நான் தான் - என்று ஆத்மா ஒன்றே என்ற நிலையில் உபாஸித்து எவரைக்காண்கிறார்களோ அத்தகைய ஹரியை நான் துதிக்கிறேன்.
ravi said…
32.விஜ்ஞானாம்சோ யஸ்ய ஸத:சக்த்யதிரூடோ

புத்திர் புத்யத்யத்ர பஹிர்போத்யபதார்த்தான்

நைவாந்த்:ஸ்தம் புத்யதி யம் போதயிதாரம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

உண்மையில் உள்ளவரான அவரை அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ளுதல் அவரவர் சக்திக்குட்டபட்டது. புத்தி என்பது வெளியே உள்ள பதார்த்தங்களை தான் அறிகிறது. உள்ளே இருந்து அறியச்செய்யும் ஒருவரை அறிய அந்த புத்தி இணங்குவதில்லை. என்ன வித்தை?ஸம்ஸார இருளைப்போக்கும் அந்த ஹரியை நான் ஸ்திக்கிறேன்.
ravi said…
33.கோஷியம் தேஹோ தேவ இதீத்தம் ஸுவிசார்ய

ஜ்ஞாதா ச்ரோதா மந்த்ரயிதா சேஷ ஹிதவ: !

இத்யாலோச்ய ஜ்ஞாம்ச இஹாஸ்மீதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

யார் இந்த தேவர் நம் உடலில் இருப்பவர்- என்று நன்கு ஆராய்தல் கேட்பவரும், எண்ணச்செய்பவரும், அறிய வரும் அவர் தானேயல்லவா - என்று தெளிந்து அந்த அறிவும் அம்சம்தான் நான் ஆத்மா என எவரை தெரிந்து கொள்ளலாமோ அந்த ஹரியை நான் ஸ்திக்கிறேன்.
ravi said…
34.கோ ஹ்யேவாந்யாதாத்மனி நஸ்யாதயமேஷ

ஹ்யேவானந்த:ப்ராணிதி சாபாநிதி சேதி!

இத்யஸ்தித்வம் வக்த்யுபபத்யா ச்ருதிரேஷா

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

இவரின்றி நம்மில் வேறு யார் உயிர்ப்பது?இவர்தானே ஆனந்தமயமாக கீழும் மேலும் உயிராக இருக்கிறார் - என்று ஆராய்ந்து யஜுர்வேதம் கூறுகிறது. அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
35.ப்ராணோ வாஹம் வாக்ச்ரவணாதீநி மநோவா

புத்திர்வாஹம் வ்யஸ்த உதாஹோஷிபி ஸமஸ்த: !

இத்யாலோச்ய ஜ்ஞப்திரிஹாஸ்மீதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

அவர் பிராணனா, சொல்லா, காதா, மனமா அல்லது புத்திதானா?அவர் பகுதியா அல்ல முழுமையானவரா?என்றெல்லாம் ஆராய்ந்து, எவரை அறியும் சக்தி என்று தெரிந்து கொண்டனரோசான்றோர் அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
36.நாஹம் ப்ராணோ நைவசரீரம் நமனோஷிஹம்

நாஹம் புத்திர்நாஹமஹங்காரதியௌச !

யோஷித்ர ஜ்ஞாம்ச:ஸோஷிஸ்ம்யஹமேவேதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஆத்மா ப்ராணனில்லை, சரீரமில்லை, மனமும் இல்லை. புத்தியுமில்லை. அஹங்காரம் சித்தம் இவையுமில்லை. பின், இங்கு அறியும் சக்தியே ஆத்மா, அதுவே.... என யாரை கண்டுகொண்டனரோ அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
37.ஸத்தாமாத்ரம் கேவல விஜ்ஞானமஜம் ஸத்

ஸுக்ஷ்மம் நித்யம் தத்வமஸீத்யாத்மஸுதாய !

ஸாம்நாமந்தே ப்ராஹ பிதா யம் விபுமாத்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஸாம வேதத்தின் முடிவில் பிதா தனது மகனுக்கு தத்வமஸி என்று சொல்லி, அவர் முழு முதல்வர், எங்குமுள்ளவர், பிறப்பில்லாதவர், நித்யமானவர், எப்பொழுதுமிருப்பவர், ஸ்வானுபவமானவர் என்று எவரை அசையாளப் படுத்தினாரோ அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.
ravi said…
38.மூர்தாமூர்தே பூர்வமபோஹ்யாத ஸ்மாதௌ

த்ருச்யம் ஸர்வம்நேதி ச நேதீதி விஹாய !

சைதன்யாம்சே ஸ்வாத்மநி ஸந்தம் ச விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

தியான நிலையில் ஆழ்ந்து உலகத்திய ரூபாரூப பொருட்களை முதலில் நீக்கி, கண்காணும் பொருட்களையும் இல்லை, இல்லை - என்றே ஒதுக்கி தன்னில் ஞான வடிவில் உள்ளவரான எவரை கண்டனரோ அவரை அந்த ஹரியை ஸ்துதிக்கிறேன்.
ravi said…
39.ஒதம் பாரோதம் யத்ர ச ஸர்வம் ககநாந்தம்

யோஷிஸ்தூலா நண்வாதிஷ§ஸித்தோஷிக்ஷரஸம்ஞ: !

ஜ்ஞாதாஷிதோஷின்யோ நேத்யுபலப்யோ ந ச வேத்ய:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

எவரிடத்தில் உலகம் முழுதும் ஆகாயம் உட்பட ஊடை பாவை போன்று இணைக்கப்பட்டுள்ளதோ, அவர், பெரிதும் இல்லை-சிறிதும் இல்லை என்றபடி அக்ஷரமாகவே முடிவாக்கப்பட்டுள்ளாரோ, அவரின்றி அறியத்தக்கவரும், அறிபவரும் வேறில்லை - என்று முடிவானதோ அத்தகைய ஹரியை துதிக்கிறேன்.
ravi said…
40.தாவத்ஸர்வம் ஸத்யமிவாபாதி யதேதத்

யாவத் ஸோஷிஸ்மீத்யாத்மநி யோ ஜ்ஞோ ந U த்ருஷ்ட: !

த்ருஷ்டே யஸ்மின் ஸர்வமஸத்யம் பவதீதம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஸர்வஜ்ஞனை ஈச்வரனை ஆத்மாவில் காணாதவரைதான் இந்த பிரபஞ்சம் உண்மைபோலத் தெரியும். அவரை அப்படி கண்டு விட்டாலோ இந்த பிரபஞ்சம் பொய்யே என்ற உறுதிவரும். அந்த ஸர்வேச்வரனான ஹரியை நான் துதிக்கிறேன்.
ravi said…
41.ராகான்முக்தம் லோஹயுதம் ஹேமயதாக்னௌ

யோகாஷ்டாங்கைருஜ்வலிதஜ்ஞான மயாக்னௌ !

தக்த்வாத்மானம் ஜ்ஞம் பரிசிஷ்டம் ச விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

மற்ற உலோகக் கலப்புள்ள தங்கம் தீயில் இடப்பட்டு உருகி, தூயதாவது போல், ஆபாசங்கள் நீங்கி, அஷ்டாங்கயோகத்தின் மூலம் ஜ்வலிக்கும் ஞானமாகிய அகினியில் ஜீவாத்மா பொசுங்கியபின் எஞ்சிய ஞானப் பேரொளியாக எவரை அறிந்தார்களோ அத்தகைய ஹரியை நான் துதிக்கிறேன்.
ravi said…
42.யம் விஜ்ஞான ஜ்யோதிஷமாத்யம் ஸுவிபாந்தம்

ஹ்ருத்யர்கேந்த்வக்ன்யோகஸமீட்யம் தடிதாபம் !

பக்த்யாராத்ய-இஹைவ விசந்த்யாத்மனி ஸந்தம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆக்மானுபவப் போரொளியாய், ஹ்ருதயத்தில் சூர்ய-சந்திர அக்னிகளுக்கு இருப்பிடமாய் போற்றுதலுக்குறியதாய், ன்னல் போன்றுள்ளதாய் இருக்கும் அந்த பரமாத்மாவை இப்பிறவிலேயே கண்டு பக்தியுடன் ஆராதித்து, அதனுட் சேர்கின்றனரே, அந்த ஸம்ஸார இருளைப் போக்கும் ஹரியை ஸ்துதிக்கிறேன்.
ravi said…
43. பாயாத் பக்தம் ஸ்வாத்மனி ஸந்தம் புருஷம் யோ

பக்த்யா ஸ்தௌதீத்யாங்கிரஸம் விஷ்ணுரிமம்மாம் !

இத்யாத்மானம் ஸ்வாத்மனி ஸம்ஹ்ருத்ய ஸதைக:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

தனது ஆத்மாவிலேயே நிலைத்துள்ள பரமபுருஷனை பக்தியுடன் இவ்வாறு ஸ்தோத்திரம் செய்யும் பக்த்தனை - இந்த ஆங்கிரஸனான என்னை - விஷ்ணு காக்க வேண்டுமென ப்ரார்த்திக்கும் ஆத்மாவை தனதாத்மாவோடு இணைந்து எப்பொழுதும் ஒருவராகவே இருக்கிற ஸம்ஸார இருளைக் களைந்து விளங்கும் அந்த ஹரியை ஸ்துதிக்கிறேன்.

ஹரிஸ்துதி முற்றிற்று.


Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53