பச்சைப்புடவைக்காரி -- மூன்று திருடர்கள் -1 (130)

பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

மூன்று திருடர்கள்  -1 

(130)



ரவி  இறைவனைத்தான் எல்லோரும் கள்வன் என்று சொல்வார்கள் .. மனதை திருடிக்கொள்பவன் .. கண்ணனை  திருடன் இன்றும் சொல்லி வருபவர்கள் ஏராளம் .. நாவுக்கரசர் - என் மனமதை கொள்ளை கொண்டவனே என்று ஈசனை பாடுகிறார் ... இங்கே நான் சொல்ல வருவது உண்மையில் பொருளைத்திருடி அல்லது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இறைவனுக்கு கோயில் கட்டி அதனால் அடிபட்டு, அவமானப்பட்டு இறுதியில் இறைவனால் ஆட்க்கொள்ளப்பட்டு மகான்களாக ஆனவர்கள் ....  

எண்ணங்கங்கள் நல்லெண்ணம் ஆனாலும் செய்யும் முறையிலும் தர்மம் நியாயம் வேண்டும். நான் சொல்லப்போகும் மூவர்களும் இந்த வரைக்கோட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் . முதலில் நாம் இன்று பார்க்கப்போவது பத்ராச்சலம் ராமதாஸ் .. 

அம்மா --- பாக்கியம் செய்தேன் சொல்லுங்கள் தாயே !!



சிறுவயது முதலே, ராம பக்தியில் ஆழ்ந்தவர் கோபன்னா. அதன் விளைவாக தான தருமங்கள் செய்வதிலும் தாராளமானவராக விளங்கினார் இவர். ஒருசமயம் பத்ராசலம் என்ற இவர் வாழ்ந்த தலத்தில் பாகால டாமக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். 

அச்சமயம் பாகால டாமக்கா அங்கு வந்து கோபன்னாவிற்குத் தேவையான சிகிச்சைகள் அளித்துக் காப்பாற்றினார். அப்போது அவள் உருவாக்கிய சிறிய ராமர் கோயிலைக் கண்ட கோபன்னா மிகவும் பரவசமடைந்தார். 

ஆதாரத்துடன் கோபன்னா இழைத்த குற்றங்களுக்கு தண்டனை தரும் வகையில் அவரை ஹைதராபாத்துக்கு வரவழைத்து, சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார். இதற்கும் வருத்தப்படவில்லை ராமதாஸர். சிறையில் பலவகையாக துன்பங்களைத் தான் அனுபவித்தாலும், ராம நாம ஜபத்தை மட்டும் அவர் கைவிடவேயில்லை. சிறையிலேயே ராம கீர்த்தனைகள் பலவற்றை இயற்றி, பாடியும் வந்தார்.


இராமபிரான் 14 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்தார். பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்தனர். 

பத்ராசலம் ராமதாசர் 12 ஆண்டுகள் சிறையில் வாடி வதங்கினார். 

இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்று உயிர்விட எண்ணிய நிலையில் ராமனும் லெட்சுமணனும் மாறுவேடத்தில் வந்து உதவிய அதிசயம் நடந்தது.

மஹாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாசர், பஞ்சாபில் சுவாமி இராம தீர்த்தர், கேரளத்தில் சுவாமி ராமதாஸ் என்று பல சாது சந்யாசிகள் இராமன் பெயரில் வாழ்ந்தனர். 

இவர்களில் பத்ராசலம் ராமதாசர் (1620 – 1680) ஆந்திரப் பிரதேசத்தில் கோல்கொண்டா ,பத்ராசலம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர் ஆவார்.

லிங்கண்ணா என்ற பிராமணருக்கு புத்திரனாக அவதரித்த ராமதாசரின் உண்மைப் பெயர் கோபண்ணா. 

அவர் கமலம்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு பஜனைப் பாடல்கள் பாடிக் காலம் கழித்து வந்தார். 

இவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் கபீர்தாசர் என்ற புனிதர் வாழ்ந்து வந்தார். 

ராமதாசர் கனவில் வந்த கபீர்தாசர் அவருக்கு இராம நாமத்தை உபதேசம் செய்து இராமனை சிக்கெனப் பிடித்துக் கொள் என்று அருளுரை பகன்றார். அவ்வாறே கோபண்ணாவும் செயல்பட்டார். 

கோபண்ணாவுக்கு இராமதாசர் என்று பெயர் சூட்டியதும் கபீர்தாசர்தான்.👣👣👣


ஒரு சமயம், ராமதாசர் வீட்டில் பெரிய விருந்து நடந்தது. 

அப்போது அவர்களுடைய குழந்தை தாய் தந்தையரை விட்டுச் சென்று சமையல் அறையில் இருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மூழ்கியது. 

குழந்தை இறந்ததை அறிந்தும், விருந்து கெடக் கூடாதென்பதற்காக தாயார் யாருக்கும் தெரியாமல் மரணத்தை மறைத்து வைத்தார். 

எல்லோரும் வெளியே சென்றவுடன் துக்கம் வெடித்தது. ஓவென்று கதறி அழுதார். 

ராமதாசருக்கும் நிலைமை புரிந்தது. குழந்தையின் சடலத்தை இராம பிரான் விக்கிரகத்தின் முன்னால் கிடத்தி மனம் உருகப் பிரார்த்தித்தனர். 

அதிசயம் நடந்தது. தூக்கத்தில் விழித்தெழுந்த குழந்தை போல அந்தக் குழந்தை உயிருடன் திரும்பி வந்தது.

ராமதாசர், அவரிடமிருந்த பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதில் செலவழித்தார். 

வறுமையின் எல்லைக் கோட்டைத் தாண்டியபோது வயிறு காயத் துவங்கியது. 

இராமனே வந்து உதவுவார் என்று காத்திருந்தார். ‘’முயற்சி திருவினை ஆக்கும்’’– என்பதை மனைவி நினைவு படுத்தினார்.

உடனே ஹைதராபாத்தில் இருந்து ஆட்சி புரிந்த தானி ஷா (1674-1699) என்ற முஸ்லீம் மன்னரை அணுகினார். 

அவரிடம் மாடண்ணா, அக்கண்ணா என்ற இரண்டு பிராமண அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் ராமதாசுக்கு சொந்தக்கார்கள். அவர்கள் மூலமாக பத்ராசலத்தில் தாசில்தார் பதவி கிடைத்தது. 

அரசாங்கத்துக்கான வரிப் பணத்தை வசூலித்து ஹைதாராபாத்துக்கு அனுப்பவேண்டியது இவர் பொறுப்பு.

பக்தி முற்றிய நிலையில், மாணிக்கவாசகரைப் போல , இவரும் அரசாங்க பணத்தை கோவில் கட்டப் பயன்படுத்தினார். 

பத்ராசலம் இராமர் கோவிலுக்கு எல்லா வசதிகளையும் செய்து சுவாமிக்கு நகை, நட்டுக் களையும் வாங்கினார். 

பெரிய ஒரு தொகையை மன்னருக்கு பாக்கி வைத்தார். 

உண்மை நிலையை அறிந்த மன்னன் தானி ஷா, ராமதாசருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.🥇🥇🥇



கடவுள் எப்போதும் அரசாங்க விதிகளை மீறச் சொல்வதே இல்லை. 

பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை, பூ, பழம், நீர்) இவைகளை அளித்தாலே தமக்கு பரம திருப்தி என்று பகவத் கீதையில் கடவுளே சொல்லி இருக்கிறார். 

ஆகவே மாணிக்கவாசகர், ராமதாசர் போன்றோர் நாட்டின் சட்ட விதிகளை மீறுகையில் கடவுள் உதவிக்கு வாராமல் வாளா விருக்கிறார். 

இருந்தபோதிலும் இனியும் பக்தன் உயிர்வாழ மாட்டான் என்னும் நிலை வரும்போது, ஓடி வந்து உதவத் தவறுவதில்லை! தயங்கினதும் இல்லை!

ராமதாசர் 12 ஆண்டுக் காலம் சிறையில் வாடி வதங்கினார். 



துன்பத்தால் துவண்டாலும், ராம ஜபத்தால் புத்துணர்வு பெற்றவராகவே திகழ்ந்தார் அவர். அவருடைய துன்பத்தைத் துடைப்பதற்காக ராம-லட்சுமணர் புனைவேடம் பூண்டு நிஜாமை வந்து சந்தித்தார்கள். 


மாணிக்கவாசகர் போலவே அரசாங்க ஊழியரின் சித்திரவதைக்குள்ளானார். பக்தரின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய இராம பிரான், தனது தம்பி லெட்சுமணனையும் அழைத்துக் கொண்டு பூமிக்கு இறங்கிவந்தார். 

ஒரு ரெவின்யூ அதிகாரியின் சேவகர்கள் போல வேஷம் போட்டுக் கொண்டு பெரிய தொகையை எடுத்துக் கொண்டு மன்னர் தானி ஷா அரண்மனைக்கு வந்து கதவைத் தட்டினர். 

அர்த்த ராத்ரியில் இருவர் வந்தவுடன் அந்தப்புரப் பெண்களை அனுப்பிவிட்டு சேதி என்ன என்று கேட்டார்.

ரெவின்யூ அதிகாரி ராமதாசர் பாக்கி செலுத்தவேண்டிய பெருந் தொகையை கொடுத்து அனுப்பியதாகச் சொன்னார்கள். 

பணத்தைக் கொடுத்துவிட்டு அத்தாட்சிப் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கினர் ராம லெட்சுமணர். உடனே ராமதாசரை விடுதலை செய்யவும் வேண்டினர். 

உடனே கோபன்னாவை விடுவித்தார் நிஜாம். அப்போது பளிச்சென்ற ஒளியுடன் பணம் கட்டியவர்கள் மறைந்துவிட, அப்போதுதான் நிஜாமுக்கு கோபன்னாவின் ராமபக்தி புரிந்தது. தன் வாயால் கோபன்னாவை ‘ராமதாஸ்’ என்று அன்புடன் அழைத்த நிஜாம், அந்தக் கோயிலில் ராமதாஸ் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார்; தேவைப்பட்ட உதவிகளையும் செய்தார்.

ராமதாசர் விடுதலை செய்யப்பட்டவுடன் நடந்த அதிசயத்தை அறிந்தார்.🍇🍇🍇



தானிஷாவுக்கு தரிசனம் கொடுத்தனையே, எனக்கு தரிசனம் தரவில்லையே என்று ஒரு தெலுங்கு கீர்த்தனையும் பாடினார். 

தானிஷாவுக்கு ஒரே மகிழ்ச்சி. முஸ்லீம் மன்னராக இருந்தபோதிலும் கோவில்களுக்கு வாரி வாழங்கிய மன்னர்களில் இவரும் ஒருவர். அவருடைய மன்னர்களில் இருவர் பிராமணர்கள். பின்னர் ராமதாசருக்கும் இராம பிரான் தரிசனம் கொடுத்தார்.

இறைவன்  ஆதரவுடனும், மக்களின் ஒத்துழைப்புடனும் (தற்போது கோதாவரி நதிக்கரையில் உள்ள) ராமர் ஆலயத்தை பாகால டாமக்கா விருப்பப்படி, 17ம் நூற்றாண்டில் நிர்மாணித்து, எல்லா விழாக் களையும், பூஜைகளையும் நடத்தினார், ராமதாஸர். அவ்வாறு கோயில் கட்டிவரும் சமயம், மூலவரின் சந்நதிக்கு மேல் கோபுரத்தில் சுதர்சன சக்கரம் அமைப்பதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது.

அதனால் சற்றே மனம் தளர்ந்தார் ராமதாஸர். அன்றிரவே அவர் கனவில் ராமர் தோன்றி, அதிகாலையில் கோதாவரியில் குளிக்குமாறும், அப்போது அதில் கிடைக்கும் சுதர்சன சக்கரத்தை கருவறை கோபுரத்தில் நிறுவுமாறும் உத்தரவிட்டார். அதன்படியே எல்லாமும் வெகு நேர்த்தியாக நடந்தேறின. ராமதாஸர் பேருவகை கொண்டார். 

ஹைதராபாத், விஜயவாடா போன்ற இடங்களிலிருந்தும் பேருந்துகள் உண்டு. இத்தலத்தில் ராமபிரான், தான் திருமால் அவதாரம்தான் என்பதை விளக்கும்வகையில் சங்கு, சக்கரம் ஏந்தி ஒரு கையில் அம்பு, மற்றொரு கையில் வில்லுடன் சீதாதேவியை தனது மடியில் இருத்தி, அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். அருகில் இளையவன் நின்ற நிலையில் சேவை சாதிக்கிறார். 

பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூடி ராமபிரானின் திருவருளைப் பெறுகிறார்கள். நிஜாம் காலத்தில், பெருமாளுக்கு நிஜாமே ஆபரணங்கள், வஸ்திரங்கள் கொண்டு வந்து சமர்ப்பித்து விழாவைச் சிறப்பாக நடத்த உதவி வந்தார். இன்றும் இத்தலத்தில் தினமும் இரவு ஏழரை மணிக்கு நடக்கும் தர்பார் சேவை பிரசித்தி பெற்றது.

ராமச்சந்திர மூர்த்திக்கு ராஜ உடைகள் அணிவிக்கப்பட்டு, தர்பாரில் எழுந்தருளச் செய்து அன்றைய கோயில் வருமானம் முறைப்படி எண்ணப்படும். அப்போது ராமதாஸரின் கீர்த்தனைகள் இசைக்கப்படும். இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் செல்வம் கொழித்த இடமாக ஹைதராபாத் நிஜாமின் அரண்மனை விளங்கியதற்குக் காரணம், ராமபிரானே நேரில் வந்து பொற்காசுகளை நிஜாமுக்கு அளித்ததுதான் என்பார்கள். 

இராமதாசர் பாடிய நூற்றுக் கணக்கான தெலுங்கு கீர்த்தனைகள் தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் இன்னிசைக் கச்சேரிகளில் இன்றும் பாடப்படுகின்றன. அவருடைய கீர்த்தனைகளில், 

இராமா, நீ நாமம் ஏமி ருசிரா, எந்த ருசிரா  என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும்.

ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா?

ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா?

மதுரசமுல கண்டெ ததி க்ருதமுல கண்டெ அதிகமொ
நீ நாமம் ஏமி ருசிரா?

த்ராக்ஷாரசமுல கன்ன இக்ஷு ரசமுல கன்ன
பக்ஷி வாஹன! நீ நாமம் ஏமி ருசிரா?

அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச தளமுலண்டு ரஞ்சிலு
நீ நாமம் ஏமி ருசிரா?

சதா சிவுடு மடி சதா பஜிஞ்சேதி சதானந்தமாகு
நீ நாமம் ஏமி ருசிரா?

சரநன்ன ஜனமுல சரகுண ரக்ஷிஞ்சு
பிருது கலிகின நீ நாமம் ஏமி ருசிரா?

கரிராஜ ப்ரஹ்லாத தரணீஜா விபீஷணகுல காசின
நீ நாமம் ஏமி ருசிரா?

கதலி கர்ஜூரபல ரசமுல கதிகமு
பதித பாவன, நீ நாமம் ஏமி ருசிரா?

தும்புரு நாரதலு டம்பு மீராக
கானம்பு சேசேதி, நீ நாமம் ஏமி ருசிரா?

அரய பத்ராசல ஸ்ரீ ராமதாசுனி ப்ரேம நெளின
நீ நாமம் ஏமி ருசிரா?👌👌👌


சுருக்கமான பொருள்: 

உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா!

தேன், தயிர், நெய், திராட்சை, கரும்பு, வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றை விட சுவையானது உன் நாமம். 

அனுமனும், சிவனும் உன்னை துதித்து ஆனந்தம் அடைகின்றனர். 

நாரதனும் தும்புருவும் பாடி மகிழ்கின்றனர். 

சரணடைந்தவர்களைக் காப்பாற்றுபவன் என்பது உன் பெயரிலேயே இருக்கிறது. 

சீதை, விபீஷணன், பிரகலாதன், கஜேந்திரன் போன்ற எவ்வளவு பெயரை நீ காப்பாற்றி இருக்கிறாய். 

பத்ராசல ராமதாசிடத்திலும் அன்பு காட்டி அரவணைத்தாயே உன் நாமம் எவ்வளவு ருசியானது!!🍇🍇🍇



பத்ராசலம் சென்று திருமணக் கோலத்தில் காட்சிதரும் ராமபிரானை தரிசிக்கும்வரை கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியபடி அவரை தியானிக்கலாம்:

மஹாரத்னபீடே சுபே கல்பமூலே
ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
ஸதாஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
ஸதா ராமசந்த்ரம் பஜேஹம் பஜேஹம்

‘‘கல்பக மரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஆனந்தமாக அமர்ந்திருப்பவரும் பல சூரியர்கள் ஒன்றானாற்போல பிரகாசிக்கிறவரும், எப்பொழுதும் சீதா-லட்சுமணரோடு சேர்ந்திருப்பவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை எப்பொழுதும் நெஞ்சாற நமஸ்கரிக்கிறேன்.’’



அம்மா உண்மையில் ராம நாமம் மிகவும் ருசியானது ஆனால் அதை விட ஆயிரம் மடங்கு ருசி தாங்கள் சொல்லி நாங்கள் கேட்பது ... எவ்வளவோ தவம் செய்திருந்தால் தான் இப்படி ஒரு பாக்கியம் எங்களுக்கு கிடைக்கும் தாயே ... ராமனை மாதிரி உங்கள் கருணைக்கும் ஈடேது இணையேது ? 

மாதங்கீ மடமடவென்று சிரித்தாள் ... ரவி இன்று முதலாவது திருடனை பார்த்தோம் ... நாளை இன்னும் புதுமையான திருடனை பார்ப்போம் ... 

கோடி யோகிநீ  கண சேவிதா...மறைந்தாள் ... 

அவளை கோடி முறை நமஸ்காரம் செய்தாலும் நமக்கு திருப்தி வராதே !!


Comments

T.N .Ketharam said…
ராமதாசர் கதை அருமை! 👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
S.G.S.Ramani said…
முதலாவது திருடன் என் மனத்தை திருடி விட்டான்.....

பக்தி அதுவே நம் சக்தி.....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏
Valli UK said…
பச்சை புடவைக்காரி மிளிர்கிறாள் 🙏🙏🙏
ravi said…
நாளை போகாமல் இருப்பேனோ?

இந்த நாறும் உடலை இனி சுமப்பேனோ?

ஷீரடி போகாமல் மறைவேனோ? ...

சாய் யை காணாமல் சாய்வேனோ?

ஷீருடிக்கும் மேலே சொர்க்கம் ஒன்றை கேட்பேனோ...?

சிரிக்கும் தெய்வம் தனை இழப்பேனோ ?

எளிமை தெய்வம் அவன் போலே ஒருவன் உண்டோ ... எதற்கும் உதவ வருபவன் அவனன்றோ 🥇🥇🥇
ravi said…
நெருப்பும் நீயே நீரும் நீயே நினைவும் நீயே நினைப்பும் நீயே

காலனும் நீயே கார்த்திகேயனும் நீயே

கற்பகமும் நீயே எங்கள் காமாக்ஷியும் நீயே

காமேஸ்வரனும் நீயே ஸ்ரீரங்கம் அதில் சயனிப்பவனும் நீயே ..

நாவில் அமர்ந்தவளும் நீயே நான்முகன் வடிவமும் நீயே

நீயே எல்லாம் எனும் போதும் நானும் ஆனேன் நீயாக 🥇🥇🥇
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 58*
🌸🌸🌸🌸

சதுஷ்ஷஷ்ட்யுபசாராட்யா சதுஷ்ஷஷ்டிகலாமயீ |
மஹாசதுஷ்ஷஷ்டி கோடி-யோகினீ-கணஸேவிதா ||58||
🌸🌸🌸🌸

चतुःषष्ट्युपचाराढ्या, चतुष्षष्टि कलामयी |
महा चतुष्षष्टि कोटि योगिनी गणसेविता ‖ 58 ‖
🌸🌸🌸🌸

chatuhshashtyupachaaraadhyaa, chatushshashti kalaamayi
mahaa chatushshashti koti yogini ganasevitaa - 58
🌸🌸🌸🌸

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி – (235/237)*
🌸🌸🌸🌸

ஓம் சதுஷ்ஷஷ்ட்யுபசாராட்யாயை நம;
ஓம் சதுஷ்ஷஷ்டிகலாமய்யை நம;
ஓம் மஹாசதுஷ்ஷஷ்டி கோடி-யோகினீ-கணஸேவிதாயை நம;
🌸🌸🌸🌸

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் // ஸஹஸ்ர நாமாவளி விளக்கம்*
🌸🌸🌸🌸

*235.சதுஷ்ஷஷ்ட்யுபசாராட்யா* (சதுஷ்ஷஷ்டி - உபசார - ஆட்யா) - அறுபத்திநான்கு விதமான பணிவிடைகளை (உபச்சாரங்களை) பெற்று பெருமை கொண்டவள்.
🌸🌸🌸🌸

*236.சதுஷ்ஷஷ்டிகலாமயீ* (சதுஷ்ஷஷ்டி -கலா மயீ) - அறுபத்திநான்கு விதமான தந்த்ர சாஸ்திரம் சொல்லும் கலைகளின் ரூபம் கொண்டவள்.
🌸🌸🌸🌸

*237.மஹாசதுஷ்ஷஷ்டி கோடி-யோகினீ-கணஸேவிதா* (மஹா - சதுஷ்ஷஷ்டி - கோடி-யோகினீ-கண - ஸேவிதா) - அறுபத்திநான்கு கோடி யோகினி கணங்களால் பணிவிடை செய்ய பெற்றவள்.
🌸🌸🌸🌸
ravi said…
ஆவணி அவிட்டம் – சோ

கேள்வி :
இந்த ஆவணி அவிட்டம்
என்பது என்ன?
ravi said…
பழைய பூணூலை
கழற்றி விட்டு,
புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே
ஆவணி அவிட்டம் என்பது?
அதாவது
பூணூலை மாற்றுகிற
தினம்தானே அது?
சோ :
நீங்கள் சொல்கிற
மாதிரிதான் இப்போது
ஆகிவிட்டது.
ஆனால்,
ஆவணி அவிட்டம்
என்பது அதுவல்ல.

ஆவணி அவிட்டம்
என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா.

ravi said…
உபாகர்மா
என்றால் ஆரம்பம்
என்று அர்த்தம்.

ச்ராவண மாதத்தில்
பிரம்மதேவனுக்கு
வேதம் கிட்டியது;
அதாவது
உபதேசம் ஆகியது.
அந்த தினம்,
ஆவணி மாதம்,
அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான்
இதற்கு ‘ஆவணி அவிட்டம்’
என்ற பெயரும் வந்தது.
அப்போது
பிரம்மனுக்கு
வேதம் கிட்டியதால்,
அவனுக்கு அது
. .. ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள்.

ravi said…
இது வருடா வருடம்
செய்யப்படுகிறபோது,
வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக
இது கருதப்படுகிறது.

வேதத்திற்கு
ஆண்டு விழா என்றும்
இதைச் சொல்லலாம்.

ப்ரம்ம தேவனுக்கு
உபதேசமாகிய தினம்;
அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது.
அதனால்
ஒவ்வொரு வருடமும்
அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம்.
அது ஆண்டு விழா.
கேள்வி :
ஆரம்பம் என்று சொன்னீர்கள்.
அது என்றோ ஆரம்பமாகி விட்டது.
திரும்பவும் ஒவ்வொரு
வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்?
அது எதற்கு?
இது பகுத்தறிவுக்கு ஏற்ற
விஷயமாக இல்லையே?
சோ :
இது பகுத்தறிவுக்கு ஏற்ற
விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும்.

தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி,
பிரமாணம் என்று
வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். போன வருடம்தான்
இந்த உறுதிமொழி,
பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே!
அதே தேசம்தான் இருக்கிறது;
அதே பிரமாணம்தான் இது.
அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்?

தேசம் போய் விட்டதா?
அல்லது
பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா?
அந்த பிரமாணத்திற்கு
ஒரு வருடம்தான் ஆயுளா?
ஏன்
இதை திரும்பவும் வருடா
வருடம் செய்ய வேண்டும்?
ஏன்?
அந்தப் பிரமாணம்
ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா?
அல்லது
மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா?
அல்லது
தினம் தினம் அந்த
பிரமாணத்தை எடுத்துக்
கொள்ளக் கூடாதா?
ஏன்,
இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம்.
ஆனால்,
அப்படி யாரும் கேட்பதில்லை.

அது எப்படி பகுத்தறிவுக்கு
உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.

தேசம் என்கிற
சிந்தனை,
ஒருமைப்பாடு என்கிற சிந்தனை
ஆகியவற்றை நமக்கு நாமே
நினைவூட்டிக் கொள்கிறோம்.
அதற்காக இதைச் செய்கிறோம்.

அதே மாதிரிதான்
இந்த உபாகர்மாவும்.

இந்த சிந்தனை,
வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக்
கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது
கிடைத்தது என்ற விஷயம் பற்றியது.

அந்த மாதம்,
அந்தத் தேதியில் –
அதாவது
ஆவணி மாதம்
அவிட்ட நக்ஷத்திரத்தில்
நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம்.

சொல்லப் போனால்,
இது தேசிய ஒருமைப்பாட்டு
பிரமாணத்தை விட,
பகுத்தறிவுக்கு
உகந்தவிஷயம்.
ஏனென்றால்,
தேசம் என்பது,
என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு
என்பதும் என்றோ உண்டாகி விட்டது.
ஆனால்,
தேசம் பிறந்த நேரத்திலோ,
ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ,
இந்த பிரமாணத்தை நாம்
எடுத்துக் கொள்வதில்லை.

இந்த உபகர்மாவை
எடுத்துக் கொண்டால்
பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது
பிரம்மனுக்கு வேதம்
கிட்டியதோ,
அந்த மாதம்,
அந்த தினம்
எது என்று பார்த்து,
அந்த
தினத்தில் நாம் இங்கே
அந்தச் சடங்கைச் செய்கிறோம்.
அன்று
நமக்கு வேதம் பயில்வது
..... மீண்டும் ஆரம்பம்.
இது
பிராமணர்களுக்கு மட்டும்
விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது.

உபநயனம்
என்பது முதல் மூன்று
வர்ணத்தாருக்கும் உண்டு.
அதாவது
பிராமணன்,
க்ஷத்ரியன்,
வைசியன்
வர்ணங்களைச்
சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு.
அவர்கள்
மூவருமே வருடா வருடம்
இந்த ‘ஆவணி அவிட்டம்’
என்கிற
உபாகர்மாவைச்
செய்ய வேண்டும்.
இதை
வெறும் பூணூலை
மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம்
நமக்குக் கிட்டியதை
கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
Sujatha said…
Wonderful narration . 👍👍👍👍👌👌👌👌👌👌
Shivaji said…
Arumai arputham aanantham
ravi said…
தினம் ஒரு நலம் தரும் பதிகம்

20. திருநல்லூர்ப்பெருமணம்

நாள்தோறும் உணவும் உறக்கமும் சீர் பெறவும் வீண் செலவுகளை தடுக்கவும் மறுபிறப்பை அறுக்கவும் ஓதவேண்டிய பதிகம்

பல தலங்களையும் தரிசித்து திருஞானசம்பந்தப் பெருமான் சீர்காழி வந்து சேர்ந்தார் அப்பொழுது பெரியோர்கள் விரும்பியபடி நம்பியாண்டார் நம்பியின் திருமகளைத் திருமணம் புரிந்தார்.திருமணம் முடிந்ததும் நல்லூர்ப் பெருமணம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை பாட அக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பெருஞ்ஜோதி எழும்பியது அச்சமயத்தில் சம்பந்தப் பெருமான் திருப்பதிகத்தைப் பாடினார் அங்கிருந்த அனைவருமே சிவஜோதியில் கலந்தார் இத்திருப்பதிகம் சம்பந்தப் பெருமான் பாடிய இறுதிப் அதிகமாகும்

இதை பாராயணம் செய்தால் மனக்கவலை நீங்கும் பிறவாநிலை கிட்டும்

ravi said…
திருமுறை 3/49
இறைவன்:சிவலோகத் தியாகேசர்
இறைவி:உமையம்மை

1
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

ravi said…
2
நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே

சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால், நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.


ravi said…
3. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே

உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவ பெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

4
இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே

தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும். இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான்.

5
ravi said…
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கயு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே

கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

6
மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே

மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார் களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ’நமச்சிவாய’ என்பதாகும்.

7
ravi said…
நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே

எழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திரவைந்தெழுத்பை பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திரு நாமமும் திருவைந்தெழுத்தே ஆகும்.

8
ravi said…
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே

இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும், கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி, நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

9
ravi said…
போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயற்சித்து காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

10
ravi said…
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே

தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை, மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர்.

11
நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே

நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்
ravi said…
☝️அட்சரப் பிரதோஷம் என்பது வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். நான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர் என்கிறது புராண கதை. 2020ஆம் ஆண்டில் 5 சனிப்பிரதோஷம் வருகிறது. இது அட்சரப்பிரதோஷம் எனப்படுகிறது. இதன் மகத்துவத்தை பற்றி உலகம் அறிய நம் சித்தர்களின் குரல் முக பக்கத்தில் இன்று விரிவாக பகிர்கிறேன்....

ravi said…
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

ravi said…
சனிப்பிரதோஷ நாளில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நாளில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
கல்யாண வயதுதான் வந்திருச்சுடி என்று சொல்லியும் பொண்ணு திரும்பி பார்க்கலயா? - பரிகாரங்கள்
ravi said…
நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். பிரதோஷ நாளில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

ravi said…
மற்ற பிரதோஷ நாளில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல். பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.
ravi said…
சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். சனிப் பிரதோஷ நாளில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இந்நாளில் வசதி உள்ளவர்களும், அடியார்களும் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தாராம். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

ravi said…
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷங்கள் வந்தால் அதனை அஷ்டதிக் பிரதோஷம் என்கிறார்கள். இந்த எட்டு மகா பிரதோஷங்களையும் முறையாக கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நமக்கு நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷங்களில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

ravi said…
2020 ஆம் ஆண்டில் எந்த நாளில் என்ன பிரதோஷம் வருகிறது என்று பார்க்கலாம். 2020ஆம் ஆண்டில் பிரதோஷ கால அட்டவணை.
08.01.2020 புதன்கிழமை
22.01.2020 புதன்கிழமை
06.02.2020 வியாழக்கிழமை
21.02.2020 வெள்ளிக்கிழமை
07.03.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
21.03.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
05.04.2020 ஞாயிற்றுக்கிழமை
20.04.2020 திங்கட்கிழமை
(சோமவார பிரதோஷம்)
05.05.2020 செவ்வாய்க்கிழமை
20.05.2020 புதன்கிழமை
03.06.2020 புதன்கிழமை
18.06.2020 வியாழக்கிழமை
02.07.2020 வியாழக்கிழமை
18.07.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
01.08.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
16.08.2020 ஞாயிற்றுக்கிழமை
30.08.2020 ஞாயிற்றுக்கிழமை
15.09.2020 செவ்வாய்க்கிழமை
29.09.2020 செவ்வாய்க்கிழமை
14.10.2020 புதன்கிழமை
28.10.2020 புதன்கிழமை
12.11.2020 வியாழக்கிழமை
27.11.2020 வெள்ளிக்கிழமை
12.12.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
27.12.2020 ஞாயிற்றுக்கிழமை
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் அம்பாளே பிடித்து வைத்துப் பூஜை பண்ணிய பிருத்வி [மண்ணாலான] லிங்கம்; ஸ்வாமி அவள் பூஜை பண்ணுகிறபோது பெரிய வெள்ளத்தைப் பிரவஹிக்கச் செய்தும் அவள் விடாமல் லிங்கத்தைக் கட்டிக்கொண்டாள்; அதிலிருந்து ஸ்வாமியே ஆவிர்பவித்தார் – என்று ஸ்தல புராணத்தில் இருப்பதைத் தேவாரமும் சொல்கிறது. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஏகம்பத்தில் பாடிய தேவாரத்தில் பாட்டுக்குப் பாட்டு அம்பாள் பூஜை பண்ணின மஹிமையைச் சொல்கிறார்.2

ravi said…
ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்) ஜம்பு மஹரிஷி என்பவர் ஜம்பு (நாவல்) விருக்ஷமாக ஆக, அதன் கீழேயே ஈச்வரன் வந்து கோயில் கொண்டார். அங்கே லிங்கத்துக்கு ஒரு சிலந்தி பந்தல் போட்டுப் பூஜித்தது. இந்த பந்தலை அறுத்துக் கொண்டு ஒரு யானை லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணிற்று. இதனால் சிலந்திக்கு ஆத்திரம் வந்து யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கொண்டு அதன் மண்டைக்குள் போய் குடைந்தது. அப்போது யானை மண்டையை மோதிக் கொண்டு தானும் செத்து சிலந்தியையும் சாக அடித்து விட்டது. இந்த சிலந்தி தான் பிற்பாடு கோச்செங்கட் சோழனாக பிறந்து ஜம்புகேச்வர ஆலயத்தைக் கட்டிற்று. இந்தக் கதையை ஸ்தல புராணம் சொல்கிறது.

ravi said…
இத்தனைக்கும் தேவாரத்திலேயே reference இருக்கிறது. மூலஸ்தானத்தில் எப்போதும் காவேரி ஊற்று இருக்கும்படியான அற்புத ஸ்தலம் அது என்பதற்கு அப்பர் தேவாரம் ஒன்றில் பத்துப் பாட்டிலும் குறிப்பு இருக்கிறது.3

திருக்கழுக்குன்றத்தில் தினமும் மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கிற சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டு விட்டுப் போகிறதல்லவா? இது நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். இந்த ஊர் பேரே தேவார காலத்திலிருந்து “கழுக்குன்றம்” என்று இருக்கிறது. இதைவிடப் பெரிய ஆதாரம் என்ன வேண்டும்?

ravi said…
திருவிடைமருதூரில் தைப்பூச ஸ்நானம் விசேஷமானது என்று க்ஷேத்ர மாஹாத்மியத்தில் சொல்லியிருக்கிறது என்றால் இந்த விசேஷத்தை சுமார் 1300 வருஷங்களுக்கு முன்பு அப்பரும் சம்பந்தருமே பாடியிருக்கிறார்கள்.4

ஸ்ரீரங்கம், ஜம்புகேச்வரம், காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், திருவிடைமருதூர் போன்ற மஹாக்ஷேத்ரங்கள் புராதனமாக ப்ரஸித்தமானதால் அவற்றைப் பற்றிய புராண வழக்குகள் பழைய தமிழ் நூல்களில் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை என்று தோன்றலாம். சின்ன சின்ன க்ஷேத்ரங்களில் உள்ள சின்ன புராண ஐதிஹ்யங்களுக்குக் கூட பழைய தமிழ் மறைகளில் குறிப்பு இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

பிரஸித்தியடையாத சில க்ஷேத்ரங்களில் ரிஷிகளோ தேவர்களோ வண்டுகளாக இருந்து பூஜை பண்ணினதாக ஸ்தல புராணங்களில் இருக்கிறது. இப்போதும் அந்த ஊர்களில் சன்னதியிலேயே பெரிய தேனடைகள் இருந்து கொண்டிருக்கின்றன. நன்னிலத்தில் இப்படி இருக்கிறது. ‘மதுவனம்’ என்றே அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. (மது – தேன்) . திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் சித்தாம்பூர் என்று சொல்கிற ஊர் இருக்கிறது. இதற்கு தேவாரத்தில் திருச்சிற்றேமம் என்று பெயர். இங்கேயும் ஸ்வாமி சன்னதியில் தேன்கூடு இருக்கிறது. ஸித்தர்கள் தேனீக்களாக வந்து பூஜிக்கிறார்கள் என்று ஐதிஹ்யம். இந்த தேனடைக்கும் தினந்ததோறும் பூஜை நடக்கிறது. வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ண மங்கையில் தேனடையிருக்கிறது. இவற்றைப் பற்றி அந்தந்த ஊர் தேவார-திவ்யப்ரபந்தங்களிலும் reference இருக்கிறது.5

ஸ்தல புராண விஷயங்களை தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றில் குறிப்பிட்டிருப்பதால் அவற்றின் பழமை, பிராமாண்யம் (authenticity) இரண்டும் தெரிகின்றன.
Hema latha said…
நேற்றும் இவர் பற்றி எழுதி இருந்தீர்கள். பத்ராசலம் நீண்ட நாட்களாக போக விரும்பும் ஸ்தலம். இன்னும் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. தங்கள் வாயிலாக நிறைய தெரிந்து கொண்டேன் ஐயா🙏நன்றி 🙏தினமும் 7.30 மணிக்கு அந்த சேவை உண்டா?
ravi said…
SRI. MUTHUSWAMI DIKSHITHAR AND VARALAKSHMI KRITHIS

Sri. Muthuswami Dikshithar has composed krithis on many deities and particularly many krithis on Varalakshmi. Actually, some of the Varalakshmi krithis were composed by him to be sung during the popular Varalakshmi vratam performed by women in South India.These krithis are also popularly known as Sri Lakshmi krithis series of Muthuswami Dikshitar. These krithis are :

1. HARI YUVATHIM HAIMAVATHIM (Hemavathi)

The first song is Hari Yuvathim Haimavatheem in the Ragam Deshisimharavam, the 58th ragam in the Asampoorna melakartha scheme (Ragam Hemavathi in melakartha system); the large gap of a whole step between the sadharana gandharam and pratimadhyamam making the actual feel.

ravi said…
2. HIRANMAYIM LAKSHMIM (Lalitha)

Sri Dikshitar has composed two back-to-back songs on Maha Lakshmi and there is a legend regarding this. Once, his second wife was obsessed by gold and this seems to have depressed him. So he praised Sri Lakshmi as 'Hiranmayeem Lakshmim' or the Lashmi devi made of gold and promised not seek help (ashrayam) from the rich and corrupt/greedy (heena maanava) in the popular song 'Hiranmayeem Lakshmim' set in Lalitha ragam. The large step between M1 and D1 gives Lalitha quite a flavour. It is a serene and devotional ragam.
ravi said…

3. MANGALA DEVATHAYA (Dhanyasi) ###

After Sri Dikshitar composed and sang Hiranmayeem Lakshmim, it seems to have satisfied Sri Maha Laksmi and she lifted the veil of illusion from his wife's eyes. Happy about this, the second day he composed the song Mangala Devataya tvaya in the Ragam Dhanyasi and rupaka talam.Dikshitar seems to have chosen the best ragam for this song given the situation. Dhanyasi or Dhanashi is a very mangala (auspicious) ragam which conveys bhakti rasa among others.

ravi said…
4. VARALAKSHMIM BHAJARE (Sourashtram)

This krithi is set in the Raga Saurasthram and Adi talam. In this krithi Diskhitar says to worship Sri Varalakshmi as she bestows us what we pray for (vanchita phala pradam). In this krithi Dikshitar says that Sri Lakshmi is worshiped by the King of Saurashtra thereby inserting the raga mudra into the krithi. This is a mangala ragam.

ravi said…
5. SRI VARALAKSHMI NAMASTHUBHYAM (Sriragam)

Shri or Sri ragam is a very ancient ragam with a lot of compositions set to it. It is a highly pleasing and mangala (auspicious) ragam. In the asampurna mela series, the 22nd mela itself was called as Shree ragam and it is this origin that Dikshitar used.

ravi said…
6. MAHALAKSHMI KARUNARASA LAHARI (Madhavamanohari)

This meaning of this raga itself is: One who makes Madhava happy/pleased and that is Mahalakshmi.

ravi said…
7. SRI BHARGAVI BHADRAM (Mangala kaishiki)

This song is part of the Srirangam pancharatna krithi of Muthuswami Dikshitar and is set in the rare and ancient raga Mangala Kaishiki and Triputa talam.

(These songs are considered part of the Muthuswami Dikshitar Varalakshmi series. But he has also composed Kamakshi Sri Varalakshmim but it is considered as part of his Kamakshi series).
ravi said…
ராவணன் பார்த்தான் ... பார்த்தவன் வியந்தான் ..

காமனும் பழிக்கும் உருவம்

இவன் சொக்கனோ ? குமரனோ? அரங்கனோ ?

சுந்தரன் இவனை வானரம் என்றே எப்படி அழைப்பேன் ?

தூதனே இப்படி என்றால் ராமன் எப்படி அழகு ?

ஓன்பது தலைகளும் சாத்தானாகின .... நல்லது நினைக்கலாமோ இவன் ?

ராமனை நாடுமோ மனம் . நல்லதை நினைக்குமோ இவன் மனம்...

மணம் நிரம்புமோ இலங்கை வனம் ...

தனம் கொட்டுமோ இவன் இனம் ... 💦💦💦
ravi said…
*197. Lakuleśvarī लकुलेश्वरी*💐💐💐💐

*La – infinite; kula – community; īśvarī – chief*

She is the chief of a large number of groups or She is worshipped through lineage.

She alone is worshipped through one’s lineage because

She alone is capable of offering both material prosperity and liberation.

This nāma can be considered as an extension of nāma 194.

Śiva explains about liberation through kula dharma (righteousness followed through lineages) in Kulārṇava Tantra towards the end of chapter I.

He says to His Consort Śakti, “Austerities, pilgrimages, japa, homa, pūja, Vedas, śāstra-s, āgama are done so long as Brahman is not realized. If one desires for liberation, he should seek Divine Truth in all conditions.

It is kula dharma that alone liberates.” Kula dharma can be explained as the combination of bhoga (enjoyment without addiction) and yoga (union of individual soul with Supreme Self).

Teachings of Kulārṇava Tantra can be practiced only by great yogi-s.
ravi said…
*55 கண்கள் முடாமல் இருக்கும் காரணம்*

*ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரணம்*💐💐💐

நிமேஷான் மேஷாப்யாம் ப்ரளய முதயம் யாதீ ஜகதீ

தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜன்யதனயே

த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித மஶேஷம் ப்ரளயத:

பரித்ராதும் ஶங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருஶ: 55
ravi said…
பர்வதராஜ குமாரியே

உன்னுடைய கண்கள் மூடுவதாலும் திறப்பதாலும் உலகம் பிரலத்தையும் சிருஷ்டியையும் அடைகிறது என்று சான்றோர் கூறுகின்றனர்.

உனது கண்கள் திறப்பதால் உண்டான இந்த உலகம் முழுவதையும் பிரளயத்திலிருந்து அழியாமல் காப்பதற்காக உன்னுடைய கண்கள் மூடுதல் இல்லாமல் இருக்கின்றன என்று நான் ஊகிக்கிறேன்.

தேவதைகள் கண்கொட்டுவதில்லை. பரதேவதை இயற்கையாகவே கண்கொட்டாமல் இருந்தபோதிலும் அது உலக ரக்ஷணத்துக்காக என்று இங்கே உபசரித்துக் கூறப்படுகிறது.
ravi said…
திருக்கோளூர் பெண் பிள்ளை ... 3

தேகத்தை விட்டேனா ரிஷி பத்தினியைப் போலே..! = 3
கண்ணன் பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதில் விருப்பம் கொண்டவன். ஆயச் சிறுவர்களுடன் அவனும் செல்வான். ஒருநாள், ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணனிடம் வந்து, ""கண்ணா, எங்களுக்குப் பசிக்கிறது'' என்றனர்.

கண்ணன் அவர்களைப் பார்த்து, ""இங்கு யாகம் செய்யும் அந்தணர்களிடம் சென்று என் பெயரைச் சொல்லி உணவு பெற்று வாருங்கள்'' என்றான்.

சிறுவர்கள் அந்தணர்களிடம் சென்று கண்ணன் பெயரைச் சொல்லி உணவு கேட்டனர். அவர்கள் கம்சனுக்குப் பயந்து உணவு கொடுக்கவில்லை.

கண்ணனிடம் சென்று இதைக் கூறியபோது, ""ஊருக்குள் சென்று முனிபத்தினிகளிடம் நான் சொன்னதாகச் சொல்லி உணவு கேளுங்கள்'' என்று கூறி அனுப்பினான்.
ravi said…
முனிபத்தினிகளிடம் சென்று கேட்டபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிறுவர்களுக்கும் உணவு கொடுத்து கண்ணன் மற்றும் அங்கிருந்தோர் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தனர்.

அவர்களை மீண்டும் ஆசிரமத்துக்குச் செல்லும்படி கண்ணன் கூறியபோது கண்ணனைப் பிரிய மனமின்றியும் தங்கள் கணவருக்குப் பயந்தும் விருப்பமின்றிச் சென்றனர்.

ஒரு பெண்மணி மட்டும் கண்ணனைப் பிரிய மனமின்றி கண்ணனை நினைத்து உயிர்விட்டாள். "கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப் போல்தானும் உயிரை விடவில்லையே' என்று மனமுருகிக் கூறினாள் அந்தப் பெண்பிள்ளை.
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*

*பதிவு 158*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇

34
ravi said…
நக ஸ்ரீ ஸந்நத்த ஸ்தபக நிசித ஸ்வைச் ச கிரணை

பிசங்கை காமாக்ஷி
ப்ரகடித லஸத் பல்லவருசி

ஸதாம் கம்ய சங்கே ஸகல ஃபலதாதா ஸூரதரு

த்வதீய பாதோsயம் துஹினகிரி ராஜன் யதனயே...👍👍👍
ravi said…
அம்மா உன் நகங்களின் காந்தியை எப்படி வர்ணிப்பேன் ... உன்னை வணங்கும் அனைவருக்கும் அனைத்து மங்களமும் தர வல்ல நகங்கள் ... சிவப்பான பாதங்கள் அதில் வெண்மை ஊட்டும் உன் பாத நகங்கள் அற்புதம் தாயே !!👌👌👌
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 732*🥇🥇🥇

*US 724*

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

அஷ்டமம் ஸதகம் ( 8 ஆம் ஸதகம்) 💐💐💐

ஏகோநத்ரிம்ஸ ஸ்தபக - 29 வது ஸ்தபகம் 🦜🦜🦜

நவவிதபஜனம் ( மதலேகா வ்ருத்தம்) 🦚🦚🦚
ravi said…
ஏகைவம் பஹு பேதா பிந்நத்வாத் விஷயாணாம்

ரத்யாக்யா த்ருதிரந்த ஸா ஸூதே பல பேதான்


அம்மா உன்னை அடைய ஒரே வழி பிரேமை , பக்தி , பிரீதி ... வேறு எந்த வழியும் என் கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை .. 🦜🦜🦜
ravi said…
சிவானந்தலஹரீ

1.கலாப்யாம் சூடாலங்க்ருத ஸஸிகலாப்யாம் நிஜதப: -

பலாப்யாம் பக்தேஷ§ப்ரகடித பலாப்யாம் பவதுவே!

ஸிவாப்யாமஸ்தோக த்ரிபுவனஸிவாப்யாம் ஹ்ருதி புனர்

பவாப்யா மானந்தஸ்புரதனுபவாப்யாம் நதிரியம் !

கலாவடிவமானவர்களும், தலையில் சந்திரப் பிறையணிந்தவர்களும்,

தத்தம் தவப்பயனாயமைந்தவர்களும்,

பக்தர்களுக்கு வேண்டியதையருள்பவர்களும்,

மூவுலகுக்கும் மங்களகரமானவர்களும்,

ஹ்ருதயத்தில் தோன்றிய ஆனந்தானுபவமாக மிளிர்பவர்களுமான சிவன், சிவையாகிய இருவருக்கும் எனது நமஸ்காரம்.
ravi said…
2.கலந்தீஸம்போ!த்வச்சரிதஸரித:கில்பிஷரஜோ

தலந்தீ தீகுல்யாஸரணிஷ§ பதந்தீ விஜயதாம் !

திஸந்தீ ஸம்ஸார ப்ராமண பரிதாபோபஸமனம்

வஸந்தீ மச்சேதோ ஹ்ரதபுவி ஸிவானந்தலஹரீ !!

ஹேஸம்போ!உமது சரிதமாகிய ஆற்றினின்று தோன்றி, பாபப்புழுதியை நீக்கிய வண்ணம், என் மனமாகிய வாய்க்கால் வழியே பாய்ந்தோடுகின்ற சிவானந்த பிரவாஹம்,

சம்ஸாரத்தில் உழலுவதால் தடாகத்தில் நிலை கொள்வதாய் விளங்கட்டும்!
ravi said…

3.த்ரயீவேத்யம் ஹ்ருத்யம் த்ரிபுரஹரமாத்யம் த்ரிநயனம்

ஜடாபாரோதாரம் சலதுரகஹாரம் ம்ருகதரம் !

மஹாதேவம் தேவம் மயிஸதயபாவம் பஸுபதிம்

சிதாலம்பம் ஸாம்பம் ஸிவமதிவிடம்பம் ஹ்ருதிபஜே !

ஞானப்பிடியில் மட்டுமே அகப்படுபவரும், ஆடம்பரத்திற்கப்பால் அன்னையுடனுரைபவருமான சிவபெருமானை மனதில் ஸேவிக்கிறேன்.

அவர் மூன்று வேதங்களினுறை பொருளாய் தெளியத்தக்கவர். அழகியவர், த்ரிபுரம் எரித்தவர், முதல்வர் முக்கண்ணர், ஜடாபரம் தாங்கி சீரிய காட்சியர், தவழும் ஸர்ப்பஹாரம் அணிந்தவர் மானை கையில் ஏந்தியவர், மஹாதேவர், என்பால் இரக்கம் கொண்டவர், பசுபதியுமானவர்.
ravi said…
4.ஸஹஸ்ரம் வர்த்தந்தே ஜகதி விபுதா:க்ஷ§த்ரபலதா:

ந மன்யே ஸ்வப்னேவா ததனுஸரணம் தத்க்ருதபலம் !

ஹரிப்ரஹ்மாதீனாமபி நிகடபாஜாமஸுலபம்

சிரம் யாசே ஸம்போ!ஸிவ!தவ பதாம்போஜபஜனம் !

உலகில் சிறிய பலனையளிக்கும் ஆயிரமாயிரம் கடவுளர் உளர். அவர் அளிக்கும் பயனையோ கனவிலும் நினையேன்.

மிக நேருக்கமான ஹரி, பிரம்மன் ஆகியவர்களுக்கே கூட கைக்கு எட்டாத,

ஹேஸம்போ, சிவ!உமது திருவடித்தாமரையை நெடுநாட்கள் சேவிக்கும் பேற்றையே வேண்டுகிறேன்.
ravi said…
5.ஸ்ம்ருதௌ ஸாஸ்த்ரே வைத்யே ஸகுனகவிதா கானபணிதௌ

புராணே மந்த்ரேவா ஸ்துதிநடன ஹாஸ்யேஷ்வசதுர: !

கதம் ராஜ்ஞாம் ப்ரீதிர் பவதி மயி கோஷிஹம் பஸுபதே

பஸும் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதித க்ருபயா பாலயவிபோ !!

ஸ்ம்ருதியிலோ, சாஸ்திரத்திலோ, வைத்யத்திலோ, சகுனம், கவிதை, பாட்டு, புராணம், மந்திரம், ஸ்துதி, நடனம், ஹாஸ்யம் முதலியவற்றிலோ ஆற்றல் படைத்திலேன்.

என்னிடம் தனவந்தர்களுக்கு எப்படி அன்பு தோன்றும்?நான் யார்?ஒரு பசுதானே!எல்லாம் அறிந்த பசுபதியாகிய தாங்கள் தான் பரிவுடன் என்னை பரிபாலிக்கவேணும்.
ravi said…
6.கடோவா ம்ருத்பிண் டோஷிப்யணுரபிச துமோஷிக்னிரசல:

படோவா தந்துர்வா பரிஹரதிகிம் கோரஸமநம் !

வ்ருதா கண்டக்ஷே£பம் வஹஸி தரஸா தர்க்கவசஸா

பதாம்போஜம் ஸம்போர்பஜ பரமஸெளக்யம் வ்ரஜஸுதீ: !!

ஹே அறிஞனே!உன்னை கேட்கிறன் - (தர்க்கத்தில் உதாரணமாகவரும்)

குடமோ மண் உருண்டையோ, அணுவோ, புகையோ, தீயோ அல்லது மலையேதான் இருக்கட்டுமே, இன்னும், துணியோ, நூலோ தான் பயங்கர யமனை தூரத்தில் தள்ள முடியுமா?

ஏன் இந்த கடித்த தர்க்கப்பேச்சு?சம்புவுன் திருவடியை சேவித்து பரம சௌக்யம் பெறலாமே!
ravi said…
7.மனஸ்தே பாதாப்ஜே நிவஸது வச:ஸ்தோத்ரபணிதௌ

கரௌ சாப்யர்ச்சாயாம் ஸ்ரீதிரபி கதாகர்ணனவிதௌ !

தவ த்யாநே புத்தி:நயனயுலகம் மூர்த்திவிபவே

பரக்ரந்தான் கைர்வா பரமஸிவே ஜானே பரமத: !

பிறர் இயற்றிய நூல்களை எங்கனம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்?

உமது திருவடித்தாமரையில் மனமும், ஸ்தோத்திரம் சொல்வதில் வாக்கும், பூஜை செய்வதில் கைகளும், உமது சரித்ரத்தை கேட்பதில் காதுகளும், தியானிப்பதில் புத்தியும், உமது வடிவழகில் கண்களும் பதியட்டுமே!
ravi said…
8.யதா புத்தி:ஸுக்தௌ ரஜதமிதி காசாஸ்மநி மணி:

ஜலே பைஷ்டே க்ஷீரம் பவதி ம்ருகத்ருஷ்ணாஸு ஸலிலம் !

ததா தேவ ப்ராந்த்யா பஜதி பவதன்யம் ஜடஜனோ

மஹாதேவேஸம் த்வாம் மனஸி ச ந மத்வா பஸுபதே !!
ravi said…
ஹேபசுபதே!

பாமர ஜனங்கள் உம்மை மனதிற்கொள்ளாமல் உம்மில் வேறானவரை கடவுள் என மயக்கி சேவிக்கிறார்களோ!

அந்தோ பாவம்!

அது, சிப்பியை வெள்ளி எனவும், பாசி மணியை வைரக்கல் எனவும், மாவு ஜலத்தைப் பால் எனவும், கானல் நீரை நீர் எனவும் ப்ரமிப்பது போல் அல்லவா?
ravi said…
9.கபீரே காஸாரே விஸதி விஜனே கோரவிபினே

விஸாலே ஸைலே ச ப்ரமதிகுஸுமார்த்தம் ஜடமதி: !

ஸமர்ப்யைகம் சேத:ஸரஸிஜமுமாநாத பவதே

ஸுகேநாவஸ்தாதும் ஜன இஹ ந ஜானதி கிமஹோ !!
ravi said…
விவேகமில்லாதவர் புஷ்பம் பறிக்க தன்னந்தனியே பயங்கர காட்டிலும், ஆழமான குளத்திலும், பெரும் குன்றுகளிலும் புகுவர்;

அந்தோ பரிதாபம்.

உமையருபாகனே!உமக்கு ஒரே ஒரு மனம் என்ற தாமரைப்பூவை ஸமர்ப்பித்து சுகம் பெறலாம் என்பது கூட ஏன் தெரியவில்லை?
ravi said…
10.நரத்வம் தேவத்வம் நகவனம்ருகத்வம் மஸகதா

பஸுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதிஜனனம் !

ஸதாத்வத்பாதாப்ஜ ஸ்மரணபரமானந்தலஹரீ

விஹாராஸக்தம் சேத் ஹ்ருதயமிஹ கிம் தேந வபுஷா !!
ravi said…
ஹேப்ரபோ, உமது திருவடித்தாமரையை எக்கணமும் நினைத்துப் பெறும் பரமானந்த வெள்ளப்பெருக்கில் மூழ்கித் திளைக்கும் பற்று மட்டும் ஒருவருக்கு இருந்தால், உருவத் தோற்றம் எப்படி இருந்தாலென்ன?

பிறப்பு முறையில் மனிதராகவோ, தேவராகவோ, மலைக்காட்டுமிருகமாகவோ, கொசுவாகவோ, பசுவாகவோ, பூச்சியாகவோ அல்லது பக்ஷியாக இருந்து விட்டுப் போகட்டுமே!
ravi said…
11. வடுர் வா கேஹீ வா யதிரபி ஜடீவா ததிதரோ

நரோ வா ய:கஸ்சித் பவது பவ!கிம்நேந பவதி? !

யதீயம் ஹ்ருத்பத்மம் யதி பவததீனம் பஸுபதே

ததீயஸ்த்வம் ஸம்போ பவஸி பவபாரம் ச வஹஸி !
ravi said…
நிலமை பற்றியும் கவலை வேண்டாம். பிரம்மசாரி, கிருஹத்தன், ஸந்நியாஸி, ஜடை தரித்தவர் இப்படி எந்த நிலையில் இருப்பினும் அதனால் ஆவதொன்றுமில்லை.

பசுபதே!உனதடிமை என்ற எண்ணமிருந்தால், அவணடியாளாகவல்லவா தாங்கள் ஆகி அவர் குடும்பச் சுமையை தாங்குவீர்!
ravi said…
12.குஹாயாம் கேஹே வா பஹிரபிவநே வாத்ரிஸிகரே

ஜலே வா வஹ்நௌ வா வஸது வஸதே:கிம்வத பலம் !

ஸதா யஸ்யைவாந்த:கரணமபி ஸம்போ தவ பதே

ஸ்திதம் சேத் யோகோsஸெள ஸ ச பரமயோகீ ஸசஸுகீ !!
ravi said…
ஒருவன் வஸிக்கும் இடத்தின் மூலமும் பயனில்லை. குகையிலோ, வீட்டிலோ மலை உச்சியிலோ, தண்ணீரிலோ, தீயிலோ அவனிருக்கட்டும்.

அவன் மனம் மட்டும், ஹேஸம்போ!உமது காலடியை பற்றியிருந்தால் அதுவே யோகம், அவனே யோகீ, அவனே ஸகல சுகங்களையும் பெறுவான்.
ravi said…
"Kashi was created by Lord Shiva and is an independent intelligence called Kashi Devi.

After He created Her, Kashi Devi asked a boon of Lord Shiva, Mahadeva, “Bless me so that whoever enters Kashi (Varanasi) will obtain liberation.”

Mahadeva then gave three boons:

‘First, whoever comes into Kashi and gets into the Ganga (the Ganges River) to take snaan (sacred bath), will have all their sins washed away.

Second, whoever dies in Kashi will be liberated.

And third, whoever’s body is brought and burnt in Manikarnika Ghat or Harishchandra Ghat will also be liberated.’ Kashi Devi was really happy with these three boons.

But Devi Parvati interfered and said, ‘Mahadeva, don’t you feel you made liberation very cheap and enlightenment so easy? Everyone can get it!’

Mahadeva said, ‘Don’t worry, I will take you to Kashi and show you. Come.’

Meanwhile, this boon that Mahadeva gave to Kashi Devi became very popular. In the next few days, almost the whole world had gathered to take a bath in the Ganga.

Mahadeva and Devi arrived in Kashi. Mahadeva said to Devi, ‘Now let both of us become human beings. I will lie down pretending I’m your dead husband and you sit down here acting as the widow, crying. If any person without sin touches me, I will come back to life. If somebody with sin touches me and tries to bring me back to life, they will die.’

Mahadeva lay down as a dead body and Devi sat there crying extremely loudly.

All the people who had come to take a bath in the Ganga came and asked Devi, ‘What happened? What happened? Why are you crying? Why is such a beautiful lady sitting and crying in front of such a beautiful man?’

Devi said, ‘My young husband has died. If anybody without sin touches my husband’s body, he will come back to life. But if you have done some sin and you touch him, your head will burst and you will die!’

From morning to night, millions of people took bath in the Ganga, but not a single person dared to touch this body!

Late that night, one drunkard fellow came. He also asked Devi, ‘What happened?’ Devi said, ‘If anybody without sin touches my husband, he will come back to life. But if a person with sin touches him, that person will die!’

Devi thought that this man will start running away like all the others. But that drunken fellow looked at Devi and said, ‘Wait, wait, wait …. I heard Shiva has given some boon.’ So he gets into the Ganga, takes a bath and comes out. Then he said, ‘I have done all types of sins. But now, after taking bath in the Ganga, I am free of all sins because Shiva gave this boon.’

Then he touches the dead body of the husband! Naturally, Shiva comes back to life and gives darshan, liberating him.

Then Mahadeva asks Devi, ‘Do you see now? Millions may take a bath in the Ganga, but how many of them really believe in my boon?'

Millions may visit and perform religious rituals, but how many of them understand the context of what they are doing?

So don't worry, even if I shower everyone with boons, only those who are worthy, who are already in the space of completion and feeling connection, will even be ready to receive them!'

Har Har Mahadev Shambhu Kashi Vishwanath Gange ~ Jai Bholenath 🙏🏼🙏🏼
Kousalya said…
Ahha.. Krishnamrudham paruga mudindhade.... Arpudham.. Jai Radhe Krishna 🌷🌷🌷🙏🙏🙏

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53