பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. (2) - (187)
பச்சைப்புடவைக்காரி
தியாகராஜ சுவாமிகள் வரலாறு.
உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்
(187)
நீர்வளம், நிலவளம் முதலான அனைத்துச் செல்வங்களும் நிரம்பப்பெற்று, சீர்மிகு சோழமன்னர்களால் நீதி தவறாமல் ஆட்சி புரிந்துவரும் சோழநாட்டில் திருவாரூர் எனும் தலம்;
ஸ்ரீ தியாகராஜப் பெருமானும், கமலாம்பிகை அம்பாளும் குடியிருக்கும் திவ்ய க்ஷேத்திரம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தரிசித்து "திருத்தொண்டத்தொகை" பாடி சிவனடியார்களின் பெருமையை உலகறியச் செய்த புண்ணிய பூமி.
இந்த புண்ணிய பூமியில் தற்போதைய ஆந்திரப் பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஸ்ரீ ராமபிரம்மம் என்பவர் வாழ்ந்து வந்தார். தியாகராஜரின் கொள்ளுப் பாட்டனார் பஞ்சநதப் பிரம்மம் என்பவர். இவருடைய பெயரிலிருந்து இவர் திருவையாற்றில் வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது.
தியாகராஜரின் தாய்வழி பாட்டனார் வீணை காளஹஸ்தய்யா என்பவர் திருவாரூரில் வாழ்ந்தார். ராமபிரம்மத்தின் மனைவிக்கு சீதம்மா என்பது திருநாமம். ஸ்ரீ தியாகராஜர் தனது "சீதம்ம மாயம்ம ஸ்ரீராமுடு நாதன்றி" எனும்பாடலில் ஸ்ரீ இராமபிரானை மட்டுமல்ல, தனது தாய்தந்தையரையும் வணங்கிப் போற்றுகிறார்.
இவர்கள் அறவழியில் பூஜை, தியானம் என்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு ஸந்தான பாக்கியம் கிடைக்கப்பெற்று மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். அவர்களுக்கு ஜல்பேசன் என்கிற பஞ்சநதம், ராமநாதன், தியாகராஜன் எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார்கள்.
ராமநாதன் இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். இவர்களில் மூன்றாவது, இளைய மகவாகப் பிறந்தவர்தான் நாம் இப்போது பார்க்கப் போகும் தியாகராஜன் எனப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்.
இவர் கலியுகாதி வருஷம் 4868, சாலிவாகன 1689க்குச் சரியான ஸர்வஜித் வருஷம், சித்திரை மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை, வைசாக சுக்ல ஸப்தமி பூச நக்ஷத்திரம், கடக லக்கினம், சூரிய உதயாதி 15-1/2 நாழிகையில் கடக லக்னத்தில் (அதாவது 4--5--1767) பிறந்தார்.
சில ஆண்டுகள் கழிந்தபின்னர் ஸ்ரீ ராமபிரம்மம் திருவாரூரை விட்டு நீங்கி காவிரிக்கரையில் அமைந்துள்ள திருவையாறு க்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். தந்தைவழி ஊர் என்பதால் அவர் திருவையாற்றில் வாழ்ந்து வரலானார். தஞ்சாவூர் அப்போதைய மராட்டிய மன்னர்களின் தலைநகர் என்பதால் பண்டிதர்களும் பல்வேறு கலைஞர்களும் தலைநகருக்கு அருகில் வாழ்வதையே விரும்பினர்.
தியாகராஜனுக்கு அவரது தந்தையார் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்பித்தார். தாயாரிடம் ஜெயதேவரது அஷ்டபதி, ராமதாஸர் கீர்த்தனைகள் மற்றும் பல பக்திப் பாடல்களைக் கற்றுக் கொண்டார். ஸ்ரீ தியாகராஜரின் எட்டாவது வயதில் அவருக்கு பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்டது.
அப்படி பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நேரத்தில் தந்தை குரு உபதேசமாகத் தன் மகனுக்கு "ஸ்ரீ ராம" நாம உபதேசமும் செய்வித்தார். அதுவரை ராமப்பிரம்மம் தான் பூஜை செய்துவந்து ஸ்ரீ ராம, லக்ஷ்மண, சீதா, அனுமன் விக்கிரகங்களை அவரிடம் கொடுத்து அவரே அதற்கு நித்ய பூஜைகளைச் செய்துவருமாறு பணித்தார்.
அதுமுதல் ஸ்ரீ தியாகராஜர் தினசரி கர்மானுஷ்டானங்களை கடமை தவறாமல் செய்துவந்ததோடு ஸ்ரீ ராமருடைய விக்கிரகங்களுக்கும் நித்ய பூஜைகளைச் செய்து வந்தார். இப்படிச் சில காலம் கழிந்த பின்னர் அப்போது திருவையாறு க்ஷேத்திரத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜருக்கு "ஸ்ரீ ராம ஷடாக்ஷரி" எனும் மந்திரோபதேசம் செய்வித்தார்.
Comments
Oh Rama neenaamamentha ruchiraa
Kariraaja prahlaadha dharanija vibheekshanulu gaachina neenamamaemi ruchiraa
Kariraaja prahlaadha dharanija vibheekshanulu gaachina neenamamentha ruchiraa
kadhalee kharjooraadhi phalamoolakadhikammu |
pathitha paavana naamamaemi ruchiraa ||
pathitha paavana naamamentha ruchiraa ||
Anjanaa thanaya hrithkanjadhalamunandhu ranjillu neenaamamaemi ruchiraa |
Anjana thanaya hrithkanjadhalamunandhu ranjillu neenamamentha ruchiraa ||
sadhaashivudu ninnu sadhaa bhajinchedi
sadhaanandhanaamamaemi ruchiraa
sadhaanandha naamamentha ruchiraa
Thumburu naaradhulu dambu meeraga gaanambu chaesedi naamamaemi ruchira|
Thumburu naaradhulu dambu meeraga gaanambu chaesedi naamamentha ruchira ||
araya bhadhraachala shreeramadhaasuni
aelina neenamamaemi ruchiraa
aelina neenamamentha ruchiraa
(கனவுல கேட்டு வியப்பில் ஆழ்த்திய சம்பவம்)
மஹா பெரியவா சன்யாசம் ஏத்துண்ட காலத்துல இருந்து முக்தி அடையற காலம் வரைக்கும் நாவுக்கு அரசராகத்தான் இருந்தார்.
அதாவது உணவுல தனிப்பட்ட விருப்பம்னு அவருக்கு எதுவுமே இருந்ததில்லை.
ஒரு கட்டத்துல கொஞ்சம் நெல் பொரி மட்டுமே அவரோட ஆகாரமா இருந்தது.
அப்படிப்பட்ட மஹான் தன்னோட பக்தை ஒருத்தரோட கனவுல காட்சி தந்து சோமாஸ் செஞ்சு எடுத்துண்டு வா! அப்படின்னு உத்தரவிட்டார்னா அபூர்வமான சம்பவமா இருக்கும்!
அம்பத்தஞ்சு அறுபது வயசு இருக்கும் அவங்களுக்கு. ஒரு நாள் விடியக்கார்த்தால நேரம்.
அந்த மாமியோட கனவுல மஹா பெரியவா தரிசனம் தந்தார்.
எப்போதும் ஆசார்யாளையே நினைச்சுண்டு இருக்கிற அந்த மாமிக்கு கனவுல அவரோட தரிசனம் கிடைச்சதும் அப்படியே நெக்குருகிப் போய்ட்டா.
வாத்ஸல்யத்தோடு அந்த மாமியைப் பார்த்த மஹா பெரியவா நாளைக்குக் கார்த்தால கொஞ்சம் நெறைய சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்து குடேன்!
அப்படின்னு சொல்லிட்டு சட்டென்று மறைஞ்சுட்டார்.
நல்ல சொப்பனம். கண்டா அப்படியே தூங்கிண்டு இருக்கக் கூடாது.
?'
சோமாஸ் பண்றச்சே எல்லாம் அந்த மாமியோட மனசுல ஆயிரமாயிரம் கேள்விகள் ஓடித்து. ஆசார்யா ஆசார நியமம் உடையவராச்சே அவர் எதுக்கு சோமாஸ் கேட்கிறார்!
பசிக்கு நெல் பொரி போதும்னு நியதி வைச்சுண்டு இருக்கிறவர் ருசிக்கு பட்சணம் வேணும்னு கேட்பாரோ..!
ஒருவேளை தனக்குத்தான் ஏதாவது பிரமையா இருக்குமோ?
நாமபாட்டுக்கு இதை செஞ்சு எடுத்துண்டு மடத்துக்குப் போய் பெரியவா முன்னிலையில வைச்சு அவர் இதெல்லாம் என்னங்கற மாதிரி கேட்டுட்டார்னா குத்தமாப் போயிடுமே...
அதை எப்படிப் போக்கிக்கறது
மொத்தமா ஒரு பெரிய ஓலைப்பெட்டியில போட்டு எடுத்துண்டு ஸ்ரீமடத்துக்குப் போய்ச் சேர்ந்தா.
அங்கே போய் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்திருந்த பக்தர்கூட்ட வரிசையில நின்னா.
நாம கனவுல கண்டதை ஏதோ தப்பான பிரமையா புரிஞ்சுண்டுட்டோமா?'
அப்படிங்கற சிந்தனைகள் ஓட ஆரம்பிச்சது. அந்த சமயத்துல ஆசார்யாளோட அணுக்கத் தொண்டர் ஒருத்தர் அங்கே வந்தார்.
என்ன சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்துட்டியா?
ஒரு அறுபது இருக்குமா?
மஹா பெரியவா கேட்ட முதல் வார்த்தையே அந்த மாமியை அப்படியே மலைச்சுப்போய் நிற்கவைச்சுது.
அடுத்தது என்னவோ பக்கத்துல இருந்து எண்ணிப் பார்த்தவர் மாதிரி கரெக்டா அறுபது இருக்கான்னு கேட்டது!
அப்படியே சிலிர்த்து போய் நின்ன மாமிகிட்டே அடுத்த வார்த்தையைச் சொன்னார் ஆசார்யா. என்னடா இது! சன்யாசிக்கு எதுக்கு பட்சண ஆசை? சோமாஸ் எடுத்துண்டு வரச் சொல்றாரேன்னு நினைச்சியா?
இன்னும் கொஞ்ச நேரத்துல அவாளே இங்கே வருவா. நீயே உன் கையால் குடுத்துடு..!
அவர் சொன்ன மாதிரியே கொஞ்சநேரத்துல மஹா பெரியவாளை தரிசனம் பண்ண வந்தா வேதபாடசாலையில படிக்கிற மாணவர்கள். அப்போதான் பெரிய அதிசயமே நடந்தது.
ஆசார்யா சொன்னபடியே எல்லாரும் வரிசையில வர ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு ரெண்டு சோமாஸைக் குடுத்தா அந்த மாமி.
ஆசார்யாளோட ஞான திருஷ்டியை உணர்ந்து அங்கே இருந்த எல்லாரும் அப்படியே சிலிர்த்துப் போய்
ஜயஜய சங்கர ஹரஹர சங்கரன்னு சொல்ல ஆரம்பிச்சா.
ஆசார்யா பட்சணங்களோட எண்ணிக்கை சரியா அறுபது இருக்குன்னு சொன்னதும் கனவுல சோமாஸ் கேட்டது தான்தான்னு நிரூபணம் செஞ்சதும் மட்டும் தான் அவாளுக்கெல்லாம் தெரியும்.
ஆனா குறிப்பா சோமாஸ் தான் வேணும்னு ஏன் கேட்டாங்கறது யாருக்குமே தெரியாது.
பாடசாலை விதிப்படி அந்த மாதிரி விற்கறதை எல்லாம் வாங்கி சாப்பிட முடியாது.
இருந்தாலும் அவாளுக்கு சோமாஸ் சாப்டணும்கற ஆசை வந்திருக்கு.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.
*திருச்சிற்றம்பலம்.*
*12/09/2020*
*விநாயகர் அகவல்*
சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்த்தழ(கு) எறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)
வேழமுகமும் விளங்கு சிந்தூரமும் அஞ்சுகரமும் அங்குசபாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாவிருபுயமும் மூன்று கண்ணும் மும்முதச் சுவடும்(10)
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்ட முப்புரிநூல் திகழ்ஒளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன ! (15)
என்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல் ஐந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம் இது பொருள் என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுந்திருள் கடிந்து (30)
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறிவித்துக் கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக்(கு) அருளி என்னை அறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன அருள் தரும் ஆனந்தத்(து) அழுத்தி ஏன் செவியில் (60)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கருத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறுவித்துத்(70)
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயக ! விறைகழல் சரணே !!! (72)
*ஓம் கணேசாய நம.சிவாய நம.*
இறைவனை அடைய நாயன்மார்கள் இறைவனிடம் கொண்ட அன்பு அவசியம் என்பதை உணர்வோம்.
இறைவனை அடைந்த நாயன்மார்களை வழிபடுவதன் மூலம் நம் மனதில் தேவையற்ற எண்ணங்கள் மறைந்து இறைவன் மேல் அன்பு மலர பிரார்த்தனை செய்து திருத்தொண்டத்தொகை படிப்போம் ஓம் நமசிவாய ஓம் சாய்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
திருச்சிற்றம்பலம்
– சுந்தர மூர்த்தி சுவாமிகள்
ஆலயத்தின் உள்ளே சென்றதும் ஸ்வாமியை வணங்கிவிட்டு, "ஸ்வாமி ! எந்த பாவமும் அறியாத அடியேனுக்கு பார்வை கிடைக்க அருள் புரியுங்கள் தேவா ! நான் தங்களின் பக்தனாவேன் !" என்று வேண்டினார்.
ஸ்ரீதேம்பே ஸ்வாமி மகாராஜ் அவர்கள் இதன்மூலம், "குரு சேவை இறைசிந்தனை உள்ளவர்கள் தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக கண்ணியமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றும், அந்த ஒழுக்கம் இல்லை என்றால் குருவினுடைய அருளை ஒரு துளியும் பெற இயலாது !" என்பதை எல்லோருக்கும் வலியுறுத்தினார்.
*பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்.*
🌸🌸🌸🙂🍀🍀🍀
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
*"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது'எனச் சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.*
சோகத்தை விட்டொழியுங்கள்.
எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே எனச் செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
பவர்ஃபுல்லாக உணருங்கள்
உடல் வலிமை,
பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி
மனவலிமை மிக முக்கியம்.
உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை.
*உடனே சிரிக்காதீர்கள்.*
*இது தான் நிஜம்.*
உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.
நேசியுங்கள்.உங்களை நீங்களே நேசியுங்கள்.
இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.
உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.
உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.
உங்களைப் போல அழகானவர் யாரும் இல்லை,
உங்களைப் போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே, நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்குத் தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால். உங்களுக்கு வெற்றியுடன், உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.
வாழ்க வளமுடன் நலமுடன்
🌼🌼🌼🌷🌼🌼🌼
தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன்.
மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார்.
*வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக., திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார்.*
*மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு விவசாயி நன்றி சொன்னார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது.*
இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய்., மீண்டும் ஆவலுடன்பார்த்தது.
*இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்... என்று நினைத்து.*
அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால்., பிரஜையான நாமும்., நம்மால் முடிந்ததை செய்வதுதானே முறை., என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.
மன்னர் போஜன் விவசாயியிடம்., *"என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே., நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது. அது எந்த அளவு எடை காட்டுகிறதோ., அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள்"* என்றார் மன்னர்.
*"உங்கள் பசியை பொறுத்து கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே."* என்று போஜன் தராசை கையில் எடுத்தார்.
ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும்., மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தார் மன்னர்.
*கஜனாவில் இருந்த தங்கம் முழுதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.*
வியந்த மன்னன், *"உங்களை பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்..?"* என்றார்.
*"மன்னா நான் ஒரு விவசாயி. என்னைப் பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை."* என்றார் பணிவுடன்.
இதை ஏற்ற மன்னன் விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழி அனுப்பினார்.
*விவசாயி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.*
*ஆத்மார்த்த மனதுடன் உன் தர்மத்தை/கடமையைச் செய். பலன்தானாக வரும். அதுவே உலகின் மிகச் சிறந்த தர்மமாகும்.*
💐💐💐 💐💐💐
வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா) எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.
பத்திரிக்கையாளர் மஹா ஸ்வாமிகள் அருகில் வந்து, பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். மிக ஸ்வாரஸ்யமாக சென்று கொண்டிருந்த பேட்டியில் உலக ஜனங்கள் அனைவரும் மனம் பதறும் படியாக கேள்வி ஒன்றை கேட்டார் அந்த பத்திரிக்கையாளர்.
“ பெரியவா ? தாங்கள் சன்னியாஸம் வாங்கி கொண்டதற்காக எப்பொழுதாவது வருத்தப்பட்டது உண்டா ? “என்பது தான் அந்த கேள்வி.
இந்த கேள்வியினால் ஸ்ரீ மடமே ஸ்தம்பித்தது ? எங்கும் அமைதி. அமைதி.. அமைதி…
சுதாரித்துக்கொண்ட சிலர், அந்த பத்திரிக்கையாளரை கடிந்துக்கொள்ள யத்தனிக்கையில், ஸ்ரீ சரணாள், அவர்களை அமர்த்தி, அந்த பத்திரிக்கையாளரிடம் பின் வருமாறு கூறினார்.
🌹
வழி தேடும் எனை காக்க மஹாபெரியவா நீ வேண்டுமே!
என் தெய்வமே!
காமகோடி தர்சனம்,
காணக்காண புண்யம்.
🌹🌹🌹🙏🙏🙏🌹🌹
கானம் நீயே இசையும் நீயே
கற்பதும் நீயே அதனால் உயர்வதும் நீயே
கற்பனையும் நீயே கற்சிலையும் நீயே
கவியும் நீயே காவியமும் நீயே
அடி முடி காணா ஹரனும் நீயே
என் மனம் தனை மணம் புரிந்த அருணாசலா 🌷🌷🌷
குரல் சுமப்பதோ கற்கண்டு
கற்றவர்களுக்கும் உண்டோ உன் பணிவு
காண்பதெல்லாம் நிழல் எனும் போது நிஜம் என்றே வந்தாய் .. நீங்காத இடம் தனை கொண்டாய் . 🙏🙏🙏
காரூண்யம் உன் கண் தனில் கருணை வெள்ளம் உன் கரம் தனில்
கட்டிப்போட்டாலும் எட்டி உதைத்தாலும் உன் உருவம் என் நெஞ்சம் தனில்
ஆணி வைத்து அடித்து விட்டேன் .. எங்கெழுந்து அருள்வது நீ இனியே ?
என் கண்களிலே காரூண்யம் எனும் விழியாக உனை கண்டேன்
கற்பனை எனும் சிறகு கொண்டு உன்னிடம் பறந்து வந்தேன் ...
பாற்கடல் மாதவனாய் சயனக்கண்டேன் ...
ஆனந்தம் மிகக்கொண்டே நான் ஆடக்கண்டேன் ...
தில்லையின் சுகந்தம் எங்கும் பரவக்கண்டேன் ..
எல்லாம் நீயே என்றே உணர்ந்து கொண்டேன் ...
கண்கள் மூடும் முன் இமை திறந்தே கற்பகமாய் உனை காணக்கண்டேன் ... 🙏🙏🙏
பதிவு 2
*Started on 26th sep 2020*💐💐💐💐
ஒரு தவறான கேள்வியும் நம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது ... அதையும் வீழ்த்துவோம் ...
*அர்த்தங்கள் அனர்த்தமான வேதனை சொற்கள்*😢😢😢
*1. ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்*
*2. ஒரு பெண் ஒன்றை ஒன்பதாக்குவாள்*
*3. ஏன் அம்பிகை தன்னை எல்லோரும் புகழவேண்டும் என்று ஆசைப்படுகிறாள் ?*
முதலில் பழைய பழமொழி
எவ்வளவு பெண்களின் வாழ்க்கையை சின்னா பின்ன மாக ஆக்கியுள்ளது .. !!
மூல நட்சத்திரத்தில் பிறந்தது அவர்கள் தவறா ?
கல்யாணம் இன்னும் ஆகாமல் கன்னியாகவே இருக்கும் பெண்கள் ஆயிரம் ஆயிரம் ...
*உண்மையான அர்த்தம் என்ன ?*
கஜேந்திரன் *ஆதிமூலமே* என்று பிளறியது நினைவுக்கு வரலாம் ...
எல்லாவற்றிற்கும் முதலாக அதாவது மூலமாக இருப்பவள் அம்பாள் ...
அண்ட சராசரங்களை தனது கர்ப்பத்தில் சுமப்பவள் அவள் ...
*மூலதாரிணி* என்று ஒரு திருநாமம் அவளுக்கு உண்டு ...
மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அவள் கர்பத்திலிருந்து நேராக உதிப்பவர்கள் எப்படி சோடை போவார்கள் ...?
அதிலும் தன் அம்சமான பெண்களை நிர்மூலமாக்குவாளா அந்த பராசக்தி ?
கண்டிப்பாக அவர்களை கை விட மாட்டாள் .
அப்படி கை விடவும் அவளுக்குத் தெரியாது ...
*கருணா ரஸா ஸாகரா* என்ற நாமத்திற்கு மிகவும் அளவுக்கு அதிகமாக பொருத்தம் உடையவள்
இனிமேலும் இப்படி தவறாக அர்த்தம் கொண்டு மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை நாம் நிர்மூலம் ஆகாமல் பார்த்துக்கொள்வோம் ... 🥇🥇🥇🦜🦜🦜
*242. Kāvyalolā काव्यलोला*💐💐💐 She is fond of poetic compositions 🥇🥇🥇
*243. Kāmeśvaramanoharā कामेश्वरमनोहरा*👌👌👌 She steals the heart of Kamesvara🔥🔥🔥
*244. Kāmeśvara-prāna-nāḍī कामेश्वर-प्रान-नाडी*💐💐💐 She is the vital force of kamesvara
*245. Kāmeśotsaṅgavāsinī कामेशोत्सङ्गवासिनी*👌👌👌 She is sitting on the left thigh of Siva 🌺🌺🌺
*246. kāmeśvaraliṅigitāṅgī कामेश्वरलिङिगिताङ्गी*💐💐💐💐💐 Shiva and Sakthi both have mutual dependency and trust 🥇🥇🥇
*247. Kāmeśvarasukhapradā कामेश्वरसुखप्रदा*💐💐💐
Sakthi is the cause for eternal happiness of Shiva 🙏🙏🙏
*248. Kāmeśvarapraṇayinī कामेश्वरप्रणयिनी👍👍👍*
Shiva and sakthi based give and take policy 🙂🙂🙂
Previous nāma said that Śiva is fond of Her and this nāma says that She is fond of Śiva.
Vilāsin also means moving to and fro. Based on this meaning, this nāma says that She moves to and fro between Śiva and those who are ready for merger into Śiva.
There are several stages before merging into Śiva. The stages are sādhana, contemplating a form, contemplating within, state of sthitaprajña, state of jīvanmukta, liberated soul and finally merger with Śiva.
Except the last stage, She takes care of other states of an aspirant. Even in the last stage, She only takes that yogī to Śiva, by imparting knowledge about Him. This is explained in Lalitā Sahasranāma 721 *Śiva-jñāna-pradāyinī* and the interpretation of this nāma is given below:💐💐💐
To know Śiva, one should first know His Śaktī, who alone is capable of leading a person to the Brahman or Śiva. Rāmāyaṇa says ‘wind can be realized through movements, fire can be realised through heat and Śiva can be realized only through Śaktī.’
It can also be said that Śiva is the source of knowledge for Her. 👍👍👍
He is the sovereign, pure free will in knowledge and action. Based upon this principle, Śiva Sūtra-s opens by saying caitanyamātmā. Caitanyam means consciousness of the highest purity and knowledge. There is no difference between Brahman and the highest form of consciousness.
But how Śaktī alone is capable of unravelling Śiva?
This is answered by Śiva Sūtra (I.6) again which says that by meditating on Śaktī, the universe disappears as a separate entity thereby unveiling Self illuminating Śiva.
The process of such happening is described in Spanda Kārikā (I.8) (another treatise of Kashmiri Saivism) which says ‘the empirical individual cannot ward off the urge of desires. But entering the energetic circle of the Self (Śiva), he becomes equal to that Self.’
The seeker of Śiva becomes Śiva himself. This is known as Śiva jñāna and She imparts this kind of Supreme knowledge. 🙂🙂🙂
Śiva is inaccessible directly. Unless She chooses to impart the required Supreme knowledge, none can realise Śiva.
Hence, She is called *Śiva-jñāna-pradāyinī*💐💐💐
கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே - 54
கடலைக் கடந்த அனுமன், ஊரெல்லாம் சீதையைத் தேடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டான்.கணையாழியை அளித்து விவரங்களைக் கூறினான்
அங்கு, அரக்கர்கள் அனுமனின் வாலுக்கு தீயை வைத்தனர்.அத்தீயைக் கொண்டே இலங்கையை எரித்தான் அனுமன்.
பின்னர் ராமன் இருக்குமிடத்திற்கு வந்து,அனுமன் வரவிற்காகக் காத்திருந்த ராமனிடம் "கண்டேன் சீதையை" என்றான்
சிறிய திருவடி என போற்றப்படுபவன் அனுமன்.
கண்டுவந்தேன் (சீதையை) என்றேனோ திருவடியைப் போலே..என்று இந்நிகழ்ச்சி பற்றி திருக்கோளூர்ப் பெண் கூறுகிறாள்
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 115*
🌸🌸🌸🌸
நித்யத்ருப்தா பக்தநிதிர் நியந்த்ரீ நிகிலேஶ்வரீ |
மைத்ர்யாதி வாஸனாலப்யா, மஹாப்ரளய ஸாக்ஷிணீ ‖ 115 ‖
🌸🌸🌸🌸
नित्यतृप्ता, भक्तनिधि, र्नियन्त्री, निखिलेश्वरी |
मैत्र्यादि वासनालभ्या, महाप्रलय साक्षिणी ‖ 115 ‖
🌸🌸🌸🌸
nityatrptaa, bhaktanidhir niyantri, nikhilesvari |
maitryaadi vaasanaalabhyaa, mahaapralaya saakshini ‖ 115 ‖
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஓம் நித்யத்ருப்தாயை நம;
ஓம் பக்தநிதயே நம;
ஓம் நியந்த்ர்யை நம; ,
ஓம் நிகிலேஶ்வர்யை நம;
ஓம் மைத்ர்யாதிவாஸனாலப்யாயை நம;
ஓம் மஹாப்ரளய ஸாக்ஷிண்யை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*566.நித்யத்ருப்தா* - ஸா்வகாலமும் திருப்தியோடு இருப்பவள்.
🌸🌸🌸🌸
*567.பக்தநிதி* - பக்தர்களுக்கு பொக்கிஷம் போலிருப்பவள் (அம்பாள் ஸ்ரீ லலிதை). 🌸🌸🌸🌸
*568.நியந்த்ரி* - இந்த ஜகத்தையெல்லாம் நியமித்து வழிகாட்டியாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*570.மைத்ர்யாதி வாஸனா லப்யா* - மைத்ரீ முதலான வாஸனைகளால் அடையக்கூடியவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*571.மஹாப்ரளய ஸாக்ஷிணீ* - யுகமுடிவில் மஹா ப்ரளயத்துக்கு சாட்சியாக இருப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை.
🌸🌸🌸🌸
ராமபக்தியில் மூழ்கி, தன்னை, தன் வாழ்வையே ராம சேவையில் கழித்த தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது என்றால் அது நம் ஒவ்வொருவரின் பாக்யமே..
🙏🙏🙏🙏🙏🙏🙏
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐
சத பத முகஜாபி: ஸத்கதாபி: முனீனாம்
சத தல முக யத் தே மந்தம் ஆஸீத் ஸ்மிதம் தத்
சத முகம் இஹ மோதம் பச்யதாம் ஸம்விதத்தே🙏🙏🙏
விசுவாமித்திரர் யாகசாலைக்கு போகும் வழியில் பல பல ஆன்மீக கதைகளை ராமருக்கும் லக்ஷ்மணனுக்கும் அவர் சொல்லி வர அவர் சொன்ன நடையை அந்த கதைகள் கொடுத்த நல்ல நீதிகளை கண்டு ராமன் புன்னகைத்தான் 🙂🙂🙂
மேலும் லக்ஷ்மணனும் அப்படியே ரசித்துக்கொண்டு வர அதை பார்த்து தன் பக்தனும் தன்னைப்போலவே ரசித்துக்கொண்டு வருகிறான் என்று சந்தோஷப்பட்டு மேலும் புன்னைகை பூக்கிறானாம்🙂🙂🙂 --
ஓவ்வொரு வரியிலும் *சதம்* என்ற வார்த்தை வருகின்றது -
என்ன தாத்பரியம் என்று கேட்டால் இந்த ஸ்லோகத்தை கேட்பவர்கள் சொல்பவர்கள் அனைவருக்குமே சந்தோஷம் மகிழ்ச்சி நூறு நூறு மடங்காக அதிகரித்துக்கொண்டே வரும் என்று கவி சொல்கிறார்.
நூற்றுக்கணக்கான கட்டை வண்டிகளில் எல்லா முனிவர்களும் ராமன், லக்ஷ்மணன் இவர்களுடன் பயணிக்கும் போது
*ஆகுலை சப்தஜாலை*: அந்த நூற்றுக்கணக்கான கட்டை வண்டிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஒலி வந்ததாம்
*சத பத முகஜாபி:* *ஸத்கதாபி: முனீனாம்* :
அவர்கள் நூற்றுக்கணக்கான வழித்தடங்களை கடந்து செல்லும் போது ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் நல்ல சத்துள்ள தெய்வீக கதைகளை சொல்லுகிறார்கள்..
கட்டை வண்டிகளின் சப்தத்தோடு இவர்களின் கதை சொல்லும் ஒலியும் சேர்ந்து ராமன் காதில் கேட்கிறதாம்...👌👌👌
*யத் தே மந்தம் ஆஸீத் ஸ்மிதம் தத்* :
அப்படி கட்டை வண்டியின் சப்தமும் முனிவர்களின் கதைகளையும் கேட்டு உன் முகத்தில் மலர்ந்ததே ஒரு புன்னகை
*சத முகம் இஹ மோதம் பச்யதாம் ஸம்விதத்தே* :
ராமா!! அதே புன்னகை இன்று வடுவூரிலும் நூற்றுக்கணக்கான பக்தர்களை ரக்ஷித்து வருகின்றது
🙏🙏🙏
சிவபெருமானிடம் சரணடைந்து பார்.....
பல பிறவி பாவங்கள்
அழிந்து விடும்...
🙏🙏
நம் கழுத்தில் உருத்திராக்கம் அணிந்துபார்
பல பிறவி துன்பங்கள்
மீண்டும் தொடர்ந்து வராது அழிந்து விடும்...
🙏🙏
எந்நாளும் திருநீறு நெற்றில் பூசி பார்
மீண்டும் தொடர்ந்து வராது அழித்தொழிக்கப்படும்...🙏🙏
எந்நேரமும் ஐந்தெழுத்து
மந்திரத்தை உச்சரித்து பார்
இன்பங்கள் மட்டுமே வரும் மன அமைதி மட்டுமே வரும்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந்த முதலாளியும் தன் தொழிலாளியை தனக்கு நிகரான வளமையோடு வாழ வைத்துப்பார்க்க எண்ணியதில்லை. ஆனால்
தன்னிலமை மண்ணுயிர்கள் சாரத்தரும்சக்தி
பின்னமிலான் எங்கள் பிரான்!
எந்தத் தலைவனும் தன் தொண்டனுக்கு தான் வகிக்கும் அதே பதவியை கொடுக்க எண்ணியதாக வரலாறு இல்லை. ஆனால்
சித்தமலம் அறுவித்து சிவமாக்கும்
தன்னிகரில்லாத்தலைவன் சிவபெருமான்!
எந்தத்தாயும் இதுவரை பசித்து அழும் முன்னரே
தன் சிசுவிற்கு பாலூட்டியதில்லை . ஆனால்
பால் நினைந்தூட்டும் தாயினும்சாலப்பரிந்தருள் செய்யும் தாயிற்சிறந்த தயாவான தத்துவன் எம்சிவபெருமான்!
- அந்தச்சிவனுக்கு அடிமையாயிருத்தல் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
வெற்றித் திருமகள் எப்போதும் உன்தோள் பற்றித்திரிவாள் உன் நெற்றியில் பொலியும் வெண்ணீறு கண்டு.. ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
21 தலைமுறையை நரகத்தில் வீழாது காக்கும் நீ படிக்கும் திருவாசகம்.. ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
• அறியாமை விலகும்
• ஆனந்தம் பெருகும்
• இருள் அகலும்
• ஈசனருள் பெருகும்
• உண்மை விளங்கும்
• ஊழ்வினை துலங்கும்
• எப்போதும் மலர்ந்திருப்பாய்
• ஏகாந்தத்தில் கலந்திருப்பாய்
• ஐம்பூதங்களும் உன்வசமாகும்
• ஒருவன் என்னும் ஒருவன் வருவான்
• ஓங்காரத்துட்பொருளை தானே விரிப்பான்
• ஒளடதமாய் உன் பிறவி நோய்த்தீர்ப்பான்
**திருச்சிற்றம்பலம்**
🙌🏾அவனருளாலே👐🏻
🙏🏻🙏🏻
சிவமே தவம்.....
தவமே சிவம்.....
🙏🏻🙏🏻
தமிழும்
சைவசமயமும்
சைவநெறியும்
தழைத்தோங்க
சிவவழிபாடு
பின்பற்றுவோம்
மேன்மைக் கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் சிவாயநம திருச்சிற்றம்பலம்....!!
நற்றுணையவது நமசிவாயவே!!!
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை.
மாதம் ஒருமுறை சித்தர்கள், நாயன்மார்கள் வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயத்தில் மூலிகை அபிடேக பெருந்திருவிழா நடைபெறுகிறது
அனைவரும் வருக