பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -4 (189)
பச்சைப்புடவைக்காரி
தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -4
உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்
(189)
சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிஷம் ஆகிய சாஸ்திரங்களையும் இவர் தனது சீடர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். அந்தக் காலத்தில் குருமார்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கென்று தட்சிணை எதுவும் வாங்கும் வழக்கம் கிடையாது.
சீடர்களைத் தங்களோடு வைத்துக்கொண்டு, உணவளித்துப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். விசேஷமான உத்சவ தினங்களில் குறிப்பாக ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இவர் பக்க வாத்தியங்களோடு ஊரில் உஞ்சவிருத்திசெய்து அதில் ஈட்டும் பொருள் கொண்டு திருவிழாக்களைக் கொண்டாடி வந்தார்.
திருமஞ்சன வீதியில் தியாகராஜரின் வீடு அமைந்திருந்தது. தினசரி உஞ்சவிருத்தி சென்று வீதிகளின் வழியாக நடந்து வந்து வீட்டை அடைவார். அங்கு அவருடைய பூஜை அறையில் ஸ்ரீ சீதாராமர், லக்ஷ்மணர், அனுமன் ஆகியோர் உள்ள விக்ரகத்தின் முன் உட்கார்ந்து தியானிப்பார்.
கையில் தம்பூரா, மெய்மறந்த நிலையில் அவர் பாடும் பாடல்கள், காவிரியின் பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடிவருகின்றது. இசை இன்பம் ஊரை நனைக்கிறது. இவரது ஸாஹித்யங்களில் ஸ்ருங்கார ரஸம்கொண்ட பாடல்கள் கிடையாது. இவர் நெளகா சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தைப் படைத்திருக்கிறார். இதில் ஸ்ருங்கார ரஸ வருணனைகளுக்கு இடமிருந்தும் அவர் அப்படிப் பாடவில்லை.
இவரது நோக்கமே மக்களுக்கு பக்தி ரஸத்தை அள்ளி வழங்க வேண்டுமென்பதுதான் என்பது தெரிகிறது. இவர் சிறு வயதுமுதலே ஸ்ரீராம நாம ஜபத்தைச் செய்துகொண்டு வந்தார்.
தினம் தினம் இவர் ஜபிக்கும் ராமநாம ஜபம் பல கோடிகளைக் கடந்ததாக இருந்தது. இவர் எந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருந்தாலும், இவரது நா ஸ்ரீராமநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருக்கும்.
இவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும், தெலுங்கு நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் இருதய ஸ்தானத்திற்கு குடிபுகுந்தவர் என்றபோதிலும், இவர் பெரும்பாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சீடர்களைத் தன்னுடன் ஏற்றுக்கொண்டு இசை ஞானத்தை அவர்களுக்கு உபதேசித்து வந்தார்.
இவர் ஸ்ரீ ராமனை வழிபட்டாலும், இதர தெய்வங்களின்மீது பற்றும் பக்தியும் குறைந்தவரில்லை. தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிற மொழிகளின் மீது துவேஷம் இல்லை. தன் பாடல்களை மட்டுமின்றி பூஜையின் போது மற்ற பல பெரியோர்களின் கீர்த்தனைகளையும் இவர் பாடி வந்திருக்கிறார். அப்படி இவர் பாடிய பெரியோர்கள் ஸ்ரீ புரந்தரதாஸர், ஸ்ரீ ராமதாஸ், ஸ்ரீ வேங்கடவிட்டலஸ்வாமிகள், ஸ்ரீதாளபாக்கம் சின்னையா, ஆகிய பெரியோர்களின் பாடல்களும் இவரால் பாடப்பட்டன.
கோபாலகிருஷ்ணபாரதியார் சற்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு திருவையாறு வந்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் வீட்டில் சீடர்களுக்கு ஆபோகி ராகக் கீர்த்தனையைப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவர் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். குருநாதர் பாடம் சொல்லிவிட்டு காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்து வருவதற்காக வாயிற்புறம் வந்தபோது திண்ணையில் உட்கார்ந்திருக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாரை யார் என்று விசாரித்தார்.
தான் மாயூரத்திலிருந்து வருவதாக பதில் சொன்னார். அப்படியானால் அங்கு தமிழில் சிறப்பான பாடல்களை இயற்றிப் பாடுகிறாரே கோபாலகிருஷ்ண பாரதியார் அவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். அடியேன்தான் அந்த கோபாலகிருஷ்ண பாரதி என்றார் இவர். தியாகராஜருக்கு மிக்க மகிழ்ச்சி.
வந்திருக்கும் விருந்தினரை வரவேற்று உபசரித்தார். நீங்கள் ஆபோகியில் ஏதாவது பாடல் இயற்றிப் பாடியிருக்கிறீர்களா என்றார். இதுவரை இல்லை என்று இவர் பதிலிறுத்தார். சரி இருங்கள் நான் போய் காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பியதும், பாரதி சொன்னார் நான் இப்போது ஆபோகியில் ஒரு பாடல் இயற்றியிருக்கிறேன் என்று. அப்படியா சரி பாடுங்கள் என்றார் தியாகராஜர்.
கோபாலகிருஷ்ண பாரதியார் பாடினார். "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை சபாபதிக்கு" என்று தொடங்கும் பாடல் அது. தான் காவிரிக்கு ஸ்நானம் செய்து திரும்புமுன் இப்படியொரு கீர்த்தனையை இவர் இயற்றியது கண்டு சுவாமிகளுக்கு பேரானந்தம். அவரை மனதாரப் பாராட்டினார்
ஓ ராமா! உன்னிடம் என்ன குறை இருக்கிறது? அது என் குற்றம்தான்.
தங்கத்தின் தரம் நன்றாக இல்லாவிட்டால் பொற்கொல்லனை எப்படிக் குறை சொல்லமுடியும்?
உன் மகளால் பிரசவ வலியைப் பொறுக்க முடியாவிட்டால் மருமகனை எப்படிக் குறைசொல்லமுடியும்?
என் முந்தைய பிறவிகளில் நான் நல்லவற்றைச் செய்யாதபோது கடவுளை வழிபட மறந்தபோது
என் கஷ்டங்களுக்கு நான் எப்படி உன்னைக் குறைசொல்லமுடியும் தியாகராஜன் உன் பாதம் வணங்குகிறேன்”
என்பது “மீவல்ல குணதோஷமேமி” என்ற காபி ராக கீர்த்தனையாகும்.
இதில் சாதாரண மக்களுக்கும் புரிகிற, அவர்கள் அறிந்த எளிய உவமைகள், பேச்சுவழக்குச் சான்றுகள் முன்னிறுத்தப்படுகின்றன. மனதிற்குகந்த ராமனை எந்தச் சூழ்நிலையிலும் குற்றம்சொல்ல தியாகராஜர் தயாராக இல்லை. தனது சிக்கல்களுக்கு ராமன் உதவாமல்போக, கூடியிருப்பவர்கள் காரணமா என்ற சந்தேகத்தை ராமனிடம் முன்வைப்பதாக அமையும் ஒரு கீர்த்தனை படித்து ரசிப்பதற்குரியதாகும்.
“ஓ ராமா! என்னைக் காப்பாற்றாமல் நீ விட்டுவிடுவது நியாயமா?
பக்தர்கள் உனக்கு நெருக்கமானவர்கள்
சீதாதேவி என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்றாளா?
நீண்டகாலமாக உன்னைப் பிரிந்திருந்த பரதன்,
நித்திரையை வெற்றி கொண்ட லட்சுமணன்,
உன் பாதத்தைவிட்டு நீங்காத மாருதி ஆகியோர்
எனக்கு உதவவேண்டாமென்று சொல்லி விட்டார்களோ?
பிரமன் என்பக்தியின் தரம்பற்றி உன்னிடம் சொல்லவில்லையா?
வாணி என்னைப்பற்றிச் சிறப்பாக எதுவும் சொல்லவில்லையா?
தியாகராஜா! இது என்ன? ”
“யுக்தமு காது நனு ரக்ஷிஞ்சகனுண்டேதி” என்ற ஸ்ரீ ராகக் கீர்த்தனை ராமனைக் குறைசொல்லாத, ஆனால் அவனைச் சுற்றியிருக்கும் மற்றவர்களை காரணிகளாக்குகிற நயத்தை மிக அழகாகக் காட்டுகிறது.
மனவடக்கம் என்பது அவரவர் கையிலிருப்பது. அதற்கு வேறு எந்தத்தகுதியும் தேவையில்லை. “மனிதனுக்குத் தன் மனதை அடக்கத் தெரியாவிட்டால் கோயில்மணி அடிப்பதும் மலர்வைத்து பூஜைசெய்வதுமான வழிபாடு எதற்கு?
வஞ்சக எண்ணம் கொண்டவன் காவேரியிலும், மந்தாகினியிலும் நீராடினால் மட்டும் கடவுள் காப்பாற்றிவிடுவாரா? காமமும், கோபமும் கொண்டு வாழ்பவன் பூஜைபுனஸ்காரங்களால் எதையும் செய்யமுடியாது தியாகராஜா” “மனஸு நில்ப சக்திலேக போதே” என்ற ஆபோகி ராக கீர்த்தனை எளிய நிலையில் சாதாரண மனிதனுக்கும் பக்தியின் தன்மையைப் புரியவைக்கிறது.
எது உண்மை பக்தி என்பதை எளிய உவமைகளில் சொல்கிற “பலமு குலமு” என்ற ஸாவேரி ராகத்திலான பிரபலமான கீர்த்தனை கீழே :
“வெறும் உடல்பலத்தால் என்னபயன்?
உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்?
சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான்
காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா?
கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா?
ஆடு புல்தின்றால் அது உபவாசமா?
வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?
குரங்கு காட்டில் வசிப்பதால் சந்நியாசியாகிவிடுமா?
உண்மை பக்தியைதான் ஏற்கிறான் தியாகராஜா!”
என்று எளிமையான சான்றுகளால் உயர்ந்த தத்துவத்தையும், உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.
ரவி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ---- நாளை திருவையாறு - இதன் பெருமைகளையும் , தியாகராஜரின் ஆராதனையும் பார்ப்போம் .
அம்மா ! பொழுது விடிந்தது. அருணன் சிவந்து கிழக்கே தலை தூக்குகிறான். உன் தாமரைத் திருவடி போற்றுகிறேன் அம்பா தேவி லலிதா திரிபுரசுந்தரி.
ஆச்சர்யமாக இந்த திருவடிகள் துளியும் ஒய்வு ஒழிவு இல்லாமல் எத்தனை கோடி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வாரி வழங்குகிறது. ,
சம்சார சாகரத்தை கடக்கும் படகாக அல்லவோ செயல்படுகிறது.
நான் மட்டுமா உன்னை விடிகாலையில் தேடி வந்து வணங்குபவன்? அதோ எனக்கு முன்னே தாமரை மலர் மேல் அமரும் ப்ரம்மதேவனே தேவர்கள் சுரர்கள் புடை சூழ உன்னருள் வேண்டி நிற்கிறார்கள்.
தாமரை, அங்குசம், கொடி , சுதர்சன சக்ரம் தாங்கி நிற்கும் அம்பா தேவி லலிதா திரிபுர சுந்தரி உன்னை விடிகாலையில் வணங்குகிறேன்.
சிரித்துக்கொண்டே சத்தம் இல்லாமல் மறைந்தாள் சண்ட முண்டாசுர நிஷூதினீ ....
Comments
ஒரு நாள் எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது அவர்கள், “சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே…சம்ஸ்க்ருதம் & தெலுங்கில்தான் பாடி இருக்கிறார்கள்.எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால், சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள் கூறினார்கள்.தமிழ் சுத்த waste என்றார்கள்.
ஆகையால் நானும் பதிலுக்கு ஏன்? தமிழில் தேவாரம், திருவாசகம் எல்லாம் இல்லையா? பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா என்று வாதாடினேன்.அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் ஈடு படவில்லை.
என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார், என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். நானும் சொன்னேன். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே மதிக்காக என் அம்மா, ” நாளைக்கு காஞ்சீபுரத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் பண்ணப் போறேன்.
மறுநாள் நானும் என் அம்மாவும் மஹா சுவாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருந்தோம். தரிசனமும் நன்றாகக் கிடைத்தது. நான் கொண்டு சென்றிருந்த ஓவியங்களை, சுவாமிகளின் அருகில் இருந்த உதவியாளர் மூலமாக, சுவாமிகளிடம் கொடுத்தேன்.
என்னுடைய படிப்பு பற்றி எல்லாம் விசாரித்தார். நானும் சங்கீதக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினேன். அப்போது ஒரு க்ஷண நேரம் முதல் நாள் நடந்த வாக்கு வாதத்தைப் பற்றி பெரியவாளிடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வு கேட்கலாமா என்று தோன்றியது. அப்படி செய்தால், அதிகப் பிரசங்கி என்று நினைத்துவிடப் போகிறார்களே என்று என்னை நானே அடக்கிக் கொண்டுவிட்டேன்.
பிறகு அந்த ஓவியங்களைப் பற்றி விசாரித்தார்.
அதில் முத்து சுவாமி தீட்சிதரின் . கையில் உள்ள வீணையில் நான் ஒரு தவறு செய்திருந்தேன்.
அந்தத் தவறை சுட்டிக் காட்டிய பெரியவா, அந்த வீணை தீட்சிதருக்கு சாக்ஷாத் கங்கா தேவியே அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்தது. அதை மாத்தறது தப்பு. அடுத்த தரம் வரும் போது அதை சரியா வரைந்து எடுத்துண்டு வா. என்றார்.
பிறகு, “இவளோட ஜீவிய சரித்ரம் தெரியுமோ உனக்கு?” என்றார். நானும், ” ஓரளவுக்குத் தெரியும் பெரியவா” என்றேன். தெரிஞ்சமட்டும் சொல்லு…என்றார்.
இவா மூணு பேரும் திருவாரூர்லே பிறந்தா…..என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம். உடனே நிறுத்து என்று சைகை செய்த பெரியவர் தொடர்ந்தார். அவர் வாக்கிலேயே சொல்கிறேன்.
தர்சநாத் அப்ர சதஸி ஜனநாத் கமலாலையே
காச்யாம் து மரணான் முக்தி: ஸ்மரணே அருணாச்சலே”
இதுக்கு என்ன அர்த்தம்னா….
இப்பேர்பட்ட மஹா சபையான பொன்னம்பலத்தை தரிசனம் பண்ணிக்கணும்.
அடுத்தது, ஜனநாத் கமலாலையே….
இதுக்கு கடைசிலே வரேன்…..
ஸ்மரணே அருணாச்சலே…. சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணிண்ட முக்தின்னா….இங்கே அருணாசலேஸ்வரரை நினைச்சுண்ட தத் க்ஷணத்திலே (அந்த நிமிஷத்திலேயே) முக்தி.
ஜனநாத் கமலாலையேன்னா திருவாரூர்லே பிறந்தால் முக்தி. அந்த ஓவியங்களைக் காட்டி, இவா -மூணு பேருமே திருவாரூர்லே பிறந்திருக்கா. அங்கே பிறந்ததுனாலேயே ஜீவன் முக்தாள் ஆய்ட்டா.
இப்போது என்னிடம்…..
“ஆமா…உனக்கு ஒரு சமாசாரம் தெரியுமோ…..
இந்த திருவாரூர்…நம்ப தஞ்சாவூர் ஜில்லாலதான் இருக்கு….
ஆமாம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன்.
அவா எந்த பாஷையிலே பாடி இருந்தாலும் அவா பிறந்த இடம் நம் தமிழ்நாடுதான். அப்படி பார்த்தா….சங்கீதத்தினுடைய பிறப்பிடமே நம் தமிழ்நாடுதான்னு சொல்லலாம் இல்லையா.(மீண்டும் ஆமாம் என்ற பாவனையில் தலை ஆட்டினேன்.)
தமிழ்நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லைன்னு சொல்லிடலாமே இல்லையா….
முதல் நாள் கல்லூரியில் நடந்த வாக்குவாதத்திற்கு ஒரு அருமையான விளக்கம் நான் கேட்காமலேயே கிடைத்தது.
பெரியவாளின் மேற்படி விளக்கத்தைக் கேட்டு நான் எப்படிப்பட்ட உணர்ச்சியில் இருந்தேன் என்பதை விவரிக்கத் தெரியவில்லை.
என் கண்களில் கரகரவென்று கண்ணீர் வந்துவிட்டது.
சங்கீத மும்மூர்த்திகள் பலவிதமான தெய்வங்களை பற்றிப்பாடி இருக்கிறார்கள். அது எந்த தெய்வத்தைப் பற்றி இருந்தாலும் ஒவ்வொரு முறை நான் பாடும் போதும் நான் நினைத்துக் கொள்ளும் ஒரே தெய்வம் நம் கருணைக் கடலாம் காஞ்சி மகான் ஒருவர்தான்.🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐
புரோ தேசே ஜாதா பரம ரமணீயா அத ரமணீ
முனே: ப்ராந்தே சாபூத் முனிரத பர: கோபி முதித:
முகே முக்தே மந்தஸ்மிதம் அபி மனோஜ்ஞம் தவ ததா
शिला सा संस्पृष्टा चरणरजसा ते रघुपते
पुरोदेशे जाता परमरमणीयाऽथ रमणी।
मुनेः प्रान्ते चाभूत् मुनिरथ परः कोऽपि मुदितः
मुखे मुग्धे मन्दस्मितमपि मनोज्ञं तव तदा॥
இவள் கௌதம முனிவரின் தர்ம பத்தினி - இந்திரன் செய்த மன்மத லீலைகளில் அகப்பட்டு தன் கணவரிடம் சாபம் அடைந்தவள் என்று சொன்னவுடன் ஆஹா எனக்கு இன்னொரு தாய் கிடைத்துவிட்டாள் -
என் தாய் கௌசல்யா பன்னிரண்டு மாதங்கள் மட்டுமே சுமந்தவள் அனால் இந்த அகல்யை எனும் தாயோ யுகம் யுகமாக தன கருத்தில் சுமந்தவள் என்றே சொல்லி மெல்லியதாய் புன்னகை ஒன்றைப்பூத்தான் என்று போன ஸ்லோகத்தில் பார்த்தோம்
ரகுபதியே உன் பாதங்கள் படவேண்டாம் - அவை தேவை இல்லை -
உன் பாதுகைகளில் பட்டுள்ள துளிகள் மட்டுமே போதும் அகல்யையின் சாபம் அதை நீக்க - இங்கே இரண்டு அர்த்தங்கள் வரும் -
ராமனை பாத்துளிகள் அவ்வளவு உயர்ந்தவை அவன் பாதங்கள் கொடுக்கும் சாபவிமோசனத்தை அவன் பாதுகைகளில் ஒட்டிக்கொண்ட மண் தீர்த்துவிடுமாம் --
இன்னொன்று ராமன் இன்னொரு பெண்ணை அது தாய்க்கு சமமாக இருந்தாலும் தீண்ட மாட்டான் அதனால் அவன் திருவடிகளில் ஓதிக்கொண்ட மண் துளிகள் அவள் சாபத்தை நீக்கக்கூடிய உயர்வை பெற்றுள்ளது
ஏ ரகுபதே ... உன் திருவடிகள் கல்லாய் இருந்த அகல்யையின் மேல் படவில்லை -- உன் பாதத்தில் ஒட்டிக்கொண்ட மண் துளிகள் மட்டுமே அந்த கல்லின் மீது தெளித்தன
புரோ தேசே ஜாதா பரம ரமணீயா அத ரமணீ
பட்டவுடன் என்ன நடந்தது - அந்த கல் சிதற அதிலிருந்து ஒரு அழகிய பெண் ஒருத்தி வெளிப்பட்டாள்
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான். – 1.471
(அவர்கள்) பார்த்த கல்லின் மீது காகுத்தர் வழிவந்தனின் (இராமனின்) கால் தூசி பட்டவுடன், (அகலியை) முந்தைய (அழகு) வடிவத்தில் நின்றாள்.
பெரும் துறவியும் (விசுவாமித்திரரும்) (அப்பெண் முனிவர் கௌதமரின் மனைவி அகலியை என்று) கூறினார்…
கம்பன் மேலும் பாடுகிறான் விசுவாமித்திரர் சொல்வதாக
அண்ணலே உன் கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன். – 1.481 - கை வண்ணம் தாடகியை வதைத்த போது கால் வண்ணம் இங்கே அகல்யாவின் சாப விமோசனம் பெரும் போது .....
அப்போது கௌதமரும் வந்து சேர்ந்தார் அங்கே - அகல்யா அவருடன் போய் சேர்ந்துகொண்டாள் - இதைப்பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமடைந்தார் இன்னொரு முனிவரான விசுவாமித்திரர் - ராமனுக்கும் மிகுந்த சந்தோஷம் - என்னால் இரண்டு முனிவர்களுக்கும் இன்று மகிழ்ச்சியை கொடுக்கமுடிந்ததே என்று ஒரு புன்னகையைப் பூத்தானாம்
ராமனின் வெகுளித்தனமான முகத்தில் மிகவும் அழகான மெல்லிய புன்னகை பூத்தது - அந்த புன்னகை தான் இன்று வடுவூரிலும் திகழக்கூடிய புன்னகையோ ராமா ?
மகிழ்ச்சியில் சிறந்த மகிழ்ச்சி என்னவென்றால் இன்னொருவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் செயல் ஒன்றுதான்
பாட்டு கேட்டிருக்கேன்.
மஹாபெரியவா அவர்களுடன்
அனுபவம். படித்ததும் மகிழ்ச்சியாக
உள்ளது. 🙏
ஜெய் ஸ்ரீ ராம்🙏🏻🙏🏻🌹🌹🌹
*242. Kāvyalolā काव्यलोला*💐💐💐 She is fond of poetic compositions 🥇🥇🥇
*243. Kāmeśvaramanoharā कामेश्वरमनोहरा*👌👌👌 She steals the heart of Kamesvara🔥🔥🔥
*244. Kāmeśvara-prāna-nāḍī कामेश्वर-प्रान-नाडी*💐💐💐 She is the vital force of kamesvara
*245. Kāmeśotsaṅgavāsinī कामेशोत्सङ्गवासिनी*👌👌👌 She is sitting on the left thigh of Siva 🌺🌺🌺
*246. kāmeśvaraliṅigitāṅgī कामेश्वरलिङिगिताङ्गी*💐💐💐💐💐 Shiva and Sakthi both have mutual dependency and trust 🥇🥇🥇
*247. Kāmeśvarasukhapradā कामेश्वरसुखप्रदा*💐💐💐
Sakthi is the cause for eternal happiness of Shiva 🙏🙏🙏
*248. Kāmeśvarapraṇayinī कामेश्वरप्रणयिनी👍👍👍*
Shiva and sakthi based give and take policy 🙂🙂🙂
*249. Kāmeśvaravilāsinī कामेश्वरविलासिनी*👌👌👌
She helps us to merge with the ultimate , Shiva 🌼🌼🌼🌼🌼
*250. Kāmeśvaratapaḥ siddhiḥ कामेश्वरतपः सिद्धिः*💐💐💐💐💐 She is the resultant factor of Siva's penance 🙂🙂🙂
In the Supreme form, Śiva and Śaktī are called Mahā Kāmeśvara and Mahā Kāmeśvarī.
They are the Ultimate and the Absolute. In the absolute form, She is called prakāśa vimarśa mahā māyā svarūpini. Both of them in this absolute form have four hands and hold the same weapons - pāśa, aṅkuśa, bow made of sugar cane and arrow made of flowers. 🔥🌷🌷
He is seated on a throne, with left leg folded and his right foot placed on the ground.
She, the red complexioned beauty incarnate, radiating with smile that is filled with joy and grace, ever ready to help Her devotees, walking towards Mahā Kāmeśvara with full of bashfulness. 👏👏👏
Even swans, praised for their agile walk are ashamed of themselves on noticing the way She walks towards Him.
Mahā Kāmeśvara beams with loving smile on seeing Her.
She sits on His left thigh with Her right leg folded and left foot placed on a golden vessel filled with rubies.🌷🌷🌷
When She sits on His lap, His form also turns red.
Both of them are radiating and when gods and goddesses look at them, they mistake the bright red radiation emanating from them as sun.
This divine couple always stays united and that is why in this Sahasranāma, the penultimate nāma is called śivaśaktī aikya rūpiṇī.
This nāma complies with the above description.
This form is called the Absolute form. It is presumed that there is nothing beyond this Śivaśaktī aikya or the Absolute form.}💪💪💪
பதிவு 4
*Started on 26th sep 2020*💐💐💐💐
*அர்த்தங்கள் அனர்த்தமான வேதனை சொற்கள்*😢😢😢
*1. ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்*
*2. ஒரு பெண் ஒன்றை ஒன்பதாக்குவாள்*
*3. ஏன் அம்பிகை தன்னை எல்லோரும் புகழவேண்டும் என்று ஆசைப்படுகிறாள் ?*
பெண்ணாக பிறக்க பெரும் தவம் செய்திருக்க வேண்டும் .
எல்லோருக்கும் சுலபமாக அந்த வரம் கிட்டாது ...
ஏன் அம்பிகை தன்னை எல்லோரும் புகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் ?
இந்த சந்தேகம் வந்தே இருக்கக் கூடாது ....
குழந்தை தன் மழலையில் *அம்மா நீ அலகா இக்கே* என்று சொல்லும் போது எந்த தாய்க்குத்தான் பூரிப்பும் பெருமிதமும் வராது ...
நாம் எல்லோருமே அவள் குழந்தைகள் .. மழலை மாறாத குழந்தைகள் ...
ஒன்று நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ...
அவள் எல்லாம் நிறைந்தவள் ...
அழியும் மேனியைக் கொண்ட நாம் புகழ்வதால் இன்னும் என்ன சிறப்பு அவளுக்கு வந்து விடப்போகிறது ... ?
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் வெறும் ஒரு பெயர் பொறித்த பட்டியல் அல்ல ..
ஓவ்வொரு நாமமும் மந்திரபூர்வமானவை ...
ஓவ்வொரு நாமத்திற்கும் ஒரு சக்தி இருக்கிறது ...
நமக்குத்தான் சொல்வதால் பலன் ... அம்பாளுக்கு அல்ல ..🦜🦜🦜
*கற்பது உன் நாமம்* என்றார் அபிராமி பட்டர் ... இதைப்பற்றி நாளை ஆராய்வோம் .... 👣👣👣
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 117*
🌸🌸🌸🌸
மஹாகைலாஸ நிலயா, ம்ருணாள ம்ருது தோர்லதா |
மஹனீயா, தயாமூர்த்தீர் மஹா ஸாம் ராஜ்ய ஶாலினீ ‖ 117 ‖
🌸🌸🌸🌸
महाकैलास निलया, मृणाल मृदुदोर्लता |
महनीया, दयामूर्ती, र्महासाम्राज्यशालिनी ‖ 117 ‖
🌸🌸🌸🌸
mahaakailaasa nilayaa, mrnaala mrdudorlataa |
mahaniyaa, dayaamurtir mahaa saam raajya saalini ‖ 117 ‖
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
ஓம் மஹாகைலாஸ நிலயாயை நம;
ஓம் ம்ருணாள ம்ருதுதோர்லதாயை நம;
ஓம் மஹனீயாயை நம;
ஓம் தயாமூர்த்யை நம;
ஓம் மஹாஸாம்ராஜ்யஶாலின்யை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*578.மஹாகைலாஸ நிலயா* - மஹாதேவன் இருக்கும் மஹா கைலாஸத்தில் வசிப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*579.ம்ருணாள ம்ருது தோர்லதா* - தாமரைத்தண்டிலிருக்கும் நூலைப்போல் மிருதுவான குளிர்ந்த கரங்களையுடையவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*580.மஹநீயா* - எல்லோராலும் பூஜிக்கத்தக்கவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*581.தயாமூர்த்தீ* - கருணை வடிவமாக இருப்பவள் அம்பாள்..
🌸🌸🌸🌸
*582.மஹாஸாம்ராஜ்யஶாலினீ* - மஹத்தான ஸாம்ராஜ்யத்தோடு விளங்குகிறவள்.
🌸🌸🌸🌸
Experience and Books .
10 THINGS TO AVOID IN KALI YUGA .
For mental peace and happiness.
1 Unexplainable Arrogance :
————————————
Be it from Knowledge, Merit Beauty , Power, Position , Family background Children”s achievements. Forefathers Wealth , Great habits , Individual accomplishments , Others .
Anytime , they will all go away & get transferred to others . Arrogance spells doom . Things keep changing .
Nothing is permanent.
———————————
Either others or one”s own self .
I am healthy .
I will live long .
You will go to a hundred .
How long you want to live .
Who are we to decide ??
Why speak on Life span ?
What is that we understood from our Scriptures , Vedas , Bhavans journals , Soeaking tree , others.
Dangerous loose talk . Please avoid any comment .
The person making such comments shall face dire consequences.
3 . Greed ;
———-
Be happy with what we have
Go after acquiring what you need or want , with sincerity, hard work and in an ethical way . Never look at others wealth or property and try to grab .
It spells disaster . Karma will settle the scores .
We have seen all around us on how “ Ancestral property is a Genetic lottery Do what to preserve it and claim what is rightfully yours . But Greed for Ancestral property “ has destroyed relationships, families and peace .
———————
They say it is a ghastly crime to hurt others Some people are not thick skinned and sensitive . Anything . Develop a Sweet tongue . It moulds one”s future and destiny . Do not hurt others with a caustic tongue .
: —————————//
Forgive and Forget quickly :
Sometimes even close people hurt . RELATIVE , BOSS , COLLEAGUES, PARTNERS, CUSTOMER, ELDERS YOUNG, VENDOR , OTHERS .
Remember, Momentary reactions do not define a character . Just ignore all those who misbehaved with us . Keeping them is a burden on Mind . It’s not worth it . No carry forward in Kali Yuga .
.
I will share other 5 - FIVE qualities tomorrow.
சிவாயநம திருச்சிற்றம்பலம், திருஅண்டப் பகுதிக்கு இணைந்து விளக்கம் காண வைத்துக் கொண்டிருக்கின்ற இறைவனின் திருவடிகளை வணங்கி இன்றைய பதிவைப் படிப்போம்.
இந்த வரியில் மாணிக்கவாசகர் இறைவனின் ஆற்றலை, அன்பை, எண்ணி எண்ணி வியக்கிறார்.
இறைவனின் ஆற்றலும், அன்பும் அளவிட முடியாதது, கணக்கிலடங்காது, பரந்து விரிந்தது, அதற்கு எல்லையே இல்லை என்று மிகுந்த வியப்புடன் “நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் கூறுகிறார்”.
வரிகள் 8-9, சத்தத்தில் இருந்து எப்படி உயிர்கள் உண்டானது மற்றும் எப்படி உயிர்கள் இறைவனை விட்டு பிரிந்து வந்தன?
என்பதைப் பற்றி குறிப்பிடுகிறது. வரிகள் 9-12, அப்படி உருவாக்கிய உயிர்கள், மற்றும் அண்டங்கள் வாசுகி என்னும் பாம்பின் விஷத்தால் அழிய இருந்த பொழுது, இறைவன், ஒரு நொடி கூட யோசிக்காமல் அந்த விஷத்தை உட்கொள்ள, அதனை உமையம்மை தன் விரலினால் இறைவனின் கழுத்தின் பின்பகுதிக்கு தள்ளினார் என்பதை பற்றி குறிப்பிடுகிறது.
இருபதாம் வரியிலிருந்து முப்பதாம் வரி வரை, உயிர்களுக்கு தேவையான தண்ணீர், காற்று, வெளிச்சம், நெருப்பு போன்றவற்றை எப்படி பார்த்துப் பார்த்து உருவாக்கியிருக்கிறார் என்பதை பற்றி குறிப்பிடுகிறது.
முப்பத்தி ஒன்றாம் வரியில், திருமாலின் வராக அவதாரத்தை அழித்து எப்படி அந்தப் பன்றியின் பல்லை கழுத்தில் அணிந்து கொண்டார் என்பதை பற்றி குறிப்பிடுகிறது.
திருமால் பன்றி அவதாரம் எடுத்து உலகை காத்த பின், அரக்கனை அழித்த வெறி மாறாமல் உலகை துன்புறுத்துகிறார். அப்பொழுது இறைவன் சிவன் அந்தப் பன்றியை வென்று அதன் பல்லை அணிந்துகொண்டார்.
நீற்றோன் என்றால், கீழ்த்தரப் பண்பு பொருட்களை எரித்து சாம்பலாக்குபவன் என்று பொருள். வரிகள் 31 மற்றும் 32, ஆணவம் கோபம் போன்ற மலங்களை, அழித்தவன் அனைவருக்கும் முன்னோரான சிவன் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். மேல் சொன்னவைகளை நினைத்து நினைத்து மாணிக்கவாசகர், இறைவனை வியந்து போற்றுகிறார்.
பொழுது அதை வியந்து போற்ற தெரிவதில்லை.
ஏனெனில் அதனுடைய முக்கியத்துவம் நமக்கு தெரிவதில்லை. நம்மைப் பொறுத்தவரையில் கடையில் காசு கொடுத்தால் வேண்டியது கிடைத்துவிடுகிறது.
எனவே விவசாயின் முக்கியத்துவம் நமக்கு புரியாமல், உணரமுடியாமல் போய்விடுகிறது.
எப்படி கடையில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு விவசாயி அடித்தளம் என்பதை நாம் உணராமல் இருக்கிறோமோ, அதுபோல் இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு விஷயங்களும் கடவுளால் நமக்காக உருவாக்கப்பட்டது என்பதை நாம் உணராமல் இருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் திருஅண்டப்பகுதி படிக்கும் பொழுது பாராயணம் செய்யும் பொழுது, இறைவனின் எல்லையற்ற அளப்பரிய அன்பினை, சக்தியை உணர்வோம்.
நித்திய பிரதோஷம், மாதப் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என அனைத்து பிரதோஷ வேளைகளிலும், இறைவனை நன்றியோடு நினைத்து அவனைப் போற்றிப் புகழ்வோம்.
நம் உடலை, நம் உடலின் பாகங்களை, உடலின் உள்ளுறுப்புகளை, நமக்கு உணவு கொடுக்கும் சூரியனை, நாம் சுவாசிக்கும் காற்றை, நம் தாகம் தீர்க்கும் தண்ணீர், இன்னும் பல உயிர்களை, செடிகொடிகளை அனைத்தையும் படைத்தவன் இறைவன்.
அதுவும் ஒரு நொடியில் அனைத்தையும் படைத்திருக்கிறான். அற்புதமான அந்த இறைவனை என்னை எத்தனை முறை வியந்து இருக்கிறோம் அல்லது மனமுருகி இருக்கிறோம். மாணிக்கவாசகர் உணர்ந்ததை ஏன் நம்மால் உணர இயலவில்லை?
இந்தக் கேள்விக்கு பதில் உணரும் நேரம், நம்முடைய மனம் உருகும்! கண்களில் கண்ணீர் பெருகும்! அது எந் நாளோ இறைவா?
சிவாயநம திருச்சிற்றம்பலம்
*பதிவு 788*🥇🥇🥇
*US 780*
*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*
பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)
*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.
💐💐💐🌷🌷🌷
*32 வது ஸ்தபகம்*👌👌👌
இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸
🥇🥇🥇
காரணரூபம் தவாம்ப யோகீ தத்தே
ஒதுகிஸோரந்யாயாத்
பக்தம் பரிபாஸி கார்யரூபேண த்வம்
அம்மா யோகி உன்னுடைய காரண ரூபமாகிய மூல ஸ்வரூபத்தை வசப்படுத்திக் கொள்கிறான் . குட்டி குரங்கு தாயை பிடித்துக்கொள்வதைப்போல் உனக்கு கஷ்டத்தைக் கொடுக்காமல் சுயமுயற்சியுடன் உன் அருளை பெறுகிறான்
பக்தனோ பூனைக்குட்டியைப்போல பொறுப்பை எல்லாம் உன்னிடம் ஒப்படைத்து விட்டு சரணாகதி அடைகிறான் . நீ சந்திர லோக ரூபத்தையோ அல்லது அழகான பெண் வடிவத்தையோ எடுத்துக்கொண்டு பக்தனைக் காப்பாற்றுகின்றாய் . யோகி தன் முயற்சியால் காரணமான மூலரூபத்தை நாடுகிறான்
*பதிவு 211*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
2. பாதாரவிந்த சதகம்
ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...
தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇
89
ததேதத் காமாக்ஷி ப்ரக்ருதிம்ருதுலம் தே பதயுகம்
கிரீடை ஸங்கட்டம் கதமிவஸூரௌகஸ்ய ஸஹதே
முனீந்த் ராணாமாஸ்தே மனஸி ச கதம் ஸூசிநிதே
ரவியின் கையிலுள்ள எழுத்தாணியில் ப்ரதிபலிக்கின்றன
வாழ்க வளர்க. 🙌
🙏🏻🙏🏻🌷🌷
தன்னலம் கருதாமல் மற்ற சக்தி குடும்பத்தினரும் இத்தகைய மஹான்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ப்ரயத்னப்படும் வார்த்தை சித்தரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..
இனிமை...அழகு...
🙏🙏🙏🙏🙏🙏🙏
மாதா-பிதா-குரு என்பதில் குரு தர்சனம் ஆனதும் மாதா-பிதாக்களை பார்க்க ஆசைப்பட்டார். சிஷ்யராக அடங்கியிருந்த மாதரி, குழந்தையாக அடங்கியிருக்க ஆசைப்பட்டார்.
யார் மாதா? யார் பிதா? ” மாதா ச பார்வதீ தேவீ ; பிதா தேவோ மஹேச்வர :” என்று அவரே சொல்லியிருக்கிறார்.1
கைலாஸத்தில் ஈச்வரனையும் அம்பாளையும் தர்சனம் பண்ணி, பக்தி பண்ணி ஆனந்தப்பட்டார். ஒன்றே இப்படி ஈச்வரன்-அம்பாள் என்று இரண்டாகி, அப்புறம் நம்முடைய பகவத்பாதாள் என்று மூன்றாகி ஒன்றையொன்று பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டது!
இந்த விஷயம் இதிஹாஸ-புராணங்களை (முறையே) சேர்ந்த ‘சிவ ரஹஸ்யம்’, ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’ ஆகிய இரண்டிலும் இருக்கிறது.
சிவ ரஹஸ்யத்தில் இது காசியில் நடந்ததாகச் சொல்லியிருந்தாலும், அவை கைலாஸ லிங்கங்கள் என்றே இருக்கிறது
இரண்டிலுமே பஞ்ச லிங்கங்கள் என்று ஒற்றுமையாகச் சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும்.
ஒன்றில் ஐந்து என்று சொல்லி இன்னொன்றில் நாலு என்றோ ஆறு என்றோ இல்லை! இதைவிட கவனிக்கவேண்டியது, இரண்டிலுமே அந்த ஐந்து லிங்கங்களும் ஒரே பெயர்களைச் சொல்லியிருப்பது!
யோகலிங்கம், போகலிங்கம், வரலிங்கம், முக்திலிங்கம், மோக்ஷலிங்கம் என்று அதே ஐந்து பேர் சொல்லியிருக்கிறது.
அது ஸ்படிக லிங்கமாக இருந்ததில் ரொம்ப அர்த்தமுண்டு.
ஆபா தாள-நப : ஸ்தலாந்த-புவந-ப்ரஹ்மாண்ட மாவிஸ்புரஜ்-
ஜ்யோதி : ஸ்பாடிக-லிங்க-மௌளி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை :|
அஸ்தோகாப்லுத-மேக-மீச-மநிசம் ருத்ராநுவாகாஞ்-ஜபந்
த்யாயேதீப்ஸித ஸித்தயே (அ)த்ருத-பதம் விப்ரோ (அ)பிஷிஞ்சேச்-சிவம் ||
சிவனுக்கான பிம்பம் அநேகமாக லிங்கமாகத்தான் இருக்கும். அது ஸ்படிக லிங்கமோ, பாணலிங்கமோ, ஸுவர்ண லிங்கமோ, ரஸலிங்கமோ, மரகத லிங்கமோ எதுவாயிருந்தாலும் ‘ருத்ரம்’ ஜபித்தபடி அபிஷேகிக்கணும்,
வேறே நடராஜா மாதிரி மூர்த்தியாக இருந்தாலும் இதே விதிதான். இது (ச்லோகக்) கடைசியில் சொன்ன விஷயம். “ஏகம் ஈசம் அநிசம்” என்று ஏக வஸ்துவான ஈச்வரனை ருத்ர ஜப த்யானத்தோடு ஸதா அபிஷேகிக்கணும் என்று சொல்லியிருக்கிறது.
ஜ்யோதிர் லிங்கமாக இருக்கிறார். அது ஸ்படிக லிங்கமாக இருக்கிறது: ” ஸ்பாடிக லிங்க ! ” ஸ்படிகத்தாலானது ‘ஸ்பாடிகம்’. இப்படியரு மஹா பெரிய ஸ்படிக லிங்கமாக ஸ்வாமியை பாவித்துக்கொள்.
அதன் சிரஸில் பூர்ண சந்திரன் ப்ரகாசிக்கிறது- “மௌளி விலஸத் பூர்ணேந்து.” மான், மழு, ஜடை எல்லாமுள்ள ஸகள (உருவ) பிம்பத்தின் சிரஸில் மூன்றாம் பிறைதான் இருக்கிறதென்றால் ஸ்படிக மயமான இந்த ஸகள-நிஷ்கள (அருவுருவ) லிங்கத்தின் உச்சியில் பூர்ணசந்திரனே இருக்கிறது! அதனால்தான் குறிப்பாக ஆசார்யாள் ப்ரதிஷ்டை பண்ணியுள்ள இந்த லிங்கங்களுக்கு சந்த்ரமௌளீச்வரன் என்று பேர் இருக்கிறது.
அந்தப் பூர்ண சந்த்ரனுக்குள்ளேயிருந்து அம்ருதம் பெருகுகிறது: “வாந்தாம்ருதை:”. அம்ருதம் “அஸ்தோக”மாகப் பெருகுகிறது – அதாவது நிறைய, தாரை தாரையாய்ப் பெருகுகிறது. மூன்றாம் பிறையானால் ஏதோ கொஞ்சம் அம்ருதம் தான் பெருகும். இது பூர்ண சந்த்ரனானதால் ஒரே தாரையாகப் பிரவஹிக்கிறது. தன் சிரஸிலுள்ள சந்த்ரனிலிருந்தே பெருகும் அம்ருத தாரையில் ஸ்வாமி அப்படியே முழுகியிருக்கிறார்-“ஆப்லுதம்”என்றால் முழுக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டு என்று அர்த்தம். அவர் நீயும் துளி ஜலம் விட்டு அபிஷேகம் பண்ணினால் ஆனந்தமடைகிறார்!
ஸகளத்தைவிட ஸகள நிஷ்களம் அத்வைதத்திற்குக் கிட்டே. அதிலும் ஆதி அந்தமில்லாத லிங்கம் இன்னம் கிட்டே. அந்த லிங்கம் ஸ்படிகமாக இருந்துவிட்டால் ரொம்ப ரொம்பக் கிட்டே. அத்வைதம் பரமதத்வமாகச் சொல்வது நிர்குண ப்ரஹ்மம்.
பஞ்ச பூதம், பஞ்ச ப்ராணன் என்று இருப்பதுபோல் பஞ்ச லிங்கம் ஸ்வாமி ஆசார்யாளுக்குக் கொடுத்தார். பஞ்ச க்ருத்யம் செய்பவர்! பஞ்ச முகம் உள்ளவர்!
அறிகிறவன்-அறியப்படும் அறியப்படும் வஸ்து-அறிவு என்ற மூன்றும் ஒன்று என்பது அத்வைதம். ‘த்ரிபுடி’ என்று இந்த மூன்றைச் சொல்வது. அப்படியொரு த்ரிபுடியாக இங்கே கொடுத்தவர் – சிவன்; வாங்கிக்கொண்டவர் – சிவன்! கொடுக்கப்பட்ட வஸ்துவும் சிவன்!