பச்சைப்புடவைக்காரி - அருணாசலக் கவிராயர்-1 - 212

                                           பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

அருணாசலக் கவிராயர்-1


                                    (212) 👍👍👍💥💥💥

Inspired from 




ராமாயணத்தில் ஒரு உணர்ச்சிகரமான  தருணம்.

சீதையிடம் ராமன் விடைபெற்றுச் சொல்ல வருகிறான்.  “நான் கானகம் போகிறேன்; பதினான்கு வருடத்தில் திரும்பி வந்து விடுவேன், நீ வருத்தப் படாமல் இரு” என்கிறான். அப்போது சீதை கேட்கிறாள்:

எப்படி மனம் துணிந்ததோ சாமி  வனம்போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ  பூமி     (எப்படி)

கரும்பு முறித்தாப் போலே சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ

வருந்தி வருந்தி தேவரீர்  வெல்ல
வார்த்தையால் கொல்லாமல்   கொல்ல

இரும்பு  மனதுண்டாச்சு  தல்லோ
என்னை விட்டுப் போகிறேன் என்று  சொல்ல (எப்படி)





அருணாசலக்  கவிராயரின்  இராம நாடகத்தில் உள்ள ஒரு கீர்த்தனை இது. நல்ல கற்பனையும் மனோதர்மமும் கொண்ட பாடகர்கள் சஞ்சரிக்க உகந்த இது போன்ற இடங்கள் இராம நாடகத்தின் பல கீர்த்தனைகளில் உண்டு.

கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்துப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகியோர்.

பண்டிதர்கள் மட்டுமே பயின்று வந்த கம்பரின் ராமாயணத்தை, பாமரர்களும் புரிந்து கொண்டு ரசித்து அனுபவிக்கும் வண்ணம் கீர்த்தனைகளாகப் புனைய வேண்டும் என்பது தான் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாசக் கவிராயர் (1711-1778) கொண்ட முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. 

வணிகர் குலத்துதித்த அருணாசலம் சிறுவயதிலேயே பல நூல்களைக் கற்றுப் புலமை பெற்றிருந்தார். தமது ஊரான தில்லையாடியில் காசுக்கடை நடத்தி வந்தார். 

வியாபார நிமித்தம் பயணம் செய்யும்போது எதேச்சையாக சீர்காழியில் உள்ள தருமபுரம் மடத்தில் தங்க நேர்ந்தபோது,  அவரது தமிழ்ப் புலமையால் கவரப்பட்ட மடத்தின் அதிபர் அவரை சீர்காழிக்கே வரவழைத்து, தமிழ்த் தொண்டும் ஆசிரியப் பணியும் செய்யுமாறு பணித்தார். 

மடத்தில் பாடம் சொல்லியதுடன், அக்காலத்திய தமிழ்ப் புலவர்களது பாணியில் தலபுராணம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, கோவை, கலம்பகம், வண்ணம் என்று பல சிற்றிலக்கிய நூல்களையும் கவிராயர் எழுதியிருக்கிறார். 

அவரிடம் பாடம் கேட்ட வெங்கட்ராமய்யர், கோதண்ட ராமய்யர் என்ற இரு சங்கீத வித்வான்களின் வேண்டுகோளுக்கு இணங்கி  இராமநாடகக் கீர்த்தனைகளைப் புனைந்தார். இரண்டு வித்வான்களும் பல ஊர்களிலும் சென்று அந்தக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தினர். அந்தத் தனித்துவமிக்க இசைத்தமிழ் நூல் தான் இன்றளவும் அருணாசலக் கவிராயர் பெயரை அழியாமல் நிலைநிறுத்தியிருக்கிறது.

சைவ சமயத்தவராக இருந்தாலும்,  அருணாசலக் கவிராயரின் கீர்த்தனைகள் அனைத்திலும் ராமபக்தி ததும்புவதைக் காணலாம்.




“ராமனைக் கண்ணாரக் கண்டானே – விபீஷணன் கை

மாமுடி மேல் வைத்துக் கொண்டானே”

என்ற கீர்த்தனையில்  ஸ்ரீராமனின்  திருமேனியழகை வர்ணிக்கிறார்.

அறிவார் யார் உன்னை அறிவார் யார்..

அறியார் யார் மானிடம் போலே குறியா வேஷம் கொண்டதாலே

சிறியேன் செய்த பிழை தன்னைக் குறியாதே ராகவா, உன்னை (அறிவார்)




என்று விராதன் துதியாக வரும் கீர்த்தனையில் ஸ்ரீராமனைப் பரம்பொருளாகவே எண்ணித் துதிக்கிறார்.

இராம நாடகமும் கம்ப ராமாயணத்தைப் போலவே ஆறு காண்டங்களைக் கொண்டது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவ இலக்கணம் கொண்ட கீர்த்தனங்கள் (தருக்கள்),  கண்ணிகள்  (திபதைகள்) ஆகியவை இதில் காணும் மையமான இசைப் பாடல் வகைகள். 

இவற்றோடு கூட, விருத்தம், கலித்துறை, கொச்சகம் போன்ற செய்யுள்களும் இசைப்பாடல்களுக்கு முன்பின்னாக அமைந்துள்ளன. 

இராம நாடகத்தில் சில கீர்த்தனைகள் மற்றவற்றை விடப் பரவலாக உள்ளதற்குக் காரணம் இருக்கிறது.

“ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா

நானடா என் பேர் அனுமானடா… “

“அடித்தானே அசோகவனம் தன்னை முடித்தானே அனுமன்..”



இவை போல ஜனரஞ்சக மெட்டுகளில் அமைந்த பாட்டுக்கள் அக்காலத்தில் நாடக மேடைகளில் பாடி ரசிக்கப் பட்டிருக்கக் கூடும்.  

இசை நாடகங்கள் வழக்கொழிந்த பின், அந்தப் பாடல்களைப் பாடுவார் யாரும் இல்லை. ஆனால் செவ்வியல் தன்மை கொண்ட கணிசமான கீர்த்தனைகள் இன்னமும் பிரபலமாக நீடித்து வருவதன் காரணம் அவற்றின் இசை ஒழுங்கும், உணர்ச்சி பூர்வமான தருணங்களும், அர்த்த கம்பீரமும், ஆரம்ப கால வித்வான்கள் அவற்றைத் தொடர்ந்து தங்கள் கச்சேரிகளில் பாடி வந்ததும் என்று சொல்லலாம்.




யாரோ இவர் யாரோ – என்ன பேரோ  அறியேனே (யாரோ)

கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்

கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர்   (யாரோ)

சந்த்ரபிம்ப முக மலராலே என்னைத்

தானே பார்க்கிறார் ஒருக்காலே

அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்

இந்த நாளில் வந்து சேவை தருகிறார் (யாரோ)


இந்த அழகிய பைரவி ராகக் கீர்த்தனையைக் கேட்டிருக்காத சங்கீத ரசிகரைக்  காண்பது அபூர்வம். “இவர் யாரோ” என்று வருவதால், ராமனைக் கண்ட சீதை பாடும் பாட்டு இது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், உண்மையில் சீதையை கன்னிமாடத்தில் கண்டு, வீதியில் நடந்து வரும் ராமன் பாடுவது இது. இளம்பெண்ணைக் கூட “இவர்” என்று மரியாதையுடன் அழைக்கும் வழக்கு இரு நூற்றாண்டு முன்பு வரை கூட தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.



ரவி எப்படிப்பட்ட இசைஞானிகளை பார்த்துக்கொண்டு வருகிறோம் -- இன்னும் நிறைய சொல்லவேண்டியுள்ளது --- 

அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும் தமிழ் இசையை வளர்க்கவும்  ஞானிகளை  இனி நான் பிறப்பித்தால் தான்  உண்டு - 

நீங்களாக  பாதுகாக்க எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் - 

தாயின் குரலில் கோபத்தை  ஆதங்கம் அதிகமாக தொனித்தது - கண்களில் கண்ணீர் பெருகி அவளது திருவடித்தாமரைகளை நனைத்தது 

அம்மா தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - அதிகப்பிரசங்கித்தனமாக பேசி இருந்தால் அடியேனை மன்னிக்கவும் - 

தங்களுக்கு திரோதான கரீ என்று ஒரு நாமம் இருக்கிறது - தாங்கள் தன்னை எங்களிடமிருந்து மறைத்துக் கொள்கிறீர்கள் . ''திரையின் பின் இருப்பவள் '' என்று வைத்துக் கொள்வோம். மறைப்பது என்று சொல்லும்போது மறைவது பொருத்தமாகிறது.

சகல உயிர்களும் மறைய காரணமானவள் தாங்கள் . படைத்தல் காத்தல் நீக்குதல் அடுத்தது மறைதல் எனும் திரோதானம், இதையே மகா பிரளயம் என்கிறோம். பழையன கழிந்தால் தானே புதியன புகும். இந்த ''கழிதலை '' புரிபவள் அம்பாள் ஸ்ரீ லலிதை என புரியவைக்கிறது இந்த நாமம். அம்மா அப்படி தாங்களே இருக்கும் போது நீங்கள் ஏற்படுத்திய இசை எங்களிடம் இருந்து மறைந்துகொண்டு வருவது ஆச்சரியம் இல்லையே ....




பேஷ் பேஷ் என் திரு நாமத்தைக்கொண்டே எனக்கே பதில் சொல்லிவிட்டாய் ---

அப்படி இல்லை தாயே - இந்த நாமம் இப்பொழுது என் மனதில் உதிக்க தாங்கள் தானே அருள் செய்தீர்கள் --- எல்லாமே உங்கள் அருளால் என்பது உண்மையாக இருக்கும் போது நாங்கள் சுயமாக பேச வார்த்தைகள் என்று எதுவுமே இல்லை தாயே !

அன்னையின் புன்னகையின் சுகந்தம் மதுரை வரை நீடித்தது ---- அந்த சுகத்தில் என்னை முழுவதும் மறந்துபோனேன் -----அவள் நாமங்கள் நாக்கில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தது




Comments

ravi said…
*புன்னகை ராமாயணம் 47/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
ஆதாயாத தனு: ததோ முனி மணே: ஆரோப்ய பாணம் தத:
பச்யந்தம் ச குடாரமானதம் அதோ தர்பேண தூரீக்ருதம்
யத் மந்த ஸ்மிதம் ஆததான பகவன் ஸ்ரீலக்ஷ்மண ஆனந்ததம்
தத் மே மங்கலம் ஆதனோது பவத: ஸம்ப்ரதி அதோ ச உஜ்ஜ்வலம்

आधायाथ धनुस्ततो मुनिमणेः आरोप्य बाणं ततः
पश्यन्तं च कुठारमानतं अथो दर्पेण दूरीकृतम्।
यन्मन्दस्मितं आततान भगवन् श्रीलक्ष्मणानन्ददं
तन्मे मङ्गलं आतनोतु भवतः संप्रत्यथो चोज्ज्वलम्॥

இருவரது சம்பாஷணை ஆஹா!! கர்வமடக்கி பக்தனை மகிழ்வித்த புன்னகை😊😊😊
ravi said…
ராமரிடம் வில்லை பரசுராமர் கொடுக்கும் முன்பு சில சம்பாஷணைகளை புரிகிறார் அவை என்னவென்று பார்ப்போம்👌👌👌

பரசுராமர் : அரச குலத்து ராமா உனக்கு என் வணக்கம்

ராமர் : அந்தணர் குலத்து மகா ரிஷியே உங்களுக்கு வந்தனம்👍

பரசுராமர் : ராமா நீ சத்திரியன் என்று சொல்கிறாய் - ஒரு பெண்ணை கொல்லலாமா ? தாடகை என்ற பெண்ணை கொன்றவன் தானே நீ

ராமர் : நீங்கள் அந்தணர் குலத்தில் பிறந்துவிட்டு வில்லும் மழுவும் வைத்துக்கொண்டிருக்கிறீர்களே அது தர்மமா ?

உங்கள் கரங்கள் வேத புத்தங்கங்களை அல்லவா பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் ?

பரசுராமர் - என் கதை இருக்கட்டும் - நீ தாடகை என்ற பெண்ணை கொன்றது என்ன தர்மம் ?
ravi said…
ராமர் : நீங்கள் உங்களது தாயார் ரேணுகா தேவியை வெட்டிக்கொன்றது தர்மம் ஆகுமா ?

பரசுராமர் : ராமா அது என் தந்தையின் கட்டளை

ராமர் - அப்படி என்றால் தாடகியை நான் கொன்றதும் என் குருவான விசுவாமித்திரரின் கட்டளை

பரசுராமர் : ராமா வெட்டிப்பேச்சு வேண்டாம் -- ஒரு சொத்த வில்லை உடைத்துவிட்டு மெத்த வீரன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய் - இதோ உன் மொத்த திறமையையும் உலகத்திற்கு காட்ட இதோ இந்த வில் சாட்சியாக இருக்கும் -

இதோ இந்த வில்லில் நாண் ஏற்றிக்காண்பி பார்க்கலாம்

ராமரின் புன்னகை அந்த சவாலை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டது -😊😊😊
ravi said…
ஒரு கண்ணால் சீதையிடம் அனுமதி வாங்கிக்கொண்டு இன்னொரு கண்ணால் ஆச்சாரியரான விசுவாமித்திரரின் ஆசி பெற்றுக்கொண்டு மனதினில் ஈசனை நிறுத்திக்கொண்டு வில்லை பரசுராமரிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார் ராமர் 💐💐💐
ravi said…
ஆதாயாத தனு: ததோ முனி மணே: ஆரோப்ய பாணம் தத:

முனிகளில் ரத்தினமாக இருக்கும் பரசுராமரிடம் இருந்து ராமன் வில்லை ஒரு புன்னகையுடன் பெற்றுக்கொள்கிறான்

வாங்கிக்கொண்டு என்ன செய்தான் ராமன் ? அந்த வில்லை பிடித்துக்கொண்டு நாணும் ஏற்றினான் அதில் அம்பையும் தவழவிட்டான்

பச்யந்தம் ச குடாரமானதம் அதோ தர்பேண தூரீக்ருதம்

ராமர் அம்பை வில்லில் பூட்டியவுடன் கர்வம் கொண்ட பரசுராமரின் மனது திறந்துகொண்டது அவர் உடனே ராமனிடம் பணிந்து நின்றார்
ravi said…
யத் மந்த ஸ்மிதம் ஆததான பகவன் ஸ்ரீலக்ஷ்மண ஆனந்ததம்

ஒரே புன்னகை ஒருபுறம் பரசுராமரின் கர்வத்தை அடக்கியது இன்னொருபுறம் லக்ஷ்மணனின் ஆனந்தத்தை பெருக்கியது -

ராமனின் புன்னகை அடியார்களின் பயத்தை நீக்கும் அது மட்டும் அல்ல அந்த அடியார்களை எதிர்ப்பவரின் கர்வத்தையும் ஒடுக்கும்👌👌👌
ravi said…
தத் மே மங்கலம் ஆதனோது பவத: ஸம்ப்ரதி அதோ ச உஜ்ஜ்வலம்

அதே புன்னகை வடுவூரிலும் தந்துகொண்டிருக்கிறாய் இது ஜொலிக்கும் புன்னகை எங்கள் பயத்தையும் கர்வத்தையும் நீக்கும் புன்னகை😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 140*
🌸🌸🌸🌸

ஸ்வதந்த்ரா, ஸர்வதந்த்ரேஶீ, தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ |

ஸநகாதி ஸமாராத்யா, ஶிவக்ஞான ப்ரதாயினீ ‖ 140 ‖
🌸🌸🌸🌸

स्वतन्त्रा, सर्वतन्त्रेशी, दक्षिणामूर्ति रूपिणी |
सनकादि समाराध्या, शिवज्ञान प्रदायिनी ‖ 140 ‖
🌸🌸🌸🌸

svatantraa, sarvatantresi dakshinaamurti rupini |
sanakaadi samaaraadhyaa, SivaGyaana pradaayini ‖ 140 ‖

ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*

🌸🌸🌸🌸

ஓம் ஸ்வதந்த்ராயை நம;
ஓம் ஸர்வதந்த்ரேஶ்யை நம;
ஓம் தக்ஷிணாமூர்த்தி ரூபிண்யை நம;
ஓம் ஸநகாதி ஸமாராத்யாயை நம;
ஓம் ஶிவக்ஞான ப்ரதாயின்யை நம;
🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*723.ஸ்வதந்த்ரா* - பிறருடைய ஓத்தாசையை அபேக்ஷிக்காமல் (கட்டுப்படும்) இல்லாதவள் அம்பாள்.

🌸🌸🌸🌸
*724.ஸர்வதந்த்ரேஶீ* - சகல சாஸ்த்ரா தந்திரங்களுக்கும் அர்த்தத்தோடு இருக்கும் படி ஆதாரமாயிருப்பவள். அம்பாள்.
🌸🌸🌸🌸

*725.தக்ஷிணாமூர்தி ரூபிணீ* - தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமானவள் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை
🌸🌸🌸🌸

*726.ஸனகாதி ஸமாராத்யா* - ஸனகாதி மஹா்ஷிகளால் ஆராதிக்கப்பட்டவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*727.ஶிவஜ்ஞான ப்ரதாயினீ* - அடியார்களுக்கு சிவஞானம் கொடுப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
Savitha said…
அழகான பாடல்கள்
அற்புதம்
புதிய புலவர்கள் அறிமுகப்படுத்தும்
பச்சை புடவைக்காரியுடன்
சேர்ந்து கவி அற்புதம்
🌷🌷🙏🏻
மாதா ஜெய ஒம் லலிதா ம்பிகையே🌷🌷🌷🌷🌷
ravi said…
வேண்டேன் ஒரு பொருளை
தீண்டேன் இனி ஒரு செல்வமதை

கண்டேன் காணாத ஒரு பேரொளியை ... கணிந்தேன் காட்சி கண்ணில் நிறைந்தவுடன்

கற்பேன் உன் நாமம் தினம் களிப்பேன் உன் மதுரம் தரும் பொன் மொழிகளை

பூப்பேன் உன் தோட்டம் அதில் தினமும் ... வருவேன் உன்னிடம் நீயே நானாக 🌷🌷🌷
ravi said…
சுவாமி நாதா நீயே புரிய வைத்தாய்

இது புண்ணிய பூமி கர்ம பூமி

பண பூமியல்ல பதவி பூமி அல்ல என்றே

காமகோடியாய் அருள் செய்தாய் ...

காமத்தை வென்றவன் நிறைவான இன்பம் கண்டாய் தாயின் பாதமதில் ...

புண்ணியம் செய்தோம் உனை நாங்கள் பெற ...

பாவம் நீ செய்துள்ளாய் இன்னும் திருந்தாத உள்ளங்கள் வாழ ....

இணை இல்லாதவனே ... வாம பாகத்தை வவ்வியவளின் மறு உருவே

பணிந்தோம் உன் பாதம் அதை ... காமம் ஒழிய காட்சி கொடு 🌷🌷🌷
ravi said…
நீயிருக்க நிம்மதியை தேடுவோமோ ?

உன் நினைவிருக்க நெஞ்சமதில் வஞ்சம் வளர்ப்போமோ ?

உன் அருள் இருக்க கவலைகளை விலை கொடுத்து வாங்குவோமோ ?

உந்தன் நிழல் இருக்க வேறு துணை விரும்புவோமோ ? 💐💐💐
ravi said…
*முத்தாய்* வந்தாய் ...

*வயிரமாய்* ஜொலித்தாய் ...

*பவளம்* வாழும் உன் முகத்தில் ...

*பதுமராகம்* பணியும் உன் பாதமதில்

*மாணிக்கம்* சுடர் விடும் உன் பார்வை தனில் ...

*வைடூரியம்* எனும் வாழ்வு வரும் உன் அருள் பெறுகையில்

*நீலம்* உந்தன் கருணை கடல் அலையோ

*மரகதம்* உந்தன் மேனியோ

*கோமேதகமே* குளர்வான் நிலவே ...

கண்ணன் இதழ் மதுரம் சுவைக்கும் *புல்லாங்குழலே ...*💐💐💐
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 27

*Started on 26th sep 2020*💐💐💐💐

*லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்*

1. லகு
2. லலிதம்
3. லக்ஷணம்
4. லட்சியம்
5. லயம்
ravi said…
லலிதா ஸஹஸ்ரநாமம் கொண்டு அம்பிகையை என்றும் போற்றிடுவோம் ! அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவோம். ***

லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

ஆனால், பாஸ்கர ராயர் எழுதிய பாஷ்யம் மிகவும் பிரபலமானது.

பாஸ்கர ராயர் தனது பெயருக்கு ஏற்ப, முன்னர் கண்டது போல, பாஸ்கர எனும் சூரியனின் 12 பெயர்களைத் தலைப்புகளாகக் கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கான பாஷ்யம் அமைத்துள்ளது பெரும் பாராட்டுதலுக்கு உரியதாகின்றது.

பாஸ்கரராயரின் பாஷ்யம், அம்பாளிடம் அவருக்கு இருந்த பக்தி, அந்த பக்தியால் அவர் செய்த சாதனைகள் (மஹா சதுசஷ்டி கோடி யோகினிக்கான விளக்கம் அளித்தது, ஒரு சன்யாசியின் கர்வத்தை அடக்கியது முதலான விபரங்களையும், அவர் வாழ்வில் நடந்த அதிசயங்களையும், அவர் மகள் லீலாவதி (இவர் ஒரு பெரிய கணித இயல் பேரறிஞர், பல கணித சூத்திரங்களை எழுதியவர்)
பற்றிய விபரங்கள் போன்றவற்றையும் பச்சைப்புடவைக்காரி யிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வோம் ... 🙏🙏🙏
ravi said…
*Lalita Trishati 261 - 270*👌👌👌
ravi said…
*261. Lakāriṇī लकारिणी*💐💐💐💐 She is siva in the form of knowledge and bless 🌸🌸🌸

*262. Labdharūpā लब्धरूपा*💐💐💐 She was created by Siva

*263. Labdhadhīḥ लब्धधीः*💐💐💐 She alone can take us to Siva the ultimate Bliss . 🥇🥇🥇

*264. Labdhavāñchitā लब्धवाञ्छिता*💐💐💐 She has everything ...Nothing is wanting 🙏🙏🙏

*265. Labdhapāpamanodūrā लब्धपापमनोदूरा*💐💐💐 She is far away from perpetual sinners 🦜🦜🦜

*266. Labdhāhaṁkāradurgamā लब्धाहंकारदुर्गमा*👌👌👌 Ego prevents us in reaching Her 👍👍👍🦜🦜🦜

*267. Labdhaśaktiḥ लब्धशक्तिः*💐💐💐💐💐 She is an embodiment of all powers
ravi said…
*268. Labdhadehā लब्धदेहा*👌👌👌👌👌
ravi said…
She takes whatever forms She likes.

In fact, all sentient and insentient are Her forms.

She manifests in all forms right from a tiny insect to human beings.

This nāma can be further explored.

Śiva forms the soul of all beings.

Without Him as the soul, no one can attain a form. Śiva and Śakti never get separated.

When He becomes a soul, She embraces Him in the form of causal, subtle and physical bodies.

This is also known as Divine Embrace.

When Śiva is Puruṣa, She is Prakṛti, in which Puruṣa grows. Ātman does not change, whereas the shape of bodies, which encompasses Ātman vary according to one’s karmic account.🙏🙏🙏
ravi said…
6 –
ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா! (அ)
ravi said…
ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா! ரமணர் ஏன் அருணாசலர் மீது இத்துணைப் பிரியத்துடன் இருக்கவேண்டும்?
ஒரே காரணம்தான், அவன் தாயைவிடப் பெரிய அருள்புரிகிறானே, வேறென்ன வேண்டும்?

பிரசவ வேதனையில் ஒரு பெண் துடித்து க்கொண்டிருக்கும் வேளையில் தன் தாய் அருகில் இல்லையே என்ற மனவருத்தம் காவிரியில் வெள்ளமாக பொங்கிக்கொண்டு வந்தது அந்த பெண்ணிற்கு ...

அம்மா என்று ஒருத்தி அருகில் இருக்க வேண்டும் அந்த தருணத்தில் என்று எல்லா பெண்களுக்கும் ஆசை இருக்கும் ...
பிரசவ வேதனை ஒன்றுமே இல்லை என்று ஆகி விடும் ஒரு அன்னை அருகில் இருக்கும்போது என்று உணர்வாள் எந்த பெண்ணும் ...

அம்மா அம்மா எங்கே அம்மா இருக்கே ....
நீ சுமந்தாய் என்னை சிசுவாக
சிசுவிற்கு ஒரு சிசு வரும் நேரம் அம்மா ....
நீ இல்லை என்ற சோகம் என் சிசுவிற்கு புரிந்தால் வெளி வர மாட்டான் அம்மா ...
கொடும் பாட்டித்தனை கண்ணால் பார்க்கேன் என்றே என் வயிறு தனை உதைப்பான் அம்மா ....

என் பிறவிக்கு தவம் இருந்தவளே,
பிறப்பிற்கு பிறப்பு வர அருகில் வாராயோ ....
சிதறித் தெளிக்கும் என் ரத்தம் வந்ததோ உன் முத்தங்களால்,
முத்தம் தனை முத்து முத்தாய் தந்திடுவாய் என் சிசுவிற்கு ....
தாய் நீ இல்லை என்றால் வேண்டாம் ஒரு தாய் என் சிசுவிற்கும் ....
ஓடி வந்தான் உமையிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் அந்த ஈசன் ஒரு தாயாக .... சேய் வந்து சேர்ந்தது வாடாத பூவாக ....

இதைத்தான் சொல்கிறார் ரமணர் ... அம்மாவாக ஒடிவரும் என் அப்பனே என்கிறார் ரமணர் .... என் தாய் என்னை பெற்றவள் ... இந்த உடம்பு அவள் தந்தது .... அழிந்து போகும் ஒரு நாள் .... நீயோ எனக்கு ஆத்மாவை தந்தவன் ...அழியாது நீயே நினைத்தாலும் ...என்கிறார் ...
தாயினும் சிறந்தவன் அந்த அருணாசலேஸ்வரர்....
ravi said…
7 –
உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாசலா! (அ)
ravi said…
பக்தன் என்னதான் இறைவன்மீது அன்பு வைத்தாலும், அவனது இந்திரியங்கள் அவனை விடுமா?

வேறு விஷயங்களில் இழுத்துச்செல்லுமே!

காற்றில் ஓடும் காகிதத்தின் மீது ஒரு கனமான பொருளை வைத்தால் அது ஓடாதல்லவா?
அதுபோல, ‘என் மனத்தில் வந்து உறுதியாக அமர்ந்துகொள்’ என்று சிவனை வேண்டுகிறார் ரமணர்

இல்லாவிட்டால் என் மனம் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிடும்,
ஊரில் எங்கும் சுற்றித் திரியும், அப்படி நிகழாதபடி கருணைகாட்டி என்னைக் காத்திடுவாய்!’

இங்கே பாலமுரளி பாடிய ஒரு பாடல் ராமனரின் மனதை அப்படியே பிரதிபலிப்பதைப் போல் உள்ளது.

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2) ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே
ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)

சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)
உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)

யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)
எல்லாவற்றிக்கும் நம் மனதே காரணம் .... அதற்கு மூக்கனாம் கயிறு ஒன்று போட வேண்டும் என்றால் சொல்ல வேண்டிய நாமம் நம சிவாய என்பதே என்கிறார் ரமணர் இந்த பாடல் மூலம்.
ravi said…
8 –
ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாசலா! (அ)
ravi said…
அருணாசலா என் மனம் இருக்கிறதே அது என்றுமே எனக்கு கட்டுப்பட்டது இல்லை.
- நான் ஒன்று செய்ய ஆசைப்பட்டால் அது ஒன்று நினைக்கும் ---

எங்கெல்லாமோ சுற்றிவிட்டு மிகவும் அப்பாவியாக எனக்குள் ஓடி வந்து ஒளிந்து கொள்ளும் --
ஒரு குரங்கு செய்யும் அத்தனை விஷமங்களையும் என் மனம் செய்யும் ...

ஒருவன் வாழ்வில் எந்த ஒரு காரியத்திலும் சித்தியடைய முதற்கண் அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

ஐம்புலன்களின் வழியே நுகரும் பலவிதமான இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்க மனமே தூண்டுகிறது.

அத்தூண்டுதலுக்கு அடிமையாவோர் தம் லக்ஷியங்களிலிருந்து தம்மையறியாமலே விலகி இன்பநாட்டத்தில் ஈடுபட்டுத் தம் பொன்னான காலத்தை வீணடித்துப் பிற்காலத்தில் வருந்துவது நிச்சயம்.

ravi said…
ஒரு குரங்கு எவ்வாறு மரத்தின் கிளைகளிடையேயும் மரங்களிடையேயும் தாவுகிறதோ அதைப் போலவே மனம் ஆசைகளின் வயப்பட்டு ஒரு நிலையில் நிற்காமல் தாவிடும்.
ஒரு குரங்கு எவ்வாறு மரத்திலிருக்கும் பழங்கள் யாவற்றையும் பிய்த்தெரிந்து தனக்கே உணவில்லாமல் ஆக்கி அழிவுப் பாதையில் செல்கிறதோ அதே போல் மனமும் ஒரு கட்டுப்பாடற்ற மனிதனை அழித்து விடுவதோடு அவனைச் சேர்ந்தவர்களையும் சமுதாயத்தையும் அழித்து விடும் அபாயகரமான தன்மையடைகிறது.

ravi said…
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
கலையின் பெயராலே காமவலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலைபேசும்
நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு
இதனால் தான் இப்படி வேண்டுகிறார் -- ஊர் சுற்றும் என் உள்ளம் என்றும் இடைவிடாமல் உன்னை கண்டு அமைதி பெற உன் அழகை காட்டு அருணாசலா என்கிறார் --- ரமணர் தன் பரிசுத்தமான மனதையே அடங்கவில்லை என்று சொன்னால் நாமெல்லாம் எந்த மூலை???
ravi said…
9 –
எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா! (அ)
ravi said…
அருணாசலா ----- எனது என்பது ஒன்றுமே இல்லையே -- எல்லாம் நீ கொடுத்தது ---
இதில் நான், எனது என்று எதை சொல்ல முடியும்?

ஆனாலும் என் பாழும் மனமோ, நான், எனது என்றல்லவா சொல்லித்திரிகிறது ---
அந்த என்னை, நினைக்கும் எண்ணங்களை அழித்துவிடு அருணாசலா ---
அழிப்பது மட்டும் உன் வேலை அல்ல ---

என்னை, நான், எனது என்று தவறாக நினைக்கும் என் மனதிற்கு தெரியாமல் திருடி உன்னிடத்தில் வைத்துக்கொள் ---

அப்படி நீ செய்யாவிட்டால் உனக்கு ஆண்மையே என்று எல்லோரிடமும் போய் சொல்லிவிடுவேன் ....

ரமணரின் உரையாடலைகளை பாருங்கள் --

என்ன உரிமை, அதிகாரம், கோபம், தாபம் --- இதுதான் உயர்ந்த பக்தி ---
முதலில் அருணாசலா என்று நினைப்பவர்களின் கர்வத்தை வேருடன் அழித்துவிடு என்று உத்தரவிடுகிறார் --

பிறகு அழகும் சுந்தரமும் போல் பிரிக்கமுடியாமல் அபின்னமாய் ஆகிவிடுவோம் - என்று கெஞ்சுகிறார்

பிறகு என் மனம் எங்கோ சுத்துகிறதே அதை அடக்கி இறைக்குள் வைத்துவிடு என்று எச்சரிக்கை விடுகிறார்

-- என்னை உனக்குள் வைக்காவிட்டால் உலகம் உன்னை பழிக்கும் என்று மிரட்டுகிறார் ---
ravi said…
பிறகு நீதானே என்னை இப்படி சிந்திக்க வைத்தாய் இந்த பழி உனது அல்லவோ என்று சொல்லி இறைவனை மாட்டவைக்க முயற்சிக்கிறார் ---
உடனே கெஞ்சுகிறார் என் அன்னையை காட்டிலும் நீ அல்லவோ அதிகம் அன்பு செலுத்துகிறாய் என்கிறார் --

மீண்டும் கவலை --- ஊரெல்லாம் சுத்தும் என் மனதை அடக்க மாட்டாயா -- அப்படியே எனக்கு உன் அழகு திருமுகத்தை காட்டு அருணாசலா என்று கதறுகிறார் ---
இப்பொழுது கோபம் வருகிறது ---- நான், எனது என்ற எண்ணத்தை நீ அழிக்காவிட்டால் உனக்கு ஆண்மையே இல்லை என்று எல்லோரிடமும் சொல்லிவிடுவேன் என்று திட்டுகிறார் --
இறைவன் எல்லாவற்றையும் ரசித்து கேட்டுக்கொண்டிருக்கிறான் அருணாசலமாக -----
ravi said…
இன்றைய வரிகளை அலசும் முன், ஒரு சிறிய flashback -- மீண்டும் மனம் முதல் பாடலு க்கே ஓடுகிறது ---

அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா

ஏன் அகத்தை (கர்வத்தை, மமதையை) வேருடுன் அழிக்கவேண்டும் என்று ரமணர் அருணாசலத்திடம் வேண்டுகிறார் --- கிள்ளி எறிந்தால் அல்லது பிடுங்கி போட்டால் போதாதா? ஏன் வேருடுன் பிடுங்க வேண்டும்?

இரண்டு வரிகள் தான் அக்ஷர மாலை அனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி உள்ளன - அருணாசலேஸ்வரருக்கும், ரமணருக்கும் மட்டுமே அதன் உள் அர்த்தம் புரியும் --
இருந்தாலும் ரமணர் நமக்கெல்லாம் ஒரு வரத்தை தருகிறார் -- நான் யார் என்று உள்ளுக்குள்ளே தேடு - தேடிக்கொண்டே இரு - ஒரு இடத்தில் நீ

தேடுவது நின்று போகும் -- அங்கே உன்னை நீ காண்பாய் சிவமாக என்கிறார் ரமணர் -- அதேபோல் அக்ஷர மாலையை படிக்க படிக்க வேறு வேறு அர்த்தங்கள், விளக்கங்கள் வரும்.

முடிவில் அங்கே நீ காண்பது ரமணராக நிற்கும் அருணாசலேஸ்வரைத்தான். ஏன் வேருடன் அறுக்கவேண்டும்? --


ravi said…
நமக்குள் இருக்கும் நான் என்ற எண்ணத்தை, மமதையை, அகங்காரத்தை வெறுமனே கிள்ளிபோட்டால் வேர் இருப்பதால் மீண்டும் மீண்டும் முளைத்து விடும் ----

அருணாசலா உன்னை நினைப்பவர்களுக்கு அந்த கஷ்டம் வரக்கூடாது -
உன்னை நினைக்கும் மாத்திரத்தில் அவர்கள் மனதில் இருக்கும் எல்லா குப்பைகளும், அகந்தையும் அடிச்ச்சுவடே இல்லாமல் வேருடன் பிடுங்கி அழித்துவிடு என்கிறார் --
ரமணருக்குத்தான் நம்மீது எவ்வளவு கனிவு, பாசம், அன்பு பாருங்கள் -

நமக்கு அகந்தை இல்லை என்றால் நமக்கு எல்லோர் மீதும் அன்பு வரும் -
அந்த அன்பே சிவம் - அதுவே அருணாசலேஸ்வரர் ....
இன்னுமொரு பாடல் வரிகளை பார்ப்போம்
ravi said…
எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா!
ஆண்டவனை பார்த்து எப்படி உனக்கு ஆண்மை இல்லை என்று சொல்ல முடியும்?
ரமணரால் மட்டுமே இப்படியும் கேட்க முடியும்?
இங்கே வேறு அர்த்தம் புதைந்துள்ளது ---
அருணாசலேஸ்வரா --- நீயோ பலமிக்கவன் --- உன் அடி முடி தெரியாமல், உன் ஆண்மை புரியாமல் தோற்று போயினர் தேவர்கள் ---ஆனாலும் உனக்கு ஆண்மை குறைவே --- ஏன் தெரியுமா?
உன் சரிபாதியை என் அன்னை உமைக்குத் தந்துவிட்டாய் --
மீதி இருக்கும் பாதியில் ஆண்மை அரை பங்குதானே இருக்க முடியும்?
அந்த அரை பகுதி ஆண்மையை நீ காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் என் மனதில் இருக்கும் நான், எனது என்ற குப்பைகளை கலைத்துவிட்டு -- என்னை திருடிக்கொண்டு உன்னிடம் சேர்த்துக்கொள் --

இல்லை என்றால் நீ பாதிதான் ஆண்மை உடையவன் என்றே எல்லோருக்கும் சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை!! நான் மிகவும் பொல்லாதவன் என்கிறார் ரமணர் - வரிகளை அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள் -

அதில் புதைந்துள்ள தாத்பரியங்களையும், பக்தியையும், இறைவன் மீது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய உரிமைகளையும் புரிந்துகொள்ளுங்கள் -
அப்பொழுதுதான் ரமணரின் அக்ஷர மாலையை நாம் நன்றாக அனுபவிக்க முடியும்.

ravi said…
*புன்னகை ராமாயணம் 48/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
ஸ்ரீமன் ராம துலா புனர்வஸுமஹே ஸ்ரீராமசந்த்ர உத்ஸவே
கல்யாண ஆத்மக வேஷ மஞ்ஜுல தமே ஸ்ரீஜானகீ ஸம்யுதே
ஸ்ரீமல்லக்ஷ்மண பார்ச்வகே ஹநுமதி ஸ்தோத்ரம் நவம் தன்வதி
ஸ்வாமின் யத் தவ மந்த மஞ்ஜு ஹஸிதம் தஸ்மின் மனோ முஹ்யதி

श्रीमन् राम तुलापुनर्वसुमहे श्रीरामचन्द्रोत्सवे
कल्याणात्मकवेषमञ्जुलतमे श्रीजानकीसंयुते।
श्रीमल्लक्ष्मणपार्श्वगे हनुमति स्तोत्रं नवं तन्वति
स्वामिन् यत्तव मन्दमञ्जुहसितं तस्मिन् मनो मुह्यति॥

ஸ்ரீ சீதா ராம ஆஞ்சநேயர் திருவடிகளே சரணம்.
ravi said…
பரசுராமரை வென்ற பின் எல்லோரும் அயோத்தியை அடைகிறார்கள் - அங்கே கிரஹ பிரவேசம் எனும் சடங்கு நடைபெறுகிறது - மஹாலக்ஷ்மியே வீட்டுக்கும் நுழையும் போது எப்படி அது ஒரு கண் கொள்ளா காட்சியாக இருக்குமோ அப்படி அயோத்தி மக்கள் ஆச்சரியமும் ஆனந்தமும் பெற்றார்கள் - இந்த கிரஹ பிரவேசத்தை பார்க்க ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்

ராமரை பார்ப்பதா சீதையை பார்த்துக்கொண்டே இருப்பதா இல்லை அவன் தம்பி மார்களை பார்ப்பதா இல்லை அவர்களுக்கு வாய்த்த பெண்களை பாத்துக்கொண்டே இருப்பதா என்று தெரியாமல் எல்லோரும் அவதிப்பட்டனர் -

அயோத்தி மாநகரம் ஒரு வைகுண்டம் போல் ஜொலித்தது👍👍👍👌👌👌
ravi said…
காலங்கள் உருண்டோடின - ராமருக்கு பட்டாபிஷேகமும் ஆயிற்று - ஆஞ்சநேயர் ராமரிடம் வருகிறார்

ராமா - நீ எனக்கு உதவிகள் செய்திருக்கிறாய் , உன் அன்பை வெளிப்படுத்தும் விதம் எனக்கு ஆலிங்கனமும் செய்தாய் -

எவ்வளவோ நீ செய்திருந்தாலும் ஒரு சின்ன குறை எனக்கு உண்டு - உங்கள் இருவர் திருமணத்தை பார்க்கும் பாக்கியமும் எனக்கு கிடைக்கவில்லை - ராமா இங்கே வரும் பொது அயோத்தி மக்கள் அன்று நடந்த கிரஹப்பிரவேசத்தைப்பற்றி மிகவும் பெருமையாக பேசிக்கொண்டார்கள் -

அந்த கண் கொள்ளா காட்சி இந்த அடியேனுக்கும் கிடைக்குமா ? அருள் கூர்ந்து அந்த சம்பவத்தை எனக்கு காட்டுவாயா ராமா ?
ravi said…
அதற்க்கு ராமர் சிரித்தபடி ஆஞ்சநேயா கவலைப்படாதே அயோத்தி மக்கள் பார்த்து அனுபவித்த அழகை நான் உனக்காக வடூவூரிலும் காண்பிப்பேன்

எப்பொழுது வடுவூரில் காண்பிப்பீர்கள் ?
ravi said…
ராமன் சொன்னான் - ஓவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில் --- என்னுடன் நீயும் புறப்பாடு செய்வாய் -

மற்ற மாதங்களில் புறப்பாடு இருந்தும் ஐப்பசி மாதத்தில் என்னுடன் சீதாவும் , லக்ஷ்மணனும் நீயும் சேர்ந்து எழுந்தருள்வீர்கள் மற்ற எல்லா புனர்பூசத்திலும் நானும் சீதாவும் மட்டுமே புறப்பாடு எழுந்தருள்வோம்

ஆனால் ஐப்பசி புனர்பூசம் உனக்காக நான் ஏற்படுத்திய வரம் ஆஞ்சநேயா என்றார் ராமர் - என் நடையழகை நீ அனுபவிக்கலாம் ஆஞ்சநேயா
ravi said…
ஸ்ரீமன் ராம துலா புனர்வஸுமஹே ஸ்ரீராமசந்த்ர உத்ஸவே

சீதையுடன் ராமன் சேர்ந்துவிட்டதால் இங்கே அவன் ஸ்ரீமன் ராமர் என்று கவி அழைக்கிறார் - துலா என்பது ஐப்பசி மாதத்தைக்குறிக்கும் - வடுவூரில் ராம சந்திரர் என்பவர் ஆரம்பித்து வைத்த வைபவம் என்பதால் கவி அவர் பெயரையும் இங்கே சேர்த்துக்கொள்கிறார் -
ravi said…
கல்யாண ஆத்மக வேஷ மஞ்ஜுல தமே ஸ்ரீஜானகீ ஸம்யுதே

அன்று ராமரும் சீதையும் மிதிலையில் இருந்து எப்படி திருமணக்கோலத்துடன் கிரஹப்பிரவேசம் அயோத்தியில் செய்தார்களோ அப்படியே அன்று காட்சி கொடுத்தார்கள் - எல்லா அழகும் மொத்தமாக அங்கே திரண்டு வந்து இருவர் முகத்திலும் ஒன்றி விடும்
ravi said…
ஸ்ரீமல்லக்ஷ்மண பார்ச்வகே ஹநுமதி ஸ்தோத்ரம் நவம் தன்வதி

அங்கே இளையவனும் இருக்கரங்களும் குவித்த வண்ணம் அனுமரும் புறப்பாட்டில் சேர்ந்துகொள்கின்றனர் -

அப்பொழுது ராமா உன் முகத்தில் ஒளி விடும் ஒரு புன்னகை தோன்றியதே -

அது அனுமனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டேன் என்ற சந்தோஷமும்

அடடா சங்கர சுவனன் எங்கள் திருமண வைபவத்தை காணவில்லையே சரி இப்பொழுது காட்டுவோம் என்ற மகிழ்ச்சியும் --

உன் நடையழகை கண்டு களித்த அனுமனுக்கு மட்டுமா சந்தோஷம் எங்களுக்கும் தான் கரையில்லா சந்தோஷம் கடலாக ஓடிக்கொண்டிருக்கிறது ராமா👌👌👌💐💐💐
Moorthi said…
இவரது பாதங்களை பற்றியவருக்கு பயமில்லை சலனமில்லை எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவர்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
🙏🙏🙏🙏🙌🙌🙌💐💐💐🌷🌷🙏
Shivaji said…
Arumai... 💐💐💐🙏
S G S Ramani said…
நீங்களாக பாதுகாக்க எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் -
தாயின் குரலில் கோபத்தை விட ஆதங்கம் அதிகமாக தொனித்தது😡😰

உண்மை..
பல புதிய இசைஞானிகளை வார்த்தை சித்தரின் இடைவிடாத முயற்சி மூலம் நாம் அறிந்து வருகிறோம்..

வார்த்தை சித்தருக்கு சக்தி குடும்ப உறுப்பினர்களின் சார்பில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
மஹாபாரதம்
பேசுகிறது-சோ
..
பாகம்-11
..............
பாண்டு இறந்து, பாண்டவர்களும் குந்தியும் நகரத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, பாண்டுவின் மரணத்தினால் சத்தியவதி துக்கத்திலேயே ஆழ்ந்திருந்தாள். அப்போது வியாசர் அவளிடம், தாயே! சென்ற காலம் இன்பமானது. வருங்காலம், துன்பமாக இருக்கப் போகிறது. நம்மைத் தாங்கும் பூமிக்கும் இளமை நீங்கி விட்டது. இனி வரும் காலத்தில் எங்கு பார்த்தாலும் வஞ்சகம் தலை விரித்தாடும். மனிதர்கள் பாவ காரியங்களைச் செய்வார்கள். நல்லொழுக்கங்கள் அழிந்து போகும். அப்படிப்பட்ட கொடிய காலம் தான் இனி வரப்போகிறது. உன் குலத்திற்கு ஏற்படப்போகிற நாசத்தை நீ இருந்து பார்க்காமல் இங்கிருந்து சென்று விடுவது நல்லது. வனம் சென்று, தவம் செய்து நற்கதி அடைவது உனக்கு நல்லது. என்று கூறினார்.

ravi said…
இப்படி வியாசரால் யோசனை சொல்லப்பட்ட சத்தியவதி , தன் மருமகள்களான அம்பிகையிடமும், அம்பாலிகையிடமும் வியாசர் கூறியதை விவரித்தாள். துரியோதனன் செய்யப்போகும் அநீதியினால் இந்தக் குலம் அழியப் போவதாக நான் ஏற்கெனவே கேள்விப் பட்டேன். வியாசரும் இப்படிக் கூறுகிறார் ஆகையால் வனம் சென்று, தவம் செய்து, சரீரத்தை விட்டு நல்ல கதியை அடைவோம்” என்று கூறினாள். அவர்கள் மூவரும் அதன் பின் நகரத்தை விட்டு, வனத்திற்குச் சென்று தவம் செய்து, சொர்க்கத்தை அடைந்தார்கள்.
................................................................
ravi said…
பழிக்குப் பழி
.........................................
( பாண்டுவின் மரணத்திற்குப் பிறகு நகரத்தில் வந்து வாழத் தொடங்கிய பாண்டவர்களைக் கண்டு துரியோதனன் பொறாமை கொண்டதும், பீமனை ஒழித்துக் கட்டி விட்டால், பாண்டவர்களை ஒடுக்கி விடலாம் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் அவன் இறங்கியதும், பல நிகழ்ச்சிகளின் மூலமாக பாரதத்தில் விவரிக்கப் படுகின்றன. பாண்டவர்களும், துரியோதன சகோதரர்களும் கிருபாசாரியாரிடம் அஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கி, தேர்ச்சி பெறுவதும் விவரிக்கப் படுகிறது. கிருபாசாரியார் என்று அழைக்கப்பட்ட கிருபர்,துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமா ஆகியோரின் வரலாறு, அந்த நிலையில் விவரிக்கப் படுகிறது.)

ravi said…
கௌதம மஹரிஷிக்கு சரத்வான் என்று ஒரு மகன் இருந்தார். அவர் தவம் புரிந்து அஸ்திர வித்தையைக் கற்றார். அவருடைய வீரியத்தில் இருந்து உதித்த குழந்தைகள் இரண்டு. ஒன்று ஆண், ஒன்று பெண். காட்டில் இந்தக் குழந்தைகளைக் கண்ட சந்தனு மஹாராஜா, அவற்றை எடுத்துச் சென்று வளர்த்தான். கிருபையுடன் அந்தக் குழந்தைகளை அவன் எடுத்து வந்ததால், அந்த ஆண் குழந்தைக்கு ” கிருபர்” என்றும், பெண் குழந்தைக்குக் ” கிருபி” என்றும் பெயர் சூட்டப் பட்டது. கிருபரும் தன் தகப்பனாரைப்போலவே இயல்பாகவே அஸ்திர வித்தையில் பற்றுள்ளவராக வளர்ந்தார். பாணங்களின் தன்மையை அறிவது, மந்திர பலத்திற்காக விரதம் இருப்பது, பாணத்தை விடுவது, பாணத்தைத் திரும்ப பெறுவது என்கிற அஸ்திர வித்தையின் பிரிவுகளை நன்கு கற்றார். பிறருக்குக் கற்பிக்கக் கூடிய தகுதியையும் பெற்றார். அப்படிப்பட்ட கிருபாசாரியாரிடம் தான் பாண்டவர்களும், துரியோதனாதிகளும் அஸ்திர வித்தையைப் பயின்றார்கள்.

ravi said…
அதன் பிறகு, மேலும் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக இன்னமும் கடுமையான பயிற்சி தேவை என்று பீஷ்மர் எண்ணினார். பீஷ்மரின் அந்த எண்ணத்தை நிறைவேற்ற வந்தவர் துரோணர்.
ravi said…
துரோணர் பரத்வாஜ் மஹரிஷியின் மகன். பரத்வாஜ் மஹரிஷியின் வீரியம் வெளிப்பட்டு ஒரு பாத்திரத்தில் தங்கியது. அதிலிருந்து பிறந்தவர் துரோணர் (பாத்திரம் என்பதற்குபு சம்ஸ்கிருதச் சொல் ” துரோண” என்பது) அக்னிவேச்யர் என்பவரின் ஆஸ்ரமத்தில் தங்கி துரோணர் அஸ்திர வித்தையில் பயிற்சி பெற்றார். அப்போது ப்ருஷதன் என்ற மன்னனின் மகனாகிய இளவரசன் துருபதனும், அந்த ஆஸ்ரமத்தில் வில் வித்தை கற்றான். இரண்டு மாணவர்களான துரோணரும், துருபதனும் நெருங்கிய நண்பர்களானார்கள். ”நான் அரசனான பிறகு, உனக்கு நான் பாதி ராஜ்யத்தையும் தருவேன். நம் நட்பு அவ்வளவு நெருக்கமானது” என்று துருபதன் துரோணரிடம் கூறுவான். குருகுல வாசத்தின் போது, அவர்களுடைய நட்பு அவ்வளவு வலுவாக இருந்தது.


தந்தையான ப்ருஷதன் காலம் சென்ற பிறகு, துருபதன் பாஞ்சால தேசத்தின் அரசனானான்.
ravi said…
மஹாபாரதம்
பேசுகிறது-சோ
..
பாகம்-12
..............
துரோணர், கிருபரின் சகோதரியான கிருபியை மணந்தார். அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அது குதிரைபோல் கனைத்தது. ஆகவே அதற்கு” அச்வத்தாமா” என்று பெயரிட்டார்கள்.( குதிரைக்கு சம்ஸ்கிருதத்தில் ” அச்வம்” என்றுபெயர்)

ravi said…
துரோணர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தார். அச்வத்தாமாவுடன் விளையாடிய குழந்தைகள் பால் அருந்திய போது, அச்வத்தாமா தானும் பால் அருந்த விரும்பி, பெற்றோர்களிடம் தனது ஆசையைத் தெரிவித்தான். குழந்தையின் அந்த ஆசையை நிறைவேற்றவும் கூட துரோணரிடம் பொருள் இல்லை. அரிசி மாலைத் தண்ணீரில் கலந்து அதையே பால் என்று கூறி அச்வத்தாமாவை திருப்தி செய்தார் அவர்.

ravi said…
இப்படி குழந்தையை ஏமாற்ற வேண்டிய அளவுக்கு ஏழ்மை இருப்பதை நினைத்து வருந்தி, பரசுராமரை அணுகினார் துரோணர். பரசுராமர் அந்த சமயத்தில் பெரும் தானங்களைச் செய்து வந்தார். ஆனால் துரோணர் அணுகிய போது, பரசுராமரிடம் கொடுப்பதற்குப் பொருள் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்து விட்டார். ஆகையால் பரசுராமர் தன்னை அணுகிய துரோணரிடம் எல்லாவற்றையும் எல்லோருக்கும் அளித்து விட்டேன். இப்போது என்னிடம் இருப்பது என்னுடைய அஸ்திரங்கள் மட்டுமே. அதை உமக்குத் கொடுக்கிறேன்” என்றார். அதன் பிறகு, துரோணர் விரதம் பூண்டு, பரசுராமர் அறிந்த இத்தனை அஸ்திரத்தையும் கற்றறிந்தார்.

ravi said…
இதன் பிறகு தன்னுடைய பழைய நண்பனாகிய துருபத மன்னனை அணுகினால் வறுமை சற்று நீங்கும் என்று நினைத்த துரோணர், துருபதனின் சபைக்குச் சென்றார்.
ravi said…
பால்ய சினேகிதத்தை நினைவு படுத்தினார். ஆனால் மன்னன் என்ற கர்வத்தினால் துருபதன், துரோணர் கூறியதைக்கேட்டு ஆத்திரப்பட்டான்.

என்னைப் பார்த்து நண்பன் என்று கூறத் துணிந்த உமக்குப் புத்தி மாறாட்டம் ஏற்பட்டிருக்கிறது. பெரும் செல்வத்துக்கு அதிபதியாக இருக்கிற அரசனுக்கு, பொருளில்லாத உம்மைப்போன்ற ஏழைகளுடன் நட்பு ஏற்பட முடியாது. பால்ய சினேகிதம், வயதான போது மறைந்து விடுவதை உலகில் பார்க்கிறோம். எந்த நட்பும் அழியாமல் அப்படியே இருப்பதில்லை. பெண்கள் காரணமாக நட்பு அழிகிறது. விரோதம் வளர்கிறது. கோபத்தினாலும் நட்பு அழிகிறது. பகைமை உண்டாகிறது. இது உலகத்தின் நடப்பு.ஏழை பணக்காரனுடன் நண்பனாக முடியாது. முட்டாள் கற்றறிந்தவனுடன் நண்பனாக முடியாது. கோழை , வீரனுடன் நண்பனாக முடியாது. பொருள், கல்வி, பலம், திறமை, பதவி, இவை யார் யாருக்குச் சம அளவில் இருக்கின்றனவோ- அவர்களுக்குள் தான் நட்பும், திருமணமும் பொருத்தமாக இருக்கும். வலியவனுக்கும் , இளைத்தவனுக்கும் நட்பு ஒரு போதும் கிடையாது. அறியாப் பருவத்தில் ஏற்பட்ட நட்பை இப்போது நீர் பேசுவது முட்டாள் தனம்” என்று கூறி துரோணரைச் சபை நடுவில் இழிவுபடுத்தினான் துருபத மன்னன்.
துரோணர் தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டார். மனதிற்குள் ஒரு சபதத்தைச் செய்து கொண்டார். துருபதன் சபையிலிருந்து வெளியேறி, நேராக அஸ்தினாபுரம் சென்றார். அங்கே கிருபருடைய ஆஸ்ரமத்திலேயே துரோணரும் தங்கினார்.
ravi said…
மஹாபாரதம்
பேசுகிறது-சோ
..
பாகம்-13
..............
இந்தச் சமயத்தில் பாண்டவர்களும், துரியோதனாதிகளும் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களுடைய பந்து கிணற்றில் விழுந்தது. அதை எடுக்க முயன்ற போது யுதிஷ்டிரருடைய மோதிரமும் கிணற்றில் விழுந்தது.அவர்கள் அனைவரும் முயன்றும் இந்த இரண்டையும் வெளியே எடுக்க முடியவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த துரோணர் அவர்களை நெருங்கி, ” நீங்கள் இன்னமும் அஸ்திர வித்தையில் பூரணமாகத்தேர்ச்சி பெறவில்லை என்பதைத் தான் காட்டுகிறது” என்று கூறி, சில குச்சிகளை கிணற்றில் எய்தார்.
ravi said…
அவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து பந்திலே சொருகிக் கொள்ள பந்து வெளியே சுலபமாக எடுக்கப் பட்டது.ஒரு அம்பை எய்து மோதிரத்தையும் இப்படியே வெளியே எடுத்தார் அவர் .அரச குமாரர்கள் அவரைப் பற்றிய விவரங்களை விசாரித்தார்கள். துரோணரோ, ” நான் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறேன்” என்பதையும் நான் இங்கே செய்த செயலையும் பீஷ்மரிடம் போய்ச் சொல்லுங்கள். நான் யார் என்பதை அவர் புரிந்து கொள்வார்” என்று கூறி அவர்களை அனுப்பினார்.

அரச குமாரர்கள் பீஷ்மரிடம் சென்று அவரிடம் விவரங்களைக் கூற, வந்திருப்பது துரோணர் என்று அவர் புரிந்து கொண்டார். பிறகு பீஷ்மர், துரோணரை அணுகி பாண்டவர்களுக்கும், துரியோதனாதிகளுக்கும் அஸ்திர வித்தைகளில் உயர் பயிற்சி கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார். துரோணரும் சம்மதித்தார்.

ravi said…
துருபதன் தனக்கிழைத்த அவமானத்தை மறக்காத துரோணர், சிஷ்யர்களை அழைத்து, என் மனதில் நான் ஒரு சபதம் செய்திருக்கிறேன். நீங்கள் முழுமையாகப் பயிற்சி பெற்ற பிறகு, அதை எனக்கு நிறைவேற்றித்தர வேண்டும் . செய்வீர்களா? என்று கேட்டார் . யாரும் பதில் சொல்லாமல் இருந்த போது அர்ஜுனன், அது எந்தக் காரியமாக இருந்தாலும் சரி, நான் அதை நிறைவேற்றித் தருகிறேன்” என்று ஒரு வாக்குறுதி அளித்தான். துரோணர் மகிழ்ந்தார்.
பயிற்சி தொடங்கியது. அனைவரிலும் அர்ஜுனன் மட்டும் வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றான். கதாயுதத்தைப் பயன் படுத்தும் யுத்த முறையில் துரியோதனும், பீமனும் நல்ல தேர்ச்சியுற்றார்கள்.
ravi said…
துரோணர் அர்ஜுனனிடம், உன்னைவிட சிறந்த சிஷ்யன் எனக்கு இல்லை, இருக்கவும் முடியாது” என்று கூறியிருந்தார்.

பயிற்சி நடப்பதைக்கேள்விப்பட்ட பல அரச குமாரர்களும் வந்து துரோணரிடம் சிஷ்யர்கள் ஆனால் அந்தச் சமயத்தில், வேடர்களின் அரசனாகிய ஹிரண்யதனுஸ் என்பவனுடைய மகன் ” ஏகலவ்யன்” துரோணரிடம் வந்து தன்னையும் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டான். அவன் ஷத்திரியன் அல்ல என்பதால், அரசகுமாரர்களுடன் சேர்த்து அவனுக்குப் பயிற்சி அளிக்க விரும்பாத துரோணர், அவனிடம. உன்னை நான் மனதால்சிஷ்யனாக வரிக்கிறேன். ஆனால், இந்த அரசகுமாரர்களுடன் சேர்த்து உனக்குப் பயிற்சி அளிப்பது நடை முறையில் சரியாக இருக்காது. அஸ்திரப் பிரயோகத்தில், நீ திறமை பெற்றவனாக விளங்க உன்னை ஆசீர்வதிக்கிறேன். என்னை மனத்தில் நினைத்தே பயிற்சி பெற உனக்கு அனுமதியும் கொடுக்கிறேன்” என்று கூறி அவனுக்கு விடை கொடுத்தார். ஏகலவ்யன், துரோணரைப்போலவே மண்ணால் ஒரு விக்ரஹம் செய்து, அதை வழிபட்டு , தன் பயிற்சியைத் தொடங்கினான். தனது விடா முயற்சியினால் உயர்ந்த வில் வித்தைக் காரனானான்.
ravi said…
ஒரு முறை அரச குமாரர்கள் வேட்டையாட காட்டுக்குச் சென்ற போது, ஏகலவ்யன் திறமையை அர்ஜுனன் கண்டான். யார் என்று அவனை விசாரித்தான். ஏகலவ்யன், வேடர் தலைவரின் மகன் நான். பெயர் ஏகலவ்யன்,துரோணாசாரியாரின் சிஷ்யன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். நகரம் திரும்பிய அர்ஜுனன் துரோணரிடம் சென்று, என்னை விட சிறந்த சிஷ்யன் உங்களுக்கு இருக்க முடியாது என்று சொன்னீர்கள். ஆனால் ஏகலவ்யனின் திறமை மிகப் பெரிதாக இருக்கிறது நீங்கள் எனக்குக் கூறிய வார்த்தை மீறப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். இது நியாயமா? என்று முறையிட்டான்.

ravi said…
துரோணர் ஏகலவ்யனைச் சென்று சந்தித்தார். அவன் உங்களைக் குருவாக ஏற்று நான் வில் வித்தை பயின்று விட்டேன். உங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய சன்மானம் என்ன.?

உங்களுக்குக் கொடுக்கக் கூடாதது என்று என்னிடம் எதுவும் இல்லை. நீங்கள் குறிப்பிடுவதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று கூறிப் பணிந்து நின்றான். அர்ஜுனனுக்குத் தான் அளித்த வாக்கு பொய்யாக்கக் கூடாது என்பதிலேயே குறியாக இருந்த துரோணர், ” ஏகலவ்யா, உன் வலக்கைக் கட்டை விரலை எனக்கு குரு தட்சிணையாகக் கொடுப்பாயா? என்று கேட்டார். ஒரு வினாடியும் யோசிக்காமல், ஏகலவ்யன் விரலை வெட்டி துரோணரின் காலடியில் சமர்ப்பித்தான். ஏகலவ்யன் ஒரு விரலை இழந்தாலும், வில் வித்தைப் பயிற்சியை விடவில்லை.ஆனால் அவன் திறமை ஓரளவு குறையத்தான் செய்தது. அர்ஜுனன் திருப்தியுற்றான்.
ravi said…
மஹாபாரதம்
பேசுகிறது-சோ
..
பாகம்-14
..............
பயிற்சி முடிந்த பிறகு, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட, அரச குமாரர்களின் அஸ்திரத்தேர்ச்சியை , எல்லோர் எதிரிலும் நிரூபிக்க துரோணர் முடிவெடுத்தார். அந்த நிகழ்ச்சியில் கர்ணன் பிரவேசித்தான்.( இதன் விவரங்களை அடுத்த அத்தியாயத்திற்குத் தள்ளி வைத்து விட்டு, இப்போது துரோணரின் வரலாற்றையே சற்றுத் தொடருவோம்)

ravi said…
பயிற்சி முடிந்து எல்லோர் எதிரிலும் அரச குமாரர்களின் திறமைகளும், நிரூபிக்கப் பட்ட பிறகு, துரோணர் அவர்களை அழைத்தார்.”

உங்களிடம் நான் எந்த குருதட்சிணையும் கோரப்போவதில்லை. பாஞ்சால அரசன் துருபதனுடன் போர் செய்து, அவனை யுத்தக் கைதியாகப் பிடித்து, என் எதிரில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இதுவே நீங்கள் எனக்குக் கொடுக்கும் குருதட்சிணையாகும்” என்று கூறினார்.
துரியோதனன் முதலானோர் யுத்தத்திற்குப் புறப் பட்டார்கள். அவர்கள் வெல்ல முடியாமல் திரும்புவார்கள். என்றும், அவர்கள் திரும்பி வந்த பிறகு, தான் சென்று துருபதனைப் பிடித்து வருவதாகவும் அர்ஜுனன் கூறினான். அது போல், துருபதனிடம் தோற்று துரியோதன சகோதரர்கள் திரும்பி வந்தார்கள். அர்ஜுனன் சென்று அவனுடன் சண்டையிட்டு அவனைக் கைதியாகப் பிடித்து, துரோணரின் எதிரில் கொண்டு வந்து நிறுத்தினான்.
ravi said…
முன்பு துருபதன் தனக்கு இழைத்த அவமானத்திற்குப் பழி தீர்க்கும் இந்த நேரத்திற்காகவே காத்திருந்த துரோணர், துருபதனைப் பார்த்தார். துருபதா! உன் தேசம் இப்பொழுது என் வசமாகி விட்டது. உனக்குத்தேசம் இல்லை. ஆகையால் ஒரு சினேகிதன் என்ற முறையில் நீ என்னை நெருங்க முடியாது.ஆனால் இப்பொழுதும் உன் நட்பை நான் விரும்புகிறேன். ஆகையால் உனக்கு நான் ஒரு தானம் செய்கிறேன். என் வசமாகி விட் ட தேசத்தில் ஒரு பாதியை நான் உனக்குத் தானமாகக் கொடுக்கிறேன். ராஜ்யம் உள்ளவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையே நட்பு வர முடியாது என்று நீ தானே சொல்லியிருக்கிறாய்.ஆகையால், ராஜ்யம் இல்லாத உனக்கும், ராஜ்யத்தை என் வசமாக்கியிருக்கிற எனக்கும் எப்படி நட்பு உண்டாக முடியும்? உனக்குப் பாதி ராஜ்யம் கிடைத்தால் தான், நம்மிடையே நட்பு சாத்தியமாகும், ஆகையால் உனக்குப் பாதி ராஜ்யம் கொடுக்கிறேன். இப்பொழுது நாம் நட்பு வைத்துக் கொள்ளலாம் அல்லவா? என்றார் துரோணர்.
ravi said…
இப்படிக் குத்திப் பேசிய துரோணரின் கடும் மொழிகளை துருபதன் பொறுத்துக் கொண்டான். அவனுக்குப் பாதி ராஜ்யத்தைக் கொடுத்தனுப்பினார் துரோணர். இப்படித் துரோணர் தனக்கு இழைத்த அவமானத்தை துருபதன் மறக்கவில்லை. ஒரு பெரியயாகத்திற்கு ஏற்பாடு செய்தான். துரோணரை வெல்லக் கூடிய ஒரு மகன், அர்ஜுனனை மணக்கக் கூடிய ஒரு மகள் ஆகிய இரண்டு சந்ததிகளை வேண்டி யாகத்தை நடத்தினான். அந்த வேள்வித் தீயிலிருந்து வில், அம்பு, கேடயம் தரித்த வீர இளைஞன் ஒருவன் உண்டானான். ” துரோணரைக் கொன்று துருபதனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கப்போகிறவன். இவன்” என்று அசரீரி கூறியது.
ravi said…
த்ருஷ்டத்யும்னன்” என்று அவனுக்குப் பெயரிட்டார்கள். ( மற்றவர்களால் வெல்ல முடியாத வீரனுக்கு ” த்ருஷ்டன்” என்று பெயர்” வட சொல், த்யும்னம்” என்றால் பெருமை வாய்ந்தவன் என்று பொருள்”) அதே அக்னியிலிருந்து கருமையான நிறம் கொண்ட ஒரு பெண் வெளிப் பட்டாள். அவளுக்குக் ” கிருஷ்ணை” என்று பெயர் வைக்கப் பட்டது.( கிருஷ்ணம் என்றால் ” கறுப்பு” துருபதனின் மகள் என்பதால் அவள் ” திரௌபதி”)


ravi said…
அவள் அக்னியிலிருந்து வெளிப் பட்டபோது, பூபாரத்தைக் குறைக்க வேண்டிய தேவகாரியம் நிறைவேறுவதற்காக, ஷத்ரிய நாசத்திற்கு இவள் காரணமாவாள்” என்று அசரீரி கூறியது.
த்ருஷ்டத்யும்னன் தன்னைக் கொல்வதற்காகவே பிறந்தவன் என்பதை அறிந்திருந்தும் துரோணர் விதியை வெல்ல முடியாது. என்று உணர்ந்து, அவனுக்கும் அஸ்திர வித்தை பயிற்றுவித்தார். அவன் பெரிய வில்லாளியானான்.
ravi said…

( இரண்டு விஷயங்கள் பற்றிச் சில வார்த்தைகள்.
கிருபர் துரோணர் ஆகியோரின் பிறப்பு மட்டுமல்ல. பாண்டவர்கள் பிறப்பும் கூட, பலவாறான கேள்விகளை எழுப்பக் கூடியவையே. அந்த மாதிரி கேள்விகள் மனதில் எழும்போது, ஒரு விஷயத்தை நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்வது நல்லது. இந்தக் கேள்விகளை எழுப்புகிற நாம் பெரிய புத்திசாலிகள் என்றும், நாகரிக மடைந்தவர்கள் என்றும், மஹாபாரத காலத்து மனிதர்கள் அநாகரிகமானவர்கள் என்றும் கூற முடியாது.ஏனென்றால், மஹாபாரத்திலேயே இந்தக் கேள்விகள் எல்லாம் எழுப்பப் படுகின்றன. துரியோதனன் கேட்கிறான், சிசுபாலன் கண்டபடி கேட்கிறான். ஆக, அவர்கள் செய்ததைத்தான் நாம் இன்று செய்ய முடியுமே தவிர, புதிதாக எதையும் நாம் கேட்டு விடப் போவதில்லை. துரோணர், கிருபர், பாண்டவர்கள், போன்ற பாத்திரங்களை பாரதம் உயர்த்தியே கூறுகிறது.

ஆனால் அவர்களுடைய பிறப்புகளே சர்ச்சைக்குரியவையாக பாரதத்தில் அமைந்திருபக்கிறது. வெறும் கற்பனைக் கதையாக இருந்திருந்தால், இந்தப் பிறப்புகளை இவ்வாறு வர்ணித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, அறிந்த விவரங்களை அப்படியே வியாசர் எழுதியிருக்கிறார் என்று நினைப்பதற்கு நம்மைத் தூண்டக் கூடிய காரணங்களில் இதுவும் ஒன்று.

ravi said…
இரண்டாவது விஷயம், துருபதன், துரோணரை அநியாயமாக அவமதித்தான். துரோணர் அவனைப் பதிலுக்கு அவமதிக்க மனதில் சபதமேற்றார். பிறகு அவரும் அவனை அநியாயமாக அவமதித்தார். இதற்குப் பழிவாங்க துருபதன் ஒரு யாகமே செய்து, துரோணரைக் கொல்வதற்கென்றே ஒரு மகனைப் பெற்றான்.
ravi said…
அந்த மகன் த்ருஷ்டத்யும்னன், பாரத யுத்தத்தில் துரோணர் நிராயுதபாணியாக நின்ற போது அவரைக் கொன்றான். பழிக்குப் பழி என்று ஆரம்பித்த இந்தச் சங்கிலித் தொடர், அத்துடன் கூட முடியவில்லை. பாண்டவர் பக்கம் ஒரு சிலரைத் தவிர, மற்ற எல்லோரையும் அச்வத்தாமா கொன்று குவித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில் ஒன்று த்ருஷ்டத்யும்னன் நிராயுதபாணியான துரோணரைக் கொன்றான் என்பது, இதிலிருந்து என்ன தெரிகிறது? பழிக்குப் பழி என்று ஆரம்பித்தால், அந்தச் சங்கிலி பல காலம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நாம் ஒருவனுக்குச் செய்யும் அவமதிப்பை அவன் எளிதில் மறக்கப்போவதில்லை. அவனுக்கு ஒரு காலம், வரும்போது , நமது செயலின் பலனை அவனிடமிருந்து நாம் அனுபவிக்கவே நேரிடும்.
Savitha said…
ராமர் பரசுராமர் உறையாடல் அற்புதம்
🌷🌷🙏🏻
Savitha said…
ராமன் புன்னகை அற்புதம்
பரசுராமர் கர்வம் அடக்கியது
அருமையான விளக்கம்
ஒரு கண்ணால் சீதை பார்த்து மறு கண்ணால்
குருவின் ஆசி பெற்றார்
கவியின் திறமை
மிகவும் ஆருமை
ஜெய் ஸ்ரீ ராம்
Kousalya said…
Sss. Ram's smile will never go un- attended,, it has already given them the boost as it goes without even saying 😊

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53