பச்சைப்புடவைக்காரி - கோபாலகிருஷ்ண பாரதியார் - 214
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
கோபாலகிருஷ்ண பாரதியார்
(214) 👍👍👍💥💥💥
கர்நாடக இசையுலகில் தமிழிசைக்கு முன்னவர்களாகக் கருதப்படுபவர்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரும் ஒருவர்.
இவர் பல தமிழ் சாகித்தியங்களை இயற்றியிருந்தாலும், கதாகாலக்ஷேபத்துக்காக இவர் இயற்றிய "நந்தனார் சரித்திரம்" புகழ்பெற்று விட்டது.
கர்நாடக சங்கீத உலகின் மிகப்புகழ் பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமகால வாக்யேயக்காரர் இவர். மாயூரத்தில் வாழ்ந்து வந்த கோபாலகிருஷ்ண பாரதியார்,
திருவையாற்றுக்குச் சென்று ஸ்ரீ தியாகராஜரை தரிசனம் செய்து, அங்கு அவருக்காக "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" எனும் ஆபோகி ராகக் கீர்த்தனையை இயற்றிப் பாடிக்காட்டினார்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகையரைப் பாரதியார் ஒரு தடவை பார்க்கச் சென்றார். அந்த நேரத்தில் தியாகையரின் "ஸ்ரீராமஸீதா" என்ற கீர்த்தனையை அவரது மாணவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஆபோகி இராகத்தில் அமைந்த கீர்த்தனை. அதுவரை பாரதியார் ஆபோகி இராகத்தில் கீர்த்தனை எதுவும் இயற்றவில்லை. எனவே உடனடியாகக் சிதம்பர நடராசர் மீது ஆபோகி இராகத்தில் அருமையான ஒரு கீர்த்தனை பாடினார். இது பாரதியாருடைய மிகப் புகழ்பெற்ற கீர்த்தனைகளில் ஒன்று.
இவர் மாயூரத்தில் வாழ்ந்த காலத்தில் அங்கு இருந்த திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் படிக்க அங்கு சென்றிருந்த தமிழ்த்தாத்தா என்று பின்னாளில் புகழ்பெற்ற உ.வே.சாமிநாத ஐயர் சிறிது நாட்கள் இவரிடம் சங்கீதம் பயின்றிருக்கிறார்.
கோபாலகிருஷ்ண பாரதியார் நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் ராமசுவாமி சாஸ்திரி. அவரும் ஒரு சிறந்த கர்நாடக சங்கீத வித்வான்.
மாயூரத்தில் வாழ்ந்த ஒரு ஆசிரியரிடம் இவர் அத்வைத சித்தாந்தத்தையும் யோக சாஸ்திரத்தையும் கற்றார். இவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமலேயே, துறவறமும் ஏற்றுக் கொள்ளாமல் ஒரு சந்நியாசியைப் போல வாழ்க்கை நடத்தினார்.
இவர் குடும்பமே ஒரு சங்கீத குடும்பன் என்பதால் மிக இளவயது முதலே இவருக்கு சங்கீதம் இயற்கையாகவே வந்தது. அதனால் சிறிது வழிகாட்டியவுடன் இவர் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற முடிந்தது.
தன்னுடைய சங்கீத ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்காக இவர் பல பெரிய சங்கீத வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்கத் தொடங்கினார். தானாகவே நன்கு பாடவும், புதிய பாடல்களை இயற்றவும் தொடங்கினார்.
இவரது பாடல்களில் அத்வைத சித்தாந்தக் கருத்துக்கள் மேலோங்கியிருக்கும். மகாகவி பாரதியார் தனது 'சங்கீத விஷயம்' எனும் கட்டுரையில் சொல்லியிருக்கிறபடி, புதிதாகப் பலர் சிறந்த பாடல்களை இயற்றிப் பாட முயற்சிக்க வேண்டும், பழைய பாடல்களையே பாடிக் கொண்டிருக்கக்கூடாது. பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்கக்கூடாது என்பதற்கேற்ப இவரே புதிய சாகித்யங்களை இயற்றிப் பாடியதை பலரும் வரவேற்றார்கள்.
அவருடைய காலத்திலேயே பல சங்கீத வித்வான்கள் இவருடைய பாடல்களை கச்சேரிகளிலும், பெரிய ஜமீந்தார்கள் சபைகளிலும் பாடிவந்திருக்கிறார்கள்.
சங்கீத வித்வான்கள் தங்களுக்குப் புதிதாக இன்ன கருத்துக்களோடு பாடல்கள் வேண்டுமென்று கேட்டால் அதற்கேற்றார்போல பாடல்களை இயற்றிக் கொடுத்தார். பெரிய பெரிய வாக்யேயக்காரர்களின் கிருதிகளில் அவரவருடைய பெயரை முத்திரையாகச் சேர்த்திருப்பதைக் காணலாம்.
அதுபோலவே கோபாலகிருஷ்ண பாரதியும் தன்னுடைய பாடலின் வரிகளில் தன்னுடைய பெயரையும் சேர்த்துப் பாடியிருப்பதைக் கவனிக்கலாம்.
இப்போது போல திரைப்படங்கள் எல்லாம் இல்லாத நாட்களில் பல கதைகளை பாடல்கள் மூலம், பாட்டிடையிட்ட கதைகளாகச் சொல்வது வழக்கம். அந்த முறைக்கு ஏற்றார்போல இவர் பாடல்களையும் கதைகளையும் இயற்றி பாடிவந்தார். அந்த வகையில்தான் இவர் பெரிய புராணத்தில் உள்ள "திருநாளைப்போவார்" சரித்திரத்தை சிறிது மாற்றி, சில புதிய பாத்திரங்களைச் சேர்த்து "நந்தனார் சரித்திரம்" எனும் பெயரில் எழுதினார்.
நடனம் ஆடினார் வெகு நாகரிகமாகவே
கனக சபையில் ஆனந்த - நடனம்
வசந்தா ராகக் கீர்த்தனை இது. கண்டசாபு தாளத்தில் அமைந்திருக்கிறது. இக் கீர்த்தனையை இயற்றியவர் கோபாலகிருஷ்ண பாரதியார்.
இவர் சிவபெருமான் மேல் அளவில்லாத பக்தி கொண்டவர். தமிழில் பல கீர்த்தனைகளைச் சிவனைப் போற்றிப் பாடியுள்ளார். ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ என்ற இசை நாடகத்தை இயற்றிப் பாடினார். இசையால் இறை உணர்வைத் தமிழகமெங்கும் பரப்பினார்.
இறைவனை இசையால் பாடித் துதிப்பதையே தம் வாழ்க்கையின் பயனாக வாழ்ந்து காட்டினார் கோபாலகிருஷ்ணர். இறுதி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். சிவ வழிபாட்டில் சிறிதும் பிழைபடாது சீலமுடையவராக வாழ்ந்தார்.
கோபாலகிருஷ்ண பாரதியாரின் மாசற்ற தொண்டினால் தமிழிசை வளம்பெற்றது. நாட்டில் பக்தி நெறி தழைத்தது.
இவர் மறைந்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றும் அவரது கீர்த்தனைகள் அழியாப் புகழோடு தமிழ் மக்களிடையே பயிலப்படுகின்றன. மனதைச் சிவ உணர்வில் உருக வைக்கும் அவரது கீர்த்தனை ஒன்றை இப்பொழுது கேட்போமா?
தேவகாந்தாரி தாளம்: ஆதி
பல்லவி
எந்நேரமும் உந்தன் சந்திதியிலே நான்
இருக்க வேண்டும் ஐயா - பொன்னையா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென் புலியூர்
பொன்னம்பலத்து அரசே என் அரசே
(எந்நேரமும்)
சரணம்
சிவ மருவும் தெருவும் திருக்கூட்டமும்
தேவருலகில் கிடையாத அதிசயமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவிக் கொண்டு
(எந்நேரமும்)
இராகம் : கருநாடக தேவகந்தாரி தாளம்: ஆதி
பல்லவி
எப்படிப்பாடினரோ? எப்படிப்பாடினரோ?
அடியார் அப்படிப்பாட நான் ஆசைகொண்டேன் சிவமே
அநுபல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடையப் பிள்ளையும்
அருள்மணி வாசகரும் பொருளணர்ந்து உன்னையே
(எப்படி)
சரணம்
குருமணி சங்கரரும் தாயுமாணவரும்
அருணகிரி நாதரும் அருள்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கன்னித்தமிழ்ச் சொல்லினால் இனிதுனை அனுதினமும்
புகழ் பெற்ற கீர்த்தனைகள்
கோபாலகிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைகள் எளிமையானவை. கருத்தாழம் மிக்கவை. இனிய இசை நயமுடையவை. இயல்பாக இறை உணர்வைத் தூண்டுபவை. இக்காரணங்களால் இவரது பல கீர்த்தனைகள் பிரபலமடைந்தன.
இசை அரங்கு, பரத நாட்டிய அரங்கு, பஜனை ஆகிய நிகழ்ச்சிகளில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் இன்றளவும் இடம்பெறுகின்றன. சில பிரபலமான கீர்த்தனைகளின் விவரங்களைக் காண்போமா?
| பாடல் | இராகம் | தாளம் |
| அரகரசிவ சங்கர...... | நாட்டை.... | ரூபகம் |
| அறிவுடையோர்..... | சக்ரவாகம்... | ஜம்பை |
| ஆடியதாண்டவம்...... | பிலஹரி.... | சாபு |
| எப்போ வருவாரோ..... | கமாஸ்.... | ஆதி |
| கனகசபாபதிக்கு.... | அடாணா.... | ரூபகம் |
| சிவலோக...... | நாதநாமக்கிரியா | ரூபகம் |
| தில்லைச் சிதம்பரம்.... | பூர்வகல்யாணி | சாபு |
| நடனமாடினார்..... | வசந்தா.... | கண்டசாபு |
| சபாபதிக்கு..... | ஆபோகி.... | ரூபகம் |
ரவி திருவையாறில் ஆரம்பித்து திருவையாறில் முடிக்கிறோம் --- இப்படிப்பட்ட இசை மேதைகளை மறந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் நீ நினைவுப்படுத்தினாய்
அம்மா எல்லாம் அருள் - நீயே கேள்வியாகவும் பதிலாகவும் இருக்கிறாய் ஆனால் சேரவேண்டிய பெருமைகள் அனைத்தும் எங்களுக்குத் தருகிறாய் -- இதுதான் தாய்மையின் உச்சம்
வரதா - வரம் தருபவள். வலது கரம் தான் வழக்கமாக வரம் தரும் கை . அம்பாள் வலது உள்ளங்கை காட்டி வரம் அருளவில்லை. அவளுடைய புனித திருவடிகள் வரம் தருபவை. அவள் காம தாயினி. கேட்டதை, விரும்பியதை அருள்பவள்.
சௌந்தர்ய லஹரி நாலாவது ஸ்லோகம் சொல்வதை கேளுங்கள்: ''அம்மா, நீ தான் சகல புவனத்துக்கும் அடைக்கலம் தருபவள். மற்ற தெய்வங்கள் எல்லாமே வரம் கேட்கும் பக்தர்களுக்கு கரங்களைக் காட்டி அருள்கிறார்கள். நீ ஒருவள் தான் அம்மா, வரத ஹஸ்தமோ, அபய ஹஸ்தமோ காட்டாதவள். ஏனெனில் உன் தாமரைத் திருவடிகள் பயம் தீர்ப்பவை, வேண்டியதை விட பன்மடங்கு வாரி வழங்குபவை.''
வாம நயநா -- அழகிய , கவர்ச்சியான விழிகள் கொண்டவள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி. வாம: வினைப்பயன் - அயனம் என்றால் பாதை, வழி, இப்படி எடுத்துக்கொண்டால் என்ன அர்த்தம் வரும்? ''ஒருவன் செய்த வினைப்பயன் நன்றாக இருந்தால் அது தானாகவே அது வழி தேடி அம்பாளை அடையச் செய்யும்'' ஆஹா! இந்த அர்த்தம் அம்ருதமாக அல்லவோ இருக்கிறது! சந்தோக்யோபனிஷத் இதையே சொல்கிறது: ''சர்வாணி வாமானி நயதி'' -- எதெல்லாம் நல்லதோ, நன்மையோ, பரிசுத்தமோ அது தோன்றும் இடம் அம்பாள் '' என்று பொருள் படுகிறது.
அம்மாவின் அந்த சௌந்தர்ய புன்னகை வடூவூர் ராமனின் புன்னகையை நினைவு படுத்தியது ...
அதே சமயத்தில் இன்னொமொறு உண்மையும் கண்ணில் பட்டது .. அம்பாள் தானே விஷ்ணுரூபிணி , விஷ்ணு மாயா , ராமா , ரமா, வைஷ்ணவி , பத்மனாப சகோதரி , கோவிந்த ரூபிணீ ... வடூவூர் புன்னகை போல இருப்பதில் ஆச்சரியம் என்ன ? 🙂🙂🙂🙂🙂🙂🙂









Comments
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 141*
🌸🌸🌸🌸
சித்கலானந்தகலிகா, ப்ரேமரூபா, ப்ரியங்கரீ |
நாமபாராயண ப்ரீதா, நந்திவித்யா, நடேஶ்வரீ ‖ 141 ‖
🌸🌸🌸🌸
चित्कला,ऽनन्दकलिका, प्रेमरूपा, प्रियङ्करी |
नामपारायण प्रीता, नन्दिविद्या, नटेश्वरी ‖ 141 ‖
🌸🌸🌸🌸
chitkalaanandakalikaa, premarupaa, priyankari |
naamapaaraayana pritaa, nandividyaa, nateSvari ‖ 141 ‖
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
ஓம் சித்கலாயை நம;
ஓம் ஆனந்தகலிகாயை நம;
ஓம் ப்ரேமரூபாயை நம;
ஓம் ப்ரியங்கர்யை நம;
ஓம் நாமபாராயண ப்ரீதாயை நம;
ஓம் நந்திவித்யாயை நம;
ஓம் நடேஶ்வர்யை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*728.சித்கலா* - சீத் (ஞானத்) தின் கலையோடு இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*729.ஆனந்த கலிகா* - அடியார்களின் ஆனந்தத்தின் அம்ச (பிறப்பிடம்) மாயிருப்பவள் அம்பாள்
🌸🌸🌸🌸
*730.ப்ரேமரூபா* - அடியார்களின் (ப்ரேமை) பக்தியின் ரூபத்தோடிருப்பவள்.
🌸🌸🌸🌸
*731.ப்ரியங்கரீ* - அடியார்களின் ப்ரியத்தை (பக்தி செய்பவள்) உண்டுபண்ணுகிறவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*732.நாம பாராயண ப்ரீதா* - நாமங்களை பாராயணம் (மீண்டும் உச்சரிக்கப்படுவதை ) பரியமடைபவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*733.நந்தி வித்யா* - நந்தி கேஸ்வரரால் உபாஸிக்கப்பட்ட வித்யாருபமாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*734.நடேஸ்வரி* - நடேஸ்வரருடைய (நடேசனுக்கு பத்னீ) நாட்டியமாடும் ஈஸ்வரி.
🌸🌸🌸🌸
*262. Labdharūpā लब्धरूपा*💐💐💐 She was created by Siva
*263. Labdhadhīḥ लब्धधीः*💐💐💐 She alone can take us to Siva the ultimate Bliss . 🥇🥇🥇
*264. Labdhavāñchitā लब्धवाञ्छिता*💐💐💐 She has everything ...Nothing is wanting 🙏🙏🙏
*265. Labdhapāpamanodūrā लब्धपापमनोदूरा*💐💐💐 She is far away from perpetual sinners 🦜🦜🦜
*266. Labdhāhaṁkāradurgamā लब्धाहंकारदुर्गमा*👌👌👌 Ego prevents us in reaching Her 👍👍👍🦜🦜🦜
*267. Labdhaśaktiḥ लब्धशक्तिः*💐💐💐💐💐 She is an embodiment of all powers
*268. Labdhadehā लब्धदेहा*👌👌👌👌👌She takes whatever forms She likes
*269. Labdhaiśvaryasamunnatiḥ लब्धैश्वर्यसमुन्नतिः*👌👌👌
She has huge Wealth of Wisdom 👍👍👍
She is Supreme. Bṛhadāraṇyaka Upaniṣad (IV.iv.23) says, “Brahman neither increases nor decreases”.
This means that Brahman is not affected by the deeds done by the mind and body. Both for a saint and sinner, the Self is always the same.
The same Upaniṣad further elucidates the Brahman (V.i). “That (the Brahman) is infinite and this (universe) is infinite. The infinite proceeds from infinite.
Then, taking the infinitude of the infinite (universe), it remains as the infinite (the Brahman) alone.” The original verse goes like this:
पूर्णमदः पूण्नमिदम् पूर्णात्पूर्णमुदच्यते।पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते॥
Pūrṇamadaḥ pūṇnamidam pūrṇātpūrṇamudacyate|
Pūrṇasya pūrṇamādāya pūrṇamevāvaśiṣyate||
This nāma is in confirmation of Her Brahmanic status.👏👏👏
பதிவு 29
*Started on 26th sep 2020*💐💐💐💐
*ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்*
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.👌👌👌
இதில் வரும் ‘சிவமாக’ எனும் வார்த்தையே நாளடைவில் ‘சும்மா’ என்று அர்த்தமற்ற வார்த்தையாகத் திரிந்தது. (‘சற்று நேரம் சும்மா இரு’)
இறைவழிபாட்டிலும் பெரும் அருட்சக்தியைத் தரக்கூடியது சிவசக்தி வழிபாடு.
முன்னர் சொன்னது போல, மிகப் பழமையான வழிபாடாகிய, சிவலிங்க வழிபாடு அதாவது சிவசக்தி வழிபாடு மிகப் பெரும் பேரருளைத் தரக்கூடியது.
(ஒரு சமயம், ராவணன் புஷ்பக விமானம் கொண்டு வரும் வழியில் கைலாய மலை எதிர்ப்பட, அதைத் தன் பாதையிலிருந்து அகற்ற - அகந்தையுடன் கைலயாத்தைப் பெயர்க்க முற்பட,
ராவணனின் முயற்சியால் நடுங்கிய கைலாயத்திலிருந்த பார்வதி தேவி அச்சத்துடன் சிவபெருமானை ஆலிங்கனம் செய்ய,
எதிர்பாராத தருணத்தில் அம்பிகை தழுவியதால் ஆனந்தம் அடைந்த சிவன், பார்வதியை நோக்கி அஞ்சவேண்டாம் என்று கூறி, தனது கால் கட்டை விரலால் மலையை அழுத்த, அந்த நேரம் ராவணனின் கைகள் மலைக்கும், பூமிக்கும் இடைப்பட்டு நசுங்க, அலறியழுத ராவணன் சாமகானம் மீட்ட, இறைவன் பார்வதி தேவியின் ஆலிங்கனத்திற்குக் காரணமாக இருந்த ராவணனுக்கு, சிவசக்தி ரூபமாய் விளங்கி –
அவன் கேட்காமலேயே மூன்று கோடி நாள் ஆயுள், மிகுந்த பராக்கிரமம், வைரம் பாய்ந்த உடல், சந்திரஹாசம் எனும் வாள் என வரங்களை வாரி வாரி வழங்கியருளினார்.
ராவணன் சிவசக்தி ரூபத்தை போற்றியதால் மட்டுமே (அவன் எதுவும் கேட்காமலேயே) பற்பல வரங்களைப் பெற்றான்.)👍👍👍👍
மென்மை கொண்ட நல்லினம் .. வேதம் பேசும் சொல்லினம் ... இனம் பார்க்கா மேலினம்
வாக்கிலே கலையினம் ... வரமாக வந்ததோ காஞ்சி மனம் 🙏🙏🙏
அற்புதங்கள் அனைத்தும் புரிபவன் நீ ...
அருணாசலா என்போரின் அகம் வேருடன் அழிப்பவன் நீ
அபின்னமாய் ஆனவன் நீ எனக்குள்ளே என்றும் நீயாக வாழ்பவன் நீ 👏👏👏
வசந்தம் வாசலிலே வந்தழைக்க ,
வங்க கடலில் அலைகள் வந்தே அரவணைக்க கண்டேன் ஒரு கனவு
எங்கும் மலர்த் தோட்டம் ...
நட்சத்திரங்கள் கொண்ட மாலை தனை நான் சூடினேன் ராயருக்கு ...
பிருந்தாவனம் தன்னில் பிறப்பில்லா வாழ்வு iதந்தாய் கருணை எனும் பெருங்கடலே 🙏🙏🙏
சில பந்தங்கள் விடுவதில்லை ...சிவம் என்றே யாரும் இருப்பதில்லை ...
காலங்கள் ஓடலாம் பார்க்கும் காட்சிகள் மறையலாம் ...
மாறுமோ உன் கருணை முகம் ...மறையுமோ உன் மந்தஸ்மிதம்
காலை முதல் மாலை முடிய உன் நாமம் சொல்லும் போது கற்கண்டும் கசப்பதேன் சாயி ...
தேன் எடுத்துக் குடித்தாலும் உன் நாமம் தரும் சுவை ஏனோ கிடைப்பதில்லை சாயி ...👍👍👍
வரதா
மாதா ஜய ஓம் லலிதாம்பிகை யே🙏🏻🙏🏻🌷🌷
🙏🏻🙏🏻🌷🌷
வார்த்தை சித்தரின் வரிகளினால் பல இடங்களில் மனதை கொள்ளை கொண்ட பதிவு..
அழகு...
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
தத் கர்வம் ஹரத: தவ அத்ர வடுவூர் திவ்ய ஸ்தலே திஷ்டத:
மைதில்யா மதுர அதிஸுந்தர தனு ஸ்ரீயுக்தயா பூஷித
ப்ராந்தஸ்ய அஸ்து மனோஹரம் ஸ்மிதம் இதம் மன்மங்கலௌக ப்ரதம்
कन्दर्पस्य मुहुर्मुहुः निजतनुः संपश्यतस्सादरं
तद्गर्वं हरतस्तवात्र वडुवूर्दिव्यस्थले तिष्ठतः।
मैथिल्या मधुरातिसुन्दरतनुश्रीयुक्तया भूषित-
प्रान्तस्यास्तु मनोहरं स्मितमिदं मन्मङ्गलौघप्रदम्॥
*சுந்தர சுந்தர அதி சுந்தர அதி சுந்தர ஸீதா ராம சேர்க்கை அன்றும் இன்றும் என்றும் அயோத்தியில் மலர்ந்த மன்மத புன்னகை*👌👌👌😊😊😊.
அனுமனுக்கும் நம் எல்லோருக்கும் அந்த காட்சியை ராமன் கருணை கூர்ந்து இன்றும் ஐப்பசி மாதத்தில் புனர் பூச நட்சத்திரத்தில் வடுவூரில் நடை அழகையும் புன்னகையும் சேர்த்து காண்பித்துக்கொண்டிருக்கிறான்👍👍👍
12 ஆண்டுகள் ராமனும் சீதையும் அயோத்தியில் இன்பமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள் --
நமக்கெல்லாம் அந்த திவ்விய தம்பதிகளை அவர்கள் இணைந்திருப்பதை அந்த கல்யாண குண அழகை காண முடியவில்லையே என்ற குறையை கவி இந்த பாடலில் தீர்த்து வைக்கிறார்🙏🙏🙏
*கந்தர்பஸ்ய* - மன்மதனுக்கு
*முஹு: முஹு*: - மீண்டும் மீண்டும்
*நிஜதனு: ஸம்பச்யத: ஸாதரம்* - மன்மதனுக்கு மன்மதனாக வடுவூரில் நீ இருக்கிறாய்
*தத் கர்வம் ஹரத: தவ அத்ர வடுவூர் திவ்ய ஸ்தலே திஷ்டத:*👌👌👌
மன்மதன் உன் அழகை மீண்டும் மீண்டும் சேவித்தால் அவன் அகம்பாவம் முழுவதும் அழிந்துவிடும்👏👏👏
ராமா திருமணமான முதல் 12 வருடங்கள் சீதையோடு எழுந்தருளி அயோத்தியில் காட்சிக்கொடுத்தாய் -
நீ சுந்தர ராமன் என்றால் மைதிலியான சீதை அதி சுந்தரியாக இருக்கிறாள் --
சீதைதான் உன் அலங்காரம் , ஆபரணம் -
உன்னை விட அழகு எது என்றால் உன் சீதைதான்
*ப்ராந்தஸ்ய அஸ்து மனோஹரம் ஸ்மிதம் இதம் மன்மங்கலௌக ப்ரதம்*💐💐💐
சீதையோடு சேர்ந்திருக்கும் இனிய வேளையில் சீதையோடு சேர்ந்து நீ புன்னகை புரிந்துகொண்டிருக்கிறாயே வடுவூரில்
அந்த சுந்தர புன்னகை எங்களை ரக்ஷிக்கட்டும் எல்லா மங்களமும் தரட்டும் ராமா👍👍
அழகுக்கு அழகு சேர்க்கும் சீதை
வடுவூர் சேல்ல வேண்டும் என்ற ஆவல்
உண்டானது
அருமை
மிகவும் ரசிக்க வேண்டிய புன்னகை
ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான் இந்த நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. (சாரதா என்ற பேருக்கு மந்திர சாஸ்திரத்தில் தத்வார்த்தமாக வேறு பொருள்களும் சொல்லியிருக்கிறது.)
.
‘
ஏட்டுச் சுவடி வித்யையைக் குறிப்பது. ‘வித்யை’ என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யைதான் ஞானம் என்கிற பழைய முறை போய்விட்டது. முன்பெல்லாம் சகல வித்யைகளும் பரமாத்மாவைக் காட்டிக் கொடுக்கவே ஏற்பட்டிருந்தன. திருவள்ளுவரும், பரமேசுவரனைப் பாத பூஜை பண்ண வைக்காத ஒரு படிப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார்.
நற்றாள் தொழாஅர் எனின்?
அகங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய்ப் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. மற்ற அகங்காரங்கள் ஒரு பக்கம் இருக்க, ‘நாம் வித்வான்’ என்பதாக படிப்பினாலேயே ஒரு பெரிய அகம்பாவம் வந்துவிடும். இதனால்தான், நம் பூர்விகர்கள் வித்தையோடு, விநயத்தையும் சேர்த்துச் சேர்த்துச் சொன்னார்கள்: வித்யா விநய ஸம்பன்னே!
ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக் கண் உண்டு. ஆசை பஸ்மமானாலொழிய ஞானமில்லை. அதற்காகத்தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடமும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் ஜடா மகுடம் இருக்கிறது. அதுவும் ஞானிகளின் அடையாளம்.
இருவருமே வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள். ஏழு வர்ணங்களில் சேராத வெள்ளை, பரம நிர்மலமான சுத்த ஸத்வ நிலையைக் குறிப்பது. இந்த வெள்ளையும்கூட இன்னும் நிர்மலமாக, தன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்கு, (transparent) தெளிந்துவிடுகிறபோது ஸ்படிகமாகிறது. தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி இருவருமே இப்படிப்பட்ட ஸ்படிகத்தினாலான அக்ஷமாலையைத்தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறம், சந்திர கலை, ஸ்படிகமாலை ஆகிய இவற்றை நினைத்தாலே நமக்கு ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகின்றன
பேசுகிறது-சோ
..
பாகம்-19
..............
துரியோதனனின் கவலை, திருதராஷ்டிரனையும் நன்றாகச் சூழ்ந்து கொள்ள, அவன் ராஜநீதியை நன்கு அறிந்த ” கணிகர்” என்ற பிராமணரை வரவழைத்தான்.
(கணிகர், சகுனியின் மந்திரி என்று ஒரு உரை கூறுகிறது. அவர் திருதராஷ்டிரனின் அமைச்சர் என்றும் மற்றொரு உரை கூறுகிறது)
.
பேசுகிறது-சோ
..
பாகம்-20
..............
வேள்வி நடத்துவது, வைதிக வேஷம் போடுவது போன்ற வழி முறைகளினால் , ஒரு அரசன் தான் மிகப் பெரிய சாது என்று தன் எதிரிகள் நினைக்குமாறு நடந்து கொள்ள வேண்டுமு். இப்படி எதிரிகளின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, ஓநாயைப்போல் அவர்கள் மீது பாய்ந்து அவர்களை அழித்து விட வேண்டும்.
நம்முடைய கோபம் எதிரிக்குத் தெரியக் கூடாது. நமக்கு வேண்டியவர்கள் யாரும் எதிரியை இகழ்ந்து பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இனிமையாகப் பேசிக் கொண்டும், நடந்து கொண்டும் இருந்து, தருணம் வாய்க்கும் போது எதிரியை அடித்து வீழ்த்தி விட வேண்டும். அப்படிச் செய்த பிறகும் கூட, இந்த மாதிரி நேரிட்டதற்காக வருந்துவது போல் பாசாங்கு செய்து, துக்கத்தை வெளிப் படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்,அந்த எதிரியின் மேல் அன்புடைய வர்களும் நம் பக்கமே இருந்து விடுவார்கள்.
( இடை மறித்து ஒரு சில வார்த்தைகள். எதிரி என்பது வேற்றுஅரசனை மட்டும் குறிப்பதாக இங்கே இல்லை. ஒரு அரசனை வீழ்த்த நினைப்பவர்கள், அவனுக்குத் துரோகம் செய்கிறவர்கள், எதிர் காலத்தில் வளர்ந்து பிரச்சனையாகக் கூடியவர்கள்.......... என்று பலருமே இதில் அடங்குவார்கள். சற்றும் கருணையற்ற மனிதாபி மானமற்ற , கொடூரமான இந்த வழி முறைகள் நமக்கு அதிர்ச்சியை அளிக்கும். ஆனால், மாக்கி வில்லியின் ராஜதந்திரமும் இது போன்றது தான் என்பதை, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சாணக்கிய நீதியிலும் இதன் சாயல்கள் உண்டு. ஆனால், ஒரு அடிப்படை விஷயத்தை நாம் மறந்து விடக் கூடாது. இப்படியெல்லாம் செயல்படுகிற அரசன், மக்களுக்கு நன்மையையே செய்ய வேண்டும் என்றும், தன் தேசத்தைக் காப்பாற்றுவதில் நீதி தவறக் கூடாது என்றும், இந்த நீதிகளில் வலியுறுத்தப் படுகிறது. மக்களைப் பொறுத்தவரையில் அரசன் தர்மவானாகவே இருக்க வேண்டும். தன் எதிரிகளைப் பொறுத்தவரையில் அவன் கருணையற்றவனாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான நீதி முறைகளில் இது தான் வலி யுறுத்தப் படுகிறது. கணிக வாக்கியமும் இதற்கு விதி விலக்கு அல்ல. இதிலும் , அரசன் தன் மக்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது. கணிக வாக்கியத்தை மேலே பார்ப்போம்.)
சக்கரவர்த்தி, மன்னர் மன்னன், ராஜாவுக்கெல்லாம் ராஜா என்று நாம் ஒருத்தனைக் கொண்டாடுகிறோம். ஆனால் அவன் இதைவிடப் பெரிசாக நினைத்தது தானும் வேறே ஒரு மஹா பெரிய ராஜாவுக்குத் தொண்டனாக இருப்பதைத்தான். தன் தலையில் நவரத்ன கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பதை விட, அந்தச் சிரஸிலே தனக்கும் ராஜாவாக இருக்கப்பட்டவனின் காலை அழுந்த வைத்துக் கொண்டால் அதுதான் பெரிய ஆபரணம் என்று பெருமைப்பட்டான்.
என்று ஆசார்யாள் ‘ஸௌந்தர்ய லஹரி’யில் இந்தத் திருவடி தீக்ஷையைத்தான் அம்பாளிடம் வேண்டுகிறார்.
இந்த தீக்ஷை கிடைத்த ஆனந்த பரவசத்தில் அப்பர் ஸ்வாமிகள்,
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
என்று பாடுகிறார். அந்தச் சேவடியின் அடியிலே தன் முடி சூடிய தலை கிடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவன் தான் சிவபாதசேகரன்.
அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியவர்களுடைய தேவாரத் திருப்பதிக ஏடுகளைச் சிதம்பரத்திலிருந்து கண்டெடுத்துக் கொண்டு வந்து லோகத்துக்கெல்லாம் கொடுத்த பரம உபகாரி ராஜராஜன் தான். அவன் இல்லாவிட்டால் நம் தமிழ்த் தேசத்தின் பக்திப் பண்பாட்டுக்கே மூச்சாக இருக்கிற தேவாரம் இல்லை; எல்லாம் கரையான் அரித்து மட்கி மண்ணாகியிருக்கும். இதனால் “திருமுறை கண்ட சோழன்” என்றே அவனுக்கு ஒரு பெயர்.
சிதம்பரேச்வரனான நடராஜாவிடத்தில் அவனுக்கு அபார பக்தி. ‘நடராஜா’ என்ற பெயரைத் தமிழில் ‘ஆடவல்லான்’ என்று அப்பர் அழகாகச் சொல்லியிருப்பது அவன் மனஸை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.
(இன்று ராஜராஜ சோழனின் 1035 வதுசதய திருவிழா )
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!
மகிஷாசுரமர்த்தினியே! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
தாயே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
எங்களை காப்பாற்றுவாயாக.
விஜய தசமியான இன்று ஸ்ரீ துர்க்கையை துதிக்க துர்க்கா சப்த ஸ்லோகி மற்றும் துர்க்கா ஸுக்தம் உரையுடன்.
ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகீ
இக பர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடைவர் என்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர். தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதபப்டும் ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இனையாக கருதப்படுகின்றது.
அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.
தேவியின் மஹ’மையை அறிந்து அவளிடம் பக்தி செய்து இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெறட்டும் என்று எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாய அருள் புரியட்டும்.
பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி (1)ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜ“வன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள்.
இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி
தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா (2)
சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)
இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.
சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே (3)
எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே (4)
தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.
மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாகஉண்டாகும்.
பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5)
அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.
ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்
த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்
த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி (6)உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.
இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.
ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம்எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்
இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த "ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்" பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
ஸ ந: பர்ஷ ததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்நி: (1)
அக்னி வடிவமாக விளங்கும் சக்திக்கு ஸோம ரசத்தை பிழிந்து தருவோம், அனைத்தையும் அறியும் அந்த சக்தி எனது பகைமைகளை பொசுக்கட்டும். அது எனது எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும், கப்பலால் கடலைக் கடப்பது போல பாவக் கடலில் இருந்து அந்த அக்னி சக்தி நம்மை அக்கரை சேர்க்கட்டும்.
துர்காம் தேவீகும் சரண-மஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம: (2)
செந்தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் எரிப்பவளும், ஞானக்கண்ணால் காணப்பட்டவளும், கர்ம பலனை கூட்டி வைப்பவளுமான துர்கா தேவியை நான் சரணமடைகின்றேன். பிறவிக்கடலை எளிதில் கடத்துவிப்பவளே! கடத்துவிக்கும் உனக்கு நமஸ்காரம்.
பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய தநயாய ஸம்யோ: (3)
அக்னி சக்தியே போற்றத்தக்க நீ எங்களை நல்ல உபாயங்களால் எல்லா ஆபத்துகளின்றும் கரையேற்றுவிக்க வேண்டும். எங்களுக்கு வாசஸ்தலமும், விளை பூமியும் நிறைய அருள வேண்டும். புத்திரர்களும், பௌத்திரர்களும் அளிக்க வேண்டும்.
அக்நே அத்ரிவந் மநஸா க்ருணோ ஸ்மாகம் போத்யவிதா தநூநாம் (4)
ஆபத்தை போக்கும் அக்னி சக்தியே கப்பல் கடலைக் கடப்பது போல எங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் எம்மை கடத்துவிப்பாய். அக்னி சக்தியே அத்ரி மஹரிஷ’யைப்போல் அனைவரும் இன்புறுமாறு மனதார அனுகிரகித்துக் கொண்டும் எங்களுடைய உடலை இரக்ஷ’த்துக்கொண்டும் இருக்க வேண்டும்.
ஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா-க்ஷாமத் தேவோ அதி துரிதா-யக்நி: (5)
எதிரிகளின் சேனைகளை வெல்பதும், அடக்குவதும், உக்கிரமானவளுமான அக்னி சக்தியை பரமபதத்திலிருந்து அழைக்கின்றேன். இச்சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்குவதாக. அக்னி தேவன் நமது பாவங்களை போக்கி குற்றங்களை மன்னிக்கட்டும்.
ஸ்வாஞ்சாக்நே தநுவம் பிப்ரயஸ்மபயம் ச சௌபகமாயஜஸ்வ (6)
அக்னியே யாகங்களில் போற்றப்பெறும் நீ இன்பத்தை வளர்க்கின்றாய். கர்ம பலனை அளிப்பதும் ஹோமத்தை செய்வதும் ஸ்தோத்திரம் செய்யப்படும் நீயே ஆகின்றாய். அக்னி சக்தியே உனது உடலையும் ஹவிஷ’னால் இன்புற செய்து எங்களுக்கும் எல்லா சௌபாக்கியங்களையும் அருள்வாயாக.
கோபிர்ஜுஷ்ட-மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரநுஸஞ்சரேம
இந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தொடர்பின்றி பாவமான பொருட்களைக்கூட அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் பரவி நிற்கும் உன்னை சேவிக்கின்றேன். சுவர்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள் விஷ்ணு பக்தனான என்னை இவ்வுலகில் இருக்கும் போது பேரின்பத்திற்குரியவனாக்குதல் வேண்டும்
தந்நோ துர்கி: ப்ரசோதயாத் (காயத்ரீ)
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழி படுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டும்
ON THIS VIJAYA DASAMI DAY MOTHER DEFEATED MAHISASURA AND THUS
GRANTED RELIEF TO THE WHOLE UNIVERSE.
THEN ALL THE CELESTIALS AND HUMANS PRAYED TO MOTHER
JAYA JAYA HEY MAHISASURA MARDHINI
RAMYA KABARDINI SAILA SUDHE
HAIL THEE , HAIL THEE, THE SLAYER OF MAHISASURA(DURGA), THE CONSORT OF LORD SHIVAWITH LOCKED MATS, DAUGHTER OF HIMAVAN