பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 17 - 242

                                               பச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 17

(242) 👍👍👍💥💥💥



ரவி  நேற்று சீதையின் அதி சுந்தர சம்பாஷணையை கேட்டோம் 

அம்மா நான் மட்டும் வால்மீகியாக இருந்திருந்தால்  சீதாயணம் எழுதியே பெரும் பேர் பெற்றிருப்பேன் - 

இல்லை கம்பனாக இருந்திருந்தால் சீதைக்கு என்றே குறைந்தது 50,000 பாடல்களையாவது எழுதியிருப்பேன் - 

நீ என்னை ஒரு மட சாம்பிராணியாக  பெற்று போட்டு விட்டாய் .. 

அன்னை சிரித்துக்கொண்டாள் பதில் சொல்லவில்லை --- அவள் பதில் சொல்லாமல் இருப்பதில் இருந்தே தெரிந்துகொண்டேன் நான் ஒரு வாழ மட்டைதான் என்று 


ரவி , ராமன் கோதண்டத்தை தண்டமாக தூக்கிக்கொண்டு பார்க்கும் ரிஷி களுக்கெல்லாம் நான் இருக்கிறேன் உங்களை தொந்தரவு செய்யும் அரக்கரைகளை கொன்று வீழ்த்துவேன் என்று தண்டகாரண்யத்தில் சொல்லிக்கொண்டிருந்தான் - சீதைக்கு அவன் ரிஷிகளுக்கு இப்படி உறுதிமொழி கொடுப்பது பிடிக்கவில்லை - 




ராமா அரக்கர்களுக்கும் நமக்கும் ஏதாவது முன்பகை இருக்கிறதா - ?

முன்பகை இல்லாதவர்களை நாம் ஏன் கொல்லவேண்டும் அது ஒரு தோஷம் அல்லவா ? அன்னை கைகேயி சொன்னதைப்போல நாம் இங்கு தங்கி கர்மானுஷ்டங்களை பண்ணிக்கொண்டு புண்ணியம் சேர்ப்போமே - உன் வில்லை தூக்கி எறி ராமா என்கிறாள் ---  

அரக்கர்களையும் பாம்புகளையும் பார்க்கும் போதே கொல்ல வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.

அவர்களிடம் கருணை காட்டுவது கூட பாபம் என்று நினைப்போம் ஆனால் சீதை எப்படிப்பட்ட தாய்மை , கருணை உள்ளம் படைத்தவள் -- அரக்கர்களும் தன் குழந்தைகளே என்ற கண்ணோட்டத்தில் அவர்களை தேவை இல்லாமல் ஏன் கொல்லவேண்டும் என்று கேட்கிறாள் 



அசோகவனத்தில் ஆயிரம் அரக்கிகள் உயிரும் சீதையால் காப்பாற்றப்படுகின்றன -- 

அவர்கள் சீதைக்கு இழைத்த கொடுமைகளை சொல்லி மாளாது 

ஆனால் ஒருவர் மீதும் அவளுக்கு கடுகளவு கூட கோபம் வரவில்லை 

எய்தவன் எங்கோ இருக்க அம்பை ஏன் நோக்கவேண்டும் என்று அனுமனிடம் சொல்கிறாள் .. 

தன்னை கொத்தி குருதி வரவழைத்த காக்காசுரனையம் மன்னித்து விடுகிறாள் அவள் கருணைக்கும் முன் ராமனின் பிரம்மாஸ்த்திரம் கட்டுப்பட்டு விடுகிறது . 

ராமன் மீது அவள் பைத்தியமாக இருந்தாள் - அவளுடைய பிரேமையினால் அவளால் ராமனை ஒருவர் வதம் பண்ண முடியாது என்று கூட நம்ப முடியவில்லை -- 

அன்பு என்பது கண் மூடித்தனமாய் இருக்கக்கூடாது அது கணவனோ இல்லை மனைவியோ யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும் - 




சீதையின் அன்பு அவள் கண்களையே குருடாக்கியது -- 

ராமனை மாரீசன் கொன்றிருப்பான்  என்று நம்பினாள் - 

ராமனை கொல்ல  ராமனே வந்தாலும் முடியாது என்று சொன்னவள்  ஒருவேளை மாரீசன் ராமனை கொன்றிருந்தால் என்று சந்தேகம்  வருகிறது --- அவள் அறிவு அங்கே வேலை செய்யவில்லை கண் மூடித்தனமான  பாசம் possessiveness ---- ராமன் தனக்கே உரியவன் அவனை அடையவோ இல்லை கொல்லவோ யாராலும் முடியாது என்ற நம்பிக்கை அங்கே மடிந்து போகிறது ..

அறிவு வேலை செய்யாத இடத்தில் சாத்தான் வீடு கட்டிக்கொள்கிறான் என்ற பழமொழி சீதை பொறுத்த வகையில் நூற்று நூறு உண்மை என்று ஆனது விளைவு ஏக  வசனத்தில் லக்ஷ்மணனை திட்டுகிறாள் - பராதனையும் சீதை விட்டு வைக்கவில்லை - தன்னை அடைய லக்ஷ்மணனும் பரதனும் போட்ட திட்டம் என்று நாக்கு கூசாமல் சொல்கிறாள் -- 




இங்கே தான்  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் ஒருவன் மீது அல்லது ஒருத்தி மீது கண் மூடித்தனமாக பிரேமை இருக்கும் போது அறிவை அடகு வைப்பது மிகப்பெரிய தவறு -- 

ராமன் சீதை பேசியதை இரண்டு மடங்காக்கி அவள் எங்கு வேண்டுமானாலும் யாரு கூட வேண்டுமானாலும் இனி வாழட்டும் என்கிறான் --- வார்த்தைகள் தடிக்கும் போது உறவுகள்  சொல்லிக்கொள்ளாமல் முறிந்து போகின்றன. பிறகு அதை ஓட்ட வைப்பது மிகவும் கடினம் . 

ராமாயணம் ஒரு காதல் காவியமாக ஆகவேண்டியது 

தேவை இல்லாமல் கண்ணீரினால் வரையப்பட்ட ஓவியமாக மாறியதற்கு  காரணமே எங்கே எதை பேச வேண்டுமோ அங்கே அதை ராமனும் பேசவில்லை சீதையும் பேசவில்லை அவர்கள் இருவரும் பின் விளைவுகளையும் யோசிக்கவில்லை - 

நல்லதோர் வீணை செய்தே என்ற பாரதியின் வார்த்தைகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன 

அம்மா உண்மை தாயே எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லை என்பதைப்போல் பேசி முடித்து விட்டீர்கள் -- நெஞ்சம் கொஞ்சம் கனமாக இருக்கிறது அம்மா .... 

எனக்கும் தான் ரவி பல யுகங்கள் ஆனாலும் வருத்தம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது 





ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜன விஶ்ராம்தி தாயினீ |  जन्म-मृत्यु-जरा-तप्त-जन-विश्रान्ति-दायिनी .    இந்த உலகில் தோன்றி யவர்கள்,  தோன்றியவைகள், எல்லாமே  பிறப்பு, வயோதிகம், முதுமை,  இறப்பு என்ற வழியில் தான் தப்ப முடியாமல் செல்லவேண்டும். மீண்டும் அதே.  அவர்களுக்கு ஆறுதல் தரும் ஒரே தெய்வம் அம்பாள் ஸ்ரீ  லலிதை தான்.  தாயல்லவா?  

முக்தி ஒன்றே இந்த பந்தத்திலிருந்து விடுபடும் மார்க்கம்.  ஸ்வர்கம் என்பது நிரந்தரவாசமல்ல . ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான்.  அப்புறம் விடுதியை காலி செய்துவிட்டு கீழே இறங்கவேண்டும். முக்தி என்பது  ஆத்மா  இறைவனோடு ஒன்று  சேர்வது. அதற்கு  பிறப்பு இறப்பு இல்லை.  அது தான் ப்ரம்மத்தோடு கலந்துவிட்டதே. அதற்கு தனியாக எந்த அடையாளமும் இல்லையே.




ஸர்வோபநிஷதுத்குஷ்டா, सर्वोपनिषदुद्गुष्टा    எல்லா உபநிஷதங்களும் போற்றுவது அம்பாளைத்  தானே.  அவள் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவள். சக்தி வாய்ந்தவள். அவள் சொல்லுக்கு மறுப்பு இல்லை.  ஞானத்தை தருபவை  உபநிஷதங்கள். அவற்றின் உருவம் அவள்.  ப்ரம்ம ஸ்வரூபம்.  அவளில்லையேல் சிவன் இல்லை. பக்தர்களை சிவனிடம் கொண்டு சேர்ப்பது சக்தி தான்.

வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே புன்னகையை வரவழைத்து என் கண்களையும் துடைத்துவிட்டு மறைந்தாள் கோவிந்த ரூபிணீ 

                                            =======================






Comments

ravi said…
*புன்னகை ராமாயணம் 77/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
*3வது காண்டம் அரண்ய ஸ்பந்தம்*👌👌👌 .
ravi said…
ஜஹ்யாம் ஜீவிதம் அப்யஹம் ப்ரிய தமே த்வாம் வா ததா லக்ஷ்மணம்
நைவ ப்ராஹ்மண ஸந்நிதௌ விரசிதாம் ஸீதே ப்ரதிஜ்ஞாம் இமாம்
இதி உக்த்வா ஸுஹிதம் ஹிதாம் அபி ச தாம் ஸம்பச்யத: தே முகே
யத் மந்த ஸ்மிதம் ஆவிராஸ தத் இதம் மாம் பாது பாபாத் கலே:


जह्यां जीवितं अप्यहं प्रियतमे त्वां वा तथा लक्ष्मणं
नैव ब्राह्मण-सन्निधौ विरचितां सीते प्रतिज्ञां इमाम्।
इत्युक्त्वा सुहितं हितां अपि च तां संपश्यतस्ते विभो
यन्मन्दस्मितं आविरास तदिदं मां पातु पापात् कलेः॥

*பொருத்தமான பதிலும் பொருள் பொதிந்த புன்னகையும்*😊😊😊
ravi said…
முன் பகை இல்லாமல் ஒருவரை கொல்வது என்பது தோஷம் -

வில்லை தூக்கி எறிந்துவிடு ராமா!

புண்ணிய நதிகளில் நாம் நீராடி பல ரிஷிகளின் ஆசீர்வாதங்களையும் வாங்கிக்கொண்டு புண்ணியம் நிறைய சேர்ப்போம் என்று சொன்ன சீதையிடம்

ராமன் ஒரு நல்ல பதிலையும் சொல்லி ஒரு புன்னகையையும் உதிர்க்கிறான்🙂

ravi said…
ராமன் பதில் சொல்கிறான்

- இல்லை சீதா அப்படி வில்லை தூக்கி எறிந்துவிட முடியாது -

நான் இங்கு இருக்கும் எல்லா ரிஷிகளுக்கும் வாக்கு கொடுத்துவிட்டேன்
அவர்களை காப்பாற்றுவேன் என்று

எப்படி அந்த மாதிரி கொடுத்த வாக்கை நானே மீற முடியும் ?
ravi said…
*ஜஹ்யாம் ஜீவிதம் அப்யஹம் ப்ரிய தமே*💐💐💐

மைதிலி ,ஒரு வேளை நான் இந்த ரிஷிகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் அரக்கர்களால் எல்லோரும் அழிந்து போய் விடுவார்களே ..

அந்த பாவம் நம்மை சூழாதா ?

மேலும் அவர்களை நாம் அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றவில்லை என்றால் வேள்விகள் புரிந்து நாட்டை செழிப்பாக்குவது யார் ?

இவர்கள் கடவுளுக்கு சமம் ஜானகி .. 👌👌👌
ravi said…
*த்வாம் வா ததா லக்ஷ்மணம்*

என்னையே நம்பி வந்த உன்னை என்றும் கை விட மாட்டேன் ...

உன்னிடம் வம்புக்கு வருபவர்களை பார்த்துக்கொண்டு நமக்குத்தான் இவர்களிடம் முன் பகை இல்லையே எதற்கு சண்டை போட வேண்டும் என்று சும்மா இருக்க முடியுமா ?

அந்த சமயத்தில் நீ சொல்லி நான் தூக்கி எறிந்த கோதண்டம் எப்படி என் கரங்களில் திரும்பவும் கிடைக்கும் ?

மேலும் லக்ஷ்மணனையும் நான் காப்பாற்ற வேண்டும் ..

தன் சுகத்தையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு எனக்காக வனம் வந்துள்ளான் ..

கைகேயி அவனை வனம் போக சொல்ல வில்லை 👍👍👍
ravi said…
*நைவ ப்ராஹ்மண ஸந்நிதௌ விரசிதாம்*

என்னால் மூன்று விஷயங்களில் வேறு மாதிரி நடந்துகொள்ள முடியாது சீதா!!

1. உன்னை காப்பாற்றவேண்டும் என்ற என் கடமையிலிருந்து நான் தவறி நடக்க மாட்டேன்

2. லக்ஷ்மணனை காப்பாற்றுவது எனும் கடமையில் இருந்தும் நான் தவற மாட்டேன்

3. ரிஷிகளுக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டேன் .

அவர்கள் என்னிடம் சரணாகதி என்று வந்து விட்டார்கள்

அவர்களை ரக்ஷிக்க அரக்கர்களை அழித்ததே தீருவேன் 👌👌👌
ravi said…
எனவே கோதண்டத்தை நான் தண்டமாக சுமக்க வில்லை ..

என் மீது நானே திணித்துக்கொண்ட கடமைகளினால் இந்த வில்லை நான் சுமக்கிறேன் ..

ravi said…
முன் பகை இல்லாவிட்டாலும் மேலே சொன்னவர்களை காப்பாற்ற நான் வரும் அரக்கர்களை அழித்தே தீருவேன்

இப்படி பதில் சொல்லிவிட்டு சீதையைப் பார்த்து ஜானகி நீ வைத்த பரீட்சையில் நான் ஜெயித்து விட்டேன் என்று சொல்லும் வகையில் ராமன் உதிர்த்த புன்னகை அமைந்ததாம் 🙂🙂🙂


*என்ன பரீட்சை சீதை ராமனுக்கு வைத்தாள்.. பார்ப்போமா ?*🤔🤔🤔
ravi said…
சீதைக்கு ராமன் தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்றுவதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறான் என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள்...

சில பெண்களின் சுபாவம்

*ஆமாம் என்று சொன்னால் இல்லை என்று அர்த்தம் ... இல்லை என்று சொன்னால் ஆமாம் என்று அர்த்தம் ...*

வில்லை தூக்கி எறிந்து விடு ராமா என்று சீதை சொன்னாளே தவிர உள்ளுக்குள் அப்படி ஏதாவது செய்து விடாதே என்றே நினைக்கிறாள்

இங்கே ஒரு கதை சொன்னால் இன்னும் நன்றாக புரியும் .🥇🥇🥇
ravi said…
ஒரு மணவி கணவனிடம் சொல்கிறாள் ..

நாளை என் தம்பி ஊரிலிருந்து வருகிறான் .

உங்கள் branded T Shirts யை பாரத்தால் அதை அவன் எடுத்துக்கொள்ளலாம்

எனவே அவன் போகும் வரை பீரோவில் வைத்து பூட்டி வையுங்கள்
உங்கள் எல்லா T shirts களையும் ...

கணவன் அப்படியே செய்கிறான் ...

வந்த தம்பி ஒரு நாள் இருந்துவிட்டு திரும்பி செல்கிறான் ..

அவன் போனவுடன் மனைவி கணவனை ஒரு பிடி பிடிக்கிறாள் ..

ravi said…
உங்களிடம் எவ்வளவு T shirts இருக்கிறது ...

ஒன்று அல்லது இரண்டு என் தம்பிக்கு ஏன் கொடுக்க வில்லை

அவன் உங்களுக்கு ஒரே மச்சான் ..

இவ்வளவு கருமியாக இருப்பீர்கள் என்று நினைக்க வில்லை என்று சொல்கிறாள் 🏹🏹🏹
ravi said…
கணவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை ..

தையிரியத்தை வரவழைத்துக்கொண்டு இஷ்ட தெய்வங்கள் எல்லாவற்றையும் வேண்டிக்கொண்டு பதில் தருகிறான் ..

நீ தானே சொன்னாய் .. பூட்டி வையுங்கள் என்று

ravi said…
உடனே மனைவி சொல்கிறாள் ..

நான் அப்படித் தான் சொல்வேன் ..

உங்களுக்கு மூளை எங்கே போனது .. ???

என் மச்சான் அவன் ..

நான் வாங்கித்தராமல் யார் தருவார்கள் என்று சொல்லி 5 or 6 T shirts கொடுத்து கொஞ்சம் பணமும் செலவுக்கு தந்திருக்க வேண்டும் ...
ravi said…
இந்த கதையைப்போல்

சீதை ராமன் மனம் எப்படி எவ்வளவு தூரம் உறுதி வாய்ந்தது என்று ஒரு பரீட்சை வைக்கிறாள் ..

வில்லை தூர எறிந்து விடு ராமா ...

முன் பகை இல்லாதவர்களுடன் நாமே வம்புக்கு போவது தோஷம் என்றெல்லாம் சொல்கிறாள் ..

ராமன் இப்படி உறுதியுடன் என்னிடம் சரணாகதி செய்து விட்டால் அவர்கள் நான் கண்டிப்பாக காப்பேன் என்று சொல்லி புன்னகைக்கிறான் ...
சீதா நீ வைத்த பரீட்சையில் நான் pass பண்ணி விட்டேன் என்று 🙂
ravi said…
*யத் மந்த ஸ்மிதம் ஆவிராஸ தத் இதம் மாம் பாது பாபாத் கலே:*

ராமா அப்படி வெற்றி புன்னகை ஒன்றை சீதையிடம் அன்று உதிர்த்தாயே

அதே வெற்றி புன்னகை இன்றும் வடுவூரில் மிளிர்கிறதே

அந்த புன்னகை உன்னிடம் சரணாகதி அடைந்த எங்களையும் ரக்ஷிக்கட்டும் ..

ravi said…
*குறிப்பு* ..

இந்த ஸ்லோகம் இறைவனை முழு சரணாகதி அடைந்து விட்டால் அவன் கண்டிப்பாக நம்மை காப்பான் என்பதை ராமனே உறுதி மொழி தந்ததாக பாவிக்கப்படுகிறது

அவ்வளவு உண்மை சத்தியம் நிறைந்த ஸ்லோகம் இது . 🙏🙏🙂
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 59 🏆🏆🏆🥇🥇🥇

*Started on 26th sep 2020*💐💐💐💐

👌👌👌
ravi said…
*ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ*👌👌👌
ravi said…
*3வது திருநாமம்*💐💐💐
ravi said…
என் தாய் அழகு . என்றும் அவள் இளமையுடன் இருப்பவள் .. அவள் யார் உண்மையில் என்று கேட்க்கிறீர்களா ? அவள் இந்த பிரபஞ்சைத்தையே ஆளும் மஹாராஜ்ஞீ... இந்த பிரபஞ்சம் என்று சுருக்கி விடாதீர்கள் அவள் அண்ட சராசரங்களை கட்டி காப்பவள் ... அவள் பிள்ளை என்பதால் நான் ராஜ மரியாதை அனுபவிக்கிறேன் ... அவள் மஹா ராணி மட்டும் அல்ல

*ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ*👌👌👌

ravi said…
அவள் அமரும் சிம்மாசனம் சிங்கம் ...

கர்ஜிக்கும் சிங்கம் ..

அவள் சிம்மாசனம் அளப்பிட முடியாத ஒன்று ..

அந்த ராணி அங்கே அமர அவள் பாதங்களில் நவ ரத்தினங்கள் ஜொலிக்க ,

மாணிக்கமும் வைடூரியமும் அவள் இருக்கையில் பதிந்து இருக்க

சூரிய சந்திரர்கள் காவல் காக்க

பஞ்ச பூதங்கள் அடிமையாய் எடுபடி வேலை செய்ய

துந்துபிகள் நாதம் இசைக்க நாரதர் கானம் பாட நந்தி மத்தளம் முழங்க ,

வாணீ வீணையை வாசித்துக்கொண்டே சாமரம் வீச

லட்சுமி குடை பிடிக்க எல்லா தேவர்களும் அன்னையின் பாத்துளிகள் தங்கள் மீது விழாதா என்று ஏங்கி நிற்க ,

திருமால் மை தீட்ட பிரம்மன் வேதம் ஒத

முருகன் மயில் நடனம் புரிய வேழ முகத்தோனும் வீதி வலம் வர

பாலாவும் மணிகண்டனும் பாதையில் பூ தூவ

அங்கே சுந்தரியாய் அமர்ந்திருக்கிறாள் ... கூத்தனின் ஆனந்த நடனத்திற்கு ஐதி போட்டுக்கொண்டு என்னை அவள் மடியில் வைத்துக்கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறாள் 👍👍👍
ravi said…
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
*Lalita Trishati 281 - 290*👌👌👌
ravi said…
*281. Hrīṁkāramūrti ह्रींकारमूर्ति*💐💐💐 She is an embodiment of hrim ....🥇🥇🥇

*282. Hrīṁkārasaudhaśṛṅgakapotikā ह्रींकारसौधशृङ्गकपोतिका*💐💐💐
She is in the form of female pigeon inside a mansion situated at the top of a mountain 🏆

*283. Hrīṁkāradugdhābdhisudhā ह्रींकारदुग्धाब्धिसुधा*💐💐💐 She is in the form of nectar in the sea of milk

*284. Hrīṁkārakamalendirā ह्रींकारकमलेन्दिरा*👌👌👌

Kamala – lotus flower; Indira – Lakṣmī, wife of Viṣṇu (Indra is different from Indira).

She is seated in a lotus flower, assuming the form of Lakṣmī, who takes care of comforts of Her devotees. Kamala also means wealth and prosperity.👍👍👍

*285. Hrīṁkāramaṇidīpārcī ह्रींकारमणिदीपार्ची*💐💐💐 She is a gem extremely precious worthy of worship

*286. Hrīṁkārataruśārikā ह्रींकारतरुशारिका*💐💐💐 She separates soul from the body and helps the soul to scale new heights 🙏🙏🙏

*287. Hrīṁkārapeṭakamaṇiḥ ह्रींकारपेटकमणिः*👌👌👌

She is the precious stone or gem hidden in the box

*288. Hrīṁkāradarśabimbitā ह्रींकारदर्शबिम्बिता*👌👌👌

Though Śiva is the source of Light, He still needs Her to reflect His grandeur.

Hence, Śiva is always considered as static energy and Śakti is considered as kinetic energy.

One without the other becomes dysfunctional.👍👍👍

*289. Hrīṁkārakośāsilatā ह्रींकारकोशासिलता*👌👌👌 She is like a sword placed in a cover . Sword is knowledge and the cover is ignorance

*290. Hrīṁkārasthānanartakī ह्रींकारस्थाननर्तकी*👌👌👌Her dance refers to every action that takes place in the universe 👍👍👍
ravi said…
*291. Hrīṁkāraśuktikāmuktāmaṇi ह्रींकारशुक्तिकामुक्तामणि*💐💐💐
ravi said…
Śuktika – mother-of pearl (nacre – a layer within which a pearl is found, probably referring to oyster); muktāmaṇi – pearl.

Pearl is within an oyster.

It is believed that pearl is formed out of pure rain water.

Since its origin is pure, original pearl is said to have pure qualities.

Maṇimālā, an ancient treatise on gems, outlines the properties of pearl.

It says that here are different types of pearls and according to its quality, a pearl gives wealth, knowledge, fame and good luck.

Pearls cure poisoning and give strength to weak limbs.

Thus, an original pearl is capable of giving all positive qualities.

Hence, She is compared to a pure pearl.🙏🙏🙏
ravi said…
This nāma says that She is in the form of a pure pearl, hidden inside an oyster.

Here oyster is compared to Her own play of māyā.

Of one is able to go past māyā, he will be able to realize Her.

This nāma subtly conveys that Brahman always remains concealed and only due to the purity of the mind, He can be realized (Kaṭha Upaniṣad II.i.12).

A question may arise as to the need of purity of the mind. Brahman is always pure and in order to realize Him, one needs a pure mind.

One can put fire on a fire; suppose water is put on fire, fire is extinguished. In order to become one with something, the same level is to be attained before merger.

She helps Her devotees to attain all the qualities of Śiva to merge unto Him.🥇🥇🥇
S G S Ramani said…
சீதை மற்றும் ராமனின் சூழ்நிலைக்கேற்றவாறு மாறும் மனநிலையை அழகாக விவரித்து அதன் மூலம் நமக்கும் வாழ்க்கை பாடத்தை விளக்கி அறிய வைத்ததில் வார்த்தை சித்தரின் மனிதாபிமான மற்றும் ஆய்வு அணுகுமுறையை காணமுடிந்தது..

வாழ்க்கை பாடம்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Shivaji said…
Arumai.. Sree Mathre Nama🌹🌹🌹
Moorthi said…
🙏🙏🙏🙌🙌🙌💐💐💐🌷🌷🌷🙏🙏🙏
Savitha said…
கண்முடித்தமான அன்பின் விளைவு ஆபத்து
பகுத்தறிவை ..பயன்படுத்த. வேண்டும்
நிறைய பாடங்கள் ராமாயணத்தில்
மன்னிக்கும்
குனம் ......
அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
K.Balasubramanian said…
Rama,Sita roles explained beautiful ly.Too much affection will spoil the life well brought out.In between the project beautiful pictures are found.It adds more value to the project.To top it all, the way in which it has been written is beautiful.
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 173*
🌸🌸🌸🌸
விஶ்வமாதா, ஜகத்தாத்ரீ, விஶாலாக்ஷீ, விராகிணீ|
ப்ரகல்பா, பரமோதாரா, பராமோதா, மநோமயீ ‖ 173 ‖
🌸🌸🌸🌸
विश्वमाता, जगद्धात्री, विशालाक्षी, विरागिणी|
प्रगल्भा, परमोदारा, परामोदा, मनोमयी ‖ 173 ‖
🌸🌸🌸🌸
viśvamātā, jagaddhātrī, viśālākśhī, virāgiṇī|
pragalbhā, paramodārā, parāmodā, manomayī ‖ 173 ‖
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஓம் விஶ்வமாத்ரே நம;
ஓம் ஜகத்தாத்ர்யை நம;
ஓம் விஶாலாக்ஷ்யை நம;
ஓம் விராகிண்யை நம;
ஓம் ப்ரகல்பாயை நம;
ஓம் பரமோதாராயை நம;
ஓம் பராமோதாயை நம;
ஓம் மநோமய்யை நம;
🌸🌸🌸🌸
ravi said…
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*934.விஶ்வமாதா* - லோகங்களூக்கெல்லாம் ஜனனீயாயிருப்பவள்.
🌸🌸🌸🌸

*935.ஜகத்தாத்ரீ* - ஜகத்தை தாங்குகிறவள்.
🌸🌸🌸🌸

ravi said…
*936.விஶாலாக்ஷீ* - விசாலமான நேத்திரங்களையுடையவள்.
🌸🌸🌸🌸

*937.விராகிணீ*- வைராக்யத்தோடு கூடியவள்.
🌸🌸🌸🌸

*938.ப்ரகல்பா* - துணிவோடிருப்பவள்.
🌸🌸🌸🌸

*939.பரமோதாரா* - உத்க்ருஷ்டமான ஔத்தார்யத்தையுடையவள் (மஹத்தானஆனந்தத்தை பூர்ணமாய் உடையவள்.)அம்பாள்.
ravi said…
🌸🌸🌸🌸
*940.பராமோதா* - மஹத்தான கீர்த்தீயையுடையவள் .
🌸🌸🌸🌸

*941.மநோமயீ*- மனதையே ரூபமாக உடையவள்.
🌸🌸🌸🌸
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இப்போது நான் ”ஜீவகாருண்யம்”, ”பரோபகாரம்” என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு வார்த்தையுமே தப்புத்தான் ஏனென்றால்:

ravi said…
காருண்யம் – கருணை காட்டுவது – என்றால் இப்படிக் கருணை காட்டுகிறவர் ஓரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்குப் பாத்திரமாகிறவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிரியும் தொக்கி நிற்கிறது.
ravi said…
நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம், நம் உதவியைப் பெறுகிறவர் நம்மைவிடத் தாழ்த்தியாக இருக்கிறார், நாம் ‘கருணை’ காட்டுகிறோம்” என்று நினைக்கிறபோதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது.
ravi said…
உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். மாறாக நாம் உபகாரம் பண்ணும்போது, போனால் போகிறது என்றும் யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், இது ஆணவ அஹங்காரங்களுக்கு இடமாகிவிடுகிறது. உபகாரத்தால் நம் ஆதமாவை உயர்த்திக் கொள்வதற்கு நேர்மாறாக ஆத்மஹானியே உண்டாகிவிடும்.

ravi said…
கருணை, காருண்யம் என்கிற வார்த்தையைச் சொல்வதைவிட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத் தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடமே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே போனால் போகிறதென்று யாரோ அந்நியருக்கு இரக்கம் காட்டுகிற மாதிரியான அஹங்கார எண்ணம் இல்லை.

ravi said…
ஆனாலுங்கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்கிற பேதமேயில்லாமல் ஸகலரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸவாபாவிகமான அன்பைச் செலுத்துவது என்றால் அது ஆரம்ப காலத்தில் ஸாத்யம் இல்லாமல்தான் இருக்கிறது. இந்தப் பொது இயற்கையை ஓப்புக் கொள்கிறது போலத் தான் திருவள்ளுவர்கூட அன்பு, அருள் (அருள் என்பதைக் கருணை என்று வைத்துக்கொள்ளலாம்) என்று பிரித்து distinction சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்? அருள் என்னும் அன்பீன் குழவி என்கிறார். அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.

ravi said…
இப்போது நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை மட்டும் நினைத்துக் கொண்டு அன்பு செல்லுத்துகிறோம் அல்லவா? இந்த ‘வேண்டியவர்’களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்தே படிப்படியாக அருள் பிறக்கிறது. அப்புறம் இப்படி அருள் பண்ணுகிறவனைப் பொருத்த மட்டும் அது ‘அருள்’ ‘கருணை’ என்றெல்லாம் உயர்வு விஷயமாக இல்லாமல், ஸ்வபாவமான, ஹைஜமான அன்பாகவே ஆகிவிடுகிறது.
ravi said…
ஆனாலும் இந்த அன்பைப் பெறுகிறவர்களோ அது ஸாதாரனமாக நண்பர்களிடையே பந்துக்களிடையே இருக்கிற அன்புமாதிரி இல்லாமல், நல்ல கனிவு பெற்று தெய்விகமான சக்தி பெற்றிருப்பதாக உணர்கிறார்கள். இந்த பக்குவமான, திவ்யசக்தி வாய்ந்த அன்பை ‘அருள், அருள்’ என்கிறார்கள்.
ravi said…

‘எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான்’என்று ஒருத்தன் உணர்கிறபோது தான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன் தன் மநுஷ்யர்களுடன் ஸமமான நிலையில் இருந்துகொண்டு பிரியம் காட்டுவதைவிட இன்னும் ஒருபடி கிழே இறங்கி தன்னைக் குறைத்துக்கொண்டு, மற்றவனை ஈஸ்வரனாக நினைத்துதான் ஸேவை செய்கிறான். ‘நைச்சியம்’ என்று இதை வைஷ்ணவர்கள் விசேஷித்துச் சொல்வார்கள்.
ravi said…
தன்னைத் தாழ்ந்தவானக, நீசனாக நினைத்து இன்னொருத்தனுக்கு ஸேவை செய்வதுதான் ‘நைச்சியம்’. இப்படி இவன் தன்னைக் குறைத்துக் கொள்கிறபோதுதான் இவனுடைய அன்பு வெறும் பேச்சாக, எண்ணமாக மட்டுமில்லாமல் அதற்குக் காரிய ரூபத்திலேயே தெய்விகமான சக்தி உண்டாகி, அது ‘அருளாக’ ஆகிவிடுகிறது!
ravi said…
கொஞ்சங்கூட மமதையே இல்லாமல் ”நாம் பெரியவர், உபகாரம் பண்ணுகிறோம்” என்ற அகந்தையே இல்லாமல் இவன் ஸமஸ்தப் பிராணிகளிடம் ஈஸ்வர ஆராதனையாக அன்பைச் செலுத்துகிறபோது, அதுவே இவனை ஸகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. இவனுடைய அன்பு வெறும் பேச்சாகவும் எண்ணமாகவும் மட்டுமில்லாமல், காரியத்திலேயே ஈஸ்வராநுக்ரஹத்தை வாங்கித் தரக்கூடிய அருட் சக்தியைப் பெற்றுவிடுகிறது.

ravi said…
இவனுடைய ஜீவகாருண்யத்தால் இப்படி இவனே உயர்வதுதான் பெரிய பிரயோஜனமாகிறது. ஒருத்தன் உபகாரம் என்று நினைத்து இன்னொருத்தனுக்குச் செய்வது அவனுக்கு அபகாரமாக ஆனாலும் ஆகலாம்; அல்லது இவனுடைய உபகாரத்தை அவன் விரும்பாமலும் இருக்கலாம். அதாவது பிறத்தியானைப் பொருத்தமட்டில் இவனுடைய ஸேவை வீணாகவே போனாலும் போகலாம். ஆனால் இவனையே பொருத்தமட்டில் இவனுடைய அஹங்காரத்தைக் கரைத்து, இவனை (ஆத்மிகத்தில்) உயர்த்திவிடுகிறது.

ravi said…
இதனால்தான் ‘ஜீவகாருண்யம்’ என்கிற மாதிரியே ‘பரோபகாரம்’ என்ற வார்த்தையும் ஒரு தினுஸில் தப்புதான் என்றேன். பரனுக்கு (பிறத்தியானுக்கு) இவனுடைய ஸேவை உபகாரமாக இல்லாவிட்டாலும்கூட, ஸ்வயமாக இவனுக்கே சித்த பரிசுத்தியை உண்டாக்குவதால், இதை ‘ஸ்வய உபகாரம்’ என்றுதான் சொல்லவேண்டும்.

ravi said…
இது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது நாம் கருணை பண்ணுகிறோம், அருள் காட்டுகிறோம் என்ற எண்ணமே இல்லாதபோதுதான், இவனுக்கு தெய்விகமான ‘அருளுடைமை’யே உண்டாகிறது. இப்படியே இவன் ஸ்வய நலனைக் கொஞசம்கூட நினைக்காமல் பரோபகார ஸேவை செய்வதுதான் உண்மையில் ஆத்ம லாபம் என்கிற பெரிய ‘ஸ்வயோபகாரமாக’இருக்கிறது.

ravi said…
நல்ல அத்வைத திருஷ்டி வந்துவிட்டால் ஸ்வயம், பரம் என்கிற பேதமே இல்லாமல், எல்லாம் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்து, பல தினுஸில் கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஒருத்தன் தன்னுடைய இயற்கையான தர்மமாகவே ஆனந்தமாகப் பணி செய்து கொண்டிருப்பான். இப்போதும் ‘பர உபகாரம்’ என்ற phrase தப்பாகி விடுகிறது! தனக்குப் பரமாகத்தான் இவனுக்கு எதுவுமில்லையே! ”என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்னது இந்த நிலையில்தான்.

ravi said…
நம் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பதுதான் நம் வாழ்க்கையின் குறிக்கோளாக, Motto – வாக் இருக்க வேண்டும்.

கடன் என்றால், ‘கடனே என்று செய்தேன்’, ‘கடனிழவே என்று செய்தேன்’ என்றெல்லாம் சொல்லுகிறோமே, அந்த மாதிரி வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று அர்த்தமில்லை. கடன் என்றால் கடமை, Duty .அதை அன்போடு, ஆர்வத்தோடு ஹ்ருதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.

ravi said…
லோகத்தில் இத்தனை ஜீவராசிகள், பசு பக்ஷிகள், தாவர வர்க்கங்கள் இருக்கிறோமே, இதில் ஒன்றுக்கொன்று வாழ்வுக்கு அவசியமானவைகளைப் பரஸ்பரம் கொடுத்துக் கொண்டுதான் ஜீவிக்கிறோம். இதிலே மநுஷ்யர்களான நாம், நம் போன்ற ஸஹ மநஷ்யர்களிடமிருந்தும், மிருகங்கள், பக்ஷிகள், தாவரங்கள், இன்னும் inanimate என்கிற ஜடவஸ்துக்களிடமிருந்துங்கூட எத்தனையோ உதவி பெறுவதால்தான் ஜீவ யாத்திரையை நடத்திக்கொள்ள முடிகிறது. இதனால்தான் ஜடம் என்று நினைக்கிற பூமி, ஜலம், அக்னி இவற்றுக்குக்கூட நாம் செய்கிற பிரதியாக வைதிக மதத்தில் பலவிதமான சடங்குகள் இருக்கின்றன.

ravi said…
தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, உணர்ச்சிகள் இருக்கின்றன என்று ஜகதீஷ்சந்திர போஸ்தான் கண்டு பிடித்தார் என்றில்லை. வனஸ்பதி, அச்வத்தம் என்கிற மாதிரியாக அதுகளையும் உயிரும் உணர்ச்சியும் கொண்டதாகப் பார்த்து மந்திரபூர்வமாக அவற்றுக்கும் நம் ப்ரத்யுபகாரமாக பூஜைகளைப் பண்ண சாஸ்த்திரம் இருக்கிறது. ‘தூர்வா ஸூக்தம்’, ‘ம்ருத்திகா ஸூக்தம்’ என்றெல்லாம் அருகம்புல், மண் முதலானவற்றிலிருக்கிற தெய்வ சக்தியைக்கூட ஆராதிக்க வேத மந்திரங்கள் இருக்கின்றன.
ravi said…
தினமும் செய்கிற ‘ப்ரஹ்ம யஜ்ஞ’த்தில் சேதன-அசேதனங்கள் அத்தனையிலும் இருக்கிற சைதன்ய சக்திக்கு நம் நன்றியறிதலாகத் தர்ப்பனம் சொல்லியிருக்கிறது.

ravi said…
ஒரு காக்கை இருக்கிறது. எங்கேயோ ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு நம் தோட்டத்திலே வந்து எச்சமிடுகிறது. அந்தப் பழத்தின் கொட்டை இங்கே நம் வீட்டுத் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது. அந்தக் காக்கை நமக்கு ஓர் உபகாரம் பண்ணிவிட்டது.
ravi said…
நாய் காவல் காக்கிறது. குதிரையை வண்டியில் கட்டி ஸவாரி பண்ணுகிறோம். கோமாதா நமக்கு பௌதிகமாகவும் ஆத்மார்தமாகவும் பண்ணுகிற உபகாரம் கொஞ்சநஞ்சமில்லை. இப்படி எல்லாரிடமும் உபகாரம் பெற்றுவிட்டு, மநுஷ்ய ஜன்மா எடுத்துள்ள நாம் பிரதி உபகாரம் பண்ணாமல் இருந்தால் பாபம் அல்லவா?
ravi said…
”நன்றி மறப்பது நன்றன்று”, ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்றெல்லாம் மஹா பெரியவர், வள்ளுவர், இன்னும் மநு, வியாஸர் எல்லாரும் சொல்கிறார்களே!

ravi said…
மந்த்ரவத்தாகவும், கிராம ஜனங்களின் வழக்கத்தில் வந்துள்ளதுமான அநேக சடங்குகளைப் பண்ணினாலே அசேதனம் (inanimate) என்று நாம் நினைக்கிறவற்றின் அதிதேவதைகள் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இது தவிர தாவரங்களுக்கு ஜலம் கொட்ட வேண்டும். மிருகங்களிடம் அன்பு பாரட்ட வேண்டும். அவற்றிக்குக் கொடுமை செய்யவே கூடாது.
ravi said…
”வாயில்லா ஜீவன்” என்றே அவைகளை ரொம்பவும் பரிவொடு சொல்வது வழக்கம். முன்காலத்தில் ஊருக்குள் மட்டுமின்றி, வெளியே மாடுகள் மேய்ச்சலுக்குப் போகிற இடங்களில் கூட அவற்றுக்கெனவே குளம் வெட்டி வைப்பார்கள். ஒரு பசுவுக்கு கழுத்திலே அரிக்கிறது. நம்மைப்போல் அதற்குக் கையா இருக்கிறது, சொரிந்து கொள்ள?” எனக்கு அரிக்கிறது” என்று சொல்ல அதற்கு வாய் கூட இல்லையே!அதன் கஷ்டத்தை உணர்ந்து, பசு சொரிந்து கொள்வதற்கென்றே அங்கங்கே கற்களை நாட்டி வைத்தார்கள். ”
ravi said…
ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ ‘என்று இதை ஒரு பெரிய தர்மமமாக நீதி நூல்களில் சொல்லியிருக்கிறது. கடைசியில் நம் மாதிரியான மநுஷ்யர்களிடத்தில் வந்தால், ஸ்ருஷ்டியில் பாக்கியுள்ள அத்தனை ஜீவ இனங்களுக்கும் எத்தனை கஷ்டம் இருக்குமோ அத்தனையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு மநுஷ்யனுக்கும் இருக்கிறது!இது இவனுடைய அலாதி புத்தியினால் இவனே ஸம்பாதித்துக் கொண்ட சொத்து!இவனைப்போல problem (பிரச்னை) வேறு எதற்கும் இல்லை. இதிலே முக்கால்வாசி இவனே கல்பித்துக்கொண்டதுதான்!இதைச் சரிப்படுத்துகிற மஹாபெரிய பரோபகாரத்தைத்தான் மஹான்கள் செய்கிறார்கள்.

ravi said…
இது தவிரவும் வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கமுடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக்கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில் வந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியும்.

ravi said…
நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்த துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது நம் கடன், கடமை, Duty.

ravi said…
இதைத்தான் தர்மம், அறம் என்று சொல்வது. முதலிலேயே நான் சொன்னபடி, இதைச் செய்வதால் எதிராளிக்கு வாஸ்தவத்தில் எந்த அளவுக்கு துக்கநிவிருத்தி உண்டாகுமோ அதற்கு நாம் ‘காரன்டி’ சொல்லமுடியாது. அதற்கு நாம் ஜவாப்தாரியும் அல்ல.
ravi said…
ஆனால் இப்படிச் செய்வதால் நமக்குச் சித்தசுத்தி நிச்சயமாக ஸித்திக்கிறது. அதாவது மனமாசு அகல்கிறது. திருவள்ளுவர்கூட தர்மத்துக்கு definition (லக்ஷணம்) சொல்லும்போது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றுதான் சொல்கிறார்.
ravi said…
சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள்,

ராக³ஸ்வரூப பாசா’ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள்,

க்ரோதா⁴கார அங்குசோ’ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள்,

மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள்,

பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள்.

பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே.

மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!
ravi said…
த³ராந்தோ³லித-தீ³ர்கா⁴க்ஷீ – சிறிதே சலிப்புடன் கூடிய நீண்ட கண்களையுடையவள்

நிஜாருண ப்ரபா⁴பூர மஜ்ஜத் ப்³ரஹ்மாண்ட³ மண்ட³லா – தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவள்

நக²தீ³தி⁴தி ஸஞ்ச²ன்ன நமஜ்ஜன தமோகு³ணா – தன் கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவள்

ச்’ருதி-ஸீமந்த-ஸிந்தூ³ரீக்ருத-பாதாப்³ஜ-தூ⁴லிகா – அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்

ravi said…
ஸகலாக³ம-ஸந்தோ³ஹ-சு’க்தி-ஸம்புட-மௌக்திகா – அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்து அவள்

உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-பு⁴வனாவலி – தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவள்

கலி-கல்மஷ-நாசி’னீ – கலியின் களங்கங்களை நாசம் செய்பவள்
ravi said…
நீராகா³, ராக³மத²னீ – ஆசையற்றவள். ஆசையைப் போக்குபவள்.

நிர்மோஹா, மோஹநாசி’னீ – மோகமற்றவள். மோகத்தை நாசம் செய்பவள்.

நிஷ்பாபா, பாபநாசி’னீ – பாவமற்றவள்; பாவத்தை நாசம் செய்பவள்.

நிர்பே⁴தா³, பே⁴த³நாசி’னீ – வேற்றுமையில்லாதவள்; வேற்றுமையைப் போக்குபவள்.


ஹர-நேத்ராக்³னி-ஸந்த³க்த⁴-காம-ஸஞ்ஜீவனௌஷதி⁴: – அரனது நெற்றிக்கண்ணின் தீயால் எரிந்துபோன காமனுக்கு உயிரூட்டிய மருந்து.

ravi said…
ச்’ருங்கா³ர-ரஸ-ஸம்பூர்ணா – சிருங்கார ரசத்தால் நிறைந்தவள்.

காமரூபிணீ – காமமே உருவானவள்; நினைத்த உருக்கொள்பவள்.

காமகேலி தரங்கி³தா – காமனுடைய லீலைகளாகிய அலைகள் தோன்றும் கடல்.


சித்கலா – உயிர்களிடத்தில் உணர்வாக இருப்பவள். ஆனந்த³கலிகா – உயிர்களில் ஆனந்தத்தின் அம்சமாக, மொட்டாக இருப்பவள்.

ப்ரேமரூபா – அன்பே வடிவானவள்

ப்ரியங்கரீ – அன்பு செய்பவள்.
ravi said…
மஹா காளீ, மஹாக்³ராஸா – பெருங்கவளமாக விழுங்குபவள்,

மஹாச’னா – அனைத்தையும் உண்பவள்,
சண்டி³கா – கோபக்காரி,

சண்ட³முண்டா³ஸுர-நிஷூதினி – சண்டன் முண்டன் ஆகிய அசுரர்களை வதைத்தவள்,

பசு’லோகப⁴யங்கரி – விலங்கியல்பில் வாழ்வோருக்கு பயங்கரமானவள்.


ravi said…
த³த்⁴யன்னாஸக்த ஹ்ருதயா – தயிர்சாதத்தில் ஆசை கொண்டவள்,

கு³டா³ன்ன ப்ரீத மானஸா – சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்,

வாருணீ மத³ விஹ்வலா – வாருணீ என்ற மதுவால் மெய்மறந்தவள்,

மத³ கூ⁴ர்ணித ரக்தாக்ஷீ – மதுவின் களிப்பால் சுழலும் சிவந்த கண்களையுடையவள்,

தாம்பூ³ல-பூரித-முகீ² – தாம்பூலத்தால் நிறைந்த உதடுகளுடையவள்.


ravi said…
கலாநிதி⁴: – கலைகளின் இருப்பிடமானவள்;

காவ்யகலா – காவியங்களின் கலையாயிருப்பவள்;

ரஸக்ஞா – ரஸத்தை அறிந்தவள்;

கலாலாபா – கலைகளில் மகிழ்பவள்;

கலாமாலா – கலைகளை மாலையாகத் தரித்தவள்.


ravi said…
வீரகோ³ஷ்டிப்ரியா – வீரர்களின் குழுக்களை விரும்புகள்;

வீரா – வீராங்கனை;

வீரமாதா – வீரர்களின் தாய்;

ஜயத்ஸேனா – வெல்லும் சேனைகளை உடையவள்.
Kousalya said…
.Ahhaaa.. What a testing... Charanam Charanam Charanam Rama...If not you, who can save us!!🙏🙏🙏🙏💐💐😊
Savitha said…
ஆஹா அருமையான
மிகவும் எளிமையான முறையில் ராமன் சீதை உரையாடல் சபாஷ்
கவியின் திறமை பாராட்ட தக்கது
...ஜெய் ஸ்ரீராம்
😊😊🏹🌹🌹🌷🌷🏹🏹
ravi said…
40 –
ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானம் தெரித்தருள் அருணாசலா (அ)

மிகவும் அழகான வரிகள் ... வழக்கம் போல் மிகவும் ஆழமான கருத்துக்கள்
முள்ளை முள்ளால் எடுக்கும் பாணியை இங்கே ரமணர் கையாள்கிறார் ...
அருணாசலா, எனக்கு ஞானம் சுத்தமாக இல்லை என்பதை இந்த உலகம் அறியும் ...ஆனால் நான் அதைப்பெற எவ்வளவு முயற்சி செய்கிறேன் என்றும் உனக்குத் தெரியும் ...
ravi said…
மிகவும் தளர்ந்து விட்டேன் அருணாசலா ... ஞானம் இன்னும் கிடைக்க வில்லை ...
அதை பெறக்கூடிய அறிவும் எனக்கில்லை ...
தேடித்தேடி கால்கள் வலிக்கின்றன. கண்கள் பூத்து விட்டன ... நாக்கு வரண்டு விட்டது. பேச்சு வர மறுக்கிறது ...

என்ன செய்வேன் அருணாசலா ....
ஞானத்தை பெற அறிவை கொடு ...
அந்த அறிவினால் நான் ஞானத்தைப் பெற்று விடுவேன் ...
உங்கள் மனதில் ஒரு கேள்வி வரும் ...

ravi said…
அது என்ன அறிவு, அது என்ன ஞானம் .... அறிவு தானே ஞானம் ... அறிவு இருந்தால் ஞானம் கிடைக்குமா என்ன பேத்தல் இது என்று கூட நினைக்கலாம் ...
ரமணர் நாம் புரிந்து கொள்ளாதபடி எதையுமே இந்த அக்ஷர மாலையில் சொல்ல வில்லை ...
இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம் ...
புத்தி வேற, ஞானம் வேற.
இன்றைக்கு லோகத்தில் பல துறைகளில் மஹா புத்திமான்களாகப் பல பேர் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களையெல்லாம் ஞானி என்று சொல்ல முடியுமா?
ப்ரஹ்மம் என்ற பரமாத்மாவே 'தான்' என்கிற ஜீவாத்மா என்ற அறிவை அநுபவமாகப் பெற்றவனைத்தான் ஞானி என்று சொல்கிறது -
ப்ரஹ்மஞானி என்றும், ஆத்மஞானி என்றும் சொல்கிறது.


ravi said…
அந்த அறிவைப் பெறவும் நிரம்ப தத்வ சாஸ்த்ரங்கள் படித்து அவற்றில் புத்தியைச் செலுத்தி அலசிப் பார்க்க வேண்டுமாதலால், இங்கேயும் புத்தி அவசியம்தான் என்றாலும், அந்த புத்தி ஆத்ம விஷயத்தில் மட்டுமே ப்ரவர்த்திப்பதாக இருக்கவேண்டும்.
புத்திமான்களாக மட்டும் இருப்பவர்கள் அப்படி தத்வ சோதனம் செய்பவர்களாக இல்லாமல் வேற ஸப்ஜெக்டுகளிலேயே புத்தியைப் ப்ரயோகிப்பவர்களாக இருப்பதுதான் ஜாஸ்தி.
தத்வ ஆராய்ச்சியே அவர்கள் பண்ணினாலுங்கூட, அது பெரும்பாலும் வெறும் மூளையின் அலசலாகத்தான் இருக்கும்;

ravi said…
பரமாத்ம-ஜீவாத்ம ஐக்யத்தை அநுபவித்தாக வேண்டும் என்ற ஹ்ருதய தாபம் கலக்காத மூளையலசலாக மட்டுமே இருக்கிற அது ப்ரயோஜனமில்லை. அது ஞானமுமில்லை.
ஆதிசங்கரர் அம்பாளிடம் தாயே ஞான வைராக்கியத்தை கொடு என்கிறார் ...
ஞானத்தை கொடு என்று நேராக கேட்கவில்லை ....
என்ன அர்த்தம் ...

ravi said…
அம்மா எனக்கு எது உயர்ந்தது எதை உன்னிடம் கேட்க வேண்டும் என்ற அறிவே கிடையாது ...

அந்த அறிவு இல்லாததால் மிக உயர்ந்த முக்தி தரும் ஞானத்தை கேட்டு வாங்காமல் உப்பு சப்பு இல்லாத அழியக்கூடிய பொருட்களை உன்னிடம் தரும் படி கேட்க்கிறேன் ...
நீயும் அப்பாடா இவனையும் நான் மாயை நிறைந்த இந்த வாழ்க்கையில் இருந்து நீக்க வேண்டாம் என்று நினைத்து உடனே நான் கேட்டதை கொடுத்து விடுகிறாய் ....
நீ செய்யும் செப்படி வித்தையில் நானும் பலியாகி விடுகிறேன் ....
அதனால் சரியான அறிவை கொடு ... அந்த அறிவினால் எது உயர்ந்த பொருள் என்று நானே கண்டு பிடித்துக்கொள்கிறேன் ...
இப்படித்தான் ரமணர் அருணாசலத்திடம் வேண்டுகிறார் ...

ravi said…
நீ எனக்கு சரியான அறிவை கொடுத்தால் உன்னிடம் இருக்கும் மிக உயர்ந்த பொருளான ஞானத்தை பெற்று விடுவேன் .... அதனால் அந்த ஞான வைராக்கியத்தை எனக்கு கொடு அதன் மூலம் ஞானம் பெரும் பாக்கியத்தை கொடு அருணாசலா என்கிறார்.
முள்ளை முள்ளால் எடுக்கிறார் ரமணர் ....
ravi said…
41 –
ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே
நேர் நின்றனை என் அருணாசலா (அ)

ஞிமிறு என்றால் வண்டு. தன்னை அன்று பூத்த மலராக நினைத்துக்கொள்கிறார் ரமணர்.

மலர்களைத் தேடி அருணாசலம் என்ற வண்டு தேன் எடுக்க பறந்து வருகிறதாம் அங்கே ... ரமணர் என்ற அந்த அழகான மலரிடம் பறந்து வந்த வண்டு ஒன்றும் செய்யாமல் அப்படியே நின்று விடுகிறதாம் ...
ரமணர் என்ற அந்த மலர் அருணாசலம் என்ற வண்டுடன் பேசுகிறதாம் இப்படி.
அருணாசலா பறந்து வந்தாய், மலர்ந்து நின்றேன், உள்ளம் எனும் எனும் இதயகமலத்துக்குள் நுழைந்து விடுவாய் என்றே அசந்து நின்றேன் ...
நீயோ நான் இன்னும் மலரவே இல்லை என்று நினைத்தோ உள்ளே வராமல் வெளியில் எனோ நின்று விட்டாய்??

ravi said…
நான் மலர்ந்தவன் ...
உனை நினைப்பவன் ...
உள்ளம் எங்கும் உன்னை வைத்தவன் ...
உதடுகளில் நீ உஞ்சலாடுகிறாய் ...
உடலில் சிவமாகிறாய் ....
கண்களிலே கங்கையாகிறாய், காதுகளில் வேதமாகிறாய் ...
ஏ அருணாசலா என் உள்ளே வந்து பார் ...
உனக்கு தேவையான அளவு அன்பு எனும் தேனை உனக்காக சேமித்து வைத்துள்ளேன் ...
மலரவில்லை என்று தப்புக்கணக்கு போட்டு விட்டு மீண்டும் எங்கோ பறந்து போய் விடாதே ...

ravi said…
என் இதயம் வெடித்து விடும் அருணாசலா என்கிறார் ...
இங்கே மலரவில்லை என்பதற்கு முக்தி அடையும் அளவிற்கு ரமணர் முதிர்ச்சி அடையவில்லை, இன்னும் சொல்லப்போனால் ரமணர் ஐம்புலக்கள்வர்களை சரியாக அடக்கவில்லை, மனதை ஊர் சுத்தாமல் ஒரு நிலைப்படுத்த வில்லை ...
அதனால் உள்ளே வராமல் இவன் இன்னும் பக்குவப்படவில்லை என்று நினைத்து வெளியே நின்று விட்டாயோ அருணாசலா என்று கேட்க்கிறார் ரமணர் ....
ravi said…
31 பாடல்களை ஒரு முறை திரும்பிப்பார்த்தோம் –


ஏன் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டும் என்றால் இந்த அக்ஷரமண மாலை மிகவும் பக்தி வாய்ந்தது -

இதைப்படிப்பது என்பது 4 வேதங்களையும், 100 விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகங்களையும் 100 லலிதா ஸஹஸ்ரநாம ஸ்லோகங்களையும் ஒரே சமயத்தில் சொன்னால் என்ன பலன் கிடைக்குமோ அப்படி நமக்குத் தரக்கூடிய பொக்கிஷம் ---
உண்மையான பக்தி எப்படி இருக்க வேண்டும், உண்மையான ஸரணாகதி என்றால் என்ன, என்ன இறைவனிடம் நாம் கேட்கவேண்டும் --

எப்படி கெஞ்சினால் அல்லது திட்டினால் அவன் நம்மிடம் ஓடி வருவான் என்று பகவத் கீதையை காட்டிலும் அழகாக ரமணர் எளியத் தமிழில் நம் எல்லோருக்கும் சொல்கிறார்-
உங்கள் எல்லோர் மனதிலும் ஆழமாக எல்லா பாடல்களும் பதிய வேண்டும் என்ற ஒரே ஆசையினால் அடிக்கடி reverse gear போடுகிறேன்...

ravi said…
32 to 41
32 சூது செய்து என்னைச் சோதியாது இனி உன் ஜோதி உருக்காட்டு அருணாசலா!
இந்த பாடலில் ரமணர் என்ன சொல்கிறார் என்றால், அருணாசலா என் பக்கம் நீ கருணை காட்டாமல் ஏதோ சூது செய்துகொண்டே இருக்கிறாய்.

என்னை மேலும் மேலும் சோதிக்காதே. உன் ஜோதி உருவை காட்டு எனக்கு

ravi said…
33.செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு உருப்படு வித்தை காட்டு அருணாசலா!
இந்த பாடலில் என்ன சொல்கிறார்? அருணாசலா என்னை சோதிப்பதை உன் 64 வது திருவிளையாடல் என்று சொல்லி யாரும் உன்னை புகழ மாட்டார்கள் ...இந்த செப்படி வித்தை செய்வதை விட்டு நான் உருப்படும் வித்தையை, அறிவை காட்டு எனக்கு அருணாசலா ...என்கிறார்.


ravi said…
32வது பாட்டின் சிறு மாற்றம் இந்த 33 வது பாடல் என்று வைத்துக்கொள்ளலாம் ....

34.சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர் ஆற்று அழிவேன் அருணாசலா!
இந்த பாடலில் அருணாசலரை கோபித்துக்கொண்டவர் மீண்டும் சுய நினைவுக்கு வந்து இறைவனிடம் கெஞ்சுகிறார் ...நீ என்னை உன்னுடன் சேர்க்காவிடில் என் உடல் மெலிந்து உருகி பெருக்கெடுத்து வரும் கண்ணீரில் நானே அழிந்து போவேன் அருணாசலா என்கிறார்.

35.
சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
உய்வகை ஏது உரை அருணாசலா (அ)
நீயே என்னை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி விட்டால் அது நான் செய்த கர்ம வினை ...நான் எப்படி உயர்வை அடைவேன் அருணாசலா? ...மன்னிக்க வேண்டியவன் நான் ...மன்னிக்கப்பிறந்தவன் நீ ...மன்னிக்க வேண்டிய நீ மன்னிப்பை மறுத்து விட்டால் யார் உன்னை மன்னிப்பர் அருணாசலா ...?

ravi said…
36.
சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாசலா (அ)
நான் மிக அதிகமாக பேசுகிறேன் என்பதினால்.
என்னைப்போல் மௌனமாக இரு என்று சொல்கிறாயா அருணாசலா? ...உன்னால் முடியும். என்னால் முடியுமா அருணாசலா?

37
சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
சொல் வேறு என்கதி அருணாசலா (அ)
அருணாசலா, ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்து ஆத்ம சுகத்தை அனுபவிக்க வேண்டும். வேறு எனக்கு கதியில்லை...சும்மா இரு என்பதற்கு அர்த்தம் மனத்தை ஒரு இடத்தில் பொருத்தி சிவ நாமத்தை சொல்வது.

ravi said…
38.
சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாசலா (அ)
அருணாசலா, உன் பராக்கிரமங்களைக் காட்டி என் மனத்தில் இருந்த எல்லா அழுக்குகளையும் இருளையும் நீக்கினாய் ...

என் மனம் இன்று அடித்த சுண்ணாம்பை போல் வெள்ளை வெளேர் என்று இருக்கிறது ...
அங்கே பளிங்கம், முத்து, பவழம் கொட்டிக்கிடக்கிறது ....

அங்கே உனக்கு என்றும் நான் ஆத்ம பூஜை செய்கிறேன் ...
அந்த ஆத்ம சுகம் எனக்கு தருவதினால் இவன் புலம்புவதிலோ, கத்துவதிலோ அழுவதிலோ ஒரு அர்த்தமும் இல்லை என்றே சும்மா இருக்கிறாயோ அருணாசலா

ravi said…
39 –
ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாசலா (அ)
தெரு நாயை விட நான் மட்டமானவனாக நான் உனக்குத் நான் தெரிகிறேனா?
என்னிடம் மன உறுதி இருக்கிறது அதன் மூலம் உன்னுடன் நான் சேர்ந்து விடுவேன் அருணாசலா ...

ravi said…
40 –
ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானம் தெரித்தருள் அருணாசலா (அ)

உன்னை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அறிவு வேண்டும்.
அந்த ஞானத்தை அடைய அறிவை கொடு என்கிறார் ...
ஏன் இங்கே நேராக ஞானத்தைக்கொடு என்று கேட்கவில்லை?
39வது பாடலில் என்னிடம் மன உறுதி இருக்கிறது. அதனால் நான் உன்னை அடைந்து விடுவேன் என்று சவால் விட்டார் அல்லவா?
அதனால் ஞானத்தை நேராக கேட்க ரமணரின் வரட்டு கௌரவம் இடம் கொடுக்க வில்லை...

ravi said…
41 –
ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே
நேர் நின்றனை என் அருணாசலா (அ)

வண்டாக வந்தாய் ...மலர்ந்தேன் என்றே நினைத்தேன் ...
பக்குவம் வரவில்லை என்றே மலரான எனக்குள் வரவில்லையோ அருணாசலா என்று புலம்புகிறார் ரமணர்.
சுருக்கமாக என்ன புரிகிறது ...?

அருணாசலா சூது வேண்டாம், செப்படி வித்தை என்னிடம் வேண்டாம்.
நீ இன்னும் வராதது என் போன ஜென்ம பாவங்கள்.
ஆத்ம சுகம் எனக்கு நீ தந்ததினால் என் புலம்பலுக்கு அர்த்தம் இல்லை என்று நினைத்து சும்மா இருக்கிறாய் ...

தெரு நாயை விட நான் மட்டமா?
என்னிடம் மன உறுதி இருக்கிறது. நானே உன்னை வந்து அடைந்து விடுவேன் .... நான் மலர வில்லை என்றே நினைத்து வண்டாக வந்த நீ உள்ளே வராமல் வெளியே நின்று விட்டாய் ...

புலம்பல், கோபம், கெஞ்சல், சரணாகதி, உயர்ந்த பக்தி, தன்னம்பிக்கை...மன உறுதி இவை அத்தனையும் தெளித்து சிதருகிறது இந்த பாடல்களில்.

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53