பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 18
(243) 👍👍👍💥💥💥

ரவி சுந்தரகாண்டத்தில் சில பகுதிகளை பார்ப்போம் --
முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டியது எவ்வளவு மேலே பறந்தாலும் கால்கள் பூமியில் தான் இருக்கவேண்டும் , அடக்கம் , பணிவு , சமயோசிதம் , ஞானம் , வீரம் , இறைபக்தி இவைகள் எல்லாமே அனுமனிடம் ஒன்று சேர்ந்து இருந்தன - எதையுமே தான் சாதித்ததாக அவர் எங்கேயும் யாரிடத்திலும் சொல்லவில்லை --
இவர் இல்லை என்றால் ராமாயணம் இல்லை என்றாலும் இவர் யார் கண்களிலும் புலப்படாமல் எங்கோ அமர்ந்து இன்னும் ராம நாமத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்
அனுமனின் குணங்களை சொல்லி மாளாது இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன்
ஒன்றே சொல்பவர் ஒன்றே செய்பவர் அதையும் நன்றே செய்பவர் - அவர் உள்ளத்தில் அதனால் என்றும் அமைதி இருந்தது அமைதியைத் தேடி அவர் அலையவில்லை
சீதையை பார்த்தவுடன் தனக்கே இப்படி ஆறுதல் சொல்லிக்கொண்டார்
இன்பத்தில் துன்பமும் துன்பத்தில் இன்பமும் இறைவனால் வகுக்கப்பட்ட நீதி இதை யாராலும் மாற்றவே முடியாது --
இறை பக்தியினால் இந்த சூழ்நிலையை கொஞ்சம் மாற்றலாம் என்று உணர்ந்துகொண்டார்
அனுமனின் ஓவ்வொரு செயல்களும் அவன் சொல்லும் ஓவ்வொரு வார்த்தையும் 1000 பொற்காசுகளுக்கு சமம்
அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாமே இன்பமாக முடிந்தது
அவன் பேசுவது உண்மை , உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை அவன் செய்ததெல்லாம் நன்மைகள் எதையும் எதிர்பாராமல் அதனால் இந்த உலகமே இன்னும் அவனிடம் மயங்கிக்கொண்டிருக்கிறது .
அவனுடைய நிலை உயரும் போதெல்லாம் அவனை பணிவு வந்து தொற்றிக்கொண்டது
எல்லா உயிர்களும் வணங்கத்தக்க மஹா ஞானியாகா மாறினான் - அவன் உண்மையாக மட்டும் இல்லை எல்லோரிடமும் அன்பாக இருந்தான் - அவனுடைய பணிவு அவன் பெற்ற பெரும் பண்பு .
அவனிடம் இல்லை என்று ஒன்றுமே இல்லை - அவனிடம் இல்லாதது ஆசை , கோபம் களவு செய்யும் குணம் அவன் பேசாத தெரிந்த ஞானி - அவன் சொல்லின் செல்வன் .
அவன் அன்பு , நன்றி கருணை கொண்டவன் அவன் மனித வடிவில் வாழும் தெய்வம்
அவனுக்கு கள்ள மனம் கிடையாது அதனால் அவனை ஒரு வானரம் என்று சொல்வதே தவறு - ஒரு குழந்தையின் வெள்ளை மனம் அவனுக்கு இருப்பதால் அவனை தெய்வம் என்று எல்லோரும் அழைக்கிறார்கள்
அனுமன் கடலைக் கடத்தல்
தெற்கு திசையில் கடல் ஓரத்தில் எல்லா வானரங்களும் களைப்பில் அமர்ந்திருந்தனர்
அங்கதன் அந்த சேனைக்குத் தலைவன் அவனுக்கு உதவி செய்ய அனுமானும் ஜாம்பவானும் , நீலனும் நளனும் இருந்தனர் ..
எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இருந்த நம்பிக்கை அந்த உப்புக்கடலில் கரைந்து கொண்டிருந்தது -
பெரிய கடல் இதை எப்படித்தாண்டுவது ? யாரால் முடியும் -
தாண்டினாலும் எப்படித் திரும்புவது ? ராவணனுக்கு இலங்கை மட்டும் சொந்தம் இல்லையே!
அவன் இலங்கையில் தான் சீதையை சிறை செய்திருக்கிறான் என்பது எவ்வளவு தூரம் உண்மை ?
அங்கே போனாலும் சீதையை கண்டு பிடிக்க முடியுமா ?
போய் சேர்ந்த நேரத்தில் சிறை திறந்திருக்குமா ?
சிறை திறந்திருந்தாலும் காவலாளிகள் கடு அதிகமாக இருக்குமே -
அவர்களுடன் சண்டை போட வேண்டியிருக்குமே ?
நம்மை சிறை செய்துவிட்டால் எப்படி நாம் திரும்பி வந்து விஷயத்தை சொல்வது ?
திரும்பி வர எவ்வளவு நாட்கள் ஆகும் -- கடலைத்தாண்டும் போது என்னென்ன துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும் ?
பறக்கும் போது ஒய்வு தேவைப்படுமே - பசியும் உண்டாகுமே ? அதற்கு எங்கே போவது எங்கு அமர்வது ?
கேள்விகள் மேல் கேள்விகள் - அலைகள் போல வந்து வந்து மோதின -
எந்த கேள்விக்கும் பதில் மட்டுமே கிடைக்கவில்லை --
எல்லோர் முகத்திலும் மரண பயம் - அங்கதன் தலைவனாக இருந்தாலும் அதிகமான கேள்விகள் அவனிடம் இருந்துதான் வந்தன
ஜாம்பவான் எழுந்தார் - அவர் எழுந்தது ஒரு மேரு மலை எழுந்ததைப்போல் இருந்தது ?
அன்பர்களே நாம் கடலின் அருகில் வந்துவிட்டோம்
இனி மேலே போவதற்கு நிலம் இல்லை - நம் எதிரில் இரண்டு வாய்ப்புக்கள் மட்டுமே உள்ளன
ஒன்று இதோ இந்த கடலில் விழுந்து ஆத்ம தியாக செய்துகொள்வது
இன்னொன்று வரும் அலைகளை எதிர்த்து போராடுவது --
வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம் அதில் போராடி வெற்றி காண்பவர்கள் மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள் சரித்திரத்தில் கோழைகளுக்கும் பயந்தாகுளிகளுக்கும் இடம் இல்லை -
நாம் சரித்திரம் படைக்க பிறந்துள்ளோம் ராமன் புகழ் இருக்கும் வரை நாமும் இருப்போம் - கேள்விகள் பிறப்பது இனி முடியவேண்டும் --
நம்மில் ஒருவர் இந்த கடலைத் தாண்டியே ஆகவேண்டும் அவர் பலசாலி மட்டும் அல்ல தன்னம்பிக்கை நிறைந்தவராக சாமர்த்திய சாலியாக சமயோசித புத்தி உடையவராக நல்ல தூதுவனின் பண்பு நிறைந்தவராக , பொறுமை சாலியாக இருக்கவேண்டும்
வெட்டிக்கொண்டு வா என்று சொன்னால் கட்டிக்கொண்டு வரவேண்டும் - இனி நீங்கள் சொல்லுங்கள் யாரை அனுப்பலாம் --
சாவி கொடுத்த பொம்மையைப்போல எல்லோர் கவனமும் எதையும் கண்டு கொள்ளாமல் ராம நாமத்தை மட்டுமே கண்களை மூடிக்கொண்டு சொல்லிக்கொண்டிருந்த சங்கர சுவனன் பக்கம் சென்றது ..
அம்மா சுந்தரகாண்டத்தை அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள் - படிக்கும் போதே காட்சிகளை நேரில் பார்ப்பதைப்போன்ற பிரமை .
ரவி ஆஞ்சநேயரின் சாதனைகள் மிகப்பெரியவை -- அவர் விசுவரூபம் எடுத்ததைப்போல் பெரியதாய் ஆகிக்கொண்டே இருக்கும் -- அவரிடம் இருக்கும் பண்புகளில் நூறில் ஒருமடங்கு உங்கள் எல்லோருக்கும் இருந்தால் பொது இந்த உலகத்தை நீங்கள் அடிமையாக்கிக்கொண்டு விடலாம்
உண்மை தாயே அதற்க்கு உங்கள் ஆசிகள் அதிகம் தேவை -- ரவி நான் இல்லை என்றா சொல்லப்போகிறேன் ...
சிரித்துக்கொண்டே சிங்காரமாய் ஒய்யராமாய் , ஓங்கார வடிவத்திலே ஓம் சக்தி மறைந்துபோனாள் - மீண்டும் சிலையாய் அங்கு சமைத்தேன் .
மநோரூபேக்ஷு கோதண்டா - அவள் கையில் இருக்கும் கரும்பு வில் என்ன உணர்த்துகிறது. அவள் இனிய மனத்தை. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா? அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு அதுவே தீயோர்க்கு இரும்பு !
பஞ்சதந்மாத்ரஸாயகா - தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா? தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது, காண்பது. இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். இவை ஐந்தும் ஐந்து வில்லாக ஏந்தியவள் . அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள்.
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா - உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா? செக்கச்செவேலென கிழக்கே, பெரிய உருண்டையாக, இன்னொரு உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது. அதில் இந்த புவனமே அடக்கம். எல்லா மண்டலங்களும் என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.
சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா - அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா. சொல்கிறார் அகஸ்தியருக்கும் நமக்கும். "செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, (இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)
===================
Comments
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஸ்கலந்த்ய: ஸந்த்ருஷ்டா: பதிம் அபி தனானாம் நிதிம் அபி
த்யஜந்த்ய: ஸேயம் தே பவதி ந ததா பாதி ஸுகுணா
ஸீதா இதி ஏவம் வாசா கட பவ புவா ஸ்மிதம் இதம்
स्त्रियः प्रायो लोके चपलमतयः साधुपथतः
स्खलन्त्यः सन्दृष्टाः पतिं अपि धनानां निधिं अपि।
त्यजन्त्यः सेयं ते भवति न तथा भाति सुगुणा
सतीति एवं वाचा घटभवभुवा ते स्मितमिदम्॥
ஓவ்வொரு ரிஷிகளாக தரிசித்துக்கொண்டே ராமன் , சீதை லக்ஷ்மணன் செல்கிறார்கள் -
இன்று அவர்கள் சந்திக்கப்போவது மாபெரும் சிவன் அருள் பெற்ற தமிழ் முனிவர் அகத்தியர்👍
அவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது அகத்தியர் சீதையின் உயர்ந்த குணங்களை ராமரிடம் சொல்கிறார்
அதைக்கேட்டு ராமன் பூத்த புன்னகை🙂🙂🙂
பொதுவாக பெண்கள் சபலபுத்திக் கொண்டவர்கள் என்ற கருத்து உள்ளது
அவர்கள் நல்ல வழியில் இருந்து விலகி போகும் எண்ணம் கொண்டவர்கள் என்றும் ஒரு பொதுவான அபிப்பிராயம் இருந்து வருகிறது-
பெண்கள் அப்படி இல்லை ஆனாலும் அப்படி பேசுபவர்கள் உண்டு..😰😰
தன் கணவனிடம் எல்லா செல்வங்களும் இருந்தும் ஒரு பிரச்சனை என்று வந்தால் விட்டு விட்டு செல்லும் பெண்களும் உண்டு -
இப்படியும் சொல்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்
ஆனால் ராமா இதோ அமர்ந்திருக்கிறாள் சீதா
அவளிடம் இப்படிப்பட்ட எந்த குறைகளுமே இல்லை
சீதையின் அவதாரத்திற்கு பிறகு இனி இந்த உலகில் யாருமே பெண்களை மட்டமாக பேசமாட்டார்கள்🙏🙏🙏
நல்ல பிறப்பு , கற்பு நெறி , அளவுக்கு மீறிய பொறுமை இந்த மூன்று சேர்ந்த மொத்த வடிவம் --
ராமா சீதையின் அவதாரத்தினால் பெண் குலமே மிகவும் உயர்வடையப்போகிறது -
இவள் பிறப்பினால் பெண்
குலம் மிகவும் ஏற்றம் காணப்போகிறது ...👍👍👍
குடத்தில் இருந்து தோன்றியவர் அகத்தியர் -
அவருடைய சத்திய வார்த்தைகளை கேட்டு ராமன் மிகவும் மகிழ்ந்து புன்னகைத்தான் -
ராமா அகத்தியர் பிறந்தது தமிழ் நாட்டில் -
அதனால் நீயும் தமிழ்நாட்டில் இருக்கும் வடுவூரில் வந்து இருந்துகொண்டு சீதையுடன் சேர்ந்துகொண்டு
அதே புன்னகையை எங்களுக்கும் தருகிறாயே ராமா -
நாங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறோம்🥇🥇🥇
பதிவு 60 🏆🏆🏆🥇🥇🥇
*Started on 26th sep 2020*💐💐💐💐
👌👌👌
*3வது திருநாமம்*💐💐💐
அந்த ராஜ கம்பீரம் , கண்களில் எப்பொழுதும் வடிந்து கொண்டிருக்கும் காரூண்யம்
அலை பாயும் விழிகள் அதிலே துள்ளி ஓடும் மீன்கள் ...
கண்களிலே பசுமையை மேய்ந்து கொண்டிருக்கும் மான்கள் ...
தோளில் கொஞ்சும் கிளிகள் ,
எதிரே நடமாடும் மயில்கள் சுற்றி சுகம் தரும் கடம்ப வனம் ..
இடுப்பில் காஞ்சீ எனும் ஒட்டியாணம் ...
கால்களில் மாணிக்க கொலுசு ...
பாதங்களில் அபயம் கரங்களில் தித்திக்கும் கரும்பு ...
உதடுகளில் நான் இருக்கிறேன் என சொல்லும் புன்னகை ... காதுகளில் ஸ்ரீ சக்கரம் கொண்ட தாடகங்கள் ...
அப்பப்பா எப்படி வர்ணிப்பது வார்த்தைகளில் பஞ்சம் .. நெஞ்சம் நிறைந்தவளுக்கு என்றும் தஞ்சம் 🥇🥇🥇
She is compared to a pure pearl
The nāma says that there is no difference between Her and hrīṁ and if one knows the significance of hrīṁ, it is equivalent to realizing Her.
The same meaning is conveyed by Lalitā Sahasranāma 301, which is described in Triśatī nāma 81.
Hrīṁ represents both Śiva and Śakti and obviously meditation on hrīṁ leads to realization of bothŚiva and Śakti.🙏🙏🙏
தர்மத்தின் காவலனே தாலேலோ ... தத்துவத்தின் ஆணி வேரே தாலேலோ
தவமாய் தவம் இருந்து வந்தவனே தாலேலோ
தழைக்கும் உயர்களுக்கெல்லாம் தாயுமானவனே தாலேலோ 🙏🙏🙏
சாஸ்த்திரங்கள் உன் பதம் பணிந்ததோ சாயி ..
ஊரு கூடி தேர் இழுத்தோம் உனக்கு உவமை தேட முடியாமல் ..
தாய்மைக்கு வேறு பொருள் உண்டோ சாயி ??
உன் கருணைக்கு சமம் என்று ஒன்று உண்டோ ? 👌👌👌
சித்திரங்கள் சொல்லாத உவமை நீ ...
வானம் காணாத விண்மீன் நீ ,
சந்திரன் தராத அமுதம் நீ
கதிரவன் கேட்டு வாங்கும் ஒளியே ... கற்பகமும் வெட்கப்படும் களிறே ... கண் திறந்து காட்டாயோ அருணாசலமதை 🔥
நடந்தால் மதுரம் ... நினைத்தால் மதுரம் உன் நினைவே மதுரம் ... காஞ்சி வாழ் மதுரம் நீ அன்றோ
உன் சிந்தனை மதுரம் உன்னை சிந்திப்பது மதுரம் உன் பேர் மதுரம் உன் போதனை மதுரம் ... காலடி மீண்டும் வந்த கற்பகமே 👍👍👍
நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள்,
த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள்,
ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே.
கோ³ப்த்ரீ கோ³விந்த³ரூபிணீ – காப்பவள், கோவிந்தன் வடிவானவள்;
ஸம்ஹாரிணீ ருத்ரரூபா – அழிப்பவள், ருத்ரரூபமானவள்;
திரோதா⁴னகரீ ஈஸ்வரீ – மறைப்பவள், ஈஸ்வரி;
ஸதாசி’வா,
அனுக்³ரஹதா – அருள்பவள்,
ஸதாசிவ வடிவானவள் என்று ஐந்தொழில் புரியும் தேவதா ரூபமாகவும் தேவியை லலிதா சகஸ்ரநாமம் போற்றுகிறது.
பஞ்ச-ப்ரேதாஸனாஸீனா – ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் அமர்பவள் என்பது ஒரு நாமம்.
ஆப்³ரஹ்ம-கீட-ஜனனீ என்ற நாமத்திற்கு அடுத்ததாக,
வர்ணாச்’ரம விதாயினீ (வர்ணாசிரமங்களை வகுத்தவள்) என்ற திருநாமம் வருகிறது.
ஆபா³லகோ³ப விதிதா – சிறுகுழந்தைகளும், இடையர்களும் உட்பட எல்லோராலும் அறியப் படுபவள் என்ற திருநாமத்தின் உட்பொருளும் இதனுடன் இணைத்துக் காணத் தக்கது.
அந்த ஸ்தோத்ரத்தை தினம் இரண்டு, இரண்டு ஸ்லோகங்களா படிச்சு அதோட அர்த்தத்தை மனனம் பண்ணலாம்னு ஒரு ஆசை. இன்னிக்கு ஸோம வாரமா இருக்கு. பரமேஸ்வரனுக்கு உகந்த நாள்
லஹரினா, அலைகள், வெள்ளம்னு அர்த்தம். காவேரியில ஜலம் வருமான்னு நாம காத்துண்டு இருக்கோம்.
அப்படி ஜலம் பொங்கி வந்துதுன்னா அதுல ஸ்நானம் பண்ணும் போது எவ்ளோ ஆனந்தமா இருக்கும்! நாம கடற்கரையில போய் நின்னுண்டு அலைகளை பார்த்துண்டே இருந்தாலே இந்த சந்தோஷம்னா
சிவானந்தலஹரின்னு சொல்லப்படும் அந்த பேரானாந்தம் அலையைப் போல அடிச்சுண்டு இருந்தா, அது எவ்ளோ சந்தோஷமா இருக்கும்!
அவர் தான் பண்ணியிருப்பார்.
ஏன்னா இந்த ஸ்தோத்ரத்துல பக்தியே ஞானம் ன்னு சொல்றார்.
பக்தியினால ஞானம் இல்லை. பக்தியே ஞானம்னு establish பண்றார்
இந்த நூறு ஸ்லோகங்கள்ல. சிவானந்தம்ங்கிறதே அத்வைதம் தான்னு சொல்லிடறார்.
அதெல்லாம் பார்ப்போம். எல்லா அழகும் இருக்கு. உவமைகள் போன்ற அலங்காரங்கள், பலவித ரஸங்கள். சொல்றதுக்கே, வார்த்தைகளே ரொம்ப அழகா இருக்கும்
ஸப்ரேமப்⁴ரமராபி⁴ராமமஸக்ருʼத் ஸத்³வாஸனாசோபி⁴தம் ।
பொருள் ரொம்ப கம்பீரமா இருக்கும்.
கம்பீரத்துக்கு மேல ரொம்ப மனசை உயர்த்தக் கூடிய ஒரு கவிதை இது.
நமக்கு உத்தம பக்தியைப் பற்றி சொல்லித் தரார். நீ பகவானுக்கு என்ன கொடுக்கப் போறேன்னு கேட்டுண்டு மனமாகிய புஷ்பத்தைதான் கொடுக்க முடியும்.
அவன் மனசைத் தான் பார்க்கறானே தவிர உன்னுடைய செல்வதையோ, படிப்பையோ அவன் பார்க்கறது இல்லை எங்கிறதல்லாம் ரொம்ப அழகா சொல்லித் தருவார்.
ஒரு தைலதாரை போல பகவான் கிட்ட மனசு வந்துண்டே இருக்கணும். அவன் பாதத்துல நிக்கணும். அது பேரு தான் பக்தின்னு அந்த definition சொல்வார்.
இவர் குடுமி பஞ்சகச்சத்தோட நம்ம சம்ப்ரதாயத்துல இருந்துண்டு ராமகிருஷ்ண மடத்துல சென்னையில் தான், அவாளோட மடத்துக்கு best publishing house இருக்கு.
தபஸ்யானந்தான்னு ஒரு தலைவர் இருந்தார். அவரும் இந்த சுப்பிரமணியன் அண்ணாவும், இங்க ராமகிருஷ்ணா மிஷன் குழந்தைகளுக்கு hostel இருந்தது.
அதுல இந்த சுப்ரமணியன்ங்கிறவர் warden ஆ இருந்தார். நல்ல தீர்க்காயுசா 90 வயசுக்கு மேல இருந்தார். அவரும் இந்த தபஸ்யானந்தாவும் தான் இந்த புஸ்தங்கள் எல்லாம், நிறைய புஸ்தகங்கள் வெளியிட்டிருக்கா.
அவாளோட பூஜா விதானம் தான் எல்லார் ஆத்துலயும் பூஜைக்கு standard ஆ இருக்கு. அப்படி பெரிய service.
फलाभ्यां भक्तेषु प्रकटितफलाभ्यां भवतु मे ।
शिवाभ्यामस्तोकत्रिभुवनशिवाभ्यां हृदि पुन-
र्भवाभ्यामानन्दस्फुरदनुभवाभ्यां नतिरियम् ॥ १॥
கலாப்⁴யாம் சூடா³லங்க்ருʼதசசிகலாப்⁴யாம் நிஜதப:-
ப²லாப்⁴யாம் ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம் ப⁴வது மே ।
சிவாப்⁴யாமஸ்தோகத்ரிபு⁴வனசிவாப்⁴யாம் ஹ்ருʼதி³ புன-
ர்ப⁴வாப்⁴யாமானந்த³ஸ்பு²ரத³னுப⁴வாப்⁴யாம் நதிரியம் ॥ 1॥
அப்படி அம்மாவையும், அப்பாவையும் பிரிச்சு அவரால பார்க்க முடியல. சௌந்தர்யலஹரி ஆரம்பிக்கும்போதும் “சிவசக்த்யா யுக்தஹ” ன்னு ன்னு இரண்டு பேரையும் சேர்த்து ஆரம்பிச்சார்.
அந்த மாதிரி இந்த சிவானந்தலஹரி முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேச்வராளுக்கு நமஸ்காரம் ன்னு சொல்றார்
வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ ||
ன்னு காளிதாசன் சொன்ன மாதிரி, ஒரு வார்த்தையில இருந்து அந்த அர்த்தத்தை பிரிக்க முடியுமா?
पश्यामि निस्तुलमहो पचेलिमं कमपि परशिवोल्लासम् ॥
ப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்டயா ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: ।
பச்யாமி நிஸ்துலமஹோ பசேலிமம் கமபி பரசிவோல்லாஸம் ॥
‘பசேலிமம்’ ரொம்ப பழுத்த ஞானம் அது. அதை எனக்கு அம்பாள் அனுக்ரஹம் பண்ணிட்டான்னு சொல்றார்.
அப்படி அந்த அம்பாளுடைய அனுக்ரஹம் இருந்தா தான் பரேஸ்வரனுடைய ஞானம் கிடைக்கும். அதைத் தான் மனசுல வெச்சுண்டு இங்க முதல் ஸ்லோகத்துலயே பார்வதி பரமேச்வராளை சேர்ந்து நமஸ்காரம் பண்றார்.
‘ககார ரூபா கல்யாணி’ ன்னு லலிதா த்ரிசதியில வர்றது. இந்த தேவியோட பஞ்சதசாக்ஷரியோட முதல் எழுத்து “க” ன்னு அண்ணா இங்க mention பண்ணியிருக்கார். அப்படி மங்களகரமான அந்த க என்கிற எழுத்தை கொண்டு இந்த ஸ்லோகத்தை ஆரம்பிக்கறார்
பரமேவரனும் சந்திரனோட சாபத்தை போக்கறதுக்காக இந்த பிறையை எடுத்து தலையில வெச்சுண்டார். காமாட்சிக்கும் தலையில சந்திர பிறை. அப்படி இரண்டு பேருக்கும் ஒரே ரூபம்.
சமஸ்க்ருதத்துல தான் இந்த பெருமை. பரமேஸ்வரன் பார்வதி இரண்டு பேரயும் சேர்த்து சொல்ற ஒரே வார்த்தை.
மற்ற பாஷைகளில் அம்மாஅப்பான்னு சேர்த்து தான் சொல்லணும். சமஸ்க்ருதத்துல பிதரௌ ன்னா அம்மாஅப்பா ன்னு சேர்ந்து ஒரே வார்த்தை வர்றது. சிவாப்யாம் ங்கிற வார்த்தைக்கே பார்வதி பரமேஸ்வரா ன்னு அர்த்தம். அதை எடுத்துண்டு இந்த ஸ்லோகம் பண்ணியிருக்கார். dualனு சொல்வா
‘
பார்வதி தபஸ் பண்ணா நமக்கு தெரியும். குமார ஸம்பவத்துல கூட சொல்றார். புராணங்கள் ல கூட இருக்கு. பார்வதி இலையை கூட சாப்பிடாம தபஸ் பண்ணா. அபர்ணான்னு பேரு. பரமேஸ்வரன் விளையாட்டு பண்ணிண்டு கல்யாணம் பண்ணின்டார் ன்னு படிச்சிருக்கோம்.
பரமேஸ்வரன் என்ன தபஸ் பண்ணார் பார்வதியை அடையறதுக்குன்னா, அதை மூக கவிதான் சொல்றார்
மூகாநாமபி குர்வதீ ஸுரது⁴னீனீகாசவாக்³வைப⁴வம் ।
ஸ்ரீகாஞ்சீனக³ரீவிஹாரரஸிகா சோகாபஹந்த்ரீ ஸதாம்
ஏகா புண்யபரம்பரா பசுபதேராகாரிணீ ராஜதே ॥ 11॥
அப்படி ‘நிஜதப: ப²லாப்⁴யாம்’ ஒருத்தர் பண்ண தபஸ்க்கு பலனா இன்னொருத்தர் கிடைச்சிருக்கா. ‘ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம்’ இரண்டு பெரும் சேர்ந்து பக்தர்களுக்கு இஷ்டப்பட்ட பலன்களை எல்லாம் கொடுப்பா.
‘
பரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் |
நாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || ன்னு உமா மகேஸ்வர ஸ்தோத்ரத்துல சொன்னார் இல்லையா. அப்படி இவா இரண்டு பேரையும் சேர்த்து நமஸ்காரம் பண்ணி ஆரம்பிக்கறார்
गलन्ती शंभो त्वच्चरितसरितः किल्बिषरजो
दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् ।
दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं
वसन्ती मच्चेतोहृदभुवि शिवानन्दलहरी ॥ २॥
க³லந்தீ சம்போ⁴ த்வச்சரிதஸரித: கில்பி³ஷரஜோ
த³லந்தீ தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ விஜயதாம் ।
தி³சந்தீ ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம்
வஸந்தீ மச்சேதோஹ்ருʼத³பு⁴வி சிவானந்த³லஹரீ ॥
இந்த ஸ்லோகத்தை கொண்டு தான் இந்த ஸ்தோத்ரத்துக்கு சிவானந்தலஹரின்னு பேரு வந்திருக்கு.
இந்த வெள்ளம் என்னுடைய மனமாகிய மடுவில் வந்து தங்கட்டும் ‘மச்சேதோஹ்ருʼத³பு⁴வி வஸந்தி’ என் மனசு என்கிற மடுவில் இந்த சிவானந்த வெள்ளம் தங்கட்டும்னு வேண்டிக்கறார்.
‘க³லந்தீ சம்போ⁴’ த்வச்சரிதஸரித: –
இந்த வெள்ளம் எங்கிருந்து கிளம்பறதுன்னா ‘த்வச்சரிதஸரித:’ உன்னுடைய கதைகள் என்கிற நதியிலிருந்து ‘க³லந்தீ’ – பெருகி வர்றது.
பகவனோட கதைகளை கேட்டா சிவானந்தம் அங்கேயிருந்துதான் உதிக்கறது. பகவானோட கதைகளை கேட்கணும். கேட்டா அந்த சிவானந்த ஊற்று எடுக்கும்.
நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ
கவிகுமார் கற்பனையில்
அருமை
அனுமனின் குனங்கள் சொல்லில் விவரிக்க முடியாது..கடல் பொல்.. அளக்க இயலாதது
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் அனுமான்
ஜெய் ஶ்ரீராம்..
🙏🙏🙏🙏🙏
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🌷🙏🏻
Care should be in the heart and not just in words, anger (if at all) should be in words but not in the heart.
Always make sure that your love for people is greater than your love for money.
You can't cross the sea merely by standing and staring at the water.
Action creates confidence and courage. Inaction breeds doubt and fear.
In life you will meet people who build you up and tear you down. In the end you will realise you need them both.
The most important time to hold your temper is when the other person has lost it. Buddha.
The powerful Shiva Thandava Sthotram was written by the Rakshasa king of Lanka, Ravana. Ravana was in awe of himself, he was a highly egoistic king, but he loved his kingdom and the people. He was a great devotee of Lord Shiva, he used to perform great penance to please Lord Shiva. Once he went to Mountain Kailasa to see Lord Shiva. In a sense of elation he tried to lift Mountain Kailasa, but Lord Shiva pressed his toe and in the process Ravana's fingers got crushed. To escape from Lord Shiva's anger he sang the Shiva Thandava Stotram.
*பதிவு 829*🥇🥇🥇
*US 821*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
33வது ஸ்தபகம்
த்ரியஸ்திரிம்ஸ ஸ்தபக
ஜபோ யோகோsரபணம் ச
வம்ஸஸ்த வ்ருத்தம்
இந்த ஸ்தபகத்தில் மந்திரம் , மூர்த்தி இவைகளின் சுருக்கம் அவற்றின் பலன் எல்லாம் மந்திர யோகத்தில் முடிவடைகிறது என்பதைக் காட்டி ஜபம் , யோகம் , அர்ப்பணம் என்ற மூன்றையும் கவி விளக்குகிறார் 🥇🥇🥇
பவேத்ப்ரதீசீ பரமார்த்த ஸம்பதி
உபே திசௌ யஸ்ய மதிர் விகா ஹதே
பதா ச மூர்தனா ச ஸ ஸித்த இஷ்யதே
*பதிவு 249*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
24/
3
குமுத ஸூக்ருத க்ரீடா சூடால குந்தல பந்துரா
ருசிரருசிபி தாபிஞ்ச ஸ்ரீ ப்ரபஞ்ச நசுஞ்சவ
புரவிஜயின கம்பாதீரே ஸ்புரந்தி மனோரதா
I had looked forward to the day when I could have the privilege of a brief glimpse of the Paramacharya of Kanchi at least from a distance. At last that day came in 1963. I was at Madurai on holiday.
This went on for five long frustrating days. But I would not give up. The longer I had to wait, the stronger was my resolve to have an audience with Him. At last on the sixth day, at about 1pm I received word from the Matham that “Periyava” would like to see me.
I rushed to the Matham without a minute’s delay. But no, it was not that easy. I was told to wait. After four hours, Paramacharya agreed to see me.
The moment of ecstasy had arrived. I was face to face with divinity in flesh and blood. I was immediately reminded of what Arthur Koestler, a tough, intellectually arrogant atheist and iconoclast said about the Paramacharya.
Receiving me with the sort of smile one sees only on the bronze icons of deities, the sort of smile about which Koestler said: “If ever Jesus smiled, he must have smiled like this great Hindu saint”, the Paramacharya began comfortingly: “Did you have to wait too long? I was only testing the strength of your faith. Now relax. Before you ask about me, I must ask about you.
To my astonishment, His aides told me that He had a mastery of 17 languages.
Three weeks later. The first instalment of my two part article had just appeared in my paper. I went to the Matham with the issue. The Paramacharya’s aides had already shown him a copy.
Paramacharya made every devotee feel specially favoured. What endeared Him to His devotees was, not His stunning scholarship, which sat lightly on His frail shoulders, but His intensely humane concern and compassion beyond words and His charmingly disarming humility and transparency. He shared His erudition and wisdom with everyone around.
Author: Shri A.S. Raman
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 174*
🌸🌸🌸🌸
வ்யோமகேஶீ, விமானஸ்தா, வஜ்ரிணீ, வாமகேஶ்வரீ |
பஞ்சயஜ்ஞப்ரியா, பஞ்சப்ரேத மஞ்சாதிஶாயினீ ‖ 174 ‖
🌸🌸🌸🌸
व्योमकेशी, विमानस्था, वज्रिणी, वामकेश्वरी |
पञ्चयज्ञप्रिया, पञ्चप्रेत मञ्चाधिशायिनी ‖ 174 ‖
🌸🌸🌸🌸
vyomakeśī, vimānasthā, vajriṇī, vāmakeśvarī |
pañchayaGYapriyā, pañchapreta mañchādhiśāyinī ‖ 174 ‖
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஓம் வ்யோமகேஶ்யை நம;
ஓம் விமானஸ்தாயை நம;
ஓம் வஜ்ரிண்யை நம;
ஓம வாமகேஶ்வர்யை நம;
ஓம் பஞ்சயக்ஞப்ரியாயை நம;
ஓம் பஞ்சப்ரேத மஞ்சாதிஶாயின்யை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*942.வ்யோமகேஶீ* - ஆகாசத்தை கேசங்களாக உடையவள்.
🌸🌸🌸🌸
*943.விமானஸ்தா* - விமானத்தில் வீற்றிருப்பவள்
🌸🌸🌸🌸
*944.வஜ்ரிணீ* - இந்திரனுடைய (வஜ்ராயுத்தை தரிப்பளென்றும்) பத்னி ரூபமாக இருப்பவள்.
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*946.பஞ்சயக்ஞப்ரியா* - பஞ்சயக்ஞங்களில் ப்ரியமுள்ளவள்.
🌸🌸🌸🌸
*947. பஞ்சப்ரேத மஞ்சாதிஶாயினீ* - பஞ்சப்ரேதங்களாகிய ( ப்ரம்ஹா , விஷ்ணு, ருத்ரன் ஈ்ஸ்வரன், ஸதாசிவன் அவா்களின் உயிர்களாக) மஞ்சத்தில் வீற்றிரூப்பவள்.
🌸🌸🌸🌸