பச்சைப்புடவைக்காரி - எழுகரைநாடு.,தென் சேரிகிரி ,.பட்டாலி-சிவமலை 395 , 396 & 397 - 77,78,79

              *பச்சைப்புடவைக்காரி*

                என் எண்ணங்கள்

பகையை வெல்லும்   77,78,79   - 

திருப்புகழ் ஸ்தலங்கள் 

திருப்புகழ்  

116.எழுகரைநாடு.117.தென்

சேரிகிரி 118.பட்டாலி-சிவமலை

395 , 396 & 397


15.திருப்புகழ் 116.எழுகரைநாடு

இது இடம் விளங்காத ஸ்தலம் என்றாலும் வட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தது என்று தணிகைமணி யவர்கள் எழுதியிருக்கிறார். 

சிலர்  இது இலங்கையில் இருக்கிறதென்றும் குடகில் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். 

அருணகிரிநாதர் தரிசித்த 116வது ஸ்தலமான இதில் பாடிய மிக உருக்கமான பாடல் ஒன்று இருக்கிறது.

பரம்பொருளைப்பெற

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
  விழிபுனல் தேக்கிட       அன்புமேன்மேல்

மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
  விழைவுகு ராப்புனை        யுங்குமார


முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
  முலைநுகர் பார்த்திப        என்றுபாடி

மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
  முழுதும லாப்பொருள்       தந்திடாயோ


பரகதி காட்டிய விரகசி லோச்சய
  பரமப ராக்ரம        சம்பராரி

படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
  பகவதி பார்ப்பதி        தந்தவாழ்வே

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
  எழுகிரி யார்ப்பெழ        வென்றவேலா

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
  எழுகரை நாட்டவர்         தம்பிரானே.


விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் =  தந்திரம் இல்லாத நேரான புத்தியுடன் உன்னைக் கருதியும், உன்னை நினைத்து மனம் உருகியும், உன்னை வாழ்த்தியும்.

அன்பு மேன்மேல் மிகவும்  = உன்னிடம் பக்தி  மேன்மேலும் வளரவும்,


ராப்பகல் பிறிது பராக்கற  == இரவும் பகலும்  பிறவிஷயங்களைச் சிறிதும்  நினைக்காமல்,

விழைவு குராப்புனையும் குமார ==  குராமலரை விரும்பி அணியும் குமரனே ! முருக, ஷடாக்ஷர  சரவணபவனே!


கார்த்திகை முலை நுகர் பார்த்திப  =  கார்த்திகை மாதர்களின் முலைப்பால் அருந்திய அரசனே !
என்று  பாடி

மொழி குழறாத் தொழுது = மொழி குழறும்படி  உன்னைத் தொழுது,
அழுதழுது ஆட்பட  =  மனம் உருகி அழுது உனக்காட்பட்டு

முழுதும் அலாப்பொருள் = இந்த  உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த அந்த மெய்ப்பொருளை  (ஞானத்தை )
தந்திடாயோ 

பரகதி காட்டிய விரக = (சம்பந்தராக வந்து தேவாரம் மூலமாக ) உலகத்தவருக்கு  மோக்ஷவீட்டைக் காட்டிய  சாமர்த்யசாலியே

சிலோச்சய = மலைகளுக்கு அரசே
பரம பராக்ரம

சம்பராரி பட விழியாற் பொரு  = மன்மதன் சாம்பலாய் அழிய,  நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த

பசுபதி போற்றிய பகவதி  பார்ப்பதி தந்த வாழ்வே = பசுபதியாகிய சிவபிரான் போற்றிய   செல்வமே !பகவதி  பார்வதி  தந்த பெருவாழ்வே !
இரைகடல் தீப்பட = அலை ஓசையுடன் கூடிய கடல் தீப்பற்றி எரியவும்.

நிசிசரர் கூப்பிட  = அசுரர்கள் அலறிக் கூப்பாடு போடவும்,

எழுகிரி ஆர்ப்பெழ =  ஏழு மலைகளும்  பெருஞ்சப்தத்துடன்  நொறுங்கியழியவும்,
வென்ற வேலா-

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய = தேவர்கள் அனைவரையும் மீண்டும் அவர்கள் நாட்டில் குடியேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே !
மெய்ப்பொருளை  அருள்வாயே !

இந்தப்பாடலில் அரிய பெரிய விஷயங்களை அனாயாசமாகச் சொல்கிறார்.


விரகற நோக்கியும் என்பது முக்கியமான உபதேசம். பகவானை வஞ்சமில்லாமல், வக்ரபுத்தி, தந்திர எண்ணம் எதுமில்லாமல் அணுகவேண்டும். "விமல ஹ்ருதய " என ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் சொல்வார்.  

"அனஸூயவே " என்று கீதையில் வரும்.

பிறிது பராக்கர = பக்தி வழியைப் பற்றுவோர் பிற விஷயங்கள் எதிலும் நாட்டம் கொள்ளலாகாது. இந்த நிலையை " அனன்ய சிந்தை", "அனன்ய சேதா" என்று பகவான் கீதையில் சொல்வார்.

அழுதழுது - அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் மாணிக்கவாசகர்.

"மொழி குழற  அழுது தொழுது உருகுமவர் விழி அருவி முழுகுவதும் " என்று சீர்பாத வகுப்பில் சொல்வார்.

முழுதும் அலாப் பொருள் = மெய்ப்பொருளை- கடவுளை 'இதுதான் அது' என்று சுட்டிக்காட்ட முடியாது. 

ப்ரஹ்மத்தை இதுதான் என்று சொல்லமுடியாது. தெரியும் என்று சொல்பவன் அறியமாட்டான், அறிந்தவன்  சொல்லித்திரிய மாட்டான்

,  

உலகத்தவர் சொல்லும் எதுவும் அதுவல்ல  என்பது உபனிஷதம். எல்லாவற்றையும் கடந்தது கடவுள்.

"உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே " என்பார் கந்தர் அநுபூதியில்.

பரகதி காட்டிய  விரகன் - இதை அருணகிரிநாதருக்கு முருகன் செய்த அருளாகவும் கொள்ளலாம். 

ஆனால் தேவாரம் பாடி உலகத்தவர் அனைவருக்கும் முக்திக்கு வழிகாட்டிய  திருஞானசம்பந்தர் எனக்கொள்வதே சிறப்பு.




 117.தென்சேரிகிரி
இது பல்லடத்திற்கு அருகே உள்ள இடம். செஞ்சேரி என்று சொல்கிறார்கள். அருணகிரிநாதர்  தரிசித்துப்பாடிய 117 வது தலமான இதற்கான இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் அருள் வேண்டுவதாக அமைந்த பாடல்.

சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
  சந்தாரும் வெதிருகுழ            லதுவூதித்

தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
  தங்கூறை கொடுமரமி        லதுவேறுஞ்

சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
  சென்றேயும் அமரருடை        சிறைமீளச்

செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
  தென்சேரி கிரியில்வரு            பெருமாளே.


தண்பாரு முனதருளை              யருள்வாயே.

(எங்கேனும் ஒருவர் )

சங்குடன் சக்கரமும்  ஏந்தி,  பசு மந்தைகளின் பின் சென்று, தொளையிட்ட மூங்கில் குழலை ஊதியவனும்,

தன்மேல் கொண்ட ஆசையைக் கடக்க மன எழுச்சிபெற்ற பெண்களின்  ஆடையை எடுத்துக்கொண்டு குருந்த மரத்தில் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமான   திருமாலின் மருகனே !

தாமரை மலரில் வாழும்  பிரம்மனும் மருண்டுபோக, சென்று முறையிட்ட தேவர்களின் சிறையை நீக்கி, தேவர்களைப் பந்துபோல் சிதற அடித்து,

ஒன்றுகூடி அடியார்கள் அனைவரும் தொழும் தென்சேரிகிரியில் அமர்ந்த பெருமாளே !
குளிர்ச்சி பொருந்திய உன் திருவருளைத் தருவாயாக. 



உபதேசம் அருள


வண்டாடத் தென்றல் தடமிசை
  தண்டாதப் புண்ட ரிகமலர்
  மங்காமற் சென்று மதுவைசெய்          வயலூரா

வன்காளக் கொண்டல் வடிவொரு
  சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
  மன்றாடிக் கன்பு தருதிரு             மருகோனே

திண்டாடச் சிந்து நிசிசரர்
  தொண்டாடக் கண்ட வமர்பொரு
  செஞ்சேவற் செங்கை யுடையசண்         முகதேவே


சிங்காரச் செம்பொன் மதிளத
  லங்காரச் சந்த்ர கலைதவழ்
  தென்சேரிக் குன்றி லினிதுறை           பெருமாளே.


பண்டேசொற் றந்த பழமறை
  கொண்டேதர்க் கங்க ளறவுமை
  பங்காளர்க் கன்று பகர்பொருள்           அருள்வாயே


(கொண்டாடிக் கொஞ்சு )



தென்றல் தவழும் குளத்தை விட்டு நீங்காமல், அங்கு உள்ள தாமரை மலர்கள் மங்காது  அவற்றின் தேனை  வண்டுகள் ஆடிப்பருகும் வயலூரில் உறைபவனே !

கருத்த மேகம் போன்ற நிறமுடைய , போர் செய்யும் எண்ணமுடைய வலிய கம்சன் மடிந்து விழும்படி தாக்கி உதைத்துப் போராடிய  க்ருஷ்ணரிடம் அன்புகொண்ட  லக்ஷ்மியின் மருகனே !

அசுரர்கள்  சிதறித் திண்டாடும் படியாகவும், அடிமைப்படும் படியாகவும் செய்து, அவர்களுடன் சண்டையிட்ட  ஷண்முக தேவே !செந்நிறமான  சேவலைச் செங்கையில் தாங்கியவனே!

செம்பொன்னின் அலங்காரம் கொண்ட அழகிய மதில்களைச்   சந்திரன் கதிர்கள்  தழுவுவதான தென்சேரிகிரியில் இனிதே வீற்றிருக்கும் பெருமாளே!

 தொன்மையான வேத மொழியைக் கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, இடது பாகத்தில் உமையைக்கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்த பிரணவப் பொருளை எனக்கும்  உபதேசித்து அருள்வாயாக.

இந்த இரண்டு பாடல்களிலும் பாகவத நிகழ்ச்சிகளைச் சொல்லியிருக்கிறார்.


117.தென்சேரிகிரி
இது பல்லடத்திற்கு அருகே உள்ள இடம். செஞ்சேரி என்று சொல்கிறார்கள். அருணகிரிநாதர்  தரிசித்துப்பாடிய 117 வது தலமான இதற்கான இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் அருள் வேண்டுவதாக அமைந்த பாடல்.

சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
  சந்தாரும் வெதிருகுழ            லதுவூதித்

தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
  தங்கூறை கொடுமரமி        லதுவேறுஞ்

சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
  சென்றேயும் அமரருடை        சிறைமீளச்

செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
  தென்சேரி கிரியில்வரு            பெருமாளே.


தண்பாரு முனதருளை              யருள்வாயே.

(எங்கேனும் ஒருவர் )


சங்குடன் சக்கரமும்  ஏந்தி,  பசு மந்தைகளின் பின் சென்று, தொளையிட்ட மூங்கில் குழலை ஊதியவனும்,

தன்மேல் கொண்ட ஆசையைக் கடக்க மன எழுச்சிபெற்ற பெண்களின்  ஆடையை எடுத்துக்கொண்டு குருந்த மரத்தில் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமான   திருமாலின் மருகனே !

தாமரை மலரில் வாழும்  பிரம்மனும் மருண்டுபோக, சென்று முறையிட்ட தேவர்களின் சிறையை நீக்கி, தேவர்களைப் பந்துபோல் சிதற அடித்து,
ஒன்றுகூடி அடியார்கள் அனைவரும் தொழும் தென்சேரிகிரியில் அமர்ந்த பெருமாளே !

குளிர்ச்சி பொருந்திய உன் திருவருளைத் தருவாயாக. 








118.பட்டாலி-சிவமலை

அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த  118வது தலமான பட்டாலி-சிவமலை கொங்குநாட்டில் காங்கேயத்துக்கு அருகில் உள்ளது. இதற்கு ஸ்தலபுராணம் இருக்கிறது, அருணகிரியார் பாடிய மூன்று பாடல்கள் இத்தலத்திற்கு இருக்கின்றன.

திருவடி பெற

முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
  மரகத கிரணப் பீலி மாமயில்
  முதுரவி கிரணச் சோதி போல்வய          லியில்வாழ்வே

முரண்முடி யிரணச் சூலி மாலினி
  சரணெனு மவர்பற் றான சாதகி
  முடுகிய கடினத் தாளி வாகினி          மதுபானம்

பருகினர் பரமப் போக மோகினி
  அரகர வெனும்வித் தாரி யாமளி
  பரிபுர சரணக் காளி கூளிகள்          நடமாடும்


பறையறை சுடலைக் கோயில் நாயகி
  இறையொடு மிடமிட் டாடு காரணி
  பயிரவி யருள்பட் டாலி யூர்வரு         பெருமாளே.


 உனதடி நிழலிற் சேர வாழ்வது          மொருநாளே

(இருகுழை இடறி )




நறுமணம் வீசும் மாலையைச் சூடி உனக்கு வாகனமாக விரும்பிய  பச்சை நிறமுள்ள தோகையைகொண்ட  சிறந்த மயில்மீது, சூரியனுடைய ஒளியைப்போல் விளங்கி வயலூரில் வாழ்பவரே !

வலிமை வாய்ந்த முடியையுடைய, போருக்கான சூலாயுத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், தன்னைப் புகலாக அடைந்த சாதகர்களுக்குப் பற்றாக இருப்பவள்,  விரைவாகச் செல்லும்  யாளி அல்லது  சிங்க வாஹனத்தை யுடையவள்., 

 (வாமாசாரம்  பின்பற்றி )கள்ளுண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி,,அரகர என அதிக ஒலி செய்பவள், சியாமள நிறம் உடையவள், சிலம்பணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடுவதும் பறைகள் ஒலிப்பதுமான   சுடுகாட்டுக் கோயிலின் தலைவி, சிவபிரானுடன் இருந்துகொண்டே காரணமாக நடனம் செய்பவள், பயிரவி தேவி பெற்றருளியவனும், பாட்டாலியூரில்  அமர்ந்திருப்பவனுமான பெருமாளே !

உனது திருவடியில்  பொருந்தி வாழும்படியான வாழ்க்கை ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா !ட்
அம்பாளுக்கு  லலிதா, புவனேஶ்வரி போன்ற சௌம்ய ரூபமும் உண்டு; 

அசுரர்களை வதைக்க எடுத்த துர்கை, காளி  போன்ற பயம்தரும் ரூபங்களும் உண்டு.  சிங்கம், புலியைக்கண்டு அதன் குட்டிகள் பயப்படுவதில்லை. அதுபோல் அம்பாளின் பயங்கர ரூபங்களைக் கண்டு பக்தர்கள் பயப்படத் தேவையில்லை!

இரண்டையும் பல இடங்களில் அருணகிரிநாதர்  பாடியிருக்கிறார். தேவேந்திர சங்க வகுப்பிலுள்ள 16 அடிகளில் முதல் 12 அடிகளில் அம்பாளின் பலரூப வர்ணனைதான்!  இத்தகைய வாக்கை வேறு எங்கும் காணமுடியாது.




இளமையிலேயே  பக்தி

அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
  லச்சான வயலி நகரியி               லுறைவேலா

அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
  டக்காகி விரக பரிபவ              மறவேபார்

பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
  பற்றாய பரம பவுருஷ            குருநாதா

பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
  பட்டாலி மருவு மமரர்கள்          பெருமாளே.


கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
  குற்றேவல் அடிமை செயும்வகை         யருளாதோ


(கத்தூரி யகரு )



தூரத்தில் வரும்போதே நிச்சயம் தரிசனத்தைத் தரும்  நெடிய பொன் மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூரில் அமர்ந்திருக்கும் பெருமாளே !

இது என்ன அதிசயம் என  பரவை நாச்சியார்  மகிழ்ந்து தன்வசமிழக்க, அவர்மீது கண்ணும் கருத்துமாயிருந்த  சுந்தரரின்  கவலை அறவே நீங்குவதற்கு,

இந்தப் பூமியில் பத்து இலக்கணங்களும் பொருந்தியிருந்த சுந்தரர் தம்மைப் பரவிப் போற்ற,  (அவருக்காக)  வேகமாக தூது சென்ற உண்மைத் தூதுவரும், தம்முடன் உள்ளம் கலக்கத் திருவருள் செய்பவரும் உற்ற துணையாக இருப்பவருமான சிவபிரானுக்கு பவுருஷம் நிறைந்த குருமூர்த்தியே !

பசிய ஓலைகள் நிறைந்து விளங்கும் பனைமரங்கள்  வளர்ந்துள்ள  இருண்ட சோலைகளில்  மயில்கள் நடனம் செய்கின்ற பட்டாலியூரில் அமர்ந்த பெருமாளே!
தேவர்கள் பெருமாளே !

கொக்குப்போல் வெண்ணிறமான நரைகள் வருமுன்பு, இந்த உடல் இளமையாக இருக்கும்போதே , முயற்சியுடன் உனக்கு  அடிமைபூண்டு  பணிவிடை செய்யும்படி அருள் தரலாகாதா !

சுந்தரருக்காக சிவபிரான் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற  லீலையை இங்கு நினைவு கூர்கிறார். 

இங்கு அருணகிரியாசான் ஒரு முக்கிய உபதேசம் செய்கிறார். தெய்வ, ஆன்மீக ஈடுபாடு வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்பதே பொதுவான  கருத்தாக இருக்கிறது. ஆனால் யாருக்கு எத்தனை வயது என்று யார் சொல்ல முடியும்? 

நீநாளும்  நன்னெஞ்சே நினைகண்டாய்  யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்  சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளும்  தலைசுமப்பப் புகழ்நாமம்  செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.

என்று  பாடுகிறார் சம்பந்தர்.  அதனால் இளமையிலேயே இறை சிந்தனையைப் பெறவேண்டும்.

வம்பில்லாத முக்தி !

வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
  வென்றிச்சக் ரேசன் மிகமகிழ்          மருகோனே

வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
  விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை          வயலூரா

கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
  கொண்டைக்கொப் பாகு முகிலென          வனமாதைக்

கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
  கொங்கிற்பட் டாலி நகருறை                    பெருமாளே.


சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
  சங்கற்பித் தோதும் வெகுவித          கலைஞானச்

சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
  சம்பத்துக் கேள்வி யலமல               மிமவானின்

மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
 வந்திக்கப் பேசி யருளிய             சிவநூலின்

மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
  வம்பிற்சுற் றாது பரகதி           யருள்வாயே


பராக்ரமம் மிக்க சுக்ரீவருடைய  சேனையை  கடல்கடந்து இலங்கைக்குப் போகச் செய்தவனும்,  ஜெயத்தையே தரும் சக்கரத்தை ஏந்தியவனுமான  திருமால்  மிகவும் மனம் மகிழும் மருகனே !

வெண்பட்டு அணிந்தது போல் நல்ல பாக்கு மரங்கள்  பாளைகளை விரிக்கின்ற  சோலைகள் சூழ்ந்து வெய்யிலை மறைக்கின்ற  வயலூரில் உறைபவனே !

வள்ளியைப் பலவாறு புகழ்ந்து ஆசையுடன் கொஞ்சிப்பேசி இனிய சொற்களால் பாடிப்பரவிய இளையோனே ! கொங்கு நாட்டுப் பட்டாலியில் அமர்ந்த பெருமாளே !

சந்தேகக் கூச்சலோடு  வாதம் செய்யகூடிய ஆறுவித சமயிகளும், தாங்கள்  உறுதிசெய்துகொண்டு பேசுகின்ற  பலவிதமான சண்டைக்கு வேண்டிய  சாத்திர ஞானம் போதும், போதும்.



இமவான் புதல்வியான பார்வதிக்குப்  பாகர் என்றும், ரிஷிகள் எல்லாம் எங்களுக்குச் சுவாமி என்றும்,  திருவடியைத் துதிக்க சிவ நூல்களில் சொல்லப்பட்ட மந்திர-தந்திர  (சக்கர ) விளக்க ஆராய்ச்சி அறிவும் போதும், போதும்.

இங்கனம் வீணான வழிகளில் நான் சுற்றியலையாமல் மோக்ஷத்தை நீ தந்தருள்வாயாக.

இதுவும் மிக முக்கியமான பாடல். சமய விளக்கம் என்ற பெயரில் வீணான தர்க்கவாதங்கள் மிகுந்துள்ளன. ஒவ்வொரு சமயத்தினரும், அதற்குள் ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்குள் ஓயாது சச்சரவிட்டு வருகின்றனர். "சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் " என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். 

அருணகிரிநாதர்  எளிய,  நேரடியான பக்தி வழியையே போதிப்பவர். அதி தீவிர மந்திர-தந்திரங்கள் அவருக்குப் பிடித்தமில்லை.

"காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதல் மிக எளிதே " என்று அலங்காரத்தில் சொல்வார்.

"ஆன பய பக்தி வழிபாடு பெறு முக்தி " என  திருவேளைக்காரன் வகுப்பில் சொல்வார்.  அதுபோல் இங்கும்  "வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே " என்று வேண்டுகிறார். பக்தியே  நேர்வழி. வீணான சுற்றுவழிகள் தேவையில்லை. 




இதையே கீதையும் போதிக்கிறது.

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः।।9.34।।
மன் மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்யைவம் ஆத்மானம் மத் பராயணம்.
என்னிடமே மனதை நிலைக்கச்செய்தவனாக ஆகிவிடு. என் பக்தனாக ஆகிவிடு,
என்னை பூஜிப்பவனாக ஆகிவிடு. என்னையே நமஸ்கரி. இவ்விதம்  மனம், புலன் களை  என்னிடம் ஈடுபடுத்தி, (ஆத்ம சமர்ப்பணம் செய்து ) என்னையே அடையத்தக்க ஒரே புகலாகக் கொண்டு என்னையே அடைவாய்.

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे।।18.65।।
மன் மனாபவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே.
என்னிடமே  மனதை நிலைக்கச்செய்தவனாக ஆகிவிடு. என் பக்தனாக ஆகிவிடு. என்னை பூஜிப்பவனாக ஆகிவிடு. என்னையே நமஸ்கரி. இவ்விதம் நீ என்னையே அடைவாய். இது சத்தியம் என பிரதிக்ஞை செய்கிறேன். ஏனெனில் நீ என் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.

பகவான் கீதையில் இவ்விதம் இருமுறை சொல்லி சத்யப் பிரதிக்ஞை செய்கிறார் எனில், இது எவ்வளவு உயர்ந்த உபதேசம் ! எனவே பக்திக்கு மீறிய முக்தி சாதனம் இல்லை. இதுவே அருணகிரிநாதர்  நமக்குச் சொல்லும் உபதேசம். 




வயலூர் பாடல் ஒன்றில் ( தலம் 92, குருதி கிருமிகள் ) "சுருதி வழிமொழி சிவகலை அலதினி அலம் அலம் "  =வேத மரபில் வந்த சிவஞானத்தைத் தவிர பிற கலைகள் போதும்,போதும் என்றார் இங்கு அந்த சிவ கலையிலும் மந்திரப் பிரஸ்தாரம் போன்ற வம்பில் சுற்றாத பரகதி வேணும் என்கிறார். 

அதாவது, முக்திக்கு நேர் சாதனமான  எளிய பக்தி தவிர பிற விஷய ஆராய்ச்சிகள் அவசியமில்லை என்கிறார். இதுவே அருணகிரிநாதரின் தலையாய  கோட்பாடு.




அம்மா .... இறைவனை புகழ்வதால் அருணகிரி போன்றவர்கள் எத்தனை மன நிம்மதியை கண்டார்கள் .. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்  என்று கதருகிறோம்... எவ்வளவு பெரிய முட்டாள்கள் நாங்கள் .... 

ஹ்ம்... புரிந்து கொண்டால் சரி ... 

புன்முறுவல் ஒன்றை பரிசாக கொடுத்து அந்த சிந்தூர *பெண்ணாள்*

 *பின்னால்* சென்று நாம் *முன்னாள்* செய்த கர்ம வினைகளை அழித்து 

இனி உங்களுக்கு *எந்நாளும்* *நன்னாள்* என்றே

 *பொன்னால்* பொறித்த வார்த்தைகளை

 *கண்ணால்* சிந்தி அதை

 *தன்னால்* புரிந்துகொள்ளும் படி செய்து விட்டு

 *விண்ணாள்* சொல்லிவிட்டு  மறைந்தாள் ... 🥇🥇🥇




697
 ஸர்வலோக வஶங்கரீ* -

ஈரேழு புவனத்தையும் தன்னதிகாரத்தில், கட்டுப்படுத்தி  ஆள்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை.   

காயத்ரி மந்திரம்  ஓம்  பூர் , புவ , சுவ,  ஜன, தப, சத்ய   என்று  லோகங்களை வெல்லும் சக்தியை தானே  சொல்கிறது. 🙏🙏🙏

*698 * ஸர்வார்த்ததாத்ரீ* -    சகல  சர்வ சம்பத்துகளும்  அளிப்பவள் ஸ்ரீ லலிதை. 


 *699 * ஸாவித்ரீ* -  தக தக என்று  பூரண ஒளி கொண்ட  சூர்யநபி போல்  ஜொலிப்பவள்  ஸ்ரீ லலிதாம்பிகை.

👏👏👏



                 =============👌👌👌👍👍👍=======

Comments

ravi said…
*698 * ஸர்வார்த்ததாத்ரீ* - சகல சர்வ சம்பத்துகளும் அளிப்பவள் ஸ்ரீ லலிதை.


*699 * ஸாவித்ரீ* - தக தக என்று பூரண ஒளி கொண்ட சூர்யநபி போல் ஜொலிப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை.

👏👏👏
ravi said…
*700 ஸச்சிதானந்த ரூபிணீ* -

முடிவான, அசைக்க முடியாத மாறாத சத்யம் ஆகியவற்றின் ஸ்வரூபமானவள் ஸ்ரீ அம்பாள்.

ஒரே வார்த்தையில் சொன்னால் *பரப்பிரம்மம்* .🥇🥇🥇
Savitha said…
பொன்னால்
பெண்ணாள்
அருமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ravi said…
அம்மா .... இறைவனை புகழ்வதால் அருணகிரி போன்றவர்கள் எத்தனை மன நிம்மதியை கண்டார்கள் .. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று கதருகிறோம்... எவ்வளவு பெரிய முட்டாள்கள் நாங்கள் ....

ஹ்ம்... புரிந்து கொண்டால் சரி ...

புன்முறுவல் ஒன்றை பரிசாக கொடுத்து அந்த சிந்தூர *பெண்ணாள்*

*பின்னால்* சென்று நாம் *முன்னாள்* செய்த கர்ம வினைகளை அழித்து

இனி உங்களுக்கு *எந்நாளும்* *நன்னாள்* என்றே

*பொன்னால்* பொறித்த வார்த்தைகளை

*கண்ணால்* சிந்தி அதை

*தன்னால்* புரிந்துகொள்ளும் படி செய்து விட்டு

*விண்ணாள்* சொல்லிவிட்டு மறைந்தாள் ... 🥇🥇🥇
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 958*🥇🥇🥇🏆🏆🏆

*US 950*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

38 வது ஸ்தபகம்

அஷ்டத்ரிம்ஸ ஸ்தாபக

தஸ மஹா வித்யா (பாதா குலக வ்ருத்தம் )

🦚🦚🦚🥇🥇🥇
ravi said…
950 🍇🍇🍇

ஏகவிதா தௌ பஹுபேதாsதோ

சக்திரனந்தா பரமேஸஸ்ய
ஸபஜனமார்கம் கணபதிமுனிநா

பாதாகுலகைரேவம் விவ்ருதா🍇🍇🍇
ravi said…
ஒன்று பலவாக ஆவது தான் சக்தி ... ஏகன் அனேகன் என்று மாணிக்க வாசகர் சொன்னதைப்போல் சக்தி பல ரூபங்களில் வருகிறாள் ... எல்லாம் அவள் ரூபம் எல்லாம் அவள் அனுக்கிரகம் . 👍👍👍
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 378*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

51
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
51👣👣👣

காஷா யமம் சுகமிவ ப்ரகடம் ததானோ

மாணிக்ய குண்டலருசிம் மமதாவிரோதீ

ச்ருத் யந்தஸீ மனி ரத ஸூதராம் சகாஸ்தி

காமாக்ஷி தாவககடா க்ஷய தீச்வரோ sஸௌ 🙏🙏🙏
ravi said…
51👣👣👣

காஷா யமம் சுகமிவ ப்ரகடம் ததானோ

மாணிக்ய குண்டலருசிம் மமதாவிரோதீ

ச்ருத் யந்தஸீ மனி ரத ஸூதராம் சகாஸ்தி

காமாக்ஷி தாவககடா க்ஷய தீச்வரோ sஸௌ 🙏🙏🙏
ravi said…
அம்பாளின் கடாக்ஷம் என்பது மேரு மலையில் வாசுகியை மத்தாக வைத்து பாற்கடலை கடைந்து அமுதம் எடுப்பதைப்போல ... அமுதம் கிடைத்து விட்டால் அதுதான் பரமானந்தம்
ravi said…
👣👣👣👣👣👣👣👣🦚👣👣👣👣
ravi said…
*[96/108]* – அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்💐💐💐
ravi said…
பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

ravi said…
* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
பெரும்படையோடும், கடும் சினத்தோடும் இராவணன் போருக்குப் புறப்படும் செய்தியை ஒற்றர்கள் இராமனிடம் சென்று தெரிவித்தனர்.

இராமன் போர் என்றதும் தோள் பூரித்து எழுகிறான்.

போர்க்கோலம் பூண்டு, வில்லையும், அம்புறாத் தூணியையும் கட்டிக் கொண்டு, தும்பை மாலை சூடிக் கொண்டு புறப்பட்டான்.

இலக்குவனும் இராமனோடு எழுந்து போர்க்கோலம் பூண்டு இராவணனைப் போர்க்களத்தில் சந்திக்கத் தயாராகிறான்.

இரு புறத்திலும் அரக்கர் சேனையும், வானர சேனையுமாக எதிரும் புதிருமாக போருக்குத் தயாராக நின்றனர்.

ravi said…
திருமிகு ஆருத்ரா.. தெலுங்குக் கவிஞர் ஒரு விழாவில் பேசியது.

நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள்.. அடிக்கடி நேரிலும்..அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு!
இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்துகொள்வேன்.

ravi said…
அப்படி ஒரு சமயம்.. நான் கேட்டபோது.. அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன்.
அந்தப் பாடல் என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா? லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது.

ravi said…
கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன்.

கண்ணதாசன் சொன்னார்..
இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப்பிறகு வரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக.. ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவனன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்..
ravi said…
அப்போது லக்குவனன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனண்ணா.. இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்ப தென்ன? என்று கேட்க..
‘ஆணையிட்டது கோசலராமன்..
அழுதுகொண்டிருப்பது சீதாராமன்’ என்று .....
இப்பொறிதான் .. இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார்.

ravi said…
கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்..
காதலித்த தெய்வம் அந்த சீதாராமன்..
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்..
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் ..
தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்..
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்..
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்..
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீ ஜெயராமன்.
வம்சத்துக்கொருவன் ரகுராமன்.
மனங்களை இணைப்பவன் ஸ்ரீராமன்.
மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன்.
முடிவில்லாதவன் அனந்தராமன்.

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்..
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்..

👆 About Kannadasan by a telugu poet. Good one
ravi said…
*பண்ட புத்ர* = பண்டாசுரனின் புத்ரன்

*வதோத்* = வதைத்தல்
யுக்த = புரிதல்- ஆற்றுதல் (செயலாற்றுதல்)

*பாலா* = பாலாம்பிகை -

( பாலாம்பிகை திரிபுரசுந்தரியின் மகள் - சிறுமி )

*விக்ரம* = துணிச்சல் -

*பராக்ரமம்* - வலிமை

*நந்திதா* = குதூகலம் - ஆனந்தித்தல்

*74 பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா* =

பண்டாசுரனின் புதல்வனை வதம் செய்த பாலாம்பிகையின் துணிச்லால் அகமகிழ்பவள்
ravi said…
குழந்தை என நினைத்தான் குற்றம் பல புரிந்த பண்டாசுரன் ...

ஒன்றும் அறியா மழலை ஓடி விளையாட ஒரு யுத்த களம் வேண்டுமோ ? ?

பாண்டி விளையாட பண்டாசுரன் சேனை வேண்டுமோ ??

முளைக்காத பற்களிலே வெத்தலை பாக்கு போட வேண்டுமோ ??

பால் கண்ட முகம் குருதி காண வேண்டுமோ .. ??

மழலை மாறா குழந்தை ஒன்று கதற வேண்டுமோ ??

ஓடிப்போய் விடு ... இங்கே உயிர்கள் விளையாடும் அவை உன் பொம்மைகள் அல்ல ...

கொக்கரித்தான் பண்டா சுரன் ...

ravi said…
சிரித்தது குழந்தை ... சின்னம் சிறு மேனி அன்னை அபிராமி ..

அவளை கண்டவர்கள் விண்டதில்லை ... கண் கூசும் காந்தி ...

சின்னவள் சிறுமி என்றாய் .. சீக்கிரம் உயிர் போக துடித்தாய் ...

மூர்த்தி சிறிது ஆனால் என் கீர்த்தி பெரிது ...

அடித்தாள் துவைத்தாள் துணி போல அவனை காய வைத்தாள் காயம் பல பெற வைத்தாள் அந்த இஷ்ட காமேஸ்வரி ... 🙏🙏🙏👍👍👍🍇🍇🍇
ravi said…
*மந்திரிண்யம்பா* = மந்திரிணீ அம்பாள் = மந்திரிணீ தேவி

*விரசித* = செய்தல் - புரிதல்

*விஷங்க வத* = விஷங்கன் எனும் அசுரனை வதை செய்தல் (பண்டாசுரனின் சகோதரன் விஷங்கன்)

*தோஷிதா* = சந்தோஷப்பவள்

# *75 மந்திரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா* = மந்திணீ தேவி விஷங்கனை அழித்தொழித்ததால் குதூகலிப்பவள்👍👍👍
ravi said…
விஷங்கன் அழித்தான் ...

விதி அது சிரித்தது பண்டாசுரனை பார்த்து ...

நீ அடுத்தது என்றோ சொன்னது ...

கலங்கினான் முதல் முறை ...

வந்தவள் ஒன்று அறியாதவள் என்றே நினைத்தேன் ..

யாரும் அறியா மறை என்றே இன்று நான் அறிந்து கொண்டேன் ..

மகிஷனுக்கு அந்தமாய் வந்த அந்தரி அன்றோ இவள் ...

கம்சனுக்கும் கருணை புரிந்த துர்க்கை அல்லவோ இவள் ...

என்ன ஆயதம் எதை எறிந்து என்ன பயன் ..

பாவி நான் ... பாற்கடலை காய்ச்ச முடியும் என்றோ நினைத்தேன் ...

கார்மேகம் மழை பொழிந்தால் உத்திரிணியில் ரொம்புமோ என்றே நினைத்தேன் ..

கற்பனைக்கும் எட்டாத கருணை கொண்டவள் இவள் ...

கால்களில் சரண் அடைந்தே இன்னொரு பிறவி வேண்டேன் ...

போரிட்டான் .. புத்தி தடுமாறி அல்ல.. புனிதவதியின் மடியில் கண்களை மூட 🥇🥇🥇
ravi said…
திருக்கடையூர் அபிராமி *10*

*பாடல் 8*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
*8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட*

சுந்தரி!

எந்தை துணைவி!

என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி;

சிந்துர வண்ணத்தினாள்

மகிடன் தலைமேல்
அந்தரி;

நீலி;

அழியாத கன்னிகை;

ஆரணத்தோன்
சுந்தரி;

கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.👍👍🙏🙏🙏
ravi said…
*மேலான பொருள்*

என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே!

பேரழகு மிக்க அன்னையே!

பாசமாம் தளைகளையெல்லாம் ஓடி வந்து அழிக்கும் சிந்தூர நிறம் கொண்டவள்,

மகிடன் என்னும் அசுரனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி

நீல நிறங்கொண்டவள்,

என்றும் அழிவில்லாத இளங்கன்னி,

ravi said…
பிரம்மதேவனின் கபாலத் தைத் தாங்கும் திருக்கரத்தைக் கொண்டவள் ஆகிய அபிராமி அன்னையே!

தாமரை மலரைப் போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில் என்றென்றும் பொருந்தி நிற்கின்றன.👣👣👣
ravi said…
*சுந்தரி*

அவள் சொக்கனின் பத்தினி .. *சொக்கி* , சுந்தரேஸ்வரரின் துணைவி ... *சுந்தரி* ...

சொல்ல ஒண்ணாத அழகு ... அரங்கனின் தங்கை ... அளவிட முடியாத பேரழகி ... அவளுக்கு நிகர் அவள் மட்டுமே 👌👌👌
ravi said…
*எந்தை துணைவி*

என் துணைவி என்றும் எடுத்துக்கொள்ளலாம் என் தந்தையான ஈசனின் துணைவி என்றும் எடுத்துக்கொள்ளலாம் ..

என் துணைவி என்றால் எனக்கு துணையாய் எப்பவும் வருபவள் ..

நான் அவளை கூப்பிட வேண்டாம் ..

எனக்கு ஒரு கஷ்டம் என்றால் பறந்தோடி வந்து
என்னை காப்பாற்றுவாள் ..

என் விழுத்துணையே அவள் தான் என்று ஆகும் போது அவள் என் துணைவி என்றும் சொல்வது சரியே 👍👍👍
ravi said…
*என் பாசத்தொடரை எல்லாம் வந்தரி ...*

அறிதல் வேறு அரிதல் வேறு ... அறிதல் என்பது ஆட்டை வெட்டு என்று சொல்வதைப்போல ..

அரிதல் என்பது நகத்தை வெட்டுவதைப்போல ...

அபிராமி என்ன செய்கிறாள் தெரியுமா...?

நமக்கு வலியே தெரியாமல் நம்மிடம் வந்து நம் பாச பந்தங்கள் எனும் மாயையை அருப்பாள் ...

இனி பிறவியே இல்லாத முக்தி நிலையை அவள் தருவாள் 👍👍👍
ravi said…
*சிந்தூர வண்ணத்தினாள்*

இரண்டாம் முறையாக அதே அழகிய வார்த்தையை பட்டர் உபயோகிக்கிறார் .. சிந்தூர வண்ணத்தினாள்... குங்கம குழம்பில் குளித்து எழுந்தவள் ... குங்கமப்பூ நிறத்தினள்...
ravi said…
*மகிடன் தலைமேல் அந்தரி*

இரண்டாவது தடவையாக அந்தரி என்ற நாமம் வருகிறது . அந்தாதியில் அந்தரி என்ற நாமம் மூன்று இடங்களில் வரும் ..

*அந்தரி 1* நம் அந்தரங்க விஷயங்களுக்கு அதிபதியாய் இருப்பவள் .. பகுத்தறிவாளர்கள் சொல்வது மனசாட்சி ..உண்மையில் நமக்கு நல்லதை எடுத்து சொல்பவள் அபிராமி தான்

*அந்தரி 2*

இந்த பாடலில் வரும் நாமம் .. மகிஷாசுரனுக்கு அந்தமாக வந்தவள்

*அந்தரி 3* விஷ்ணு துர்க்கை வானத்தில் அதாவது அந்தரத்தில் நிற்பவள் .. கம்சனை அழிக்காமல் முக்தி காட்டி மறைந்தவள்👌👌👌
ravi said…
*நீலி .....அழியாத கன்னிகை*👌👌👌

அவள் நீல நிறமும் கொண்டவள் ... என்றும் அழியாத இளம் பெண் .. அந்தம் இல்லாதவள் ..
ravi said…
*ஆரணத்தோன் சுந்தரி*

ஆரணத்தோன் என்பது பிரம்மனைக்குறிக்கும் .. ஆணவம் மிகுந்து போனதால் சிவன் பிரம்மன் தலைகளில் ஒன்றைக்கிள்ள அதுவே பிரம்ம கபாலமாய் ஆனது அர்த்த நாரீஸ்வரர் என்பதால் அம்பிகையும் அதற்கு பொறுப்பு என்று பட்டர் சொல்கிறார் அவள் கையிலும் இந்த கபாலம் ஏந்திருக்கிறாள் 🙏🙏🙏
ravi said…
*கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே* 🍇🍇🍇

அவள் மலர் போன்ற திருவடிகள் என் கருத்தில் பொருந்த வேண்டும் என்று வேண்டுகிறார் ... சிரசிலும் அவள் பாதங்கள் சிந்தையிலும் அவள் திருவடிகள்

வேறு என்ன வேண்டும் நமக்கு ... இதை விட உயர்வான பரிசு யாருக்கு கிடைக்கும் 👣👣🙏🙏🙏
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
🟫🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟫

*🟤ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதைப் புண் படுத்திக் கொள்வதை விட,*

*🟤அனைத்தும் நமக்கான படிப்பினை என்று எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறப்பாய் இருக்கும்.*

*🟤எதுவும் இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அது சந்தோஷம்.. எல்லாம் இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அது அலட்சியம்..!*

*🟤கிடைக்கும் வரை தேடு. தேடிப் பாருங்கள் உங்களுக்கானது ௭ங்கே இருந்தாலும் உங்களை வந்தடையும்!ஆனால் அது தானாக வரும் ௭ன்று மனக் கணக்கு போடாதீர்! உங்களுக்கு வேண்டும் ௭ன்றால் அதை அடைய முழு முயற்சியில் ஈடு படுங்கள் வெற்றி நிச்சயம்...*

*🟤மன அழுத்தத்துடன் சிந்திக்காதீர்கள்.. அது ஒரு போதும் வெற்றியை தராது.. புன்னகையோடு சிந்தித்து பாருங்கள்.. வெற்றி பெறுவீர்கள்....*

🟫🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟫
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!

உலகில் எத்தனையோ தீமைகள் இப்போது அதிகரித்துள்ளன. லஞ்சம், ஊழல் , பாலியல் வன்முறை என இன்று நம்மை வந்து சேரும் செய்திகள் பல நம் மனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

ஆனால் இதே உலகில் இன்றைய காலகட்டத்திலேயே பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அவை அதிகம் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை.
அவற்றைப் பற்றிப் பலர் அறிவதில்லை.

ravi said…
அத்தகைய செயல்களைச் செய்யும் நல்லவர்களால் தான் இன்றும் மழை பெய்கிறது! நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை! என்பதல்லவா தமிழ் மூதாட்டி அவ்வையின் திடமான தீர்மானம்!

ravi said…
நிகழ்வு 1:

நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போக வேண்டும். ஆட்டோ பிடித்தார்.

நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்து விட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230.

பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத் தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார்.

ravi said…
நீங்கள் தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே? என்றார் ஓட்டுநர்.

அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும் எனச் சொல்லி விட்டார்.

ஆட்டோ ஓட்டுநர் அவரின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டார்.

ravi said…
காலை பத்தரை மணி இருக்கும். நண்பரின் செல்பேசியில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

குறுஞ்செய்தி அனுப்பியவர் அந்த ஆட்டோ ஓட்டுநர் தான். குறுஞ்செய்தியில் இடம் பெற்றிருந்த தகவல் என்ன தெரியுமா?

உங்களுக்கு நான் தர வேண்டிய மீதித்தொகை ரூ270 க்கு உங்கள் செல்போனில் ரீசார்ஜ் செய்து விட்டேன்! நன்றி.

ravi said…
மிகுந்த வியப்படைந்த நண்பர் தன் செல்போனையே தன் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

(ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டருக்கு மேல் பணம் கேட்பதையே முன்னிலைப்படுத்திச் சொல்கிறோம். அவர்களிடையே இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் சொல்வதில்லை)

ravi said…
நிகழ்வு 2:

இன்னொரு நண்பர் குடும்பத்தோடு காரில் பெங்களூர் புறப்பட்டார். வழியில் சாப்பிடுவதற்கு உரிய சாப்பாட்டை டிபன் கேரியரில் எடுத்துக் கொண்டார்.

சாப்பாட்டு நேரம் வந்த போது காரை நிறுத்தி எங்காவது அமர்ந்து சாப்பிட முடிவு செய்தார்கள். ஒரு வயல்வெளியும் ஒரு கிணறும் அதன் அருகில் ஓர் ஆலமரமும் தென்பட்டன. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட எண்ணிய குடும்பத்தினர் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு டிபன் கேரியரோடு மரத்தடிக்குச் சென்றார்கள்.

ravi said…
மரத்தடியில் ஏற்கெனவே அந்த வயலுக்குச் சொந்தக்காரரான ஒரு விவசாயி தன் சாப்பாட்டைச் சாப்பிட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கீழே ஒரு தட்டு. பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர். மற்றும் உணவுப் பொட்டலம்.

இவர்களை அன்போடு வரவேற்ற விவசாயி, இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் என்று கூறி அருகேயிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்து அவர்களுக்கு உதவினார்.

ravi said…
குடும்பமும் சாப்பிட்டு முடித்தது. அந்த விவசாயியும் தன் உணவை உண்டு முடித்தார். நண்பர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். அந்த விவசாயி தான் பருகுவதற்குத் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரைத் தான் பயன்படுத்தினாரே அன்றி அந்தக் கிணற்று நீரை பயன்படுத்தவில்லை. நண்பருக்கு வியப்பு. விவசாயியிடம் கேட்டார்:

ravi said…
கிணற்று நீர் உப்புக் கரிக்காமல் நன்றாகத் தானே இருக்கிறது? கிணறும் உங்களுடையது தானே? அப்படியிருக்க நீங்கள் ஏன் கிணற்று நீரைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்?

தன் மேல் துண்டால் கையைத் துடைத்துக் கொண்டே கள்ளங்கபடமில்லாமல் சிரித்தவாறு விவசாயி சொன்ன பதில் இது:

ravi said…
ஐயா! இந்தக் கிணறு என்னுடையது தான். இதை வெட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினேன். அந்தக் கடன் இன்னும் தீரவில்லை. அது தீரும் வரை வயலில் பாய்ச்சுவதற்கு மட்டுமே கிணற்று நீரைப் பயன்படுத்துவது என்றும், வயல் பயன்பாட்டுக்குத் தவிர சொந்தப் பயன்பாட்டுக்கு இந்த நீரை எடுப்பதில்லை என்றும் நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். இப்படி இருந்தால் தான் கடனைச் சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற புத்தி வரும் என எனக்கு அறிவுறுத்தியவள் என் மனைவி தான்.
ravi said…
இன்னும் மூன்று நான்கு மாதங்களில் வங்கிக் கடனை அடைத்து விடுவேன். அதன்பிறகு உங்களைப் போல் நானும் ஆனந்தமாக இந்தக் கிணற்று நீரைப் பருகத் தொடங்குவேன். அப்போது வீட்டிலிருந்து தண்ணீர் கட்டிக் கொண்டு வரும் பாடு இருக்காது!

இதைக் கேட்டு நண்பரும் நண்பர் குடும்பத்தினரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.

(கோடிகோடியாய் வங்கிப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டிற்கு ஓடுபவர்கள் இருக்கும் இதே நாட்டில் தான், இதே காலகட்டத்தில் தான் இத்தகைய ந

நேர்மையான விவசாயிகளும் இருக்கிறார்கள்)_

ravi said…
நிகழ்வு 3:

இரு சக்கர வாகனத்தில் வழக்கமான பாதையில் அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த நண்பருக்கு தன் மனைவி பூ வாங்கி வரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது.

சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார்.

இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்தப் பெண்மணிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.

ravi said…
இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை.

நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில் தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்! என்றார் நண்பர்.

ravi said…
தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும் போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!

பூ விற்று பிழைக்கும் எளிய மூதாட்டியின் எண்ணப் போக்கு நண்பரை திகைப்பில் ஆழ்த்தியது.

ravi said…
(வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்ச லட்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு ஊரை விட்டே ஓடிப் போய் விடும் மனிதர்கள் நிறைந்த இதே உலகில் தான், சாலை ஓரமாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வாழ்க்கைத் தரத்தில் அமைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இந்த மூதாட்டி பூ விற்றுக் கொண்டிருக்கிறார்)

(இவரைப் போன்றவர்களால் அல்லவா உலகில் நல்ல குணங்களின் நறுமணம் கமகமவென வீசிக் கொண்டிருக்கிறது!)

ravi said…
நிகழ்வு 4:

நண்பர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கினார் இன்னொருவர். இரண்டு மாதங்களில் கடனைத் திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னார். எல்லாம் பேச்சுவார்த்தை தானே தவிர எழுத்து பூர்வமாக எதுவும் எழுதிக் கொள்ளப்படவில்லை.

கடன் வாங்கிய நண்பர் திடீரென இதய அதிர்ச்சி ஏற்பட்டுக் காலமாகி விட்டார். கடன் கொடுத்தவர், தான் கடனாகக் கொடுத்த தொகையைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.

ravi said…
அது போனால் போகிறது. ஆனால் அந்த நண்பர் காலமாகி விட்டாரே! இந்தச் சூழலில் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கிறதோ எனப் பதறியவாறு அவர்கள் இல்லத்திற்குச் சென்றார்.

இறந்தவரின் மனைவி அவரைத் தனியே அழைத்துப் பேசினாள்:

ravi said…
நீங்கள் சரியான சமயத்தில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து என் கணவருக்கு உதவியதை என் கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் சொன்னார். சடலத்தை எடுப்பதற்கு முன் ஐயாயிரம் ரூபாயை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடு. நான் கடனாளியாக இறக்கக் கூடாது என்று கூறி விட்டுக் காலமானார். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அதனால் மறுக்காமல் இந்த ஐயாயிரம் ரூபாயை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!`

ravi said…
அந்த சகோதரி ஐயாயிரம் ரூபாய் கொண்ட கவரை நண்பரிடம் கொடுத்த போது நண்பர் விழிகளிலிருந்து வழியத் தொடங்கிய கண்ணீர் நிற்க நெடுநேரமாகியது.

அந்த ஆட்டோ ஓட்டுநர் போல, அந்த விவசாயி போல, அந்தப் பூக்கார மூதாட்டி போல, அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் போல இன்னும் நம்மிடையே சிற்சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ravi said…
நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது உலகம் சொர்க்கமாகும். வானகம் இங்கு தென்படும்.
ravi said…
*695 தீக்ஷிதா -*

பக்குவப்பட்ட சிஷ்யனுக்கு, குரு தக்க சமயத்தில் சன்யாசம் பெற மந்த்ரோபதேசம் வழங்குவது தீக்ஷை.

தீக்ஷை பெற்ற சீடன் புது நாமகரணம் பெறுவான். சந்யாசிகள் ... ..........

*ஆனந்தா* '' என்ற பெயர் பெறுவார்கள்.

ஸ்ரீவித்யா உபாசனையில் புதிய உபாசகர்களுக்கு குரு வாக, குருமூலமாக அம்பாள் தீக்ஷை அருள்கிறாள்.
ravi said…
*696 தைத்யஶமனீ* - சமனம் என்றால் மிதப்படுத்துவது, கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவது.

மற்ற தீய சக்திகளை, பிற தேவதைகளை அடக்குபவள் ஸ்ரீ அம்பாள்

எத்தனை கொடிய ராக்ஷஸர்களை அழித்தவள் அம்பாள்.

நம்முள்ளே இருக்கும் ஆசா பாசங்கள், மோகங்கள்,
தாபங்களை அழிப்பவளும் கூட. 👍👍👍🦚🦚🦚
ravi said…
அம்மா ... அற்புதம் ஆனந்தம் இன்பம் ஈகை உண்மை ஊற்றும் சுனை நீர் என் பால் ஏன் இந்த பரிவு தாயே ஐயம் தெளிவு செய்தே தினம் தினம் முருகன் அருள் புரிகின்றாய் .. ஒன்று இரண்டு அல்ல பதிவுகள் ஓராயிரம் தொடும் நாட்கள் தூரமில்லை . நான் ஔவையானாலும் உன் பொன் மொழிக்கு காத்திருப்பேன் தாயே ...

சிரித்தாள் சின்ன சேலைக்காரி ...

சிதறி தெளித்தன முத்துக்கள் மாணிக்கங்கள் 👏👏👏
ravi said…
குவா குவா*

குழந்தைகள் பிறக்கும் போது குவா குவா என்று அழும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ..

இதற்கு பின் மறைந்துள்ள தாத்பபரியம் தெரியுமா ?

*கு* என்றால் குறையே இல்லா கோவிந்தன் .. *வா* என்றால் வாமனன் ...

எந்த குறை நமக்கு இருந்தாலும் அவன் அருள் இருந்தால் இந்த உலகத்தை நாமும் அளந்து விடலாம் என்பதை குறிக்கவே *வா*

இப்பொழுது சேர்த்துப்படியுங்கள்

ravi said…
குவா குவா* ... குறை இல்லா கோவிந்தா உன் கருணை எனக்கு கிடைத்தால் நான் எவ்வளவு குறையுடன் பிறந்திருந்தாலும் , உருவம் அருவருப்பாய் இருந்தாலும் இந்த உலகத்தை அளந்து வென்று விடும் சக்தி எனக்கு கிடைத்து விடும் என்று அர்த்தம் வரும் ... 🙏🙏🙏
ravi said…
*Experiences with Sri Periva - Who is a real Guru and who is not?*

Once Sri Chandrasekharendra Saraswati Swami of Kanchi Mutt (Sri Periva) had camped in North India.

The then Prime Minister, Smt. Indira Gandhi, came to have His darshan.

The Prime Minister of India placed a similar question in front of Sri Periva, “If you would pinpoint the persons who, in the name of spirituality, lead the people in a wrong way I will take action against them.”

Sri Periva laughed and said, “No! It should not be handled in this manner. Those who approach such fake swamis will themselves, after a time, understand their standard of maturity.”

Sri Periva knew that this reply did not satisfy Smt. Indira Gandhi. Someone had offered a basket full of mangoes to Periva. It contained many unripe and a few ripe fruits.

Many devotees waited outside for Sri Periva’s darshan. Sri Periva instructed the attendants to bring a child from amongst these devotees. A child of about 5 years was brought to Him.

Pointing to the basket Periva smilingly said to the child, “Take whatever you want.” After a search the child picked up a ripe fruit.

Sri Periva pointed out to Smt.Indira Gandhi who was watching this, “Just as the way a child knows what is ripe and what is unripe, so too would those who go out in search of Truth recognize a true Mahan at some point of their life.”

Periva Saranam!
ravi said…
*"ஸ்ரீராமஜயம்னு சத்தமாகச் சொல்லு!"*

மகாபெரியவர் திருத்தல யாத்திரைகள் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.

அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் ஓரிடத்தில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார் அவர். அந்த மாதிரியான சமயங்களில் உபன்யாசம் மாதிரியான சொற்பொழிவுகள் போன்றவை நடப்பது வழக்கம். அந்த மாதிரி ஒருநாள், மகாபெரியவர் முன்னிலையில் ராமாயண உபன்யாசம் நடத்தினார் ஒரு பண்டிதர். மிக அழகாக எளிமையாக ராம காவியத்தை அவர் சொன்னதை மகாபெரியவர் ரொம்பவே ரசித்துப் பாராட்டினார்.

ravi said…
பெரியவரின் பாராட்டால் நெகிழ்ந்துபோன உபன்யாசகர், நெகிழ்வோடு மகானை நமஸ்கரித்தார். அப்போது, "நீ இப்படி உபன்யாசம் செய்வது மட்டுமல்லாமல், இன்னொரு உபகாரமும் முன்பு செய்து கொண்டு இருந்தாயே, அதை இங்கேயும் செய்யலாமே" என்றார் மகான்.

ravi said…
அந்த உபன்யாசகர், தான் நிகழ்ச்சி நடத்தப் போகும்போது, சின்னச் சின்னதாக சில நோட்டுகளை கையோடு கொண்டு செல்வார். உபன்யாச நிகழ்ச்சி முடிந்ததும், அந்த நோட்டுகளை அங்கே இருக்கும் சிறுவர் சிறுமிகளிடம் தந்து ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்வார். அனால் கொஞ்சநாளாக அவருக்கு ஒரு விரக்தி இருந்தது. ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டுகளை தருகிறோம். ஆனால், அவர்கள் எழுதுகிறார்களா இல்லையா? என்பதே தெரியாது. அதோடு, இப்படி எழுதச் சொல்வதால் என்ன பிரயோஜனம் என்ற விரக்திதான் அது.

ravi said…
மகாபெரியவர் எப்படியோ அதைத் தெரிந்து கொண்டு சொல்லவும், அந்த உபன்யாசகருக்கு ஆச்சரியம்! மகானே சொல்லிவிட்டதால், ஸ்ரீராமஜயம் நோட்டுகளை வழக்கத்தைவிட நிறையவே குழந்தைகளுக்குக் கொடுத்தார்.

குழந்தைகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொள்ள, "எல்லோரும் நாளைக்கு இதே நேரத்துக்குள் அந்த நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதிக் கொண்டு வந்து என்கிட்டே தரணும்!" சொன்னார், மகான்.

ravi said…
மறுநாள் எல்லாக் குழந்தைகளுமே ஸ்ரீராமஜயம் எழுதி முடித்த நோட்டுகளுடன் வந்து விட்டார்கள்.

அன்றைக்கும் உபன்யாசம் உண்டு என்பதால், உபன்யாசகரும் வந்திருந்தார்.

குழந்தைகள் வரிசையாக நின்று ஒவ்வொருவராக ஸ்ரீராமஜயம் நோட்டை பெரியவரிடம் சமர்ப்பிக்க, கல்கண்டு பிரசாதமும் வெள்ளிக்காசும் கொடுத்து ஆசிர்வதித்த பெரியவர், குறிப்பாக ஒரு பையன் வந்து நோட்டைத் தன்னிடம் சமர்ப்பித்ததும் அவனை ஆதூரத்துடன் உற்றுப் பார்த்தார்.

ravi said…
நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதியிருக்கியே, எங்கே ஸ்ரீராமஜயம்னு உரக்கச் சொல்லு பார்ப்போம்" என்று சொல்ல, அங்கே திடீரென்று அமைதி நிலவியது.

நோட்டினைத் தந்த சிறுவன் மிரள மிரள விழிக்க, "உன்னைத்தான் சொல்றேன். ஸ்ரீராமஜயம் சொல்லு!" மறுபடியும் சொன்னார், மகான்.

"பெரியவா...அவனால பேச முடியாது....!" கூட்டத்தில் இருந்த இன்னொரு சிறுவன் சொல்ல, அங்கே திடீரென்று ஒரு சலசலப்பு எழுந்தது.

ravi said…
சட்டென்று கையைச் சொடுக்கிய மகான், "கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ... அந்தப் பையன் ஸ்ரீராமஜயம் சொல்லட்டும்!" கொஞ்சம் அழுத்தமாகவே சொல்ல, அங்கே பேரமைதி நிலவிய அந்த நிலையில்தான் நடந்தது அந்த அதிசயம்.

எந்தப் பையன் பிறவியிலேயே பேசும் திறன் அற்று இருந்தானோ அவன், மகாபெரியவர் முன்னிலையில், மெதுவாகத் திக்கித் திணறி..."ஸ்ஸ்...ரீ...ரா..ஆ.ஆ..ஆ..ம.. ஜ்..ஜய்ய்யம்ம்!" என்று மூன்றுமுறை தடுமாறிச் சொல்லிவிட்டு, பிறகு மளமளவென்று ஸ்ரீராமஜயம், ஸ்ரீராமஜயம் என்று உரக்கச் சொல்லத் தொடங்கினான்.

ravi said…
ஆமாம்..அவனுக்குப் பேசும் திறன் வந்துவிட்டது. அதிசயித்துப் போனவர்கள் பெரியவரின் அனுகிரஹத்தை நினைத்து ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர என்று குரல் எழுப்ப, மெதுவாகக் கையை உயர்த்திய மகான், கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த உபன்யாசகரை அழைத்தார்.

"நான் எதுவும் பண்ணலை ...எல்லாம் இவரால வந்தது. இவர் ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டு கொடுத்தார் இல்லையா? ஸ்ரீராமஜயம் எழுதின புண்ணியம் இவனுக்கு வாக்கு வந்திருக்கு..! அதனால, இந்தப் பெருமை இவருக்குத்தான்!" உபன்யாசகரைச் சுட்டிக்காட்டி மகாபெரியவர் சொல்ல, அப்படியே நெக்குருகி நெகிழ்ந்து போனார் உபன்யாசகர்.

ravi said…
ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்கிறோமே, அதனால் என்ன பயன் என்று உபன்யாசகர் நினைத்தது மகானுக்கு எப்படித் தெரிந்தது? பேசாமல் இருந்த சிறுவன் பேசியது எப்படி? எல்லாம் அந்த மகானுக்கு மட்டுமே தெரிந்த தெய்வ ரகசியம்!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!🙏
ravi said…
நாளை ஸ்ரீ ராம நவமி..!

இப்போது நான் ஒரு ராம தரிசனம் பற்றிய கதை சொல்லப்போகிறேன்..!

இதை கேட்டாலே / படித்தாலே ஸ்ரீராமரை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படலாம் அல்லது ஸ்ரீராம லட்சுமணர்களையே தரிசிக்கவும்கூட செய்யலாம்..அவரவர் பக்தியை பொருத்தது..!

*ஸ்ரீராமஜெயம் 🙏..!!*

துளசிதாசருக்கு
உதவிய அனுமன்..!!

ravi said…
ஒருமுறை துளசிதாசர் ஆஞ்நேயரிடம் உங்களுக்கு ராம் - லட்சுமணரின் அனுக்கிரகம் கிட்டியது போல் எனக்கும் அவர்களின் தரிசனம் கிட்ட வேண்டும்..

அதற்கு நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனமுருகப் பிரார்த்தித்தார். ..!

துளசிதாசரின் வேண்டுகோளை ஏற்ற அஞ்சனை மைந்தன் அவரிடம், இதுதான் சித்ர கூடம்.. இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர்..!

ravi said…
ராமன் வனவாசம் செய்த இடம்..அங்கே பாரும் மந்தாகினி..இங்கே உட்கார்ந்து,ராமஜபம் செய்யும்..ராம தரிசனம்கிட்டும் என்று கூறினார்.!

அதற்கு துளசிதாசர் நீங்களும்கூட இருக்கவேண்டும் என்று வேண்டினார்..!

நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நானும் இருப்பேன் எனக்கு வேறு என்ன வேலை? என்று கூறி மறைந்து விட்டார் ஆஞ்சநேயர்..!

ravi said…
துளசிதாசரும் ராமஜபம் செய்ய ஆரம்பித்தார்...

மனதில் ராமர் வருவாரா..எப்படி வருவார்? லட்சுமணனுடன் வருவாரா.. எப்படி இருப்பார்..

தலையில் ஜடாமுடியுடன் வருவாரா? (அ) வைரக்கிரீடம் அணிந்து வருவாரா.. மரவுரி தரித்து வருவாரா...

என்ற பல சிந்தனைகளோடு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண்களை இமைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்..!

ravi said…
மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை.. இருபுறமும் புதர் அங்கிருந்த பாறாங்கல்லில் நின்றுகொண்டு ராம, ராம என்று ஜபித்து நர்த்தனமாடினார் துளசி தாசர்..!

மலை உச்சியில் இருந்து வேகமாக இரண்டு குதிரைகள் வந்தன.!

அதன் மீது இரண்டு ராஜகுமாரர்கள்..துளசிதாசர் எத்தனையோ ராஜாக்களைப் பார்த்திருக்கிறார்..!

ravi said…
ஆனால் குதிரையில் வந்த ராஜகுமாரர்களோ தலையில் தலைப்பாகை.. அதைச் சுற்றி முத்துச் சரங்கள் ...

கொண்டை மீது வெண்புறா இறகுகள் என்று வித்தியாசமாக இருந்தனர்..!

குதிரையில் வந்தவர்கள் தாசரைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டனர்..!!

தாசர் தன் மனதில், ஆமாம், பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, இலட்சுமணனுக்கு ஈடாவார்களா?

ravi said…
தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்கக் கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புறாத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் என் ராமர் என்று ...

ராமனை தியானித்தவாறே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்..!

சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ராம லட்சுமணர்களைப் பார்த்தீர்களா? என்று கேட்டார்..!

ravi said…
இல்லையே...என்றார் தாசர். என்ன இது,உமது பக்கமாகத் தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார் அனுமன்..!

ஐய்யோ! வந்தவர்கள் ராம லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று புலம்பினார் துளசிதாசர்..!

அதற்கு அனுமன், ராமர் உமது இஷ்டப்படிதான் வரவேண்டுமா? அவர் இஷ்டப்படி வரக்கூடாதா?என்று கேட்டார்..!

உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும்.ஒன்றும் அறியாத பேதை நான்..!

ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தர்களை..அலட்சியம் செய்து விட்டேன் வாயுகுமாரா..

ravi said…
இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார்..!

அதற்கு அனுமன், எல்லாம் சரி, நீர் போய் மந்தாகினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயணப் பாராயணம் செய்யும்..என்றார்...!

ravi said…
அன்றைய தினம் தாசர், ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்பு ராம, லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்று கட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தார்..!

எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர்..!

வந்தவர்களில் ஒருவன் நல்ல கருப்பு நிறம், மற்றவன் தங்க நிறம் முகத்தில் பத்துப் பதினைந்து நாள் வளர்ந்த தாடி..

சுவாமி, கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர்.. இருக்கிறது...
தருகிறேன் என்றார் தாசர்..!

சந்தனம் கேட்ட இளைஞர்கள், சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை.நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள் என்றனர்..!

[வட இந்தியாவில் கங்கை முதலிய நதிக்கரைகளில் பண்டாக்கள் (சாதுக்கள் உட்கார்ந்து கொண்டு...

ravi said…
நதியில் நீராடி வருபவர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது ]

அதற்கென்ன, இட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோடு சந்தனத்தைக் குழைக்கிறார்..!

அந்த கருப்பு இளைஞன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். தாசர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார்..!

அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் தன்னை மறந்துவிட்டார்..!

அந்த இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தைத் தன் கட்டைவிரலில் எடுத்து..

தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான்..!

தன்னுடன் வந்தவனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந்திருந்த படித்துறைக்கு அருகில் ஒரு மாமரம், மரத்தின் மீது இருந்த கிளி கூவியது..!

*சித்ர கூடகே காடபரே பகி*
*ஸந்தக கீ பீர..*
*துளசிதாஸமே சந்தந கிஸே..*
*திலக தேத ரகுபீர...!*

பொருள் : சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம்...
துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார்...
ராமன் திலகமிடுகிறார்..

இதைக் கேட்ட துளசிதாசர் திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தார்..!

சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்தக் கருப்பு இளைஞன்..!

ராமா, உனக்கு இதைவிட பொருத்தமான நாமம் ஏது? என்று கதறிக்கொண்டே..

அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசிதாசர்..!

மறுகணம் ராம, இலட்சுமணரைக் காணவில்லை...!!

"கடவுள் தன்னை முழுவதுமாகச் சரணடைந்த உண்மையான பக்தர்களுக்குக் கலியுகத்திலும் ...

எந்த ரூபத்திலும் காட்சி தருவார்...
இது சத்தியம் என்பதை நிரூபிக்கிறது துளசிதாசரின் சரிதம்..!!

ஜெய் ஸ்ரீ ராம்.🙏🙏
ravi said…
ராமநவமி ஸ்பெஷல்.
*************************
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார்.
எதிரே ஒரு வயதான தம்பதி அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலி ல் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
''
ravi said…
ஸ்வாமி, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலி ருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணி ட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யணும்.."'
மெல்லிய குரலில் , பேசினார் அவர்;
ravi said…
வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்று ம், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவையெல்லா வற்றையும் தாண்டி , அம்மூவரின் முகலாவண் யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது.
ஒருகணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதா ன புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ;
ravi said…
அதற்கென்ன பேஷாய் தங்கலாம். இரவு போ ஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ"
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின், அடுக்களையை நோக்கி, உரத் த குரலில் ,
'' கமலா,குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..''
என்றார் ; அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள், அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பி ல் விரிந்தன.
' யார் இவர்கள் ?'
'' கமலா ...'' தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ;
''
ravi said…
கமலா இவர்கள் நமது விருந்தாளிகள். இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய்''
தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவா றே இயல்பாய் பேசினார் அவர் ;
'
ravi said…
அடடா, வீட்டில் இரண்டு பேர்களுக்கு போது மான அரிசியே இல்லை .இப்போது, ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானா ல் அரிசிக்கு என்ன செய்வது ? பக்கத்து வீட்டு க்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் '
உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல், புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோ க்கி விரைந்தாள் ; போன வேகத்திலேயே, அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள், பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவ ரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ;
''
ravi said…
அடடா, எங்கே செல்கிறீர்கள் அம்மா?எங்களு க்காக சிரமப்பட வேண்டாம். எங்களிடம் , வே ண்டிய அளவு தேனும், தினை மாவும் இருக்கி றது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்.'' அவ ளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை, வியப்புடனும் , தர்மசங்கடத்துட னும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர்.
ravi said…
தயக்கத்துடனும், சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள், உணவுத்தயாரிக்க அடுக்களையை நோக்கி விரைந்தாள்.
அன்று இரவு, அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற தியாகராஜர், அவர்களுட ன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.
பொழுது விடிந்தது, காலைக்கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து, வழக்கம் போல கண்களை மூடியவாறு, ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார..
"
ravi said…
ஸ்வாமி .." எதிரே புன்னகையுடன் அந்த முதியவர். அருகே, அவரின் பார்யாளும், மற்று ம் அந்த இளைஞனும் . அந்த முதியவர் தொடர்ந்தார்.
'' ரொம்ப சந்தோஷம், நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் இரவு தங்க இடம் கொடுத்து வாய்க்கு ருசியா ய் ஆகாரமும் கொடுத்து அன்பாய் உபசரித்தத ற்கு மிக்க நன்றி ..''
ravi said…
கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச,
அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரி ன் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப, தியாகரா ஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்.
அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அவர்கள் செல்வ தை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிரு ந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது அந்த வயோதி கர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி, சீதையாக வும், அந்த இளைஞன் அனுமனாகவும் தோற்ற மளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு.
கண்கள் பனிசோர நா தழுதழுக்க தன்னை மற ந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்.
''
ravi said…
என் தெய்வமே, தசரதகுமாரா, ஜானகி மணா ளா, நீயா என் இல்லத்துக்கு வந்தாய்?. என்னே நாங்கள் செய்த பாக்கியம் அடடா, வெகு தூரத் திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே , உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலி யை போக்குவதை விடுத்து , உன்னை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந் தேனே. மகாபாவி நான், என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தை யும் கொண்டு வந்ததுடன், ஒரு தாய் தகப்பனா யிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம்''
நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர்.அப்போது அவர் திருவாயினின்று, அனிச்சையாய் ,
'' சீதம்ம.....மாயம்ம...''
என்கிற கீர்த்தனை பிறந்தது...
ஸ்ரீ ராம் ஜெய ராம். ஜெய ஜெய சீதாராம்.🙏
ravi said…
பெரியவா சரணம் !!

சாக்க்ஷாத் கலியுக ராமனாய் திருஅவதாரம் கொண்டு நம்மிடையே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் மிக எளிமையோடு நம்மை ஆட்கொண்டு அனுக்ரஹிப்பதை நம் பூர்வஜன்ம பலனாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்
என்பதில் ஐயமேயில்லை

குருசரணம் நினைப்போம்; குருசரணம் துதிப்போம்!
குருசரணமே பற்றி நிற்போம் நாளும்!

காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்
ravi said…
ராம ராம ராம
------------------------

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

ravi said…
தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

ravi said…
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை.
ravi said…
உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.

ravi said…
போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.

ravi said…
போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.

ravi said…
கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
ravi said…
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.

ravi said…
திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது

" சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம்

"
ravi said…
ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.

"
ravi said…
முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

ravi said…
கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.

அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா"

" பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன்.

" இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.

" தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை"

" அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன்

ravi said…
அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.

திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்.

" அனுமா! அங்கே பார்.ஒரு பெரிய மணி தெரிகிறது."

ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு .

அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!

ravi said…
அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.

எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.

வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.

"
ravi said…
பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.

அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.

அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்

" அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?

இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் "
என்று வாழ்த்தினார்.

பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும்.

"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

ravi said…
பிறந்த நாளாமே உனக்கு ராமா ...

பிறப்பும் இறப்பும் உனக்கேது ராமா ?

மனிதர்களில் மாணிக்கமாய் வந்தாய் ... மாணிக்கத்திற்கும் ஒரு மகுடம் ஆனாய் ...

அன்பினால் பண்பை வளர்த்தாய் ... பண்பினால் பார் போற்றும் சக்ரவர்த்தியானாய் ...

சக்ரவர்த்தி என்றாலும் சடுதியில் வந்திடுவாய்

எங்கள் வீட்டு பிள்ளையாய் சங்கடங்கள் யாவும் களைத்தே மந்தஸ்மிதம் தந்திடுவாய்...

மந்தஸ்மிதம் என்றும் காட்டும் உனக்கு கூட கோபுரங்கள் கட்டினோம் வடுவூரில் ...

வடூவூர் என்றதுமே புன்னகை பொன்னகையாய் எங்கும் சிந்துதே ராமா

எல்லோருக்கும் எளியவன்
நீ

எல்லோருக்கும் வாழ்வளிக்கும் கர்ணன் நீ ..

எங்கள் நெஞ்சமதில் அரசாளும் சீதா ராமன் நீ

உனக்கு பிறப்பும் மூப்பும் உண்டோ ராமா ...

அப்படி பிறந்திருந்தால் சொல் என்று பிறந்தாய் என்றே ...

பல்லாண்டு பாடினான் கோதையின் நாயகன் ...

தேர் நகர்ந்தது இன்னொருவன் பாடவே பல்லாண்டு ...

ravi said…
கலி தீர்க்க வந்தவனும் நீயே களி அன்று தின்றவனும் நீயே

பாடுகிறோம் நாங்களும் பல்லாண்டு ...

மண்ணுக்குள் சென்றாலும் நாங்கள் மரகதமாய் வந்திடுவோம் ,

பிறவிகள் முடிந்தாலும் ராம நாமம் முடிவதில்லை ...

முடிந்து போகும் வாழ்வு இதில் முடியாத முத்துக்கள் உன் நாமம் ..

அதை சொல்லியே உயர்வடைவோம் ...

இன்னும் பலகோடி நூற்றாண்டு வாழியவே உன் நாமம் . 🙏🙏🙏
Rahul nilosay said…
I am only carrying the baton forward from you Sir. Maybe small improvements are possible since you have already done most of the heavy lifting
Ramanamurthi said…
Sir, never thought your association with L&T will end so soon. Such an illustrious professional career coming to an end. My view, L&T will miss your presence and wisdom. We, all at MBRC, held you in respect and are all happy to be part of your professional journey. We have enjoyed our discussions with you and your team, always.

You have held L&T Metro through its difficult times and never undermined the importance of compliance and financial reporting. Like all good thing to come to an end, it is all the same for an illustrious career to come to an end. Of course, we firmly believe that for a professional like you, there will not be any retirement from professional activity.

It's your association with L&T is coming to an end; we are sure your wisdom and expertise is available now for a lager society than to one entity.

We, all at MBRC, miss you at L&T but continue our relationship further in future. We wish you all the best in all future endeavours, Regards. Ramana Murthy and Team MBRC
ravi said…
Dear JR, thank you for your kind words. I wish you a very happy and fulfilling life post L&T. I am sure you will continue your professional journey in a different role.

I also had the privilege of a long association with you through some form or the other, the latest being listening to your views day before yesterday at the DnB seminar. You always display zeal and enthusiasm in every thing you do and that's what makes you different from others. Warm regards
RSR said…
You are welcome Ravi. You belong to the last generation of F&A professionals who focused on building their career in one institution. The present day professionals prefer to be Rolling Stones with limited shelf life. Well we have to accept the new realities and move on. We will miss your passion and commitment .
Rgds
Suriapraksah said…
Sir
It is a surprising news to me.

We had good journey for the last 9 years.
I really appreciate your efforts by putting forward the interests of L&TMRHL whenever there’s an opportunity.
You worked hard for completing the Project with so many issues.
You are asset to L&T group with varied experience in good projects.

We miss with your lovely jokes and be in touch with us.
We wish that your future endeavours will be successful and enjoy with your grandchildren.
Will talk to you in day or two.
With regards
Surya Prakash

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53