பச்சைப்புடவைக்காரி பாகை மேவிய தோகை மயில் முருகன்!🦚🦚🦚 பகையை வெல்லும் 92 -411

 பச்சைப்புடவைக்காரி🙏🙏

 பகையை வெல்லும் 92

🏆🏆🏆

பாகை மேவிய தோகை மயில் முருகன்!🦚🦚🦚

411



சூரர்களை வாகை சூடிய வடிவேலன் பகையை மாற்றி *பாகை* என்ற திருத்தலத்தில் அருளாட்சி செய்கிறான். 

அங்குள்ள குமரப் பெருமான் திருக்கோயிலின் திருக்கதவம் எப்படி பிரகாசிக்கிறது தெரியுமா?

செந்நிறமான பவளம், பச்சை நிற மரகதம், மஞ்சள் நிறப் பொன், வெண்ணிறமான வைரம் முதலான மணிகளை அதில் பதித்துள்ளார்கள். 

அற்புதமான உயர்ந்த கோபுரம், மதில்கள் சூழ அழகு முருகனின் அருள் தரும் திருக்கோயில் காட்சியளிக்கிறது. 

அங்கே குமரேசப்பெருமானை பிரம்மனும், திருமாலும், சிவபிரானும் நாள்தோறும் அன்றலர்ந்த மலர்களை அணிவித்துப் போற்றுகிறார்களாம். 

இப்படி ஓர் அரிய காட்சியைப் பார்த்து அனுபவிக்கிறார் அருணகிரி நாதர்.🦚🦚🦚



பாடு நான் மறையோனும் தாதையாகிய மாலும்

பாவை பாகனும் நாளும் தவறாதே

பாக நாண் மலர் சூடுஞ் சேகரா மதில் சூழ்தென்

பாகை மாநகர் ஆளும் குமரேசா!’

வளம்மிக்க வயல்களும், சோலைகளும், வாவி களும், நிறைந்து விளங்கும் இந்தத் தலம் ` *தட்சிண சிவகங்கா நதி'* எனும் குசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.🌸🌸🌸



பாகசாலை என்றழைக்கப்படும் இவ்வூர், 

சென்னை - அரக்கோணம் பஸ் மார்க்கத்தில் பேரம்பாக்கத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், சென்னை-அரக்கோணம் ரயில் வழியில் மணவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.  

புகழ்பெற்ற ரத்தின சபை எனும் மணி அம்பலத்தில் ஊர்த்துவ தாண்டவம் ஆடும் நடராஜ பெருமான் விளங்கும் திருஆலங்காடு திருக்கோயில் இத்தலத்தின் அருகிலுள்ளது குறிப்பிடத்தக்கது.🙏🙏🙏



மூலவர் ஸ்ரீபாலசுப்ரமண்யர் ஒரு முகம் நான்கு திருக்கரங்கள் கொண்டு (கமண்டலம், ஜபமாலை) பிரம்மசாஸ்தா வடிவில் கம்பீர மாகக் காட்சியளிக்கிறார். தொண்டை மண்டலத்துக் குரிய புராதனமான சிற்ப அமைப்புடன் கூடிய எழிற்கோலம்.🌸🌸🌸

ஒரு காலத்தில் பாதிரி மரங்கள் இந்தத் திருக்கோயிலைச் சூழ்ந்து காணப்பட்டதால், இம்முருகனை ‘ *பாதிரி ஐயா'* என்று அழைப் பார்களாம். 

உற்சவர் ஒரு முகம் நான்கு கரங்களுடன் வள்ளி, தேவசேனை அம்மையுடன் திகழ்கிறார்.

இங்குள்ள முருகனது வாகனம் ` *மந்திரமயில்* ’ என்றழைக்கப்படுவது சிறப்பாகும். 

தெற்கு பிராகாரத்தில் விநாயகர், வடக்குப் பிராகாரத்தில் வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமண்யர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயிலின் வளர்ச்சியிலும் மேம்பாட் டிலும் மிக்க ஆர்வம் கொண்டு `ஸ்ரீபாலசுப்ரமண்ய சுவாமி வழிபாட்டு மன்றம்' என்ற அமைப்பை நிறுவி, இறைப்பணியும் சமூக நலப்பணிகளும் ஆற்றி வருபவர், சிவத்திரு தி.மெய்கண்ட சிவம் எனும் முருகனருள் தொண்டர்.🥇🥇🥇



இம்மண்ணின் மைந்தரான இவர் தமிழக அரசின் உதவி தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு சார்புச் செயலராக இருந்து பணிநிறைவு பெற்றவர்.

இவ்வாலயத்தின் அறங்காவலர் குழுத்தலைவராகவும், திருப்பணிக் குழுத்தலைவராகவும் விளங்கி, கடந்த 35 ஆண்டுகளாக இந்தத் திருக்கோயிலுக்குப் பல திருப் பணிகளை திட்டமிட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.👏👏👏


ராஜகோபுரம் கொடிமரம், திருமடைப்பள்ளி, அன்னதானக் கூடம், பாதுகாப்புப் பெட்டகம் முதலான மாபெரும் திருப்பணிகளை நிறைவு செய்து 2006-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நிறைவுபெற்றுள்ளது.

இத்தலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாசிப் பெருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடைபெறு கிறது. 

இந்த வருடம், வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மாசிப் பெருவிழா தொடங்குகிறது. 

இதில் எட்டாம் திருநாளில், முருகப்பெருமான் திருக்கல்யாணம் ஊஞ்சல் சேவையுடன் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 🦚🦚🦚


கிருத்திகை தோறும் அங்க பிரதட்சணம் - அதாவது ஆறு கிருத்திகை தொடர்ந்து வந்து வழிபட்டு, 108 முறை அங்க பிரதட்சணம் செய்து, தாமரை நூல் திரியிட்டு, பசு நெய் தீபம் ஏற்றி, ஒரு மண்டலம் வழிபாடு செய்தால், 

பாகை முருகன் அருளால் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். 

அருணகிரிநாதர், ‘ஆடல் மாமத’; ‘ஈளைசுரம்’; ‘குவளை பொருதிரு’ என்று தொடங்கும் மூன்று திருப்புகழ்ப் பாடல்களில் இந்தத் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். 

இந்தத் தலத்தில் தனியாக விநாயகர், திரௌபதி, மாரியம்மன், திருமால் கோயில்களும் அமைந்துள்ளன.

“பவள மரகத கநகவயிரக பாடகோபுர அரிதேரின் பரியும் இடறிய புரிசை தழுவிய *பாகை மேவிய பெருமாளே”* 
- எனும் அருணகிரியாரின் அற்புதத் திருப்புகழைப் பாடி, நீங்களும்  தோகை மயிலில் வரும் பாகை முருகனை வழிபட்டு இன்புற வாருங்கள்.🥇🥇🥇



அம்மா அற்புதம் . அதி சுந்தரம் . 

ரவி ... முருகன் பெயரோடு இணைந்த சொற்கள் இவை .. 

இவைகளை முருகனிடம் இருந்து சொல்லும் பொருளுமாய் இருக்கின்ற எங்களை போல , பிரிக்க முடியாது


739 லயகரீ-

நாட்யத்தையும்  சங்கீதத்தையும்  இணைக்கும் பாலம் தான் அம்பாள் ஸ்ரீ லலிதா. 

 *ஸ்வரம் தான் அப்பா, லயம் தான் அம்மா என்று ஒரு வாசகம் உண்டு.*  

லயம்  சங்கீத ஞானத்தை உடன் சேர்ந்த தாள வாத்யத்தோடு  இணைத்து அனுபவிப்பது ரசமான அனுபவம்.  

அனுசரித்து  அதை வெளிப்படுத்துவது.
தியானத்திற்கும் அப்பாற்பட்டது லய நிலை

.  

சங்கீத தேவதைகளுடன் ஒன்றிய நிலை.  தான் என்ற உணர்வு கரைந்து தெய்வீகமான இசையுடன் கலப்பது பற்றி சிவசூத்ரம் (III.31)  '' *ஸ்திதி லயவ்* '' அதாவது  பரமேஸ்வரனின் சக்தி விரிந்தும் சுருங்கியும்  பிரபஞ்சத்தை ஆளுமை செய்வது. 

இதை தான்  ''நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே '' என்று ஒரு பாட்டில் கேட்டோம். சிவசக்தி.🙏🙏🙏🙏🙏

*740 லஜ்ஜா* -  

நாணம்  மிகுந்தவள்  அம்பாள்.

பெண்மைக்குரிய பண்பு.  

அம்பாளை தனியே உபாசிப்பது இதனால் தான். 

அம்பாள் கூட்டம்  ஆரவாரம் கோஷ்டியை விரும்பாதவள் . 

தனி மனது நினைப்பதை அறிபவள். 

*741 , ரம்பாதி வந்திதா*  -  

ரம்பை, மேனகை, ஊர்வசி திலோத்தமை போன்ற  தேவலோக  அரம்பையர் வணங்கும் தெய்வம் அம்பாள்  என இந்த நாமம் அறிவிக்கிறது.   

ரம்பை குபேரன் மகன் நள குபேரன் மனைவி.  

ராவணனால் ஒருமுறை கடத் தப்பட்டவள்.  ராவணனுக்கு  கடத்தல் புத்தி அடிக்கடி தோன்றும் போல் இருக்கிறது.  

ரம்பைக்கு கௌரி என்றும் பெயர் உண்டு.  அவள் அழகை இது பறைசாற்றுகிறதே.💐💐💐



          ======👌👌👌👌👍👍👍💐💐💐========

Comments

ravi said…
*கீழ்க்கண்ட விடயங்கள் அனைத்தையும் நான் நேரில் சென்று பார்க்க ஆசைப்படுகிறேன்*
*பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !..*

*1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.*

*2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.*

*3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.*

*4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.*

*5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.*

ravi said…
6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.*

*7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )*

*8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.*
ravi said…

*9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.*

*10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.*

ravi said…
*11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.*

*12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.*
ravi said…

*13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.*

*14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.*

*16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.*

ravi said…
*17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.*

*18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.*
ravi said…

*19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.*

*20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.*

*21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.*

ravi said…
*22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.*!

*23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.*

.
ravi said…
*24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.*

*25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.*

*26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.*

ravi said…
*27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.*

*28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.*

*29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.*

ravi said…
*30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.*

*31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.*

ravi said…
*32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.*

*33. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.*

ravi said…
*34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.*

*35 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.*

*36 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.*

*வாழ்க வளமுடன்...*
*பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*!
S G S Ramani said…
இத்திருதலத்தை வார்த்தை சித்தரின் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் அம்மா...மிக்க நன்றி அம்மா..

இப்பொழுது உள்ள சூழ்நிலையில் வெளியில் செல்வது என்பது எப்பொழுதும் முடியாத ஒன்றாகி விட்டது அம்மா...இப்பதிவின் மூலம் அறிய வைத்ததிற்கு நன்றி ...

ஓம் சரவணபவ...

🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*752 மஹாக்ராஸா* महा-ग्रासा -

எதையும் விழுங்குபவள்.

இந்த நாமம் என்ன சொல்கிறது என்றால் அம்பாள் எனும் பிரம்மத்தில் சர்வமும் அடக்கம்.

கதோபநிஷத் ( 1.ii.25) மனிதரில் சிறந்தவர்கள் ஆத்மாவுக்கு இறை போன்றவர்கள் என்கிறது.

மரணம் எல்லோரையும் முடிவுக்கு கொண்டுவருகிறது என்றாலும் அது தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போன்றது ஆத்மாவுக்கு.

*753* *மஹாஶனா* |महा-शना -

சிறந்த உட்கொள்பவள் அம்பாள்.

பிரபஞ்சத்தை அழிப்பவன்.

ஆக்கலும் ஆழித்தலும் தொழிலாக கண்ட சக்தி அல்லவா?.

மேற் சொன்ன நாமத்தின் பொருள் இதற்கும் பொருந்தும்.

எல்லாவற்றையும் தன்னுள் கொள்பவள் என்று மீண்டும் வலியுறுத்துகிறது.💐💐💐👌👌👌
ravi said…
நம் எல்லோருக்கும் இலவசம் என்ற சொல் மிகவும் பழக்கமாகி விட்டது .

Freebies இல்லாத வாழ்க்கையை எண்ணிக்கூட பார்க்க முடிவதில்லை ...

எதிலும் ஒரு பலன் எதிர் பார்க்கிறோம் .

பலன் இல்லாமல் எதையும் செய்ய மனம் முன் வருவதில்லை ..

இந்த ஸ்லோகம் சொன்னால் உடனே உள்மனம் கேட்கிறது ...

என்ன பலன் கிடைக்கும்??? என்று ....

நாம் கேட்கும் அளவுக்கு நம்மை பேச வைக்கிறாளே அதுவே பெரும் பலன் தான்

எவ்வளவு ஊமைகள் தினம் தினம் பார்க்கிறோம் ...

எவ்வளவோ மகான்கள் இந்த மண்ணுலக செல்வம் வேண்டாம் என்று துறக்கிறார்கள் நல்ல ஒரு உதாரணம் பட்டினத்தார் , புரந்தர தாசர்

நாமோ இன்னும் இன்னும் என்று சேர்த்து வைக்கிறோம்

பொன்னையும் பாவ மூட்டைகளையும் ...

சாதாரண மனிதர்கள் நாம் ..

ஆசா பாசங்களுக்கு அடிமை ஆகிவிட்டோம் ..

ravi said…
அவளே மனம் கனிந்து பரவாயில்லை ஒவ்வொரு பாடலுக்கும் இருக்கும் பலனை சொல்

அப்பொழுதாவது இவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்க்கிறேன் ...

அபிராமியின் வார்த்தைகள் காற்றில் கீதம் என பண் இசைக்கும் பரிமள யாமளை பைங்கிளியாய் மிதந்து வந்தன ...

அதன் தாக்கம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு தொகுப்பு 🥇🥇🥇
ravi said…
*கணபதி காப்பு*

ஞாபக சக்தி பெருகும் .. விக்னங்கள் விலகும்

*பாடல் 1...*

*உதிக்கின்ற செங்கதிர் ...* ☀️☀️☀️

ஞானமும் நல்வித்தையும் பெறலாம்

பாடல் 2 .

*துணையும் தொழும் தெய்வமும்*

பிரிந்தவர் ஒன்று சேரவைக்கும்

3 வது பாடல்

*அறிந்தேன் எவரும் அறியா மறையை,*

குடும்பக் கவலையிலிருந்து விடுபட வைக்கும் . எல்லாம் நல்லதே நடக்கும் . இந்த துன்பமும் கடந்து போகும் 🦜🦜🦜
ravi said…
4வது பாடல்

*மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி*
*குனிதரும் சேவடிக் கோமளமே!*

*உயர் பதவிகளை அடைய , உயர்ந்த இடத்தை அடையலாம் . புகழ் தேடி வரும்

5வது பாடல்

*பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்*

மனக்கவலை தீரும் மனதில் சாந்தி பிறக்கும்💐💐💐
ravi said…
6வது பாடல்


*சென்னியது உன்பொன் திருவடித்தாமரை*

மந்திர சித்தி பெறலாம் ..

7வது பாடல்

*ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்*

மலையென வரும் துன்பம் பனியென நீங்கவைக்கும் 🙏🙏🙏
ravi said…
8வது பாடல்

*சுந்தரி! எந்தை* *துணைவி! என் பாசத்* *தொடரைஎல்லாம்*
*வந்தரி;*

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட 🥇🥇🥇
ravi said…
9வது பாடல்

*கருத்தன, எந்தை தன் கண்ணனென*

அனைத்தும் வசமாக
ravi said…
10வது பாடல்

*நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;*

மோட்ச சாதனம் பெற
ravi said…
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
ravi said…
திருக்கடையூர் அபிராமி *41*

*பாடல் 39*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
இந்த பாடலும் மிகவும் அருமையான ஒன்று .. நீ அருள காத்திருந்தும் அதை நான் சரிவர உப்யோகிப்படுத்தாமல் இருந்து விட்டேன் . உன் மலரடி பற்றவில்லை உன் நாமம் சொல்ல வில்லை ..
ravi said…
இதனால் எனக்கு இன்னும் பிறவிகள் வரலாம் , கர்ம வினைகள் தொடரலாம் .. இது முழுக்க முழுக்க என் குறையே உன் குறை அல்ல .. இருந்தாலும் நான் உன் குழந்தை அப்படி யே விட்டு விடாதே .. என் அந்திம காலத்தில் எமன் என் பக்கம் வராமல் பார்த்துக்கொள். நீ என் பக்கம் இருந்தால் என் பிறப்புக்கு மரணம் ஏற்படும் அதைத்தான் நான் விரும்புகிறேன் .

ravi said…
எப்படி எல்லாம் கெஞ்சுகிறார் பட்டர் ..

மனதில் உறுதி வேண்டும் .

அவள் காப்பாத்துவாள் என்ற நம்பிக்கை வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக இந்த பாடலில் நமக்கு விளக்குகிறார் அழகிய தமிழில் 🙏🙏🙏
ravi said…
*39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற*

ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு;

அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு;

மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று;

முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!👏👏👏🥇🥇🥇
ravi said…
*39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற*

*ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு;*

அம்மா... உன் தாமரை பாதங்களை பற்றிக்கொண்டால் நீ எங்களை ஆட்கொள்ளுவாய் ..

இதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை ..

அந்த தாமரை பாதங்கள் எங்களுக்கு ஆளுமை ( leadership position) தரும் .

நாங்கள் சொல்வதில் பொருள் நிறைந்து இருக்கும் .

மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் .

உயர்ந்த நிலையில் எங்களை நிறுத்தி அழகு பார்க்கும் . 🥇🥇🥇
ravi said…
*39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற*

ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு;

*அந்தகன்பால்*
*மீளுகைக்கு உன் தன் விழியின் கடை உண்டு;*

அம்மா கருணையே இல்லாத எமன் என் உயிரை எடுக்க வரும் போது நீ என் அருகில் கூட வந்து நிற்க வேண்டாம் .

உன் கடைக்கண் பார்வை ஒன்று போதும் ..

அதுவே எமனை ஓட ஓட விரட்டி அடிக்கும் ..

மரணமே எனக்கு வேண்டாம் என்று கேட்க வில்லை ..

பிறப்பற்ற மரணம் வேண்டும்

ravi said…
இனி ஒருமுறை ஒரு தாயின் கருப்பையில் உருவாக கூடாது ..

நீ வந்தால் என் வினை பயன்களை மாற்றி அழியா புகழும் வீடும் முத்தியும் தருவாய் ..

இவைகளை எமானால் கண்டிப்பாக எவருக்கும் அளிக்க முடியாது . 🦚🦚🦚
ravi said…
*39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற*

ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு;

அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு;

*மேல் இவற்றின்*
*மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று;*

அம்மா இப்படி உன்னை துதித்து வணங்கும் வாய்ப்பை நான் பயன் படுத்திக்கொள்ள தவறி விட்டால் அதனால் ஏற்படும் முழு பலன்களுக்கும் நானே காரணம் .

உன்னை குறை சொல்லவே முடியாது ..

ravi said…
உன் பாதங்களை காட்டினாய் ..👣👣 பற்றிக்கொள்ள தவறி விட்டேன்

உன் கரங்களை🙌🙌 அசைத்தாய் ... அந்த அசைவை கவனிக்கத் தவறி விட்டேன்

உன் கடைக்கண்ணால்👀 என்னை பார்த்தாய் ..

உன் பார்வையில் விழாமல் என்னை பார்த்துக்கொண்டேன்

உன் முத்து பற்களால்😁 புன்னகை உதிர்த்தாய் .. உன் சிரிப்பின் அழகை ரசிக்க மறந்தேன்

இவை எல்லாமே என் குறைகள் தாயே!!...

பாவம் நீ என்ன செய்வாய் ??

அம்மா அதற்காக என்னை கை விட்டு விடாதே .. 🙏

மன்னிக்கும் , மறக்கும் சுபாவம் அதிகம் கொண்டவள் நீ ...

மன்னித்து என்னை ஆட்கொள் என் அம்மே!!

புவி ஏழையும் பூத்தவளே 👏👏👏🦚🦚🦚
ravi said…
*39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற*

ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு;

அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு;

மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று;

*முப்புரங்கள்*
*மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!* 👏👏👏🥇🥇🥇

அம்மா முப்புரத்தை

மேரு மலையை வில்லாக்கி திருமால் எனும் அம்பால் தொடுத்து பரமேஸ்வரன் அவைகளை பஷ்மமாக்கினான் .. இப்படிப்பட்ட மிகச் சிறந்த வில்லானின் இட பாகத்தில் இடம் பெற்றிருக்கும் பேரொளியே ..

ஒளி வீசும் வாள் போல நெற்றியை உடையவளே என் உமையே ..
காப்பாற்று உன்னை விட்டால் வேறு நாதி இல்லை .. நீயே சரணம் சரணம் 🙏🙏🙏
ravi said…
*சுருக்கம்*

முப்புரங்களையும் எரிக்கும் பொருட்டு மேருமலை யாகிய வில்லை வளைத்து, திருமாலாகிய அம்பைத் தொடுத்த சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்த அன்னையே!

ஒளிவீசித் திகழும் வாள்போன்ற வளைந்த நெற்றியையுடைய தேவி!

என்னை ஆட்கொண்டருள் வதற்கென உன் திருவடித் தாமரைகள் உள்ளன.

காலனின் பிடியிலிருந்து என்னை விடு வித்துக்காக்க உன் கருணைத் திருவிழிகளின் பார்வையுண்டு.

இவையெல்லாம் இருந்தும் உன்னைத் தொழுது வணங்கிப் பயன் பெறாததெல் லாம் என் குறைதானேயன்றி, உன் குறையன்று.🙌🙌🙌
ravi said…
சுகத்திற்கு பின் துக்கம்

துக்கத்திற்கு பின் சுகம்

சுகமும் துக்கமும்
மனிதர்களுக்கு

சக்ரம்போல் சுத்தி சுத்தி வருகிறது

(சுகமும் நிரந்தரமில்லை

துக்கமும் நிரந்தரமில்லைஎன. தாத்பர்யமாம்)

சுகஸ்யானந்தரம் துக்கம்
துக்கஸ்யானந்தரம் சுகம்
சுகம் துக்கம் மனுஷ்யானாம்
சக்ரவத் பரிவர்ததே
ravi said…
*மகா பெரியவா சரணம்*

1953 ஆம் வருடம் நுங்கம்பாக்கம் ஜம்புலிங்க நாயகன் தெருவில் மகாபெரியவர் தங்கியிருந்தபோது அடுத்த வீட்டில் பழம் பெரும் கர்நாடக சங்கீத பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் குடியிருந்தார்.

ஒரு நாள் மகாபெரியவர் பூஜை செய்துகொண்டிருந்த போது பக்கத்துக்கு வீட்டில் பாட்டு சத்தம் கேட்டது.

ravi said…
சுருதி சுத்தமாக சுநாதமாக "விநாயகுனி…." என்ற மத்தியமாவதி ராகத்தில் அமைந்த தியாகராஜ கீர்த்தனையை தான் விஸ்வநாத ஐயர் பாடிக்கொண்டிருந்தார்.

அந்த பாடலில் "அனாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி …." என்ற நெகிழ்வான வரிகளில் தீர்க்கமாக நிரவல் செய்து அவர் பாடிய தெய்வீக கானம் காந்தம் போல் அனைவரையும் ஈர்க்க ,
பூஜை செய்து கொண்டிருந்த மகாபெரியவர் திடீரென்று கிளம்பி வித்துவான் வீட்டிற்குள் நுழைந்தார்.

ravi said…
பரமேஸ்வரனே நேராக வந்ததை பார்த்து விஸ்வநாத ஐயர் தம்பதி சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனே கோலம் போட்டு , மாவிலை கட்டி, பூர்ணகும்பம் என்று எத்தனித்த அவர்களிடம் பெரியவர்

"அதெல்லாம் இருக்கட்டும்…….விஸ்வநாதா என்னை பூஜையில் உட்காரவிடாமல் உன் இனிய பாட்டினால் இங்கே ஈர்த்து விட்டாய். நீ க்ஷேமமாக இருப்பாய்" என்று ஆசிர்வதித்தார்.

ravi said…
அப்போது "நாத தனுமனிசம்" என்ற தியாகராஜ கீர்த்தனையை பற்றி விரிவாக உரைத்த பெரியவர் எவ்வாறு பரமேஸ்வரனின் ஐந்து முகங்களிலிருந்து சப்தஸ்வரங்கள் பிறந்தன என்பதை நயம்பட எடுத்து உரைத்தார்.

அப்போது வித்துவான் சொன்னார் "எனக்கு பூஜை ஆச்சாரம் எதுவும் தெரியாது பெரியவாள். எனக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கோ" என்றார்,

ravi said…
அதற்கு பெரியவாள் "உன் உடம்பில் காமாக்ஷி ரேகை ஓடறது. நன்னா சங்கீதம் பாடியே ஸ்வாமிக்கு நீ பாமாலை சாத்து" என்று ஆசிர்வதித்து விட்டு கிளம்பி சென்று விட்டார்.

பெரியவர் சென்ற பின்னும் அந்த திருவுருவமும் அவரது கழுத்தில் அணிந்திருந்த ருத்திராக்ஷ மாலையும் வித்துவான் கண்ணிலேயே இருந்தது.

மனதில் அந்த ருத்திராக்ஷ மாலை தனக்கு கிடைக்காதா என்று ஒரு ஏக்கமும் இருந்தது.

அந்த ஏக்கத்தினை தன மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் 1970 மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் மறைந்து விட்டார்.

இது நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு 1983 இல் சதாராவில் பெரியவர் முகாமிட்டுருந்தார்

ravi said…
பாடகர் விஸ்வநாத ஐயரின் மகனும் மிகச்சிறந்த பாடகருமான மகாராஜபுரம் சந்தானம் ஒரு மாலை பொழுதில் அப்போது தரிசனம் செய்ய வந்திருந்தார்.

வா சந்தானம் …..பாடு பாடு. மோஹன ராகம் பாடு . அது உங்க குடும்ப சொத்தாச்சே என்று பெரியவர் சொல்ல எல்லோர்க்கும் பரவசம் ஏற்படுத்தும் வகையில் சந்தானம் அவர்கள் பாட பெரியவர் உட்பட அங்கிருந்தோர் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர்.

அதன்பின் பெரியவர் நீ இங்கே தங்கிவிட்டு காலையில் செல் என்று அன்பு கட்டளை இட்டார்.

ravi said…
பெரியவரின் அறைக்கு பக்கத்துக்கு அறையில் சந்தானம் குடும்பத்தினர் தங்கியிருக்க அன்றிரவு பாடகர் உறக்கமின்றி புரண்டு படுத்தார்.

அவர் மனதில் தனது தந்தை ஆசைப்பட்ட அந்த ருத்திராக்ஷ மாலை தனக்காவது கிடைக்குமா என்ற ஏக்கம். விடியற் காலை 3 மணி இருக்கும் உறக்கமின்றி பாடகர் ஏதோ அரவம் கேட்டு எழுந்தார்.

ஜன்னல் வழியே பார்த்த போது பெரியவர் தானே தன் அறையை சுத்தம் செய்வதை கண்டார்.

இதை பார்த்தவுடன் பெரியவர் வா சந்தானம் மோஹனம் பாடி எவருரா கீர்த்தனை பாடு என்று சொல்ல

மீண்டும் வித்துவான் தனது மோகனாஸ்திரத்தினால் பெரியவரை கட்டிப்போட
அப்போது நிகழ்ந்தது அற்புதம்.

தன் கழுத்தில் போட்டிருந்த ருத்திராக்ஷ மாலையை கழட்டி சந்தானத்திடம் கொடுக்க ஆனந்த கண்ணீருடன் அதனை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினார்.

அந்த மாலை இன்றும் சந்தானம் அவர்களை மருமகன் தியாகராஜனால் பூஜிக்கப்பட்டு வருகிறது

*ஜய ஜய சங்கர*
*ஹர ஹர சங்கர*
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹

🍹சுயநலமிக்க இந்த உலகில் ஒருவரை ஒருவர் பாராட்டுவது என்பது அரிது. அதனினும் ஊக்குவிப்பது மிக அரிது. அப்படியும் சில நல்ல மனிதர்கள் இருக்கின்றனர்.

🍹துணிச்சல் என்பது நமக்கு வெளியில் இருப்பதல்ல. அது நமக்குள்ளேயே இருப்பது. அதை நீ எப்போது உணர்கிறாய் அப்பொழுதிலிருந்து உன் வெற்றிகள் ஆரம்பம்.

🍹மற்றவர்களைப் பற்றி குறை சொல்லுபவர்களை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்களைப் பற்றியும் அவர்கள் மற்றவர்களிடம் அதையே சொல்லுவார்கள்.

🍹நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் சான்றாக இருந்து விடுங்கள். அதுவே இன்றைய வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனை தான்.

🍹தன் மனதில் எழும் சிந்தனைகளை, செயலாக்கும் மனிதர்கள் பாராட்டப் படுகிறார்கள்.

🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹🍹
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
💐மஹாபெரியவா உபதேசாமிர்தம்💐

'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும்.

கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும். சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ....

ravi said…
வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால்,

சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.

யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், செடியாய் பறவையாய் விலங்காய் இருந்தோமோ ! என்னவோ அப்புண்ணிய பலனை ராமனே அறிவான்.

ravi said…
ராம நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene coding இல் உள்ள குணங்களுக்கு காரணமான கோபம்,வெறுப்பு,பொய், பொறாமை,சூது,போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான gene coding யை அழித்து.

ravi said…
ராம நாம அதிர்வு சாந்தம்,பொறுமை,பணிவு,உண்மை தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.

('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)

'ராம நாமா' சொல்ல சொல்ல பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம். அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".

ravi said…
அதுவே உருவம் கொண்டபோது,தசரத ராமனாக,சீதாராமானாக,ரகுராமனாக,கோதண்ட ராமனாக பெயருடன்(நாம ரூபமாக)வந்தது.

உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !

ravi said…
எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.
இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.

ravi said…
நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .

மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி ) முக்தி தரும்.

'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும்.

அது போல 'ராம நாமா' வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை ,
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.

ஸ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ravi said…
சாச்சு. பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகளின் செல்லப் பெயர் இது. ஆனால், இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு. அது… ‘சிவன் சார்’! ஆச்சார-அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச் சடங்குகளும் நடந்தேறின.

ravi said…
கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கல்வி; பதினோராம் வகுப்பு முடிந்ததும் அய்யன் தெருவில் கலை- கைவினைக் கல்விப் பள்ளியில், சித்திரப் பயிற்சி எடுத்துக்கொண்டார். புகைப்படக் கலையில் திறன் கொண்டார்; கும்பகோணத்தில், ‘சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ’ வைத்தார்.

ravi said…
சாச்சுவுக்கு மண வாழ்வில் விருப்பமில்லை. எனினும், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில், அனைத்தையும் துறந்து, தனிமையை நாடினார்.

ravi said…
காஞ்சி மகாபெரியவாளின் அபூர்வமான பல படங்களை எடுத்தவர், சாச்சுதான்! கும்பகோணம் டபீர் படித் துறையில், மகாபெரியவா காவிரியில் குளித்துவிட்டு, படியில் காவிரியை வடக்குமுகமாகப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பின்னே சுமார் நூறு பேர் படிகளில் சுற்றி நிற்பார்கள். இந்தப் படத்தை எடுப்பதற்கு மகா பெரியவா உத்தரவிட, உடனே சிவன் சார், காவிரியில் இறங்கி நின்றுகொண்டு, அதனை அப்படியே படமெடுத் தார்! பிறகு, இதுபற்றிக் குறிப்பிடும்போது, ”பெரியவா எனக்கு வைத்த டெஸ்ட் இது’‘ என்பார், சிவன் சார்! சிதம்பரம் கோயிலை, அதன் 4 கோபுரங்களும் தெரியும்படி புகைப்படம் எடுத்து அசத்தியதும் அவர்தான்.

ravi said…
ஒருகட்டத்தில், போட்டோ ஸ்டூடியோவை, தன் மீது மிகப்பெரிய பக்தி கொண்டிருந்த வெங்டேஸ்வரா ஸ்டூடியோ பெரியசாமியிடம் ஒப்படைத்தார். ‘கேன்வாஸ் போர்ட்ரைட்’ வரைவதில் தேர்ந்தவர் சிவன் சார். இவர் வரைந்த மகாபெரியவாளின் படம், முடிகொண் டான் வாஞ்சிநாதன் என்பவரது வீட்டில் இன்றும் உள்ளதாம்!

ravi said…
திருவண்ணாமலை தேயு!

தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, தனது தேகத்தைக் காட்டி, ‘இது, நெருப்பும் சூடும் கொண்டது; திருவண்ணாமலை தேயு’ என்பாராம் சிவன் சார்.

ஒரு முறை, பஸ் பயணத்தின்போது, சிவன் சார் சீட்டை விட்டு எழுந்துகொள்ள, அருகில் நின்றிருந்தவர் அதில் அமர்ந்தார். அவ்வளவுதான்… நெருப்பின்மீது உட்கார்ந்துவிட்டதுபோல துள்ளி எழுந்துவிட்டாராம் அந்த நபர்! சிவன் சாரின் உடம்புச் சூடு அந்த அளவுக்குத் தகித்தது!



ravi said…
இன்னும் வேறு பாரம் தேவையா?

நல்லி செட்டியார் சிவன் சாரின் பரமபக்தர். இவர், ’நாலு கிரவுண்டில் ஒரு வீடு கட்டி, ஆசாரமான ஒரு சமையற்காரரையும் ஏற்பாடு செய்கிறேன்’ என்றாராம். ஆனால், சிவன் சார் மறுத்துவிட்டார்.

ravi said…
நாதன்ஸ் கஃபே நாதன், அமெரிக்க நண்பர் ஒருவருடன் சிவன் சாரை சந்திக்கச் சென்றார். அவரை நமஸ்கரித்தவர், பெரிய தொகைக்கு செக் ஒன்றை சமர்ப்பித்தார். அப்போது, தான் உடுத்தியிருந்த துண்டைக் காண்பித்து, ”இதுவே எனக்குப் பாரமாக உள்ளது. வேறு பாரம் தேவையா?” என்று ஏற்க மறுத்துவிட்டாராம்.

ravi said…
காமாட்சிப் பாட்டி தந்த அப்பளம்!

தினம் பொழுது விடிந்தால், குளித்து மடியாக உளுந்து அரைத்து, அப்பளம் இட்டு உலர்த்தி, மாலையில் அதை குமுட்டி அடுப்பில் சுட்டு, மேலே நெய்யைத் தடவி அன்புடன் எடுத்து வருவார் காமாட்சிப் பாட்டி. அதில் பாதியோ, கால் பங்கோசிவன் சார் வயிற்றை அடையும். இப்படியே 15 வருடங்கள் தொடர்ந்தது!

ravi said…
ஒருநாள், காமாட்சிப் பாட்டியை பாம்பு கடித்துவிட்டது. டாக்டர்கள் கைவிரித்து விட்ட நிலையில், அவருக்கு வாழைப் பட்டை சாறு கொடுத்தனர். பிறகென்ன… 20 வருஷம் உயிரோடு இருந்தார் பாட்டி. சிவன் சாருக்குக் கொடுத்த அப்பளம் வீண் போகுமா?!

ravi said…
மாற்றம் தந்த திருத்தம்!

காலப் போக்கில் நடந்த மாறுதல்கள், மக்களின் நாகரிக மோகம், பண்பாடு- கலாசார மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து,சிவன் சார் எழுதிய கருத்துக் களஞ்சியமே, ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’.

ravi said…
இந்தப் புத்தகத்துக்கு அட்டைப்படம் வரைந்தவர்ஓவியர் மணியம்செல்வன். அவர், படம் வரைந்தபோது சிறு திருத்தம் சொன்னார் சிவன் சார். ”அந்தச் சிறு திருத்தம் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது; படம் சாந்நித்தியத்துடன்

திகழ்ந்தது”என்ற சிலாகிக்கிறார் ஓவியர் மணியம்செல்வன். ‘எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக, சிவன் சாரின் இந்த நூலைப் பதிப்பிக்கும் வாய்ப்பு கிட்டியது’ என்பார் நர்மதா பதிப்பகம் ராமலிங்கம்.

ravi said…
வைராக்கியம் உள்ளவன் யார்?

ஓர் அவதாரப் புருஷர்- ஜீவன் முக்தர் எந்த நிலையில் இருப்பார்?இதற்கு, தனது புத்தகத்தில் சிவன் சார் தரும் பதில்…

ravi said…
சர்வ சக்திகளையும் கொண்ட ஒருவர் அல்லது கடவுள், இந்த உலகில் அவதரித்தாலும், அவர் மக்கள் அனைவருக்கும் நிவர்த்தி அளிக்கும் தொண்டில் ஈடுபடுவது இல்லை. இது ஒரு நியதி! ஆனாலும், அத்தகைய ஆத்மிக சக்தி என்றொரு மகத்துவம் உண்டு என்பதை உலகம் அறியும் பொருட்டு, ஏதோ தனக்குத் தோன்றும் ஒரு சில சந்தர்ப்பங் களில், அற்புதங்கள் செய்துவிட்டு தன்பாட்டில் மறைந்துபோய் விடுவதும் உண்டு.

ravi said…
ஆன்மிகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள், கீர்த்தியைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நியாயம் கிடையாது. எவனொருவன் பதவி, ஸ்தாபனம், காணிக்கை போன்ற அனைத்தையும் துறந்து தனித்து இயங்குகிறானோ, அவனே வைராக்கியம் உள்ளவன்.’

ravi said…
எல்லாம் தானே சரியாகும்!

அன்பர் ஒருவருக்கு மனக் கஷ்டம். சிவன் சாரிடம் சென்று அனைத்தையும் கொட்டித் தீர்த்து ஆறுதல் பெறுவது என்றமுடிவுடன் சென்றார். அங்கே, வாசல் கதவு சாத்தப்பட்டிருந்தது. உள்ளேயிருந்து சிவன் சாரின் பேச்சுக்குரல் கேட்டது.

ravi said…
எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் சொல்லணும்கிறது இல்லே. என்கிட்டேகூட சொல்ல வேண்டாம். எல்லாம் தானே சரியாகிவிடும்.’

ravi said…
சிறிது நேரம் காத்திருந்தும் எவரும் வெளியே வராததால், கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்ற அந்த அன்பருக்கு ஆச்சரியம்! காரணம், அங்கே சிவன் சாரைத் தவிர வேறு எவரும் இல்லை! பிறகுதான் அன்பருக்குப் புரிந்தது… அவை, தனக்காகவே சொல்லப்பட்ட வார்த்தைகள் என்று! சிவன் சாரைத் தரிசித்து, மன அமைதி பெற்றார் அன்பர்.

ravi said…
மகான்களிடம் தனது குறைகளைச் சொல்லித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்பதில்லை…அவர்களின் சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினாலே, ஊழ்வினைகள் அலறி ஓடிவிடும்.

மற்றொரு தொண்டருக்கு உத்தியோகம் போய் விட்டது. இதுகுறித்து சிவன் சாரிடம் சென்று அவர் பிரார்த்திக்க, ’ஸ்ரீமடத்துக்குப் போய் சந்திர மௌலீசுவரரை தரிசித்து வேண்டிக்கொள்!’ என்றார் சிவன் சார். அந்தத் தொண்டரும் அவ்வாறே செய்ய, பறிபோன வேலை மீண்டும் கிடைத்தது.

ravi said…
ஆங்கரை சுவாமிகளுக்கு அற்புதம்

‘ஆங்கரை பெரியவா எனும் ஸ்ரீகோவிந்த தாமோதர சுவாமிகள்’ என்ற சந்நியாச நாமம் கொண்ட திருவல்லிக்கேணி பாகவத பெரியவர் ஒருவர், சிவன் சார் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர்.

ravi said…
ஆங்கரை சுவாமிகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை ஆகியிருந்தது. பிறகு கை-கால் செயலற்றுப் போனது. பேச்சும் தடைப்பட்டது. இதனால் மனம் வருந்திய அன்பர்கள், சிவன் சாரின் நாற்காலிக்கு அருகில் சுவாமிகளை உட்கார வைத்தனர்.சிவன் சாரின் கால் கட்டை விரல், சுவாமிகள் மீது பட்டபடி இருந்தது. சுவாமிகள் தும்பைப்பூவை சாரின் பாதங்களில் சமர்ப்பித்தார். சிறிது காலத்திலேயே எழுந்து நன்கு நடந்து, பழையபடி உபந்யாசமும் செய்ய ஆரம்பித்தார் ஆங்கரை சுவாமிகள்!

ravi said…
திருவெண்காடு போ..!’

ஒருமுறை, ‘திருவெண்காடு போ’ என்ற சிவன் சாருக்கு உத்தரவிட்டார் மகாபெரியவா. அதுமுதல் தொடர்ந்து திருவெண்காடு செல்லலானார் சிவன் சார்.

திருவெண்காடு புனிதம் வாய்ந்தது. காசியைப் போன்றே, இந்தத் தலத்தின் காவிரி ஸ்நான கட்டத்துக்கு மணிகர்ணிகைஎன்ற பெயர்.

ravi said…
இங்கு கோயில் கொண்டிருப்பவர் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீபிரம்ம வித்யாம் பிகை. புதன் தலமான இங்குதான், சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி வெண்காட்டு நங்கை அவதரித்தாராம். ஆலயக் குளக் கரையில் உள்ள ஆலமரமும், அதனடியில் உள்ள ருத்ர பாதமும் விசேஷமானவை. இந்தத் தலத்தில் மூதாதையருக்கு சிராத்தம் செய்து, ருத்ர பாதத்தில் பிண்டம் அளிப்பது மிகச்சிறப்பு!

ravi said…
பறவை பாஷையும் தெரியும்!

சிவன் சாரின் ஜோதிட மேதாவிலாசமும் வானியல் சாஸ்திர அறிவும், கணிதப் புலமையும் வியக்கவைக்கும். வேத வித்தான ஸ்ரீவிஜயபானு கன பாடிகள் கண்ட காட்சி இது… சிவன் சார், கைப்பிடி நெல்லை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஒருவித ஒலியெழுப்பிக் கூவ, குருவிகள் வந்து, அவரது கையில் அமர்ந்து நெல்லைச் சாப்பிடுமாம்! இதை, மகாபெரியவாளிடம் கனபாடிகள் சொன்னதும், ”சாச்சுவுக்கு மூணு பாஷை தெரியும். உனக்குத் தெரியுமோ?” என்றாராம் மகாபெரியவா. அதாவது, மனிதர்கள், மிருகங்கள் மற்றும் பட்சிகளின் பாஷையை அறிந்தவர் சிவன் சார்!

ravi said…
ஒரு மகாபுருஷரை உலகம் இழக்கிறது!

அது 1994-ஆம் வருடம். ஜனவரி 8- ஆம் நாள் அதிகாலை. நிஷ்டையில் இருந்த சிவன் சார், ‘ஒரு மகாபுருஷரை உலகம் இழக்கிறது’ என்றார். பிற்பகல், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம்வீட்டுக்கு வந்தவர், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார். மூன்று மணி அடிக்க ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, சகஜ நிலைக்குத் திரும்பி, ‘எல்லாம் ஆயிடுத்து கிளம்பலாம்’ என்றார்! சரியாக 2:58க்கு, மகா பெரியவா ஸித்தி அடைந்தார் என்ற செய்தி வந்தது!

ravi said…
கலைஞனாகவும், பலரும் போற்றிய மகானாகவும், ஞானியாகவும், தீர்க்க தரிசியாகவும் திகழ்ந்த, அந்த சாச்சு என்கிறசிவன் சார் யார் தெரியுமா? காஞ்சி மகா பெரியவாளின் இளைய சகோதரர்தான்.
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை...!*

எல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப, அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

‘சஹஸ்ரநாமம்' என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.

ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார்.

ravi said…
அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம்.

அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

“நான் இதைக் கேட்கலையே...நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?

நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே...” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார்.

திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

ravi said…
அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன...?”

‘சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு;
இதை எடுத்துண்டு போ'ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...?” என்றார் சிஷ்யர்.

அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்:

அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்...

அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர்.

ravi said…
இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது.

எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான்.

ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.

ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்...?

அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...?

ஞானியருள் அக்ரகண்யரான பீஷ்மரால்..

"பீஷ்மர்" என்றாலே "பயப்படத் தக்கவர்" என்று அர்த்தம்.

அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர்.

அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

ravi said…
அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ! அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே - தர்மத்தைச் சொல்ல...?' என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.

பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்!

இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார்.

பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான்.

அவன் சொன்னது கீதை; கேட்பது சஹஸ்ரநாமம்.

இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு.

ravi said…
பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார்.

"பகவத் குண தர்ப்பணம்" என்று அதற்குப் பெயர்.

'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று பொருள்.

"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்னும்
போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா?
அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்...

அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்!

சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..?

அதைப் போலே சர்வ வியாபகனானவனை, அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.

நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது.

சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது... நம் சித்தத்திலும் நுழையாது.

"கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால், அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.

இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது.

கீதையைச் சொன்னது பகவான்.

அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம்.

பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.

வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!!

நாராயண! நாராயண!

*தொகுப்பு* :
*ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்*
🦅 *சர்வம்🌎 விஷ்ணு மயம்* 👈

Following audio is the greatness of Sri Vishnu Sahasranamam by Sengalipuram Anantharama Dheekshidhar.👇👇
ravi said…
நாயாகப் பிறவி எடுப்பது ஏன்?

ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான்.
ravi said…
சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல் என்று கேட்டான்.
ravi said…
அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது.
ravi said…
ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது.
ravi said…
என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.

ravi said…
ராமர் சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள் என்று விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது.
ravi said…
அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி. இதனால் தனக்கு தேவையான உணவே சமைக்கவோ உருவாக்குக் கொள்ளவோ தெரியாது.
ravi said…
பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும் இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல் இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல.
ravi said…
பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார்.
ravi said…
நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய் இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.

ravi said…
ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையை பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள். அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல.
ravi said…
இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும் என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார்.
ravi said…
நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. .
ravi said…
சிவாலயம் மடம் கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு அந்தணர் அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள் அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள் அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால் இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன்.
ravi said…
இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.

ravi said…
கருத்து: சிவாலயம் மடம் அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு அந்தணர் ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது. அரசனை காண வரும் யாசகர்களை தடுக்கக்கூடாது. உண்மையான அந்தணர்களின் பொருளை அபகரிக்ககூடாது
ravi said…
A senior lawyer was arguing to get 46 convicts facing death penalty released from being hanged (hung)till death.

Just then his assistant dropped in and gave him a small bit of paper.
The lawyer read it and kept it inside his pocket and continued his arguments.

During the lunch break,
the judge asked him “what info did you receive”?

The lawyer said “my wife died”.
The judge was shocked and said “then what are you doing here? Go”.

The lawyer said “ I can’t bring back my wife’s life,
but can help these 46 freedom fighters get life and prevent them from dying”.

The judge, who was an Englishman, ordered the release of all the 46 men.

The lawyer was none other than the great SARDAR VALLABHBHAI PATEL.

Forget ₹3300 Cr;
even a ₹33000 Cr statue is too small for him.
ravi said…
*அபிராமி அந்தாதி பாடல் பலன்கள் தொடர்கிறது* 🙏🙏🙏

11வது பாடல்

*ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,*

இல்வாழ்க்கையில் இன்பம் பெற
ravi said…
12வது பாடல்

*கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம்*

தியானத்தில் நிலைபெற, மனதில் உள்ள சஞ்சலங்கள் மறைந்திட
ravi said…
13வது பாடல்

*பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்*

வைராக்கிய நிலை எய்த

அன்னபூர்ணே ஸதாபூர்ணே

சங்கர ப்ராணவல்லபே
ஞானவைராக்கிய ஸித்யர்த்தம்

பிக்ஷாம் தேஹிச பார்வதி !!!🥇🥇🥇
ravi said…
14வது பாடல்

*வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;*

தலைமை பெற, உயர்ந்த நிலையை அடைய
ravi said…
15வது பாடல்

*தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்*

பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
Savitha said…
அற்புதமான தொகுத்த பாடல்களின் நன்மைகள்

அபிராமி தாயே 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
S G S Ramani said…
எங்கெங்கு காணினும் முருகனடா....

அறியாத திருத்தலம்.... அழகான நடை...

ஓம் சரவணபவ...

🙏🙏🙏🙏🙏🙏
Savitha said…
விளக்கவுரை அருமை
அவள் பாதங்களை பற்றி கொண்டால் குறை ஒன்றும் இருக்காது
அபிராமவல்லியே
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷
Savitha said…
மிகவும் அருமை
புதிய தகவல்
முருகா🙏🏻🙏🏻🌷
ravi said…
*ATTITUDE MATTERS*

I was a young CA working at Mumbai. Once on a break, I visited the new ICAI branch in my hometown.

I went there concerning some queries about my COP.

The students reminded me of my golden days but there was no center here then!

While I was coming out, I saw two boys contemplating Tu kar de, mai next attempt kar doonga! caught my ear.

I asked them - Is there a problem?

They hesitated to speak.

I told that I am a fresh CA and may understand if they explain.

The two cousins were pursuing the course & they stood there with their exam forms, trying to find extension & last dates, etc.🙌
ravi said…
Short of money to fill the exam form some Rs 1500 so they were insisting each other to appear for both groups while the other one could appear for another group in the subsequent attempt.

I offered them money. They were reluctant to accept but I said, you fill it right away & can return the money when you have it. They took my address.

I moved back & forgot about this. It was done in good faith.

After 3 months, dad called.

He told two boys came with a box of sweets and gave Rs 1500 saying they borrowed it from you.

It instantly clicked. So these guys had cleared their exams!

I have no clue who they were.

*To help someone, one needn't be very powerful or rich. It's the attitude that matters.*🙏🙏🙏
ravi said…
You learn nothing from life if you think you are right all the time.

The body heals with play, the mind with laughter and spirit with joy.

Health does not always come from medicine. Most of the time it comes from peace of mind, laughter and love.
ravi said…
She who is worshipped by those devoted to the kaula tradition

She who is the mother of kumara(subrahmanya) and gananatha(Ganapathi)

She who is ever content

She who is the power of nourishment

She who manifests as intelligence

She who is fortitude

She who is tranquility itself

She who is the ultimate truth

She who is effulgence

She who gives delight ॥ 450 ॥🥇🥇🥇

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை