அபிராமி அந்தாதி -பாடல் 83 - இந்திரன் ஆகும் வழி -
பச்சைப்புடவைக்காரி -527
அபிராமி அந்தாதி
பாடல் 83
இந்திரன் ஆகும் வழி (பாடல் 83)
இந்த பாடலும் , 38 வது பாடலான
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்,
பனிமுறுவல்
தவளத் திருநகையும்
துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
ஏறக்குறைய அதே கருத்துதான் .. ஆனால் விளையாடும் தமிழ் சொற்கள் வேறு வேறு ...
உலகத்தில் இருக்கும் எல்லா இயற்கை சக்திகளும் தேவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அந்த தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்திர பதவி இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களுக்கெல்லாம் உயர்ந்த இன்பம் என்பது சொல்லத் தேவையே இல்லை .
அப்படிப்பட்ட இந்திர பதவியை வேண்டி அடைய வேண்டாதபடி என்றைக்கும் உடையவராக ஒருவர் இருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை இந்தப் பாடலில் சொல்கிறார் அபிராமி பட்டர்.👏👏👏
திருவிளையாடலில் நக்கீரரின் தமிழை , புலமையை இறைவன் சோதிக்க வரும் போது பெண்களுக்கு
இயற்கையிலேயே கூந்தலில் மணம் இருந்ததா என்ற கேள்வி முன்னால் வைக்கப்படும் ... அபிராமி பட்டர் சொல்கிறார் ..
கூந்தல் வரை அந்த கேள்வி போயிருக்கவே அவசியம் இல்லை
அவள் பாதத்தை ஒரு முறை வணங்கிப் பாருங்கள் ...
அதில் வரும் மணம் உங்களையும் உங்களுடைய இனி வரும் எல்லா சந்ததிகளுக்கும் சுகந்தம் தந்து கொண்டே இருக்கும் .. 👣👣
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார்
இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே🌷🌷🌷🙌🙌🙌
விரவும் புது மலர் இட்டு -
விரவும் என்றால் சேர்க்கும் என்று பொருள் அதாவது பல வகை மலர்ந்தும் மலராத மலர்களை சேர்த்து அவைகளை அன்னையின் தேன் மணம் மிக்க பாதங்களில் இட்டு
நின் பாத விரைக்கமலம்-
மணம் மிக்க உன் திருவடித் தாமரைகளை🌷🌷🌷
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் -
இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையவர்கள்... ஆண்டவனை முறையாக வணங்குவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை . அவள் மனம் வைத்தால் அன்றி அவளை வணங்க முடியாது ..
வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், விடியக்காலையில் இறைவனுக்கு அளிக்க பூக்கள் இருக்கும் இடத்திற்கு செல்வாராம் ..
அப்பொழுதுதான் வண்டுகள் சுவைக்காத மலர்ந்தும் மலராத பூக்கள் கிடைக்கும் .. இருட்டில் மனித கண் அவ்வளவு ஒளியை தராததால் புலியின் கண்களையும் மரம் ஏற புலியின் கால்களையும் வேண்டி பெற்றுக்கொண்டாராம் ..
வெறும் மலர் போடுவது பக்தி அல்ல . மனம் லயித்திருக்க வேண்டும் .. சென்னி குனிந்திருக்க வேண்டும் 👏👏👏
அயிராவதமும் - வெள்ளையானையாம் ஐராவதத்தையும்
பகீரதியும் - ஆகாய கங்கையையும்
உரவும் குலிசமும் -
வலிமையுடைய வஜ்ஜிராயுதத்தையும்
கற்பகக் காவும் -வேண்டியதை எல்லாம் தரும் கற்பகச் சோலையையும்
உடையவரே -
இயல்பாகவே உடையவர்கள் (வருந்தி அடைய வேண்டாம்).
எதை தெரிந்து கொண்டால் தெரிந்து கொள்ள வேறொன்றும் இல்லையோ
எதை அடைந்து விட்டால் அடைய வேறொன்றும் இல்லையோ என்று வேதங்கள் சொல்லும் பொருள் அன்னையே அபிராமியையே 🙌🙌🙌
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
இந்திரன் ஆகும் வழி
Comments
கட்டுண்டோர் ப்ரேமையின் மாலையினாலோ..
கண்ணுக்கு அழகாய் காண ஆதிசேஷன் பிணைத்தானோ..
காட்டு மலர்கள் வனமாலையாய் கோர்த்த இன்ப மாலையோ.
காதலெனும் கொடியாக சுற்றிய துளஸியோ..
கருமையிலே ஆகர்ஷிக்கும் கண்ணன்..
கலந்தான் தாமரை வண்ண மேனியள் ராதையுடன்..
கரங்கள் உடலைப்பிணைத்திருக்க
காத்துக்கிடந்தனரோ.
ஓடி வந்து கட்டிணைப்பது போல் இருவர் உடலும்..
ஓயாது ப்ரேமையிலே கலந்திட..
ஒரிருவராய் இருவர் ஒருவராய் மாறியது எங்கனம்..
ஓடிவந்தாள் நாடி வந்தவனின் மார்பிலே புதைந்தாளே..
ஓவியம் சொல்லுதே ஃப்ரேமை யின் கதை..
பரமாத்மா ஜீவாத்மாவுடன் கலந்ததே இன்னேரம்..
நெருங்கிய நேரம் நல்லநேரம்..
நெருக்கமாக இணைந்த நேரம்..
ஒன்றுக்குள் ஒன்றாக கரைந்த நேரம்..
ஒன்று என்ற ஒன்றே இல்லாது போன நேரம்
ஒய்யாரமாக ஒடிவந்தவள்..
ஒடுங்கிப்போனாள் ஆன்மாவிலே கலந்து.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
அத்வைதம் உணர்த்திய கீதையின் சாரம்சம் ...
இரு உயிர்கள் ஓர் உடலில் சங்கமிக்கும் நேரம் ...
சகலமும் மறந்து போகும் காலம் ...
மன்மதன் வெல்லும் நேரம் ...
வெள்ளம் என ஆனந்தம் போடும் தாளம் ...
ராதை மட்டும் தானா கோபி... இல்லை இல்லை
அவன் பிரேமையில் மயங்கும் நாம் எல்லோருமே கோபிகள் தான் ..
கண்ணன் தனை சேர துடிக்கும் பிறவி எனும் மத்தில் சுழலும் ஆவிகள் 🙏🙏🙏
*பதிவு 21* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
தொடர்கிறது.....👁️👁️
தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஶிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு தாயோதன ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித மனங்கோ விஜயதே 🙏🙏🙏
*ஹிமகிரிஸீதே* - மலையரசன் பெண்ணே;
( *தனு* :) வில்
( *பெளஷ்பம்* ) மலர்களாலானது
( *விசிகா* :) பாணங்கள்
( *பஞ்ச* ) ஐந்தும் பூக்களே;
( *ஸாமந்த* :)மந்திரி (வஸந்த)
*வஸந்த ருது;*
( *ஆயோதனரத* :)
போர் செய்ய ஏறிவரும் தேர்; ( *மலயமருத்* )
மலயத்திலிருந்து வீசும் தென்றல் காற்று
( *ததா* *அபி* )அப்படியிருந்தும்
( *அனங்க* :) உடலில்லாத மன்மதன்
( *ஏக* :) ஒருவனாகவே *(தே)* உன்னுடைய
( *அபாங்காத்* )
கடைக்கண் பார்வையால் ( *காம் அபிக்ருபாம்* )
ஏதோ ஒரு கிருபையை ( *லப்த்வா* ) அடைந்து
( *இதம்* ) இந்த ( *ஜகத்* ) உலகம் ( *ஸர்வம்* ) அனைத்தையும் ( *விஜயதே* ) ஜெயிக்கிறான்.👏👏👏
2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ
3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |
4. சிதக்நிகுண்ட ஸம்பூதா
5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா
7. சதுர்பாஹு ஸமந்விதா |
8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா
9.காராங்குசோஜ்ஜ்வலா ||
இருக்கும் போது உன்னை கவனித்துக்கொள்ள முடியவில்லை
ஆனால் உன்னை முழுவதும் எரிக்கும் என் கரங்கள் மட்டும் எரியாமல் நன்றாக இருக்கிறதே ... என்ன விந்தை அம்மா இது ??
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?
2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ?
3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?
வாழை மட்டை பற்றி எரிகிறது ... தொப்புள் கொடியின் தொடர்பை அறுத்து .... 😰😰
பதிவு 44. 12th Sep 2021🙏🙏🙏
ஸர்வ : ச’ர்வ: *சி’வ* : ஸ்தாணுர்
பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4
*சிவ:*
ஹரியும் அவனே ஹரனும் அவனே . எல்லா மங்களங்களையும் தருபவன் . மாயயை போக்குபவன் . திருஉடையான் 🙏🙏🙏
ஈசன் ஒரு கிழவராக உருவெடுத்து பார்வதியிடம் வந்து கேட்கிறார் அம்மா பார்க்க இவ்வளவு அழகாக இருக்கிறாய் ..அறிவும் அதிக அளவில் கொண்டவளாய் தெரிகின்றாய் ..
இளமை இங்கே உன்னிடம் முழுவதும் குத்திகை வாங்கி கொண்டது ...
அழகே இல்லாதவன் பாம்புகளையும் மண்டை ஓடுகளையும் புலித்தோலையும் மானையும் பூத கணங்களையும் ஒரு கிழ எருதும் கூர்மை மங்கிய திரிசூலமும் கொண்டு திரிகிறான்
போயும் போயும் மங்களங்கள் எதுவும் இல்லாதவனையா விரும்புகிறாய் ?
*பதிவு 21 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।
हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं
चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ॥ ४॥
ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ க்ஷுத்³ரப²லதா³
ந மன்யே ஸ்வப்னே வா தத³னுஸரணம் தத்க்ருʼதப²லம் ।
ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம்
சிரம் யாசே சம்போ⁴ தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் ॥ 4॥
ஆனா ஏதாவது ஒரு தெய்வத்துக் கிட்ட நாம மனசை வைக்கணும்.
அந்த தெய்வத்தினுடைய சரித்ரத்தை, ரூபத்தை, நாமத்தை அதிகமா நாம பண்ணிண்டே போனோம்னா ‘ *ஏக பக்திர் விஷிஷ்யதே’* ன்னு கீதையில கூட கிருஷ்ண பரமாத்மா சொல்றார்.
ஸுலபமா ரொம்ப சீக்ரத்துல நமக்கு பலன் கிடைக்கும்.
ஒரு இடத்துல 50 அடி தோண்டினா ஜலம் கிடைக்கும்.
50 இடத்துல ஒரு ஒரு அடியா தோண்டினா ஜலம் கிடைக்குமா?
நம்முடைய பூர்வ புண்யத்துனால பூர்வ வாசனையினால ஒவ்வொரு தெய்வத்தோட குணம் நமக்கு பிடிக்கும்.
ரொம்ப பாக்யசாலிகளுக்கு நல்ல குரு கிடைச்சா அந்த குருவை குணத்தை தியானம் பண்ணிண்டிருந்தாலே போறும்.
அந்த மாதிரி ஏதாவது ஒரு இடத்துல மனசை வெச்சா அந்த concentration, constancy யோட பஜனம்னு ஸ்வாமிகள் சொல்வார்.
அது பண்ணினா இவர் கேட்கற இந்த உத்தம பக்தி வந்துடும்.
அப்புறம் ஞான வைராக்யம் தானா வரும் என்கிறதுனால மஹான்கள் இந்த வழியை காண்பிக்கறா.
அப்படி பரமேஸ்வரனுடைய பாதத்தில் ஏகபக்தி வேணும்னு வேண்டிப்போம்🙏🙏🙏
அவன் மருத்தன் என்பானை அழைத்து, "நீ முன்னே சென்று போர்க்களத்தில் இறந்து கிடக்கும் அரக்கர்களின் உடல்களையெல்லாம், ஒன்றுகூட விடாமல் அனைத்தையும் எடுத்துக் கடலில் வீசிவிடு" என்று சொல்லி,
இதை உன்னையன்றி வேறு எவரிடமும் சொல்லக்கூடாது, சொன்னால் உன் தலையைச் சீவி விடுவேன் என்று கூறி அனுப்புகிறான்.
அரக்கர்களின் பிணங்கள் போர்க்களத்தில் இருந்தால் பார்ப்பவர்களுக்கு இராவணன் பக்கமும் அதிக அரக்கர்கள் இறந்து போனார்கள் என்று நினைப்பார்களாம், அதனால் அவற்றை எடுத்துக் கடலில் வீசும்படி சொல்கிறான்.
அவன் கூறியபடியே அந்த மருத்தனும், அத்தனை அரக்கர் உடல்களையும் கடலில் தூக்கிப் போட்டுவிட்டான்.
சிந்தை ஒழியப் பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவன்".
(My experiences... Ravi ...Episode 113🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*5th Assignment - NGW*
Mind is a flexible mirror. Adjust it to see a better world.
Always help someone in need. You might be the only one who does.
I must talk on a few who kept us going despite unpleasant work environment .
This project in my opinion should not have been awarded to Gr 4 since people in Gr 4 could not think big .
Products produced endorsed this conviction ...
All were caps , packaging materials and value was not great .
Their minds were saturated to think beyond 200 to 300crs turnover .
I will in next pages address where we went wrong ...
Let me recall another departed soul Mr . *Col G.S Sawhney* admin head .
Excellent human being ..
He mastered the art of being a Yes Boss .
He brought military discipline due to which many tried to avoid him .
The unit head R.W.Kuklani was having contessa car which the present generation has no opportunity to know .
Two beautiful features of the car are 1. it drinks petrol like anything and 2 when the belly is full it makes huge noise till we switch off the car .
RWK was a speeder . Entire people lived near and far to sinnar insured themselves on seeing his drive .
Two cattle broke their legs and three trees lost their established branches ...Two passerby admitted in ICUs ... don't know their fate yet.....
🙏🙏🙏
மண்ணுலக பூமிதனில் விண்ணுலக வேந்தனின் அரசாங்கம் கண்டு மயங்காத கண்கள் உண்டோ 👀
விட்டில் பூச்சி போன்ற வாழ்க்கை தனை
அண்ணாமலை ஜோதி🔥 ஆக்கி அங்கே மகர முகத்துடன் சிரிக்கும் ஆதியை கண்டு மயங்காத கண்கள் உண்டோ ? 👀
மான் போன்று மிரட்சி கொண்ட கண்ணும்
மீன் போல் அலை பாயும் விழியும்
காரிய காரணங்கள் இல்லாமல் அருளும் அழகும்
கண்டு மயங்காத கண்கள் உண்டோ ??👀
ஆயிரம் பிறவிகள் வேண்டும்
ஆனந்தமாய் உன் நிழல் காண
ஆனந்த நடம் புரியவேண்டும் உன் குரல் கேள ....
மீண்டும் வருவாய் என்றே மயங்கிய கண்களில் பல இமை மூடி காத்திருந்தேன் ..
கடல் அலை போல் கரை வந்து தினம் தினம் உனை தேடுகிறேன் ...
என் மயங்கும் கண்கள் மயங்காமல் போக மயக்கும் மோகினியாய் மாந்தவமே மீண்டும் புவி தனில் எழுவாயோ
ஏங்குகிறேன் மயங்காத கண்களுடன் மயங்கிப்போக .... 👀👀
சரீர ரக்ஷைக்கு மூன்று வழி சொல்வார்கள் – மணி, மந்திரம், ஒளஷதம் என்று. நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித வியாதிகளைப் போக்கும் குணமுண்டு. நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் நவக்ரஹங்களில் ஒவ்வொன்றுக்குப் பிரீதியானவையாகும்.
மந்த்ர ஜபம், ஜ்வரஹரேச்வரர் கம்பஹரேச்வரர் என்றெல்லாம் வியாதிகளைப் போக்கவே உள்ள மூர்த்திகளுக்குரிய மந்த்ரங்களை ஜபிப்பது, ஸூர்ய நமஸ்காரம் கந்தரநுபூதி பாராயணம் முதலியவற்றால் நோயை குணப்படுத்திக் கொள்வது –
‘ஒளஷதம்’ என்பது மருந்து மூலம் குணம் செய்து கொள்ளும் மருத்துவ சாஸ்திரம். வைத்தியம் என்பது இதைத்தான். ஓஷதி என்றால் மூலிகை. அதன் அடியாகப் பிறந்த சொல்தான் ஒளஷதம்.
ஸித்த வைத்தியத்தில்தான் மணி, லோஹம், பாஷாணம், மற்ற தாதுப் பொருட்களைக் கொண்ட மருந்துகள் ஜாஸ்தி. ஸித்த வைத்யமும் நம் சாஸ்திர ரீதியானதுதான்.
விபூதிக்கு இதிலே தனியான சக்தி. நாட்டு ஜனங்களுகளுங்கூட என்ன உடம்பானாலும் “துண்ணூறு” என்று திருநீறு வாங்கி இட்டுக் கொள்வதையும் வாயில் போட்டுக் கொள்வதையும் பார்க்கிறோம்.
பரமேச்வரனுக்குரிய பில்வ பத்ரம், பெருமாளுக்குரிய துளசி, அம்பாளுக்கு (முக்யமாக மாரியம்மனுக்கு) விசேஷமான வேம்பு – இந்த மூன்று இலைகளை ஒரே அளவு சேர்த்து தினந்தோறும் ஒரு பிடி தின்றுவிட்டால் போதும்;எந்த வியாதியும் வராது என்று ஒரு நாட்டு வைத்தியர் எழுதியிருக்கிறார்.
அசையாத நம்பிக்கையாக பக்தி இருந்தால் அதனாலேயே ரோக நிவ்ருத்தி முதலான எதையும் ஸாதித்துக் கொண்டுவிடலாம்; அல்லது ரோகம், ஆரோக்யம் எதுவானாலும் வித்யாஸமில்லை என்கிற உசந்த நிலையை ஸம்பாதித்துக் கொள்ளலாம். இதிலே வைத்ய சாஸ்திரத்துக்குப் பிடிபடாத மந்திரம், பிடிபடுகிற மூலிகைகள், வேம்பு துளஸி மாதிரியான மருந்துச் சரக்கு
ராவணன் குபேரனை தந்திரத்தால் வென்று அவனது புஷ்பக விமானதைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் வாழ்ந்த மலையைப் பெயர்த்தெடுக்கத் தொடங்கினான்.
கடுமையான வலியால் துடித்த ராவணனின் அழுகுரல் அங்கு தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் காதில் விழுந்தது.
அழகிய அன்பில் ஆலந்துறை சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடப்பெற்ற அற்புதத் தலம். காவிரி வடகரைத் தலங்களில் இது 57-வது தலம். அன்பில் என்பது ஊர் பெயர், ஆலந்துறை என்பது கோயிலின் பெயர், இரண்டும் இணைந்து அன்பிலாலந்துறை என்றானது. அருணகிரிநாதரால் பாடப்பெற்று இது திருப்புகழ் தலமாகவும் விளங்குகிறது.
அம்பாளின் திருநாமம் சௌந்தரநாயகி என்பது. பெயருக்கேற்ற வடிவழகு கொண்டவள் இந்த அன்னை. இந்த அன்னை மகப்பேறு அளிக்கும் தாயாக விளங்கி வருகிறாள். விளக்கேற்றி இந்த அன்னையை வழிபட்டால் நல்ல வரனும் கிடைக்கும் என்கிறார்கள் திருச்சி நகர மக்கள். இங்கு சந்திர தீர்த்தம் வினை தீர்க்கும் தீர்த்தமாக உள்ளது.
இவரை வணங்கினால் காது சம்பந்தமான குறைகள் நீங்கும் என்கிறார்கள். ஜைமினி முனிவர் இங்கு வந்து சாமகானம் பாடியதாகவும், அதை ரசித்த கணபதி பெருமான், தனது செவியைச் சாய்த்து மகிழ்ந்தார் என்றும் இந்த திருக்கோலத்துக்கு மற்றொரு புராணமும் சொல்லப்படுகிறது. சம்பந்த பெருமான் தரிசிக்கவென்று நந்தி இங்கு சுவாமியை விட்டு சற்றே விலகி இருக்கிறார்.
சம்பந்தரும் நாவுக்கரசரும் உருகி உருகிப் பாடிய இந்த பெருமான் மிக விசேஷமானவர் என்கிறார்கள். அதிலும் சத்தியவாகீசப் பெருமானை வணங்கி வலம் வருவோரை அந்த வானுலக தேவர்கள் வலம் வந்து தொழுவர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறைவனை இறைஞ்சுவார்கள் என்று அப்பர் சுவாமிகள் தன்னுடைய பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வலங்கொள் வாரை, வானோர்வலம் கொள்வரே'
- அப்பர் சுவாமிகள்
சகல தோஷங்களையும் நோய்களையும் நீக்கும் சத்தியவாகீசப் பெருமானை வணங்கி நலமும் வளமும் பெறுவோம்!
அன்பில் கிராமம்அமைவிடம்: திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் அன்பில் கிராமம் உள்ளது. அங்குதான் அன்பில் அழகர் கோயிலும், அன்பில் மாரியம்மன் கோயிலும் உள்ளது. காலை 7.00 - 12.30 மணி வரையும், மாலை 4.00 - 7.30 மணி வரையும் திருக்கோயில் திறந்து இருக்கும்.
மா பெரும் சூரன் ... ராவணனைக் காட்டிலும் சிறந்த சிவபக்தன் .
அவன் தேவர்களே இருக்கக் கூடாது என்று வரம் வாங்க பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்தான் ..
தேவர்கள் கலை வாணியிடம் தஞ்சம் புகுந்து இந்த வரத்தை அவள் பதி கொடுக்கவேக்கூடாது என வேண்டினர்
அவன் கேட்க இருந்த வரம் ... பிரம்மன் அவன் முன் தோன்றிய பொழுது
*நித்தியத்துவம்* என்று கேட்க நினைத்தவன் *நித்திரைத்துவம்* என்று கேட்டு விடுகிறான்.
அவன் கேட்ட வரம் ஒரு சாபமாக மாறியது ...
மந்திர ஸ்வரூபமான நாமங்கள் என்று சொன்னேன் ..
ஒரு வார்த்தை தவறினால் கூட அர்த்தம் அனர்த்தமாகி விடும் ..
வீட்டில் இருப்பவர்கள் சொல்வதில்லையா மனசுல இருக்கிறதை சொல்லிவிடு ...
நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியம் அல்ல என்ன சொல்கிறோம் என்பதுதான் ..
அண்ட சராசரங்களை ஆளும் அவள் நாம் என்ன நினைத்தோம் என்ன சொல்ல வந்தோம் என்று ஒவ்வொருவராய் பார்த்துக்கொண்டு வரம் தர முடியுமா??
அப்படி நாமும் எதிர்பார்ப்பது நியாயமா ? 💐💐💐
வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வேண்டும் ஒரு target வேண்டும் ..ஒரு goal வேண்டும் .
கணக்கு வைத்து முன்னேறாவிட்டால் வாழ்க்கை காற்று அறுந்த பட்டம் போல் திசை இல்லாமல் பறக்கும் ...
ஒரு MBA , + two , நீட் , படிக்கவே இவ்வளவு மதிப்பெண்கள் தேவை என்று சொல்கிறோம் அல்லவா இதுவும் ஒரு கணக்குத் தானே ...
சிசுபாலன் ... அவன் தாய் கண்ணனிடம் கெஞ்சுகிறாள்
அவன் ஜாதகப்படி உன் கரங்களினால் மடிவான் .. கண்ணா
கருணை கொண்டு அவனை கொல்லாமல் மன்னித்து விடு என்கிறாள் ..
உடனே கண்ணன் தாயே!!
99 தடவை அவனை மன்னிப்பேன் ..
பிறகு வாழ்வதும் சாவதும் அவன் கையில் இருக்கிறது என்கிறான் ..
கண்ணன் கணக்கு வைத்துக் கொள்ள வில்லை என்றால் சிசுபாலன் இன்று வரை திட்டிக்கொண்டே இருப்பான் கண்ணனும் பொறுமையாய் கேட்டுக்கொண்டே இருப்பான் ...
ஒரு கோடி ராம நாமங்கள் தியாக பிரம்மம் அவர் தந்தை சொல்ல சொல்ல ஆரம்பித்தார் ..
சீதை சமேத ராமரின் தரிசனம் அவருக்கு கிடைத்தது ...
கணக்கு வைத்துக்கொண்டு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் தவறே இல்லை ரவி 🌷🌷🌷
அவர் பாதங்களில் சாஷ்ட்டாங்கமாய் விழுந்தேன்
ஆனால் எவ்வளவு தடவைகள் என்று கணக்கு வைத்துக்கொள்ள வில்லை 🙏🙏🙏
*பதிவு 27* 🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
*கேள்வி 33*
*நான்* :
ஐயனே நேற்று கேட்க வேண்டிய கேள்விகள் இவைகள் ... நேற்றைய வர்ணனையில் மனம் பரிபோனதால் இன்று கேட்கிறேன்
*பட்டர்*
நிலவென வந்தவள் பதில் ஒன்று தந்தவள் மறை சடையோன் பாதி பாகம் கொண்டவள் வரை இல்லா அருள் தருபவள் தரை வான் காணா தவ ஒளி உங்கள் எல்லோரையும் கவசம் போல் என்றும் காக்கட்டும் ...
கேள்விகளை ஆரம்பி ரவி 🙂🙂🙂
ஐயனே ... ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பொருள் புரிந்து கொண்டுதான் சொல்ல வேண்டுமா ?
அவளைப்பற்றி சொல்ல வேண்டும் என்று ஒரு நல்ல எண்ணமும் ஆர்வமும் மட்டும் இருந்தால் போதாதா ...??
நீங்களே ஒரு பாடலில் நான் செய்யும் எல்லாம் உன் தோத்திரங்களே என்று சொல்லி இருக்கிறீர்கள் ..
ஆதி சங்கரரும் அப்படிதான் சொல்கிறார் ...
சரியாக உச்சரிக்காததால் பலன்கள் வராதா ?
சொல்லும் போது பலர் கணக்கு ( count) வத்துக்கொள்கிறார்கள் .. நான் 50 தடவை சொன்னேன் நான் 100 தடவை சொன்னேன் இப்படி ...
இது குழந்தைத் தனம் அல்லவா?
உலகத்தை படைத்த அவளை ஒரு எண்ணிக்கையில் அடக்க முடியுமா ? 💐💐💐
வாழ்வது போராட்டம் என்றே நினைத்திருந்தேன் ... 😡
பூந்தென்றல் பொதி முனி காதி தரும் வரம் என்றே புரிய வைத்தாய் .. 🌺🌺🌺
மனமதில் என் வீடு என் குடும்பம் என் உறவுகள் என்றே வாழ்ந்திருந்தேன் .... 🔥
வீடு அதுவல்ல அழியா முத்தியும் பேறு தரும் வீடே என்றே குரல் தந்தாய் ... 👀👀
உலகம் ஒன்றே குடும்பம்
உயிர்கள் எல்லோரும் என் உறவுகளே என்றே விளக்கி 👏👏👏
குறுகி போன மனமதை அடரும் விசும்பாக்கினாய்... 🌧️🌧️🌧️
ஒன்று கேட்டால் பல தந்தாய் . 🦜🦜🦜
பல கேட்டாலும் மறுக்கா பலன் தந்தாய் ... 🍇🍇🍇
இன்னும் ஒன்று கேட்பேன் தருவாயோ நீ அதை எனக்கு ... 🙌🙌
கல்லும் முள்ளும் இருந்த என் மனம் எனும் காட்டை கடம்பாடவிடை ஆக்கினாய் .. 🥦🥦🥦
என் ஒன்றும் இல்லா சென்னிதனில் உன் பாதம் என்றும் பொருந்தும் வரம் தருவாயோ ...👣👣
தருவதற்கு என்றே பிறந்தவனே .... 🌷🌷
தரம் அன்று இவன் என்று தமியேனும் உன் பக்தர்க்குள் தள்ளத் தகாது என்றே இறைஞ்சுகின்றேன் .. 💐💐💐
பரம் உனக்கே என்றே சரணடைந்தேன் 🥥🥥
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே 💐💐💐
2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ
3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |
4. சிதக்நிகுண்ட ஸம்பூதா
5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா
7. சதுர்பாஹு ஸமந்விதா |
8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா
9.காராங்குசோஜ்ஜ்வலா ||
4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன் ?🔥🔥🔥
5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு ?🔥🔥🔥
6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு ?🔥🔥🔥
*பதிவு 22* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
தொடர்கிறது.....👁️👁️
தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஶிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு தாயோதன ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித மனங்கோ விஜயதே 🙏🙏🙏
அன்னையின் கடைக்கண் பார்வையின் அருளால் அவன் எல்லோரையும் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' எனும்படி வெல்கிறான் ஆகா. அற்புதம்.
அனங்கன் ஒரு சிறந்த சாக்தன் என்பதால் மட்டுமே அவன் ஒரு சாதனை ஆளாகிறான்
இதற்கு ரிஷி மன்மதன்.
அவ்யக்த காயத்ரீச் சந்தம், ராஜராஜேஸ்வரி தேவதை.🌺🌺🌺🌺🌺
(My experiences... Ravi ...Episode 114🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*5th Assignment - NGW*
Cost-of-Living is never expensive. It's the Cost-of-Lifestyle that is expensive.
Associate yourself with people of good quality, for it is better to be alone than in bad company. A negative mind will never give you a positive life.
A stylish walk with commanding tone created goosebumps to many .
All his team members would be in the position of stand at ease ... despite his repeated command of attention ...
Salutes would be given by his staff to each and everyone lavishly ...
One day Kuklani asked for a car to pick him up from his residence in nashik road as his Contessa refused to move around .. col sent a car of contessa comforts to his house with a new driver ..
The driver was given induction programme and was told that kuklani was a terror and to be careful with him while driving ..
Driver was a shy person like many husbands .. he was shivering inside as if his wife was with him .
He reached kuklani 's house in no time .
The car's back door was opened and a brief case was kept inside and again doors were shut .
The new driver guessed kuklani was inside of the car and adjusted the front mirror only to reflect the road ....
He drove the car first time in its designed speed .
When he reached NGW everyone incl col were in uniform and a royal salute was given by everyone .
National anthem was on ...
The car first time stopped at admin building .. people rushed to the car as if it was an ICU case .. alas ... No one got down excepting the new driver ..
It took more than an hour to realize kuklani did not get into that car .. many bottles of soda were immediately supplied to Col and his staff to gain consciousness ...
[28/10, 8:59 am] Metro Kowsalya: Arpudhamana venduthal...🙏🙏🪔🪔Periyava Charanam Charanam Charanam 🌷 🌷 🙏🙏
ஆடல் பாடல் கற்றுக் கொடுத்தவர்கள், கத்தியைச் சுழற்றி யுத்தம் போடச் சொல்லிக்கொடுத்தவர்கள் ஆகியவர்கள்கூட ‘ஆசார்யன்’ என்ற மரியாதைக்குகந்த பெயரைப் பெறும் யோக்யதை ஸம்பாதிக்துக் கொண்டிருந்தார்களென்றால், வேத சாஸ்த்ரம் சொல்லிக் கொடுக்கிறவர்கள், ‘இவனே ஈச்வரன்’ என்று சிஷ்யர்கள் சரணாகதி பண்ணக் கூடியவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதில் ஸந்தேஹமென்ன?
(இன்று குரு வாரம்)
பதிவு 45. 12th Sep 2021🙏🙏🙏
ஸர்வ : ச’ர்வ: *சி’வ* : ஸ்தாணுர்
பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4
*சிவ:*
ஹரியும் அவனே ஹரனும் அவனே . எல்லா மங்களங்களையும் தருபவன் . மாயயை போக்குபவன் . திருஉடையான் 🙏🙏🙏
🌺 பெரியவரே உங்கள் உடம்பில் உள்ள முதிர்ச்சி உங்கள் பேச்சில் இல்லை ... யார் மங்களம் இல்லாதவன் ? யார் ஒன்றும் இல்லாமல் பிச்சை எடுப்பவன் ? யார் மண்டை ஓடுகளுடன் வாழ்பவன் ?
பரப்பிரம்மம் , வேத நாயகன் ஞானத்தின் பிறப்பிடம் பரமேஸ்வரனுக்கு மேலே ஏதும் உண்டோ ?
🌺 திருஉடையான் ... செல்வம் செழிப்பு மங்களம் எல்லாவற்றை யும் அவன் நம் எல்லோருக்கும் பிச்சையாய் போட்டு அவன் பிச்சை வாங்குவதைப்போல்
நடிக்கிறான் .. 🌺
🌺 விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் என் சகோதரன் தனக்கு என்று கேட்டு வாங்கிய திருநாமம் *சிவ* ...
திருமால் விரும்பி ஈசனிடம் கேட்டு வாங்கிக்கொண்ட திருநாமம் *சிவ* ... இந்த நாமத்தை தினம் சொல்வோர் படையாத செல்வம் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அங்கே சீதாதேவி, "கண்டாள் கண்ணால் கணவன் உரு; அன்றி ஒன்றும் காணாதாள்" விஷம் உண்டவள் போல சீதை உடல் ஓய்ந்தாள்.
உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்.
தாமரைப்பூ தீயில் விழுந்தது போல ஆனாள்.🔥🔥🔥
*பதிவு 22 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேச்வராளை சேர்த்து ‘ *சிவாப்யாம் நதிரியம்’* ன்னு அவாளுக்கு நமஸ்காரம்னு சொன்னார்.
அடுத்த ஸ்லோகத்துல சிவானந்த லஹரின்னு சம்புவிலிருந்து கிளம்பி வரக் கூடிய அந்த சிவானந்த வெள்ளம் என் மனமாகிய மடுவில் வந்து தங்கட்டும்ன்னு ப்ரார்த்தனை பண்ணினார்🌺🌺🌺
Till people have moral values of gratitude....
Good day Ravi Sir
இறை தேடல் கவிகள்
பாமரனும் புரிந்துகொள்ளுமாறு....
நெற்றியில் விபூதியும், வாயிலே
முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன்.
சேரா நட்பு சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது
கண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா ?
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா " என்பதாகும்.
அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் " கிருஷ்ணர்" படமாகும்
கடவுளைப்பற்றி சந்தேகம் வருபவர்களுக்கு,
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"
என்று சொல்லும் விளக்கத்தைவிட
வேறு எப்படிச் சொல்லமுடியும்.
இதுதான் கண்ணதாசன்.
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"
என்று சொல்லும் விளக்கத்தைவிட
வேறு எப்படிச் சொல்லமுடியும்.
இதுதான் கண்ணதாசன்.
சினிமாவுக்கு என்று எழுதப்பட்டாலும் உள்ளத்தில் இருப்பதுதானே வரமுடியும்.
"பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்அவனைப் புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன் "
பாமரரும் புரியும்படி கடவுள் தத்துவத்தைக் காட்டுவது அவரின் தனித்துவம்தானே.
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத்தோண்டி கண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள்
என்ன ஞானப் பெண்ணே
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்னசொந்த வீடென்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதை என்ன "
சகல வித தத்துவங்களும் இங்கே பாமரரரும் புரியச் சொல்லி நிற்கின்றார் கண்ண தாசன்
பூமியில் எதற்காக தோழா
பூமியில் எதற்காக .... '
என்று கேள்வி எழுப்பி தனது நிலை எமக்கெல்லாம் காட்டி நிற்கின்றார்.
கவியரசர் அவர்கள்.
ரமண மகரிஷியும் " முதலில் நீ யார் என்பதை அறி என்றுதான் சொல்லுகிறார்.
இப்படியான உயர்தத்துவக் கருத்தை கண்ணதாசன் மிகவும் எளிதாக்கி நமக்கு தரும்விதம் அவரின் உயராற்றலைத்தான் வெளிப்படுத்துகிறது எனலாம்.
உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம் "
நான் - கடலளவே பெற்றாலும் மயங்கமாட்டேன் -அது
கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்"
இந்த நிலை சாதாரணமாக எல்லோருக் கும் வந்து விடமாட்டாது என்பதைக் கவிஞரின் வரிகள் மிக அற்புதமாகக் காட்டிநிற் கின்றன் அல்லவா?
மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்"
வாழ்க்கையில் குழப்பம் வந்தால் தயக்கம்வரும் அதே நேரம்
நடுக்கமும் வந்தே சேரும்.
இது எத்தனை அனுபவமான ஒரு மிகப்பெரிய கருத்து.
தப்பித்துக் கொள்ளவே முடியாதுஎனவே
கலங்காதிருமனமே உன்கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே " எனஆறுதலும் கூறுகின்றார் கண்ணதாசன் அவர்கள்
அதே வேளை
.
வந்த துன்பம் எது என்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு"
என்று புத்தியும் கூறுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மிகவும் முக்கியமாக ஒன்றையும் சொல்லி நிற்கின்றார்..
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"
எத்தனையோ பேர் எம்மைவிடவும்
மோசமாக இருக்கிறார்கள் என்பதை
ஒர் கணம் நினைத்தால்
தாங்கள் படும் துன்பம் பெரிதாகவே தெரியாமல் போய்விடும் என்பதைக் கண்ணதாசன் சொல்லும் இடத்தால் அவர் உயர்ந்த கவிஞ்ஞன் ஆகி நிற்கிறார் எனலாம்.
வாழ்க்கையில் அவர் அனுபவிக்காத இன்பங்களும் இல்லை.துன்பங்களும் இல்லை எனலாம்.
அவற்றை யெல்லாம் அவர் நமக்கு
தனது கவிதைகள் வாயிலாகத் தரவும்
மறக்க வில்லை.
அதுஎங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது எவருக்கும் தெரியாது "
இது பெரிய தத்துவம்தான் ஆனால் இதில் கவிஞரின் ஒரு பங்கும் காணப்படுகிறது.
சிறு கூடல்பட்டியில் இருந்து சென்னை வந்து படுக்க இடமில்லாமல் கடற்கரை ஓரத்தில் படுக்க அங்கும் படுக்க முடியாமல்
போலீஸ்காரர்களால் கண்ணாதாசன் போக்கிடம் இல்லாமல் விரட்டி அடிக்கப்படு கிறார்.
சுத்திச்சுத்தி கடவுளிடம்தான் கண்ணதாசன் வருகின்றார்.எதைச் சொல்லுவதானாலும் கடவுளையும் கூடவே வைத்திருப்பார்.
நல்லவர்க் கெல்லாம்
சாட்சிகள் ரெண்டு .
ஒன்று மனட்சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும்
பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் சாட்சியம்மா --- அதுதான் உண்மையின் சாட்சியம்மா
வேதங்கள், இதிகாசங்கள் மூலம் கற்றோர் மற்றுமே உணரும் தெய்வீகத்தை, எளிமையான சொற்களால் பாமரரும் புரிந்து கொள்ளும்படி, எளிமையாக வடிவமைத்தே
அவர் இன்றும் நம் நினைவுகளில்
உலா வருகிறார் என்பது நிதர்சனம்.