அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 20 பதிவு 17

                              அபிராமி பட்டரும்  அடியேனும் 

கேள்வி பதில் 20

பதிவு 17



கேள்வி பதில் நேரம்

 பதிவு 17 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 கேள்வி 20

 நான் : 

 பட்டரே! காலை வணக்கம் ..   

 பட்டர்

சுந்தரி அந்தரி ஜோதியாய் ஆன என் உமை  உங்கள் எல்லோரையும்  ரக்ஷிக்கட்டும் 🤝🤝🤝

இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌





 நான் பட்டரே தங்களுடைய 56 வது பாடலில் 

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய் நின்றாள்.. என்று அன்னையை விவரிக்கின்றீர்கள் .. 

உங்கள் உறுதி , பக்தி கண்டிப்பாக எங்களுக்கு இல்லை . 

வள்ளலார் சொல்வது போது அங்காடி நாய்களை விட கேவலமானவர்கள் நாங்கள். 

எங்கள் விருப்பத்திற்காக வாழ்கிறோம் .

வேண்டியது கிடைத்தால் அபிராமியை புகழ்வோம் 

இல்லை எனில் அவளை  கல்லெடுத்து அடிக்கவும் தயங்க மாட்டோம் . 

எங்கள் அளவிற்கு இறங்கி வந்து அன்னை அருள் செய்வாளா ?

பட்டர். வெகுவாக வாய் விட்டு சிரித்தார் .இப்படி விழுந்து விழுந்து அவர் சிரித்தது இதுவே முதல் தடவை .

எனக்கு கொஞ்சம் பயமாகி போய் விட்டது . பட்டரே நான் கேட்டதில் ஒரு ஆஸ்யமும் இல்லையே .. ஏன் இப்படி சிரிக்கிறீர்கள் ..

பட்டர் .. இல்லை உனக்கு இதுவரை சொன்னது ஒன்றுமே புரியவில்லை நீ இப்பொழுதுதான் இப்படியா இல்லை எப்பவுமே இப்படி ஒரு ஞான சூன்யம் தானா ? 

👌👌👌





 நான்.. பட்டரே புதிர் வேண்டாம். 

உண்மையில் அதை புரிந்துகொள்ளும் அளவிற்கு மூளையும் எனக்கில்லை.

 பட்டர் அவள் புகழுக்கு மயங்குபவள் அல்ல .. 

உன் கர்ம வினைகளை சரி செய்பவள் .. 

அவள் நினைவு உனக்கு வருவதே நீ கோடி பிறவிகளில் செய்த புண்ணியம் .. 

நீ வேண்டுவது சில சமயம் உனக்கு கிடைக்காமல் போகலாம் . 

ஆனால் அவள் அறிவாள் எது உனக்கு நல்லது ..அதை எப்பொழுது கொடுப்பது என்று . 

நீ திட்டினாலும் கல் எடுத்து அடித்தாலும் கலங்கி போவது அவள் அல்ல உன் வாழ்க்கை .. 

கரை சேர்க்க வரும் ஓடத்தை நீ யே விரட்டி விட்டு நீரில் மூழ்கிறேனே என்று கத்தினால் என்ன அர்த்தம் ?

 நான்  இவ்வளவு ஞானம் வருவதில்லையே . என்ன செய்ய முடியும் பட்டரே .




 பட்டர்

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது

யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு

அது வரை பொறுக்க வேண்டும்  அவள் எண்ணங்களில் என்றும் மிதக்க வேண்டும்..


நான் : எங்களை போன்றவர்களுக்கு சுலபமாக புரியும் படி ஒரு வழி சொல்லுங்கள் 

பட்டர் . அவள் நாமத்தை ஒரு தடவையாவது ஒரு நாளில் எந்த கோரிக்கையும் இல்லாமல் சொல் .. அது போதும் .. 

எறிந்த கற்களினால் நீயே அவளுக்கு சிலை வடிப்பாய் ..

 நான்.  ஆஹா எவ்வளவு சுலபமான வழி .

கோரிக்கை எதுவும் இல்லாமல் சொல்ல முடியுமா ?  

என்னை சிந்திக்க வைத்து விட்டு சிட்டாக பறந்து சென்றார் அந்தாதியின் ஆசான் 🥇🥇🥇

என்ன ஓர் அருமையான் வாக்கியம்.

"அவள் நினைவு உனக்கு வருவதே கோடி புண்ணியம்"

"அவள் அறிவாள் உனக்கு எது நல்லது என்று."

ஆழமான பொருள் அடங்கிய சொற்கள்.

அவளின் அருளை பெறவேண்டி தினமும் அவள்து புகழ் பாடி துதிப்போம் .
🙏🙏🙏🙏🙏🙏



    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Comments

ravi said…
*Abhiraami Andaadi* 🌷🌷🌷 *post 58*
👣👣🏵️🏵️🏵️
ravi said…
Onraay arumbi, palavaay virindhu, iv ulagu engumaay
ninraal,

anaiththaiyum neengi nirpaal-enran,

nensinulle
ponraadhu ninru puriginravaa!

ip porul arivaar-
anru aalilaiyil thuyinra pemmaanum, en aiyanume. 56👍👍👍
ravi said…
During the tidal deluge of the Nemesis , She alone stands ...

She is one , she is many , she diffuses Herself into everything , yet she is nothing .

Wonder of Wonders !!!

She emerges suddenly in my Vision, Gracing my mind with Her divine presence , She is the force that appears in all , appear as everything and again appears as removed from all creation .

The mysterious truth was realized by Your Consort and also by Your brother , the slumberer on the banian leaf . Thus such an esoteric truth which only two of mighty Gods themselves know is made known to a humble devotee like me 🙏🙏🙏🙏🙏
ravi said…
*Benefit of Chanting* to influence everyone
ravi said…
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
ravi said…
*யுத்த காண்டம்*
ravi said…
இராவணனுடைய ஈமக் கடன்களை விபீஷணன் செய்து முடிக்கிறான். அனைத்துக் காரியங்களும் முடிந்த பிறகு, அனைவரும் இராமனிடம் வந்து சேருகின்றனர்.

இராமன் தன் தம்பி இலக்குவனை
அழைத்து, "நீ போய், சுக்ரீவன், அனுமன் மற்றும் வானர வீரர்களை அழைத்துக் கொண்டு, விபீஷணனுக்கு வேதமுறைப்படி இலங்கை அரசின் முடிசூட்டி பட்டாபிஷேகம் செய்து வருவாயாக" என்று பணித்தான்.

இதனைக் கேட்டு தேவர்கள் விபீஷணனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இலக்குவன் அனைவர் முன்பாகவும், விபீஷணனுக்கு வேத கோஷங்கள் முழங்க, மங்கள ஸ்னானம் செய்வித்து, புத்தாடைகள் அணிந்து, முடிசூட்டி இலங்கைக்கு அரசனாக்கினான்.

இலங்கையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட விபீஷணன், இலக்குவனை வணங்குகிறான்.

பிறகு இராமபிரான் இருக்குமிடம் சென்று அவரை வணங்கி ஆசி பெறுகிறான்.

இராமன் விபீஷணனைத் தழுவிக் கொண்டு ராஜ நீதிகள் பலவற்றை எடுத்துச் சொல்கிறார்.

பிறகு இராமன் அனுமனை அழைத்து சீதையைக் கண்டு செய்தி சொல்லி வருமாறு அனுப்புகிறான்.

மாருதியும் அங்ஙனமே சென்று சீதையை வணங்கி, ஆடியும், பாடியும் செய்தியைச் சொல்கிறான்🦋🦋🦋👍👍👍👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 96*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 15 , 16 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இந்த 15 ஆவது ஸ்லோகத்துல

उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां

दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् ।

शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते

कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ॥

உபேக்ஷா நோ சேத் கிம் ந ஹரஸி ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்

து³ராசாபூ⁴யிஷ்டா²ம் விதி⁴லிபிமசக்தோ யதி³ ப⁴வான் ।

சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம் பசுபதே

கத²ம் வா நிர்யத்னம் கரனக²முகே²னைவ லுலிதம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
நான் எப்படி பிரம்மா எழுதினதை மாத்த முடியும்.?

*‘ப⁴வான்அசக்தோ யதி³’*

என்னால முடியாதுன்னு நீங்க சொல்றேளா?

ன்னு கேட்டுண்டு,

‘ *சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம்’ –*

அந்த ப்ரம்மாவோட தலை அப்படி ஒண்ணும் எடுக்க முடியாது. strong ஆ திடமாதான் அமர்ந்து இருந்தது.

அதை கிள்ளிவிட முடியாது.

ஆனால் அதை ‘ *வைதா⁴த்ரம் சிர: கத²ம் வா நிர்யத்னம்*

– அந்த ப்ரம்மாவோட தலையானது ஒரு யத்தனம் இல்லாம ‘ *கரனக²முகே²னைவ லுலிதம்’* –

உன்னால் உன் நக நுனியினாலேயே கிள்ளி எறியப் பட்டதே.

“என் தலையில பிரம்மா எழுதினதை அழிக்க முடியாது. அனுபவிச்சு தீர்த்துக்கோன்னு சொல்றே.

ஆனா ஒரு க்ஷணத்துல ப்ரம்மாவோட தலையையே கிள்ளி எறிஞ்சேளே,
உங்களால முடியாதா!” ன்னு வேடிக்கையா சொல்றார்.👌👌👌
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 111. 12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

*அநாதி நிதனோ* தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
விடை தெரியாமல் எல்லோரும் திகைத்தார்கள்.

சிறிது மௌனம் காத்த அழகிய சிங்கர்,
“கண்ணபிரான் அவதரிக்கும் போதே, திருமார்பில் மகாலட்சுமியோடும், நாபிக் கமலத்தில் பிரம்மாவோடும் பிறந்தான் என்பது
நீங்கள் அனைவரும் அறிந்ததே. ‘ *க* ’ என்ற எழுத்து பிரம்மதேவரைக் குறிக்கும்.

பால- *க* என்றால் ‘குழந்தை பிரம்மா’ (பால = குழந்தை, க = பிரம்மா) என்று பொருள்.

குழந்தைக் கண்ணனின் நாபிக் கமலத்தில் குழந்தை பிரம்மா இருந்தார் என்பதைத் தான்
‘ *தம் அத்புதம் பாலகம்* –

அற்புதக் குழந்தையின் நாபிக் கமலத்தில் பாலகன் இருந்தார்’ என்று
சுகப்பிரம்ம மகரிஷி கூறியுள்ளார்!” என விளக்கினார்.🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அத்ருஷ்ட பலனை நம்பால் பிரத்யக்ஷ பலனை மட்டும் பார்த்து அநேக விஷயங்களை ஸுபர்ஸ்டிஷன் என்று தள்ளுகிறார்கள் என்றாலும் இவர்களுடைய பகுத்தறிவு (‘ரீஸன்’) படி பதில் சொல்ல முடியாத அநேக ஸுபர்ஸ்டிஷனை இவர்களே உண்டாக்கிக் கொண்டும்,

பின்பற்றிக் கொண்டும்தான் இருக்கிறார்கள்! ‘ஜேய் ஹிந்த்’ என்று சத்தம் போட்டு விட்டால் அதில் என்ன பிரத்யக்ஷ பலன்? இப்படிக் கத்துவதால் தேசம் ஸுபிக்ஷமாய்விடுமா என்ன?
ravi said…
ஆனாலும் ”மந்த்ராஸ்” என்று கேலி பண்ணுகிற பிரதம மந்திரியே* பிரஸங்கம் பண்ணி முடித்தவுடன், “ஜேய் ஹிந்த் கோஷிக்க வேண்டும்; இன்னும் பலமாக கோஷிக்கணும்; இது கூடப்போதாது” என்று மூன்று நாலு தரம் ஜனங்கள் தொண்டை கொண்ட மட்டும் கத்தச் சொல்கிறாராம்!
ravi said…
நம் தேசத்தில் மட்டுந்தான் என்றில்லை Faith-ஐ (நம்பிக்கையை) க் குலைத்து அதனிடத்தில் reason-ஐ (பகுத்தறிவு என்கிற வெறும் புத்தி தர்க்கத்தை) வைத்து, நம்மையும் இப்படியிழுத்து விட்டிருக்கிற எல்லா தேசத்திலுமே இப்படியிருக்கிறது. Rational -
ravi said…
ஆகப் பார்த்தால் flag (கொடி) என்பது என்ன? ஏதோ ஒரு துணிதானே! அதன் மீது துப்பினால் அது தேசத்ரோகம் என்றால் இது த்ருஷ்ட பலனா என்ன? ஆனாலும் இப்படிப் பண்ணுகிறவனுக்கு த்ருஷ்ட பலனாகவே ஜெயில் தண்டனை கொடுக்கிறார்கள்! மந்த்ரபூர்வமாய் ஒரு ப்ரதிமையில் தெய்வத்தை ஆவாஹனம் பண்ணிப் பூஜை பண்ணுவதைக் கேலி செய்துவிட்டு,
ravi said…
ஒரு துணிதான் தேசத்துக்கு ஸிம்பல் என்றால் அது எப்படி? புண்யகாலமாவது, புண்ய க்ஷேத்ரமாவது என்று சொல்லிவிட்டு நாஸ்திகப் பிரசார விழாக்களைக்கூட புத்தர், அம்பேத்கர் பிறந்த நாளில் பண்ணுகிறார்கள்! ஈரோட்டில், காஞ்சீபுரத்தில்தான் ஆரம்பவிழா என்கிறார்கள்! அதாவது அவர்களும் ஏதோ ஒரு ‘புண்ய’ — இப்படிச் சொல்வது எனக்கே வேடிக்கையாகத்தான் இருக்கிறது! —
ravi said…
ஈரோட்டில், காஞ்சீபுரத்தில்தான் ஆரம்பவிழா என்கிறார்கள்! அதாவது அவர்களும் ஏதோ ஒரு ‘புண்ய’ — இப்படிச் சொல்வது எனக்கே வேடிக்கையாகத்தான் இருக்கிறது! — புண்யகாலம், க்ஷேத்ரம் இவற்றில் நம்பிக்கை வைத்துத்தானிருக்கிறார்கள்! ரொம்ப விசித்ரம், ‘ஸமாதி’, ‘ஸமாதி’ என்கிற பேர் வைத்து
ravi said…
(நாம் ஏதோ வருஷத்தில் ஒருநாள் திருவையாறு, நெரூர் மாதிரி இடங்களில் *ஆராதனை நடத்துகிறோம் என்றால்) அவர்களோ நித்தியப்படி ஆராதனையே பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்! ஆஸ்திகர்களாயிருக்கிற சட்டசபைக்காரர்கள் பதவிப் பிரமாணத்துக்கு முந்தி கோயிலுக்குப் போகாமலிருந்தாலும் இருப்பார்கள்; போய்விட்டு வந்தாலுங்கூடச் சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தாலும் இருப்பார்கள்; ஆனால் இவர்கள் [பகுத்தறிவாளர் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்] ‘ஸமாதி’ என்கிறார்களே, அதற்கு ஊர்வலமாகப் போய் மரியாதை பண்ணிவிட்டு வராமல் swearing-in செய்வதேயில்லை.
ravi said…
வெறும் ரீஸன் என்று மட்டும் எடுத்துக் கொண்டால் அதற்குப் பொருந்தாத அநேக விஷயங்களை எவருமே பண்ணத்தான் வேண்டியிருக்கிறது;அப்போதுதான் நம்முடைய லக்ஷ்யத்தில் நமக்கு ஒரு ஆர்வத்தை, ஈடுபாட்டை எழுப்பி அதற்கு மற்றவர்களின் ஆதரவையும் திரட்டமுடிகிறது.
ravi said…
இதற்குச் சின்னங்களும் காரியமும் இருந்தேயாக வேண்டியிருக்கிறது. இப்படி கறுப்பு-சிவப்பு அல்லது கதர் போட்டுக் கொண்டு கொடியையும் ஸ்லோகன் அட்டையையும் தூக்கிக் கொண்டு பாத யாத்திரை, ஸைகிள் ஊர்வலம், மாட்டுவண்டி ஊர்வலம் என்று நடத்தும்போது இதில் பகுத்தறிவுக்குச் சேராத எத்தனை விஷயம் இருக்கிறது என்று பார்ப்பதில்லை. அதுவே பஞ்சகச்சம், பரிவட்டம், ஜாலரா, நாமசங்கீர்த்தனம் என்று பஜனை கோஷ்டி போனால் பரிஹாசமாகிறது. பொலிடிகல் இன்டரஸ்ட் (அரசியல் ஈடுபாடு), லேபர் இன்டரஸ்ட் என்பதுபோல இந்த லோகத்தை மட்டுமே சேர்ந்த விஷயங்களுக்காக இப்படி ரீசனை விட்டு விட்டு, மண்ணெண்ணையை கொட்டி கொளுத்திக்கொண்டு உயிரைவிடுகிற அளவுக்குப் போனால் martyr [தியாகி] பட்டம் கொடுக்கிறார்கள்! அதுவே சாச்வதமான தர்மத்துக்காக, மதத்துக்காக விட்டால் ‘ஸுபர்ஸ்டிஷியஸ்’,‘அசடு’என்று மட்டம் தட்டுகிறார்கள்.
Raji said…
Very nicely explained...You have not only covered AA, but also Lalitha Sah..Soundarya Lah, Bharathiyar paadagal to compare and make the explanation clear to the readers🙏
Telang said…
You are a perfectionist..how can anyone have any query about your post..
ASN said…
By the bye, if you are illeterate, where we are?
Nippinai babu said…
Great sir 👍 magnanimous job. Really overwhelming 🙏💐💐💐🙏
Nippinai babu said…
Good morning sir
Very nicely said. I respect and appreciate your opinions on women hood. 🙏💐💐
HVB said…
You have answered in a better wsy than SN electrical engineer
Hats of yo you and the spread of you knowledge
SarvaGyani
TV Ganesh said…
*ஆண்டாள் எனும் ஆகச்சிறந்த Engineer*

உருவமில்லா
உருவத்தை
உள்ளம் கவர்
உருவமாக்க
பாடல் இயற்ற நினைக்கிறாள்
பாவை ஆண்டாள்

முதலில்

*Sketch* - ஆகாயம் போன்ற மாதவனை
அகத்தில் முதலில் வரைகிறாள்

*Design* - வரைந்த ஓவியதிற்கு அழகிய வேலைப்பாடுகள்
செய்கிறாள்

*Over design* - அளவுக்கு அதிகமான காதலால் கண்ணன் கரைந்து விடக்கூடாது அதே சமயம் அவள் இதயம் எனும் *Budget* க்குள்ளும் வரவேண்டும் என யோசிக்கிறாள்

எனவே மெருகுபடுத்த
அவள் கொண்ட தோழிகள்தான் கீழே

*AECOM*

*Architectural* - கண்ணின் ஒவ்வொரு அணுவையும் வடிவமைக்கிறாள்

*Engineering* - காதல் பொறியியலால் கசிந்துருகி கட்டமைக்கிறாள்

*Consultation & Construction* - ஒன்றுத்கு ஆயிரம் முறை தனக்கு தானே ஆலோசனை கொண்டு தன் மனக்கோட்டையில்
மணவாளனை கட்டுகிறாள்

*Operational* - ஒவ்வொரு நொடியம் கண்ணனை இதயத்தில் இயக்கிப் பார்க்கிறாள்

*Maintenance* - உருவான கண்ணனை உருகுலையாமல்
பராமரிக்கிறாள்

*Sub contract* - இது அவளின் ஆழ்மனது ஒப்பந்தம்

இவையெல்லாம் முடிந்த பின்

அடுத்த நிலையாம்

*CQRA*

*Construction*- மனதால் கட்டியது கண்ணன்தான என பார்க்கிறாள்

*Quality Rating* - தரத்தின் தரம் பார்க்கிறாள் தாரமாகப் போகிறவள்

*Agency* - அவளே கண்ணனுங்கான குழுமமாக வேண்டும் என முழுமையாய் உழைத்தாள்

மேலும் மேலும் அழகுபடுத்த நினைந்தாள்

ஆனால் அவள் கனவின் *Budget* அளவை தாண்டியதால் வேண்டாம் என விட்டுவிட்டாள்

*5 Star* அளவு பாடல்களை கோர்த்தால் மாலையாக

*கோடான கோடி* *Star* போன்ற கண்ணனுக்காக

காதல் *Elevated* ஆக இருந்தாலும்

பெண்ணாய் பிறந்ததால் *காதல் எனும் Cost under control* ஆக வைத்திருந்தாள்
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 97* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 19👍👍👍
ravi said…
முகம் பிந்தும் க்ருத்வா குசயுக-மதஸ் தஸ்ய தததோ

ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்

ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு

த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்🍓🍓🍓
ravi said…
பரமசிவனுடைய பட்டமஹிஷியே !

ஸ்ரீசக்கரத்தில் மத்தியில் உள்ள பிந்துவை காமகலாரூபிணியான உனது முகமாக தியானம் செய்துகொண்டு அதற்குக்கீழே இரண்டு ஸ்தனங்களையும் அதற்கும் கீழே சிவனுடைய பாதி வடிவான யோனியையும் தியானம் செய்துகொண்டு

உன்னுடைய காமகலையாகிய ‘ *க்லீம்* ’ பீஜத்தை எவன் அவ்வங்கங்களில் தியானம் செய்கின்றானோ

அவன் உடனே காமசக்திகளை வசப்படும்படி செகிறான் என்பது மிகவும் எளிது.

சூரிய சந்திரர்களையே ஸ்தனக்களாக்க் கொண்டுள்ள முவ்வுலக வடிவமான மடந்தையையும் கூட விரைவில் மயங்கச் செய்வான்.

‘க்லீம்’ என்ற பீஜத்தில் உயிரெழுத்து ‘ஈ’. அதுவும் மூன்று பிந்துக்களால் ஆகியது.

மேலுள்ள பிந்து சந்திரன். கீழுள்ளவை சூரியனும் அக்கினியும்.

இவ்வாறு காமகலா தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான்.

வேறு எண்ணம் இல்லாமல் ஒருமைப்பட்ட மனத்துடன் மூன்று பிந்துக்களையும் தியானம் செய்பவன் பரமானந்தக் கடலில் மூழ்கி கர்ப்பத்துவாரத்தைக் காணமாட்டான்.👏👏👏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 97* started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
*26* कर्पूरवीटिकामोदसमाकर्षिदिगन्तरा - *கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா --*

அம்பாள் போடும் தாம்பூலம் அதில் இருந்து சொட்டும் தேன் அதை பருக மொய்க்கும் வண்டுகள் போல தேவர்கள் ரிஷிகள், கிங்காரர்கள் பல பல மகான்கள் புத்தி மான்கள் இப்படி ஒரு பெருங்கூட்டமே காத்திருக்க

அவள் என்ன செய்தாள் தெரியுமா ?

தன்னை கூப்பிடாத ஒருவனை தேடிச் சென்று அந்த மடப்பள்ளி வரதனை காளமேகமாக்கி கவி மழை பொழிய வைத்தாள் ...

பேசத் தெரியாத ஊமையை 500 பதிகங்கள் பாட வைத்தாள் ,

நுனிக்கிளையில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் முட்டாளை சியாமளா தண்டகம் பாட வைத்தாள் ...

அவள் சிந்தும் தாம்பூலம் கலைவாணி யாழ் இசைத்து பாடும் பதிகங்கள் 🪔🪔🪔🪔🪔
ravi said…
*திருப்பாவை பாடல் 29* 👍👍👍
ravi said…
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம்

உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.🙏🙏🙏
ravi said…
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம்.

அதற்கான காரணத்தைக் கேள்!

பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ,

எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!

நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும்,

ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும்.

எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும்.

உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும்.

இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு🙏🙏🙏
ravi said…
*உட்கருத்து*

இறைவனை வணங்குவது வெறும் இகபர சுகங்களை அடைய அல்ல ..

இனி பிறவி வேண்டாம் நீ தான் வேண்டும் உன்னில் நான் இரண்டற கலக்க வேண்டும் .. இதுவே சிறந்த பிராத்தனை .. மாயக்கண்ணன் தன்னை தருமாறு யாரவது ஒருவர் கேட்க்கிறாரா என்று ஏங்குகிறான் இன்னும் ஆண்டாளுக்கு பிறகு அப்படி வேண்டுபவர் யாருமே இல்லை ..

பட்டர் இப்படி பாடுகிறார்

அம்மா அபிராமி உன் கருணை கிடைக்க வேண்டும் என்று பல காலங்கள் தவம் இருப்பவர்கள் கேவலம் இந்த மன்னளிக்கும் சுகமா உன்னிடம் கேட்டுப்பெறுவார் ?

மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தியும் வீடும் அன்றோ ...

இது தான் நாம் கேட்க வேண்டிய பிராத்தனை .. மற்ற சுகங்கள் எதுவுமே நிரந்தரம் இல்லை
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே!

உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!

வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்!

உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!🙏🙏🙏
ravi said…
விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே!

உன்னை வணங்கும் அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய்.

வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே!

பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே!

பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே!

உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே!

நீயே இந்த உலகின் உயிர்.

எம்பெருமானே!

நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.🪔🪔🪔
ravi said…
*உட்கருத்து*

தேவர்கள் இறைவனை அடைய மண்ணுலகம் வந்தே தவம் செய்கின்றனர் ... ஆனால் நாம் எவ்வளவு புண்ணியம் செய்துள்ளோம் .. நம்மை பார்க்க அவனே ஆலயம் தாண்டி வருகிறான் ... நம் வீட்டின் முன் நின்று சிரிக்கிறான் .. அந்த சிரிப்பில் ஒரு பரிதாபம் அடங்கி உள்ளது

கேவலம் சிமிண்ட் , செங்கல் இரும்பு கம்பிகளால் ஆன இந்த வீடு என்ன சுகம் தரும் ? என்னை வணங்கு அழியா முத்தியும் பேரின்ப வீடும் தருகிறேன் ... ஆனால் அவன் சொல்வதை கேட்க நம் செவிகள் தயாராக இல்லை

பட்டர் இப்படி பாடுகிறார்

விண்ணவர் யாவரும் வந்திறங்கி பேணுதற்கு எண்ணிய எம் பெருமாட்டியை பேதை நெஞ்சில் காணுதற்கு அன்னியள் அல்லா கன்னியை

காணும் அன்பு

பூனதற்கு எண்ணிய எண்ணமன்றோ நான் முன் செய் புண்ணியமே...

அவன் நினைவு வருவதே முன் ஜன்மங்களில் நாம் செய்த புண்ணியம் ... 🪔🪔
ravi said…
*திருப்பள்ளியெழுச்சி பாடல் 9* 👍👍👍
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 191🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
No matter how many mistakes you make or how slow you progress, you are still way ahead of everyone who is not trying.

Never mind the kicks of people, because without kicks, we may never reach to the Goal.

A man asked monk "I want happiness". Monk said: First remove 'I' that's ego, then remove 'want' that's desire. See now you are left with only happiness.
ravi said…
I was feeling little nervous .. not that we were less prepared but such a mammoth task without involvement external experts , never happened even once in the history of L&T getting implemented across all verticals by just
in-house people ..

Secondly each business had its own IT platform .. some were on SAP some were ( HED) were on Baun , in house prg ( L&T C ) , some were only on excel ... Design , formats , inputs , outputs would never Sync ...

Each business was running short of VAT experts ...

This was a project and not a percent less than that so the chain should not get broken anywhere .

A dashboard was prepared and shared with YMD and RSR to monitor business vertical wise VAT implementation status .. online query system was inbuilt ...

Everything needed was done with passion and precision .. now rest was left to Divine Grace ..

If it is a failure the onus of it would squarely fall on me . If it was success my then Boss R.K Kishnani would grab it to his credit .

I prepared for both bouquet and brickbats .

I did not know what almighty would grand at that point of time ..

i was literally sweating .. But inside all organs of my body remained like an Titanic's iceberg . 🚄🚄🚄
ravi said…
*5 - ஆனாயநாயனார்*
ravi said…
*கண்ணனாய் ஆனாயரும் மன்னனாய் சுவாமி நாதனும்* 🪔🪔🪔
ravi said…
தாம் பசுக்களை மேயவிட்டு,

புல்லாங்குழலிலே பெருமானரது

அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து

இன்புற்றிருப்பார் ஆனாயர்...

தமது குடுமியிற் 
கண்ணி செருகி,

நறுவிலி புனைந்து, 

கருஞ்சுருளின் புறங்காட்டி,

வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற்

செங்காந்தட் பூவினை வைத்துக்

காதில் அணிந்து,

கண்டோர் மனம் கவரத்

திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி,

அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி,

முல்லை மாலை அணிந்து,

இடையில் மரவுரி உடுத்து 

அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி,

திருவடியில் செருப்புப் பூண்டு,

கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு,

கோவலரும், ஆவினமும் சூழ செல்வார் தினமும் தெருவினிலே

கண்ணன் குழல் ஊத கணிந்தது அங்கே மாவினம்

இங்கே சிவாய நம எனும் வேதம் ஓத குழலில் அதை ஊத பெரும் வீடு கண்டது உயிரினம்

கொன்றை மரம் ஒன்றை காண உருகினார் உருக்கினார் தன் குழலை

தெறித்தது அங்கே சிவ நாமம் தீர்ந்தது கலி எல்லாம்

சுவைத்தான்
ஆடல் அரசன் குழலில் வரும் அமுதத்தை

சேந்தனார் செய்த களி போல் ...

காளியும் சூலியும் தன்னில் கொண்ட தாரையுடன் தாராகாந்தியுடன்

விடையில் வந்தே விடை ஒன்று தந்தான் தன்னில் கலப்பதற்க்கே 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
ravi said…
ஏறிய விடையும் தந்த விடையும் தன்னிகரில்லா தெய்வம் ஆனதே ...

சடையும் கடையும் கொண்டவன்

காஞ்சியில் ஆனாயராய் பிறந்தே தெய்வத்தின் குரலை குழலில் தந்தனரே 🙏🙏🙏
Shivaji said…
Arumai 🌹🌹🙏🙏🙏
ravi said…
[13/01, 9:32 am] Sib viji athimber: Excellent.
[13/01, 9:32 am] Sib viji athimber: Akka
[13/01, 9:33 am] Sib viji athimber: Well written
ravi said…
பட்டரும் நானும்*

எல்லோருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்கள் என்று சொல்லிக்கொண்டே வந்தார் அபிராமி பட்டர்

ஒரு கன்று தாய் பசுவிடம் ஓடுவதை போல் அவரிடம் ஓடி நெஞ்சார தழுவிக்கொண்டேன் .. அன்னையின் தாழம்பூ குங்கும வாசனை அவர் நெஞ்சில் படர என்னை வரவேற்றது ...

என்ன ரவி ... ரொம்ப நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம் ... கேள்விகள் உண்டா ?

ஐயனே இன்று ஒரு கேள்வி நெஞ்சில் அரும்பியது .. அதன் மலர்ச்சி உங்களை என்பால் கொண்டு வந்து விட்டது ...

சொல் ... என்ன கேள்வி

ஐயனே .. இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாய் என்று பாடினீர்கள்

கணபதியை புகழ்ந்து வள்ளலார் பாடிய பாடல் என் நினைவுக்கு வருகிறது

திருவும்
கல்வியும்
சீரும்
சிறப்பும்

உன் திருவடிப்புகழ் பாடும் திறமும்

நல்
உருவும்
சீலமும்
ஊக்கமும்

தாழ்வுறா உணர்வும் தந்து

எனதுள்ளது அமர்ந்தவா

குருவும் தெய்வமும் ஆகி

அன்பாளர்தம் குறை தவிர்க்கும் குணப்பெரும் --குன்றமே

வெருவும் சிந்தை விலகக் கஜானனம் விளங்கும் சித்திவிநாயக வள்ளலே
ravi said…
அதே மாதிரி திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் ஒன்று

குலம் தரும்
செல்வம் தந்திடும்

அடியார் படு துயர் ஆயின எல்லாம்
*நிலம் தரம் செய்யும்*

நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்

வலம் தரும் மற்றும் தந்திடும்

பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.

திருநாவுக்கரசர் ஓதுவார் தம்மை நன்னெறியில் துய்ப்பது நமசிவாயமே என்கிறார்

நீங்களோ 69 வது அந்தாதியில்

தனம் தரும்
கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும்

தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்

அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

கணபதியும் , மூவா முகந்தனும் , ஈசனும் தருவதைத் தானே அபிராமியும் நமக்கு வழங்குகிறாள் .. எப்படி அவர்களை விட சிறப்பானவளாக ஆக முடியும் ?
ravi said…
ரவி மூன்றையும் சேர்த்து அபிராமி ஒருத்தியே தருகிறாள் ..

தனம், கல்வி, வடிவம், இனம்-ன்னு உலக வாழ்வுக்கு வேண்டிய எல்லாம் சொல்லிவிட்டு இறுதியில்…
அன்பர் என்பவர்க்” *கே* ” *கனம்* தரும் என்றேன் ...

கவனித்தாயா ?

கவனித்தேன் .. அதில் என்ன தனி சிறப்பு ஐயனே ?

அன்பை சதா சர்வ காலமும் வைக்கும் பக்தர்களுக்கு மற்றதை எல்லாம் தருபவள்,

பெருமையை (கனத்தை) மட்டும் தரமாட்டாளா என்ன?

இங்கு கனம் என்பது பெருமை என்னும் பொருளில் மட்டும் வரவில்லை!

கனமான பொருள் பறக்காது.

ஒரு பொருளின் மீது கனத்தை வைத்தால் அந்தப் பொருளும் பறக்காது!

அன்பர் ஆகி விட்டவர்களுக்கு இந்தக் கனத்தையும் தருகிறாள் அன்னை!

பறக்காத மனத்தை, சிந்தையை அருளுகிறாள்!

அன்புடைய அடியார்களுக்கே உரிய குணமான நிலைபெற்ற மனத்தையும் இங்கே குறிக்கிறேன்

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்

என்ற அடியார் இலக்கணத்தின் படி, அன்பர் என்பவர்க்கே கனம் தருகிறாள் அன்னை!

குரங்காகிய மனம் நிலை பெற்றுவிட்டால் அதாவது ஒரு இடத்தில் நிலைத்து விட்டால் அதுவே பரமானந்தம் ... பேரானந்தம் .

மனம் தான் எல்லா வினைகளுக்கும் மூல கர்த்தா ...

கணபதி ,முகந்தன் ,
ஈசன் மூவரும் அவளுக்குள்ளே ...

ஆனால் அவளோ நமக்குள்ளே ... உண்மையில் அவளிலும் மேலை நாம் தான் ..

எங்கும் பரவி விரிந்து இருக்கும் சக்தியை அவள் தரும் கனம் கொண்டு மனதை நிலை நிறுத்தும் போது

அவளே அங்கு தன் பழைய இருப்பிடமாய் வந்து குடி இருக்கிறாள் நிரந்தரமாய்

ஐயனே .. தீர்ந்தது என் சந்தேகம் ... அவளே எம்தமக்கு அன்னையும் ஆயினள் ...

சிரித்துக்கொண்டே படைத்த பொங்கலை சுவைத்து விட்டு பறந்து சென்றார் ... வியந்து நின்றேன் 🪔🪔🪔
ravi said…
காயும் நீயே பழமும் நீயே செடியும் நீயே விதையும் நீயே

விந்தையே நீ தான் பெரியவாளோ

காதம்பரியும் நீயே சாகம்பரியும் நீயே
வேதமும் நீயே வேள்வியும் நீயே

வியப்பே நீ தான் பெரியவாளோ

முன்னும் நீயே பின்னும் நீயே
முதலும் நீயே முடிவும் நீயே

விழுப்பொருளே நீ தான் பெரியவாளோ

குரலும் நீயே கானமும் நீயே

சரணம் நீயே பல்லவி நீயே
ராகங்கள் நீயே பாட்டின் வரியும் நீயே

சாகசமே நீ தான் பெரியவாளோ

பொருளும் நீயே பெரும் பொருள் முடிக்கும் போகமும் நீயே

பெரும் போகம் அருளும் மருளும் நீயே மருள் தரும் தெளிரும் நீயே

மன்னவனே நீ தான் பெரியவாளோ 🪔🪔🪔
ravi said…
*“அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா,”* - பெரியவா.

பெரியவா பிக்ஷை கொள்ளும் உணவு வகைகளிலேயே முதலில் பாதி பாகம் பசுவுக்கு என்று எடுத்து வைத்து, அதற்கு அளிக்கப்பட்ட பிறகுதான் அவர் அவற்றை அமுது செய்வார். (பசுவிலிருந்தே கிடைக்கும் பால், தயிர், வெண்ணை மட்டும் இதற்கு விதிவிலக்கு. தனக்கில்லாமல் கன்றுக்கும் பிறருக்குமேதான் கோமாதா சகலமும் ஈவது என்பதால்!)

ravi said…
*அம்பாளின் சாகம்பரி அலங்காரம் !*

ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார்.

ravi said…
அங்கிருந்த சாஸ்திரியிடம், “பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.

ravi said…
“இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த சாஸ்திரி, அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!” என்றார் பணிவுடன்.

ravi said…
பெரியவா அவரிடம், “அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா,” என்று சொல்லி விட்டார்.

அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவாளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவா எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார். அம்பிகையையும் சாகம்பரியாக தரிசித்த பெரியவா பக்தர்களிடம், “பொங்கலன்று சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும். இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். நாளை கோபூஜை செய்யுங்கள். நாளை மறுநாள் உடன்பிறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று சொல்லி ஆசியளித்தார்.

நடமாடும் தெய்வமான பெரியவா சொன்ன வழியில் அம்பாளை சாகம்பரியாக தியானித்து வழிபடுவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர.
🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பகவத் பரமாகவே பண்டிகைகள் என்று சிலதை வைத்திருப்பதோடு வ்ரதங்கள் என்றும் சிலவற்றை வைத்திருக்கிறது. பண்டிகை என்பது நாம் ஆடை ஆபரணங்களுடன் அலங்காரம் பண்ணிக்கொண்டு, பகவானுக்கு அலங்காரம் பண்ணிப் பூஜை செய்து, அவன் ப்ரஸாதமாக அறுசுவை உணவு சாப்பிட்டு ஆனந்தமாயிருப்பது — போகிப்பண்டிகை, தீபாவளிப் பண்டிகை மாதிரி. புது வஸ்த்ராதிகள், அலங்காரம், பஞ்சபக்ஷ்ய போஜனம் முதலியன இல்லாமல், வழக்கமாகச் சாப்பிடுகிற மாதிரிக்கூட இல்லாமல், நியமத்தோடு உபவாஸமிருந்து பூஜை பண்ணுவது வ்ரதம். க்ருத்திகை வ்ரதம், ஷஷ்டி வ்ரதம், சதுர்த்தி வ்ரதம், ரிஷிபஞ்சமி வ்ரதம், ப்ரதோஷ வ்ரதம், ஸோமவார வ்ரதம், ச்ரவண வ்ரதம், பயோவ்ரதம்,
ravi said…
இது எல்லாவற்றையும்விட ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி வ்ரதம் என்று பல ஏற்பட்டிருக்கின்றன. எல்லா மதங்களிலுமே feasting, fasting என்று இந்த இரண்டும் இருக்கின்றன.
ravi said…
மற்ற வ்ரத தினங்களிலோ பூஜைக்கு அப்புறம் ஒரு பொழுதாவது பலஹாரம் பண்ணலாமென்றிருக்கிறது. ஏகாதசியில்தான் பூர்ண உபவாஸம்.
மற்ற வ்ரதங்களைப் புராண, ஆகமங்கள் சொல்கின்றன. அதில் சிவபரமான புராணாகமங்கள் சொல்பவைகளை வைஷ்ணவர்கள் அநுஷ்டிக்க மாட்டார்கள்; வைஷ்ணவ கிரந்தங்களில் சொல்லியுள்ளதை சைவர்கள் செய்ய மாட்டார்கள்.
ravi said…
ஏகாதசியோவென்றால் ஒவ்வொரு sect மட்டும் எடுத்துக்கொள்ளும் புராண ஆகமங்களில் மட்டுமின்றி ஹிந்து என்று பெயர் இருக்கிற அத்தனை பேருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் இதை ஸர்வஜன அநுஷ்டானமான வ்ரதம் என்று சொன்னேன்.
ravi said…
விஷ்ணு நித்ரை செய்து கொண்டிருந்தபோது லோகத்தை ஹிம்ஸை பண்ணிய ஒரு அஸுரனைக் கொல்வதற்காக அவருடைய சரீரத்திலிருந்தே ஸ்த்ரீ ரூபமாக ஒரு சக்தி வெளியே போய் ஸம்ஹாரம் செய்துவிட்டு வந்ததாகவும், விழித்துக் கொண்ட பகவான் அவளுக்கே ஏகாதசி என்று பேர் கொடுத்து இந்த ஏகாதசி வ்ரதத்தை ஏற்படுத்தினாரென்றும் பாத்ம புராணத்தில் கதை வருகிறது.
ravi said…
மஹாவிஷ்ணு கூர்மமாகவும், தன்வந்திரியாகவும், மோஹினியாகவும் அவதாரங்கள் எடுத்து, க்ஷீராப்தியில் அம்ருதம் கடையப் பண்ணி அதை எடுத்துக் கொடுத்த நாளே ஏகாதசி என்பதாலும் அதைப் பொதுவில் விஷ்ணு ஸம்பந்தமுள்ளதாக நினைக்கிறோம். ஆனால் இந்த அம்ருத மதன ஸமயத்தில் முதலில் உண்டான காலகூட விஷத்தைப் பரமேச்வரன் புஜித்ததை முன்னிட்டுத்தான் அன்று எவரும் சாப்பிடக் கூடாது என்று ஏற்பட்டிருப்பதாக சைவர்கள் சொல்வதுண்டு. சாப்பிடுகிற நாட்களிலும் பகவத் த்யானம் பண்ணுங்கள்; உபவாஸ நாளில் சாப்பிடாமலிருந்தும் த்யானம் பண்ணிப் பாருங்கள். தனக்கே வித்யாஸம் தெரியும். அந்த லாபத்துக்காக இந்த நஷ்டப் படலாம் என்று தெரிந்துகொள்வீர்கள். நான் நிறையச் சொல்வதைவிடப் பிரத்யக்ஷமாகப் பண்ணிப் பார்த்து விட்டாலே உபவாஸத்தின் அவச்யமும் பெருமையும் விளங்கிவிடும்.
ravi said…
வயிற்றை வற்றப் போடுகிற நாட்களில் மனசுக்கு த்யானாம்ருத போஜனத்தைக் கொடுத்துக் கொண்டால் எது பெரிய இன்பம் என்று தெரியும்.
சாப்பாடு இல்லாத வாய்க்கு அதைவிட ரஸம் சொட்டுகிற அவனுடைய நாமாமிருதத்தை, லீலாமிருதத்தை ஜபமாக, பஜனையாக, ஸ்தோத்ரமாக, பாராயணமாகக் கொடுத்துக் கொள்ள வேண்டும். காதுக்கு அம்ருத போஜனமாகக் கீர்த்தனையும், ஹரிகதையும் கிடைக்கப் பண்ணணும். ஏகாதசி புராண படநம்-ச்ரவணம் [படிப்பதும் கேட்பதும்] ரொம்ப விசேஷம்.
ravi said…
_பிறக்க இருக்கும்_ *தை...*
_நம் அனைவருக்கும்_

ஆரோக்கியத்... *தை..,*
நலத்................... *தை,*
வளத்.................. *தை,*
சாந்தத்............... *தை,*
சமத்துவத்......... *தை,*
நட்பில் சுகத்..... *தை,*
பந்தத்................. *தை,*
பாசத்................... *தை,*
நேசத்.................. *தை,*
இரக்கத்.............. *தை,*
உற்சாகத்........... *தை,*
ஊக்கத்............... *தை,*
ஏற்றத்................. *தை,*
சுபிட்சத்............... *தை,*

கொடுத்து...

ஆணவத்.... *தை,*
கோபத்........ *தை,*
குரோதத்..... *தை,*
சுயநலத்...... *தை,*
பஞ்சத்.......... *தை,*
வஞ்சத்......... *தை,*
வன்மத்......... *தை,*
துரோகத்...... *தை,*
அலட்சியத்... *தை,*
அகங்காரத்... *தை,*

_எடுத்து..._

எல்லோரும் _ இனிமையாய் வாழ...
*_ அனைவருக்கும் இனிய பொங்கல் advance..🍫🍫🍫💐 நல்வாழ்த்துக்கள்..._. 💐💐🍫🍫🙏🏻🙏🏻🙏🏻*
ravi said…
*தை* - தையலே; பெண்களில் சிறந்தவளே.... ( இந்த பொருள் பட எழுதியது) 💐💐💐


தை அவள் தாயாய் இருக்கும் போதில்
அவதை ஏதும் வருமோ ?

மமதை இன்றி மனதில் வறுமை அழித்து தையல் அமரும் தையில் தை தை என்றே ஆட வேண்டாமோ .. ??

காதை இது என்றே தள்ள வேண்டாம் ... கதைப்போர் அல்ல நான் ...

தையில் தை செய்யும் அருள் இதுவோ என்று வியப்பீரே .வையத்து வாழ்வீர்காள்!👌👌👌
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 192🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
Friday Festoons!

Finding solutions to challenging situations tends to bring the highest levels of innovation in each of us, especially when approached with positivity, hi-energy, and for the larger good.

Have a Fascinating Friday
ravi said…
VAT was finally came to live on 1st April 2005 in a truncated manner . Many taxes , duty co existed with VAT made VAT less toxic ...

Govt formed an empowered committee but none of the members of the committee were empowered ..

it was congress govt ..

FM P.Chidrambram made a tall claim that his govt now on par with other global countries with respect to VAT ...

But what the govt had really and sincerely done was to hire the name VAT but not the contents or governance structure .

In most of the countries VAT was one single rate and all taxes were subsumed in one single rate .

They also introduced a refund system for those who buy goods and travelling outside the country ...

Bills with VAT to be shown ag customs counters in airports ...

But PC did not hire any good practices of western countries ..

So people at the outset stood aghast on seeing the Bill ..

No much celebrations held outside but inside of L&T the ambience was different . 🪔🪔🪔
ravi said…
*திருப்பாவை பாடல் 30*

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்

கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப் பரிசுரைப்பார்

ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.🎧🎧🎧🦜
ravi said…
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும்,

கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை,

சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து,

பாவை விரத பலன் பெற்ற விபரத்தை

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள்,

இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.

இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும்,

அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும்,

செல்வத்துக்கு அதிபதியுமான

திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.🪔🪔🪔
ravi said…
*திருப்பள்ளியெழுச்சி பாடல் 10* 🪔🪔🪔

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம்

அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே!

பள்ளி எழுந்தருளாயே!🎼🎼🎼
ravi said…
திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே!

பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள்.

ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர்.

எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய்.

எவருக்கும் கிடைக்காத அமுதமே!

நீ பள்ளி எழுந்தருள்வாயாக!🙂🙂🙂
ravi said…
Dear all we hv come to an end . Chanted , understood , enjoyed andaal ' thiruppaavai and maanikk vaasagar 's thiruvembaavai... Everytime when we read we may get different interpretation taking us to a new high ..

Thanks for all your cooperation and contributed your response mentally and physically . I'm closing this thread shortly as informed earlier . Hope u agree with me . Happy pongal . God bless 🙏🙏🙏
ravi said…
*இந்த நாள் கரும்பின் ருசியாக இருக்கட்டும்* 🙏🙏🙏
ravi said…
*6 - இசைஞானியார் நாயனார்*🎼🎼🎼
ravi said…
*சுந்தரியும் சுந்தரனும்*
ravi said…
பெண் அவள் ..

யாரும் பெறாத வரம் கொண்டாள் ..

சடைய நாயனாரை மணந்தே சடையில் துள்ளும் கங்கை ஆனாள் ...

பூவுலகில் நண்பன் ஒருவன் தனக்கு வேண்டும் என்றே சுந்தர மூர்த்தியை அவள் கருப்பைக்குள் அனுப்பி வைத்தான் ஆடலரசன்

சுந்தரனை ஈன்றவள் அவன் காண்டமாய் மாறினாள் ...

அந்த சுந்தர காண்டம் அதில் சொக்கனும் சொக்கியும் சொக்கி போயினரே ...

இசையால் இமவான் தனை உருக்கினாள்

கலையால் களைவாணீ யயை கச்சபீ தனை மூடச் செய்தாள் ..

மலை போல் பக்தி கொண்டு மலைமகளை மகிழ்வித்தாள் ..

மலரால் பூஜை செய்து மலர்க்கமலை தனை சொக்க வைத்தாள் ..

பக்திக்கு மறு பெயர் உண்டு என்போர் இவள் பெயர் அறிந்திருக்க வேண்டும் அன்றோ ..

அறியாதவர் ஹரிக்கும் தெரியாதவர் அன்றோ ..

தன் தேனினும் இனிய குரலை தாரை வார்த்தாள் காஞ்சி வாழ் தவப்பெருமானுக்கே ...

தினம் தினம் வரும் தெய்வத்தின் குரல் அவள் தந்த குரல் அன்றோ

அந்த குரல் அன்றோ
சிறுவன் சுவாமிநாதனை பெரியவா ஆக்கியதே 👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 98* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 20👍👍👍
ravi said…
கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:

ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ

ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா🙏🙏🙏
ravi said…
அங்கங்களிலிருந்து கிரணக் கூட்டங்களாக அமுதச் சாற்றினை பெருக்குகின்ற சந்த்ரகாந்தக் கல்போன்ற உன்னை எவன் இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்கிறானோ

அவன் புள்ளரசனைப்போல பாம்புகளின் வீர்யத்தை அடக்குகின்றான்.

அமுதமயமான நாடியுடன் அவன் பார்க்கும் பார்வையானது நோயுற்று ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவனை நலமடையச் செய்யும்.🪔🪔🪔
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 98* started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
இன்று 27 வது திருநாமம் 🎼🎼🎼
ravi said…
*27* निजसल्लापमाधुर्यविनिर्भर्त्सितकच्छपी - *நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ* -

அம்பாள் குரல் இனிமை தெரியவேண்டுமானால் உங்களுக்கு அவசியம் சரஸ்வதி தேவியின் வீணை ( கச்சபி என்று பெயர் அதற்கு )யிலிருந்து எழும் ஸ்வரங்களின் நாதம் தெரிந்திருக்கவேண்டும்.
ravi said…
*சல்லாப* (Saṃlapa) = சம்பாஷணை, உரையாடல் , குறிப்பு

*கச்சபி* = சரஸ்வதி வாசிக்கும் வீணை

*மாதுர்ய* = இனிய, மதுரமான

*நிஜ* = எப்பொழுதும்

*விநிர்ப* = விமர்சித்தல் - இகழ்தல்

*ஸ்தித* = இருப்பு - இருத்தல்
ravi said…
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
ravi said…
ஜபா குஸூம ஸங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!🌞🌞🌞🌞🌞
ravi said…
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி|
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||
ravi said…
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!

தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!

ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!

நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி
AVB said…
Always we like you sir irrespective of power and all .. u r a great human being in helping others that’s really enough for any relation to be strong 🙏🙏
Nilaimai babu said…
அருமை 👏👏👏👏👏👏கவி - தையில் திளைத்தோம்.🙏💐
ravi said…
*யுத்த காண்டம்*
ravi said…
அனுமன் சீதையிடம், "அன்னையே! தங்களை வருத்திய இந்த அரக்கிகளைக் கொல்ல எனக்கு அனுமதி தருக!" என்று கேட்டான். உடனே அரக்கிகள் சீதையிடம், "அன்னையே! நீயே சரண்" என்று சரணடைந்து விட்டனர். சீதாதேவி அரக்கியர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றி அனுமனிடம், "இவ்வரக்கியர் இராவணன் சொன்ன வண்ணம் செய்தார்கள். அவ்வளவே! வேறு என்ன தீங்கு செய்தார்கள்? இவர்களை ஒன்றும் செய்துவிடாதே! விட்டுவிடு!" என்றாள்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 98*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 15 , 16 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இந்த 15 ஆவது ஸ்லோகத்துல

उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां

दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् ।

शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते

कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ॥

உபேக்ஷா நோ சேத் கிம் ந ஹரஸி ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்

து³ராசாபூ⁴யிஷ்டா²ம் விதி⁴லிபிமசக்தோ யதி³ ப⁴வான் ।

சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம் பசுபதே

கத²ம் வா நிர்யத்னம் கரனக²முகே²னைவ லுலிதம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
ஆனா பகவானுடைய அனுக்ரஹம் கிடைச்சுடுத்துன்னா நம்ம தலையில பிரம்மா எழுதினது மாறிடும். தலையெழுத்தை தான் ஜாதகம் ஒரு indicate பண்றது. அந்த ஜாதகத்துல இருக்கிற எல்லாத்தையும் பகவானுடைய அருள் மாத்த முடியும்.

ஒரு மூகபஞ்சஸதி ஸ்லோகம் இருக்கு

विनम्राणां चेतोभवनवलभीसीम्नि चरण-
प्रदीपे प्राकाश्यं दधति तव निर्धूततमसि ।
असीमा कामाक्षि स्वयमलघुदुष्कर्मलहरी
विघूर्णन्ती शान्तिं शलभपरिपाटीव भजते ॥

வினம்ராணாம் சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி சரண-

ப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி தவ நிர்தூ⁴ததமஸி ।

அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ

விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே ॥
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 113.. 12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

*அநாதி நிதனோ* தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
இதையே “மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது” என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.

அவன் இளைஞனாகவே அவதரித்தான்.

இளைஞனாகவே 125 வருடங்கள் வாழ்ந்தான்.

இளைஞனாகவே அவதாரத்தை நிறைவும் செய்தான்!” என்று கூறி அழகிய சிங்கர் தம் உரையை நிறைவு செய்தார்.

இத்தகைய ஆதியந்தம் இல்லாத மாறாத திருமேனியோடு விளங்குவதால் எம்பெருமான் ‘ *அனாதிநிதன* :’ என்றழைக்கப்படுகிறான்.
ravi said…
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 42-வது திருநாமம்.

முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் தம்முடைய முதுமைக் காலத்திலும் இளைஞரைப் போலத் திருவரங்கம் ராஜகோபுரத் திருப்பணிக்காகப்
பணியாற்றினார் என்பது அறிந்ததே.

அவரது இளமைக்குக் காரணம் தினசரி மூன்று முறை
ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மருக்கு அவர் விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்ததேயாகும்.

நாமும் உடலாலும் உள்ளத்தாலும் இளைஞர்களாக வாழ ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் மறுவடிவமாகவே விளங்கிய
முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கரையும், கண்ணபிரானையும் எண்ணியபடி, “ *அனாதிநிதனாய நம:”* என்று தினமும் சொல்வோம்.🪔🪔🪔
ravi said…
At least after a certain age, one should develop certain maturity and detachment. Like Vaanaprasthaas, you should hand over your responsibilities to the next generation and take care of your spiritual welfare.
ravi said…
After the period of employment is over, one should not hanker after re-employment or setting up one’s own business, farm, or factory and instead search for means to elevate one’s own self.
ravi said…
Helping one self is part of helping others, as I had stressed aearlier. So one should practice all those rituals and conduct the life as prescribed by shaastraas. Even after doing so, there will be a lot of free time after noon and this can be used in serving the others.
ravi said…
The available leisure should be productively utilized in learning about valuable ethics and also teaching them to others.
ravi said…
Apart from this, you can train the youth in whatever profession you were practicing before retirement and help them in writing the exams for the same.
ravi said…
If you are earning a comfortable pension, you cannot only give them free education but also provide free food to a few. It is not enough if you gather wealth for your family.
ravi said…
You should also help the needy. If the hungry are thus fed, crimes will be reduced in the society. It is want and the lack of the will to act among the wealthy that leads many to the path of crime and fraud.
Suprabhatam🙏🏻
CYS said…
You are really an true follower of Periyaval's ambition. When I read the above message, it reminded me the wonderful work of teaching / sharing your professional knowledge came to mind. 🙏
ravi said…
What I'm doing is just a miniscule CYS not worth mentioning .. The plight of many unaddressed children is too big and many aspirant children are just washed off because of no caring person around .. You are praising me implies you are yet to come across many generous souls doing unnamingly ... 🙏🙏🙏
Kousalya said…
Still , for that also one should have commitment towards such...may be passion to do.....anyways it's an appreciable act only..👍👍👏👏
ravi said…
*Abhiraami Andaadi* 🌷🌷🌷 *post 60*
👣👣🏵️🏵️🏵️
ravi said…
Arunaambuyaththum, 🌷

en siththaambuyaththum🌷 amarndhirukkum

tharunaambuyamulaith🌷 thaiyal nallaal, thagai ser nayanak

karunaambuyamum,🌷 vadhanaambuyamum,🌷 karaambuyamum,🌷
saranaambuyamum, 🌷

allaal kandilen, oru thansamume. 58🌷🌷🌷
ravi said…
This needs an elaborate explanation . SHE herself is so soft like a lotus ... Reminded of

taaLam: aadi
Composer: Annamaacaarya
Language: Telugu

*pallavi*

shrIman nArAyaNa shrIman nArAyaNa

shrIman nArAyaNa nI shrIpAdame sharaNu

*anupallavi*

kamalAsati mukhakamala kamalahita

kamalapriya kamalekShaNA
kamalAsanahita

garu.dagamana shrI
kamalanAbha nI padakamalame sharaNu

*caraNam*

parama yogijana bhAgadheya shrI

paramapuruShA parAtparA
paramAtmA paramANurUpa shrI

tiruveN^kaTagiridevA sharaNu
ramani said…
ஒரு புதிய தமிழ் சித்தரை உருவாக்கிய சக்தி குழும அபிராமி பட்டருக்கு நன்றிகள் பல பல..

எல்லாம் அவள் செயல்...

🙏🙏🙏🙏🙏
இப் புதிய தமிழ் சித்தர் மேலும் பல பதிவுகளை இத்திரியில் பதிவார் என சக்தி குடும்பம் எதிர்பார்க்க தொடங்கி விட்டது..

🙏🙏🙏🙏

கோரிக்கை இல்லாமல் வழிபட முடியுமா?

சிந்திக்க வைத்த கேள்வி...

🙏🙏🙏🙏🙏

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53