அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 21& 22 பதிவு 18

          அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 21 & 22

பதிவு 18



கேள்வி பதில் நேரம்

 *பதிவு 18* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 *கேள்வி 21* 

 *நான்* : 

 பட்டரே! காலை வணக்கம் ..   

 *பட்டர்*  

வந்தே வணங்கும் அடியார்க்கு வானுலுகம் தரும் என் அபிராமி உங்களையும் காக்கட்டும் 

இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌



*நான்*  ஐயனே உங்கள் பாடல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை ஒட்டியே செல்கின்றன ... அதனால் சில கேள்விகள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து கேட்கலாமா ? 

*பட்டர்* ... தாராளமாக ... எனக்கு தெரிந்தால் சொல்கிறேன் .. 

நான் .. அதில் நிர்மூலா என்று ஒரு நாமம் வருகிறது .. 

தமிழில் பல பழமொழிகள் தவறான புரிதலால் பல பெண்களின் வாழ்க்கையை சூரை ஆடப்படுகின்றன . 

உதாரணம் .. பெண் மூலம் நிர்மூலம் , ஒரு பெண் ஒன்றை ஒன்பதாக்குவாள் என்று ... 

அம்பாள் நாமமே நிர்மூலாவாக இருக்கும் போது இப்படி சொல்லி வரன்கள் தட்டிப்போவது தவறில்லையா? 

😰😰




பட்டர் ... வருத்தப்பட வேண்டிய விஷயம் ரவி ... இதன் அர்த்தம் அப்படி அல்ல 

ஒரு பிரம்மம் ஆடாமல் அசையாமல் இருக்கிறது 

அதற்குள் ஒரு இச்சைப் பிறக்கிறது ... உயிர்களை படைக்க வேண்டும் என்று ... 

தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் பிரம்மம் பிரித்துக்கொள்கிறது ... 

ஆண் பிறப்புக்கு ஒரு மூலம் உண்டு ஆனால் பெண் பாதி ?

அதுதானே உயிர்களை உற்பத்தி பண்ணுகிறது அதற்கு மூலம் இல்லை ... 

அதுவே மூலமாக இருக்கிறது . அதாவது மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண் உலகம் மேலும் மேன்மை அடைய மூலமாக இருக்கிறாள் .. இதுதான் நிர் ( நிலைத்து நிற்கின்ற) மூலம் ... (தாய்) 

இது ஒரு தவம் , வரம் . 

சரஸ்வதியின் நட்சத்திரம் மூலம் .. எல்லாவற்றிக்கும் தாயாகவும் மூலமாகவும் இருக்கும் அபிராமி அந்த நட்சத்திரத்தில் பிறந்த எந்த பெண்ணையும் நல்ல நிலையில் அமர்த்தாமல் இருக்கவே மாட்டாள் 💐💐💐




*நான்* ... ஐயனே அற்புத விளக்கம் ...

கேள்வி 22

ஒரு பெண் ஒன்றை ஒன்பதாய் ஆக்குவாள் எனும் பழமொழி வீட்டுக்கு வரும் மருமகள் ஒன்றாய் இருந்த கூட்டுக் குடும்பத்தை சின்னா பின்னமாய் ஆக்குவாள் என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது .. 

இதற்கும் விளக்கம் தர வேண்டுகிறேன் 🙏🙏

பட்டர்

ரவி ஒரு ஆணின் வித்து ஒரு பெண்ணின் கருப்பையில் சிறு புள்ளியாய் வந்து  அமர்கிறது .. 

பர பிரம்ம நிலை .. அசைவு இல்லை ரூபம் இல்லை ... 

அந்த உயிர்க்கு உடல் தந்து கை கால்கள் கண்கள் இப்படி ஒன்பது அங்கங்களை தாய் தான் கொடுக்கிறாள் .. 

இதைத்தான்  ஒரு தாய் ஒன்றை ஒன்பதாக்குபவள் என்று சொல்கிறோம் .. 

ஒன்பதற்கும் சக்தியாய் இருக்கிறாள் .. ஒன்பதை ஒன்றாக்குபவள் தாய் .. 

இந்த பழமொழியை தலைகீழாக பார்க்க வேண்டும் ஒரு குழந்தை வெளியே வருவதைப்போல  .. 

ஒளி நிற்கும் கோணங்கள் ஒன்பதையும் படைத்தவள் அவள் என் அபிராமி 🙏🙏🙏

 நான்

அற்புதம் ...  பட்டரே!! 

மூல நக்ஷ்ரத்தில் பிறந்த  பல திருமணம் இன்னும்  ஆகாத பெண்கள் வாழ்விலும் , பல  மருமகள்கள் வாழ்விலும் உங்கள் விளக்கம் விலக்கேற்றி வைக்கும் ... 

பட்டர் சிரித்துக்கொண்டே சீறி பறந்தார் ... 

சீறி வந்த என் சந்தேகங்கள் பொங்கி வரும் பாலில் தண்ணீர் ஊற்றியத்தை போல் அமைதி அடைந்தன 🥇🥇🥇



 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍



. 

 .

Comments

ravi said…
சாப்பாட்டு ராமன்.
-------
இராமருக்கு இப்படியும் ஒரு பெயருண்டு. ஏன் வந்தது? யார் வைத்தது?

அயோத்தியாவில் ஒரு வீட்டில் ஒரு வாலிபன் வடிகட்டின சோம்பேறி யாக இருந்தான். வீட்டில் உண்பதும் உறங்குவதும் தவிர மற்றேதும் செய்யான்.

வீட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்ற உற்றார் உறவினர்கள் ஏதாவது ஒரு தொழில் / வேலை பழகச் சொன்னால் "நான் இது நாள் வரை வேலை செய்யாமல் இருந்ததால் உடல் பருத்த என்னால் என்ன செய்ய முடியும் வேண்டுமானால் இன்னும் சற்று அதிகமாக சாப்பிடுகின்றேன்" என்றான் .
ravi said…
அவன் பெற்றோர்கள் கடைசியாக அவனை எதாவது மடத்தில் சேர்ந்து விடு என கூறினர். அவனும் ஊரில் உள்ள பல மடங்களுக்கு சென்று வெளியே நின்று அங்குள்ள அனைவரும் குண்டாக இருக்கின்றனரா? இந்த மடத்தில் நல்ல நிறைவான உணவு கிடைக்குமா என்று நித்தம் சோதித்து, மடாதிபதி முதல் அனைவரும் திடகாத்ரமாக உள்ள ஒரு மடத்தை தேர்ந்தெடுத்தான்.
ravi said…
அந்த மடாதிபதியிடம் சென்று "ஐயா! நான் தங்கள் மடத்தில் சேர நினைக்கின்றேன்." என்றான். மடாதிபதியும் என்ன வேலை செய்யமுடியும் என கேட்டார். அவனோ நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன். எனக்கு உணவளித்து வேலை எதுவும் கூறாமல் என்னை பராமரிக்க வேண்டும் என்றான்.
ravi said…
ஒரு வேலையும் செய்யா விடில் எப்படி? சரி போகட்டும் அந்த ராமன் சித்தம் போல இங்கேயே இரு என்றார். அவனதற்கு இங்குள்ள அனைவரும் புஷ்டியாக குண்டாக இருக்கின்றனர் எனவே தேவையான உணவு கொடுக்கின்றீர்கள். ஆனால் ஒரு வேண்டுகோள். தயவு செய்து எனக்கு மட்டும் மற்றோரை விட சற்று கூடுதலாக உணவளிக்க வேண்டும் என்றான். மடாதிபதியும் ஒப்புக்கொண்டார்.

தினமும் சமையலறைக்குள் சென்று நன்றாக பல்வேறு உணவு தயாரிப்பதை கண்டு அன்றைய உணவு திருப்தியாக கிடைக்கும் என்று உறுதி செய்துக்கொள்வான்.
ravi said…
அவ்விதம் ஓர்நாள் பார்க்கும் போது , யாரும் சமையல் செய்ய வில்லை. உடனே மடாதிபதியிடம் சென்று கேட்டதற்கு இன்று ஏகாதசி, எல்லோருக்கும் இன்று உபவாசம் என்றார்.

ravi said…
சீடனோ எனக்கு இதை முதலிலேயே கூறவில்லை. கூறியிருந்தால் நானிங்கு சேர்ந்திருக்கமாட்டேன் நீங்கள் எனக்கு எப்படியும் உணவளித்தே ஆகவேண்டும் என்றான். இன்றைக்கு விதிப்படி யாரும் இங்குள்ள உணவு தயார் செய்யக்கூடாது. நீ வேண்டுமாயின் இங்கிருந்து மளிகை சாமான்களை கொண்டு சென்று தூரத்தில் உள்ள மரத்தடியில் நீயே சமைத்து உட்கொள்ளும் என்றார்.
ravi said…
எனக்கு சமைக்கத் தெரியாது. சுவைபட தின்று பழகிவிட்டேன் எப்படி இப்போது நான் சமைத்ததை சுவையற்ற உணவை உண்பது என்று கேட்டான். அதற்கு மடாதிபதியும் “நாங்கள் சமைப்பது கூட சமைக்கும் போது சரியாக இருக்காது ஆனால் ராமனுக்கு படைத்து பின் உண்பதால் சுவையானது ஆகின்றது” என்றார்
ravi said…
அதுபோல நீயும் சமைத்ததும் உண்ணும் முன்னதாக இராமனுக்கு படைத்த பின்னர் சாப்பிடு என்று சொல்லி அனுப்பினார்.

மடாதிபதி கூறியதுபோல மரத்தடியில் உணவை சமைத்த பின்னர் "ஹே ராமா! வா சாப்பிட்டு விட்டு போ !" என்றழைத்தான். பண்முறை அழைத்தும் வரவில்லை. ஏய் எனக்கு பசி அதிகமாகின்றது. விரைந்து வா இல்லாவிடில் நான் உயிரை விட வேண்டி வரும். எனக்கு உயிர் உணவு இரண்டும் மிக மிக முக்கியமானது என்றான்.
ravi said…
தாயார் லக்ஷ்மி பெருமானிடம் "வாருங்கள் ஒரு முறை ராமர் சீதையாக சென்று வரலாம் பாவம் குழந்தை“ என்று அழைக்க இருவரும் அந்த மரத்தடிக்கு வந்தனர் புண்ணகையுடன். அவரகளிருவருக்கும் உணவிட்டு, அவர்கள் உண்ணும் போது அவன் சீதையையும், உணவையும் வாடிய முகத்தோடு மாறி மாறி பார்க்கின்றான்.

இராமர் அவனை நோக்கி ஏன் நாங்கள் வந்தது உண்பது உனக்கு பிடிக்கவில்லையா? என வினவினார்.
ravi said…
அதற்கு நான் உன்னை மட்டுமே அன்றோ வா என்று அழைத்தேன், நீயோ சீதையையும் அழைத்து வந்தாயே எனக்கு மீறும் உணவு போராவிட்டால் என் செய்வது? அதுதான் கவலை என்றான். ஆனாலும் எனக்கு பசி பற்றி நண்றாக தெரியும் நீங்களுருவரும் நன்றாகவே உண்ணுங்கள் என்றான்.

ravi said…
அவர்கள் உண்டு சென்றதும் அவன் உண்டு மகிழ்ந்தான். அடுத்த ஏகாதசியன்று அவன் மரத்தடிக்கு போகும் முன் சீதையை நினைத்து மடாதிபதியிடம் சற்று அதிகமாக சமையல் பொருட்களை கேட்டான். அவரும் இவன் நன்கு உண்பவன் என்பதால் கேட்கிறதை கொடுத்து அனுப்பினார். இம்முறை சீதா, ராம, லக்ஷ்மனர் வந்திருந்தனர். இம்முறை லக்ஷ்மணன்னையும் சென்ற முறை சீதையை பார்த்து செய்ததையே செய்தான்.
ravi said…
அடுத்தமுறை லக்ஷ்மணனை நினைத்து அதிகமாக திரவியம் கேட்க மடாதிபதி சற்றே ஆச்சரியத்துடன் கொடுத்து அனுப்பினார். இம்முறை இராம, லக்ஷ்மண், சீதை, பரத சத்ருகன் வந்தனர். அவர்கள் செல்
லும் முன் "ஏய் ராமா ! என்ன நீ இங்கிதமில்லாது இப்படி ஒவ்வொரு முறையும் யாரையாவது அதிகமாக கூட்டி வருகிறாய். இது போதும். இனி உன் பரிவாரத்துடன் வா என்றான் (அவன் நினைத்தது சீதா, ராம் , லக்ஷ்மண பரத சத்ருகன்
ravi said…
அடுத்த ஏகாதசியன்று இராமர் தன் பரிவாரமான வானர சைன்யத்துடன் வந்து விட்டான். ஓ என்ன செய்வது? மடாதிபதியிடம் சென்று 1000 (அநேக சங்க்யை) பேருக்கு தேவையான சரக்கு தேவை என்றான். கொடுத்தனுப்பிய மடாதிபதியும் இவன் என்ன செய்கிறான் என பார்க்க பின் தொடர்ந்தார். மூட்டையை தூக்கி வந்த அலுப்பினால் மரத்தடி சேர்ந்ததும் மூட்டையை இறக்கி வைத்த பின் உறங்கி விட்டான் . இராமர் அவனை எழுப்பி உணவு தயார் செய்யுமாறு கேட்டபோது " ஹை நான் ஒருவனாக சமைக்க நீங்கள் பல பேர் உண்பதா? நீயும் உன் சேனையும் என்னை விட சோம்பேறிகளா? இன்று நீங்கள் சமையுங்கள் நான் உண்கிறேன் " என கூறி தூங்கச் சென்றான்
ravi said…
அவனை பின் தொடர்ந்த மடாதிபதி கண்களுக்கு ராம சைண்யம் தெரியவில்லை. அவர் சிஷ்யனை எழுப்பி ஏன் சமைக்காமல் படுத்துக் கொண்டுள்ளாய் என கேட்டார். இராம சகோதரர்கள் இன்று சமைக்கின்றனர், சீதை காய்கறிகள் நறுக்குகின்றாள் ; வானர சைண்யம் உதவி செய்கிறது. நான் ஏன் அவர்களுக்கு சமைக்க வேண்டும்? அவர்கள் சேதுவையே சமைத்தார்கள். இது ஒரு பொருட்டா? என்றான்.
ravi said…
ஒன்றுமறியாத மடாதிபதி இராமனை எனக்கு காட்டு என்று கேட்க அவனும் "இராமா ஏன் மடாதிபதிக்கு உன்னை தெரியவில்லை உடனே உன்னை காட்டிக் கொள்க" என்றான். இராமர் அப்படி முடியாது என்றதும் "டேய் ராமா அந்த மடாதிபதி பதி நான் ஒருவனே ஏகாதசியன்று அனைத்தும் தின்பதாக நினைக்கின்றார். என் மேல் வீண் களங்கம் உன்னால் ஏற்படும். அவர்
கோபத்தில் என்னை மடத்தில் சேர்க்காவிடில் உனக்கும்
இனி ஏகாதசியன்று உணவு இல்லை. என்னிடம் உண்ட நன்றிக்கடனாக அவருக்கு காட்சி கொடு." என்றான்.

இராமரும் தன் பரிவாரத்துடன் கையில் கரண்டியுடன் காட்சியளித்தார் மடாதிபதிக்கு.
ravi said…
மடாதிபதி "ஓ பிரபுவே. போஜராஜனே (போஜ்ய - உணவு) இது என்ன லீலை "என வினவ இராமனும் "ஆசார்யரான தங்கள் வார்த்தை மட்டுமே ஹேதுவாக (பொருட்டாக), என்னை அழைத்தான். நான் அவன் அன்பான கள்ளங்கபடமற்ற பக்தியை லக்ஷ்மியும் அறிய இருவருமாக வந்தோம். அடுத்தடுத்து லக்ஷ்மண், பரத, சத்ருகன் மற்றும் வானரங்களும் உணர அவர்களை அழைத்து வந்தேன். இராம சேவையில், பக்தியில் தன்னொப்பாரில்லை என்று கர்வம் கொண்டவர்கள் அனைவருக்கும் பாடமாக இந்த நாடகமாடினேன்." என்றான்.

தாஸரதி மஹா குரவே நம:
ஶ்ரீராம, போஜ ராம் இந்த கதையை கேட்டவர்களுக்கு, படித்தவர்களுக்கு, உணர்ந்தவர்களுக்கு என்றென்றும் பசி நீக்கி இன்பம் பயக்கட்டும்.
ravi said…
வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒருவன் இருந்தான்.

இரவு நேரங்களில் தவளைகள் கத்தும் ஒலி கூட சிவ நாமம் ஆன ஹர ஹர என்பது போல் இருக்கும்.

உடனே அவர் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜபிப்பார்.

அந்த அளவுக்கு சிவபக்தி கொண்டிருப்பவர்.

ஒரு முறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் வரகுண பாண்டிய மன்னர்.
🦚🦚🦚
ravi said…
ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.

அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.
நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.

அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?

பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.

மன்னா ! நான் ஒரு சிவபக்தன். பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.

பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன்.

ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.

அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே! அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.

🦚🦚🦚
ravi said…
ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.

அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.
நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.

அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?

பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.

மன்னா ! நான் ஒரு சிவபக்தன். பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.

பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன்.

ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.

அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே! அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.

🦚🦚🦚
ravi said…
அவ்வளவு தான் வரகுண பாண்டிய மன்னன் அவன் மீது பாய்ந்தார்.

அவனது வாயோரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார்.

இதை பார்த்த அந்தத் எள்ளுத் திருடன் திகைத்தான்.

மன்னா ! ஏன் இப்படி செய்தீர்கள்? எச்சில் பட்ட எள்ளைத் தின்னலாமா ? எனக் கேட்டான்.

அடேய் ! நீ மட்டும் சிவனுக்கு தனியாக செக்கிழுக்க முடியுமா ?

ஜோடி மாடு வேண்டாமா ?

அந்த மாடாய் பிறக்கவேண்டும் என்று நான் அப்படி செய்தேன் என்றார் வரகுண பாண்டிய மன்னர்...!

பக்திக்கு அளவு, ஈடு, எதுவும் கிடையாது.

நமசிவாயம் போற்றி!!!
சிவனென்றிரு மனமே ...
ரமணி said…
அருமையான விளக்கம் ..
இதுவரை கேட்டிராரது..

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்டிருக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஒரு பெரிய ஆறுதலை கொடுத்து உள்ளார் சக்தி குழும அபிராமி பட்டர்...

🙏🙏🙏🙏🙏
கௌசல்யா said…
Arumaiyilum arumai 👌 arumai the explanation is amazing... 🙏🙏
ravi said…
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!

எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்
இயல்பான அழகு வடிவம்
இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை
இறைவிநிறம் நல்ல பவளம்
ravi said…
கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்
கடைந்ததோர் இரண்டு கால்கள்
கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி
கற்பகப் பூவில் தோள்கள்

புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம்
பூக்களாய் மலர்ந்திருக்க
பூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலை
பூமாலையோடு தந்தேன்

வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொரு
வரம்தந்து காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 1
ravi said…
பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
படித்துறையில் பால் கொடுத்தாய்
பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப்
பாட்டரசன் ஆக்கி வைத்தாய்

வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய
விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
விலகிடும் வழி அமைத்தாய்

நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை
நோக்கி நீ எது கொடுத்தாய்
நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள்
கிழைவதற்கு ஏன் விடுத்தாய்
ravi said…
வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்
வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 2

தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்
``தாய்'' என்று சொல்லிவைத்தார்
தலைமகளுன் சந்நிதியில் கலைமகளின் அருளாலே
தமிழ் பாடி வரங்கள் பெற்றார்

சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்
செவிமூடி நிற்க லாமோ?
சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும்
தேவியவள் நீயல் லவோ
ravi said…
ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள்
அணுகவிடல் முறையாகுமோ
அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல்
அனுதினமும் வாட லாமோ?

வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து
மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 3

தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியிலே புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப் பூமாது போற்றி
ravi said…
மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகறுழ்ந்தளிக்கும் அரசி போற்றி
மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி
மங்கை மீனாட்சி போற்றி

பொங்கி வரும் துயரத்தைப் பொடியாக்க வரும் அன்ன
பூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றி
ravi said…
மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர
மாதரசி கூட்டி வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 4

மலைபோன்ற செல்வத்தை குவித்து வைத்திருந்து நான்
மற்றவர்க்கு உதவ வேண்டும்
மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
மகிழ்வோடு வாழ வேண்டும்.

கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான்
கௌரவம் பெறவும் வேண்டும்.
கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம்
காட்சி தந்து அருளவேண்டும்.
ravi said…
நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும்
நேசிக்கும் உறவு வேண்டும்.
நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு
நேர் வழிகள் காட்டவேண்டும்

வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும்
மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 5

சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச்
சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்!
தெரியாமல் செய்த பிழை அத்தனையும் மன்னிக்கத்
தேடி வந்த ழுதிருப்பேன்!
ravi said…
புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின்
போகத்தை அளந்தி ருந்தேன்!
பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப்
புரியாமல் வாழ்ந்திருந்தேன்!

திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்துநான்
செவ்வாயில் விரதம் வைத்தேன்!
தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி
சிங்காரப் பாட்டி சைத்தேன்!

பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப்
பாவை நீ காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே! 6
ravi said…
திருக்கழுக் குன்றத்தில் கழுகுக்கும் மதியத்தில்
தினந்தோறும் சோறு உண்டு!
திருநாளாம் பொங்கலில் நந்தியெனும் மாட்டுக்கும்
தித்திக்கும் பொங்கல் உண்டு!

வருஷத்தில் ஒருநாளில் வடையோடு அன்னத்தை
வைரவரும் காண்ப துண்டு!
வளர்கின்ற புற்றுக்குள் ஒளிகின்ற பாம்புக்கும்
வார்க்கின்ற பாலு முண்டு!

அர்ச்சித்து வழிபட்டு அன்னையே உனையெண்ணும்
அடியேனுக் கென்ன உண்டு!
அன்று தினம் அளந்தபடி என்றைக்கும் நடந்திடவே
அருள்புரிய வேண்டும் அம்மா!

மரம் வைத்த நீதானே தண்ணீரும் விடவேண்டும்
மறந்திடல் முறையாகுமோ - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே!
வளம் காண வைக்கும் உமையே! 7
ravi said…
கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம்
கழுத்திலே பொதி யிருக்கும்!
காளைமாடாகவே பிறந்திடின் நிச்சயம்
கழனியில் கால் இருக்கும்!

பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ
பகலிரவு விழிக்க வேண்டும்!
பறவையாய்ப் பிறந்தாலும் மரங்களின் உச்சியில்
பதியங்கள் போட வேண்டும்!

அழுதாலும் தொழுதாலும் அன்னையே உனையன்றி
யாரெனக்கு தவுவார்கள்?
ஆறறிவு கொண்டதோர் மனிதனாய் என்னை நீ
அகிலத்தில் படைத்த பின்னால்

வழிகாட்ட மறுப்பதும் நியாயமா? என் விழியில்
வடிந்து நீர் ஓடலாமா? - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 8
ravi said…
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ
புலம்பியே தீர வேண்டும்!
பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்தநான்
புதுயுகம் காண வேண்டும்!

கல்லாகி நிற்கின்ற தெய்வம் நீ இல்லையெனக்
காட்டிட விரைந்து வருக
கனதனம் நீதந்து காசினியில் புகழ்தந்து
காவலாய் நின்று அருள்க!

முள்ளாக மலராக மோதிடும் வாழ்க்கையில்
முற்றும் நான் நம்பி வந்தே!
மோதகப் பிரியனின் தாயான உன்னிடம்
முறையீடு செய்யு கின்றேன்!

பல்லக்கு பரிவாரம் பார்த்திடும் ராஜாங்க
பவனியை எனக்கு அருள்க - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே! 9
ravi said…
எவருக்கு எதுவேண்டும் என்பதை அறிந்த நீ
ஏறிட்டுப் பார்க்க வில்லை!
இருகரம் கூப்பியுன் சந்நிதியில் நிற்கும் நான்
எதுகேட்டும் மாறவில்லை!

சிவல்புரியில் வாழ்கின்ற சிங்காரம் தந்ததோர்
செந்தமிழ் கவிதை மூலம்!
சீர்கொண்ட பதிகங்கள் பத்தையும் கேட்டுநீ
சிரமத்தை அகற்ற வேண்டும்!

கவலைக்கு மருந்தாகும் கடவுளே உனைநம்பி
காலங்கள் போக்கி விட்டேன்!
காப்பாற்ற வேண்டியது உன்பொறுப் பல்லாது
காசினியில் யார் பொறுப்பு!

மகன்கேட்டு தாய்எதுவும் மறுப்பதில் முறையில்லை
மனமிரங்கி வந்து அருள்க! - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 10
ravi said…
இராமனாகினும்
இராவணனாகினும்

எவராகினும்

குறையின்றி
நிறையாய்
நிலைத்தல் என்பது
முடியாது என்பது இயற்கை விதி

குறை குறைந்து
மறை நிறைந்து
மனிதனாய் வாழ்ந்து
கடவுளாய் நிலைப்பதே
நியதி

இராமனும்
அப்படியே

சிறு வயதில்
கூனி சீண்டயதின்
விளைவே இராமாயணம்

கூனியின்
ஊனத்தை
கிண்டல் செய்தான்
இராமன்

அது அவனின் குறைதானே

ஒவ்வொரு
மனிதனுக்கும்
ஒரு
குணாதிசயம்

இராமனின்
சுபாவம்
பெண்களை
மதிப்பது

இந்திரன்
குணாதிசயம்
பெண்களால்
கவரப்படுவது

இராமன்
விஷ்ணுவின்
அவதாரம்

இந்திரனும்
விஷ்ணுவின்
அவதாரமே

அனைத்துமே
அவனானபோது
அங்கலாய்புக்கு
இடமேது

குறையென்று
ஒன்று
இருந்தால்தான்

நிறையென்பது
நிறைவாய்
தெரியும்

பிறர் மனை நோக்கல்
எனும் குறை கொண்ட
இராவணன் இருந்ததால்தான்

பிறன் மனை நோக்கா
இராமன் வந்தான்

ஊனத்தை
உதாசீனப்படுத்திய குறைகொண்ட
இராமனால்தான்
இராமாயணம்
வந்தது

எனவே

குறை
வேண்டும்

அது
குறைவாய்
வேண்டும்

அது
குறைய
குறைய

நிறை
வெளிப்படும்

இறை
துளிர்விடும்
ravi said…
*யுத்த காண்டம்*
ravi said…
ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்,
வாழி சோபனம்! மங்கள சோபனம்,
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்".

அனுமன் கொண்டு வந்த மங்களகரமான செய்தி கேட்டு சீதை உடல் பூரித்தாள். செய்தி கேட்ட களிப்பின் மிகுதியால், பிராட்டி ஒன்றும் பேசமுடியாமல் இருந்தாள்.

"அன்னையே! தாங்கள் ஒன்றும் பேசாதது ஏன்?" என்கிறான்.

"மாருதி! மகிழ்ச்சிப் பெருக்கினால், உனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை" என்கிறாள் சீதை. ஆஞ்சநேயா! நீ முன்பு வந்தபோது நீக்குவென் மொய்சிறை என்றாய். பின்னை நீக்கி உவகையும் பேசினை, என்ன பேற்றினை உனக்கு ஈவது. உன்னி உன்னி உரை மறந்து நின்றேன்" என்றாள்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 97*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 15 , 16 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இந்த 15 ஆவது ஸ்லோகத்துல

उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां

दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् ।

शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते

कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ॥

உபேக்ஷா நோ சேத் கிம் ந ஹரஸி ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்

து³ராசாபூ⁴யிஷ்டா²ம் விதி⁴லிபிமசக்தோ யதி³ ப⁴வான் ।

சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம் பசுபதே

கத²ம் வா நிர்யத்னம் கரனக²முகே²னைவ லுலிதம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
பிரம்மாவும்,விஷ்ணுவும் நான் பெரியவன், நான் பெரியவன்னு வாக்குவாதம் பண்ணின போது அங்கே ஒரு ஜோதி ஸ்வரூபமா பரமேஸ்வரன் காட்சி கொடுக்கறார்.

இந்த ஜோதியினுடைய பாதத்தை, அடியை நான் பார்த்துண்டு வரேன்னு விஷ்ணு பகவான் வராஹரூபம் எடுத்துண்டு போறார்.

பிரம்மா ஹம்ஸரூபம் எடுத்துண்டு இந்த ஜோதியோட முடியை பார்த்துண்டு வரேன்னு போறார்.

ஆனா இரண்டு பேராலயும் அடிமுடி காண முடியாத பரமேஸ்வர ஸ்வரூபம். ஆனா விஷ்ணு பகவான் திரும்பி வந்து நான் பார்க்கலை.

என்னால பாதத்தை பார்க்க முடியலைன்னு சொல்றார்.

ஆனா பிரம்மா வந்து நான் பரமேஸ்வரனுடைய சிரஸை பார்த்தேன்.

அந்த ஸிரஸிலிருந்து இந்த தாழம்பூ கீழ விழுந்துண்டு இருந்துதாம்.

அந்த தாழம்பூவையே கூட்டிண்டு வந்து பொய்சாக்ஷி சொல்ல சொல்லி, நான் பரமேஸ்வரனுடைய சிரஸைப் பார்த்தேன்னு பிரம்மா சொல்றார்.

அந்த தாழம்பூ ஆமாம்னு சாக்ஷி சொல்றது.

உடனே பரமேஸ்வரன் தரிசனம் கொடுத்து கோவிச்சுண்டு ப்ரம்மாவோட 5வது தலையை கிள்ளி போட்டுட்டார்னு கதை.

அந்த மாதிரி பிரம்மாவை தண்டிக்கவே உங்களால முடியுமே.

என் தலையில அவர் இந்த மாதிரி எழுதின, அதுவும் ஒரு கெட்ட எழுத்தை, கெட்ட எண்ணங்கள், கெட்ட ஆசைகள் இதுலேயே நான் இருந்துண்டு இருக்கேன்.

அதை நீங்க போக்கக் கூடாதான்னு சொல்றார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 112. 12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

*அநாதி நிதனோ* தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
கண்ணன் அவதரிக்கும் போதே மனைவியான மகாலட்சுமியோடும், மகனான பிரம்மாவோடும் வந்து தோன்றினான்
என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

அளவில் குழந்தையைப் போல கண்ணன் தோன்றினாலும்
வாலிபப் பருவத்து இளைஞனாகவே விளங்கினான்.

கண்ணன் பூமியில் வாழ்ந்த 125-வது வயது வரையிலும்
அதே இளைஞனுக்குரிய தோற்றத்தோடுதான் விளங்கினான்.

அவனுக்குத் தோல் சுருங்கவில்லை, முடி நரைக்கவில்லை.
ravi said…
ஏனெனில் அவனது திருமேனி நம் உடலைப்போல ஒரு காலத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, பின் மறையக் கூடியதல்ல.

அது மாற்றமில்லாத, ஆதி அந்தம் இல்லாத எப்போதும் இளமையாகவே இருக்கக் கூடிய திருமேனி.

அதற்கு ஆரம்பமும் கிடையாது, வளர்ச்சியும் கிடையாது, தேய்தலும் கிடையாது, மறைவும் கிடையாது.🪔🪔🪔
ravi said…
*குளிக்காமலும் தரிசிக்கலாம்!* - பெரியவா.

தேசபக்தி தவிர அனைத்தையும் துறந்தவர் காஞ்சிப்பெரியவர். *விவேகானந்தரைப்* போல் சிறந்த தேச பக்தராக விளங்கினார்.

ravi said…
1922ல், திருச்சி பகுதியில் பெரியவர் யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது சுதந்திரத் தியாகிகளான தீரர் சத்தியமூர்த்தி, சி.ஆர். தாஸ், ஏ. ரங்கசாமி ஐயங்கார், எஸ். சீனிவாச ஐயங்கார் உள்ளிட்ட பலர் அவரிடம் ஆசி பெற்றனர்.
ஒருநாள், காந்தியால் 'என் மகனைப் போன்றவர்' எனக் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவரான ஜம்னாலால் பஜாஜ், பெரியவரைத் தரிசனம் செய்ய வந்தார். அவருடன் வந்தவர் ராஜாஜி.

ravi said…
ஜம்னாலால் பெரியவரைத் தரிசிக்க குடிலுக்குள் வந்தபோது ராஜாஜி உடன் வராமல் வெளியே நின்று விட்டார். அதற்கு காரணம் இருந்தது.

ஜம்னாலாலிடம் 'உடன் யார் வந்திருக்கிறார்கள்?' என விசாரித்தார் சுவாமி. ராஜாஜி வந்திருப்பதாக சொன்னதும், 'அவரை உள்ளே வரச் சொல்லுங்கள்!' என்றார்.

ராஜாஜி தயக்கத்தோடு உள்ளே வந்து சற்றுத் தள்ளி நின்றுகொண்டார்.
ராஜாஜியைச் கனிவோடு பார்த்த சுவாமி ''நீ இன்று அதிகாலையே எழுந்து பல்வேறு கடிதங்கள் எழுதுகிற அவசர வேலையில் ஈடுபட்டிருந்தாய் இல்லையா? வேலைப்பளு காரணமாக இன்னும் நீ குளிக்கக் கூட இல்லை. ஜம்னாலால் அழைத்தவுடன் அப்படியே புறப்பட்டு வந்துவிட்டாய். ஸ்நானம் செய்யாமல் எப்படி சுவாமிகளை தரிசிப்பது, ஆசாரக் குறைவாயிற்றே என்று நினைத்துத்தானே வெளியே நின்றாய்?'' என்றார்.

''ஆமாம் சுவாமி!'' என்றார் ராஜாஜி தயக்கத்துடன்.

''நீங்களெல்லாம் உங்கள் வாழ்க்கையை தேச விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறீர்கள். தேசம் வேறு, தெய்வம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். தேசபக்தர்கள் சின்னச் சின்ன ஆசாரங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தேசபக்தி என்ற உணர்வு உங்கள் உடலையும் மனத்தையும் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் மனமும் உடலும் எப்போதும் சுத்தமாகவே இருக்கிறது.

நீ எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். தயங்கத் தேவையே இல்லை. புரிந்ததா? உனக்கு மட்டுமல்ல, தங்களைப் பரிபூரணமாக தேச சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தியாகிகள் எல்லோருக்கும் இது பொருந்தும்.'' என்றார் பெரியவர்.

பெரியவரின் அன்பைக் கண்ட ராஜாஜியின் விழிகளில் பக்திக்கண்ணீர் திரையிட்டது.
🙏🙏🙏
TV Ganesh said…
Happy evening

Sir

Few things in our lives or in the world last that long. Your efforts have brought great honors to the organisation.

We all know, that you have brought lot of funding to the organisation in crucial times.

Like the ever wealthy "mahalakshmi", who is never short of wealth. You have never said no to the organisation funding requirements.

To bring funding.and also manage the cash flow ,you have brought and implemented several international standards within the organization.

You have also constantly monitored these systems and processes which guided our organization to such great heights. Notably , your contribution to Hyderabad Metro is immense and it has brought that project to such great heights.

Mr.shishir is showing nice gratitude now



You have been at the helm, guided, mentored and steered the entire team in the direction of completion which will benefit the organisation.




Being a doyen of management, you have developed great working structure here in metro.
you've supported , motivated and sculptured lot of sub ordinates.

Hearty congratulations💐💐💐💐💐


Warm Regards,
PRS said…
Very true. It was a pleasure interacting with him being in a public sector
Kvb said…
Very well said JRK. Sishir is man with full dedication and honest from his heart. Hyderabard Metro can not forget such people. 🙏
Shishir said…
This was more to celebrate our time together. Debt was managed most efficiently
KPS said…
Great JRK. I am also in the list of guys who appreciated your great work. But iam an inside person .
KPS said…
As far as finance was concerned you did a great job. So the appreciation.
ravi said…
*கணுப் பண்டிகை பாடல்*

( *அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சமர்ப்பணம்*)

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்.

கணுப் பிடியும்
காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்.

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்.

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்.

காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்.

கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்.

வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்.

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்.

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்.

எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்.

கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்.

தூப தீபம் காட்டி வெச்சேன்
தூய மனதோடு நானும் வெச்சேன்.

கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை வணங்கி வெச்சேன்.

ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்.

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்.

கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்.

காக்கைக் கூட்டம் போல
எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்.
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 99* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 20👍👍👍
ravi said…
கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:

ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ

ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா🙏🙏🙏
ravi said…
முன்னே 17ஆம் ஸ்லோகத்தில் அன்னையை *சசிமணிசிலா* என்று சந்த்ரகாந்த கல்லை உடைத்தாற்போல என்பதாக வர்ணித்தார்.

இங்கே 20ஆம் ஸ்லோகத்திலோ *ஹிமகரசிலா* என்கிறார்.

*சசம்* என்றால் முயல். சந்திரனில் தெரியும் கருப்பு நிறத்திட்டானது முயல் ரூபத்தில் இருக்கிறபடியால் சந்திரனுக்கே ' *சசி* ' என்று பெயர்.

சாதாரணமாக சந்திரனிலிருந்துதான் அம்ருதமும் பனி ஜலமும் உருவாவதாக சொல்லப்படும்.

இந்த பனி ஜலத்தை உருவாக்குவதால் சந்த்ரனுக்கு *ஸுதாகரன்* என்ற நாமம் உண்டு.

இன்றைய ஸுதாகர் என்னும் பெயர் இவ்வாறு வந்ததுதான்.

இந்த சந்திரன் பனி மலையினை உருவாக்குவதால் *ஹிமகரன்* என்றும் பெயர்.

ஹிமயமலை என்றால் பனிமலை என்றே பொருள்.

பனிமலை நிறத்தில் அன்னை என்பதை *ஹிமகர-சிலா* என்று கூறி அவளிடத்துப் பெருகும் *அம்ருதரஸம்* என்று ஆரம்பித்து ஸ்லோகத்தின் முடிவில் அவளை வழிபடுவதால் உபாசகனும் அம்ருதத்தை பெருக்குவதாக சொல்லி முடிக்கிறார்.

அதாவது சஹஸ்ராரத்தில் அன்னையை நிலை நிறுத்தி ஜபம் செய்கையில் உபாசகனுக்கு ஏற்படும் உணர்வினை அம்ருத ஊற்றாக உருவகப்படுத்துவது வழக்கம்.

அதை குறிப்பால் உணர்த்திச் செல்கிறார் ஆச்சார்யார்.🙏🙏🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 99* started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
இன்றும் 27 வது திருநாமம் 🎼🎼🎼
ravi said…
*நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ* -
ravi said…
சௌந்தர்ய லஹரியில் ஆச்சரியார் மிகவும் அழகாக இந்த நாமத்தை உள் வாங்கிக்கொண்டு வர்ணிக்கிறார் ...

அங்கே அம்பாள் தன் ராஜ சிம்மாசனத்தில் சிம்மங்கள் சூழ மகாராணியாய் ராஜ ராஜேஸ்வரியாய் அமர்ந்திருக்கிறாள் ...

கடம்ப வனமும், சிந்தாமணிகளும் சூழ்ந்த பொன் நிற இடம் ...

சுற்றி குயில்கள் பாடுகின்றன ...

இல்லை இல்லை தாளம் போடுகின்றன ...

சுற்றி இருக்கும் தடாகத்தில் தாமரைகள் மலர்ந்திருக்கின்றன ..

---2👌👌👌
ravi said…
சூரியன் இல்லாவிட்டாலும் கோடி சூரியனுக்கு நிகரான அம்பாள் அங்கே உதித்து இருப்பதால் அவை மலர்ந்து இருக்கின்றன ...

அதில் அன்னங்கள் தன் குடும்பத்துடன் அங்கே குடி புகுந்து அம்பாள் நடை புரிவாளா என்றே ஏங்கி பார்த்துக்
கொண்டிருக்கின்றன...

சூரியனுக்கும் மறைய மனம் இல்லை ..

அவன் மறையாவிட்டால் சந்திரனால் அங்கே வந்து அம்பாளின் அழகை ரசிக்க முடியாது ..

சூரியனை கரிச்சுக் கொட்டுகிறான் சோமன் ...

சூரியன் அதை அலட்சியம் செய்யாமல் வானத்தை அவள் முகம் போல் சிவப்பாக வைத்திருக்கிறான் ..

இருட்டும் சூரியனை திட்டி தீர்க்கின்றன

தங்களால் அம்பாள் பக்கம் வர முடியாததால் ..

---3👍👍👍
ravi said…
அம்பாள் இதழ் சொட்டும் மதுரம் அதைக்கண்டு கார்மேகம் தான் உடைந்து போனதோ என்றே ஆனந்தம் கொண்டு மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன . .

தாம்பூலம் அதை மென்று கொண்டே கலைவாணீ வாசிக்கும் யாழில் மெய்மறந்து *சபாஷ்* என்று பாராட்டுகிறாள் அன்னை ...

அவ்வளவுதான் அங்கே கலைவாணீ யும் காணவில்லை அவள் யாழ் கச்சபீ யும் காணவில்லை ..

சத்திய லோகத்தில் தேடியும் வாணீ கிடைக்க வில்லை

பிரம்மன் நாவிலும் இல்லை ...

அவள் ஒளிந்து கொண்டது அன்னையின் பாதத்துளிகளில் ...

4💐💐💐
ravi said…
பேஷ் எனும் ஒரே வார்த்தை அமிர்தஸ்வரிணியாக இருக்கும் போது தான் அறிந்துகொள்ள வேண்டியது இன்னும் கடல் போல் உள்ளது என்று வாணீ நினைத்தாளாம்..

இதையே அபிராமி பட்டர்

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் என்றார் ...

இன்னொரு பாடலில் குரலும் கையும் வீணையும் பயோதரமும் பச்சை வண்ணமும் கொண்டு மதங்கர் குலத்தில் தோன்றிய எம் பெருமாட்டியே பேரழகியே என்கிறார் ...

🪔🪔🪔🙏🙏🙏
ravi said…
*7 - இடங்கழி நாயனார்*🌷🌷🌷
ravi said…
*பண்டாரமும் பண் புகழ் ஆரமும்* 🌷🌷🌷
ravi said…
ஆட்சி செய்தான் அறம் செழிக்க ...

அங்கும் இங்கும் எங்குமாய் சிவனைக் கண்டான் ...

எதிலும் சிவநாமம் எங்கும் திருநீறே ...

கண்டிலர் இவனைப் போல ஒரு மன்னனை

விண்டிலர் வேண்டினர் இவன் ஆட்சி தொடரவே

எண்ணிலர் இவன் தரும் கொடையை பெற்றவர் ..

போற்றிலர் இவன் பெயர் இல்லா மன்னவர் எவரையும் ..

சாதித்தனர் இவனே சிவம் என்று

பூஜித்தனர் தெய்வம் அரசனாய் வாழும் போது ...

கண்டனர் ராமன் ஆட்சிதனை

கணிந்தனர் பிறவி குருடன் கண் பெற்றதை போல்

தானம் செய்யும் ஒருவன் பொருள் தீர அரசாங்க தானியம் தனில் கை வைக்க

விலங்கு மனம் கொண்ட சிலர் விலங்கை அவன் கையில் சாத்தினரே...

ஏன் திருடினீர் என்ற கேள்விக்கு பதில் சொன்னான் அவன் ...

சிவனடியார் அமுதம் காணவே கையில் இருந்தவை தீர்ந்தனவே ..

கள்வன் ஆனேன் என் மனம் கொண்ட கள்வன் பால்

அரசன் அவன் காலடியில்

நீரே இனி என் பண்டாரம் ... சிவன் பண் புகழ் ஆரம் ... என்றே கூத்தனாய் ஆடினானே

இரண்டும் கலந்த கலவை காஞ்சியில் தூசி படிந்த மனங்களை சிவநாமம் உரைத்தே சலவை செய்கின்றதே 🪔🪔🪔
ravi said…
[15/01, 10:05 am] Shivaji L&T C: Arumai🌹🌹🙏🙏
[15/01, 10:23 am] Moorti Mumbai: அருமை அற்புதம் நன்றி 🙏🙏🙏🙏
[15/01, 10:25 am] Moorti Mumbai: சிவநாமத்திற்க்கு ஈடு இணை இல்லை. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🤲🤲🙏🙏🙏
[15/01, 10:44 am] Metro Kowsalya: Arpudham...First time hearing about this Raja.
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 193🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
Opportunity may knock only once, but temptation leans on the doorbell.

Our first lesson is that life is meant for learning.

People are like books, some deceive us with their cover and others surprise us with their content.
ravi said…
Though VAT 2005 disappointed many in industries , it did not do the same with me .. Following are my key takeaways

1. I could familiarise with State wise VAT , rules , forms , concerns

2. I could expand my network ... I could get more than 200 people in the radar of my friendship

3. Could improve my skill of presentation , also got rid of my stage fear

4. Avoided engaging big 4s thereby saving to the tune of Rs 4 to 5 crs consultation fee for L&T .

5. Gained respect from Sales Tax officials , seniors

6. Kept myself away totally from the thoughts of GPK , PpM ...

7. I stoodby what I committed to YMD and RSR .

8. Also helped me to understand various IT platforms of business verticals

To sum up bankability on me was ensured ..

There were initial itches in VAT understanding by business heads ... But in a month or two people got accustomed to the so called tax reform . 👍
MPN said…
Nice to know, some good words.
This has become a rare commodity.
Thanks
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு
ravi said…
ஒரு பிடி என்பதை ” கோ க்ராஸம் ” என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு ”க்ராஸ்” என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாயும், தார் ரோடாயும் மாறி வருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் ஆத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
ravi said…
இதற்கெல்லாமாவது கொஞ்சம் செலவு, த்யாகம் பண்ண வேண்டியிருக்கிறது. இதுகூட இல்லாமல், நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும் போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்?
ravi said…
அப்படிப்போடாமல், சிலர் வீடுவீடாகப்போய் இந்தத் தோலை எல்லாம் ‘கலெக்ட்’ பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். நான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அநேக இடங்களில் இந்தக் கார்யம் நடந்தது. இப்போதும்கூடப் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.
ravi said…
உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ணவேண்டியது தான். ஆனாலும் இப்படி மெகானிகலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால்,
ravi said…
இதில் நமக்குக் கிடைக்கிற உள்ள நிறைவே அலாதி என்று தெரியும். ஸேவையிலே இதுதான் முக்யமான அம்சம்;அதில் பணமும் உழைப்பும் பேசுவதைவிட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்.
ravi said…
ஸேவை செய்கிறவர்கள் ஸங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, ஸேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன்தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது? ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், ஸேவையால் அந்த ஈஸ்வரத்வத்தை அநுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் ஸேவையின் ஸாரம்.
ravi said…
கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்யவேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை – தாயாருக்குச் செய்யவேண்டிய கடமைக்கு ஸமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான்.
ஆஃப்கானிஸ்தான் மாதிரியான துருக்க ராஜ்யங்களில் கூடப் பல வருஷங்கள் முன்பே கோஹத்தியை ban செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இதில் வேண்டுமென்றே மத த்வேஷங்களைத் தூண்டி விட்டிருந்தார்கள். எந்த ஸர்க்கார் இருந்தாலும், எந்தச் சட்டம் வந்தாலும், வராவிட்டாலும் பசுக்கள் கசாப்புக் கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் புனிதமான கடமை என்று நாம் இருந்தோமானால் கோமாதாவுக்கு ஹானி இல்லை.
ravi said…
இதிலே நாம் குஜராத்தி, மார்வாரிகளைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கோபாலக்ருஷ்ணன் வாஸம் பண்ணின பிரதேசமானதால் போலிருக்கிறது இவர்களுக்கு கோ ரக்ஷணத்தில் அலாதிப்பற்று இருக்கிறது!
ravi said…
முன்காலங்களில் ‘ பசு மடம் ‘ என்று வைத்து நம் க்ராமமெல்லாம் போஷிக்கப்பட்ட இந்த தர்மத்தில் பிற்பாடு நாம் ச்ரத்தை இழந்துவிட்டோம். ஆனால் “பிஞ்சரபோல்”, கோசாலா என்று வைத்து இந்த வடக்கத்திக்காரர்கள் எத்தனை வாத்ஸல்யத்தோடு பக்தியோடு பசுக்களைப் பராமரிக்கிறார்கள்?
ravi said…
கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமி்ல்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்; அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும்.
ravi said…
*யுத்த காண்டம்*
ravi said…
பிராட்டியின் கருணை மனத்தை நினைத்து அனுமன் கண்கள் பனிக்க, அவளைப் பணிகிறான்.

இராமன் விபீஷணனை அனுப்பி சீதையை அணிகலன்களோடும் சீரோடும் அழைத்து வா என்று அனுப்பினான்.

விபீஷணன் உடனே வந்து சீதையை வணங்கி, "தாயே! தங்களை நல்ல ஆடை, அணிமணிகள், ஆபரணங்கள் அணிந்து அழைத்து வரப் பணித்தார் அண்ணல்" என்று கூறுகிறான்.

சீதாதேவி, "புதிய ஆடைகளும், அணிகலன்களும் இல்லாமல் நான் இங்கிருந்த கோலத்தில் வருவதே எனக்குத் தகுதி" என்று அவன் வேண்டுகோளை மறுத்து, தான் இருக்கும் விதமாகவே புறப்படத் தயாரானாள்.

அதற்கு விபீஷணன்,"அன்னையே, இது இராமபிரான் கட்டளையாயிற்றே" என்று சொல்லவும், சரியென்று சீதையும் சம்மதித்தாள்.

மேனகை, அரம்பை, ஊர்வசி, ஆகியோர் வந்து மஞ்சனமாட்டி, ஆபரணம் பூட்டி அன்னையை அலங்கரித்தார்கள்.🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 99*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 15 , 16 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இந்த 15 ஆவது ஸ்லோகத்துல

उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां

दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् ।

शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते

कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ॥

உபேக்ஷா நோ சேத் கிம் ந ஹரஸி ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்

து³ராசாபூ⁴யிஷ்டா²ம் விதி⁴லிபிமசக்தோ யதி³ ப⁴வான் ।

சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம் பசுபதே

கத²ம் வா நிர்யத்னம் கரனக²முகே²னைவ லுலிதம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
வினம்ராணாம் சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி சரண-

ப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி தவ நிர்தூ⁴ததமஸி ।

அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ

விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே ॥
ravi said…
*வினம்ராணாம்* – ரொம்ப வணக்கத்தோட அம்பாளை நமஸ்காரம் பண்றவாளோட

*சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி* –

அவாளுடைய மனம், *சேதஸ்* என்ற வீட்டின் மாடியில்

*சரணப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி –*

அவாளுடைய மனசுல அம்பாளோட சரணம் வந்துடும்ங்கிறார்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 100* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 20👍👍👍
ravi said…
கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:

ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ

ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா🙏🙏🙏
ravi said…
ரோக நிவாரணத்திற்காகச் சொல்லும் ஸ்லோகம் இது.

முன்பு சொன்னது போல செளந்தர்ய லஹரி முழுவதுமே மந்த்ர சாஸ்த்ரமாகும்.

இதில் ஒவ்வொரு ச்லோகத்தையும் மந்த்ரமாக நினைத்து ஜபித்தால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.

இந்த ஸ்லோகங்களுக்கான தனி-தனி சக்ரங்கள், த்யான, பாராயணாதி முறைகளை அறிந்து குருமுலமாக செய்ய வேண்டியது.🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 100* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
இன்று 28 வது திருநாமம் 🎼🎼🎼
ravi said…
*28* मन्दस्मितप्रभापूरमज्जत्कामेशमानसा *மந்தஸ்மித ப்ரபாபூர* *மஜ்ஜத் காமேசமாநஸா |* -

அழகிய நெளிந்து ஓடும் காட்டாறுகளை பெரிய மலைகளில் படத்திலாவது பார்த்திருப்பீர்கள்.

மன்மதனின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகு அது.

அதே தான் அம்பாளின் புன்னகையின் அழகும்💐💐😊😊😊
ravi said…
*மந்த ஸ்மித* = நளின புன்னகை, கனிவான சிரிப்பு

*ப்ரபா* = பிரகாசம்

*பூர* = பொங்கும் பிரவாக நதி அல்லது கடல்

*மஜ்ஜத்* = மூழ்குதல்

*காமேஷ மானஸா* = காமேஷ்வரனின் மனம்

*28 மந்த்ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஷ மானஸா* =

தன் மென்னகையின் ஒளிப்பிரவாகத்தில் காமேஷ்வரனின் மனதை லயிக்கச்செய்பவள்🙂🙂🙂
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 194🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
Happiness is like a crystal, fair, exquisite and clear, broken in a million pieces, shattered, scattered far and near. Now and then along life's pathway, some shining fragments fall, but there are so many pieces, no one ever finds them all. Priscilla Leonard

The happiest people are evaluating and improving themselves. The unhappy people are evaluating and judging others.
ravi said…
YMD and RSR waited for a month post VAT implementation in L&T ..

Fortunately excepting some teething issues here and there , there were no major concerns, misunderstanding , lack of required VAT knowledge amongst business verticals ...

We gave 2months hand holding to then EBG , E&C and EUT ..

Mr Kumar again invited me to address a mass gathering of EUT stockists on VAT and way forward ...

He was kind enough in informing YMD and RSR , VAT implementation was successful in EUT followed by other verticals ..

A big sigh of relief to me and my team , worked day and night ..

AG Lotankar gave me a big hug ( those time no scale of social distance)
stating in a choked voice about his identity inside L&T and outside ..

It was difficult to dismantle the cartel i developed with nearby industries post VAT implementation . The bonding was so high ..

First time Accountants Meet was announced in L&T .

There was also announcement of CFO award for people who excelled in their performance and brought a significant saving to L&T

We filed a nomination under best team award ... 🙏🙏🙏
ravi said…
*8 - இயற்பகை நாயனார்*🌷🌷🌷
ravi said…
*வாம பாகத்தை கொடுத்தவனும் கேட்டவனும்* 🙏
ravi said…
*இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்*👏👏👏
ravi said…
இல்லை என்று சொன்னதில்லை ..

இல்லாமை இல்லாமல் போக இல்லாளையும் தானமாய் கொடுத்தான் வந்து கேட்ட வேதியனுக்கு...

நடந்ததில்லை இதுவரை ..

யாரும் தானம் இதுபோல் தந்ததில்லை ..

பாகம் தந்தவன் கூட தந்த பாதியை தன்னுடனே வைத்துக்கொண்டான் பிறர்க்கு தந்தில்லை

வந்த வேதியன் இன்னும் கேட்டான்

இதுவும் புதுமை ...

ஊர் எல்லை வரை துணைக்கு வரவேண்டும் என்றே ..

துடித்தனர் சுற்றமும் பந்தமும் ..

பித்தனை வணங்குவோர் பித்தனாகி போவதில் வியப்பு என்ன என்றே சாடினர் ...

சுற்றம் பார்க்க வில்லை சூழ்ந்தோரை சும்மா விடவில்லை ...

வெட்டி சாய்த்தான் தரையில் ..

வேதியன் வீடு வரை வந்தே வீடு தரும் நாமம் சொல்லி திரும்பி பாராமல் விரைந்தான் .

வேதியன் நில் என்றே ஓலம் இட்டான்..

ஆலம் தின்றவன் பாலம் ஒன்று போட்டான் தன்னுடன் இணையவே

எல்லோரும் பிழைத்தனர் ..

பித்தனுக்கு பித்தன் ஆயினர் ...

இயர் பகை குறை இன்றி நிறையானான்

*தடை இன்றி கொடை செய்தால் மடை இன்றி அவன் அருள் வருமே ...*

வானொலியில் தெய்வத்தின் குரல் மிதந்தது ...

இயற்பகை மீண்டும் பெரியவாளாய் எடுத்த அவதாரம் அதில் 🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை ” கோ க்ராஸம் ” என்று சொல்லியிருக்கிறது.
ravi said…
இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு ”க்ராஸ்” என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாயும், தார் ரோடாயும் மாறி வருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் ஆத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

ravi said…
இதற்கெல்லாமாவது கொஞ்சம் செலவு, த்யாகம் பண்ண வேண்டியிருக்கிறது. இதுகூட இல்லாமல், நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும் போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்? அப்படிப்போடாமல், சிலர் வீடுவீடாகப்போய் இந்தத் தோலை எல்லாம் ‘கலெக்ட்’ பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். நான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அநேக இடங்களில் இந்தக் கார்யம் நடந்தது. இப்போதும்கூடப் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.
ravi said…
உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ணவேண்டியது தான். ஆனாலும் இப்படி மெகானிகலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால், இதில் நமக்குக் கிடைக்கிற உள்ள நிறைவே அலாதி என்று தெரியும். ஸேவையிலே இதுதான் முக்யமான அம்சம்;அதில் பணமும் உழைப்பும் பேசுவதைவிட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்
ravi said…
ஸேவை செய்கிறவர்கள் ஸங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, ஸேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன்தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது? ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், ஸேவையால் அந்த ஈஸ்வரத்வத்தை அநுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் ஸேவையின் ஸாரம்.
ravi said…
கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்யவேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை – தாயாருக்குச் செய்யவேண்டிய கடமைக்கு ஸமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான்.
ஆஃப்கானிஸ்தான் மாதிரியான துருக்க ராஜ்யங்களில் கூடப் பல வருஷங்கள் முன்பே கோஹத்தியை ban செய்திருக்கிறார்கள்.
ravi said…
நம் தேசத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இதில் வேண்டுமென்றே மத த்வேஷங்களைத் தூண்டி விட்டிருந்தார்கள். எந்த ஸர்க்கார் இருந்தாலும், எந்தச் சட்டம் வந்தாலும், வராவிட்டாலும் பசுக்கள் கசாப்புக் கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் புனிதமான கடமை என்று நாம் இருந்தோமானால் கோமாதாவுக்கு ஹானி இல்லை.
ravi said…
இதிலே நாம் குஜராத்தி, மார்வாரிகளைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கோபாலக்ருஷ்ணன் வாஸம் பண்ணின பிரதேசமானதால் போலிருக்கிறது இவர்களுக்கு கோ ரக்ஷணத்தில் அலாதிப்பற்று இருக்கிறது!
ravi said…
முன்காலங்களில் ‘ பசு மடம் ‘ என்று வைத்து நம் க்ராமமெல்லாம் போஷிக்கப்பட்ட இந்த தர்மத்தில் பிற்பாடு நாம் ச்ரத்தை இழந்துவிட்டோம். ஆனால் “பிஞ்சரபோல்”, கோசாலா என்று வைத்து இந்த வடக்கத்திக்காரர்கள் எத்தனை வாத்ஸல்யத்தோடு பக்தியோடு பசுக்களைப் பராமரிக்கிறார்கள்?
ravi said…
கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமி்ல்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்; அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும்.
ravi said…
தினம் ஒரு(தெயவத்தின)குரல்

நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். சிலர் (சிவ) பஞ்சாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் (நாராயண) அஷ்டாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள்.
ravi said…
இப்படியே (முருகனுக்கான) ஷடக்ஷரீ, ராம மந்த்ரம், க்ருஷ்ண மந்த்ரம், அம்பாள் மந்த்ரங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.
ravi said…
ஆனாலும் நம் அத்தனை பேருக்கும், மநுஷ்ய ஜன்மா எடுத்த ஸகலருக்கும், வேத சிரஸான உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் ” தத்த : – தானம் பண்ணு; நல்ல கொடையாளியாக இரு”என்பதுதான். நம் இஷ்டம், இஷ்டமில்லை என்பதற்கெல்லாம் இடமில்லாமல், இது நமக்கு வேதம் போட்டிருக்கிற ஆஜ்ஞை!மற்ற மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். இந்த ”தத்த” மந்த்ரத்தைக் காரியத்தில் பண்ணிக் காட்ட வேண்டும்.
ravi said…
இந்த உபதேசம் வருகிற ப்ருஹதாரண்யக உபநிஷத் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்தது. நாலு வேதங்களுக்குள் இன்று தேசம் முழுக்க ரொம்பவும் அநுஷ்டானத்திலிருப்பது யஜுர்வேதம்தான். அதில் சுக்லம், க்ருஷ்ணம் என்று இரண்டு பிரிவு உண்டு.
ravi said…
வட இந்தியா முழுவதிலும் பெரும்பாலும் அநுஷ்டானத்தில் இருப்பது சுக்ல யஜுஸ்;தென்னிந்தியாவில் ரொம்பவும் அநுஸரிக்கப்படுவது க்ருஷ்ணயஜுஸ். சுக்ல யஜுஸைச் சேர்ந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்திலிருந்து தானத்தைப் பற்றி சொன்னேன்.
ravi said…
இதேமாதிரி க்ருஷ்ண யஜுஸில் உள்ள தைத்திரீயோபநிஷத்திலும் (1.11.3) தானத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.
அது என்ன சொல்கிறது? ”சிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு கொடுக்கக் கூடாது” என்கிறது. ஸ்ரீயை (அதாவது செல்வத்தை) க் கொடுக்கும்போதே மனஸை ஸ்ரீயாக (லக்ஷ்மீகரமாக, மங்களமாக, ஸந்தோஷமாக) வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும் என்கிறது. முகத்தைச் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். ஸ்ரீயின் நிறைவுதான் ‘ச்ரேயஸ்’ என்பது. மனஸில் ஸ்ரீயுடன், மனமலர்ச்சியுடன், கொடுத்தால் இந்த தானத்தின் பலனாக ‘ச்ரேயஸ்’ கிடைக்கிறது. இன்னம் ஜாஸ்தி கொடுப்பதற்கு நம்மால் முடியவில்லையே என்று வெட்கத்தோடு கொடுக்க வேண்டும். ஹ்ரீயுடன் கொடு என்கிறது உபநிஷத். ‘ஹ்ரீ’ என்றால் வெட்கம், லஜ்ஜை என்று அர்த்தம். புருஷ ஸூக்தத்தில் பகவானுக்கு ஹரீ , ஸ்ரீ (லக்ஷ்மி) என்று இரண்டு பத்னிகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இங்கேயும் லக்ஷ்மியை, அதாவது பொருளைத் தரும்போது, ”ஸ்ரீயோடு கொடு”, ”ஹ்ரீயோடு கொடு” என்று சொல்லியிருக்கிறது. வெட்கம் இரண்டு காரணத்துக்காக. ஒன்று, இன்னும் ஜாஸ்தி தரமுடியவில்லையே என்று; இரண்டாவது, தானம் பண்ணுவது வெளியிலேயே தெரியக்கூடாது என்ற கெனரவமான கூச்சம். வெளியில் தெரிந்தால் மற்றவர்களும் ‘தேஹி’ என்று பிடுங்குவார்களோ என்பதால் அல்ல. இவன் தர்மிஷ்டன் என்று நாலு பேருக்குத் தெரிந்து நம்மை ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்தால் நமக்கு அஹம்பாவம் வந்துவிடும்.
ravi said…
அது தானத்தின் பலனையெல்லாம் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்.
தானம் பண்ணிவிட்டு நாம் நம் பெயரைப் பேப்பரில் போட்டுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், ‘எப்படியாவது நாலு பேருக்கு நாம் தானம் பண்ணினதை நைஸாகத் தெரியப்படுத்த வேண்டும்’ என்கிற எண்ணம் உள்ளூர இருந்தால் அதுவும் தோஷம்தான். அந்த நாலுபேர் நாம் தானம் பண்ணினதற்காக ஒரு பங்கு கொண்டாடினால், அதோடு, ”பண்ணின தானத்தை வெளியிலேயே தெரிவிக்காமல் எத்தனை உத்தமமான குணம்!” என்று பத்து பங்கு ஸ்தோத்திரம் பண்ணுவார்கள். மனஸுக்குள் நாம் இந்த ஸ்தோத்திரத்துக்கு ஆசைப்பட்டுவிட்டால், பேப்பரில் போட்டுக் கொள்வதைவிட இதுவே பெரிய தோஷமாகிவிடும். ஆனாலும் இப்படியெல்லாம் ஆசை, கீசை தலைதூக்கிக்கொண்டுதானே இருக்கிறது? அது தலையைத் தூக்கவொட்டாமல் அழுத்தி வைக்க என்ன பண்ணலாம்? ஒன்று பண்ணலாம் என்று தோன்றுகிறது. அதாவது, ‘தானம் வாங்குகிறவன் நமக்கு அந்நியன் இல்லை; நம்மவனேதான்’ என்ற உணர்ச்சியை நன்றாக வளர்த்துக்கொண்டுவிட்டால் கொடுத்ததை வெளியில் சொல்லவே தோன்றாது.
ravi said…
நம் குழந்தைக்கு அல்லது நெருங்கிய பந்துக்களுக்கு நாம் ஏதாவது செய்தால் அதை வெளியில் விளம்பரம் செய்து கொள்வோமா? அதே மாதிரிதான் எவரும் நமக்கு பந்துதான். ஸகல ஜந்துக்களும் ஒரே பார்வதி பரமேஸ்வராளின் குழந்தைகள்தான். அதனால் நாம் ‘தானம் கொடுக்கிறோம்’ என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். ‘பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்’ என்று அடங்கி, பவ்யமாகக் கொடுக்க வேண்டும். எங்கே இதிலும் ஓர் அஹங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும். ” பியா தேயம் ” என்கிறது உபநிஷதம். ”பியா” என்றால், ‘பயந்துகொண்டு’ என்று அர்த்தம். ஸாதாரணமாக, வாங்குகிறவன்தான் பயந்து கொண்டு நிற்பான்;கொடுக்கிறவன் அதட்டிக்கொண்டு கொடுப்பான். வாஸ்தவத்தில் கொடுக்கிறவன்தான் பயப்பட வேண்டும் என்கிறது உபநிஷத். கடைசியாக, ‘ஞானத்தோடு’ கொடுக்க வேண்டும் என்று முடிக்கிறது. ‘ஸம்வித்துடன் என்று சொல்கிறது. ‘ஸம்வித்’ என்றால் ‘நிறைந்த ஞானம்’ கொடுக்கிறவன், வாங்கிக் கொள்கிறவன் இரண்டு பேர்வழிகளும் வாஸ்தவத்தில் ஒருவனேதான் என்ற அறிவுதான் அந்த ‘ஸம்வித்’. புராணங்களிலும் எங்கு பார்த்தாலும் தானத்தின் மஹிமை சொல்லியிருக்கிறது. இன்ன மாஸத்தில், இன்ன இடத்தில், இன்னாருக்கு இன்ன தானம் பண்ணினால் இன்ன பலன் என்று நிறையைச் சொல்லியிருக்கிறது – துலா மாஸத்தில் தானம் விசேஷம்;கங்காதீரத்தில் தானம் விசேஷம் என்கிறாற்போல தர்ம சாஸ்த்ரங்ளிலும், திருக்குறள், ஆத்திசூடி முதலான நீதி நூல்களிலும் அப்படியே ஈகையின் சிறப்பை விஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது. ஈகை, தானம் என்பதெல்லாம் என்ன? பரோபகாரத்தின் ஒரு ரூபம் தானே?
ravi said…
ஆனபடியால், ‘ஹிந்து மதத்தில் பரோபகாரத்தைப் பற்றி ஒன்றுமில்லை – ஆசாரம், அநுஷ்டானம், பூஜை, யோகம், ஆத்மவிசாரம் இதுகள்தான் உண்டு’ என்று நினைப்பது கொஞ்சம்கூட ஸரியில்லை.

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53