அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 24 பதிவு 20

          அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 24

பதிவு 20



*கேள்வி பதில் நேரம்* 

 *பதிவு 20* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 *கேள்வி 24* 

 *நான்* : 

 பட்டரே! காலை வணக்கம் ..   




 *பட்டர்*  

கண்டுகொண்டேன் வாழும் படி ஒன்று..

மனத்தே ஒருவர்  வீழும் படி அன்று விள்ளும் படி அன்று .. 

என்னை கண்டவள் உங்களையும் காண்பாள் விழியின் கடையால் 👀👀

இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌

*நான்* ஐயனே ... அபிராமி அந்தாதியில் எதிர்மறையான வார்த்தைகள் இல்லை 

ஆனால் லலிதா சஹஸ்ரநாமம் அதில் பல எதிர்மறை நாமங்கள் வருகிறதே ... 

ஏன் இந்த முரண்பாடு ? கொஞ்சம் விளக்க முடியுமா ?  

 *பட்டர்* 

ரவி அனைத்தும் அவளே என்றே பாடினேன் 100 ஸ்லோகங்களில் ... 

இருளாகவும் இருக்கிறாள் சூழும் சுடர்களுக்கு நடுவே சுடரும் சுடராக கிடக்கிறாள் ... 

ஞானமும் அவளே அஞ்ஞானமும் அவளே .

சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் அம்பாளை இருளுக்கு வாழ்வளித்தவள் என்று புகழ்கிறார் .. 

சூரியனால் இருள் மறைகிறது அல்லவா .. 

அப்படி துர்மரணம் எய்தும் இருள் அம்பாளிடம் சென்று முறையிட்டதாம் .. 

என்னைப் படைத்தவளும் நீ தான் .. ஏன் எங்களை சூரியனை வரவழைத்து தினம் தினம்  கொல்கிறாய் .. காப்பாற்று தாயே .. 

இப்படி சொன்னதும் முறையிட்ட இருளை தூக்கி தன் கூந்தலுக்குள் சொருகிக்கொண்டாளாம் அன்னை .. 

எத்தனை காரூண்யம் அவளுக்கு என்று பார்த்தாயா ? 





 *நான்*  ஐயனே ... அருமை, இருந்தாலும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை

நான் .. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நித்திய த்ருப்தா இது ஒரு நாமம் எதிர்மறையாக அநித்ய த்ருப்தா இப்படி ஒரு நாமம் . அவள் த்ருப்தி உடையவளா இல்லையா என்ற ஒரு குழப்பம் வருகிறதே ... 

பட்டர் .. அரைகுறையாய் புரிந்து கொண்டால் விபரீதமான அர்த்தங்கள் வரும் ... 

இதன் பொருள் அப்படி அல்ல ... அவள் என்றும் பூரணாசல மங்கலை ... நித்ய த்ருப்தா.. அவளுக்கு என்ன குறை ? 

எதற்காக யாருக்காக அதிருப்தி அடைய வேண்டும் . 

கொடுக்க கொடுக்க குறையாத ஞானமும் செல்வமும் கொண்டவள் .. 

பதியோ கருணையின் உச்சம் . 

பிள்ளைகளோ அன்பின் மறு உருவங்கள் .

ஏன் அவள் எப்பொழுதும் த்ருப்தியாக இருக்கிறாள் என்றால் நம்மை போன்ற அவள் மீது பாசம் கொண்ட குழந்தைகளை பெற்றதனால் 

உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி அவளுக்கு வளரும் 

மெச்சி நம்மை  ஊரார், புகழ்ந்தால் அவள்  மேனி சிலிர்க்கும் !

சற்று நம் முகம் சிவந்தால், அவள் மனது சஞ்சலம் ஆகம் !

நம் நெற்றி சுருங்கக் கண்டால், அவள் நெஞ்சம் பதைக்கும்!

நம்  கண்ணில் நீர் வடிந்தால், அவள்  நெஞ்சில் உதிரம் கொட்டும் 

நாம் அவள் கண்ணிற் பாவையன்றோ? அபிராமி !! 

நம் உயிர்  அவளதன்றோ....




பட்டர் .. அநித்யத்ருப்தா ... என்ன அர்த்தம் ..??. 

நமக்கு வேண்டும் வரங்களை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டும் அவள் த்ருப்தி அடையாதவள் .. 

அடடா என் குழந்தைக்கு இது பிடிக்குமே இதை தராமல் போய் விட்டேனே என்று புலம்புவாள் ..

அதை நமக்கு கொடுக்கும் வரை கண் உறங்காள் ... அவள் தாய்மையின் உச்சம் 

ரவி!! எந்த நாமங்களும் எதிர்மறையே அல்ல .. 

நம் புரிதலை இன்னும் விரிவாக்கிக்கொள்ள வேண்டும் .. 

நுனிப்புல் மேய்வதை போல் புரிந்து கொள்ளக்கூடாது ... 

அதனால் தான் நான் அவளை கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் என்றேன் .. 

அவள் நாமங்களை சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாது .. 

கற்று புரிந்துகொண்டு சொல்ல வேண்டும் .. 

இது தான் தேவாமிர்தம் , பரமானந்தம் 👌👌👌

நான் .. மலைத்து நின்றேன் .. 

மலையாள் உடையாள் செய்யாள் வெளியாள் நாமங்களில் உறைந்து போனேன் ... 

பட்டர் சென்றத்தையும் கவனிக்காமல் 🙏🙏🙏



Comments

கௌசல்யா said…
Superb superb superb.. All negatives are also positive only if we understand it correctly... Migavum Arumaiyana explanation... 🙌🙌👍👍🙏🙏🙏🌹🌹
ரமணி said…
இன்றைய கேள்வி பதில் பதிவு பலரின் ஐயத்தை போக்கிய பதிவு..

எந்த நாமங்களும் எதிர்மறையே அல்ல....

இந்த தொடர் கேள்வி பதில் பதிவுகள் நம் மனதை சூழ்ந்துள்ள இருட்டினை அகற்றும் பதிவுகளாக அமைந்து வருகிறது...

🙏🙏🙏🙏🙏
ravi said…
*12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்*
ravi said…
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்"

திருத்தொண்டத் தொகை
ravi said…
ஒருவன் பெண்ணாசை மேலீட்டினால் ஏவ

ஒப்பில்லாத கடவுள் தூதராய் ஓரிரவு முழுதும் போக்கு வரவு செய்து உழன்றாராம்.

மனம் கொந்தளிக்க சுந்தரனை சந்திக்கத் துடித்தான் ஏயர் கோன் கலிக்காமன் ...

நடம் கொண்ட இனியவனை தெருவில் நடக்க வைத்த செயல் என் செயலோ ...

சுந்தரரை அடியார் என்று சொல்லும் தடி ஆட்களை கடியாமல் விட மாட்டேன் என்றான்

இறைவன் சிரித்தான் ..

சுந்தரன் என்னை திருவாரூர் தெருவில் நடக்கத்தான் வைத்தான் ..

என் மீது கல்லெறிந்து ஒருவன் பூஜை செய்தான் ..

காலால் உருவன் உதைத்தே கண் தந்தான் ..

பிரம்பால் அடித்தான் ஒருவன் ..

பித்தன் என்றே பலரும் சொன்னார் ...

கலிக்காமன் கேட்டால் என் செய்வான்

பக்திக்கு முறை தேவையில்லை ...

முறை பிறை கொண்டவனை காட்டுவதில்லை ...

சடை முடி சடுதியில் வருவதில்லை ..

நடை சுந்தரரின் தமிழுக்கு அவன் அன்பிற்கு

இருவரையும் நண்பர்கள் ஆக்க எண்ணமிட்டான் இறைவன்

தீரா சூல நோய் தந்தான் கலிக்காமனுக்கே ...

சுந்தரர் மட்டுமே பிணி தீர்ப்பான் என்றான் ..

வேண்டேன் சுந்தர் பிணி தீர்க்கும் மருந்து ..

சாவேன் இவ்வலிக் கொண்டே என்றான் கலிக்காமன்

சுந்தரர் வரும் முன் உயிர் நீத்தான் ..

சுந்தரரும் உயிர் நீக்க முனையவே

சொக்கன் தோன்றி இருவருக்கும் மார்க்கண்டேயனின் வயதை தந்தார்

பகை கொண்ட இருவர் இரண்டில் ஒன்றாயினர்

ஒன்றில் தஞ்சம் புகுந்தனரே 👍👍👍
ravi said…
முறை கொண்டே மறை சொன்னவனை சிறை செய்தான் காஞ்சியில் வாழும் சுந்தரரே ... அவருள் இருக்கும் கலிக்காமன் கலி தீர்த்தே களி நடம் புரிகிறாரே 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 104* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 21👍👍👍
ravi said…
தடில்லேகா-தன்வீம் தபன-சசி வைசானர-மயீம்
நிஷண்ணாம்

ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம்

மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா

மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்🙏🙏🙏
ravi said…
இந்த ஸ்லோகத்தில் குண்டலினீ யோகத்தில் ஸித்தி அடைந்தவர்களது நிலை சொல்லப்பட்டிருக்கிறது.

*மூலாதாரத்திலிருந்து* படிப்படியாக மேலெழும்பிய குண்டலினீ சக்தியானது *ஆக்ஞா* சக்ரத்தில் மட்டும் அதிக நேரம் நிலைகொள்ளாது மின்னல் கொடி போல தோன்றி உடனடியாக க்ஷண நேரத்தில் மேலெழும்பி *ஸஹஸ்ரார கமலத்தை* அடைகிறதாம்.

காமம், மாயை போன்ற மலங்களை நீக்கி, சூர்ய சந்திரர்கள் போலவும் அக்னி, போன்றதுமான உனது கலையை சஹஸ்ராரத்தில் தியானிப்பவர்கள் பேராந்தமான அலைகளில் மூழ்கித் திளைப்பர் என்கிறார்.👍👍👍
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 104* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
இன்று நாம் பார்க்க போகும் நாமம் *30வது* திருநாமம் 👍👍👍
ravi said…
*30* कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा

- *காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -*

அம்பாளின் கழுத்தில் மின்னுவது எது என்று தெரிந்ததா?

மகேஸ்வரன் காமேஸ்வரன் கட்டிய புனித மாங்கல்ய சரடு தான்.

இதைவிட விலைமதிப்பில்லாத ஆபரணம் ஒன்று இருக்கிறதா?
ravi said…
[20/01, 9:43 am] Shivaji L&T C: Sree Maathre Nama 🌹🌹🙏🙏
[20/01, 9:44 am] Metro Ad Vipul: 🙏🏻💐
[20/01, 9:50 am] Metro Kowsalya: 🙏🙏🌹🌹
ஸ்ரீனிவாச ராவ் said…
Thank u Ravikumar sir for all the time n knowledge u have given to us!! Wishing wonderful retired life with a request to keep sharing your quotes/thoughts with us to live life positively!! Regards

Good to share the growth of the plant 🪴 in my recent visit to Hyd 🚇😊👏🙏
ரவி சந்தர் said…
👏. Srinvas rao garu regularly comes to our office sir. he always talks about your relationship.
Not only him sir. all insurers talks about you and your insurance knowledge.🙏
ravi said…
Thank u very much for your remembrance . People forget once a person is out of power but you are an exception . Missing you all whenever i think of my project how are our other friends cannot forget our abroad visit . Everything has become a distant memory ... Reality of life . Good day . 👍👍👍
ரவி சந்தர் said…
You are always in my heart sir.I never forget your support guidence sir.
🙏🙏🙏
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 198🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
Running away from any problem will only increase the distance from the solution. Face it and finish it. That may also enhance your self-confidence and belief in your own ability.

Anxiety makes us experience tomorrow's problem today. Regret makes us experience yesterday's problem today again. Living in the present is the most needed and the least followed.
ravi said…
Infact Sch J was a miniscule part of the entire volume of P&L and B/S .. No body gives that much attention to that if they think the company 's performance is not worrisome ...

But you can learn a lot even from crushed paper that goes into dustbin...

I started interacting with all business verticals and tried to understand the legacy behind every single case reported in Sch J .

The reason why they did not want to provide as pakka liability in books .

To my surprise i found many did not understand the real meaning of contingent liabilty ..

It was shown as per the directives of unit heads ...

If they wanted to show good bottom line , they shifted real liability out side the books and shown as contingent liability ...

The merits of the cases were overstated for obvious reasons ...

Auditors were made to convince ...

L&T being a professional did not bother to see the wood while counting the trees ... May be due to its wide spread and conglomerate nature ...

Lots many holes are still to be unearthed and we need to cover them up so that potholes don't pop up while going on the road of progress . 👏👏👏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

கம்பன், காளிதாஸன் போல் ஜகத் ப்ரஸித்தமான கவிகள் தானென்றில்லை, இன்னம் அநேக கவிஞர்களும் ராஜாவுக்குக்கூட பயப்படாத தீரத்தோடு இருந்திருக்கிறார்கள்.
ravi said…
மஹாகவிகள் இரண்டு பேரைச் சொல்லி விட்டேன். குட்டிக் கவி, குட்டி சாஸ்த்ரி என்றே பேருள்ள இரண்டு பேரைப் பற்றி சொல்கிறேன்.

இவர்களில் முதலாமவரான குட்டிக் கவியின் நிஜப்பெயர் – ‘இயற்பெயர்’ என்பது – வாஞ்ச்யேச்வரன் என்பதாகும். அவருடைய முன்னோர்களின் ஊர் ஸ்ரீ வாஞ்சிய க்ஷேத்திரமானபடியால் அந்த க்ஷேத்ர மூர்த்தியின் பேரை அவருக்கு வைத்தார்கள்.
ravi said…
குழந்தையிலேயே அவருக்குக் கவிதா விலாஸம் ஏற்பட்டுவிட்டதால் ‘குட்டிக் கவி’ என்று பேர் ஏற்பட்டது. ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான்
ravi said…
*குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்*

– By Sri Sengalipuram Anantharama Dikshitar💐💐💐
ravi said…
நித்யான்னதா³த்ரே ச மஹீஸுரேப்⁴ய​:

நித்யம்ʼ தி³விஸ்தை²ர் நிஸி² பூஜிதாய|

மாத்ரா ச பித்ரா ச ததோ²த்³த⁴வேன

ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே || 5||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
ravi said…
மறை ஓதும் வேதியருக்கு நித்தமும் அன்னம் அளிப்பவரே,

பிரம்மன் முதலான தேவர்களால் நித்தமும் இரவில் பூஜிக்கப்படுபவரே,

தாய் தேவகி, தந்தை வஸூதேவர் மற்றும் உற்ற தோழரும் பக்தருமான உத்தவர் ஆகியோரால் வணங்கப்படும் குருவாயூரப்பா,

உன்னை நாராயணா என்று திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.

(கிருஷ்ணாவதார முடிவில் மஹாவிஷ்ணு வைகுண்டம் சென்றதும் துவாரகை சமுத்திரத்தினால் சூழப்பட்டு மூழ்கியது. அவ்வமயம் ஸ்ரீகிருஷ்ணரது தாய் தேவகி, வஸூதேவர், உத்தவர் இவர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரது திவ்ய விக்ரஹம் மட்டும் சமுத்திர அலைகளால் எடுத்துச் செல்லப்பட்டு மேற்குக் கரையை வந்தடைந்தது.

அவ்விக்ரஹத்தை குரு பகவானும், வாயு பகவானும் எடுத்து பூஜித்துப் பிரதிஷ்டை செய்தனர்.

அதுவே குருவாயூர் என்ற பிரசித்தி பெற்ற கிருஷ்ண க்ஷேத்திரம் ஆனது.)👍👍🪔🪔🪔
ravi said…
அந்தககவி வீரராகவ முதலியார் இயற்றிய சிலேடை பாடல் :
-------------------------------------------------------------------------

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் , பாணி
வம்பதாம் களப மென்றேன் , பூசுமென்றாள் ,
மாதங்க மென்றேன் , யாம்வாழ்ந்தே மென்றாள் ,
பம்புசீர் வேழமென் றேன்தின்னு மென்றாள் ,
பகடென்றேன் உழுமென்றாள் பழனந் தன்னை
கம்பமா என்றேன் நற்களியா மென்றாள் ,
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே !

பொருள் :-
---------------------

அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு யானை ஒன்றைப் பரிசிலாகப் பெற்று வந்த புலவரைப் பார்த்து , ' என்ன பரிசு பெற்று வந்தாய் ? ' என அவர் மனைவி கேட்கிறாள் !

புலவர் ' களபம் ' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! ( களபம் = யானை , சந்தனம் )

அது கேட்ட அவர் மனைவி , ’ சந்தனம் ’ என புரிந்து , சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக , சரி பூசிக் கொள்ளுங்கள் என்கிறாள் !

புலவரோ , என்ன இவள் ? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு , ' மாதங்கம் ' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! ( மாதங்கம் = யானை , நிரம்ப தங்கம் )

அவர் மனைவியோ , ' மா தங்கம் ' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு , அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார் !

இப்போதும் தவறாகத் தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர் ,
' வேழம் ' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம் ! ( வேழம் = யானை , கரும்பு )

அவர் மனைவியோ , கரும்பு என புரிந்து கொண்டு , சரி சாப்பிடுங்கள் என்கிறார் !

பாணினி இப்போதும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த பாணன் , ’ பகடு ’ கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார் ! ( பகடு = யானை , உழவுமாடு )

பகடு கொண்டு வந்திருக்கிறீர்களா , நல்லதாய்ப் போயிற்று , அதை ஏரில் பூட்டி வயலை உழும் என்று சொன்னாள் !

புலவர் , இப்போதும் தவறாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறாள் என அறிந்து , ' கம்பமா ' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! ( கம்பமா = யானை , கம்புமாவு )

மனைவி ' கம்பமா ' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு , நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள் !

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர் ,
' கைம்மா ' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! ( கைம்மா = யானை )

அப்போது தான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை ( கை + மா = கைம்மா ) என அறிந்த அவர் மனைவி , நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில் , உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம் !

சொற்பொருள் :-
------------------------------

இம்பர் = இவ்வுலகம் ;
வான் எல்லை = வானத்தை எல்லையாகக் கொண்ட ( கீழே நிலத்தையும் மேலே வானத்தையும் எல்லைகளாகக் கொண்ட பரந்த நாட்டை ஆளும் ) இராமனையே பாடி = இராமன் என்னும் மன்னனை நேரில் சென்று பார்த்துப் பாடி ;

என் கொணர்ந்தாய் பாணா நீ = என்ன பரிசில் பெற்று வந்திருக்கிறாய் பாணா நீ ; என்றாள் பாணி = என்று பாணனாகிய தன் கணவனைப் பார்த்துக் கேட்டாள் பாணி ;
வம்பு + தாம் = வம்பதாம் = வம்பதாம் களபம் = கயிற்றில் கட்டப்பட்டுள்ள யானை [ வம்பதாம் களபம் = புதுமையான சந்தனம் ] ; என்றேன் = என்று சொன்னேன் ;

( அவள் சந்தனம் என்று நினைத்துக் கொண்டு ) பூசும் என்றாள் = உடம்பில் பூசிக் கொள்ளும் என்று சொன்னாள் ;
மாதங்கம் = யானை ; [ மா தங்கம் = நிரம்பத் தங்கம் } ; ( அவள் நிரம்பத் தங்கம் கொண்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு ) யாம் வாழ்ந்தேம் என்றாள் = நம் வறுமை நீங்கி வாழலாம் என்று சொன்னாள் ;

பம்பு சீர் = பொலிவு மிக்க ; வேழம் = யானை ; [ வேழம் = கரும்பு ] ; (அவள் கரும்பு கொண்டு வந்துள்ளேன் என நினைத்துக் கொண்டு ) தின்னும் என்றாள் ;

பகடு = யானை ; [ பகடு = உழவு மாடு ] ; ( அவள் உழவு மாடுகள் என்று நினைத்துக் கொண்டு வயல்களை உழுதிடுங்கள் என்று சொன்னாள் ) பழனம் = வயல் ; கம்பமா = யானை ; [ கம்ப மா = கம்பு மாவு ] (அவள் கம்பு மாவு என்று நினைத்துக் கொண்டு களிக்கு ஆகும் என்று சொன்னாள் ) ;

கைம்மா = யானை ; சும்மா கலங்கினாளே = ( இப்பொழுது தான் சரியாகப் புரிந்து கொண்டு ) வறுமையில் வாடும் நாம் யானையைக் கட்டி எப்படித் தீனி போடுவது என்று சொல்லி மனம் கலங்கினாள் .
ravi said…
*யுத்த காண்டம்*🌷🌷🌷
ravi said…
மாருதி வந்து, எனக் கண்டு, "வள்லல் நீ
சாருதி ஈண்டு" எனச் சமையச் சொல்லினான்
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ?
சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லானோ?"

"முன்பு அனுமன் அசோகவனம் வந்து நின்னுடைய தூதன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, என்னைப் பிரிந்த உன் நிலையையும், பகைவனை வென்று என்னை மீட்பதற்காக நீ விரைவில் இங்கு வருவாய் என்பதனையும் கூறிச் சென்றதனால், நான் இதுகாறும் உயிர் தரித்திருந்தேன்.

நினது பேரன்பினை எனக்கு எடுத்துரைத்த அனுமன், அதுபோலவே, நின்னைப் பிரிந்து வருந்தும் என் நிலைமையையும் நினக்கு உள்ளவாறு சொல்லியிருக்க வேண்டுமே?

அனுமன் வாயிலாக நீ உண்மையை உணரவில்லை என்றால், அந்த அனுமன் நீ அனுப்பிய தூதனே இல்லை போலும்" என்று பிராட்டி இராமனை வினவுகிறாள்🙈🙉🙊
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 105*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 16 ஸ்லோகம்

பொருளுரை
ravi said…
विरिञ्चिर्दीर्घायुर्भवतु भवता तत्परशिर-

श्चतुष्कं संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान् ।

विचारः को वा मां विशद कृपया पाति शिव ते

कटाक्षव्यापारः स्वयमपि च दीनावनपरः ॥

விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது ப⁴வதா தத்பரசிர:

சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான் ।

விசார: கோ வா மாம் விசத³ க்ருʼபயா பாதி சிவ தே

கடாக்ஷவ்யாபார: ஸ்வயமபி ச தீ³னாவனபர: ॥
ravi said…
பகவானுக்கு அடிமை பூண்டா அல்லல் என் செய்யும்?

அருவினை என் செய்யும்?

தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்?

என்னுடைய பழைய வினைகளெல்லாம் என்ன பண்ணப் போறது?

என்னுடைய மூன்று விதமான வினைகளும் (சஞ்சிதம், ஆகாமி பிராரப்தம்) என்னை ஒண்ணுமே பண்ண முடியாது.

என்னை எதுவுமே அல்லல் படுத்த முடியாதுன்னு சொல்றார்.

‘நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

ன்னு பாடினா மாதிரி இங்க ஒரு பாட்டுல சொல்றார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 120* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

அநாதி நிதனோ
தாதா
*விதாதா* தாது ருத்தம:||5
ravi said…
சுபால தேசத்து இளவரசி காந்தாரி,திருதராஷ்டிரனை மணந்து கொண்டாள்.

கண் பார்வையில்லாத தன் கணவருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தன் கண்களையும் துணியால்
கட்டிக் கொண்டு பார்வையற்றவள் போலவே வாழ்ந்து வந்தாள்.

ஒருநாள் அவர்களின் அரண்மனைக்கு வியாசர் வந்த போது, அவரை வரவேற்று உபசரித்தாள் காந்தாரி.

“உனக்கு நூறு பிள்ளைகள் பிறப்பார்கள்!” என்று வியாசர் ஆசீர்வதித்தார்.

அடுத்த சில நாட்களில் காந்தாரி கருவுற்றாள்.
திருதராஷ்டிரனின் சகோதரனான பாண்டுவின் மனைவி குந்திதேவி, துர்வாசர் உபதேசித்த மந்திரத்தை ஜபம் செய்து
தர்மதேவனின் அருளால் கருவுற்றாள்.

பத்து மாதங்கள் நிறைவடைந்தபின்,
ஐப்பசி மாதம் வளர்பிறை பஞ்சமியில் கேட்டை நட்சத்திரத்தில் யுதிஷ்டிரனை ஈன்றாள்.
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 105* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
இன்றும் நாம் பார்க்க போகும் நாமம் *30வது* திருநாமம் 👍👍👍
ravi said…
*30* कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा - *காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா*👌👌👌 -
ravi said…
காளமேகம் ( முன்னாள் மடப்பள்ளி வரதன் ) புலவர் அதிகமாகவே கிண்டலாக பாடுபவர் .. அவர் ஒரு பாடலில் அம்பாளை கேட்க்கிறார்

தாயே!!

நீயோ பரிபூரண தேவதை .. சகல சௌபாக்கியமும் தருபவள் ... அன்ன பூரணீ ...

ஆனால் உன் புருஷனோ கபாலம் ஏந்தி தெருவில் பிச்சை வாங்குகிறார்

அது மட்டுமா ?

அணிய நல்ல ஆடை இல்லாமல் 8 திசைகளையும் ஆடையாக அணிகிறார் ...

அணிந்துகொள்ள ஆபரணங்கள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் ... உன் மாமியார் வீட்டு சீதனம் என்று ஏதாவது உண்டா உனக்கு ?

அவரிடம் இருப்பதெல்லாம் பயமுறுத்தும் பூத கணங்களும் , மண்டை ஓடுகள் மட்டுமே ..

என்ன அப்படி கண்டு விட்டாய் அவரிடம் இப்படி தவசியாய் இருந்து அவர் துணைவியாக ??

இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால் அம்பாள் கோபத்தால் பொசுக்கி இருப்பாள் ..

சொன்னவனோ தன் மீது அதிபக்தி கொண்டவன் ..

அவன் மனம் அப்பழுக்கு இல்லாதது ...

கேட்ட வார்த்தைகள் கோபத்தை மூட்டுவதாய் இருந்த போதிலும் முகத்தில் வலுக்கட்டாயமாக புன்னகையை கொண்டு வந்தாளாம் ...

காள மேகத்திற்கு கண்ணில் படும் படி தனது ஒளி வீசும் மாங்கல்யத்தை காட்டினாளாம் ...

அதன் ஒளி புலவரை திக்கு முக்காட வைத்ததாம் .

நான் இப்படி கருணையுடன் எல்லா வளத்துடன் இருக்கிறேன் என்றால் அவர் கட்டிய இந்த மாங்கல்யம் தான் காரணம் ...

அவர் இந்த அண்டங்களில் இருக்கும் அனைத்துக் குப்பைகளையும் அழிக்கிறார் ...

அதனால் தான் இந்த புவி சுகந்தமாய் எப்பொழுதும் இருக்கிறது ...

காளமேகம் தன் கண்களில் சூல் கொண்ட மேகம் உடைய கண்டார் ....🪔🪔🪔
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 105* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 21👍👍👍
ravi said…
தடில்லேகா-தன்வீம் தபன-சசி வைசானர-மயீம்
நிஷண்ணாம்

ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம்

மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா

மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்🙏🙏🙏
ravi said…
இவ்வாறாக குண்டலினீ சஹஸ்ராரத்தில் சிவனுடன் சேர்ந்து ஐக்ய ஸ்வருபத்தில் நிலையாக குளிர்ந்து ப்ரகாசிப்பதை " *ஸ்திர* *செளதாமினி* " என்றும் க்ஷண நேரமே ஆக்ஞா சக்ரத்தில் இருப்பதால் " *க்ஷண* *செளதாமினி* " என்றும் இரு நாமங்களாக சஹஸ்ர நாமத்தில் கூறப்பட்டிருக்கிறது

*தடித்-லேகா-தன்வீம் -* மின்னல் போன்ற சூக்ஷ்மமான தேஜோரூபம் உடையதும்;

*தபன-சசி-வைச்வானர மயீம் -* சூர்ய-சந்த்ர, அக்னி ஆகியவற்றில் ப்ரகாசிப்பதும்.

*ஷண்ணாம் கமலானாம் அபி* -

ஆறு ஆராதாரங்களுக்கு மேலே;

*மஹாபத்ம அடவ்யாம் -* தாமரை மலர்களாலான காடு போன்ற சஹஸ்ராரத்தில்;

*நிஷண்ணாம்* - நிலையான;🙏🙏🙏
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 199🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
We cannot help ourselves without helping others. We cannot enrich our lives without enriching others. We cannot prosper without bringing prosperity to others.

It isn't about what you undergo. It's about what you overcome.

The best way to earn respect is by treating others with respect.

You are here only for a short visit. Don't hurry and don't worry. And be sure to smell the flowers along the way.
ravi said…
To sum up on my probe there were two main issues

1. Cases where merits were over stated due to bottom line pressure and hence taken into outside the books instead of providing as pakka liability in books

2. Not in the nature of a contingent liability but due to lack of understanding was shown under Sch J

The point no 2 was less injurious than point no 1...

We could solve it by knowledge spread but the point no 1 was affecting the credentials of the company

So focused more on point no 2 relentlessly ...

Made a deep dive in to merits of each case , its legacy , auditors opinions , similar situations in other companies etc ...

This practice was much prevalent in EBG , some extent in E&C and L&T C ...

So 40 to 50% cases were to be provides in books .

20 to 30 cases we had merits and 10% cases what they had stated was correct ...

Again this was not accepted so easily by any business verticals .. no one wanted to show their performance chart going upside down ...

A tough call for both YMD and RSR ...

They were apparently not worried about the quantum but really concerned for a deeply rooted problem went unearthed for so many years ....

YMD wanted to clean up in one short but it was proving contagious ... 🙏🙏
ravi said…
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர - பாம்பே சகோதரிகள்*

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்
சங்கர குருவே சரணம் சரணம் மங்களநாயக சரணம் சரணம்

சிவ ரூபேமம சரணம் சரணம்
சக்தி ரூபே மம சரணம் சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்

விஷ்ணு ரூபே மம சரணம் சரணம்
லக்ஷ்மி ரூபே மம சரணம் சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்

பிரம்ம ரூபே மம சரணம் சரணம்
சரஸ்வதி ரூபி சரணம் சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்

கணபதி ரூபி சரணம் சரணம்
சண்முக ரூபி சரணம் சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்

ஸ்ரீ சூர்ய மூர்த்தே சரணம் சரணம்
ஸ்ரீ சக்ர ரூபே சரணம் சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்

தட்சிணாமூர்த்தையே சரணம் சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்

ஹர ஹர சங்கர காமாட்சி சங்கர
ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்

ஹர ஹர சங்கர காலடி சங்கர
ஜெய ஜெய சங்கர காமகோடி சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பாலயமாம்
*(ஹர ஹர சங்கர)* *(X)*
ravi said…
*13. ஏனாதி நாத நாயனார்*🌷🌷🌷
ravi said…
மந்திரமாவது நீறு 🙏🙏
ravi said…
வாள் வித்தையில் அதிசூரன் ... சீடன் பேரும் அதிசூரன் ..

நெற்றியில் நீறு இருந்தால் அவர் கண்களில் நீர் சுரக்கும்

வெல்ல யாரும் பிறக்கவில்லை வேழமுகத்தோன் தந்தை துணை நின்றதால்

கொதித்தான் சீடன் கொப்பரித்தான் குருவை வெல்வது எப்படி என்றே பலமுறை புற முதுக்கிட்டான் ... பேதையின் நெஞ்சில் விஷம் ஒன்று தெளித்தது

நெற்றியில் நீறு இருந்தால் குருவை வெல்வது சுலபம் என்றே சாத்தான் ஒன்று வேதம் சொன்னது

முகம் மறைத்து மீண்டும் போருக்கு அழைத்தான் .. அழைத்த போரில் முகம் தெரிய அதில் சிவம் தழைக்க கண்டான் குரு விடை ஏறும் பாகனை

இதுவே தருணம் என்றே குரு நிந்தனை செய்தே சிரம் கொய்தான் ..கொடுங்கோலன் ...

பரம் அங்கே தெரிய பதம் பற்றி சென்றான் ஏனாதி நாதன் ...

பார் பழிக்க சீடனும் மாறினான் சிவபக்தனாய்

நீரும் நீறும் அங்கே கலவை ஆக நித்தம் ஏனாதி நாதராய் சிரிக்கின்றதே 🙂🪔🪔
ravi said…
*🙏🏼💐🌹 GOOD FRIENDS CARE FOR EACH OTHER. CLOSE FRIENDS UNDERSTAND EACH OTHER, BUT TRUE FRIENDS STAY FOREVER, BEYOND WORDS, BEYOND DISTANCE, BEYOND TIME. 🌹💐🙏🏼*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍂🍂🍃🍂
*🙏🙏💐🌹Good Morning🙏🙏Have Nice Day 🌹💐இந்நாள் இனிய நாளாகட்டும் 🌹💐ಶುಭೋದಯ 🌹💐शुभ प्रभात🌹💐🙏🙏Good Day 😀Good Luck 🌹💐🙏🙏*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
ravi said…
காற்றாய் நிலமாய் கனலாய் புனலாய் உனைக் காண்கிறேன்

நேற்றாய் இன்றாய் நாளாய் பொழுதாய் நின்னை தொழுகின்றேன்

கூற்றுவன் தனை உதைத்த காலில் கும்பிட்டு விழுகின்றேன்

ஏற்றுக்கொள்வீர் என்றோர் நினைவில் இன்னும் வாழ்கின்றேன்

ஹர ஹர சங்கர ஜய ஐய சங்கர 🌷🌷🌷
ravi said…
இந்த நாள் கரும்பை போல் இனிக்கட்டும் 🙏🙏🙏
ravi said…
*20.கழற்சிங்க நாயனார்*🌷🌷🌷
ravi said…
"கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"

திருத்தொண்டத்தொகை.
ravi said…
எல்லோரையும் அறிய வைத்தான் .

பல அடியார்கள் தம்மை அறிய வைத்தான் .

அறிந்தே அவர்களை உயர வைத்தான் ...

அறியும் செயல்களில் சிவன் அடியார்கள் எல்லாம் அறிந்தவரே ஆயினர் ....

இல்லாள் உடன் இல்லாமை இல்லை எனச் சொல்லும்

தள்ளாமை தவிர்க்கும் தம்பிரான் ஆலயம் சென்றார் கழற் சிங்கன் அடியார் ..

உள்ளே சிவபூஜை ...வெளியே அடியார் மனைவி கோயில் வலம் வர

வளம் தரும் பூ ஒன்று தரையில் விழுவதை தவிர்த்தே

மலர் கரங்களால் வாங்கி மணம் முகர்ந்தாள் ...

மனம் நொந்தான் கணவன்

இறைக்கு உள்ள பூவை மணம் நுகர்ந்த காரணத்தால் ...

அறுத்தான் அவள் கரத்தை , மணம் நுகர்ந்த மூக்கை

முக்காலத்துக்கும் எக்காலத்திற்கும் இறைவன் மனம் பதைக்க மணம் வீச தன் மனைவியுடன் காட்சி தந்தான் ...

சூடிக்கொடித்தவளை இவள் அண்ணன் மணந்தான் ..

பூவை முகர்ந்தவளின் பூவே என் சிரம் தனை அலங்கரிக்கட்டும் என்றான் ...

பூவாய் உருகி போனாள் அந்த பாவாய் ...

பாலினும் சொல் இனியவனை பால் கொண்டு அபிஷேகம் செய்தே பரமன் அடி சேர்ந்தனரே ...

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியாய் காஞ்சியில் இருவரும் ஒருவராய் பிறந்தனர் பார் உயர ...

அனைவரும் பார்த்தே வியக்க என்னை பார் என்றே சொல்லும் பரமாச்சாரியராய் மாறினரே 👍👍👍
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 112* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
*31* कनकाङ्गदकेयूरकमनीयभुजान्विता - *கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா* -🙏🙏🙏
ravi said…
*தோள் வளை*

மூகர் அம்பாளை இப்படி வர்ணிக்கிறார்

அம்மா ... உன் பதியோ பொன்னார் மேனியன் .. நீயோ *கருப்பாயி* ...

ஆனால் அவன் உனக்கு தன்னில் ஒரு பாதி தந்து விட்டான் ..

உன் ஒரு பாதி அவன் நிறத்தை அடைந்து விட்டது

ஆனால் உன் இன்னொரு பாதி ... 🤔🤔

உன் வருத்தத்தை எப்படியோ கண்டு கொண்ட ஈசன் உன் அழகிய தோள்களில் தன்னையே சாய்த்து கொள்கிறான் ..

இல்லை சார்ந்து கொள்கிறான் ..

இங்கே சேர்ந்து கொள்வது வேறு சார்ந்து கொள்வது வேறு ...

சேர்ந்து கொள்வது என்றால் ஒரு கட்சியில் நம்மை இணைத்துக்கொள்வது ... சமமான பலம் இருந்தால் சேர்ந்து கொள்ளலாம் ..

ஆனால் சார்ந்து கொள்வது என்பது தன்னையே ஒருவரிடம் சரணடைய வைப்பது .. அவரையே நம்பி வாழ்வது !!!

அவர் இல்லாமல் தனித்து வாழ முடியாத நிலை ...

ஈசன் இங்கே அம்பாளிடம் தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை சார்ந்து கொள்கிறான் ...

அவள் இல்லாமல் அவன் இல்லை ...

அவன் தோளில் தன் இன்னொரு பாதியை அம்பாள் சாய்த்துக் கொள்கிறாள் ..

அதுவே நாளடைவில் *தோள் வளை* யாகி விட்டதாம்

அந்த இன்னொரு பாதியும் பொன் போல் ஜொலிக்க ஆரம்பித்து விட்டதாம் ... ☀️🌤️💫
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 112* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 23👍👍👍
ravi said…
த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்த்தம்

ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம்

ஸகல மருணாபம் த்ரினயனம்

குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம் 23🦋🦋🦋
ravi said…
காளி தாசன் அம்பாளை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள் ... 💐💐💐

தாயே நீ நடந்து செல்லும் போது பரமேஸ்வரன் உனக்கு குடை பிடித்துக்கொண்டு வருகிறான் ..

பல இடங்களில் உன் அன்ன நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் முன்னே சென்று விடுகிறான் ..

அவன் விரித்த முழு நிலவு எனும் குடை அவன் அதை மூடும் போது பிறை நிலவாய் தெரிகிறது

அதையே நீயும் அணிந்து கொண்டு அவன் பின்னால் செல்கிறாய் ..

அவன் மனம் திறக்கும் போது முழுநிலவாய் இருக்கிறாய் ..

தியானத்தில் கண்களை மூடும் போது நீயே அவனுக்கு பிறை நிலவாய் ஆகின்றாய் ...

அவன் நினைவெல்லாம் நிரம்பி வழிகின்றாய் .. அதுதான் எங்களுக்கு பூமியில் கங்கையாக பிரவாகம் எடுத்து ஓடுகின்றதோ ??? 👌👌👌
ravi said…
ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரனாஷனம் |

ச்சிந்தா ஷோக ப்ரஷமனம் ஆயுர்வர்ததனம் உத்தமம் || 5 ||🙏🙏🙏🌞
ravi said…
ஆதித்ய ஹ்ருதயத்தில் பலஸ்ருதி முதலில் வந்து விடுகிறது .. மற்ற எந்த ஸ்லோகத்திற்கும் இல்லாத தனித்தன்மை இது
ravi said…
ஸர்வ ஸௌபாக்யங்களையும் அளிக்கும்;

ஸர்வ பாபங்களையும் அழிக்கும்;

சிந்தையில் உள்ள கவலைகளை ஒழிக்கும்; ஆயுளை அதிகரிக்கும்.
ravi said…
அம்பாளுக்கு *சௌபாக்கிய தாயினீ* எனும் ஒரு திருநாமம் உண்டு ...

ஆதித்தனை *சௌபாக்கிய தாயகன்* என்றால் அது மிகை ஆகாது
ravi said…
எல்லாம் மங்கலம் எதிலும் சௌபாக்கியம் ..

இதயத்தை தேராய் ஓட்டும் எங்கள் நாயகனுக்கு

எங்கள் வதனத்தை சந்தனமாய் அரைத்து சார்த்தினாலும் ஈடாகுமோ ??

கொடுப்பதே உன் குணம் என்றே கொண்டோய் ..

இறை உண்டு எனக்காட்டவே தினம் தினம் உதிக்கின்றாய் ...

கமலங்கள் நாங்கள் ..🌷🌷🌷

ஓர் நாள் உனை ப் பார்க்கா விடிலும் கூம்பி போவோம் ...

கும்பிடு போட முடியாமல்

வாடி போகும் வாழ்க்கை இதில் தேடி போகும் தெய்வம் அல்ல நீ

நாடி வரும் தெய்வம் .. நல்லதே செய்யும் தெய்வம் ...

நாளும் போற்றா விடில் அந்த நாளும் பிறப்பது ஏன் ?? 🌞🌞🌞
Kousalya said…
👍👍👏👏👌👌🙏🙏
Kousalya said…
அருமை அருமை🙏🙏 பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம்🙇‍♀️🙇‍♀️🌹🌹
ravi said…
இன்று நாம் அலசப்போகும் பாடல் இரண்டு ...

ஒன்று நமக்கு பரவலாக தெரிந்த பாடல் ...

பொருள் புரிந்து கொள்வதிலும் சிரமம் இல்லாத பாடல் ...

ஆனால் சரியாக பொருள் புரிந்துகொண்டோமா என்பதே நாம் இன்று அலசப்போவது ...

இரண்டாம் பாடலும் இந்த வகையே ..

கற்பது அவள் நாமம் என்பதால் புதிய புதிய பொருள் வந்து கொண்டே இருக்கும் இரு வேண்டுதல்

பாடல்கள் ... பார்ப்போமா ?? 💐💐💐
ravi said…
தனம் தரும் கல்வி தரும்

ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும்

தெய்வ வடிவும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்

நல்லன எல்லாம் தரும்

அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே👀
ravi said…
திருமங்கை ஆழ்வாரின் பாசுரமும் மனதில் நிழலாடுகிறது அல்லவா ?

ஆமாம் பட்டர் ஏன் தனம் தரும் என்று செல்வத்திற்கு முதலிடம் தருகிறார் ? பிறகு தான் கல்வி தரும் என்கிறார் .. குழப்புவதே அவர் வேலை ஆகிவிட்டது ...

படிக்காமல் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் ? அப்படியே முடிந்தாலும் அதை வைத்து காப்பாற்ற அறிவு வேண்டுமே ....

அவர் சொன்னது சரியா ?

இப்பொழுதெல்லாம் படித்த படிப்பிற்கும் கிடைக்கும் சம்பளத்திற்கும் சம்பந்தமே இல்லை ... Astronomy படித்து விட்டு accountant ஆக பலர் இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து ...

படித்தாலும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை ... பட்டர் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா ?

அம்பாளை மனமார வேண்டுங்கள் ...

தனம் தரக்கூடிய அதாவது படித்த படிப்புக்கேற்ற தனம் தரக்கூடிய கல்வி தருவாள் ...

தனம் தரும் என்று தனியாக பிரிக்காமல் தனம் தரும் கல்வி தரும் அவள் நாமம் என்று படிக்க வேண்டும் .. பொருள் மாறுபடுகிறது அல்லவா ?? 👍👍👍
ravi said…
சரி அடுத்த வரியை பார்ப்போம்

*ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்*

இப்பொழுதெல்லாம் சின்ன வயதில் பலர் நிறைய சம்பாதிக்கிறார்கள் ..

கோடி சேர்த்தேன் என்பது முன்பெல்லாம் கோடியில் ஒருவன் தெருக்கோடியில் நின்று சொல்லும் வார்த்தை இது ...

இப்பொழுது சர்வ சாதாரணமான வார்த்தையாக போய் விட்டது ...

பணத்திற்கு மதிப்பும் குறைந்து விட்டது ..

நிறைய பேர் depression எனும் வார்த்தையை ரொம்பவும் அதிகமாக உபயோகிப்பதை பார்க்கிறோம் .

நிறைய பேர்களுக்கு counselling இல்லாமல் வாழ்க்கை ஓடுவதில்லை ...

தளர்ந்து போய் விடுகிறார்கள் வயது இன்னும் இருக்கும் போதே ...

பட்டர் என்ன சொல்கிறார் ...

அம்பாள் நாமத்தை தினம் சொல்லுங்கள் ஒரு நாளும் தளர்வே அறியாத மனத்தை தரும் என்கிறார் ...

*Give up எனும் attitude யை take up என்று பண்ணி விடும் ...*
ravi said…
சரி அடுத்த வரி ... *தெய்வ வடிவும் தரும் என்கிறார் ...*🙏

அது என்ன தெய்வ வடிவு ...

சிலையாகி கோயிலில் நம்மை நிறுத்தி விடுவார்களா ?

ஆமாம் தெய்வத்திற்குத் தான் ரூபம் இல்லையே ..

எப்படி நமக்கு ஒரு வடிவு கிடைக்கும் ?

பட்டரே பாடுகிறாரே ஒன்றே பல உருவே , அருவே என்கிறார் ...
ravi said…
சிலபேர்களை நாம் பார்க்கும் போது நம்மையும் அறியாமல் கை எடுத்து கும்பிடத் தோன்றும் ... அவர்கள் முகத்தில் இருக்கும் ஒளி நம்மை அவர்களை பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும் .. பெரியவா , வள்ளலார் போன்றவர்கள் இதில் அடக்கம் ... அப்படிப்பட்ட நல்ல உருவத்தை நமக்கு அளிக்கும் அவள் திரு நாமம் ... 👍👍👍
ravi said…
*நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்*

இனம் என்பது நட்பு ... நல்ல நண்பர்களை , மனதில் எந்த மலமும் இல்லாதவர்களை தன்னை போல் பிறரை நினைப்பவர்களின் சேர்க்கை நமக்கு கிடைக்கும் ..

எப்பொழுதும் நமக்கு இவர்களால் தெய்வ சிந்தனை மட்டுமே மனதில் இருக்கும் .. 🙏
ravi said…
*நல்லன எல்லாம் தரும் ...*

நமக்கு எது நல்லது என்று அவள் நினைக்கிறாளோ அதை பரிபூர்ணமாய் தருவாள் .. நாம் வேண்டுவது சில சமயம் கிடைக்கா விட்டாலும் நமக்கு எது நல்லதோ அதை அவள் திருநாமம் நமக்கு கண்டிப்பாக தரும் ... 👍👍👍
ravi said…
*அன்பர் என்பவருக்கே கனம் தரும்*

அது என்ன ஓர வஞ்சனை .. எல்லா உயிர்களும் அவளை தாயாக நினைக்கும் போது அன்பர் என்பவருக்கு மட்டும் தான் எல்லா பெருமைகளும் கிடைக்குமா ?

எங்கோ இடிக்கின்றதே 😢
ravi said…
சரி இப்படி பார்ப்போம் .. ஒரு இடத்தில் உங்களை பேச அழைக்கிறார்கள் .. 5000 பேர்கள் கூடியுள்ள சபை ... நீங்கள் சொல்லப்போகும் கருத்தை கேட்க மிகவும் ஆவலாக உள்ளார்கள் ... நீங்கள் சபையின் கடைசியில் அமர்ந்து mike க்கு முன் பேசாமல் உங்கள் உரையை சொல்ல ஆரம்பித்தால் அங்கு இருக்கும் ஓர் இருவர் உங்கள் பேச்சை கேட்கலாம் ஆனால் உங்கள் மேன்பட்ட கருத்து எல்லோரையும் போய் சேராது ... Mike இல் பேசினால்தான் எல்லா இடமும் ஒலிபரப்பாகும் ...

அதே போல் அவள் இடம் சென்று மெய்ப்புளம் அரும்பி ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து கரும்பிற் களித்து மொழி தடுமாறி முன் சொன்னதெல்லாம் தரும் பித்தராகி நின்றால் அவர்களுக்கு கனம் தருவாள் ...

அவர்கள் புகழ் தனை mike போல் எங்கும் பரவ விடுவாள் அன்னை 🙏🙏🙏
ravi said…
*பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே*👀👀
ravi said…
இவ்வளவும் தர அவள் நம்மிடம் வரவேண்டும் என்ற அவசியமே இல்லை ..

நறுமணங்கள் நிறைந்த கரிய கேசம் உடையவள் சற்றே தன் ஒரு கண்ணால் சிமிட்டினாலே போதும் எல்லா சௌபாக்கியங்களும் நமக்கு கிடைத்து விடும்

அது மட்டும் இல்லை அவைகளை நாம் பரிபூர்ணமாய் அனுபவிக்கும் அருளையும் சேர்த்து தருவாள் ...

அவள் தாய்க்கும் மேலானவள் பேரழகி..

ஈடு இணை இல்லாதவள் ..

இன்பம் எல்லாம் தருவாள் நம் எண்ணமெல்லாம் நிறைவாள் ...

பின்னல் ஜடை போட்டு பிச்சுப் பூ சூடிடுவாள் பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்

மின்னலை போல் மேனி கொண்டவள் ... அவள் கண்ணழகுக்கு இணையாக வேறு எதுவுமே இல்லை 👀👀
ravi said…
*நாளை இன்னொரு வேண்டுதலை அலசுவோம்* 🌷🌷🌷
கௌசல்யா said…
Ok ..இது ஒரு பாடல், இரண்டாவது பாடல் எங்கே???
கௌசல்யா said…
[28/01, 1:47 pm] Metro Kowsalya: To compare with?
[28/01, 1:47 pm] Metro Kowsalya: நாராயணா என்னும் நாமம்????
Hv Babu said…
Superb interpretation
Another view point is to give thrust to
*அன்பர் என்பவர்க்கே*
And not அன்பருக்கு
ravi said…
அதிகமாக எழுதி விட்டேன் .. எனவே பாடலும் அலசலும் நாளை ...

இவ்வளவு தூரம் நீங்கள் இருவரும் படித்ததற்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்
HV Babu said…
One need not be a ardent devotee like you they can be like me who are deceitfully Anbar
ravi said…
ஒப்புக்கொள்ள முடியாது.. இருந்தாலும் இப்படி ஒரு பொருள் வருவது உண்மை .. கற்பது அவள் நாமம் என்பதனால்
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 206🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
When you do something beautiful and nobody noticed, do not be sad. For the sun every morning is a beautiful spectacle, and yet most of the audience still sleeps.

Never underestimate the power you hold within, as everyone has an untapped source deep within their soul.

Three things to avoid in life: laziness, complaining and doubt.

A beautiful life does not just happen. It is built daily by prayers, humility and sacrifice
ravi said…
In the anxiety of searching a strategic partner we ignored to count the wood ... Yes we were forced to agree stake at 50% .

This meant we had no control over other partner and every view paved a way for division .

While TATA steel eyed on O&M contract to their sister company TMIL , L&T took the EPC contract ..

The contract was one sided and that is the way L&T wanted it ...

A clear dotted relationship was formed from the day one ...

Each partner started blaming other all were offshoot of 50:50 arrangement ... 🙏
ravi said…
ஜெமினிகணேசன் மனைவிக்கு மஹாபெரியவா போட்ட உத்தரவு,....

உகார் குர்துவில் பெரியவா முகாம். நடிகர் ஜெமினி கணேஸனின் மனைவி பாப்ஜி பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தாள். அந்த ஸமயத்தில், அந்த க்ராமத்தை சேர்ந்த ஓர் ஏழை ப்ராஹ்மணர் வந்து தன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வந்து நமஸ்காரம் பண்ணினார்.
"
ravi said…
பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு....பெரியவா க்ருபை பண்ணணும்...த்ரவ்ய ஸஹாயம் பண்ணி அனுக்ரஹம் பண்ணணும்"...
பெரியவா டக்கென அங்கு நின்று கொண்டிருந்த பாப்ஜியிடம்
"ஒங்கிட்ட ஏதாவது இருந்தா குடேன்"
உடனே அவள் தன் கையில் அணிந்திருந்த வளையல்களில் ஒரு ஜோடியை கழற்றி ஸந்தோஷமாக கொடுத்தாள்.
"
ravi said…
இரு !இரு ! இப்போ குடுக்காதே! அவர் பொண்ணு கல்யாணத்துக்கு நாலு நா முன்னால குடுத்தா போறும்"
ஏன் இப்படி சொல்கிறார்? அதோடு நிற்கவில்லை, நம் ஞான ஸம்ஸாரி....அங்கே வந்திருந்த உள்ளூர் பாங்க் மானேஜரிடம்
"இந்தா....இந்த வளையலை ஒங்க பாங்க் லாக்கர்ல வெச்சுக்கோ. அப்றமா குடுக்கலாம்" என்றார்.
ரெண்டு நாள் கழித்து அந்த ப்ராஹ்மணர் வந்து ஒரேயடியாக அழுதார்.
ravi said…
" க்ருஹத்ல எல்லா ஸாமானும் திருடு போய்டுத்து. பொண்ணுக்கு எப்டி கல்யாணம் பண்ணுவேன்....பெரியவாதான் கதி!..."
" எது போகணுமோ அதான் போச்சு! கவலப்படாதே!....கல்யாணம் நன்னா நடக்கும்"
மிஞ்சியிருந்த ஸொத்து பாப்ஜி குடுத்த வளையல்கள்தான்!
ravi said…
"பெரியவா அனுக்ரஹம், வளையலாவது தப்பிச்சுது......."
பெரியவா சிரித்துக் கொண்டே "தலைக்கு வந்தது தலைப்பாவோட போச்சு போ! இந்த வளையல வெச்சு கல்யாணத்தை பண்ணு. அமோஹமா இரு!"
ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.
அன்றைய தேதிக்கு அந்த வளையல்கள் 20,000 ரூவாய் மதிப்பு!
ravi said…
இதில் சிலபேருக்கு ஒரு கேள்வி எழும்.
ஏன்? பெரியவா நெனச்சா, திருட்டு போகாம பண்ணியோ, இல்லாட்டா அவரை caution பண்ணியோ இருந்திருக்கலாமே! என்று கேட்கத் தோன்றும்.
ravi said…
நம்முடைய ப்ராரப்தத்தை மஹான்கள் மாற்ற மாட்டார்கள். நம்முடைய கர்மாவை, நல்லதோ, கெட்டதோ, அனுபவிச்சுத்தான் கழிக்கணும். ஆனால், ஒரு மஹாத்மாவை ஆஶ்ரயிக்கும் போது, அந்த ப்ராரப்தம் நம்மை ரொம்ப பாதிக்காதபடி பண்ணி அனுக்ரஹம் பண்ணிவிடுவார்கள்.
எந்தக் கஷ்டமும், நமக்கு கஷ்டமாகத் தெரியாது. நாம் இன்னும் பெரியவாளை இறுகப் பிடிக்கப் பிடிக்க, நம்மை பிடிக்கும் கஷ்டங்களுக்கே கஷ்டம் வந்துவிடும்!

மஹான்கள் தரிசனம் நம் ஜென்ம பாவங்கள் விலகி விடும்.
ravi said…
நாளை சனி மஹாபிரதோஷம்!

பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.
ravi said…
*யுத்த காண்டம்*🌷🌷🌷
ravi said…
மெய்ம்மையை உணர்ந்த தசரதன், தான் கைகேயியின் பால் கொண்ட வெகுளியை விட்டு ஒழித்தான்.

இப்படி இராமனுக்கு வரம் அளித்துவிட்டு, தசரதன் விமான்மேறி வைகுந்தம் போய்ச்சேர்கிறான். தேவர்கள் வந்து இராமனைச் சூழ்ந்து கொண்டு, "இராமா! நீ வேண்டுகின்ற வரத்தைக் கேள்!" என்றனர்.

இராமன் உடனே தேவர்களிடம், "போரில் மாண்டுபோன வானரர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுமாறும், இவர்கள் செல்லுகின்ற காடு, வனம் முதலான இடங்களில், இவர்களுக்குக் கணக்கற்ற வகைகளில் காய்களும், கனிகளும் கிடைக்குமாறும், அருள் புரிக!" என்று வேண்டினான். அங்ஙனமே தேவர்கள் அருள் புரிந்தனர்.

அப்போது தேவர்கள் இராமனிடம், "இன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிந்து போய்விட்டன. நீ பரதனிடம் வாக்களித்தபடி இன்றே போய்ச் சேருவாயாக. அப்படி இல்லையேல், அவன் செய்திருக்கும் சபதப்படி, தீயினுள் பாய்ந்து விடுவான்" என்றனர்
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 112*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
ஏன் ஸ்வாமியை பார்க்கும் போது பாதத்தை பார்க்க முடியாதான்னா *ஸம்ப்⁴ரமஜுஷாம் –* உன்னை நமஸ்காரம் பண்ணணும்ங்கிற ஆர்வத்துல *நிலிம்பாநாம் ச்ரோணி* –

தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உன்னை நமஸ்காரம் பண்ணிண்டு இருக்கா.

அவாளுடய *நிஜகனகமாணிக்யமகுடை* : – அவா தலையில இருக்கிற மாணிக்கமகுடங்கள் எல்லாம் மாம் *ஸ்த²க³யதி* – எனக்கு உன்னுடைய பாததரிசனம் கிடைக்காத மாதிரி தடுத்துடறதுன்னு சொல்றார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 127* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
*45. தாதுருத்தமாய நம: (Dhaathuruthamaaya namaha)* 🪔🪔🪔
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

அநாதி நிதனோ
தாதா
விதாதா *தாது ருத்தம:* ||5
ravi said…
அந்நேரம் பார்த்து அங்கே வந்த நாரதர் பிரம்மாவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பி விட்டு,
அப்பெண்ணின் தலையெழுத்தில் இருந்த ‘ *அ* ’ என்னும் எழுத்தை மட்டும் அழித்து விட்டார். ‘ஹல்யா’ என்று ஆகிவிட்டது.

ஹல்யா என்றால் குற்றமுள்ளவள் என்று பொருள்.

சரஸ்வதி சொன்னபடி நாரதர் அப்பெண்ணுக்குக் குறையை உண்டாக்கிவிட்டார்.
பெயர்தான் அஹல்யா (குற்றமற்றவள்), ஆனால், தலையெழுத்தில் ஹல்யா (குற்றமுள்ளவள்) என்று உள்ளது.

பிரம்மாவும் இதைக் கவனிக்கவில்லை.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸகல தேவதைகளும் கோவுக்குள் அடக்கம்
ஏனென்றால் கோவுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களுமே அடக்கம். ஸகல புண்யதீர்த்தங்களும் ஒரு பசுவுக்குள் இருக்கின்றன.
ravi said…
நம்முடைய ஆலயம் ஒவ்வொன்றிலும் சில தெய்வங்களுக்கு ஸந்நிதிகள் இருக்கின்றன; அதைச் சேர்ந்ததாக ஒவ்வொரு புண்ய தீர்த்தம் இருக்கிறது. கோ என்பதோ அத்தனை தெய்வங்களும் அத்தனை புண்ய தீர்த்தங்களும் குடி கொண்ட ஆலயமாக இருக்கிறது. கோவே ஒரு நடமாடும் கோயில். ஸர்வ தேவதைகளுக்குமான மஹத்தான கோயில்.
ravi said…
ஸர்வ தேவதா ஸ்வரூபம் என்றால் நம்முடைய சிற்றறிவால் இன்னதென்றே கிரஹித்துக் கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறது? ஒரே மலைப்பாக – பயம் கலந்த மலைப்பாக – இருக்கிறதே தவிர அன்போடு பக்தி பண்ணும்படியாக இல்லையே!
ravi said…
அதனால் கோமாதாவைக் குறிப்பாக லக்ஷ்மி என்ற ஒரு தேவதையின் ஸ்வரூபமாகச் சொல்வது. அமர(கோச)ம் என்கிற ஸம்ஸ்க்ருத நிகண்டுவில் (அகராதியில்) லக்ஷ்மியின் பல பெயர்களைச் சொல்லும்போது ‘லோகமாதா’, ‘லோகஜனனி’ என்னும் இரண்டு பெயர்கள் சொல்லியிருக்கிறது.
ravi said…
கோமாதா அந்த லோகமாதாவே.

கோமாதாவை லக்ஷ்மி என்கிறது ஒரு பக்கம். அவளை லக்ஷ்மியின் வாஸ ஸ்தானமாகச் சொல்வது இன்னொரு பக்கம். லக்ஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து. ஸுமங்கலியின் ஸீமந்தம் என்கிற வகிடு, மலர்ந்த தாமரைப் பூவின் உள்பக்கம்,
ravi said…
யானையின் மஸ்தகம் (தலை), வில்வ பத்ரத்தின் பின் பக்க ரேகை ஆகிய நாலோடு பசுவின் பின்புறமும் ஐந்தாவதாக மஹாலக்ஷ்மியின் நிவாஸமாக இருக்கிறது.
ravi said…
கோவிடத்தில் எதிரிடைகள் சேர்கிறதில் கோமய, கோமூத்ரங்களும் பவித்ரமாக இருப்பதாகப் பார்த்தோமல்லவா? அப்படியேதான் அதன் முக மண்டலமாக இல்லாமல் ப்ருஷ்டபாகமாக இருக்கப்பட்ட பின்புறமும் பரம பவித்ரமான லக்ஷ்மீவாஸமாக இருக்கிறது.
ravi said…
அழகுக்காக கோவின் முகத்தில் சந்தன குங்குமங்கள் இட்டுக் கழுத்தில் மாலை போட்டாலும், கோபூஜை என்று பண்ணும்போது பின்புறத்தை அலங்கரித்து அங்கேயே அர்ச்சனாதிகள் செய்யவேண்டும். ஒரு கோவினிடம் நிக்ருஷ்டமானது (தாழ்ந்தது) என்று எதுவுமேயில்லை.
ravi said…
அதனிடம் ஸர்வமும், ஸர்வாங்கமும் உத்க்ருஷ்டமே (உயர்ந்தனவே). நம் மடம் மாதிரி தர்மபீடங்களில் ப்ரதிதினமும் காலம் கார்த்தாலே நடக்கிற முதல் வழிபாடு கோபூஜைதான் என்பதிலிருந்து கோவுக்குள்ள உத்க்ருஷ்டமான ஸ்தானத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ravi said…
பசுவைவிட யானை எவ்வளவோ பெரியதாக இருந்தாலும் கோபூஜைக்கு அப்புறந்தான் கஜபூஜை. தெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும். அது சிலர்தான் பண்ண முடியும். ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோவுக்கு ஆஹாரம் போடுவதுதான் அது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்கவேண்டும். ‘
ravi said…
கோ க்ராஸம்’ என்று இதை சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாய் ஆஹாரம். ‘கோ க்ராஸம்’ என்பதை வைத்துத்தான் புல்லுக்கு இங்கிலீஷில் grass என்று பெயர் வந்திருக்கிறது.
ravi said…
திருமூலர் ‘திருமந்திர’த்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்யவேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை; அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார்.
ravi said…
முடிவாக ஜீவர்களிடம் இனிமையாகப் பேசுவதையும் சொல்லியிருக்கிறார்.

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே.

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53