அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 25 பதிவு 21

           அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 25

பதிவு 21



கேள்வி பதில் நேரம்* 

 *பதிவு 21* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 *கேள்வி 25* 

 *நான்* : 

 பட்டரே! காலை வணக்கம் ..   

 *பட்டர்*  

ஒன்பது கோணங்கள் மேவி உறைபவள் உங்கள் எல்லோரையும் சந்தோஷமாக வைப்பாள் 

இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌




*நான்*  இன்றும் சில கேள்விகள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து .. உங்கள் நேற்றைய விளக்கம் என் கண்ணை திறந்தது .. இன்றும் நீங்கள் தரும் விளக்கம் எங்களை மேலும் புனிதமாக்கும் 🙏🙏

*பட்டர்* ... ஏதேது அபிராமி அந்தாதியை விட்டு விட்டு லலிதா அந்தாதியை சொல்ல வைப்பாய் என்னை போலிருக்கே . 

நான் ... அப்படி லலிதா அந்தாதி தாங்கள் வரைந்தால் எங்களைப்போல் புண்ணியம் செய்தவர்கள் யாருமே இருக்க முடியாது ... 

 *நான்* : 

ஐயனே எதிர்மறை நாமங்கள் என் முழு குழப்பங்களையும் தீர்க்க வில்லை . 

இன்று சில எதிர்மறை நாமங்களைப்பார்த்தேன் .. 

உங்கள் விளக்கம் ஒன்றே என்னை தெளியவைக்கும் . 🙏🙏🙏





*நான்* ...  இரண்டு ஜோடி  எதிர்மறை நாமங்கள் 

 *முதல் ஜோடி* 

நிர் அகங்காரா , அதி கர்விதா

ஐயனே முதல் நாமம் அகங்காரம் இல்லாதவள் என்று சொல்கிறது 

ஆனால் அடுத்த நாமம் உடனே அதிகமான கர்வத்தை உடையவள் என்றும் சொல்கிறதே ... 

அம்பாளை கர்வம் கொண்டவள் என்று எப்படி ஏற்றுக்கொள்வது ... 

She does not know  even how to spell it ... 

 *அடுத்த ஜோடி எதிர்மறை நாமங்கள்*

 *ஸ்ரீ மாத்ரே* ; ஸ்ரீ  மஹாக்ராஸா

ஏழு புவிகளையும் பதினான்கு புவனங்களையும் 

ஏழு நதிகளையும் 

எட்டு மலைகளையும் புந்தியில் வைத்து ஈன்றவள் .. 

எல்லா உயிர்களுக்கும் அன்னை ... 

ஆனால் *மஹாக்ராஸா* என்று சொல்லி 

எல்லா உயிர்களையும் கபளீகரம்  செய்பவளும் அவளே என்கிறதே லலிதா சஹஸ்ரநாமம் .. 

என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை .. 

கருணா ரஸ ஸாகரம் அவள் .. 

அவள் எப்படி உயிர்களை கபளீகரம் செய்வாள் ?? 🌺🌺🌺




*பட்டர்*  

ரவி நுனிப்புல் மேய்தால் புல்லும் குறையாது உன் புத்தியும் வளராது ... 

நான் நேற்று என்ன சொன்னேன் ... ??

கற்பது அவள் நாமம் என்று .. 

இதுதான் அதன் பொருள் என்று நாமத்திற்கும் திட்டவட்டமாய் சொல்லி விட முடியாது .. 

நான் இன்று சொல்கிறேன் 

நாளை இன்னொருவர் இன்னொரு விதமாய் மிகவும் பொருத்தமாய் சொல்லலாம் ..

உன்னைப்போல் ஒருவன் கலைவாணி ஒருக்கால் மேல் இன்னொரு காலை போட்டு வீணையை மடியில் அமர்த்தி யாழை மீட்டிக்கொண்டிருக்கும் படத்தைப் பார்த்து இப்படி புரிந்து கொண்டானாம் .. 

படித்து விட்டாள் அல்லவா அதனால் இந்த தோரணை ?

அதிகம்  படித்துவிட்டால் கர்வம் அதுவாக வந்து விடும் என்பது அவன் நினைப்பு .. 

இப்படி அமர்வது யோக கலையில் ஒன்று 

சரஸ்வதிக்கு ஏன் கர்வம் வரவேண்டும் கல்வியே அவளாக இருக்கும் போது ??  💐💐💐



சரி உன் குழப்பத்தை தீர்க்க முயற்சி செய்கிறேன் . அவள் சித்தம் . 

உண்மை அவள் ஸ்ரீ மாத்ரே .. உலகம் அவள் உடல் 

பிறக்கும் உயிர்கள் அவளது  சம்சாரம் எனும்  நீர் குடத்தில் சுழல்கின்றன .. 

உலக இயல்பில் தவறுதல்கள் ஏற்படும் போது அதையும் அவள் நிவர்த்தி செய்யவேண்டும் .. 

பிரளயம் , கொரோனோ போன்ற வியாதிகள், புயல் ,சூறாவளி இவைகளை ஏற்படுத்தும் கட்டாயத்தில் அவள் இருக்கிறாள் .. 

அவள் செய்யும் இந்த காரியங்கள் அழிப்பது என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது .. 

களைகளை , காளான்களை  நீக்கி புதிய உயிர்களை படைக்கிறாள் .. 

அதனால் அவள் *ஸ்ரீ மஹாக்ராஸா* இரண்டு extreme க்கும் உள்ளே இருப்பவள் அவள் 🌺🌺🌺




*நிர் அகங்காரா*  

அகங்காரம் இதன் அர்த்தம் தெரியாதவள் எல்லாம் இருந்தும் அகங்காரம் இல்லை .. 

அதனால் தான் சொன்னேன் 

அளியேன் அறிவுக்கும் அளவான அதிசயமே என்று 

 *அதி கர்விதா*  

ஏற்கனவே சொன்னேன் நல்ல பக்தியுள்ள அவளையே எப்பொழும் நினைக்கின்ற நம் போன்ற  குழந்தைகளை பெற்றவள் அதனால் அவள் மிகவும் பெருமையுடன் இருக்கிறாள் ... 

 *நான்* 

ஐயனே ... சாஷ்ட்டங்கமாய் பட்டரின் பாதங்களில் விழுந்தேன் .. 

அங்கே பரிமளம் பாலாக ஓடியது 


                       🙏🙏🙏🥇🥇🥇




Comments

ravi said…
இன்றும் சில ஐயப்பாடுகளும் சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன..

அருமை...

🙏🙏🙏🙏🙏🙏

இன்றும் சில ஐயப்பாடுகளும் சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன..

அருமை...

🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான விளக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
மூர்த்தி said…
👌உலகம் அவளது உடல்....

உண்மை. படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் அவளது ஆதிக்கத்தின் கீழே....

எல்லா நல்ல நிகழ்ச்சிகளும் தீயவைகளும் அவள் நடத்தும் செயல்களே... அவள் இன்றி ஓர் அணும் அசையாது..

அவள் செய்யும் அனைத்து செயல்களும் நமது நன்மைக்கே....

நம் கடமை யாதெனில் அவளது பொற்பாதங்களை சரணடைவது ஒன்றே...
🙏🙏🙏🌹💐
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரமும் விளக்கமும் ....*
ravi said…
ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |

ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||
ravi said…
ராம ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது.

அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான்🌞🌞🌞
ravi said…
*பாடல் தமிழாக்கம் (அடியேன்) 👍👍👍*
ravi said…
தசரதன் மகனும் தசமுகனும் போரிட்டனரே ...

புழுதி பரவும் களம் அதில் புன்னகை அழியாமல் போரிட்டான் ஜயம் கொண்டவன்

சிவ நாமம் சிந்தையில் இன்னும் இருந்ததால் ராவணன் மண்ணில் சாய வில்லை ...

சிவன் அருள் இன்றி சிவபக்தனை அழிக்க முடியுமோ ?

சிந்தை கலங்கினான் ராமன் ...

திருவும்
கல்வியும்
சீரும்
சிறப்பும்
அவன் புகழ் பாடும் திறமும்
நல் உருவமும் ஊக்கமும்
உணர்வும் கொண்டே தெய்வ வடிவமாய் நின்றான் தசமுகன் ...

சோர்ந்ததில்லை இது வரை ராமன் ..

கோதண்டம் ஓய்ந்ததில்லை

அம்புகள் நின்றதில்லை அம்புரா களைத்ததில்லை

கவலை கார்மேகம் போல் கரியமுகன் தனில் மாலைப் பொழுது பிரசவித்த இருட்டைப்போல் சுந்தர முகம் தன்னை கவ்வியதே 😰🌞🌞
Kousalya said…
அனைத்தையும் நிறையாக பார்க்கவே எமக்கு தங்களின் பதிவுகள் உரைக்கின்றன...பின் எவ்வாறு குறை.....குறை ஏதும் இல்லை...👍👍👏👏🙏🙏
Hemalatha said…
ஆன்மீக தொண்டு
என் போன்ற வர்களுக்கு சமயத்தில் செய்யும் தொண்டு, ஏழைகளுக்கு உணவளிக்கும் தொண்டு ........ ஆண்டவன் ஆசி தங்களுக்கு நிச்சயம் உண்டு.இதை சொல்ல நான் யார் நீங்கள் தான் அபிராமி யிடம் நேரடி தொடர்பில் இருப்பவராயிற்றே.நன்றிகள்🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 108* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 22👍👍👍
ravi said…
*பவானீத்வம்*🪔🪔🪔
ravi said…
பவானி த்வம் தாஸே மயி

விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி

பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை

திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நீராஜித பதாம்🙏🙏🙏
ravi said…
பரமாச்சார்யார் இது பற்றி சொல்லுகையில், இங்கே ஆச்சார்யார் சொல்லியிருப்பது ஞான வழியில் போய் நிர்குண ப்ரம்ஹத்தோடு ஐக்யமாகும் அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்று கூறுகிறார்.

ஏனென்றால், அடுத்த வரி ' *முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம்'* என்பதை காரணமாகச் சொல்கிறார்.

அம்பாளுடன் அவன் ஐக்ய சாயுஜ்யம் பெற்றுவிட்டால் அப்போது அவனுக்கே ' *முகுந்த ப்ரஹ்மேந்த்ர'* என்பதான தன்மை அவனுக்கே கிடைத்து விடுகிறது.

ஆனால் அத்வைதத்தில் ஸாயுஜ்யம் அடையும் போது அங்கு மூர்த்தியே கிடையாது, பிறகு ஏது பாதங்கள், மகுடங்கள்?.

நிர்குண தத்வம் என்பது மேலே சொன்ன பாடலில் இல்லை. எனவே இங்கே ஆதிசங்கரர் சொல்லியிருப்பது *அத்வைத ஸாயுஜ்யம்* இல்லை என்பார்.

இந்த ஸ்லோகமானது சர்வ ஸித்திகளையும் தரும் மந்த்ரம் என்றால் மிகையாகாது.🪔🪔🪔
ravi said…
👏👏👏👏👏👏👏👏👏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 108* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
*ஸ்ரீ ஒளஷத லலிதா மஹா திரிபுரசுந்தரி - ஸ்ரீ பீடம். செம்பாக்கம்*
ravi said…
திதி நித்யா தேவதைகளை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் (கட்டுமலை கோவில்) கருவறையில் பிரதிஷ்டையானவள் . நின்ற கோலம்.

இரு கரத்தில் அங்குச, பாசம்.தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை *மகா சௌந்தர்ய ரூபி.*

மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.

மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலகாப்பு ) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும்.

மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 51 முழம் நீளமான புடவை அணிகிறாள்.

தினசரி பாதபூஜை உண்டு.👣👣
ravi said…
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 202🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
Dark clouds in the sky are always the one who give good rain. similarly dark days in our life will always bring happy days. Never loose hope in life
🙏 Good Morning 🙏
ravi said…
A place which Metro ites never wanted to go ... Bhubaneswar ... A city of divine like Nashik .. The place is best known for Puri bhaji...And Puri Jagannaath .. god of devottee's bhaji 🙏
ravi said…
BBSR is the capital of Odissa . Cuttack was in the race but could not succeed over BBSR ..

This place resembles with Varanasi .. Cows and Bulls occupy the centre of the main roads and left and right side of the road belong to donkeys and stray dogs .

In between if u find road you can travel navigating these animals ...

Second beauty of this place is people are highly contended for one square meal of food .. Rice eaters ...

After food they have to necessarily take a nap which would last till evening and if u go for shopping every shop keeper would promote their next shops ...

And at 8pm they go for sleep . Morning Sun raises alone without any company .... 🌞
ravi said…
*16.கணம்புல்ல நாயனார்*🌞🌞🌞
ravi said…
கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்”

திருத்தொண்டத் தொகை
ravi said…
*ஏற்றிய விளக்கும் எரியும் தீபமும் 🪔* 🪔🪔
ravi said…
வடவெள்ளாற்றுக்குத் தென்கரையில் உள்ள இருக்கு வேளூரிலே,

சிவபத்தியிற் சிறந்தவரும் பெருஞ்செல்வருமாகிய ஒருவர் இருந்தனரே

அவர் செல்வம் பெற்றதினால் அடையும் பயன் இதுவே என்று, சிவாலயத்தினுள்ளே திருவிளக்கேற்றித் தோத்திரம் பண்ணுவாராயினரே

பெய்யும் கனகம் எரியும் விளக்காய் ஆனதே சொல்லும் பொருளும் ஏற்றும் நெய்யாய் தீபமாய் ஆனதே ..

கையில் உள்ள காசு கண் மூடி திறக்கும் முன் நெய்யாய் உருகி போனதே

கணம்புல்லுக்களை அரிந்துகொண்டுவந்து விற்று, நெய் வாங்கித் திருவிளக்கெரித்தனால் அவர் பெயரும் கணம்புல்லநாயனார் என வானதே

அதற்கும் வழி இன்றி ஈசன் நடுத்தும் நாடகத்தில் தன் முடி தனை புல்லாக்கி தீபம் ஏற்ற கல்லாய் இருந்தவனும் நெய் போல் உருகி போனான் .. தீப ஒளியில் தன் திருவடி காட்டி சேர்த்துக்கொண்டான் அடியாரை தன் குஞ்சித பாதம் அதில்

அன்று கணம்புல்ல நாயனார் ஏற்றிய தீபம் காஞ்சி பெரியவாளாய்

இன்றும் இரவும் பகலும் சூழும் சுடர்க்கு நடுவே சுடராய் சுடர்கின்றதே 🌞🌞🌞🪔🪔🪔👣👣🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பலாத்காரத்தினாலோ, பணத்தைக் காட்டியோ பொது ஜனங்களை இழுக்கிற மதங்களைப் பற்றி இங்கே கேள்வியில்லை. பலவிதமான சமூக சேவைகளை, ஒத்தாசைகளை செய்துவிட்டு, உடனே ஞானஸ்நானம் பண்ணி வைக்கிறேன் என்று ஒரு மதம் இழுத்தால், பாமர ஜனங்கள் அதில் வசியப் பட்டுத்தான் போவார்கள். முக்கியமாகப் பஞ்ச காலத்தில் கிறித்துவ மதம் வளர்ந்தது என்று இதனால்தான் சொல்வதுண்டு. இப்படியே அடிபிடிக் கட்டாயமாக இஸ்லாத்தைப் பரப்பியபோது தன்னிச்சையில்லாமலும் கூட்டம் கூட்டமாகப் பலர் அதில் சேர்ந்ததாகச் சொல்வதுண்டு.
ravi said…
இங்கேயும்கூட தத்துவத்திற்காகப் பொது மக்கள் ஒரு மதத்தில் சேர்ந்து விடவில்லை என்ற மட்டில் நிரூபணமாகிறது. இன்னொன்றைக் கவனிக்க வேண்டும்
ravi said…
முக்கியமாகத் சேரி மக்களைத்தான் பாதிரிமார்கள் மதம் மாற்ற முற்பட்டார்கள். ‘உங்களை எல்லாம் உங்கள் மதத்தில் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள்; எங்களிடம் வந்தால் உயர்த்தி விடுகிறோம்; படிப்பு, வைத்தியம் எல்லாம் இலவசமாகத் தருகிறோம்’ என்று செல்வாக்கோடு ராஜாங்கத்தின் ஆதரவோடு பிரகடனம் செய்தார்கள்.
ravi said…
அப்படியும் சேரி ஜனங்கள் எல்லோரும் அதில் போய்ச் சேரக் காணோமே! ஏராளமான அந்த மக்கள் தங்கள் பிறந்த மதத்தில் எத்தனை தாழ்த்தி வைக்கப்பட்டதாகத் தோன்றினாலும் பரவாயில்லை என்று நினைத்து, தங்களுக்கு இன்னொரு மதத்தால் கிடைக்கிற வசதிகளையெல்லாம் துச்சமாக நினைத்து, அதற்குப் போகாமல்தானே இருந்திருக்கிறார்கள்.
ravi said…
இப்படி இருந்ததற்கு அவர்களுடைய நல்ல பண்பு ஒரு காரணம் என்பது இருக்கட்டும். இன்னொரு காரணம். நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் பரம உத்தமமான மகான்கள் தோன்றிக்கொண்டு வந்திருப்பதுதான். ‘இந்த மகான் இருக்கிற மதத்திலேயே நாமும் இருப்போம்’ என்று அதிலேயே சேரி ஜனங்கள் உள்பட எல்லோரும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். பலாத்காரம் அல்லது பணபலம் இவற்றைக் கைக்கொள்ளாத எல்லா மதங்களும் அவற்றின் குருமார்கள், போதகர்கள், பிரசாரகர்கள் ஆகியோரது குணத்தைக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன.
ravi said…
இப்படிப்பட்டவர்களுடைய குண விசேஷத்தாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களின் தோஷங்களும் போய்விட வேண்டும்.
ravi said…
இப்படிப் பட்டவர்களை உண்டு பண்ணுவதே இப்போதும் நம் மதம் தழைக்க வழி. எதிர்பிரச்சாரம் எதுவுமே வேண்டாம். மதநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிற பிரதிநிதிகள்தான் வேண்டும். இவர்களால்தான் இதுவரை யுகயுகாந்தரமாக நம் மதம் உயிரோடிருந்து வந்திருக்கிறது.
ravi said…
இனிமேலும் இப்படிப்பட்டவர்களால்தான் அது உயிர் வாழ முடியும். ஒருவன் சண்டை போட்டு மதம் மாறுகிறேன் என்றால் எதிர்த்துப் படை திரட்டிச் சண்டைபோட என்னால் ஆகாது.
ravi said…
அல்லது கோடி கோடியாய் செலவழித்து ஆஸ்பத்திரி, ஸ்கூல் வைத்து ஒருவன் மதமாற்றம் செய்கிறான் என்றால், அதைப் போலப் கோடிக் கணக்கில் செலவழிக்க எனக்கு ஐவேஜியில்லை. இது இரண்டும் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலுங்கூட,
ravi said…
இதனால் செய்யும் மாறுதல் உண்மையானதும் (genuine) இல்லை; அது நிலைத்தும் நிற்காது. ஏனென்றால், நம்மை விடவும் பலிஷ்டர்களாகவோ, நம்மைவிடவும் ரொம்பப் பணவசதி உள்ளவர்களாகவோ இன்னொரு கூட்டம் வந்தால்,
ravi said…
அது நம் பலத்தாலும் பணத்தாலும் செய்ததை எல்லாம் அழித்துவிட்டு, தானே ஜயித்துவிடும்! ஆனபடியால் இந்த வெளிச் சக்திகளை நம்பிக் கொண்டிராமல், நம் ஆத்ம சக்தியை நம்பி உள்ளுக்குள்ளே நம்மை உயர்த்திக் கொள்வதே நாம் செய்ய வேண்டியது.
ravi said…
அப்போது எந்தப் பிரசாரமும், சண்டையும், வசியமும் இல்லாமலே நம் மதம் தழைத்து வாழும். இப்போது இதர தேசங்களில் புத்திமான்கள் ஏராளமாக, ‘அத்வைதம், அத்வைதம்’ என்று அதைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டிருப்பதற்கு அதன் சித்தாந்தச் சிறப்பு காரணமாக இருக்கலாம். அவர்கள் ஆராய்ச்சி பண்ணி, ஆத்ம விசாரம் பண்ணி நம் வேதாந்தத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இது பொது ஜனங்கள் எல்லாருக்கும் பொருந்தாத விஷயம். அவர்கள் பிடித்துக் கொள்ள ஓர் உத்தம ஜீவன்தான் வேண்டும்.
இப்படி ஒருத்தன் சாந்தமும், கருணையும், ஞானமும், தியாகமும் நிரம்பியவனாக நம்மிடையில் வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை உபன்யாசங்களும் பண்ணுகிறேன். உங்களிலேயே ஒருவர் அப்படித் தோன்றிவிட்டால் அதைவிடப் பெரிய பயன் எதுவும் இல்லை
ravi said…
*யுத்த காண்டம்*🌷🌷🌷
ravi said…
அதற்கு இராமன் அக்னி தேவனை "நீ யார்?" என்கிறான்.

"இவளை தீ சுடாதபடி யார் சொல்லி நீ காப்பாற்றினாய்?" என்கிறான் இராமபிரான்.

"ஐயனே! இராமா! நாந்தான் அக்னிதேவன்.

இந்த தேவியின் கற்புத்தீ என்னைச் சுட்டெரித்து விட்டது. எனவே உன்னைச் சரணடைந்தேன். உலகத்தின் நாயகனே! இங்கே என் நிலையை நேரில் கண்ட பிறகும், இந்தத் தெய்வத்தின் கற்பில் ஐயம் கொண்டனையோ?

இவள் மட்டும் சீற்றம் கொள்வாராயின், மேகம் மழை பொழியுமோ? பூமி பிளந்து சிதறாமல் போகுமோ? அறமும் செவ்விய நெறியில் நடக்க முடியுமோ? உலகம் அழியாமல் இருக்குமோ? இவள் வெகுண்டு சபித்தால், பிரமனும்கூட இறந்தொழிவான்"

இவ்வாறு சொல்லிக் கொண்டு அக்னிதேவன் பிராட்டியை இராமன் முன்பாகக் கொண்டுவர, இராமன் அன்னையை ஏற்றுக் கொள்கிறான்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 109*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
*விபோ* – எங்கும் நிறைந்திருப்பவனே!

*ஸ்வாமி* – என்னுடைய எஜமானனே.

ஸ்வாமின்னா – உடையவன்.
நம்முடையஎஜமானன்

*ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி*

– நான் பண்ண ஏதோ போன ஜன்மத்து புண்யத்துனாலயோ மயி கருணயா வா – என் மேல இருக்கிற கருணையினாலயோ

*த்வயி ப்ரஸன்னேऽபி* – நீங்கள்என்முன் தோன்றி காட்சி கொடுக்கிறீர்கள்,

ஆனாலும் *ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம்* –

உன்னுடைய தூய்மையான திருவடித்தாமரைகளை யுகளம்னா இரண்டு. திருவடித்தாமரைகள் இரண்டையும் கத²ம் *பச்யேயம்* – நான் எப்படி தரிசனம் பண்றது?
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 124* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

அநாதி நிதனோ
தாதா
*விதாதா* தாது ருத்தம:||5
ravi said…
மூலப் பிரகிருதியில் பிரம்மாவைக் கருவாகத் திருமால் விதைப்பதால் அவர் ‘ *தாதா* ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *43-வது திருநாமம்* .

தான் விதைத்த கருவை நான்கு முகங்கள் கொண்ட பிரம்மதேவராகத் தன் அருட்பார்வையால் வளரச் செய்கிறார்.

அவ்வாறு கருவை வளரச்செய்வதால் ‘ *விதாதா* ’ என்று ஸஹஸ்ரநாமத்தின் 44-வது திருநாமத்தால் போற்றப்படுகிறார்.

கருவை விதைப்பவர் *தாதா* , விதைத்த கருவை வளர்ப்பவர் *விதாதா* .

காந்தாரியின் கருவிலிருந்து வந்த மாமிசத் துண்டுகளைக் குழந்தைகளாக வளரச் செய்ய வேண்டுமென்று திருமாலைப் பிரார்த்தித்து
“ *விதாத்ரே நமஹ:”* என்று ஜபித்தார் வியாசர்.

அவ்வாறே அவையும் குழந்தைகளாக உருவெடுத்து வந்தன.”

“ *விதாத்ரே நம:”* என்று சொல்லிவரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பார்கள்.👍👍👍
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 109* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
*ஸ்ரீ ஒளஷத லலிதா மஹா திரிபுரசுந்தரி - ஸ்ரீ பீடம். செம்பாக்கம்* 3
ravi said…
தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி செளபாக்யம், ஆனந்தம், ஆரோக்யம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள்.

நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது.

சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் *ஸ்ரீசக்ரசபை* எனப்படுகிறது.

இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்கிறாள்.

ஹரி, ஹரன் வழிபட்ட திரிமூர்த்தி ஸ்வரூபிணி.
ravi said…
ஒளஷத லலிதாவிற்கு நந்தவன புஷ்பங்கள் மட்டுமே சாற்றப்படுகிறது.

பச்சை கற்பூர ஆரத்தி மட்டுமே.

திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசைபடி திதி நித்யா படிவழியே இறங்கவேண்டும்.

பெளர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார விசேஷ 27 வகை மகா தீபாராதனையை தரிசிக்க முடியும்,

மூலிகை பிரசாதம் வழங்கப்படும்.

கீழ்த்தளத்தில் குரு மண்டல அசாத்ய ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம்.

தொடர்புக்கு: 9789921151 , 9445359228.
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 109* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 23👍👍👍
ravi said…
23. சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்
ஸர்வ ஸம்பத்து
ravi said…
த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்த்தம்

ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம்

ஸகல மருணாபம் த்ரினயனம்

குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம் 23🦋🦋🦋
ravi said…
எக்காரணத்தால் என்னுடைய இருதயத்தில் பிரகாசிக்கும் இந்த உன்னுடைய ரூபம் முழுவதும் சிவப்பான காந்தியுடனும் மூன்று கண்களுடனும் இரண்டு ஸ்தனங்களால் சற்று வளைந்தும் பிறைச்சந்திரனைச் சூடிய மகுடத்துடன் விளங்குகிறதோ,

ravi said…
அதனால் சம்புவினுடைய சரீரத்தின் இடதுபாகம் உன்னால் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பும் முழுத் திருப்தியில்லாத மனத்தால் சரீரத்தின் மற்றொரு பாதியும் கவர்ந்து கொள்ளப்பட்டதென்று சந்தேகம் அடைகிறேன்.
ravi said…
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
TVG said…
*மாமனார் எனும் மாற்றான் தந்தை*

கண் மூடி
மண் மூடினாலும்
மெய் மூடாத
மெய்யானவர்

வாழ
வந்தவரெல்லாம்
கரை சேரும் வரை
கறை சேராமல்
வாழ்ந்தவர்

பருவம் மாறினால்
உருவம் உதிர்ந்தாலும்

அவரின்
அருவம் எப்போதும்
உங்களை
அணைத்து நிற்கும்
அனைத்துமாய்
நிற்கும்

அவர் உங்களுக்கு

மாமனாராய் வந்த
மாற்றான் தந்தை

மறக்கமுடியா விந்தை

இனி நீங்கள் தான் அவர் சிந்தை
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 203🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
Trust is earned with results, not words.

God does not expect us to solve all problems of the world. He only expects us not to create them.

People who live the most fulfilling lives are the one's who are always happy with and thankful for what they are blessed with.
ravi said…
Such a lovely city somehow is missing its karishma .. People laziness , no urge to compete or excel .

They basically want to remain in a zone of total comfort .

Rest of the BBSR during my time not developed much . It was a poverty sticken city.. not having multiplex , big malls , good roads .

Every 5 years without any invite super cyclone would peep in ... Mahanadi was always seen overflowing ..

Cuttack produces the world best doctors and also seller of silver items . Famous old HC is still existing . Britishers had no eye on odissa with the result it has not come up with any strong civil structures

The temple structures are unique and kalinga war was supposed to happen in this place and king Asoka found a new transformation in him after witnessing the rive running fiercely with blood and human bodies ...

Even since there were no much blood sheds in Bhubaneswar ... 🦋🦋🦋
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம்*🌞🌞🌞
ravi said…
🦋🦋🦋2👌👌👌
ravi said…
தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |

உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||
ravi said…
போர்க்களத்தின் வாயிலிலே,

அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார்.

அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார்.
ravi said…
இணை இல்லா ராமன் இடையில்லா சீதையை மீட்க்கும் போர் அதில் துணையில்லாமல் தவித்தான் தச முகன் 😰

மனையாள் இருந்தும் மற்றோர் மாதை மதுவென்றே நினைத்த கயவன் 😈

மதி கொண்ட சடையில் நிதியும் நதியும் தான் கொண்டவன்

தன் கண்கள் வழியே பாகிரீதியை அனுப்பினான் ..

சிறந்த பக்தன் அன்றோ சாம வேதம் யார் அறிவார்
இவன் போல் ... ??

காம்போதி சம்பு ஓதும் வேதத்திற்கு சமம் அன்றோ ...

இழப்பேனோ இவனை ... 😨

என்றே கலங்கினான் மதுரை வாழ் சொக்கன்

அதர்மம் அசோக வனமாய் பரவி படர

பஞ்சும் அஞ்சும் மெல்லடியாள் மேன்மை கொண்ட செய்தி அறிய துடித்தாள் ..

ராமன் துடித்தான் ..

விடும் அம்புகள் யாவும் ராவணன் மார்பில் உத்திராட்சமாய் விழுந்தன 🏹🏹🏹

பொதியமுனி காதி அங்கே வந்தான்...

அங்கு அனுப்பியவன் ஆடல் அரசன் அன்றோ ...

தன் அடியனை குணத்தால் பொடியனை கொல்லவே குருமுனியை அங்கே அனுப்பி வைத்தான் ... 🏹🏹🏹
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

தியானத்தில் ஒருமுகப்படுவதற்கு பெரிய இடைஞ்சல் என்ன? இந்த மனசு ஓயாமல் ஆடிக் கொண்டிருப்பதுதான். மனத்தினால்தான் எல்லா விதமான கஷ்டங்களும் உண்டாகின்றன.
ravi said…
மனத்தில் ஏற்படும் ஆசையே அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். ‘ஆசைப்படாதே’ என்று இந்த மனசை இழுத்துப் பிடித்து நிற்க வைக்க முடியவில்லை.
ravi said…
நாம் ‘ஒரு வஸ்துவை நினை’ என்று இந்த மனசிடம் சொன்னால், அது ஏதோ சொற்ப காலம் அதை நினைப்பது போல இருந்து, வேறு எங்கோ பாய்ந்து விடுகிறது.
ravi said…
தியானம், சாந்தி என்றெல்லாம் நான் உபந்நியாசத்தில் சொல்கிறபோது ஒரு க்ஷணம் உங்கள் மனம் அடங்கினாற்போல் தோன்றும், ஆனந்தமாய் இருக்கும். ஆனால் அடுத்த க்ஷணமே மனம் எங்கோ ஓடி, சாந்தி குலைந்து போகிறது.
ravi said…
பேசாமல் இரு’ என்று கட்டளை போட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டால், அது ஓரளவாவது பேசாதிருக்கிறது. ‘பார்க்காதே’ என்று உத்தரவு போட்டுக் கண்ணை முடிக்கொண்டுவிட்டால், கண் ஓரளவாவது பார்க்காமல் இருக்கிறது. ஆனால் இந்த மனத்திடம் மட்டும் ‘நினைக்காமல் இரு’ என்று எவ்வளவுதான் முட்டிக்கொண்டாலும் அது கேட்பதில்லை. நாம், ‘நினை’ என்றால் மனம் நினைக்க வேண்டும்; ‘
ravi said…
நினைக்காதே’ என்றால் நினைக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்குச் சித்த ஸ்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.
ravi said…
இப்போது பைத்தியங்கள் என்று சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் என்கிறோமே, உண்மையில் நமக்கு எவருக்குமே சித்த ஸ்வாதீனம் இல்லைதான். பைத்தியம் வாயை அடைக்காமல் பிதற்றிக் கொண்டே இருக்கிறது என்றால், நாமும் மனத்தை அடைக்காமல் அது பிதற்றல் வழியில் போகத்தான் விட்டிருக்கிறோம்.
ravi said…
நமக்குச் சித்த ஸ்வாதீனம் வந்துவிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா? எத்தனை வலி ஏற்பட்டாலும், ‘வலி என்று நினைக்காதே’ என்றால் மனம் வலியைப் பொருட்படுத்தாமல் இருந்துவிடும். எதிரிலே புலி வந்து உறுமினால்கூட மனத்திடம் ‘பயப்படாதே’ என்றால் அது பயப்படாமலே இருக்கும். இப்போது நாம் காரணமில்லாமல் அழுது கொண்டிருக்கிறோம். மனசு வசப்பட்டுவிட்டாலோ, அழுகைக்குக் காரணமாக எத்தனை துக்கம் வந்தாலும்கூட அது சிரித்துக் கொண்டிருக்கும். ஆத்திரமூட்டும்படி என்ன நடந்தாலும் அது கோபமே இல்லாமல் சாந்தமாயிருக்கும்.
ravi said…
முதலில் மனசை இப்படி அப்படிப் போகாமல், நல்ல விஷயத்தில் நினைவைச் செலுத்தும்படி செய்ய வேண்டும். எண்ணெயை விட்டால் அது எப்படிப் பிசிர் இல்லாமல் ஒரே இழையாக விழுகிறதோ (இதைத் ‘தைலதாரை’ என்பார்கள்) அது மாதிரி மனம் நல்ல நினைவில் ஒருமுகப்பட்டுச் செல்ல வேண்டும். ‘ஸ்வாமி, ஸ்வாமி’ என்ற நல்ல வஸ்துவை அப்படியே நினைத்துக் கொண்டிருக்கும்படி, மனத்தை அப்பியாசப்படுத்த வேண்டும். அதன்பிறகு ‘நினைக்கிறோம்’ என்பதும்போய், ஸ்வாமியிலேயே கலந்து ஸ்வாமியாகவே ஆகிவிடுவோம்.

இப்படி மனசை அடக்குவதுதான் ‘யோகம்’ என்பது.
ravi said…
*17 கண்ணப்ப நாயனார்*👀👀👀👀👀
ravi said…
*முதல் கண் தானம் உயிர் பிரியும் முன்னே*👀
ravi said…
lதிண்ணன் அவன் .. கண்ணன் அவன் .. பொன்னன் அவன் பொன்னம்பளத்தவன் ..

வேடன் அவன் வேண்டுவதெல்லாம் குடுமித் தேவர் நன்றாக இருக்க அல்லால் வேண்டுவது ஒன்றுமில்லை ..

எப்பவும் தருபவனுக்கே கண் தானம் செய்தான் .. தருமம் தருமத்திடமே வேண்டி நின்றது ...

காலால் உதைத்தான் புலால் வேண்டா பெம்மானுக்கே பன்னியின் கரி சமைத்தான் ..

கரி தோல் போர்த்திய பெம்மான் அம்மானிடம் தன்மான் பார்க்கா சரண் அடைந்தான்

கொட்டியது வாயின் கங்கை ...

துப்பியது அவள் தந்த மதுரம் ..

காலனை உதைத்தனால் படைத்தவன் வினை தீரவில்லை

வேடன் அன்று உதைக்கவே தீர்ந்து போனதே செய்த வினை இறைவனுக்கும்

கண்ணில் குருதி ... மெய்யில் நடுக்கம் வெயில் காயும் இறைவன் சோதித்தான்

ஒரு கண்ணை பறித்தே ஒரு பாகம் சக்தியிடம் வவ்விக்கொண்டோன்

கண்ணில் பொறுத்தியே

முக்கண்ணனை நான்கு மறை சொல்லும் நயனங்கள் கொண்டோன் ஆக்கினான் திண்ணன்

மீண்டும் குருதி அடுத்த கண்ணில் ..

அஞ்சவில்லை .. பிணி கொடுப்பவன் பிணி தீர்ப்பான் அன்றோ ...

மறு கண் துடித்ததே

முருகன் மருகன் திருமால் அழகன் 12 கண் கொண்ட மகனிடம் கேட்க வில்லை ஒரு கண் தா வென்றே ...

கேட்டான் முக்கண்ணன் திண்ணனிடம் ...

கண் தோண்ட அங்கே கருணை பீறிட்டு எழ நில் கண்ணப்ப என்றே அன்னை வந்தே

அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து நில் கண்ணப்ப என்றாள்

நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகி...

தந்தை வரும் முன்னே தாய் வந்து அணைத்தாள்..

தாயுமானவன் தன்னுள் சேர்த்தான் தனக்கே தானம் கொடுத்தவனை

கண்ணில் காரூண்யம் பெரியவாளுக்கு எப்படி என்றே யோசித்தேன் ..

விடை ஏறுபவன் நல்ல விடை தந்தான் ..

திண்ணன் தந்த இரண்டு நயணங்கள் பெரியவாளிடம் தந்து விட்டேன் அன்றே என்றே 👀👀👀👀👀👀👀👀👀
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம் மதத்தின் புனர்ஜன்மக் கொள்கைக்கு ஆதரவாக ஒன்றை அழுத்தமாகக் காட்டலாம். வெள்ளைக்காரி ஒருத்தி என்னிடம் வந்து இந்த Reincarnation விஷயத்திற்கு நிரூபணம் (proof) கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை.
ravi said…
அப்போது மடத்து முகாமில் ஒரு பண்டிதர் இருந்தார். அவருக்கு இங்கிலீஷும் வரும். அவரிடம் அவளை அங்கே உள்ள பிரஸவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோய், அங்கே பிறந்திருக்கிற குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டு வரும்படி சொன்னேன்.
ravi said…
அவளும் அப்படியே பிரஸவ ஆஸ்பத்திரிக்கு அவரோடு போய்விட்டு வந்து குழந்தைகளைப் பற்றிய குறிப்புகளைச் சொன்னாள். அதன்படி ஒரு குழந்தை கொழு கொழுவென்று இருந்தது; இன்னொன்று நோஞ்சானாக இருந்தது. ஒன்று அழகாக இருந்தது; இன்னொன்று அவலட்சணமாக இருந்தது.
ravi said…
ஒன்று உசத்தியான ‘வார்டி’ல் சௌகரியமாகப் பிறந்தது; இன்னொன்று சொல்லி முடியாத கஷ்டங்களுக்கு நடுவே ஒரு பரம ஏழைக்குப் பிறந்தது. “ஜன்மாவின் கடைசியில் பகவான் ஒருத்தரை நிரந்தர நரகத்துக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ravi said…
அது நமக்குக் கண்ணுக்குத் தெரியாத விஷயம். இப்போது பல ஜன்மங்களின் ஆரம்பத்தைப் பிரஸவ ஆஸ்பத்திரியில் பிரத்யக்ஷமாகப் பார்த்தாயே! இதில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்! ஏன் ஒன்று தாரித்திரியத்திலும் இன்னொன்று சம்பத்திலும் பிறக்க வேண்டும்? ஏன் ஒன்று ஆரோக்கியமாகவும் இன்னொன்று துர்பலமாகவும்,
ravi said…
ஒன்று லக்ஷணமாகவும் இன்னொன்று அவலக்ஷணமாகவும் இருக்க வேண்டும்? ஜீவனுக்கு ஒரே ஜன்மாதான் உண்டு என்ற உங்கள் மதக் கொள்கையை ஒப்புக் கொண்டால், அவை ஜனிக்கிற போதே இத்தனை பாரபட்சங்கள் இருப்பதைப் பார்க்கிற போது ஸ்வாமி கொஞ்சங்கூடக் கருணை அல்லது புத்திசாலித்தனம் இல்லாமல் மனம் போனபடி கன்னாபின்னா என்று காரியம் செய்து கொண்டிருக்கிறார் என்றுதானே ஆகிறது?
ravi said…
அப்படிப்பட்ட ஸ்வாமி கருணை செய்வார் என்று நம்பி எப்படி பக்தி செலுத்துவது? பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களை ஒட்டிப் புனர் ஜன்மா அமைகிறது என்ற கொள்கையைத் தவிர, நீ பார்த்த ஏற்றத் தாழ்வுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்?” என்று கேட்டேன்.
ravi said…
அவள் ரொம்ப சந்தோஷத்தோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு போனாள்.

ஆனால், நவீன காலத்தவர்களுக்கு இந்த விளக்கங்கள் (explanations) போதாது. ஸயன்ஸ்படி ப்ரூஃப் கேட்பார்கள். அப்படிப் பார்த்தாலும் இப்போது ‘பாராஸைகாலஜி’க்காரர்கள் இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி பண்ணி ஜன்மாந்தரங்கள் உண்டு என்பதற்கு ஆதரவாக அநேக விஷயங்களைச் சொல்கிறார்கள். உலகம் முழுக்க இவர்கள் சுற்றி வந்ததில் எத்தனையோ இடங்களில் பூர்வ ஜன்மாவை நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு சொன்ன பல பேர்களைப் பார்த்திருக்கிறார்கள்.
ravi said…
பூர்வ ஜன்மத்தில் இப்போதைய இடத்துக்குத் துளிகூட சம்பந்தமே இல்லாமல் வேறு எங்கேயோ இருக்கப்பட்ட தூர தேசங்களில் தாங்கள் பார்த்தவற்றை நினைவாகச் சொல்கிற பல பேர் இருக்கிறார்கள். இந்த ஜன்மாவில் கொஞ்சங்கூடச் சம்பந்தமில்லாத பலரிடம் அப்போது இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
ravi said…
அந்த விவரங்களை எல்லாம் மறக்காமல் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வது உண்மை தானா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்காக பாராஸைகாலஜிக்காரர்கள் அந்தந்த ஊர்களுக்குப் போயிருக்கிறார்கள். போனால் அங்கே ஆச்சரியப்படுகிற மாதிரி இவர்கள் சொன்ன அடையாளங்களை, இவர்கள் பூர்வத்தில் சம்பந்தப்பட்டிருந்த மநுஷ்யர்களைப் பார்க்கிறார்கள்.
ravi said…
இது மாதிரி ஒன்று, இரண்டு அல்ல. ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன. நமக்கெல்லாம் முற்பிறவி சமாச்சாரங்கள் அடியோடு மறந்து போய்விட்டன.
ravi said…
ஆனால், வெகு சிலருக்கு நினைவு இருக்கிறது. அநேகமாக இப்படிப்பட்டவர்கள் பூர்வ ஜன்மத்தில் இயற்கையாகச் செத்துப் போகாமல் (natural death) அதாவது, நோய் நொடி வந்து செத்துப் போகாமல், கொலை செய்யப்பட்டவர்களாகவோ அல்லது திடீரென்று ஒரு விபத்திலே சிக்கிக் கொண்டு அப்போது மரணமடைந்தவர்களாகவோ இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ravi said…
*அபிராமியின் சமயம் நன்றே ...*🌷🌷🌷🦚🦚
ravi said…
நம் சமயங்களில் நமக்கு கிடைத்த சுதந்திரம் போல் வேறு எந்த சமயத்திலும் இல்லை ..

இறைவன் சட்டையை பிடித்து உலக்கி கேள்வி கேட்கும் உரிமை நமக்கு மட்டுமே உண்டு ..

இன்று சில மகான்கள் இறைவனை உலுக்கி பழிகளை அவன் மீதே போட்ட பாடல்களில் சில வற்றை பார்ப்போமா ? 💐💐💐
ravi said…
1. *அபிராமி பட்டர்*🌷🌷🌷
ravi said…
*பாடல் 36*

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு

அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு

*மேல் இவற்றின்*
*மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று*

அம்மா உன் அடித்தாமரைகள் உன் விழியின் கடை இருந்தும் நான் திருந்தாமல் உன்னை வணங்காமல் இருந்துவிட்டால் அது என் குறையே உந்தன் குறை இல்லை என்கிறார் ..

இப்படி சொன்னவர் 72வது பாடலில் ஒரு பெரிய *U* turn செய்கிறார்

என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் *இனி யான் பிறக்கின்*
*நின் குறையே அன்றி யார் குறை காண்*

அம்மா இனி எனக்கு பிறவியை வேண்டாம் என்று எப்பவோ உன்னிடம் விண்ணப்பம் செய்தான் அதை சரியாக காதில் வாங்கி கொள்ளாமல் பிறவி வேண்டும் என்று கேட்டதை போல் என்னை மீண்டும் இந்த பூமியில் படைத்தால் அது உன் குறை தான் வேறு யார் குறையும் இல்லை ....

நீ ஒரு *செவிடு* என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமா ? என்கிறார் ...

எவ்வளவு உரிமை பாருங்கள் ?!!

அன்னை என்றவுடன் உரிமைகள் நமக்கு எங்கிருந்தோ வந்து விடுகின்றன
ravi said…
*சரி சுந்தரர் என்ன சொல்கிறார் எப்படி திட்டுகிறார் பார்ப்போம்* 🌷🌷🌷
ravi said…
*திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்*
ravi said…
சுந்தரர் மன்னர்களிடம் பாடிவிட்டு பல விலை உயர்ந்த பரிசுகளை பெற்றுக்கொண்டு திருமுருகன் பூண்டி வழியாக அருகில் இருக்கும் அவிநாசி நாதரை பார்க்க செல்கிறார் .. திருமுருகன் பூண்டி முருகனாதேஸ்வரரை பார்க்காமல் செல்லும் சுந்தரருக்கு ஈசன் பாடம் கற்பிக்க நினைத்தான் .. தன் பூத கணங்களை குரவர்களாக அனுப்பி சுந்தரர் வைத்திருந்த பொருள்களை எல்லாம் பறித்துக்கொண்டான்

சுந்தரர் பணம் பொருள் போனதை பற்றி கவலைப்படவில்லை .. ஈசன் காவல் காக்கும் ஊரில் இப்படி law and order கெட்டுப் போய் விட்டதே என்று கோபம் கொண்டு இப்படி பாடுகிறார்

வேதம் ஓதி வெண்ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே

ஓதம் மேவிய ஒற்றியூரையும்

உத்திர நீர்மகிழ்வீர் மோதி

வேடுவர் கூறை கொள்ளும்

முரு கன்பூண்டி மாநகர்வாய்

ஏது காரணம் ஏது காவல் கொண்டு *எத்துக்கு இங்கிருந்தீர்* எம்பெருமானீரே.

எதற்கு இருந்தீர் என்று கொஞ்சம் பணிவாக கூட கேட்கவில்லை .. எத்துக்கு இருந்தீர் என்கிறார் ...

உன் வேலை ஊர் காவல் காப்பது ... உன் கண் முன் என் பொருள்கள் எல்லாம் களவாடி போயின ... சட்டம் ஒழுங்கு ஒன்றும் பார்க்காமல் நீ அணிந்து இருக்கும் முல்லை மலர்களின் வாசனை / சுகந்தம் தனை அனுபவித்துக்கொண்டு why the hell you are here என்கிறார் ?
ravi said…
சுந்தரர் மேலும் திட்டுகிறார் ..

உன் கால் என்ன ஊனமா ?

போய் காவல் காக்க வண்டி இல்லையா ?

அதோ அங்கே உன் ரிஷபம் புல்லை மேய்ந்து கொண்டருக்கிறதே...!!

அதில் ஏறி ஊர் எல்லையை காவல் காக்காமல் why the hell u are here ? இப்படி தன் துணைவி கூட ஈசனை திட்டியதில்லை
ravi said…
*சரி காளமேகம் எப்படி திட்டுகிறார் என்று பார்ப்போம்*
ravi said…
காஞ்சிபுரத்தில் விநாயகர் உற்சவம்.

பெருச்சாளி மூஞ்சூறு வாகனத்தில் உலா வந்தார் பிள்ளையார்.

அதைப் பார்த்த காளமேகம் வியப்போடு பாடுகிறார்

உலகத்துக்கே முதல்வனான சிவபெருமானின் ஆயுதம் ‘ *மழு* ’, ’

முராரி ’ எனப் புகழ் பெற்ற திருமாலின் ஆயுதம் *திருச் சக்கரம்,* பிரமனின் ஆயுதம் *கதை* …

இப்படி மும்மூர்த்திகளும் ஆளுக்கு ஒரு பெரிய ஆயுதம் வைத்திருந்து என்ன புண்ணியம்?

பெரிய, வலிமை மிகுந்த யானையை இங்கே ஓர் எலி இழுத்துக்கொண்டு செல்கிற ஆச்சர்யத்தைப் பாருங்கள்,

இதை அவர்களால் தடுக்கமுடியவில்லையே!
ravi said…
மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்

பாப்பான் கதையும் பறிபோச்சோ – மாப்பார்

வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ

எலி இழுத்துப் போகின்ற(து) என்!
ravi said…
*பாப்பான்* என்றால் பிரம்மன்
ravi said…
சட்டம் ஒழுங்கு இல்லை என்றால் ஒரு பெரிய யானையை ஒரு எலி கூட இழுத்துச் செல்லும் என்பது இதன் உட்கருத்து ...

இவரும் மும்மூர்த்திகளை வாங்கு வாங்குவென்று வாங்குகிறார்

எல்லா வற்றிற்கும் அடிப்படை பக்தி சரணாகதி .. இறையிடம் நாம் உள் அன்புடன் எடுத்துக்கொள்ளும் உரிமைகள் ... 🪔🪔🪔🙏
ravi said…
ராம ராம மஹா பாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |

ஏன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி || 3 ||🌞🌞🌞🌞🌞🌞🌞
ravi said…
பலமான ஆயுதம் பொருந்திய ராம பிரானே,

சத்ருக்க்ளை தோற்கடித்து போரில் வெல்வதற்கான நிரந்தரமான தீர்வை உனக்கு இப்போது சொல்கிறேன்.🙏🙏🙏
ravi said…
விஜய லட்சுமியை மீட்க விஜயம் செய்துள்ளாய் ராமா இலங்கைக்கே ..

ஜயம் கொண்டவன் பல களம் கண்டவன் ..

ஈசனை தினம் வலம் வருபவன் ...

வளம் நிறைந்தவன் மனதில் தடம் புரண்டு போனான் ..

சடை கொண்டவனாலும் அவனை இனி கடை ஏற்ற முடியாது ..

அன்னம் நடை பயிலும் அன்னை தனை மீட்க தசமுகன் ஒரு முகம் கூட இல்லாமல் செய்ய ஒரு உபாயம் சொல்கிறேன்

குரு முனி நான் .. சொல்வது நெடு மொழி

அதுவே இனி வரும் சந்தையர்க்கு நிரந்தர வழி ..

கேள் ராமா ... கேள்வியின் நாயகனே கேள் ... 🌞🌞🌞
ravi said…
கைகளில் மலர் ஏந்தி காளி வந்தாள்

கங்கை கரையோரம் நீலி வந்தாள்

மை நிறத்து பேரழகி நேரில் வந்தாள்

மலரடிகள் நோகும் படி அருள வந்தாள்

ஓடமெல்லாம் ஓயிந்திருந்த நதியோரம்

வேத மொழி முழங்குகின்ற கரையோரம்

தேகம் தனை இழந்த மகள் செல்லும் நேரம்

தேவ தேவி அருகில் இருந்தாள் வெகு நேரம்

மங்கை இவள் வாழ்ந்திருந்த விதம் பார்த்து

கங்கையிலே அவள் கரையும் தினம் பார்த்து

எங்கள் அன்னை நேரில் வந்தாள் இடம் பார்த்து

எங்கும் அவள் ஆகி இருந்தாள் ஒளி பூத்து 🌷🌷🌷
ravi said…
*இனிய குடியரசு திருநாள் வாழ்த்துக்கள்* 🪔🪔🪔
ravi said…
*18 - கலிய நாயனார்*🇨🇮🇨🇮🇨🇮
ravi said…
திருவொற்றியூர் திருநிறை கண்டது திருநீறு பூசும் திருவடியார் தனைக்கண்டு ...

ஆலயங்களில் விளக்கேற்றி இறைவன் திருமுகம் அனைவரும் காண தினம் பாடுபட்டார் ...

பொருள் செல்வம் குறைய அருள் செல்வம் அதிகரித்ததே ...

ஏழை ஆனாலும் எடுத்தபணி விடாமல் செய்தார் ...

ஸ்ரீ லலிதன் விளையாட்டை ஆரம்பித்தான் ...

எண்ணெய் வாங்க காசு இல்லை ..

மண்ணில் செல்ல மார்க்கம் உண்டு ...

ஈசன் திருமுக ஒளி காணாமல் ஈசல் போல் வாழ மாட்டேன் என்றே கழுத்தை அறுத்து விழும் குருதியில் விளக்கேற்ற

அரிந்தே வாழும் ஈசன் ஓடி வந்தான் ..

விண்ணில் வானவர் பூமழை பொழிய தன் விடை தனில் கடை தந்தான் கலிய நாயனார்க்கே 🪔🪔🪔

விளக்கேற்றும் நேரமதில் வழித் துணையாய் வருபவன் கலிய நாயனாரை தன்னுள் கொண்ட காஞ்சி பெரியவாளே என்றால் கடுகளவும் ஐயம் உண்டோ இனி வாழ்வதற்க்கே 🪔🪔🪔
ravi said…
உழைதரு நோக்கியர் கொங்கை, பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்,
விழைதருவேனை விடுதி கண்டாய்? விடின், `வேலை நஞ்சு உண்
மழைதரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய் மதியன்
பழைதரு மா பரன்' என்று என்று அறைவன்,
ravi said…
6. நீத்தல் விண்ணப்பம்

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின் வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் றறைவன் பழிப்பினையே.

பதப்பொருள் : உழைதரு நோக்கியர் - மான் போன்ற பார்வையுடைய பெண்டிரது, கொங்கை - கொங்கையின்கண், பலாப்பழத்து - பலாக்கனியில் மொய்க்கும், ஈயின் ஒப்பாய் - ஈயை ஒத்து, விழை தருவேனை - விரும்புகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ? விடின் - விட்டுவிடுவாயாயின், வேலை நஞ்சு உண் - கடல் விடமுண்ட, மழைதரு கண்டன் - மேகம் போன்ற கருமையான கழுத்தையுடையவன், குணம் இலி - குணம் இல்லாதவன், மானிடன் - மனிதன், தேய் மதியன் - குறைந்த அறிவுடையவன்; பழை தரு மாபரன் - பழைய பெரிய பரதேசி, என்று என்று - அடிக்கடி, பழிப்பினை - உன் இகழ்ச்சியை, அறைவன் - எடுத்துச் சொல்வேன்.

விளக்கம் : மானைப் போன்ற மருண்ட பார்வையுடையவராதலின் பெண்டிரை, 'உழைதரு நோக்கியர்' என்றார். ஈ, பலாப்பழத்தில் மொய்த்து மீள முடியாதது போல, யானும் மாதராரது கொங்கையில் விருப்பம் வைத்து மீள முடியாதிருக்கின்றேன் என்பார், 'கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய் விழைதரு வேனை' என்றார்.

மழைதரு கண்டன் முதலியன நிந்தாஸ்துதி (பழிப்பது போலப் புகழ்வது). பழிப்புப் பொருள் முன் சொல்லப்பட்டது. புகழ்ப் பொருள் பின் வருமாறு:

மழைதரு கண்டன் நீலகண்டன். இது கருணையைக் காட்டுகிறது. குணமிலி என்பது, முக்குணங்களையும் கடந்தவன் என்பதைக்
ravi said…
தாரகை போலும் தலைத் தலை மாலை, தழல் அரப் பூண்
வீர, என் தன்னை விடுதி கண்டாய்? விடின், என்னை மிக்கார்
`ஆர் அடியான்' என்னின், `உத்தரகோசமங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான்' என்று, நின்னைச் சிரிப்பிப்பனே.
உரை

`சிரிப்பிப்பன், சீறும் பிழைப்பை; தொழும்பையும் ஈசற்கு' என்று
விரிப்பிப்பன்; என்னை விடுதி கண்டாய்? விடின், `வெம் கரியின்
உரிப் பிச்சன், தோல் உடைப் பிச்சன், நஞ்சு ஊண் பிச்சன், ஊர்ச் சுடுகாட்டு
எரிப் பிச்சன், என்னையும் ஆளுடைப் பிச்சன்' என்று ஏசுவனே.
உரை

ஏசினும், யான், உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்? செம் பவள வெற்பின்
தேசு உடையாய்; என்னை ஆளுடையாய்; சிற்றுயிர்க்கு
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 204🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
Difficult road often leads to beautiful destinations.

It’s not about having the right opportunities. It’s about handling the opportunities right.

Tomorrow is never promised. So love and appreciate the people in your life today.

More is lost by infection than wrong decision
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 110* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 23👍👍👍
ravi said…
த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்த்தம்

ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம்

ஸகல மருணாபம் த்ரினயனம்

குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம் 23🦋🦋🦋
ravi said…
சிவனும் சக்தியும் ஒரே உடலின் வலது பாகமும் இடது பாகமும்.

சிவனுடைய பாகம் வெளுப்பு, சக்தியின் பாகம் சிவப்பு.

ஆனால் தேவியின் உடல்முழுதும் சிவப்பாகவே காணப்படுவதாலும், மூன்று கண்களும் கிரீடத்தில் சந்திர கலையும் தோன்றுவதாலும்,

பாதி உடலைக் கொண்டதில் திருப்தி அடையாமல் முழுவதையும் தன்மயமாகவே ஆக்கிக்கொண்டுவிட்டாள் என்கிறார் ஆச்சரியார் . எவ்வளவு கற்பனை வளம் பாருங்கள் ... அவள் அருள் இருந்தால் தான் இப்படி எல்லாம் சொற்கள் கிடைக்கும்

சிவன் சக்தியியின் வடிவத்தில் மறைந்து போகிறான்.

இதனால் சக்தியைப் பூஜை செய்தால் சிவபூஜை செய்ததாகிறது.

*‘உத்தரகௌலம்* ’ என்ற மதத்தில் தனியாகச் சிவபூஜை இல்லை.

சக்தியிலேயே சிவன் ஐக்கியம்;

அவனுக்குத் தனிவடிவமும் இல்லை, தொழிலும் இல்லை.🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 110* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
*31* कनकाङ्गदकेयूरकमनीयभुजान्विता - *கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா* -🙏🙏🙏
ravi said…
அம்பாள் அணிந்துள்ள கேயூரம் எனும்
*தோள் வளை* எப்படி கண்ணைப் பறிக்கிறது பார்த்தீர்களா?

இப்போது இம்மாதிரியான ஆபரணங்கள் வழக்கத்தில் இல்லாத ஒரு நாகரீகம் நம்மை ஆக்ரமித்துவிட்டது.
ravi said…
*கனகாங்கத* = தங்க வளையல் -

*கனக* என்றால் தங்கம்

*கேயூர* = வங்கி (புஜங்களில் அணியும் அணிகலன்)

*கமனீய* = ரம்யமான புஜ = கைகள்

*அன்விதா* = அதனுடன் -
கூடிய

*31 கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா* =

தங்க வளையலும் வங்கியும் அணிந்தலங்கரிக்கும் ரம்யமான கைகளை உடையவள் 🇨🇮🇨🇮🇨🇮

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53