அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 28 பதிவு 24
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 28
பதிவு 24
கேள்வி பதில் நேரம்
பதிவு 24 🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
கேள்வி 28
நான் :
பட்டரே! நேற்று அன்னையின் தரிசனம் கண்டபின் ஒன்றுமே தேவை இல்லை என்ற மன நிறைவு ஏற்பட்டு விட்டது ...
பட்டர் இதுதான் பிரமாண்டம் இதுதான் முக்திநிலை இதுவே சாஸ்வதம் ... இனி எதுவுமே கால் தூசியாகத் தான் தெரியும் ...
பட்டர் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன் .
என்னிடம் உன்னை மாதிரி ஒருவர் கேள்வி கேட்டார் ...
நித்தியம் த்ருப்தியாக இருப்பவள் அம்பாள்
ஆனால் அது எப்படி அவள் நாமம் ஆகும் ?
நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பது என் குணா அதிசயங்களில் ஒன்று
ஆனால் அப்படி இருப்பது என் பெயராக இருக்க முடியாதே ...
நான்...
எனக்கும் அதே சந்தேகம் ..
லலிதா சஹஸ்ரநாமத்தில் அவள் குணாதிசயங்கள் நாமங்களாக வருகின்றன ...
ராஜ்ய வல்லபா , ராஜ்ய தாயினீ , சௌபாக்கிய தாரிணீ ... இப்படி பல நாமங்கள் ...
அவள் தயா குணத்தையும் காரூண்யத்தையும் குறிக்கும் ..
எப்படி நாமங்களாக முடியும் ... ?
1000 நாமங்களில் இப்படிப்பட்ட குணம் ஒட்டிய நாமங்களை சேர்க்கலாமா ?👌👌👌
பட்டர் ... இது தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் இருக்கும் பேரதிசயம் பேரானந்தம் ...
அந்த நாமங்களை தினம் தினம் உச்சரிப்பதால் அந்த குணாதிசயங்கள் சொல்பவர்களுக்கும் வந்து விடும் ...
தினமும் நித்ய த்ருப்தா என்று சொல்லிக்கொண்டிரு .. அதிருப்தியே எதிலும் வராது ..
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தியின் திரு தங்கச்சியின் அருளால் 🥇
நீ அந்த நாமமாகி விடுவாய் ...
அந்த நாமங்கள் மூலம் அவள் நமக்கு அளிப்பது அந்தந்த குணாதிசயங்களை ...
கருணா ரஸ சாகரா ... சொல்லிக்கொண்டே இரு ..
உன்னிடம் இருக்கும் விருப்பு வெறுப்பு உன்னை விட்டு போய் விடும் ...
அவளும் இன்னொரு பிறவி என்று ஒன்று கொடுத்து உன்னை தண்டிக்க மாட்டாள் ...
நான்
பட்டரே .. அருமை ... தினம் தினம் கற்பது அவள் நாமம் என்று தாங்கள் சொன்னது எவ்வளவு உண்மை ... சத்தியம் .
பட்டர் ... விழிக்கே அருள் உண்டு வேதம் சொன்ன வழிக்கே வழிபடும் நெஞ்சுண்டு எமக்கு ....
சொல்லிக்கொண்டே பௌர்ணமி நிலவில் கரைந்து போனார் ...
நேற்றைய பரவச எண்ணங்களில் நானும் மூழ்கி போனேன்
🙏🙏🙏🥇🥇🥇👏👏👏
Comments
அந்த நாமங்கள் மூலம் அவள் நமக்கு அளிப்பது அந்தந்த குணாதிசயங்களை ......
ஆஹா...என்ன அருமையான விளக்கம்...
தினந்தோறும் அவள் நாமம் கூறுவோம்..
பிறவிப்பிணியிலுருந்து அகலுவோம்...
🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம்🌷🌷🙏🏻
[5/7/2021, 12:10 pm] Shivaji L&T C: Sree Mathre Nama 🌹🌹🌹🙏🙏
(My experiences... Ravi ...Episode 207🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*7th Assignment - Powai*
Not everything that is faced can be changed, but nothing can be changed until it is faced.
A situation which was not liked by both the partners ...
Tata steel insisted there should be a dedicated berth for their shipments and their ships to be given priority in the Q to get navigated to berth ....
Unless O&M contact was signed amicably , banks were not looking into any other comforts .
Besides TS objected L&T 's EPC contact which was a cost plus contact .. Anything L&T C bills that plus a margin ranging from 18% to 28% ...
In their view L&T was attempting to take away their equity in the form of EPC an unsustainable contract even before berths had taken births ....🙏
All along i hv been narrating including puri Jagannaath ... You are asking powai or bbar ...
One person was attending Ramayana discourse regularly without any break .. He came first everyday and occupied the front row , 10min prior to the pandit's presence . The pandit who was narrating Ramayana was astonished about this person's ( not very old , he would be of your age only) .. devotion and interest ..
On final day , while completing Ramayana the pandit conducted Q & A ... He asked the audience his first quest who was sita to rama ... Our young person raised his both the hands .. the pandit was spell bound , overwhelmed ...
Yes young man ... Answer ..
"Panditji Rama is Sita's father 's own brother ... "
The pandit breathed his last ..... 😂
*பதிவு 113* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 23👍👍👍
ஶரீரார்த்தம்
ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம்
ஸகல மருணாபம் த்ரினயனம்
குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம் 23🦋🦋🦋
*த்வத் ரூபம்* - உன் ரூபம்;
*ஸகலம் அருணபம்* -
முழுவதும் சிவப்பான நிறத்துடன்;
*த்ரிநயனம்* - முக்கண்களுடன்;
*குசாப்யாம்* - ஸ்தனங்கள்;
*அநம்ரம்* - வளைந்த;
*குடில-சசி-சூடால மகுடம்* - பிறைச் சந்த்ரனை சூடிய மகுடம்;
*வாமம் வபு:* சரீரத்தின் இடது பகுதி;
*அபரி த்ருப்தேன* - முழுமையான த்ருப்தியில்லாத;
*அபரம் சரீரார்த்தம் அபி* - சரீரத்தின் இன்னொரு பாதியும்;
*ஹ்ருதம் அபூத்* - கொள்ளப்பட்டது;
*சங்கே* - சந்தேகம்
*பதிவு 113* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
*ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா -*
உலகின் விலையுயர்ந்த எந்த நகைக் கடையிலும் காணமுடியாத அற்புத நெக்லெஸ் அம்பாள் அணிந்து கொண்டிருக்கிறாளே.
சிப்பியிலிருந்து வெளிவந்த நல் முத்துக்கள்,
நவமணி முத்து மாணிக்கங்கள் கோர்த்த தேவலோக நகைச் சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான நகாஸ் வேலைப்பாடு மிக்க ஆபரணம் அம்பாளிடம் வந்தபிறகு மேலும் அழகு பெறுகிறது.💐💐💐
*பதக்கமாலை* - ஹாரம்
*சிந்தாக* = ஓயாது /
அலைகழிக்கப்படுவது
*லோல* = ஆடும் - இங்குமங்கும் ஆடுதல்
*முக்தபல்* = முத்துகள்
*அன்விதா* = சேர்ந்த - கூடிய
*32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா =*
முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள்.
" *லோல* " என்ற சொல்லுக்கு ஆடுதல் என்று பொருள்.
" *லோலக* " என்றால் பதக்கம் என்று கொள்ளலாம்.
‘ *லோலக* ' என்று பொருள் கொண்டு முத்துமாலையுடன் கூடிய ரத்தினங்களாலான பதக்கம் அசைந்தாடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்
*காரிக்கும் அடியேன்*
திருத்தொண்டத் தொகை
அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து
சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற்
*காரிகோவை* என்ற நூலினை இயற்றித்
தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனரே.
பெற்ற செல்வம் பிழை ஒன்றும் இல்லா கழலடி நாடும் பக்தர்க்கே என்றே அள்ளி அள்ளி செலவு செய்தனரே ...
துள்ளி துள்ளி ஓடும் மானை தன் கரங்களில் எந்தியவன்
மான் விழி கொண்ட மங்கை தனை தன் வேல் விழியால் வென்றவன்
காரியைகண்டே பாரியும் தோற்றான் என்றனரே...
நரியை பரியாக்கியவன் நயந்து உரைக்க
உள்ளமெல்லாம் உவந்து போக
எரியும் தீபம் அதில் ஒளியாய் கலந்தனரே ...
காரியை கரியாக்காமல் சரியாக்கி ஈசனும் தன்னுள் சேர்த்தனரே
சேர்த்த ஈசன் மீண்டும் தவழ விட்டான் காஞ்சி தனில்
கற்பகமாய் காமதேனுவாய் , கற்கண்டாய் காரி உருவெடுத்தான் தண்டம் சுமந்தே சுவாமி நாதனாய் ...
கரும்புக்கும் சுவை சேர்த்தான் ...
கற்கண்டுக்கும் கனம் சேர்த்தான் ..
சர்க்கரை பொங்கலில் நெய்யானான் ...
சாரும் அடியார்க்கு பிணி தீரும் மருந்தானான் ... இன்றும் என்றுமே👏👏👏
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
–குழைத்தபத்து, திருவாசகம்
அது என்ன வேண்டத் தக்கது ... அப்படி என்றால் வேண்ட தகாததை நாம் வேண்டி கேட்போமா ?
ஏன் மணி வாசகர் பட்டரைப் போல்
குழப்புகிறார்.. ?
எனக்கு வேண்டும் என்று தனியாக பட்டியல் ஒன்றும் இல்லை ...
எனக்கு நீ ஒருவேளை அந்த உரிமை கொடுத்திருந்தால் நான் அதை துஷ் பிரயோகம் செய்திருப்பேன் ...
அழியும் , நிலை இல்லா
பொருள்களையே உன்னுடம் கேட்டிருப்பேன் ...
அழியா முத்தியும் வீடும் அன்றோ நீ எனக்கு தருகிறாய் ...
இதை விட என் சிற்றறிவு சிறப்பான ஒன்றை உன்னிடம் கேட்டு இருக்குமா ?
நிச்சயம் இல்லை ... என்று சொல்கிறார் 👍👍👍
ஒரு மரத்தின் நிழலில் படுத்துக் கொண்டு சிந்திக்கத் துவங்கினான்.
அடடா! இங்கு மட்டும் ஒரு மெத்தை இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைத்தான்.
அடுத்த கணத்தில் அவன் உடல் மெத்தை மீது இருந்தது.
அவனுக்கு ஒரே ஆச்சரியம்;
சிறிது நேரம் அதில் விழுந்து புரண்டு ஆனந்தித்தான்.
அடடா! இப்போது மட்டும் என் உடல் வலி தீர ஐந்தாறு அழகான பெண்கள் வந்து என் கால்களைப் பிடித்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.
அடுத்த நொடியில் அங்கே சில அழகிகள் வந்து அவனுக்கு ‘மஸாஜ்’ செய்யத் துவங்கினர்.
சிறிது நேரம் ஆனபின்னர் பசி, வயிற்றைக் கிள்ளியது. நல்ல அறுசுவை உண்டி கிடைத்தால் சுகமாக இருக்குமே என்று நினத்ததுதான் தாமதம்!
ஆவி பறக்க அறுசுவை உண்டி கிடைத்தது.
எல்லா தேவைகளும் கிடைத்துவிட்டால் தேவையற்ற பயம் வந்துவிடும்.
அதை யாராவது வழிப்பறி செய்துவிடுவானோ என்று நகைகளை எடுக்கும் போது பயம். வீட்டில் அரிசிப் பானைக்குள் நகைகளை வைத்தால் Metal Detector மெடல் டிடெக்டர் வைத்து எடுத் துக்கொண்டு போய்விடுவானோ என்று பயம்!
இது போலவே அந்த வழிப்போக்கனுக்கும் வேண்டாத ஒரு பயம் வந்தது
அடடா! நம் நடுக்காட்டில் அல்லவா மரத்துக்கு அடியில் படுத் துக் கொண்டிருக்கிறோம்
இப்போது ஒரு புலி வந்து நம்மை அடித்துக் கொன்றுவிட்டால் நான் என்ன செய்வது என்று நினைத்தான்.
அடுத்த வினாடி, புலி தோன்றி அவனைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டது.
நாம்தான் கேட்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
மணி வாசகர் இதைத்தான் சொல்கிறார்
பூஜ்யஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||🌞
தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் படுகிறார்.
திவ்யமான ஒளியின் வண்மையால் அண்ட சராசரத்திற்க்கும் அதிபதியாக விளங்குகிறார்.🌞🌞🌞
அன்னையின் கருணை எல்லா உயிருக்கும் உயிர் கொடுக்க
இருள் எனும் அசுரன் இயற்கை எய்த
ஞானம் எனும் பூங்காற்று பூமிதனில் தவழ்ந்து வர
பொன்னார் மேனியன் தக தக வென்று தினம் தினம் பிறப்பெடுத்தே
அன்னையின் சீமந்த வகுடு தனில் தவழ்ந்து வளர்கிறான் பால சூரியனாய்
உச்சித் திலகமாய்
உதிக்கின்ற செங்கதிராய்
உழைப்போர்க்கு ஊதியம் தருகின்றான் தன்னலம் பார்க்கா பாஸ்கரன் தினம் தினமே
கரும்பு தின்ன கூலியோ கலி தீர அவன் வரவை வழி பட வேண்டாமோ ? 💐💐💐
அமுதம் தேவர்களும் அசுரர்களுக்கும் மட்டுமின்றி பக்தியுடன்வந்து தொழும் அடியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே அவன்நோக்கம்.பிஞ்சிலம் என்றால் ஜாதிப் பூ என்று பொருள். இதுவே அமிர்தகடம் ஸ்தாபனம் ஆனதால் திருகடவூர் என்று ஆனது.
கர்மத்தின் மேலுள்ள பிடிப்பால், தர்மத்தின் மீது பாசம் வீசலாமா என்பதை சிவபெருமான் உலகுக்கு எடுத்துக் காட்டிய அருள் விளையாடலில் தான் எத்தனை சூட்சுமம்!
//திரும்ப வந்து பார்த்தபோது அமிர்தகடமானது சிவலிங்கமாக உருவெடுத்துப் //
அமிர்த கடம் லிங்கமாக ஆகிய பின் அமிர்தம் வழங்கல் எப்படி நடைபெற்றது?
இல்லை அமிர்தம் கொண்டுள்ள கடம் மட்டும் சிவலிங்கம் ஆனதா ??
ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற தண்ணாளாகவும் "' திகழும் அபிராமியை போற்றி மாறாத பக்தியுடன் வணங்கியவர் சுப்பிரமணிய சர்மா.அவருக்கு காணும் பெண்கள் எல்லாரும் அபிராமிதான்.ஆனால் இவர்மீது பொறாமை கொண்ட சிலர் இவரைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பினார்கள்.
தன்னிலைக்கு வந்த சர்மாவும் விபரீதத்தின் தன்மையை உணர்ந்தார் .
"விழிக்கே அருளுண்டு, அபிராமவல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்க,
பழிக்கே சுழன்று,வெம்பாவங்களே செய்து,பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே""
என்ற பாடலைப் பாடியதும் அந்த அதிசயவல்லி தன் தாடங்கத்தைசுழற்றி வானில் வீசினாள்.ஈஸ்வரியின் இரு காதுகளில் இருக்கும் தாடங்கள்தான் சூர்யனும் சந்திரனும் என்று ஆதிசங்கரர் அம்பாளை வர்ணித்ததுபோல அந்தத் தாடங்கம் வானவீதியில் பௌர்ணமி சந்திரனாக ஒளிவீசியது..
உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்
என்ற அம்பாளின் நாமத்தை எப்படி பட்டரும்,சங்கரரும் லலிதா ஸகஸ்ரநாமத்திலும் அனுபவித்தார்கள் என்று நாளை பார்க்கலாமா
அவள்தானே நாமரூபா.
எல்லா வார்த்தைகளும் அவளிடமிருந்துதான் உருவாகின.
காளிதாசன் கூறும் போது வாகர்த்தாவி வசம் விருக்த்தவ் வாகர்த்த பிரபத்தியே,
வார்த்தைகளும் அதிலிருந்து வரும் பொருளும் நீதான் என்கிறார்.
முதல் நாமவாக உதயத்பானு ஸ்கஸ்ராபா என்ற நாமத்தை எடுத்துக்கொள்ளலாம்.
அம்பிகையின் முகத்தைவர்ணிக்கும் எல்லோரும் இதை கையாண்டு இருக்கிறார்கள்.
அம்பாளுடைய முகாரவிந்தம் எப்படி இருக்கும் தெரியுமா? ஆயிரம் சூரியர்கள் விடிகாலையில் உதிக்கும் போது அதன் கிரணங்கள் எப்படி சிவப்பு வர்ணமாக இருக்குமோ அப்படி இருக்குமாம்.
இதென்ன எப்படி சூரியனைப் போலும் சந்திரனைப் போலும் இருக்குமா ஒருவரது முகம் முரன்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா?
மகிஷாசுரன், மதுகைடபன், போன்ற அசுரர்களை வதைக்கும்போது உக்கிரமாக சிவந்து உத்யத்பானு ஸ்காஸ்ராபாவாக இருக்கும்.அபிராமி பட்டர்,போன்ற அடியார்களை காக்கும் போது ஸ்ரஸ்ச்ந்திர நிபானனாவாக இருக்கும்
மீனாக்ஷியம்மனின் முகம் எப்படி இருக்கிறதாம் ஆயிரம் உதயசூரியன் உதிக்கும் போது ஏற்படும் பிராகாசமாக இருக்குமோ அப்படி.
அபிராமபட்டரும் லேசுபாட்டவரா அம்பிகையின் மீது அந்ததாதி பாடுபோது முதல் படலிலேயே முதல் வரியே""உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமுடையாய்"",
அபிராமியின் முகத்தில் இருக்கும் திலகம் எப்படி இருக்கிறதாம் தெரியுமா?
காலையில் உதிக்கின்ற கதிரவன் எப்படி சிவந்து சிவப்பாகாக இருக்குமோ அதுபோன்று அவளுடைய திலகம் ஒளிர்விடுகிறதாம் அப்படியென்றாள் அம்பாளின் முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்
இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.
இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது.
அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.
மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"
அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்
என்று கூறுகிறார்.
இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்
நாளை இன்னுமொரு நாமத்தைப்
*பதிவு 128* 👏👏
12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
*45. தாதுருத்தமாய நம: (Dhaathuruthamaaya namaha)* 🪔🪔🪔
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |
அநாதி நிதனோ
தாதா
விதாதா *தாது ருத்தம:* ||5
நாரதரின் ஆலோசனைப் படி பிரம்மா, “யார் மூவுலகையும் முதலில் சுற்றி வருகிறார்களோ
அவர்களுக்குத் தான் பெண் கொடுப்பேன்!” என்று கூறிவிட்டார்.
இந்திரன் ஐராவதத்தின் மேல் ஏறினான், அக்னி பகவான் ஆட்டின் மேலும், வருண பகவான் முதலையின் மீதும்,
வாயு பகவான் மானின் மீதும் ஏறி மூவுலகைச் சுற்றினார்கள்.
அதற்கு விபீஷணன் இராமனை வணங்கி, "ஐயனே! இன்றே விரைந்து சென்று சேரும்படியான விமானம் இங்கே இருக்கிறது.
வள்ளலே! இந்த விமானத்தை குபேரனிடமிருந்து இராவணன் கவர்ந்து கொண்டான்.
இந்த விமானம் எழுபது வெள்ளம் பெரும் சேனை ஏறி அமர்ந்தாலும் தளராது பறந்து செல்லக் கூடியது,
நீ இதில் ஏறி உட்கார்ந்து இன்றே அயோத்தி போய்ச் சேர்ந்துவிடலாம்" என்றான்.
விபீஷணன் குறிப்பிட்ட அந்த குபேரனுடைய புஷ்பக விமானம் வந்து சேர்ந்தது.
விமானத்தில் இராமனுடன், சீதையும், இலக்குவனும் அமர்ந்து கொள்கிறார்கள்.
இராமன் விபீஷணனிடம், "விபீஷணா! உன்னைச் சார்ந்தவர்களுக்கு இனிய செயல்களனைத்தையும் செய்துவிட்டு, யாவரும் பாராட்டி புகழும்படி நல்லாட்சி புரிவாயாக!" என்று ஆசி வழங்கினான்.
*பதிவு 113*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்
*பொருளுரை*
फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो
प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।
कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां
निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥
ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴
ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।
கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்
நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥
ன்னு ஒருஸ்லோகம்
அந்த மாதிரி இந்த தேவர்கள் கூட்டம் உன்னை நமஸ்காரம் பண்றது என்கிற விஷயம் பகவானுடைய பெருமையை சொல்றது. பரமேஸ்வரனுடைய பாதத்தை எல்லா தேவர்களும் வணங்குகிறார்கள் என்று அவரோட பெருமையை சொல்லி எனக்கு பாத தரிசனம் வேணும்னு கேட்கறா.👍👍👍
ப்ரதோஷ ஸ்தோத்ரம் என்று ஒன்று உண்டு. அதிலே அத்தனை தெய்வங்களையும், கீத வாத்யங்களோடு ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஸாக்ஷாத் பரமேஸ்வரன் ப்ரதோஷ காலத்தில் அம்பாளை ரத்ன பீடத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டு அவளுக்கெதிரே, கைலாஸ மலையிலே நடனம் செய்கிறானாம். அவனுடைய டான்ஸுக்குத்தான் ஆர்க்கெஸ்ட்ராவாக அத்தனை தேவர்களும் வாத்யம் வாசிக்க வந்திருக்கிறார்களாம்.
இந்த்ரன் புல்லாங்குழல் ஊதுகிறானாம். பிரம்மா ஜால்ரா போடுகிறாராம். லக்ஷ்மி வாய்ப்பாட்டுப் பாடுகிறாளாம். விஷ்ணு ம்ருதங்கம் வாசிக்கிறாராம்.
.
இந்த ஆனந்த தாண்டவத்தை மட்டுமின்றிக் கல்பப் பிரளயத்தில் எல்லாவற்றையும் தன்னில் ஒடுக்கிக் கொண்டு ஈஸ்வரன் ஸம்ஹார தாண்டம் செய்யும்போதும் அம்பாள் ஒருத்தி மட்டும் அழிந்து போகாமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று லலிதா ஸஹஸ்ர நாமத்தில் சொல்லியிருக்கிறது:
மஹேச்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷிணீ
(இன்று சனி பிரதோஷம்)
*""ஸ்ரீமஹாபெரியவா நிகழ்த்திய அற்புதம்"*
*"பூமாலைகளை அம்பாளுக்கு கொண்டு சேர்த்த பெரியவாளின் அற்புதம்"*
*ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரக ஆசீர்வாதம் நாம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஒவ்வொரு அனுஷத்திலும் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் வைத்து ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம் செய்து வருகிறோம்..*
*காஞ்சிபுரத்திற்கு மாதா மாதம் பூமாலையை பஸ்சில் ஏற்றி அனுப்பும் நபர் வேறு வேலைப் பளுவால் இந்த மாதம் பூமாலையை மறந்து விட்டார். மாலையும் கட்டி நம் இல்லத்திற்கு வந்து வைத்து போய்விட்டார்கள் நாம் வெளியூர் சென்று விட்டு இல்லத்திற்கு வரும் போது இரவு மணி 11.00 ஆகிவிட்டது.* *இல்லத்தில் பூமாலை இருப்பதை பார்க்கும் போது மிகப்பெரிய வேதனை.
*என்ன செய்வது பெரியவா நீங்க தான் பூமாலைகளை கொண்டு போய் சேர்க்கணும் என்று கண்கலங்கி விட்டோம்.. அடுத்த கனம் ஒரு போன் வருகிறது. அது பூமாலை கட்டுபவர் போன் செய்கிறார்.* *""அண்ணா பூமாலைகள் இன்னும் போகவில்லையா என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்கிறார். நாம் தெரியவில்லை ஆனால் பூமாலைகள் கண்டிப்பாக காஞ்சிபுரம் போக வேண்டும் என்றோம்.* *"அண்ணா இதோ நாங்கள் வருகிறோம் வந்து பஸ்ஸில் கொண்டு போய் கொடுக்கிறோம் என்றார்கள்..* *அதன்படி அவர்களும் வந்தார்கள். அப்போது மணி 11.30 இனி பஸ் இருக்குமா? மேலும் 10.00 மணிக்கு மேல் சென்றால் காவல்துறை பிடிக்குமாக என்ற அச்சத்துடன் பூமாலைகளை எடுத்து சென்றார்கள். என்ன ஒரு ஆச்சர்யம் வழியில் யாரும் கேட்கவில்லை.*
*அதன்படி காஞ்சிபுரத்திற்கு அடுத்த நாள் காலை 5.00 மணிக்கு பூமாலைகள் சேர்ந்து விட்டது.*"
*🙏🏻இனி நடந்தது தான் மிகப் பெரிய அற்புதம்"🙏🏻*
*
*நம் பக்திக்கும் நம் பிரார்த்தனைக்கும் எப்படியெல்லாம் ஸ்ரீமஹாபெரியவா அற்புதங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்.. பெரியவா அற்புதங்களை கேட்பதும் படிப்பதும் அதிகம் ஏன். நாம் நித்தியமும் கைங்கர்யத்திற்கு ஸ்ரீமஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள் எத்தனை எத்தனையோ..நாம் நிறைய சொல்வதில்லை.. ஏனெனில் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே உணர முடியும்.*
*இதை சொல்லியே ஆக வேண்டும் என்று மனதில் ஒரு ஆர்வம்*
*நாம் மாத மாதம் செய்து வரும் பூமாலை கைங்கர்யத்தை ஒரு சிறு திருவிளையாட்டை நடத்திக் காட்டி நான் பரிபூரணமாக இக்கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டேன் என நமக்கு உணர்த்திட பரமேஸ்வரனின் மறு அவதாரம் சங்கரனான ஸ்ரீமஹாபெரியாவே நேரில் வந்து நமக்கு அனுக்கிரகம் செய்துள்ளார்..*
*என்றென்றும் அவர் பாதங்களை சரணடைவதே நம் பாக்கியம்..*
*நித்தியமும் கைங்கர்யம்*
*ஸ்ரீமஹாபெரியவர் கைங்கர்யம் சாரிடபிள் டிர்ஸ்ட்-திருச்சி-சென்னை*
*ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர*
*ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தாழ்வெல்லாம் வருமோய்யா....
குரல் தழைக்க கண்ணீர் கொப்பளிக்க முதுமை நிறைந்த பெண் தன் இளமை தனை தூக்கி எறிந்தாள் ...
கல்லால் ஒருவன் அடிக்க -
உடல் சிலிர்க்கக்
காலில் செருப்பால் ஒருவேடன் அங்கே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க - காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்கக்
கூசாமல் ஒருவன் கைக்கோடாரியால் வெட்டக்
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா எனத்திட்ட
வீசி மதுரைமாறன் பிரம்பால் அடிக்க -
அந்த
வேளை யாரை நினைந்தீரோ, ஐயா! -
கயிலை தனில் பாதம் படுமோ என்றே தலையால் நடந்தாள் ..
மாம்பழம் செய்த வினை அன்று அழகனை ஆண்டியாக்கியது ...
இன்றோ இளமை தனை எட்டி பறித்தது ...
ஆனால் மாம்பழ கன்னங்கள் கண்ணீரில் மூழ்கி நனந்தன ,
கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பு சிந்தும் கண்ணீரில் நயந்து போனதே !!
அம்மா வென்றே ஓடி வந்தான் தாய் தந்தை இல்லாதவன் ...
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
பித்தன் மனம் முத்து முத்தாக பாடியது ...
தாயின் மடியில் பிறை மதி மறைந்து கொள்ள ,
கங்கை புடவை தனை நனைத்தே தனக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்ள
பாம்புகள் குடை பிடிக்க
மழுவும் மானும் தாயின் அன்பில் தவம் இருக்க
முக்கண்ணன் விம்மி விம்மி அழுதான் *அம்மா* கிடைத்த பின்னே ..
பிறர் கண்ணீர் துடைத்தே பழக்கப்பட்டவன்
தன் கண்ணீர் துடைக்க வழி இன்றி அழுதான் அன்றே , மிக நன்றே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏஷ தேவாசுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: || 7 ||🌞🌞🌞
கண் பார்க்கா தெய்வம் அது இல்லை என்றனர் பலர்
தெய்வம் உண்டு எனில் ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை என்று கற்றோர் பலர் புலம்பினர்..
தெய்வம் உண்டு என்பது காட்டுமிராண்டிகள் சொல்வது என்றே சொல்லி உண்டி வளர்த்தனர் பலர் ..
தினம் தினம் உதிக்கின்றான் ...
கடமை தனை புரிகின்றான் ..
மாலையில் வேறு இடம் அதில் வருகின்றான் ..
ஓய்வு இல்லை
ஊதியம் இல்லை ..
யார் சொல்லியும் வருவதில்லை போவதில்லை
என்றால் இவன் அன்றோ தெய்வம் ...
கண்ணில் தெரியும் தெய்வம் மண்ணில் நாம் மறையும் முன் உணர வேண்டாமோ ?
கண்ணா , முகுந்தா , முராரி புராரி போதி பிரம்மன் , ஆதித்தன் அம்புலி அங்கி, குபேரன் , அமரர் தங்கோன் , பொதிய முனி காதி பொருப்படை கந்தன் கணபதி காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் ஒளி தரும் கதிரவனையே.... 🌞🌞🌞
(My experiences... Ravi ...Episode 208🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*7th Assignment - Powai*
Once you decide to see the joy in life, life begins to unfold in amazing ways. Your health will change, your relationships will change and you will discover how truly amazing you are.
From L&T side K.Venkatesh ( ex head of L&T IDPL) , one Mr Ray from L&T C and Hariharan from L&T C a close associate of TATA Steel MD Mr Muthuraman and Dhamara port CEO Mr Santosh Mahapatra IAS ,
From TS side , Muthuraman , kaushik chatterji who is now finance director in TS and two more directors from TS .. were board members ...
There were enough rooms for conflict of interest ...
None of the directors were keen to discuss how to take DPCL to next level but were only discussing which contract was to be awarded to whom with what margin ....
It was very unfortunate but true ... Company was unable to navigate to reach the berth of certainty . 🙏
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் .. .🦚
*பதிவு 114* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 24👍👍👍
*ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்*
ஜகத்ஸூதே தாதா ஹரி ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வன் னேதத் ஸ்வமபி வபு ரீஶ
ஸ்திரயதி
ஸதா பூர்வ: ஸர்வம்
ததித மனுக்ருஹ்ணாதி ச ஶிவஸ்
தவாக்ஞா மாலம்ப்ய க்ஷண சலிதயோர் ப்ரூலதிகயோ: 24🦚🦚🦚
விஷ்ணு ரக்ஷிக்கிறார், ருத்திரன் கலைக்கிறார்
மஹேசுவரன் இந்த மூவரையும் தன்னிடம் லயிக்கும்படி செய்து தன் சரீரத்தையும் மறையும்படி செய்கிறார்.
ஸதா என்ற அடைமொழியை முன்கொண்ட சதாசிவன் அப்படிப்பட்ட இவர்கள் எல்லோரையும் உன்னுடைய நொடி நேர அசைப்பினால் தெரிவிக்கப் பட்ட புருவக் கொடிகளின் கட்டளையை அனுசரித்து அனுக்ரஹம் செய்கிறார்.🙏🙏🙏👀
*பதிவு 114* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
மெய்ப்புளம் அரும்பி ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து கரும்பிற் களித்து மொழி தடுமாறி முன் சொன்னதெல்லாம் தரும் பித்தராய் பித்தன் முன் நின்றனர் ...
அருமறைகள் பழகி சிவந்த பதாம் புயத்தாள் சிந்தும் ஒளி மிகுந்த புன்னகையின் முன் எந்த நகையும் எடுபடாமல் போனதாம் ...
அவள் அழகுக்கும் எந்த நகையும் ஒவ்வாமல் போனதாம் ...
மதங்கர் குல பெண்களில் தோன்றிய பேரழகியின் முன் எந்த நகை எடுபடும் புன்னகை ஒன்றை தவிர ??😊😊😊
*அலசல் தொடர்கிறது 👍*
*வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ*
அயன் ...பிரம்மன் , மால் ...திருமால் இவர்களும் அடி முடி தேடி காணாமல் விண்ணிற்கும் மண்ணிற்கும் ஒளி மயமாய் நின்றவன் ... அவர்களால் அறிந்து கொள்ள முடியாத விஸ்வரூபம் ...
அரியார் என்றால் அரியவன் அதாவது very special ... கிடைப்பதற்கு சுலபமாக கிடைக்காதவன் ... தவம் பல செய்துதான் இமவான் மகளே அவன் கரங்களைப் பற்றினாள் ...
இந்த அர்த்தத்தில் மணி வாசகர் அரியாய் என்கிறார் .. அறியார் என்பதும் இங்கே பொருந்துகிறது... 🦋
இதில் இரண்டு அர்த்தம் வரும்
1. நான் வேண்டியதனால் என்னை உனக்கு பணி செய்ய வைத்தாய்
2. நீயே விரும்பி என்னை ஆட்க்கொண்டாய்
இதில் மணி வாசகர் சொல்வது இரண்டாவது அர்த்தத்தை ...
எங்கோ குதிரையில் போய் கொண்டிருந்தேன் கஜானாவில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு அரேபிய குதிரைகள் வாங்க ...
போகும் வழியில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு என்னை அழைத்தாய் ...
நான் ஒரு பாவி என்னுடன் வருகிறாயா என்று நீ என்னை கேட்க்கும் போது ஆமாம் வருகிறேன் என்று சொல்லாமல் மௌனமாக போய் விட்டேன் ...
ஆனாலும் விடாமல் என்னை ஆட் க்கொண்டாயே உன் கருணையை எப்படி விவரிப்பேன் ... என்று கதறுகிறார்....
"கங்கையொடு, யமுனை, கோதாவரியொடு களிந்தை சூழ்ந்த
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே!"
இந்த சேதுவில் நீராடியவர்கள், அவர்கள் எத்தகைய பாவங்களைச் செய்தவரேனும், பசுக்களை, ஐம்பெரும் குரவர் எனப்படும், ஆசிரியர், அரசன், தாய், தந்தை, தமையன், முனிவர்கள், பெண்டிர், குழந்தைகள், அடைக்கலமாக வந்தவர்கள் ஆகியோரைக் கொன்ற கொடிய பாவமும் கூட இந்த சேதுவின் பாந்த கடலிடை மூழ்கினால் தேவர் தொழும் பெருமை பெற்றவர் ஆவார்.
*பதிவு 114*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்
*பொருளுரை*
फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो
प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।
कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां
निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥
ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴
ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।
கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்
நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥
ன்னு ஒருஸ்லோகம்
ஏன்னா நமக்குள்ளயே மனசுக்குள்ள தேவர்கள் இருக்கா.
இந்த தேவர்கள் பதவிக்கும், பணத்துக்கும், போகங்களுக்கும் ஆசைபடறவா.
அந்த மாதிரி நம்ம மனசுக்குள்ள இருந்துண்டு பரமேச்வரனுடைய பாதத்துல பக்தி நிலைச்சு இருக்காமல் மத்த சித்திகள்ல மனசு சிதறி போகும்படி பண்ணிடுவா.
அப்படி இல்லாம எனக்கு உன் பாதம்தான் வேணும்னு இங்க கேட்கறார்.
அந்த மாதிரி மத்த சித்திகள் எல்லாம் இடையூறு.🙏🙏🙏
*பதிவு 128* 👏👏
12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |
அநாதி நிதனோ
தாதா
விதாதா *தாது ருத்தம:* ||5
கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைப் பிரதட்சிணம் செய்யுமாறு கௌதமரிடம் நாரதர் வேண்டினார்.
அவரும் பிரதட்சிணம் செய்தார். பிரம்மாவிடம், “கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைச் சுற்றினால் மூவுலகங்களையும் சுற்றியதற்குச் சமம்.
இதோ கௌதமர் சுற்றி விட்டார்.
அஹல்யாவை இவருக்கு மணமுடித்துத் தாருங்கள்!” என்றார் நாரதர்.
அதை ஏற்றுக் கொண்டு அஹல்யாவைக் கௌதமருக்கு மணமுடித்துத் தந்தார் பிரம்மா.
மூவுலகங்களையும் சுற்றிவிட்டு வந்த இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
எப்படியாவது அஹல்யாவை அடைந்தே தீரவேண்டும் என்று இந்திரன் முடிவுசெய்தான்.